Everything posted by ஏராளன்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது. https://tamilwin.com/article/all-sri-lankan-players-removed-from-ipl-auction-1699698789
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் - தீபாவளி நிகழ்வில் கமலா ஹாரிஸ் 11 NOV, 2023 | 01:11 PM இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300 க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம். இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/169044
-
ஐஸ்லாந்தில் 14 மணித்தியாலத்தில் 800 முறை நிலநடுக்கம் !
11 NOV, 2023 | 01:09 PM ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டுள்ளது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளன. இது ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/169042
-
பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்களை பொருத்துவது குறித்து தீர்மானம் !
11 NOV, 2023 | 11:56 AM பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பயணிகள் பேரூந்துகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கொட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துமாறும் அதன்படி பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் உத்தரவிட்டார். தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான அதிவேக நெடுஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இலாபம் ஈட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளின் இலாபத்தில் தான் நஷ்டத்தில் இயங்கும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த நுட்டத்தின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை, அனைத்து அதிவேக வீதிகளிலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி கட்டங்களை அறவிடுவதற்கான நடைமுறைகளை ஆரம்பிக்குமாறும் இதன் போது குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/169034
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலும் ஹமாஸும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளன - ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 10 NOV, 2023 | 12:14 PM ஹமாஸ் அமைப்பினால் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் போர்க்குற்றமாகும் என ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார். அதேபோன்று ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளும் போர்க்குற்றமே என ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168970
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மத்திய கிழக்கில் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாத விடயமாகியுள்ளது - ஈரான் 10 NOV, 2023 | 03:27 PM இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளார். காசாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரதன்மை காரணமாக போர் விரிவடைவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்டோலஹியான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169000
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸுடனான மோதல்களில் மனிதாபிமான இடைநிறுத்தம் : இஸ்ரேல் அறிவிப்பு – பைடன் வரவேற்பு Published By: RAJEEBAN 10 NOV, 2023 | 06:18 AM ஹமாசுடனான மோதல்களின் போது மனிதாபிமான இடைநிறுத்தத்தை கடைப்பிடிப்பது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இஸ்ரேலின் இந்த அறிவிப்பை சரியான திசையிலான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் நான் இஸ்ரேலிய தலைவர்களுடன் பேசிய பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை முதல் மோதலில் இருந்து மக்கள் வெளியேற அனுமதிப்பதற்கான இரண்டு மனிதாபிமான பாதைகள் காணப்படும் என பைடன் தெரிவித்துள்ளார். பொதுமக்களிற்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்காக மூலோபாய இடைநிறுத்தங்களை கடைப்பிடிக்கப்போவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் இது நிச்சயமாக யுத்தநிறுத்தமில்லை என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/168955
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் கடும் மோதல் - சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி ஹமாஸ் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் Published By: RAJEEBAN 09 NOV, 2023 | 02:56 PM ரொய்ட்டர்ஸ் காசாவில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன. ஹமாஸ் அமைப்பினர் சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். காசா நகரத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ள அதேவேளை இஸ்ரேலிய படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசாவின் குண்டுவீச்சினால் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களிற்கு அருகில் கடும் வீதிமோதல்கள் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் அதிரடி தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர் - இஸ்ரேலிய டாங்கிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். https://www.virakesari.lk/article/168918
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கங்கள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் தகவல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது. 2 ஆவது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படை முன்னேறி சென்றது. காசா சிட்டியை இஸ்ரேல் இராணுவத்துடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து முன்னேறியது. இதற்கிடையே காசா சிட்டியின் மையப்பகுதிக்குள் இராணுவம் நுழைந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது. அங்கு ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தகர்க்க தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதனால் காசா சிட்டியில் இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. அக்குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கங்களின் இருப்பிடங்களை கண்டறிந்து அதனை வெடிவைத்து தகர்த்தனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காசா மற்றும் காசா சிட்டியில் கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து நடந்தபடியே தெற்கு காசா நோக்கி செல்கிறார்கள். இதற்கிடையே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். அதே போல் மேற்கு காசாவில் உள்-அல்-நாஸ்ர் ஆஸ்பத்திரி அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் விமான தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். மேலும் அல்-ஷிபா மருத்துவ வளாகம் அருகே தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,500யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் போரில் கடுமையாக சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறும்போது இஸ்ரேல் இராணுவத்தினரை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அதன் டாங்கிகள் மற்றும் வாகனங்களை அழித்ததாகவும் தெரிவித்து உள்ளனர். https://thinakkural.lk/article/280740
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வீட்டின் மீது குண்டுவீசும் முன் செல்போனில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை - திக் திக் நிமிடங்கள் படக்குறிப்பு, மஹ்மூத் ஷஹீன் 5 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 8 நவம்பர் 2023 காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஹமாஸ் குழுவின் ஆயுதப் பிரிவு தலைவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நீடிப்பதால் காஸாவில் மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது. அந்த பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். எந்த நேரத்திலும் மோசமடையக் கூடிய ஆபத்தில் உள்ள போர்ச் சூழ்நிலையை சமாளிப்பதுதான் அவருடைய திட்டமாக உள்ளது. பட மூலாதாரம்,IDF ஹமாஸ் உளவுப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு ஹமாஸ் ஆயுதக் குழுவின் உளவுத்துறை மற்றும் ஆயுதத் துறையின் தலைவராகவும், "வியூகரீ தியிலான வெடிமருந்துகள் மற்றும் ராக்கெட் தயாரிக்கும் அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான மொஹ்சென் அபு ஜினாவைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறுகின்றன. " இஸ்ரேல் ராணுவம் தினமும் காலையில் அளிக்கும் செய்தி ஒன்றில், ஹமாஸ் உள்கட்டமைப்பைத் தாக்க "காஸாவின் உள்ளே பயங்கரவாதிகளை ஒழிக்கும் விமானத் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக" இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. "காஸா நகரில் வான்வழித் தாக்குதல்களில் வீடுகள் சேதப்படுத்தப்படுவது மற்றும் பொதுமக்களைக் கொல்லப்பட்டது பற்றிய விவரங்களைத் தான் நாங்கள் பெறுகிறோம் - விரைவில் அதைப் பற்றிய புதிய விவரங்களை வெளியிடுவோம்" என்று இஸ்ரேல் கூறியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS தாக்கும் முன் செல்போனில் எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை காஸா உள்ளூர்வாசி ஒருவருக்கு இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது இஸ்ரேல் 12 நாட்களாக காஸா மீது குண்டுவீசிக் கொண்டிருந்தபோது, விடியற்காலையில் மஹ்மூத் ஷஹீனுக்கு அழைப்பு வந்தது. அவர் காஸாவின் வடபகுதியின் நடுத்தர வர்க்கத்தினரின் வசிப்பிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். மூன்றாவது மாடியில் 3 படுக்கை அறைகளுடன் உள்ள தனது வீட்டில் வசிக்கும் அவர், அவர் குடியிருக்கும் பகுதி அதுவரை இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறுகிறார். இந்நிலையில், அவர் வீட்டுக்கு வெளியே திடீரென ஒரு கூச்சல் கேட்டது. "உடனடியாக நீங்கள் தப்பிக்க வேண்டும்," என தெருவில் யாரோ கூச்சலிட்டனர். "அவர்கள் அடுக்குமாடிக் கட்டடங்கள் மீது குண்டு வீசுவார்கள்". அவர் தனது கட்டடத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்தைத் தேடி சாலையைக் கடக்கும்போது, அவரது செல்போன் ஒலித்தது. "நான் இஸ்ரேலிய உளவுத்துறையிலிருந்து பேசுகிறேன்," என்று ஒரு நபர் கூறினார் என மஹ்மூத் தெரிவித்தார். அந்தக் குரல் மஹ்மூத்தை முழுப்பெயரால் அழைத்து அரபி மொழியில் பேசியது. "அவர் என்னிடம் மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது வெடிகுண்டு வீசப் போவதாகசொன்னார். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும்படி எனக்கு உத்தரவிட்டார்." இந்த தாக்குதலின் போது, இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவாசிகளை எச்சரிக்க சில சமயங்களில் இதுபோல் தொலைபேசியில் அழைத்தது. மஹ்மூதின் தொலைபேசிக்கு இதுபோல் முன்னெப்போதும் எந்த அழைப்பும் வந்ததில்லை என்றும், அந்த அழைப்பின் போது முழுமையான விவரங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். போர் நிறுத்தம் - உடன்பட மறுக்கும் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கும், சனிக்கிழமை ஜோர்டானுக்கும் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை மேற்குக் கரை, இராக் மற்றும் துருக்கியைச் சென்றடைந்தார். அவர் தங்கியிருக்கும் இடங்களிலெல்லாம் பல்வேறு விதமான சவால்களும் நம்பிக்கையின்மையும் தான் காத்திருந்தன. பிளிங்கன் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான வழியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அதைப் பின்பற்ற யாரும் தயாராக இல்லை. வெள்ளிக்கிழமையன்று, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை இடைநிறுத்தம் (போர்களை தற்காலிகமாக நிறுத்துதல்) செய்யும் முயற்சியாக இஸ்ரேலிய தலைவர்களை சமாதானப்படுத்த பிளிங்கன் முயன்றார். ஆனால் இஸ்ரேலிய பிரதமர் அதற்கு உடன்படாமல், உடனடியாக மறுத்துவிட்டார். அடுத்த நாள், இஸ்ரேலின் அண்டை நாடுகளின் பிரதிநிதிகளை பிளிங்கன் சந்தித்தார். அனைவரும் உடனடியாக போர் நிறுத்தத்தை விரும்புகிறார்கள். இஸ்ரேல் போர்க் குற்றம் இழைக்கிறது என்று ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாடி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பைடன் கூறியது என்ன? கள நிலவரம் என்ன? இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் 'நல்ல' முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பைடன் ஒரு மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் மத்திய கிழக்கில் அப்படி இல்லை. ஞாயிற்றுக் கிழமையன்று பிளிங்கன் எங்கு சென்றாலும் மிகுந்த ரகசியம் காக்கிறார் என்பதிலிருந்தே இங்கு எவ்வளவு பதற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பாலத்தீன அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸைச் சந்திப்பதற்காக அவர் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க ரமல்லாவை அடைந்தார். சாலையின் பாதுகாப்பை பாலத்தீன அரண்மனை காவலர்கள் கவனித்துக்கொண்டனர். அவர் இராக்கிற்குச் சென்றபோது, இரவு நேரமாகிவிட்டது. பாக்தாத் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க தூதரகத்திற்கு ஹெலிகாப்டரில் பிளிங்கனும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகளும் சென்றபோது, அவர்கள் அனைவரும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்களை அணிந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பிரதமர் ஷியா அல் சுடானியைச் சந்திக்க பாதுகாப்பு வாகனங்களுடன் பயணம் செய்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஒருபுறம் தீயை அணைத்தவுடன், மறுபுறத்தில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்குகின்றன. பட மூலாதாரம்,REUTERS இஸ்ரேல், அரபு நாடுகள் கூறுவது என்ன? காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அமெரிக்கா இஸ்ரேலுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அரபு நாடுகளைப் பொறுத்த வரையில், 'போர் நிறுத்தம் குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் அவர் பேசிய அனைவருமே மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வது, பணயக்கைதிகளை விடுவிக்கவும், காஸாவுக்கு உதவிகளை வழங்கவும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றவும் உதவும் என்று நம்புகிறார்கள். அண்மைக் காலமாக இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் இதில் சில சிக்கல்களும் இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது, ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக்குள் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதால், அரபு நாடுகளோ அல்லது இஸ்ரேலோ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பிளிங்கன் சாதித்தது என்ன? பிளிங்கன் வருகைக்குப் பின்னர் இதுவரை கிடைத்துள்ள நேர்மறையான தகவல் என்னவென்றால், அவர் அனைத்துத் தரப்பினருடனும் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதுடன், தற்போதைய போர் அனைவரும் அஞ்சிய அளவுக்கு மிகவும் பெரிய தாக்குதலாக உருவெடுக்கவில்லை என்பது மட்டும் தான். பாலத்தீனர்களின் நீண்டகால எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அப்பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான வழியைக் கண்டறிய பிளிங்கன் தனது அரபு சகாக்களை ஊக்குவிக்கிறார். ஆனால் இது பெரிய வெற்றியை அடைவதாகத் தெரியவில்லை. ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் சஃபாடி, 'போருக்குப் பிறகு காஸாவின் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில், எதைப் பற்றியும் எப்படி சிந்திக்க முடியும்?' எனக்கேள்வி எழுப்புகிறார். இது தொடர்பாக அவர் பேசியபோது, "நாங்கள் ஒரு பாழடைந்த நிலத்தைப் பற்றி பேசலாமா? அகதிகளாக ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பற்றிப் பேசலாமா?" எனக்கேள்வி எழுப்பினார். அக்டோபர் 12 அன்று வெள்ளை மாளிகையில் யூத சமூகத் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய பைடன், "இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடந்த இரத்தக்களரி மற்றும் சோகத்திற்குப் பிறகும் கூட, மத்திய கிழக்கில் சில நல்ல முடிவுகளை ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் மனரீதியாக ஒரு நம்பிக்கையாளர் என்ற நிலையில் இருப்பதாக மட்டும் உணர்கிறேன்," என்றார். ஆனால், மத்திய கிழக்கின் நிலைமையைப் பார்த்தால், எந்த எதிர்பார்ப்பிலும் மிகச் சிலரே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மஹ்மூத் அப்பாஸ் - பிளிங்கன் பேசியது என்ன? அங்குள்ள பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையகத்தில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை அவர் சந்தித்தார். அப்போது, மேற்குக் கரையில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. "இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்னை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாலத்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். காஸாவில் உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். பாலத்தீனர்களை "வலுக்கட்டாயமாக இடம்மாற்றம் செய்யக்கூடாது" என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார் என்று மேத்யூ மில்லர் கூறினார். பிளிங்கனும் அப்பாஸும் மேற்குக் கரையில் "அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான" முயற்சிகள் குறித்து விவாதித்தனர். இதில் "பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இத்தாக்குதலுக்கு யார் பொறுப்போ, அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது" ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். "பாலத்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து சமமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் மீண்டும் வலியுறுத்தியதாக மில்லர் கூறினார். "பாலத்தீன அரசை உருவாக்குவதற்காக பாலத்தீனர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றத் தேவையான" பணிகளை நிறைவேற்றுவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் பிளிங்கன் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA மனிதாபிமான போர் இடைநிறுத்தம் - அமெரிக்கா சூசகம் மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தம் செய்வது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசகமாக தெரிவித்துளளார். இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தம் செய்வதை நோக்கி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் அவர் என்ன சொன்னார்?. சனிக்கிழமை, பைடனிடம் செய்தியாளர்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று கேட்டனர். டெலாவேரில் உள்ள ஒரு தேவாலயத்தை விட்டு வெளியேறிய போது அமெரிக்க அதிபர் வெறுமனே "ஆம்" என்று கூறி கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார். பட மூலாதாரம்,REUTERS போர் நிறுத்தம் - மனிதாபிமான இடைநிறுத்தம் என்ன வேறுபாடு? காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மற்ற சக்திகள் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. இது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய அரசாங்கங்களால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு பயனளிக்கும் என்று கூறுகின்றன. நாங்கள் கூறிவருவதைப் போல் அமெரிக்கா அதற்கு பதிலாக ஒரு மனிதாபிமான ரீதியிலான இடைநிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் என்ன வித்தியாசம்? ஒரு முறையான போர் நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, மனிதாபிமான இடைநிறுத்தங்கள் குறுகிய காலத்திற்கு நீடிக்கும். சில நேரங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் பொதுவாக வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் குறிப்பிட்ட இடத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நீண்டகால அரசியல் தீர்வுகளை அடைவதற்கு மாறாக, மனிதாபிமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் அவை பொதுவாக செயல்படுத்தப்படுகின்றன. இதற்கிடையில், போர்நிறுத்தங்கள் நீண்ட கால நோக்கம் கொண்டவை. மேலும் பெரும்பாலும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதிப்பதை போர் நிறுத்தம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று ஐ.நா கூறுகிறது. பட மூலாதாரம்,EPA காஸா மக்கள் தெற்கே இடம்பெயர அவகாசம் - இஸ்ரேல் வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர நான்கு மணி நேர அவகாசத்தை அளிக்கப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இடம்பெயர்வதற்கான பாதை, காஸா பகுதியில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையான சலா அல்-தின் சாலை என்றும், - உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை (0800-12:00 ஜிஎம்டி) பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையும் இதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அந்தச் சாலையில் பணியாற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. பொதுமக்களை "மனிதக் கேடயங்களாகப்" பயன்படுத்த ஹமாஸ் அமைப்பு முயற்சிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. மீண்டும் நினைவூட்டும் வகையில், வடக்கு காஸாவை பொதுமக்களை வெளியேற்றும் பகுதியாக இஸ்ரேல் அறிவித்தது. அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தென்பகுதியை நோக்கி பாதுகாப்பாகப் பயணிக்குமாறும் அழைப்பு விடுத்தது. இருப்பினும் தெற்கு பகுதியிலும் அப்போது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போதைய நிலையில், சுமார் 3,50,000 முதல் 4,00,000 பேர் தற்போது வடக்கு பகுதியில் தங்கியுள்ளனர் என்று அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c724n84xxxeo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் துயரங்களை பதிவு செய்வதற்காக அங்கேயே தங்கியிருப்பதற்கு கனடா பிரஜை தீர்மானம் - மத மனிதாபிமான கடமை என தெரிவிப்பு Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 10:48 AM காசாவில் இடம்பெறும் யுத்தத்தை பதிவு செய்வதற்காக தொடர்ந்து காசாவிலேயே தங்கியிருக்கப்போவதாக கனடாவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ள அதேவேளை தனது குடும்பத்தை அங்கிருந்து அகற்றியுள்ளார். காசாவில் தங்கியிருந்து அங்கு நடப்பவற்றை பதிவு செய்யவேண்டியது எனது கடமை என கருதுகின்றேன் என கனடாவை சேர்ந்த மன்சூர் சூமன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தனது மனைவியும் ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் காசாவில் தங்கியிருக்கவேண்டிய கடப்பாடு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2.3 மில்லியன் மக்களின் துயரம்நீடிக்கும்வரையில் காசாவிலேயே தங்கியிருப்பது அங்கு என்ன நடக்கின்றது என்ற உண்மையை வெளி உலகிற்கு தெரிவிப்பது எனது மத மனிதாபிமான கடப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். என்;னால் ஆங்கிலத்தில் உரையாட முடியும் நான் மேற்குலகில் வாழ்ந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெரூசலேத்தை சேர்ந்த அவர் இரண்டு வருடங்களிற்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குடியேற தீர்மானித்தார் - தனது பிள்ளைகள் தனது பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இந்த தீர்மானத்தை எடுத்தார். காசா எனது மனைவியின் பூர்வீகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இங்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம் எனது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைக்கு சென்றார்கள் நானும் மனைவியும் இங்கு தொழில்புரிகின்றோம் எங்களிற்கு நண்பர்கள் உள்ளனர் உள்ளுர் மசூதி மிகச்சிறந்த இடம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் யுத்தத்தின் பிடியில் சிக்குவோம் என எதிர்பார்க்கவில்லை எனதெரிவிக்கும் அவர் தான் வசிக்கும் கான்யூனிசில் ஒரு சிறிய மருத்துவமனையை உருவாக்கியுள்ளார் பிரசவ விடுதிக்கு அருகில் உள்ள சிறிய அறையில் அவர் உறங்குகின்றார். எப்போதெல்லாம் குழந்தையொன்று பிறக்கின்றதோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியான செய்தியை நான் செவிமடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/168786
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா நகரின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 06:22 AM காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தினர் காசாவின் மையபகுதியில் நிலைகொண்டுள்ளனர் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடல் வான் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். காசாவை சுற்றிவளைத்து படையினர் அதன் உள்ளே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காசா மக்களை தயவு செய்து தெற்கிற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/168773
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது. இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர் தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/280447
-
ராமநாதபுரம்: மேலும் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளா? புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 56 நிமிடங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இப்போது ஏன் சர்ச்சையாகியிருக்கிறது? ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்துஓ.என்.ஜி.சி நிறுவனம், இந்தத் திடத்திற்காகத் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை வட்டத்திலும் சோதனைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,PROFEESOR JAYARAMAN படக்குறிப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ‘விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும்’ ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதிய சோதனை கிணறுகள் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி அளிக்க கூடாது, என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் காவிரி படுகை முழுவதும் அறிவிக்கப்படவில்லை. கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார். தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விளையும் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படாத பகுதியில் தலா 5 புதிய கிணறுகள் என மொத்தம் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு அனுமதி தர மறுத்து விண்ணப்பங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே முடிவை ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்,” என்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும், என்றார் பேராசிரியர் ஜெயராமன். “ஆனால் அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பல முன்னுதாரணங்கள் முன் வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார். மேலும் பேசிய அவர், "கடந்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்த இடங்களில் குழாய் மற்றும் சிமெண்ட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபடுகிறதாகவும், அதனால் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதே அரசுக்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோள்" எனவும் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து? ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 30க்கும் மேற்பட்ட எண்ணெய் எரிவாயு கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாகக் கிணறுகள் தோண்டப்படுவதால் என்ன பிரச்னை ஏற்படப் போகிறது? இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜெயராமன், "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணறுகளில் ஆழம் குறைவாக இருப்பதால் தளர்வான பகுதியில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது என்றும், இதனால் பூமிக்கு அடியில் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறினார். “ஆனால், தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தின் படி ஒரு ரசாயனக் கலவை பூமிக்குள் செலுத்தப்பட்டு நிலத்தடியில் இருக்கக் கூடிய வண்டல் பாறை, களிப்பறை ஆகியவை செயற்கையாக நொறுக்கப்பட்டு எண்ணெய் மற்றும் மீத்தேன் எரிவாயு வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூமிக்குள் செலுத்தப்படும் இந்த ரசாயனங்கள் அபாயகரமானவையாக உள்ளன,” என்றார். மேலும் பேசிய அவர், இந்த நொறுக்குதல் முறையைச் செயல்படுத்த, மண்ணுக்கு அடியில் செலுத்துவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றார். “இதனை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன் விவசாயம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும்,” என்றார். படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள் அதேபோல், மண்ணுக்கு அடியில் செலுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் போது, அது முழுமையான வெளியே வராமல் மண்ணுக்கு அடியில் தங்கி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றார். மேலும், வெளியே வரும் நீர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கலந்து அதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படும், என்றும் கூறினார். “டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை மக்கள் நேரடியாக உணர்ந்ததால் மக்கள் போராடி இந்த திட்டங்களை கைவிட முயற்சி செய்தனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை செயல்பட்டு வரும் எரிவாயு கிணறுகள் பாதிப்பு ஏற்படாததால் மக்கள் அதனுடைய ஆபத்துகளை இன்னும் உணராமல் இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது செழிப்படைந்து வருவதால் இங்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது,” என்றார் பேராசிரியர் ஜெயராமன். பட மூலாதாரம்,FACEBOOK/SUNDARRAJAN படக்குறிப்பு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ‘புதிய கிணறுகளுக்கான கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்’ தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் தெரிந்தும் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியதை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும், என்றார். “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளைத் தளர்த்தி மாநில அரசின் அனுமதியுடன் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை புதிதாக அமைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் எங்கும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்,” என்றார். மேலும், “தமிழகத்தில் எந்த இடத்திலும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் புதிய கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் அனுமதி கோரியுள்ளதை பார்க்கும் போது மாநில அரசால் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் புதிய கிணறுகளை தமிழகத்தில் அமைத்திட அனுமதி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அனுமதி கோரி இருப்பதாக தோன்றுகிறது,” என்றார் சுந்தர்ராஜன். ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் நிபுணர் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது, என்று கூறிய அவர், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுந்தர்ராஜன் தெரிவித்தார். பட மூலாதாரம்,NAVASKANI படக்குறிப்பு, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ‘ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்’ இது குறித்து ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிபிசி தமிழிடம் பேசுகையில், தமிழக அரசு நிச்சயமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு எரிவாயு கிணறுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வரும்அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசு அனுமதி நிராகரித்த நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நீதிமன்றத்தின் வாயிலாக புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி பெற்று கிணறுகள் அமைத்தால் மக்களை ஒன்று திரட்டி அதை தடுத்து நிறுத்துவோம். ராமநாதபுரம் மாவட்டம் மண்ணில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விடமாட்டோம்,” நவாஸ்கனி தெரிவித்தார். பட மூலாதாரம்,MEYYANATHAN படக்குறிப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’ இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனுடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதிப்பதில்லை, என்றார். “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதால் டெல்டா மாவட்டத்தை தவிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்,” என்றார். மேலும் பேசிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி இருந்தததாகவும், பின்னர் பல்வேறு காரணங்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறினார். தற்போது அதே 20 கிணறுகளை புதிதாக அமைத்திட அனுமதி கோரியுள்ளனரா, அல்லது வேறு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து விட்டு தெரிவிப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cx91ljpgjjxo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசுடான மோதலின் பின்னர் காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு - பெஞ்சமின் நெட்டன்யாகு Published By: RAJEEBAN 07 NOV, 2023 | 04:23 PM ஹமாசுடனான யுத்தத்தின் பின்னர் காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்கும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காலவரையறையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்காகவும் பணயக்கைதிகள் வெளியேற உதவுவதற்காகவும் மோதல்களின் போது தந்திரோபாய ரீதியில் சிறிய இடைநிறுத்தங்களை செய்ய தயார் எனவும் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஏபிசி நியுசிற்கான பேட்டியின் போது மோதல் முடிவடைந்த பின்னர் காசாவை யார் நிர்வகிக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவின் பாதுகாப்பை காலவரையற்ற காலத்திற்கு இஸ்ரேல் இராணுவம் பொறுப்பேற்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் பாதுகாப்பை பொறுப்பேற்காவிட்டால் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவான யுத்தநிறுத்தம் தனது நாட்டின் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனான அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றது போல மனிதாபிமான காரணங்களிற்காக சண்டையை இடைநிறுத்த தயார் சூழ்நிலைகளின் அடிப்படையில் அது பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/168750
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா மீது அணுவாயுத தாக்குதல்களை நடத்தவேண்டும் - கருத்து தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் இடைநிறுத்தம் Published By: RAJEEBAN 06 NOV, 2023 | 01:23 PM காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடும்கண்டனங்களை எதிர்கொண்டது. பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கலாச்சார அமைச்சரும் அதிதீவிரவாத அரசியல்வாதியுமான அமிச்சே எலியாகு பாலஸ்தீன பிரதேசங்கள் மீது இஸ்ரேலின் பதிலடி குறித்து தான் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். காசா பள்ளத்தாக்கை மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதை அவர் ஆதரித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் நிலை குறித்த கேள்விக்கு அவர் அவர்கள் அயர்லாந்திற்கு செல்லலாம் அல்லது பாலைவனம் செல்லலாம் என தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள அரக்கர்கள் தங்களிற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். காசா பள்ளத்தாக்கிற்கு உயிர்வாழ உரிமையில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ஹமாஸ் பாலஸ்தீன கொடியை ஏந்துபவர்கள் எவரும் உயிர்வாழ தகுதியுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168649
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் பிரதமர் பதவி விலகவேண்டும் - ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 05 NOV, 2023 | 12:58 PM இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பதவி விலகவேண்டும் என கோரி ஆயிரக்கணக்கானவர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் கடந்த மாதம் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதல் இஸ்ரேல் ஹமாஸ் மோதலிற்கு வழிவகுத்துள்ள நிலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய பிரதமரின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் பதவி விலகவேண்டும் பணயக்கைதிகளை மீட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/168552
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார். நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவிற்கு வந்தமை குறித்து தினேசின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் நிம்மதியடைகின்றோம்.அந்த விசாரணைகளில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான கதையாடல்களால் இழைக்கப்பட்ட அநீதியை தவிர்ப்பதற்கு நாங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உள்ள ஐ.நா பள்ளி அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2 ஆவது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/280060
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அம்புலன்ஸை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி 03 NOV, 2023 | 08:58 PM காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது. https://www.virakesari.lk/article/168462
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நேரலையில் தோன்றிய பின்னர் வீடு திரும்பிய ஊடகவியலாளர் குடும்பத்துடன் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சில் பலி- நாங்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்கின்றோம் - காசா ஊடகவியலாளர்கள் அதிர்ச்சி Published By: RAJEEBAN 03 NOV, 2023 | 11:55 AM காசாவின் தென்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீன தொலைக்காட்சியின் செய்தியாளரும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் நசேர் மருத்துவமனைக்கு வெளியே நேரலையில் செய்தியை வழங்கிக்கொண்டிருந்த முகமட அபு ஹட்டாப் அரைமணித்தியாலத்தின் பின்னர் வீடு திரும்பியவேளை விமானக்குண்டுவீச்சில் பலியாகியுள்ளார் என அவரது ஊடகம் அறிவித்துள்ளது. அவரது மரணம் அவரது சக ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது சகா கொல்லப்பட்ட செய்தியை வாசித்த அறிவிப்பாளர் சல்மான் அல் பசீர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். எங்களால் இதற்குமேலும் தாங்கிக்கொள்ள முடியாது நாங்கள் களைப்படைந்துவிட்டோம் நாங்கள் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் மரணத்திற்காக காத்திருக்கும் தியாகிகள் என அந்த அறிவிப்பாளர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஒருவர் பின்ஒருவராக உயிரிழக்கின்றோம் எங்களை பற்றியே காசாமீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாரிய அழிவு குறித்தோ எவருக்கும் கவலையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பாதுகாப்பே இல்லை நினைத்ததை செய்வதற்கான தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பசீர் தான் அணிந்துள்ள பாதுகாப்பு கவசம் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு இது எங்களிற்கு பாதுகாப்பளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரெஸ் என்ற அடையாளத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது வெறும் சுலோகம் மாத்திரமே எங்களிற்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும்தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கள் பாலஸ்தீன மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக மாறியுள்ளன எங்கள் சகா முகமது அபுஹட்டாப் அரைமணித்தியாலத்திற்கு முன்னர்தான் இங்கிருந்தார் தற்போது அவர் தனது குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168404
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உணவை பெறுவது மிகவும் ஆபத்தான கடினமான விடயம் - ஒரு பாண் துண்டிற்காக பெரும் சிரமங்களை சந்தித்தேன் - எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள அவுஸ்திரேலிய பெண் Published By: RAJEEBAN 02 NOV, 2023 | 12:34 PM காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். காசா தொடர்ச்சியான குண்டுவீச்சினை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான ரபா எல்லை ஊடாக உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களத்தில் பதிவு செய்த 23 அவுஸ்திரேலிய பிரஜைகள் அங்கிருந்து வெளியேறலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார். நாங்கள் இதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தோம் எனது எகிப்திய சகாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன் நான் நிம்மதியாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரபா எல்லை ஊடாக வெளியேறியவர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய பெண் மொனா தனது குடும்பத்தை உணவும் நீரும் இல்லாத காசாவில் விட்டுவிட்டு வந்துள்ளமை குறித்து கடும் வேதனை வெளியிட்டுள்ளார். காசாவில் உணவை பெறுவது மிகவும் கடினமானது ஆபத்தானது உங்களால் அதனை கற்பனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் நான் உண்ண விரும்பாத ஒரு துண்டு பாணை பெற்றுக் கொள்வதற்காக நான் மிகவும் கஸ்டப்பட்டேன். சிறுவர்களிற்காகவே அதனை நான் பெற்றுக்கொண்டேன் எங்கள் குடும்பத்தில் 17 சிறுவர்கள் உள்ளனர் உணவு இல்லை கடந்த இரண்டு நாட்களாக நீரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் எனது குடும்பத்தை பார்க்கப் போகின்றேன் என சந்தோசமடைகின்றேன் எனினும் அதேவேளை நான் எனது சகோதரர்களை முழு குடும்பங்களையும் அங்கு விட்டுவிட்டு வருகின்றேன் இதனால் நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் நிலைமை மிக மிக மோசமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை தாங்கள் எகிப்திற்குள் தப்பிவந்ததும் அவுஸ்திரேலியா அரசாங்கம் தங்களை சிறந்த விதத்தில் பராமரித்துள்ளது என மெல்பேர்னை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168318
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது: ஐ.நா. கண்டனம் இஸ்ரேல் இராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் இராணுவம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர். காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்தது மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்திற்க் கொண்டு அவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என பதிவிட்டுள்ளது. https://thinakkural.lk/article/279855
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் நடத்திய அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 195 பேர் பலி: ஹமாஸ் அமைப்பு தகவல் இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2 ஆவது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் வீடுகளுக்குள் இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 777 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 120 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன என தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/279850
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கு பைடன் அழைப்பு - தற்போதைய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் சண்டையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிந் மினசோட்டாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும்போது அவர் கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறினார். "ஒரு தற்காலிக சண்டை நிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன். சண்டையை நிறுத்துவது என்றால், பணயக் கைதிகளை காப்பாற்ற நேரம் கொடுங்கள் என்கிறேன்," என்று அவர் கூறினார். மனிதாபிமான உதவி, ஹமாஸ் பிடியில் உள்ள 240 பணயக் கைதிகள் ஜோ பைடன் குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. அந்த நிகழ்ச்சியில் "இப்போது போர்நிறுத்தம்" என்று பாடிய பெண்ணை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். பின்னர் பேசிய பைடன், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்களுக்கு தற்போதைய நிலைமை "நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது" என்று கூறினார். "நான் இரு தனி நாடுகள் தீர்வை ஆதரித்தேன்; தொடக்கத்தில் இருந்தே அதுதான் என் நிலைப்பாடு" என்று பைடன் மேலும் கூறினார். "உண்மை என்னவென்றால், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு வெளிப்படையான பயங்கரவாத அமைப்பு." என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "காயமடைந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர்" 20,000 க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளனர் என்று எல்லைகள் அற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக 335 வெளிநாட்டவர்கள், 76 படுகாயமடைந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் ரஃபா எல்லைப் பாதை வழியாக வெளியே கொண்டு வரப்பட்டதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை எகிப்திய கள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதைக் கண்டதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுமாறு எம்.எஸ்.எஃப். அழைப்பு விடுத்துள்ளது. சண்டையை நிறுத்துவதுடன், முக்கியமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. "காஸாவில் அனைவரும் உணவு கேட்கிறார்கள், தண்ணீர் கேட்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்தேன்" என்று போர் தொடங்கியதில் இருந்து காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐ.நா அதிகாரி பிலிப் லாஸரினி கூறினார். https://www.bbc.com/tamil/articles/crg1mk99g3vo