Everything posted by ஏராளன்
-
நீதித்துறைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறதா? உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நேர்காணல்
6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டில் பெரும்பாலான அரசுகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியுள்ளார். பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் பேசிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்த மாதிரியான அழுத்தங்கள் 1950 முதலே இருந்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையான காலத்தைக் குறிப்பிட்டுப் பேசிய சஞ்சய் கிஷன் கவுல், அப்போது நீதித்துறை மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார். பேச்சு சுதந்திரம் குறித்துப் பேசிய நீதிபதி சஞ்சய், அது ஒரு சமூகப் பிரச்னை என்று கூறினார். பிபிசியுடனான இந்த நேர்காணலில், சமூகத்தில் பேச்சு சுதந்திரப் பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டார். பிபிசிக்கு அளித்த பேட்டியில், நீதிபதிகள் நியமனம், தன்பாலினத்தவர் திருமணம் மற்றும் 370வது பிரிவு ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அவர் ஆதரித்தார். கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்சய் கிஷன் கவுல் ஒய்வு பெற்றார். தற்போது 56 வயதான சஞ்சய் கிஷன் கவுல், 1982இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர், மே 2001இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றார். பின், 2015இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற இவர், 2016இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். நீதித்துறை அன்றும் இன்றும் பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: கடந்த காலங்களில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளைப் போலவே இப்போதும் வழங்கலாமா அல்லது, அதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? நீதிபதி கவுல்: “இதுதான் நடைமுறை. நீங்கள் 1950 முதல் பார்த்தால், அப்போதிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. கடந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் ஒரு வகையான நடைமுறை இருந்தது. நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையில் எப்போதும் மோதல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். அப்படியான மோதல்கள் இருப்பது நல்லது. நீதித்துறையின் வேலை, சரிபார்த்து சமநிலைப்படுத்துவதுதான். நம்மிடம் ஜனநாயக தேர்தல் முறை இருப்பதால், கூட்டணி அரசுகள் அமையும்போது, நீதித்துறையில் இருக்கும் சில இடையூறுகள் குறையும். ஒருவர் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்போது, தங்களிடம் மக்கள் ஆதரவு இருப்பதாக நினைக்கிறார்கள். எனவே, நீதித்துறை ஏன் நமது பணியில் தலையிடுகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், நீதித்துறைக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தங்கள் உள்ளது. இது சற்று இழுபறியான ஒன்றாகத்தான் உள்ளது. இது மேலும் தொடரும்." கேள்வி: அப்படியென்றால் இப்போது அழுத்தங்கள் அதிகரித்துள்ளதா? நீதிபதி கவுல்: " பெரும்பான்மை அரசாங்கம் இருக்கும்போது, எப்போதும் அழுத்தங்கள் சற்று கூடுதலாகவே இருக்கும்." கேள்வி: இந்த அழுத்தங்கள் இப்போது எப்படி அதிகரிக்கிறது? நீதிபதி கவுல்: "இந்த அழுத்தங்கள் ஒரு கோடு போன்றது. அதன் ஒரு பக்கம் நீதித்துறையும் மறுபக்கம் நிர்வாகத்துறையும் இருக்கும். எப்போது கூட்டணி அரசுகள் வந்தாலும், நீதிமன்றம் அந்த எல்லைக்கு வெளியே அரை அடி எடுத்து வைக்கலாம் என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மை அரசுகள் வரும்போது, நீதிமன்றங்கள் அந்த எல்லையில் நிற்கின்றன. பெரும்பான்மை அரசாங்கம், தான் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதைப் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு கொண்டு வருவதாக நம்புகிறது. எனவே, அந்தப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு மதிக்கப்பட வேண்டும், ஏனெனில் அதுதான் ஜனநாயகம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் யாராவது முறையீடு செய்து, அதில் நீதிமன்றம் தலையிட்டால், 'நாடாளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, சட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் வேலை. இந்த விஷயத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்?' என அவர்கள் நினைப்பதாக நான் பார்க்கிறேன். கேள்வி: நீங்கள் நீதிபதி ஆனதில் இருந்து பேச்சு சுதந்திரம் (கருத்து சுதந்திரம்) விஷயத்தில் ஒருவிதமான போக்கைப் பார்க்கிறீர்கள். கருத்து சுதந்திரம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? நீதிபதி கவுல்: "எழுதுபவர் எழுதட்டும், ஓவியம் வரைபவர் ஓவியம் வரையட்டும் என்பதே என் கருத்து. ஹிந்துஸ்தானி சமூகம் மிகவும் தாராளமயமாக இருந்தது என்பது எனது சொந்த உணர்வு. ஒரு மதம் ஒன்றை நம்புகிறது, மற்றொரு மதம் வேறொன்றை நம்புகிறது. இப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டை, ஒன்றாக வைத்து ஒன்றாக வாழ வேண்டும் என்றால், நாம் ஒருவரையொருவர் சகித்துக்கொள்ளக் கற்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையை அவர் விரும்பியபடி வாழ உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்." கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் அது(பேச்சு சுதந்திரம்) மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறீர்களா? நீதிபதி கவுல்: "எங்கோ சில பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆனால், எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் அதைச் சரிசெய்ய நான் விரும்பவில்லை. நான் அதை ஒரு சமூக பிரச்னையாகப் பார்க்கிறேன். சமூகத்தைப் பார்த்தால் எங்கோ ஒருவருக்கு ஒருவர் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. மேலும் நான் நாட்டைப் பற்றிப் பேசவில்லை. இதே பிரச்னை சர்வதேச அளவிலும் உள்ளது." நீதித்துறையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாள்வதில் சிக்கல் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: சமீபத்தில், உ.பி.யில் சிவில் நீதிபதி ஒருவர், தனது மாவட்ட நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அதன்பிறகு, அவரது புகார் ஐசிசி-யிலும் பதிவு செய்யப்பட்து. இப்போது அந்தப் பெண் எத்தியோப்பியா செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஏனென்றால் அவருக்கு இனி இங்கு வாழ விருப்பம் இல்லை. அதேபோல, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை நாம் முன்பே பார்த்தோம். இப்போது மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி இருக்கிறார், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், நீதித்துறைக்குள் இருந்து வரும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை நீதித்துறை முழுமையாகச் சமாளிக்க முடியாமல் போய்விட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? நீதிபதி கவுல்: "கடவுள், நீதிபதிகளை மேலே இருந்து இறக்குவதில்லை. அவர்களும் நமது சமூகத்தின் ஓர் அங்கம்தால. இத்தகைய சூழ்நிலையில், நீதிபதிகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், அது முழுமையானதாக இருக்க முடியாது. சமாளிக்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கும். இப்போது, இதுவொரு சிறப்பு வழக்கு, இது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், எல்லாவற்றிலும் ஒரு குற்றச்சாட்டும், அதற்கு ஒரு தற்காப்பும் இருக்கிறது. ஒருவர் ஏதேனும் தவறு செய்தாரா இல்லையா என்பதைச் சரிபார்க்காமல் குற்றச்சாட்டுகளையே இறுதி முடிவாக ஏற்க வேண்டுமா? எதையும் விசாரிக்காமல், முழுமையாகத் தெரியாமல் முடிவெடுக்க முடியாது." பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சாதிப் பிரதிநிதித்துவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? சட்ட அமைச்சகத்தின் கூற்றுப்படி, 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட 659 நியமனங்களில், 75% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சாதியினர் 3.5% மற்றும் பட்டியல் பழங்குடியினர் 1.5% மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் உள்ளனர். இதற்கான காரணங்கள் என்ன? நீதிபதி கவுல்: "நீதிபதி நியமனங்கள் மூன்று நிலைகளில் செய்யப்படுகின்றன. துணை நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளது. இதுவும் செயல்படுத்தப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிலிருந்து வந்தவர்கள். அதனால் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. நாங்கள் வழக்கறிஞர்களின் சங்கத்தில் இருந்து வருபவர்களைப் பற்றிப் பேசுகிறோம். இங்கு சமூக எழுச்சி அவ்வளவாக நடக்கவில்லை. எனவே, நீங்கள் பட்டியலில் எந்த வயதினரைப் பார்க்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பார்க்க வேண்டியது, 45 முதல் 50 வயது வரை உள்ளவர்களை. இந்த எட்டு-பத்து ஆண்டுகளில் நீங்கள் பிரதிநிதித்துவத்தைப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களைக் கண்டால் சில சலுகைகள் கொடுப்போம். அவர்களின் செயல்பாட்டையும் பார்ப்பார்கள். ஆனால், அவர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றால், எப்படி வலுக்கட்டாயமாக அதை அமல்படுத்த முடியும்? பெண்கள் நியமனம் பற்றிப் பேசும்போது, பல பதவிகளில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் நியமனம் நடப்பதாக அடிக்கடி கூறுவேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இல்லை என்றால், இன்று எப்படி அவர்கள் அந்த இடங்களுக்கு வந்திருப்பார்கள்? இப்போதும் அந்த அம்சம் தெரிகிறது. பல நேரங்களில் அரசு ஆர்வம் காட்டும்போது, சாதி, சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பிரதிநிதித்துவம் உள்ளது, ஆனால், சரியான பிரதிநிதித்துவத்திற்கு சிறிது காலம் எடுக்கும்." பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றவில்லையா? நீதிபதி கவுல்: "இந்த கொலீஜியம் அமைப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, அரசியல் வர்க்கம் எங்களுக்கு ஏதாவது பங்கு இருக்க வேண்டும் என்று உணர்ந்தது. என்ஜிசி அரசாங்கத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை." பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் போன்ற முக்கியப் பிரச்னைகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மறுபுறம் தன்பாலினத்தவர் திருமணம் போன்ற விவகாரத்தில் ஓராண்டுக்குள் முடிவு எடுக்கப்பட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? நீதிபதி கவுல்: "அரசமைப்பு விவகாரங்களில் முடிவுகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவை பெரிய விஷயங்களைத் தீர்க்கின்றன. எங்கோ தலைமை நீதிபதி பட்டியலிடும் இடத்தில் விஷயம் சிக்கிக் கொள்கிறது. ஓரளவிற்கு, அது அவரது அதிகார வரம்பிற்குள் வருகிறது. தன்பாலின திருமணம் என்பது தலைமை நீதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஒரு சமூகப் பிரச்னையாக இருந்தது. தலைமை நீதிபதியின் கருத்துப்படி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்." பிரிவு 370இல் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: சட்டப்பிரிவு 370 தொடர்பான இரண்டு சிக்கல்கள் இருந்தன. முதலாவது அதை நீக்குவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது. ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது சரியா இல்லையா என்பது இரண்டாவது பிரச்னை. இரண்டாவது பிரச்னையில், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் உறுதியளித்திருப்பதால், இது குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கத் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது. முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதும் கூட முடிவு தானே என்று கூறியிருந்தார். நீதிபதி கவுல்: "அந்த அறிக்கை சொலிசிட்டர் ஜெனரலின் அறிக்கை மட்டும் அல்ல. இது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இப்போது ஏதாவது ஒரு கொள்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டால், அதில் எதுவும் நடக்காது, முன்னோக்கிச் செல்லும் வழி இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை." கேள்வி: அது திரும்பப் பெறக்கூடிய அறிக்கை, அதில் எந்த சட்டப்பூர்வ கடமையும் இல்லை. மற்ற சட்ட வல்லுநர்களும் நீதிமன்றம் ஒரு முடிவை வழங்கியிருக்க வேண்டும் என்று நம்பினர். நீதிபதி கவுல்: சட்டம் என்பதில் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கும். ஒரு காரணத்திற்காக, அந்த மக்கள் சரியானது என்று நினைப்பதற்கும் அமர்வு(bench) சரியானது என்று நினைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால், பிரச்னைக்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை (அரசு வழக்கறிஞர்) சொந்தமாகக் கொடுக்கப்படவில்லை. அவரிடம் கேட்கப்பட்டு, அவர் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டு திரும்பி வந்து கொடுத்தார். https://www.bbc.com/tamil/articles/c72y9wr1z9lo
-
Leap Year: பிப்ரவரி 29 உடன் தொடர்புடைய சுவாரஸ்யமான பாரம்பரியங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான 28 நாட்களுக்கு பதிலாக 29 நாட்கள் இருக்கும். 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான 365 நாட்கள் அல்லாமல் 366 நாட்களுடன் ஆங்கிலத்தில் இருக்கும் ஆண்டு, லீப் ஆண்டு (Leap Year) என்று அழைக்கப்படும் மிகுநாள் ஆண்டாக 2024 இருக்கும். ஆண்டின் மிகச்சிறிய மாதத்துக்குக் கூடுதலாக ஒரு நாள் கிடைக்கிறது. பிப்ரவரி 29ஆம் தேதி மிகு நாள் (லீப் நாள்) என்று அழைக்கப்படுகிறது. மூட நம்பிக்கைகளும் கலாசார பாரம்பரியங்களும் இந்த நாளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. மிகுநாள் ஆண்டு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதற்கு முந்தைய மிகுநாள் ஆண்டு 2020, அடுத்த மிகுநாள் ஆண்டு 2028. இதற்கு விதிவிலக்கு உண்டு. அது குறித்து விரிவாகக் கீழே பார்க்கலாம். ஏன் மிகுநாள் ஆண்டு நிகழ்கிறது? ஓர் ஆண்டு என்பது பொதுவாக 365 நாட்களைக் கொண்டது. ஏனென்றால், பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் அவகாசம் இது. ஆனால், 365 என்பது ஒரு தோராயமான எண்ணிக்கை மட்டுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்றி வர 365.242190 நாட்கள் ஆகும். பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்றி வர 365.242190 நாட்கள் ஆகும். அதாவது 365 நாட்கள், 5 மணிநேரங்கள், 48 நிமிடங்கள், 56 நொடிகள். இது விண்மீன் ஆண்டு எனப்படும். அதாவது பூமி சூரியனைச் சுற்றிச் சுழலும் உண்மையான கால அளவு. ஆங்கிலத்தில் இதை sidereal year என்பர். நாட்காட்டியில் உள்ள 365 நாட்களைவிட மிகுநாள் ஆண்டு சற்று கூடுதலானது. எனவே கூடுதலான இந்த நேரத்தைச் சரிக் கட்டுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு முழு நாள் நமது நாட்காட்டியில் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இதன்மூலம், நமது நாட்காட்டி மாறி வரும் பருவங்களுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். மிகுநாள் ஆண்டு பாரம்பரியங்கள் என்ன? மிகுநாள் ஆண்டுடன் தொடர்புடைய பல பாரம்பரியங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் உள்ளன. திருமணமாகாத ஆண்களுக்கான இந்த தினத்தில், அயர்லாந்து நாட்டு பாரம்பரியத்தின்படி, பெண்கள் ஆண்களிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இது மிகுநாளில் நடைபெறும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அயர்லாந்தில் மிகுநாளில் பெண்கள் ஆண்களிடம் தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கும் பாரம்பரியம் உள்ளது. நாகரிகம் மாறி வரும் காலத்தில் பெண்கள் ஆண்டின் எந்த நாளில் வேண்டுமானாலும் ஆண்களிடம் தங்கள் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட பாரம்பரியம் 5ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தூதர் பிரிட்ஜெட் மற்றும் தூதர் பாட்ரிக் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் புனைவு ஒன்றின் அடிப்படையில் இந்த பாரம்பரியம் தொடங்கியிருக்கலாம். ஆண்கள் தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவிக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்வதால் பெண்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என தூதர் பிரிட்ஜெட், தூதர் பாட்ரிக்கிடம் புகார் செய்தார். எனவே திருமண விருப்பத்தை வெளிப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரினார் என்று அந்தப் புனைவு அமைந்துள்ளது. பெண்ணின் திருமண விருப்பம் நிராகரிக்கப்படும்போது, செய்ய வேண்டிய சில சடங்குகளும் உள்ளன. பெண்ணின் விருப்பத்தை ஆண் நிராகரித்துவிட்டால், அந்தப் பெண்ணுக்கு பட்டாடைகள் மற்றும் கையுறைகள் வாங்கித் தர வேண்டும். சில பாரம்பரியங்களின்படி, மிகு நாள் துர்திருஷ்டவசமானதாகக் கருதப்படுகிறது. கிரேக்க நாட்டில், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மிகுநாளில். மிகுநாள் ஆண்டில் செய்யப்படும் திருமணம் முறிந்துவிடும் என்று அங்கு நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரம்பரியாக கிரேக்கர்கள், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்ப்பார்கள். ஸ்காட்லாந்து நாட்டில், மிகுநாளில் தீங்கு விளைவிக்கும் மந்திரவாதிகள் ஒன்று கூடுவதாக நம்பப்படும் பாரம்பரியம் உள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதி குழந்தை பிறப்பதையும் துர்நிகழ்வாக ஸ்காட்லாந்து மக்கள் சிலர் கருதுகின்றனர். பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு, பிப்ரவரி 29ஆம் தேதி மந்திரவாதிகள் ஏதாவது தொல்லை கொடுப்பர் என்று ஸ்காட் மக்கள் நம்பினர். ஆனால் சில கலாசாரங்களின்படி, மிகுநாள் ஆண்டை அதிர்ஷ்டமானதாக பார்ப்பதும் உண்டு. சில ஜோதிடர்கள், உங்கள் பிறந்த நாள் மிகுநாளாக இருந்தால், நீங்கள் பல சிறப்பான திறமைகள் கொண்டவராக இருப்பீர்கள் என்று நம்புகிறார்கள். மிகுநாள் ஏன் பிப்ரவரி மாதத்தில் உள்ளது? மிகு நாள் ஏன் பிப்ரவரி மாதத்தில் அமைகிறது என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ள, பண்டைய ரோம நாட்டில் ஜூலியஸ் சீசர் நாட்காட்டி சீர்திருத்தங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலியன் நாட்காட்டியை சீசர் அறிமுகப்படுத்தினார். சூரிய நாட்காட்டியுடன், வழக்கமான நாட்காட்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால், மிகுநாள் ஆண்டு சேர்க்கப்பட்டது. ஜூலியன் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டியாக 1852ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. எனினும், பிப்ரவரி மாதத்தில் ஒரு மிகுநாள் சேர்க்கப்படும் பாரம்பரியம் மாறவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலியன் மற்றும் கிரிகோரியன் நாட்காட்டிகளில் ஈஸ்டர் தேதிகளைத் தீர்மானிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பித்தளை நிரந்தர நாட்காட்டி. மிகுநாள் ஆண்டுகளே இல்லாமல் போனால் என்னவாகும்? நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமலும், நாட்காட்டிகளுக்கு இடையே உள்ள சுமார் ஆறு மணிநேரத்தைக் கணக்கில் எடுக்காமலும் இருந்தால், பருவ காலங்கள் தடம் மாறிவிடும். உதாரணமாக, சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு, வடக்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் ஜூன் மாதத்திற்குப் பதிலாக டிசம்பரில் தொடங்கும். நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், வடக்கு அரைக்கோளத்தில் ஒரு கட்டத்தில் ஜூன் மாதத்தில் குளிர்காலம் நிலவும், அதேநேரத்தில் தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் நிலவும். பட மூலாதாரம்,GETTY IMAGES மிகுநாள் ஆண்டுகள் எப்போதெல்லாம் வருகின்றன? பலரும் மிகுநாள் ஆண்டுகள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்றன என்று நினைக்கிறார்கள். ஆனால் அது எப்போதும் உண்மை இல்லை. இதற்குக் காரணம், ஓர் ஆண்டின் துல்லியமான நீளம் (நாட்கள், மணிநேரங்கள், நிமிடங்கள், விநாடிகள்) நமது நாட்காட்டியின் ஆண்டின் நீளத்திற்குச் சரியாகப் பொருந்தாததுதான். ஓர் ஆண்டின் துல்லியமான நீளம் 365.242222 நாட்கள். ஆனால் நமது நாட்காட்டியில் 365 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் குறைபாட்டை சரிசெய்வதற்காகத்தான் மிகுநாள் ஆண்டுகள் இருக்கின்றன. அவற்றின் விதி என்னவென்றால், ஓர் ஆண்டை நான்கால் வகுத்து மீதி இல்லாமல் வந்தால் அது மிகுநாள் ஆண்டாகும். இதற்கு ஒரு விதிவிலக்கு: நூற்றாண்டுகள். 100ஆல் வகுத்து மீதி இல்லாமல் வரும் ஆண்டுகள் மிகுநாள் ஆண்டுகள் அல்ல. ஆனால், 400ஆல் வகுத்து மீதி இல்லாமல் வரும் நூற்றாண்டுகள் மிகுநாள் ஆண்டுகள் ஆகும். சுருக்கமாகச் சொன்னால், மிகுநாள் ஆண்டுகள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை வராது. 100ஆல் வகுத்து மீதி இல்லாத ஆண்டுகளைத் தவிர்த்து, மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் ஒன்று லீப் ஆண்டாக இருக்கும். நூற்றாண்டுகளில் 400ஆல் வகுத்து மீதி இல்லாதவை மட்டுமே மிகுநாள் ஆண்டுகள். சிக்கலாக இருக்கிறதா? சில எளிமையான உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம். 2000ஆம் ஆண்டு ஒரு மிகுநாள் ஆண்டாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆண்டை 4 மற்றும் 400ஆல் வகுத்தால் மீதி இல்லாமல் வந்தது. ஆனால், 1700, 1800, 1900 ஆண்டுகள் 4ஆல் வகுத்தாலும் 400ஆல் வகுத்தால் மீதி வந்தது. ஆகையால் அவை மிகுநாள் ஆண்டுகள் அல்ல. அடுத்த முறை மிகுநாள் ஆண்டு தவிர்க்கப்படும் ஆண்டு 2100 ஆகும். https://www.bbc.com/tamil/articles/c1ryzq2n4gyo
-
பொதுமக்களின் பங்களிப்போடு வீதியை செப்பனிட்ட இளைஞர்கள் !
தென்மராட்சி-கைதடி கிழக்கு ஊற்றல் மயானத்திற்கு செல்லும் பிரதான வீதி அண்மையில் பிரதேச மக்களுடைய பங்களிப்போடு இளைஞர்களால் புனரமைக்கப்பட்டது. பொதுமக்களின் அதிக பயன்பாட்டில் உள்ள இவ் வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன், மழைக் காலத்தில் போக்குவரத்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு மழைக் காலத்தில் குறித்த வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் கைதடி இராசபுரி, கலைநகர் மற்றும் பண்டகவயல் பகுதி மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதனைத் தவிர்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே பிரதேச மக்கள் இணைந்து முதற்கட்டமாக 50 மீற்றர் தூரத்தை புனரமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287052
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
IND vs SA: கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவை திணற வைத்த பும்ரா, சிராஜ் - சமன் செய்த இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் கேப்டவுன் நியூலாந்து மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்குவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 2 நாட்களிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுக்கால வரலாற்றில் இந்த முறையாவது இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் இருந்தாலும் ஆறுதலும் கிடைத்துள்ளது. கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 7 முறை விளையாடியுள்ளது என்றாலும் ஒரு போட்டியில்கூட வென்றது இல்லை. ஆனால், முதல்முறையாக நியூலாந்து மைதானத்தில் வெற்றியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்தது. முதலிடத்தில் இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 26 புள்ளிகளுடன் 54.16 சதவீதத்துடன் முதலிடத்தை இந்திய அணி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி 2வது இடத்துக்குச் சரிந்தது. 92 ஆண்டுகளுக்குப் பின்... ஏறக்குறைய 92 ஆண்டுகளுக்குப்பின் ஒரு டெஸ்ட் போட்டியில் மிகக் குறைவான பந்துகள் வீசப்பட்டு, டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது என்றால் இந்த ஆட்டம்தான். இதற்கு முன் கடந்த 1932ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே 656 பந்துகள் வீசப்பட்டதுதான் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக இருந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 106.4 ஓவர்கள், அதாவது 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு 92 ஆண்டுகளுக்குப் பின் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களும், இந்திய அணி 153 ரன்களும் சேர்த்து, இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்து 79 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது. பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம் பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “சிறந்த அடியை முன்னெடுத்துள்ளோம் என்றாலும் ஏராளமான தவறுகளில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம். பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் வீசி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். பேட்டர்களும் 100 ரன்கள் வரை முன்னிலை எடுத்துக் கொடுத்தனர். ஆனால், கடைசி 6 விக்கெட்டுகள் சரிந்தது வேதனைதான். யாரும் இதுவரை பார்க்காத வகையில் சிராஜ் பந்துவீச்சு இருந்தது. இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம். தென் ஆப்பிரிக்கா எப்போதுமே நமக்கு சவலாக இருந்தது, இங்கு வந்து வெற்றியும் பெற்றுள்ளோம்,” எனத் தெரிவித்தார் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன. ஆட்டநாயகன் விருது 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜுக்கும், தொடர்நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், எல்கருக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடருடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இந்தப் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட டீன் எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். பேக்ஃபயராக மாறிய ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்புதான் முக்கியக் காரணம். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்தது சிராஜ்ஜின் பந்துவீச்சும் 6 விக்கெட்டுகளும் என்றால், 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை கதிகலங்க வைத்தது ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு. வேகப்பந்துவீச்சாளர்களின் நலனுக்காக, சாதகமாக ஆடுகளத்தை அமைத்த தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த ஆடுகளமே “பேக்ஃபயராக” மாறிவிட்டது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு சுருண்டதும், 2வது இன்னிங்ஸில் 48 ரன்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம். இந்திய அணியும் இதில் சளைத்தது இல்லை. முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் சேர்த்திருந்தபோது, அடுத்து எந்த ரன்னும் சேர்க்காமல் பூஜ்ஜிய ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையைப் படைத்தது. இரு அணிகளும் பந்துவீச்சாளர்களை நம்பி நியூலாந்தில் கால் வைத்தன, இதில் இந்திய அணி முந்திக்கொண்டதால், தென் ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. ஆறுதல் அளித்த மார்க்ரம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்டில் ஒரே ஆறுதல் மார்க்ரம் அடித்த சதம்(103) மட்டுமே. டெஸ்ட் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு அணியில் மற்ற வீரர்கள் 20 ரன்களுக்கு மேல் சேர்காத நிலையில் மார்க்ரம் மட்டும் சதம் அடித்தது இதுதான் முதல்முறை. பும்ராவிடம் சரண் பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது. மார்க்ரம் 36, பெடிங்கம் 7 ரன்களில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனால், இன்றைய தொடக்கமே தென் ஆப்பிரிக்காவுக்கு சிறப்பாக அமையவில்லை. பும்ராவின் முதல் ஓவரிலேயே பெடிங்ஹாம் விக்கெட் கீப்பரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வெரினேவும் நிலைக்கவில்லை. பும்ரா பந்துவீச்சில் ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டு, சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேசவ் மகராஜ் கல்லி பகுதியில் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேற தென் ஆப்பிரிக்க 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்தித்திருந்தது. மார்க்ரம் சதம் விக்கெட்டுகள் ஒருமுனையில் வீழ்ந்தாலும் மற்றொரு முனையில் மார்க்ரம் அதிரடியாக ஆடினார். 68 பந்துகளில் அரைசதம் அடித்த மார்க்ரம், அடுத்த 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்தார். ரபாடா, மார்க்ரம் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர். மார்க்ரம் 73 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை ராகுல் தவறவிட்டதால், அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்று சதம் அடித்தார். இல்லாவிட்டால் சதம் அடிக்காமலே மார்க்ரம் நடையைக் கட்டியிருப்பார். மார்க்ரம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. விக்கெட் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு முதல் ஐந்து விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு பறிகொடுத்த தென் ஆப்பிரிக்க அணி கடைசி 3 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்களுக்குள் இழந்தது. 36.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களில் 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 13.5 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி. எளிய இலக்கை அதிரடியாக அடைந்தால்தான் வெற்றி கிட்டும் என்பதை உணர்ந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆவேசமாக பேட் செய்தனர். இருவரின் பெரும்பாலான ஷாட்கள் பேட்டின் மத்தியப் பகுதியில் விழவில்லை, இருப்பினும் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 5.4 ஓவர்களில் இந்திய அணி 44 ரன்களை தொட்டது. ஜெய்ஸ்வால் 28 ரன்னில் பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சுப்மான் கில் 10 ரன்னில் ரபாடாவின் லோபவுன்ஸரில் போல்டாகி வெளியேறினார். கோலி 12 ரன்னில் யான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது. https://www.bbc.com/tamil/articles/cgr3gqnpjpvo
-
ஜப்பானில் 7.6 நிலநடுக்கம் - பெரும் சுனாமி எச்சரிக்கை
ஜப்பான் நிலநடுக்கங்களை ரிக்டர் அளவில் அறிவிப்பதில்லை. நிலம் எவ்வளவு அதிர்கிறது என்பதை வைத்தே அவர்கள் நிலநடுக்கத்தை கணக்கிடுகின்றனர். இந்த அளவுகோள் ஒன்று முதல் ஏழு வரை செல்கிறது. இஷிகவாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகபட்ச அளவான 7ஐ தாண்டியது. சாலைகள், பாலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இது பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இருப்பினும், பெரும்பாலான கட்டடங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் நிலைத்து நிற்கின்றன. டொயாமா (Toyama), கனாசவா (Kanazawa) போன்ற பெருநகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இது எப்படி சாத்தியம்?
-
A/L பரீட்சை இன்று ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(04) ஆரம்பமாகிறது. இம்முறை பரீட்சையில் 346,976 பேர் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 281,445 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவர். உயர்தர பரீட்சையை முன்னிட்டு, நாடு முழுவதும் 2298 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன. அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளுக்காக மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/286939
-
சவால்களை மீறி கல்வியில் சாதிக்கும் மட்டக்களப்பு மாணவி
“என்ன School-ல சேர்க்க Teachers விரும்பல” - கல்வி மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த விதுர்ஷா
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரரின் குடும்பம் - இரகசிய நடவடிக்கை மூலம் மீட்பு Published By: RAJEEBAN 04 JAN, 2024 | 03:05 PM காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரரின் குடும்பத்தவர்கள் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் உட்படபல நாடுகள் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையொன்றின்மூலம் அமெரிக்காவின் இராணுவவீரரின் தாயாரும் உறவினரும் மீட்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிகாரியொருவர் அசோசியேட்டட் பிரசிடம் தெரிவித்துள்ளார். காசாவில் கடும் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் அமெரிக்கர் ஒருவரை மீட்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல்தடவை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 44வயதான ஜஹ்ராஸ்கக் தனது உறவினருடன் புத்தாண்டு தினத்தன்று காசாவிலிருந்து வெளியேறியுள்ளார் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்,இந்த நடவடிக்கை குறித்த விபரங்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட பெண் காசாவில் கட்டிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக தப்பியோடியவேளை அவரது கணவர் சுடப்பட்டார்அவர் சில நாட்களின் பின்னர் உயிரிழந்தார். இவர்களின் மகன் அமெரிக்கஇராணுவத்தில் பணியாற்றுகின்றார். இஸ்ரேலிய இராணுவத்தினரும் இஸ்ரேலிய அதிகாரிகளும் இணைந்து அமெரிக்க இராணுவீரரின் தாயாரை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் - தரை நடவடிக்கைகளில் அமெரிக்க பங்கேற்கவில்லை. https://www.virakesari.lk/article/173074
-
புதிய ஏவுகணையால் ஆயுதப் போட்டியில் இந்தியாவை முந்துகிறதா பாகிஸ்தான்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான். கட்டுரை தகவல் எழுதியவர், உமர் ஃபரூக், நியாஸ் ஃபரூக்கி பதவி, பிபிசி உருது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டிசம்பர் 27, 2023 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் "ஃபதா 2" ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புத்துறை (ஐஎஸ்பிஆர்) தகவல்களின்படி, இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 24, 2021 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "ஃபதா 1" ராக்கெட் பாகிஸ்தானில் சோதனை செய்யப்பட்டது. ஃபதா 2 ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஐஎஸ்பிஆர் தகவலின்படி, ஃபதா 2 ஏவுகணையில் மேம்படுத்தப்பட்ட பறக்கும் திறன் இடம்பெற்றுள்ளது. மேலும், இதில் மேம்படுத்தப்பட்ட டார்கெட் - டூ - டார்கெட் தாக்குதல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான ஏவுகணையில் பொறுத்தப்பட்டுள்ள இலக்கை தாக்கும் தொழில்நுட்பம் மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அதோடு சேர்த்து அதன் பறக்கும் திறனும் அதை வலிமைமிக்கதாக மாற்றுகிறது. இது போன்ற சிறப்பம்சங்களால் இந்த ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கும் என்றும், அதன் குறியை தவறவே விடாது என்றும் ஐஎஸ்பிஆர் கூறுகிறது. சில ராணுவ ஆயுதம் மற்றும் உபகரண நிபுணர்கள், இந்த ஃபதா 2 ஏவுகணை “ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை” என்று அழைக்கின்றனர். அதற்கு அர்த்தம் இந்த ஏவுகணை கிடைமட்டமாக பறக்கக்கூடியது. ரேடாரில் தெரியாது. இது குறித்து பாதுகாப்புதுறை நிபுணரான ஓய்வு பெற்ற பிரிகேடியர் சாத் முகமது பிபிசியிடம் பேசுகையில், ஃபதா ஒரு ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை, இதை ராடாரில் கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். பாலிஸ்டிக் ஏவுகணைக்கென்று தனியான பாதை உண்டு, முதலில் அவை விண்ணில் பாய்ந்து பின்னர் பூமிக்கு திரும்பி வரும். அதன் பாதை மாறும் சமயத்தில் எதிரி ரேடார்கள் அதை கண்டறிந்து தாக்கும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'எல்ஆர்எஸ்ஏஎம்' என்ற பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஃபதா 2-இன் வெற்றிகரமான சோதனைக்கு பிறகு, அது இந்திய பாதுகாப்பு ஏவுகணை திட்டத்திற்கு எதிரான வலுவான ஆயுதமாக கருதப்படுவதாக கூறுகின்றனர் சில நிபுணர்கள். அதே போல் இந்தியாவும் சில காலமாகவே தங்களுடைய ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட தூர எஸ்-400 ட்ரையம்ப் (Triumph) தவிர, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய தூரம் சென்று தாக்கும் சமர் மற்றும் டிஆர்டிஓ உருவாக்கிய VSHORADS ஏவுகணைகளையும் தனது பாதுகாப்பு அமைப்பில் சேர்த்துள்ளது இந்தியா. இவை அனைத்துமே மிகக் குறைந்த தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் கடல் பரப்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய செய்தி நாளிதழான 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தியின்படி, 'எல்ஆர்எஸ்ஏஎம்' என்ற பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ரஷ்யாவின் S-400 ட்ரையம்ப் போல வான் பாதுகாப்பு அமைப்பின் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் ரேடார் கட்டுப்பாட்டு திறன்கள் இருக்கும். மேலும் 150, 250 மற்றும் 350 கிமீ தொலைவில் உள்ள ஏவுகணைகளைக் கண்டறிந்து இடைமறிக்கும் ஆற்றலும் இதில் உள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டு தனது நகரங்கள், அணுசக்தி அமைப்புகள் மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிடம் இருந்து அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க நீண்ட காலமாகவே ஆசைப்பட்டு வருகிறது இந்தியா. இந்நிலையில் அயர்ன் டோம் வாங்குவதில் இந்தியாவின் விருப்பம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் 2013 ஜூலை மாதம் செய்தி ஒன்றை வெளியிட்டது. காரணம், அந்த அமைப்பு உட்பட அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டது இஸ்ரேல். ஒவ்வொரு நாடும் அயர்ன் டோமை வாங்க விரும்புகிறது, ஆனால் அது பணம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தது என்று கூறுகிறார் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பாதுகாப்புதுறை ஆய்வாளருமான எச்.எஸ்.பனாக் "உங்களிடம் பணம் மற்றும் தொழில்நுட்பம் இருந்தால், அதை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்," என்று கூறும் அவர், அதே சமயம் இந்த செய்தி அறிக்கைகள் எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்கிறார். ஆவணங்களின்படி, இந்தியாவில் தொழில்நுட்பக் (பாதுகாப்பு) குறைபாடு உள்ளது. ஆனால் "ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் நாங்கள் இதை உருவாக்கினோம், அதை உருவாக்கினோம் என்று பல செய்திகள் வருகின்றன. ஆனால் அடிப்படை உண்மைகள் வேறு” என்று கூறுகிறார் அவர். தலைநகர் டெல்லி அல்லது வர்த்தக மையமான மும்பை போன்ற முக்கியமான இடங்களை பாதுகாக்க இந்தியாவுக்கு இதுபோன்ற அமைப்பு தேவைப்படலாம் என்று கூறுகிறார் பாதுகாப்பு நிபுணர் ராகுல் போன்ஸ்லே. "ஆனால் நாம் அது போன்ற அச்சுறுத்தலில் இல்லை, ஏனெனில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் இந்த அமைப்பு தற்போது ஹமாஸ் போன்ற அமைப்புகள் பயன்படுத்தும் ராக்கெட்டுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது" என்று அவர் கூறுகிறார். ‘பாகிஸ்தானுக்கு அதைச் செய்யும் திறன் உள்ளது, ஆனால் இதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனால் வரும் எதிர் வினையும் மிகக் கடுமையாக இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிந்ததே' என்கிறார் அவர். இது மிகவும் விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்ற நாடுகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது. மேலும், இந்தியாவில் ஏற்கனவே முக்கியமான மற்றும் தீவிரமான உள்கட்டமைப்பு பகுதிகளை பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என்கிறார் ராகுல் போன்ஸ்லே. இஸ்ரேலிய அயர்ன் டோம் அமைப்புகள் இந்தியாவிற்கு பலனளிக்காது என்பதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக பிபிசியிடம் கூறியுள்ளார் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத நிபுணர் சையத் முஹமத். அதில் முதலாவது காரணம் இந்தியா இஸ்ரேலை விட மிகப்பெரிய நில அமைப்பை கொண்டுள்ளது. இஸ்ரேல் போன்ற சிறிய பகுதிக்கு அயர்ன் டோம் நன்கு கைகொடுக்கும் ஆயுதம். ஆனால், அதே இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு அது அவ்வளவு திறன்மிக்கதாக இருக்காது என்கிறார் அவர். இஸ்ரேல் ஹமாஸிடம் இருந்து வரும் ராக்கெட்டுகளை நிறுத்த இந்த அயர்ன் டோமை பயன்படுத்துகிறது. ஆனால், அந்த ஆயுதங்கள் இரண்டாம் உலக போரின்போது ஜெர்மானியர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய ரக ஆயுதங்கள் என்கிறார் அவர். மேலும், இந்தியாவோ சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இதை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் அச்சுறுத்தலை கொண்டுள்ளன. அதற்கேற்றவாறு இந்தியாவிடமும் அதிநவீன S-400 ஏவுகணைகள் உள்ளன. ஆனாலும், கூட அவர்களால் பாகிஸ்தான் ஏவுகணைகளுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது என்கிறார் சையத் முஹமத். பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு, எல்லை அடிப்படையில் பாகிஸ்தான் ஒரு உச்சத்தை பெற்றுள்ளது. புதிய ஏவுகணையால் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் ஃபதா-2 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை மூலம், ராணுவ அரங்கில், குறிப்பாக எல்லை அடிப்படையில் பாகிஸ்தான் ஒரு உச்சத்தை பெற்றுள்ளதாக, சில இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானின் இந்த புதிய ஏவுகணை எல்லை அடிப்படையில் இந்தியாவை விட கூடுதல் நன்மையை பாகிஸ்தானுக்கு அளிக்கிறது என்றும், இது பாகிஸ்தான் இராணுவத்திற்கு நன்மையளிக்கும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்னைகளை அறிக்கையிடும் போர்ட்டலான இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு தெரிவிக்கிறது. ‘திறன் அடிப்படையில் பார்த்தால் , இது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி’ என்று கூறுகிறார் ராகுல் போன்ஸ்லே "பாகிஸ்தானின் ஃபதா-2 வானது, இந்தியாவின் பினகா (Pinaka) மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சரைப் போன்றது என்றும், "பாகிஸ்தானின் பீரங்கித் திறன்களை இது மேம்படுத்தும்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இது இரண்டு நாடுகளுக்கும் இயல்பான வளர்ச்சிதான் என்று கூறும் அவர், இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை உருவாக்குகின்றன என்கிறார். இந்த ஆயுதங்கள் மிகவும் பயனுள்ளவை என்பதை ரஷ்யா - யுக்ரைன் போர் நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தான் நடத்தியுள்ள இரண்டாவது ஆயுத சோதனை இது என்பதை உள்ளூர் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். 2023 அக்டோபர் 18 அன்று, பாகிஸ்தான் அபாபில் ஏவுகணையை சோதனை செய்தது. இதுவே தெற்காசியாவில் பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட முதல் ஏவுகணையாகும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளில் நிபுணரான சையத் முகமது அலியின் கூற்றுப்படி, அபாபில் மற்றும் ஃபதா 2 ஆகிய இரண்டின் சோதனைகளும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் இராணுவ செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்கின்றன. நீண்ட காலமாகவே இந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்க அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர், தற்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க விரும்புகின்றனர். தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, தற்போது இந்த ஆயுதத்தை இராணுவத்தின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதனிடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள்.’ 'இந்தியாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாஜகவின் போர் மனப்பான்மையும் இதற்கான காரணங்களில் ஒன்று என்பதை எல்லைகளை தாண்டி தினமும் வெளிவரும் அறிக்கைகளை வைத்து மதிப்பிடலாம். வழக்கமான பாணியில் தேர்தலுக்கு முன் இந்தியா எதுவும் தவறான நடவடிக்கைகளை எடுக்கும் முன், பாகிஸ்தான் ராணுவத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம்” என்று கூறுகிறார் முஹம்மது அலி. பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு, 1947ம் ஆண்டிலிருந்தே ஆயுத பந்தயம் நடைபெற்று வருகிறது. தெற்கு ஆசியாவின் ஆயுதப் போட்டி ‘இந்த ஆயுத பந்தயம் ஒன்றும் புதிதல்ல, 1947ம் ஆண்டிலிருந்தே தொடர்வதுதான்’ என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சாத் முஹம்மது. மேலும் சர்ஃபேஸ் டூ சர்ஃபேஸ் ஏவுகணைகளை உருவாக்குவதற்கும், அவற்றைச் சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணைகளை உருவாக்குவதற்கும் உலகின் இராணுவப் படைகளுக்கு இடையே நிலவும் போட்டி மிகவும் பழமையானது. இந்தப் போட்டி தெற்காசியாவில் மீண்டும் மீண்டும் நடைபெற்று வருவதாக கூறுகிறார் அவர். பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுமே தங்களது இராணுவ வளர்ச்சியில் மிகவும் உணர்திறன் கொண்டவை, மேலும் இரு நாடுகளும் தங்களது எதிரிகளை எதிர்கொள்ள உலகளாவிய கூட்டாளிகளுடன் இணைந்து உள்ளூரில் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதில் முதலீடு செய்து வருகின்றன. https://www.bbc.com/tamil/articles/c51z2zn9qdqo
-
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் மருத்துவ கொடுப்பனவுகள் 100 வீதம் வரை அதிகரிப்பு - விபரம் இதோ !
Published By: DIGITAL DESK 3 04 JAN, 2024 | 03:09 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார். இதன்படி, இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த நோய்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு, தனியார் அல்லது அரை அரசாங்க வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவ உதவி வழங்கப்படும். நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெறுவதற்காக நகரத்திற்கு வருவதைக் குறைப்பதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் ஜனாதிபதி நிதியத்தில் இலகுவாகப் பதிவு செய்யும் முறையும் 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கராபிட்டிய வைத்தியசாலையில் வேலை நேரத்தின் பின்னர் இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு இந்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் ராகம வைத்தியசாலையில் சிறு குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளுக்காக ஒரு மில்லியன் ரூபா வரையான மருத்துவ உதவி தொகையும் வழங்கப்படும். மேலும், தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு இது வரை மருத்துவ உதவி வழங்கப்படாததோடு அதற்கான மருத்துவ உதவி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகள் தவிர, அரசு மருத்துவமனைகளும் இந்த ஆண்டு முதல் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் வெளியில் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ உதவி வழங்கப்படும். மருத்துவ உதவிகளை வழங்குவதில் நோயாளர்களின் குடும்ப அலகு ஒன்றின் மாதாந்த வருமான வரம்பான 150,000 ரூபாவை இந்த வருடம் முதல் 02 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவ உதவி பெற வேண்டிய நடுத்தர மக்கள் ஜனாதிபதி நிதியில் இருந்து மருத்துவ உதவி பெற முடியும். இதேவேளை, 2023ஆம் ஆண்டிலும் மக்களுக்கான விரைவான மற்றும் விரிவான சேவைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி நிதியம் செயற்பட்டதாக அதன் செயலாளர் சரத் குமார தெரிவித்தார். 2022 ஆகஸ்ட் முதல் பணம் செலுத்தாமல் குவிந்துள்ள 8,000 க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி விண்ணப்பங்கள் உட்பட, அந்த ஆண்டின் இறுதிக்குள், சுமார் 12,000 மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1,342 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கு, 3458 மருத்துவ உதவி விண்ணப்பங்கள் பெறப்பட்டதோடு அந்த விண்ணப்பங்கள் அனைத்திற்கும் பணம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலுத்தப்பட்ட தொகை 844.7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அதேபோல் 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றாலும் உயர்கல்வியை தொடர்பவதற்கான நிவாரணம் தேவைப்படும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5,000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது. அதற்கமைய அனைத்து மாதங்களிலும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் இரு தினங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்து அவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS)மூலம் அறிவிக்கப்படும். தற்போது இந்த மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக 50 கல்விப் பிரிவொன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 100 கல்விப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 5,000 மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை மாதாந்தம் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வறுமையில் வாடும் ஆனால் சுயதொழில் செய்யக் கூடிய குடும்பங்களை மேம்படுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள் ஊடாக நிதி மற்றும் பொருளுதவி வழங்கும் வேலைத்திட்டமும் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், வறுமையில் வாடும் ஆனால் சுயதொழில் அல்லது பிற வேலைகளைச் செய்ய முடியாத குடும்பங்களை அடையாளம் காண, பிராந்திய செயலகங்கள் மூலம் மாதாந்தம் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதற்கான திட்டங்கள் 2023 இல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. சமய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் சமய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சமூக நடவடிக்கைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மருத்துவ உதவித் தொகையை செலுத்துவதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டு ஜனாதிபதி நிதியத்திற்கு ஒப்படைக்கப்படும் விண்ணப்பப்படிவத்திற்கு மூன்று வேலை நாட்களுக்குள் பணத்தை செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அறுவை சிகிச்சை/சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உத்தரவாதச் சான்றிதழ்கள் சில மணி நேரங்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளைப் பெற்று மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, மருத்துவமனைகளுக்கு அந்த நிதியத்தால் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை மருத்துவக் கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த பணிகளை நிறைவேற்ற நோயாளி/விண்ணப்பதாரர் ஒருமுறை மட்டும் ஜனாதிபதி நிதியத்திற்கு வருகை தந்தால் போதும் எனவும், எந்தவொரு விண்ணப்பதாரரும் தேவையில்லாமல் நிதியத்திற்கு அழைக்கப்படவோ அல்லது அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படவோ மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத் குமார மேலும் தெரிவித்தார். இதேவேளை, 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நேற்று (03) நிதிய அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தலைமையில் ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அமைச்சரவை செயலாளர் டொனால்ட் பெர்னாண்டோ, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன, திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் அசல ருவன் வீரகோன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/173120
-
வடக்கு, கிழக்கில் புகையிரத கடவை காவலர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பம்
04 JAN, 2024 | 01:03 PM சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரத கடவை காவலர்கள் இன்று (04) முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று 4ஆம் திகதி காலை 6 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அறிவித்தலை முல்லைத்தீவு ஊடக மையத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிப்படுத்திய புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் தொடர்ந்து கூறுகையில், சரியான ஊதியமின்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் புகையிரத கடவை காவலர்களாக கடமையாற்றி வருகின்றனர். ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைக்கிறது. பொலிஸாரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4, 5, 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம். அத்தோடு, புகையிரத திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். நாங்கள் வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/173097
-
300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை
பட மூலாதாரம்,SUPRIYASAHUIAS கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர் பிழைப்பதும் கடினமாகியிருக்கும். நல்லவேளையாக தாயிடம் சேர்த்து விட்டோம்", என புன்னகையுடன் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சில மணிநேரங்களில் எந்த யானைக் கூட்டத்திலிருந்து குட்டி பிரிந்தது என்பதைக் கண்டறிந்து அதனை தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களாக யானைக்குட்டி மற்றும் அதன் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது வனத்துறை. இந்நிலையில் நேற்று, தாயின் அருகே அந்த குட்டியானை அமைதியாக படுத்து உறங்கும் காணொளியை வெளியிட்டது வனத்துறை. இணையத்தில் பலரால் பகிரப்பட்ட அந்த காணொளி குறித்தும், 300க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருக்கும் வால்பாறை பகுதியில், ஒரே நாளில் எவ்வாறு குட்டியானை தாயிடம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT "மனித வாடை இருந்தால் குட்டியை தாய் விரட்டிவிடும்" "அன்று காலை தகவல் கிடைத்தவுடன் பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கு 5 முதல் 6 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை சுற்றித் திரிந்தது. குட்டி யானை தன் தாயிடமிருந்து பிரிந்து விட்டால், அதை உடனடியாக அதன் தாயிடமோ அல்லது கூட்டத்திடமோ சேர்க்க வேண்டும்." "மனித வாடை அதன் உடலில் பட்டுவிட்டால் யானைக் கூட்டம் அதை சேர்த்துக் கொள்ளாது, தாய் அதனை விரட்டிவிடும்" என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். "யானைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக வால்பாறை பகுதியில் முகாமிடுவதால், புதிதாக ஏதும் யானைக் கூட்டம் இங்கு வந்தால் எங்களுக்கு தெரிந்துவிடும். டிரோன் மூலமாகவும், கண்காணிப்பு குழுக்கள் மூலமாகவும் யானைகள் எங்கே செல்கின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்." "எந்த யானைக் கூட்டம் ரேஷன் கடைகளைத் தாக்குகின்றன, எவை மக்களின் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன, தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் எவை என அனைத்து தரவுகளும் எங்களிடம் இருக்கும்" என்றார் மணிகண்டன். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை டிரோன் மூலம் கண்காணித்து, அதை உறுதிபடுத்திக்கொள்வோம். அப்படி இருக்கையில் அன்று அதிகாலை பன்னிமேடு பகுதிக்கு சென்று குட்டியை மீட்டுவிட்டு, அதன் யானைக் கூட்டத்தை தேடத் தொடங்கினோம்." என்றார். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT 11 யானைகள் கொண்ட கூட்டம் மேலும் அவர் கூறியது, "காலை 8.30 மணிக்கு எங்களுக்கு யானைக்குட்டி பற்றி தகவல் வந்தது, சரியாக மதியம் 1.30 மணிக்கு நாங்கள் அதை தாயிடம் சேர்த்துவிட்டோம். இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டால், யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு நகர்ந்து விடும். பிறகு குட்டியை கூட்டத்தில் சேர்ப்பது கடினம்." "யானைக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. காரணம் முழுக்க முழுக்க அது தாய்ப்பாலை மட்டும் குடித்து வளர்ந்தது. புல்லைக் கூட உண்ணாது. எனவே நாங்கள் வேறு ஏதாவது உணவு அல்லது லாக்டோ பானம் கொடுத்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடல்நிலை சரியில்லாமல் போய் மேலும் தாமதமாகிவிடும்." "இன்னொரு சிக்கல், யானைக்குட்டி நம்மிடம் பழகிவிட்டால் நம்மை விட்டு போகாது. அது குட்டிக்கு தான் ஆபத்து. இப்படி பல சிக்கல்கள் இருந்ததால், பல குழுக்களாக பிரிந்து தேடுதலில் ஈடுபட்டோம். தேயிலைத் தோட்ட தொழிலார்கள் கூறியது மற்றும் எங்களிடமிருந்த தரவுகள் மூலமாக மூன்று யானைக்கூட்டங்களை பின்தொடர்ந்தோம்." "அதில் பதினோரு யானைகள் கொண்ட கூட்டத்தில் தான், ஒரு குட்டியை காணவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். பின்னர் டிரோனைப் பறக்க விட்டு அந்த குறிப்பிட்ட யானைக்கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். ஆனால் இப்போது தான் இரண்டு பெரிய சிக்கல்கள் உருவானது" என்கிறார் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT ஆக்ரோஷமான யானைகள் தொடர்ந்து பேசிய அவர், "யானைகள் கூட்டத்தை நோக்கி செல்லும்போது, குட்டி சோர்வடைய ஆரம்பித்தது. அதற்கு குடிக்க ஆற்றுத் தண்ணீரை மட்டுமே கொடுத்தோம். அது எங்களுடன் சற்று நெருக்கமாகத் தொடங்கியது. இப்போது எங்களுக்கு பயம் வந்துவிட்டது, நன்றாகப் பழகி விட்டால் அதை கூட்டத்திடம் சேர்ப்பது சிக்கல்." "இன்னொரு சிக்கல், யானைக் கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அருகில் சென்று குட்டியை விட முடியாது. அது எங்களை தாக்க வாய்ப்புகள் அதிகம். தேயிலைத் தோட்டம் என்பதால் யானைகளிடமிருந்து தப்பிப்பது இன்னும் கடினம். எனவே மீண்டும் டிரோன் மூலம் கூட்டத்தின் இருப்பிடத்தை உறுதி செய்துவிட்டு, யானையை நன்றாக குளிப்பாட்டி சேற்று மணலை பூசினோம். மனித வாடை இருக்கக்கூடாது அல்லவா." என்று சிரிக்கிறார் மணிகண்டன். "பின்னர் அதை முன்னே செல்ல விட்டோம். கூட்டத்தின் சத்தத்தைக் கேட்ட குட்டி யானை பிளிறியது. உடனே இரண்டு யானைகள் முன்னே குட்டியை அழைத்துக் கொண்டன. அப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். ஏனென்றால் இவ்வளவு சிறிய குட்டி தாயைப் பிரிந்தால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது." என்று கூறினார். வைரலான காணொளி குறித்து பேசும்போது, "அது இரண்டு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொளி, டிரோன் மூலம் தான் எடுத்தோம். எங்களுக்கு இருந்த சந்தேகம் தாய் அந்தக் குட்டியை எவ்வாறு அணுகும் என்பது தான். ஆனால் டிரோன் மூலம் அந்தக் காட்சியை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT வால்பாறையில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்ரமணியனிடம் (ஐஎப்எஸ்) பேசியபோது, "கேரளாவில் சபரிமலை சீசன் என்பதால் அங்கிருந்து வெளியேறிய முன்னூறுக்கும் மேற்பட்ட யானைகள் வால்பாறையில் முகாமிட்டுள்ளன." "அவை தங்களுடைய உணவுக்காக மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லும். எனவே எத்தனை யானைகள் வருகின்றன போகின்றன என்பது குறித்த தரவுகள் எங்களிடம் எப்போதும் இருக்கும்." "இப்போது அந்த குட்டி யானையும் அதன் கூட்டமும் மீண்டும் கேரளாவுக்குள் சென்றுவிட்டது. நாங்கள் இறுதியாக கண்காணித்தவரை குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது." "சில மணிநேரங்களில் அனைத்தும் நடந்ததற்கு எப்படியாவது தாயுடன் குட்டியை சேர்த்துவிட வேண்டுமென்ற குழுவின் எண்ணம் தான் காரணம். ஒருவேளை மீண்டும் அந்த யானைக்கூட்டம் வால்பாறைக்குள் வந்தால் கண்காணிக்கப்படும்" என்றார். காணொளிக் குறிப்பு, வால்பாறையில் கூட்டத்திலிருந்து விலகிய குட்டியானையை மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறை அழிக்கப்படும் யானையின் வாழ்விடங்கள் யானைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவரும் ஆற்றல் பிரவீன்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில், "தாயை பிரிந்த யானையின் கன்று ஒன்று மீண்டும் தனது தாயுடன் சேர்ந்த அழகிய தருணங்கள், தாயின் மடியில் பத்திரமாக இருப்பதாய் குட்டி உணர்கிறது. பெரும் முயற்சிக்குப் பிறகு தமிழ்நாடு வனத்துறை இந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்." "தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த இக்குழுவினருக்கு எம்முடைய வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது வாங்கிய தி எலிபெண்ட் விசுபெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய அம்மு குட்டி என்னும் யானைக் குட்டி ஒன்று இன்று வரை தன் கூட்டத்துடன் சேர முடியாமல் அனாதையாகவே உள்ளது. தாயை பிரிந்த வேதனை அதற்கு மட்டும் தான் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "பல ஆறுகளின் மூலமாக இருக்கும் மழைக்காடுகளை துண்டுச் சோலைகளாக மாற்றி விட்டு நாம் தினமும் குடிக்கும் தேயிலைக்காக இங்கு பயிர் செய்து வருகிறார்கள். இழந்துவிட்ட தனது வாழிடத்தை தேடி வரும் யானைகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றன" என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c802d2eggeno
-
வரியை குறைக்குமாறு கோரி சுழிபுரம் சத்தியக்காடு சந்தை வியாபாரிகள் பணி பகிஸ்கரிப்பு!
Published By: DIGITAL DESK 3 04 JAN, 2024 | 03:27 PM மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை (04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கும் குத்தகைதாரருக்கு வியாபாரிகள் 4 வீத வரி செலுத்த வேண்டும் என்ற விடயம் ஏற்கனவே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரதேச சபையும் சந்தையை குத்தகைதாரருக்கு வழங்கியது. இந்நிலையில் குறித்த வரி பிரச்சினை ஏற்பட்டதனால் குத்தகைதாரர், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் அங்கு இருந்த வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வருடம் குறித்த குத்தகைதாரர் மனிதாபிமான ரீதியில் ஒரு மூடை மரக்கறிக்கு 60 ரூபா வரி வாங்கியுள்ளார். இந்த ஆண்டு விலைகள் அதிகரிப்பு காரணமாக மரக்கிக்கறிகளுக்கு கிலோவுக்கு மூன்று ரூபாவும், வெங்காயத்துக்கு கிலோவுக்கு ஒரு ரூபாவும், உருளைக்கிழங்குக்குக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாவும் வரியாக கோரியுள்ளார். அல்லது அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டும் ரூபா வரியாக கோரியுள்ளார். ஆனால் அந்த வரிப்பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்றும் ஒரு மூடை மரக்கறிக்கு 80 ரூபா வரியாக தருவதாகவும் அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு கிலோவுக்கு ஒரு ரூபா வரியாக தருவதாகவும் ஏனைய அனைத்து மரக்கறிகளுக்கும் கிலோவுக்கு இரண்டு ரூபா படி வழங்குவதாகவும் வியாபாரிகள் கூறினர். இறுதியில் இரண்டு தரப்பினரும் அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டு ரூபா வரி செலுத்துவதாக தெரிவித்து இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். https://www.virakesari.lk/article/173124
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
கேப் டவுன் நியூலேண்ட்ஸ்: பேட்ஸ்மேன்களை சித்ரவதை செய்யும் தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் அப்படி என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா- தென் ஆப்பிரிக்க இடையிலான டெஸ்ட் தொடரில் இரு நாட்டு வீரர்களுடன் சேர்ந்து ‘ஆடுகளங்களும் விளையாடுகின்றன’ என்றால் கேட்பதற்கு சற்று நகைச்சுவையாகத்தானே இருக்கிறது. ஆனால் அது உண்மைதான். ஏனென்றால், இரு போட்டிகளிலும் வெற்றியை தீர்மானிப்பது பந்துவீச்சாளர்களோ, பேட்டர்களோ அல்ல ஆடுகளங்கள்தான். இது 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளை பார்த்தபோதே புரிந்திருக்கும். கேப்டவுனில் நடந்து வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. அதிலும் இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த நிலையில், அடுத்த 2 ஓவர்களில் 2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதம் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பூஜ்ஜியம் ரன்னுக்கு மோசமாக இழந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மோசமான சாதனையை இந்திய அணி மட்டுமே செய்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். தனது கடைசி போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த எல்கர் அது மட்டுமல்லாமல் ஒரே நாளில் ஒரு பேட்டர் இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்ததும் இரண்டாவது முறையாகும். தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். இதற்கு முன் 1890ம் ஆண்டு ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பேரட் மட்டுமே இதுபோல் ஆட்டமிழந்திருந்தார். அதற்கு பின் ஏற்ககுறைய 134 ஆண்டுகளுக்குப்பின் டீன் எல்கர் இந்த மோசமான சாதனையைச் செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் கெயில் வெரினே தவிர ஒரு பேட்டர் கூட களத்தில் 20 பந்துகளைக் கூட சந்திக்காமல் ஆட்டமிழந்தனர். அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல், பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக கேப்டவுன் மைதானம் மாறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் எப்படி? தென் ஆப்பிரிக்க ஆடுகளம் என்றாலே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில்தான் இருக்கும் என்று வரலாறு இருக்கிறது. அதையும் கடந்து இங்கும் சில நல்ல ஆடுகளங்களும் இருக்கின்றன. அந்த வகையில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஆடுகளமும் ஒன்றாகும். ஆனால், நல்ல மைதானங்கள் வரிசையில் இடம் பெற்ற நியூலேண்ட்ஸ் ஆடுகளம் இவ்வளவு மோசமாக பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக எவ்வாறு மாறியது என்பது தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கே வியப்பாக இருக்கிறது. 1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காதான் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையில்தான் நடந்தது. அந்த அளவுக்கு கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் பாரம்பரியம், புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அழகான மைதானங்களில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இயற்கையாகவே ஒத்துழைக்கும் வகையில் ஈரக்காற்று அதிகம் வீசும் சூழல் நிறைந்தது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் ஆடுகளம் அமைத்தாலும், இயற்கை சூழலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் காற்றில் அதிகமான ஈரப்பதத்துடன் இங்கு வீசுவதால் சீமிங், ஸ்விங் நன்றாக எடுபடும். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 651 ரன்கள் வரை அடிக்கப்பட்டாலும், இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தேவையற்ற சாதனைகளை சம்பாதித்துக்கொண்டனர். இந்த மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட் செய்த அணி 23 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணி 25 போட்டிகளிலும் வென்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டவுன் விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மோசமடையுமா ஆடுகளம்? இப்போதுள்ள நிலையைவிட கடைசி 2 நாட்களில் ஆடுகளத்தின் நிலைமை இன்னும் மோசமாகலாம். ஆடுகளத்தில் பந்து சமச்சீரற்ற வகையில் பவுன்ஸ் ஆகும், பேட்டர் எதிர்பாரா வகையில் ஸ்விங் ஆகி, பேட்டர் ஏன் களமிறங்கினோம் என்று மனதுக்குள் புலம்பும் வகையில் சித்ரவதை செய்யும் ஆடுகளமாக அடுத்துவரும் நாட்கள் மாறக்கூடும் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறுகிறது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதுதான் சிறந்த முடிவாக இதற்கு முன்பு வரை இருந்தது என்பதால்தான் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரும் பேட் செய்தார். ஆனால், தங்களின் பேட்டிங் திறமை வெறும் 24 ஓவர்களுக்குள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும் என்று அவரே நினைக்கவில்லை. இந்த நியூலேண்ட்ஸ் மைதானம் செஞ்சூரியன் மைதானத்தைப் போலவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாகும். விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மேலும், விக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ரோலர் போடாமல், ரோலர் மட்டுமே உருட்டுவதால், ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சில் அதிகமாக ஸ்விங் ஆகும், பவுன்ஸரில் பந்து எகிறி பேட்டர்களை சித்ரவதை செய்யும். ஆனால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று நடுநிலையான பிட்ச் ரிப்போர்ட் தெரிவித்தாலும், இப்போதுள்ளநிலையில் 4வது நாள்வரை போட்டி செல்லுமா என்பது கேள்விக்குறிதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டுதான் ஆடுகளம் அமைக்கப்பட்டதா? ஐசிசி விதிகளில் ஆடுகளம் குறித்து தெரிவிக்கையில் ஒரு ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால், தென்ஆப்பிரிக்காவில் செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளங்கள் இரண்டுமே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆடுகளங்களிலும் பேட்டர் ரன் சேர்ப்பதே அரிதாக இருக்கிறது, ஒரு பேட்டர் நீண்டநேரம் களத்தில் நிற்பதே அதிசயமாக இருக்கிறது. இந்தியாவில் ஆகமதாபாத், சென்னை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டுள்ளன என்று புகார் எழுந்தபோது ஐசிசி அப்போது அதில் தலையிட்டது. அதுபோன்று நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தரத்தையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆசியாவில் இதுபோன்று ஒரு போட்டியில் 23 விக்கெட்டுகள் ஒரு போட்டியில் வீழ்த்தப்பட்டு அது பெரிய சர்ச்சையாகியது, ஆடுகளங்களும் ஐசிசியால் ஆய்வு செய்யப்பட்டன. ஒரு டெஸ்ட்போட்டி 3 நாட்களில் முடிந்து, ஒரு தரப்புக்கு உதவுமாறு அமைக்கப்பட்டால் ரசிகர்களின் விமர்சனங்கள் மோசமாக இருக்கும். தென்ஆப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் உதவுமாறு ஆடுகளங்களை அமைக்காதீர்கள் என்று முன்னாள் வீரர் ஷான் போலக்கூட விமர்சித்திருந்தார். ஆனால் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது, பேட்டர்களால் பந்தை பேட்டால்கூட தொட முடியவில்லை, அதிகபட்ச ஸ்விங் ஆகிறது, செஞ்சூரியன் மைதானத்திலும் இதே நிலை இருந்தது. இதை அனைத்தைபும் பார்த்தஐசிசி போட்டி ரெப்ரி இந்த ஆடுகளங்களை நல்ல ஆடுகளங்கள் என்று தரச்சான்று அளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES உள்நாட்டு அணிக்கே சிக்கலை ஏற்படுத்திய ஆடுகளம் பொதுவாக உள்நாட்டில் போட்டி நடக்கும்போது, உள்நாட்டு அணியைக் கேட்டுத்தான் ஆடுகளம் வடிவமைப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்வார். இதுதான் அதிகாரபூர்வமற்ற நடைமுறையாக அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. ஆனால், செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளம் அமைக்கப்பட்ட விதத்தின் தார்மீகம் குறித்த கேள்வி எழுகிறது. பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய வகையில், ஆடுகளத்தை மோசமாக வடிவமைப்பது எந்த விதத்தில் நடுநிலையானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஏற்றார்போல் மாற்றப்பட்டது. ஆனால், முதலில் பலியானது என்னமோ 23.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்காதான். புதிய பந்திலேயே இவ்வளவு மோசமாக ஆடுகளம் செயல்படுகிறது என்றால், பந்து தேய்ந்து பழசாகிவிட்டால் இன்னும் மோசமாக இருக்கும். தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல், ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் அமைக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணி எடுத்து முடிவு, அந்த அணிக்கே “பேக் பயர்” ஆகிவிட்டது. ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியப் பந்துவீச்சு எப்படியிருந்தது? ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்ள் ,செஞ்சூரியன் மைதானத்தில் பந்துவீசியதைவிட, கூடுதல் துல்லியத்தன்மையுடனும், லைன் லென்த்திலும் வீசினர். ஆடுகளத்தில் பேட்டர்களால் பந்தை எதிர்கொண்டு ஆடமுடியவில்லை என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்டு பவுன்ஸர்களை வீசி பேட்டர்களை மிரட்டினர். தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆடுகளம் குறித்து அளித்த பேட்டியில் “ இந்த நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பொதுவாக மெதுவாக இருக்கும், பேட்டர்கள் அதற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆடுகளத்தில் 600 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று ஆடுகளத்தில் பந்துகள் பவுன்ஸர் ஆகியவிதம், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் மாறியவிதம் எனக்கு வியப்பாக இருக்கிறது. வெறும் கண்களில் பார்த்தால் ஆடுகளம் மோசமாக இருக்கும், ஆனால், நான் அப்படி மோசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை. உள்நாட்டுப் போட்டிகள் நல்லவிதமாக முடிந்துள்ளன, பேட்டர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளன. “ “ஆடுகளம், சூழல் ஆகியவற்றை அறிந்து நான்தான் முதலில் பேட் செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான லைன் லென்த்தில் பந்துவீசினர். கோலி, ரோஹித் சர்மா சரியான பந்துகளை தேர்வு செய்து பேட் செய்தனர். அவர்கள் சிரமப்பட்டதற்கு ஏற்றார்போல் ஸ்கோரும் கிடைத்தது. “ பட மூலாதாரம்,GETTY IMAGES “இந்த ஆடுகளம் மோசமானது என்று என்னால் கூற முடியாது. தனிப்பட்ட ரீதியில் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோரை நான் எடுத்திருக்கிறேன். கிரேம் ஸ்மித்துக்கு அடுத்தார்போல் நான் அதிகமான ரன்களை கேப்டவுனில் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்குமாறு இருக்க வேண்டும், அமைக்க வேண்டும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக அமைப்பது தவறானது. பேட்டர்கள் வழக்கமான ஒழுக்கத்தைவிட கூடுதல் ஒழுக்கத்துடன் பேட் செய்ய வேண்டும், தங்களை ஆடுகளத்துக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பேட் செய்ய வேண்டும், மனநிலையை கடுமையாக வைத்திருக்கவேண்டியது இதுபோன்ற ஆடுகளங்களில் அவசியம்” எனத் தெரிவித்தார். “இப்படி ஆடுகளத்தை நான் பார்த்து இல்லை” தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்வெல் பிரின்ஸ் ஆடுகளம் குறித்துக் கூறுகையில் “ நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இப்போது பார்த்தது போன்று இதற்குமுன் நான் பார்த்தது இல்லை. விக்கெட்டில் பந்து பட்டதும் வரும்வேகம், சமச்சீரற்ற பவுன்ஸர், சீமிங், ஸ்விங் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது. ஒருநாளில் ஒரு இன்னிங்ஸும் முடியும் அளவுக்கு நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இதற்கு முன் நான் பார்த்து இல்லை. பேட்டர்கள் இந்த ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருந்ததைப் பார்த்தேன். ஒரு பந்து தாழ்வாக பவுன்ஸராகிறது, மற்றொரு பந்து மார்புக்கு நேரே வருகிறது. பந்து இந்த அளவுக்கு சீமிங், ஸ்விங் ஆவதற்கு காலநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. முதலில் நாளில் இப்படி இருக்கலாம் அடுத்துவரும் நாட்களும் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் அது கவலைப்படக்கூடியதுதான்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nylvjnelxo
-
இலங்கையில் இதுவரை இல்லாதளவில் யானைகள் உயிரிழப்பு!
04 JAN, 2024 | 11:19 AM இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்றளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 யானைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் திமுது சந்தருவான் சேனாதீர இது தொடர்பில் கூறுகையில், சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியைப் பார்க்கும்போது, அதிகளவிலான யானைகள் இறப்பு பதிவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 74 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆனால், அவை எப்படி இறந்தன என்பது பற்றி தகவல் இல்லை. 49 யானைகள் துப்பாக்கிச் சூட்டின் மூலமும் 36 யானைகள் மின்சாரம் தாக்கியும் பலியாகின. விரைவான நகரமயமாக்கல் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்தமை, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயம் காரணமாக விவசாயத்துக்காக காடுகளை அழித்தமை ஆகியவையே உலகளவில் யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது. யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள் என்றால் யானைகளை ஒருங்கிணைத்து அவற்றை ஒரு பகுதிக்குள் தள்ளி பிறகு மின்வேலி அமைக்கிறார். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு அவர்களால் எந்த தீர்வையும் அளிக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதற்கு யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளை இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காண்பது சுலபமான காரியமல்ல. யானைகள்-மனிதர்களுக்கு இடையேயான மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது கடினம் என்றாலும், யானைகளை பாதுகாக்க இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியமானது என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/173082
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தாயல்லவா!
- ஊருலா
-
ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
Japan-ல் பயணிகள் உயிர் தப்பியது எப்படி? தீப்பிடித்த போது Flight-க்குள் என்ன நடந்தது? வெளியான வீடியோ
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சாலே-அல்-அரோரி ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அரோரி கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹெஸ்புல்லா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது. இந்த தாக்குதலை தான் நடத்தியதாக இஸ்ரேல் பொறுப்பேற்கவும் இல்லை; அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை. இது ஹமாஸ் தலைமை மீதான துல்லியத் தாக்குதல் என இச்சம்பவத்தை இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
-
க.பொ.த உயர்தர பரீட்சை சம்பந்தமான செய்திகள்
Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 03:46 PM 2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நேர அட்டவணையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரிய மொழி புதிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் உயர்தரப் பரீட்சை நேர அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் பரீட்சை அனுமதி அட்டையில் திருத்தப்பட்ட நேர அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பரீட்சார்த்திகளும் முன்னதாக வழங்கிய பரீட்சை நேர அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம். அதே நேரத்தில் சில இணையத்தளங்களும் தவறான அட்டவணையைக் காட்டக்கூடும். "உங்கள் பரீட்சை அனுமதி அட்டையில் தனிப் பிரிவு உள்ளது. அந்தப் பிரிவில், ஒவ்வொரு பாடத்திற்குமான திகதி மற்றும் நேரப் பகுதிகள், பாட எண் மற்றும் மொழி [கல்விக்கான ஊடகம்] ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அது போதுமானதாகும். நேர அட்டவணையைப் பற்றி நீங்கள் வேறு எதையும் ஆராயத் தேவையில்லை" தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை முதல் முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173019
-
வவுனியாவில் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது
Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 04:32 PM வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இட்டபோது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதிய பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறித்து நடவடிக்கை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். நிரோசன் தலைமையில் இ.மதன்ராஜ், செ.வன்னிநாயக, சேனாதீர, மதுசங்க, ரஞ்சுலா சுபத்திரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/173030
-
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கல்லறை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரியின் நினைவேந்தல் நிகழ்வில் ஈரானில் குண்டுவெடிப்பு- 103 பேர் பலி Published By: RAJEEBAN 03 JAN, 2024 | 08:44 PM ஈரானில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில்103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு வருடங்களிற்கு முன்னர் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவ அதிகாரி கசேம்சொலைமானியின் நினைவேந்தல் நிகழ்வில் இரண்டு குண்டுகள் வெடித்ததில்103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 171 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கெர்மான் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பத்துநிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ள அதேவேளை நான்கு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன வெளியாகும் தகவல்கள் மிகவும் திறமையான முறையில் திட்டமிடப்பட்டு இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதை வெளிப்படுத்துகின்றன. சுலைமானியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 700 மீற்றர் தூரத்தில் முதலாவது குண்டு வெடித்தது இரண்டாவது குண்டு 1 கிலோமீற்றர் தூரத்தில் வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளளன. இதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இரண்டு குண்டுகள் தொலைவிலிருந்து வெடிக்கவைக்கப்பட்டன என தெரிவித்துள்ள அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/173062
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
11 பந்துகளில் 0 ரன், 6 விக்கெட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா அதிசயம் நிகழ்த்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 ஜனவரி 2024, 11:33 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் கேப்டவுனில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்டின் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணியை ஆல் அவுட்டாக்க இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்கள் மற்றும் இரண்டு மணி நேரமே தேவைப்பட்டது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் டெஸ்டில் வெறும் மூன்றே நாட்களில் சரணடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்க அணி எடுத்த 55 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும். முதல் இன்னிங்சில் இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்காவும் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது. சிறப்பாக இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த நிலையில், அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி? இந்திய அணியில் அஸ்வின் நீக்கம் பாக்சிங் டே டெஸ்டில் தோற்றுவிட்ட இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெல்ல முனைப்பு காட்டுகிறது. இந்திய அணியில் முழு உடல் தகுதியை எட்டிவிட்ட ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், முதல் டெஸ்டில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெற்றார். லுங்கி நிகிடி அணிக்குத் திரும்பினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷவ் மகராஜ் தனது 50-வது டெஸ்டை விளையாடுகிறார். தென் ஆப்ரிக்க அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாடுகிறது. இந்தியா அசத்தல் தொடக்கம் கேப்டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ் ஜோடி புதிய பந்தில் கலக்கலாக பந்துவீசி தென் ஆப்ரிக்க வீரர்களை திணறடித்தது. பும்ரா 142 கி.மீ. வேகத்தில் இன்ஸ்விங்கர்களை வீச, மறுபுறம் முகமது சிராஜ் துல்லியமாக பந்தை பிட்ச் செய்தார். நான்காவது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்குள் பந்தை அவர் ஆங்கிள்-இன் செய்ய மார்க்ராம் விளையாடியே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது. அவர் சற்று தாமதமாக ஆட, பந்து வெளிப்புற விளிம்பில் முத்தமிடு பின்னே செல்ல இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக டைவ் அடித்த கேட்ச் செய்தார். எய்டன் மார்க்ரம் 2 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிராஜ் பந்துவீச்சில் சரிந்த தென் ஆப்ரிக்கா மார்க்ரம்மை காலி செய்த பிறகு, சிராஜ், கடந்த டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவை தோல்விக்கு தள்ளிய டீன் எல்கர் விக்கெட்டிற்கு குறி வைத்தார். எல்கரின் ஸ்டம்புகளையும் உடலையும் நோக்கி சிராஜ் பந்துவீசினார். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டீன் எல்கருக்கு எட்ஜ் ஆகி பந்து மிட்விக்கெட்டுக்கு மேல் பறந்தது. இம்முறை, சிராஜ் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை டீன் எல்கர் அடித்தாட முற்பட்டார். அவரது பேட்டில் பின்புறம் பட்ட பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி 8 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி, அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவே இல்லை. 8 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்த தென் ஆப்ரிக்கா, மேலும் 7 ரன்களை எடுப்பதற்குள்ளாக அடுத்த 2 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா தன் பங்கிற்கு அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்சை பெவிலியனுக்கு அனுப்ப, ஷோர்ஜியை சிராஜ் அவுட்டாக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல் இதன் பிறகு தென் ஆப்ரிக்க வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஒருவர் கூட களத்தில் நிலைக்கவிலைலை. இதனால் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்னான் 15 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்களும் இரண்டு மணி நேரமுமே தேவைப்பட்டன. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ராவுக்கு பிறகு 2-வது வீரர் சிராஜ் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் முகமது சிராஜ் ஆவார். முன்னதாக, ஜஸ்பிரித் சிங் பும்ரா இதனை சாதித்துள்ளார். சர்வதேச அளவில் டிரென்ட் போல்ட் (2 முறை), வெர்னான் பிலாண்டர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பிறகு 5-வது வீரர் சிராஜ் ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா அதிரடி தொடக்கம் தென் ஆப்ரிக்காவை 55 ரன்னுக்கு சுருட்டிய உத்வேகத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். தென் ஆப்ரிக்க அணிக்காக முதல் ஓவரை நிகிடி வீசினார். காயத்தில் இருந்து மீண்டு ஓராண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் ஆடும் அவர் இரண்டாவது பந்தையே நோபாலாக வீசினார். அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா, அந்த ஓவரின் கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்தார். இதனால் முதல் ஓவரில் மட்டும் இந்திய அணி 13 ரன்களை திரட்டியது. இளம் வீரர் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம் இந்திய அணி முதல் இன்னிங்சை உற்சாகமாக தொடங்கிய நிலையில், ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் முதல் பந்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். 7 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஷூப்மன் கில், கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இருவருமே அதிரடி காட்டியதால் இந்திய அணியின் ரன் ரேட் 6-க்கும் அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இதனால், 9.4 ஓவர்களிலேயே தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 55 ரன்களைக் கடந்து இந்திய அணி முன்னிலை பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித் 39 ரன்களில் அவுட் அதிரடியாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா அணியின் ஸ்கோர் 72ஆக இருந்த போது ஆட்டமிழந்தார். பர்கர் வீசிய பந்தில் ஜேன்சனிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் கோலியும் அதிரடியாகவே ஆடினார். சுப்மன் கில் - கோலி ஜோடி இந்திய அணியை 100 ரன்களை எளிதாக கடக்கச் செய்தது. 19.5 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கில், ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து அவுட் கில் - கோலி ஆகிய இருவருமே அபாரமாக ஆடியதால் இந்திய அணி வலுவான முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கில் விக்கெட்டை பர்கர் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்ரேயாசை தனது அடுத்த ஓவரில் பர்கர் சாய்த்தார். ஸ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு கே.எல்.ராகுல் களம் புகுந்தார். கோலியுடன் கைகோர்த்த ராகுல் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நிதானமாக ஆடினார். இதனால், அணியின் ரன் ரேட் மந்தமானது. பட மூலாதாரம்,GETTY IMAGES பூஜ்யம் ரன்னுக்கு 6 விக்கெட் வலுவான முன்னிலையை நோக்கி முன்னேறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்திருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 33 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்த கே.எல்.ராகுல் நிகிடி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வெர்ரேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. ஸ்கோர் போர்டில் ஒரு ரன் கூட ஏறாத நிலையில், விக்கெட் மட்டும் மளமளவென சரிந்தது. ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கு நடுவே கோலி 46 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார். 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த இந்திய அணி அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்அவுட் ஆயினர். இந்திய அணி 153 ரன்களில் ஆல்அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவை விட இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா, நிகிடி, பர்கர் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா சாதனை தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 9.4 ஓவர்களில் முன்னிலை பெற்றது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு விரைவில் முன்னிலை பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பாக, 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்க்கு எதிராகவும், 2013-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் 11.2 ஓவர்களில் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா முன்னிலை பெற்றதே சாதனையாக இருந்து வந்தது. அந்த இரு போட்டிகளும் இதே கேப்டவுன் மைதானத்தில் தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க அணியால் மீண்டு வர முடியுமா? இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை வென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். தென் ஆப்ரிக்க அணியால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியுமா? https://www.bbc.com/tamil/articles/cxe45g8nm14o
-
உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட சமூக நல அமைப்புகள் தீர்மானம்
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Published By: VISHNU 03 JAN, 2024 | 01:08 PM யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் புதன்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பும் இடம்பெற்றது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை உடனடியாக அகற்றக்கோரி உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்புவிடுத்தது. போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/173001
-
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் இன்னொரு 'சித்தன்னவாசல்' - என்ன சிறப்பு?
கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 ஜனவரி 2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது. மலைகளால் சூழப்பட்ட பகுதிகளைக் கொண்ட அப்பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்குள்ள மக்களுக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதும் தெரியவில்லை. மலைப்பகுதியில் இருப்பதால் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு செல்வதாக அங்கிருந்த மக்கள் சிலர் தெரிவித்தனர். இந்த சமணர் குகை குறித்து, தொல்லியல் துறை பேராசிரியர் பிரபுவிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆர்மாமலை என்று அழைக்கப்படும் இந்த மலை முன்பு ‘அருகர் மாமலை’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அருகர் சமணர்கள் வழிபடும் தெய்வமாகும். எனவே, அவர்கள் இம்மலையினை ‘அருகர் மாமலை’ என்று அழைத்திருக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் அச்சொல் மருவி அருமாமலை, அர்மாமலை, ஆர்மா மலை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறது" என்றார். மூலிகைச் சாறு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் இம்மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகையில் சமண முனிவர்கள் தங்குவதற்காக மண் மற்றும் பச்சை செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அறைகளும், வண்ண ஓவியங்களும் உள்ளன. பாறையின் மேற்பகுதியில் அழகிய பல்லவர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அங்குள்ள ஓவியங்கள் மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்டு அழகிய வேலைப்படுகளுடன் சமணச்சமயக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்களுடன் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று பிரபு தெரிவித்தார். கி.பி.1882-இல் ராபர்ட் சீவெல் (Robert Sewell) என்ற ஆங்கிலேய வரலாற்று அறிஞர் ஆர்மாமலை ஓவியத்தைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு, பேராசிரியர் பிரபு மண் சுவர்களை கொண்ட அறைகள் இக்குகைத் தளத்தில் சமணத் துறவிகள் தங்குவதற்கும், வழிபாட்டுக்காகவும் மண் சுவர்களை ஏற்படுத்தி அறைகளாகப் பகுத்துப் பயன்படுத்தியுள்ளனர். அந்த அறைகளில் சமணத் துறவிகள் தங்கியுள்ளனர். இக்குகைத்தளத்தின் மேல் விதானத்தில் எண் சதுரம் வரைந்து, நடுவில் ஒரு சதுரம் அமைத்துத் தீட்டப்பட்ட ஓவியம் சிறப்பாக உள்ளது. இரண்டு சதுரங்களில் ஒன்றில் எட்டுத் திசைக் காவலர்களும், மற்றொன்றில் தாமரைத் தடாகமும் தீட்டப்பட்டுள்ளன. எண்திசைக் காவலர்களில் அக்னி தேவன் ஆட்டின் மீது அமர்ந்து வருவது போன்ற காட்சியும், எருமை மீது எமன் வருவது போன்ற காட்சியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மற்றொறு பகுதியில் பூத்துக் குலுங்கும் தாமரைப்பூக்களுடன் இலைகளும் கொடிகளும் உள்ளன. அன்னப்பறவைகளும் காணப்படுகின்றன. மேலும், இங்கு சமணக் கோயிலுக்குரிய மானஸ்தம்பத்தின் அடிப்பகுதி மட்டும் காணப்படுகிறது. ஆதில், ‘ஸ்ரீ கனக நந்தி படாரர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு துவாரபாலகர் சிலைகளும், தாமரை மலர் போன்ற பீடமும் காணப்படுகின்றது. சமணத் துறவியர் வாழ்ந்ததற்கான சான்று மேலும், இக்கல்லில் கி.பி. 8-ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்களில் 'கடைக்கோட்டு ருத்த நந்தி படாரர் மாணாக்கர்’ என்று எழுதியுள்ளது. இதுகுறித்து கூறிய பேராசிரியர் பிரபு, "இங்கு கடைக்கோட்டுருந்த நந்தி படாரர் என்ற சமணத் துறவியார் வாழ்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இவரது காலத்தில் இங்குள்ள ஒவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்குள்ள ஓவியங்கள் சமண சமயம் தொடர்பான நம்பிக்கைகளையும் செய்திகளையும் அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார். சித்தன்னவாசலுக்கு நிகரான ஓவியங்கள் இவ்வோவியங்கள் தீட்டும் முன்னர், ஒழுங்கற்ற பாறைகளில் சுண்ணாம்புப் பூச்சு கொண்டு பூசி வரைவதற்கு ஏற்ற சமதளம் உருவாக்கிப் பின்னர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பினும் எஞ்சியுள்ள ஓவியங்கள் வண்ணம் மற்றும் வடிவமைப்பு ஒப்புமையில் சித்தன்னவாசல் ஓவியங்களைப் போன்றே காணப்படுவதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார். எட்டு திசை காவலர்களின் உருவம் இங்கு சமணம் தொடர்பான காட்சிகளும், எட்டு திசைக் காவலர்களான அக்னி, வாயு, குபேரன், ஈசானியன், இந்திரன், யமன், நிருதி, வருணன் போன்றவர்களும் தாமரை தடாகமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் ஆட்டின் மீது பயணிக்கும் இருவருடைய ஓவியமே தெளிவாக உள்ளது. ’ பச்சை, மஞ்சள், கருஞ்சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களே பிரதானமாக உள்ளன. உருவங்கள் கருஞ்சிவப்பு வண்ணத்தால் கோட்டோவியமாக வரையப்பட்டு பின்னர் மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆபரணங்கள் குறைந்த அளவாகவும் அதேவேளையில் நுட்பமான கலைநயத்துடனும் வேலைப்பாட்டுடனும் காணப்படுகின்றது. "ஆர்மாமலைப்பகுதி பல்லவர்களின் இறுதிக் காலகட்டங்களில் இராஷ்டிரகூடர், கங்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டுச் சில காலங்கள் இருந்தன. இருப்பினும் இவை பல்லவர்கள் காலத்தின் இறுதிப்பகுதியில் வரையப்பட்டிருக்கக்கூடும்" என பேராசிரியர் பிரபு அனுமானிக்கிறார். சமணப்பள்ளிகள் சமணத்துறவிகள் தங்கும் இயற்கையான குகைகளில் அவர்கள் படுப்பதற்காக கற்பாறையில் படுக்கைகள் வெட்டிக்கொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததுதாகவும் அரசர்களும் செல்வந்தர்களும் இதை ஓர் அறக்கொடையாக செய்ததாகவும் பிரபு தெரிவித்தார். இந்த குகைகள் பள்ளிக்குகைகள் எனப்பட்டன. சமண வழிபாட்டுத் தளமும், சமண மெய்யியல் ஆசிரியர்கள் தங்கும் இடமும் அங்கே அமைந்திருக்கும். சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கி சமயக்கல்வியும் தவப்பயிற்சியும் பெறுவார்கள். அவ்விடத்தில் சமணமதத்தின் தூய்மை நெறிமுறைகள் பேணப்பட்டதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார். சமணப் பள்ளிக் குகைகளுக்கு அருகே சுனைகள் அமைக்கப்பட்டிருந்தன. சமண சொல்லிலிருந்து வந்த ’பள்ளிக்கூடம்’ "உணவு அளித்தல், கல்வி அளித்தல், அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி அளித்தல், அருளுரை அளித்தல் என்னும் ஐந்துவகைக் கொடைகளைச் சமயப்பணிகளாகச் சமணர்கள் செய்தனர். அவற்றில் முதன்மையாகக் கல்விப் பணியை அவர்கள் முன்னெடுத்தனர். சமணப் பள்ளிகளில் இலக்கணம், அறிவியல், மருத்துவம் ஆகியவை கற்பிக்கப்பட்டன" என்கிறார் அவர். தமிழகத்தில் கி.பி 2 முதல் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை சமண சமயம் செல்வாக்குடன் இருந்தது எனக்கூறும் அவர், கல்விக்கூடத்திற்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் சமணர்களின் ’பள்ளி’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டதுதான் என்றும் அவர் கூறுகிறார். படக்குறிப்பு, குகையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொல்லியல் துறையினரின் ஆய்வு அருகர் மாமலை என்ற ஆர்மாமலைக் குகை தொல்லியல் துறையால் 12.06.1978 அன்று பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில், அழிவுறும் நிலையில் இருந்த இவ்விடத்தினை பாதுகாத்திட எழுந்த கோரிக்கையினை ஏற்று தொல்லியல் துறையினர் இந்த மலைக்குகையைக் கடந்தாண்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, சிதிலமடைந்து காணப்பட்ட ஆர்மா மலைக்குகையை ரூ.20 லட்சம் செலவில் புனரமைத்துள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். மலைக்கு செல்லும் வழிப்பாதைகள், படிக்கட்டுகள், பக்கவாட்டு சுவர்கள், அறிவிப்புப் பலகைகள் என சுற்றுலா பயணிகள் வந்து ஆர்மா மலையின் அழகையும், பழங்கால மக்கள் வாழ்ந்த தடத்தையும் காண்பதற்கான ஏற்பாடுகளைத் தொல்லியல் துறையினர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நினைவு சின்னமாக ஆர்மா மலைக்குகை உள்ளது. இந்நிலையில், ஆர்மா மலைக்குகையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்கள் இது போன்ற நினைவுச் சின்னங்களைக் காண்பதோடு அவற்றைப் பாதுகாத்திட அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஓவியங்கள் குறித்து கருத்து தெரிவித்த தமிழகத் தொல்லியல் துறையின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் அர. பூங்குன்றன், “இந்திய ஓவியக்கலை மரபில் உன்னத நிலையை அடைந்த ஓவியங்களை வட இந்தியாவில் அஜந்தா, எல்லோரா போன்ற குகைகளில் காணமுடிகின்றது. தமிழகத்தில் இதேபோன்ற ஓவிய மரபு பிற்காலங்களில் வந்த பல்லவர், பாண்டியர் மற்றும் சோழர்கள் காலங்களில் இருந்துள்ளது. இவை எண்ணிக்கையில் மிகக் குறைவு. இம்மரபில் வந்த ஓவியத்தின் மிச்சமான ஒன்று தான் ஆர்மாமலையில் உள்ள ஓவியங்கள்” என்றார். ”பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது” மேலும், இங்குள்ள ஓவியங்களில் பெரும்பான்மை அழிந்த நிலையில் இருப்பதனால் ஓவியங்கள் குறித்து முழுமையாக அறிய முடியவில்லை என்றும் அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பினும் வடிவமைப்பு மற்றும் அழகியல் செய்நேர்த்தியில் இங்குள்ள ஓவியங்கள் மிக முக்கியமான கலை வரலாற்றுத்தலமாகக் கருதப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். இந்த இடம் பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வந்து பார்ப்பதற்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு தான் ஆர்மாமலை கண்டறியப்பட்டது. இதுகுறித்து பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பேராசிரியர் பிரபு வலியுறுத்துகிறார். ஓவியங்களின் சிறப்பு குறித்து பேசிய அவர், ”முற்றிலும் மூலிகை சாறு கொண்டு கி.பி. 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் வரையப்பட்ட வண்ண ஓவியத்தால் தீட்டப்பட்ட படங்கள் உள்ளன. சமண சமயத்தில் மூலிகைகளைக் கொண்டு பல விதமான வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆனால், இங்கு60% ஓவியங்கள் அழிந்துவிட்டன. நாகரீக வளர்ச்சி அடைந்த பிறகும் பல்லவர் காலத்தைச் சார்ந்த 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிபி ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூலிகைச் சாறுகளை கொண்டு பல்வேறு விதமான வர்ணங்களை வைத்து ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார். இங்கு சித்தன்னவாசலில் இருக்கக்கூடிய அனைத்து ஓவியங்களும் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். "டிஜிட்டல்மயமாக்க வேண்டும்" அங்குள்ள வண்ணங்கள் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது. ’வேர்கள்’ அறக்கட்டளையின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான வடிவேலு சுப்பிரமணி பிபிசியிடம் கூறுகையில், “சுடாத செங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட சுவர்கள் இங்குள்ளன. சுட்ட செங்கல்லை விட சுடாத செங்கல் வலிமையான சுவர்களைக் கொண்டு காணப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களின் அருமை தெரியாமல் சிதைக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். அதனை பாதுகாக்க வேண்டும்” என்றார். ஆட்சியர் என்ன சொல்கிறார்? திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிபிசியிடம் இதுகுறித்து பேசுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c2xye02l1jpo