Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல்; மேற்குகரையில் போர் பதற்றம் 07 OCT, 2023 | 04:59 PM இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்களை வீசியதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன. தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தார். 545 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் விமானப்படை விமானங்கள் மூலம் காசா நகரில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு எதிராக போரை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அல் அக்சா பிளட்' என்ற பெயர் சூட்டி உள்ளனர். முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ரொக்கெட்களை ஏவியதாகவும் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவோம் எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ரொக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் ராக்கெட் விழும் சத்தம் கேட்டது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ், அஷ்க்கெலான் உள்ளிட்ட நகரங்களிலும் ரொக்கெட் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெருசலேம் நகர் முழுவதும் சைரன் ஒலித்தபடி உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்த நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது இதனையடுத்து, போருக்கு தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக குற்றம்சாட்டி உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாராகிளைடர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் சென்ற கார்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் காசா, பாலஸ்தீனத்தை நோக்கி முன்னேற இஸ்ரேல் ராணுவம் வியூகம் வகுத்து வருகிறது. காசாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீதும் விமானப்படை விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலை மற்ற நாடுகளுடன் இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த 5 நாட்களாக இஸ்ரேலியர்கள் தங்கி உள்ளதாகவும், அவர்களுக்கு துணையாக இராணுவமும் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளியேறாத காரணத்தினால் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை துவக்கி உள்ளதாக தெரிகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்பதால், அச்சம் அடைந்துள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடல் வழியாகவும், தரை வழியாகவும் ஊடுருவிய ஹமாஸ் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர் . இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 35 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினரை பிடிக்கவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலில் 7 நகரங்களில் ஹமாஸ் குழுவினர் நுழைந்துள்ளனர். அவர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர். ஜெருசலேமில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மேயர் அறிவுறுத்தி உள்ளார். நகர் முழுவதும் சைரன் ஒலிக்கப்படுகிறது. இராணுவ வீரர்கள் தங்கள் நிலைகளுக்கு உடனடியாக திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, அமைச்சர்கள், ராணுவத்தினருடன் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் மக்கள் போரை எதிர் கொண்டுள்ளதாகவும், ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியுள்ளார். எதிரிகள் சிந்தித்து பார்க்க முடியாதபடி பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். பாலஸ்தீனத்தை விடுவிக்க இதுவே சரியான தருணம். இஸ்ரேலை அழித்து ஒழிப்போம். பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேலை நோக்கி முன்னேற வேண்டும் என ஹமாஸ் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். காசாவில் 16 டன் வெடிபொருட்களை இஸ்ரேலிய இராணுவம் வீசியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/166331
  2. 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆப்பரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம் என்ற பெயரில் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது. "காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன" என்றும் ஆயுதக் குழுவினர் "வெவ்வேறு இடங்களில்" இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது. இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் "சூழ்நிலை மதிப்பீட்டை" நடத்தி வருவதாகவும், "இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் "தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க" அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,ABED RAHIM KHATIB/ANADOLU AGENCY VIA GETTY IMAGES ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது. அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,MOHAMMED SABER/EPA-EFE/REX/SHUTTERSTOCK காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் "அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்" ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை "நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் - ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டன: ஹமாஸ் அறிவிப்பு பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தாக்குதலுக்கு இலக்கான இடங்களில் எரியும் தீயில் இருந்து கரும்புகை வெளியாகி வருகிறது. இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடங்க சனிக்கிழமை அதிகாலை 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவப்பட்டதாகவும் கூறினார். "இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று டெய்ஃப் கூறினார். “நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்." "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின் தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்." பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது. "போருக்குத் தயார்நிலை" பிரகடனத்தை வெளியிட்ட இஸ்ரேல் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போருக்கான தயார் நிலை" பிரகடனம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களை அழைக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த காட்சிகள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஹமாஸ் ஆயுதக் குழு மிக மோசமான தவற்றைச் செய்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். யோவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று காலையில் மிக மோசமான செயலைச் செய்துள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிக்கொடி நாட்டும் என்றும் கூறியுள்ளார். ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cp9xkn0rdldo
  3. ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..! மேற்கத்தேய நாடுகளின் ஆதரவு இல்லையென்றால் ரஷ்யா ஒரு வாரத்திற்கு மேலாக போரில் தாக்கு பிடித்திருக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நிதியுதவி “மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. நிதியுதவி மட்டுமல்லாமால், இராணுவ தளபாட உதவிகள் என அனைத்தும் நின்றுவிட்டால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும். தற்போது வரை ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், 90ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.” என்றார். https://ibctamil.com/article/putin-ukraine-last-western-military-support-stops-1696602987
  4. ஈரானிடமிருந்து கைப்பற்றிய 1 மில்லியன் துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியது அமெரிக்கா Published By: RAJEEBAN 05 OCT, 2023 | 11:25 AM ஈரானிடமிருந்து கைப்பற்ற 1.1மில்லியன் துப்பாக்கி ரவைகளை அமெரிக்கா உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் யுத்தங்களிற்கு பொறுப்பான அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் யேமனிற்கு சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்து துப்பாக்கி ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை இவற்றை உக்ரைனிற்கு அனுப்பிவைத்துள்ளதாக சென்ட்கொம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 9 ம் திகதி மர்வன் 1 எனப்படும் தேசம் குறிப்பிடப்படாத கப்பலில் இருந்து இந்த துப்பாக்கி ரவைகளை கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சொத்து ஒன்றின் உரிமையாளர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அதனை அரசாங்கம் கைப்பற்றலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி கப்பலை தனதாக்கிய அமெரிக்கா அதிலிருந்த துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையின் கப்பலே அது என குற்றம்சாட்டியே அமெரிக்கா அந்த கப்பலை தனதாக்கிகொண்டது. உக்ரைன் வெடிபொருட்களை பயன்படுத்தும் வேகத்திற்கு தங்களது உற்பத்திகளால் இடம்கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக உக்ரைன் மேற்குலக சகாக்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/166136
  5. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விற்கு நிதிக் கையிருப்பு உள்ளது ; சட்டவைத்திய அதிகாரியின் கூற்றை மறுக்கும் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் Published By: VISHNU 05 OCT, 2023 | 07:25 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிக்குரிய நிதி இல்லை என முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் கடந்த ஒக்டோபர் (04)ஆம் திகதி தன்னிடம் தெரிவித்ததாகவும், ஏற்கனவே அகழ்வுப்பணிகள் மேற்கொண்டமைக்கான கொடுப்பனவுகளன வழங்கப்படவில்லை எனவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார். இந் நிலையில் சட்டவைத்திய அதிகாரியின் இத்தகைய கூற்றுக்கு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், அகழ்வாய்வுப் பணிக்கென முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளதாகவும், மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது தம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக தொடர்ந்தும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மேலதிகமான அகழ்வுப்பணி தொடர்பிலும், ஏற்கனவே அகழ்வின்போது எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பரிசோதனை முடிவுகள் தொடர்பிலும் சட்ட வத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நிதி இல்லையென கடந்த ஒக்டோபர் (04) புதன்கிழமையன்று கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந் நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவுமாவட்டசெயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்ணத்திடம் தொடர்புகொண்டுவினவியபோது, தாம் நிதியில்லை என சட்டவைத்திய அதிகாரியிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், தாம் மாவட்டசெயலரின் அனுமதியின்றி இது தொடர்பில் மேலதிக தகவல் எதனையும் வழங்கமுடியாது எனவும் தெரிவித்தார். எனவே இது தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரிடம் தொடர்புகொண்டு வினவியபோது, இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளுக்கென முதற்கட்டமாக 5.6மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், மனிதப் புதைகுழிக்கு பந்தல் இடுகிற செயற்பாடுகள், மலசலகூடம் அமைக்கும் செயற்பாடு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு மில்லியனுக்கு அதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்தோடு அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்ட ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் துறையைச் சார்ந்த குழுவினருக்குரிய பணக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவிட்டன. தற்போது சட்டவைத்திய அதிகாரிகளுடை பணக்கொடுப்பனவுகளே வழங்கவேண்டியுள்ளது. கடந்த ஒக்டோபர்(04) புதன்கிழமையன்றே அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் துறையினரதும், வைத்தியர்களுடையதும் நிதியைப் பெறுவதற்கான பற்றுச்சீட்டுகள் அவர்களுடைய கையொப்பத்துடன், முத்திரை ஒட்டப்பட்டு உரிய முறையில் எமக்கு கிடைத்தன. அவ்வாறு பணத்தினைப் பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு எம்மிடம் கிடைத்தவுடனேயே, எம்மால் பணத்தினை வழங்கமுடியாது. ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நிதியைப் பெறுவதற்கு சில நிதிநடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே எம்மால் அவர்களுடைய கொடுப்பனவுகளை வழங்கமுடியும். இருந்தும் எம்மிடமிருந்த வேறு வைப்புப் பணத்தினைப் பயன்படுத்தி தொல்லியல் துறையினருக்குரிய பணக்கொடுப்பனவை வழங்கியுள்ளோம். இனி சட்ட வைத்திய அதிகாரிகளுடைய நிதியே வழங்கப்படவேண்டியுள்ளது. குறித்த அகழ்வாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரிகளுக்கான பணக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இன்னும் ஓரிருநாட்களில் உரிய கட்டுநிதி எமக்கு கிடைக்கப்பெற்றவுடன், உரிய சட்டவைத்திய அதிகாரிகளுக்கான கசோலைகள் வழங்கப்படும். அத்தோடு முதற்கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 5.6மில்லியன்ரூபா நிதியில், 2.6மில்லியன் ரூபா நீதியே செவிடப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் மிகுதிப்பணத்தைப் பயன்படுத்தி குறித்த கொக்குத்தொடு மனிதப் புதைகுழி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகரப் பந்தலை மேலும் விஸ்தரித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கமரா பொருத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறாக வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிரமமாக இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கேற்ப அதற்குரிய மதிப்பீடுகளைச்செய்து தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவோம். நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக நிதி அமைச்சு நிதி தருவதற்கு தயாராக இருக்கின்றது. அதற்கமைய முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளது. மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது எம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும். எனவே நீதிமன்றத் தீர்மானத்துற்கு அமைவாக தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் என்றார். https://www.virakesari.lk/article/166212
  6. கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நிறுத்தப்படும் சூழலே காணப்படுகிறது - சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ 05 OCT, 2023 | 02:05 PM பாலநாதன் சதீஸ் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். மீண்டும் அகழ்வுப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கும் என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை இன்று (05) தொடர்புகொண்டு வினவியபோது இவ்வாறு கூறினார். இதன்போது அவர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என நேற்றைய தினம் (04) கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த மாதம் செப்டெம்பர் (06) ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இந்த அகழ்வுப் பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166163
  7. காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.
  8. புல் எவ்வளவு தூரத்திற்கு வேர் விட்டிருக்கு?!
  9. @நியானி @nunavilan @இணையவன் @நிழலி @மோகன் நிர்வாகிகள் தொந்தரவாக நினைக்காமல் முகப்பை கொஞ்சம் சரி பாருங்கோ. மேலுள்ள படங்களில் சூடான பதிவுகளைக் குறைவாகவும் புதிய பதிவுகளில் சூடான பதிவுகளும் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது! அடுத்த மேம்படுத்தலில் கவனமெடுங்கோ.
  10. யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விஞ்சிய நார்வே - அப்படி என்ன செய்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதைச் சமாளிக்க அமெரிக்கா அதிகளவிலான உதவிகளை அளித்து வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்டனி செச்சர் பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க அமெரிக்கா இதுவரை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இது மிக அதிகம். ஆனால் இதற்குப் பிறகும் யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி மேலும் உதவி கேட்டு அமெரிக்கா சென்றார். ஆனால் அதே நேரம் போருக்கான நிதி உதவி குறித்து குடியரசு கட்சியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒப்பீட்டளவில் நார்வே ஒரு வகையில் அமெரிக்காவையும் விஞ்சிய உதவிகளைச் செய்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 19ஆம் தேதியன்று ஐநா சபையில் ஆற்றிய உரையில், யுக்ரேனை புறக்கணிக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகத்திற்கு உணர்ச்சிகரமான வேண்டுகோளை விடுத்தார். "உலகம் சோர்வடையும் என்றும் எந்த முடிவையும் ஏற்படுத்தாமல் யுக்ரேன் மீது அட்டூழியங்களை இழைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் ரஷ்யா நம்புகிறது. ஆனால் நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு ஆக்கிரமிப்பாளரைத் திருப்திப்படுத்த அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கைகளை நாம் கைவிட்டால், இந்த அமைப்பின் எந்த ஒரு உறுப்பு நாடும் தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கருத முடியுமா?” என்று அவர் வினவினார். அமெரிக்கா எந்த வடிவத்தில் எவ்வளவு உதவி செய்துள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் உள்ளிட்டவை இந்த உதவிகளில் அடங்கும். யுக்ரேனுக்கு 110 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவி வழங்கிட அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பின்வருவன அடங்கும். 49.6 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவி 28.5 பில்லியன் டாலர்கள் பொருளாதார உதவி 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மனிதாபிமான உதவி 18.4 பில்லியன் டாலர்கள் அமெரிக்க பாதுகாப்பு தொழில் துறையை ஊக்குவிக்கும் உதவி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரையில், ஒதுக்கப்பட்ட நிதியில் 91 சதவிகிதம் அளிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மாளிகை தெரிவித்தது. காங்கிரஸிடம் இருந்து 24 பில்லியன் டாலர்கள் கூடுதல் உதவியை அரசு கோரியுள்ளது. இதில் 14 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியும் அடங்கும். இதற்கிடையில், யுக்ரேனுக்கு கூடுதல் உதவிகள் வழங்குவதை ஆதரிக்கும் அமெரிக்கர்கள் குறிப்பாக பழமைவாதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி தனது வாதத்தை முன்வைக்க அமெரிக்காவிற்கு சென்றார். இப்போது நாம் யுக்ரேனின் மிகப்பெரிய உதவியாளர் அமெரிக்கா அல்ல நார்வே என்பதைக் காட்டும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூடுதல் உதவிகளை யுக்ரேனுக்கு அளிக்க அமெரிக்க அரசு தனது நாடாளுமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. யுக்ரேனுக்கான அமெரிக்க உதவியை எவ்வாறு ஒப்பிடுவது? பல்வேறு நாடுகளில் இருந்து யுக்ரேன் பெற்ற உதவியின் ஜூலை மாத இறுதி வரையிலான புள்ளிவிவரங்கள் உள்ளன. அவற்றை மட்டுமே நாம் ஒப்பிடுவோம். அந்த நேரத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்காக சுமார் 80 பில்லியன் டாலர்களை செலவிட்டது. இது மற்ற எந்த ஒரு நாட்டிலிருந்தும் பெறப்பட்ட உதவியைக் காட்டிலும் அதிகம். ஆனால் இது ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட உதவியை விடக் குறைவு. எலிசா டெமஸ், ராண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்பு விவகார ஆராய்ச்சியாளர். இந்தக் கூடுதல் உதவி இல்லாமல் இருந்திருந்தால், கோடையில் ஆரம்பித்த யுக்ரேனின் எதிர் தாக்குதல் சில வாரங்களுக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று அவர் கூறுகிறார். போர்க்களத்தில் யுக்ரேன் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வந்த நேரத்தில் இது எதிர்மறையான செய்தியை அனுப்பியிருக்கும். அமெரிக்க உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், குளிர்காலம் தொடங்கிய பிறகு யுக்ரேன் தனது ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் புதிய உதவித்தொகுப்பு போர்க்களத்திற்கு அப்பால் போரை பாதிக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். "மற்ற நாடுகளும் உதவக்கூடிய ஒரு சூழலை அமெரிக்கா உருவாக்கியிருக்க வேண்டும். புதிய அமெரிக்க உதவி அளிக்கப்படாதது, ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் தங்கள் சொந்த உதவித் தொகுப்புகளை மறுபரிசீலனை செய்வதைத் தடுக்கக்கூடும்,” என்று அவர் குறிப்பிட்டார். அதேநேரம் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா அதிக ராணுவ உதவிகளை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதில் பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க கூடுதல் ராணுவ உதவிகள் தேவை என யுக்ரேன் அமெரிக்காவிடம் கேட்டுள்ளது. செலவுகளைக் குறைக்க குடியரசுக் கட்சியின் அழுத்தம் அதிகரித்து வருகிறது கூடுதல் ராணுவ உதவி தேவை என்று பைடன் நிர்வாகம் கூறுகிறது. அமெரிக்க தலைவர்கள், குறிப்பாக குடியரசுக் கட்சியுடன் தொடர்புடையவர்கள், பைடன் நிர்வாகத்தின் யுக்ரேன் உதவித்தொகுப்புகளை விமர்சித்துள்ளனர். "யுக்ரேனில் நமக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஆர்வமும் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களிடம் பணம் இல்லை என்ற உண்மையால் அது மறுக்கப்படும்," என்று கென்டக்கியின் செனட்டர் ராண்ட் பால் கூறுகிறார். ”சிக்கனமாக இருங்கள். அதன்பிறகு உங்கள் காசோலைப் புத்தகத்தை வெளியே எடுங்கள் என்று சொல்லிச் சொல்லி சோர்வடைந்துவிட்டேன்,” என்று தனிப்பட்ட முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிறகு மிசோரியின் செனட்டர் ஜோஷ் ஹர்லே கூறினார். 'இது எங்கள் பணம் இல்லையா என்ன? இது அமெரிக்க மக்களின் பணம்,” என்றார் அவர். லூக் காஃபி, பழமைவாத சிந்தனைக் குழு என்று கருதப்படும் ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டில் உறுப்பினர். யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி என்பது சில குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு விருப்பமில்லாத எளிமையான பிரச்னை என்று அவர் கூறினார். டொனால்ட் டிரம்ப் மீதான அரசியல் குற்றச்சாட்டு மற்றும் யுக்ரேனிய எரிசக்தி நிறுவனத்துடன் ஹண்டர் பைடனின் சந்தேகத்திற்கிடமான உறவுகள் பற்றிய குற்றச்சாட்டு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது யுக்ரேன் விஷயம் மிகவும் எளிமையானது என்றார் அவர். "இந்த இரண்டு பிரச்னைகளும் எந்த வகையிலும் போருடன் தொடர்புடையவை அல்ல என்றாலும், நீங்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டால், பழமைவாத இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒலிக்கும் யுக்ரேனுக்கு எதிரான கதையை விரைவாக உருவாக்க முடியும்," என்று லூக் காஃபி குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவைவிட யுக்ரேனுக்கு நார்வே அதிக உதவிகளை அளித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா எவ்வளவு உதவி செய்தது? கடந்த 2022ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டான 751 பில்லியன் டாலர்கள் அல்லது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய நலன்களுக்கான 1.2 டிரில்லியன் டாலர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டால், யுக்ரேனுக்கான உதவி மிகவும் குறைவாகவே தெரியும். இது 2022 நிதியாண்டில் அமெரிக்காவின் மொத்த செலவில் 1.8 சதவிகிதம் மட்டுமே. மறுபுறம், ஜூலை இறுதிக்குள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட 80 பில்லியன் டாலர்கள் உதவியானது, பல கூட்டாட்சி அமைப்புகளின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகம். யுக்ரேனுக்கான இந்த உதவி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய நிதியுதவி வாக்குறுதிகளைவிட மிக அதிகம். ஜூலை மாதம் வரையிலான யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.33 சதவிகிதமாக இருந்தது என்று வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது 1970இல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய 0.18 சதவிகிதம், 1964இல் லத்தீன் அமெரிக்காவுக்கு அளித்த 0.15 சதவிகிதம், 1962இல் பாகிஸ்தானுக்கு வழங்கிய 0.08 சதவிகிதம் ஆகியவற்றை ஒப்பிடும் போது மிக அதிகம். யுக்ரேன் தொகுப்பை ஒப்பிடும்போது மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை மிகவும் குறைவு. 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு 4 பில்லியன் டாலர், இஸ்ரேலுக்கு 3.3 பில்லியன் டாலர் மற்றும் இராக்கிற்கு 1.2 பில்லியன் டாலர் உதவி வழங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக நாடுகள் சோர்ந்து விட்டால், யுக்ரேனை அடிபணிய வைத்து விடலாம் என ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவை விட நார்வே அதிகமாக உதவி செய்கிறதா? வெளிநாட்டு உதவியின் மற்ற வடிவங்களைப் போலவே, அமெரிக்க நட்பு நாடுகள் போரின் செலவில் பெரும் பங்கை ஏற்க வேண்டும் என்று விமர்சகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கடந்த மாதம் விஸ்கான்சினில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில், "ஐரோப்பா முன்னால் வர வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதன் அடிப்படையில் நமது ஆதரவு இருக்க வேண்டும்," என்றார். அமெரிக்கா அதன் நட்பு நாடுகளைவிட யுக்ரேனுக்கு அதிக ராணுவ உதவியை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகள் தனித்தனியாக மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் யுக்ரேனுக்கு உறுதியளித்த மொத்த உதவித்தொகை 140 பில்லியன் டாலர்கள். இது அமெரிக்காவின் உதவியைவிட அதிகம். டாலரில் ஒப்பிடும்போது அமெரிக்காவின் உதவி, நட்பு நாடுகளின் உதவியின் அளவை விடக் குறைவாக உள்ளது என்று லூக் ஃகாபி கூறுகிறார். "யுக்ரேனில் அமெரிக்கா என்ன செய்கிறது என்பதை எஸ்டோனியா அங்கு என்ன செய்கிறது என்பதுடன் ஒப்பிட முடியாது. எஸ்டோனியாவின் பொருளாதாரமும், அமெரிக்க மாகாணம் வெர்மாண்ட்டின் பொருளாதாரமும் ஏறக்குறைய ஒரே அளவு," என்று அவர் கூறுகிறார். ”இதை ஒப்பிடுவதற்கான சிறந்த வழி ஒன்று உள்ளது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), உதவித்தொகை எவ்வளவு பங்கு என்பதன் மூலமாக அது செய்யப்படவேண்டும்,” என்றார் அவர். ஜூலை இறுதி வரை அதிகபட்சமாக நார்வே தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.71 சதவிகிதம் உதவியை வழங்கியது. எஸ்டோனியா மற்றும் ரஷ்யாவின் எல்லையில் உள்ள மற்ற இரண்டு பால்டிக் நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன என்று ’கீல் இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் தி வேர்ல்ட் எக்கானமி’ சேகரித்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. https://www.bbc.com/tamil/articles/cj78k890dr2o
  11. இலங்கைக்கு பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் அவசியம்- அமெரிக்க தூதுவர் Published By: RAJEEBAN 30 SEP, 2023 | 03:01 PM இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வருகையில் தொழில்நுட்ப துறையினர் சிவில் சமூகத்தினர் மற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் கருத்தினை உள்வாங்குவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். இது அடிப்படை உரிமை அதுபேச்சுவார்த்தைகளிற்கு அப்பாற்பட்ட விடயம் அதனை பாதுகாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் குறித்தும் அமெரிக்க தூதுவர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்கள் ஏனைய ஜனநாயக நாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளிற்கு ஏற்ப மாற்றியமைப்பது குறித்த தனது வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வலுவான சட்டமூலம் மூலம் சரியான சமநிலையை பேணுவது சட்டபூர்வமான ஒன்றுகூடலிற்கு அனுமதிப்பது சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் அச்சுறுத்தல்களை வலுவான விதத்தில் கையாளக்கூடிய விதத்தில் அவர்களை வலுப்படுத்துவது ஆகியவை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/165762
  12. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலைபாதுகாப்பு சட்டம் குறித்து மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி- கடுமையாக சாடுவதற்கு தயாராகின்றன Published By: RAJEEBAN 27 SEP, 2023 | 12:17 PM பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அரசாங்கத்தை கடுமையாக சாடுவதற்கு மேற்குலக நாடுகள் தயாராகிவருகின்றன . மேற்குலக நாடுகள் தங்கள் சட்டநிபுணர்களுடன் இந்த சட்ட மூலங்கள் குறித்து ஆராய்ந்ததில் இந்த சட்டமூலங்கள் பிரச்சினைக்குரியவை என அவை முடிவு செய்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாதத்திற்கான விளக்கம் பரந்துபட்டது சர்வதேச தராதரங்கள் மரபுகளை மீறுவது என மேற்குலக நாடுகள் கருதுகின்றன. இந்த சட்ட மூலம் குறித்து மேற்குலக நாடுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் போல துஸ்பிரயோகங்கள் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் போன்றவை இடம்பெறுவதை ஊக்குவிக்ககூடிய பிரிவுகள் காணப்படுகின்றன என உயர்வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் சமீபத்தைய தீர்மானத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேணடும் என்றவேண்டுகோள் காணப்படுகின்றது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையினை பெறுவதற்கு இலங்கை தகுதிபெறுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. முன்னர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திய அரசாங்கம் மேற்குலக நாடுகளின் விமர்சனத்தினால் அதனை மீளப்பெற்றுக்கொண்டது. மேற்குலக நாடுகள் சிவில் சமூகத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டன. எனினும் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள சட்ட மூலம் குறித்தும் மேற்குலகநாடுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போது விக்டோரியா நுலண்ட் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் உள்ள விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/165547
  13. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபின் பல சரத்துக்கள் அடிப்படை சட்டவாட்சிக் கோட்பாடுகளுக்கு முரணானவை - சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 03:04 PM (நா.தனுஜா) உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபின் பல சரத்துக்கள் அடிப்படை சட்டவாட்சிக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அமைந்துள்ளது. எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை இச்சட்டவரைபைத் திருத்தியமைக்கவேண்டியது அவசியமென சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தினால் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு கடந்த மேமாதம் 2 ஆம் திகதி நீதியமைச்சு அறிவித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைபில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரான சட்டமூலம் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இருப்பினும் திருத்தங்களுடன்கூடிய இப்புதிய வரைபின் 3 ஆவது சரத்தில் 'பயங்கரவாதம்' என்ற பதத்துக்கு விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின்பேரில் மாத்திரம் ஒருவரை இரண்டு மாதங்கள் வரை தடுத்துவைப்பதற்கு இடமளிக்கப்படுவதன் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் வலுவிழக்கச்செய்யப்படுவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் லான் செய்டர்மன் சுட்டிக்காட்டியுள்ளார். 'தடுப்புக்காவல் உத்தரவைப் பரிசீலனை செய்வதற்கான நீதிவானின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதம் எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணமானது அடிப்படை சட்ட ஆட்சிக் கோட்பாடுகளுக்கு முரணானவகையில் அமைந்துள்ளது. எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக இலங்கை அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டுமெனில் இச்சட்டவரைபு மேலும் திருத்தியமைக்கப்படவேண்டியது அவசியமாகும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல வரைபின் சில சரத்துக்கள், அரசியலமைப்பின் 13 ஆவது சரத்துக்கும், இலங்கை கைச்சாத்திட்டிருக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 9 ஆவது சரத்துக்கும் முரணானவைகயில் அமைந்திருப்பதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது. 'இலங்கையானது பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் போன்ற விசேட சட்டங்களை நீக்கிவிட்டு, சட்டவாட்சியுடன் முரண்படாத குற்றவியல் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதக்குற்றங்களைக் கையாள்வதற்கு முன்வரவேண்டும். இல்லாவிடின் குறைந்தபட்சம் தற்போது வெளியிடப்பட்டள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாக அதனை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று லான் செய்டர்மன் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/165475
  14. உக்ரைன் மக்கள் உயிர்போகும் வரை கொடுமைப்படுத்தும் ரஷ்யா.. ஐ.நா. அதிர்ச்சி தகவல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய தாக்குதலை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது. போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷ்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷ்யா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. https://thinakkural.lk/article/274610
  15. கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை தளத்தின்மீது உக்ரைன் தாக்குதல் - முக்கிய தளபதி பலி Published By: RAJEEBAN 26 SEP, 2023 | 03:22 PM கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவஸ்டபோலில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது 34 அதிகாரிகள் உயிரிழந்தனர் தளபதியும் உயிரிழந்தார் 105 ஆக்கிரமிப்பாளர்கள் காயமடைந்துள்ளனர் கட்டிடம் திருத்தமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை வெளியிடாத போதிலும் உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளார். அட்மிரல் விக்டர் சொக்கொலொவ் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என உக்ரைனின் உள்துறை அமைச்சின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/165490
  16. தினேஷ் ஷாஃப்டர் வழக்கு: தோண்டியெடுக்கப்பட்ட உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு தோண்டியெடுக்கப்பட்ட மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) உத்தரவிடப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததன் அடிப்படையில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடல், மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட தடயவியல் நிபுணர் குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் மே மாதம் பொரளை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என குழு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் முன்னைய விசாரணையின் போது தெரிவித்திருந்த நிலையில், சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 52 வயதான தினேஷ் ஷாஃப்டர் 2022 டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தனது காரின் சாரதி ஆசனத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் உயிரிழந்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://thinakkural.lk/article/274477
  17. ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதல் Published By: RAJEEBAN 23 SEP, 2023 | 08:34 AM ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படை தளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதலால் படைவீரர் ஒருவர் காணாமல்போயுள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது. செவஸ்டபோலில் உள்ள கட்டிடங்களிற்கு மேலாக பாரிய புகைமண்டலம் எழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த தளத்தில் ரஸ்யாவின் மிகச்சிறந்த கடற்படையினர் உள்ளதால் உக்ரைனிற்கு இது ஒரு முக்கிய இலக்காக காணப்படுகின்றது. சமீபத்தில் உக்ரைன் ரஸ்யாவின் வான்பாதுகாப்பு பொறிமுறை உட்பட கிரிமியாவில் உள்ள பல இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனும் பிரான்சும் வழங்கிய ஸ்டோர்ம் சடோ ஏவுகணைகளை பயன்படுத்தியே இந்த தாக்குதல் இடம்பெற்றது என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்ஃ ரஸ்யாவின் தளத்தை வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இன்னும் பல தாக்குதல்கள் உள்ளன என நாங்கள் உங்களிற்கு தெரிவித்திருந்தோம் என உக்ரைனின் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/165241
  18. சந்திரயான்-3: விக்ரம் லேண்டரில் சிக்னல் கிடைக்கவில்லை - இஸ்ரோவின் அடுத்த திட்டம் என்ன? பட மூலாதாரம்,X/ISRO படக்குறிப்பு, 14 நாட்கள் இரவு முடிந்து நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 22 அன்று சூரியன் உதித்து. கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசிக்காக 20 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (செப்டம்பர் 22 ஆம் தேதி) சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருந்தது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது. நிலாவில் சூரியன் உதித்தது. ஆனால் விக்ரம் லேண்டர் அதன் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொண்டது. ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தனது பணியை முடித்துவிட்டு செப்டம்பர் 4ஆம் தேதியன்று லேண்டரும் ரோவரும் உறக்க நிலைக்குச் சென்றன. இருப்பினும் தொடர்புகொள்ளும் முயற்சி தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cd1zd2n645wo
  19. உக்ரைனுக்கு இனி ஆயுத உதவி கிடையாது: போலந்து அதிரடி 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது. மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது. போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷ்யா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன. இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது. இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன. இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, “சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன” என குறிப்பிட்டார். இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு இராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு இராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/274071
  20. நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் வேலு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை, காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, நாகப்பட்டினத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை நேற்று(20) நேரில் சென்று பார்வையிட்டார். நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து 60 கடல் மைல்கள் தொலைவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையிலான விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India), விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த பயணியர் கப்பல் சேவை வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு ஒக்டோபர் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாசாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/273941
  21. சந்திரயான்-3: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் மீண்டும் இயங்குமா? இஸ்ரோ திட்டம் என்ன? பட மூலாதாரம்,X/ISRO படக்குறிப்பு, 14 நாட்கள் இரவு முடிந்து நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 22 அன்று சூரியன் உதிக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது. நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொள்ளும். விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மற்றும் அதில் உள்ள பிரக்யான் ரோவர் ஆகியவை 14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை. சந்திரனின் மேற்பரப்பில் ஒரு நாள் (சந்திர நாள்) என்பது பூமியில் சுமார் 28 நாட்களுக்கு சமம். அதாவது சந்திரனில் சுமார் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவாக இருக்கும். ஆகஸ்ட் 23 அன்று, சந்திரனில் விடியத் தொடங்கியது. அதனால்தான் லேண்டரை இஸ்ரோ அன்று தரையிறக்கியது. செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவில் பகல் முடிவடைந்ததால், லேண்டர் மற்றும் ரோவரை ஸ்லீப் மோடுக்கு இஸ்ரோ மாற்றியது. லேண்டர் மற்றும் ரோவர் செயல்பட மின்சாரம் தேவை. சந்திரயான் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள சோலார் பேனல்கள் சூரிய ஒளியால் இயங்குகின்றன. ஆனால் இரவு துவங்கியதால் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்திருக்காது. இரவில் நிலவின் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. அப்போது மைனஸ் 130 டிகிரியாக வெப்பம் குறையும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (நாசா) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 253 டிகிரியை எட்டும். இத்தகைய குறைந்த வெப்பநிலையில், ரோவர் மற்றும் லேண்டர்கள் இரண்டுமே உறைந்துவிடும். சூரியன் மீண்டும் சந்திரனின் மேல் உதிக்கும் வரை அவை அப்படியே இருக்கும். செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மீண்டும் அங்கே சூரிய ஒளி படரும். எனவே அவற்றை மீண்டும் வேலை செய்யவைப்பது சவால் மிகுந்த பணியாக இருக்கும். "இரவில், சந்திரனில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரிக்கு கீழே குறையும். இத்தகைய சூழலில் பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடையாது என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் நாங்கள் சில சோதனைகளை நடத்தினோம். எனவே விக்ரமும், பிரக்யானும் கடுமையான வானிலையில் இருந்து தப்பித்து மீண்டும் இயங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஊடகங்களிடம் பேசிய போது தெரிவித்தார். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சூரியன் உதிக்கும் போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் செயல்படுமா என்பதை அறிய இஸ்ரோ மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது. மீண்டும் செயல்படாவிட்டால் என்ன செய்வது? நிலவில் ஸ்லீப் மோடில் இருக்கும் ரோவரை செப்டம்பர் 22ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ முயற்சித்து வருகிறது. அதன் பேட்டரியில் சார்ஜ் முழுமையாக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் மற்றும் ரோவரின் ரிசீவர்கள் நல்ல இயக்கத்தில் உள்ளன. ஸ்லீப் மோடியில் உள்ள லேண்டரும், ரோவரும் மீண்டும் இயங்கினால் நிலவு குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து, ஏற்கெனவே நடந்துகொண்டிருந்ததைப் போலவே, அவற்றை பூமிக்கு அனுப்பும் பணி தொடரும். அப்படியில்லை என்றால்,'இந்தியாவின் தூதுவராக' அவை இரண்டும் நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவை மீண்டும் செயல்படாவிட்டால் அவற்றின் நிலை என்னவாகும், எதிர்காலத்தில் மீண்டும் அவை செயல்படும் வாய்ப்பு இருக்கிறதா, நிலவுக்கு செல்லும் பிற நாடுகளின் ரோவர்கள் 'பிரக்யானிடம்' இருந்து ஏதேனும் ரகசிய தகவல்களை சேகரிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றுக்கான விடைகளை அறிய ஆந்திரப் பல்கலைக்கழக விண்வெளி இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி. ஸ்ரீநிவாஸிடம் பிபிசி பேசியது. இஸ்ரோ திட்டமான 'ஜியோஸ்பியர் - பயோஸ்பியர்' திட்டத்திற்காக ஆந்திரா பல்கலைக்கழகம் சார்பில் பி.ஸ்ரீனிவாஸ் ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சந்திரயான்-3 இன் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ அணுகிய இயற்பியல் நிபுணர்கள் குழுவில் ஸ்ரீனிவாஸும் ஒருவர். அவர் பிபிசியிடம் பேசிய போது பின்வரும் பதில்களை வழங்கினார். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, லேண்டரும், ரோவரும் தயாரிக்கப்பட்ட போதே 14 நாட்கள் ஆயுட்காலத்துடன் தயாரிக்கப்பட்டன. லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் பூமிக்கு கொண்டு வர முடியாதா? இது போன்ற ரோவர்களை எந்த ஒரு விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பினாலும், அது 'ஒரு வழி பயணமாகவே' இருக்கும். அவற்றை மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் முயற்சியின் போது, அதற்கான செலவில் மற்றொரு விண்கலத்தைத் தயாரித்து விண்ணுக்கு ஏவி விட முடியும். பட மூலாதாரம்,MIKIELL/GETTY IMAGES படக்குறிப்பு, விண்வெளி ஆய்வில் கிடைக்கும் தகவல்களை அனைத்து நாடுகளும், பிற அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்துகொள்கின்றன. லேண்டர், ரோவர் மீண்டும் வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? செப்டம்பர் 22 அன்று சூரிய ஒளி மீண்டும் வரும்போது, ரோவரும், லேண்டரும் வேலை செய்யவில்லை என்றால், அவை எப்போதும் செயல்படாது. ஏனெனில் அவை தயாரிக்கப்பட்ட போது, அவற்றின் ஆயுட்காலம் 14 நாட்களுக்கு வடிவமைக்கப்பட்டது. செயல்படாத விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரால் நிலவின் மேற்பரப்பில் கழிவுகளாக மாறமுடியுமே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒருவேளை லேண்டரும், ரோவரும் செயல்படாமல் போனால் அவற்றை மீண்டும் செயல்படுத்த முடியாது. எதிர்காலத்தில் மீண்டும் இயங்கும் வாய்ப்புகளே இல்லையா? அவற்றை மீண்டும் இயக்க முடியாது. அது குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அத்தகைய தொழில்நுட்பம் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் மற்றொரு ரோவர் அல்லது ஏதேனும் ஒரு யூனிட்டை அனுப்புவதன் மூலம் ஏற்கனவே உள்ள ரோவர்களைச் செயல்படுத்த நடத்தப்படும் சோதனைகள் இன்னும் கோட்பாட்டு அளவிலேயே உள்ளன. அப்படி முடியுமென்றால், ஒரு வேளை நாம் ஏற்கெனவே அனுப்பிய ரோவர் பழுதடைந்திருந்தாலும், அதை பழுது பார்த்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த நிலையை நாம் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். சந்திரனின் மேற்பரப்பில் வேலை செய்யாத ரோவர்கள் மற்றும் லேண்டர்கள் சந்திரனின் குப்பைகளாகக் கணக்கிடப்படுகின்றன. அவை அங்கு தொடர்ந்து செயல்படுவது மிகவும் கடினம். வேலை செய்யாதவற்றிடமிருந்து எந்த தகவலையும் சேகரிக்க முடியாது. ஏனென்றால், நிலவில் ஏதாவது ஒன்று ஒருமுறை செயலிழந்தால், அது நிரந்தரமாகச் செயலிழந்துவிடும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படும் சாதனங்கள் செயல்படாமல் போகும் போது, அவை வெறும் குப்பைகளாக மாறுகின்றன. வெளிநாட்டு ரோவர்கள் பிரக்யானிடம் தகவல்களை சேகரிக்க முடியுமா? எதிர்காலத்தில் வேறு எந்த நாடும் நிலவில் சோதனைக்காக லேண்டர்கள் மற்றும் ரோவர்களை அனுப்புகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வழியில் செல்லும் வெளிநாட்டு ரோவர்களுக்கு தற்போது இருக்கும் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றால் எந்த தடையும் இருக்காது. மேலும், அவற்றால் பிரக்யான் ரோவரை பயன்படுத்தவும் முடியாது. நிலவுக்குச் சென்ற வெளிநாட்டு ரோவர்களும் பிற யூனிட்டுகளும் தற்போது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பிரக்யான் ரோவரிடமிருந்து ரகசிய தகவல்களை சேகரிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், எந்தவொரு நாடும் தங்கள் நாட்டின் சார்பாக ரோவர் மற்றும் பிற யூனிட்டுகளை விண்வெளிக்கு அனுப்பும் போது, அந்நாடுகள் தங்கள் விவரங்களை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, அவற்றிடம் இருந்து புதிய தகவல்கள் எவையும் சேகரிக்கப்பட வாய்ப்பில்லை. ரோவர்கள் சேகரித்து நமக்குத் திருப்பி அனுப்பும் தகவல்கள் மதிப்புமிக்க தகவல்களாக இருக்கும். ஆனால் அந்த சாதனங்களில் எந்த ரகசியமும் இல்லை. இது போன்ற சாதனங்களை உற்பத்தி செய்யும் போதே அவற்றின் வாழ்நாள் நிர்ணயிக்கப்படுவதால், பின்னர் அவற்றிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியாது. https://www.bbc.com/tamil/articles/cd1zd2n645wo
  22. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்படவில்லை - முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி Published By: VISHNU 20 SEP, 2023 | 09:00 PM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளின்போது இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அதுகுறித்து செய்திகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது அங்கு கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் 'வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ளன' என்ற பதிவொன்று ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதுகுறித்து கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, 'கடந்த ஏழு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கிடைக்கவில்லை' என அவர் தெரிவித்ததாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டியங்கிவரும் Fact Seeker தெரிவித்துள்ளது. அத்துடன், 'கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த (13) புதன்கிழமை ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 6 ஆம் திகதியிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள் அகழ்வுப்பணிகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், சிவில் பிரதிநிதிகள் சிலரும் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். ஆகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியில் குறிப்பிடுவதைப்போன்று எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை' எனவும் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா Fact Seeker க்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/165052

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.