Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஓமண்ணை, மறைந்து வாழ்பவர்களை வெளிப்படுத்த வந்தாவோ என எண்ணுகிறேன்.
  2. 09 JAN, 2024 | 05:16 PM நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக குறித்த இராணுவ அதிகாரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனது வரவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் விடுத்த உத்தரவை குறித்த இராணுவ அதிகாரி அவமதித்ததன் காரணமாக பிணை முறியை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியல் உத்தரவை இன்று (9) மேல் நீதிமன்ற நீதிபதி திருச்செல்வம் ஜோசப் பிரபாகரன் விதித்தார். மேற்படி இராணுவ உயர் அதிகாரி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173553
  3. ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு 250 மில்லியன் ரூபா செலவிடுவதால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன - சஜித் கேள்வி Published By: VISHNU 09 JAN, 2024 | 05:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்கள் பாரிய பாொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அரசாங்கம் 250 மில்லியன் ரூபா செலவிட்டு கடற்படை கப்பலை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 250 மில்லியன் ரூபா செலவழித்து ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு கடற்படையின் கப்பல் ஒன்றை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு அன்றாட உணவு வேளை ஒன்றை வழங்க முடியாமல் இருக்கும் நிலையில், குறிப்பாக நாட்டில் இருக்கும் 220 இலட்சம் பேரும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டத்துடன் இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் 250 மில்லியன் ரூபா செலவழித்து எமது கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அனுப்புவதன் மூலம் எமக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன என கேட்கிறோம். குறைந்தபட்சம் அரசாங்கம் இவ்வாறு 250 மில்லியன் ரூபாவை முதலீடுசெய்வதன் மூலம் எமது நாடு கடன் பெற்றுக்கொண்டுள்ள நாடுகள் எமது கடனில் 25 பில்லியனாவது குறைப்பதாக வாக்குறுதி வழங்கி இருக்கிறதா? எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் நாட்டுக்கு சாதகமான விடயங்களுடனே சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அர்ப்பணிப்புக்காக சர்வதேசம் எமக்கு வழங்கப்போகும் பிரதி உபகாரம் என்ன? இவ்வாறான ஏதாவது இணக்கப்பாடுடனா அரசாங்கம் இந்த 250 மில்லியன் ரூபாவை செலவழிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது? அதனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினை விளங்குவதில்லையா? பாடசாலை மாணவர்களுக்கு கணனி வசதி இல்லாமல் இருக்கிறது. இந்த 250 மில்லின் ரூபாவையும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கணனிகளை பெற்றுக்கொள்ள ஒதுக்க முடியும்தானே. எனவே நாட்டில் இவ்வளவு பாரிய தேவைகள் இருக்கும்போது அரசாங்கம் எதற்காக இவ்வாறு செயற்படுகிறது என கேட்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/173521
  4. Published By: VISHNU 09 JAN, 2024 | 05:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஊடக கண்காட்சிக்காக எதிர்க்கட்சித் தலைவர் மின்கட்டண குறைப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மொத்த சனத்தொகையில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 76 இலட்சத்து 3923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும். மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் தீர்மானம் கடந்த மாதம் 05 ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரத்துடன் எடுக்கப்பட்டது. கட்டண திருத்தத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை ஊடக காட்சிப்படுத்தல் என்றே குறிப்பிட வேண்டும். ஊடக காட்சிப்படுத்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சித், தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுகிறது என்றார். https://www.virakesari.lk/article/173545
  5. படக்குறிப்பு, புதுச்சேரி மழை பாதிப்புகள் 8 ஜனவரி 2024 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாகவே பரவலாக கனமழை பெய்துவருகிறது. திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஜன. 07 அன்று நாள் முழுவதும் மழை தொடர்ந்தது. புதுச்சேரியிலும் மழை பெய்துவருகிறது. இன்று (ஜன. 08) மதியம் ஒரு மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செ.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 23 செ.மீ., நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. இதுவொரு `புதிய இயல்பா?`, இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமா? விவசாயிகள், பொதுமக்கள் இதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் இதையொட்டி எழுகின்றன. பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X லா நினோ காரணமா? இதுதொடர்பாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில், "கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு அருகே கிழக்கு நோக்கி வீசும் காற்று, மேற்கு நோக்கி வீசும் காற்றுடன் தொடர்புகொள்வதால் இந்த மழை பெய்துவருகிறது" என பதிவிட்டிருந்தார். ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்வியை தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்திடம் எழுப்பினோம். "கடந்த 2-3 ஆண்டுகளாக லா நினோ விளைவு இருந்தது. அப்படியிருந்தால் பருவமழை சிறிது தாமதமாகத்தான் முடிவுக்கு வரும். இப்போது ஜனவரி முதல் வாரம் தான். அதனால் இதனை டிசம்பர் கடைசி வாரம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பருவமழை தாமதமாக தொடங்கியதும் ஜனவரி மாதமும் பெய்யும் இந்த மழைக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார். மேலும், 2022-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தது என தெரிவித்த அவர், இந்தாண்டு அப்படியிருக்காது என்றும் கூறினார். 1964-ஆம் ஆண்டில் தனுஷ்கோடியில் டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட `தானே` போன்ற புயல்களை ஸ்ரீகாந்த் உதாரணமாக காட்டுகிறார். `தானே` புயலின் போது லா நினோ விளைவு இருந்ததாக கூறுகிறார். லா நினோ இருந்தால் டிசம்பர் இறுதி, ஜனவரி முதல் வாரத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X லா நினோ என்பது என்ன? "லா நினோ என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை குறைந்து, மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவும் வானிலையாகும். வெப்ப மண்டல காற்றுக்கூறுகள் மெதுவாகத்தான் பூமத்திய ரேகைக்கு தெற்கே நகரும். பூமத்திய ரேகையை நெருங்கி சென்றால்தான் மழை குறையும். லா நினோ வானிலையின் போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். எனவே, மழை தொடரும்" என்றார். எனினும், இப்போது பெய்யும் மழை `லா நினோ` விளைவால் ஏற்பட்டதல்ல என்கிறார் ஸ்ரீகாந்த். ஜனவரி மழைக்கு என்ன காரணம்? "வடகிழக்குப் பருவ மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு இடைப்பட்ட காலங்களில் மேற்கத்திய கலக்கம், மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO) மற்றும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) இவைகளின் நிலையே மழைக்கான முக்கிய காரணிகள். இந்த மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்று சாதகமான சூழலில் இருந்தால் குளிர்கால / வெப்ப சலன மழை தென் இந்திய பகுதியில் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்" என்பது ஸ்ரீகாந்த் போன்ற வானிலை ஆர்வலர்களின் விளக்கமாக இருக்கிறது. இதில், மேற்கத்திய கலக்கம் (Western disturbance) என்ற வானிலை நிகழ்வு, மழையை ஏற்படுத்தி வெப்பநிலையை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேடன் -ஜூலியன் அலைவு ( MJO ) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் உள்ள பருவகால மாறுபாட்டின் முக்கிய அங்கமாகும். தற்போது தமிழகத்தில் பெய்யும் மழைக்கு எம்.ஜே.ஓ, மேற்கத்திய கலக்கம் போன்ற இரு சூழல்களும் சாதகமாக இருப்பதே காரணம் என்கிறார் அவர். "இந்த சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் இம்மழை இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தென் தமிழகத்தில் மட்டும் ஒருவேளை மழை பெய்திருக்கலாம்" என்கிறார் ஸ்ரீகாந்த். கடல் வெப்பம் அதிகமானால் மழையின் தன்மையில் இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம் என அவர் கூறுகிறார். இப்படி பருவமழை அல்லாத காலங்களில் பெய்யும் மழையை ஓரளவு கணிக்க முடியும் எனக்கூறும் அவர், எனினும் எந்த பகுதிகளில் அதிக மழை இருக்கும் என்பதை சொல்ல முடியாது என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய இயல்பா? காலநிலை மாற்றம் இதற்கு காரணமா என `பூவுலகின் நண்பர்கள்` அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஜனவரி மாதமும் மழை பெய்துவருகிறது. இதுவொரு புதிய இயல்புதான். பருவமழை தன்மைகள் மாறுபடுவதே காலநிலை மாற்றத்தால்தான். வளைகுடா நீரோட்டம், எம்.ஜே.ஓ போன்றவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அரபி கடலிலும் வெப்பம் அதிகரித்து அங்கேயும் பல புயல்கள் உருவாகி வருகின்றன. இந்த வானிலை மாறுதல்கள், இந்திய பருவமழையில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். பாதிக்கப்படும் விவசாயிகள் இப்படி பருவம் தப்பிய மழையால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். ஜனவரி மாதம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை காலம்.மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கள்ளக்குறிச்சி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு கூறுகையில், "பருவம் தவறி பெய்த மழையால் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த நெல் முற்றிலும் நாசமாகி போனது. எப்போதும் `தை பிறந்தால் வழி பிறக்கும்` என்பதற்கு ஏற்ப தை மாத அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் பெய்த மழையானது முழுமையான சேதத்தைக் கொடுத்து விட்டது" என தெரிவித்தார். புதுச்சேரி பகுதி கருக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், "நெல் அறுவடை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் கதிர் முற்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த மழை எதிர்பார்க்காத ஒன்று. இதனால் செய்த செலவு கூட வராது அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன என்ன செய்வது என்று தெரியவில்லை. வரத்து வாய்க்காலை தூர்வாரி இருந்தால் நஷ்டத்தை சற்று குறைத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம்" என தெரிவித்தார். எங்கெல்லாம் பாதிப்புகள்? திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வலங்கைமான் பேரூராட்சி 14-வது வார்டு கோவில்பத்து பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயினர். புதுச்சேரி கிருமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. https://www.bbc.com/tamil/articles/cz9qr4pwp75o
  6. Published By: VISHNU 09 JAN, 2024 | 08:11 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள். தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/173569
  7. பிரதேச செயலகங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் TIN வழங்க தனி கருமபீடங்கள் அமைக்க நடவடிக்கை 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற இடங்களில் இது தொடர்பான கருமபீடங்களை திறக்க ஏற்பாடு செய்யுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். TIN வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச நிர்வாகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகியவற்றின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அனைத்து பிரதேச செயலகங்களும் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். முன்னர் செய்தது போல், எரிபொருளுக்கான QR குறியீடுகளை வழங்குவதைப் போன்றே, TIN வழங்குவதற்கான திறமையான செயல்முறையை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போதைய ஒன்லைன் பதிவு விண்ணப்பப் படிவத்தை சுருக்கவும், ஐந்து நாட்களுக்குள் எண்ணை வழங்குவதற்கான நேரத்தை விரைவுபடுத்தவும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287577
  8. 09 JAN, 2024 | 11:37 AM யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழல் மற்றும் பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார். அவர் தனது கோரிக்கையில் தெரிவித்த முக்கிய விடயங்களாவன, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். வட மாகாணத்தில் இருந்து வெளிச் செல்லும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியில் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு வசதிகள் இல்லை. இந்தப் பிரச்சனையை தீர்கும் முகமாக ஜனாதிபது உடன் தலையீடு செய்து தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்க வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் நிர்வாக ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டத்தரணிகளை ஆதாரமின்றி முகதாவணையில் கைது செய்யும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்லாது பொது மக்களை கைது செய்யும்போது தகுந்த காரணங்கள் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் அது தொடர்பில் பொலிஸ்மா ஆதிபருக்கு ஜனாதிபதி பணிபுரை விடுக்க வேண்டும். மேலும் இலங்கையில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களில் தமிழ் நீதியரசர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று தமிழ் நீதியரசர்களையும் உயர்நீதிமன்றத்தில் ஐந்து தமிழ் நிதியரசர்களையும் நியமிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை வலியுறுத்தி பதின்நான்கு பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173483
  9. 2024 பிரமாண்ட கிழக்கு மாகாண கலாச்சாரப் பொங்கல் திருவிழா புகைப்படங்கள் 1008 பொங்கல் பானைகள், 1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்கள். இவை அனைத்தும் பாடசாலை மாணவர்களை ஒன்று சேர்த்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருகோணமலையில் நடைபெற்றது. https://thinakkural.lk/article/287524
  10. இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் கப்ரா கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. 50 மீற்றர் நீளமுடைய இந்த கப்பலில் 55 பணிக்குழாமினரும் இலங்கை வந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.என்.எஸ் கப்ரா நாளை வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287489
  11. 09 JAN, 2024 | 11:36 AM நாட்டில் வற் வரி அதிகரித்த நிலையில் பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் சீனி, உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோதுமை மா, பருப்பு மற்றும் சில அரிசி வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. இதன்படி , 300 ரூபாவாக இருந்த பருப்பு 1 கிலோ 350 ரூபாவாகவும், 290 ரூபாவாக இருந்த சீனி 1 கிலோ 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன. https://www.virakesari.lk/article/173486
  12. Published By: DIGITAL DESK 3 09 JAN, 2024 | 01:46 PM இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்ததுடன் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் விரிவாக இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் கலந்துரையாடினார். இதில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/173511
  13. நம்மட கூட்டாளி ஒருத்தரும் ட்ரக்கோட இழுத்து வந்ததாகச் சொன்னவர்!
  14. பங்கமில்லா வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் - பொ.ஐங்கரநேசன் அழைப்பு 09 JAN, 2024 | 01:31 PM தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து வருகின்றன. அலுமினியப் பானைகள் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு விழாவுக்குப் பொருத்தமற்றது என்பதோடு, உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. தமிழர் பண்பாடும் உடல் நலமும் பங்கமில்லாத வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். தைப்பொங்கலில் மண்பானைகளின் முக்கியத்துவம்பற்றி பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், அலுமினியம் மிகவும் இலேசான உலோகம், ஆகையால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலை மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் இடப்படுகிறது. அலுமினியப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. மேலும், சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமிலகார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு சமையல் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் கரைந்து உணவுடன் கலப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. உடலுடன் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிப்பதுடன் ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்களை மேலும் பாதிப்படையவும் செய்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மட்பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்துளைகள் ஊடாக வெப்பத்தைப் பரவி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு தவிர்க்கப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையை சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவிற்கு விடுவிக்கப்படுவதால் உணவு கூடுதல் போசணைப்பெறுமானம் பெறுகிறது. மேலும் உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து உணவுக்குக் கூடுதல் சுவையையும் தருகிறது. எதனையுமே அவசரகதியில் செய்துவிடத் துடிக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய சமையலையும் அவ்வாறே விரைந்து முடிக்கத் தலைப்பட்டு உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோயின் வாய்ப்பட்டும் வருகிறோம். மட்பாண்டங்களுக்கு முழுமையாகத் திரும்புதல் இயலாததாக இருக்கலாம். எனினும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினைஞர்களது வாழ்வு வளம்பெறவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173508
  15. இளந்தாரியள் வர முதல் ஓடுவம்😜
  16. லெபனானில் இஸ்ரேல் விமான தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி Published By: RAJEEBAN 09 JAN, 2024 | 10:49 AM லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு விசாம் டவில் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பின் விசேட படையணியான ரட்வான் படையணியின் முக்கிய உறுப்பினரான விசாம் டவில் என்பவரே இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்காத அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் தங்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. கிர்பேர்ட் செலிமின் டப்சா பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள மேற்கொண்ட விமானதாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானதாக்குதல் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.எரிந்த கார் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/173477
  17. 08 JAN, 2024 | 10:55 PM 2023 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தின் போது ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் போது அதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தமை, தெற்கில் இருந்து பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரு குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 17 நபர்களை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது. குறித்த வழக்கானது இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொண்டபோதே இவ் வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மன்றில் ஆயராகிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சாள்ஸ் நிர்மில நாதன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவில் அமைப்பினர்கள், வேலன் சுவாமிகள், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆயராகியிருந்தனர். குறித்த வழக்கில் சட்டத்தரணியாக மன்றில் ஆயராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.டி.தவராஜா உடன் இருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பொலிஸாரின் மேலதிக விசாரணைக்காக சட்டமா திணைக்களத்தின் ஆலோசனை பெறவுள்ளதாக மன்றில் பொஸிஸார் கூறியிருந்தனர். அதற்கான விண்ணப்பம் ஒன்றினை மன்றில் நான் சட்டத்தரணியாக சமர்ப்பித்திருந்தேன். இந்த வழக்கில் ஈட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்து இருந்தேன். அதனை கேட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா வழக்கினை கிடப்பில் போட்டு சகலரையும் விடுதலையாக்கினார் - என்றார். https://www.virakesari.lk/article/173459
  18. ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி இலங்கை வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி ஜனவரி 11 முதல் 12 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பாராளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் லங்கா நிப்பென் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர். https://thinakkural.lk/article/287443
  19. வரிக்கோப்பு இலக்கம் பெப்ரவரி முதல் அமுலுக்கு வருகிறது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 08 JAN, 2024 | 06:37 PM இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 இலட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த பலம் வாய்ந்த குடிமகன் என்றும், அது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்த நாட்டு மக்களும் இத்தகைய மனப்பான்மையைக் கொண்டுவருவது நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். பெப்ரவரி முதல் திகதியில் இருந்து வரிக்கோப்பு இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, 2019ஆம் ஆண்டின் இறுதியில் 1,705,233 ஆக இருந்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் இறுதியில் 437,547 ஆகக் குறைந்துள்ளது. எமது அரசாங்கத்தின் புதிய கொள்கைகளால், டிசம்பர் 31, 2023 ஆண்டுக்குள் வரிக் கோப்புகளின் எண்ணிக்கையை 1,002,029 ஆக உயர்த்த முடிந்தது. நாம் மேலும் அந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும். அத்துடன், கடந்த வருட இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 08% ஆக இருந்த அரச வருமானத்தை 10% ஆக அதிகரிக்க முடிந்தது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதை 12% ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். ஓரளவு நிலையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறுவதற்கு 2025 ஆம் ஆண்டளவில் 15% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். மேலும், வற் வரிக்கு சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதுவரை 15% ஆக இருந்த வற் வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 80 மில்லியன் ரூபாவாக இருந்த வற் வரி எல்லை 60 மில்லியன் ரூபாவாக அமையும். 2001 இல் வற் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் வற் வரிக்கு உட்பட்டது. அதில் குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு வரி திருத்தச் சட்டத்தின் ஊடாக விலக்களிக்கப்பட்டன. விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்கள் மற்றும் சேவைகளில், 97 வகையானவை இந்தத் திருத்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. வற் வரி திருத்தத்தின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச வருமானம் 2.07% இனால் உயரும். இது 645 பில்லியன் ரூபாய். வரி விகிதங்களின் அதிகரிப்புடன் பணவீக்கம் 2.5% அதிகரிக்கும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு பகுப்பாய்வு செய்துள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மீண்டும் 5%க்குக் கொண்டு வர முடியும் என மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. 70% பணவீக்கம் இருந்த நாட்டில் தற்போது 5% பணவீக்க விகிதத்தை பேணவே நாம் முயற்சிக்கிறோம். அத்துடன், இந்த நெருக்கடி நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது எமது நிதி முகாமைத்துவத் திறன்களின் தனித்துவமான அம்சமாகும். இன்று நேரடி வரிகள் 30% ஆகவும் மறைமுக வரிகள் 70% ஆகவும் உள்ளது. இந்த வரி விகிதத்தை மாற்றி, நேரடி வரி விகிதத்தை 40%க்கு கொண்டு வருவதே எமது இலக்கு. உலகில் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் நிலை அதுவேயாகும். வரி செலுத்தக்கூடிய பலம் வாய்ந்த 1 மில்லியன் மக்கள் உள்ளனர், ஆனால் தற்போது 05 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை வரி வலைக்குள்ளே கொண்டு வர வேண்டும். பின்னர் மறைமுக வரிகளை குறைக்க முடியும். பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து வரிக்கோப்பு இலக்கத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறோம். தற்போது அதனைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளதால் தான் அந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. எனவே பிரதேச செயலக மட்டத்தில் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலோசித்து வருகிறோம். அதனை ஒன்லைன் முறை மூலம் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த வலிமையான பிரஜை என்பது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இவ்வாறு மக்களின் மனப்பான்மையை மாற்றுவது முக்கியம். எனவே இத்திட்டம் வெற்றியடைய அனைவரின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/173463
  20. கிழக்கு ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன், படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான், டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர். இப்போட்டியை பார்ப்பதற்காக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/287420
  21. பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து - குஜராத் அரசு பற்றி உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? பட மூலாதாரம்,CHIRANTANA BHATT 8 ஜனவரி 2024, 05:35 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, குற்றவாளிகள் மன்னிப்புக் கோரிய மனுவை விசாரித்த குஜராத் அரசு, 11 குற்றவாளிகளை விடுதலை செய்திருந்தது. தண்டனையில் விலக்கு அளிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் குஜராத் அரசு உண்மைகளை புறக்கணித்துள்ளது என்று நீதிபதிகள் கூறினர். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, குற்றவாளிகளின் பொது மன்னிப்பு மனு மீது நடவடிக்கை எடுத்து, 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் அனைவரும் கோத்ரா துணை மாவட்ட சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த சமயத்தில் குஜராத் அரசு கூறியிருந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதுடன் அவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கும் ஆளானார். இந்த வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பில்கிஸ் பானுவும் அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசின் வாதம் என்ன? குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும் அவர்களின் நடத்தையை கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு கூறியது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குஜராத் அரசு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுவித்ததற்கும், மூன்றாம் தரப்பு மனுதாரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளித்த குஜராத் அரசு, 'காவல்துறை கண்காணிப்பாளர், சிபிஐ சிறப்புப் பிரிவு மும்பை மற்றும் சிறப்பு சிவில் நீதிபதி (சிபிஐ), சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், கிரேட்டர் பாம்பே' என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. கோத்ரா சிறை கண்காணிப்பாளருக்கு சிபிஐ எழுதியுள்ள கடிதத்தில், இவர்கள் செய்த குற்றம் கொடூரமானது மற்றும் தீவிரமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குஜராத் அரசு, “உண்மையில் அரசியல் ஆர்வலரான மனுதாரர் (சுபாஷினி அலி), கிரேட்டர் மும்பை சிறப்பு நீதிபதியால் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை விடுவிக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து எந்த அடிப்படையில் மேல்முறையீடு செய்கிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை? மனுதாரர் மாநில அரசின் முடிவில் எப்படி அதிருப்தி அடைகிறார் என்பதை விளக்கவில்லை. மேலும், இந்த மனுவில் அழுத்தமான வாதங்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை," என்று வாதிட்டது. பட மூலாதாரம்,PRAKASH SINGH/GETTY IMAGES உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 வது பிரிவின் படி, வழக்கு விசாரணை செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கேமன்னிப்பு வழங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்திலோ, குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் இடத்திலோ இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளது. நீதிபதி நாகரத்னா தீர்ப்பில், “இந்த விதியில் வழக்கு எந்த மாநிலத்திற்கு மாற்றப்பட்டது என்பதையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படையில் மட்டுமே, நிவாரண உத்தரவு ஒதுக்கி வைக்கப்படும். இந்த விஷயத்தில் குஜராத் அரசின் இந்த முடிவை எடுப்பதற்கான திறன் மிகவும் முக்கியமானது. ஆனால், முழுப் பிரச்சினையும் இங்கு முடிவதில்லை. 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கும் வகையில் பொது மன்னிப்பு மனுவை குஜராத் அரசு பரிசீலிக்க வேண்டும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்த மனுவில் பல முக்கிய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு, தலைமை நீதிபதியின் கருத்து, குற்றவாளி ராதேஷ்யாம் ஷாவின் ரிட் மனுவில் சேர்க்கப்படவில்லை. மேலும் விண்ணப்பத்தில் தவறான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. எனவே இந்த முடிவு செல்லாது” என்றார். இந்த பொதுமன்னிப்பு முடிவு சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த நீதிபதி நாகரத்னா, “இந்த விவகாரத்தில் குஜராத் அரசு தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. ஆகவே பொதுமன்னிப்பு முடிவு ரத்து செய்யப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு, குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்ட போது குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு கிடைத்தது எப்படி? பொது மன்னிப்பு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் குஜராத் அரசின் பொது மன்னிப்புக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மே 11, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பொது மன்னிப்பு வழங்க குஜராத் அரசு முடிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குஜராத் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு குஜராத் அரசு கட்டுப்பட்டு இருப்பதாக கூறினார். இந்த வழக்கில் அரசின் பொது மன்னிப்பு கொள்கையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இந்த விண்ணப்பங்கள் குறித்து அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார். குஜராத்தின் 1992-ஆம் ஆண்டு பொது மன்னிப்புக் கொள்கையின்படி அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி எஸ்.வி. ராஜூ, 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட குஜராத் அரசின் பொது மன்னிப்பு முடிவை அவர் ஆதரித்தார். இந்த குற்றவாளிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தனர். அதில் ஒருவர் முன்கூட்டியே விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் அரசை கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதையடுத்து, அரசு ஒரு குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா இருந்தார். இந்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஜஸ்வந்த்லால் பாய், கோவிந்த் பாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முடிவுக்குப் பிறகு, பிபிசி குஜராத்தி பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரிடம் பேசி அவர்களின் மனநிலையை அறிய முயன்றது. அப்போது அவர்கள், “குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து, பில்கிஸ் பானு மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அவர்கள் அச்சத்தில் உள்ளனர்" என தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பில்கிஸ் பானு வழக்கின் பின்னணி 2002 குஜராத் கலவரத்தின் போது, ஆமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார். மேலும், மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார். அப்போது பில்கிஸ் பானுவுக்கு சுமார் 20 வயது. பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் அவநம்பிக்கையான நிலையில் பில்கிஸ் பானு அருகேயுள்ள மலைப்பகுதிக்கு சென்று தன் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சிலர் பில்கிஸ் பானுவை மிரட்டி ஆதாரங்களை அழிக்க முயன்றனர். அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டன. பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவுக்குக் கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பில்கிஸ் பானு தொடர்ந்து போராடி குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகு முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன், பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, குஜராத் நீதிமன்றங்களால் நீதி வழங்க முடியாது எனக்கூறி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நீதிக்கான 17 ஆண்டுகால போராட்டத்தில், பில்கிஸ் பானு மற்றும் அவரது கணவர் யாகூப் ரசூல் ஐந்து குழந்தைகளுடன் பத்து வீடுகளை மாற்ற வேண்டியிருந்தது. 2017-ஆம் ஆண்டு பிபிசியின் கீதா பாண்டேவுக்கு அளித்த பேட்டியில், "காவல்துறையும் அமைப்பும் எப்போதும் தாக்குதல் நடத்துபவர்களை ஆதரித்துள்ளது. குஜராத்தில் கூட நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறோம். எங்கள் முகவரியை யாருக்கும் கொடுக்க மாட்டோம்" என்று பில்கிஸ் பானு கூறினார். பில்கிஸ் பானுவுக்கு மகள்கள் ஹஜ்ரா, பாத்திமா, சலேஹா என 3 மகள்களும் யாசின் என்ற மகனும் உள்ளனர். தன் கண் முன்னே கொலை செய்யப்பட்ட மகளின் சலேஹா என்ற பெயரை இளைய மகளுக்கு சூட்டியுள்ளார் பில்கிஸ் பானு. பிடிஐ செய்தி முகமையின்படி, ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்துவிட்டு, பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு முன்னதாக ஏப்ரல் 2019-இல், உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு ரூ. 50 லட்சம் வழங்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. பில்கிஸ் பானுவுக்கு விதிகளின்படி அரசு வேலை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஒரு பெண்ணாகவும் நாட்டின் குடிமகளாகவும் தனது கண்ணியத்தை மீட்டெடுத்ததாக பில்கிஸ் பானு அப்போது கூறினார். பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சியங்களை சிதைக்க முயன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகள் பலரின் ஓய்வூதிய பலன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/c9e25v9l1p3o
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தொடங்கிய விவாதம் தற்போது மாலத்தீவை எட்டியுள்ளது. பிரதமர் மோதி மற்றும் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்த கருத்துக்கு இந்தியாவை சேர்ந்த பல தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அங்குள்ள சுற்றுலாத் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அக்ஷய் குமார், சல்மான் கான், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் பலரும் சுற்றுலாப் பயணத்தின் போது இந்திய கடற்கரைகள் மற்றும் தீவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசியுள்ளனர். இந்த முழு விவாதமும் பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணத்தின் போது தொடங்கியது. அந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் இனி விடுமுறைக்கு மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவுக்குச் செல்லுங்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு - லட்சத்தீவு ஒப்பீடு இதுபோன்ற சமூக ஊடக பதிவுகளுக்கு பதில் அளிக்கும் போது, மாலத்தீவு அமைச்சர்கள், லட்சத்தீவுகளுடன் மாலத்தீவுகளை ஒப்பிடுவது சரியல்ல என்று ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தினர். மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளை ஒப்பிடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இந்தியாவில் இருந்து மாலத்தீவை அடைவது எளிதானது. மேலும், குறைந்த நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு செல்ல விசா தேவையில்லை. அதேசமயம், லட்சத்தீவு செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விமானங்கள் உள்ளன. அதேசமயம், லட்சத்தீவுக்கு குறைவான விமானங்களே உள்ளன. லட்சத்தீவுகளும் மாலத்தீவுகளும் வெவ்வேறான சூழல்களை கொண்டவை. அவற்றை ஒப்பிடுவது சரியா என இக்கட்டுரையில் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு பற்றி தெரியுமா? மாலத்தீவில் 'மால்' என்ற வார்த்தை 'மாலா' என்ற மலையாள வார்த்தையிலிருந்து வந்தது. மாலத்தீவில், 'மால்' என்றால் மாலை மற்றும் ’தியு’ என்றால் தீவு. 1965-இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இங்கு முடியாட்சி இருந்தது. பின்னர், நவம்பர் 1968-இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது. மாலத்தீவு இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இந்திய நகரமான கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது. இது 1,200 தீவுகளைக் கொண்டது. பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது, டெல்லியை விட இது ஐந்து மடங்கு சிறியது. மாலத்தீவின் மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம். மாலத்தீவில் திவேஹி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது. அங்குள்ள தீவுகள் எதுவும் கடல் மட்டத்திலிருந்து ஆறு அடிக்கு மேல் இல்லை. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும் அபாயத்தில் மாலத்தீவு உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. இங்குள்ள தீவுகளின் பொருளாதாரமும் சுற்றுலாவையே சார்ந்துள்ளது. மாலத்தீவின் பொருளாதாரத்தில் தேசிய வருவாயில் கால் பகுதிக்கு மேல் சுற்றுலாத்துறையில் இருந்து வருகிறது. 2019-ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மாலத்தீவுக்குச் செல்பவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே. கடந்தாண்டு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் 2 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2021-இல் இந்த எண்ணிக்கை சுமார் மூன்று லட்சமாகவும், 2022-இல் இந்த எண்ணிக்கை இரண்டரை லட்சமாகவும் இருந்தது. மாலத்தீவின் ஊடக அமைப்பான AVAS-ன்படி, மாலத்தீவுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள்தான். இங்கு நீலக் கடலால் சூழப்பட்ட வெள்ளை மணல் கடற்கரைகளைக் கொண்ட தீவுகள், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. மாலத்தீவுக்கு எந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் வருகிறார்கள்? இந்தியா: 2 லட்சத்து 5 ஆயிரம் ரஷ்யா: 2 லட்சத்து 3 ஆயிரம் சீனா: 1 லட்சத்து 85 ஆயிரம் பிரிட்டன்: 1 லட்சத்து 52 ஆயிரம் ஜெர்மனி: 1 லட்சத்து 32 ஆயிரம் இத்தாலி: 1 லட்சத்து 11 ஆயிரம் அமெரிக்கா: 73 ஆயிரம் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவில் என்னென்ன இடங்கள் உள்ளன? கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு ஜனவரி 26-ம் தேதி செல்ல வேண்டும் என்றால், விமான டிக்கெட்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் செலவாகும். மாலத்தீவு செல்ல இரண்டு மணிநேரம் ஆகும். மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, மாலத்தீவில் 175 ஓய்வு விடுதிகள், 14 ஹோட்டல்கள், 865 விருந்தினர் இல்லங்கள், 156 கப்பல்கள், 280 ’டைவ்’ மையங்கள், 763 பயண முகவர் நிலையங்கள் மற்றும் ஐந்து சுற்றுலா வழிகாட்டி நிறுவனங்கள் உள்ளன. மாலத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள். சூரிய தீவு ஒளிரும் கடற்கரை ஃபிஹாலஹோஹி தீவு மாலே நகரம் மாஃபுஷி செயற்கை கடற்கரை மாமிகிலி பல பயண வலைத்தளங்களின்படி, மாலத்தீவுக்குச் செல்ல சிறந்த மாதங்கள் ஜனவரி-ஏப்ரல். மே முதல் செப்டம்பர் வரை மாலத்தீவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும். ஒருநாளைக்கு மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் கட்டணம் சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. பட மூலாதாரம்,ANI லட்சத்தீவு பற்றி தெரியுமா? லட்சத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். மாலத்தீவு லட்சத்தீவில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவின் கொச்சியிலிருந்து 440 கிலோமீட்டர் தொலைவில் லட்சத்தீவு உள்ளது. லட்சத்தீவு என்பது 36 சிறிய தீவுகளின் கூட்டமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 96 சதவீதம் பேர் முஸ்லிம்கள். லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64 ஆயிரம். லட்சத்தீவின் பரப்பளவு சுமார் 32 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, மாலத்தீவின் பரப்பளவை விட இது சுமார் 10 மடங்கு குறைவு. லட்சத்தீவில் உள்ள 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். கவரட்டி, அகட்டி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் ஆகியவை இதில் அடங்கும். பித்ராவில் 271 பேரும், வெறிச்சோடிய பங்காரம் தீவில் 61 பேரும் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு மலையாள மொழி பேசப்படுகிறது. மினிகாயில் மட்டுமே மக்கள் மாஹே பேசுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES மீன் பிடித்தல் மற்றும் தென்னை சாகுபடி ஆகியவை லட்சத்தீவில் உள்ள மக்களின் முக்கிய வருமான ஆதாரங்கள். லட்சத்தீவில் சுற்றுலாத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்தாண்டு லட்சத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 ஆயிரம் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவித்தன. அதாவது, மாலத்தீவு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு குறைவு. அகட்டியில் விமான ஓடுதளம் உள்ளது, கொச்சியிலிருந்து அங்கு செல்லலாம். அகட்டியில் இருந்து கவரட்டி மற்றும் கடமட் வரை படகுகள் உள்ளன. அகட்டியில் இருந்து கவரட்டிக்கு ஹெலிகாப்டர் சேவை உள்ளது. கொச்சியில் இருந்து அகட்டிக்கு விமானத்தில் செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். கொச்சியில் இருந்து 14 முதல் 18 மணிநேரத்தில் கப்பல் மூலம் லட்சத்தீவு சென்றடையலாம். இங்கு செல்வதற்கு எவ்வளவு பணமும் நேரமும் செலவிடப்படும் என்பது நீங்கள் எந்த தீவுக்குச் செல்கிறீர்கள், எத்தனை நாட்களுக்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பட மூலாதாரம்,FACEBOOK/NARENDRA MODI லட்சத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்: கவரட்டி தீவு கலங்கரை விளக்கம் ஜெட்டி தலம், மசூதி அகட்டி பங்காரம் தின்னகர மாலத்தீவுகளைப் போலவே லட்சத்தீவுகளிலும் வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம். இங்கு வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், லட்சத்தீவுக்குச் செல்ல, நீங்கள் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும் இங்குள்ள பல தீவுகளுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது அல்லது அரசாங்க அனுமதி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். லட்சத்தீவு என்ற பெயரின் கதையும் சுவாரஸ்யமானது. லட்சத்தீவு என்றால் மலையாளம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஒரு லட்சம் தீவுகள் என்று பொருள். பட மூலாதாரம்,LAKSHADWEEP.GOV.IN லட்சத்தீவு பேசுபொருளானது ஏன்? சமீபத்தில், பிரதமர் மோதி லட்சத்தீவுக்கு சென்ற போது, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின்படி, பிரதமர் மோதியின் சமீபத்திய பயணமும் பாஜகவின் தேர்தல் வியூகத்துடன் தொடர்புடையது. பிரதமர் மோதி தனது சமீபத்திய பயணத்தின் போது, "2020-இல், அடுத்த 1,000 நாட்களில் லட்சத்தீவில் வேகமான இணையம் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன்" என்று கூறியிருந்தார். ”இன்று தொடங்கப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபர் திட்டம் 100 மடங்கு வேகமான இணைய வேகத்தை உங்களுக்கு வழங்கும்” என அவர் தெரிவித்தார். ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியில், நாட்டின் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவால் கேரளாவில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இந்த சூழலில் கேரளாவுக்குள் நுழைய லட்சத்தீவு நுழைவுவாயிலாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பிரஃபுல் படேல் 2020 முதல் லட்சத்தீவின் நிர்வாகியாக உள்ளார். லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தும், சில நேரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றுவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. லட்சத்தீவில் இந்திய கடலோர காவல்படை செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர, ஐஎன்எஸ் த்வீபிரக்ஷக் கடற்படை தளமும் கட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல் காந்தியைத் தவிர, லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலின் வேட்புமனுவும் கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 11, 2023 அன்று, லட்சத்தீவு நீதிமன்றம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முகமது ஃபைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. ஜனவரி 25, 2023 அன்று, கேரள உயர் நீதிமன்றம் தண்டனையை பத்து ஆண்டுகள் நிறுத்தி வைத்தது. மாலத்தீவில் ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ (India Out) என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த முகமது முய்ஸு, வெற்றி பெற்ற பின், இந்தியா தனது படைகளை திரும்ப பெறுமாறு கூறினார். பட மூலாதாரம்,@NARENDRAMODI என்ன சர்ச்சை? லட்சத்தீவில் டிசம்பர் 17-ம் தேதி வாராந்திர விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை தோறும் தொழுகையில் ஈடுபடுவதற்காக பல தசாப்தங்களாக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது ஃபைசல் இந்த முடிவு ஒருதலைபட்சமானது என எதிர்த்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் பிரஃபுல் படேல் ஒருதலைபட்சமான முடிவுகளை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். இங்கு பள்ளி நேரமும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணியாக மாற்றப்பட்டது. லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகள் இரண்டும் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவில் இந்தியாவின் இருப்பு வலுவிழந்தால், சீனா மாலத்தீவுக்கு மிக நெருக்கமாகிவிடும். லட்சத்தீவில் பாதுகாப்பு விஷயத்தில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால், தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பு ஆழமாகிவிடும். நவம்பர் 26, 2008 அன்று மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இருந்து லட்சத்தீவின் நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. கேரளாவின் கடலோரப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் லட்சத்தீவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c4ny8p8e8k9o
  23. லசந்தவை நினைவுகூருவதுடன் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைவுகூருவோம் - ரெய்சா விக்கிரமதுங்க Published By: RAJEEBAN 08 JAN, 2024 | 05:31 PM இனவெறி, அதிகார வெறி ஊழல் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை தவிர்ப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரெய்சா விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை மாத்திரமல்லாமல் அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை நினைவுகூருவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது : பாலஸ்தீனம், சூடான், கொங்கோ, யேமன் மற்றும் தாய்நாட்டுக்கு அருகில் பலோச்சிஸ்தான் ஆப்கானிஸ்தான் மியன்மாரிலிருந்து நாளாந்தம் மரணங்கள், காணாமல் போதல், காயங்கள், பசிபட்டினி குறித்து இருள்மயமான தகவல்கள் வெளியாகின்றன. இலங்கையர்களுக்கு இந்த காட்சிகள் பழக்கமானவை. நாங்கள் யுத்தத்தை அனுபவித்த நாட்டை சேர்ந்தவர்கள் லசந்தவின் மரணம் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளில் ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அவரது மகள் சுட்டிக்காட்டியுள்ளது போல கொல்லப்படுவதற்கு முன்னர் எனது அங்கிள் போர் சாதனமொன்று குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். கசப்பான உண்மைகளை வெளியிட்டு வந்தார். இலங்கையர்களான எங்களுக்கு மறப்பதே தேசப்பற்று என சொல்லப்பட்டுவந்துள்ளது, அதாவது இறுதிக்கட்ட போரின்போது இழக்கப்பட்ட உயிர்கள் பெரும் வெற்றிக்காக செலுத்தப்படவேண்டிய சிறிய விலை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று நாங்கள் உலகம் எங்கிலும் மக்கள் அமைதி சமாதானத்திற்காக பேரணியாக செல்வதை பார்க்கின்றோம், அவர்கள் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் பெயர்களை வாசிக்கின்றனர். கொங்கோவிற்காக நிதி திரட்டுகின்றனர், டார்பூரில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். இந்த தருணத்தில் இளம் செயற்பாட்டாளர்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் தார்மீக தெளிவை, முன்னோக்கி அணிவகுத்து செல்வதற்கு தாங்கள் தயார் என்பதை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. மாறாக பகிஷ்கரிப்பு, புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கும் தங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களை நோக்கி வேண்டுகோள்களை விடுப்பதற்கும் உலகில் இடம்பெறும் வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிவதற்கும் தாங்கள் தயார் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். லசந்த விக்கிரமதுங்கவை நினைவுகூருவதற்காக நாங்கள் அணிதிரண்டுள்ள இந்த தருணத்தில் இது குறித்து சிந்திப்பது பொருத்தமானது என நான் கருதுகின்றேன். அதிகாரம் குறித்து அதிகம் சிந்தித்த, ஊழல் அரசியல்வாதிகளையும் வர்த்தகர்களையும் அம்பலப்படுத்த முயன்றமைக்காக பெரும் விலையை செலுத்திய அவர் தற்போது எங்கள் மத்தியில் இல்லை என்றாலும் அவர் பணியாற்றிய அனைத்து ஆசிரிய பீடங்களையும் கடந்து சென்ற அனைத்து பத்திரிகையாளர்களிடமும் அவரது பாரம்பரியம் உயிர் வாழ்கிறது. அவர்களில் பலர் தொடர்ந்தும் ஊடகங்களில் பணியாற்றுவதுடன் தங்கள்அறிவை இளம் தலைமுறையினரிடம் பகிர்ந்துகொள்கின்றனர். இன்று உலகில் மாத்திரமல்ல இலங்கையிலும் ஈவிரக்கமற்ற சூழல் நிலவும் காலம். விலைகள் விண்ணை தொடுகின்றன- வரிகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு வருடகாலத்திற்கு மேல் வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் நேர்மையான மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. மறப்பதே தேசப்பற்று என மீண்டும் அவர்கள் எங்களிற்கு தெரிவிக்கின்றனர். பலர் அதனை ஏற்க தயாராக உள்ளனர் குறிப்பாக கொழும்பில். மாறாக ஒரு ஓரமாக நின்று கொண்டு கைகளை உயர்த்துவதற்கு பதில் நாங்கள் மறப்பதற்கு பதில் நினைவுகூருவதற்கு திடசங்கற்பம் பூணுவோம் என நான் முன்மொழிகின்றேன். லசந்த விக்கிரமதுங்கவை அவரது நகைச்சுவை உணர்வு, அவரது இரக்க குணம் ஒரு செய்திக்காக அவர் தொடர்ந்து முயற்சித்தல் போன்றவற்றை மாத்திரம் நினை கூருவதுடன் மாத்திரமல்லாமல் அவரை போன்ற அச்சமில்லாத தங்கள் உயிர்களை இழந்த ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களை நினைவில்வைத்திருப்போம். குறிப்பாக அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த பத்திரிகையாளர்களை நினைவு கூருவோம். தேர்தல் என வரும்போது எங்கள் வாக்கை செலுத்தும் தருணம் வரும்போது நாங்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் வாக்களிப்போம் - இனவெறியர்களை ஊழல் அதிகார வெறிமிகுந்த அரசியல்வாதிகளை தவிர்ப்போம். எனது அங்கிள் தற்போதுஇருந்தால் அவர் தீவிரமாக செயற்படுவார் மக்களை சரியான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் கடுமையான தலையங்கங்களை எழுதுவார். ஆகவேநாம் சரியான தெரிவுகளை மேற்கொள்வோம். நினைவுகூருவோம் தொடர்ந்தும் எதிர்ப்போம். https://www.virakesari.lk/article/173448

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.