Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 04 JAN, 2024 | 01:03 PM சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரத கடவை காவலர்கள் இன்று (04) முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று 4ஆம் திகதி காலை 6 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அறிவித்தலை முல்லைத்தீவு ஊடக மையத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிப்படுத்திய புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் தொடர்ந்து கூறுகையில், சரியான ஊதியமின்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் புகையிரத கடவை காவலர்களாக கடமையாற்றி வருகின்றனர். ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைக்கிறது. பொலிஸாரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4, 5, 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம். அத்தோடு, புகையிரத திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். நாங்கள் வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/173097
  2. பட மூலாதாரம்,SUPRIYASAHUIAS கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர் பிழைப்பதும் கடினமாகியிருக்கும். நல்லவேளையாக தாயிடம் சேர்த்து விட்டோம்", என புன்னகையுடன் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சில மணிநேரங்களில் எந்த யானைக் கூட்டத்திலிருந்து குட்டி பிரிந்தது என்பதைக் கண்டறிந்து அதனை தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களாக யானைக்குட்டி மற்றும் அதன் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது வனத்துறை. இந்நிலையில் நேற்று, தாயின் அருகே அந்த குட்டியானை அமைதியாக படுத்து உறங்கும் காணொளியை வெளியிட்டது வனத்துறை. இணையத்தில் பலரால் பகிரப்பட்ட அந்த காணொளி குறித்தும், 300க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருக்கும் வால்பாறை பகுதியில், ஒரே நாளில் எவ்வாறு குட்டியானை தாயிடம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT "மனித வாடை இருந்தால் குட்டியை தாய் விரட்டிவிடும்" "அன்று காலை தகவல் கிடைத்தவுடன் பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கு 5 முதல் 6 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை சுற்றித் திரிந்தது. குட்டி யானை தன் தாயிடமிருந்து பிரிந்து விட்டால், அதை உடனடியாக அதன் தாயிடமோ அல்லது கூட்டத்திடமோ சேர்க்க வேண்டும்." "மனித வாடை அதன் உடலில் பட்டுவிட்டால் யானைக் கூட்டம் அதை சேர்த்துக் கொள்ளாது, தாய் அதனை விரட்டிவிடும்" என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். "யானைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக வால்பாறை பகுதியில் முகாமிடுவதால், புதிதாக ஏதும் யானைக் கூட்டம் இங்கு வந்தால் எங்களுக்கு தெரிந்துவிடும். டிரோன் மூலமாகவும், கண்காணிப்பு குழுக்கள் மூலமாகவும் யானைகள் எங்கே செல்கின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்." "எந்த யானைக் கூட்டம் ரேஷன் கடைகளைத் தாக்குகின்றன, எவை மக்களின் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன, தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் எவை என அனைத்து தரவுகளும் எங்களிடம் இருக்கும்" என்றார் மணிகண்டன். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை டிரோன் மூலம் கண்காணித்து, அதை உறுதிபடுத்திக்கொள்வோம். அப்படி இருக்கையில் அன்று அதிகாலை பன்னிமேடு பகுதிக்கு சென்று குட்டியை மீட்டுவிட்டு, அதன் யானைக் கூட்டத்தை தேடத் தொடங்கினோம்." என்றார். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT 11 யானைகள் கொண்ட கூட்டம் மேலும் அவர் கூறியது, "காலை 8.30 மணிக்கு எங்களுக்கு யானைக்குட்டி பற்றி தகவல் வந்தது, சரியாக மதியம் 1.30 மணிக்கு நாங்கள் அதை தாயிடம் சேர்த்துவிட்டோம். இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டால், யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு நகர்ந்து விடும். பிறகு குட்டியை கூட்டத்தில் சேர்ப்பது கடினம்." "யானைக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. காரணம் முழுக்க முழுக்க அது தாய்ப்பாலை மட்டும் குடித்து வளர்ந்தது. புல்லைக் கூட உண்ணாது. எனவே நாங்கள் வேறு ஏதாவது உணவு அல்லது லாக்டோ பானம் கொடுத்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடல்நிலை சரியில்லாமல் போய் மேலும் தாமதமாகிவிடும்." "இன்னொரு சிக்கல், யானைக்குட்டி நம்மிடம் பழகிவிட்டால் நம்மை விட்டு போகாது. அது குட்டிக்கு தான் ஆபத்து. இப்படி பல சிக்கல்கள் இருந்ததால், பல குழுக்களாக பிரிந்து தேடுதலில் ஈடுபட்டோம். தேயிலைத் தோட்ட தொழிலார்கள் கூறியது மற்றும் எங்களிடமிருந்த தரவுகள் மூலமாக மூன்று யானைக்கூட்டங்களை பின்தொடர்ந்தோம்." "அதில் பதினோரு யானைகள் கொண்ட கூட்டத்தில் தான், ஒரு குட்டியை காணவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். பின்னர் டிரோனைப் பறக்க விட்டு அந்த குறிப்பிட்ட யானைக்கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். ஆனால் இப்போது தான் இரண்டு பெரிய சிக்கல்கள் உருவானது" என்கிறார் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT ஆக்ரோஷமான யானைகள் தொடர்ந்து பேசிய அவர், "யானைகள் கூட்டத்தை நோக்கி செல்லும்போது, குட்டி சோர்வடைய ஆரம்பித்தது. அதற்கு குடிக்க ஆற்றுத் தண்ணீரை மட்டுமே கொடுத்தோம். அது எங்களுடன் சற்று நெருக்கமாகத் தொடங்கியது. இப்போது எங்களுக்கு பயம் வந்துவிட்டது, நன்றாகப் பழகி விட்டால் அதை கூட்டத்திடம் சேர்ப்பது சிக்கல்." "இன்னொரு சிக்கல், யானைக் கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அருகில் சென்று குட்டியை விட முடியாது. அது எங்களை தாக்க வாய்ப்புகள் அதிகம். தேயிலைத் தோட்டம் என்பதால் யானைகளிடமிருந்து தப்பிப்பது இன்னும் கடினம். எனவே மீண்டும் டிரோன் மூலம் கூட்டத்தின் இருப்பிடத்தை உறுதி செய்துவிட்டு, யானையை நன்றாக குளிப்பாட்டி சேற்று மணலை பூசினோம். மனித வாடை இருக்கக்கூடாது அல்லவா." என்று சிரிக்கிறார் மணிகண்டன். "பின்னர் அதை முன்னே செல்ல விட்டோம். கூட்டத்தின் சத்தத்தைக் கேட்ட குட்டி யானை பிளிறியது. உடனே இரண்டு யானைகள் முன்னே குட்டியை அழைத்துக் கொண்டன. அப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். ஏனென்றால் இவ்வளவு சிறிய குட்டி தாயைப் பிரிந்தால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது." என்று கூறினார். வைரலான காணொளி குறித்து பேசும்போது, "அது இரண்டு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொளி, டிரோன் மூலம் தான் எடுத்தோம். எங்களுக்கு இருந்த சந்தேகம் தாய் அந்தக் குட்டியை எவ்வாறு அணுகும் என்பது தான். ஆனால் டிரோன் மூலம் அந்தக் காட்சியை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT வால்பாறையில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்ரமணியனிடம் (ஐஎப்எஸ்) பேசியபோது, "கேரளாவில் சபரிமலை சீசன் என்பதால் அங்கிருந்து வெளியேறிய முன்னூறுக்கும் மேற்பட்ட யானைகள் வால்பாறையில் முகாமிட்டுள்ளன." "அவை தங்களுடைய உணவுக்காக மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லும். எனவே எத்தனை யானைகள் வருகின்றன போகின்றன என்பது குறித்த தரவுகள் எங்களிடம் எப்போதும் இருக்கும்." "இப்போது அந்த குட்டி யானையும் அதன் கூட்டமும் மீண்டும் கேரளாவுக்குள் சென்றுவிட்டது. நாங்கள் இறுதியாக கண்காணித்தவரை குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது." "சில மணிநேரங்களில் அனைத்தும் நடந்ததற்கு எப்படியாவது தாயுடன் குட்டியை சேர்த்துவிட வேண்டுமென்ற குழுவின் எண்ணம் தான் காரணம். ஒருவேளை மீண்டும் அந்த யானைக்கூட்டம் வால்பாறைக்குள் வந்தால் கண்காணிக்கப்படும்" என்றார். காணொளிக் குறிப்பு, வால்பாறையில் கூட்டத்திலிருந்து விலகிய குட்டியானையை மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறை அழிக்கப்படும் யானையின் வாழ்விடங்கள் யானைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவரும் ஆற்றல் பிரவீன்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில், "தாயை பிரிந்த யானையின் கன்று ஒன்று மீண்டும் தனது தாயுடன் சேர்ந்த அழகிய தருணங்கள், தாயின் மடியில் பத்திரமாக இருப்பதாய் குட்டி உணர்கிறது. பெரும் முயற்சிக்குப் பிறகு தமிழ்நாடு வனத்துறை இந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்." "தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த இக்குழுவினருக்கு எம்முடைய வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது வாங்கிய தி எலிபெண்ட் விசுபெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய அம்மு குட்டி என்னும் யானைக் குட்டி ஒன்று இன்று வரை தன் கூட்டத்துடன் சேர முடியாமல் அனாதையாகவே உள்ளது. தாயை பிரிந்த வேதனை அதற்கு மட்டும் தான் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "பல ஆறுகளின் மூலமாக இருக்கும் மழைக்காடுகளை துண்டுச் சோலைகளாக மாற்றி விட்டு நாம் தினமும் குடிக்கும் தேயிலைக்காக இங்கு பயிர் செய்து வருகிறார்கள். இழந்துவிட்ட தனது வாழிடத்தை தேடி வரும் யானைகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றன" என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c802d2eggeno
  3. Published By: DIGITAL DESK 3 04 JAN, 2024 | 03:27 PM மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை (04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கும் குத்தகைதாரருக்கு வியாபாரிகள் 4 வீத வரி செலுத்த வேண்டும் என்ற விடயம் ஏற்கனவே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரதேச சபையும் சந்தையை குத்தகைதாரருக்கு வழங்கியது. இந்நிலையில் குறித்த வரி பிரச்சினை ஏற்பட்டதனால் குத்தகைதாரர், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் அங்கு இருந்த வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வருடம் குறித்த குத்தகைதாரர் மனிதாபிமான ரீதியில் ஒரு மூடை மரக்கறிக்கு 60 ரூபா வரி வாங்கியுள்ளார். இந்த ஆண்டு விலைகள் அதிகரிப்பு காரணமாக மரக்கிக்கறிகளுக்கு கிலோவுக்கு மூன்று ரூபாவும், வெங்காயத்துக்கு கிலோவுக்கு ஒரு ரூபாவும், உருளைக்கிழங்குக்குக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாவும் வரியாக கோரியுள்ளார். அல்லது அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டும் ரூபா வரியாக கோரியுள்ளார். ஆனால் அந்த வரிப்பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்றும் ஒரு மூடை மரக்கறிக்கு 80 ரூபா வரியாக தருவதாகவும் அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு கிலோவுக்கு ஒரு ரூபா வரியாக தருவதாகவும் ஏனைய அனைத்து மரக்கறிகளுக்கும் கிலோவுக்கு இரண்டு ரூபா படி வழங்குவதாகவும் வியாபாரிகள் கூறினர். இறுதியில் இரண்டு தரப்பினரும் அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டு ரூபா வரி செலுத்துவதாக தெரிவித்து இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். https://www.virakesari.lk/article/173124
  4. கேப் டவுன் நியூலேண்ட்ஸ்: பேட்ஸ்மேன்களை சித்ரவதை செய்யும் தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் அப்படி என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா- தென் ஆப்பிரிக்க இடையிலான டெஸ்ட் தொடரில் இரு நாட்டு வீரர்களுடன் சேர்ந்து ‘ஆடுகளங்களும் விளையாடுகின்றன’ என்றால் கேட்பதற்கு சற்று நகைச்சுவையாகத்தானே இருக்கிறது. ஆனால் அது உண்மைதான். ஏனென்றால், இரு போட்டிகளிலும் வெற்றியை தீர்மானிப்பது பந்துவீச்சாளர்களோ, பேட்டர்களோ அல்ல ஆடுகளங்கள்தான். இது 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளை பார்த்தபோதே புரிந்திருக்கும். கேப்டவுனில் நடந்து வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. அதிலும் இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த நிலையில், அடுத்த 2 ஓவர்களில் 2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதம் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பூஜ்ஜியம் ரன்னுக்கு மோசமாக இழந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மோசமான சாதனையை இந்திய அணி மட்டுமே செய்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். தனது கடைசி போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த எல்கர் அது மட்டுமல்லாமல் ஒரே நாளில் ஒரு பேட்டர் இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்ததும் இரண்டாவது முறையாகும். தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். இதற்கு முன் 1890ம் ஆண்டு ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பேரட் மட்டுமே இதுபோல் ஆட்டமிழந்திருந்தார். அதற்கு பின் ஏற்ககுறைய 134 ஆண்டுகளுக்குப்பின் டீன் எல்கர் இந்த மோசமான சாதனையைச் செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் கெயில் வெரினே தவிர ஒரு பேட்டர் கூட களத்தில் 20 பந்துகளைக் கூட சந்திக்காமல் ஆட்டமிழந்தனர். அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல், பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக கேப்டவுன் மைதானம் மாறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் எப்படி? தென் ஆப்பிரிக்க ஆடுகளம் என்றாலே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில்தான் இருக்கும் என்று வரலாறு இருக்கிறது. அதையும் கடந்து இங்கும் சில நல்ல ஆடுகளங்களும் இருக்கின்றன. அந்த வகையில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஆடுகளமும் ஒன்றாகும். ஆனால், நல்ல மைதானங்கள் வரிசையில் இடம் பெற்ற நியூலேண்ட்ஸ் ஆடுகளம் இவ்வளவு மோசமாக பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக எவ்வாறு மாறியது என்பது தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கே வியப்பாக இருக்கிறது. 1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காதான் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையில்தான் நடந்தது. அந்த அளவுக்கு கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் பாரம்பரியம், புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அழகான மைதானங்களில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இயற்கையாகவே ஒத்துழைக்கும் வகையில் ஈரக்காற்று அதிகம் வீசும் சூழல் நிறைந்தது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் ஆடுகளம் அமைத்தாலும், இயற்கை சூழலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் காற்றில் அதிகமான ஈரப்பதத்துடன் இங்கு வீசுவதால் சீமிங், ஸ்விங் நன்றாக எடுபடும். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 651 ரன்கள் வரை அடிக்கப்பட்டாலும், இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தேவையற்ற சாதனைகளை சம்பாதித்துக்கொண்டனர். இந்த மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட் செய்த அணி 23 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணி 25 போட்டிகளிலும் வென்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டவுன் விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மோசமடையுமா ஆடுகளம்? இப்போதுள்ள நிலையைவிட கடைசி 2 நாட்களில் ஆடுகளத்தின் நிலைமை இன்னும் மோசமாகலாம். ஆடுகளத்தில் பந்து சமச்சீரற்ற வகையில் பவுன்ஸ் ஆகும், பேட்டர் எதிர்பாரா வகையில் ஸ்விங் ஆகி, பேட்டர் ஏன் களமிறங்கினோம் என்று மனதுக்குள் புலம்பும் வகையில் சித்ரவதை செய்யும் ஆடுகளமாக அடுத்துவரும் நாட்கள் மாறக்கூடும் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறுகிறது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதுதான் சிறந்த முடிவாக இதற்கு முன்பு வரை இருந்தது என்பதால்தான் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரும் பேட் செய்தார். ஆனால், தங்களின் பேட்டிங் திறமை வெறும் 24 ஓவர்களுக்குள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும் என்று அவரே நினைக்கவில்லை. இந்த நியூலேண்ட்ஸ் மைதானம் செஞ்சூரியன் மைதானத்தைப் போலவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாகும். விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மேலும், விக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ரோலர் போடாமல், ரோலர் மட்டுமே உருட்டுவதால், ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சில் அதிகமாக ஸ்விங் ஆகும், பவுன்ஸரில் பந்து எகிறி பேட்டர்களை சித்ரவதை செய்யும். ஆனால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று நடுநிலையான பிட்ச் ரிப்போர்ட் தெரிவித்தாலும், இப்போதுள்ளநிலையில் 4வது நாள்வரை போட்டி செல்லுமா என்பது கேள்விக்குறிதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டுதான் ஆடுகளம் அமைக்கப்பட்டதா? ஐசிசி விதிகளில் ஆடுகளம் குறித்து தெரிவிக்கையில் ஒரு ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால், தென்ஆப்பிரிக்காவில் செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளங்கள் இரண்டுமே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆடுகளங்களிலும் பேட்டர் ரன் சேர்ப்பதே அரிதாக இருக்கிறது, ஒரு பேட்டர் நீண்டநேரம் களத்தில் நிற்பதே அதிசயமாக இருக்கிறது. இந்தியாவில் ஆகமதாபாத், சென்னை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டுள்ளன என்று புகார் எழுந்தபோது ஐசிசி அப்போது அதில் தலையிட்டது. அதுபோன்று நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தரத்தையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆசியாவில் இதுபோன்று ஒரு போட்டியில் 23 விக்கெட்டுகள் ஒரு போட்டியில் வீழ்த்தப்பட்டு அது பெரிய சர்ச்சையாகியது, ஆடுகளங்களும் ஐசிசியால் ஆய்வு செய்யப்பட்டன. ஒரு டெஸ்ட்போட்டி 3 நாட்களில் முடிந்து, ஒரு தரப்புக்கு உதவுமாறு அமைக்கப்பட்டால் ரசிகர்களின் விமர்சனங்கள் மோசமாக இருக்கும். தென்ஆப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் உதவுமாறு ஆடுகளங்களை அமைக்காதீர்கள் என்று முன்னாள் வீரர் ஷான் போலக்கூட விமர்சித்திருந்தார். ஆனால் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது, பேட்டர்களால் பந்தை பேட்டால்கூட தொட முடியவில்லை, அதிகபட்ச ஸ்விங் ஆகிறது, செஞ்சூரியன் மைதானத்திலும் இதே நிலை இருந்தது. இதை அனைத்தைபும் பார்த்தஐசிசி போட்டி ரெப்ரி இந்த ஆடுகளங்களை நல்ல ஆடுகளங்கள் என்று தரச்சான்று அளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES உள்நாட்டு அணிக்கே சிக்கலை ஏற்படுத்திய ஆடுகளம் பொதுவாக உள்நாட்டில் போட்டி நடக்கும்போது, உள்நாட்டு அணியைக் கேட்டுத்தான் ஆடுகளம் வடிவமைப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்வார். இதுதான் அதிகாரபூர்வமற்ற நடைமுறையாக அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. ஆனால், செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளம் அமைக்கப்பட்ட விதத்தின் தார்மீகம் குறித்த கேள்வி எழுகிறது. பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய வகையில், ஆடுகளத்தை மோசமாக வடிவமைப்பது எந்த விதத்தில் நடுநிலையானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஏற்றார்போல் மாற்றப்பட்டது. ஆனால், முதலில் பலியானது என்னமோ 23.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்காதான். புதிய பந்திலேயே இவ்வளவு மோசமாக ஆடுகளம் செயல்படுகிறது என்றால், பந்து தேய்ந்து பழசாகிவிட்டால் இன்னும் மோசமாக இருக்கும். தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல், ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் அமைக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணி எடுத்து முடிவு, அந்த அணிக்கே “பேக் பயர்” ஆகிவிட்டது. ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியப் பந்துவீச்சு எப்படியிருந்தது? ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்ள் ,செஞ்சூரியன் மைதானத்தில் பந்துவீசியதைவிட, கூடுதல் துல்லியத்தன்மையுடனும், லைன் லென்த்திலும் வீசினர். ஆடுகளத்தில் பேட்டர்களால் பந்தை எதிர்கொண்டு ஆடமுடியவில்லை என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்டு பவுன்ஸர்களை வீசி பேட்டர்களை மிரட்டினர். தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆடுகளம் குறித்து அளித்த பேட்டியில் “ இந்த நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பொதுவாக மெதுவாக இருக்கும், பேட்டர்கள் அதற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆடுகளத்தில் 600 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று ஆடுகளத்தில் பந்துகள் பவுன்ஸர் ஆகியவிதம், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் மாறியவிதம் எனக்கு வியப்பாக இருக்கிறது. வெறும் கண்களில் பார்த்தால் ஆடுகளம் மோசமாக இருக்கும், ஆனால், நான் அப்படி மோசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை. உள்நாட்டுப் போட்டிகள் நல்லவிதமாக முடிந்துள்ளன, பேட்டர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளன. “ “ஆடுகளம், சூழல் ஆகியவற்றை அறிந்து நான்தான் முதலில் பேட் செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான லைன் லென்த்தில் பந்துவீசினர். கோலி, ரோஹித் சர்மா சரியான பந்துகளை தேர்வு செய்து பேட் செய்தனர். அவர்கள் சிரமப்பட்டதற்கு ஏற்றார்போல் ஸ்கோரும் கிடைத்தது. “ பட மூலாதாரம்,GETTY IMAGES “இந்த ஆடுகளம் மோசமானது என்று என்னால் கூற முடியாது. தனிப்பட்ட ரீதியில் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோரை நான் எடுத்திருக்கிறேன். கிரேம் ஸ்மித்துக்கு அடுத்தார்போல் நான் அதிகமான ரன்களை கேப்டவுனில் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்குமாறு இருக்க வேண்டும், அமைக்க வேண்டும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக அமைப்பது தவறானது. பேட்டர்கள் வழக்கமான ஒழுக்கத்தைவிட கூடுதல் ஒழுக்கத்துடன் பேட் செய்ய வேண்டும், தங்களை ஆடுகளத்துக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பேட் செய்ய வேண்டும், மனநிலையை கடுமையாக வைத்திருக்கவேண்டியது இதுபோன்ற ஆடுகளங்களில் அவசியம்” எனத் தெரிவித்தார். “இப்படி ஆடுகளத்தை நான் பார்த்து இல்லை” தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்வெல் பிரின்ஸ் ஆடுகளம் குறித்துக் கூறுகையில் “ நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இப்போது பார்த்தது போன்று இதற்குமுன் நான் பார்த்தது இல்லை. விக்கெட்டில் பந்து பட்டதும் வரும்வேகம், சமச்சீரற்ற பவுன்ஸர், சீமிங், ஸ்விங் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது. ஒருநாளில் ஒரு இன்னிங்ஸும் முடியும் அளவுக்கு நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இதற்கு முன் நான் பார்த்து இல்லை. பேட்டர்கள் இந்த ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருந்ததைப் பார்த்தேன். ஒரு பந்து தாழ்வாக பவுன்ஸராகிறது, மற்றொரு பந்து மார்புக்கு நேரே வருகிறது. பந்து இந்த அளவுக்கு சீமிங், ஸ்விங் ஆவதற்கு காலநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. முதலில் நாளில் இப்படி இருக்கலாம் அடுத்துவரும் நாட்களும் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் அது கவலைப்படக்கூடியதுதான்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nylvjnelxo
  5. 04 JAN, 2024 | 11:19 AM இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்றளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 யானைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் திமுது சந்தருவான் சேனாதீர இது தொடர்பில் கூறுகையில், சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியைப் பார்க்கும்போது, அதிகளவிலான யானைகள் இறப்பு பதிவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 74 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆனால், அவை எப்படி இறந்தன என்பது பற்றி தகவல் இல்லை. 49 யானைகள் துப்பாக்கிச் சூட்டின் மூலமும் 36 யானைகள் மின்சாரம் தாக்கியும் பலியாகின. விரைவான நகரமயமாக்கல் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்தமை, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயம் காரணமாக விவசாயத்துக்காக காடுகளை அழித்தமை ஆகியவையே உலகளவில் யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது. யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள் என்றால் யானைகளை ஒருங்கிணைத்து அவற்றை ஒரு பகுதிக்குள் தள்ளி பிறகு மின்வேலி அமைக்கிறார். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு அவர்களால் எந்த தீர்வையும் அளிக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதற்கு யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளை இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காண்பது சுலபமான காரியமல்ல. யானைகள்-மனிதர்களுக்கு இடையேயான மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது கடினம் என்றாலும், யானைகளை பாதுகாக்க இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியமானது என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/173082
  6. தொடருங்கள் கவி ஐயா.
  7. Japan-ல் பயணிகள் உயிர் தப்பியது எப்படி? தீப்பிடித்த போது Flight-க்குள் என்ன நடந்தது? வெளியான வீடியோ
  8. ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சாலே-அல்-அரோரி ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அரோரி கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹெஸ்புல்லா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது. இந்த தாக்குதலை தான் நடத்தியதாக இஸ்ரேல் பொறுப்பேற்கவும் இல்லை; அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை. இது ஹமாஸ் தலைமை மீதான துல்லியத் தாக்குதல் என இச்சம்பவத்தை இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
  9. Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 03:46 PM 2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நேர அட்டவணையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரிய மொழி புதிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் உயர்தரப் பரீட்சை நேர அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் பரீட்சை அனுமதி அட்டையில் திருத்தப்பட்ட நேர அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பரீட்சார்த்திகளும் முன்னதாக வழங்கிய பரீட்சை நேர அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம். அதே நேரத்தில் சில இணையத்தளங்களும் தவறான அட்டவணையைக் காட்டக்கூடும். "உங்கள் பரீட்சை அனுமதி அட்டையில் தனிப் பிரிவு உள்ளது. அந்தப் பிரிவில், ஒவ்வொரு பாடத்திற்குமான திகதி மற்றும் நேரப் பகுதிகள், பாட எண் மற்றும் மொழி [கல்விக்கான ஊடகம்] ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அது போதுமானதாகும். நேர அட்டவணையைப் பற்றி நீங்கள் வேறு எதையும் ஆராயத் தேவையில்லை" தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை முதல் முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173019
  10. Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 04:32 PM வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இட்டபோது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதிய பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறித்து நடவடிக்கை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். நிரோசன் தலைமையில் இ.மதன்ராஜ், செ.வன்னிநாயக, சேனாதீர, மதுசங்க, ரஞ்சுலா சுபத்திரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/173030
  11. அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரியின் நினைவேந்தல் நிகழ்வில் ஈரானில் குண்டுவெடிப்பு- 103 பேர் பலி Published By: RAJEEBAN 03 JAN, 2024 | 08:44 PM ஈரானில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில்103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு வருடங்களிற்கு முன்னர் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவ அதிகாரி கசேம்சொலைமானியின் நினைவேந்தல் நிகழ்வில் இரண்டு குண்டுகள் வெடித்ததில்103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 171 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கெர்மான் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பத்துநிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ள அதேவேளை நான்கு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன வெளியாகும் தகவல்கள் மிகவும் திறமையான முறையில் திட்டமிடப்பட்டு இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதை வெளிப்படுத்துகின்றன. சுலைமானியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 700 மீற்றர் தூரத்தில் முதலாவது குண்டு வெடித்தது இரண்டாவது குண்டு 1 கிலோமீற்றர் தூரத்தில் வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளளன. இதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இரண்டு குண்டுகள் தொலைவிலிருந்து வெடிக்கவைக்கப்பட்டன என தெரிவித்துள்ள அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/173062
  12. 11 பந்துகளில் 0 ரன், 6 விக்கெட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா அதிசயம் நிகழ்த்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 ஜனவரி 2024, 11:33 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் கேப்டவுனில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்டின் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணியை ஆல் அவுட்டாக்க இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்கள் மற்றும் இரண்டு மணி நேரமே தேவைப்பட்டது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் டெஸ்டில் வெறும் மூன்றே நாட்களில் சரணடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்க அணி எடுத்த 55 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும். முதல் இன்னிங்சில் இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்காவும் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது. சிறப்பாக இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த நிலையில், அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி? இந்திய அணியில் அஸ்வின் நீக்கம் பாக்சிங் டே டெஸ்டில் தோற்றுவிட்ட இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெல்ல முனைப்பு காட்டுகிறது. இந்திய அணியில் முழு உடல் தகுதியை எட்டிவிட்ட ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், முதல் டெஸ்டில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெற்றார். லுங்கி நிகிடி அணிக்குத் திரும்பினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷவ் மகராஜ் தனது 50-வது டெஸ்டை விளையாடுகிறார். தென் ஆப்ரிக்க அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாடுகிறது. இந்தியா அசத்தல் தொடக்கம் கேப்டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ் ஜோடி புதிய பந்தில் கலக்கலாக பந்துவீசி தென் ஆப்ரிக்க வீரர்களை திணறடித்தது. பும்ரா 142 கி.மீ. வேகத்தில் இன்ஸ்விங்கர்களை வீச, மறுபுறம் முகமது சிராஜ் துல்லியமாக பந்தை பிட்ச் செய்தார். நான்காவது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்குள் பந்தை அவர் ஆங்கிள்-இன் செய்ய மார்க்ராம் விளையாடியே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது. அவர் சற்று தாமதமாக ஆட, பந்து வெளிப்புற விளிம்பில் முத்தமிடு பின்னே செல்ல இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக டைவ் அடித்த கேட்ச் செய்தார். எய்டன் மார்க்ரம் 2 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிராஜ் பந்துவீச்சில் சரிந்த தென் ஆப்ரிக்கா மார்க்ரம்மை காலி செய்த பிறகு, சிராஜ், கடந்த டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவை தோல்விக்கு தள்ளிய டீன் எல்கர் விக்கெட்டிற்கு குறி வைத்தார். எல்கரின் ஸ்டம்புகளையும் உடலையும் நோக்கி சிராஜ் பந்துவீசினார். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டீன் எல்கருக்கு எட்ஜ் ஆகி பந்து மிட்விக்கெட்டுக்கு மேல் பறந்தது. இம்முறை, சிராஜ் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை டீன் எல்கர் அடித்தாட முற்பட்டார். அவரது பேட்டில் பின்புறம் பட்ட பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி 8 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி, அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவே இல்லை. 8 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்த தென் ஆப்ரிக்கா, மேலும் 7 ரன்களை எடுப்பதற்குள்ளாக அடுத்த 2 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா தன் பங்கிற்கு அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்சை பெவிலியனுக்கு அனுப்ப, ஷோர்ஜியை சிராஜ் அவுட்டாக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல் இதன் பிறகு தென் ஆப்ரிக்க வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஒருவர் கூட களத்தில் நிலைக்கவிலைலை. இதனால் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்னான் 15 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்களும் இரண்டு மணி நேரமுமே தேவைப்பட்டன. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ராவுக்கு பிறகு 2-வது வீரர் சிராஜ் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் முகமது சிராஜ் ஆவார். முன்னதாக, ஜஸ்பிரித் சிங் பும்ரா இதனை சாதித்துள்ளார். சர்வதேச அளவில் டிரென்ட் போல்ட் (2 முறை), வெர்னான் பிலாண்டர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பிறகு 5-வது வீரர் சிராஜ் ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா அதிரடி தொடக்கம் தென் ஆப்ரிக்காவை 55 ரன்னுக்கு சுருட்டிய உத்வேகத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். தென் ஆப்ரிக்க அணிக்காக முதல் ஓவரை நிகிடி வீசினார். காயத்தில் இருந்து மீண்டு ஓராண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் ஆடும் அவர் இரண்டாவது பந்தையே நோபாலாக வீசினார். அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா, அந்த ஓவரின் கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்தார். இதனால் முதல் ஓவரில் மட்டும் இந்திய அணி 13 ரன்களை திரட்டியது. இளம் வீரர் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம் இந்திய அணி முதல் இன்னிங்சை உற்சாகமாக தொடங்கிய நிலையில், ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் முதல் பந்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். 7 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஷூப்மன் கில், கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இருவருமே அதிரடி காட்டியதால் இந்திய அணியின் ரன் ரேட் 6-க்கும் அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இதனால், 9.4 ஓவர்களிலேயே தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 55 ரன்களைக் கடந்து இந்திய அணி முன்னிலை பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித் 39 ரன்களில் அவுட் அதிரடியாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா அணியின் ஸ்கோர் 72ஆக இருந்த போது ஆட்டமிழந்தார். பர்கர் வீசிய பந்தில் ஜேன்சனிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் கோலியும் அதிரடியாகவே ஆடினார். சுப்மன் கில் - கோலி ஜோடி இந்திய அணியை 100 ரன்களை எளிதாக கடக்கச் செய்தது. 19.5 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கில், ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து அவுட் கில் - கோலி ஆகிய இருவருமே அபாரமாக ஆடியதால் இந்திய அணி வலுவான முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கில் விக்கெட்டை பர்கர் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்ரேயாசை தனது அடுத்த ஓவரில் பர்கர் சாய்த்தார். ஸ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு கே.எல்.ராகுல் களம் புகுந்தார். கோலியுடன் கைகோர்த்த ராகுல் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நிதானமாக ஆடினார். இதனால், அணியின் ரன் ரேட் மந்தமானது. பட மூலாதாரம்,GETTY IMAGES பூஜ்யம் ரன்னுக்கு 6 விக்கெட் வலுவான முன்னிலையை நோக்கி முன்னேறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்திருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 33 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்த கே.எல்.ராகுல் நிகிடி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வெர்ரேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. ஸ்கோர் போர்டில் ஒரு ரன் கூட ஏறாத நிலையில், விக்கெட் மட்டும் மளமளவென சரிந்தது. ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கு நடுவே கோலி 46 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார். 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த இந்திய அணி அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்அவுட் ஆயினர். இந்திய அணி 153 ரன்களில் ஆல்அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவை விட இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா, நிகிடி, பர்கர் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா சாதனை தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 9.4 ஓவர்களில் முன்னிலை பெற்றது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு விரைவில் முன்னிலை பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பாக, 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்க்கு எதிராகவும், 2013-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் 11.2 ஓவர்களில் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா முன்னிலை பெற்றதே சாதனையாக இருந்து வந்தது. அந்த இரு போட்டிகளும் இதே கேப்டவுன் மைதானத்தில் தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க அணியால் மீண்டு வர முடியுமா? இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை வென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். தென் ஆப்ரிக்க அணியால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியுமா? https://www.bbc.com/tamil/articles/cxe45g8nm14o
  13. யாழ்ப்பாணம் - உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Published By: VISHNU 03 JAN, 2024 | 01:08 PM யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் புதன்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பும் இடம்பெற்றது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை உடனடியாக அகற்றக்கோரி உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்புவிடுத்தது. போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/173001
  14. கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 ஜனவரி 2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது. மலைகளால் சூழப்பட்ட பகுதிகளைக் கொண்ட அப்பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்குள்ள மக்களுக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதும் தெரியவில்லை. மலைப்பகுதியில் இருப்பதால் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு செல்வதாக அங்கிருந்த மக்கள் சிலர் தெரிவித்தனர். இந்த சமணர் குகை குறித்து, தொல்லியல் துறை பேராசிரியர் பிரபுவிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆர்மாமலை என்று அழைக்கப்படும் இந்த மலை முன்பு ‘அருகர் மாமலை’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அருகர் சமணர்கள் வழிபடும் தெய்வமாகும். எனவே, அவர்கள் இம்மலையினை ‘அருகர் மாமலை’ என்று அழைத்திருக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் அச்சொல் மருவி அருமாமலை, அர்மாமலை, ஆர்மா மலை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறது" என்றார். மூலிகைச் சாறு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் இம்மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகையில் சமண முனிவர்கள் தங்குவதற்காக மண் மற்றும் பச்சை செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அறைகளும், வண்ண ஓவியங்களும் உள்ளன. பாறையின் மேற்பகுதியில் அழகிய பல்லவர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அங்குள்ள ஓவியங்கள் மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்டு அழகிய வேலைப்படுகளுடன் சமணச்சமயக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்களுடன் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று பிரபு தெரிவித்தார். கி.பி.1882-இல் ராபர்ட் சீவெல் (Robert Sewell) என்ற ஆங்கிலேய வரலாற்று அறிஞர் ஆர்மாமலை ஓவியத்தைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு, பேராசிரியர் பிரபு மண் சுவர்களை கொண்ட அறைகள் இக்குகைத் தளத்தில் சமணத் துறவிகள் தங்குவதற்கும், வழிபாட்டுக்காகவும் மண் சுவர்களை ஏற்படுத்தி அறைகளாகப் பகுத்துப் பயன்படுத்தியுள்ளனர். அந்த அறைகளில் சமணத் துறவிகள் தங்கியுள்ளனர். இக்குகைத்தளத்தின் மேல் விதானத்தில் எண் சதுரம் வரைந்து, நடுவில் ஒரு சதுரம் அமைத்துத் தீட்டப்பட்ட ஓவியம் சிறப்பாக உள்ளது. இரண்டு சதுரங்களில் ஒன்றில் எட்டுத் திசைக் காவலர்களும், மற்றொன்றில் தாமரைத் தடாகமும் தீட்டப்பட்டுள்ளன. எண்திசைக் காவலர்களில் அக்னி தேவன் ஆட்டின் மீது அமர்ந்து வருவது போன்ற காட்சியும், எருமை மீது எமன் வருவது போன்ற காட்சியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மற்றொறு பகுதியில் பூத்துக் குலுங்கும் தாமரைப்பூக்களுடன் இலைகளும் கொடிகளும் உள்ளன. அன்னப்பறவைகளும் காணப்படுகின்றன. மேலும், இங்கு சமணக் கோயிலுக்குரிய மானஸ்தம்பத்தின் அடிப்பகுதி மட்டும் காணப்படுகிறது. ஆதில், ‘ஸ்ரீ கனக நந்தி படாரர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு துவாரபாலகர் சிலைகளும், தாமரை மலர் போன்ற பீடமும் காணப்படுகின்றது. சமணத் துறவியர் வாழ்ந்ததற்கான சான்று மேலும், இக்கல்லில் கி.பி. 8-ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்களில் 'கடைக்கோட்டு ருத்த நந்தி படாரர் மாணாக்கர்’ என்று எழுதியுள்ளது. இதுகுறித்து கூறிய பேராசிரியர் பிரபு, "இங்கு கடைக்கோட்டுருந்த நந்தி படாரர் என்ற சமணத் துறவியார் வாழ்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இவரது காலத்தில் இங்குள்ள ஒவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்குள்ள ஓவியங்கள் சமண சமயம் தொடர்பான நம்பிக்கைகளையும் செய்திகளையும் அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார். சித்தன்னவாசலுக்கு நிகரான ஓவியங்கள் இவ்வோவியங்கள் தீட்டும் முன்னர், ஒழுங்கற்ற பாறைகளில் சுண்ணாம்புப் பூச்சு கொண்டு பூசி வரைவதற்கு ஏற்ற சமதளம் உருவாக்கிப் பின்னர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பினும் எஞ்சியுள்ள ஓவியங்கள் வண்ணம் மற்றும் வடிவமைப்பு ஒப்புமையில் சித்தன்னவாசல் ஓவியங்களைப் போன்றே காணப்படுவதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார். எட்டு திசை காவலர்களின் உருவம் இங்கு சமணம் தொடர்பான காட்சிகளும், எட்டு திசைக் காவலர்களான அக்னி, வாயு, குபேரன், ஈசானியன், இந்திரன், யமன், நிருதி, வருணன் போன்றவர்களும் தாமரை தடாகமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் ஆட்டின் மீது பயணிக்கும் இருவருடைய ஓவியமே தெளிவாக உள்ளது. ’ பச்சை, மஞ்சள், கருஞ்சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களே பிரதானமாக உள்ளன. உருவங்கள் கருஞ்சிவப்பு வண்ணத்தால் கோட்டோவியமாக வரையப்பட்டு பின்னர் மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆபரணங்கள் குறைந்த அளவாகவும் அதேவேளையில் நுட்பமான கலைநயத்துடனும் வேலைப்பாட்டுடனும் காணப்படுகின்றது. "ஆர்மாமலைப்பகுதி பல்லவர்களின் இறுதிக் காலகட்டங்களில் இராஷ்டிரகூடர், கங்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டுச் சில காலங்கள் இருந்தன. இருப்பினும் இவை பல்லவர்கள் காலத்தின் இறுதிப்பகுதியில் வரையப்பட்டிருக்கக்கூடும்" என பேராசிரியர் பிரபு அனுமானிக்கிறார். சமணப்பள்ளிகள் சமணத்துறவிகள் தங்கும் இயற்கையான குகைகளில் அவர்கள் படுப்பதற்காக கற்பாறையில் படுக்கைகள் வெட்டிக்கொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததுதாகவும் அரசர்களும் செல்வந்தர்களும் இதை ஓர் அறக்கொடையாக செய்ததாகவும் பிரபு தெரிவித்தார். இந்த குகைகள் பள்ளிக்குகைகள் எனப்பட்டன. சமண வழிபாட்டுத் தளமும், சமண மெய்யியல் ஆசிரியர்கள் தங்கும் இடமும் அங்கே அமைந்திருக்கும். சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கி சமயக்கல்வியும் தவப்பயிற்சியும் பெறுவார்கள். அவ்விடத்தில் சமணமதத்தின் தூய்மை நெறிமுறைகள் பேணப்பட்டதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார். சமணப் பள்ளிக் குகைகளுக்கு அருகே சுனைகள் அமைக்கப்பட்டிருந்தன. சமண சொல்லிலிருந்து வந்த ’பள்ளிக்கூடம்’ "உணவு அளித்தல், கல்வி அளித்தல், அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி அளித்தல், அருளுரை அளித்தல் என்னும் ஐந்துவகைக் கொடைகளைச் சமயப்பணிகளாகச் சமணர்கள் செய்தனர். அவற்றில் முதன்மையாகக் கல்விப் பணியை அவர்கள் முன்னெடுத்தனர். சமணப் பள்ளிகளில் இலக்கணம், அறிவியல், மருத்துவம் ஆகியவை கற்பிக்கப்பட்டன" என்கிறார் அவர். தமிழகத்தில் கி.பி 2 முதல் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை சமண சமயம் செல்வாக்குடன் இருந்தது எனக்கூறும் அவர், கல்விக்கூடத்திற்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் சமணர்களின் ’பள்ளி’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டதுதான் என்றும் அவர் கூறுகிறார். படக்குறிப்பு, குகையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொல்லியல் துறையினரின் ஆய்வு அருகர் மாமலை என்ற ஆர்மாமலைக் குகை தொல்லியல் துறையால் 12.06.1978 அன்று பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில், அழிவுறும் நிலையில் இருந்த இவ்விடத்தினை பாதுகாத்திட எழுந்த கோரிக்கையினை ஏற்று தொல்லியல் துறையினர் இந்த மலைக்குகையைக் கடந்தாண்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, சிதிலமடைந்து காணப்பட்ட ஆர்மா மலைக்குகையை ரூ.20 லட்சம் செலவில் புனரமைத்துள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். மலைக்கு செல்லும் வழிப்பாதைகள், படிக்கட்டுகள், பக்கவாட்டு சுவர்கள், அறிவிப்புப் பலகைகள் என சுற்றுலா பயணிகள் வந்து ஆர்மா மலையின் அழகையும், பழங்கால மக்கள் வாழ்ந்த தடத்தையும் காண்பதற்கான ஏற்பாடுகளைத் தொல்லியல் துறையினர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நினைவு சின்னமாக ஆர்மா மலைக்குகை உள்ளது. இந்நிலையில், ஆர்மா மலைக்குகையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்கள் இது போன்ற நினைவுச் சின்னங்களைக் காண்பதோடு அவற்றைப் பாதுகாத்திட அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஓவியங்கள் குறித்து கருத்து தெரிவித்த தமிழகத் தொல்லியல் துறையின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் அர. பூங்குன்றன், “இந்திய ஓவியக்கலை மரபில் உன்னத நிலையை அடைந்த ஓவியங்களை வட இந்தியாவில் அஜந்தா, எல்லோரா போன்ற குகைகளில் காணமுடிகின்றது. தமிழகத்தில் இதேபோன்ற ஓவிய மரபு பிற்காலங்களில் வந்த பல்லவர், பாண்டியர் மற்றும் சோழர்கள் காலங்களில் இருந்துள்ளது. இவை எண்ணிக்கையில் மிகக் குறைவு. இம்மரபில் வந்த ஓவியத்தின் மிச்சமான ஒன்று தான் ஆர்மாமலையில் உள்ள ஓவியங்கள்” என்றார். ”பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது” மேலும், இங்குள்ள ஓவியங்களில் பெரும்பான்மை அழிந்த நிலையில் இருப்பதனால் ஓவியங்கள் குறித்து முழுமையாக அறிய முடியவில்லை என்றும் அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பினும் வடிவமைப்பு மற்றும் அழகியல் செய்நேர்த்தியில் இங்குள்ள ஓவியங்கள் மிக முக்கியமான கலை வரலாற்றுத்தலமாகக் கருதப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். இந்த இடம் பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வந்து பார்ப்பதற்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு தான் ஆர்மாமலை கண்டறியப்பட்டது. இதுகுறித்து பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பேராசிரியர் பிரபு வலியுறுத்துகிறார். ஓவியங்களின் சிறப்பு குறித்து பேசிய அவர், ”முற்றிலும் மூலிகை சாறு கொண்டு கி.பி. 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் வரையப்பட்ட வண்ண ஓவியத்தால் தீட்டப்பட்ட படங்கள் உள்ளன. சமண சமயத்தில் மூலிகைகளைக் கொண்டு பல விதமான வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆனால், இங்கு60% ஓவியங்கள் அழிந்துவிட்டன. நாகரீக வளர்ச்சி அடைந்த பிறகும் பல்லவர் காலத்தைச் சார்ந்த 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிபி ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூலிகைச் சாறுகளை கொண்டு பல்வேறு விதமான வர்ணங்களை வைத்து ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார். இங்கு சித்தன்னவாசலில் இருக்கக்கூடிய அனைத்து ஓவியங்களும் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். "டிஜிட்டல்மயமாக்க வேண்டும்" அங்குள்ள வண்ணங்கள் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது. ’வேர்கள்’ அறக்கட்டளையின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான வடிவேலு சுப்பிரமணி பிபிசியிடம் கூறுகையில், “சுடாத செங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட சுவர்கள் இங்குள்ளன. சுட்ட செங்கல்லை விட சுடாத செங்கல் வலிமையான சுவர்களைக் கொண்டு காணப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களின் அருமை தெரியாமல் சிதைக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். அதனை பாதுகாக்க வேண்டும்” என்றார். ஆட்சியர் என்ன சொல்கிறார்? திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிபிசியிடம் இதுகுறித்து பேசுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c2xye02l1jpo
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை, ஜனவரி 3) தீர்ப்பளித்துள்ளது. இதில் அதானி குழுமத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தொகுப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இந்த மனுக்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கோரியிருந்தன. இந்த பிரச்னையை விசாரிக்க கடந்த ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் ஒரு குழுவை நீதிமன்றம் நியமித்திருந்தது. அதே சமயம் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (செபி) நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. கடந்த மே மாதம், அதானிக்கு எதிராக முதன்மையான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று ஏ.எம்.சப்ரே குழு கூறியிருந்தது. ஆனால் இந்தக் குழு பாரபட்சம் காட்டுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர். இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. அதானிக்கு எதிரான 24 வழக்குகளில் 22 வழக்குகளில் செபி விசாரணையை முடித்துள்ளது. "செபி விசாரணைகளை [மீதமுள்ள வழக்குகளில்] 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்," என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. ‘The Organized Crime and Corruption Reporting Project’ என்ற குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணைகளை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டிருந்தனர். ஆனால் அப்படி விசாரணையை மாற்ற எந்தக் காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. "மூன்றாம் தரப்பு அமைப்பின் அறிக்கையை... உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது," என்று நீதிமன்றம் கூறியது. "இந்த வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை," என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், ஷார்ட் செல்லிங் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் ஏதேனும் சட்ட மீறல் இருந்தால், செபி மற்றும் நாட்டின் புலனாய்வு முகமைகள் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது பின்னணி என்ன? கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குச்சந்தை பகுப்பய்வு நிறுவனம் அதானி குழுமம் வரலாறு காணாத மோசடியில் ஈடுபடுவதாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது. அதானி குழுமத்துக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கும் இடையே அறிக்கை வாயிலான மோதல்கள் நடந்தன. ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன? 106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்டது ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை. அது சுருக்கமாகச் சொல்வது என்னவெனில், "அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது." அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதானி நிறுவனங்களுக்கு ‘கணிசமான கடன்’ இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறியிருந்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன அதானி குழுமம் கூறிய பதில் என்ன? இந்த அறிக்கையை நிராகரித்திருந்த அதானி குழுமம், இது முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறியது. ஹிண்டன்பர்க் கேட்டிருந்த 88 கேள்விகளில், 21 கேள்விகள் ஏற்கனவே பொதுத் தளத்தில் இருந்தவை என்று அதானி குழுமம் கூறியிருந்தது. ஹிண்டன்பர்க் தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை தயாரித்திருப்பதாகக் கூறியது தவறு என்றும், 2015 முதல் வெவ்வேறு தருணங்களில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்றும் அதானி நிறுவனம் கூறியிருந்தது. அந்த அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியிருந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் கொடுத்த விளக்கம் என்ன ? அதானியின் மறுப்பைத் தொடர்ந்து "ஆய்வறிக்கையில் நாங்கள் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை,” என்று கூறியிருந்தது ஹிண்டன்பர்க். “நாங்கள் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கிறோம். அதானி குழுமம் விரும்பினால், அமெரிக்க நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுக்கலாம். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார்,” என்றும் சவால் விடும் ரீதியில் பதில் கொடுத்திந்தது ஹிண்டன்பர்க். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன் ஹிண்டன்பர்க் என்பது என்ன? அது என்ன செய்கிறது? அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இயங்குகிறது ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம். அந்நிறுவனம் ஒரு ‘ஷார்ட் செல்லர்’ என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பது தான் ஷார்ட் செல்லிங் எனப்படும். பங்குகளின் விலை குறையும் என்று கணித்தால், அதை குறித்த நேரத்தில் தரகர் மூலமாக வாங்கி விற்று லாபம் ஈட்டுவதைத்தான ஷார்ட் செல்லிங் என்கிறார்கள். முதலீட்டுத் துறையில் பல தசாப்தங்களாக அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது. பங்குச் சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தங்களது நோக்கமாகும் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது. தன் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் முன்னரே பல நிறுவனங்களின் பங்குகளின் விலைகளை இறக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளம் கூறியுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க் 2020-ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cn0q1xl323qo
  16. லெபனானில் கொல்லப்பட்ட ஹமாஸின் முக்கியத் தலைவர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சலே-அல்-அரூரி 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சலே-அல்-அரூரி ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹிஸ்புல்லா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இது லெபனான் மீதான தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் அரூரியின் மரணத்திற்கு இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கிடையில், லெபனானின் பிரதமர், இஸ்ரேல் ‘லெபனானை... மோதலுக்கு இழுக்க’ முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். என்ன நடந்தது இச்சம்பவத்தில்? யார் இந்த அரூரி? ஹமாஸின் துணை அரசியல் தலைவரான அரூரி, தெற்கு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட ஒரு ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரோடு ஹமாஸின் இரண்டு இராணுவத் தளபதிகள் மற்றும் நான்கு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரூரி ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவில் முக்கிய நபராகவும், ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர். அவர் லெபனானில் ஹமாஸ் குழுவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு இணைப்பாக செயல்பட்டார். 57 வயதான அரூரி, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, நடக்கும் போரில் கொல்லப்பட்ட ஹமாஸின் மிக மூத்த தலைவர் ஆவார். இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளின்படி, மேற்குக் கரையில் ஹமாஸின் ராணுவப் பிரிவின் உண்மையான தலைவராக அரூரி கருதப்பட்டார், அங்கு தாக்குதல்களை மேற்பார்வையிட்டார். 2014-இல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்று கொன்றதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பிற தாக்குதல்களுக்காக இஸ்ரேலிய சிறைகளில் தண்டனை அனுபவித்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன. இரான் மற்றும் ஹெஸ்புலாவுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஹமாஸ் அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் கட்டடத்தைச் சுற்றி தீயணைப்புப் படையினரும் துணை மருத்துவப் பணியாளர்களும் திரண்டிருக்கும் காட்சி என்ன நடந்தது? ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு நிருபர், பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் இருந்தார். அங்கு ஒரு உயரமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு பெரிய துளை இருப்பதைக் கண்டார். மேலும் அக்கட்டடத்தைச் சுற்றி தீயணைப்புப் படையினரும் துணை மருத்துவப் பணியாளர்களும் திரண்டிருப்பதைக் கண்டார். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகள், ஒரு கார் தீப்பிடித்து எரிவதையும், பரபரப்பான குடியிருப்புப் பகுதியான அப்பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதையும் காட்டுகின்றன. தாஹியே ஹெஸ்புலாவின் கோட்டையாக அறியப்படுகிறது. ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான ஹனியே, இந்தத் தாக்குதல் "கோழைத்தனமான... பயங்கரவாதச் செயல், லெபனானின் இறையாண்மையை மீறுவது," என்று கூறினார். அரூரியின் மரணத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்த ஹெஸ்புலா, "லெபனான், அதன் மக்கள், அதன் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் அரசியல் மீதான கடுமையான தாக்குதல்" என்று கூறியிருக்கிறது. மேலும் இந்தத் தாக்குதல் "போரின் போது நடந்த ஒரு ஆபத்தான சம்பவம்... மேலும் ஹெஸ்புலாவில் உள்ள நாங்கள் இதற்குக் கண்டிப்பாக பதிலடி தரப்படும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று கூறியது. ஹமாஸ், ஹெஸ்புலா ஆகிய இரு குழுக்களின் முக்கிய ஆதரவாளரான இரான், அரூரியின் கொலை ‘மற்றுமொரு எதிர்ப்பலையைத் தூண்டும்’ என்று கூறியிருக்கிறது. இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன? இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகேவ் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என்று தெளிவாக உறுதிப்படுத்தவில்லை. இது இஸ்ரேலிய அரசின் பொதுவான நிலைப்பாடு தான். ஆனால் அமெரிக்க தொலைக்காட்சி ஊடகமான MSNBC-யிடம் பேசிய அவர், “இத்தாக்குதலை யார் செய்திருந்தாலும், அது லெபனான் அரசின் மீதான தாக்குதல் அல்ல என்பதை தெளிவாகப் புரிகிறது. இது பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புலா மீது கூட நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இதைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் ஹமாஸ் தலைமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்திருக்கிறார்கள். இதைச் செய்தவர்களுக்கு ஹமாஸ் மீது பகை உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது," என்றார். காஸா போருக்குப் பிந்தைய திட்டம் குறித்து விவாதிக்க செவ்வாய் (ஜனவரி 2) மாலை திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அகற்றுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னர் தெரிவித்திருந்தார். அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 240 பேரை பணயக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நடத்தியது. காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 22,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் - பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் - கொல்லப்பட்டுள்ளனர். காஸா போரின் போது ஹெஸ்புலா இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் இஸ்ரேலிய படைகளுடன் பல மோதல்களையும் நடத்தியது. https://www.bbc.com/tamil/articles/c4ny5je4y8eo
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 1 ஜனவரி 2024, 04:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன. “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும். ’நேச்சர்’ இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03-ஐ விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு? இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம். சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார். "உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார். சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. "சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது. புரோட்டினூரியா என்றால் என்ன? புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார். "புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த். "இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார். புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள். புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்." புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி? சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது. உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்’ கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார். மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன? சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்: உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல். உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது. சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது. சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது. சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது. நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை தீவிர சிறுநீரக நோய்கள் என்ன? நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும். ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை. நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும். நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். https://www.bbc.com/tamil/articles/c972d83qmgeo
  18. 01 JAN, 2024 | 09:32 PM காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் உலகின் முக்கியமான சுற்றுலாப் பிராந்தியமான NEOM இல், ‘Epicon’ என்ற மக்கள் குடியிருப்புகளுடன் கூடிய நவீன ஆடம்பர கடலோர சுற்றுலாத்தலம் ஒன்று அமையக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகபா வளைகுடாவில் அமைந்துள்ள ‘Epicon’ ஆனது, உயர் கட்டிடக்கலை மற்றும் ஆடம்பர வசதிகள் ஆகிய இரண்டிலும் உச்சம் தொடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தில், 225 மீட்டர் உயரமும் 275 மீட்டரை எட்டும் அளவு உயரமும் கொண்ட இரு கண்கவர் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 41 முக்கிய ஹோட்டல்கள், 14 அறைத்தொகுதிகள் மற்றும் அதி சொகுசு குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடம்பரத்தையும் அமைதியையும் ஒருங்கிணைக்கும் வகையில், 120 அறைகள் மற்றும் 45 கடற்கரை வில்லாக்களைக் கொண்ட Epicon Resort என்ற ஒரு தளமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த Epicon அமைப்பானது எதிர்காலத்திற்கான நுழைவாயிலாக வர்ணிக்கப்படுகிறது. மக்களின் அன்றாடச் சிரமங்கள் கலைப்புகளில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த ஒரு இடமாக இது அமைவதோடு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை கிளப்கள், ஆரோக்கிய சிகிச்சைகள் மற்றும் மஸாஜ்களைப் பெற ஸ்பா அமைப்புகள், புத்தாக்கங்களைக் கொண்ட சூழல், பல வகைப்பட்ட நீர் சார் விளையாட்டுகள், பல நாட்டு உணவு வகைகளையும் கொண்ட உணவகங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. உடற்பயிற்சிக்கான நவீன வசதிகள், நூலகம், அலுவலகங்கள், நீச்சல் தடாகங்கள் மற்றும் ஓய்வறைகள் போன்ற பல எல்லையற்ற ஆடம்பர வசதிகளைக் கொண்டிருப்பதோடு, Epicon, குடியிருப்பாளர்களும், பார்வையாளர்களுக்கும் NEOM இன் மிக அழகான கடற்கரையோரங்களில் ஆடம்பரமாக பொழுதைக் கழிக்கும் அனுபவத்தையும் பெறலாம். எனவே இந்த சுற்றுலாத்தலமானது சவூதி அரேபியாவின் இலட்சிய திட்டமான விஷன் 2030இன் இலக்குகளை அடைவதில் ஒரு முயற்சியாக அமைவதோடு அந்நாட்டு பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறைகள் மூலமான இலாபத்தை பன்மடங்காக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அத்தோடு தற்போது உலகில் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகவும் சவூதி அரேபிய மாறி வருவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172909
  19. ஐஸ்கட்டியின் விலையும் அதிகரிக்கின்றது ! 01 JAN, 2024 | 05:22 PM மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். வற் வரி அதிகரிப்பு காரணமாக இன்று திங்கட்கிழமை (01) முதல் ஐஸ்கட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172902
  20. லாப் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது ! 01 JAN, 2024 | 05:06 PM லாவ் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 4,740 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை ரூ.1,900 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/172898
  21. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் எக்ஸ்போசாட் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பூமியின் கீழ் சுற்றுப்பாதைக்கு சுமார் 650 கி.மீ. தொலைவில் எக்ஸ்போசாட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 30 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு அமைப்பு புத்தாண்டின் முதல்நாளில் மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது. சந்திரன் மற்றும் சூரியன் குறித்து ஆய்வு செய்யும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய இஸ்ரோ தற்போது, சூப்பர்நோவா (விண்மீன் வெடிப்பு) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எக்ஸ்போசாட்(XPoSat) என்னும் செயற்கைக் கோளை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் டிசம்பர் மாத இறுதியில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று இந்த எக்ஸ்போசேட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c51zk9z4kjko
  22. Published By: RAJEEBAN 01 JAN, 2024 | 02:46 PM ஒருவருட காலத்திற்கு சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் தனது துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் துறைமுகத்திற்குள்ளும் விசேட பொருளாதார வலயத்திற்குள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் நுழைவதற்கு அனுமதிவழங்கப்போவதில்லை என கொழும்பு புதுடில்லியிடம் தெரிவித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக இந்தியாவிற்கு இலங்கை தகவலை தெரிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜனவரி ஐந்தாம் திகதி முதல் மே மாதம் வரை தென் இந்து சமுத்திர பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீனாவின் ஜியாங் யாங் கொங்3 ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்காது என்பதே அர்த்தம் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மாலைதீவின் கரையோர பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட கப்பலிற்கு அனுமதியளிக்கவேண்டும் என மாலைதீவு அரசாங்கத்திடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனா சார்பு அரசாங்கம் மாலைதீவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்து சமுத்திரத்திற்குள் சீனாவின் விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல்கள் ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அனுமதிப்பதுஅவற்றிற்கு துறைமுகங்களில் இடமளிப்பது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கொழும்பிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதை தொடர்ந்தே கடந்த வாரம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் ஒரு வருட தடை குறித்து இந்தியாவிற்கு அறிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/172874
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தான் தூக்கிலிடப்பட மாட்டோம் என்று சதாம் உசேன் நம்பினாராம். கட்டுரை தகவல் எழுதியவர், சனா ஆசிப் தர் பதவி, பிபிசி உருது 31 டிசம்பர் 2023 “டிசம்பர் 30,2006 அன்று காலை 3 மணிக்கு எழுந்த சதாம் உசேனிடம் இன்னும் சில மணி நேரத்தில் தூக்கிலிடப்பட போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பின் அமைதியாக சென்று குளித்துவிட்டு, தூக்குமேடைக்கு தயாரானார்.” இந்த குறிப்புகளை சதாம் உசேனின் கடைசி நாட்கள் குறித்து தான் எழுதிய “தி ப்ரைஸன் இன் இஸ் பேலஸ்” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் வில் பார்டன்வெர்பர். சதாம் உசேனின் காவலுக்காக நியமிக்கப்பட்டிருந்த 12 அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளில் இவரும் ஒருவர். அவரது கூற்றுப்படி, தனது இறுதி நாட்களில், தான் தூக்கிலிடப்பட மாட்டோம் என்று முன்னாள் இராக் சர்வாதிகாரியான சதாம் உசேன் நம்பினாராம். இராக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்த சதாம் உசேனின் ஆட்சி 2003ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இராக் வளாகத்தில் உள்ள கான்கிரீட் அறையில் சதாம் தூக்கிலிடப்பட்டார். சதாம் உசேன் ஏன் தூக்கிலிடப்பட்டார்? 1982ல் துஜைல் நகரில் தனது எதிராளிகளான 148 பேரை கொலை செய்த குற்றத்திற்காக 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் இராக் நீதிமன்றத்தால் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களின்படி, கொல்லப்பட்ட அனைவருமே ஷியா சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் சதாம் உசேனை கொல்ல முயற்சித்து தோல்வியடைந்தவர்கள். சதாம் உசேன் தூக்கிலிடப்படும் இடம் மற்றும் நேரம் இறுதி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இராக் தலைநகர் பாக்தாத்துக்கு அருகில் உள்ள 'காத்மியா' பகுதியின் இராக் வளாகத்தில் உள்ள கான்கிரீட் அறையில் சதாம் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்கர்கள் இந்த இடத்தை 'கேம்ப் ஜஸ்டிஸ்' என்று அழைக்கின்றனர். அந்த சமயத்தில் இராக்கை சேர்ந்த சிறு குழு ஒன்றும் அந்த இடத்தில் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மரண தண்டனையை வாசித்த போது சதாம் உசேன் தனது கையில் குரானை வைத்திருந்தார். அந்த குழு தகவலின்படி, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நீதிபதி மரண தண்டனையை வாசித்த போது சதாம் உசேன் தனது கையில் குரானை வைத்திருந்தாக கூறியுள்ளனர். பின்னர் அந்த குரானின் நகலை அவரது நண்பர்களில் ஒருவருக்கு சதாம் கொடுக்க சொன்னாராம். தூக்குமேடையில் தூக்கிலேற்றும்போது, கைதிகளுக்கான உடையை அணிவதற்கு பதிலாக, 61 வயது சதாம் உசேன் வெள்ளை சட்டையும், அடர் நிற கோட்டையும் அணிந்திருந்தார். இராக் தொலைக்காட்சியில் முகமூடி அணிந்த நபர்கள் குழுவால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட்டன. ஆனால், தூக்கிலிடப்பட்டது காட்டப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவர் மன்னிப்பு கேட்டு கெஞ்சாமல் மிக பொறுமையாக நின்று கொண்டிருந்தார் தூக்கு மேடையில் சதாம் என்ன பேசினார்? கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? தூக்கு மேடைக்கு சென்ற பிறகு, சதாம் உசேனின் கழுத்து மற்றும் தலையை சுற்றி கருப்பு துணி (வழக்கமாக தூக்குத்தண்டனை கைதிகளுக்கு அணியப்படும் துணி) மூடப்பட்டது. அதன் பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அந்த துணியை போர்த்த தூக்கிலிடுபவர் முன்வந்த போது, சதாம் அதை மறுத்துள்ளார். காரணம், அந்த துணியை அணியாமல் தூக்கிலிடப்பட அவர் விரும்பினார். சதாம் தூக்கிலிடப்பட்ட பிறகு கசிந்த வீடியோ ஒன்றில், சதாமின் கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டியபோது, “இந்தத் துணிச்சலை நினைத்து பார்ப்பாயா...” என்று சிரித்துக் கொண்டே கத்துவது போல் காட்சிகள் இருந்தன. அதன் பின், அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர், "நரகத்திற்குப் போ..." என்று கத்த, எதிரி நாட்டினர் தனது நாட்டை அழித்ததாக குற்றம் சாட்டும் சதாம், "அந்த நரகம் இராக்கா?" என்று கேட்டுள்ளார். பிபிசி உலக செய்தியாளர் ஜான் சிம்ப்ஸன் கூற்றுப்படி, சதாம் உசேன் தூக்கிலிடப்படும் அந்த வீடியோவில், “ அவர் மன்னிப்பு கேட்டு கெஞ்சாமல் மிக பொறுமையாக நின்று கொண்டிருந்தாராம்”. மேலும் அந்த வீடியோவில், சதாம் உசேன் குரான் வசனங்களை படித்துக்கொண்டே தூக்குமேடைக்கு வருவதும் உள்ளது. அந்த நேரத்தில், இராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாவ் வஃபிக் அல் ரிபாயும் அந்த இடத்தில் உடனிருந்தார். அதற்கு பின்னர் பிபிசியிடம் பேசிய அவர், சதாம் தூக்கு மேடைக்கு அமைதியாக நடந்து வந்ததாக கூறினார். “அவரை நாங்கள் தூக்கு மேடைக்கு அழைத்து சென்றோம். அவர் சில முழக்கங்களை எழுப்பினார். மேலும் அவர் மிகவும் உடைந்து போயிருந்தார்.” 2013 ஆம் ஆண்டு வெளியான ஒரு புகைப்படத்தில் சதாமின் வெண்கலச் சிலை மற்றும் அதன் கழுத்தில் அவர் தூக்கிலிடப்பட்ட அதே கயிறு இருந்தது. அந்த புகைப்படத்தில் இருந்த நபர் மாவ் வஃபிக் அல் ரிபாய் தான். அந்த புகைப்படம் வெளியான பிறகு, பல நாடுகளை சேர்ந்த நபர்களும் அந்த கயிறை ஏலத்தில் கேட்டனர். ஆனால், மாவ் வஃபிக் அல் ரிபாய் சதாம் உசேனின் அந்த சிலை மற்றும் கயிறை அருங்காட்சியகத்தில் வைக்கப்போவதாக கூறிவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதாம் உசேன் தூக்கிலடப்பட்டு அவரது உடல் வெளியே கொண்டுவரப்பட்ட போது மக்கள் அவர் மீது எச்சில் துப்பவும், திட்டவும் செய்தனர். இந்த வழக்கே ஒரு நகைச்சுவை.. சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உடலின் புகைப்படங்கள் இராக் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. அதில் வெள்ளைநிற மேலங்கிக்கு பதில் அவர் கோட் அணிந்திருந்தார் மற்றும் அவரது உடல் வெள்ளை தாளால் மூடப்பட்டிருந்தது. சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு அவரது உடல் வெளியே கொண்டுவரப்பட்ட போது அங்கு கூடியிருந்த மக்கள் அவர் மீது எச்சில் உமிழவும், திட்டவும் செய்தனர். “தி ப்ரைஸன் இன் இஸ் பேலஸ்” என்ற தனது புத்தகத்தில் சதாமின் 12 காவலர்களில் ஒருவர் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது, மற்றவர்கள் அவரை பிடித்து இழுத்து விட்டனர் என்று எழுதியுள்ளார் பார்டன்வெர்பர். அந்த 12 காவலர்களில் ஒருவரான ஆடம் ராதர்சன், “ சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போது, நாங்கள் அவருக்கு துரோகம் இழைத்து விட்டதாக உணர்ந்தோம். நாங்கள் எங்களையே கொலைகாரர்களாக கருதிக்கொண்டோம். எங்களுக்கு நெருக்கமான ஒருவரை நாங்கள் கொலை செய்துவிட்டதாக நாங்கள் உணர்ந்தோம்” என்று பார்டன்வெர்பரிடம் கூறியுள்ளார். டிசம்பர் 13, 2003 அன்று சதாம் உசேன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் நவம்பர் 5, 2006 அன்று நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சதாம் உசேனுக்கெதிரான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு நீதிபதியிடம் அங்கிருந்த முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரிம்சி கிளார்க் "இந்த விசாரணை ஒரு நகைச்சுவை" என்று எழுதப்பட்ட ஒரு சீட்டைக் கொடுத்துள்ளார். இதனால் அவரை நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார் நீதிபதி. https://www.bbc.com/tamil/articles/cp4e1gg19qlo
  24. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டது! 01 JAN, 2024 | 01:13 PM உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி , 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,707 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/172864

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.