Everything posted by ஏராளன்
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி விசாரணைகளின் போது தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் அவரது சடலத்தை அடக்கம் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நிபுணர் மருத்துவக் குழு தகனம் செய்வது பொருத்தமற்றது என முன்வைத்த பரிந்துரைகளை ஆராய்ந்த மாஜிஸ்திரேட் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். https://thinakkural.lk/article/277180
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தென்காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை - இஸ்ரேல் 16 OCT, 2023 | 12:34 PM தென்காசாவில் யுத்த நிறுத்தம் என வெளியாகியுள்ள செய்திகளை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. ரபா எல்லை திறப்புடன் தென்காசாவில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படலாம் என எகிப்திய வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்திருந்தன. எனினும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் இதனை நிராகரித்துள்ளது. வெளிநாட்டவர்களை வெளியே கொண்டுவருவதற்காக யுத்தநிறுத்தமோ மனிதாபிமான உதவியோ இல்லை என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166972
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தென்காசாவில் யுத்தநிறுத்தம்- அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து இணக்கம் 16 OCT, 2023 | 11:50 AM அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து ஆகிய நாடுகள் தென்காசாவில் யுத்தநிறுத்தமொன்றிற்கு இணங்கியுள்ளன. எகிப்திய வட்டாரங்கள் இதனை ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன. எகிப்திய இஸ்ரேல் எல்லையில் உள்ள ரபா எல்லை பாதையை திறக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/166960
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா: பூமிக்கடியில் 500 கி.மீ. நீள சுரங்கப்பாதை நெட்வொர்க் - இஸ்ரேலால் முற்றிலும் அழிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 13 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதைகளின் நெட்வொர்க் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர். மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி. ஒன்று தரைக்கு மேல் பொது மக்களுக்கானது, மற்றொன்று நிலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது என்றார். 500 கி.மீ. நீள சுரங்கப்பாதை நெட்வொர்க் அவர் மேலும் கூறுகையில், "இந்த சுரங்கப்பாதைகள் இவை காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்," என்று கூறினார். இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதை நெட்வொர்க் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசா பகுதியில் இருக்கும் இந்த சுரங்க கட்டமைப்புகள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்க அறைகள் எப்போது கட்டப்பட்டன? எதற்குப் பயன்பட்டன? கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு காசாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தைத் தொடங்கியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இந்த சுரங்க அறைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் இஸ்ரேலும் எகிப்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதன் வழியாகச் சென்று வருவதையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்தின. இந்த சுரங்கங்களின் செயல்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 2,500 சுரங்க கட்டமைப்புகள் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களால், வணிகப் பொருட்கள், எரிபொருள், மற்றும் ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2010ஆம் ஆண்டில் இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட அனுமதித்த பிறகு, கடத்தலுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீரைச் செலுத்தியும் அவற்றைத் தகர்த்தும் எகிப்து கடத்தலைக் கட்டுப்படுத்தியது. தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் சுரங்க கட்டமைப்புகள் இதைத்தொடர்ந்து, ஹமாஸும் பிற குழுக்களும் இஸ்ரேலிய படைகளைத் தாக்குவதற்காக இந்த சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கின. ஆயுதமேந்தியப் போராளிகள் 2006ஆம் ஆண்டில், இஸ்ரேலுடனான எல்லைக்கு அடியில் இருந்த ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்தி இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். மேலும் மற்றொரு வீரரைக் கைப்பற்றி, அவரை ஐந்து ஆண்டுள் சிறைபிடித்து வைத்திருந்தனர். மேலும், 2013ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் விசித்திரமான ஒலிகள் கேட்டதையடுத்து, அதைச் சோதித்த இஸ்ரேலிய பாதுகாப்புக் குழுவினர், அங்கு 1.6 கி.மீ. நீளமும், 18 மீட்டர் ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அது கான்கிரீட் கூரை மற்றும் கான்கிரீட் சுவர்களைக் கொண்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, காசாவின்மீது ஒரு பெரிய வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்த, இத்தகைய ‘பயங்கர சுரங்கங்களின்’ மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதைக் காரணமாகச் சொன்னது இஸ்ரேல். போரின்போது 30க்கும் மேற்பட்ட சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் ஒரு போராளிக் குழுவும் ஒரு சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க கட்டமைப்புகள் எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்காலிகமானவை. அவை அவ்வப்போது இஸ்ரேலின் பகுதிகளைக் கைப்பற்றவே கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், "காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன," என்கிறார் இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக். “ஹமாஸின் தலைவர்கள் இந்த சுரங்கங்களில் பதுங்கியுள்ளனர். அங்கு அவர்கள் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவியுள்ளனர். அங்கு மின்சாரம், மின்விளக்குகள், மற்றும் தண்டவாளங்கள் உள்ளன. அதற்குள் வசதியாக நிற்கவும் நகரவும் முடியும்,” என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், சிரியாவின் போராளிக் குழுக்கள், மற்றும் ஐ.எஸ் குழுவினர் ஆகியோரின் முறைகளைப் பார்த்து தங்கள் சுரங்கக் கட்டுமான உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார். இந்த சுரங்கங்கள் எப்படி கட்டப்பட்டன? காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன. காசாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்தச் சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் எல்லை தாண்டிய சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலின் கஃபார் ஆசா பகுதிக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையின் வெளியேறும் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது உறுதி செய்யப்பட்டால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் நிறுவி முடித்த, சுரங்கப்பாதைகளைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள் பதிக்கப்பட்ட நிலத்தடி கான்கிரீட் தடுப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும். இது உறுதிசெய்யப்பட்டால், பேரதிர்ச்சியாக இருக்கும் என்று ரீஷ்மண்ட்-பராக் கூறுகிறார். எந்த சுரங்கப்பாதை கண்டறியும் அமைப்பும் முழுமையானது அல்ல என்று அவர் கூறிகிறார். "அதனால்தான் சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார் அவர். இந்த சுரங்கங்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா? மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார். “சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர். இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் குழு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும், பணயக் கைதிகளை சுரங்கப் பாதைகளுக்குள் அனுப்பி வைக்கும் என்கிறார் அவர். கடந்த 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவில் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த சுரங்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை? மேலும், இந்தச் சுரங்கங்களுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், மொத்த சுரங்கப்பாதை நெட்வொர்க்கிலும் வெடிகளை வைக்கலாம், என்கிறார் அவர். “அவற்றில் இஸ்ரேலிய ராணுவத்தினரை நுழையவிட்ட பிறகு அதை வெடிக்க வைக்கலாம்.” இல்லையேல், ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்து இஸ்ரேலியப் படையினரைச் சிறைபிடிக்கலாம் அல்லது இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போகலாம், என்கிறார். சுரங்கத்துக்குள் செல்லாமல், கண்ணுக்குத் தெரியாத அவற்றை தரைக்கு மேலிருந்துச் சுற்றி வளைப்பதும் சிக்கலானது என்கிறார் அவர். ஆனால், இஸ்ரேல் ராணுவம் வேறு வகையான உத்திகளைப் பின்பற்றலாம், என்கிறார் சூஃபான் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் இயக்குநரான காலின் க்ளார்க். உதாரணத்திற்கு டிரோன்கள் அல்லது ஆளில்லா வாகனங்களை அனுப்பி இந்தச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களையும், அங்கிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம், என்கிறார் அவர். பூமியைத் துளைத்துச் சென்று பங்கர் சுரங்கங்களைத் தாக்கும் குண்டுகளையும் இஸ்ரேல் பயன்படுத்தாலாம். ஆனால் அவை கட்டுமானங்கள் நிறைந்த காசா பகுதியில் பெருமளவில் சேதத்தை விளைவிக்கும். https://www.bbc.com/tamil/articles/cn3927d12lmo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போரில் அடுத்த டுவிஸ்ட்! இனி தான் அதிர்ச்சி காத்திருக்கிறது _Fr ஜெகத் கஸ்பார் பேட்டி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா மோதல் தொடர்ந்தால் தலையிடவேண்டியிருக்கும் ஈரான் இஸ்ரேலிற்கு கடும் எச்சரிக்கை Published By: RAJEEBAN 15 OCT, 2023 | 04:06 PM இஸ்ரேல் காசாவில் தரைநடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஈரான் ஐநா ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் மோதல் மேலும் விரிவடைவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஈரான் காசாவில் மோதல்கள் தொடர்ந்தால் தலையிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது. இராஜதந்திர வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. ஈரான் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அது பிராந்திய மோதலாக வெடிக்கும் ஆபத்துள்ளது. ஈரான் நேரடியாக இதில் தலையிடலாம் அல்லது சிரியாவில் ஆயுதகுழு ஊடாகவோ அல்லது ஹெஸ்புல்லா அமைப்பை ஆதரிப்பதன் மூலமோ தலையிடலாம். ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது -இந்த நோக்கத்துடன் வளைகுடாவிற்கு கப்பல்களையும் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பிவருகின்றது. https://www.virakesari.lk/article/166916
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸூக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்தது எப்படி? இஸ்ரேல் போரால் புதினுக்கு என்ன லாபம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, பிபிசி ரஷ்யா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மறைவான மலைப்பிரதேசத்தில் மாபெரும் அதிகார பீடத்தில் அமர்ந்து உலகைக் குழப்ப முயலும் ஜேம்ஸ் பாண்ட் பாணி வில்லனாக விளாடிமிர் புதினைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அவர் ஒரு பொத்தானை அழுத்தினால் பால்கன் பகுதியில் பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுகிறது. மற்றொரு பொத்தானை அவர் அழுத்துகிறார், மத்திய கிழக்குப் பகுதியில் போர் வெடிக்கிறது. இது கவர்ச்சியானது. ஆனால் தவறானதும் கூட. இது கிரெம்ளின் மாளிகையில் இருக்கும் தலைவரின் உலகளாவிய செல்வாக்கை மிகைப்படுத்துகிறது. ஆம். ஹமாஸ் அமைப்புடன் ரஷ்யா தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது என்பதுடன் இரானின் நெருங்கிய நட்பு நாடாகவும் மாறியுள்ளது. அமெரிக்காவின் கூற்றுப்படி, மாஸ்கோவும் டெஹ்ரானும் இப்போது முழு அளவிலான பாதுகாப்பு கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. ஆனால், மாஸ்கோவிற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருந்ததாகவோ அல்லது அதுபற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததாகவோ பொருள் கொள்ளக்கூடாது. "ரஷ்யா எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட்டதாக நாங்கள் நம்பவில்லை," என்று மாஸ்கோவிற்கான இஸ்ரேல் தூதர் அலெக்சாண்டர் பென் ஸ்வி, இந்த வாரம் கொம்மர்சன்ட் செய்தித்தாளிடம் கூறினார். இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற வாதம் "முழுமையான முட்டாள்த்தனம்" என்று கூறினார். பெர்லினில் உள்ள ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுத பரவல் தடுப்பு கல்வி மையத்தைச் சேர்ந்த சக நாட்டவரும், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு பகுதி குறித்த அரசியல் நிபுணருமான ஹன்னா நோட் கூறுகையில், "ஹமாஸுக்கு ரஷ்ய ஆயுதங்கள் நேரடியாக வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை,” என்றார். “ரஷ்யாவுக்கு ஹமாஸுடன் நீண்ட கால உறவு இருப்பது உண்மைதான். ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா ஒருபோதும் அறிவிக்கவில்லை. ஹமாஸ் பிரதிநிதிகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தனர். "ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரான் உதவியுடன் எகிப்தின் சினாய் வழியாக காசா பகுதிக்குள் நுழைந்தன என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், ஹமாஸ் அமைப்புக்கு ரஷ்யாவின் விரிவான ராணுவ ஆதரவு உள்ளது என்று நான் யூகிக்கமுடியாது," என்றார் அவர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனாதிபதி புதின் "மத்திய கிழக்கு போர்" என்று குறிக்கப்பட்ட பொத்தானை அழுத்தவில்லை. ஆனால் அவர் இந்த சண்டையைப் பயன்படுத்திக் கொள்ள தயாரா? நிச்சயமாக. எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அடுத்த வாரம் கத்தார் செல்லும் ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மிகைல் போக்டனோல், ஹமாஸ் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் போரால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்? மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போரின் எழுச்சி சர்வதேச அளவில் மாபெரும் செய்தியாக உருவெடுத்துள்ள நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் குறித்த செய்திகளில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப இஸ்ரேல் தொடர்பான நிகழ்வுகளை ரஷ்யா நம்பியுள்ளது. ஆனால் ரஷ்யா தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என்பதை விட கொஞ்சம் அதிகமாகவே ரஷ்யா இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் போரின் விளைவாக, யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆயுதங்களில் கணிசமான அளவு இஸ்ரேலை நோக்கித் திரும்பும் என்பதே ரஷ்யாவின் பெரும் நம்பிக்கையாக உள்ளது. "இந்த நெருக்கடி யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவும் வேகத்தை நேரடியாக பாதிக்கும் என்று நம்புகிறேன்" என்று ரஷ்ய தூதர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் கிரெம்ளின் சார்பு இஸ்வெஸ்டியா செய்தித்தாளிடம் கூறினார். "யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குபவர்கள் இஸ்ரேலில் நடக்கும் போர் காரணமாக திசை திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மேற்குலக நாடுகள் யுக்ரேனியர்களை கைவிட்டுவிடும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் ராணுவ உதவியின் அளவு குறையும். இது ரஷ்யாவுக்குச் சாதகமாக மாறக்கூடும்." ரஷ்யா விரும்பும் நிலை ஏற்படுமா? நிச்சயமாக ஏற்படும். நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேசுகையில், "நாங்கள் யுக்ரேனுக்கு ஆதரவாக நிற்பது போல், இஸ்ரேலுக்கும் ஆதரவாக நிற்க முடியும்,” என்றார். ஆனால் மத்திய கிழக்கில் ஒரு நீடித்த மோதல் இரண்டு தனித்தனியான போர்களில் ஒரே நேரத்தில் இரண்டு நட்பு நாடுகளை ஆதரிக்கும் அமெரிக்காவின் திறனை சோதிக்கும் விதத்திலேயே இருக்கும். ரஷ்யா தன்னை ஒரு சமாதான நாடாக தன்னை வடிவமைத்துக் கொள்வதன் மூலம் மத்திய கிழக்கில் தனது பங்கை அதிகரிக்க முயற்சிக்கிறது. இந்த பிராந்தியத்தில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கடந்தகால சர்வதேச முயற்சிகளில் இணைவதற்கு முன்னர் அது அதே மாதிரியான ஒரு நிலையை எடுத்திருந்தது. "போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஒரு பங்கை வகிக்க முடியும்" என்று அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். "நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்புகொண்டு வருகிறோம்." இந்த வாரம் மாஸ்கோவிற்கு வந்திருந்த இராக் பிரதமர், மத்திய கிழக்கில் "உண்மையான போர் நிறுத்தத்திற்கான முன்முயற்சியை" அறிவிக்குமாறு அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்தார். சமாதானம் செய்யும் நாடாக ரஷ்யா மாறுமா? அது கடினமான ஒரு விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டை நாடு மீது முழு அளவில் தாக்குதலை நடத்திவரும் நாடு இது. ஏறக்குறைய 20 மாதங்களுக்குப் பிறகு, யுக்ரேனில் ரஷ்யாவின் போர் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அளவில் மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உங்களால் முடியும் என்று கூறுவதால் மட்டுமே, மோதலில் ஈடுபடுபவர்கள் உங்களை ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதமும் கிடைத்துவிடாது. மாஸ்கோ நீண்ட காலமாக மத்திய கிழக்கு பிராந்தியம் குறித்த ஒரு ஆர்வத்தை வைத்துக்கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் அமெரிக்காவுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியதால் சோவியத் யூனியன் அரபு சார்பு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. சோவியத் யூனியனின் முடிவுக்குப் பிறகு, முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்ததன் காரணமாக, இஸ்ரேலுடனான ரஷ்யாவின் உறவுகள் மேம்பட்டன. ஆனால் அண்மைக்காலமாக விளாடிமிர் புதினின் ரஷ்யா, இஸ்ரேலின் எதிரிகளுடன், குறிப்பாக இரானுடன் நெருக்கமாகி விட்டது. இது ரஷ்ய-இஸ்ரேல் உறவுகளில் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் தான் மத்தியஸ்தம் செய்யமுடியும் என ரஷ்யா கூறுகிறது. அமெரிக்காவைக் கண்டிக்கும் ரஷ்யா அமெரிக்காவைக் குற்றம் சாட்டி ஏற்கனவே ரஷ்யா நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதைப் போலவே இங்கேயும் ஏதாவது செய்ய முடியுமா என்ற வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர், விளாடிமிர் புதினின் மையச் செய்தி என்னவென்றால், "மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கொள்கையின் தோல்விக்கு இது ஒரு எடுத்துக்காட்டு," என்பதே ஆகும். "அமெரிக்காவின் மேலாதிக்கம்" என்று எப்போதும் குறைகூறும் ரஷ்யாவின் பொதுவான வாதத்துக்கு இது நன்றாகப் பொருந்துகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்காவை மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பது, அமெரிக்காவின் செலவில் அப்பகுதியில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போருக்கும் அமெரிக்கா தான் காரணம் என அந்நாட்டை ஒரு மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பதில் ரஷ்யாவிற்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி இதுவரை நான் பேசினேன். ஆனால் அங்கே ஆபத்துகளும் உள்ளன. "கவனமாக அளவிடப்பட்ட உறுதியற்ற தன்மைதான் ரஷ்யாவிற்குச் சிறப்பாகச் சேவை செய்கிறது" என்று ஹன்னா நோட் நம்புகிறார். "இந்த நெருக்கடி யுக்ரேனில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பினால் - அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழலில் இஸ்ரேலின் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை, அதற்கு உண்மையான ஆபத்து உள்ளது - ஆம், ரஷ்யா ஒரு குறுகிய கால பயனாளியாக இருக்கலாம்." ஆனால் ஹமாஸுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கும் இரான் உட்பட பரந்த பிராந்தியத்தை ஈர்க்கும் போரினால் ரஷ்யா பயனடையாது என்று நோட் கூறுகிறார். "இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஒரு முழுமையான போரை ரஷ்யா விரும்பவில்லை. விஷயங்கள் அதை நோக்கி நகர்ந்து, அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டால், ரஷ்யா இரானின் பக்கம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால், அதை ரஷ்யா விரும்புகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.” "இஸ்ரேலுடனான தனது உறவுகளை புதின் இன்னும் மதிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்ய ராஜதந்திரம், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இடத்துக்குச் செல்ல விரும்புகிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த மோதல் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அழுத்தத்தை அவர்கள் உணரக்கூடும்." https://www.bbc.com/tamil/articles/c2l3p11jkd0o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்த செய்தி- மன்னிப்பு கோரினார் சிஎன்என் செய்தியாளர் Published By: RAJEEBAN 15 OCT, 2023 | 11:14 AM ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்தது குறித்த தனது செய்திக்காக சிஎன்னின் பிரபல செய்தியாளர் சரா சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார். ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்தது என இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தமைக்காகவே சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார். அவ்வாறான உணர்வுபூர்வமான மனதை வருத்தக்கூடிய செய்திகளை வெளியிடும்போது நிதானமும் எச்சரிக்கையும் துல்லியமும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் தன்னுடைய முன்னைய செய்தியில் தான் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். நாங்கள் நேரலையில் இருந்தவேளை ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது அதனை உறுதிப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். நான் எனது வார்த்தைகளில் மேலும் அவதானமாகஇருக்கவேண்டும் மன்னியுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166887
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கடத்தப்பட்ட இஸ்ரேலிய சிறுவர்கள் : ஹமாஸ் வெளியிட்ட காணொளி கடந்த சனிக்கிழமையன்று தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளைக் காட்டுவது போல் தோன்றும் புதிய காணொளி காட்சிகளை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஹமாஸ் டெலிகிராம் சனலில் வெளியிடப்பட்ட காணொளியில், “ஹமாஸ் போராளிகள், ஒப்பரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் முதல் நாளில் கிப்புட்ஸ் ‘ஹோலெட்’ சண்டைகளுக்கு மத்தியில் குழந்தைகளிடம் கருணை காட்டுகிறார்கள்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. காணொளியில் உள்ள குழந்தைகளின் கிப்புட்ஸ் ஹோலிட் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில், பதின்மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். காணொளியில் உள்ள குழந்தைகளின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாததால், அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது கொல்லப்பட்டவர்களில் அவர்களின் பெற்றோரும் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்திய ஹமாஸ் காணொளியின் காட்சிகள் இஸ்ரேலிய குழந்தைகளை ஹமாஸ் மீண்டும் காஸாவிற்கு அழைத்துச் சென்றதைக் காட்டுவதாகத் தோன்றுவதாக ஹீப்ரு ஊடக ஆதாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. ஹமாஸ் உறுப்பினர்களின் இரக்கம் முதலாவதாக, ஹமாஸின் உறுப்பினர் ஒரு சிறு குழந்தையின் காலில் ஒரு கட்டு கட்டுவது போல் தோன்றுகிறது. அடுத்தடுத்த காட்சிகளில், இராணுவ சீருடையுடன் உள்ள ஆண்கள், தாக்குதல் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டு, முதுகில் தட்டிக் கொடுத்து, அவர்களிடம் பேசுகிறார்கள். ஒரு தீவிரவாதி ஒரு சிறு குழந்தையை ஊஞ்சலில் முன்னும் பின்னுமாக ஆட்டுவதைக் காட்டும் காட்சியில், குழந்தை அழுவதைக் கேட்க முடிகிறது. காணொளியில் சேர்க்கப்பட்டுள்ள இறுதி காட்சியில், ஒரு கப் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு சிரிக்கும் குழந்தையைக் காட்டுகிறது. ஆங்கிலத்தில், ஒரு ஆண் குழந்தையிடம், "பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரில்) என்று சொல்லுங்கள்" என்று கூறுகிறார். குழந்தை "பிஸ்மில்லா" என்று சொல்கிறது. "யாலா, குடிக்கவும்," அந்த மனிதன் குழந்தைக்கு சொல்கிறான். பின்னர் குழந்தை அந்த தண்ணீரை குடிக்கத் தொடங்குகிறது.. https://ibctamil.com/article/hamas-posts-kidnapped-israeli-children-1697285733
-
கொஞ்சம் சிரிக்க ....
யானையை குட்டியா இருந்து வளர்த்திருப்பாங்களோ?!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் வெள்ளை பொஸ்பரஸ் எறிகணையை பயன்படுத்துகின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை Published By: RAJEEBAN 14 OCT, 2023 | 01:13 PM இஸ்ரேல் காசாமீது வெள்ளை பொஸ்பரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை உறுதி செய்துள்ளது. வெள்ளை பொஸ்பரஸ் ஆட்டிலறி எறிகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவம் காசா மீது தாக்குதலை மேற்கொள்கின்றது என உறுதிசெய்ய முடிந்துள்ளது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீதான தாக்குதலிற்கு வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதம் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்துவருகின்றோம் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இஸ்ரேல் காசாவிற்கு மின்சாரத்தை வழங்கவேண்டும் 16 வருட முற்றுகையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. காசா மக்களிற்கு எதிரான கூட்டுதண்டனை சட்டவிரோதமானது யுத்த குற்றம் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166848
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல் Published By: RAJEEBAN 14 OCT, 2023 | 10:20 AM இஸ்ரேலின் டெல்அவிவில் பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசியின் செய்தியாளர்களும் அவர்களது அராபிய பிரிவின் குழுவினரும் ஹோட்டலிற்கு சென்று கொண்டிருந்த வேளை அவர்களது வாகனத்தை மறித்த இஸ்ரேலிய பொலிஸார் ஊடகவியலாளர்களை வாகனத்திலிருந்து பலவந்தமாக இறக்கி அவர்களை சோதனையிட்டுள்ளனர். பிபிசி செய்தியாளர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் இந்த சம்பவத்தை படம்பிடிக்க முயன்றவேளை பொலிஸார் கையடக்கதொலைபேசிகளை பறித்து நிலத்தில் வீசியதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. டெல்அவிவிலிருந்து செயற்படும் எங்கள் அராபிய பிரிவினர் ஊடகம் என தெளிவாக குறியிடப்பட்ட வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை இஸ்ரேலிய பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். காசா இஸ்ரேல் மோதல்கள் குறித்து செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் சூழல் அவசியம் என பிபிசியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166823
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய படையினர் காசாவில் மேற்கொண்ட தாக்குதலில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்கள் மீட்பு- இஸ்ரேல் செய்தித்தாள்கள் Published By: RAJEEBAN 14 OCT, 2023 | 10:01 AM இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் காசாவில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட தரைநடவடிக்கையின் போது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஹரேட்சும் ஜெரூசலேம்போஸ்ட்டும் தெரிவித்துள்ளன. பெருமளவு உடல்களை மீட்ட இஸ்ரேலிய படையினர் அவற்றை இஸ்ரேலிற்கு கொண்டுவந்தனர். அவற்றில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளமை தெரியவந்துள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன காசா மீதான பாரிய தரைத்தாக்குதலிற்கு முன்னதாக சிறிய தரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி ஆயுதங்களை அகற்றும் நோக்கத்துடனும் பணயக்கைதிகளை மீட்கும் நோக்கத்துடனும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பணயக்கைதிகளை மீட்பதற்கு உதவக்கூடிய ஆதாரங்களை படையினர் சேகரித்துள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ந்தும் காசவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றன. https://www.virakesari.lk/article/166819
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சுக்கு நூறாக உடையும் இஸ்ரேல்! பெரும் நெருக்கடியில் அமெரிக்கா(Video) இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையில் போர் நிலை வலுப்பெற்று வரும் சூழலில் அமெரிக்கா தனது நாட்டுக்குள்ளேயே பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் இந்த போர் விரிவாக்கம் அடைவதற்கான வாய்ப்புக்களை நிறையவே கொண்டிருக்கின்றது. எதிர்பாராத நேரத்தில் இந்த யுத்தம் வெடித்திருக்கின்றது. மேலும், இஸ்ரேலை எந்தவொரு சூழ்நிலையிலும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், https://tamilwin.com/article/israel-palestine-war-update-usa-action-1697201650
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
செம துணிச்சல்.. 60 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்று 250 பிணைகைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்! த்ரில் வீடியோ இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணை கைதிகளாக பிடித்து சென்று கொன்று வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல் ராணுவம் ஸ்கெட்ச் போட்டு ஹமாஸ் அமைப்பின் 60க்கும் அதிகமான தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி 250 பணயக்கைதிகளை பத்திரமாக மீட்ட த்ரில் வீடியோ வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுமட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் அங்கு வந்திருந்த வெளிநாட்டு மக்களை அவர்கள் பணயக்கைதிகளாக(பிணைக்கைதிகள்) பிடித்து சென்றனர். இது இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே இன்று 7 வது நாளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் தற்போது வரை 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதவிர இஸ்ரேல் நாட்டு மக்களை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இவர்களை இஸ்ரேல் படைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது வரை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்தது. இப்போது தரைவைழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் பேரை உடனடியாக தெற்கு பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்காக 24 மணிநேரம் டைம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காசாவில் மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை மீட்க அந்நாட்டு ராணுவம் மீட்க முயற்சித்து வருகிறது. ஐடிஎப் எனும் இஸ்ரேலிய ராணுவத்தினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பணயக்கைதிகளாக உள்ள தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா எல்லையில் சுபா மிலிட்டரி கேம்ப் பகுதியில் உள்ள கட்டடத்தில் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து ஹமாஸ் அமைப்பு மிரட்டி வருவது தெரியவந்தது. இதையடுத்து பணயக்கைதிகளாக உள்ள 250 பேரையும் பத்திரமாக மீட்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டடது. அதன்படி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு பணயக்கைதிகளை மீட்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்டநேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியாக 60 ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்று பணயக்கைதிகளாக இருந்த 250 பேரை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் எப்படி பணயக்கைதிகளை மீட்டனர் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛60க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹமாசின் தெற்கு கடற்படை பிரிவின் துணை தளபதியான முகம்மது அபு அலி உள்பட 26 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/international/israeli-military-forces-kill-60-hamas-terrorists-and-rescue-250-hostages-near-gaza-video-released-547879.html?story=1
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உருக்குலைந்த காசா நகரம்: உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள் இஸ்ரேல்-ஹமாஸ் படையினருடன் ஏற்பட்டு உள்ள போர் இன்று 7 ஆவது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் படையினர் வசிக்கும் காசா பகுதிகளை இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரவு மிக கடுமையான தாக்குதல் நடந்ததால் காசா பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கடந்த 6 நாட்களில் மட்டும் 6 ஆயிரம் சக்தி வாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் விமானங்கள் வீசி உள்ளன. இந்த வான்வழி தாக்குதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 2,500 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. இதன் காரணமாக காசா நகரம் உருக்குலைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இதற்காக குவித்துள்ளது. காசா நகருக்குள் இஸ்ரேல் தரை படை நுழைந்து தாக்குதல் நடத்தினால் உயிர் சேதம் மிக அதிகளவில் இருக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். இன்று காலை வரை 4.50 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி விட்டனர். காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் காசா பகுதியில் வாழும் மக்களின் நிலைமை படுமோசமாக மாறி வருகிறது. ஐ.நா. சபை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உதவி செய்து கண்காணித்து வருகிறார்கள். காசாவில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முகாம்களை ஐ.நா. சபை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சம் அடைய வரும் மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல் ஐ.நா. சபை அதிகாரிகள் திணறியபடி உள்ளனர். காசாவில் உள்ள உணவு ஆலைகள் இன்று முதல் உணவு விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் காசாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக கடைகளில் அரசு விநியோக பகுதிகளில் குவிந்துள்ளனர். இன்று காலை காசாவில் உணவுக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது. காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. பிணை கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தற்போது காசாவில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் பிணை கைதிகளாக உள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு அரபு நாடுகளும், பாலஸ்தீன பிரதமரும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதை ஹமாஸ் படையினர் ஏற்க மறுத்து இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது. காசாவில் மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக காசா முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 10 இலட்சம் பேர் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் இல்லாத நிலையில் மருந்தும் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். என்றாலும் இஸ்ரேல் இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை. இதன் காரணமாக காசா பகுதி மேலும் உருக்குலைய தொடங்கி உள்ளது. இது ஹமாஸ் இயக்கத்தினருக்கு நீண்ட கால பாதிப்பை கொடுக்கும் என கருதப்படுகிறது. https://thinakkural.lk/article/276930
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா முயற்சி இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரினால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள இராணுவ அமைச்சில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஜோர்டான் சென்றடைந்தார். அவர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபரைச் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/276862
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கும் ஹமாஸ் குழுவினரின் நூறு அடி ஆழ ரகசிய சுரங்கங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி அறைகளின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர். மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி. ஒன்று தரைக்கு மேல் பொது மக்களுக்கானது, மற்றொன்று நிலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது என்றார். எவ்வளவு நீளமானவை இந்தச் சுரங்கங்கள்? அவர் மேலும் கூறுகையில், "இந்த சுரங்கப்பாதைகள் இவை காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்," என்று கூறினார். இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதைகள் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசா பகுதியில் இருக்கும் இந்த சுரங்க கட்டமைப்புகள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்க அறைகள் எப்போது கட்டப்பட்டன? எதற்குப் பயன்பட்டன? கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு காசாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தைத் தொடங்கியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இந்த சுரங்க அறைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் இஸ்ரேலும் எகிப்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதன் வழியாகச் சென்று வருவதையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்தின. இந்த சுரங்கங்களின் செயல்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 2,500 சுரங்க கட்டமைப்புகள் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களால், வணிகப் பொருட்கள், எரிபொருள், மற்றும் ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2010ஆம் ஆண்டில் இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட அனுமதித்த பிறகு, கடத்தலுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீரைச் செலுத்தியும் அவற்றைத் தகர்த்தும் எகிப்து கடத்தலைக் கட்டுப்படுத்தியது. தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் சுரங்க கட்டமைப்புகள் இதைத்தொடர்ந்து, ஹமாஸும் பிற குழுக்களும் இஸ்ரேலிய படைகளைத் தாக்குவதற்காக இந்த சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கின. ஆயுதமேந்தியப் போராளிகள் 2006ஆம் ஆண்டில், இஸ்ரேலுடனான எல்லைக்கு அடியில் இருந்த ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்தி இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். மேலும் மற்றொரு வீரரைக் கைப்பற்றி, அவரை ஐந்து ஆண்டுள் சிறைபிடித்து வைத்திருந்தனர். மேலும், 2013ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் விசித்திரமான ஒலிகள் கேட்டதையடுத்து, அதைச் சோதித்த இஸ்ரேலிய பாதுகாப்புக் குழுவினர், அங்கு 1.6 கி.மீ. நீளமும், 18 மீட்டர் ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அது கான்கிரீட் கூரை மற்றும் கான்கிரீட் சுவர்களைக் கொண்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, காசாவின்மீது ஒரு பெரிய வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்த, இத்தகைய ‘பயங்கர சுரங்கங்களின்’ மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதைக் காரணமாகச் சொன்னது இஸ்ரேல். போரின்போது 30க்கும் மேற்பட்ட சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் ஒரு போராளிக் குழுவும் ஒரு சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க கட்டமைப்புகள் எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்காலிகமானவை. அவை அவ்வப்போது இஸ்ரேலின் பகுதிகளைக் கைப்பற்றவே கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், "காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன," என்கிறார் இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக். “ஹமாஸின் தலைவர்கள் இந்த சுரங்கங்களில் பதுங்கியுள்ளனர். அங்கு அவர்கள் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவியுள்ளனர். அங்கு மின்சாரம், மின்விளக்குகள், மற்றும் தண்டவாளங்கள் உள்ளன. அதற்குள் வசதியாக நிற்கவும் நகரவும் முடியும்,” என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், சிரியாவின் போராளிக் குழுக்கள், மற்றும் ஐ.எஸ் குழுவினர் ஆகியோரின் முறைகளைப் பார்த்து தங்கள் சுரங்கக் கட்டுமான உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார். இந்த சுரங்கங்கள் எப்படி கட்டப்பட்டன? காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன. காசாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்தச் சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் எல்லை தாண்டிய சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலின் கஃபார் ஆசா பகுதிக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையின் வெளியேறும் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது உறுதி செய்யப்பட்டால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் நிறுவி முடித்த, சுரங்கப்பாதைகளைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள் பதிக்கப்பட்ட நிலத்தடி கான்கிரீட் தடுப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும். இது உறுதிசெய்யப்பட்டால், பேரதிர்ச்சியாக இருக்கும் என்று ரீஷ்மண்ட்-பராக் கூறுகிறார். எந்த சுரங்கப்பாதை கண்டறியும் அமைப்பும் முழுமையானது அல்ல என்று அவர் கூறிகிறார். "அதனால்தான் சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார் அவர். இந்த சுரங்கங்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா? மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார். “சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர். இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் குழு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும், பணயக் கைதிகளை சுரங்கப் பாதைகளுக்குள் அனுப்பி வைக்கும் என்கிறார் அவர். கடந்த 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவில் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த சுரங்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை? மேலும், இந்தச் சுரங்கங்களுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், மொத்த சுரங்கப்பாதை வலைப்பின்னலிலும் வெடிகளை வைக்கலாம், என்கிறார் அவர். “அவற்றில் இஸ்ரேலிய ராணுவத்தினரை நுழையவிட்ட பிறகு அதை வெடிக்க வைக்கலாம்.” இல்லையேல், ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்து இஸ்ரேலியப் படையினரைச் சிறைபிடிக்கலாம் அல்லது இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போகலாம், என்கிறார். சுரங்கத்துக்குள் செல்லாமல், கண்ணுக்குத் தெரியாத அவற்றை தரைக்கு மேலிருந்துச் சுற்றி வளைப்பதும் சிக்கலானது என்கிறார் அவர். ஆனால், இஸ்ரேல் ராணுவம் வேறு வகையான உத்திகளைப் பின்பற்றலாம், என்கிறார் சூஃபான் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் இயக்குநரான காலின் க்ளார்க். உதாரணத்திற்கு டிரோன்கள் அல்லது ஆளில்லா வாகனங்களை அனுப்பி இந்தச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களையும், அங்கிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம், என்கிறார் அவர். பூமியைத் துளைத்துச் சென்று பங்கர் சுரங்கங்களைத் தாக்கும் குண்டுகளையும் இஸ்ரேல் பயன்படுத்தாலாம். ஆனால் அவை கட்டுமானங்கள் நிறைந்த காசா பகுதியில் பெருமளவில் சேதத்தை விளைவிக்கும். https://www.bbc.com/tamil/articles/cn3927d12lmo
-
மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
13 OCT, 2023 | 01:05 PM 2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கல் செய்த மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (12) அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் கொலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் தாக்கல் செய்த பல மனுக்களை பரிசீலித்த பின்னரே, பிரிவு 12(1)இன் கீழ் இந்த மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பொது மன்னிப்பு தொடர்பான பல ஆவணங்களை உச்ச நீதிமன்றத்துக்கு வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. மனுக்கள் மீதான தங்கள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவும், அந்த ஆட்சேபனைகளுக்கு மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கி, இந்த வழக்கை அடுத்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. https://www.virakesari.lk/article/166771
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா மக்கள் இடம்பெயரவேண்டும் என்ற உத்தரவை இஸ்ரேல் இரத்துச்செய்யவேண்டும் - ஐநா 13 OCT, 2023 | 10:27 AM காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதி நோக்கி இடம்பெயரவேண்டும் என விடுத்துள்ள உத்தரவை இஸ்ரேல் இரத்துச்செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே பெரும் துன்பகரமானதாக காணப்படுகின்ற சூழ்நிலை பெரும் பேரழிவு நிலையாக மாறாலாம் என்பதால் இந்த உத்தரவை இஸ்ரேல் இரத்துச் செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் அதிகாரிகள் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறவேண்டும் எனவும் இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை இன்று ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166747
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் இன்னுமொரு போர்முனையில் மோதல்கள் வெடிக்கலாம் - ஈரான் Published By: RAJEEBAN 13 OCT, 2023 | 06:22 AM காசாமீதான இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சு தொடர்ந்தால் வேறு போர்முனைகள் திறக்கப்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் வேறு போர்முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் ஈரான் வெளிவிவகார அமைச்சுh ஹ_சைன் அப்டொலாகியன் தெரிவித்துள்ளார். ஹெஸ்புல்லா குழு குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். காசாமீதான தொடரும் வன்முறைகள் யுத்தகுற்றங்கள் மற்றும் முற்றுகை காரணமாக இன்னொரு போர்முனை திறக்கப்படுவது யதார்த்தமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166741
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரண்டாம் உலகப்போர் உத்தியைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவிய ஆயுதக்குழு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,HAMAS படக்குறிப்பு, ஹமாஸின் 'அல்-கஸ்ஸம் பிரிகேட்ஸ்' ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியபோது தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டனர். கடந்த சனிக்கிழமை ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியபோது, அந்நாட்டிற்குள் படையெடுத்து வந்த ஆயுதக்குழுவினர் பாராசூட் மூலமாகவும் நாட்டிற்குள் நுழைந்தார்கள். 'இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ்' ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவினர் ஒரு இசை விழாவிற்குச் சென்றவர்கள் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தீடீர் தாக்குதலை 'அல்-அக்ஸா தாக்குதல்' எனக் கூறினர். பாலத்தீன ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகவும், கடல் மற்றும் நில வழியாகவும் ஊடுருவியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தாெடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் உறுதிப்படுத்தினார். அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகத் தரையிறங்குவது போன்ற படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,HAMAS படக்குறிப்பு, சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊவடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர். வான் வழியாக எல்லையைக் கடந்த ஆயுதக்குழுவினர் பாலத்தீன ஆயுக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலையும் காசாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியை பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வான்வழியாகக் கடந்துள்ளனர். ஜெனரேட்டர் மற்றும் பிளேடுகளால் இயக்கப்படும் அந்த பாராசூட், காசாவை சுற்றியுள்ள பகுதிக்கு முன்னேறும்போது இயக்கப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர். ஹமாஸ் இரண்டாம் உலகப்போரின் உத்தியைப் பின்பற்றியதா? எல்லையை ஊடுருவிச் செல்லும் நோக்கத்தில், ஹமாஸின் ராணுவப் பிரிவினர் வான்வழித் தாக்குதல் நடத்த ராணுவ பாராசூட்டுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினர். இரண்டாம் உலகப் போரின்போதும் ஜெர்மனி மற்றும் அதன் நேச நாடுகள் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்தும் பிரிவினரைத்தான் முதலில் சண்டையிட அனுப்பினார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாராகிளைடர்கள் தரையில் இருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். 1987இல் நடந்த கிளைடர் தாக்குதல் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல், பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் - ஜெனரல் கமாண்ட் அமைப்பைச் சேர்ந்த பாலத்தீனர்கள் இருவர், சிரியாவை சேர்ந்த ஒருவர் துனிசியாவை சேர்ந்த ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட கிளைடர் ஆபரேஷனை நினைவுபடுத்துகிறது. நவம்பர் 1987இல் இஸ்ரேலிய ராணுவ தளத்தைத் தாக்க அவர்கள் லெபனானில் இருந்து புறப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 26, 1987இல், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ராணுவ முகாமில், ஆறு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஏழு பேர் காயமடைந்தனர். இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடரை ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் பார்வையிட்டார். பாராசூட் மூலம் ஊடுருவிய ஹமாஸ் ஆயுதுக்குழு மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட்களை பயன்படுத்தி, திசை திருப்புவதற்குப் பயன்படும் கட்டுப்பாட்டைக்கொண்டு, போர் விமானங்களைத் தரையிலிருந்து ஏவ முடிந்தது. இதனால், அவர்கள் மலையில் ஏறாமல், விமானத்தில் இருந்து தரையிறங்காமல் பயணிக்கலாம். இந்த இஞ்சின் பொருத்தப்பட்ட பாராசூட்களை மணிக்கு 56கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும். பாராகிளைடர்கள் தரையிலிருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். பாராகிளைடிங் இணையதளங்களில் உள்ள தகவலின் படி, இந்த பாராகிளைடர்களால் 230 கிலோ எடை வரை சுமக்க முடியும். இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ் ராணுவத்தின் ஊடகப் பிரிவினர் பகிர்ந்துள்ள வீடியோக்களில், அவர்கள் தரையிலிருந்து பாராகிளைடர்களை ஏவுவதைக் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு பேரால் இயக்கப்படுகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள மற்ற காட்சிகள், ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலிய தளங்களில் தரையிறங்கும் முன்பாகவே வானிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகின்றன. காசாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் வேலியைத் தாண்டி பாராசூட் மூலம் ஊடுருவியவர்களை 'சகர் படை' என அழைக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் ஆயுதக்குவினர் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் எல்லைப்பகுதியை ஊருடுவிச் செல்கின்றனர். இஸ்ரேலிய ராணுவம் பாராசூட்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை? ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில், அவர்கள் காசாவில் இருந்து ராக்கெட்டுகளை ஏவி, அதன் மறைவில் ஆயுதமேந்திய பாராகிளைடர்கள் மூலம் அவர்கள் பறப்பதைக் காட்டுகிறது. சில பாராகிளைடர்கள் குறைந்த உயரத்தில் பறப்பது போன்றும், மற்றவை உயரமாகப் பறப்பது போன்று இருந்தன. காசாவை சுற்றியுள்ள வான் பகுதியில் அவை மிகவும் தெளிவாகக் காணப்பட்டன. இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ஆயுதக்குழுவினர் வான்வழியாக ஊடுருவியதை இஸ்ரேலிய படைகளால் ஏன் கணிக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை இஸ்ரேலிய ராணுவம் இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை. குறிப்பாக, பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. 'அயர்ன் டோம்' இஸ்ரேலியர்கள் நேரடியாக மனிதர்களை ரோந்துக்கு பயன்படுத்துவதை விட தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருந்தார்களோ? 'அயர்ன் டோம்' மற்றும் 'ரேடார்' போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பாராசூட் போன்ற சிறிய பறக்கும் பொருட்களைக் கணிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பலமுனைத் தாக்குதல் ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை ஏவுவதன் மூலம் தனது திடீர் தாக்குதலை ஆரம்பித்தது என்று அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழுவின் தளபதி முஹம்மது அல்-டீஃப் முதல் நாளில் அறிவித்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர். ராக்கெட் ஏவுதலை திசைமாற்றப் பயன்படுத்தி, ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தரைவழியிலும், துப்பாக்கிப் படகுகளைப் பயன்படுத்தி கடல்வழியிலும், பாராசூட்டை பயன்படுத்தி வான்வழியிலும் ஊடுருவியுள்ளனர். ஊடக மற்றும் ராணுவ அறிக்கைகளின் படி, பாராசூட் தாக்குதல் மற்றும் அந்த பாராசூட்களால் வான் பாதுகாப்பு திறனை முறியடிக்கும் உத்தியே ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எல்லைக்குள் ஊடுருவுவதற்கு ஒரு தீர்க்கமான காரணியாக இருந்ததாகக் கூறுகிறார்கள். முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர். தற்போது, "அவர்களைக் கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். படக்குறிப்பு, கடத்தப்பட்டவர்களை கொலை செய்துவிடுவோம் என ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/crg1rl67nvqo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை எரிபொருள் இல்லை மின்சாரமில்லை - இஸ்ரேல் திட்டவட்டம் Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 04:46 PM ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் வரை காசாமீதான முற்றுகையை தளர்த்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் பிரேத அறைகளாக மாறுவதை தவிர்க்கவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை குழு மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இஸ்ரேல் இதனை தெரிவித்துள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்படும் வரை காசாவிற்கு எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்கப்போவதில்லை என இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். மனிதாபிமானமா, கடத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாகும்வரை மீண்டும் இஸ்ரேல் திரும்பும்வரை மின்சாரத்தை மீண்டும் வழங்கப்போவதில்லை எரிபொருள் வாகனங்கள் எவையும் காசாவிற்குள் நுழையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மனிதாபிமானத்திற்கு மனிதாபிமானம் எங்களிற்கு ஒழுக்கநெறி குறித்து எவரும்போதிக்ககூடாது என அவர்தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மின்சாரம் எரிபொருள் விநியோகத்தை துண்டித்துள்ளது. https://www.virakesari.lk/article/166724
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்- ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தல் ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 இலட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது. இதையடுத்து, “உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, “இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும்” என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/276784
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அல்அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்ததற்கு பழிவாங்குவதற்காக இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் இரகசிய தளபதி - Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 12:45 PM ரொய்ட்டர் ஹமாஸ் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பேரழிவு தாக்குதலை இஸ்ரேல் தனது செப்டம்பர் 11 என தெரிவிக்கின்றது, இந்த தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான பாலஸ்தீன போராளி முகமட் டெய்வ் அதனை அல் அக்சா வெள்ளம் என்கின்றார். ஹமாஸ் சனிக்கிழமை காசாவின் மீது ஆயிரக்கணக்கான ரொக்கட்களை ஏவிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலால் அதிகம் தேடப்படும் முகமட் டெய்வ் ஒலிநாடா மூலம் வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்தார். ஜெரூசலேத்தின் அல் அக்சா மசூதி மீதான தாக்குதலிற்கான பதிலடியே இது என அவர் குறிப்பிட்டார். 2014 இல் காசாவில் முகமட் டெய்வின் மனைவியும் கைக்குழந்தையும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவேளை அவர்களை காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியா புதைகுழியில் புதைப்பதற்கு தயாராகும் பொதுமக்கள் ------------------------ மே 2021 இல் ஜெரூசலேத்தின் அல்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொலை செய்த இந்த தாக்குதலை டெய்வ் திட்டமிட ஆரம்பித்தார் என காசாவில் உள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெரூசலேமின் அக்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் நுழைந்தமை அராபிய -இஸ்லாமிய உலகத்தினை சீற்றமடையச்செய்திருந்தது - இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதமான இடம் இந்த மசூதி. ரம்ழான் மாதத்தில் அந்த மசூதிக்குள் நுழைந்த படையினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கியதும் முதியவர்கள் சிறுவர்களை வெளியே இழுத்துவந்ததும் அதனை காண்பிக்கும் வீடியோக்களும் கடந்த வார தாக்குதல் திட்டமிடப்படுவதற்கு காரணமாக அமைந்தன என தெரிவித்துள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இவை அனைத்தும் சீற்றத்தையும் ஆத்திரத்தையும் தூண்டின எனவும் குறிப்பிட்டுள்ளன. ஜெருசலேத்தின் இறைமை மற்றும் மதம் தொடர்பான சர்ச்சைகளின் முக்கிய அம்சமாக நீண்ட காலமாக காணப்படும் இந்த மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தமை ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் 11 நாள் மோதலிற்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவங்களிற்கு இரண்டு வருடங்களின் பின்னர் -1973 இஸ்ரேலிய அராபிய மோதலின் பின்னர்- முதல் தடவையாக இஸ்ரேலிற்குள் ஹமாஸ் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் போர்பிரகடனம் செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது - 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டெய்வ் இஸ்ரேலின் பல கொலைமுயற்சிகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார். 2021 இல் இறுதியாக இஸ்ரேல் அவரை இலக்குவைத்தது. டெய்வ் ஒருபோதும் மக்கள் முன்னிலையில் தோன்றாதவர் - உரையாற்றாதவர்- இதன் காரணமாக சனிக்கிழமை ஏழாம் திகதி அவர் ஹமாஸ் தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டவேளை - ஏதோ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்ற உணர்வு பாலஸ்தீனியர்கள் மத்தியில் காணப்பட்டது. இன்று அல்அக்சாவின் சீற்றம் வெளிப்படுகின்றது -நமது மக்களின்- தேசத்தின் சீற்றம் வெடிக்கின்றது- எங்கள் முஜாஹிதீன்களிற்கான செய்தி இது -குற்றவாளிகளுக்கு தங்கள் காலம் முடிவடைந்து விட்டது என்பதை புரிய வைப்பதற்கான நாள் இன்றைய நாள் என டெய்வின் பதிவு செய்யப்பட்ட அந்த செய்தி தெரிவித்தது. இரண்டு மூளைகள் - ஒரு சூத்திரதாரி டெய்வின் மூன்று படங்களே உள்ளன - முதலாவது 20 வயதில் எடுக்கப்பட்டது- இரண்டாவது முகக்கவசம் அணிந்த படம் - மூன்றாவது அவர் உரையாற்றும்போது காணப்படும் நிழல். அவர் எங்கிருக்கின்றார் என்பதும் தெரியாது - காசாவில் உள்ள சுரங்கப்பாதைகளிற்குள் அவர் இருக்கவேண்டும். இந்த தாக்குதலின் திட்டமிடல்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் டெய்வ் நேரடியாக ஈடுபட்டிருந்தார் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரமொன்று தெரிவித்தது. ஹமாசின் இல் ஹசாம் பிரிகேட்டின் தளபதியான டெய்வும் காசாவில் உள்ள ஹமாசின் தளபதி யெஹ்சியா சின்வரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டனர் என ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தாக்குதலை முழுமையாக வடிவமைத்தவர் யார் என்பது வெளிப்படையான விடயம். இரண்டு மூளைகள் உள்ளன, ஆனால் ஒரு சூத்திரதாரி என தெரிவிக்கும் ஹமாஸிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் ஒருசில ஹமாஸ் தலைவர்களிற்கு மாத்திரம் தெரிந்திருந்தன என குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் எவ்வளவு தூரம் இரகசியமாக வைக்கப்பட்டன என்றால் இஸ்ரேலின் முக்கிய எதிரியும் ஹமாசிற்கு நிதி வழங்கும் முக்கிய நாடான ஈரானிற்கு கூட இந்த நடவடிக்கை குறித்த மேலோட்டமான விடயங்களே தெரிந்திருந்தன - தாக்குதல் எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் ஈரானிற்கு கூட தெரியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/166618 https://www.facebook.com/q7medianews/videos/849917096648063/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing