Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாசின் முக்கிய தளபதிகள் 2 பேர் பலி இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ கொமாண்டர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாசின் டார்ஜ் தபா பட்டாலியனின் கொமாண்டர் ரபத் அப்பாஸ், போர் மற்றும் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்ஜ் தபா பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/278929
  2. யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும்வரை பணயக்கைதிகளை விடுதலை செய்ய முடியாது - ரஸ்யாவில் ஹமாஸ் பிரதிநிதிகள் Published By: RAJEEBAN 27 OCT, 2023 | 02:23 PM யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் வரை பணயக்கைதிகள் எவரையும் விடுதலை செய்யப்போவதில்லை என ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் பிரநிதிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் எங்கிருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு காலம் தேவை என ஹமாஸ் பிரதிநிதியொருவர் ரஸ்ய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். ஹமாஸ் உறுப்பினர்கள் பெருமளவானவர்களை கைதுசெய்தனர் அவர்களை காசா பள்ளத்தாக்கில் தேடிக்கண்டுபிடித்து விடுதலை செய்வதற்கு கால அவகாசம் தேவை என ஹமாஸ் பிரதிநிதி தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது. நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/167876
  3. ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யா விஜயம் - பணயக்கைதிகள் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை Published By: RAJEEBAN 27 OCT, 2023 | 06:09 AM பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது. நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/167830
  4. பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள் இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொதுமக்களை ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையிலே இவ்வாறு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது . கடந்த 20 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். எதிரிகளிடமிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள சிலர் ஆயுதங்கள் கொண்டு போராடியும் உள்ளனர். தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மக்களிடம் ஆயுதங்கள் வைத்து கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி இந்நிலையில் தான் இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலானது துப்பாக்கி விதிகள் அதிகம் கொண்ட நாடாகும்.துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதியும் கிடையாது . இந்நிலையில் இஸ்ரேல் அரசு துப்பாக்கி விதியை தளர்த்தியுள்ளதோடு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவ அவசர உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்துள்ளது. குற்றப்பின்னணி அத்துடன், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் மற்றும் குற்றப்பின்னணி எதுவும் இல்லாத பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன் 50 துப்பாக்கிக்குண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 100 குண்டுகள் வைத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/isreal-new-announcement-1698309257
  5. காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை - ஐநா Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 03:55 PM காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை என பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லைன் ஹாஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்குமாறும் அவர்கள் எங்கிருந்தாலும் உயிர்பிழைப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் வெளியேற்றும் பாதைகள் மீது குண்டுவீச்சு இடம்பெறுகின்றபோது வடக்கு தெற்கு மக்கள் மோதலில் சிக்குப்படும்போது உயிர் பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத போது மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்கள் இல்லாத போது மக்களிற்கு அசாத்தியமான வழிமுறைகளை தவிர வேறு எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167801
  6. ஊடகவியலாளர் வயெல்டாடோ தனது குடும்பத்தை இஸ்ரேலின் தாக்குதலில் இழந்துள்ள போதிலும அவரது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும் - அல்ஜசீரா Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 11:29 AM காசாவின் மத்தியில் இஸ்ரேலின் தாக்குதலால் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வயெல் டாடோசின் குடும்பத்தினர் கொல்லப்பட்டமைக்கு அல்ஜசீரா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நுசெய்ரட் அகதி முகாமில் ஊடகவியலாளரின் குடும்பத்தினர் அடைக்கலம் புகுந்திருந்தவேளை இடம்பெற்ற இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனியர் பத்திரிகையாளர்களை இலக்குவைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஊடகவியலாளரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் அராபிய பிரிவின் ஊடகவியலாளர் டமெர் அல்மிசால் ஊடகவியலாளர் டாடோசினை காசாவின் குரல் என வர்ணித்துள்ளார். வயெல் டாடோஸினை உலகபத்திரிகை துறையினதும் காசாவின் பத்திரிகை துறையினதும் தூண் என வர்ணித்துள்ள அவர் பல வருடங்களாக இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்தியை அவரே வெளியிட்டுள்ளார் எனவும் டமெர் அல்மிசால் குறிப்பிட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் வயெல் தொடர்ந்தும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டுவந்தார், காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக அவர் அங்கிருந்து வெளியேற மறுத்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது குரல் தொடரும் அதற்கான உத்தரவாதத்தை எங்களால் வழங்க முடியும் ஒவ்வொரு நாளும் உண்மையை கண்டுபிடிப்பதற்காக இந்த தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167774
  7. இரவோடு இரவாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் டாங்கிகள் பட மூலாதாரம்,X: @IDF படக்குறிப்பு, இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள தாக்குதல் வீடியோவில், வேலியை உடைத்துக்கொண்டு செல்லும் ஒடு டாங்கி 15 நிமிடங்களுக்கு முன்னர் நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் டாங்கிகள் வடக்கு காஸாவில் நுழைந்து ‘இலக்குகளைத் தாக்கியதாகத்’ தெரிவித்திருக்கின்றன. எதிர்பார்க்கப்பட்டபடி இஸ்ரேல் காஸா மீது தரைவழி ஆக்கிரமிப்பைத் தொடங்கவில்லை. ஆனால் நேற்று நடந்த இந்தத் தாக்குதல் ‘அடுத்த கட்டத் தாக்குதலுக்கான தயாரிப்பு’ என்று கூறியிருக்கிறது. இதற்குமுன் காஸாவுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியபின் இஸ்ரேல் காஸாவிற்குள் நுழைந்து இலக்குகளைத் தாக்குவது இது முதன்முறையல்ல. ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, முதன்முறையாக காஸாவில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்து ஹமாஸ் ராக்கெட் குழுவினரைத் தாக்க துருப்புக்கள் மற்றும் டாங்கிகளை இஸ்ரேல் காஸாவுக்குள் அனுப்பியது. அன்றுதான் வடக்கு காஸாவில் வசித்தவர்களைத் தெற்கு நோக்கி வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது. அதையடுத்து, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, காஸா பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போது, இஸ்ரேல் டாங்கியை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஏவுகணையால், ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்டார், மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘இது படையெடுப்புக்கான அறிகுறி’ இத்தகைய தாக்குதல்கள், ஒரு முழுமையான தரைவழிப் படையெடுப்பு நிகழவிருப்பதறகான அடையாளம் என்கிறார் ஜெருசலேமில் செய்தி சேகரித்துவரும் பிபிசியின் நிருபரான டாம் பேட்மன். இஸ்ரேலின் துருப்புக்கள் தரையில் உள்ள எதிராளியின் பாதுகாப்புக் கட்டமைப்புகளைக் கண்டுபிடித்து அழிக்க ஆய்வு செய்கின்றன, என்கிறார் அவர். இதுவரை வெளியாகியிருக்கும் படங்கள் ‘டாங்கிகள் மற்றும் கவசமிடப்பட்ட புல்டோசர்கள் காஸாவுக்கு உள்ளே செல்வதைக் காட்டுகின்றன’, என்னும் பேட்மன், “இஸ்ரேலிய அறிக்கை தரையில் சண்டையிடுவதைக் குறித்துப் பேசுகிறது. இருப்பினும் படங்கள் அதனைக் காட்டவில்லை,” என்கிறார். தாக்குதலின் முடிவில் துருப்புக்கள் வெளியேறியதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனாலும், இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதலைப் பற்றிப் பயன்படுத்தியிருக்கும் மொழி முந்தைய தாக்குதல்களின்போது பயன்படுத்தப்படதைவிட விட வலுவானது, என்கிறார் பேட்மன். இது ‘அடுத்த கட்ட தாக்குதலுக்கானத் தயாரிப்பின் ஒரு பகுதி’ என்று கூறியிருக்கிறது. தாக்குதலுக்கான எதிர்பார்ப்பு ஏன் முக்கியமானது? ஆனால், கதையாடலின் வழியே நடத்தப்படும் போரும் முக்கியமானது, என்கிறார் பேட்மன். “படையெடுப்பு எந்த நேரமும் நடக்கலாம் என்று எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்திருப்பது முக்கியம் என்று இஸ்ரேல் கருதுகிறது. மூன்று முக்கியக் காரணங்களுக்காக: ஒன்று, தன் மன உறுதியைத் தக்க வைத்துக்கொள்ள, அடுத்து, இஸ்ரேலின் உள்நாட்டு மக்களிடம் பதிலடி கொடுக்கப்படுகிறது என்பதைச் சொல்ல, மூன்றாவது, பணயக்கைதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்க,” என்கிறார் பேட்மன். https://www.bbc.com/tamil/articles/ckred17dn42o
  8. இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளரின் மனைவி, மகன், மகள் உட்பட குடும்பத்தவர்கள் பலர் பலி Published By: RAJEEBAN 26 OCT, 2023 | 06:41 AM இஸ்ரேலின் விமானதாக்குதலில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வைல் அல் டாடோவின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அல்ஜசீராவின் காசாவிற்கான குழுவின் தலைவர் வைல்அல் டாடோவின் மனைவி மகன் மகள் இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து மத்திய காசாவில் நுசெய்ரட் அகதிமுகாமில் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சு இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது. ஊடகவியலாளரின் மனைவி மகன் மகள் உட்பட குடும்பத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்த பேரன் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்தான் என மருத்துவமனை அறிவித்துள்ளது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. வெள்ளை துணியால் போர்த்தப்பட்ட தனது மகனின் உடலின் முன்னால் பத்திரிகையாளர் கதறி அழுதபடி காணப்படும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. காசாவின் அல் அக்சா மருத்துவமனையிலிருந்து அவர் தனது பேரனின் உடலை துயரத்துடன் கொண்டுவரும் படமும் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட மகனிற்கு 15 வயது மகளிற்கு ஏழு வயது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167752
  9. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதி ரவீந்திரன் பேசியதாவது:- இஸ்ரேல், பாலஸ்தீனம், இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும். இந்த போர் சூழல் அதிகரிப்பு மோசமாக மனிதாபிமான நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது. இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உட்பட 38 தொன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/278469
  10. சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் - சிஎன்என் Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 10:49 AM ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது. இஸ்ரேல் மீதான பயங்கரமான அதிரடி தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் சிறிய குழுவினர் காசாவில் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளிற்குள் தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்தி தொடர்பாடல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்காவிடம் பகிரப்பட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டு வருடகாலமாக இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என விடயங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மத்தியில் தொடர்பாடல்களில் ஈடுபடுவதற்கு உதவியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. இரண்டு வருட கால திட்டமிடல்களின் போது ஹமாசின் விசேட குழுவொன்று சுரங்கப்பாதைக்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி தனக்குள் தொடர்பாடல்களில் ஈடுபட்டது ஆனால் தாக்குதல் ஆரம்பமாகிய இறுதி நிமிடம் வரை தன்னை இரகசியமாகவே வைத்திருந்தது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஏழாம் திகதியே தாக்குதலில் இணைந்துகொள்ளுமாறு ஏனைய ஹமாஸ் உறுப்பினர்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன. திட்டமிடல்கள் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்கள் கணிணிகளை இணையங்களை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட விசேட குழுவினரிற்கு அப்பால் இந்த தாக்குதல் திட்டம் குறித்து அதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பழையபாணி திட்டமிடல்களில் ஈடுபட்டது, தனிப்பட்ட ரீதியில் சந்திப்புகள் இடம்பெற்றன - டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது என இஸ்ரேல் பகிர்ந்து கொண்டுள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. டிஜிட்டல் சாதனங்களின் சமிக்ஞைகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இடைமறித்து கேட்ககூடும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன எனவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏன் ஹமாஸ்தாக்குதல் குறித்து இறுதிவரை எதனையும் அறியமுடியாத நிலையிலிருந்தன என்பதற்கான காரணங்கள் இதன் மூலம் தெளிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/167697
  11. காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலி Published By: SETHU 24 OCT, 2023 | 01:04 PM காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலிஇஸ்ரேலின் தாக்குதல்களினால் பலஸ்தீனத்தின் காஸாவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவின் வடபிராந்தியத்தில் ஜபாலியா, பேய்த் லாஹியா பகுதிகளிலும் காஸாவின் மத்திய பகுதியிலுள்ள அல் ரேமால், காஸாவின் மேற்குப்பகுதியிலுள்ள அல் ஷாதி முகாம், தென்பகுதியிலுள்ள கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கான் யூனிஸ் நகரில 48 பேரும், ரஃபாவில் 57 பேரும், காஸா மத்திய பகுதியின் அல் வுஸ்தாவில் 168 பேரும் காஸா சிற்றியில் 66 பேரும் வடக்கில் 44 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என பலஸ்தீன சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 7 ஆம் திகதியின் பின் இதுவரை இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 5,087 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்னர். இவர்களில் 2055 சிறார்கள், 1119 பெண்களும் அடங்குவர் என காஸாவிலுள்ள ஹமாஸ் நிர்வாகத்திலுள்ள காஸா சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது. அத்துடன் 14,245 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களினால் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் 222 பேர் ஹமாஸினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167642
  12. இஸ்ரேலின் காசா முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் - பராக் ஒபாமா Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 01:14 PM காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒக்டோர்பர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டடுள்ளமையும் விமானக்குண்டுவீச்சுகளும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள பராக் ஒபாமா இது இறுதியில் மத்தியகிழக்கில் அமைதி ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இஸ்ரேலிற்கு ஆதரவளித்தால் கூட இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது குறித்து நாங்கள் தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை தனது மக்களை இவ்வாறான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்கான இஸ்ரேலின் உரிமையை அவர் நியாயப்படுத்தியுள்ளார். மத்தியகிழக்கில் இடம்பெறும் விடயங்களை உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது மனித உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேலின் இராணுவ தந்திரோபாயங்கள் எவையும் இறுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167646
  13. காஸாவுக்குள் தரைவழியாகவும் இஸ்ரேலியப் படை தாக்குதல் Published By: SETHU 24 OCT, 2023 | 02:32 PM ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பிராந்தியத்துக்குள் இஸ்ரேலியப் படையினர் தரைவழியாக நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காஸாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தரைவழி முற்றுகைகளை இஸ்ரேலியப் படையினர் நடத்தியதாகவும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காஸா எல்லை வேலியின் மேற்குப் பகுதிக்குள் இஸ்ரேலியப் படையினர் சென்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸிடமிருந்து அப்பகுதியை சுத்தப்படுத்துவதற்காகவும் ஆயுதங்களைத் தேடியும், பணயக்கைதிகளை கண்டுபிடிப்பதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இஸ்ரேலியப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரி இதேவேளை காஸா எல்லைக்குள் இஸ்ரேலியப் படையினருடன் தாம் போராடியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் நகருக்கு கிழக்குப் பகுதியில் இம்மோதல் நடந்ததாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினரின் இரு புல்டோஸர்கள், தாங்கி ஆகியனவற்றை தாம் அழித்ததாகவும், இஸ்ரேலியப் படையினர் வாகனங்களைக் கைவிட்டு வேலிக்கு கிழக்கே தப்பிச் சென்றனர் எனவும் ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஞாயிறு இரவு காஸாவுக்குள் மேலும் முற்றுகைகைள இஸ்ரேலியப் படையினர் நடத்தினர் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி நேற்று தெரிவித்தார். 222 பணயக் கைதிகள் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அதேவேளை, இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, காஸாவில் பணயக்கைதிகளாக 222 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். 24 மணித்தியாலங்களில் 320 தாக்குதல்கள் காஸா பிராந்தியத்தில் 24 மணித்தியாலங்களில் 300 இற்கும் அதிகமான தாக்குதல்களை தான் நடத்தியதாக இஸ்ரேல் நேற்று (23) தெரிவிததுள்ளது. 24 மணித்தியாலங்களில் 320 இற்கும் அதிகமான இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்று தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்கப்பாதைகள், ஹமாஸின் செயற்பாட்டு கட்டளை மத்திய நிலையங்கள் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கத்தின் கண்காணிப்பு நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் 800 பேர் கைது பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்தில் தேடப்பட்ட 800 பலஸ்தீனியர்களை கடந்த 7 ஆம் திகதியிலருந்து தான் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் 500 இற்கும் அதிகமானோர் ஹமாஸ் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் கூறுகிறது. நேற்றுமுன்தினம் மாத்திரம் மேற்குக்கரையில் 37 ஹமாஸ் அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதேவேளை, மேற்குக்கரையின் ரமல்லா நகருக்கு அருகிலுள்ள ஜலாஸோன் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படையினர் நேற்றுமுன்தினம் நடத்திய முற்றுகைகளில் இரு பலஸ்தீனர்கள் உயிரழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது. நிவாரணங்களுடன் 34 லொறிகள் கடந்த 7 ஆம் திகதியின் பின்னர் கடந்த சனிக்கிழமை முதல் தடவையாக காஸாவுக்குள் நிவாரணப் பொருட்களை ஏற்றிய லொறிகள் எகிப்திலிருந்து காஸாவுக்குள் பிரவேசித்தன. கடந்த சனி, ஞாயிறு தினங்களில் 34 லொறிகள் காஸாவுக்குள் சென்றுள்ளதாக எகிப்திய செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், காஸாவிலுள்ள சுமார் 24 இலட்சம் மக்களுக்காக தினமும் 100 லொறி நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167654
  14. ஹமாஸ் மேலும் இருவரை விடுதலை செய்தது -கத்தார் எகிப்தின் முயற்சிகளிற்கு பலன் Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 11:01 AM ஹமாஸ் தனது பிடியிலிருந்த மேலும் இரு பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. 85 வயதான யொசெவ்ட் லிவ்சிட்ஸ் 79 வயதான நுரிட் கூப்பர் என்ற இரண்டு பெண்களையே ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இவர்களை கடந்த 7 ம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்ரேலின் தென்பகுதி நகரான நிர் ஒஸ் கிப்புட்சிலிருந்து ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது. ஹமாஸ் அவர்களின் கணவன்மார்களை விடுதலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை தயார் விடுதலை செய்யப்பட்டமை ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக யொசெவ்ட் லிவ்சிட்ஸின் மகள் தெரிவித்துள்ளார். கத்தார், எகிப்து மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி காரணமாக இருவரும் விடுதலை செய்யப்பட்டமை நல்ல விடயங்கள் இடம்பெறலாம் என்பதற்கான அறிகுறி என சரோனே லிவ்சிட்ஸ் தெரிவித்துள்ளார். தாயார் விடுதலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது உங்களிற்கு என்ன உணர்வு ஏற்பட்டது என்ற சிஎன்என்னின் கேள்விக்கு வார்த்தைகளால் அதனை வர்ணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனது தாயாரலும் நன்கு நடக்கவும் பேசவும் முடியும் அவர் நடந்து எல்லையை கடந்துள்ளார் என நினைக்கின்றேன் இது மிகவும் ஆச்சரியமான விடயம் என மகள் தெரிவித்துள்ளார். உருவாகிவரும் பெரும் கதையில் இது ஒரு சிறிய ஒளிக்கீற்று என தெரிவித்துள்ள அவர் எப்போது எனது தாயாரை கட்டித்தழுவுவேன் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளேன் எனது சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். லிவ்சிட்சின் தந்தை தொடர்ந்தும் ஹமாசின் பிடியில் உள்ளார், என்னுடைய தந்தை இன்னமும் அங்கிருக்கின்றார் பலர் அங்கு உள்ளனர் அனைவர் குறித்த நற்செய்திக்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167629
  15. மூனா என்ற கவி அருணாசலம் ஐயாவிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  16. நிர்வாகிகள் கவனத்திற்கு 1) புதிய பதிவுகள் என்று போடாது புதுப்பிக்கப்பட்ட பதிவுகள் என்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 2) சூடான பதிவுகளுக்குள் கூடுதல் பதிவுகள் வந்த திரிகள் காட்டவில்லையே? 3) "முகப்பில் ஊர்ப்புதினம், உலக நடப்பு, அறிவியல் தொழில் நுட்பம் போன்ற எல்லாத் தலைப்புகளையும் அழுத்தினால்(Ex:- "https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/) கருத்துக்களத்தினூடாகச் சென்று ஒவ்வொரு தலைப்பாக திரிகளை பார்வையிடவோ தொடங்கவோ முடிவது போல் நேரடியாக அணுக இலகுவாக இருக்கும் அல்லவா? @நியானி @nunavilan @இணையவன் @நிழலி @மோகன்
  17. காஸாவுக்குள் இரவோடு இரவாக தரை வழியே நுழைந்த இஸ்ரேலிய படைகள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,EPA 23 அக்டோபர் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தொடர்ந்து நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், மீண்டும் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காஸா துண்டு நிலப் பகுதியில் மேலும் 320 இடங்களக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதனிடையே தங்களுடையே இல்லங்கள் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி தாக்கப்பட்டதாக பாலத்தீன ஆட்சியகம் கூறியுள்ளது. கடந்த சில மணிநேரங்களில் காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அருகில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த மருத்துவமனைகளில் காஸாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை ஆகியவை அடங்கும் என்று பாலத்தீனிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தனது டெலிகிராம் சேனலில், அல்-குத்ஸ் அருகே நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது குவைத் மருத்துவமனைக்குப் பின்னால் நடந்ததாகக் கூறி இடிந்த ஒரு கட்டிடத்தின் படங்களையும் அது வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ மற்றும் படங்களை பிபிசியால் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதா என்பதை உறுதிப்படுத்துமாறு பிபிசி இஸ்ரேல் தற்காப்புப் படைகளைக் கேட்டுள்ளது, மேலும் அவர்கள் சோதனை செய்வதாக எங்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் எங்களுக்குத் தெரிந்தவுடன் சமீபத்திய மேம்பாடுகளை உங்களுக்குக் கொண்டு வருவோம். பட மூலாதாரம்,REUTERS காஸாவில் பலி 5,000-ஐ தாண்டியது - ஒரே நாளில் 436 பேர் பலி காஸாவில் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 436 பேர் பலியானதாகவும், இதுவரை மொத்தம் 5,087 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த தகவல்படி, கொல்லப்பட்டவர்களில் 2,055 பேர் குழந்தைகள், 1,119 பேர் பெண்கள், 217 பேர் மூத்த குடிமக்கள். அத்துடன், 15,273 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். காஸாவில் மற்ற அரசு அமைப்புகளைப் போல சுகாதாரத்துறையும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,EPA காஸாவுக்குள் இரவோடு இரவாக புகுந்த இஸ்ரேலிய தரைப்படை காஸா மீது 2 வாரங்களுக்கும் மேலாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், முதன் முறையாக தரைவழியே எல்லை தாண்டியுள்ளது. தரைவழியே படையெடுக்க காஸா எல்லையை ஒட்டி ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளில் ஒரு பிரிவினர் இரவோடு இரவாக எல்லை தாண்டி காஸாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. காஸா பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரவில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முழுவீச்சிலான தரைவழி படையெடுப்பின் தொடக்கம் அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல் ஞாயிற்றுக் கிழமை ஒரு அரிய நிகழ்வில், இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. மேற்குக் கரையில் ஹமாஸ் குழு ஒரு மசூதியை ‘பயங்கரவாத வளாகமாகப்’ பயன்படுத்துவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குக் கரையின் வடக்கில் உள்ள ஜெனின் நகரத்தில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது. அல்-அன்சார் என்றழைக்கப்படும் இந்த மசூதி தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக பாலத்தீன அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின இஸ்ரேலிய ராணுவம் மேற்குக் கரையில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து சோதனையிட்டாலும், அது காஸாவில் நடத்துவதுபோல வான்வழித் தாக்குதல்களை மேற்குக் கரையில் அரிதாகவே பயன்படுத்துகிறது. சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின. கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு ‘பயங்கரவாதத் தாக்குதலுக்கு’ தயாரகி வந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருக்கிறது. அவர்கள் பயன்படுத்திய இடம் மசூதியின் கீழ் இருப்பதாகவும், ஜூலை முதல் பயன்பாட்டில் இருப்பதாகவும் அது கூறியது. வளாகத்தின் நுழைவாயில்கள், ஆயுதங்கள், கணினிகள் மற்றும் தளத்தில் படமாக்கப்பட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் புகைப்படங்களுடன் அது கூறிய படங்களை வெளியிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாப்டுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம் என்று தெரிவித்துள்ளார் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரலாம் காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார். "செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது," என்று அவர் கூறினார். "காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது," என்றார் அவர். மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மனிதாபிமான உதவிகள் மேலும் 14 டிரக்குகள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார். பாலத்தீனியர்களுக்கு இது ‘மற்றொரு சிறிய நம்பிக்கை’ என்று அவர் கூறினார். ஆனால் இன்னும் அதிகமான உதவிகள் தெவைப்படும் என்று கூறினார். தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கும் அதேவேளை வெகுவாக பதிக்கப்பட்டிருகும் காஸா, ‘ஒரு நாளைக்கு ஒரு சில டிரக்குகளை அனுப்புவது மட்டுமே போதுமானதாக இல்லை’ என்று கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர் ‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’ இந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், "ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது" என்று கூறியுள்ளார். ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cv2lzp4z17no
  18. பேசும்போதே உடைந்து அழுத Palestine Representative; "இஸ்ரேல் ஒரு குடும்பத்தை கூட விட்டு வைக்கல" ஐநா அவையில் கண்ணீர்விட்டு அழுத பாலத்தீன பிரதிநிதி - அதே நிகழ்வில் இஸ்ரேல் பிரதிநிதி என்ன சொன்னார்?
  19. ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் #ஊடறுப்பு #அருஸ் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கிடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இஸ்ரேல் உடனடியாகவே 3 இலட்சம் அளவிலான ரிசர்வ் படையினரை திரட்டி தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக சொல்லியிருந்தாலும் இதுவரையில் அது தீவிரப்படுத்தப்படவில்லை. இதற்கு அமெரிக்காவும் காரணம்.
  20. நன்றி மோகன் அண்ணா புதிய முயல்வுகளுக்கு...
  21. ஐ.நா.வில் கதறி அழுத பாலத்தீன தூதர்: குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? என்று கண்ணீர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐ.நா. வின் மூன்றாவது குழுவின் வருடாந்திர கூட்டத்தின் தயாரிப்பு ஆலோசனையின் போது பாலத்தீன தூதர் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தன. 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூன்றாவது குழுவான சமூக, மனிதநேய, கலாச்சார மேம்பாட்டுப் பிரிவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல், இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கான கூட்டத்தின் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இஸ்ரேல் நாட்டின் ராணுவ தாக்குதலும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பேசிய ஐ.நா. அமைப்பிற்கான பாலத்தீன தூதரக அதிகாரியான சஹர் கே.ஹெச் சாலெம், "11 நாட்களாக, காஸா பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இப்படி நேரடி தாக்குதல்களின் காரணமாக உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர்,” என்றார். மேலும், "காஸாவில் உள்ள ஒரு பாலத்தீன குடும்பத்தைக் கூட இஸ்ரேல் காப்பாற்றவில்லை," என்றும், காயமடையாதவர்கள் இடம்பெயர்கிறார்கள், அல்-அஹ்லி மருத்துவமனையில் பாதுகாப்பு இருப்பதாக நினைத்து அங்கு அடைக்கலம் தேடியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற தாக்குதல்கள் தான் இஸ்ரேலை பாதுகாப்புடன் இருப்பதாக உணர வைக்கிறதா என்றும் இது இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற ஆதரவின் தேவையை நிறைவேற்றுகிறதா என்றும், பாலத்தீன குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீடுகளின் மீது குண்டு வீசிக் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கைகளை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார். "குழந்தைகள் கூட குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? " பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மண்லமும் இடிபாடுகளும் வழக்கமான காட்சிகளாக மாறிவிட்டன. பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள் என்றும், பள்ளிகள் மற்றும் ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும், அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், "சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன" என்பதுடன் உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார். இதில், "மோசமான விஷயம் என்னவென்றால், 22 மருத்துவமனைகளில் இருப்பவர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதை, உலக சுகாதார அமைப்பு (WHO) நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை என்று முத்திரை குத்தியுள்ளது." என வேதனையுடன் கூறினார். "காஸாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள். ஆனால் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று கருதி இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. இந்த பேரழிவு எப்போதும் போல போரில் விளைந்த ஒரு சேதமாக கருதப்படக்கூடாது. இது மனிதாபிமானமற்றது மற்றும் சர்வதேச சட்ட அடிப்படையிலான ஒழுங்கு விதிகளை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிகோலுகிறது." என்றார் அவர். துயரத்துடன் தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேலின் குற்றங்களுக்கு எதிராக நிற்கவும், அந்நாட்டு அரசு தொடங்கியுள்ள மனிதத் துன்பங்களை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். "எங்களுக்கு நீதி தேவையே ஒழிய பழிவாங்குதல் அல்ல" என்ற அவர், உலகத்தின் ஆதரவு பாலத்தீனர்களுக்கு மிகவும் தேவையானது என்று கூறினார். இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் சார்பில் அந்நாட்டின் இளைஞர் பிரதிநிதியான கார்மேலி பேசிய போது, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல்களை நினைவு கூர்ந்தார். இதன் விளைவாக ஏராளமான கொலைகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். "ஹமாஸ் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. குடிமக்களோ, தனிநபர்களோ பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதமுடியாது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளது," என்று அவர் கூறினார். தற்காப்புக்கான இஸ்ரேலின் உரிமையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போதைய நிகழ்வுகளை ஹமாஸ் ஆயுதக் குழு அரசியல் ஆக்குவதற்கு எதிராக எச்சரித்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து வெளியேற ஒரு பெண்ணுக்கு அங்கிருந்த நபர் ஒருவர் உதவினார். இஸ்ரேலின் ராணுவம் காஸா மீது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக எச்சரித்துள்ளது. மேலும், இன்னும் வடக்கு பகுதியில் உள்ள பாலத்தீனர்கள் தென்பகுதியை நோக்கிச் செல்லுமாறும் எச்சரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு போரின் அடுத்த கட்டங்களில் தனது படைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க உதவும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். இதற்கிடையில், காஸா மீதான விமானத் தாக்குதல்களில் 55 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. மேற்குக் கரையில் உள்ள மசூதியில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. தரைவழித் தாக்குதல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் படையெடுப்பிற்கு ஆயத்தமாகும் வகையில், காஸாவின் எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. இருப்பினும் அந்தத் தாக்குதல் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை. காஸாவுக்குள் அதிக உதவிகளை அனுப்பிவைக்க முடியும் என்று ஐ.நா. நம்புகிறது. சண்டை தொடங்கிய பிறகு முதல் முறையாக நேற்று அத்தியாவசியப் பொருட்கள் பொருட்கள் மக்களைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி 1,400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று இரண்டு வாரங்கள் ஆகிறது. காஸாவில் இதுவரை 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, காஸாவில் தவிக்கும் மக்களுக்கு மருத்துவர்களும், அறுவை சிகிச்சைக் குழுவினரும் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மருத்துவர் குழுக்களுக்கு அனுமதி கோரும் செஞ்சிலுவைச் சங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) காஸாவில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமானப் பொருட்களுடன் சென்று பணியாற்ற மருத்துவ பணியாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சாரா டேவிஸ் பிபிசி பிரேக்ஃபாஸ்டிடம் கூறுகையில், "இப்போது மிகவும் தேவையானது மனிதாபிமான பொருட்கள் மற்றும் காஸாவுக்குள் அத்தியாவசிய உதவிகள் தொடர்ந்து வருவதே ஆகும்,” என்றார். தங்களுக்குத் தேவைப்படுவது அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவது மட்டுமல்ல என்று கூறும் அவர், “காஸாவில் படுகாயங்களுடன் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் குழுவினரையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும்,” என்றார். இஸ்ரேல் ஒப்புக்கொண்டபடி காஸாவில் தவிப்பவர்களுக்கு உதவ 20 டிரக்குகள் உதவிப்பொருட்களுடன் பயணிக்க எகிப்துக்கும் காஸாவிற்கும் இடையிலான எல்லைக் கடப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இதேபோன்ற உதவிகள் தேவை என்று டேவிஸ் கூறினார். "இத போன்ற உதவிகள் தொடர வேண்டும். 20 டிரக்குகள் மூலம் அளிக்கப்படும் உதவியால் மட்டும் பொது மக்கள் உயிர்வாழ முடியாது. இது உண்மையில் மிகவும் மோசமான நிலைமை," என்று அவர் கூறினார். "நாங்கள் காஸாவில் செயல்படும் எங்கள் குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் விவரிக்கும் காட்சிகள் பயங்கரமானவையாக இருக்கின்றன." பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹமாஸ் அமைப்பிடம் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கை தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக பிரதமர் அறிவிப்பு இந்நிலையில், தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் முயற்சிகள் தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். ரஃபா கடவுப் பாதை வழியாக அவர்களை மீட்க, பிரிட்டன் அரசு"சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறியுள்ளார். டெலிகிராப்பில் இது குறித்து எழுதியுள்ள அவர், எகிப்து-காஸா இடையே ரஃபா பாதையை மீண்டும் திறக்கப்படுவதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து வெளியேற உதவுவது மட்டுமின்றி உதவிகளை வழங்குவதற்கும் பயன்படக் கூடிய ஒரே வழி அந்த பாதைதான் என்று அவர் கூறியுள்ளார். மேலும், "பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து நீர் விநியோகங்களும்" காஸாவுக்குள் " சாத்தியமான இடங்களில்" நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் காஸாவில் சராசரியாக தினசரி நீர் நுகர்வு ஒரு நபருக்கு வெறும் மூன்று லிட்டர் தான் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச தினசரி தண்ணீர் தேவை 100 லிட்டராக உள்ளது. ஹமாஸின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் குடும்பங்களைச் சந்தித்ததையும், இரு தரப்பும் இணைந்து பேசி தீர்வை எட்டுவதற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுனக் விவரித்தார். இது "கவனம் மற்றும் எச்சரிக்கைக்கான காலம் என்பது மட்டுமல்ல, தார்மீக தெளிவுக்கான காலமும் கூட" என்பதுடன் "பயங்கரவாதத்தின் கசப்பான அனுபவங்களுக்கு எதிராக மனிதகுலம் வெற்றி பெறுவதற்கான தருணம்" என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c03dd5e6p8mo
  22. மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப் நிறுவனர் இயான் பிரேமர் கூறியதாவது: இஸ்ரேல் இராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. காசா பகுதிமக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் ஒரு இலட்சம் வீரர்கள், 2 இலட்சம் அதிநவீன ஏவுகணைகள், ஏராளமான பீரங்கிகளை கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் நேரடியாக போரில் இறங்கினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கினால் முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு ஏற்படும். பாலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. இதே சூழல் நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. எனவே,இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 3-ம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருக்கிறது. இவ்வாறு இயான் பிரேமர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/278105
  23. காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதேவேளை, சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்கள் வாழும் மேற்கு எல்லையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/278066
  24. மேற்குகரை அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி Published By: RAJEEBAN 22 OCT, 2023 | 09:13 AM இஸ்ரேல் மேற்குகரையின் அகதிமுகாமின் மீது மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நுர் சாம்ஸ் அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் நிவாரண முகவர் அமைப்பு யுஎன்ஆர்டபில்யூஏ தெரிவித்துள்ளது. ஒரு இஸ்ரேலிய படைவீரர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தனது சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167470
  25. கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள், நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.