Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப் நிறுவனர் இயான் பிரேமர் கூறியதாவது: இஸ்ரேல் இராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. காசா பகுதிமக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் ஒரு இலட்சம் வீரர்கள், 2 இலட்சம் அதிநவீன ஏவுகணைகள், ஏராளமான பீரங்கிகளை கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் நேரடியாக போரில் இறங்கினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கினால் முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு ஏற்படும். பாலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. இதே சூழல் நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. எனவே,இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 3-ம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருக்கிறது. இவ்வாறு இயான் பிரேமர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/278105
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதேவேளை, சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்கள் வாழும் மேற்கு எல்லையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/278066
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்குகரை அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி Published By: RAJEEBAN 22 OCT, 2023 | 09:13 AM இஸ்ரேல் மேற்குகரையின் அகதிமுகாமின் மீது மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நுர் சாம்ஸ் அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் நிவாரண முகவர் அமைப்பு யுஎன்ஆர்டபில்யூஏ தெரிவித்துள்ளது. ஒரு இஸ்ரேலிய படைவீரர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தனது சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167470
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள், நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வடகொரியாவின் ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ் படையினர்! பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் வடகொரியாவின் எப் – 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படும் எப் – 7 ரக ஏவுகணைகள் ஹமாஸ்படையினர்க்கு வழங்கப்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது. இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளை ஆய்வு செய்தபோது, அவை வடகொரியாவின் எப்7 ஏவுகணைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த மோதல் காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/277892
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் 21 OCT, 2023 | 02:46 PM இஸ்ரேல் ஹமாஸ் மோதல் வெடித்து இரண்டு வாரங்களின் பின்னர் முதல் தடவையாக மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் காசா சென்றுள்ளன. எகிப்திலிருந்து ரபா எல்லை ஊடாக வெள்ளை கொடியுடன் ஐநா வாகனங்கள் செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வாகனங்களில் இருந்து பாலஸ்தீனத்திலிருந்து சிறிய வாகனங்களிற்குள் விநியோகத்திற்காக பொருட்கள் ஏற்றப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/167438
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் விடுதலை செய்தது ஹமாஸ் Published By: RAJEEBAN 21 OCT, 2023 | 07:29 AM ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட இரண்டு அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பு தன்னிடம் உள்ள 200க்கும் அதிகமானபணயக்கைதிகளில் இருவரை விடுதலை செய்துள்ளது- கட்டார் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. யூடித் ரனானும் அவரது 17 வயது மகள் நட்டாலியாவும் தென் இஸ்ரேலில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்கசென்றிருந்தவேளை 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டது. விடுதலைசெய்யப்பட்ட பணயக்கைதிகள் இருவரையும் காசாவிலிருந்து இஸ்ரேலிற்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவியுள்ளது. https://www.virakesari.lk/article/167405
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
65 வயது பெண்ணின் அதிர வைக்கும் வீரம்: பிரமித்த பைடன் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் தப்பித்துள்ளனர். உலகையே உலுக்கிய அத்தாக்குதல் நடைபெற்ற அன்று இஸ்ரேலில் ஒரு வீட்டிற்குள் 5 ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அங்கு ரேச்சல் எட்ரி மற்றும் அவர் கணவர் டேவிட் வசித்து வந்தனர். இருவரையும் அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். ஒரு கையில் கையெறி குண்டும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கொன்று விட போவதாக மிரட்டினர். இந்நிலையில் வெளியே சென்றிருந்த காவல்துறை அதிகாரியான அவரது மகன் அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்டார். உள்ளே பயங்கரவாதிகள் இருப்பதனால் மகன் வந்தால் நேர கூடிய ஆபத்தை குறித்து எச்சரிக்க நினைத்த ரேச்சல், அவரை உள்ளே வர விடாமல் சைகை மூலமாக கையை மென்மையாக உயர்த்தி 5 விரல்களை விரித்து காட்டினார் காவல் அதிகாரியான அவர் மகன் உடனடியாக சுதாரித்து கொண்டார். தொலைவில் சென்று தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவரை ஒதுங்கி நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தி பணய கைதிகளை மீட்கும் கொமாண்டோவினர் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையே தங்களை மீட்கும் அதிரடி படையினர் வரும் வரையில் ரேச்சல் அந்த பயங்கரவாதிகளுடன் பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு ரேச்சல், காபி மற்றும் குக்கீஸ் .பிஸ்கட் ஆகியவை வழங்கி உபசரித்தார். மேலும் பேச்சை வளர்க்க அரபி மொழி குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து நேரத்தை கடத்தினர். அதிரடி படையினர் திட்டமிட்டபடி வந்து அந்த பயங்கரவாதிகளை கொன்று இத்தம்பதியினரை மீட்டனர். இச்சம்பவம் குறித்து ரேச்சல் தெரிவித்ததாவது: அவர்கள் பசியுடனிருந்தனர். பசி இருந்தால் கோபம் அதிகரிக்கும். எனவே நான் அவர்களை உபசரித்து முதலில் பசியாற்றினேன். அவர்கள் என் குழந்தைகளை குறித்து கேட்கும் போது பேச்சை மாற்றுவேன். நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும் என அடிக்கடி சொல்லி கொண்டிருந்தேன். அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ அனைத்தும் வழங்கினேன். எனக்கு நீங்கள் அரபி மொழியை கற்று கொடுத்தால் நான் உங்களுக்கு எங்கள் ஹீப்ரூ மொழியை கற்று தருவதாக கூறி சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்வா சாவா பிரச்சனை என நான் நன்கு உணர்ந்திருந்தேன் என்றார். இந்நிலையில், இஸ்ரேலின் போர் வியூகம் குறித்து பேசவும், இப்போர் அண்டை நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசிக்கவும், நேற்று இஸ்ரேலுக்கு அவசர பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி தப்பித்தவர்களை சந்தித்தார். தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை சந்தித்த பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார். சுமார் 20 மணி நேரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தம்பதியர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/277877
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா எல்லையில் நூற்றுக்கணக்கான பீரங்கிகள், இராணுவ வீரர்களை குவித்த இஸ்ரேல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து 14 ஆவது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் இராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் இராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது தொடர்ந்து கூறும்போது, லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ரொக்கெட்டுகளில் 4 ரொக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது. இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன என இஸ்ரேல் படைகள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ரொக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன. பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பும் தாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. https://thinakkural.lk/article/277838
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவுக்குள் நுழைய தயக்கம் காட்டும் இஸ்ரேல் - காரணமான நான்கு விஷயங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் தரைவழி தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்து சில நாட்கள் ஆன பின்பும் இன்னும் காஸாவுக்குள் இஸ்ரேல் நுழையவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 49 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கம் ஹமாஸை ஒழித்துக் கட்டுவது. அதற்காக, கடந்த சில நாட்களாகவே காஸாவுக்குள் தனது படைகள் நுழையப் போவதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தது 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இஸ்ரேல் மூன்று லட்சம் வீரர்களை ரிசர்வ் படைக்கு அழைத்துள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள் மெர்காவா டாங்கிகள், பீரங்கிகள், நவீன ஆயுதங்களுடன் இஸ்ரேல்-காஸா எல்லையில் தயார் நிலையில் உள்ளனர். இஸ்ரேல் கப்பல் படை மற்றும் விமானப்படை, ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் மறைவிடங்கள், ஆயுதக் கிடங்குகள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இதில் பல பாலத்தீன மக்கள் உயிரிழந்தும் காயமுற்றும் இருக்கின்றனர். சில ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் குண்டுவெடிப்பு காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் நிலைமையை இன்னும் மோசமாக்கி பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இஸ்ரேல் ஏன் இன்னும் காஸாவுக்குள் நுழையாமல் இருக்கிறது? இதற்கு சில காரணங்கள் உள்ளன. காரணம் 1 - பைடன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அவசர பயணத்தின் மூலம், அமெரிக்கா இஸ்ரேல் விவகாரம் குறித்து எவ்வளவு கவலை கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவுக்கு இரண்டு கவலைகள் உள்ளன: ஒன்று அதிகரித்து வரும் மனிதநேய நெருக்கடி, மற்றொன்று மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இந்த மோதல் பரவும் அபாயம். கடந்த 2005இல் வெளியேறிய காஸாவில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய இஸ்ரேலின் எந்தவொரு முயற்சிக்கும் தனது எதிர்ப்பை அமெரிக்க அதிபர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அப்படி ஆக்கிரமிப்பது “மிகப் பெரிய பிழை” என அவர் குறிப்பிட்டார். அதிகாரபூர்வமாக, அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இருக்கும் நெருங்கிய நண்பருக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தவும், காஸா குறித்த இஸ்ரேலின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்திருந்தார். ஆனால், வெளியில் சொல்லப்படாத மற்றொரு காரணம், அவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடுமையான போக்கை சற்று கட்டுப்பட்டுத்துமாறு கூறியிருக்கலாம். இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், எப்படி, எப்போது வெளியேறப் போகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். டெல் அவிவில் அமெரிக்கா அமர்ந்திருக்க, காஸா மீது இஸ்ரேல் முழு வீச்சில் ராணுவ படையெடுப்பு நடத்தினால், அது இஸ்ரேலுக்கும் நல்லதல்ல, அமெரிக்காவுக்கும் நல்லதல்ல. காஸாவில் அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இடையே இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர், இஸ்ரேலின் கூற்றை ஒப்புக் கொண்டு, இந்தத் தாக்குதல் தவறாக ஏவப்பட்ட பாலத்தீன ராக்கெட்டால் நிகழ்ந்த்து என்றார். ஆனால் பாலத்தீன அதிகாரிகள் இது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்றனர். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதையும், குண்டு வெடிப்புக்கு என்ன காரணம் என்பதையும் கண்டறியும் முயற்சியில் பிபிசி ஈடுபட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல்-காஸா மோதல் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவலாம் என அமெரிக்கா கவலைப்படுகிறது. காரணம் 2- இரான் கடந்த சில நாட்களாகவே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கிடைக்காமல் இருக்காது என கடுமையான எச்சரிக்கை விடுத்து வருகிறது இரான். இதற்கு நடைமுறையில் என்ன அர்த்தம்? மத்திய கிழக்கில் ஏராளமான ஷியா ஆயுதக் குழுக்களுக்கு இரான் நிதியளித்து, ஆயுதங்கள் வழங்கி, பயிற்சியும் வழங்கி வருகிறது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த குழு, இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அருகில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா. கடந்த 2006ஆம் ஆண்டு இரு நாடுகளும் முடிவுறாத மோசமான போரை நிகழ்த்தினர். இதில் மறைத்து வைக்கப்பட்ட கன்னிவெடிகள் மற்றும் எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக, இஸ்ரேலின் நவீன போர் டாங்கிகள் வீழ்த்தப்பட்டன. அதன் பிறகு ஹெஸ்புல்லா இரானின் உதவியுடன் மேலும் அதிக ஆயுதங்களுடன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது ஹெஸ்புல்லாவிடம் நீண்ட தூரத்தில் துல்லியமாக ஏவக்கூடிய சுமார் 1,50,000 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், ஹிஸ்புல்லா இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க ஆரம்பிக்கும். இஸ்ரேல் இரு முனைகளிலும் போரிட நேரிடும். ஆனால், மத்திய தரைக்கடலில் இஸ்ரேலுக்கு உடனடியாக உதவிட இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு போரை ஹெஸ்புல்லா விரும்புமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எனினும் கடந்த முறை ஹெஸ்புல்லாவுடன் போரிட்டபோது இஸ்ரேலிய போர்க்கப்பலை ஹெஸ்புல்லா தனது ஏவுகணையால் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காரணம் 3: மனிதநேய நெருக்கடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க வாய்ப்புள்ளது. உலக நாடுகளின் மனித நேய நெருக்கடி குறித்த பார்வையுடன் ஒப்பிடுகையில், ஹமாஸை வேரறுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேலிடம் அந்தப் பார்வை குறைவாகவே உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான ரத்தவெறி கொண்ட தாக்குதலுக்குp பிறகு உலக நாடுகளின் கரிசனம் இஸ்ரேல் பக்கம் இருந்தது. ஆனால், காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள் காரணமாக, பாலத்தீன மக்களின் உயிரிழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்த வான்வழித் தாக்குதலை நிறுத்தச் சொல்லி உலக நாடுகள் இஸ்ரேலிடம் கோரி வருகின்றன. காஸாவுக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கத்தான் போகிறது. எதிர்பாராத தாக்குதல், ஸ்னைப்பர்கள் மூலம் இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்படுவார்கள். சண்டையின் பெரும்பகுதி பல மைல்கள் தூரம் கொண்ட சுரங்கங்களில் நடைபெறலாம். காரணம் 4: உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலத்தீன மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஹமாஸின் பயங்கர தாக்குதலை கணிக்கத் தவறியதற்காக ஷின்பெத், உள்நாட்டு உளவுத்துறை பழியை ஏற்றுக்கொண்டது. ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, ஷின்பெத்துக்கு காஸாவின் உள்ளே உளவாளிகள் உள்ளனர். எனினும் தெற்கு இஸ்ரேலில் அன்று நடந்த தாக்குதல், 1973 யோம் கிப்பூர் போருக்குப் பிறகான மிகப்பெரிய உளவுத்துறை தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக பதற்றத்துடன் அவசர அவசரமாக இஸ்ரேல் உளவுத்துறை, பாதுகாப்பு படையினருக்குத் தேவையான ஹமாஸ் குழு தலைவர்களின் பெயர்களையும், இடங்களையும், பணயக் கைதிகளின் இடங்களையும் எடுத்துக் கொடுத்திருக்கும். தரை வழித் தாக்குதலை துல்லியமாக நடத்த மேலும் சில தகவல்களைப் பெற இஸ்ரேல் உளவுத்துறைக்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம். அப்போதுதான் குறிப்பாக இலக்கைத் தாக்க முடியும். இல்லையென்றால் வடக்கு காஸாவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் இருந்து தப்பித்து இயங்கி வரும் ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்கள் இந்நேரம் மறைந்திருந்து தாக்குவதற்கும், இஸ்ரேலிய படைகளுக்கான வலைகளை விரிக்கவும் திட்டமிட்டிருக்கும். நிலத்துக்கு அடியில் இருக்கும் சுரங்கங்களில் இன்னும் ஆபத்தானதாக இருக்கும். அந்த இடங்களைக் கண்டறிந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை எச்சரிப்பதில் இஸ்ரேல் உளவுத்துறையும் உன்னிப்பாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c89w52p49evo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில் ஜேர்மன் அரச தலைவருக்கு ஏற்பட்ட நிலை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு சென்ற ஜேர்மன் பிரதமர், ஹமாஸ் அமைப்பின் ஏவுகணை தாக்குதலில் விமான நிலையத்தில் படுக்க வைக்கப்பட்ட காட்சி எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 17ம் திகதி தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள விமான நிலையத்திற்கு ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் நாடு திரும்புவதற்காக வந்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் இதன்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டார். பின் சில நிமிடங்களுக்கு பின்னர் அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டார். https://ibctamil.com/article/condition-of-the-german-prime-minister-in-israel-1697718919
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு துருக்கி தலையிடும் -எர்டோகன் கடும் எச்சரிக்கை 19 OCT, 2023 | 05:30 PM பாலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்காக தலையிடுவேன் என துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் எச்சரித்துள்ளார். காசா பள்ளத்தாக்கில் இடம்பெறும் முன்னர் ஒருபோதும் இல்லாத இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையை முடிவிற்கு கொண்டுவருமாறு மனித குலத்தை கேட்டுக்கொள்கின்றேன் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167304
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா மோதல் பிராந்திய போராக மாறும் அபாயம் – ரஷ்யா எச்சரிக்கை! காசா பகுதியில் இடம்பெறும் மோதல், பிராந்திய போராக மாறும் அபாயம் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இடம்பெறும் மோதலுக்கு ஈரான் மீது பழி சுமத்துவது ஆத்திரமூட்டும் செயற்பாடு என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் துருக்கியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்றைய தினம் இஸ்ரேலுக்கு விஜயமொன்றை மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இஸ்ரேலுக்கான தங்களது ஆதரவையும் அவர் வெளிப்படுத்துவார் என பிரித்தானிய பிரதமர்; அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது பிரித்தானிய பிரதமரும் அங்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/277707
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி இணக்கம் ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். காசா எல்லைக்கான உதவிப் பொருட்கள் அடங்கிய சுமார் 20 ட்ரக் வாகனங்கள் செல்வதற்காக ரஃபா எல்லையை திறக்க எகிப்திய ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். காசா பிராந்தியத்திற்கான “நிலையான” மனிதாபிமான உதவிகளை எகிப்து உறுதிப்படுத்துவதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் சிக்கி 4500-இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/277612
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஜேர்மனியில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - 65 பொலிஸார் காயம் 174 பேர் கைது Published By: RAJEEBAN 19 OCT, 2023 | 03:37 PM ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 65 பொலிஸார் காயமடைந்துள்ளனர். உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கற்கள் எரிபொருட்கள் வீசப்பட்தாலும் ஆர்ப்பாட்டக்காராகள் பொலிஸாரை மீறியதாலும் பொலிஸாருக்கு இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என பேர்ளின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 174 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மனி பொலிஸார் 65 பேரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அராபியர்கள் அதிகமாக வாழும் நியுகோலான் பகுதியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் இடம்பெற்றுள்ளன. நியுகோலானை காசாவாக மாற்றுமாறு டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/167279
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் யுத்தம் - முற்றுகை காரணமாக காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனையும் மூடப்படும் ஆபத்து Published By: RAJEEBAN 19 OCT, 2023 | 11:29 AM அல்ஜசீரா யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற மிகவும் துயரமான சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காசாவின் அல்அஹ்லி மருத்துவமனையில் கொல்லப்பட்டுள்ள அதேவேளை வைத்தியர் சுபிசுகேய்க் தனது புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் சந்திக்கும் மற்றுமொரு துயரத்தை சந்திக்கின்றார். ஒக்டோபர் ஏழாம் திகதி மோதல் ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின்னர் காசா பள்ளத்தாக்கின் மீது முழுமையான தடையை விதித்தது, எரிபொருள் குடிநீர் உட்பட ஏனைய பொருட்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துருக்கி பாலஸ்தீன நட்புற மருத்துவமனையின் இயக்குநர் சுபிசுகேய்க் தனது மருத்துவமனையில் எரிபொருள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மேலும் ஹீமோதெரபி சிகிச்சைக்கான மருந்துகளும் அவசியமாக தேவைப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் இயங்குவதை உறுதி செய்ய முயல்கின்றோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ள அவர் நோய்களை கண்டுபிடித்து கண்காணிப்பதற்கான கதிரியக்க சேவைகளை ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காசா தனது மின்;சாரத்தின் ஒருபகுதியை இஸ்ரேலில் இருந்தே பெறுகின்றது இதன் காரணமாக காசாவிற்கான மின்சார விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஏனைய மின்சாரத்தை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மூலம் இயக்கப்படும் மின்பிறப்பாக்கி மூலம் காசா பெறுவது வழமை.ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் முழுமையான முற்றுகையால் அந்த மி;ன்நிலையம் முற்றாக செயல் இழந்தது. இஸ்ரேல் அதன் பின்னர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் தாக்குதல் காரணமாக 3000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்-இதில் மூன்றில் ஒருவர் குழந்தைகள். எனினும் காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனை எந்தநேரத்திலும் செயல் இழக்கும் நிலையேற்பட்டுள்ளமை ஏவுகணைகளில் இருந்து வெளியாகும் குண்டுசிதறல்கள் மாத்திரம் காசா மக்களை அச்சுறுத்தவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. காசாவில் 9000க்கும் புற்றுநோயாளிகள் உள்ளனர் என முன்னர் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது. துருக்கி பாலஸ்தீன நட்புறவு வைத்தியசாலை எரிபொருளில் இயங்கும் ஒரேயொரு மின்பிறப்பாக்கியின் உதவியுடன் இயங்கிவந்தது.தற்போது மின்சாரம் இல்லாததால் அந்த மின்பிறப்பாக்கியை பயன்படுத்த முடியாத நிலை உருவாக கூடும் இதனால் அந்த மருத்துவமனை அடிப்படை சேவைகளை கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். இதன் காரணமாக உரிய தருணத்தில் - தொடர்ச்சியாக சிகிச்சைகளை பெறவேண்டிய நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படும். தீவிர சிகிச்சை பிரிவு இயங்குவதற்கு அதிகளவு மின்சாரம் தேவை என தெரிவிக்கும் வைத்தியர் சுகேக் தெரிவிக்கின்றார்.ஒக்சிசன் இயந்திரங்கள் இயங்கவும் அவை தேவை என்கின்றார் சுகேக் சில நோயாளிகளிற்கான ஹீமோதெரபி சிகிச்சையை நிறுத்தவேண்டியுள்ளது ஆனால் நோய் உடலிற்குள் பரவுவதை தடுப்பதற்காக அவர்களிற்கு சிகிச்சை அவசியம் என்கின்றார் சுகேக். யுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாளில் சில நோயாளிகள் சிகிச்சைக்குவரவில்லை -மருத்துவமனைக்கு செல்வது மிகவும் ஆபத்தான விடயமாக மாறியதே இதற்கு காரணம். https://www.virakesari.lk/article/167245
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாதுகாப்பு சபையில் காசா தொடர்பான முக்கிய தீர்மானம் -அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. 18 OCT, 2023 | 08:14 PM இஸ்ரேலிற்கும் காசாவிற்கும் இடையிலான மோதலில் மனிதாபிமான இடைநிறுத்தங்களை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/167215
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவில் ஐ.நா. நிவாரண முகாம் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு - தங்கிருந்த 4 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்? பட மூலாதாரம்,REUTERS 17 அக்டோபர் 2023 காஸாவில் ஐ.நா. நிவாரண முகமையானது அகதிகள் முகாமாக பயன்படுத்திய பள்ளி மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது. அல்-மகாஸி என்ற இடத்தில் இருந்த அந்த பள்ளியில் 4 ஆயிரம் பாலத்தீனர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தததாக ஐ.நா. கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண முகமை தெரிவித்துள்ளது. "இது மூர்க்கத்தனமானது. இது பொதுமக்களின் உயிர் மீதான அப்பட்டமான அலட்சியத்தை காட்டுகிறது. காஸாவில் ஐ.நா. நிவாரண முகமையின் இடம் உள்பட எந்தவொரு இடமும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதை இது உணர்த்துகிறது." என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c25qe780xleo இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது. அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:- இஸ்ரேல் விமான தாக்குதல்களில் 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை. காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயற்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/277433
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சத்திர சிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை கூரை இடிந்துவிழத்தொடங்கியது - காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து மருத்துவர் Published By: RAJEEBAN 18 OCT, 2023 | 11:02 AM கார்டியன் காசா மருத்துவமனையில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்து சம்பவம் போன்ற ஒன்றில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2007 இல் ஹமாஸ் அமைப்பினர் காசா பள்ளத்தாக்கை கைப்பற்றிய பின்னர் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரே நாளில் மிக அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக இது விளங்குகின்றது. ஹமாசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காசா சுகாதார அமைச்சு 500பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பப்டிஸ்ட் மருத்துவமனை என அழைக்கப்படும் அல் அஹ்லி அல் அராபியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானதாக்குதலை மேற்கொண்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக ஹமாஸ் இஸ்ரேலிற்கு இடையிலான 11 நாள் யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த இரத்தக்களறி இடம்பெற்றுள்ளது. இது மத்திய கிழக்கில் வன்முறைகளை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன என முதலில் தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் பின்னர் இஸ்லாமிய ஜிகாத்தின் ரொக்கட்தவறுதலாக வெடித்ததால் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. எனினும் அழிவின் அளவு அந்த அமைப்பின் ரொக்கட் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது என கருதமுடியாத அளவிற்கு காணப்படுகின்றது. அல்ஜசீரா வெளியிட்டுள்ள வீடியோக்கள் மருத்துவமனையின் பல மாடிக்கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதை காண்பித்துள்ளன. உடல்கள் பெருமளவு இரத்தம் பெருமளவு இடிபாடுகளை காணமுடிகின்றது. அங்கிலிகன் தேவாலயத்திற்கு சொந்தமான அந்த மருத்துவமனை முன்கூட்டிய எச்சரிக்கை இன்றியே தாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமையும் இந்த மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்த மருத்துமனை காலை 7.30 மணிக்கு தாக்கப்பட்டுள்ளது அவ்வேளை இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்த பெருமளவானவர்கள் அங்கு காணப்பட்டனர். மேலும் இஸ்ரேல் தங்கள் குடியிருப்புகள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மருத்துவமனை பாதுகாப்பான இடம் என கருதி அங்கு தஞ்சமடைந்த பல பொதுமக்களும் காணப்பட்டனர். நாங்கள் மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம், பாரிய சத்தம் கேட்டது கூரை இடிந்து சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த அறையின் மீது விழத்தொடங்கியது, இது படுகொலை என வைத்தியர் ஹசன் அபு சிட்டா தெரிவித்துள்ளார். மருத்துவமனை நோயாளிகள்சுகாதார பணியாளர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்கள் மீதான இந்த அதிர்ச்சி தரும் தாக்குதலை எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது எனகுறிப்பிட்டுள்ள அவர் மருத்துவமனை ஒரு இலக்கல்ல இந்த இரத்தக்களறி நிறுத்தப்படவேண்டும் போதும் போதும் என தெரிவித்துள்ளார். உயிரிழந்த 300க்கும் அதிகமானவர்கள் அம்புலன்ஸ் மற்றும் காரில் காசாவின் பிரதான வைத்தியசாலையான அல்ஸிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஏனைய காயங்களால் காயமடைந்த பெருமளவானவர்கள் காணப்படுகின்றனர். காயமடைந்த மக்கள் தரையில் காணப்படுகின்றனர் வலியில் கதறுகின்றனர். நாங்கள் ஐந்து கட்டில்களை ஒரு அறைக்குள் புகுத்துவதற்கு முயல்கின்றோம் எங்களிற்கு சாதனங்கள் கட்டில்கள் மருந்துகள் வேண்டும் எங்களிற்கு எல்லாம் வேண்டும் என அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சியாட் செகாடா தெரிவித்துள்ளார். அடுத்த சில மணிநேரங்களில் காசாவின் மருத்துவபிரிவு செயல் இழக்கும் என கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்பதால் இந்த தாக்குதல் மிக மோசமான விடயம் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடி பாதுகாப்பான இடம் என தாங்கள் கருதிய இடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் - மருத்துவனையில் சர்வதேச சட்டங்களின் கீழ் அது பாதுகாப்பான இடம் எனவும் அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167143
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: ஹமாஸ் படை அறிவிப்பு பாலஸ்தீனர்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, அடக்குமுறை செய்வதாக கூறி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் படையினர் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் கடல், வான், சாலை வழியாக ஊடுருவிய ஹமாஸ் படையினர் தீவிர தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டவர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா தெருக்களில் குண்டு மழை பொழிந்து பெரும்பாலான கட்டிடங்களை தரை மட்டமாக்கியது. காசா நகருக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டது. இதற்காக வடக்கு காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. இஸ்ரேல் இராணுவத்தினர் தரைவழி தாக்குதல் எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 இலட்சம் பாலஸ்தீனர்கள் கடந்த 4 நாட்களில் தெற்கு காசாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாசின் இராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் அபு ஒபேதே ஒரு தொலைக்காட்சியில் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இஸ்ரேலின் தெற்கில் கடந்த 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு 200 பேரை பிணை கைதிகளாக பிடித்துள்ளோம். பிற இடங்களில் 50 பேரை கைது செய்துள்ளோம் எங்கள் மக்களுக்கு எதிராக தரை வழித் தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் எங்களை பயமுறுத்தவில்லை. இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். குண்டு வீச்சை நிறுத்தினால்தான் வெளிநாட்டு பிணை கைதிகளை விடுவிப்போம். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து நாங்கள் பிடித்து வைத்த பிணை கைதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு ஹமாஸ் இராணுவ செய்தி தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/277353
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அடுத்த சில மணிநேரங்களில் முன்கூட்டிய தாக்குதல் - இஸ்ரேலிற்கு ஈரான் எச்சரிக்கை Published By: RAJEEBAN 17 OCT, 2023 | 12:42 PM காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும் எச்சரித்துள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹ_சைன் அமிரப்துல்லா ஹியன் இதனை தெரிவித்துள்ளார். காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் வரவிருக்கும் மணிநேரத்தில் எதிர்ப்பு முன்னணி முன்கூட்டிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார். ஹெஸ்புல்லா உட்பட பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சேர்ந்தே இந்த எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியுள்ளன. https://www.virakesari.lk/article/167070
-
இலங்கையில் 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிப்பு
17 OCT, 2023 | 04:56 PM இலங்கையில் 14 வயதுக்குட்பட்ட 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர கருத்து தெரிவிக்கையில், தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் குழந்தை தொழுநோயாளிகளின் சதவீதம் குறைந்தது 4 சதவீதமாக இருத்தல் அவசியம். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் இலங்கையில் சுமார் ஆயிரத்து 155 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்நோய் தொற்றில் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும், இதனால் தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலம் பாதிக்கப்படும். இலங்கையில் இதன் அதிகரிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/167108
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாலத்தீன மக்களுக்கு முழு ஆதரவு - ஹமாஸ் தலைவரிடம் மலேசிய பிரதமர் வாக்குறுதி பட மூலாதாரம்,GETTY IMAGES 15 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் பாலத்தீன மக்களுக்கு அசைக்கமுடியாத ஆதரவை வழங்குவதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவிடம் கூறியதாக மலேசிய பிரதமர் இப்ராஹிம் அன்வர் தெரிவித்துள்ளார். ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இப்ராஹிம் கூறினார். "காஸாவின் மோசமான சூழ்நிலையில், குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்தவும், ரஃபாவில் ஒரு மனிதாபிமான வழித்தடத்தை நிறுவவும் நான் வலுவாக வாதிடுகிறேன்," என்று எக்ஸ் வலைத்தளத்தில் இப்ராஹிம் பதிவிட்டார். "இஸ்ரேல், தங்கள் ஆக்கிரமிப்பு அரசியலை கடைப்பிடிப்பதை கைவிடுவதும், ஹமாஸுடன் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதும், நடந்துகொண்டிருக்கும் மோதலுக்கு முடிவுகட்ட ஒரு அமைதியான உடன்பாட்டை உண்மையாக பின்பற்றுவதும் கட்டாயமாகும்." என்று அவர் கூறினார். "மனிதாபிமான உதவிகளை வழங்குவற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், குறிப்பாக உணவு மற்றும் மருந்து வடிவில் தேவைப்படுபவர்களின் துன்பத்தைப் போக்குவதற்கு முடிவு செய்திருக்கிறோம்" பணயக் கைதிகளின் முதல் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ் படக்குறிப்பு, வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார் தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு ஹமாஸ் வெளியிட்ட முதல் பணயக்கைதி வீடியோ இதுவாகும். காஸாவில் 199 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். இஸ்ரேலில் நடந்த ஒரு விருந்தில் ஹமாஸால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறி, தன்னை விடுவிக்குமாறு அவர் கெஞ்சும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதே பெண் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் காட்சியும் இதில் அடங்கும். ஹமாஸால் மாயா கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிபிசி பொதுவாக பணயக் கைதிகள் வீடியோக்களை வெளியிடுவதில்லை. வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். ஹமாஸின் செயல்களை நியாயப்படுத்த முடியாது - ஜஸ்டின் ட்ரூடோ பட மூலாதாரம்,REUTERS காஸாவில் மனிதாபிமான பாதை திறக்கப்பட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார். காஸாவில் முடங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை கனடா ஆதரிக்கிறது, ஆனால் "போர்களுக்குக் கூட விதிகள் உண்டு" என்று அவர் மேலும் கூறினார். "பயங்கரவாதம் எப்போதும் பாதுகாக்க முடியாதது, ஹமாஸின் பயங்கரவாத செயல்களை எதுவும் நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் பாலத்தீனிய மக்களையோ அல்லது அவர்களின் நியாயமான விருப்பங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று நாடாளுமன்றத்தில் ட்ரூடோ கூறினார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர், மூன்று பேரைக் காணவில்லை. காசாவுடனான எல்லையைத் திறக்குமா எகிப்து? காசாவுடனான எல்லையைத் திறக்க எகிப்து திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் காசாவில் சண்டை நிறுத்தம் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கமும் சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஏதும் தங்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளது. காசாவுடனான அதன் எல்லையில் உள்ள ரஃபா கடவையை திறக்குமாறு எகிப்து இராஜதந்திரிகள் மற்றும் உதவி நிறுவனங்களின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. எனினும் இந்தப் பாதை வழியாக அனைத்து பாலத்தீனர்களும் செல்ல முடியாது. இரட்டை குடியுரிமை கொண்ட பாலத்தீனியர்களையும் காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரையும் மட்டுமே அதிகாரிகள் வெளியேற அனுமதிப்பார்கள். சனிக்கிழமையன்று அமெரிக்க அரசு அதன் குடிமக்களுக்கு தெற்கே செல்லுமாறு அறிவுறுத்திய பின்னர், பல பாலத்தீனிய-அமெரிக்கர்கள் ஏற்கனவே இந்தப் பாதைக்கு அருகில் கூடிவிட்டனர். உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை இந்த எல்லைப் பாதை மீண்டும் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் காசாவை விட்டு வெளியேற உதவுவதற்காக, அந்த நாடும் இந்த எல்லையைத் திறப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆக்ஷன் எய்ட் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காசாவுக்கு மிகவும் தேவையான மனிதாபிமான உதவிகளுக்கு இந்த எல்லைப் பாதை திறக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. இதனால் ஏராளமானோர் ரஃபா எல்லை அருகே கூடியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தெற்கு காசாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகம் தெற்கு காஸாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுமக்களுக்காக பாதுகாப்பான பகுதியாக தெற்கு காஸா இருக்கக்கூடும் என்பதை இது குறிப்பதாக பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டவுசெட் கூறுகிறார். தெற்கு காஸாவில் இஸ்ரேலிய வான்வழி குண்டுவீச்சு தொடர்ந்தாலும், இந்த நடவடிக்கை மூலம் மொத்தமாக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக பகுதி பகுதியாக சென்று தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள இரான், இப்பிரச்னையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக் கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அமெரிக்கா மேலும் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தவே அமெரிக்கா இவ்வாறு செய்துள்ளது. மறுபுறம், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கே இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதால் நிலைமையை மோசமாக்கியுள்ளது- பட மூலாதாரம்,REUTERS அரபு நாடுகளில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் முகாம் அரபு நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கெய்ரோ விமான நிலையத்தில் பேசும்போது, இந்த விவகாரத்தை பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக சமீபத்திய நாட்களில் ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என்று கூறிய அவர், அதே நேரத்தில் மோதல் பரவுவதை தடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க குடிமக்கள் உட்பட பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தூதரக பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். "இஸ்ரேலுக்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும், இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் உரிமை உள்ளது," என்று அவர் கூறினார். மனிதாபிமான முயற்சிக்கு தலைமை தாங்குவதற்காக துருக்கிக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக டேவிட் சாட்டர்ஃபீல்ட்டை நியமித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்தியதரைக் கடலுக்கு செல்லும் விமான தாங்கி கப்பல்களை தற்போதைய சூழலை கட்டுப்படுத்துவதற்கானதாக பார்க்க வேண்டுமே தவிர ஆத்திரமூட்டலாக பார்க்கக் கூடாது என்றும் கூறினார். பட மூலாதாரம்,MENAHEM KAHANA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக் கைதிகளை மீட்பதே" நோக்கம் என்றார். காஸாவில் வசிக்கும் மக்களை வாடி காஸாவின் வடக்குப் பகுதி முழுவதையும் காலி செய்துவிட்டு தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இதனால் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், இவ்வளவு பெரிய அளவில் இடம் பெயர்வது "மிகவும் தீவிரமான மனிதாபிமான ரீதியிலான பாதிப்புக்கு" வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து தொடங்கிய இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் இதுவரை 2,000 பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பூமியின் முகத்தில் இருந்து ஹமாஸை நிரந்தரமாக ஒழித்துவிடுவோம் என்றும் காசா இனி ஒருபோதும் மாறாது என்றும் இஸ்ரேலிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சனிக்கிழமையன்று இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் கொடூரமான தாக்குதலில் 1,300 பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸ் உறுப்பினர்கள் ஒருவரையும் விடாமல் அழிப்போம்," என்று கூறினார். இதற்காக ஹமாஸுக்கு எதிராக “ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்” என்ற பெயரில் இஸ்ரேல் ஒரு போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன், காஸாவில் இதுபோன்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் "ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்" பிரசாரம் நடைமுறையில் எவ்வளவு தொலைவுக்கு சாத்தியமானது? மக்கள் தொகை அதிகமுள்ள காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் இதை நடத்துவது எவ்வளவு சவாலானதாக இருக்கும்? இஸ்ரேலிய தளபதிகள் தங்கள் நோக்கங்களை அடைய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES காஸா பகுதியில் தரைப்படை நடவடிக்கைகள் என்பது நகரின் குறுகிய தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகத் தேடுதல் மற்றும் சண்டையிடுதல் என்பதாகும். இதன் காரணமாக பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கும். இதுவரை இஸ்ரேல் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணயக் கைதிகளை மீட்பது ஏன் சவாலானது? சனிக்கிழமை நடந்த தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக் குழுவினால் பிடித்துச் செல்லப்பட்ட 150 பணயக் கைதிகளை மீட்பது ராணுவத்தின் மற்றொரு முக்கியமான பொறுப்பாக உள்ளது. அவர்கள் காஸாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஹரேசி ஹலேவி, ஹமாஸை வேரறுப்பதாக சபதம் செய்து அதன் அரசியல் தலைவரை குறிவைத்து காஸாவில் தாக்குதல் நடத்தினார். ஆனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகளாக ஹமாஸின் ஆட்சிக்கு சாட்சியாக இருந்த காஸா முற்றிலும் மாறும் என்று நம்பப்படுகிறது. இஸ்ரேலிய ராணுவ வானொலியுடன் தொடர்புடைய ராணுவ ஆய்வாளர் அமீர் பார் ஷாலோம் பேசியபோது, "இஸ்ரேல் ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களையும் அழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அதன் பின்னணியில் உள்ள சிந்தனை, மதரீதியாக ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய தாக்குதல் நிச்சயமாக இந்த அமைப்பை மிகவும் பலவீனப்படுத்தும். எப்பேற்பட்ட பணியையும் மேற்கொள்ளும் அதன் திறன் அழிக்கப்படும்," என்றார். இந்த நோக்கம் மிகவும் எதார்த்தமானது. இதுவரை, இஸ்ரேல் ஹமாஸுடன் நான்கு போர்களை நடத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஹமாஸை முற்றிலுமாக ஒடுக்குவதற்கான அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன. இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ், இந்தப் போரின் முடிவில் ஹமாஸிடம் "இஸ்ரேலிய குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்குப்" போதுமான ராணுவ பலம் இருக்காது என்று கூறியுள்ளார். தரைவழித் தாக்குதல் ஆபத்தானது காஸாவில் இஸ்ரேலின் "ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்" என்ற முழக்கம் வெற்றியடைவது பல காரணிகளைச் சார்ந்தது. இஸ்ரேல் தாக்கக்கூடும் என்பதை ஹமாஸ் அறிந்திருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் அதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்க வேண்டும். ஹமாஸ் பல்வேறு இடங்களில் வெடிமருந்துகளைப் புதைத்திருக்க வேண்டும், மேலும் எங்கு போரிடுவது என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும். அந்த அமைப்பு இஸ்ரேலிய ராணுவத்தைத் தாக்குவதற்கு காஸாவில் உள்ள தனது நிலத்தடி சுரங்க வலையமைப்பை முழுமையாகப் பயன்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2014ஆம் ஆண்டு காஸா நகரின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராணுவ டாங்கிகளை எதிர்க்கும் வகையில் கண்ணிவெடிகள், துப்பாக்கி சுடும் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஹமாஸுடன் நடந்த போர்களில் இஸ்ரேலின் காலாட்படை பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 11 லட்சம் பாலத்தீன குடிமக்களை 24 மணிநேரத்திற்குள் அப்பகுதியைக் காலி செய்து, தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் கூறியதற்கு இதுவொரு பெரிய காரணம். இந்தப் போர் பல மாதங்களுக்குத் தொடரலாம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதற்காக 3 லட்சத்து 60 ஆயிரம் ரிசர்வ் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், பின்வாங்குவதற்கான சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இஸ்ரேலால் எவ்வளவு காலம் தனது போரைத் தொடர முடியும் என்பதுதான் கேள்வி. அகதிகள் விவகாரங்களைக் கையாளும் ஐ.நா. அமைப்பு, காஸா "நரகத்தின் கிணறாக" மாறி வருவதாகக் கூறியுள்ளது. அங்கு இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடிநீர், மின்சாரம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது காஸாவின் கிட்டத்தட்ட பாதி மக்களை அந்தப் பகுதியை காலி செய்யும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை விவகாரங்களை உள்ளடக்கிய பிரபல இஸ்ரேலிய பத்திரிகையாளரான யோஸ்ஸி மெல்மான் பேசியபோது, "இஸ்ரேலிய ராணுவமும் அரசாங்கமும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை, குறைந்தபட்சம் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கருதுகின்றன. இப்போது அவர்களின் கொள்கை இதுதான். நம்மிடம் போதுமான நேரம் இருப்பதால் ஒன்றாக இணைவோம் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது," என்றார். எது எப்படி என்றாலும், மக்கள் பசியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் இஸ்ரேலின் நட்பு நாடுகளும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலை ஏற்படும் என்று அவர் நம்புகிறார். பட மூலாதாரம்,SAID KHATIB/AFP படக்குறிப்பு, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாகப் பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். பணயக் கைதிகளை மீட்பது கடினமான பணி சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் பணயக் கைதிகளாகப் பிடித்த 150 பேரில் இஸ்ரேலிய குடிமக்கள் மட்டும் இல்லை, ஏராளமான வெளிநாட்டு குடிமக்களும் உள்ளனர். இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் பலர் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பல நாடுகளின் அரசுகள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன், "பிரான்ஸ் தனது குடிமக்களை பாதுகாப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை," என்று நாட்டில் வசிக்கும் பிரெஞ்சு-இஸ்ரேலிய குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார். ஹமாஸுடன் பணயக் கைதிகள் இருப்பது இஸ்ரேலின் முழு நடவடிக்கையிலும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனுடன், இஸ்ரேலுக்குள் கூட இது தொடர்பாக அரசாங்கத்தின் மீது நிறைய அழுத்தங்கள் உள்ளன. அமீர் பார் ஷாலோம் தற்போதைய சூழ்நிலையை 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்பட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடுகிறார். 1972இல், பாலத்தீன துப்பாக்கி ஏந்திய குழுவினர் இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்து 11 பேரைக் கொன்றனர். அந்த நேரத்தில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிக் கொல்லும் நடவடிக்கையை அரசு தொடங்கியிருந்தது. இம்முறையும் அரசாங்கம் இதேபோன்ற ஒன்றைச் செய்ய விரும்புவதாக அவர் நம்புகிறார். இஸ்ரேலிய குடிமக்களைக் கடத்திய ஹமாஸை கண்டுபிடிக்க அரசு விரும்புகிறது. பட மூலாதாரம்,ATEF SAFADI/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள ஹமாஸ் ஆயத்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. காஸாவின் வெவ்வேறு இடங்களில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது இஸ்ரேலின் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சயரெட் மட்கல் படையினருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பணயக் கைதிகளைக் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் ஏற்கெனவே மிரட்டியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஹமாஸின் பிடியிலிருந்து கிலாட் ஷாலித் என்ற வீரரை விடுவிக்க இஸ்ரேல் ஆயிரம் பாலத்தீன கைதிகளை விடுவித்தது. ஹமாஸ் ஐந்து ஆண்டுகளாக கிலாட்டை பணயக் கைதிகளாக வைத்திருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டும். 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனர்களில் யாஹ்யா சின்வார் ஒருவர். சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகியிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியாது. மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளும் இந்தப் போரைக் கண்காணித்து வருகின்றன இஸ்ரேல் மேற்கொள்ளும் தரைவழித் தாக்குதலின் வெற்றி, அதன் அண்டை நாடுகள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். இஸ்ரேல் அரசு எகிப்தில் இருந்து முக்கியப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். எகிப்தின் வடக்கு எல்லை காஸாவின் தெற்குப் பகுதியை ஒட்டியுள்ளது. காஸாவிற்குள் இருக்கும் மக்களுக்கு ரஃபா எல்லைக் கடப்பு வழியாக உதவி வழங்க எகிப்து காஸா மீது அழுத்தம் கொடுக்க முடியும். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் ஒஃபிர் விண்டர் இது குறித்துப் பேசியபோது, "இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை முன்னேறினால், காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது ஏராளமான மக்கள் எகிப்து நாட்டுக்கு அகதிகளாகச் செல்லக்கூடும். அதனால், போரிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். பட மூலாதாரம்,AHMED ZAKOT/SOPA IMAGES/LIGHTROCKET படக்குறிப்பு, கடந்த 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனரான யாஹ்யா சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். காஸாவிலிருந்து வெளியேறும் ஏராளமான மக்களுக்கு இடமளிக்க எகிப்து தனது எல்லைகளைத் திறக்க வேண்டும் என்று ஒஃபிர் விண்டர் கூறுகிறார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் தரப்பில் இருந்து அழுத்தம் அதிகரிக்கலாம். லெபனானை ஒட்டியுள்ள இஸ்ரேலின் வடக்கு எல்லையின் மீதும் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கிறது. லெபனானில் இருக்கும் ஆயுதமேந்திய தாக்குதல் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் இந்தப் பகுதி இஸ்ரேலுக்கு புதிய போர்க்களமாக மாறவில்லை. ஹிஸ்புல்லாவின் பிரதான ஆதரவாளரான இரான் ஏற்கெனவே இஸ்ரேலுக்கு எதிராக ஒரு "கூட்டணியைத்" தொடங்குவதாக அச்சுறுத்தியுள்ளது. தற்போதைய பதற்றத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, அவர் இரான் மற்றும் ஹிஸ்புல்லாவை பற்றித் தான் குறிப்பிட்டார். "எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் மற்றும் எந்தவொரு நபரும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தால், அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது - அதைச் செய்யாதீர்கள்" என்று ஜோ பைடன் கூறியிருந்தார். தனது செய்தியின் தீவிரத்தைக் காட்ட, அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA படக்குறிப்பு, தாக்குதல் தீவிரமடைந்தால் பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறும் ஆபத்து நிலவுகிறது. காஸாவுக்கான இஸ்ரேலின் இறுதி நடவடிக்கை என்ன? இந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் ஹமாஸை இஸ்ரேல் முழுமையாக பலவீனப்படுத்தினாலும், காஸாவில் அதன் இடத்தைப் பிடிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. இஸ்ரேல் 2005இல், தனது ராணுவத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை காஸாவில் குடியேற்றியது. மீண்டும் ஒருமுறை இந்தப் பகுதியில் குடியேற்றத்தை ஏற்படுத்தி தன்னை ஆக்கிரமிப்பாளராகக் காட்ட விரும்பாது. கடந்த 2007ஆம் ஆண்டு அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பாலத்தீன அதிகார அமைப்பு, மீண்டும் காஸா பகுதிக்குள் உருவாகும் சாத்தியம் இருப்பதாக ஒஃபில் விண்டர் நம்புகிறார். பாலத்தீன அதிகார அமைப்பு ஒரு கிளர்ச்சி அமைப்பு அல்ல. தற்போது மேற்குக் கரைப் பகுதியை அந்த அமைப்புதான் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பு மீண்டும் அதிகார பலம் பெறுவதை எகிப்து அரசும் வரவேற்கும் என அவர் நம்புகிறார். இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட காஸா உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது சவால் நிறைந்த ஒரு பணியாகவே இருக்கும். ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பே, இஸ்ரேல் அரசு காஸாவிற்கு "இரட்டை உபயோகப் பொருட்கள்" செல்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இவை ராணுவம், பொதுமக்கள் என இருதரப்பும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாகும். இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இஸ்ரேல் விரும்புகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, இஸ்ரேல்-காஸா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் இருந்து குடியிருப்புப் பகுதிகள் பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புகிறது. இதற்கு முன்பும் இஸ்ரேலில் இதுபோன்ற அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட்டின் முன்னாள் தலைவரான யோரம் கோஹென், தற்போதைய பாதுகாப்பு மண்டலத்தை குறைந்தது இரண்டு கிலோமீட்டர் (1.25 மைல்கள்) தொலைவுக்கு "கண்டவுடன் கூடும்" பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று நம்புகிறார். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலின் விளைவு எதுவாக இருந்தாலும், அதன் மூலம் இஸ்ரேல் தனது மூல நோக்கத்தை அடைய விரும்புகிறது. எதிர்காலத்தில் தன் மீது இதுபோன்ற தாக்குதல் நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவே இஸ்ரேல் விரும்புகிறது. https://www.bbc.com/tamil/articles/c25qe780xleo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் விரைந்தது இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படையின்யு.எஸ்.எஸ். ஐசனோவர் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்து செல்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்புக்காக 2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த சூழலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். சில வீரர்கள் காயமடைந்தனர். வடக்கு எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் கூறும்போது, “வடக்கு காசாபகுதியில் பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்துதாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மிகப்பெரும் சவாலை சந்திக்க நேரிடும். நாங்கள் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படை சார்பில் யுஎஸ்எஸ் போர்டு போர்க்கப்பல் ஏற்கெனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது. தற்போது ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஐசனோவர் போர்க்கப்பலும் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது. https://thinakkural.lk/article/277229
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பற்றி எரியும் காசா! உக்கிரமடையும் இஸ்ரேலின் இராணுவ வியூகங்கள் முதலாவதாகவே ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அதிர்ச்சிகரமான தாக்குதலை கொடுத்துவிட்டார்கள். அந்த தாக்குதலில் இரண்டு நிலைமைகள் தீவிரமானது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார். இதனால் இஸ்ரேலின் பாதுகாப்பு வலயம் உடைந்தது என்றும் அவர் கூறினார்.