Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அசத்தல் அறிமுகம் - தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன சாதித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 டிசம்பர் 2023, 13:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 116 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனை, இந்திய வீரர்கள் எளிதில் ஊதித் தள்ளினர். இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் கால் பதித்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இருபது ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அறிமுகம் இந்த போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் வீரரான சாய் சுதர்சன் களம் கண்டார். கேப்டன் லோகேஷ் ராகுல் அவருக்கு இந்திய அணியின் தோப்பியை அளித்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னாப்பிரிக்கா இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாடியது. பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அது தவறு என்று அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் உணர்ந்திருப்பார். தென் ஆப்ரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட அதிரடி வீரர் ராஸ்ஸி வான்டர் டுஸ்சன் அதே அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் காலியானார். 3 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் டோனி ஷோர்சியுடன் இணைந்து அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மார்க்ரம் முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அர்ஷ்தீப் சிங், ஆவேஷ்கான் மிரட்டல் பந்துவீச்சு இந்திய அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய இருவருமே துல்லியமாக பந்துவீசி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டினர். டோனி ஷோர்சி 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான ஹென்றி கிளாஸனும் அந்த அணிக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 6 ரன் மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் நடையைக் கட்டினார். தென் ஆப்ரிக்க அணியின் ஆபாத்பாந்தவனாக பார்க்கப்படும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆவேஷ்கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான கேப்டன் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வியான் முல்டன் 0, இந்திய வம்சாவளி வீரரான கேசவ் மகராஜ் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதிக்கட்டத்தில் அன்டிலே மட்டும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி 33 ரன்களை எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 27.3 ஓவர்களிலேயே 116 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் ஒரு விக்கெட்டை எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் அசத்தல் எளிய இலக்கை எதிர்கொண்ட இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சாய் சுதர்சனும் களம் புகுந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்துகளில் 5 ரன் எடுத்த நிலையில் முல்டர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் போட்டி என்ற சாயலே தெரியாத வகையில் முதல் பந்தில் இருந்தே அபாரமாக ஆடினார். எந்தவொரு பதற்றமும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் ஒரு பந்து கூட வீணடிக்காமல் ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் சிறப்பாக இருந்தது. அவருடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது, அரைசதம் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா, சாய் சுதர்சனுடம் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணி வெற்றிக்கோட்டை எளிதாக எட்டச் செய்தனர். முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் அர்ஷ்தீப் சிங் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணியின் அஸ்திவாரத்தையே அசைத்த அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். https://www.bbc.com/tamil/articles/cg3vjpl9zwgo
  2. ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ?!😂 ஐ மீன் மீம் கிரியேட்டர சொன்னேன்!🤣
  3. காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டுபெண்கள் பலி Published By: RAJEEBAN 17 DEC, 2023 | 11:58 AM காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும் Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது. தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர், காயமடைந்த ஒருவரை தூக்கி சென்றவர் கொல்லப்பட்டார் என Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது. 54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது, இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171876
  4. சொந்தக் கதை நன்றாக இருந்தது அக்கா.
  5. காஸா: வெள்ளைத் துணி ஏந்திய பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது ஏன்? பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 16 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது. கொல்லப்பட்ட மூன்று பணயக் கைதிகளை தங்களது கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இது ராணுவ விதிமீறல் என்பதால், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது. கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o
  6. இஸ்ரேலிய பணயக் கைதிகளையே தவறுதலாக கொன்ற ராணுவம் - கொந்தளிக்கும் மக்கள் பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது. கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது. தெருவில் இறங்கிய மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தின் தவறான தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, அந்நகரில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் அரசு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் சுவரொட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுவரொட்டிகளில் “அவர்களை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” மற்றும் “இப்போது பணயக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள்,” என்று எழுதப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் இஸ்ரேலை அடைந்துள்ளன. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது உயிரிழந்த யோதம் கயீம் என்பவரை அக்டோபர் 7ஆம் தேதி, கிப்புட்ஸ் கஃப்ர் அஸாவில் இருந்து ஹமாஸ் குழுவினர் கடத்திச் சென்றனர். யோதம் ஒரு இசைக்கலைஞர் என்பதுடன், அவர் விலங்குகளை நேசிப்பவராகவும் இருந்தார். அவருக்கு இத்தாலிய உணவுதான் மிகவும் பிடித்த உணவு என்றும் தெரியவந்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய நாளில், யோதம் கயீம் தனது குடும்பத்தினரை அழைத்து, தங்களது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகக் கூறினார். இதற்கிடையில், யோதம் கயீம் காற்றோட்டமாக இருப்பதற்காகத் தனது வீட்டின் ஜன்னலை திறந்தபோது, ஹமாஸ் குழுவினர் அவரைக் கடத்திச் சென்றனர். மகன் இறப்பதற்கு முன் பிபிசி செய்தியிடம் பேசிய அவரது தாயார், தாக்குதல் நடந்த அன்று அவர் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவருடன் பேசியதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இறந்த இரண்டாவது நபர், 26 வயதான அலோன் ஷம்ரிஸ், அக்டோபர் 7ஆம் தேதி காஃப்ர் அஸபவில் இருந்தார். இதுதவிர, 22 வயதான சமீர் தலால்கா, கிப்புட்ஸ் நிர் அம் என்ற இடத்தில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஆர்வலரான சமீர், கிராமப்புறங்களுக்குச் செல்வதையும் தனது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையும் அதிகம் விரும்புவராக இருந்திருக்கிறார். அவர் ஹுரா நகரில் வசித்து வந்த நிலையில் கிப்புட்ஸில் ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் 7ஆம் தேதி காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கிறார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, சமீர் தலால்கா தனது சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு துப்பாக்கி தோட்டாவால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். தாக்குதல் நடந்த அன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் தனது மகனுடனான தொடர்பை இழந்ததாக அவரது தந்தை உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். சமீர் தலால்கா காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட படம் டெலிகிராமில் பகிரப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்ன சொன்னார்? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த மரணங்களை 'தாங்க முடியாத சோகம்' என்று வர்ணித்துள்ளார். "இந்தக் கடினமான வேளையில்கூட, நமது காயங்களைக் குணப்படுத்துவோம், பாடங்களைக் கற்றுக்கொள்வோம். மேலும் எங்கள் நாட்டுப் பணயக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா என்ன சொன்னது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேலிய ராணுவத்தின் இந்தக் கொலைகள் ஒரு பெரிய தவறு என்றும், இந்த நடவடிக்கை எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் அமெரிக்காவிடம் இல்லை என்றும் கூறினார். சமீபத்தில், காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் மீது அமெரிக்கா மிகக் கண்டிப்புடன் இருந்தது. காஸாவில் நடந்து வரும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருவதாக டிசம்பர் 13ஆம் தேதியே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். 2024ஆம் ஆண்டிற்கான நிதி திரட்டுவது தொடர்பான நிகழ்வில் பைடன் பேசுகையில், ”இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவை சார்ந்து இருக்கலாம், ஆனால் தற்போது அது அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளைச் சார்ந்துள்ளது. ஆனால் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களின் காரணமாக இஸ்ரேல் அந்த ஆதரவை இழக்கும் நிலை உள்ளது,” என்றார். இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் தொடர்பாக பைடனுக்கு அமெரிக்காவில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்தும் இந்த அழுத்தம் வெளிப்படுகிறது. பைடனின் அறிக்கை அமெரிக்க நிர்வாகத்தின் அறிக்கைகளைப் போன்றது. இதில் இஸ்ரேல் போரின்போது மனித உயிர்களைக் காப்பாற்றுவது பற்றியும் பேசப்பட்டிருந்தது. மூத்த அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலின் ராணுவ நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்னதாக, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இது தவிர, 23 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன. ராணுவ நடமுறைகள் குறித்து எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காஸாவில் ஹமாஸ் குழுவினர் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 18,800 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர் என்பதுடன் ஹமாஸ் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. ஹமாஸின் ஆக்கிரமிப்பில் இருந்து பணயக் கைதிகளை விடுவிக்க பயன்படுத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். ஹமாஸால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்களில் ஹான் அவிக்டோரியும் ஒருவர். "பணயக் கைதிகளை ராணுவத்தின் மூலம் மீட்க முடியும் என்று மக்கள் கூறுவதை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அவர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வர எந்த ராணுவ நடைமுறையும் பின்பற்றப்படவில்லை," என்று அவர் கூறினார். அவர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் எழுதியபோது, இஸ்ரேல் தனது மக்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o
  7. இந்தியாவையும் பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்த பங்களாதேஷ், ஐ.அ.இ Published By: DIGITAL DESK 3 16 DEC, 2023 | 10:26 AM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானங்களில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் முற்றிலும் எதிர்பாராத விதமாக முறையே வெற்றிகொண்ட பங்களாதேஷும் ஐக்கிய அரபு இராச்சியமும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்த அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு அணிகளும் பங்களாதேஷிடமும் ஐக்கிய இராச்சியத்திடமும் தோல்வி அடைந்து வெளியேறின. இந்தியாவுக்கு எதிராக ஐசிசி பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய பங்களாதேஷ் 4 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. மாறூப் ம்ரிதா, ஷெய்க் பாவெஸ் ஜிபொன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் அரிபுல் இஸ்லாம், அஹ்ரார் அமின் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களும் பங்களாதேஷை இறுதிப் போட்டிக்குள் இட்டுச் சென்றன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 16ஆவது ஓவரில் இந்தியாவின் 6ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், முஷீர் கான் (50), முருகன் அபிஷேக் (62) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர். அபிஷேக் 74 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசினார். பந்துவீச்சில் மாறூவ் ம்ரிதா 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரொஹானத் தௌல்லா போசன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியீட்டியது. அரிபுல் இஸ்லாம், அஹ்ரார் அமின் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்ளைப் பகிர்ந்து பங்களாதேஷை வெற்றி அடையச் செய்தனர். அரிபுல் இஸ்லாம் 90 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 94 ஓட்டங்களைக் குவித்ததுடன் அஹ்ரார் அமின் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 101 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நாமல் திவாரி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜம் லிம்பானி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மாறுவ் ம்ரிதா. பாகிஸ்தானை சரித்தது ஐக்கிய அரபு இராச்சியம் ஐசிசி பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை அதிரவைத்த ஐக்கிய அரபு இராச்சியம் 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ஆரியன் ஷர்மா 46 ஓட்டங்களையும் இதான் டி சோஸா 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஆயன் அப்ஸால் கான் 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதான் டி சோஸா, ஆயன் அப்ஸால் கான் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 54 ஓட்ட இணைப்பாட்டம் அணியை ஓரளவு பலமான நிலையை அடைய உதவியது. பந்துவீச்சில் உபெய்த் ஷா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலி அஷ்பண்ட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அஸான் அவாய்ஸ் (41), அணித் தலைவர் சாத் பெய்க் (50) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால் மத்திய மற்றும் பின்வரிசையில் அமிர் ஹசன் (27) தவிர்ந்த ஏனையவர்கள் துடுப்பாடத்தில் பிரகாசிக்கத் தவறியமை பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் ஆய்மான் அஹமத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பய் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர். மூன்று துடுப்பாட்ட வீரர்கள் ரன் அவுட் ஆக்கப்பட்டனர். ஆட்டநாயகன்: ஆயன் அப்ஸால் கான் https://www.virakesari.lk/article/171805
  8. இஸ்ரேல் தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளர் படுகாயம்: அம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதால் 5 மணிநேரத்தின் பின் ஊடகவியலாளர் உயிரிழப்பு Published By: RAJEEBAN 16 DEC, 2023 | 01:48 PM காசாவில் இடம்பெயர்ந்த மக்களிற்கான பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் புகைப்படப்பிடிப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். காசாவிற்கான அல்ஜசீராவின் தலைவர் காயமடைந்துள்ளார். கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ் புகைப்படப்பிடிப்பாளர் சாமர் அபு டோக்காவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. சாமெர் காயங்களிற்குள்ளான பின்னர் ஐந்து மணித்தியாலங்கள் குருதி பெருக்கிற்குள்ளாகி உயிரிழந்தார் என தெரிவித்துள்ள அல்ஜசீரா இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்களையும் மருத்துவ பணியாளர்களையும் தடுத்து நிறுத்தினர் எனவும் குற்றம்சாட்டியுள்ளது. காயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் இஸ்ரேலின் தாக்குதலில் தனது குடும்பம் முழுவதையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171827
  9. எனக்கும் மெதுவாகத் தான் வேலை செய்கிறது. செய்தி இணைக்க முன் தேடலில் இணைத்து தேடும்போது சிறிது நேரம் சுற்றிக்கொண்டிருந்துவிட்டே தேடல் முடிவு வருகிறது. பிறந்தநாட்காட்டி மீட்டால் நன்றாக இருக்கும். மோகண்ணைக்கு பணிச்சுமையோ தெரியவில்லை.
  10. பன்னூன் கொலை சதி: இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வம்சாவளி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெய்பால் 16 டிசம்பர் 2023, 09:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா பற்றி அமெரிக்க அரசாங்கம் ஐந்து இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது. இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக கொலை செய்யப்படவிருந்த பிரிவினைவாத தலைவர் பற்றிய தகவலை அமெரிக்க அரசு தரப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, வழக்கறிஞர் மற்றும் சீக்கிய பிரிவினைவாத தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொலை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பன்னூனைக் கொலை செய்ய பணம் கொடுத்ததாக நிகில் குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் அமி பெரா, பிரமிளா ஜெய்பால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டு குறித்து பைடன் நிர்வாகம் நடத்திய ரகசிய விசாரணைக்குப் பிறகு எம்.பி.க்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதில், '‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் மிகப்பெரிய முன்னுரிமை அளிக்கிறோம். நிகில் குப்தா மீதான அமெரிக்க அரசின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் கவலையளிக்கின்றன,’' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 'பன்னூன் கொலைச் சதி குறித்து விசாரிக்க குழு அமைக்க இந்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதனுடன், இந்திய அரசு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்வதும் முக்கியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் பொறுப்பேற்க வைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,’' என்று தெரிவித்துள்ளனர். இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை ஐந்து எம்.பி.க்களின் அறிக்கையில், 'இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் வாழ்க்கையில் சாதகமான, நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன என்பதும், கவனிக்கப்படாவிட்டால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதே எங்கள் கவலையாக இருக்கிறது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பைடன் நிர்வாகம் தங்களுக்கு வெளிப்படையாக பல தகவல்களை அளித்துள்ளதற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். 52 வயதான நிகில் குப்தா பணம் கொடுத்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குப்தாவுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய ஒரு கொலையாளிக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் தருவதாக குப்தா உறுதியளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பன்னூன் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 30 அன்று செக். குடியரசு நாட்டில் குப்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில், காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’, இந்திய-அமெரிக்க எம்.பி.-க்களுக்கு பைடன் நிர்வாகம் வழங்கிய விளக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பன்னூன் இது குறித்துக் கூறுகையில், ‘'அமெரிக்க எம்.பி.-க்கள் அமெரிக்க குடிமக்களின் உயிர்களையும், அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் அவர்களின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்க தயாராக உள்ளனர் என்பதற்கு இது உறுதியளிக்கும் நடவடிக்கையாகும். உண்மையில் இதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படை,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிகில் குப்தா இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா மனு இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கில் வாதிட்டு வரும் வழக்கறிஞர் ரோகினி மூசா கூறுகையில், ஜனவரி 4-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார். நிகில் குப்தா, தான் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய ரோகினி மூசா, "அவருக்கு எதிராக நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு நகல் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர் நாடு கடத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெறவோ அல்லது அவர்களைப் பற்றி எதுவும் அறியவோ முடியாத நிலைதான் உள்ளது," என்றார். நிகில் குப்தாவின் குடும்பத்தினரால் அவருக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முடியவில்லை என்றும் மூசா கூறுகிறார். குப்தாவின் குடும்பத்தினர், அவர் எந்தவிதமான கைது வாரண்டும் இன்றி 'அமெரிக்காவின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொண்ட அமெரிக்க ஏஜெண்டுகளால்' கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அமெரிக்காவின் சார்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு இதுவரை நியாயமான சட்ட நடவடிக்கைகள் அல்லது உதவிகள் எதுவும் அளிக்கப்படாமல் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, நிகில் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் அவர் தனது மத நம்பிக்கைகளுக்கு முரணாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம், நியூயார்க் நகரில் ஒரு அமெரிக்க குடிமகனை கொலை செய்ய சதி செய்ததாக அமெரிக்க நீதிமன்றம் அவர் மீது குற்றம் சாட்டியது. தான் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், யாரையும் அறியாத, யாருக்கும் தெரியாத அமெரிக்க குடிமகனைக் கொலை செய்வதற்கு இந்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. குப்தாவின் விடுதலைக்காக இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு நியாயமான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட உதவிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குப்தாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனுடன், அமெரிக்கா மற்றும் செக். குடியரசில் தனக்காக வாதாட ஒரு இந்திய வழக்கறிஞரையும் குப்தா கோரியுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விசாரிக்க இந்தியா சார்பில் சிறப்புக் குழு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த குற்றப்பத்திரிகையில் எந்த இந்திய அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார். அப்போது பேசிய பாக்சி, "அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பயங்கரவாதிகள், ஆயுத வியாபாரிகள் மற்றும் பிறரின் தொடர்பு குறித்து அமெரிக்க தரப்பு சில உள்ளீடுகளை பகிர்ந்து கொண்டதாக நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை இந்தியா அமைத்துள்ளது," என்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது இங்கே கவனிக்கத்தக்கது. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, பன்னூனைக் கொலை செய்ய ரூ.80 லட்சம் பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. யார் இந்த குர்பத்வந்த் பன்னூன்? அமெரிக்காவைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவர் 'ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்' அமைப்பின் நிறுவனர் மற்றும் வழக்கறிஞர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்றவும், காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கவும், பஞ்சாபியர்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கவும் இந்த அமைப்பை பன்னூன் நிறுவி, தமது கோரிக்கைகளுக்கான ‘பொது வாக்கெடுப்பு-2020’ பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதன் கீழ், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் சீக்கியர்கள் ஆன்லைனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பே, இந்த அமைப்பு மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவான 40 இணையதளங்களை இந்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பு தன்னை ஒரு மனித உரிமை அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது, ஆனால் இந்தியா அதை 'பயங்கரவாத' அமைப்பாக அறிவித்துள்ளது. பன்னூனிடமிருந்து வந்த மிரட்டல் வீடியோக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புக்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, பன்னூன் கடந்த 2020 ஜூலையில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். பிபிசி ஆசிய நெட்வொர்க்குடன் பேசிய குர்பத்வந்த் சிங் பன்னூன், "காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நடத்துவது மரணத்தை விளைவிக்கும் என்றால், அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cw50ly2kwxzo
  11. மும்பை இந்தியன்ஸ்: ரோகித் மீதான பாசத்தால் ஹர்திக் கேப்டன்சியை எதிர்க்கும் ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் மே 30, 2023. நள்ளிரவைத் தாண்டி நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டியில் மோஹித் ஷர்மாவின் அந்தக் கடைசி பந்தை, ஷார்ட் ஃபைன் லெக்கில் நாசூக்காக தட்டிவிட்டு ஜடேஜா அந்த பௌண்டரியை அடிப்பதற்கு முந்தைய நொடி வரை, ஐபிஎல்-இல் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இருந்தது மும்பை இந்தியன்ஸ்தான். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கிய 2008ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்து சீசன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை என்பது கனவாகத்தான் இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டுதான் முதல்முறையாக கோப்பையை வென்றது. அந்த சீசனில் தான் ரோகித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்றார். சச்சினுக்கு ஐபிஎல் கோப்பைக் கனவு கானல் நீராகிவிடுமோ என்ற சூழல் இருந்தபோது, அவரது கடைசி சீசனில் கோப்பையோடு வழியனுப்பி வைத்தார் ரோகித் ஷர்மா. அங்கே தொடங்கிய ரோஹித்தின் வெற்றிப் பயணம், இதோ இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் ரோகித் ஷர்மா. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் ரோகித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்ட்யாவுக்கு சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 11 சீசன்களில் தொடர்ச்சியாக கேப்டன் பொறுப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ரோகித் ஷர்மா தற்போது ஐபிஎல்-இல் தனது கேப்டன் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளாக சறுக்கலில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த 11 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு முறை பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றது. அதிலும் குறிப்பாக 2013 முதல் 2020 வரையிலான சீசன்களில் மட்டும் ஐந்து முறை கோப்பையை வென்று அசத்தியது. இந்தக் காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்-இல் அபார வலிமைமிக்க அணியாக விளங்கியது. எனினும் கடந்த மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லவில்லை. குறிப்பாக 2021, 2022 சீசன்களில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. ரோகித் ஷர்மா தலைமையில் 158 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 67 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும் ரோகித் தலைமையில் இறுதிப்போட்டிக்குச் சென்ற போதெல்லாம் ஒருமுறைகூட கோப்பையைத் தவறவிடவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்ட்யாவை ஏலத்தில் வாங்கியது. அங்கிருந்துதான் ஹர்திக் பாண்ட்யா என்ற பெயரே வெளியே தெரியத் துவங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை பாண்ட்யா பெற்றார். எனினும், ஹர்திக் பாண்ட்யவை 2022 மெகா சீசனுக்கான ஏலத்தையொட்டி அணியில் இருந்து விடுவித்தது மும்பை இந்தியன்ஸ். இதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் சுமார் 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 2022 சீசனில் கோப்பையை வென்றது குஜராத். 2023 சீசனில் இறுதிப் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஹர்திக் பாண்ட்யாவின் பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில்தான் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவதாக ஐபிஎல் நிர்வாகம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரது வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது,” எனத் தெரிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அந்த அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவர் மகிளா ஜெயவர்தனே, சச்சின் முதல் ஹர்பஜன் வரை, ரிக்கி பாண்டிங் முதல் ரோஹித் வரை சிறந்த தலைமைகளால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். "இவர்கள் உடனடி வெற்றிக்குப் பங்களிக்கும் அதே வேளையில் எதிர்காலத்திற்கான அணியை வலுப்படுத்துவதில் எப்போதும் கவனமாக இருந்தனர். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்," என்றார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டிய அவர், "ரோஹித் ஷர்மாவின் சிறந்த தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2013ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது பதவிக்காலம் அசாதாரணமானது அல்ல. அவரது தலைமை அணிக்கு இணையற்ற வெற்றியைத் தந்தது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது," என்றார். மேலும், ரோஹித் அளித்த வழிகாட்டுதலின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக மாறியது. மும்பை இந்தியன்ஸ் அணியை மேலும் வலுபடுத்த களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரது அனுபவத்தையும் வழிகாட்டுதல்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக விளங்கி வந்தது இந்தியா. அதிரடி பேட்டிங், அபார கேப்டன்சி என ரோகித் ஷர்மா நாயகனாக ஜொலித்தார். இறுதிப்போட்டியில் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. எனினும் ஆஸ்திரேலியா எந்தவித சிரமுமின்றி எளிதாக இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. சமீபத்தில் தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித் ஷர்மா, "உலகக்கோப்பை தோல்வியில் இருந்து எப்படி வெளியே வருவது என முதல் சில நாட்கள் எனக்குத் தெரியவில்லை. எனது குடும்பத்தினர், நண்பர்கள்தான் மிகவும் உதவினர். இது எளிதாக ஜீரணயிக்கக்கூடியது அல்ல. உண்மையில் இதைக் கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இல்லை," என்றார். பட மூலாதாரம்,TANISH SINGH/X மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்ஸ்டாகிராமில் குறையும் 'ஃபாலோவர்ஸ்' பட மூலாதாரம்,SURYAKUMAR YADHAV/INSTAGRAM மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராேகித் ஷர்மா மாற்றப்பட்டதன் அதிருப்தியின் வெளிப்பாடாக, அணியின் அனைத்து சமூக ஊடக பக்கங்களிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதில் குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கிடையே, சூர்யா குமார் யாதவ், தனது சமூக ஊடக பக்கங்களில், ஹார்ட் ப்ரேக்கிங் எமோஜியை பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கான காரணத்தைப் பதிவிடவில்லை. இதற்கும் அணியின் கேப்டன் மாற்றப்பட்டதே காரணம் என சமூக ஊடகத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதேபோல, கேப்டனை மாற்றியதால் அதிருப்தியில் உள்ள ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை தீயிட்டுக் கொளுத்தி, அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c4nyxv4km4lo
  12. இஸ்ரேலிய படையினரின் தவறுதலான தாக்குதல் - மூன்று பணயக்கைதிகள் பலி Published By: RAJEEBAN 16 DEC, 2023 | 09:52 AM காசாவில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது ஹமாசிடம் பணயக் கைதிகளாகயிருந்த மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. யொட்டாம் ஹைம், சமெர் தலக்கா, அலோன் சர்மிஸ் என்ற மூன்று பணயக்கைதிகளையே தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையையும் மனவேதனையையும் வெளியிட்டுள்ள இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட மூவரின் உடல்களையும் இஸ்ரேலிற்கு கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/171802
  13. நிழலி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
  14. வாழ்க்கையே நாடக மேடை! அதில் இதுவும் ஒரு நடிப்பென விட்டுத் தள்ளுங்கய்யா!! என்னண்ணை செய்தியை இணைச்சதுக்கு படம் எடுக்கிறன் என்று கொழுத்திப் போடுறியள்!
  15. கட்டுரை தகவல் எழுதியவர், எம்மா லூயிஸ் பாயிண்டன், லூசி காலிஃபோர்ட், க்ரிஷாம் பதவி, பிபிசி ரீல்ஸ் குழு 14 டிசம்பர் 2023 "நெறிமுறைகள் என்று எதைச் சொல்கிறீர்கள்? நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நெறிமுறைகளுடன் தான் இயங்குகின்றனவா? ஒரு தேவாலய அமைப்பு நெறிமுறையுடன் இயங்குகிறதா? ஃபேஷன் துறை, உணவுத் துறை நெறிமுறைகளுடன் தான் இயங்குகிறதா? ஆபாசப் படங்களையும் நெறிமுறை சார்ந்து உருவாக்க முடியும், ஆனால் அதை யார், எப்படி உருவாக்குகிறார்கள் என்பது முக்கியம்" என்கிறார் ஆபாசப் பட இயக்குநர் எரிகா லஸ்ட். போர்னோகிராஃபி என்பதை உண்மையில் நெறிமுறைகளுடன் அணுக முடியுமா என்ற பிபிசி செய்தியாளர் எம்மா பாயிண்டனின் கேள்விக்கு எரிகா அளித்த பதில்தான் இது. போர்னோகிராஃபி என்றால் புத்தகங்கள், படங்கள், சிலைகள், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்களில் பாலியல் நடத்தையை பிரதிநிதித்துவப்படுத்துவது என்று அர்த்தம். இதில் முக்கியமாக ஆபாசப் படங்கள் என்பது ஒழுக்க நெறிகளுக்கு எதிரானதாகவும், சட்ட விரோதமாகவும் பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். போர்னோகிராஃபி தொழில்துறையில் ஆபாசப் படங்களின் பங்கு அதிகமாக உள்ளது. இந்தத் துறையில் உள்ள சிக்கல்கள், அதில் பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் பங்கு, ஆபாசப் படங்களை எப்படி படமாக்க வேண்டும், அதைப் பார்ப்பதற்கான வயது வரம்பை நிர்ணயித்தல் போன்றவை குறித்து பிபிசி செய்தியாளர் எம்மா பாயிண்டனுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் எரிகா லஸ்ட். கிட்டத்தட்ட 88 சதவீத ஆபாசப் படங்களில் உடல்ரீதியிலான துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், 49 சதவீத ஆபாசப் படங்களில் மோசமான வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதாகவும் போர்ன் ஹப் என்னும் இணையதளம் சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது. மேலும் இதைப் பார்ப்பவர்கள் 70 சதவீதம் ஆண்கள் என்றும், 34 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இந்த மாதிரியான உடல்ரீதியிலான துன்புறுத்தல்கள் நிறைந்த ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் மோசமான விளைவுகள் உண்டாகலாம். எனவே ஆபாசப் படங்களை நெறிமுறைகள் சார்ந்து உருவாக்க முடியும் என்றும் அது மிகவும் அவசியமானதும்கூட என்றும் கூறுகிறார் இயக்குநர் எரிகா லஸ்ட். ஆபாசப் படத்தில் எதைக் காட்டுகிறோம் என்பது முக்கியம் படக்குறிப்பு, செய்தியாளர் எம்மா பாயிண்டனுடன் இயக்குநர் எரிகா லஸ்ட் (இடதுபுறம் இருப்பவர்) "ஒரு பாலியல் உணர்வைத் தூண்டும் படத்தை எடுக்கும்போது, அதில் என்ன காட்டுகிறோம் என்பதைச் சார்ந்துதான் இந்த நெறிமுறைகளை வகைப்படுத்த முடியும். அதாவது படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் சூழல், அதன் தரம், நடிகர்கள் நடத்தப்படும் விதம், அவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாமல் எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கம், இதைப் பொறுத்துதான் அமையும்," என்கிறார் எரிகா லஸ்ட். மேலும் "தன்னுடைய படங்களை சிலர் ஆபாசப் படங்கள் என்று அழைப்பதை எரிகா ஏற்றுக்கொள்கிறார். "அதில் ஆபாசம் இருக்கிறதுதான், ஆனால் இணைய தளங்களில் கொட்டிக் கிடக்கும் வன்முறை நிறைந்த ஆபாசம் அல்ல. நான் எனது திரைப்படங்களை பாலியல் உணர்வைத் தூண்டும் திரைப்படங்கள் என்று சொல்வேன். காரணம் அதை நான் கலையம்சத்துடன்தான் உருவாக்குகிறேன்," என்கிறார் அவர். உங்கள் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு, "முதலில் நான் அவர்களைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்வேன். அவர்கள் எதற்காக என் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார்கள் என்பதில் தெளிவாக உள்ளார்களா என்பதை உறுதி செய்வேன்," என்கிறார் எரிகா. நடிப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, அவர்கள் யாருடன் நடிக்க விரும்புகிறார்கள் என்பது முக்கியம். மேலும் இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் நெருக்கமான காட்சிகளைப் படம்பிடிக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர், மேலாளர்கள் உள்ளனர். நடிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இவர்களது பங்கும் முக்கியமானது என்கிறார் எரிகா. பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆபாசப் படங்கள் "ஒவ்வொரு காட்சியையும் எடுப்பதற்கு முன்பாக அதை எவ்வாறு எடுக்கப் போகிறேன் என்பதையும் என் நடிகர்களுக்கு நான் விளக்கி விடுவேன். என்னுடைய படங்களை ஆண்களின் பார்வையில் இருந்து எடுப்பதைவிட பெண்களின் உணர்வுகளை காட்சிப்படுத்துவதையே நான் விரும்புகிறேன். பல ஆண்டுகளாக இந்த போர்ன் தொழில்துறை முழுவதுமே ஆண்களின் பாலியல் விருப்பங்களை முன்னிலைப்படுத்தியே செயல்படுகிறது," என்கிறார் எரிகா லஸ்ட். நீங்கள் எடுக்கும் பெண்கள் உணர்வுகளைப் பேசும் ஆபாசப் படங்களில் ஒரு பார்வையாளராக நான் என்ன எதிர்பார்க்கலாம் என்று செய்தியாளர் எம்மா பாயிண்ட கேள்வியெழுப்பியபோது, "இதில் பெண்கள் முதன்மை கதாபாத்திரங்களில் தோன்றுவார்கள். இவை வெறும் வழக்கமான ஆபாசப் படங்கள் அல்ல. அவர்களுக்கு என ஒரு இலக்கு இருக்கும், வாழ்க்கைத் தொழில் இருக்கும், பெண்கள்தான் இந்தக் கதைகளை நகர்த்திச் செல்வார்கள். தங்களது பாலியல் உணர்வுகளைப் பற்றி அவர்கள் மேலும் அறிந்துகொள்வார்கள்" தொடர்ந்து பேசிய எரிகா, "வெறும் ஆண்களுக்கான பாலியல் பொம்மைகள் அல்லது பொருள்களைப் போல அல்லாமல் பெண்கள் உண்மையில் பாலியல் இன்பங்களை அனுபவிப்பார்கள். இதன் மூலம் ஆபாசப் படங்களை பாலியல் கல்வியின் ஓர் அங்கமாகவும், கலைநயம் மிக்கவையாகவும் பார்க்க முடியும். அது பெண்களுக்கான ஓர் உணர்வுபூர்வமான விடுதலையாகவும் அவர்களை மேலும் உறுதியானவர்களாக மாற்றும் வகையிலும் இருக்கும்," என்று கூறுகிறார். "நாம் செய்ய வேண்டியதெல்லாம் இணைய தளத்தில் உள்ள மோசமான படங்களைத் தவிர்த்து இத்தகைய கலைநயமிக்க பாலியல் சார் திரைப்படங்களை உருவாக்குவதே. அதற்கு எனக்கு பெண்கள் மட்டுமில்லாமல், திருநங்கைகள், மாற்றுப் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பு பெண்கள், ஆண்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் என எல்லோரும் தேவை," என்கிறார் எரிகா லஸ்ட். "இவர்கள் அனைவரும் முன்வந்து பொதுவாகக் காணக் கிடைக்கும் வன்முறை நிறைந்த ஆபாசப் படங்களின் பிரச்னை குறித்தும், அவை ஏன் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் பற்றியும் பேச வேண்டும்." பாலியல் பற்றிய புரிதல் அதிகமாகும் படக்குறிப்பு, படப்பிடிப்பு தளத்தில் காட்சியை விளக்கும் எரிகா "பாலியல் பற்றி அவை உருவாக்கும் மோசமான கருத்துகள், நெறிமுறை சார்ந்த சிக்கல்கள், அவை எப்படி சமூகத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதையும் பேச வேண்டும். அந்த நிலையை மாற்ற விரும்பினால் சரியான பாலியல் உணர்வைத் தூண்டும் படங்களைத் தேர்வு செய்யும் பார்வையாளராக மாற வேண்டும். நாம் பாலியல் என்ற பெயரில் எதை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தெளிவு ஏற்பட வேண்டும்," எனக் கூறும் எரிகா, ஆபாசப் படங்களை கலைநயத்தோடு எடுக்கும்போது அவை மக்களால் வெகுஜன திரைப்படங்களுக்கு நிகராக மதிக்கப்படும் என்று நம்புகிறார். "நெறிமுறை சார்ந்து ஆபாசப் படங்களை உருவாக்கினால், இதன் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களது நேர்காணல்களை பார்ப்பார்கள். இந்த ஆபாசப் படம் உள்ளுணர்வுகளுடன் பொருந்துகிறதா எனச் சிந்திப்பார்கள். ஒரு உணவுத் தொழில்துறையில் உணவு ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என யோசிப்பது போல, இந்த ஆபாசப் படமும் நெறிமுறை சார்ந்து உருவாக்கப்படுகிறதா எனச் சிந்திப்பார்கள்," என்று கூறுகிறார் எரிகா. "சிலருக்கு இப்படித்தான் இவ்வளவு காலமாக ஆபாசப் படங்களில் பெண்களை நடத்தினார்களா என்பது புரியும். அப்படிப்பட்ட படங்களை இனி பார்க்க மாட்டேன் என்று நினைப்பார்கள். இந்த மாற்றத்தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்," என்கிறார் எரிகா லஸ்ட். ஆபாசப் படம் எல்லோருக்குமானது இல்லையா? ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு வயது வரம்பு மிகவும் முக்கியம் எனக் கருதும் எரிகா, அதற்கு ஒரு கட்டணம் செலுத்தும் முறையை உருவாக்கி, 18 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது சொந்த கடன் அட்டை மூலமாகப் பணம் செலுத்தி மட்டுமே அதைப் பார்க்க முடியும் என்ற கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார். போர்ன் தொழில்துறையின் எதிர்காலம் குறித்து மிகவும் உற்சாகத்தோடு பேசும் எரிகா, இப்போது அதிகமான படைப்பாளிகள் தைரியமாக இதில் நுழைவதை தாம் வரவேற்பதாகக் கூறுகிறார். "சமூகத்தில் போர்ன் தொழில்துறை குறித்து மோசமான ஒரு பெயர் இருந்தாலும், அது மெதுவாக மாறி வருகிறது. காரணம் எங்களின் இந்த முயற்சிதான். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, இங்குள்ள பெண்களின் சக்தி, இங்குள்ள நல்ல மனிதர்கள் இவைதான் காரணம். இதன் மூலம் ஒரு சிறிய மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது," எனக் கூறுகிறார் எரிகா லஸ்ட். https://www.bbc.com/tamil/articles/c0wy900017xo
  16. பசி, தாகம், அவமானம்; காசாவில் பாலஸ்தீனியர்களை கைதுசெய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் அச்சம் Published By: RAJEEBAN 15 DEC, 2023 | 12:53 PM apnews இஸ்ரேலிய படையினர் காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை சுற்றிவளைத்து அவர்களை குடும்பத்தவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அரைநிர்வாணப்படுத்தி கடற்கரையோரத்தில் உள்ள தடுப்பு முகாமிற்கு எடுத்து சென்றனர் அங்கு அவர்களை கடும் குளிரில் கடும் தாகத்துடன் தடுத்துவைத்திருந்தனர் என மனித உரிமை அமைப்புகளும் உறவினர்களும் விடுதலையானவர்களும் தெரிவித்துள்ளனர். பெய்ட் லகியா ஜபாலியா அகதிமுகாம் மற்றும் காசாவின் புறநகர் பகுதிகளில் கைதுசெய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் கைகள் கட்டப்பட்டு கண்கள் மூடப்பட்ட நிலையில் டிரக்குகளில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். சிலர் தாங்கள் அடையாளம் தெரியாத முகாம்களிற்கு கொண்டு செல்லப்பட்டு நிர்வாணமாக கடும்குளிரில் கடும் தாகத்தின் மத்தியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். எங்களை கால்நடைகளை போல நடத்தினார்கள் கைகளில் இலக்கங்களை கூட எழுதினார்கள் என பெய்ட் லகியாவில் டிசம்பர் ஏழாம் திகதி கைதுசெய்யப்பட்ட 30 வயது கணிணி பொறியியலாளர் இப்ராஹிம் லுபாட் தெரிவித்துள்ளார். அவர்களின் வெறுப்பை எங்களால் உணரமுடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டு பத்து வாரங்களின் பின்னர்மக்கள் வெளியேற்றப்பட்ட காசாவின் வடபகுதியை தனது இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஹமாஸ் குறித்த புலனாய்வு தகவல்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் தந்திரோபாயங்களில் சுற்றிவளைப்புகள் முக்கியமானவையாக மாறியுள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தந்திரோபாயம் எங்களிற்கு ஏற்கனவே பயனளித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் யாக்கோவ் அமிர்டிரோர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் அவமதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு இஸ்ரேலிய இராணுவம் சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டவர்கள் நடத்தப்படுகின்றனர் போதியளவு உணவையும் குடிநீரையும் அவர்களிற்கு வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளது. காசாவின் ஹமாஸ் வலுவாக உள்ள இரண்டு பகுதிகளில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவபேச்சாளர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் வெடிகுண்டுகள் இல்லை என்பதை உறுதி செய்யவதற்காக அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது. அவர்களை விசாரணை செய்த பின்னர் மீண்டும் ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஹமாசுடன் தொடர்புள்ளவர்கள் என கருதப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல ஹமாஸ் உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்களை விடுதலை செய்து தென்பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும் இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார். கைகள் கட்டப்பட்ட நபர்கள் தலையை குனி;ந்தபடிவீதிகளில் முழங்காலில் அமர்ந்திருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளன இது குறித்து மேலதிக விபரங்களை கோரியுள்ளோம் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியுமில்லர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்களை பொறுத்தவரைஇது ஒரு மோசமான அவமானமாக காணப்படுகின்றது - சுற்றிவளைக்கப்பட்டவர்களில் 12 வயது சிறுவர்கள் முதல் 70வயது இளைஞர்கள் வரை காணப்படுகின்றனர்இ இவர்களில் பலர் யுத்தத்தி;ற்கு முன்னர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என கைதுசெய்யப்பட்ட 15 பேரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். தென்பகுதிக்கு தப்பிச்செல்வதற்கு என்னிடம் பணம் இருக்கவில்லை என்பதே நான் செய்த குற்றம் பெய்ட் லகியாவில் 45 வேலைவாய்ப்பற்றநீரிழிவு நோயாளி ஒருவர் தெரிவித்தார். டிசம்பர் 8 ம் திகதி அவரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் விடுதலை செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/171763
  17. டி20 தொடரில் 4வது சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சூர்யகுமார் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2023, 04:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவின் அற்புதமான சதம், பிறந்தநாளில் குல்தீப் யாதவ் எடுத்த 5 விக்கெட் ஆகியவை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்த இந்த கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களில் சுருண்டு, 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது. இதன் வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ராம் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா தென் ஆப்பிரிக்க அணி டி20 வரலாற்றில் சந்திக்கும் 3வது மிகப்பெரிய தோல்வியாகும். அதேநேரம், தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக அமைந்தது. தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியிடம் தோற்றது என்பதைவிட சூர்யகுமாரிடம் தோற்றது என்பது கூறுவது தான் சிறந்தது. ஏனென்றால், சூர்யகுமார் யாதவ் சேர்த்த 100 ரன்களைக் கூட தென் ஆப்பிரிக்க அணியால் அடிக்க முடியாமல் 95 ரன்களில் சுருண்டுவிட்டது. ரோஹித் சாதனையை சமன் செய்த ஸ்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20வரலாற்றில் 4-வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா, மேக்ஸ்வெல் சாதனையை சூர்யகுமார் சமன் செய்துள்ளார். மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா 100 இன்னிங்ஸ்களைக் கடந்து இந்த சாதனையைச் செய்த நிலையில் சூர்யகுமார் 60 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். தொடக்கத்தில் தனது பேட்டிங்கில் நிதானம் காட்டிய சூர்யகுமார் 32 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 50 ரன்களை 23 பந்துகளிலும் எட்டி இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் பெற்றார். வெற்றிக்குப்பின் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் “நான் நலமாக இருக்கிறேன், என்னால் நடக்க முடிகிறது, காயம் தீவிரமாக இல்லை. என்னுடைய சதம் வெற்றிக்கு காரணமாகியது என்பது பெருமையாக இருக்கிறது. அச்சமில்லாத கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறோம் என்பது மகிழ்ச்சி. குல்தீப்பின் 5 விக்கெட் அவரின் பிறந்தநாளுக்கு அவரே அளித்துக்கொண்ட பரிசு” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது இந்திய அணி குல்தீப்பின் ‘சுய பிறந்தநாள் பரிசு’ தனது 29-வது பிறந்தநாளில் விளையாடிய குல்தீப் யாதவ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென்ஆப்பிரி்க்க பேட்டர்களின் சரிவுக்கு காரணமாகினார். 2.5 ஓவர்கள் வீசிய குல்தீப் 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் குல்தீப் வீசிய கடைசி 6 பந்துகளில் மட்டும் ஒரு ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால் கடந்த ஆட்டத்தில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த ஜெய்ஸ்வால் தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி 41 பந்துகளில் 60ர ன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் சூர்யகுமார்(100),ஜெய்ஸ்வால்(60) ஆகியோர் மட்டுமே அதிகபட்ச ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டரும் எதிர்பார்த்தது போல் ரன் சேர்க்காமல் ஏமாற்றினர். ஜெய்ஸ்வால் தனது 14-வது டி20 இன்னிங்ஸில் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ஒவ்வொரு போட்டியிலும் ஜெய்ஸ்வால் சரியாக பயன்படுத்தி வருகிறார். இந்திய அணி இந்த ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்தநிலையில் அதில் 8 சிக்ஸர்கள் சூர்யகுமார் அடித்ததாகும், பவுண்டரி கணக்கில் 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டநிலையில் அதில் 7 பவுண்டரிகள் ஸ்கை அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பை வீணடித்த இளம் பேட்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திலக் வர்மா சுப்மான் கில் தனக்கு கிடைத்த 2வது வாய்ப்பையும் தவறவிட்டு 8 ரன்னில் கால்காப்பில் வாங்கி கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 2வது போட்டியிலும் சொதப்பி டக்அவுட்டில் வெளியேறினார், ஜிதேஷ் சர்மா, ஜடேஜா தலா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தத்தில் அணியைத் தூக்கி நிறுத்தியது சூர்யகுமார், ஜெய்ஸ்வால் பேட்டிங் மட்டும்தான். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை வலுவாக இருப்பதாக புறத் தோற்றத்தில் தெரிந்தாலும், சூர்யகுமார், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் தவிர கடந்த 2 போட்டிகளில் எந்த இளம் வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். சூழலுக்கு ஏற்றார்போல் தங்களின் பேட்டிங்கை மாற்றிக்கொள்ளாத கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஜடேஜா ஆகியோருடன் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்வது கடினம்தான் என்று விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். மேம்பட்ட பந்துவீச்சு அதேநேரம், கடந்த போட்டியோடு ஒப்பிடும்போது இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மேம்பட்டிருந்தது. கடந்த போட்டியில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு முதல் ஓவரிலேயே 3 ஸ்லிப்புகளை கேப்டன் சூர்யா நிறுத்தினார். இதனால் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 3 ஸ்லிப் பீல்டர்கள் நிறுத்தப்பட்டு தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் சிராஜ் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, பல பந்துகளை லெக் கட்டராகவும், அவுட் ஸ்விங்கிலும் வீசிய சிராஜ் பந்துவீச்சை, தொட முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் பீட்டன் ஆகினர். முகேஷ் குமார் பந்துவீச்சில் வேகம் இல்லாவிட்டாலும் இந்த ஆட்டத்தில் சரியான லைன்லென்த்தில் வீசி நெருக்கடிஅளித்தார். தொடக்கத்திலேயே மேத்யூ பிரிட்ஸ்கீ விக்கெட்டை வீழ்த்தி முகேஷ் நெருக்கடி கொடுத்தார். பவர்ப்ளே முடிவதற்கு தென் ஆப்பிரிக்காவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திநெருக்கடி அளித்த இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜடேஜாவின் கேப்டன் திறமை பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் களத்தில் இருந்த சிறிது நேரத்தில் பீல்டிங் செய்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டு டக்அவுட் சென்றுவிட்டார். அதன்பின் கேப்டன் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்திச் சென்றது ரவீந்திர ஜடேஜாதான். பவர்ப்ளே முடிந்து அடுத்த ஓவரை வீச வந்தவுடன் முதல் பந்திலேயே மார்க்ரம் விக்கெட்டை ஜடேஜா எடுத்தார். தென் ஆப்பிரிக்க தோல்விக்கு காரணங்கள் தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பெரிய ஷாட்களுக்கு ஆசைப் பட்டு பந்தை கணிக்காமல் பல பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். கிளாசன், மார்க்ரம், மில்லர் போன்ற அனுபவம் மிக்க பேட்டர்கள் பந்தை கணிக்காமல் ஆடி தங்களின் விக்கெட்டை தேவையின்றி பறிகொடுத்தனர். 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த, 53ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. ஜோகன்ஸ்பர்க் ஆடுகளம் வழக்கத்துக்கு மாறாக, தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது போதுமான அளவு ஒத்துழைக்கவில்லை, ஆனால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது பந்துகள் நன்றாக டர்ன் ஆனது. அதிரடித் தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி ஜெய்ஸ்வால் அருமையான தொடக்கத்தை அளித்து ரன்களை வெளுத்து வாங்கினார். இதைப் பார்த்த கேப்டன் மார்க்ரம், 3வது ஓவரிலேயே கேசவ் மகராஜை பந்துவீச அழைத்தார். அதற்கு ஏற்றார்போல், மகராஜ் பந்துவீச வந்தஉடன் சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். சுப்மான் கில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டபோது கால்காப்பில் வாங்கினார், டி ரீப்ளேயில் பந்து லெக்சைடு சென்றது தெரிந்தாலும் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டது. அடுத்து வந்த திலக் வர்மா வந்தவேகத்தில் விக்கெட்டை இழந்தார். விளாசல் கூட்டணி சூர்யகுமார், ஜெய்ஸ்வால் கூட்டணி தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சை பதம் பார்த்து, வெளுத்து வாங்கியது. பவர்ப்ளே முடியும் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 62 ரன்கள் சேர்த்தது. ஸ்கை, ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால், 11.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. விளாசலில் இறங்கிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளிலும், சூர்யகுமார் 32 பந்துகளிலும் அரைசதத்தை நிறைவு செய்தனர். 3-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தநிலையில் ஜெய்ஸ்வால் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரிங்கு சிங் (14) ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்க இந்திய அணியின் நம்பிக்கை தளர்ந்து. சூர்யகுமாரும் 55 பந்துகளில் சதம் அடித்து வெளியேற இந்திய அணி விக்கெட் சரிவு தொடங்கியது. 188 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அடுத்த 13 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பந்துவீச்சில் நெருக்கடி பட மூலாதாரம்,GETTY IMAGES 202 ரன்கள் எனும் இமாலய இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியோடு தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆனால், ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸ்கீ ஆகியோருக்கு ஏற்றார்போல் வியூகங்களை அமைத்து, 3 ஸ்லிப் வைத்து இந்தியா பந்துவீசியது. சிராஜ் வீசிய முதல்ஓவரிலேயே தென் ஆப்பிரி்க்க பேட்டர்கள் திணறியது தெரிந்தது, பல பந்துகளை பிரிட்ஸீ, ஹென்ட்ரிக்ஸ் பீட்டன் செய்தனர். ஆனால் முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரிலேயே இன்சைட் எட்ஜ் மூலம் பிரிட்ஸ்கி 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். மூத்த வீரர்கள் பொறுப்பின்மை கடந்த ஆட்டத்தில் பிரிட்ஸ்கி ரன் அவுட் ஆகியநிலையில் இந்த ஆட்டத்தில் ஹென்ட்ரிக்ஸ் ரன் அவுட் ஆகி 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த அனுபவ வீரர் கிளாசன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தநிலையில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு ஸ்லோபாலை தூக்கி அடித்தார். ஆனால், பவுண்டரி பகுதியில் ரிங்கு சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு கிளாசன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக பேட் செய்த கேப்டன் மார்க்ரம், தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு நம்பிக்கையூட்டினார். பவர்ப்ளே முடிந்து 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்தை தூக்கி அடிக்க மார்க்ரம் முயன்று அது ஜெய்ஸ்வாலிடம் கேட்சாக 25 ரன்னில் மார்க்ரம் வெளியேறினார். தேவையற்ற நேரத்தில் மார்க்ரம் தேவையற்ற ஷாட் அடித்து அணியை நெருக்கடியில் தள்ளினார். டிஆர்எஸ் இல்லாததால் தப்பித்த மில்லர் அதன்பின் வந்த நடுவரிசை பேட்டர்கள் பெரேரா (12), பெகுல்குவேயோ (0) இருவரும் ஏமாற்றினார். டேவிட் மில்லர் 18 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜடேஜா வீசிய பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா கேட்ச் பிடித்தார். ஆனால் அந்த நேரத்தில் டிஆர்எஸ் சிஸ்டம் செயல்படாமல் இருந்ததால் மில்லர் தப்பித்தார். இறுதியில் 35 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி மில்லர் ஆட்டமிழந்தார். https://www.bbc.com/tamil/articles/c14ylr757lzo
  18. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு Published By: DIGITAL DESK 3 15 DEC, 2023 | 10:09 AM போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை (14) அழைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக குறிப்பிட்டார். "ஏற்கனவே எடுக்கப்பட்ட 40 மனித எலும்புக் கூடுகளில் இருந்து அதனுடைய ஆய்வுகளை, அதன் வயது, அது ஆணா பெண்ணா போன்ற ஆய்வுகளை டிசம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வாசுதேவ நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.” முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் பாரிய புதைகுழியில் இருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. கொக்கிளாய், முல்லைத்தீவு பிரதான வீதியூடாக பாரிய புதைகுழி வியாபித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, அதனை முழுமையாக தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் 29ஆம் திகதி, அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான செலவுகள் குறித்தும் இன்று நீதிமன்றில் கலந்துரையாடப்பட்டதாக சட்டத்தரணி வீ.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார். "மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கான செலவுகள், குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் வீதி உடைக்கப்பட்டு மீண்டும் திருத்துவதற்கு எவ்வளவு தொகை செலவாகும் போன்ற விடயங்கள் பேசப்பட்டன." நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கணக்காளர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். நவம்பர் 29ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பான மேலதிகத் தீர்மானத்திற்காக இந்த வழக்கை பெப்ரவரி 22ஆம் திகதி மீண்டும் அழைக்க முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தீர்மானித்ததாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு, நண்பகல் வேளையில் நிறுத்தப்பட்ட போது, கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங் மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதற்கும் சில சான்றுகளும் காணப்படுகின்றன. அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்திருந்தார். இதுவரை அகழ்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் அளவு மற்றும் எதிர்காலத்தில் தோண்டப்பட உள்ள நிலத்தின் அளவு குறித்தும் சிரேஷ்ட பேராசிரியர் விளக்கியிருந்தார். “தற்போது 3 மீற்றர் அகலத்திலும் 14 மீற்றர் நீளத்திலும் தோண்டியுள்ளோம். நாங்கள் இங்கு வந்தபோதும் கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டியிருந்ததால் அது நீளமாகவும் அகலமாகவும் இருந்தது. எனவே இந்த 40 எலும்புக்கூடுகளை அகற்றிய பின்னர், குறைந்தது இரண்டு மீற்றர் தூரத்திற்கு தோண்ட வேண்டும். 3 மீற்றர் மற்றும் 2 மீட்டர் சதுர மீட்டர்கள் என எடுத்துக் கொண்டால், நீளம் 2, அகலம் 3, ஆழம் சுமார் ஒன்றரை மீட்டர். எஞ்சிய எலும்புக்கூடுகளை வெளிக்கொண்டுவர 6.63 கனமீட்டர் மண் அகற்றப்பட வேண்டும் என்பது எங்கள் கணிப்பு.” கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/171743
  19. யாழில் கைதான 06 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 05:09 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 06 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது நேற்று புதன்கிழமை (13) கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டதை அடுத்து, கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/171717
  20. Published By: VISHNU 14 DEC, 2023 | 07:00 PM (நா.தனுஜா) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார். அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பாகி 75 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கம் இளவரசி ஆனுக்கு அழைப்புவிடுத்திருக்கும் நிலையிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/171732
  21. ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர் காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல்நீரை செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் இரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருக்கலாம்.ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் இராணுவம் நம்புகிறது. சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணி இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனை இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் இராணுவம் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. https://ibctamil.com/article/israeli-soldiers-pouring-seawater-ihamas-mine-1702483980
  22. ரஷ்ய உக்ரைன் போர்: படை வீரர்களை இழந்து தவிக்கும் ரஷ்யா ரஷ்ய உக்ரைன் போரில் இதுவரையில் ரஸ்யாவில் 90% பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இழப்பு ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் அறிக்கை கூறியுள்ளது. கடந்த 2022 பிப்ரவரி இல் 360,000 பணியாளர்களுடன் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கியது. வீரர்களின் இழப்பு அப்போதிருந்து, 315,000 ரஷ்ய படையில் அல்லது மொத்த வீரர்களில் சுமார் 87% பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அறிக்கை மதீப்பீடு செய்துள்ளது. இந்நிலையில் வீரர்களின் அதிகப்படியான இழப்பு போரை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு கடினமாவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை முன்நகர்த்தி செல்ல வேண்டிய தேவை உள்ளதால் தகுதிகள் குறைந்த வீரர்களை படையில் ரஷ்யா சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/russia-lost-90-percentage-solidiers-in-ukraine-war-1702491654
  23. சவால்களை மீறி கல்வியில் சாதிக்கும் இலங்கைப் பெண் 13 டிசம்பர் 2023 விதுர்ஷாவுக்கு 19 வயதாகிறது. ஆனால் அவரின் உயரம் 02 அடிகளுக்கும் குறைவாகவே உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வரை - விதுர்ஷாவின் தோற்றத்தை கேலியாக பார்த்த பலரும், இப்போது அவரை ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் பார்க்கின்றனர். இந்த நிலைக்கு கல்வியில் அவர் பெற்ற உயரம் கைகொடுத்திருக்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலாச்சோலை எனும் சிறிய கிராமமொன்றில் விதுர்ஷா வசித்து வருகின்றார். அவரின் அப்பா சாந்தலிங்கம் அம்மா புஷ்பலதா ஆகியோருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் விதுர்ஷா மூத்தவர். உடற்குறைபாடுகளுடனே விதுர்ஷா பிறந்ததாக அவரின் அம்மா கூறுகின்றார். விதுர்ஷாவின் தம்பியொருவரும் இவ்வாறு உடற் குறைபாடுகளுடன் பிறந்த நிலையில், கடந்த வருடம் அவரின் ஒன்பதாவது வயதில் காலமானார். உறவு முறைக்குள் திருமணம் செய்ததால் இவ்வாறு குழந்தைகள் பிறந்ததாக வைத்தியர்கள் கூறியதாக விதுர்ஷாவின் அம்மா சொல்கிறார். தனது சொந்த மாமாவின் மகனைத்தான் விதுர்ஷாவின் அம்மா புஷ்பலதா திருமணம் செய்துள்ளார். விதுர்ஷா உடற் குறைபாடுயுடையவராக உள்ளபோதிலும், படிப்பில் சிறந்து விளங்குகிறார். அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேசிய ரீதியில் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய விதுர்ஷா, அதில் சிறப்பாக சித்தியடைந்து, 12ஆம் வகுப்பு படிப்பதற்கு தகைமை பெற்றுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cevpwvl945do
  24. காசாவில் ஹமாசின் அதிரடி தாக்குதல் - பத்து இஸ்ரேலிய படையினர் பலி 14 DEC, 2023 | 10:49 AM காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்நு;த ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இ;ந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கட்டிடமொன்றில் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொண்ட படையினரை காப்பாற்ற முயன்ற படையினரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர். காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171679
  25. படக்குறிப்பு, கேரள செவிலியர் நிமிஷா கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 14 டிசம்பர் 2023, 06:07 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஏமன் நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுச் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவை விடுவிக்க அவரது குடும்பத்தின் தரப்பில் ஒரு பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், நிமிஷாவின் குடும்பம், கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கினால் விடுதலை கிடைத்துவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் இது ‘ஏமனில் கொலை செய்துவிட்டுப் பணம் கொடுத்தால் தப்பித்துவிடலாம்’ என்பதுபோன்ற பிம்பத்தைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறார்கள் நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள். பணத்தைவிட இந்த வழக்கில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் தரும் மன்னிப்பு. இந்த மன்னிப்பைப் பெறவே தாம் முயன்று வருவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஏமன் செல்லவிருப்பதாகவும் கூறுகின்றனர், நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள். என்ன வழக்கு? 2017-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான செவிலியர் நிமிஷா பிரியா. மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி ஏமனின் தலைமை நீதித்துறை கவுன்சில் நிராகரித்தது. இதனால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் மரண தண்டனையில் இருந்து தப்ப மற்றொரு வாய்ப்பு நிமிஷாவுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெற்று இழப்பீட்டுத் தொகை செலுத்தி மரண தண்டனையில் இருந்து விடுதலையாவதே நிமிஷாவிற்கு இருக்கும் அந்த ஒரே வாய்ப்பு. ஆனால், ஏமன் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. எனவே இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுகிறது. எனவே இங்கிருந்து நிமிஷாவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சென்று அவரை மீட்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஏமனுக்கு செல்ல அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமன் இது குறித்து முன்னர் பிபிசியிடம் பேசியிருந்த நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி. "நான் ஏமனுக்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன். என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள், மகளை மன்னித்துவிடுங்கள் என அவர்களிடம் கேட்பேன்," என்று கூறினார். நிமிஷாவை மீட்க ஏமன் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு ராஜ்ஜிய ரீதியான கட்டமைப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி இதற்கான அனுமதியை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து நிமிஷாவின் தாயார் பிரேமா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழு சார்பில் (Save Nimisha Priya International Action Council) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரேமா குமரியை தங்கள் கவுன்சிலை சேர்ந்த இரு உறுப்பினர்கள் உடனிருந்து அழைத்துச் செல்வார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏமனுக்கு நிமிஷாவின் தாயார் மற்றும் அவருடன் மேலும் ஒரு நபரும் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த பயணத்திற்கு அவர்கள் மத்திய அரசைச் சாராமல், சொந்த பாதுகாப்பை தாங்களே உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஏமன் செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனது பயணம் தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும், பயண விவரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். ஏமன் வரலாற்றில் இது முதல்முறை படக்குறிப்பு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் நிமிஷாவை மீட்க முயற்சித்து வருகிறார் "ஏமனில் பல கொலை வழக்குகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் நிமிஷா தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு ஏமன் அரசு தண்டனை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஏமன் வரலாற்றில் ஒரு வழக்கிற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வது இதுவே முதல் முறை," என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாமுவேல் ஜெரோம். ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரியும் இவர் தற்போது தமிழ்நாட்டில் உள்ளார். நிமிஷாவின் தாயாருடன் ஏமன் செல்ல இவருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து பேசிய சாமுவேல், "ஒரு சக இந்தியர் என்பதால் தான் நிமிஷா குறித்து ஊடகங்களிடம் கூறினேன். ஆரம்பத்தில் நானும் அவரை குற்றவாளியாக தான் பார்த்தேன். ஆனால் பின்னர் அவரது நிலையைக் குறித்து முழுதாக தெரிந்து கொண்டதால் அவர் பக்க நியாயம் எனக்கு புரிந்தது. நிமிஷாவின் நிலையில் இருந்து பார்க்கும்போது மன்னிக்கப்பட அவர் தகுதியானவரே," என்கிறார். அவர் மேலும் கூறுகையில், "முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிமிஷா கொலை செய்து விட்டார், இப்போது பணம் கொடுத்து அவரை நாங்கள் மீட்க போகிறோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த குடும்பத்திடம் மன்னிப்பைப் பெறப் போகிறோம். "பணம் இங்கு ஒரு முக்கியமான விஷயமே அல்ல, மன்னிப்பிற்கான ஒரு குறியீடு மட்டுமே. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பம்," என்று கூறுகிறார் சாமுவேல் ஜெரோம். 'பணம் கொடுக்க அல்ல, மன்னிப்பு பெறவே செல்கிறோம்' "ஏமன் நாட்டின் ஒரு குடிமகனைக் கொலை செய்துவிட்டு, பணம் கொடுத்தால் மட்டும் விட்டுவிடுவார்களா? பல கொலை வழக்குகளில் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நிமிஷாவின் நிலையைப் புரிந்து ஏமன் நாட்டு அதிகாரிகள் பொறுமை காத்து வருகிறார்கள். நிமிஷா செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் அதை செய்தார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் சாமுவேல் ஜெரோம். அவர் மேலும் கூறியது, "ஏமன் நாட்டின் ஷரியத் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதே முக்கியம். முதலில் ஏமன் பழங்குடி இனத்தலைவர்களுடன் நாங்கள் பேச வேண்டும். அவர்கள் எங்கள் மன்னிப்பை ஏற்க வேண்டும். அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பழங்குடித் தலைவர்கள் பேசுவார்கள். அந்த குடும்பம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை ஏமன் நீதிமன்றத்தில் தெரிவித்த பின் நிமிஷா விடுதலை செய்யப்படுவார். இது ஒரு கூட்டு முயற்சி," என்கிறார் சாமுவேல். "பணம் மட்டுமே பிரதானம் என்பது போல சில ஊடகங்கள் சித்தரித்து விட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனம் புண்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொன்றுவிட்டு மிகப்பெரிய தொகையைத் தருகிறோம் என்று சொன்னால் யாராவது ஒப்புக் கொள்வார்களா? இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். "எனவே நான் வைக்கும் ஒரு வேண்டுகோள், நிமிஷா ஒரு சூழ்நிலைக் கைதி. அவரது நிலையைப் புரிந்து அந்த நாட்டினரே மன்னிப்பைக் குறித்து யோசிக்கும் போது, பலரும் பணம் கொடுத்து அழைத்து வருகிறோம் என்று எழுதுகிறார்கள். அது உண்மையில்லை," என்று கூறுகிறார் சாமுவேல். ஜனவரியில் ஏமனுக்கு பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமனில் நிலவும் போர் சூழல் நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரிக்கு விசா கிடைத்தவுடன் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஏமனுக்கு செல்லவிருப்பதாக கூறினார் சாமுவேல். "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கேரளாவைச் சேர்ந்த சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழுவின் முயற்சியால் தான் இது நடந்தது. நிமிஷாவை மீட்பதில் அவர்களது பங்கு முக்கியமானது. இந்திய அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளனர். எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறோம்" என்கிறார் சாமுவேல் ஜெரோம். பிரேமா குமரியின் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரனிடம் பேசிய போது, "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல வருட போராட்டத்திற்கு கிடைத்துள்ள பலன். 2020-இல் நிலைமை ஏமனில் சீராக இருந்தபோதே அங்கு செல்ல எனக்கும் நிமிஷாவின் தாயாருக்கும் இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. "பின்னர் போர் சூழல் நிலவியதால் எங்களால் அங்கு செல்ல முடியாத நிலை நிலவி வந்தது. இப்போது இந்த தீர்ப்பால் அடுத்த மாதம் ஏமன் செல்ல பிரேமா குமரிக்கு விசா கிடைத்து விடும். நிமிஷாவை கண்டிப்பாக மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு போர் சூழல் உள்ளதால் நிலைமை சற்று பதற்றமாக தான் உள்ளது, ஆனாலும் பிரேமா குமாரி தன் மகளை மீட்பதில் உறுதியாக உள்ளார்," என்று அவர் கூறினார். 'தடைகளைத் தாண்டி மகளை மீட்டு வருவேன்' படக்குறிப்பு, நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி "அயல்நாட்டு மண்ணில் என் மகள் இறப்பதை நான் விரும்பவில்லை. அங்கு நிலைமை சரியில்லை, பாதுகாப்பில்லை எனக் கூறுகிறார்கள், ஆனாலும் அங்கு செல்வதில் உறுதியாக உள்ளேன். எனக்கு நம்பிக்கை உள்ளது, பாதிக்கப்பட்ட குடும்பம் எனது மகளை நிச்சயமாக மன்னித்து விடுவார்கள்," எனக் கூறுகிறார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி. நாட்கள் கடக்க கடக்க பிரேமாவின் தாங்கொணா துயர் அதிகரித்து வருகிறது. "நிமிஷாவிற்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு தாய் இருக்க வேண்டும்," என்கிறார் பிரேமா. அவர் தொடர்ந்து கூறியது, "நிமிஷா படிப்பில் சிறந்து விளங்கினார். நாங்கள் வறுமையில் இருந்ததால் அவரது பள்ளி மற்றும் செவிலியர் படிப்பிற்கான செலவை உள்ளூர் தேவாலயம் ஏற்றுக்கொண்டது. ஆனால், டிப்ளமோ படிப்பிற்கு முந்தைய பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறாததால் கேரளாவில் செவிலியராகப் பணிபுரிய நிமிஷா தகுதி பெறவில்லை. எனவே தான் ஏமன் சென்றார்," என்கிறார் பிரேமா குமாரி. "வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க ஏமன் சென்ற என் மகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை மீட்டு விடுவேன்," எனக் கூறுகிறார் பிரேமா குமாரி. https://www.bbc.com/tamil/articles/c8v2pn86pepo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.