Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியான ஐ.நா. ஊழியர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி உயிரிழந்த ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது வரை நடந்த போர்களிலேயே இந்தப் போரில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. சபை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.வைச் சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/281251
  2. காசா விவகாரத்தை அமெரிக்க கையாளும் விதம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் கடும் அதிருப்தி - ஏற்றுக்கொள்கின்றார் பிளிங்கென் Published By: RAJEEBAN 14 NOV, 2023 | 02:37 PM ஹமாஸ் இஸ்ரேல் மோதலை அமெரிக்கா கையாளும் விதம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைகளத்திற்குள் கடும் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞசலில் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார். காசா யுத்தத்தை அமெரிக்கா கையாள்வது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் மாத்திரமல்லாமல் பைடன் நிர்வாகத்திற்குள்ளேயே கடும் அதிருப்தி காணப்படும் நிலையிலேயே பிளிங்கென் இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். யுஎஸ்எயிட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரி கடிதம் எழுதியுள்ளதாக கடந்த வாரம் சிஎன்என் செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் அதிருப்தி கடிதங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உங்களில் பலருக்கு இந்த ஆழ்ந்த நெருக்கடியால் ஏற்படும் துன்பம் தனிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை நான் அறிவேன் என பிளிங்கென் தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் குழந்தைகளின் படங்களை தினசரி பார்க்கும்போது ஏற்படும் வேதனையை நானும் அனுபவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/169270
  3. கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 நவம்பர் 2023, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் முன்பு எல்லாம் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இல்லை என்று இரண்டு பதில்கள் தான், ஆனால் இப்போது “இருக்கு, ஆனா இல்லை” என்று கூறும்படியாக ப்ரீ டயபடிக் என்ற நிலை உள்ளது. ப்ரீ டயபடிக் எனப்படுவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதாவது சர்க்கரை நோய் இல்லாத நிலைக்கும், சர்க்கரை நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலையாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொதுவாக இரண்டு விதமாக பரிசோதித்து தெரிந்துக் கொள்ளலாம். வெறும் வயிற்றில் காலை எழுந்த உடன் ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என பரிசோதிக்கலாம். மற்றொன்று, ரத்தத்தில் சர்க்கரை எவ்வாறு கரைகிறது என்பதை கண்டறியும் OGTT (Oral Glucose Tolerant Test)எனப்படும் பரிசோதனை ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரைக்கு முந்தைய நிலை எது வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யும் போது, 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது என்று அர்த்தம், 126க்கும் மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று அர்த்தம். இதுவே 101 முதல் 125 என்ற அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதே போன்று OGTT பரிசோதனை செய்யும் போது, 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே 200க்கு மேல் இருந்தால், சர்க்கரை நோய் என்று அர்த்தம். ஆனால், 141 முதல் 199 வரை சர்க்கரை அளவுகள் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். “வெறும் வயிற்றில் எடுத்த பரிசோதனையில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், கல்லீரல் சீராக செயல்படவில்லை என்று அர்த்தம். இரண்டாவது பரிசோதனையில் சர்க்கரை அதிகமாக இருந்தால், தசைகளில் சர்க்கரை சேர்கிறது என அர்த்தம். இந்த இரண்டு பரிசோதனைகளிலுமே சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை கண்டறிப்பட்டால், அது விரைவிலேயே சர்க்கரை நோயாக மாறும்” என்கிறார் மோகன் நீரிழிவு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் ஏற்படும் சிக்கல்கள் சர்க்கரை நோயினாலே ஆபத்து, சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் எந்த பாதிப்பும் இல்லை என கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் உடலில் அது பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் விளக்குகின்றனர். “உங்கள் சர்க்கரை அளவுகள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தாலே, இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்புகள் ஏற்படலாம்” என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் தலைவர் தர்மராஜன் கூறுகிறார். “சர்க்கரை நோய் இருந்தால், ரெடினோபதி (கண்கள் பாதிப்பு), நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு), நியுரோபதி (நரம்புகள் பாதிப்பு) ஆகியவை ஏற்படும். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இந்த பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை எல்லாம், சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்வதற்கு முன்னாலேயே ஏற்படலாம்.” என்கிறார் மருத்துவர் மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை நோயாளியாக மாறுவதை தவிர்க்க முடியுமா? சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் விரைவிலேயே சர்க்கரை நோயாளிகாக மாறக் கூடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 10.1 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே ஆய்வு, 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியது. இதில் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாகவும், சுமார் 80 லட்சம் பேர் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் உள்ளனர் என்று ஆய்வு தெரிவித்தது. இந்த ஆய்வில் பங்கேற்ற மோகன் டயபடீஸ் மையத்தின் தலைவர் வி.மோகன் கூறுகையில், “சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலிருந்து சர்க்கரை நோயாளியாக இந்தியர்கள் மிக விரைவில் மாறிவிடுவார்கள். மேற்கு நாடுகளில் ஒருவர் எட்டு முதல் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியருக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதும். இந்தியர்கள் மாவுச் சத்து அதிகம் கொண்ட வெள்ளை அரிசி சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சில மரபியல் காரணங்களும் இருக்கலாம்” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ரீ டயபடிக்- அறிகுறிகள் இருக்காது சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என்பதால், இதை கண்டறிவதே சவால். “முழு உடல் பரிசோதனை போன்ற சோதனைகளின் போது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருப்பது தெரியவரலாம். அறிகுறிகள் இல்லை என்றால், எந்த சிகிச்சையும் தேவை இல்லை என்று சிலர் அபத்தமாக பேசி வருகின்றனர். எவ்வளவு விரைவில் சர்க்கரைக்கு முந்தைய நிலை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்” என்கிறார் மருத்துவர் மோகன். இளைஞர்களிடம் ப்ரீ டயபடிக் நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை நோயே இப்போதெல்லாம் இளவயதினரில் ஏற்படும் நிலையில், சர்க்கரைக்கு முந்தைய நிலையில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர் என்றால் ஆச்சர்யம் ஏதும் இல்லை. “20 ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கரை நோய் வயதானவர்களிலேயே அதிகம் காணப்பட்டது. ஆனால் இன்று 20 வயது இளைஞர்கள் சில சமயம், அதற்கும் இளையவர்களிடமும் சர்க்கரை நோய் காணப்படுகிறது. இதற்கும் முந்தைய நிலை ப்ரீ டயபடிக், எனவே இது பொதுவாக இளைஞர்களிடமே காணப்படுகிறது” என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு பிரிவு தலைவர் தர்மராஜன். சமீப கால வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிக எளிய முறையில் மூன்றே கேள்விகளில், நாம் ஆபத்தான நிலையில் இருக்கிறோமா இல்லையா என கண்டறிய முடியும். “உங்கள் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதுண்டா? உங்களுக்கு என்ன வயது?- இதில் முதல் கேள்விக்கு ஆம் என்றும் இரண்டாவது கேள்விக்கு இல்லை என்றும் கூறினீர்கள் என்றால், உடனே ஒரு இன்ச் டேப் எடுத்து வயிற்றை சுற்றி அளந்து பாருங்கள், ஆண்களுக்கு 90செ.மீக்கு மேல், பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தால் நீங்கள் சர்க்கரை நோயின் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். வயது அதிகரிக்க, இந்த ஆபத்துகளும் அதிகரிக்கும்” என்கிறார் மருத்துவர் மோகன். உணவுக் கட்டுப்பாடு சர்க்கரைக்கு முந்தைய நிலை என்பது சர்க்கரை நோய் ஏற்படாமல் தற்காத்து கொள்வதற்கு கிடைத்திருக்கும் அவகாசமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், முறையான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்லாமல் தவிர்ப்பது மட்டுமல்ல, சர்க்கரை அளவுகள் சாதாரண நிலைக்கு திரும்பவும் கூடும். “மாவுச்சத்தை குறைத்து புரதச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகமாக எடுத்துக் கொண்டால், அது வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும், அதே நேரம், உடல் எடையை கூடாது. பச்சை இலை காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டு சர்க்கரை மாற்று அல்ல வெள்ளை சர்க்கரை, உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என தெரிந்தவர்கள், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு சாப்பிட்டால் ஆபத்து இல்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான கருத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். “ வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரையில் சர்க்கரை அளவு சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், அதனால் சர்க்கரை அதிகரிக்காது என்பது தவறான கருத்து “என்கிறார் மருத்துவர் தர்மராஜன். உடல் பருமன் பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் பருமன் குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுவும் வயிற்று பகுதியில் பருமன் அதிகமாக இருந்தால், அது முழுவதும் கொழுப்பு சத்து என்றும் அது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் 35.1 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2.6 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. “பெண்கள் வீட்டு வேலை செய்வதால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் செய்யும் வேலைகள் கலோரியை குறைக்க உதவுவதில்லை. எனவே உடல் பருமனை தவிர்க்கும் நோக்கில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்” என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crgpdrxwgq4o
  5. காசாவின் போர் செல்போன்களிலும் இடம்பெறுகின்றது Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 04:17 PM நியுயோர்க் டைம்ஸ் By Yousur Al-Hlou தமிழில் - ரஜீவன் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் சிக்குண்டுள்ள பாலஸ்தீனியர்களில் செல்போன்களை வைத்துள்ளவர்கள் காசா யுத்தத்தை பதிவு செய்து வெளியிடுகின்றனர் – அவர்கள் ஆங்கில புலமை கொண்டவர்களாக உள்ளனர்- இன்ஸ்டகிராமில் பலரால் பின்தொடரப்படுபவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். இஸ்ரேலும் எகிப்தும் பத்திரிகையாளர்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து வருகின்ற நிலையில், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சினால் ஏற்பட்டுள்ள பேரழிவை தரைதாக்குதல் கதைகளை பதிவு செய்கின்றனர், பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் பதிவுகள் யதார்த்தத்தை உண்மையை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படையாக தெரிவிப்பவையாக காணப்படுகின்றன- மையநீரோட்ட ஊடகங்கள் அவை வெளியிட முடியாத அளவிற்கு பயங்கரமானவை என கருதக்கூடும். அவர்கள் தாங்கள் பதிவு செய்யும் யுத்தத்தின் நடுவில் வாழ்கின்றனர்,குண்டுவீச்சிலிருந்து உயிர்பிழைக்கின்றனர் ,உணவு குடிநீரை பங்கீட்டு முறையில் பெற்றுக்கொள்கின்றனர் மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர். அவர்கள் நடுநிலையான பார்வையாளர்கள் இல்லை அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளில் அவர்கள் தங்களை அவ்வாறு காண்பிக்க முயலவில்லை. சிலர் அவர்கள் காசாவை தனது பிடியில் வைத்திருக்கும் ஹமாசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் என தெரிவிக்கின்றனர். ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பதிலடியாக தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த பின்னர் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் - பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 4500 பேர் சிறுவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ஐநாவின் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுவரையில் 33 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எனினும் பாலஸ்தீனியர்கள் யுத்தத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை தொடர்ந்தும் பதிவு செய்கின்றனர்-அவர்களை மில்லியன் கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர். மொட்டாஸ் அசைசா ஒக்டோபர் ஏழாம் திகதி மொட்டாஸ் அசைசா 4 மணியளவில் உறங்கச்சென்றார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் குண்டுவெடிப்புகளின் சத்தத்தை கேட்டு கண்விழித்தார்,தனது வீட்டின் கூரைக்கு சென்று என்னவென்று பார்த்தார் அவரது வீட்டின் மேலாக ரொக்கட்கள் சென்றதை பார்த்தார். அதுவரை எந்த எச்சரிக்கையும் வெளியாகவில்லை வழமையாக யுத்தத்தை அறிவிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள் அன்று இல்லை ஆனால் இந்த யுத்தம் அவர் உறக்கத்திலிருந்தவேளை ஆரம்பித்தது. காசா இஸ்ரேலை பிரிக்கும் எல்லையை கடந்து சென்ற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய படையினரையும் சமூகங்களையும் தாக்கினர்.240 பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் 1400 பேர் கொல்லப்பட்டனர் அதில் அதிகளவு இஸ்ரேலிய இராணுவத்தினரும் உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான முழுமையான யுத்தத்தை ஆரம்பித்தது- அசைசாவும் இரண்டு மில்லியன் மக்களும் காசாவில் குண்டுவீ;ச்சிற்குள் சிக்குப்படும் நிலையை ஏற்படுத்தியது. பல வருட மோதல்களிற்கு பின்னர் வெடிமருந்து கிடங்காக மாறியிருந்தது காசாவில் அவர்கள் சிக்குண்டனர். ஏற்கனவே நான்கு யுத்தங்களை சந்தித்த அசைசா தனது கமராவை எடுத்துக்கொண்டு தன் கண்முன்னால் புதிதாக அவிழ்ந்த உலகிற்குள் நுழைந்தார். ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினருடன் இஸ்ரேலிய ஜீப்பில் அசைசாவை கடந்துசென்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சீருடையில் காணப்பட்டனர் - இஸ்ரேலிய படையினரை பொதுமக்கள் முன்னிலையில் பாலஸ்தீனியர்கள் நிறுத்தியவேளை அவர்கள் கண்களில் அச்சம் தென்பட்டது என்கின்றார் அசைசா. அவர் அதனை பதிவு செய்தார் -அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார் – அவரை 25000 பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர். நான் அந்த சம்பவத்தை உள்வாங்குவது எப்படி என தெரியாத நிலையிலிருந்தேன் என தெரிவிக்கும் அவர் அந்த ஜீப் எங்களுக்கு பேரழிவை கொண்டு வரப்போகின்றது என நான் அந்த நிமிடம் கருதவில்லை என்கின்றார். அசாசா காசா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பட்டம்பெற்றவர்- புகைப்படத்துறை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர்.காசாவின் அழகையும் பயங்கரத்தையும் பதிவு செய்து அவர் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார். ஆனால் காசா யுத்தம் சமூக ஊடக காலத்தின் யுத்த செய்தியாளராக அவரை மாற்றியிருந்தது. தற்போது அவரை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அவர் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சினை தனது தலைமுறையை போல பதிவு செய்துவருகின்றார்.கண்முன் நடப்பதை அப்படியே பதிவு செய்து அப்படியே தரவேற்றுகின்றார் அவருக்கு ஆங்கில மொழியாற்றல் உள்ளதால் பலர் அவரை பின்தொடர்கின்றனர். நான் ஏனையவர்களை போலவே பதிவிடுகின்றேன் பிரபலங்கள் செய்வது போல நானும் எனது நாளாந்த வாழ்க்கையிலிருந்து பதிவிடுகின்றேன் என்கின்றார் அவர். ஆனால் அவரது வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானவை. ஓக்டோபர் 9 ம் திகதி குண்டுவீச்சிலிருந்து தப்பியவுடன் அவர் கதறியழுதார். அது எனக்குள்ளே இருந்த எதனையே அசைத்துவிட்டது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் இரண்டு மணிநேரம் அழுதேன் என அவர் குறிப்பிட்டார். ஒக்டோபர் 11ம் திகதி அவர் குண்டுவீச்சில் தனது நெருங்கிய நண்பரை இழந்தார்-அதன் பின்னர் அவரது குடும்ப உறவுகள் கொல்லப்பட்டனர். ஒக்டோபர் 22 ம் திகதி அவர் கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவர்களின் சடலங்களுடன் காணப்பட்டார்.23 ம் திகதிஇடிபாடுகளிற்கு மேலாக நடந்துசென்ற அவர் நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றோம் என தெரிவித்தார். ஆரம்பத்தி;ல் என்ன செய்கின்றேன் என்பதோ என்ன செய்யப்போகின்றேன் என்பதோ தெரியாத நிலையில் நான் காணப்பட்டேன் என தெரிவிக்கும் அவர் நான் நடக்கும் விடயங்களை பதிவிட்டு நாங்கள் இங்கே இருக்கின்றோம் என தெரிவிக்க விரும்பினேன் என குறிப்பிட்டார். அவரது சமூக ஊடக செயற்பாடுகளும் பிரபலமும் அவருக்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன,அவர் தான் சந்தித்த அனுபவங்களால் களைப்படைந்துள்ளார், பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றார், தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளார் அவர் தனது சகாக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். விமானகுண்டுவீச்சில் அவர்களின் வீடுகள் எப்படி நொருங்கின தரைமட்டமாகின என்பதை நேரில் பார்த்துள்ளார். நான் எனது நண்பர்களை இடிபாடுகளிற்குள் இருந்து இழுத்தெடுத்தேன் என அவர் தெரிவிக்கின்றார். நேற்று நான் எனது வீட்டில் ஒரு கால் கட்டிலும் ஒரு கால் தரையிலுமாக உறங்கினேன் , நான் அங்கேயே இருக்கவேண்டுமா வெளியேறவேண்டுமா என்பது தெரியாத நிலையிலிருந்தேன், எனது தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவர் பதிவிட்டுள்ளார். நான் தற்போது காசாவில் இல்லை என அவர் நவம்பர் நான்காம் திகதி பதிவில் தெரிவித்தார். இஸ்ரேலிய துருப்பினரின் பிடியில் தனது வீடு உள்ளதால் மீண்டும் திரும்பி செல்வது ஆபத்தானது என அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் யுத்தம் குறித்த தகவல்களை வெளியிடுவதாக தன்னை சமூக ஊடகங்களில் பதிவு செய்பவர்களிற்கு தெரிவித்துள்ள அவர் அதேவேளை தனக்குள்ள மட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளார். நான் சுப்பர்மான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் சோர்வடைந்து விழப்போகின்றேன் போல உணர்கின்றேன் என கமராவை பார்த்தபடி அவர் தெரிவித்தார். அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் எனது உயிருக்கு ஆபத்தில்லாமல் அவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/169207
  6. இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கும் ஹமாஸின் ரகசிய சுரங்கப் பாதைகள் 13 நவம்பர் 2023, 02:23 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவியது. இதைத்தொடர்ந்து, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஹமாஸ் குழுவை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் இஸ்ரேலுக்கு சவாலாக விளங்குவது, அக்குழுவினர் பூமிக்கடியில் அமைத்துள்ள ரகசிய சுரங்கப் பாதைகள்தான். இஸ்ரேலை தாக்க ஹமாஸ் பல்வேறு ரகசிய சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது. ஹமாஸ் குழுவினர் தங்குவதற்காகவும் அவர்கள் சென்றுவரும் பாதையாக பயன்படுத்தவும் அக்குழுவினரால் ஏராளமான ரகசிய சுரங்கப் பாதைகள் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளன. தங்கள் திட்டங்களை வகுக்கவும் இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது. எல்லை தாண்டிய இந்த சுரங்கங்கள் வழியாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலை அடைய முடியும். சுரங்கங்களை பயன்படுத்தி பல்வேறு தாக்குதல்களையும் ஹமாஸ் நிகழ்த்தியுள்ளது. ஹமாஸை பூமியிலிருந்து அழித்தொழிக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதற்கு முதலில் இந்த ரகசிய சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் அழிக்க வேண்டும். ஆனால், ஹமாஸின் சுரங்கப் பாதைகளை முற்றிலுமாக அழிப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பது அதன் வலுவான கட்டமைப்பிலிருந்து தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காஸாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப் பாதை எப்படி இருக்கும்? காஸாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப் பாதைகள் சுமார் 80 மீட்டர் வரை ஆழம் கொண்டவை. பூமிக்கடியில் 20 மீட்டர் உயரத்தில் தடுப்பரணும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தில் ஆயுதங்களை மறைத்து வைக்க, திட்டங்களை வகுக்க, பணயக் கைதிகளை வைக்க பயன்படுத்தப்படும் அறைகள் உள்ளன. மேலும், சுரங்கப் பாதைகளின் கட்டமைப்பை வலுப்படுத்த கான்கிரீட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதைகள் சுமார் 1.8 மீட்டர் உயரம் கொண்டவை. அதேபோன்று, பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயன்படுத்திய சுரங்கப் பாதையைக் காண பிபிசியின் குவென்டின் சோமர்வில்லேவுக்கு 2015 இல் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் ரகசிய இடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சுரங்கம் மேற்பரப்பிலிருந்து 30 மீட்டர் ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. குடியிருப்பு கட்டடங்களுக்கு உள்ளே அவற்றின் நுழைவுவாயில்கள் இருப்பது பொதுமக்களை வான்வழி தாக்குதல் ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும் இந்த சுரங்கத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டு காஸாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்த சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம்சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறது. ’காஸா மெட்ரோ’ காஸாவில் உள்ள சுரங்க கட்டமைப்பை 2021ஆம் ஆண்டு வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக இஸ்ரேல் கூறியது. அந்த சுரங்கப் பாதையை`காஸா மெட்ரோ` என இஸ்ரேல் கூறுகிறது. ஏனென்றால், அந்த சுரங்கம் 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த மோதலைத் தொடர்ந்து இந்த சுரங்கத்தில் 100 கி.மீக்கும் அதிகமான சுரங்க அறைகள் வான்வழித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், தங்களின் சுரங்கம் 500 கி.மீ. வரை நீளம் கொண்டதாகவும் அதில் 5 சதவீதம் மட்டுமே தாக்கப்பட்டதாகவும் ஹமாஸ் பதிலுக்குக் கூறியிருந்தது. ஹமாஸ் சுரங்கப் பாதைகளை இஸ்ரேலால் அழிக்க முடியுமா? ஹமாஸ் சுரங்கப் பாதைகள் கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவுவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன. "சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார், இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக்.. மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கப் பாதைகளை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார். “சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் அவர். இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/cv2zej0g2y2o
  7. பலஸ்தீன மோதல் : மேற்குலகின் ஆதரவை இழக்கிறதா உக்ரேன்? Published By: VISHNU 12 NOV, 2023 | 04:58 PM சுவிசிலிருந்து சண் தவராசா காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் ஒரு மாதத்தையும் கடந்து தொடர்கிறது. அந்தப் பிராந்தியத்தில் தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டி விட்டது. அதில் மூன்றிலொரு வீதத்தினர் சிறார்கள் என்கின்ற செய்தி பதைபதைப்பைத் தருகின்றது. இருந்தும் மேற்குலகை ஆள்வோரின் மனச்சாட்சி இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை என்பதைப் பார்க்க முடிகின்றது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்துக்காகக் குரல் தந்து கொண்டிருக்கையில் ‘ஒப்புக்குச் சப்பாணி’ என்பதைப் போன்று ‘மனிதாபிமான மோதல் தவிர்ப்பு’ என்பதைப் பற்றியே மேற்குலகம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. இந்த வேளையில் உலகின் மனச்சாட்சி உள்ள நாடுகள் இஸ்ரேலுடனான தமது இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதன் ஊடாக தமது கடுமையான நிலைப்பாட்டை இஸ்ரேலுக்கும், முழு உலகிற்கும் பறைசாற்றி வருகின்றன. இந்த வரிசையில் இறுதியாக ஆபிரிக்க நாடுகளான தென் ஆபிரிக்கா மற்றும் சாட் ஆகியவை இணைந்து உள்ளன. ஏற்கனவே பொலீவியா, துருக்கி, ஜோர்தான், ஹொன்டுராஸ், கொலம்பியா, சிலி ஆகிய 7 நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளைத் துண்டித்து உள்ளமை தெரிந்ததே. தொடர்ந்துவரும் நாட்களில் இந்த அணியில் மேலும் பல நாடுகள் சேர்ந்து கொள்ளும் அறிகுறிகள் தென்படுகின்றன. மறுபுறம், அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. தமது சகோதரர்கள் காஸாவில் வகைதொகையின்றிக் கொல்லப்படுவது தொடர்பில் அரபுலக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆத்திரம் செயற்பாடுகள் ஊடாக வெகுவிரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, காஸா மோதல் ஆரம்பமான நாள் முதலாக உக்ரேன் போர் தொடர்பிலான செய்திகள் இரண்டாம் பட்ச நிலைக்குச் சென்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உக்ரேனின் ‘பதில் தாக்குதல் நடவடிக்கை’ உரிய பலனைத் தராத நிலையில், ஒருசில விட்டுக்கொடுப்புடன் ரஷ்யாவுடன் சமரசத்துக்குச் செல்லுதல் தொடர்பான செய்திகளும் சமாந்தரமாக வெளியாகத் தொடங்கியுள்ளன. இவ்வாறான செய்திகளை வழக்கம் போன்றே உக்ரேன் அரசுத் தலைவர் விளாடிமிர் ஷெலன்ஸ்கி மறுத்திருந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகை வராது’ என்பதைப் போன்று திரைமறைவில் ஏதோ காய்நகர்த்தல்கள் உள்ளதாகவே தெரிகின்றது என்கின்றன விஷயமறிந்த வட்டாரங்கள். உக்ரேனின் இராணுவத் தலைமைக்கும் அரசுத் தலைமைக்கும் இடையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்ற விடயம் தொடர்பில் அண்மைக்காலமாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை மெய்ப்பிப்பது போன்று தற்போதைய கள நிலவரம் தொடர்பில் அண்மையில் படைத் தளபதி தெரிவித்த கருத்தும் அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான விளக்கமும் அமைந்திருந்தது. 'ரஷ்யாவுடனான மோதல் ஒரு தேக்க நிலையை அடைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் எந்தவொரு அணியும் பாரிய வெற்றி எதனையும் பெற்றுவிட முடியாத நிலை உள்ளது. அது முதலாம் உலகப் போரை ஒத்த ஒரு நிலை.' என ஜெனரல் வலரி சலுஸ்னி பிரித்தானியாவின் ‘த எக்கோனமிஸ்ட்’ ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்குப் பதிலளித்த அரசுத் தலைவர் அலுவலக உதவியாளர் இகோர் சொவ்க்வா, ஜெனரல் வலரி சலுஸ்னியின் கருத்தைக் கண்டித்ததுடன் அந்தக் கருத்து ரஷ்யத் தரப்புக்கு ஆதரவு அளிப்பது போன்று உள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு இந்தக் கருத்து வெளியான கையோடு மேற்குலக ராஜதந்திரிகள் பலரும் தன்னைத் தொடர்பு கொண்டு அவர் கூறியது உண்மையா எனக் கேட்டனர் எனவும் கூறியிருந்தார். அதேவேளை, கடந்த 6ஆம் திகதி ஜெனரல் வலரி சலுஸ்னியின் நெருங்கிய சகாவான மேஜர் கென்னடி சாஸ்ற்யக்கோவ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார். தனது பிறந்தநாளை ஒட்டி வழங்கப்பட்ட பரிசுப்பொதியை தனது மகனுடன் இணைந்து பிரிக்கும் போது பரிசாக வழங்கப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் மேஜர் கென்னடி சாஸ்ற்யக்கோவ் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சம்பவ இடத்தில் மேலும் பல கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இது திட்டமிட்ட தாக்குதல் எனவும், அந்தத் தாக்குதலில் ஜெனரல் வலரி சலுஸ்னியே இலக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடும் என ஓர் ஊகமும் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, உக்ரேன் தரப்பு கலகலத்துப் போயுள்ள நிலையில் படைத்துறைக்கும் அரசுக்கும் இடையில் பிளவு உள்ளதாக வெளியாகும் செய்திகளும், உக்ரேனை மேற்குலகு படிப்படியாகக் கைகழுவி வருவதாக வெளியாகும் செய்திகளும் உக்ரேனின் போர் வெற்றி தொடர்பில் மேற்குலகம் நம்பிக்கையிழந்து வருவதன் அறிகுறியே என நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள். உக்ரேனின் அரசு இயந்திரம் ஊழலில் மூழ்கித் திளைக்கின்றது என்ற செய்தி ஒன்றும் புதியதல்ல. அண்மைக் காலமாக இது விடயத்திலும் மேல்நாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு தேர்தல் நடக்குமானால் ஸெலென்ஸ்கி மாற்றப்பட வேண்டும் என்ற வகையிலான தகவல்களையும் மேற்குலக ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது. இரண்டு வருடங்களை நிறைவு செய்யவுள்ள போரில் உக்ரேன் தரப்பு பாரிய மனித இழப்பைச் சந்தித்துள்ளது. படையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வயோதிபர்களைக் கூட கட்டாயமாகப் படையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. உக்ரேன் தரப்புக்கு உதவி செய்யும் மேற்குலகம் மேலதிக உதவிகளை, படைத் தளபாடங்களை வழங்கத் தயாராக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த மனிதவலு அவசியம் என்பது தொடர்பில் குறித்த நாடுகள் கரிசனை கெண்டிருப்பதும் செய்திகளில் அடிபடுவதைப் பார்க்க முடிகின்றது. மேற்குலக ஊடகங்கள் மற்றும் அவற்றுக்குத் தகவல்களை வழங்கும் வட்டாரங்களின் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கையில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை இடத்தில் இருந்த உக்ரைன் தற்போதைய காஸா மோதல் காரணமாக தனது முதன்மையை இழந்திருக்கின்றது என்பது தெட்டத் தெளிவாகின்றது. காரணம் எதுவானாலும் உக்ரைன் போர் முடிவுக்கு வருமானால் அது அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே. உலக சமாதானத்துக்கும் அது அவசியமானது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. https://www.virakesari.lk/article/169131
  8. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் சண்டை முடிஞ்சு சமாதானம் வந்திட்டுது போல இருக்கே! ஒரு செய்தியையும் காணேல!!
  9. காஸாவில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? அதன்மூலம் என்ன சாதித்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் பீல் பதவி, பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி நியூஸ் 35 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. அக்டோபர் 7ஆம் தேதி முதன்முதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய கொடூரமான தாக்குதலில் இருந்துதான் இதெல்லாம் தொடங்கியது. அந்த தாக்குதலில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இலக்கானது ஆரம்பம் முதலே தெளிவாக உள்ளது. ஹமாஸ் இயக்கத்தை ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக துடைத்தெறிவதுதான் அதன் நோக்கம். இந்நிலையில், காஸாவுக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது? தனது இலக்கை அடைவதில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது மற்றும் அதனால் இந்த இலக்கை அடைய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலை பொறுத்தவரை, இந்த தாக்குதல் நடவடிக்கை அவ்வளவு எளிதில்லை என்றும் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடியது என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறது. பிபிசியுடன் பேசிய மூத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரி, தற்போதைய நிலையை குத்துச்சண்டை போட்டியோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். 15 சுற்று போட்டியில் தாங்கள் இப்போது 4ம் சுற்றில் இருப்பதாக அவர் கூறுகிறார். இஸ்ரேலை சேர்ந்த யாராலுமே இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியவில்லை. சிலர் மேற்கத்திய ஆதரவு இராக் ராணுவம் மற்றும் ஐ.எஸ். இயக்கத்திற்கு இடையே நடைபெற்ற சண்டையை மேற்கோள் காட்டுகின்றனர். அதன்படி, 2017ம் ஆண்டு ஐ.எஸ்.ஸிடமிருந்து மொசூலை மீண்டும் கைப்பற்ற இராக் ராணுவத்திற்கு 9 மாதங்கள் தேவைப்பட்டதை உதாரணமாக கூறுகின்றனர். அதே சமயம், சர்வதேச அளவில் சண்டை நிறுத்தம் அல்லது போர் நிறுத்தம் செய்யக்கோரி அழுத்தம் அதிகரித்து வருவதால் நீண்ட காலத்திற்கு இஸ்ரேலாலும் இந்த சண்டையை நடத்த முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES காஸாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தபட்சம் 11,078 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நாளில் காஸாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் வடக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. காஸாவின் வடக்குப் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் கடற்கரையை ஒட்டிய பகுதியை இஸ்ரேல் ராணுவம் இரண்டாகப் பிரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறியபோது அங்கிருந்த மக்களை தெற்குப் பகுதியை நோக்கிச் செல்ல கூறியிருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவை சுற்றி வளைத்தபோது அனைத்து மக்களும் தெற்குப் பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். காஸா நகரப் பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அமைந்திருக்கக்கூடிய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி ஹமாஸ் ஆயுதக்குழுவினரோடு சண்டையிட்டு வருகின்றனர். அல் ஷிஃபா மருத்துவமனை காஸாவின் வடக்குப் பகுதி கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலும் ஹமாஸும் சண்டையிட்டு வருகின்றனர். காஸாவிலேயே பெரிய மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல் பட மூலாதாரம்,REUTERS காஸாவிலேயே பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவில் இருக்கும் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அல் ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் 37 குழந்தைகள் உட்பட 100 நோயாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையம் கூறுகையில், இந்த மருத்துவமனையோடு தங்களுக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 100மீட்டர் தூரத்தில் இஸ்ரேலின் ராணுவ டாங்கிகள் ஹமாஸ் மீது தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அல் ஷிஃபா மருத்துவமனையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் அல் ஷிஃபா மருத்துவமனையின் பிரசவ அறைகள் இருக்கும் பகுதி உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அல் ஷிஃபா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உலக அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகமாகியுள்ளன. இரண்டு பக்கமும் பேரிழப்பு இதுவரை பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி அதில் ஹமாஸின் மூத்த தளபதிகள் உட்பட டஜன் கணக்கான இலக்குகளை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது இஸ்ரேல். ராணுவ நிபுணர் மற்றும் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான யாகோவ் காட்ஸ், இஸ்ரேல் இதுவரை இருபத்தி மூன்றாயிரத்திற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார். இராக் மொசூலில் நடைபெற்ற போரின் கடைசி நேரத்தில் கூட மேற்கு நாடுகளின் கூட்டணி படைகள் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரே வாரத்தில் 500 குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் அளித்துள்ள தகவலின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காஸாவில் 10,800 மக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 4,400 குழந்தைகளும் அடங்குவார்கள். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெற்றிகரமாக காஸாவை தெற்கு மற்றும் வடக்கு என பிரித்து விட்டதாகவும், காஸா நகரம் முழுவதையும் அதன் படை சுற்றிவளைத்துள்ளதாகவும் கூறி வருகிறது. தற்போது அவர்கள் நகரத்தின் மையப்பகுதி வரை வலுவாக ஊடுருவியுள்ளதாக கூறுகின்றனர். ஆனாலும் கூட இன்னும் காஸா முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அவர்களால் அறிவிக்க முடியவில்லை. அதே சமயம் மறுபுறம், இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாகவோ அல்லது காஸாவுக்குள் தீவிரமாக ஊடுருவியுள்ளதாகவோ தெரியவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது. பட மூலாதாரம்,SAID KHATIB/AFP இஸ்ரேல் ராணுவம் ஹமாஸை தனிமைப்படுத்தும் இலக்கோடுதான் தனது தரைவழி தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஹமாஸ் இயக்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடங்கியபோது ஹமாஸ் இயக்கத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை வீரர்கள் இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 10 சதவீதம் அல்லது 4,000 வீரர்கள் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது போன்ற கணக்கீடுகளை சரிபார்ப்பது சாத்தியமற்றது. இருப்பினும், ஏற்கனவே காஸா மீது இஸ்ரேலின் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலினால் ஹமாஸின் போர்த்திறன் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம் இஸ்ரேலிய ராணுவமோ குறைந்த இழப்புகளையே பெற்றுள்ளதாக தெரிகிறது. தரைவழி தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது இஸ்ரேல். பெரும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவே இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழி நடவடிக்கைகளை மிக கவனமாக கையாள்வதாக இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிபுணர் யோசி குபர்வாசர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்னும் எவ்வளவு ஹமாஸ் இயக்கத்தினர் வடக்கு காஸாவில் இருக்கிறார்கள் அல்லது எவ்வளவு வீரர்கள் சுரங்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தெற்கு நோக்கி எவ்வளவு பேர் சென்றிருக்கலாம் என்று சரியாக தெரியாத சூழலே நிலவுகிறது. காஸாவின் சுரங்கங்கள் இன்னமும் இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன. சண்டையின் போது சுரங்கங்களில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக இஸ்ரேல் படைகள் தாங்கள் கண்டறியும் சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நகரங்களில் போர் புரிவதில் சவால்கள் உளவுத்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றின் திறன் அடிப்படையில் இஸ்ரேலின் முன்னிலை தெளிவாக உள்ளது. இதனால், காஸாவின் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் நெட்வொர்க் அனைத்தையும் முடக்க முடியும். இஸ்ரேலின் அதிநவீன விமானப்படை அதன் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தரையில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியாது. இன்னமும் கூட தினமும் 100 புதிய தாக்குதல் இலக்குகளை கண்டறிவதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர் எவ்வளவு தூரம் இழுத்து கொண்டே போகிறதோ, அதே போல் இந்த பட்டியலும் குறையாமல் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு இந்த போர் தொடரும் வரை , எதிரிகளை கண்டறிந்து வீழ்த்துவதற்கு அதிகம் தரைப்படையினரையே நம்பியிருக்கும் சூழல் உள்ளது. இஸ்ரேலிய படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்ற போதும், நகர்ப்புறங்களில் போர் புரிவது அவர்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம். இஸ்ரேல் இது வரை தரைப்பகுதியில் குறைவான அளவிலேயே போர் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட பல காணொளிகளிலும் கூட அதன் தரைவழி சண்டைகள் பெரும்பான்மையாக அதன் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சார்ந்து இருப்பதையே காட்டுகின்றன. மதிப்பீடுகளின் அடிப்படையில் , தற்போதைய நிலவரப்படி காஸா பகுதிக்குள் 30 ஆயிரம் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இருக்கலாம். ஆனால் இது அதன் ஒட்டுமொத்த ராணுவமான 1.60 லட்சம் செயல் வீரர்கள் மற்றும் 3.60 லட்சம் ரிசர்வ் வீரர்களில் ஒரு சிறு பகுதிதான். ராணுவ நிபுணரான ஜஸ்டின் கிரம்ப் பேசுகையில், இங்கே கேள்வி என்னவென்றால் காஸாவில் உள்ள ஒட்டுமொத்த கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்களை மொத்தமாக அழித்தொழிக்க எத்தனை தரைப்படை வீரர்களை இஸ்ரேல் நிலைநிறுத்தப்போகிறது? இதற்கு பதிலாக, அது ஹமாஸின் வலுவான தளங்களை குறிவைக்கும் முடிவை எடுக்கலாம். இஸ்ரேல் மிக சிறிய அளவிலான சண்டையிடுதலை தவிர்க்க விரும்புவதாக அவர் நம்புகிறார். இது கண்டிப்பாக பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். பட மூலாதாரம்,REUTERS போருக்குப் பின் என்ன நடக்கும்? கேள்வி என்னவென்றால் ஹமாஸை மொத்தமாக அழித்தொழிக்கும் இஸ்ரேலின் இலக்கு சாத்தியப்படுமா? இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் கூட வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களை நம்பும் எந்த ஒரு சிந்தனையையும் மொத்தமாக அழிப்பது சாத்தியமில்லாதது என்றே நம்புகின்றனர். ஹமாஸின் பல மூத்த தலைவர்கள் காஸாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். காட்ஸை பொறுத்தவரை, இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினர் சிலர் பிழைத்திருந்தால் கூட, அவர்கள் “நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் , நாங்கள் வென்று விட்டோம்” என்று கூறலாம். அதனால்தான், அக்டோபர் 7 சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஹமாஸை மொத்தமாக அழிப்பதை விட, அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் இஸ்ரேலின் கவனம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் கிரம்ப். போருக்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை கூறுமாறு இஸ்ரேல் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. நிபுணர்களின் கருத்துப்படி, போருக்கு பிந்தைய திட்டமில்லாமல் தொடங்கப்பட்ட பல போர்கள் வெற்றியில் முடிந்ததில்லை. ஆனால், இஸ்ரேல் ராணுவ முகாமில் இந்த திட்டமிடலை மட்டும் சுத்தமாக காண முடியவில்லை. https://www.bbc.com/tamil/articles/cx01q8p5jnwo
  10. இஸ்ரேல் ஹமாஸ் போர் - காசாவின் தென்பகுதியில் வீதிகளில் சடலங்களும் இஸ்ரேலிய டாங்கிகளும் - தப்பியோடும் மக்கள் தெரிவிப்பு Published By: RAJEEBAN 12 NOV, 2023 | 11:19 AM காசாவின் வடபகுதியில் இடம்பெறும் கடும் மோதல்களில் இருந்து தப்பியோடும் மக்கள் வீதிகளில் இஸ்ரேலிய டாங்கிகளையும் அழுகிய நிலையில் சடலங்களையும் காண்பதாக தெரிவித்துள்ளனர். பொதுமக்களை குறிப்பிட்ட நேரங்களில் சலால் அல் டின் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் துண்டுபிரசுங்கள் மூலமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. தப்பியோடும் மக்களின் பயணம் எவ்வாறானதாக காணப்படுகின்றது. அவர்களின் பயணிக்கும் பகுதிகளில் இருந்து வெளியான வீடியோக்களை பிபிசி ஆராய்ந்துள்ளது.நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை செவிமடுத்துள்ளது.தெளிவான விபரங்களை பெறுவதற்காக செய்மதி படங்களை ஆராய்ந்துவருகின்றது. மோதல்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காசாவில் ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர். ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவின் மீது கடுமையான குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களை சலால் அல் டினான் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்தாலும் அவர்கள் அங்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன் கிழமை அகமட் ஜெயாடா தனது இடம்பெயர்வு குறித்து பிபிசியின் உள்ளுர் பத்திரிகையாளருக்கு கருத்து தெரிவித்தார். வடபகுதியில் உள்ள அல் நசாரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். தனது கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் மிகவும் களைப்படைந்துள்ளோம் என்ன செய்வது எங்கு போவது என தெரியவில்லை யாரிடம் போவது எங்களை காப்பாற்றுங்கள் என யாரிடம் தெரிவிப்பது என கேள்வி எழுப்பியுள்ளார். காசாவின் வடபகுதியில் உள்ள அல்ஜெய்டவுனிலிருந்து மஹ்மூட் கஜாவி தப்பி வெளியேறியுள்ளார் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களே இதற்கு காரணம். மதியம் தனது வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ஐந்து மணித்தியாலங்களாக நடந்துகொண்டிருக்கின்றார் - எங்கு போவது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார். வீதியோரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்தார். பெரும்பாலானவர்கள் நடந்தே செல்கின்றனர் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை வாகனங்களை காசா நகரத்தின் தென்பகுதியின் எல்லையில் விட்டுவிட்டுச்செல்லுமாறு பணித்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. செல்லும் வழியில் நான் பல சடலங்களை பார்த்தேன் வீதியின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகளையும் பொதுமக்களையும் காணமுடிகின்றது ( நெட்சாரிமிற்கு அருகில்) அவர்கள் எங்களை நோக்கி வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் உடல்களை உடல்பாகங்களை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். டெலிகிராமில் வெளியாகியுள்ள மற்றுமொரு வீடியோவில் பெண்ணொருவர் வீதியில் உடல்கள் குறித்து தெரிவித்துள்ளார். நான் நெட்ஜாரிம் சந்தியில் எனது மகனை தேடினேன் தென்பகுதி நோக்கி செல்லும்போது வீதியில் ஏனையவர்களின் உடல்களிற்கு மத்தியில் அவரின் உடலை பார்த்தேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். நான் இஸ்ரேலிய டாங்கிகளை கண்டேன் அவற்றை நான் கவனத்தில் கொள்ளவில்லை திரும்பிபார்த்தபோது எனது மகனின் உடலை பார்த்தேன் அவரது கையடக்க தொலைபேசி உடல்களை வைத்து அவற்றை அடையாளம் கண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட் பெண் முதல்நாள் அல்அக்சா மருத்துவமனைக்கு சென்று தனது மகனை தேடினார் அவர் தனது மகன் இறந்துவிட்டதாக பதிவு செய்தார் அன்றே அவரது மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என உள்ளுர் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். எனினும் சலா அல் டின் வீதிகளில் உடல்கள் காணப்படும் வீடியோக்கள் எவற்றையும் பார்க்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169098
  11. ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது. https://tamilwin.com/article/all-sri-lankan-players-removed-from-ipl-auction-1699698789
  12. பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் - தீபாவளி நிகழ்வில் கமலா ஹாரிஸ் 11 NOV, 2023 | 01:11 PM இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300 க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம். இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/169044
  13. இஸ்ரேலும் ஹமாஸும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளன - ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 10 NOV, 2023 | 12:14 PM ஹமாஸ் அமைப்பினால் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் போர்க்குற்றமாகும் என ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார். அதேபோன்று ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளும் போர்க்குற்றமே என ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168970
  14. மத்திய கிழக்கில் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாத விடயமாகியுள்ளது - ஈரான் 10 NOV, 2023 | 03:27 PM இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளார். காசாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரதன்மை காரணமாக போர் விரிவடைவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்டோலஹியான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169000
  15. ஹமாஸுடனான மோதல்களில் மனிதாபிமான இடைநிறுத்தம் : இஸ்ரேல் அறிவிப்பு – பைடன் வரவேற்பு Published By: RAJEEBAN 10 NOV, 2023 | 06:18 AM ஹமாசுடனான மோதல்களின் போது மனிதாபிமான இடைநிறுத்தத்தை கடைப்பிடிப்பது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இஸ்ரேலின் இந்த அறிவிப்பை சரியான திசையிலான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் நான் இஸ்ரேலிய தலைவர்களுடன் பேசிய பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை முதல் மோதலில் இருந்து மக்கள் வெளியேற அனுமதிப்பதற்கான இரண்டு மனிதாபிமான பாதைகள் காணப்படும் என பைடன் தெரிவித்துள்ளார். பொதுமக்களிற்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்காக மூலோபாய இடைநிறுத்தங்களை கடைப்பிடிக்கப்போவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் இது நிச்சயமாக யுத்தநிறுத்தமில்லை என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/168955
  16. காசாவில் கடும் மோதல் - சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி ஹமாஸ் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் Published By: RAJEEBAN 09 NOV, 2023 | 02:56 PM ரொய்ட்டர்ஸ் காசாவில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன. ஹமாஸ் அமைப்பினர் சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். காசா நகரத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ள அதேவேளை இஸ்ரேலிய படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசாவின் குண்டுவீச்சினால் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களிற்கு அருகில் கடும் வீதிமோதல்கள் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் அதிரடி தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர் - இஸ்ரேலிய டாங்கிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். https://www.virakesari.lk/article/168918
  17. ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கங்கள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் தகவல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது. 2 ஆவது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படை முன்னேறி சென்றது. காசா சிட்டியை இஸ்ரேல் இராணுவத்துடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து முன்னேறியது. இதற்கிடையே காசா சிட்டியின் மையப்பகுதிக்குள் இராணுவம் நுழைந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது. அங்கு ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தகர்க்க தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதனால் காசா சிட்டியில் இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. அக்குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கங்களின் இருப்பிடங்களை கண்டறிந்து அதனை வெடிவைத்து தகர்த்தனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காசா மற்றும் காசா சிட்டியில் கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து நடந்தபடியே தெற்கு காசா நோக்கி செல்கிறார்கள். இதற்கிடையே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். அதே போல் மேற்கு காசாவில் உள்-அல்-நாஸ்ர் ஆஸ்பத்திரி அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் விமான தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். மேலும் அல்-ஷிபா மருத்துவ வளாகம் அருகே தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,500யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் போரில் கடுமையாக சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறும்போது இஸ்ரேல் இராணுவத்தினரை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அதன் டாங்கிகள் மற்றும் வாகனங்களை அழித்ததாகவும் தெரிவித்து உள்ளனர். https://thinakkural.lk/article/280740
  18. வீட்டின் மீது குண்டுவீசும் முன் செல்போனில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை - திக் திக் நிமிடங்கள் படக்குறிப்பு, மஹ்மூத் ஷஹீன் 5 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 8 நவம்பர் 2023 காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஹமாஸ் குழுவின் ஆயுதப் பிரிவு தலைவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நீடிப்பதால் காஸாவில் மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது. அந்த பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். எந்த நேரத்திலும் மோசமடையக் கூடிய ஆபத்தில் உள்ள போர்ச் சூழ்நிலையை சமாளிப்பதுதான் அவருடைய திட்டமாக உள்ளது. பட மூலாதாரம்,IDF ஹமாஸ் உளவுப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு ஹமாஸ் ஆயுதக் குழுவின் உளவுத்துறை மற்றும் ஆயுதத் துறையின் தலைவராகவும், "வியூகரீ தியிலான வெடிமருந்துகள் மற்றும் ராக்கெட் தயாரிக்கும் அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான மொஹ்சென் அபு ஜினாவைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறுகின்றன. " இஸ்ரேல் ராணுவம் தினமும் காலையில் அளிக்கும் செய்தி ஒன்றில், ஹமாஸ் உள்கட்டமைப்பைத் தாக்க "காஸாவின் உள்ளே பயங்கரவாதிகளை ஒழிக்கும் விமானத் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக" இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. "காஸா நகரில் வான்வழித் தாக்குதல்களில் வீடுகள் சேதப்படுத்தப்படுவது மற்றும் பொதுமக்களைக் கொல்லப்பட்டது பற்றிய விவரங்களைத் தான் நாங்கள் பெறுகிறோம் - விரைவில் அதைப் பற்றிய புதிய விவரங்களை வெளியிடுவோம்" என்று இஸ்ரேல் கூறியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS தாக்கும் முன் செல்போனில் எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை காஸா உள்ளூர்வாசி ஒருவருக்கு இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது இஸ்ரேல் 12 நாட்களாக காஸா மீது குண்டுவீசிக் கொண்டிருந்தபோது, விடியற்காலையில் மஹ்மூத் ஷஹீனுக்கு அழைப்பு வந்தது. அவர் காஸாவின் வடபகுதியின் நடுத்தர வர்க்கத்தினரின் வசிப்பிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். மூன்றாவது மாடியில் 3 படுக்கை அறைகளுடன் உள்ள தனது வீட்டில் வசிக்கும் அவர், அவர் குடியிருக்கும் பகுதி அதுவரை இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறுகிறார். இந்நிலையில், அவர் வீட்டுக்கு வெளியே திடீரென ஒரு கூச்சல் கேட்டது. "உடனடியாக நீங்கள் தப்பிக்க வேண்டும்," என தெருவில் யாரோ கூச்சலிட்டனர். "அவர்கள் அடுக்குமாடிக் கட்டடங்கள் மீது குண்டு வீசுவார்கள்". அவர் தனது கட்டடத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்தைத் தேடி சாலையைக் கடக்கும்போது, அவரது செல்போன் ஒலித்தது. "நான் இஸ்ரேலிய உளவுத்துறையிலிருந்து பேசுகிறேன்," என்று ஒரு நபர் கூறினார் என மஹ்மூத் தெரிவித்தார். அந்தக் குரல் மஹ்மூத்தை முழுப்பெயரால் அழைத்து அரபி மொழியில் பேசியது. "அவர் என்னிடம் மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது வெடிகுண்டு வீசப் போவதாகசொன்னார். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும்படி எனக்கு உத்தரவிட்டார்." இந்த தாக்குதலின் போது, இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவாசிகளை எச்சரிக்க சில சமயங்களில் இதுபோல் தொலைபேசியில் அழைத்தது. மஹ்மூதின் தொலைபேசிக்கு இதுபோல் முன்னெப்போதும் எந்த அழைப்பும் வந்ததில்லை என்றும், அந்த அழைப்பின் போது முழுமையான விவரங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். போர் நிறுத்தம் - உடன்பட மறுக்கும் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கும், சனிக்கிழமை ஜோர்டானுக்கும் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை மேற்குக் கரை, இராக் மற்றும் துருக்கியைச் சென்றடைந்தார். அவர் தங்கியிருக்கும் இடங்களிலெல்லாம் பல்வேறு விதமான சவால்களும் நம்பிக்கையின்மையும் தான் காத்திருந்தன. பிளிங்கன் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான வழியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அதைப் பின்பற்ற யாரும் தயாராக இல்லை. வெள்ளிக்கிழமையன்று, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை இடைநிறுத்தம் (போர்களை தற்காலிகமாக நிறுத்துதல்) செய்யும் முயற்சியாக இஸ்ரேலிய தலைவர்களை சமாதானப்படுத்த பிளிங்கன் முயன்றார். ஆனால் இஸ்ரேலிய பிரதமர் அதற்கு உடன்படாமல், உடனடியாக மறுத்துவிட்டார். அடுத்த நாள், இஸ்ரேலின் அண்டை நாடுகளின் பிரதிநிதிகளை பிளிங்கன் சந்தித்தார். அனைவரும் உடனடியாக போர் நிறுத்தத்தை விரும்புகிறார்கள். இஸ்ரேல் போர்க் குற்றம் இழைக்கிறது என்று ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாடி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பைடன் கூறியது என்ன? கள நிலவரம் என்ன? இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் 'நல்ல' முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பைடன் ஒரு மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் மத்திய கிழக்கில் அப்படி இல்லை. ஞாயிற்றுக் கிழமையன்று பிளிங்கன் எங்கு சென்றாலும் மிகுந்த ரகசியம் காக்கிறார் என்பதிலிருந்தே இங்கு எவ்வளவு பதற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பாலத்தீன அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸைச் சந்திப்பதற்காக அவர் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க ரமல்லாவை அடைந்தார். சாலையின் பாதுகாப்பை பாலத்தீன அரண்மனை காவலர்கள் கவனித்துக்கொண்டனர். அவர் இராக்கிற்குச் சென்றபோது, இரவு நேரமாகிவிட்டது. பாக்தாத் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க தூதரகத்திற்கு ஹெலிகாப்டரில் பிளிங்கனும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகளும் சென்றபோது, அவர்கள் அனைவரும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்களை அணிந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பிரதமர் ஷியா அல் சுடானியைச் சந்திக்க பாதுகாப்பு வாகனங்களுடன் பயணம் செய்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஒருபுறம் தீயை அணைத்தவுடன், மறுபுறத்தில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்குகின்றன. பட மூலாதாரம்,REUTERS இஸ்ரேல், அரபு நாடுகள் கூறுவது என்ன? காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அமெரிக்கா இஸ்ரேலுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அரபு நாடுகளைப் பொறுத்த வரையில், 'போர் நிறுத்தம் குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் அவர் பேசிய அனைவருமே மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வது, பணயக்கைதிகளை விடுவிக்கவும், காஸாவுக்கு உதவிகளை வழங்கவும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றவும் உதவும் என்று நம்புகிறார்கள். அண்மைக் காலமாக இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் இதில் சில சிக்கல்களும் இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது, ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக்குள் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதால், அரபு நாடுகளோ அல்லது இஸ்ரேலோ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பிளிங்கன் சாதித்தது என்ன? பிளிங்கன் வருகைக்குப் பின்னர் இதுவரை கிடைத்துள்ள நேர்மறையான தகவல் என்னவென்றால், அவர் அனைத்துத் தரப்பினருடனும் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதுடன், தற்போதைய போர் அனைவரும் அஞ்சிய அளவுக்கு மிகவும் பெரிய தாக்குதலாக உருவெடுக்கவில்லை என்பது மட்டும் தான். பாலத்தீனர்களின் நீண்டகால எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அப்பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான வழியைக் கண்டறிய பிளிங்கன் தனது அரபு சகாக்களை ஊக்குவிக்கிறார். ஆனால் இது பெரிய வெற்றியை அடைவதாகத் தெரியவில்லை. ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் சஃபாடி, 'போருக்குப் பிறகு காஸாவின் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில், எதைப் பற்றியும் எப்படி சிந்திக்க முடியும்?' எனக்கேள்வி எழுப்புகிறார். இது தொடர்பாக அவர் பேசியபோது, "நாங்கள் ஒரு பாழடைந்த நிலத்தைப் பற்றி பேசலாமா? அகதிகளாக ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பற்றிப் பேசலாமா?" எனக்கேள்வி எழுப்பினார். அக்டோபர் 12 அன்று வெள்ளை மாளிகையில் யூத சமூகத் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய பைடன், "இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடந்த இரத்தக்களரி மற்றும் சோகத்திற்குப் பிறகும் கூட, மத்திய கிழக்கில் சில நல்ல முடிவுகளை ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் மனரீதியாக ஒரு நம்பிக்கையாளர் என்ற நிலையில் இருப்பதாக மட்டும் உணர்கிறேன்," என்றார். ஆனால், மத்திய கிழக்கின் நிலைமையைப் பார்த்தால், எந்த எதிர்பார்ப்பிலும் மிகச் சிலரே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மஹ்மூத் அப்பாஸ் - பிளிங்கன் பேசியது என்ன? அங்குள்ள பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையகத்தில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை அவர் சந்தித்தார். அப்போது, மேற்குக் கரையில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. "இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்னை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாலத்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். காஸாவில் உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். பாலத்தீனர்களை "வலுக்கட்டாயமாக இடம்மாற்றம் செய்யக்கூடாது" என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார் என்று மேத்யூ மில்லர் கூறினார். பிளிங்கனும் அப்பாஸும் மேற்குக் கரையில் "அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான" முயற்சிகள் குறித்து விவாதித்தனர். இதில் "பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இத்தாக்குதலுக்கு யார் பொறுப்போ, அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது" ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். "பாலத்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து சமமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் மீண்டும் வலியுறுத்தியதாக மில்லர் கூறினார். "பாலத்தீன அரசை உருவாக்குவதற்காக பாலத்தீனர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றத் தேவையான" பணிகளை நிறைவேற்றுவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் பிளிங்கன் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA மனிதாபிமான போர் இடைநிறுத்தம் - அமெரிக்கா சூசகம் மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தம் செய்வது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசகமாக தெரிவித்துளளார். இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தம் செய்வதை நோக்கி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் அவர் என்ன சொன்னார்?. சனிக்கிழமை, பைடனிடம் செய்தியாளர்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று கேட்டனர். டெலாவேரில் உள்ள ஒரு தேவாலயத்தை விட்டு வெளியேறிய போது அமெரிக்க அதிபர் வெறுமனே "ஆம்" என்று கூறி கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார். பட மூலாதாரம்,REUTERS போர் நிறுத்தம் - மனிதாபிமான இடைநிறுத்தம் என்ன வேறுபாடு? காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மற்ற சக்திகள் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. இது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய அரசாங்கங்களால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு பயனளிக்கும் என்று கூறுகின்றன. நாங்கள் கூறிவருவதைப் போல் அமெரிக்கா அதற்கு பதிலாக ஒரு மனிதாபிமான ரீதியிலான இடைநிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் என்ன வித்தியாசம்? ஒரு முறையான போர் நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, மனிதாபிமான இடைநிறுத்தங்கள் குறுகிய காலத்திற்கு நீடிக்கும். சில நேரங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் பொதுவாக வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் குறிப்பிட்ட இடத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நீண்டகால அரசியல் தீர்வுகளை அடைவதற்கு மாறாக, மனிதாபிமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் அவை பொதுவாக செயல்படுத்தப்படுகின்றன. இதற்கிடையில், போர்நிறுத்தங்கள் நீண்ட கால நோக்கம் கொண்டவை. மேலும் பெரும்பாலும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதிப்பதை போர் நிறுத்தம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று ஐ.நா கூறுகிறது. பட மூலாதாரம்,EPA காஸா மக்கள் தெற்கே இடம்பெயர அவகாசம் - இஸ்ரேல் வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர நான்கு மணி நேர அவகாசத்தை அளிக்கப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இடம்பெயர்வதற்கான பாதை, காஸா பகுதியில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையான சலா அல்-தின் சாலை என்றும், - உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை (0800-12:00 ஜிஎம்டி) பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையும் இதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அந்தச் சாலையில் பணியாற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. பொதுமக்களை "மனிதக் கேடயங்களாகப்" பயன்படுத்த ஹமாஸ் அமைப்பு முயற்சிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. மீண்டும் நினைவூட்டும் வகையில், வடக்கு காஸாவை பொதுமக்களை வெளியேற்றும் பகுதியாக இஸ்ரேல் அறிவித்தது. அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தென்பகுதியை நோக்கி பாதுகாப்பாகப் பயணிக்குமாறும் அழைப்பு விடுத்தது. இருப்பினும் தெற்கு பகுதியிலும் அப்போது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போதைய நிலையில், சுமார் 3,50,000 முதல் 4,00,000 பேர் தற்போது வடக்கு பகுதியில் தங்கியுள்ளனர் என்று அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c724n84xxxeo
  19. காசாவின் துயரங்களை பதிவு செய்வதற்காக அங்கேயே தங்கியிருப்பதற்கு கனடா பிரஜை தீர்மானம் - மத மனிதாபிமான கடமை என தெரிவிப்பு Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 10:48 AM காசாவில் இடம்பெறும் யுத்தத்தை பதிவு செய்வதற்காக தொடர்ந்து காசாவிலேயே தங்கியிருக்கப்போவதாக கனடாவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ள அதேவேளை தனது குடும்பத்தை அங்கிருந்து அகற்றியுள்ளார். காசாவில் தங்கியிருந்து அங்கு நடப்பவற்றை பதிவு செய்யவேண்டியது எனது கடமை என கருதுகின்றேன் என கனடாவை சேர்ந்த மன்சூர் சூமன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தனது மனைவியும் ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் காசாவில் தங்கியிருக்கவேண்டிய கடப்பாடு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2.3 மில்லியன் மக்களின் துயரம்நீடிக்கும்வரையில் காசாவிலேயே தங்கியிருப்பது அங்கு என்ன நடக்கின்றது என்ற உண்மையை வெளி உலகிற்கு தெரிவிப்பது எனது மத மனிதாபிமான கடப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். என்;னால் ஆங்கிலத்தில் உரையாட முடியும் நான் மேற்குலகில் வாழ்ந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெரூசலேத்தை சேர்ந்த அவர் இரண்டு வருடங்களிற்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குடியேற தீர்மானித்தார் - தனது பிள்ளைகள் தனது பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இந்த தீர்மானத்தை எடுத்தார். காசா எனது மனைவியின் பூர்வீகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இங்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம் எனது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைக்கு சென்றார்கள் நானும் மனைவியும் இங்கு தொழில்புரிகின்றோம் எங்களிற்கு நண்பர்கள் உள்ளனர் உள்ளுர் மசூதி மிகச்சிறந்த இடம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் யுத்தத்தின் பிடியில் சிக்குவோம் என எதிர்பார்க்கவில்லை எனதெரிவிக்கும் அவர் தான் வசிக்கும் கான்யூனிசில் ஒரு சிறிய மருத்துவமனையை உருவாக்கியுள்ளார் பிரசவ விடுதிக்கு அருகில் உள்ள சிறிய அறையில் அவர் உறங்குகின்றார். எப்போதெல்லாம் குழந்தையொன்று பிறக்கின்றதோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியான செய்தியை நான் செவிமடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/168786
  20. காசா நகரின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 06:22 AM காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தினர் காசாவின் மையபகுதியில் நிலைகொண்டுள்ளனர் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடல் வான் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். காசாவை சுற்றிவளைத்து படையினர் அதன் உள்ளே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காசா மக்களை தயவு செய்து தெற்கிற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/168773
  21. ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது. இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர் தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/280447
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 56 நிமிடங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இப்போது ஏன் சர்ச்சையாகியிருக்கிறது? ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்துஓ.என்.ஜி.சி நிறுவனம், இந்தத் திடத்திற்காகத் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை வட்டத்திலும் சோதனைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,PROFEESOR JAYARAMAN படக்குறிப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ‘விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும்’ ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதிய சோதனை கிணறுகள் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி அளிக்க கூடாது, என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் காவிரி படுகை முழுவதும் அறிவிக்கப்படவில்லை. கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார். தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விளையும் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படாத பகுதியில் தலா 5 புதிய கிணறுகள் என மொத்தம் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு அனுமதி தர மறுத்து விண்ணப்பங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே முடிவை ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்,” என்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும், என்றார் பேராசிரியர் ஜெயராமன். “ஆனால் அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பல முன்னுதாரணங்கள் முன் வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார். மேலும் பேசிய அவர், "கடந்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்த இடங்களில் குழாய் மற்றும் சிமெண்ட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபடுகிறதாகவும், அதனால் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதே அரசுக்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோள்" எனவும் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து? ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 30க்கும் மேற்பட்ட எண்ணெய் எரிவாயு கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாகக் கிணறுகள் தோண்டப்படுவதால் என்ன பிரச்னை ஏற்படப் போகிறது? இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜெயராமன், "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணறுகளில் ஆழம் குறைவாக இருப்பதால் தளர்வான பகுதியில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது என்றும், இதனால் பூமிக்கு அடியில் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறினார். “ஆனால், தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தின் படி ஒரு ரசாயனக் கலவை பூமிக்குள் செலுத்தப்பட்டு நிலத்தடியில் இருக்கக் கூடிய வண்டல் பாறை, களிப்பறை ஆகியவை செயற்கையாக நொறுக்கப்பட்டு எண்ணெய் மற்றும் மீத்தேன் எரிவாயு வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூமிக்குள் செலுத்தப்படும் இந்த ரசாயனங்கள் அபாயகரமானவையாக உள்ளன,” என்றார். மேலும் பேசிய அவர், இந்த நொறுக்குதல் முறையைச் செயல்படுத்த, மண்ணுக்கு அடியில் செலுத்துவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றார். “இதனை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன் விவசாயம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும்,” என்றார். படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள் அதேபோல், மண்ணுக்கு அடியில் செலுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் போது, அது முழுமையான வெளியே வராமல் மண்ணுக்கு அடியில் தங்கி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றார். மேலும், வெளியே வரும் நீர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கலந்து அதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படும், என்றும் கூறினார். “டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை மக்கள் நேரடியாக உணர்ந்ததால் மக்கள் போராடி இந்த திட்டங்களை கைவிட முயற்சி செய்தனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை செயல்பட்டு வரும் எரிவாயு கிணறுகள் பாதிப்பு ஏற்படாததால் மக்கள் அதனுடைய ஆபத்துகளை இன்னும் உணராமல் இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது செழிப்படைந்து வருவதால் இங்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது,” என்றார் பேராசிரியர் ஜெயராமன். பட மூலாதாரம்,FACEBOOK/SUNDARRAJAN படக்குறிப்பு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ‘புதிய கிணறுகளுக்கான கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்’ தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் தெரிந்தும் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியதை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும், என்றார். “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளைத் தளர்த்தி மாநில அரசின் அனுமதியுடன் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை புதிதாக அமைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் எங்கும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்,” என்றார். மேலும், “தமிழகத்தில் எந்த இடத்திலும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் புதிய கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் அனுமதி கோரியுள்ளதை பார்க்கும் போது மாநில அரசால் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் புதிய கிணறுகளை தமிழகத்தில் அமைத்திட அனுமதி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அனுமதி கோரி இருப்பதாக தோன்றுகிறது,” என்றார் சுந்தர்ராஜன். ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் நிபுணர் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது, என்று கூறிய அவர், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுந்தர்ராஜன் தெரிவித்தார். பட மூலாதாரம்,NAVASKANI படக்குறிப்பு, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ‘ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்’ இது குறித்து ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிபிசி தமிழிடம் பேசுகையில், தமிழக அரசு நிச்சயமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு எரிவாயு கிணறுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வரும்அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசு அனுமதி நிராகரித்த நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நீதிமன்றத்தின் வாயிலாக புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி பெற்று கிணறுகள் அமைத்தால் மக்களை ஒன்று திரட்டி அதை தடுத்து நிறுத்துவோம். ராமநாதபுரம் மாவட்டம் மண்ணில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விடமாட்டோம்,” நவாஸ்கனி தெரிவித்தார். பட மூலாதாரம்,MEYYANATHAN படக்குறிப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’ இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனுடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதிப்பதில்லை, என்றார். “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதால் டெல்டா மாவட்டத்தை தவிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்,” என்றார். மேலும் பேசிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி இருந்தததாகவும், பின்னர் பல்வேறு காரணங்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறினார். தற்போது அதே 20 கிணறுகளை புதிதாக அமைத்திட அனுமதி கோரியுள்ளனரா, அல்லது வேறு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து விட்டு தெரிவிப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cx91ljpgjjxo
  23. ஹமாசுடான மோதலின் பின்னர் காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு - பெஞ்சமின் நெட்டன்யாகு Published By: RAJEEBAN 07 NOV, 2023 | 04:23 PM ஹமாசுடனான யுத்தத்தின் பின்னர் காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்கும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காலவரையறையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்காகவும் பணயக்கைதிகள் வெளியேற உதவுவதற்காகவும் மோதல்களின் போது தந்திரோபாய ரீதியில் சிறிய இடைநிறுத்தங்களை செய்ய தயார் எனவும் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஏபிசி நியுசிற்கான பேட்டியின் போது மோதல் முடிவடைந்த பின்னர் காசாவை யார் நிர்வகிக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவின் பாதுகாப்பை காலவரையற்ற காலத்திற்கு இஸ்ரேல் இராணுவம் பொறுப்பேற்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் பாதுகாப்பை பொறுப்பேற்காவிட்டால் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவான யுத்தநிறுத்தம் தனது நாட்டின் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனான அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றது போல மனிதாபிமான காரணங்களிற்காக சண்டையை இடைநிறுத்த தயார் சூழ்நிலைகளின் அடிப்படையில் அது பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/168750
  24. காசா மீது அணுவாயுத தாக்குதல்களை நடத்தவேண்டும் - கருத்து தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் இடைநிறுத்தம் Published By: RAJEEBAN 06 NOV, 2023 | 01:23 PM காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடும்கண்டனங்களை எதிர்கொண்டது. பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கலாச்சார அமைச்சரும் அதிதீவிரவாத அரசியல்வாதியுமான அமிச்சே எலியாகு பாலஸ்தீன பிரதேசங்கள் மீது இஸ்ரேலின் பதிலடி குறித்து தான் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். காசா பள்ளத்தாக்கை மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதை அவர் ஆதரித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் நிலை குறித்த கேள்விக்கு அவர் அவர்கள் அயர்லாந்திற்கு செல்லலாம் அல்லது பாலைவனம் செல்லலாம் என தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள அரக்கர்கள் தங்களிற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். காசா பள்ளத்தாக்கிற்கு உயிர்வாழ உரிமையில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ஹமாஸ் பாலஸ்தீன கொடியை ஏந்துபவர்கள் எவரும் உயிர்வாழ தகுதியுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168649
  25. இஸ்ரேல் பிரதமர் பதவி விலகவேண்டும் - ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 05 NOV, 2023 | 12:58 PM இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பதவி விலகவேண்டும் என கோரி ஆயிரக்கணக்கானவர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் கடந்த மாதம் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதல் இஸ்ரேல் ஹமாஸ் மோதலிற்கு வழிவகுத்துள்ள நிலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய பிரதமரின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் பதவி விலகவேண்டும் பணயக்கைதிகளை மீட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/168552

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.