Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாசின் வான்படை தளபதி கொலை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 21 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், காசாவில் ஹமாசின் வான்படை தளபதி இஸ்லாம் அபு ருக்பே கொல்லப்பட்டான் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் உளவு அமைப்பான ஷின்பெட் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை ருக்பே நிர்வகித்து வந்தார். இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் மூளையாக செயற்பட்டது ருக்பே என விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 14 ஆம் திகதி ஹமாஸ் விமானப்படையின் முந்தைய தளபதி முராத் அபு முராத் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/279039
  2. காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம்- WHO தலைவர் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். வான்தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சில தினங்களாக பீரங்கிகள் மூலமாக காசாவில் சிறுசிறு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 20 இலட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெ காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேபோல் யுனிசெப் தலைவர் ரஸல், “எங்களுடன் பணிபுரியம் சக அதிகாரிகள் உடனான தொடர்பை இழந்து விட்டோம். அவர்கள் பாதுகாப்பு விசயம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/279007
  3. பகல சுகுணாகர்: கத்தாரில் 8 இந்தியர்கள் செய்த குற்றத்தையே கூறாமல் மரண தண்டனை விதிப்பதா? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, பகல சுகுணாகர் உள்ளிட்ட இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் இந்திய கடற்படையின் எட்டு முன்னாள் ஊழியர்களுக்கு கத்தாரில் உள்ள கத்தார் முதன்மை நீதிமன்றம் அக்டோபர் 26 அன்று மரண தண்டனை விதித்தது. இவர்களில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பகல சுகுணாகரும் ஒருவர். கைது செய்யப்பட்டவர்களில், நவ்தேஜ் சிங் கில், சவுரப் வசிஷ்ட் மற்றும் பிரேந்திர குமார் வர்மா ஆகியோர் கேப்டன்களாகவும், பூர்ணேந்து திவாரி, அமித் நாக்பால், ராகேஷ் மற்றும் சுகுணாகர் ஆகியோர் தளபதிகளாகவும் பணிபுரிந்தனர். இவர்கள் அனைவரும் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இத்தாலியிடமிருந்து மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் கத்தாரின் ரகசியத் திட்டத்தின் விவரங்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் கைது செய்யப்பட்டதாக பகல சுகுணாகரின் உறவினர் கபூர் கல்யாண சக்ரவர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார். கபூர் கல்யாண சக்ரவர்த்தியின் சகோதரி முன்னாள் இந்திய கடற்படைத் தளபதி பகல சுகுணாகரை மணந்தார். சுகுணாகரின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகப் பதிலளித்து சுகுணாகரையும் மற்ற ஏழு பேரையும் சேர்த்து விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் கல்யாண சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டார். கத்தார் சிறையில் இருக்கும் சுகுணாகருடன் தனது சகோதரியைத் தவிர வேறு யாரும் பேச முடியாது என்றும் அவர் கூறினார். உண்மையில் பகல சுகுணகர் யார்? இந்த வழக்கின் மற்ற விவரங்கள் என்ன? இந்த வழக்கில் குடும்ப உறுப்பினர்களின் வாதம் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் கல்யாண சக்கரவர்த்தி மற்ற விவரங்களை விளக்கினார். கீழே தொகுக்கப்பட்டுள்ள அனைத்தும் அவருடைய சொற்களில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. சுகுணாகர் இந்திய கடற்படையில் விசாகப்பட்டினம், மும்பை மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பணியாற்றினார். கடந்த 2013ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற சுகுணாகர், பின்னர் கத்தாரை சேர்ந்த அல் தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 7 பேருக்கு அக்டோபர் 26ஆம் தேதி மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் சுகுணாகர் உள்ளிட்ட 8 பேருக்கும் அவர்கள் மீதான குற்றச்சாட்டையே பகிரங்கமாக கூறாமல் மரண தண்டனை என்று அறிவிப்பது எந்த அளவுக்கு நியாயம்? பட மூலாதாரம்,ANI இந்த எட்டு பேரும் கத்தாரில் உள்ள அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனம் கத்தார் கடற்படைக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் ரகசியத் திட்டத்திற்காக அல் தஹ்ரா நிறுவனம் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை பணியமர்த்தியிருந்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 30 அன்று கத்தாரின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு அவர்கள் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து சில மின்னணு ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் தொடங்கியது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி 8 மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் அந்த மனுக்களை நிராகரித்தது. இதற்கிடையில், கடந்த 26ம் தேதி, 'கத்தார் முதன்மை நீதிமன்றம்' அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. படக்குறிப்பு, அல் தஹ்ரா நிறுவனத்தின் பழைய இணையதளம் தற்போது செயல்படுவதில்லை. நிறுவனத்தின் இணையதளம் செயல்படவில்லை அல் தஹ்ரா நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் தோஹாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. கத்தார் கடற்படைக்கு பயிற்சி, பராமரிப்பு மற்றும் தளவாட உதவிகளை வழங்குவதாக இந்நிறுவனத்தின் பழைய இணையதளம் கூறியுள்ளது. ஆனால், தற்போது அந்த இணையதளம் செயல்படுவதில்லை. புதிய இணையதளத்தில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகளின் விவரங்களும் அதில் இடம்பெறவில்லை. நிறுவனத்தின் பெயரும் தஹ்ரா க்ளோபல் (Dahra Global) என மாற்றப்பட்டுள்ளது. நான் எப்போதும் இந்த இணையதளத்தை கவனித்து வருகிறேன். அதனால்தான் என்னால் இவற்றைச் சரியாகச் சொல்ல முடிகிறது. இந்த 8 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய தூதரகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 30 ஆம் தேதி, எட்டு பேருக்கும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்களின் கைது குறித்து சுகுணாகர் கவலை தெரிவித்ததால், இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் அக்டோபர் 3ஆம் தேதி அவர்களைச் சந்தித்தார். அப்போதிருந்து, குடும்ப உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தோஹாவில் இருந்தால், அவர்கள் சிறைக்குச் சென்று அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இஸ்ரேல் சார்பில் ரகசிய ஏஜென்டுகளாகச் செயல்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. படக்குறிப்பு, சுகுணாகர் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்ததாக அவரது மைத்துனர் கல்யாண சக்கரவர்த்தி கூறுகிறார். உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் விசாகப்பட்டினம் பகல சுகுணாகர் ஒருவர் ஆவார். விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த அவர், அங்கு தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர், கொருகொண்டா சைனிக் பள்ளியில் பயின்றார். அதன்பின், கடற்படை பொறியியல் கல்லூரியில் படித்து, கடற்படையில் சேர்ந்தார். தனது கடும் உழைப்பால் பின்னர் தளபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவரது பணிக்காலத்தில் ஒரு முறை, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படையில் சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு ஓய்வு பெற்று தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் சமீபத்தில் என் சகோதரி சிறைக்குச் சென்று சுகுணாகரைச் சந்தித்தார். அவர் சொன்ன விவரங்களின்படி, அங்கே உடல்நலம் குறித்த விஷயங்களைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. அதற்கும் மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது. கல்யாண சக்ரவர்த்தி இதுகுறித்து கூறுகையில், ‘‘சுகுணாகருடன் பேச, சந்திக்க எனது சகோதரியைத் தவிர வேறு யாருக்கும் கத்தார் அரசு வாய்ப்பளிக்கவில்லை,” என்றார். பட மூலாதாரம்,HINDUSTAN TIMES படக்குறிப்பு, மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பிரதமர் மோதி கத்தார் எமிருடன் பேசவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பிரதமர் பேசினால் போதும் முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்துக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தங்களுக்கு முன் உள்ள அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியது. 'அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரிந்த எட்டு இந்திய ஊழியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். முழு தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட நிபுணர்களிடம் நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். இது குறித்து கத்தார் அதிகாரிகளிடமும் பேசுவோம்” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கத்தார் அரசிடம் பிரதமர் மோதி பேசினால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று கல்யாண சக்கரவர்த்தி கூறினார். இந்த வழக்கில் அரசு ஏற்கனவே தீவிரம் காட்டிவருவதாகவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அரசை விட விரைவாக வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்திய அரசின் பதில் என்ன? இந்த வழக்கு தொடர்பாக சுகுணாகரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விசாகப்பட்டினத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யான ஜி.வி.எல். நரசிம்ம ராவை சந்தித்தனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கத்தாருக்கான இந்திய தூதர் விபுலிடம் பேசியதாக ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்தார். கத்தார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரத்தை அறிந்த எம்.பி ஜி.வி.எல். நரசிம்ம ராவ், இந்த உத்தரவின் இரண்டு வரிகள் மட்டுமே நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் முழு தீர்ப்பும் கிடைக்கும் என்றும் உள்ளூர் நீதிமன்றம் கூறியதாக தெரிவித்தார். 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கத்தாரில் அதிகாரம் மிக்க "கோர்ட் ஆஃப் கேசேஷன்" நடைமுறையும் இருக்கும் இருக்கும் என்றும் ஜிவிஎல் நரசிம்ம ராவ் நினைவூட்டினார். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னாள் கடற்படை ஊழியர்களை விடுவிக்க “முயற்சித்து வருகிறோம்” என்றார் அவர். முன்னாள் கடற்படை வீரர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இந்திய அரசு, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று அவர் கூறினார். ஜி.வி.எல். நரசிம்மராவ், ராஜ்யசபா எம்பி மட்டுமல்லாது, வெளியுறவுத் துறைக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjr0j1wre1ro
  4. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகனின் உடல்நிலை என் கண்முன்னால் மோசமடைகின்றது -சிகிச்சைக்கான வழிகள் இன்றி பரிதவிக்கும் காசா பெண் கதறல் Published By: RAJEEBAN 28 OCT, 2023 | 06:59 AM காசாவின் தென்பகுதியில் ரபாவில் வசிக்கும் அஸ்மாவின் பத்து வயது மகன் புற்றுநோயாளி. மோதல்கள் ஆரம்பமான பின்னர் அவர்கள் ஐநாவின் பாலஸ்தீனியர்களிற்காக முகவர் அமைப்பின் முகாமில் தஞ்சமடைந்தனர் எனினும் மகனின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் வீடுதிரும்பியுள்ளனர். தனது மகனிற்கு அவசியமாக தேவைப்படுகின்ற மருந்துகளை சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் அஸ்மா கடும் நெருக்கடிகளையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளார். இந்த வார ஆரம்பத்தில் காசாவின் ஐரோப்பிய மருத்துவமனையிலிருந்து சிறுவனிற்கு மருந்துகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் காணப்பட்டன ஆனால் மருத்துவமனையில் மருந்துகள் மருத்துவபொருட்களின் எண்ணிக்கை வேகமாக குறைவடைவதால் அந்த மருத்துவமனை சிறுவனிற்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளது. என் கண்முன்னால் எனது மகனின் உடல்நிலை மோசமடைவதை நான் பார்க்கின்றேன் என தாயார் பிபிசிக்கு தெரிவித்தார். காசாவின் ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான வாய்ப்புகள் காணப்படலாம் ஆனால் அவர்களால் அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது நான் ரபாவில் வாழ்கின்றேன் இஸ்ரேல் வாகனங்களை இலக்குவைத்து தாக்குவதால் என்னால் காசாவிற்கு செல்ல முடியாது பொதுமக்களின் வாகனங்களை அம்புலன்ஸ்களை கூட தாக்குகின்றனர் என அவர் தெரிவித்தார். இஸ்ரேல் காசாவிற்கான மின்சாரத்தை துண்டித்துள்ளதுடன் எரிபொருளை அனுப்ப மறுக்கின்றது. இது அஸ்மாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது வீட்டிலிருந்த எனது மகனின் மருந்துகள் சில பழுதடைந்துள்ளன எங்களால் மருந்துகளை பாதுகாக்கவோ சேமிக்கவோ முடியாது ஒருவரிடம் சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்கள் உள்ளன நான் அவரிடம் மருந்துகளை கொடுத்துவைத்திருக்கின்றேன் ஆனால் அந்த வீடு மிகவும் தூரத்தில் உள்ளது நாங்கள் அங்கு செல்வது மிகவும் ஆபத்தான விடயம் என அவர் தெரிவிக்கின்றார். bbc https://www.virakesari.lk/article/167915
  5. கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் எட்டுபேருக்கு மரணதண்டனை Published By: RAJEEBAN 27 OCT, 2023 | 05:07 PM முன்னாள் இந்திய கடற்படையினர் எட்டுபேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கத்தாரில் பணியாற்றிய இவர்கள் கடந்த வருடம் வேவுபார்த்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின்றன. எனினும் கத்தார் அவர்களிற்கு எதிரான தெளிவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை . நீதிமன்ற தீர்ப்பு குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம் இது குறித்து கத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது. மிகவும் முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பினை முழுமையாக எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாங்கள் குடும்பத்தவர்களுடனும் சட்டத்தரணிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளோம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அல்டகரா என்ற நிறுவனத்தின் பணியாளர்களிற்கே மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ள போதிலும் அவர்கள் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் அவர்களை இந்திய கடற்படையினர் என குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/167895
  6. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாசின் முக்கிய தளபதிகள் 2 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ கொமாண்டர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாசின் டார்ஜ் தபா பட்டாலியனின் கொமாண்டர் ரபத் அப்பாஸ், போர் மற்றும் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்ஜ் தபா பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/278929
  7. யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும்வரை பணயக்கைதிகளை விடுதலை செய்ய முடியாது - ரஸ்யாவில் ஹமாஸ் பிரதிநிதிகள் Published By: RAJEEBAN 27 OCT, 2023 | 02:23 PM யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் வரை பணயக்கைதிகள் எவரையும் விடுதலை செய்யப்போவதில்லை என ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் பிரநிதிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் எங்கிருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு காலம் தேவை என ஹமாஸ் பிரதிநிதியொருவர் ரஸ்ய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். ஹமாஸ் உறுப்பினர்கள் பெருமளவானவர்களை கைதுசெய்தனர் அவர்களை காசா பள்ளத்தாக்கில் தேடிக்கண்டுபிடித்து விடுதலை செய்வதற்கு கால அவகாசம் தேவை என ஹமாஸ் பிரதிநிதி தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது. நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/167876
  8. ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யா விஜயம் - பணயக்கைதிகள் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை Published By: RAJEEBAN 27 OCT, 2023 | 06:09 AM பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது. நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/167830
  9. பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள் இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொதுமக்களை ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையிலே இவ்வாறு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது . கடந்த 20 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். எதிரிகளிடமிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள சிலர் ஆயுதங்கள் கொண்டு போராடியும் உள்ளனர். தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மக்களிடம் ஆயுதங்கள் வைத்து கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி இந்நிலையில் தான் இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலானது துப்பாக்கி விதிகள் அதிகம் கொண்ட நாடாகும்.துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதியும் கிடையாது . இந்நிலையில் இஸ்ரேல் அரசு துப்பாக்கி விதியை தளர்த்தியுள்ளதோடு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவ அவசர உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்துள்ளது. குற்றப்பின்னணி அத்துடன், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் மற்றும் குற்றப்பின்னணி எதுவும் இல்லாத பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன் 50 துப்பாக்கிக்குண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 100 குண்டுகள் வைத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/isreal-new-announcement-1698309257
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல்கட்டத் தகவல் கிடைத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது. தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் தொடர்ந்து செயல்படுவதுடன், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், “இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அது குறித்து நெருக்கமாகக் கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தூதரக மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். கத்தார் அரசிடமும் இது குறித்து பேச்சு நடத்துவோம்,” என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரம், இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் ரகசியமாக இருப்பதால், தற்போது மேற்கொண்டு எந்தக் கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஏன் கத்தாரில் கைது செய்யப்பட்டனர்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு, கத்தாரில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள். இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'கடும் குற்றவாளிகளைப்' போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தாரில் பணியாற்றிய இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் முக்கிய ரகசியங்களை இஸ்ரேலுக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது. சிறையில் உள்ள இந்த இந்தியர்கள் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரை தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். கடந்த மே மாதம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள். இதுபோன்ற சர்வதேச விவகாரங்களில் இதற்கு முன்பு என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES குல்பூஷண் ஜாதவ் வழக்கு: பயங்கரவாதம் மற்றும் உளவு பார்த்ததாக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷணுக்கு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ் இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. ஒரு பிஸினெஸ் பயணத்திற்காக சென்றிருந்த குல்பூஷண் ஜாதவ் இரானில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியது. சர்வதேச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றது. குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மற்றும் சந்திப்பு வாய்ப்புகளை வழங்குமாறு பாகிஸ்தானை சர்வதேச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இராக்கில் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு இந்தியர்களின் விடுதலை: ”1990களில் இராக்கில் இரண்டு இந்தியர்கள் கடத்தப்பட்டபோது, கத்தாரில் உள்ள ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் தலையிட்டு இரு இந்தியர்களையும் விடுதலை செய்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது” என்று கராச்சியில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ராஜீவ் டோக்ரா கூறுகிறார். பிரிட்டனின் செவிலியர்கள் நாடு திரும்பிய விவகாரம்: 1997ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய செவிலியர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக செளதி அரேபியாவில் இரண்டு பிரிட்டிஷ் செவிலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் செளதி அரசு பிரிட்டிஷ் அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து செவிலியர்களை விடுவித்தது. அவர்கள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்கள் தாயகம் திரும்புதல்: பிரச்னைகளின் போது தனது குடிமக்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்த இந்தியாவின் சாதனை பாராட்டுக்குரியது. குவைத் மீதான இராக்கின் 1990-91 படையெடுப்பின்போது அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களாக இருந்தாலும் சரி அல்லது யுக்ரேனில் சிக்கித் தவித்த மாணவர்களாக இருந்தாலும் சரி அல்லது சமீபத்தில் சூடானில் சிக்கியவர்களாக இருந்தாலும் சரி, இந்தியா அவர்களை வெற்றிகரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூதரக மற்றும் சட்ட உதவிகளை அளிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சட்ட உதவி மற்றும் தூதரக உதவி போதுமா? நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க சிறையில் இருக்கும் தனது குடிமக்களுக்கு நல்ல வழக்கறிஞர்களை இந்தியா வழங்குவது முக்கியம் என்று தூதாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இதுமட்டும் போதாது. 27 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடான கத்தார், இந்தியாவுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக ஒரு சிறிய நாடுதான். ஆனால் இது பலவீனமானவர்களுக்கும் வலிமையானவர்களுக்கும் இடையிலான போட்டி அல்ல. செளதி அரேபியா போன்ற பெரிய மற்றும் சக்திவாய்ந்த அண்டை நாடுகளுடன் கத்தார் மோதியுள்ளது. செளதி அரேபியா அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தபோதிலும் கத்தார் தனது சக்திவாய்ந்த அண்டை நாட்டிடம் பயப்படவில்லை. கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின்போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கத்தார் அரசின் ஆதரவு பெற்ற ஒரு கூட்டமைப்பால் இயக்கப்படும் அரபு தொலைக்காட்சியான 'அல் ஜசீரா' குறித்து கத்தார் அமிரிடம் (கத்தார் தலைவர்) புகார் செய்தார். இதற்கு பதிலளித்த கத்தார் அமிர், 'அமெரிக்க அதிபர் சி.என்.என் ஊடகத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியாததைப் போல், 'அல் ஜசீரா'-வின் நிர்வாகத்தில் தானும் தலையிட முடியாது எனக் கூறிவிட்டார். இந்தியாவிற்கு வேறு என்ன வழி இருக்கிறது? இந்திய அரசு இரு முனை உத்தியைச் செயல்படுத்த வேண்டும். முதலாவது சட்டம், இரண்டாவது அரசியல். இந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன் பிபிசியிடம் பேசிய முன்னாள் தூதரக அதிகாரி அச்சல் மல்ஹோத்ரா, "முதல் கட்டமாக சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கட்டத்தில் சிறந்த சட்ட உதவியை வழங்கி அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முயல வேண்டும்," என்றார். இதனுடன் ஏதாவது விஷயம் தொடர்பாக நாம் கத்தாருக்கு உதவ முடியுமா, எதற்காவது அவர்களுக்கு ஆதரவளிக்க முடியுமா என்பதைக் கண்டறிய வேண்டும். அப்படியானால், இந்த விருப்பவழியை நாம் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அதைச் செய்தால், அவர்கள் இந்தியர்களை விடுவிக்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார். "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கு மாற்றாக அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்." கத்தார் தனது பெரிய அளவிலான வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்ட வேண்டும் என்றும் சிறையில் உள்ள இந்தியர்களின் விஷயத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும் முன்னாள் தூதரக அதிகாரி ராஜீவ் டோக்ரா விரும்புகிறார். "இந்தியா-கத்தார் உறவுகள், கத்தாரின் வெற்றிக்கு இந்தியர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முக்கியமாகப் பார்க்குமாறு கத்தார் தலைவர்களிடம் நான் பரிந்துரைக்கிறேன். கத்தார் இவற்றைப் புறக்கணிக்க முடியுமா, கத்தார் பிடிவாதமாக இருக்க முடியுமா?" என்று அவர் வினவினார். இந்த முழு அத்தியாயமும் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளைக் கெடுக்கும் சதி என்று ராஜீவ் டோக்ரா சந்தேகிக்கிறார். "அந்த நாடு பிரபலமடையத் தொடங்கிய காலத்தில் நான் கத்தார் நாட்டில் இந்திய தூதரக அதிகாரியாகப் பணியாற்றினேன். அது 80களின் பிற்பகுதியில் நடந்தது. ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் முதல் நாட்டின் தலைவர் (அமீர்) வரை அனைவரையும் என்னால் அணுக முடிந்தது. அப்போது இரு நாடுகளுக்கிடையே வலுவான உறவுகள் இருந்தன. ஆனால் அந்த உறவுகள் இந்த அளவுக்குப் பலவீனமடைந்தது எப்படி என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இந்தியாவுக்கு எதிராக கத்தார் அமீரிடம் யாராவது ஏதாவது சொல்லியிருப்பார்களோ!,” என்று அவர் சந்தேகம் எழுப்பினார். "கத்தாரில் ஒரு முக்கியமான திட்டத்தில் இந்தியர்கள் வேலை செய்வதை விரும்பாதவர்கள் உள்ளனர். ஆகவே, இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்தைப் புறக்கணிக்க முடியாது." https://www.bbc.com/tamil/articles/cxx6541436yo
  11. காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை - ஐநா Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 03:55 PM காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை என பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லைன் ஹாஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்குமாறும் அவர்கள் எங்கிருந்தாலும் உயிர்பிழைப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் வெளியேற்றும் பாதைகள் மீது குண்டுவீச்சு இடம்பெறுகின்றபோது வடக்கு தெற்கு மக்கள் மோதலில் சிக்குப்படும்போது உயிர் பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத போது மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்கள் இல்லாத போது மக்களிற்கு அசாத்தியமான வழிமுறைகளை தவிர வேறு எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167801
  12. ஊடகவியலாளர் வயெல்டாடோ தனது குடும்பத்தை இஸ்ரேலின் தாக்குதலில் இழந்துள்ள போதிலும அவரது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும் - அல்ஜசீரா Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 11:29 AM காசாவின் மத்தியில் இஸ்ரேலின் தாக்குதலால் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வயெல் டாடோசின் குடும்பத்தினர் கொல்லப்பட்டமைக்கு அல்ஜசீரா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நுசெய்ரட் அகதி முகாமில் ஊடகவியலாளரின் குடும்பத்தினர் அடைக்கலம் புகுந்திருந்தவேளை இடம்பெற்ற இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனியர் பத்திரிகையாளர்களை இலக்குவைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஊடகவியலாளரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் அராபிய பிரிவின் ஊடகவியலாளர் டமெர் அல்மிசால் ஊடகவியலாளர் டாடோசினை காசாவின் குரல் என வர்ணித்துள்ளார். வயெல் டாடோஸினை உலகபத்திரிகை துறையினதும் காசாவின் பத்திரிகை துறையினதும் தூண் என வர்ணித்துள்ள அவர் பல வருடங்களாக இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்தியை அவரே வெளியிட்டுள்ளார் எனவும் டமெர் அல்மிசால் குறிப்பிட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் வயெல் தொடர்ந்தும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டுவந்தார், காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக அவர் அங்கிருந்து வெளியேற மறுத்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது குரல் தொடரும் அதற்கான உத்தரவாதத்தை எங்களால் வழங்க முடியும் ஒவ்வொரு நாளும் உண்மையை கண்டுபிடிப்பதற்காக இந்த தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167774
  13. இரவோடு இரவாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் டாங்கிகள் பட மூலாதாரம்,X: @IDF படக்குறிப்பு, இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள தாக்குதல் வீடியோவில், வேலியை உடைத்துக்கொண்டு செல்லும் ஒடு டாங்கி 15 நிமிடங்களுக்கு முன்னர் நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் டாங்கிகள் வடக்கு காஸாவில் நுழைந்து ‘இலக்குகளைத் தாக்கியதாகத்’ தெரிவித்திருக்கின்றன. எதிர்பார்க்கப்பட்டபடி இஸ்ரேல் காஸா மீது தரைவழி ஆக்கிரமிப்பைத் தொடங்கவில்லை. ஆனால் நேற்று நடந்த இந்தத் தாக்குதல் ‘அடுத்த கட்டத் தாக்குதலுக்கான தயாரிப்பு’ என்று கூறியிருக்கிறது. இதற்குமுன் காஸாவுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியபின் இஸ்ரேல் காஸாவிற்குள் நுழைந்து இலக்குகளைத் தாக்குவது இது முதன்முறையல்ல. ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, முதன்முறையாக காஸாவில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்து ஹமாஸ் ராக்கெட் குழுவினரைத் தாக்க துருப்புக்கள் மற்றும் டாங்கிகளை இஸ்ரேல் காஸாவுக்குள் அனுப்பியது. அன்றுதான் வடக்கு காஸாவில் வசித்தவர்களைத் தெற்கு நோக்கி வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது. அதையடுத்து, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, காஸா பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போது, இஸ்ரேல் டாங்கியை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஏவுகணையால், ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்டார், மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘இது படையெடுப்புக்கான அறிகுறி’ இத்தகைய தாக்குதல்கள், ஒரு முழுமையான தரைவழிப் படையெடுப்பு நிகழவிருப்பதறகான அடையாளம் என்கிறார் ஜெருசலேமில் செய்தி சேகரித்துவரும் பிபிசியின் நிருபரான டாம் பேட்மன். இஸ்ரேலின் துருப்புக்கள் தரையில் உள்ள எதிராளியின் பாதுகாப்புக் கட்டமைப்புகளைக் கண்டுபிடித்து அழிக்க ஆய்வு செய்கின்றன, என்கிறார் அவர். இதுவரை வெளியாகியிருக்கும் படங்கள் ‘டாங்கிகள் மற்றும் கவசமிடப்பட்ட புல்டோசர்கள் காஸாவுக்கு உள்ளே செல்வதைக் காட்டுகின்றன’, என்னும் பேட்மன், “இஸ்ரேலிய அறிக்கை தரையில் சண்டையிடுவதைக் குறித்துப் பேசுகிறது. இருப்பினும் படங்கள் அதனைக் காட்டவில்லை,” என்கிறார். தாக்குதலின் முடிவில் துருப்புக்கள் வெளியேறியதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனாலும், இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதலைப் பற்றிப் பயன்படுத்தியிருக்கும் மொழி முந்தைய தாக்குதல்களின்போது பயன்படுத்தப்படதைவிட விட வலுவானது, என்கிறார் பேட்மன். இது ‘அடுத்த கட்ட தாக்குதலுக்கானத் தயாரிப்பின் ஒரு பகுதி’ என்று கூறியிருக்கிறது. தாக்குதலுக்கான எதிர்பார்ப்பு ஏன் முக்கியமானது? ஆனால், கதையாடலின் வழியே நடத்தப்படும் போரும் முக்கியமானது, என்கிறார் பேட்மன். “படையெடுப்பு எந்த நேரமும் நடக்கலாம் என்று எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்திருப்பது முக்கியம் என்று இஸ்ரேல் கருதுகிறது. மூன்று முக்கியக் காரணங்களுக்காக: ஒன்று, தன் மன உறுதியைத் தக்க வைத்துக்கொள்ள, அடுத்து, இஸ்ரேலின் உள்நாட்டு மக்களிடம் பதிலடி கொடுக்கப்படுகிறது என்பதைச் சொல்ல, மூன்றாவது, பணயக்கைதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்க,” என்கிறார் பேட்மன். https://www.bbc.com/tamil/articles/ckred17dn42o
  14. இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளரின் மனைவி, மகன், மகள் உட்பட குடும்பத்தவர்கள் பலர் பலி Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 06:41 AM இஸ்ரேலின் விமானதாக்குதலில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வைல் அல் டாடோவின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அல்ஜசீராவின் காசாவிற்கான குழுவின் தலைவர் வைல்அல் டாடோவின் மனைவி மகன் மகள் இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து மத்திய காசாவில் நுசெய்ரட் அகதிமுகாமில் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சு இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது. ஊடகவியலாளரின் மனைவி மகன் மகள் உட்பட குடும்பத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்த பேரன் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்தான் என மருத்துவமனை அறிவித்துள்ளது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. வெள்ளை துணியால் போர்த்தப்பட்ட தனது மகனின் உடலின் முன்னால் பத்திரிகையாளர் கதறி அழுதபடி காணப்படும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. காசாவின் அல் அக்சா மருத்துவமனையிலிருந்து அவர் தனது பேரனின் உடலை துயரத்துடன் கொண்டுவரும் படமும் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட மகனிற்கு 15 வயது மகளிற்கு ஏழு வயது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167752
  15. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதி ரவீந்திரன் பேசியதாவது:- இஸ்ரேல், பாலஸ்தீனம், இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும். இந்த போர் சூழல் அதிகரிப்பு மோசமாக மனிதாபிமான நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது. இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உட்பட 38 தொன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/278469
  16. சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் - சிஎன்என் Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 10:49 AM ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது. இஸ்ரேல் மீதான பயங்கரமான அதிரடி தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் சிறிய குழுவினர் காசாவில் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளிற்குள் தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்தி தொடர்பாடல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்காவிடம் பகிரப்பட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டு வருடகாலமாக இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என விடயங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மத்தியில் தொடர்பாடல்களில் ஈடுபடுவதற்கு உதவியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. இரண்டு வருட கால திட்டமிடல்களின் போது ஹமாசின் விசேட குழுவொன்று சுரங்கப்பாதைக்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி தனக்குள் தொடர்பாடல்களில் ஈடுபட்டது ஆனால் தாக்குதல் ஆரம்பமாகிய இறுதி நிமிடம் வரை தன்னை இரகசியமாகவே வைத்திருந்தது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஏழாம் திகதியே தாக்குதலில் இணைந்துகொள்ளுமாறு ஏனைய ஹமாஸ் உறுப்பினர்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன. திட்டமிடல்கள் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்கள் கணிணிகளை இணையங்களை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட விசேட குழுவினரிற்கு அப்பால் இந்த தாக்குதல் திட்டம் குறித்து அதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பழையபாணி திட்டமிடல்களில் ஈடுபட்டது, தனிப்பட்ட ரீதியில் சந்திப்புகள் இடம்பெற்றன - டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது என இஸ்ரேல் பகிர்ந்து கொண்டுள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. டிஜிட்டல் சாதனங்களின் சமிக்ஞைகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இடைமறித்து கேட்ககூடும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன எனவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏன் ஹமாஸ்தாக்குதல் குறித்து இறுதிவரை எதனையும் அறியமுடியாத நிலையிலிருந்தன என்பதற்கான காரணங்கள் இதன் மூலம் தெளிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/167697
  17. காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலி Published By: SETHU 24 OCT, 2023 | 01:04 PM காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலிஇஸ்ரேலின் தாக்குதல்களினால் பலஸ்தீனத்தின் காஸாவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவின் வடபிராந்தியத்தில் ஜபாலியா, பேய்த் லாஹியா பகுதிகளிலும் காஸாவின் மத்திய பகுதியிலுள்ள அல் ரேமால், காஸாவின் மேற்குப்பகுதியிலுள்ள அல் ஷாதி முகாம், தென்பகுதியிலுள்ள கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கான் யூனிஸ் நகரில 48 பேரும், ரஃபாவில் 57 பேரும், காஸா மத்திய பகுதியின் அல் வுஸ்தாவில் 168 பேரும் காஸா சிற்றியில் 66 பேரும் வடக்கில் 44 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என பலஸ்தீன சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 7 ஆம் திகதியின் பின் இதுவரை இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 5,087 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்னர். இவர்களில் 2055 சிறார்கள், 1119 பெண்களும் அடங்குவர் என காஸாவிலுள்ள ஹமாஸ் நிர்வாகத்திலுள்ள காஸா சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது. அத்துடன் 14,245 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களினால் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் 222 பேர் ஹமாஸினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167642
  18. இஸ்ரேலின் காசா முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் - பராக் ஒபாமா Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 01:14 PM காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒக்டோர்பர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டடுள்ளமையும் விமானக்குண்டுவீச்சுகளும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள பராக் ஒபாமா இது இறுதியில் மத்தியகிழக்கில் அமைதி ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இஸ்ரேலிற்கு ஆதரவளித்தால் கூட இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது குறித்து நாங்கள் தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை தனது மக்களை இவ்வாறான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்கான இஸ்ரேலின் உரிமையை அவர் நியாயப்படுத்தியுள்ளார். மத்தியகிழக்கில் இடம்பெறும் விடயங்களை உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது மனித உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேலின் இராணுவ தந்திரோபாயங்கள் எவையும் இறுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167646
  19. காஸாவுக்குள் தரைவழியாகவும் இஸ்ரேலியப் படை தாக்குதல் Published By: SETHU 24 OCT, 2023 | 02:32 PM ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பிராந்தியத்துக்குள் இஸ்ரேலியப் படையினர் தரைவழியாக நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காஸாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தரைவழி முற்றுகைகளை இஸ்ரேலியப் படையினர் நடத்தியதாகவும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காஸா எல்லை வேலியின் மேற்குப் பகுதிக்குள் இஸ்ரேலியப் படையினர் சென்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸிடமிருந்து அப்பகுதியை சுத்தப்படுத்துவதற்காகவும் ஆயுதங்களைத் தேடியும், பணயக்கைதிகளை கண்டுபிடிப்பதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இஸ்ரேலியப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரி இதேவேளை காஸா எல்லைக்குள் இஸ்ரேலியப் படையினருடன் தாம் போராடியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் நகருக்கு கிழக்குப் பகுதியில் இம்மோதல் நடந்ததாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினரின் இரு புல்டோஸர்கள், தாங்கி ஆகியனவற்றை தாம் அழித்ததாகவும், இஸ்ரேலியப் படையினர் வாகனங்களைக் கைவிட்டு வேலிக்கு கிழக்கே தப்பிச் சென்றனர் எனவும் ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஞாயிறு இரவு காஸாவுக்குள் மேலும் முற்றுகைகைள இஸ்ரேலியப் படையினர் நடத்தினர் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி நேற்று தெரிவித்தார். 222 பணயக் கைதிகள் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அதேவேளை, இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, காஸாவில் பணயக்கைதிகளாக 222 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். 24 மணித்தியாலங்களில் 320 தாக்குதல்கள் காஸா பிராந்தியத்தில் 24 மணித்தியாலங்களில் 300 இற்கும் அதிகமான தாக்குதல்களை தான் நடத்தியதாக இஸ்ரேல் நேற்று (23) தெரிவிததுள்ளது. 24 மணித்தியாலங்களில் 320 இற்கும் அதிகமான இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்று தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்கப்பாதைகள், ஹமாஸின் செயற்பாட்டு கட்டளை மத்திய நிலையங்கள் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கத்தின் கண்காணிப்பு நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் 800 பேர் கைது பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்தில் தேடப்பட்ட 800 பலஸ்தீனியர்களை கடந்த 7 ஆம் திகதியிலருந்து தான் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் 500 இற்கும் அதிகமானோர் ஹமாஸ் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் கூறுகிறது. நேற்றுமுன்தினம் மாத்திரம் மேற்குக்கரையில் 37 ஹமாஸ் அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதேவேளை, மேற்குக்கரையின் ரமல்லா நகருக்கு அருகிலுள்ள ஜலாஸோன் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படையினர் நேற்றுமுன்தினம் நடத்திய முற்றுகைகளில் இரு பலஸ்தீனர்கள் உயிரழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது. நிவாரணங்களுடன் 34 லொறிகள் கடந்த 7 ஆம் திகதியின் பின்னர் கடந்த சனிக்கிழமை முதல் தடவையாக காஸாவுக்குள் நிவாரணப் பொருட்களை ஏற்றிய லொறிகள் எகிப்திலிருந்து காஸாவுக்குள் பிரவேசித்தன. கடந்த சனி, ஞாயிறு தினங்களில் 34 லொறிகள் காஸாவுக்குள் சென்றுள்ளதாக எகிப்திய செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், காஸாவிலுள்ள சுமார் 24 இலட்சம் மக்களுக்காக தினமும் 100 லொறி நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167654
  20. ஹமாஸ் மேலும் இருவரை விடுதலை செய்தது -கத்தார் எகிப்தின் முயற்சிகளிற்கு பலன் Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 11:01 AM ஹமாஸ் தனது பிடியிலிருந்த மேலும் இரு பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. 85 வயதான யொசெவ்ட் லிவ்சிட்ஸ் 79 வயதான நுரிட் கூப்பர் என்ற இரண்டு பெண்களையே ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இவர்களை கடந்த 7 ம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்ரேலின் தென்பகுதி நகரான நிர் ஒஸ் கிப்புட்சிலிருந்து ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது. ஹமாஸ் அவர்களின் கணவன்மார்களை விடுதலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை தயார் விடுதலை செய்யப்பட்டமை ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக யொசெவ்ட் லிவ்சிட்ஸின் மகள் தெரிவித்துள்ளார். கத்தார், எகிப்து மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி காரணமாக இருவரும் விடுதலை செய்யப்பட்டமை நல்ல விடயங்கள் இடம்பெறலாம் என்பதற்கான அறிகுறி என சரோனே லிவ்சிட்ஸ் தெரிவித்துள்ளார். தாயார் விடுதலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது உங்களிற்கு என்ன உணர்வு ஏற்பட்டது என்ற சிஎன்என்னின் கேள்விக்கு வார்த்தைகளால் அதனை வர்ணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனது தாயாரலும் நன்கு நடக்கவும் பேசவும் முடியும் அவர் நடந்து எல்லையை கடந்துள்ளார் என நினைக்கின்றேன் இது மிகவும் ஆச்சரியமான விடயம் என மகள் தெரிவித்துள்ளார். உருவாகிவரும் பெரும் கதையில் இது ஒரு சிறிய ஒளிக்கீற்று என தெரிவித்துள்ள அவர் எப்போது எனது தாயாரை கட்டித்தழுவுவேன் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளேன் எனது சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். லிவ்சிட்சின் தந்தை தொடர்ந்தும் ஹமாசின் பிடியில் உள்ளார், என்னுடைய தந்தை இன்னமும் அங்கிருக்கின்றார் பலர் அங்கு உள்ளனர் அனைவர் குறித்த நற்செய்திக்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167629
  21. மூனா என்ற கவி அருணாசலம் ஐயாவிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  22. நிர்வாகிகள் கவனத்திற்கு 1) புதிய பதிவுகள் என்று போடாது புதுப்பிக்கப்பட்ட பதிவுகள் என்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 2) சூடான பதிவுகளுக்குள் கூடுதல் பதிவுகள் வந்த திரிகள் காட்டவில்லையே? 3) "முகப்பில் ஊர்ப்புதினம், உலக நடப்பு, அறிவியல் தொழில் நுட்பம் போன்ற எல்லாத் தலைப்புகளையும் அழுத்தினால்(Ex:- "https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/) கருத்துக்களத்தினூடாகச் சென்று ஒவ்வொரு தலைப்பாக திரிகளை பார்வையிடவோ தொடங்கவோ முடிவது போல் நேரடியாக அணுக இலகுவாக இருக்கும் அல்லவா? @நியானி @nunavilan @இணையவன் @நிழலி @மோகன்
  23. காஸாவுக்குள் இரவோடு இரவாக தரை வழியே நுழைந்த இஸ்ரேலிய படைகள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,EPA 23 அக்டோபர் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தொடர்ந்து நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், மீண்டும் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காஸா துண்டு நிலப் பகுதியில் மேலும் 320 இடங்களக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதனிடையே தங்களுடையே இல்லங்கள் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி தாக்கப்பட்டதாக பாலத்தீன ஆட்சியகம் கூறியுள்ளது. கடந்த சில மணிநேரங்களில் காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அருகில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த மருத்துவமனைகளில் காஸாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை ஆகியவை அடங்கும் என்று பாலத்தீனிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தனது டெலிகிராம் சேனலில், அல்-குத்ஸ் அருகே நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது குவைத் மருத்துவமனைக்குப் பின்னால் நடந்ததாகக் கூறி இடிந்த ஒரு கட்டிடத்தின் படங்களையும் அது வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ மற்றும் படங்களை பிபிசியால் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதா என்பதை உறுதிப்படுத்துமாறு பிபிசி இஸ்ரேல் தற்காப்புப் படைகளைக் கேட்டுள்ளது, மேலும் அவர்கள் சோதனை செய்வதாக எங்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் எங்களுக்குத் தெரிந்தவுடன் சமீபத்திய மேம்பாடுகளை உங்களுக்குக் கொண்டு வருவோம். பட மூலாதாரம்,REUTERS காஸாவில் பலி 5,000-ஐ தாண்டியது - ஒரே நாளில் 436 பேர் பலி காஸாவில் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 436 பேர் பலியானதாகவும், இதுவரை மொத்தம் 5,087 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த தகவல்படி, கொல்லப்பட்டவர்களில் 2,055 பேர் குழந்தைகள், 1,119 பேர் பெண்கள், 217 பேர் மூத்த குடிமக்கள். அத்துடன், 15,273 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். காஸாவில் மற்ற அரசு அமைப்புகளைப் போல சுகாதாரத்துறையும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,EPA காஸாவுக்குள் இரவோடு இரவாக புகுந்த இஸ்ரேலிய தரைப்படை காஸா மீது 2 வாரங்களுக்கும் மேலாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், முதன் முறையாக தரைவழியே எல்லை தாண்டியுள்ளது. தரைவழியே படையெடுக்க காஸா எல்லையை ஒட்டி ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளில் ஒரு பிரிவினர் இரவோடு இரவாக எல்லை தாண்டி காஸாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. காஸா பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரவில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முழுவீச்சிலான தரைவழி படையெடுப்பின் தொடக்கம் அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல் ஞாயிற்றுக் கிழமை ஒரு அரிய நிகழ்வில், இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. மேற்குக் கரையில் ஹமாஸ் குழு ஒரு மசூதியை ‘பயங்கரவாத வளாகமாகப்’ பயன்படுத்துவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குக் கரையின் வடக்கில் உள்ள ஜெனின் நகரத்தில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது. அல்-அன்சார் என்றழைக்கப்படும் இந்த மசூதி தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக பாலத்தீன அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின இஸ்ரேலிய ராணுவம் மேற்குக் கரையில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து சோதனையிட்டாலும், அது காஸாவில் நடத்துவதுபோல வான்வழித் தாக்குதல்களை மேற்குக் கரையில் அரிதாகவே பயன்படுத்துகிறது. சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின. கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு ‘பயங்கரவாதத் தாக்குதலுக்கு’ தயாரகி வந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருக்கிறது. அவர்கள் பயன்படுத்திய இடம் மசூதியின் கீழ் இருப்பதாகவும், ஜூலை முதல் பயன்பாட்டில் இருப்பதாகவும் அது கூறியது. வளாகத்தின் நுழைவாயில்கள், ஆயுதங்கள், கணினிகள் மற்றும் தளத்தில் படமாக்கப்பட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் புகைப்படங்களுடன் அது கூறிய படங்களை வெளியிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாப்டுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம் என்று தெரிவித்துள்ளார் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரலாம் காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார். "செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது," என்று அவர் கூறினார். "காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது," என்றார் அவர். மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மனிதாபிமான உதவிகள் மேலும் 14 டிரக்குகள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார். பாலத்தீனியர்களுக்கு இது ‘மற்றொரு சிறிய நம்பிக்கை’ என்று அவர் கூறினார். ஆனால் இன்னும் அதிகமான உதவிகள் தெவைப்படும் என்று கூறினார். தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கும் அதேவேளை வெகுவாக பதிக்கப்பட்டிருகும் காஸா, ‘ஒரு நாளைக்கு ஒரு சில டிரக்குகளை அனுப்புவது மட்டுமே போதுமானதாக இல்லை’ என்று கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர் ‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’ இந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், "ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது" என்று கூறியுள்ளார். ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cv2lzp4z17no
  24. பேசும்போதே உடைந்து அழுத Palestine Representative; "இஸ்ரேல் ஒரு குடும்பத்தை கூட விட்டு வைக்கல" ஐநா அவையில் கண்ணீர்விட்டு அழுத பாலத்தீன பிரதிநிதி - அதே நிகழ்வில் இஸ்ரேல் பிரதிநிதி என்ன சொன்னார்?
  25. ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் #ஊடறுப்பு #அருஸ் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கிடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இஸ்ரேல் உடனடியாகவே 3 இலட்சம் அளவிலான ரிசர்வ் படையினரை திரட்டி தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக சொல்லியிருந்தாலும் இதுவரையில் அது தீவிரப்படுத்தப்படவில்லை. இதற்கு அமெரிக்காவும் காரணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.