ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின - ஹமாஸ் தாக்குதலில் சிக்கிய பெண் Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 04:52 PM என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின என ஹமாசின் தாக்குதலில் சிக்குண்டு உயிர்தப்பிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். ஹமாசின் தாக்குதலில் சிக்குண்ட பெண்ணொருவர் தனது 24 வயது மகன் எலியன் கடத்தப்பட்டுள்ளார் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். அந்த தருணத்திலிருந்து உண்பதும் உறங்குவதும்; கடினமாக உள்ளது அவர் எங்கிருக்கின்றார் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையிலேயே நான் எப்போதும் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்தவேளை இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரில் அவரது மகனும் ஒருவர் . சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 270 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. உடல்கள் என்மீது விழுந்தன உடல்களே என்னை காப்பாற்றின துப்பாக்கிபிரயோகத்திலிருந்து அவை என்னை காப்பாற்றின என அந்த பெண் தெரிவித்துள்ளார். நானும் மகனும் ஒருவரையொருவர் இருக்கமாக பிடித்துக்கொண்டு நின்றோம் தீடிரென ஒருவர் மகனை இழுத்துச்சென்றார் நான் அவனை இழந்தேன் என அபுட் என்ற பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166576
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா எல்லையை மீள கைப்பற்றியுள்ளோம் - இஸ்ரேல் இராணுவம் 10 OCT, 2023 | 12:04 PM காசாவில் உள்ள தனது எல்லைகளை மீள கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று எல்லை ஊடாக ஊடுருவல் எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட எல்லைபகுதிகளில் கண்ணிவெடிகளை புதைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் உறுப்பினர்களின் 1500 உடல்கள் காணப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166539
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் - ஈரானின் ஆன்மீக தலைவர் Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 02:22 PM இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என ஆன்மீக தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரானிற்கு தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார். எனினும் சியோனிச ஆட்சியாளர்களிற்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என அவர் தெரிவித்தார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166555
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
'என் மனைவியையும் குழந்தைகளையும் ஹமாஸ் பிடித்துச் சென்றுவிட்டனர்’ பட மூலாதாரம்,YONI ASHER படக்குறிப்பு, யோனி ஆஷரின் மனைவி டோரன் (மத்தி) மற்றும் மகள்கள் அவிவ் (இடது) மற்றும் ராஸ் (வலது) ஆகியோர் ஒரு டிரக்கில் ஏற்றப்படும் வீடியோ வெளியானது 27 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) தாக்குதல் நடத்தி சுமார் 100 மக்களைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றிருக்கும் நிலையில், அவர்களில் தங்கள் அன்புக்குரியவர்களும் இருக்கலாம் என்பதை அறிந்து குடும்பங்கள் பெரும் பீதி அடைந்திருக்கின்றனர். வெளிநாட்டு பிரஜைகள் உட்பட பல டஜன் மக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. அவர்களின் சில கதைகள் இங்கே. ‘அந்த வீடியோவில் என் குடும்பத்தினர் இருந்தனர்’ யோனி ஆஷர், தனது மனைவியின் கைபேசியை டிராக் செய்ததன் மூலம் அவரது குடும்பத்தினர் காஸாவில் இருப்பதைக் கண்டறிந்தார். ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியபோது அவரது மனைவி டோரன் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ராஸ் (5) மற்றும் அவிவ் (3) காசா எல்லைக்கு அருகில் உறவினர்களுடன் தங்கியிருந்தனர். யோனி பிபிசியிடம் பேசுகையில், "சனிக்கிழமை, காலை 10:30 மணியளவில், நான் என் மனைவியுடன் கடைசியாகத் தொலைபேசியில் பேசினேன். ஹமாஸ் குழுவினர் வீட்டிற்குள் நுழைந்ததாக அவர் என்னிடம் கூறினார்,” என்றார். "அவர்கள் பாதுகாப்பான ஒரு அறையில் இருந்தனர். பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின், நான் அவரது மொபைல் ஃபோன் இருந்த இடத்தை டிராக் செய்தேன். அது காசாவிற்குள் இருந்தது," என்றார். அதே நாளின் பிற்பகுதியில் வெளியான ஒரு வீடியோவில், ஹமாஸ் குழுவினர் ஒரு டிரக்கில் ஆட்களை ஏற்றிச் செல்லும் காட்சிகளில், அவரது குடும்பத்தினரும் இருந்ததை அவர் அடையாளம் கண்டபோது, அவர் பயந்த விஷயம் உறுதிப்படுத்தப்பட்டது. "அந்த வீடியோவில் என் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், எனது இரண்டு குழந்தைகளை நான் அடையாளம் கண்டேன்," என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், “அவர்கள் எந்த நிபந்தனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது,” என்றார். இப்போதைக்கு, யோனி செய்யக்கூடியது நம்பிக்கையை இழக்காமல் இருப்பது மட்டுமே. "நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். இராஜதந்திரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அல்லது ஏதாவது தொடர்பு இருப்பதாக நான் நம்ப விரும்புகிறேன். ஆனால் எங்களுக்கு எதுவும் தெரியாது, அதுதான் கஷ்டமான விஷயம்," என்கிறார். பட மூலாதாரம்,IDO DAN படக்குறிப்பு, காணாமல் போன இடோவின் குடும்ப உறுப்பினர்களில் ஹடாஸின் இரு குழந்தைகளான எரேஸ் (இடது) மற்றும் சஹர் (வலது) ஆகியோர் அடங்குவர் ‘அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புகிறோம்’ இடோ டான், சனிக்கிழமை நடந்த பயங்கரமான நிகழ்வுகளை தனது குடும்பத்தின் வாட்ஸப் குழுவில் நேரடியாக அறிந்துகொண்டார். "வாட்ஸப் குழுவில் அவள் ‘குட்பை’ மெசேஜ் அனுப்பினாள். அவள் ஒரு இதயத்தின் எமோஜியை அனுப்பினாள். 'ஐ லவ் யூ. நான் இதிலிருந்து தப்பிப் பிழைப்பேனா என்று தெரியவில்லை’ என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்," என்று இடோ கூறுகிறார். அந்த வாட்ஸப் குறுஞ்செய்திகளைத் திரும்பிப் பார்த்தபடி அழுகிறார். காசாவிற்கு அடுத்துள்ள ஒரு சிறு காலனியான ‘நிர் ஓஸ்’ அனும் பகுதியில் வசிக்கும் அவரது அத்தை மகள் ஹடாஸ், விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்தபடி, அங்கு நடப்பவற்றைத் தனது குடும்பத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார். ராக்கெட் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததும் அவர் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். அதிகாலையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் அரபி மொழியில் சத்தம் போடுவது கேட்பதாகச் சொல்லியிருந்தார். ‘இங்கே நடப்பவற்றைப் பார்த்தால் பயமாக இருக்கிறது,’ என்று அவர் குடும்ப வாட்ஸப் குழுவில் கூறினார். “அவர்கள் அனைவரையும் கொல்வதாக அவள் கூறினாள்,” என்று இடோ கூறுகிறார். "பின்னர் 09:00 மணிக்கு அவளது இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடைய கைப்பேசியின் பேட்டரி தீர்ந்துவிட்டது," என்றார். அந்தத் தாக்குதலின்போது, தனது மறைவிடத்தில் ஒளிந்துகொண்டு ஹடாஸ் உயிர்தப்பினார். ஆனால், அன்றிரவு அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதை அறிந்தார். அவரது இரண்டு குழந்தைகள், அவரது முன்னாள் கணவர், அவரது சகோதரியின் மகள், மற்றும் அவரது 80 வயது தாயார். சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், ஹடாஸின் 12 வயது மகன் எரெஸ், துப்பாக்கி ஏந்தியவர்களால் காசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதுபோன்ற காட்சிகளைக் கொண்டிருந்தது. டெல் அவிவ் அருகே வசிக்கும் இடோ, "அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறோம்,” என்கிறார். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருக்கிறார். "என் அத்தையின் மருந்துகள் தீர்ந்துவிட்டன. குழந்தைகள் எப்படிக் கழிவறைக்குச் செல்கிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது," என்கிறார். இடோ தனது குடும்பத்தினர் பற்றிய தகவலைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளால் பெரிதாக உதவமுடியவில்லை. "நான் யாரையும் குறை கூறவில்லை, ஏனெனில் இது உண்மையில் ஒரு சிக்கலான சூழ்நிலை" என்கிறார் இடோ. இடோ ஹமாஸுக்கு ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறார்: "குழந்தைகளையும், வயதானவர்களையும் விடுவியுங்கள். இந்த மோதல் அவர்களுக்கானது அல்ல. போரில்கூட விதிகளும் நெறிமுறைகளும் உள்ளன." பட மூலாதாரம்,NOAM SAGI ‘ஒரு திகில் படம் போல இருந்தது' காசாவின் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள தனது 74 வயதான தனது தாயாரின் அடா சாகியின் வீட்டிற்கு முன்பாக இருந்து பாலத்தீனிய ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பத் தொடங்கியபோது தனது இதயம் நொறுங்கிப் போனதாகக் கூறினார் நோம் சாகி. சனிக்கிழமை பிற்பகல், இஸ்ரேலிய ராணுவம் அடா சாகியின் வீட்டுக்குள் நுழைந்த போது ரத்தக் கறைகளைக் கண்டது. ஆனால் அந்த வயதான பெண் அங்கு இல்லை என்று அவர் கூறுகிறார். பிபிசி ரேடியோ 4-இடம் லண்டனில் வசிக்கும் சாகி பேசினார். கடத்தப்பட்டவர்களில் அரபு மொழி கற்பிக்கும் அவரது தாயும் ஒருவர் என்பது அவரது அனுமானம் என்றார். “74 வயதான என் தாயார் ஒரு பாதுகாப்பான அறைக்குள் சென்றார். இப்போது, அவர் அங்கு இல்லை," என்றார் அவர். "இறந்தவர்களின் பட்டியலில் அவர் இல்லை, காயமடைந்தவர்களின் பட்டியலிலும் இல்லை. அது ஒரு சிறிய சமூகம். அதிகபட்சம் 350 பேர் தான். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்கிறார் அவர். முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன. சாகியின் கூற்றுப்படி, அவரது தாயார் எங்கிருக்கிறார் என்பது குறித்து முறையான அல்லது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை. "இது ஒரு திகில் படம் போல இருக்கிறது," என்கிறார் சாகி. மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் தனது தாயை நினத்துக் கவலைப்படுவதாக அவர் கூறுகிறார். தனது தாயை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையோடு இருக்கும் சாகி, அவரது 75-ஆவது பிறந்த நாளுக்காக அடுத்த வாரம் லண்டனில் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறினார். படக்குறிப்பு, லண்டனில் வசிக்கும் ஷரோன் லிஃப்ஷிட்ஸ், தனது வயதான பெற்றோர் காசாவிற்கு அருகில் உள்ள அடா சாகி வசித்த அதே பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார் 'இப்போது அங்கு எதுவும் மிச்சமில்லை' லண்டனில் வசிக்கும் ஷரோன் லிஃப்ஷிட்ஸ், தனது வயதான பெற்றோர் காசாவிற்கு அருகில் உள்ள அடா சாகி வசித்த அதே பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார். ஹமாஸ் குழுவினர் மக்களை பயமுறுத்துவதற்காக வீடுகளை எரித்ததாகவும் அவர் கூறுகிறார். “மக்கள் ஒரு பாதுகாப்பான அறையில் தஞ்சம் அடைய முயன்றனர்,” என்கிறார். "அந்த இடம் மொத்தமாக அழிந்து போயிருக்கிறது. எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை," என்கிறார். அடா சாகியைப் போலவே, லிஃப்ஷிட்ஸின் தந்தையும் அரபு மொழி பேசுபவர். தனது ஓய்வு நேரத்தில், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனியர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். "அவர் மனிதநேயத்தை நம்பினார். எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதை நம்பினார்," என்கிறார். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பிளவு இருப்பதை உறுதிப்படுத்த ‘நிறைய சக்திகள்’ முயற்சிப்பதாகவும், மற்றவரும் மனிதர்கள் தான் என்பதை இரு தரப்பினரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் லிஃப்ஷிட்ஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,SHANI LOUK'S INSTAGRAM படக்குறிப்பு, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக், காசா எல்லைக்கு அருகே நடந்த இசைத்திருவிழாவில் கலந்துகொண்டபோது சிறைபிடிக்கப்பட்டார் ‘வீடியோவில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருந்தார்’ ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக், காசா எல்லைக்கு அருகே நடந்த இசைத் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது ஹமாஸ் போராளிகள் அப்பகுதியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பயந்த மக்கள் பாலைவனத்தின் வழியாக ஓடினர். ஷானி சிறைபிடிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்த்ததாக அவரது தாயார் ரிக்கார்டா கூறுகிறார். "எங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டது. அதில் பாலத்தீனர்களுடன் ஒரு காரில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருப்பதையும், அந்தல் கார் காசா பகுதியில் பயணம் செய்வதையும் நான் பார்த்தேன்," என்று அவர் கூறினார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பலர், ஹமாஸ் போராளிகளால் தாக்கப்பட்ட காசா எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் பணிபுரியும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள். தாய்லாந்தின் 11 குடிமக்களைக் காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckre3dykpmpo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீண்டகால யுத்தத்திற்கு தயார் - இஸ்ரேல் இராணுவம் ஒரு காகித புலி - பணயக்கைதிகளை பயன்படுத்தி சிறையில் உள்ள எங்கள் உறுப்பினர்களை விடுதலை செய்ய முயல்வோம் - ஹமாஸ் Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 11:30 AM இஸ்ரேலுடன் நீண்ட யுத்தத்திற்கு தயார் என தெரிவித்துள்ள ஹமாஸ் தன்னுடன் பணயக்கைதிகளாக உள்ளவர்களை பயன்படுத்தி இஸ்ரேலிலும் வெளிநாடுகளிலும் சிறையில் உள்ள தனது அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அசோசியேட்டட் பிரசிற்கு கருத்து தெரிவித்துள்ள பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் உறுப்பினர் அலி பரேகே நீண்டகாலத்திற்கு பயன்படுத்தக்கூடிய அளவிற்கு எங்களிடம் ரொக்கட்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த யுத்ததிற்கும் எல்லா சூழ்நிலைகளைஎதிர்கொள்ளவும் எங்களை நன்றாக தயார்படுத்தியுள்ளோம், நீண்ட கால யுத்தத்திற்கும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய சிறையில் உள்ள அமெரிக்க சிறையில் உள்ள எங்கள் உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு தற்போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களை பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள முக்கிய தளபதிகள் சிலருக்கு மாத்திரம் இந்த தாக்குதல் குறித்து தெரிந்திருந்தது ஹமாசின் நெருங்கிய சகாக்களிற்கு கூட தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் ஈரானின் பாதுகாப்பு படையினர் தாக்குதலிற்கு உதவினார்கள் என தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளார். காசா மீது நீண்டகால யுத்தம் திணிக்கப்பட்டால் ஹமாசின் சகாக்களாக ஹெஸ்புல்லா, ஈரான் போன்றவர்கள் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்பது ஹமாசிற்கே ஆச்சரியமளித்துள்ளது என தெரிவித்துள்ள பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் உறுப்பினர் அலி பரேகே இஸ்ரேல் தாக்குதலை தடுக்கும் கட்டுப்படுத்தும் என எதிர்பார்த்தோம்; அவர்களின் பெரும் வீழ்ச்சி குறித்து நாங்களே பெரும் ஆச்சரியமடைந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிய வெற்றியை பெற்று பணயக்கைதிகளை பிடிக்க திட்டமிட்டிருநதோம் இந்த இராணுவம் ஒரு காகிதப்புலி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/166532
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை ! 10 OCT, 2023 | 11:23 AM உயிரிழந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்தார். இந்நிலையில், தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய முடியுமா என்பதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு, தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் பேராசிரியை அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவுக்கு நீதிவான் உத்தரவிட்டார் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (09) விசாரணைக்கு வந்தபோது உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உண்மைகளை முன்வைத்து, இறந்தவரின் உடலை தகனம் செய்வதே தனது தரப்பினரின் விருப்பமாக உள்ளதாகவும் அதற்காக நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார். https://www.virakesari.lk/article/166529
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எங்கள் பதில் நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் - இஸ்ரேலிய பிரதமர் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 09:26 PM மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாசின் தாக்குதலிற்கான இஸ்ரேலின் பதில்நடவடிக்கை மத்தியகிழக்கை மாற்றும் என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மிகமோசமான பயங்கரமான அனுபவங்களை எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166509
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில் ஒரே இடத்தில் 260 பேர் கொன்று குவிப்பு - இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2023, 14:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த சில வாரங்களாகவே, யூதர்களின் பண்டிகையான சுக்கோட் உடன் இணைந்து தெற்கு இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடைபெறும் சூப்பர்நோவா இசை நிகழ்ச்சிக்காக பல இசைப் பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். "ஒரே குடும்பமாக ஒன்று சேர நேரம் வந்துவிட்டது," என்று இந்த நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் எழுதியிருந்தனர். அடுத்த சில மணிநேரங்களில் அந்த சமூக ஊடக பக்கம் முழுவதுமாக, தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் நபர்களின் பதிவுகளால் நிரம்பின. தெற்கு இஸ்ரேலின் பாலைவனப் பகுதியில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியின் போது, பாலத்தீன பகுதியிலிருந்து வந்த ஆயுதக்குழு, கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து 260க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்பு நிறுவனமான ஸாகா தெரிவித்துள்ளது. காணொளிக் குறிப்பு, Partygoers run as gunshots heard in Israel பட மூலாதாரம்,GETTY IMAGES "எதோ ஒரு தவறு நடந்ததற்கான அறிகுறியாக விடியற்காலையில் சைரன் ஒலி கேட்டது. அதைத்தொடர்ந்து ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டன. ராக்கெடுகளையடுத்து நாங்கள் இருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது," என தாக்குதலின் போது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஓர்டெல் தெரிவித்தார். "மின்சாரத்தை அவர்கள் துண்டித்தனர், எங்கிருந்தோ வந்த ஆயுதக்குழு திடீரென எல்லா திசைகளில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்," என்று அவர் இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சியிடம் கூறினார். "ராணுவ சீருடையணிந்த 50 பயங்கரவாதிகள் வேன்களில் வந்தனர்," என்று அவர் கூறினார். மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். மணல் பரப்பில் விரைவாக ஓடிச்சென்று கார்களில் ஏறி தப்பிக்க முயற்சி செய்த போது, ஜீப்களில் வந்த ஆயுதக்குழுவினர், கார்களை நோக்கி சுட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். நெகேவ் பாலைவனத்தில் நிகழ்ச்சி நடந்த மைதானம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அங்கு விழா மேடை, உணவு உண்ணும் இடம், பார், ஓய்வு எடுக்கும் இடம் என்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடம் காசாவிலிருந்து வெகுதொலைவில் அமைந்திருக்கவில்லை. அதனால் இருள் சூழ்ந்த பிறகு வேலிகளை தாண்டி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வந்துள்ளனர். அங்கிருந்த பல கிராமங்கள், நகரங்களில் ஊடுருவி பலரை பணயக்கைதிகளாக பிடித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஆடம் பரேல் ஹாரெட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், அப்பகுதியில் ராக்கெட் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். மற்றவர்களை போலவே தானும் காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை நோக்கி சுட்டதாக அவர் தெரிவித்தார். “பலரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். நான் அங்கு ஒளிந்து கொண்டேன். மற்றவர்கள் வேறு எங்கோ ஓடிவிட்டனர்,” என்று அவர் கூறினார். “என் காரை நான் ஓட்டிச்சென்றபோது எனது வாகனத்தை அவர்கள் இடித்தனர். அப்போது வேறு ஒரு காரில் சென்ற இளைஞன் என்னையும் வருமாறு அழைத்தான். அவனுடைய காரில் நான் ஏறினே. ஆனால் ஆயுதக்குழுவினர் அவனை துப்பாக்கி முனையில் சுட்டுக்கொன்றனர். நானும் இறந்தது போல நடித்தேன். கடைசியாக இஸ்ரேல் ராணுவம் வந்து என்னை மீட்டனர்,“ என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்தர் போரோச்சோவ் கூறினார். "என்னால் என் கால்களை அசைக்க முடியவில்லை. புதரில் இருந்த என்னை ராணுவ வீரர்கள் வந்து மீட்டர்," என்று அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். பல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்ற ஓர்டெல் போன்றவர்கள், அருகிலிருந்த புதர்களிலும், பழத்தோட்டங்களிலும் ராணுவம் வந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் பல மணிநேரமாக ஒளிந்திருந்தனர். "நான் என்னுடைய தொலைபேசியை மியூட் மோடில் வைத்தேன், பின்னர் ஒரு ஆரஞ்சு தோட்டம் வழியாக ஊர்ந்து சென்றேன். எனக்கு மேலே பயங்கரமாக ராக்கெட் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது." கிலி யோஸ்கோவிச், ஒரு பழத்தோட்டத்தில் எப்படி மறைந்திருந்தார் என்பதை பிபிசியிடம் விவரித்தார். "அவர்கள் ஒவ்வொரு மரமாகச் சென்று ஒழிந்திருந்தவர்களை சுட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் இறப்பதை நான் பார்த்தேன். நான் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தேன். நான் அழவும் இல்லை." இறுதியில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் வீரர்களின் குரலைக் கேட்ட பிறகு அவர்களை நோக்கி சென்றதாக கிலி கூறினார். பட மூலாதாரம்,SUPERNOVA MUSIC FESTIVAL காணொளிக் குறிப்பு, Destroyed cars line road near festival in chilling video இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவசர சிகிச்சை மருத்துவரான யானிவ் அவரது அனுபவங்களை கன் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். "இது ஒரு படுகொலை. என் வாழ்நாளில் இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை. இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். அவசரகால வழிகளில் பொதுமக்கள் வெளியேறும் போது வாயிலில் காத்திருந்த எதிரிகள், அவர்களை கடத்திச் சென்றனர்." இசை நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஜேக் மார்லோவ் (26), மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர். ஷானி கடத்தப்பட்டுள்ளதாக அவரது தாயார் நம்புகிறார். அதேபோல 25 வயதான நோவா அர்கமணியும் கடத்தப்பட்டுள்ளதாக அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கூறுகின்றனர். “8.30 மணிக்கு நோவாவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி கடைசியாக வந்தது. அதற்கு பிறகு அவர் சிறைபிடிக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அவளுடைய காதலனுடன் நோவா இருந்தபோது அவள் கடத்தி செல்லப்பட்டாள், “ என நோவாவின் நண்பரான அமிட் பிபிசியிடம் தெரிவித்தார். தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cje9l52245vo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
படைகள் குவிப்பு… இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் மூன்றாம் உலகப் போராகிறதா? இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இஸ்ரேல் வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனம் மீது குறிப்பாக காஸா மீது இஸ்ரேல் அரசு போர் பிரகடனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் வான் வழி தாக்குதல் ” இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம். காஸா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம்” என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ள ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட பெண் ஹமாஸ் படையினருக்கு லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா படையினர் உதவி வருவதும் அங்கிருந்தபடி அவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஏற்கெனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு, ஆதரவாக உலகிலேயே மிகப்பெரிய போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர்.போர்ட் போர் கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன. இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வியும், அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல், பாலஸ்தீனம், ஹமாஸ் , ஈரான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக இது நீடிக்குமா என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. அப்படி நடந்தால் இதில் ரஷ்யா, சீனா இணையலாம். ஏற்கெனவே உக்ரைன் – ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. அதனால் இந்த போரும் இணைந்து. இரண்டு போர்களும் சேர்ந்து இது மூன்றாம் உலகபோராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. https://thinakkural.lk/article/276244
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவு- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 03:49 PM காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார். மின்சாரம் இல்லை, உணவில்லை, எரிபொருள் இல்லை முழுமையாக காசாவை முற்றுகையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவின் வான்வெளியை கரையோர பகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டு செல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது. https://www.virakesari.lk/article/166476
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிற்குள் இன்னமும் ஹமாஸ் - மோதல் இடம்பெறுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிப்பு Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 11:59 AM இஸ்ரேலிற்குள் இன்னமும் ஹமாஸ் போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள எட்டுபகுதிகளில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த மோதல்கள் காசா இஸ்ரேலிய எல்லையில் இடம்பெறுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பீஈரி என்ற விவசாய சமூகத்தினர் உள்ள பகுதிக்குள் ஹமாஸ் உறுப்பினர்கள் நுழைந்துள்ளனர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனினும் இன்னும் பலர் வீடுகளிற்குள் மறைந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் ஆயிரம் இலக்குகளை தாக்கியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது தற்பாதுகாப்பு நிலைக்கு திரும்புவதற்கு அதிக நேரம் எடுக்கின்றது என இஸ்ரேலிய இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166443
-
தந்தை-மகன் கொலை: காவல் நிலைய சித்ரவதைக்கு பிறகு சிறையில் 3 நாட்களை கழித்தது எப்படி?
படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். 15 நிமிடங்களுக்கு முன்னர் ‘பாலு சத்தம் கேட்கவில்லை, ஏன் சும்மா நிற்கிறீர்கள்’ என சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் சொல்ல, ‘நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை வித்தாவது வெளியில் வந்துவிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே அந்தக் காவல்நிலையத்தின் முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அடித்தார்" என்பது நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலம். இந்தக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக் காவலில் மரணமடைந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகின்றது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை முதலில் விசாரித்த அப்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், கடந்த 25 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். அவர் முதல் நாள் சாட்சியம் அளித்தபோது, சம்பவம் நடந்த ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்று தன் விசாரணையின் மூலம் அறிந்துகொண்டதை சாட்சியமாக அளித்தார். "ரத்தம் வடியவடிய அடித்த காவல்துறை" படக்குறிப்பு, அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட, பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார். தந்தை மகன் மரணத்திற்கு பிறகு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டபோது காவல்நிலையத்தில் இருந்த இரண்டு பெண் காவலர்கள், நீதித்துறை நடுவர் பாரதிதசானிடம் ஜூன் 19 தேதி இரவு முழுவதும் என்ன நடந்தது என்பதை கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் பாரதிதாசன் அளித்த சாட்சியில்,“அவர்(பெண் காவலர்) தனது வாக்குமூலத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இருவரையும் போலீசார் காவல்நிலைய மேஜையின் மீது படுக்க வைத்து ஒரு இரவு முழுவதும் லத்தியால் அடித்து இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கறைகளில் பெரும்பாலாவனை ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டதாகவும், லத்தி மற்றும் அந்த மேஜையினை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.” என்றார். அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார். “விசாரணையின் போது, காவலர் சாமதுரையிடம் அவரது லத்தியை கேட்டபோது, அவர் ஓடிச் சென்று காவல்நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த காரின் மீது ஏறி குதித்து இருட்டில் மறைந்துவிட்டார்,” என நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் பாரதிதாசன். காவல் நிலையத்தில் இருந்த பெரும்பாலான ரத்தக்கறைகள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது ரத்தக்கறைதான் என்றும் பாரதிதாசன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். “காவல் நிலையத்தில் காணப்பட்ட இரத்தக்கறைகளில் பெரும்பாலானவை சுவற்றின் கீழ்பகுதியில் காணப்பட்டது. அது காயமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பிட்டத்தில் இருந்த காயத்தின் உயரத்திற்கு ஒத்திசைவதாக அமைந்திருந்தது, என்றார் பாரதிதாசன். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சிறையில் எப்படி இருந்தார்கள்? படக்குறிப்பு, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர் ஜூன் 19 ஆம் தேதி இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் ஜெயராஜூம், பென்னிக்சும் நடக்கக்கூட முடியாமல் சிரமப்பட்டதாகவும், அவர்களின் பிட்டத்தில் இருந்து தண்ணீர் போல வடிந்துகொண்டே இருந்ததாக, அவருடன் இருந்த சிறைவாசிகள் நீதிமன்ற நடுவர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். “சிறையில் இருந்தபோது, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சுக்கும், பின்பக்கம் நிற்காமல் நீர் வடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் லேசான ஈரம் இருந்தது, மூன்றாம் நாள் தான் அதிகமாக நீர் வடிந்தது. சிறையில் அடைத்த முதல் இரண்டு நாட்கள் அவர்கள் கொஞ்சம் அருகில் இருந்த சுவரை பிடித்தும், கழிவறை சுவற்றை பிடித்தும் தான் நடக்க முடிந்தது. அனைத்து கைதிகளையும் மூன்று வேளை சாப்பிடும்போது வரிசையாக அமரச் சொல்லி எண்ணும்போது கூட பென்னிக்சாலும், அவரது அப்பாவாலும் தரையில் அமர முடியாமல் அருகில் உள்ள சுவற்றை பிடித்தபடியே நிற்பார்கள். மூன்றாவது நாள் பென்னிக்சால் கொஞ்சம் கூட நடக்க முடியாமலும், நிற்க முடியாமலும், படுக்க முடியாமலும், சாப்பிடும்போது கூட, இரண்டு கைகளையும் தரையில் ஊற்றி, இரண்டு கால் முட்டிகளையும் தரையில் முட்டி போட்டக் கொண்டும், மிகவும் சிரமப்பட்டு கொஞ்சமாக சாப்பிட்டு, மிச்சம் வைத்துவிடுவார்,” இவ்வாறு ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுடன் இருந்த சிறைவாசி ஒருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ‘அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான்?’ படக்குறிப்பு, கிடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் பென்னிக்சின் நண்பர் சங்கரலிங்கம். ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இறந்து மூன்றாண்டுகளானாலும், தங்களால் இன்றளவும் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை என்கிறார்கள் பென்னிக்சின் நண்பர்கள். “நாங்கள் இரண்டாம் வகுப்பிலிருந்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். வெவ்வேறு வேலைக்கு சென்றாலும், நாங்கள் தினமும் சந்தித்துக்கொள்வோம். இன்று அவன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதே ஊரு தான், இதே தெரு தான். நாங்க சேர்ந்து சுத்துன இடத்திற்கு இப்போது சென்றாலும், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அழுகை வரும். அந்த கடைத்தெருவை கடக்கும்போதெல்லாம் விவரிக்க முடியாத பதற்றமும், அழுத்தமும் ஏற்படுகிறது,”என்றார் சங்கரலிங்கம். கடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் சங்கரலிங்கம். “அம்மாவை பத்திரமாக பார்த்துக்கோடா, இதுதான் பென்னிக்ஸ் ஜெயிலுக்கு செல்லும் முன் கடைசியாக என்னிடம் சொன்னது. அவனுக்கு அம்மா என்றால் உயிர்,” என்றார் சங்கரலிங்கம். பென்னிக்சின் மற்றொரு நண்பரான ராஜ்குமார் கூறுகையில், பென்னிக்ஸ் தான் செய்த குற்றம் என்ன எனத் தெரியாமல் மிகவும் வேதனையடைந்ததாகக் கூறினார். “அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான் என்று தான் அவனுக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. எங்களுக்கும் அந்த ஒரு கேள்விதான் இப்போதும் இருக்கிறது. அவன் இரவு காவல்நிலையம் சென்றதில் இருந்து விடியும்வரை நாங்கள் வெளியே தான் இருந்தோம். அவனுக்கு பதிலாக நாங்கள் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு அடி வாங்கியிருந்தால் கூட, இந்நேரம் அவன் உயிருடன் இருந்திருப்பான்,” என்றார் ராஜ்குமார். ‘ஊருக்கு போகவே முடியலை; பயமாக இருக்கிறது’ படக்குறிப்பு, இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் நாங்கள் இத்தனை காலம்பட்ட கஷ்டங்களுக்க நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் பென்னிக்சின் மைத்துனர் வினோத். அந்த சம்பவத்திற்கு பிறகு தங்களுடைய சொந்த ஊருக்கே செல்ல பிடிக்கவில்லை என்கிறார் பென்னிக்சின் மைத்துனரான வினோத். “நான் பென்னிக்சின் தங்கையை திருமணம் செய்துள்ளேன். எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான். முன்பெல்லாம் எப்போது ஊருக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும், நல்ல நினைவுகள் இருக்கும். ஆனால், இப்போது ஊருக்கு செல்லும்போதெல்லாம், அந்த இருவரை இழந்தது மட்டும்தான் நினைவுக்கு வருகிறது,” என்றார். மேலும், பேசிய வினோத், “இப்போது வரை எந்த தரப்பில் இருந்தும் எந்த அழுத்தமும் வரவில்லை. ஆனால், இருந்தபோதும், அந்த சம்பவத்திற்கு பிறகு, எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியே தனியாக செல்வதற்கே பயப்படுகிறோம். மனைவியோ மற்ற உறவினர்களோ வெளியே சென்றால், அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார். இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் அவர்கள் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் வினோத். ஆனால், இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்திருந்தால், இன்னும் பலர் இதுபோல பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் என்கிறார் மற்றொரு மைதுனரான பொன்சேகர். “இப்போதும் ஊருக்கு சென்றால், இதே நினைவுகள் தான் உள்ளது. ஆனால், இந்த வழக்கை மட்டும் எப்படியாவது நடத்திவிடுங்கள் என்று தான் ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். நாங்களும் நீதி கேட்காமல், சென்றிருந்தால், பல பேர் இன்னும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என ஊர் மக்கள் எங்களிடத்தில் கூறுகிறார்கள்,” என்றார் பொன்சேகர். வழக்கின் நிலை என்ன? முதலில் தமிழ் நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின் சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட காவலர்களை கைது செய்தது. பின், இவ்வழக்கு மத்திய புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. “அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, தற்போது நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாட்சியம் அளித்து வருகிறார். அவருக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசாரும், தமிழ்நாடு போலீசாரும் சாட்சியம் அளிப்பார்கள். பின், வழக்கின் வாதம், பிரதிவாதங்கள் நடைபெறும்,” என்றார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ். இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, வழக்கு நடந்துகொண்டிருப்பதால் கருத்துக் கூற விரும்பவில்லை என்றனர். https://www.bbc.com/tamil/articles/clje3xll33zo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக்கொள்கின்றது - ஹமாஸ் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 10:16 AM அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் ஆக்கிரமிப்பில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலை மத்தியகிழக்கிற்கு அமெரிக்கா அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என தெரிவித்துள்ள ஹமாஸ் இவ்வாறான நடவடிக்கைகள் எங்கள் மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர் போர்ட் அணுவாயுத கப்பல் ஏவுகணை கப்பல்கள் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கிற்கு புறப்பட்டுள்ளன. அமெரிக்கா மத்திய கிழக்கை நோக்கி தனது போர்விமானங்களையும் தயார்படுத்தியுள்ளது.ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்பார்த்தே அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/166429
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் தாக்குதல் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 06:41 AM இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. இஸ்ரேலியின் பிரதான விமான நிலையமான பென்குரியன் விமானதளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வீடுகளை இலக்குவைத்தல் உட்பட ஏனைய குற்றங்களிற்காக இந்த தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நகரமான அஸ்கெலென் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166418
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில்இசைநிகழ்வு இடம்பெற்ற பகுதியில் 260 உடல்கள் - மீட்பு பணியாளர்கள் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 06:29 AM இஸ்ரேலின் இசை நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் 260க்கும் மேற்பட்ட உடல்கள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள பகுதியில் இந்த இசைநிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை தாக்குதல் இடம்பெறும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் தப்பியோடுவதை வீடியோக்கள் காண்பிக்கின்றன- திறந்தவெளிகள் ஊடாக பலர் ஒடுவதையும் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காணமுடிகின்றது. நிலத்தில் விழுபவர்கள் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக நிலத்தில் விழுந்து படுக்கின்றார்களா அல்லது துப்பாக்கி சூட்டினால் விழுகின்றார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. மக்களுடன் தப்பியோட முயலும் வாகனங்கள் மீது போராளிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதால் ஏற்பட்ட பதற்றத்தை உயிர்தப்பிய ஓர்டெல் என்பவர் வர்ணித்துள்ளார். https://www.virakesari.lk/article/166417
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க போர்க் கப்பல்கள் பட மூலாதாரம்,PA MEDIA 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது. முன்னர், தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அமெரிக்க அதிபர் பிடன் ‘இதுவரை நடந்திராத பயங்கரமான தாக்குதல்’ என்று வர்ணித்திருந்தார். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கக் குடிமக்களும் அடங்குவர் என்று வெளியாகியிருக்கும் அறிக்கைகளைச் அமெரிக்கா சரிபார்த்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார். இத்தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. காஸாவில், பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ‘தாக்குதலுக்கு இரான் உதவியது’ வரும் நாட்களில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற விமானம் தாங்கிக் கப்பல், ஒரு ஏவுகணைக் கப்பல் மற்றும் நான்கு ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இப்பகுதியை நோக்கிச் செல்லும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். அமெரிக்க போர் விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு மேலும் ராணுவ உதவி அனுப்பப்படும் என்று கூறியிருக்கும் அமெரிக்க அசராங்கம், இஸ்ரேலின் எதிரிகள் இந்தச் சூழ்நிலையில் இருந்து ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா செயல்படுவதாகக் கூறியது. இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹமாஸ் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து, பாலஸ்தீனப் பகுத்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தங்களது தாக்குதலை நடத்த இரானின் உதவி பெரிதும் பயன்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் குழுவினர், ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் பாராகிளைடர்களின் மூலம், காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய எல்லைக் கோட்டைகளை உடைத்து தாக்குதல் நடத்தினர். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், இரானின் நேரடி தலையீட்டிற்கான ஆதாரங்களை அமெரிக்கா காணவில்லையெனினும், காஸாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் குழுவிற்கு இரான் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது என்றார். “இரான் பல ஆண்டுகளாக அளித்துவரும் ஆதரவு இல்லாமல் ஹமாஸ் குழுவல் இயங்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட தாக்குதலுக்குப் பின்னால் இரான் இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஹமாஸிற்கு இரான் பல ஆண்டுகளாக ஆதரவு கொடுத்து வருவது உறுதி," என்று அவர் அமெரிக்கத் தொலைகாட்சியில் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் ஐ.நா தூதர் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் படத்தைக் காட்டுகிறார் அமெரிக்கக் குடிமக்கள் சிக்கியுள்ளனரா? இந்தத் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் சிக்கியுள்ளனர் என்று வெளிவரும் தகவல்கள் பற்றி அமெரிக்க அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக பிளிங்கன் கூறினார். "இறந்தவர்களில் பல அமெரிக்கர்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகளை சரிபார்க்க நாங்கள் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். இங்கிலாந்து, பிரான்ஸ், யுக்ரேன் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளும் தங்கள் குடிமக்கள் இந்தத் தாக்குதலில் இறந்திருப்பதாகப் பதிவு செய்துள்ளன. மேலும் பேசிய பிளிங்கன், "இது ஒரு மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல். இதில் இஸ்ரேலிய குடிமக்கள் அவர்களின் நகரங்களில், அவர்களின் வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காசாவின் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். உலகம் இதைக்கண்டு அதிர்ச்சியடைய வேண்டும்,” என்றார். மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 23 வயதான அமெரிக்க-இஸ்ரேலியர் ஹெர்ஷ் கோல்பெர்க்-பொலின் ஒருவர். அவர் ஒரு இசைவிழாவில் பங்கேற்ற போது ஹமாஸ் குழுவினர் அங்கு தாக்குதல் நடத்தினர். அவரிடமிருந்து ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘என்னை மன்னிக்கவும்’ என்ற இரண்டு குறுஞ்செய்திகள் வந்ததாக அவரது பெற்றோர் ‘ஜெருசலேம் போஸ்ட்’ இதழிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸின் திடீர் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் பதிலடியைத் தொடர்ந்து இரு தரப்பிலும் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் ராணுவ உதவிகள் அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் மைக்கேல் ஹெர்சாக், தெற்கு இஸ்ரேலில் கடத்தப்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்களில் அமெரிக்கர்களும் இருப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் ஆனால் அதுபற்றி மேற்படி விவரங்கள் இல்லை என்றும் கூறினார். அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டாலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் காஸா வன்முறைகள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் நியூயார்க்கில் கூட உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c6pjgqeg399o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய மக்கள், பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில், நான் அவர்களுக்கும், உலகுக்கும், எங்கெங்கும் உள்ள பயங்கரவாதிகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவெனில் இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீண்ட கால யுத்தம் குறித்து காசா மக்கள் அச்சம் Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 07:55 PM Rushdi Abu Alouf BBC News, Gaza City நான் காசாவின் மத்தியபகுதிக்கு வாகனத்தில் சென்றேன் இஸ்ரேலின் விமானதாக்குதலில் இடிந்துவிழுந்துள்ள கட்டிடம் முக்கியமான வீதியின் போக்குவரத்தை தடைசெய்துள்ளது. காசா மக்களிற்கு இணையவசதிகளை வழங்கிவந்த முக்கியமான கட்டிடம் அழிக்கப்பட்டுள்ளதால் காசாவில் இணையவசதி இல்லாத நிலை காணப்படுகின்றது. தொடர்பாடல் என்பது கடினமாக உள்ளது. ஆனாலும் நான் தப்பியோடிக்கொண்டிருக்கின்ற பொதுமக்களுடன் உரையாடினேன், அனேகமானவர்கள் கலவையான உணர்வை கொண்டுள்ளனர். நேற்றைய தினம் பாலஸ்தீனியர்களிற்கு மகிழ்ச்சியை கொண்டுவந்தது, இஸ்ரேலின் தாக்குதலிற்கு ஹமாஸ் பழிவாங்குகின்றது என அவர்கள் தெரிவித்தனர், அதேவேளை இந்த யுத்தம் நீண்டநாள் நீடிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். இஸ்ரேல் காசாவிற்கான மின்சாரம், எரிபொருள் விநியோகம் போன்றவற்றை துண்டிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. மக்கள் மனிதாபிமான நிலை குறித்து கரிசனை கொண்டுள்ளனர். பிரதான வீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன, சில வெதுப்பகங்கள் மாத்திரம் திறந்திருக்கின்றன. https://www.virakesari.lk/article/166414- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பல அமெரிக்கர்கள் பலி-இராணுவ உதவியை வழங்குகின்றது அமெரிக்கா Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 07:22 PM ஹமாசின் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லபட்டுள்ளனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் சி.என்.என்னிற்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க இது குறித்த விபரங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா இஸ்ரேலிற்கு வழங்கவுள்ள இராணுவ உதவி குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிற்கு என்ன தேவையோ அதனை வழங்குவதே எங்களின் முதல் தெரிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166413- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் vs ஹமாஸ்: பலி ஆயிரத்தை நெருங்குகிறது - இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களில் 370 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸாவில் என்ன நடக்கிறது? காஸா மீது இரண்டாவது நாளாக குண்டுமழை பொழியும் இஸ்ரேல், அங்கே ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர். இஸ்ரேலுக்குள் ராணுவம் - ஹமாஸ் சண்டை இஸ்ரேல் எல்லைக்குள் அந்நாட்டு படைகளுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே குறைந்தது 22 இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன. இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உரிம், பாரி, நஹல் ஓஸ், நேட்டிவ் ஹதாரா, ஜிகிம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற மீட்புப் பணிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் "நிலைமை மதிப்பீட்டிற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும்" என்று ராணுவம் கூறுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களது நாடு "இன்னும் போரைத்" தொடர்வதாகக் கூறியுள்ளனர். [மேலும்] ஹமாஸ் குழுவினரிடம் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை மீட்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக" தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்களைத் தொடங்கி 24 மணி நேரத்திற்கும் மேலாக நாட்டின் தெற்கு பகுதியில் வசிக்கும் சமூகங்களுக்குள் ஊடுருவிய நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்ப்போம். தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலத்தீன ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் தென்பகுதியில் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் காசா எல்லைக்கு அருகில் உள்ள பீரி மற்றும் ஸ்டெரோட் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை தொடர்கிறது. ஜேக் மார்லோ என்ற பிரிட்டிஷ் குடிமகன் காணாமல் போனதை இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்தபோது அவர் காசா எல்லைக்கு அருகிலுள்ள வெளிப்புற நடன விழாவில் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்ததாகத் தெரியவந்துள்ளது. 600 இஸ்ரேலியர்கள் பலி, 100 பேர் பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல்வழி தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவத்தினர் என குறைந்தது 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடக்கத்தில் ஏவப்பட்ட 7,000 ராக்கெட்டுகளுடன் கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம் ஏற்கெனவே இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில், லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது. ஆனால் இஸ்ரேல்-பாலத்தீன மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்தது. சர்ச்சைக்குரிய 3 நிலைகளில் மட்டுமே அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால், அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதலை நடத்த முடியும். இரானைப் போலவே இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் குழுவினருக்கு தற்போதைய தாக்குதல் குறித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் முன்னேற்றம் குறித்து "ஆழமாகக் கவனித்து வருவதாகவும்" அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போதைய தாக்குதல்கள் "பாலத்தீன மக்களின் இசைவைப் பெற்றுள்ளது" என்று அதன் அறிக்கை கூறுகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாகச் சென்று தாக்கக் கூடியவை. ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஏற்கனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. அது ஒரு நீண்ட மோதலைத் திட்டமிடுவதாகவும், காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறது. தற்போதைய தாக்குதல்களின் அளவு வரம்பிற்குட்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல்களை கவனமாக அளவீடு செய்து மேற்கொள்கின்றனர். மேலும் முழு அளவிலான போரைத் தூண்டும் காரணிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் உள்ள மறைமுகமான அச்சுறுத்தல், இதே நிலை நீடிப்பதற்குப் பதிலாக நிலைமை மோசடையும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனான் நாடு அல்ல. அந்த அமைப்பை எதிர்க்கும் பலர் நாட்டில் உள்ளனர். இன்னும் அரசியல் முடக்கத்தால் அந்த அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது - தற்போதைய நிலையில் அந்த அமைப்புக்கு சரியான தலைமையும் இல்லை என்பதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் அந்த அமைப்பு சிக்கித் தவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும், அவர்களது எகிப்திய சுற்றுலா வழிகாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நகரத்தில் இருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடையாளம் தெரியாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி எக்ஸ்ட்ரா நியூஸ் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களில் எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீதான இத்தகைய தாக்குதல் இதுவே முதல் முறையாகும். https://www.bbc.com/tamil/articles/c16755442elo- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இந்த பதில் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர். இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன. யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் - துருக்கியில் உள்ள தூதரகம் இதுவரை குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று துருக்கியிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை இஸ்ரேலால் நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. காசாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சனிக்கிழமை முதல் இஸ்ரேலிய பதில் வான்வழித் தாக்குதல்களால் காஸாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 2,000 பேர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலி; பலர் கைது - இஸ்ரேல் காசாவில் இருந்து நடந்த தக்குதலுக்கு பிறகு, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, இஸ்ரேலிய சமூகங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. இதுவரை எட்டு இடங்களில் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c16755442elo- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் விமானதாக்குதல் - காசாவில் 256 பாலஸ்தீனியர்கள் 24 மணிநேரத்தில் பலி Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 12:12 PM இஸ்ரேலின் விமானதாக்குதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 20 சிறுவர்கள் உட்பட 256 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 1800 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. காசா பள்ளத்தாக்கில் ஹமாசின் இலக்குகள் அமைந்துள்ள பகுதிகள் மீது தாக்குதல் இடம்பெறுவதாக தெரிவித்து பல படங்கள் வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. காசாவிலிருந்து தகவல்கள் மிகக்குறைந்தளவிலேயே வெளிவருகின்ற போதிலும் சமூக ஊடகங்களில் மதவழிபாட்டுத்தலங்கள் உட்ப பல கட்டிடங்கள் தரைமட்டக்கமாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் காசா மருத்துவமனைகளில் தஞ்சமடைவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/166371- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 480 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இந்த பதில் தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர். இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன. யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,REUTERS காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் "அத்துடன், இது ஒரு போர், இந்த போரில் நாங்கள் வெல்வோம். எங்கள் எதிரிகள் அவர்கள் இதுவரை அறிந்திராத பெரும் விலையை கொடுக்க நேரிடும்" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது. இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. அதேவேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் 161 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு இஸ்ரேல் மீது பாலத்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எந்த வித காரணமும் இன்றி நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறினார். "பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்காக எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்." தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாச்சி ஹானெக்பியுடன் பேசியதாகவும், "எங்கள் இஸ்ரேலிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன. "பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது. "பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்" என்று அவர் கூறினார். ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், "பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்" கூறியுள்ளது. அது ஹமாஸ் தாக்குதல்களை "இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள் ஆகஸ்ட் 2005 - மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின. ஜன. 25, 2006 - பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின. ஜூன் 14, 2007 - மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது. டிசம்பர் 27, 2008 - தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நவம்பர் 14, 2012 - ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது. ஜூலை-ஆகஸ்ட் 2014 - மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மார்ச் 2018 - பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது. மே 2021 - ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். ஆகஸ்ட் 2022 - மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி 2023 - இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 2023 - தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c16755442elo- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவிலிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் Published By: RAJEEBAN 08 OCT, 2023 | 07:28 AM காசாவின் மீதான பழிவாங்கும் தாக்குதலிற்கு முன்னதாக அங்கிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கின் மீது தொடர்ச்சியான விமானதாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது. இதுவரை 230 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளதாக்கின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நகரத்தின் மத்திக்கு சென்று தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுபல குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஐநாவின் தற்காலிக தங்குமிடங்களிற்கு செல்கின்றன. இஸ்ரேல் தொடர்ச்சியான பாரிய விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/166344 - இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.