Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 5 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் மாயமாகினர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். அமெரிக்கர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. https://thinakkural.lk/article/276705
  2. பிரேத அறைகளாக மாறும் காசாவின் மருத்துவமனைகள் Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 01:38 PM காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக மாறுகின்றன என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசாவின் ஒரேயொரு மின்நிலையமும் செயல் இழந்துள்ளது . இதன் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் செயற்படுகின்றன. மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு புதிதாக எரிபொருள் தேவை காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேலே வழங்கிவந்தது எனினும் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து மின்சாரவிநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது. வன்முறை அதிகரிப்பால் ஏற்படும் மனித துயரங்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளன என தெரிவித்துள்ள மத்திய கிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பிராந்திய இயக்குநர் பப்ரிசியோ கார்போனி பொதுமக்களின் துயரங்களை குறைக்குமாறு நான் சம்மந்தப்பட்ட தரப்பினை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். காசா மின்சாரத்தை இழப்பதால் மருத்துவமனைகள் மின்சாரத்தை இழக்கின்றன புதிதாக பிறந்த குழந்தைகளும் முதியவர்களும் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166707
  3. ‘ஹமாஸின் சுரங்கப் பாதைகளைக் குறிவைக்கிறோம்’ – இஸ்ரேல் ராணுவம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தெற்கு காசாவிலிருக்கும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் உருவான பள்ளம் 10 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதையடுத்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கினறனர். இந்நிலையில், தற்போது தாங்கள் ஹமாஸ் அமைப்பின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹமாஸ் குழுவால் அமைக்கப்பட்டசுரங்கப்பாதைகள் இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்தச் நிலத்தடிச் சுரங்கங்களின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “20 வருடங்கள் முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்தச் நிலத்தடிச் சுரங்கப் பாதைகளை அமைத்தனர்,” என்றார் அவர். மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி, ஒன்று தரைக்குமேல் பொதுமக்களுக்கானது, மற்றொன்று நலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது, என்றார். “ஹமாஸின் அந்த நிலத்தடிச் சுரங்கங்களைத் தாக்குவதற்காகத்தான் முயற்சி செய்கிறோம்,” என்றார் கான்ரிகஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசா மீது 6 நாட்களாக குண்டுமழை பொழிந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம் ‘பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை மின்சாரம் தண்ணீர் இல்லை’ வியாழனன்று, இஸ்ரேலின் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹமாஸ் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரமோ தண்ணீரோ, எரிபொருளோ வழங்கப்படமாட்டாது என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். லெபனான் மீதும் தாக்குதல் முன்னர், காசா மீது 5 நாட்களாக குண்டுமழை பொழிந்துவந்த இஸ்ரேல் ராணுவம், திடீரென அண்டை நாடான லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்திற்குச் சொந்தமான கண்காணிப்புச் சாவடியை தங்களது போர் விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் அரிதான தொலைபேசி அழைப்பு - முகமது பின் சல்மானுடன் இரான் அதிபர் பேசியது என்ன? இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானும் இஸ்ரேல்-காசா மோதல் குறித்து புதன்கிழமையன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக தெஹ்ரானில் உள்ள அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகால விரோதப் போக்கிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சீனா பேச்சுவார்த்தை நடத்திய பிறகான முதல் தொலைபேசி அழைப்பு இதுவாகும். ரைசியும் முகமது பின் சல்மானும் "பாலத்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று விவாதித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சௌதி பட்டத்து இளவரசர் "அனைத்து சர்வதேச, பிராந்திய கட்சிகளுடனும் தொடர்புகொள்வதில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும்" செய்து வருவதாக சவுதி அரச செய்தி நிறுவனமான எஸ்பிஏ தெரிவித்துள்ளது. எந்த வகையிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சௌதி அரேபியா ஏற்காது என்பது பட்டத்து இளவரசர் மீண்டும் வலியுறுத்தியதாக எஸ்.பி.ஏ. தெரிவித்துள்ளது. காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தம் காசாவில் புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் காசாவின் எல்லையில் குவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இதுவரை வான் வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் விரைவில் காசா பகுதியில் தரை வழியாகத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது. ஆயுதமேந்திய வீரர்கள், காலாட்படை வீரர்கள், பீரங்கிப் படைகள் ஆகியோர் தவிர சுமார் 3 லட்சம் ரிசர்வ் படைகளும் காஸா எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. முன்னதாக சிரியாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. இதேபோல் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளது. விமானங்களை கண்காணிப்பதற்காக ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தி வந்த இடத்தை தாக்கி அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. சண்டையில் இதுவரை இஸ்ரேலிய தரப்பில் 1,200 பேரும் காசாவில் 1100 பேரும் உயிரிழந்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cmlrvevweezo
  4. இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நிரம்பி வழியும் காசா மருத்துவமனை காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் இராணுவம். இந்த நிலையில், காசா மருத்துவமனைகளில் 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேதம் என தகவல் வெளியாகி உள்ளது. https://thinakkural.lk/article/276584
  5. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள், ஹமாஸ் பயங்கரவாதிகள் உடல்கள்: சிதைந்து போன எல்லையோர இஸ்ரேல் கிராமம் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர். காசா எல்லையில் இருந்து சில நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் இருக்கும் இஸ்ரேல் கிராமம் க்ஃபர் அஜா. சுமார் 700 பேர் கொண்ட இந்த கிராமம், பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பள்ளிக்கூடம், தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது. கடந்து சனிக்கிழமை இந்த கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன. இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெருக்களில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் ஒரு செழிப்பான கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் இரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/276574
  6. அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேல் வந்தடைந்தது ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது. இந்த போர் நேரத்தில் இருநாட்டு இராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/276548
  7. காசா பல்கலைகழகத்தை குண்டுவீசி அழித்தது இஸ்ரேலின் விமானப்படை Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 03:38 PM காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தி;ன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதை இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது. காசா பல்கலைகழகம் தனது தாக்குதலில் அழிக்கப்பட்டதை டுவிட்டரில் இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது. ஹமாஸ் பொறியியலாளர்களிற்கு பயிற்சி வழங்கும் முக்கிய நிலையமாக காணப்பட்டதால் அதனை குண்டுவீசி அழித்துள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. இங்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166640
  8. இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை - ஆராய்கின்றது அமெரிக்கா Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 10:05 AM காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழி பாதை குறித்து அமெரிக்கா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆராய்ந்துவருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்தும் காசாமீது தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா அங்கு சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் இதனை தெரிவித்துள்ளார். அமைப்புகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 4600 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. காசாவிலிருந்து சுமார் 260.000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளன. 2014 இல் 50 நாள் மோதல்களின் பின்னர் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்கள் இடம்பெயர்ந்தது இதுவே முதல்தடவை என ஐநா தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. காசாவில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். குண்டுவீச்சில் 1000த்திற்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166600
  9. இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல் - பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்? பட மூலாதாரம்,REUTERS/AMIR COHEN 12 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு விதித்த கெடு முடிவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. காசாவை ஒட்டியுள்ள அஷ்கெலான் என்ற நகரை நோக்கி ஹமாஸ் குழுவினர் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால், இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் குழுவினர் திடீரென சுமார் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் சென்றுவிட்டனர். இதனால் நிலைகுலைந்து போன இஸ்ரேல் உடனே சுதாரித்துக் கொண்டு, அடுத்த சில மணி நேரத்தில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டது. அதுமுதற்கொண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்குள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயுதம் தாங்கிய நபர்களையும் முறியடிக்க இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக, காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலான் நகரை மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்தது. ஆகவே, அந்நகர மக்கள் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கெடு விதித்தது. டெலிகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "காசா கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரின் குடியிருப்பாளர்கள் மாலை 5 மணிக்குள் (இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 மணி) வெளியேற வேண்டும்" என்று எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்ததையும் ஹமாஸ் நினைவுகூர்ந்தது. கெடு தாண்டியதும் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே, ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது. காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. கண்ணாடி சிதைவுகள் பட்டதால் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பட மூலாதாரம்,ATEF SAFADI/EPA-EFE/REX/SHUTTERSTOCK காசாவில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல் அஷ்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஜக்காரியா அபு மும்மர், ஜாவத் அபு ஷாமல் ஆகிய 2 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஹமாஸில் அதிகாரம் வாய்ந்த அரசியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இருதரப்பிலும் பலி 2,000ஐ நெருங்குகிறது அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 870-ஆக உயர்ந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை முதல் குறைந்தது 1,008 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிட்ட இத்தூதரகம், 3,418க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாலத்தீனர்களுக்கு பாதையை மூடிய எகிப்து இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக ரஃபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா பாதை தான் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறும் ஒரே வழி. இப்பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக எகிப்து தற்போது இந்தக் பாதையை மூடியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பாதை திறந்திருந்தாலும், அதனை கடந்து செல்ல நீண்ட காத்திருப்போர் பட்டில் இருக்கிறது. அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே அந்த பாதையை கடந்து செல்ல முடியும். இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி ஓடும் பாலத்தீனர்கள் அங்கிருந்து வெளியேறும் ஒரே வழியும் அடைபட்டிருப்பதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர். இஸ்ரேலிய பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்-? ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், சனிக்கிழமை இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 100 முதல் 150 பேர் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம், கடத்தப்பட்டவர்களின் 50 குடும்பங்களுடன் பேசியுள்ளதாகவும், இராணுவம் தகவல்களை உறுதிசெய்யும்போது மேலும் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களைத் தொடங்கினால் கடத்தப்பட்டவர்களைக் கொன்றுவிடுவோம் என்று நேற்று இரவு ஹமாஸ் அமைப்பு மிரட்டியது. சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் கூறியது. ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா, சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளார். "எதிரி நாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எங்களைத் தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினரிடமும் இந்த கோப்பு போர் முடிவதற்கு முன்னர் திறக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளோம்" என்று அவர் கூறினார். மேலும், "மற்றும் அது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விலையில் மட்டுமே இருக்கும்." என்றார். இஸ்ரேல் சனிக்கிழமை தெற்கு இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட 100 முதல் 150 பேர் வரை ஹமாஸ் வசம் உள்ளதாக மதிப்பிடுகிறது. பட மூலாதாரம்,TWITTER பணயக் கைதிகளை விடுவிக்க ரகசிய பேச்சுவார்த்தையா? இரு தரப்புமே பணயக் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறினாலும், கத்தார் மத்தியஸ்தத்தின் பேரில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் வசம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினரை விடுவிக்க இஸ்ரேல் கோரியிருப்பதாக தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு குடிமக்கள் 30 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படும் இஸ்லாமிய ஜிஹாத் குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/cmlrvevweezo
  10. இஸ்ரேலின் பேர்ள் ஹாபர் தருணம்? ஏன் இஸ்ரேலின் அதிநவீன எல்லை பாதுகாப்பினால் சனிக்கிழமை தாக்குதலை தடுக்க முடியவில்லை? Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 02:41 PM சிஎன்என் துப்பாக்கிதாரிகள் வான் மூலமும் கடல்வழியாகவும் வான்வெளி மூலமாகவும் வந்தார்கள் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் பணயக்கைதிகளாக பொதுமக்களை பிடித்துச்சென்றார்கள் மக்களின் உயிருக்கு அஞ்சி வீடுகளிற்குள் முடங்கிஇருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தினார்கள். வான்வெளி பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகளுடன் உதயமான அன்றயை தினம் மதியத்திற்குள் இஸ்ரேல் தனது 75 வருட வரலாற்றில் மோசமான நாளை எதிர்கொண்டது. வறுமையில் சிக்குண்டுள்ள மக்கள் கடும் நெருக்கமாக வாழும் காஜா பள்ளத்தாக்கை சேர்ந்த ஹமாஸ் குழுவை சேர்ந்தவர்கள் அன்றிரவிற்குள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து பல நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திவிட்டனர். இஸ்ரேலிற்கு பயங்கரவாத தாக்குதல் புதிய விடயம் என்ற போதிலும் சனிக்கிழமை தாக்குதல் முன்னொருபோதும் இல்லாதது, முன்னெச்சரிக்கை இல்லாதது மாத்திரம் இதற்கு காரணமல்ல - இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலால் பெரும் ஆச்சரியத்தில் அதிர்ச்சியில் சிக்கவேண்டி வந்ததும் முக்கியமான விடயம். பல தசாப்தங்களில் இஸ்ரேல் தொழில்நுட்ப சக்தியாக மாறியுள்ள போதிலும் மிகவும்திறமையான ஆயுதப்படைகள் உலகின் முன்னணி புலனாய்வு பிரிவு போன்றவற்றை கொண்டுள்ள போதிலும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் பெருமளவு கேள்விகளை எதிர்கொள்கின்றனர். 17 வருடங்களிற்கு பின்னர் இஸ்ரேலிற்குள் இடம்பெற்ற தாக்குதலில் போர்வீரர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர், தனது முகாம்களிற்குள் நகரங்களிற்குள் இவ்வாறான ஊருடுவல்களை இஸ்ரேல் எதிர்கொண்டது இல்லை. 1948 சுதந்திரத்திற்கான போரின் போது கிப்புட்டிஜம் என்ற நகரத்திற்குள் ஊடுருவல் இடம்பெற்றது. உலகின் மிகவும் வறுமையான பகுதியை சேர்ந்த பயங்கரவாதிகளால் இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள முடியும்? முழு அமைப்பு முறையும் தோல்வியடைந்தது தனியாக ஒன்று மாத்திரம் இல்லை முழுப்பாதுகாப்பு அமைப்பும் தோல்வியடைந்துள்ளது. இஸ்ரேலின் முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அதன் பொதுமக்களிற்கு பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது என இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சர்வதேச பேச்சாளர் ஜொனதன் கொனரிகஸ் தெரிவித்துள்ளார். இது இஸ்ரேலிற்கான பேர்ள் கார்பர் துறைமுக தருணம் என குறிப்பிட்டுள்ள அவர் நேற்றுவரை யதார்த்தம் காணப்பட்டதா இன்று முதல் காணப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். சனிக்கிழமை சம்பவங்கள் மற்றும் புலனாய்வு தோல்விகள் குறித்த கேள்விகளை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் தவிர்த்துவருகின்றது. இஸ்ரேல் தற்போது பொதுமக்களை பாதுகாப்பதிலும் தற்போதைய மோதல்களிலுமே ஈடுபட்டுள்ளது என இராணுவ பேச்சாளர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். பின்னர் புலனாய்வு தகவல்கள் விடயத்தில் என்ன நடைபெற்றது என்பதை பேசுவோம் என அவர் தெரிவித்துள்ளார். போதியளவு பாதுகாக்கப்படவில்லை. இந்த தாக்குதல் இன்னுமொரு எதிர்பாராத மோதலின் 50 வருடத்தன்று இடம்பெற்றுள்ளது. 1973ம் ஆண்டு அராபிய கூட்டணி நாடுகள் இஸ்ரேலிற்கு எதிராக யொம் கிப்பூர் தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டிருந்தன- யொம் கிப்பூர் என்பது யூதர்களின் முக்கியமான தினங்களில் ஒன்று. எனினும் அந்த தாக்குதல்கள் இஸ்ரேலிற்கு ஆச்சரியமளித்துள்ளன என முன்னாள் பிரதமர் நவ்டலி பெனெட் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். இராணுவ வரலாற்றில் எப்போதும் பெரிய ஆச்சரியங்கள் உள்ளன - பேர்ள் ஹாபர் பார்பரோசா யொம்கிப்பூர் யுத்தம் என தெரிவித்துள்ள அவர் புலனாய்வுகள் ஒரு அளவிற்குதான் துல்லியமாக செயற்படமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். 2005 இல் காசாவிலிருந்து விலகியதிலிருந்து தனது எல்லையை பாதுகாக்க அது மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளது ,காசாவிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளும் எந்த ஆயுதத்தையும் தாக்கிவந்துள்ள இஸ்ரேல் பயங்கரவாதிகள் வான்வெளி ஊடாகவோ அல்லது சுரங்கப்பாதை ஊடாகவோ தனது பகுதிக்குள் வருவதை தடுத்துவந்துள்ளது. ரொக்கட் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஐயன்டொம் என அழைக்கப்படும் வலுவான ரொக்கட் பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்கியுள்ளது ,இது அமெரிக்காவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் சென்சர்கள் மற்றும் நிலத்தடி சுவர்களுடன் கூடிய எல்லையை உருவாக்கியுள்ளது. சனிக்கிழமை இந்த அமைப்புமுறைகள் எங்கு தோல்வியடைந்தன என்பதை இஸ்ரேல் ஆராயும் ஹமாஸ் 2000க்கும் மேற்பட்ட ரொக்கட்களை ஏவியது என தெரிவித்துள்ள இஸ்ரேல் அவற்றில் எத்தனை இடைமறிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. எல்லை வேலிகள் குறித்தும் இஸ்ரேல் கருத்துக்கூறவில்லை. காசாவிற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சமூகங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சுவார்த்தை அதிகாரி அரோன் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இதனை எதிர்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166466
  11. என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின - ஹமாஸ் தாக்குதலில் சிக்கிய பெண் Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 04:52 PM என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின என ஹமாசின் தாக்குதலில் சிக்குண்டு உயிர்தப்பிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். ஹமாசின் தாக்குதலில் சிக்குண்ட பெண்ணொருவர் தனது 24 வயது மகன் எலியன் கடத்தப்பட்டுள்ளார் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். அந்த தருணத்திலிருந்து உண்பதும் உறங்குவதும்; கடினமாக உள்ளது அவர் எங்கிருக்கின்றார் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையிலேயே நான் எப்போதும் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்தவேளை இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரில் அவரது மகனும் ஒருவர் . சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 270 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. உடல்கள் என்மீது விழுந்தன உடல்களே என்னை காப்பாற்றின துப்பாக்கிபிரயோகத்திலிருந்து அவை என்னை காப்பாற்றின என அந்த பெண் தெரிவித்துள்ளார். நானும் மகனும் ஒருவரையொருவர் இருக்கமாக பிடித்துக்கொண்டு நின்றோம் தீடிரென ஒருவர் மகனை இழுத்துச்சென்றார் நான் அவனை இழந்தேன் என அபுட் என்ற பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166576
  12. காசா எல்லையை மீள கைப்பற்றியுள்ளோம் - இஸ்ரேல் இராணுவம் 10 OCT, 2023 | 12:04 PM காசாவில் உள்ள தனது எல்லைகளை மீள கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று எல்லை ஊடாக ஊடுருவல் எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட எல்லைபகுதிகளில் கண்ணிவெடிகளை புதைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் உறுப்பினர்களின் 1500 உடல்கள் காணப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166539
  13. இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் - ஈரானின் ஆன்மீக தலைவர் Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 02:22 PM இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என ஆன்மீக தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரானிற்கு தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார். எனினும் சியோனிச ஆட்சியாளர்களிற்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என அவர் தெரிவித்தார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166555
  14. 'என் மனைவியையும் குழந்தைகளையும் ஹமாஸ் பிடித்துச் சென்றுவிட்டனர்’ பட மூலாதாரம்,YONI ASHER படக்குறிப்பு, யோனி ஆஷரின் மனைவி டோரன் (மத்தி) மற்றும் மகள்கள் அவிவ் (இடது) மற்றும் ராஸ் (வலது) ஆகியோர் ஒரு டிரக்கில் ஏற்றப்படும் வீடியோ வெளியானது 27 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) தாக்குதல் நடத்தி சுமார் 100 மக்களைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றிருக்கும் நிலையில், அவர்களில் தங்கள் அன்புக்குரியவர்களும் இருக்கலாம் என்பதை அறிந்து குடும்பங்கள் பெரும் பீதி அடைந்திருக்கின்றனர். வெளிநாட்டு பிரஜைகள் உட்பட பல டஜன் மக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. அவர்களின் சில கதைகள் இங்கே. ‘அந்த வீடியோவில் என் குடும்பத்தினர் இருந்தனர்’ யோனி ஆஷர், தனது மனைவியின் கைபேசியை டிராக் செய்ததன் மூலம் அவரது குடும்பத்தினர் காஸாவில் இருப்பதைக் கண்டறிந்தார். ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியபோது அவரது மனைவி டோரன் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ராஸ் (5) மற்றும் அவிவ் (3) காசா எல்லைக்கு அருகில் உறவினர்களுடன் தங்கியிருந்தனர். யோனி பிபிசியிடம் பேசுகையில், "சனிக்கிழமை, காலை 10:30 மணியளவில், நான் என் மனைவியுடன் கடைசியாகத் தொலைபேசியில் பேசினேன். ஹமாஸ் குழுவினர் வீட்டிற்குள் நுழைந்ததாக அவர் என்னிடம் கூறினார்,” என்றார். "அவர்கள் பாதுகாப்பான ஒரு அறையில் இருந்தனர். பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின், நான் அவரது மொபைல் ஃபோன் இருந்த இடத்தை டிராக் செய்தேன். அது காசாவிற்குள் இருந்தது," என்றார். அதே நாளின் பிற்பகுதியில் வெளியான ஒரு வீடியோவில், ஹமாஸ் குழுவினர் ஒரு டிரக்கில் ஆட்களை ஏற்றிச் செல்லும் காட்சிகளில், அவரது குடும்பத்தினரும் இருந்ததை அவர் அடையாளம் கண்டபோது, அவர் பயந்த விஷயம் உறுதிப்படுத்தப்பட்டது. "அந்த வீடியோவில் என் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், எனது இரண்டு குழந்தைகளை நான் அடையாளம் கண்டேன்," என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், “அவர்கள் எந்த நிபந்தனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது,” என்றார். இப்போதைக்கு, யோனி செய்யக்கூடியது நம்பிக்கையை இழக்காமல் இருப்பது மட்டுமே. "நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். இராஜதந்திரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அல்லது ஏதாவது தொடர்பு இருப்பதாக நான் நம்ப விரும்புகிறேன். ஆனால் எங்களுக்கு எதுவும் தெரியாது, அதுதான் கஷ்டமான விஷயம்," என்கிறார். பட மூலாதாரம்,IDO DAN படக்குறிப்பு, காணாமல் போன இடோவின் குடும்ப உறுப்பினர்களில் ஹடாஸின் இரு குழந்தைகளான எரேஸ் (இடது) மற்றும் சஹர் (வலது) ஆகியோர் அடங்குவர் ‘அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புகிறோம்’ இடோ டான், சனிக்கிழமை நடந்த பயங்கரமான நிகழ்வுகளை தனது குடும்பத்தின் வாட்ஸப் குழுவில் நேரடியாக அறிந்துகொண்டார். "வாட்ஸப் குழுவில் அவள் ‘குட்பை’ மெசேஜ் அனுப்பினாள். அவள் ஒரு இதயத்தின் எமோஜியை அனுப்பினாள். 'ஐ லவ் யூ. நான் இதிலிருந்து தப்பிப் பிழைப்பேனா என்று தெரியவில்லை’ என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்," என்று இடோ கூறுகிறார். அந்த வாட்ஸப் குறுஞ்செய்திகளைத் திரும்பிப் பார்த்தபடி அழுகிறார். காசாவிற்கு அடுத்துள்ள ஒரு சிறு காலனியான ‘நிர் ஓஸ்’ அனும் பகுதியில் வசிக்கும் அவரது அத்தை மகள் ஹடாஸ், விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்தபடி, அங்கு நடப்பவற்றைத் தனது குடும்பத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார். ராக்கெட் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததும் அவர் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். அதிகாலையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் அரபி மொழியில் சத்தம் போடுவது கேட்பதாகச் சொல்லியிருந்தார். ‘இங்கே நடப்பவற்றைப் பார்த்தால் பயமாக இருக்கிறது,’ என்று அவர் குடும்ப வாட்ஸப் குழுவில் கூறினார். “அவர்கள் அனைவரையும் கொல்வதாக அவள் கூறினாள்,” என்று இடோ கூறுகிறார். "பின்னர் 09:00 மணிக்கு அவளது இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடைய கைப்பேசியின் பேட்டரி தீர்ந்துவிட்டது," என்றார். அந்தத் தாக்குதலின்போது, தனது மறைவிடத்தில் ஒளிந்துகொண்டு ஹடாஸ் உயிர்தப்பினார். ஆனால், அன்றிரவு அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதை அறிந்தார். அவரது இரண்டு குழந்தைகள், அவரது முன்னாள் கணவர், அவரது சகோதரியின் மகள், மற்றும் அவரது 80 வயது தாயார். சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், ஹடாஸின் 12 வயது மகன் எரெஸ், துப்பாக்கி ஏந்தியவர்களால் காசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதுபோன்ற காட்சிகளைக் கொண்டிருந்தது. டெல் அவிவ் அருகே வசிக்கும் இடோ, "அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறோம்,” என்கிறார். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருக்கிறார். "என் அத்தையின் மருந்துகள் தீர்ந்துவிட்டன. குழந்தைகள் எப்படிக் கழிவறைக்குச் செல்கிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது," என்கிறார். இடோ தனது குடும்பத்தினர் பற்றிய தகவலைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளால் பெரிதாக உதவமுடியவில்லை. "நான் யாரையும் குறை கூறவில்லை, ஏனெனில் இது உண்மையில் ஒரு சிக்கலான சூழ்நிலை" என்கிறார் இடோ. இடோ ஹமாஸுக்கு ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறார்: "குழந்தைகளையும், வயதானவர்களையும் விடுவியுங்கள். இந்த மோதல் அவர்களுக்கானது அல்ல. போரில்கூட விதிகளும் நெறிமுறைகளும் உள்ளன."  பட மூலாதாரம்,NOAM SAGI ‘ஒரு திகில் படம் போல இருந்தது' காசாவின் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள தனது 74 வயதான தனது தாயாரின் அடா சாகியின் வீட்டிற்கு முன்பாக இருந்து பாலத்தீனிய ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பத் தொடங்கியபோது தனது இதயம் நொறுங்கிப் போனதாகக் கூறினார் நோம் சாகி. சனிக்கிழமை பிற்பகல், இஸ்ரேலிய ராணுவம் அடா சாகியின் வீட்டுக்குள் நுழைந்த போது ரத்தக் கறைகளைக் கண்டது. ஆனால் அந்த வயதான பெண் அங்கு இல்லை என்று அவர் கூறுகிறார். பிபிசி ரேடியோ 4-இடம் லண்டனில் வசிக்கும் சாகி பேசினார். கடத்தப்பட்டவர்களில் அரபு மொழி கற்பிக்கும் அவரது தாயும் ஒருவர் என்பது அவரது அனுமானம் என்றார். “74 வயதான என் தாயார் ஒரு பாதுகாப்பான அறைக்குள் சென்றார். இப்போது, அவர் அங்கு இல்லை," என்றார் அவர். "இறந்தவர்களின் பட்டியலில் அவர் இல்லை, காயமடைந்தவர்களின் பட்டியலிலும் இல்லை. அது ஒரு சிறிய சமூகம். அதிகபட்சம் 350 பேர் தான். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்கிறார் அவர். முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன. சாகியின் கூற்றுப்படி, அவரது தாயார் எங்கிருக்கிறார் என்பது குறித்து முறையான அல்லது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை. "இது ஒரு திகில் படம் போல இருக்கிறது," என்கிறார் சாகி. மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் தனது தாயை நினத்துக் கவலைப்படுவதாக அவர் கூறுகிறார். தனது தாயை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையோடு இருக்கும் சாகி, அவரது 75-ஆவது பிறந்த நாளுக்காக அடுத்த வாரம் லண்டனில் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறினார். படக்குறிப்பு, லண்டனில் வசிக்கும் ஷரோன் லிஃப்ஷிட்ஸ், தனது வயதான பெற்றோர் காசாவிற்கு அருகில் உள்ள அடா சாகி வசித்த அதே பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார் 'இப்போது அங்கு எதுவும் மிச்சமில்லை' லண்டனில் வசிக்கும் ஷரோன் லிஃப்ஷிட்ஸ், தனது வயதான பெற்றோர் காசாவிற்கு அருகில் உள்ள அடா சாகி வசித்த அதே பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார். ஹமாஸ் குழுவினர் மக்களை பயமுறுத்துவதற்காக வீடுகளை எரித்ததாகவும் அவர் கூறுகிறார். “மக்கள் ஒரு பாதுகாப்பான அறையில் தஞ்சம் அடைய முயன்றனர்,” என்கிறார். "அந்த இடம் மொத்தமாக அழிந்து போயிருக்கிறது. எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை," என்கிறார். அடா சாகியைப் போலவே, லிஃப்ஷிட்ஸின் தந்தையும் அரபு மொழி பேசுபவர். தனது ஓய்வு நேரத்தில், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனியர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். "அவர் மனிதநேயத்தை நம்பினார். எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதை நம்பினார்," என்கிறார். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பிளவு இருப்பதை உறுதிப்படுத்த ‘நிறைய சக்திகள்’ முயற்சிப்பதாகவும், மற்றவரும் மனிதர்கள் தான் என்பதை இரு தரப்பினரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் லிஃப்ஷிட்ஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,SHANI LOUK'S INSTAGRAM படக்குறிப்பு, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக், காசா எல்லைக்கு அருகே நடந்த இசைத்திருவிழாவில் கலந்துகொண்டபோது சிறைபிடிக்கப்பட்டார் ‘வீடியோவில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருந்தார்’ ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக், காசா எல்லைக்கு அருகே நடந்த இசைத் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது ஹமாஸ் போராளிகள் அப்பகுதியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பயந்த மக்கள் பாலைவனத்தின் வழியாக ஓடினர். ஷானி சிறைபிடிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்த்ததாக அவரது தாயார் ரிக்கார்டா கூறுகிறார். "எங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டது. அதில் பாலத்தீனர்களுடன் ஒரு காரில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருப்பதையும், அந்தல் கார் காசா பகுதியில் பயணம் செய்வதையும் நான் பார்த்தேன்," என்று அவர் கூறினார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பலர், ஹமாஸ் போராளிகளால் தாக்கப்பட்ட காசா எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் பணிபுரியும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள். தாய்லாந்தின் 11 குடிமக்களைக் காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckre3dykpmpo
  15. நீண்டகால யுத்தத்திற்கு தயார் - இஸ்ரேல் இராணுவம் ஒரு காகித புலி - பணயக்கைதிகளை பயன்படுத்தி சிறையில் உள்ள எங்கள் உறுப்பினர்களை விடுதலை செய்ய முயல்வோம் - ஹமாஸ் Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 11:30 AM இஸ்ரேலுடன் நீண்ட யுத்தத்திற்கு தயார் என தெரிவித்துள்ள ஹமாஸ் தன்னுடன் பணயக்கைதிகளாக உள்ளவர்களை பயன்படுத்தி இஸ்ரேலிலும் வெளிநாடுகளிலும் சிறையில் உள்ள தனது அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அசோசியேட்டட் பிரசிற்கு கருத்து தெரிவித்துள்ள பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் உறுப்பினர் அலி பரேகே நீண்டகாலத்திற்கு பயன்படுத்தக்கூடிய அளவிற்கு எங்களிடம் ரொக்கட்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த யுத்ததிற்கும் எல்லா சூழ்நிலைகளைஎதிர்கொள்ளவும் எங்களை நன்றாக தயார்படுத்தியுள்ளோம், நீண்ட கால யுத்தத்திற்கும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய சிறையில் உள்ள அமெரிக்க சிறையில் உள்ள எங்கள் உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு தற்போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களை பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள முக்கிய தளபதிகள் சிலருக்கு மாத்திரம் இந்த தாக்குதல் குறித்து தெரிந்திருந்தது ஹமாசின் நெருங்கிய சகாக்களிற்கு கூட தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் ஈரானின் பாதுகாப்பு படையினர் தாக்குதலிற்கு உதவினார்கள் என தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளார். காசா மீது நீண்டகால யுத்தம் திணிக்கப்பட்டால் ஹமாசின் சகாக்களாக ஹெஸ்புல்லா, ஈரான் போன்றவர்கள் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்பது ஹமாசிற்கே ஆச்சரியமளித்துள்ளது என தெரிவித்துள்ள பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் உறுப்பினர் அலி பரேகே இஸ்ரேல் தாக்குதலை தடுக்கும் கட்டுப்படுத்தும் என எதிர்பார்த்தோம்; அவர்களின் பெரும் வீழ்ச்சி குறித்து நாங்களே பெரும் ஆச்சரியமடைந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிய வெற்றியை பெற்று பணயக்கைதிகளை பிடிக்க திட்டமிட்டிருநதோம் இந்த இராணுவம் ஒரு காகிதப்புலி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/166532
  16. தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை ! 10 OCT, 2023 | 11:23 AM உயிரிழந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்தார். இந்நிலையில், தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய முடியுமா என்பதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு, தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் பேராசிரியை அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவுக்கு நீதிவான் உத்தரவிட்டார் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (09) விசாரணைக்கு வந்தபோது உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உண்மைகளை முன்வைத்து, இறந்தவரின் உடலை தகனம் செய்வதே தனது தரப்பினரின் விருப்பமாக உள்ளதாகவும் அதற்காக நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார். https://www.virakesari.lk/article/166529
  17. எங்கள் பதில் நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் - இஸ்ரேலிய பிரதமர் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 09:26 PM மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாசின் தாக்குதலிற்கான இஸ்ரேலின் பதில்நடவடிக்கை மத்தியகிழக்கை மாற்றும் என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மிகமோசமான பயங்கரமான அனுபவங்களை எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166509
  18. இஸ்ரேலில் ஒரே இடத்தில் 260 பேர் கொன்று குவிப்பு - இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2023, 14:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த சில வாரங்களாகவே, யூதர்களின் பண்டிகையான சுக்கோட் உடன் இணைந்து தெற்கு இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடைபெறும் சூப்பர்நோவா இசை நிகழ்ச்சிக்காக பல இசைப் பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். "ஒரே குடும்பமாக ஒன்று சேர நேரம் வந்துவிட்டது," என்று இந்த நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் எழுதியிருந்தனர். அடுத்த சில மணிநேரங்களில் அந்த சமூக ஊடக பக்கம் முழுவதுமாக, தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் நபர்களின் பதிவுகளால் நிரம்பின. தெற்கு இஸ்ரேலின் பாலைவனப் பகுதியில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியின் போது, பாலத்தீன பகுதியிலிருந்து வந்த ஆயுதக்குழு, கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து 260க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்பு நிறுவனமான ஸாகா தெரிவித்துள்ளது. காணொளிக் குறிப்பு, Partygoers run as gunshots heard in Israel பட மூலாதாரம்,GETTY IMAGES "எதோ ஒரு தவறு நடந்ததற்கான அறிகுறியாக விடியற்காலையில் சைரன் ஒலி கேட்டது. அதைத்தொடர்ந்து ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டன. ராக்கெடுகளையடுத்து நாங்கள் இருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது," என தாக்குதலின் போது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஓர்டெல் தெரிவித்தார். "மின்சாரத்தை அவர்கள் துண்டித்தனர், எங்கிருந்தோ வந்த ஆயுதக்குழு திடீரென எல்லா திசைகளில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்," என்று அவர் இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சியிடம் கூறினார். "ராணுவ சீருடையணிந்த 50 பயங்கரவாதிகள் வேன்களில் வந்தனர்," என்று அவர் கூறினார். மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். மணல் பரப்பில் விரைவாக ஓடிச்சென்று கார்களில் ஏறி தப்பிக்க முயற்சி செய்த போது, ஜீப்களில் வந்த ஆயுதக்குழுவினர், கார்களை நோக்கி சுட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். நெகேவ் பாலைவனத்தில் நிகழ்ச்சி நடந்த மைதானம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அங்கு விழா மேடை, உணவு உண்ணும் இடம், பார், ஓய்வு எடுக்கும் இடம் என்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடம் காசாவிலிருந்து வெகுதொலைவில் அமைந்திருக்கவில்லை. அதனால் இருள் சூழ்ந்த பிறகு வேலிகளை தாண்டி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வந்துள்ளனர். அங்கிருந்த பல கிராமங்கள், நகரங்களில் ஊடுருவி பலரை பணயக்கைதிகளாக பிடித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஆடம் பரேல் ஹாரெட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், அப்பகுதியில் ராக்கெட் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். மற்றவர்களை போலவே தானும் காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை நோக்கி சுட்டதாக அவர் தெரிவித்தார். “பலரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். நான் அங்கு ஒளிந்து கொண்டேன். மற்றவர்கள் வேறு எங்கோ ஓடிவிட்டனர்,” என்று அவர் கூறினார். “என் காரை நான் ஓட்டிச்சென்றபோது எனது வாகனத்தை அவர்கள் இடித்தனர். அப்போது வேறு ஒரு காரில் சென்ற இளைஞன் என்னையும் வருமாறு அழைத்தான். அவனுடைய காரில் நான் ஏறினே. ஆனால் ஆயுதக்குழுவினர் அவனை துப்பாக்கி முனையில் சுட்டுக்கொன்றனர். நானும் இறந்தது போல நடித்தேன். கடைசியாக இஸ்ரேல் ராணுவம் வந்து என்னை மீட்டனர்,“ என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்தர் போரோச்சோவ் கூறினார். "என்னால் என் கால்களை அசைக்க முடியவில்லை. புதரில் இருந்த என்னை ராணுவ வீரர்கள் வந்து மீட்டர்," என்று அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். பல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்ற ஓர்டெல் போன்றவர்கள், அருகிலிருந்த புதர்களிலும், பழத்தோட்டங்களிலும் ராணுவம் வந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் பல மணிநேரமாக ஒளிந்திருந்தனர். "நான் என்னுடைய தொலைபேசியை மியூட் மோடில் வைத்தேன், பின்னர் ஒரு ஆரஞ்சு தோட்டம் வழியாக ஊர்ந்து சென்றேன். எனக்கு மேலே பயங்கரமாக ராக்கெட் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது." கிலி யோஸ்கோவிச், ஒரு பழத்தோட்டத்தில் எப்படி மறைந்திருந்தார் என்பதை பிபிசியிடம் விவரித்தார். "அவர்கள் ஒவ்வொரு மரமாகச் சென்று ஒழிந்திருந்தவர்களை சுட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் இறப்பதை நான் பார்த்தேன். நான் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தேன். நான் அழவும் இல்லை." இறுதியில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் வீரர்களின் குரலைக் கேட்ட பிறகு அவர்களை நோக்கி சென்றதாக கிலி கூறினார். பட மூலாதாரம்,SUPERNOVA MUSIC FESTIVAL காணொளிக் குறிப்பு, Destroyed cars line road near festival in chilling video இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவசர சிகிச்சை மருத்துவரான யானிவ் அவரது அனுபவங்களை கன் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். "இது ஒரு படுகொலை. என் வாழ்நாளில் இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை. இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். அவசரகால வழிகளில் பொதுமக்கள் வெளியேறும் போது வாயிலில் காத்திருந்த எதிரிகள், அவர்களை கடத்திச் சென்றனர்." இசை நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஜேக் மார்லோவ் (26), மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர். ஷானி கடத்தப்பட்டுள்ளதாக அவரது தாயார் நம்புகிறார். அதேபோல 25 வயதான நோவா அர்கமணியும் கடத்தப்பட்டுள்ளதாக அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கூறுகின்றனர். “8.30 மணிக்கு நோவாவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி கடைசியாக வந்தது. அதற்கு பிறகு அவர் சிறைபிடிக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அவளுடைய காதலனுடன் நோவா இருந்தபோது அவள் கடத்தி செல்லப்பட்டாள், “ என நோவாவின் நண்பரான அமிட் பிபிசியிடம் தெரிவித்தார். தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cje9l52245vo
  19. படைகள் குவிப்பு… இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் மூன்றாம் உலகப் போராகிறதா? இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இஸ்ரேல் வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனம் மீது குறிப்பாக காஸா மீது இஸ்ரேல் அரசு போர் பிரகடனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் வான் வழி தாக்குதல் ” இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம். காஸா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம்” என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ள ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட பெண் ஹமாஸ் படையினருக்கு லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா படையினர் உதவி வருவதும் அங்கிருந்தபடி அவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஏற்கெனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு, ஆதரவாக உலகிலேயே மிகப்பெரிய போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர்.போர்ட் போர் கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன. இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வியும், அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல், பாலஸ்தீனம், ஹமாஸ் , ஈரான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக இது நீடிக்குமா என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. அப்படி நடந்தால் இதில் ரஷ்யா, சீனா இணையலாம். ஏற்கெனவே உக்ரைன் – ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. அதனால் இந்த போரும் இணைந்து. இரண்டு போர்களும் சேர்ந்து இது மூன்றாம் உலகபோராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. https://thinakkural.lk/article/276244
  20. காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவு- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 03:49 PM காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார். மின்சாரம் இல்லை, உணவில்லை, எரிபொருள் இல்லை முழுமையாக காசாவை முற்றுகையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவின் வான்வெளியை கரையோர பகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டு செல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது. https://www.virakesari.lk/article/166476
  21. இஸ்ரேலிற்குள் இன்னமும் ஹமாஸ் - மோதல் இடம்பெறுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிப்பு Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 11:59 AM இஸ்ரேலிற்குள் இன்னமும் ஹமாஸ் போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள எட்டுபகுதிகளில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த மோதல்கள் காசா இஸ்ரேலிய எல்லையில் இடம்பெறுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பீஈரி என்ற விவசாய சமூகத்தினர் உள்ள பகுதிக்குள் ஹமாஸ் உறுப்பினர்கள் நுழைந்துள்ளனர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனினும் இன்னும் பலர் வீடுகளிற்குள் மறைந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் ஆயிரம் இலக்குகளை தாக்கியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது தற்பாதுகாப்பு நிலைக்கு திரும்புவதற்கு அதிக நேரம் எடுக்கின்றது என இஸ்ரேலிய இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166443
  22. படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். 15 நிமிடங்களுக்கு முன்னர் ‘பாலு சத்தம் கேட்கவில்லை, ஏன் சும்மா நிற்கிறீர்கள்’ என சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் சொல்ல, ‘நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை வித்தாவது வெளியில் வந்துவிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே அந்தக் காவல்நிலையத்தின் முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அடித்தார்" என்பது நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலம். இந்தக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக் காவலில் மரணமடைந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகின்றது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை முதலில் விசாரித்த அப்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், கடந்த 25 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். அவர் முதல் நாள் சாட்சியம் அளித்தபோது, சம்பவம் நடந்த ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்று தன் விசாரணையின் மூலம் அறிந்துகொண்டதை சாட்சியமாக அளித்தார். "ரத்தம் வடியவடிய அடித்த காவல்துறை" படக்குறிப்பு, அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட, பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார். தந்தை மகன் மரணத்திற்கு பிறகு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டபோது காவல்நிலையத்தில் இருந்த இரண்டு பெண் காவலர்கள், நீதித்துறை நடுவர் பாரதிதசானிடம் ஜூன் 19 தேதி இரவு முழுவதும் என்ன நடந்தது என்பதை கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் பாரதிதாசன் அளித்த சாட்சியில்,“அவர்(பெண் காவலர்) தனது வாக்குமூலத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இருவரையும் போலீசார் காவல்நிலைய மேஜையின் மீது படுக்க வைத்து ஒரு இரவு முழுவதும் லத்தியால் அடித்து இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கறைகளில் பெரும்பாலாவனை ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டதாகவும், லத்தி மற்றும் அந்த மேஜையினை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.” என்றார். அப்போது, ஏற்கனவே ரத்தக்கறைகள் மற்றும் முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்ட பாரதிதாசன், காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரது லத்திகளையும் கைப்பற்றியுள்ளார். “விசாரணையின் போது, காவலர் சாமதுரையிடம் அவரது லத்தியை கேட்டபோது, அவர் ஓடிச் சென்று காவல்நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த காரின் மீது ஏறி குதித்து இருட்டில் மறைந்துவிட்டார்,” என நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் பாரதிதாசன். காவல் நிலையத்தில் இருந்த பெரும்பாலான ரத்தக்கறைகள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது ரத்தக்கறைதான் என்றும் பாரதிதாசன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். “காவல் நிலையத்தில் காணப்பட்ட இரத்தக்கறைகளில் பெரும்பாலானவை சுவற்றின் கீழ்பகுதியில் காணப்பட்டது. அது காயமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பிட்டத்தில் இருந்த காயத்தின் உயரத்திற்கு ஒத்திசைவதாக அமைந்திருந்தது, என்றார் பாரதிதாசன். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சிறையில் எப்படி இருந்தார்கள்? படக்குறிப்பு, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர் ஜூன் 19 ஆம் தேதி இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், ஜூன் 20 ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் ஜெயராஜூம், பென்னிக்சும் நடக்கக்கூட முடியாமல் சிரமப்பட்டதாகவும், அவர்களின் பிட்டத்தில் இருந்து தண்ணீர் போல வடிந்துகொண்டே இருந்ததாக, அவருடன் இருந்த சிறைவாசிகள் நீதிமன்ற நடுவர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். “சிறையில் இருந்தபோது, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சுக்கும், பின்பக்கம் நிற்காமல் நீர் வடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் லேசான ஈரம் இருந்தது, மூன்றாம் நாள் தான் அதிகமாக நீர் வடிந்தது. சிறையில் அடைத்த முதல் இரண்டு நாட்கள் அவர்கள் கொஞ்சம் அருகில் இருந்த சுவரை பிடித்தும், கழிவறை சுவற்றை பிடித்தும் தான் நடக்க முடிந்தது. அனைத்து கைதிகளையும் மூன்று வேளை சாப்பிடும்போது வரிசையாக அமரச் சொல்லி எண்ணும்போது கூட பென்னிக்சாலும், அவரது அப்பாவாலும் தரையில் அமர முடியாமல் அருகில் உள்ள சுவற்றை பிடித்தபடியே நிற்பார்கள். மூன்றாவது நாள் பென்னிக்சால் கொஞ்சம் கூட நடக்க முடியாமலும், நிற்க முடியாமலும், படுக்க முடியாமலும், சாப்பிடும்போது கூட, இரண்டு கைகளையும் தரையில் ஊற்றி, இரண்டு கால் முட்டிகளையும் தரையில் முட்டி போட்டக் கொண்டும், மிகவும் சிரமப்பட்டு கொஞ்சமாக சாப்பிட்டு, மிச்சம் வைத்துவிடுவார்,” இவ்வாறு ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுடன் இருந்த சிறைவாசி ஒருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ‘அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான்?’ படக்குறிப்பு, கிடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் பென்னிக்சின் நண்பர் சங்கரலிங்கம். ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இறந்து மூன்றாண்டுகளானாலும், தங்களால் இன்றளவும் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை என்கிறார்கள் பென்னிக்சின் நண்பர்கள். “நாங்கள் இரண்டாம் வகுப்பிலிருந்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். வெவ்வேறு வேலைக்கு சென்றாலும், நாங்கள் தினமும் சந்தித்துக்கொள்வோம். இன்று அவன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதே ஊரு தான், இதே தெரு தான். நாங்க சேர்ந்து சுத்துன இடத்திற்கு இப்போது சென்றாலும், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அழுகை வரும். அந்த கடைத்தெருவை கடக்கும்போதெல்லாம் விவரிக்க முடியாத பதற்றமும், அழுத்தமும் ஏற்படுகிறது,”என்றார் சங்கரலிங்கம். கடைசியாக ஜெயராஜ் தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படி சொன்னதாகப் பகிர்ந்தார் சங்கரலிங்கம். “அம்மாவை பத்திரமாக பார்த்துக்கோடா, இதுதான் பென்னிக்ஸ் ஜெயிலுக்கு செல்லும் முன் கடைசியாக என்னிடம் சொன்னது. அவனுக்கு அம்மா என்றால் உயிர்,” என்றார் சங்கரலிங்கம். பென்னிக்சின் மற்றொரு நண்பரான ராஜ்குமார் கூறுகையில், பென்னிக்ஸ் தான் செய்த குற்றம் என்ன எனத் தெரியாமல் மிகவும் வேதனையடைந்ததாகக் கூறினார். “அவன் அப்படி என்ன தப்பு செஞ்சான் என்று தான் அவனுக்கு உறுத்திக்கிட்டே இருந்தது. எங்களுக்கும் அந்த ஒரு கேள்விதான் இப்போதும் இருக்கிறது. அவன் இரவு காவல்நிலையம் சென்றதில் இருந்து விடியும்வரை நாங்கள் வெளியே தான் இருந்தோம். அவனுக்கு பதிலாக நாங்கள் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு அடி வாங்கியிருந்தால் கூட, இந்நேரம் அவன் உயிருடன் இருந்திருப்பான்,” என்றார் ராஜ்குமார். ‘ஊருக்கு போகவே முடியலை; பயமாக இருக்கிறது’ படக்குறிப்பு, இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் நாங்கள் இத்தனை காலம்பட்ட கஷ்டங்களுக்க நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் பென்னிக்சின் மைத்துனர் வினோத். அந்த சம்பவத்திற்கு பிறகு தங்களுடைய சொந்த ஊருக்கே செல்ல பிடிக்கவில்லை என்கிறார் பென்னிக்சின் மைத்துனரான வினோத். “நான் பென்னிக்சின் தங்கையை திருமணம் செய்துள்ளேன். எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான். முன்பெல்லாம் எப்போது ஊருக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும், நல்ல நினைவுகள் இருக்கும். ஆனால், இப்போது ஊருக்கு செல்லும்போதெல்லாம், அந்த இருவரை இழந்தது மட்டும்தான் நினைவுக்கு வருகிறது,” என்றார். மேலும், பேசிய வினோத், “இப்போது வரை எந்த தரப்பில் இருந்தும் எந்த அழுத்தமும் வரவில்லை. ஆனால், இருந்தபோதும், அந்த சம்பவத்திற்கு பிறகு, எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியே தனியாக செல்வதற்கே பயப்படுகிறோம். மனைவியோ மற்ற உறவினர்களோ வெளியே சென்றால், அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார். இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் அவர்கள் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா எனத் தெரியும் என்றார் வினோத். ஆனால், இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்திருந்தால், இன்னும் பலர் இதுபோல பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள் என்கிறார் மற்றொரு மைதுனரான பொன்சேகர். “இப்போதும் ஊருக்கு சென்றால், இதே நினைவுகள் தான் உள்ளது. ஆனால், இந்த வழக்கை மட்டும் எப்படியாவது நடத்திவிடுங்கள் என்று தான் ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். நாங்களும் நீதி கேட்காமல், சென்றிருந்தால், பல பேர் இன்னும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என ஊர் மக்கள் எங்களிடத்தில் கூறுகிறார்கள்,” என்றார் பொன்சேகர். வழக்கின் நிலை என்ன? முதலில் தமிழ் நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின் சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட காவலர்களை கைது செய்தது. பின், இவ்வழக்கு மத்திய புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. “அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, தற்போது நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாட்சியம் அளித்து வருகிறார். அவருக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசாரும், தமிழ்நாடு போலீசாரும் சாட்சியம் அளிப்பார்கள். பின், வழக்கின் வாதம், பிரதிவாதங்கள் நடைபெறும்,” என்றார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ். இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, வழக்கு நடந்துகொண்டிருப்பதால் கருத்துக் கூற விரும்பவில்லை என்றனர். https://www.bbc.com/tamil/articles/clje3xll33zo
  23. போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக்கொள்கின்றது - ஹமாஸ் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 10:16 AM அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் ஆக்கிரமிப்பில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலை மத்தியகிழக்கிற்கு அமெரிக்கா அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என தெரிவித்துள்ள ஹமாஸ் இவ்வாறான நடவடிக்கைகள் எங்கள் மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர் போர்ட் அணுவாயுத கப்பல் ஏவுகணை கப்பல்கள் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கிற்கு புறப்பட்டுள்ளன. அமெரிக்கா மத்திய கிழக்கை நோக்கி தனது போர்விமானங்களையும் தயார்படுத்தியுள்ளது.ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்பார்த்தே அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/166429
  24. இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் தாக்குதல் Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 06:41 AM இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. இஸ்ரேலியின் பிரதான விமான நிலையமான பென்குரியன் விமானதளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வீடுகளை இலக்குவைத்தல் உட்பட ஏனைய குற்றங்களிற்காக இந்த தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நகரமான அஸ்கெலென் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166418

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.