Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. காசாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பெண் பணியாளர் இஸ்ரேலின் தாக்குதலில் குடும்பத்துடன் பலி Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 03:14 PM உலக சுகாதார பணியகம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் தனது பெண் பணியாளர் டிமா அப்துல்இலத்தீவ் முகமட் அல்ஹாஜ்; கொல்லப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது. காசா நகரிலிருந்து இடம்பெயர்ந்து காசாவின் தென்பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தவேளை இடம்பெற்ற குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளார் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குண்டுவீச்சின் காரணமாக டிமாவும் கணவரும் ஆறுமாத குழந்தையும் இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்த 50 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. ஓக்டோபர் ஏழாம் திகதி முதல் ஐநாவும் மனிதாபிமான சமூகமும் பலரை இழந்துள்ளன இன்று எல்லைகள் அற்ற வைத்தியர்கள அமைப்பு இரண்டு மருத்துவர்களை இழந்துள்ளது பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு 108 பேரை இழந்துள்ளது இவர்கள் வெறுமனே பணியாளர்கள் இல்லை ஏனையவர்களின் சிறந்த வாழ்க்கைக்காக பணியாற்றியவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டிமாவின் மரணம் அர்த்தமற்ற இந்த யுத்தத்திற்கான மற்றுமொரு உதாரணம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் வெளியேற்றப்படும்போதும் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தங்கள் கரங்களில் அதிகாரங்களை வைத்துள்ளவர்களை இந்த மோதலை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள் கேட்டுக்கொள்கின்றோம்எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169974
  2. Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 05:14 PM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு திட்டத்தை முறியடித்தனரா என்ற விபரம் தெரியவரவில்லை என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169991
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் லின்டோட் பதவி, விண் இயற்பியலாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நேரம் எல்லோருக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக தான் கடந்து செல்கிறதா? பூமியில் இருக்கும் ஒருவர் விண்வெளிக்கு சென்று ஆறு மாதங்கள் கழித்து திரும்பி வந்தால், அவருக்கு வயது கூடியிருக்குமா? குறைந்திருக்குமா? அல்லது மாற்றமே இருக்காதா? இது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாவிட்டாலும், சில விளக்கங்களை அளிக்கிறது ஐன்ஸ்டீனின் சார்பியல் (relativity) கோட்பாடு. அந்த கோட்பாட்டின் படி நேரம் உலகளாவியது அல்ல. அதாவது நேரம் என்பது நிலையான ஒன்று இல்லை, அதில் முன்னும் பின்னும் செல்லக்கூடும், சூழல்களை பொருத்து நேரம் வேகமாகவும், மெதுவாகவும் செல்லக் கூடும். நீங்கள் வேகமாக செல்லும் போது நேரம் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் சரியாக கூறுகிறார். ஆனால் அதை சிறப்பாக உணர நீங்கள் கருந்துளைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் விண் இயற்பியலாளர் கிறிஸ் லின்டோட். கடிகார சோதனை எனக்கு பிடித்த அறிவியல் சோதனைகளில் ஒன்று உலகத்தை இருமுறை சுற்றி நான்கு கடிகாரங்களை பறக்க விடுவது. (வேகமாக பயணிக்கும் போதும் நேரம் அதே மாதிரி தான் இருக்கிறதா, அல்லது வேகமாகவோ மெதுவாகவோ கடக்கிறதா என கண்டறிய துல்லியமாக மணி சொல்லும் நான்கு கடிகாரங்கள் விமானங்களில் உலகில் கிழக்கிலிருந்து மேற்கும், மேற்கிலிருந்து கிழக்கும் பறக்கவிடப்பட்டன) 1971 ஆம் ஆண்டில், இயற்பியலாளர்கள் ஜோசப் ஹஃபேல் மற்றும் ரிச்சார்ட் கீட்டிங் ஆகியோர் அணு கடிகாரங்களை எடுத்துக் கொண்டனர் - ஒவ்வொரு 30 மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒரு நொடிக்கும் குறைவாக இழக்கக்கூடியவை , அவ்வளவு துல்லியமான கடிகாரங்கள் அவை. ஒரு வணிக ஜெட் விமானத்தில், முதலில் மேற்கு நோக்கி பின்னர் கிழக்கு நோக்கி உலகம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்து, பின்னர் வாஷிங்டன் டிசிக்கு அவர்களின் ஆய்வகத்திற்குத் திரும்பினர். அங்கு, அவர்கள் தங்கள் நன்கு பயணம் செய்த நேரக்கடிகாரங்களின் நேரத்தை ஸ்திரமாக இருந்த கடிகாரங்களின் நேரத்துடன் ஒப்பிட்டனர். கடிகார நேரங்கள் ஒத்துப்போகவில்லை: பயணம் செய்வது நேரம் கடந்து செல்லும் வேகத்தை மாற்றியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'நேரம் உலகளாவியது அல்ல' நேரம் உலகளாவியது அல்ல என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் ஒரு முக்கிய கொள்கையை சோதிப்பதே இந்த சோதனையின் நோக்கமாகும். நீங்கள் வேகமாக பயணம் செய்தால், நேரம் உங்களுக்கு மெதுவாக கடந்து செல்லும். விளைவு சிறியது தான் - லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு கடல் கடந்த விமானத்தில் செல்லும் போது, உங்கள் கடிகாரம் தரையில் இருப்பதை விட, பத்து மைக்ரோநொடிகள் (ஒரு நொடியின் மிக மிக சிறிய அளவு) பின்தங்கியிருக்கும். ஆனால் நீங்கள் வீட்டில் இருப்பதை விட ஒரு பகுதி மெதுவாக வயதாகியிருப்பீர்கள். ஹஃபேல் மற்றும் கீட்டிங் கடிகாரங்களால் நீங்கள் எவ்வளவு வயதாகியுள்ளீர்கள் என்பதை கணிக்க முடியும். வேறு ஒரு கணிப்பு ஈர்ப்பு விசையின் விளைவையும் கூறுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகினால், நேரம் வேகமாக செல்லும் என்று அந்த கணிப்பு கூறுகிறது. இது நம் உடல்களையும் பாதிக்கிறது: உங்கள் தலை உங்கள் கால்களை விட சற்று வயதானதாக இருக்கலாம். இதன் விளைவும் மிகவும் சிறியது தான். ஆனால் பூமியிலிருந்து அதிக தூரம் செல்லும்போது, அதன் தாக்கங்களை புரிந்து கொள்ள முடியும். நம் அனைவரையும் வழிநடத்தும் GPS அமைப்பு, அதன் செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 20,000 கிமீ (12,400 மைல்கள்) உயரத்தில், இதை சரியாக செயல்பட கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகளையும் மீறி, பூமி ஒரு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு சிறிய கிரகம்தான். எந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையையும் விட அதிகமான ஈர்ப்பு விசையை பெற்றிருக்கும் பெரிய பொருள்கள் உள்ளன. அவற்றை கொண்டுள்ள கருந்துளைகளை சுற்றி, இந்த சார்பியல் விளைவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பட மூலாதாரம்,ALAMY கருந்துளைக்குள் பயணம் செல்லலாம் இது ஏன் நடக்கிறது என்று புரிந்து கொள்ள, கருந்துளைக்கு விழுவது போல் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். (கருந்துளைக்கு அருகில் செல்லும் போது அதன் அதீத ஈர்ப்பு விசை காரணமாக பொருட்கள் ஒரு பக்கமாக நீட்டப்படும். ஆனால், நீங்கள் அப்படி நடைபெறாத வகையில் ஒரு அதிசய விண்கலத்தில் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளலாம்) நீங்கள் விழும் போது, உங்களுக்கோ அல்லது உங்கள் அருகிலுள்ள சூழலுக்கோ நேரத்தில் எந்த வித்தியாசமும் கவனிக்க மாட்டீர்கள். உங்கள் கடிகாரத்தைப் பார்த்து அல்லது உங்கள் இதயத் துடிப்பைப் பார்த்து, நேரம் அதே போல் ஓடிக் கொண்டிருக்கிறது என கருதலாம். ஆனால் உங்கள் விண்கலத்திலிருந்து நீங்கள் பின்னால் திரும்பி கருந்துளைக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தைக் கவனிக்க முடியும் என்றால், நீங்கள் விசித்திரமான ஒன்றைக் கவனிக்கலாம் - அங்கே நிகழ்வுகள் உங்களுக்கு வேக வேகமாக தென்படும். நீங்கள் தொலைநோக்கி மூலம் பூமியைக் கவனித்தால், நீங்கள் நமது கிரகம் மற்றும் இனத்தின் எதிர்காலத்தை கண்டு ரசிக்கலாம். ஒரு வேகப்படுத்தப்பட்ட படம் ஓடுவது போல இருக்கும். உங்களுக்கு தொலைக்காட்சி சிக்னல் கிடைத்தால், மீதமுள்ள பிக் பாஸ் சீசனை பார்த்து முடித்து விடுவீர்கள். ஆனால் வேக வேகமாக. இப்போது கண்ணோட்டத்தை மாற்றுங்கள். கருந்துளைக்கு வெளியே ஒரு பாதுகாப்பான தூரத்தில் சுழன்று கொண்டிருக்கும் விண்கலத்தில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள், உங்கள் தைரியமான அல்லது அதிர்ஷ்டமற்ற நண்பர் விழுந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். கருந்துளையின் நிகழ்வு எல்லை கருந்துளையின் விளிம்பு தான் நிகழ்வு எல்லை. ஒளி வேகத்தில் பயணிக்கும் பொருட்களாலும் கூட தப்பிக்க முடியாத புள்ளி இதுவே ஆகும். எனவே கீழே விழுந்து கொண்டிருக்கும் நமது நண்பரும் இந்த புள்ளியை அடைந்து பின்னர் மறைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் நீங்கள் பார்ப்பது விசித்திரமானது - அவர்கள் நம்மை பார்த்து கைகளை அசைத்தால், அவர்கள் கருந்துளையின் ஈர்ப்புப் பள்ளத்தில் ஆழமாக விழ விழ, நமக்கு அவர்கள் மெதுவாக கைகளை அசைப்பது போல் தெரியும். அவர்கள் விண்கலத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட ஒரு கடிகாரம் நம் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுவப்பட்ட ஒன்றை விட மெதுவாக இயங்குவதைப் போலத் தெரியும். இந்த நிகழ்வை Interstellar திரைப்படம் தெளிவாக விளக்குகிறது. கருந்துளைக்கு அருகிலுள்ள கிரகத்தில் ஆய்வு செய்த விண்வெளி வீரர்கள், பணி முடித்து வரும் போது, தங்கள் பிரபஞ்சம் அவர்களை விட்டு முன்னேறி சென்று விட்டதை பார்த்து அதிசயித்து போவார்கள். அந்தப் படம் கூறுவது போல, கருந்துளைக்கு அருகில் அல்லது தொலைவில் கடந்து செல்லும் நேரம்- எது "சரியான" நேரம் என்று கேட்பதில் அர்த்தமில்லை; ஏனென்றால் சார்பியல் அப்படி சரியான நேரம் என்று எதுவும் இல்லை என சொல்கிறது. எந்த ஒளியும், பொருளும் இந்தப் புள்ளியை கடக்க முடியாத கருந்துளையின் நிகழ்வு எல்லையை நமது நண்பர் அடைவார். எனினும், நாம் அதை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இந்த எல்லைக்கு சென்றால் மீண்டும் திரும்ப முடியாது, இந்த எல்லையை கடந்தால், நமது நண்பர் கருந்துளையின் மைய பகுதி நோக்கி அனுப்பப்படுவார். அதன் அர்த்தம் அவர்களின் நேர அனுபவம் முற்றிலும் மாறியிருக்கும். அவர்கள் நேரத்தில் முன்னும் பின்னும் கூட செல்ல முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES கருந்துளை ஒரு கால இயந்திரம் அது ஏன்? நமது அன்றாட வாழ்வில், கருந்துளைக்கு வெளியே பாதுகாப்பாக, நாம் எப்படி வேண்டுமானாலும் இடத்தின் மூன்று பரிமாணங்களில் நகரலாம், ஆனால் நான்காவது பரிமாணத்தில்: அதாவது நேரத்தில், தொடர்ந்து முன்னோக்கியே பயணம் செய்ய வேண்டும். ஆனால் கருந்துளையின் நிகழ்வு எல்லைக்குள் விஷயங்கள் பின்னோக்கி செல்கின்றன. உள்ளே, ஒரு விண்வெளி வீரர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் - கருந்துளையின் மையத்தை நோக்கி - அவர்கள் நேரத்தில் முன்னும் பின்னும் நகர முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படி பார்த்தால், ஒரு கருந்துளை ஒரு கால இயந்திரம் போல செயல்பட முடியும், நிகழ்வு எல்லைக்குள் நுழையும் துணிச்சலான எவரும், கருந்துளை உருவானதிலிருந்துஅவர்கள் நிகழ்வு எல்லைக்குள் நுழைந்த நேரம் வரை, திரும்பிச் செல்ல அனுமதிக்கிறது. ஒரே ஒரு அம்சம் என்னவென்றால், கருந்துளையை விட்டு வெளியேற எந்த வழியும் இருக்காத. எனவே எதிர்காலத்திலிருந்து வரும் எந்த நேர பயணியும் இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி புவி மேற்பரப்பில் நம்மை வந்து பார்க்க முடியாது. ஆனால் என்ன சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்வது - கருந்துளைகள் அவற்றைச் சுற்றியுள்ள இடம் மற்றும் நேரத்தை எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பற்றி சிந்திப்பது - இயற்பியலாளர்களுக்கு ஐன்ஸ்டீன் கோட்பாடுகளின் மிக துல்லியமான சோதனைகளை வழங்க முடியும். மேலும் நாம் நேரம் என்று அழைக்கும் இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள வழிவகுக்கும். அருகே இயக்கப்பட்ட அணு கடிகாரத்துடன் உலகத்தைச் சுற்றிப் பறப்பதை விட இது சிறப்பாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c4n478xjxl0o
  4. கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி : களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் ஆய்வு! முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது குறித்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ”எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது?உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளதாக” முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார். https://thinakkural.lk/article/282026
  5. யாஹ்யா சின்வார்: இஸ்ரேல் ராணுவம், மொசாத் இரண்டும் இவருக்கு குறி வைப்பது ஏன்? எங்கே போனார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங் கார்ட்னர் பதவி, பிபிசி பாதுகாப்புச் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் யாஹ்யா சின்வாரைக் காணவில்லை. இஸ்ரேல் ராணுவம் பல ஆயிரம் துருப்புகள், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஒட்டுக்கேட்கும் சாதனங்கள், மற்றும் மொசாத் உளவாளிகள் ஆகியோர் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருக்கையில் அவர் காணாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வெள்ளை முடி மற்றும் கருப்பு புருவங்களைக் கொண்ட சின்வார், காஸாவில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராகவும், இஸ்ரேலால் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். இதற்குக் காரணமானவர்களில் ஒருவராக சின்வாரையும் இஸ்ரேல் சேர்த்திருக்கிறது. "யாஹ்யா சின்வார் தான் தளபதி... அவருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி அக்டோபரில் அறிவித்தார். "இந்த அருவருப்பான தாக்குதலை நடத்த யாஹ்யா சின்வார் தான் முடிவு செய்தார்," என்று ஐ.டி.எஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி கூறினார். "ஆகையால் அவர் மீதும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் மீதும் குறிவைத்திருக்கிறோ,” என்றார். அதில் ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் என்பவரும் அடங்குவார். அக்டோபர் 7-ஆம் தேதியின் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதற்குப் பின்னால் டெய்ஃப் மூளையாக இருந்தார், ஏனெனில் அது ஒரு இராணுவ நடவடிக்கை. ஆனால், சின்வார் ‘திட்டக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்,’ என்று ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளர் ஹக் லோவாட் கூறுகிறார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கும் சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. யார் இந்த சின்வார்? அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். அவரது பெற்றோர் இன்று இஸ்ரேலில் இருக்கும் அஷ்கெலோன் நகரைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் அகதிகளானார்கள். 1948-இல் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்ப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர். அவர் கான் யூனிஸில் ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அந்த நேரத்தில், கான் யூனிஸ் இஸ்லாமிய சகோதரத்துவ ஆதரவிற்கான கோட்டையாக இருந்தது என்று கூறுகிறார், கிழக்கு நாடுகள் கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி. இவர் சின்வாரை நான்கு முறை சிறையில் பேட்டி கண்டவர். அந்த இஸ்லாமியச் சகோதரத்துவக் குழு "அகதி முகாமில் வறுமையின் பிடியில் வாழ்ந்த, மசூதி செல்லும் இளைஞர்களுக்கான ஒரு பெரிய இயக்கமாக இருந்தது," என்று யாரி கூறுகிறார். பின்னாளில் அது ஹமாஸுக்கும் முக்கியமானதாக மாறும் என்கிறார். சின்வார் முதன்முதலாக, 1982-இல், தனது 19 வயதில், இஸ்ரேலால் அவரது ‘இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக’ கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985-இல் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் அவர் ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார். இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர். ஹமாஸ் 1987-இல் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 25 தான். அல்-மஜ்த் அமைப்பு ‘தார்மீகக் குற்றங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றைத் தண்டிப்பதில் பிரபலமடைந்தது. இந்த அமைப்பு பாலியல் வீடியோக்களை விற்ற கடைகளை குறிவைத்ததாக கூறுகிறார் மைக்கேல். அத்துடன் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் எவரையும் வேட்டையாடிக் கொன்றது. இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்படும் பல நபர்களை ‘மிருகத்தனமாக கொலை செய்ததற்கு’ சின்வார் தான் பொறுப்பு என்று யாரி கூறுகிறார். "அதில் சில கொலைகளை அவர் தனது கைகளால் செய்ததாக என்னிடமும் மற்றவர்களிடமும் பேசிப் பெருமைப்பட்டார்," என்று கூறினார். இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைக் கூறுகின்றனர். பின்னாளில் அவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதில் உளவாளி என்று அவர் சந்தேகப்பட்ட ஒருவரை, அந்த நபரின் சகோதரரை வைத்தே உயிருடன் புதைக்க வைத்தார். மண்வெட்டிக்குப் பதிலாக ஒரு ஸ்பூனை வைத்து அந்த வேலையைச் செய்ய முடிக்க வைத்தார். "அவர் தன்னைச் சுற்றிப் பல தொண்டர்கள், ரசிகர்கள், பேன்றவர்களைச் சேர்த்தார். அவர்களில் பலரும் அவரைக் கண்டு பயப்படுபவர்கள். அவருடன் எந்த பிரச்னையையும் வைத்துக்கொள்ள விரும்பாதவர்கள்," என்று யாரி கூறுகிறார். 1988-இல், சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் சிறை வாழ்க்கை சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார். 1988 முதல் 2011 வரை. அங்கு அவர் தனிமைச் சிறையில் இருந்த காலம், அவரை மேலும் தீவிரமாக்கியதாகத் தெரிகிறது. "அவர் தனது அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தினார்," என்கிறார் யாரி. அவர் கைதிகள் மத்தியில் ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர்கள் சார்பாக சிறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் கைதிகளிடையே ஒழுக்கத்தை அமல்படுத்தினார். சின்வார் சிறையில் இருந்தபோது அவரை மதிப்பீடு செய்த இஸ்ரேலிய அரசு, அவரது குணாதிசயத்தை "கொடுமை, அதிகாரம், செல்வாக்கு, வலியைத் தாங்கும் திறன், தந்திரம் மற்றும் சூழ்ச்சியின் அசாதாரண திறன்கள், கொஞ்சம் கிடைத்தாலே மன நிறைவடையும் தன்மை... மற்ற கைதிகள் மத்தியில் சிறைக்குள் கூட ரகசியங்களை வைத்திருப்பது... திறமை உள்ளது. கூட்டத்தைத் தக்கவைப்பது,” என்று வரையறுத்தது. சின்வாரைச் சந்தித்துப் பேசிய யாரியின் மதிப்பீடு, ‘அவர் ஒரு மன நோயாளி’ என்பதுதான். "ஆனால் 'சின்வார் ஒரு மனநோயாளி’, என்று பொதுப்படையாகச் சொல்வது தவறு" என்று அவர் கூறுகிறார், "ஏனென்றால் அந்த விசித்திரமான, சிக்கலான மனிதரை நீங்கள் புரிந்துகொள்ளாமல் போகக்கூடும்," என்கிறார். யாரியின் கூற்றுப்படி, சின்வார் ‘மிகவும் தந்திரமானவர், புத்திசாலி - ஒரு வகையான தனிப்பட்ட வசீகரம் கொண்டவர்’. சின்வார் யாரிஒயிடம் ‘இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும்’ என்றும், பாலத்தீனத்தில் யூத மக்களுக்கு இடமில்லை என்றும் கூறியபோது, கேலியாக, ‘உங்கள் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்காகச் செய்கிறேன்,’ என்பாராம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எகிப்து எல்லையில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம் சிறையிலிருந்து விடுதலை சிறையில் இருந்த சின்வார் இஸ்ரேலிய செய்தித்தாள்களைப் படித்து ஹீப்ரு மொழியில் சரளமாக பேசக் கற்றுக்கொண்டார். யாரி அரபு மொழியில் சரளமாக இருந்தபோதிலும், சின்வார் தன்னுடன் எப்பொழுதும் ஹீப்ருவில் பேச விரும்புவதாக யாரி கூறுகிறார். "அவர் தனது ஹீப்ருவை மேம்படுத்த முயன்றார்," என்று யாரி கூறுகிறார். "சிறைக் காவலர்களை விட நன்றாக ஹீப்ரு பேசும் ஒருவரிடமிருந்து அவர் பயனடைய விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர். சின்வார் 2011-இல் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார். சின்வார் மேலும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைக் கடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அந்தத் தருணத்தில், இஸ்ரேல் காஸா பகுதியில் தன் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்று, அதன் போட்டியாளர்களான யாசர் அராஃபத்தின் ஃபத்தாஹ் கட்சியின் பல உறுப்பினர்களை உயரமான கட்டிடங்களின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சின்வாரின் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக நிற்கும் ஆயுதமேந்திய போராளி ‘கொடூரமும் கவர்ச்சியும் கலந்த நபர்’ சின்வார் காஸாவிற்கு திரும்பியதும், அவர் உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று மைக்கேல் கூறுகிறார். இஸ்ரேலிய சிறைகளில் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை தியாகம் செய்த ஹமாஸின் ஸ்தாபக உறுப்பினர் என்ற பெருமை பெற்றார். ஆனால், "மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். இவர் தனது கைகளால் மக்களைக் கொன்றவர் என்ற முறையில்," என்று மைக்கேல் கூறுகிறார். "அவர் மிகவும் கொடூரமானவர், ஆனால் அவரிடம் ஒரு கவர்ச்சி இருந்தது," என்கிறார். "அவர் ஒரு சொற்பொழிவாளர் அல்ல," என்கிறார் யாரி. "அவர் பொது மக்களிடம் பேசும் போது, ஒரு கும்பலைச் சேர்ந்தவர் போலப் பேசுவார்." சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று யாரி கூறுகிறார். 2013-இல், அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-இல் அதன் தலைவராக ஆனார். சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் பங்கு வகித்தார். 2014-இல் ஹமாஸால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக அவர் கூறிக்கொண்டார். ஆனால், ஊடக அறிக்கைகள், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், காஸாவின் அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மறைந்திருக்கும் ஹமாஸின் இராணுவப் பிரிவில் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம் என்றும், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் பங்கு வகித்திருக்கலாம் என்றும் கூறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் ஷேக் அகமது யாஸீனின் படம் தாங்கிய சுவரோவியம் ‘மூர்க்கத்தனமான விதிகளை விதிப்பவர்’ சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. "அவர் மூர்க்கத்தனமான ஒழுக்க விதிகளை விதிப்பவர்," என்று யாரி கூறுகிறார். "ஹமாஸில் அனைவரும் அறிந்த ஒன்று, நீங்கள் சின்வாருக்கு கீழ்ப்படியாவிட்டால், உங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறீர்கள்." மோசடி மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஹ்மூத் இஷ்டிவி என்ற ஹமாஸ் தளபதி 2015-இல் சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கு அவர்தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில், அமெரிக்கா தன் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதை எதிர்த்து, இஸ்ரேலில்-காஸா எல்லை வேலியை உடைத்துக்கொண்டு செல்ல ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்கு அவர் தனது ஆதரவை சமிக்ஞையாகத் தெரிவித்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், மேற்குக் கரையில் இருக்கும் போட்டி அமைப்பான பாலஸ்தீன அதிகாரத்திற்கு (PA) விசுவாசமானவர்கள் நடத்திய படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாகக் கூறினார். ஆயினும்கூட, அவர் சில சமயங்களில் நடைமுறையில் சாத்தியமான பார்வைகளையும் முன்வைத்தார். இஸ்ரேலுடன் தற்காலிக போர் நிறுத்தங்களை ஆதரித்தார், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் பாலத்தீன அதிகாரத்துடன் நல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்தார். இதனால் அவரது போக்கு மிகவும் மிதமானது என்று அவரது எதிரிகள் சிலர் விமர்சித்தனர் என்று மைக்கேல் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகள் படங்களைத் தாங்கிய போஸ்டர்கள் இரானுடன் நெருக்கம் இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள். ஹமாஸுக்குப் பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் வேலைக்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம், அந்த இயக்கம் போர் செய்வதறகான உந்துதலை இழந்துவிடும் என்ற தவறான கணிப்பில் அந்தக் கைதிகள் பரிமாற்றத்தைச் செய்ததாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். அது மிகத் தவறான கணிப்பாகிப் போனது. "பாலத்தீனத்தை விடுவிக்க வந்த நபராக அவர் தன்னைப் பார்க்கிறார். காஸாவின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதோ, சமூக சேவைகள் செய்வதோ அவரது நோக்கம் இல்லை, " என்று யாரி கூறுகிறார். 2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு மக்களை அவர் ஊக்குவித்தார். ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது. அக்டோபர் 14 அன்று, இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட், சின்வாரை ‘தீமையின் முகம்’ என்று குறிப்பிட்டார். மேலும் "அந்த மனிதரும் அவரது முழு குழுவும் எங்கள் பார்வையில் உள்ளனர். நாங்கள் அவருக்கு பதிலடி கொடுப்போம்,” என்றார். சின்வார் இரானுக்கும் நெருக்கமானவர். ஒரு ஷியா நாட்டிற்கும் சன்னி அரபு அமைப்புக்கும் இடையிலான கூட்டு என்பது வெளிப்படையான ஒன்றல்ல. ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே நோக்கம், இஸ்ரேல் அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜெருசலேமை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து ‘விடுவிப்பது’. இருவரும் ஒன்றாக வேலை செய்கின்றனர். இரான் ஹமாஸுக்கு நிதியுதவி அளித்து, பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குகிறது, அதன் ராணுவத் திறன்களை கட்டமைக்க உதவுகிறது, மற்றும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளைக் கொடுக்கிறது. இது இஸ்ரேலிய நகரங்களை குறிவைக்க பயன்படுத்துகிறது. சின்வார் 2021-இல் ஒரு உரையில் இரானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். "இரான் இல்லாதிருந்தால், பாலத்தீனத்தின் எதிர்ப்பு இவ்வளவு வலுவாக இருந்திருக்காது," என்றார். எதிர்காலம் என்னவாகும்? ஆயினும்கூட, சின்வாரைக் கொல்வது இஸ்ரேலுக்கு ஒரு "விளம்பர வெற்றியாக’ இருக்குமே தவிர, அது ஹமாஸ் இயக்கத்தை உண்மையில் பாதிக்காது என்று லோவாட் கூறுகிறார். அரசு எதிர்ப்பு நிறுவனங்களில் ஒரு தளபதியோ தலைவரோ கொல்லப்பட்டால், அவர்களுக்கு பதில் மற்றொருவர் வருவார். அடுத்து வருபவர்களுக்கு அதே அனுபவம் அல்லது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அமைப்பு வேறு வடிவத்தில் தன்னை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும். "அவர் கொல்லப்பட்டால், அது ஹமாஸுக்கு இழப்பாகத்தான் இருக்கும்," என்று லோவாட் கூறுகிறார். "ஆனால் அவருக்குப் பதில் இன்னொருவர் வருவார். அதற்கான கட்டமைப்புகள் உள்ளன. இது பின்லேடனைக் கொல்வது போல் இல்லை. ஹமாஸுக்குள் மற்ற மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் உள்ளனர்," என்றார். ஆனால், மிகப்பெரிய கேள்வி, ‘இஸ்ரேல் ஹமாஸை ஒழிப்பதற்கான தனது தாக்குதலை இராணுவப் பிரசாரத்தை முடிக்கும்போது, காஸாவுக்கு என்ன நடக்கும், இறுதியில் யார் பொறுப்பேற்பார்கள்?’ என்பதுதான். மேலும், ‘காஸா மீண்டும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கான ஏவுதளமாக மாறுவதைத் தடுக்க முடியுமா? அப்படித் தடுப்பதன் மூலம் தற்போது நடப்பது போன்ற பெரும் மனிதாபிமானப் பேரழிவுகளைத் தடுக்க முடியுமா?’ https://www.bbc.com/tamil/articles/cd1pqqrp1pdo
  6. இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தம் - மிகவிரைவில் சாத்தியமாகலாம் என ஹமாஸ் தெரிவிப்பு Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 12:02 PM இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இதனை தெரிவித்துள்ளார் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 7ம் திகதி ஹமாசினால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்ற நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது. பணயக்கைதிகள் விடுதலைக்கான முயற்சிகளில் கட்டார் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - கட்டாரில் ஹமாசின் அரசியல் அலுவலகம் உள்ளதும் ஹனியே கட்டாரில் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது. சில சிறிய விவகாரங்கள் காரணமாகவே பணயக்கைதிகள் விடுதலை தாமதமாவதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை பணயக்கைதிகள் விவகாரத்தில் இணக்கப்பாட்டை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169845
  7. காசாவிலிருந்து வெளியேற முயன்ற பாலஸ்தீன கவிஞர் இஸ்ரேலிய படையினரால் கைது Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 04:00 PM காசாவிலிருந்து வெளியேறமுயன்றவேளை பாலஸ்தீன கவிஞர் மொசாப் அபு டொகா இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கவிஞரின் பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்கர் என்பதால் அவர் எகிப்திற்கு செல்லலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர் எகிப்திற்கு செல்ல முயன்றவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார். வடகாசாவிலிருந்து தென்காசாவை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ரவா எல்லையை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவரையும் ஏனைய பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேலிய படையினர் கைதுசெய்துள்ளனர் என அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார் அமெரிக்க தூதரகமே அவரது குடும்பத்துடன் ரபாவிற்கு செல்லுமாறு கே;ட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் அவரது மகனிற்கே எகிப்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது கவிஞருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனினும் பின்னர் அவருக்கும் குடும்பத்தினருக்கும் அனுமதி கிடைத்தது என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்ல முயன்றவேளை அவரையும் பலரையும் இஸ்ரேலிய படையினர் தடுத்துநிறுத்தினர் அவர்களை கைகளை உயர்த்தச்சொன்னார்கள் மகனை கீழே இறக்கிவிடச்சொன்ன பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தினர் அவரையும் 200 பேரையும் இழுத்துச்சென்றனர் என கவிஞரின் மனைவி தெரிவித்துள்ளார். அமெரிக்கா இஸ்ரேலிய படையினரோ இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். அபுடோகா வடகாசாவில் குண்டுவீச்சிற்கு மத்தியில் வாழ்வது குறித்த தனது அனுபவத்தை நியுயோர்க்கர் சஞ்சிகைக்கு எழுதிவந்துள்ளார். https://www.virakesari.lk/article/169886
  8. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 5,600 சிறுவர்கள் பலி! இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 13,300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, காசாவில் ஹமாஸின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 5,600 பேர் சிறுவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/281847
  9. வன்னியில் உள்ள பாரிய புதைகுழிகள் தொடர்பான அகழ்வுக்காக ரேடார் இயந்திரங்களை கொண்டுவர ஆயத்தம் Published By: DIGITAL DESK 3 21 NOV, 2023 | 03:01 PM இலங்கையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. 17 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 15ஆம் திகதி தற்காலிகமாக நிறைவடைந்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு பின்னர், முல்லைத்தீவு நீதிவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையில் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரேடார் கருவிகளைப் பயன்படுத்தி புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்துள்ளது என்பதை தீர்மானிக்க உள்ளதாக நேற்று அகழ்வு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அகழ்புப் பணிகளுக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிட்டார். ''புதைகுழி துப்புரவு செய்யப்பட்டு, போடப்பட்டிருந்த மண் மற்றும் பொலிதீன் அகற்றப்பட்டு, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த புதைகுழியானது ரேடார் கருவிகள் மூலம் இந்த புதைகுழி எவ்வளவு தூரத்திற்கு வியாபித்துள்ளது என்பதை கண்டறிவதற்கு ரேடார் கருவிகள் ஊடாக பரீட்சித்துப்பார்க்கப்படவுள்ளது. இது எதிர்வரும் 23, 24, 25 ஆகிய திகதிகளில் இடம்பெறும் ." கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம் அருகே தற்செயலாக எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக ஜூன் மாத இறுதியில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு அருகில் வேறு உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிய ரேடார் கருவியை பயன்படுத்துவது தொடர்பில் தொல்பொருள் தடயவியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். அகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில், புதைகுழிக்கு அருகில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேலும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வு பணிகளை மேற்கொள்ள பணம் எஞ்சியிருப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். “தற்போது விடுவித்துள்ள நிதியை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை செய்ய முடியுமென தெரிவித்துள்ளனர். வீதிக்கு குறுக்காகவும் வீதிக்கு அடியிலும் கூட சிலவேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை வரும் நாட்களில் சரியாக பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்ய வேண்டிய ஒரு செயற்பாடு என்ற அடிப்படையில் அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அரசாங்க அதிபருக்கு விடுவிக்கும் முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாகும் என சொல்லப்பட்டுள்ளது. அந்த நிதி விடுவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.” செப்டெம்பர் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவடைந்ததோடு, கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சடலங்களை மீட்கும் விசாரணையில் முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார். முல்லைத்தீவு மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்களின் பின்னர் பதினேழு பேரின் எலும்புகள் மீட்கப்பட்டதோடு, விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/169862
  10. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க வேண்டி ஏற்படும் - சுமந்திரன் Published By: VISHNU 20 NOV, 2023 | 05:06 PM கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திங்கட்கிழமை (20) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீளவும் திங்கட்கிழமை (20) காலை ஆரம்பமாகி இருக்கின்றது. தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிதியினை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை மேற்கொள்ள முடியும் என கூறியிருக்கிறார்கள். இது பல்வேறு தளங்களிலே உடல்கள் காணப்படுகின்ற காரணத்தினாலே நீண்ட காலமாக இதனை செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதனை தற்போது உணர்ந்திருக்கின்றார்கள். அது ஒரு பக்கம் இருக்க வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையினாலே இதனை வருகின்ற நாட்களிலே பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்யப்பட வேண்டிய செயன்முறை என்ற அடிப்படையிலே அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்திலே இருந்து, அரசாங்க அதிபருக்கு அதனை விடுவிப்பதற்கான முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாக இருப்பதாகவும் அந்த நிதி விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகையினாலே இந்த செயற்பாடுகள் தற்போது சரியான முறையிலே நடைபெறுகின்றன. ஒவ்வொரு உடல்களும் கை, கால், உடம்பு, தலை அனைத்தும் பொருந்தக்கூடிய வண்ணமாக எடுக்கப்படுகின்ற காரணத்தினால்தான் நீண்ட நேரம் இதற்கு செல்வாகின்றது. உடையாமல் கவனமாக எடுக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது. ஆகையினால் ஒவ்வொரு கட்டமாக அகழ்ந்து தற்போது 17 உடலங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை விட கூடுதலான எண்ணிக்கை இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அவர்களுடைய சீருடைகள் மற்றும் வேறு பல பொருட்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. ஆகையினாலே எந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்பதனையும் சில பரிசோதனைகளின் பின்னர் அறியக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சில நாட்கள் எடுக்கும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/169801
  11. இஸ்ரேலிய கொடியுடன் பயணிக்கும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கை ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு - கப்பலொன்றையும் கைப்பற்றினர் Published By: RAJEEBAN 20 NOV, 2023 | 10:25 AM செங்கடல் பகுதியில் இஸ்ரேலின் கப்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாக யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஜப்பானிலிருந்து இயங்கும் கப்பலை கைப்பற்றியுள்ளதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய வர்த்தகர் ஒருவருக்கும் சொந்தமான கலக்ஸி லீடர் கப்பலில் 22 பேர் காணப்பட்டனர் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியிலிருந்து இந்தியாவிற்கு சென்று கொண்டிருந்த கப்பலையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். கப்பலை ஹைப்பற்றியுள்ளதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் இஸ்ரேலின் கொடியுடன் பயணிக்கும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதை அவர்கள் அறிவித்துள்ளனா என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் செய்தியாளர் இஸ்ரேல் போன்ற நாடுகளிற்காக பணியாற்றவேண்டாம் என சர்வதேச மாலுமிகளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169734
  12. பணயக்கைதிகள் விடுதலைக்காக யுத்த நிறுத்தம் - இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் தகவல் Published By: RAJEEBAN 19 NOV, 2023 | 11:58 AM காசாவில் யுத்த நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா இஸ்ரேல் ஹமாசிற்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. காசாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காக ஐந்துநாள் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வோசிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169684
  13. வடகாசாவில் அகதிமுகாமில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 50க்கும் அதிகமானவர்கள் பலி Published By: RAJEEBAN 18 NOV, 2023 | 09:03 PM பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் முகவர் அமைப்பு நடத்தும் அல்பகுரா பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் வடபகுதியில் உள்ள ஜபாலியா அகதிமுகாமில் உள்ள பாடசாலை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலின் முடிவற்ற தாக்குதலில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எங்குபார்த்தாலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன காயமடைந்தவர்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். காசாவின் வடபகுதியில் இடம்பெறும் தாக்குதல் காரணமாக பல பொதுமக்கள் ஐநாவின் அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பல மருத்துவ தேவைகள் உள்ள மக்கள் ஜபாலியா அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் அவர்களால் அங்கு வன்முறைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை,காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்கு செல்லுங்கள் என்ற செய்தியை இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கின்றது என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169659
  14. பணயக்கைதிகள் விடுதலை அடுத்த வாரமளவில் சாத்தியமாகலாம் - பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர் நம்பிக்கை Published By: RAJEEBAN 17 NOV, 2023 | 12:43 PM ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளில் சிலரை அடுத்தவாரமளவில் விடுதலை செய்யலாம் என பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். லெபானின் புலனாய்வுபிரிவின் முன்னாள் தலைவர் அபாஸ்இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார். சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால்பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தன்னுடைய சில நிபந்தனைகளை வாபஸ்பெற்றால் அல்லது ஹமாசின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் சிறுவர்களை அந்த நாடு விடுதலை செய்தால் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். காசா மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதியளிக்கவேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/169531
  15. உணவுவிடுதியில் கனடா பிரதமரை சுற்றிவளைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் 16 NOV, 2023 | 06:52 AM கனடாவின் வான்குவரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளனர். உணவுவிடுதியொன்றில் பிரதமர் காணப்பட்டவேளை அந்த பகுதியை சுமார் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர். சைனாடவுனில் இது இடம்பெற்றதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக 250க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தநிறுத்தம் என கோசம் எழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/169411
  16. இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியான ஐ.நா. ஊழியர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி உயிரிழந்த ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது வரை நடந்த போர்களிலேயே இந்தப் போரில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. சபை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.வைச் சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/281251
  17. காசா விவகாரத்தை அமெரிக்க கையாளும் விதம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் கடும் அதிருப்தி - ஏற்றுக்கொள்கின்றார் பிளிங்கென் Published By: RAJEEBAN 14 NOV, 2023 | 02:37 PM ஹமாஸ் இஸ்ரேல் மோதலை அமெரிக்கா கையாளும் விதம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைகளத்திற்குள் கடும் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞசலில் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார். காசா யுத்தத்தை அமெரிக்கா கையாள்வது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் மாத்திரமல்லாமல் பைடன் நிர்வாகத்திற்குள்ளேயே கடும் அதிருப்தி காணப்படும் நிலையிலேயே பிளிங்கென் இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். யுஎஸ்எயிட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரி கடிதம் எழுதியுள்ளதாக கடந்த வாரம் சிஎன்என் செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் அதிருப்தி கடிதங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உங்களில் பலருக்கு இந்த ஆழ்ந்த நெருக்கடியால் ஏற்படும் துன்பம் தனிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை நான் அறிவேன் என பிளிங்கென் தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் குழந்தைகளின் படங்களை தினசரி பார்க்கும்போது ஏற்படும் வேதனையை நானும் அனுபவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/169270
  18. கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 நவம்பர் 2023, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் முன்பு எல்லாம் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இல்லை என்று இரண்டு பதில்கள் தான், ஆனால் இப்போது “இருக்கு, ஆனா இல்லை” என்று கூறும்படியாக ப்ரீ டயபடிக் என்ற நிலை உள்ளது. ப்ரீ டயபடிக் எனப்படுவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதாவது சர்க்கரை நோய் இல்லாத நிலைக்கும், சர்க்கரை நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலையாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொதுவாக இரண்டு விதமாக பரிசோதித்து தெரிந்துக் கொள்ளலாம். வெறும் வயிற்றில் காலை எழுந்த உடன் ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என பரிசோதிக்கலாம். மற்றொன்று, ரத்தத்தில் சர்க்கரை எவ்வாறு கரைகிறது என்பதை கண்டறியும் OGTT (Oral Glucose Tolerant Test)எனப்படும் பரிசோதனை ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரைக்கு முந்தைய நிலை எது வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யும் போது, 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது என்று அர்த்தம், 126க்கும் மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று அர்த்தம். இதுவே 101 முதல் 125 என்ற அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதே போன்று OGTT பரிசோதனை செய்யும் போது, 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே 200க்கு மேல் இருந்தால், சர்க்கரை நோய் என்று அர்த்தம். ஆனால், 141 முதல் 199 வரை சர்க்கரை அளவுகள் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். “வெறும் வயிற்றில் எடுத்த பரிசோதனையில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், கல்லீரல் சீராக செயல்படவில்லை என்று அர்த்தம். இரண்டாவது பரிசோதனையில் சர்க்கரை அதிகமாக இருந்தால், தசைகளில் சர்க்கரை சேர்கிறது என அர்த்தம். இந்த இரண்டு பரிசோதனைகளிலுமே சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை கண்டறிப்பட்டால், அது விரைவிலேயே சர்க்கரை நோயாக மாறும்” என்கிறார் மோகன் நீரிழிவு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் ஏற்படும் சிக்கல்கள் சர்க்கரை நோயினாலே ஆபத்து, சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் எந்த பாதிப்பும் இல்லை என கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் உடலில் அது பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் விளக்குகின்றனர். “உங்கள் சர்க்கரை அளவுகள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தாலே, இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்புகள் ஏற்படலாம்” என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் தலைவர் தர்மராஜன் கூறுகிறார். “சர்க்கரை நோய் இருந்தால், ரெடினோபதி (கண்கள் பாதிப்பு), நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு), நியுரோபதி (நரம்புகள் பாதிப்பு) ஆகியவை ஏற்படும். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இந்த பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை எல்லாம், சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்வதற்கு முன்னாலேயே ஏற்படலாம்.” என்கிறார் மருத்துவர் மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை நோயாளியாக மாறுவதை தவிர்க்க முடியுமா? சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் விரைவிலேயே சர்க்கரை நோயாளிகாக மாறக் கூடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 10.1 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே ஆய்வு, 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியது. இதில் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாகவும், சுமார் 80 லட்சம் பேர் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் உள்ளனர் என்று ஆய்வு தெரிவித்தது. இந்த ஆய்வில் பங்கேற்ற மோகன் டயபடீஸ் மையத்தின் தலைவர் வி.மோகன் கூறுகையில், “சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலிருந்து சர்க்கரை நோயாளியாக இந்தியர்கள் மிக விரைவில் மாறிவிடுவார்கள். மேற்கு நாடுகளில் ஒருவர் எட்டு முதல் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியருக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதும். இந்தியர்கள் மாவுச் சத்து அதிகம் கொண்ட வெள்ளை அரிசி சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சில மரபியல் காரணங்களும் இருக்கலாம்” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ரீ டயபடிக்- அறிகுறிகள் இருக்காது சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என்பதால், இதை கண்டறிவதே சவால். “முழு உடல் பரிசோதனை போன்ற சோதனைகளின் போது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருப்பது தெரியவரலாம். அறிகுறிகள் இல்லை என்றால், எந்த சிகிச்சையும் தேவை இல்லை என்று சிலர் அபத்தமாக பேசி வருகின்றனர். எவ்வளவு விரைவில் சர்க்கரைக்கு முந்தைய நிலை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்” என்கிறார் மருத்துவர் மோகன். இளைஞர்களிடம் ப்ரீ டயபடிக் நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை நோயே இப்போதெல்லாம் இளவயதினரில் ஏற்படும் நிலையில், சர்க்கரைக்கு முந்தைய நிலையில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர் என்றால் ஆச்சர்யம் ஏதும் இல்லை. “20 ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கரை நோய் வயதானவர்களிலேயே அதிகம் காணப்பட்டது. ஆனால் இன்று 20 வயது இளைஞர்கள் சில சமயம், அதற்கும் இளையவர்களிடமும் சர்க்கரை நோய் காணப்படுகிறது. இதற்கும் முந்தைய நிலை ப்ரீ டயபடிக், எனவே இது பொதுவாக இளைஞர்களிடமே காணப்படுகிறது” என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு பிரிவு தலைவர் தர்மராஜன். சமீப கால வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிக எளிய முறையில் மூன்றே கேள்விகளில், நாம் ஆபத்தான நிலையில் இருக்கிறோமா இல்லையா என கண்டறிய முடியும். “உங்கள் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதுண்டா? உங்களுக்கு என்ன வயது?- இதில் முதல் கேள்விக்கு ஆம் என்றும் இரண்டாவது கேள்விக்கு இல்லை என்றும் கூறினீர்கள் என்றால், உடனே ஒரு இன்ச் டேப் எடுத்து வயிற்றை சுற்றி அளந்து பாருங்கள், ஆண்களுக்கு 90செ.மீக்கு மேல், பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தால் நீங்கள் சர்க்கரை நோயின் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். வயது அதிகரிக்க, இந்த ஆபத்துகளும் அதிகரிக்கும்” என்கிறார் மருத்துவர் மோகன். உணவுக் கட்டுப்பாடு சர்க்கரைக்கு முந்தைய நிலை என்பது சர்க்கரை நோய் ஏற்படாமல் தற்காத்து கொள்வதற்கு கிடைத்திருக்கும் அவகாசமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், முறையான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்லாமல் தவிர்ப்பது மட்டுமல்ல, சர்க்கரை அளவுகள் சாதாரண நிலைக்கு திரும்பவும் கூடும். “மாவுச்சத்தை குறைத்து புரதச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகமாக எடுத்துக் கொண்டால், அது வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும், அதே நேரம், உடல் எடையை கூடாது. பச்சை இலை காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டு சர்க்கரை மாற்று அல்ல வெள்ளை சர்க்கரை, உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என தெரிந்தவர்கள், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு சாப்பிட்டால் ஆபத்து இல்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான கருத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். “ வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரையில் சர்க்கரை அளவு சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், அதனால் சர்க்கரை அதிகரிக்காது என்பது தவறான கருத்து “என்கிறார் மருத்துவர் தர்மராஜன். உடல் பருமன் பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் பருமன் குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுவும் வயிற்று பகுதியில் பருமன் அதிகமாக இருந்தால், அது முழுவதும் கொழுப்பு சத்து என்றும் அது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் 35.1 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2.6 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. “பெண்கள் வீட்டு வேலை செய்வதால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் செய்யும் வேலைகள் கலோரியை குறைக்க உதவுவதில்லை. எனவே உடல் பருமனை தவிர்க்கும் நோக்கில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்” என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crgpdrxwgq4o
  20. காசாவின் போர் செல்போன்களிலும் இடம்பெறுகின்றது Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 04:17 PM நியுயோர்க் டைம்ஸ் By Yousur Al-Hlou தமிழில் - ரஜீவன் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் சிக்குண்டுள்ள பாலஸ்தீனியர்களில் செல்போன்களை வைத்துள்ளவர்கள் காசா யுத்தத்தை பதிவு செய்து வெளியிடுகின்றனர் – அவர்கள் ஆங்கில புலமை கொண்டவர்களாக உள்ளனர்- இன்ஸ்டகிராமில் பலரால் பின்தொடரப்படுபவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். இஸ்ரேலும் எகிப்தும் பத்திரிகையாளர்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து வருகின்ற நிலையில், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சினால் ஏற்பட்டுள்ள பேரழிவை தரைதாக்குதல் கதைகளை பதிவு செய்கின்றனர், பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் பதிவுகள் யதார்த்தத்தை உண்மையை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படையாக தெரிவிப்பவையாக காணப்படுகின்றன- மையநீரோட்ட ஊடகங்கள் அவை வெளியிட முடியாத அளவிற்கு பயங்கரமானவை என கருதக்கூடும். அவர்கள் தாங்கள் பதிவு செய்யும் யுத்தத்தின் நடுவில் வாழ்கின்றனர்,குண்டுவீச்சிலிருந்து உயிர்பிழைக்கின்றனர் ,உணவு குடிநீரை பங்கீட்டு முறையில் பெற்றுக்கொள்கின்றனர் மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர். அவர்கள் நடுநிலையான பார்வையாளர்கள் இல்லை அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளில் அவர்கள் தங்களை அவ்வாறு காண்பிக்க முயலவில்லை. சிலர் அவர்கள் காசாவை தனது பிடியில் வைத்திருக்கும் ஹமாசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் என தெரிவிக்கின்றனர். ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பதிலடியாக தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த பின்னர் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் - பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 4500 பேர் சிறுவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ஐநாவின் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுவரையில் 33 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எனினும் பாலஸ்தீனியர்கள் யுத்தத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை தொடர்ந்தும் பதிவு செய்கின்றனர்-அவர்களை மில்லியன் கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர். மொட்டாஸ் அசைசா ஒக்டோபர் ஏழாம் திகதி மொட்டாஸ் அசைசா 4 மணியளவில் உறங்கச்சென்றார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் குண்டுவெடிப்புகளின் சத்தத்தை கேட்டு கண்விழித்தார்,தனது வீட்டின் கூரைக்கு சென்று என்னவென்று பார்த்தார் அவரது வீட்டின் மேலாக ரொக்கட்கள் சென்றதை பார்த்தார். அதுவரை எந்த எச்சரிக்கையும் வெளியாகவில்லை வழமையாக யுத்தத்தை அறிவிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள் அன்று இல்லை ஆனால் இந்த யுத்தம் அவர் உறக்கத்திலிருந்தவேளை ஆரம்பித்தது. காசா இஸ்ரேலை பிரிக்கும் எல்லையை கடந்து சென்ற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய படையினரையும் சமூகங்களையும் தாக்கினர்.240 பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் 1400 பேர் கொல்லப்பட்டனர் அதில் அதிகளவு இஸ்ரேலிய இராணுவத்தினரும் உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான முழுமையான யுத்தத்தை ஆரம்பித்தது- அசைசாவும் இரண்டு மில்லியன் மக்களும் காசாவில் குண்டுவீ;ச்சிற்குள் சிக்குப்படும் நிலையை ஏற்படுத்தியது. பல வருட மோதல்களிற்கு பின்னர் வெடிமருந்து கிடங்காக மாறியிருந்தது காசாவில் அவர்கள் சிக்குண்டனர். ஏற்கனவே நான்கு யுத்தங்களை சந்தித்த அசைசா தனது கமராவை எடுத்துக்கொண்டு தன் கண்முன்னால் புதிதாக அவிழ்ந்த உலகிற்குள் நுழைந்தார். ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினருடன் இஸ்ரேலிய ஜீப்பில் அசைசாவை கடந்துசென்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சீருடையில் காணப்பட்டனர் - இஸ்ரேலிய படையினரை பொதுமக்கள் முன்னிலையில் பாலஸ்தீனியர்கள் நிறுத்தியவேளை அவர்கள் கண்களில் அச்சம் தென்பட்டது என்கின்றார் அசைசா. அவர் அதனை பதிவு செய்தார் -அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார் – அவரை 25000 பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர். நான் அந்த சம்பவத்தை உள்வாங்குவது எப்படி என தெரியாத நிலையிலிருந்தேன் என தெரிவிக்கும் அவர் அந்த ஜீப் எங்களுக்கு பேரழிவை கொண்டு வரப்போகின்றது என நான் அந்த நிமிடம் கருதவில்லை என்கின்றார். அசாசா காசா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பட்டம்பெற்றவர்- புகைப்படத்துறை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர்.காசாவின் அழகையும் பயங்கரத்தையும் பதிவு செய்து அவர் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார். ஆனால் காசா யுத்தம் சமூக ஊடக காலத்தின் யுத்த செய்தியாளராக அவரை மாற்றியிருந்தது. தற்போது அவரை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அவர் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சினை தனது தலைமுறையை போல பதிவு செய்துவருகின்றார்.கண்முன் நடப்பதை அப்படியே பதிவு செய்து அப்படியே தரவேற்றுகின்றார் அவருக்கு ஆங்கில மொழியாற்றல் உள்ளதால் பலர் அவரை பின்தொடர்கின்றனர். நான் ஏனையவர்களை போலவே பதிவிடுகின்றேன் பிரபலங்கள் செய்வது போல நானும் எனது நாளாந்த வாழ்க்கையிலிருந்து பதிவிடுகின்றேன் என்கின்றார் அவர். ஆனால் அவரது வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானவை. ஓக்டோபர் 9 ம் திகதி குண்டுவீச்சிலிருந்து தப்பியவுடன் அவர் கதறியழுதார். அது எனக்குள்ளே இருந்த எதனையே அசைத்துவிட்டது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் இரண்டு மணிநேரம் அழுதேன் என அவர் குறிப்பிட்டார். ஒக்டோபர் 11ம் திகதி அவர் குண்டுவீச்சில் தனது நெருங்கிய நண்பரை இழந்தார்-அதன் பின்னர் அவரது குடும்ப உறவுகள் கொல்லப்பட்டனர். ஒக்டோபர் 22 ம் திகதி அவர் கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவர்களின் சடலங்களுடன் காணப்பட்டார்.23 ம் திகதிஇடிபாடுகளிற்கு மேலாக நடந்துசென்ற அவர் நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றோம் என தெரிவித்தார். ஆரம்பத்தி;ல் என்ன செய்கின்றேன் என்பதோ என்ன செய்யப்போகின்றேன் என்பதோ தெரியாத நிலையில் நான் காணப்பட்டேன் என தெரிவிக்கும் அவர் நான் நடக்கும் விடயங்களை பதிவிட்டு நாங்கள் இங்கே இருக்கின்றோம் என தெரிவிக்க விரும்பினேன் என குறிப்பிட்டார். அவரது சமூக ஊடக செயற்பாடுகளும் பிரபலமும் அவருக்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன,அவர் தான் சந்தித்த அனுபவங்களால் களைப்படைந்துள்ளார், பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றார், தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளார் அவர் தனது சகாக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். விமானகுண்டுவீச்சில் அவர்களின் வீடுகள் எப்படி நொருங்கின தரைமட்டமாகின என்பதை நேரில் பார்த்துள்ளார். நான் எனது நண்பர்களை இடிபாடுகளிற்குள் இருந்து இழுத்தெடுத்தேன் என அவர் தெரிவிக்கின்றார். நேற்று நான் எனது வீட்டில் ஒரு கால் கட்டிலும் ஒரு கால் தரையிலுமாக உறங்கினேன் , நான் அங்கேயே இருக்கவேண்டுமா வெளியேறவேண்டுமா என்பது தெரியாத நிலையிலிருந்தேன், எனது தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவர் பதிவிட்டுள்ளார். நான் தற்போது காசாவில் இல்லை என அவர் நவம்பர் நான்காம் திகதி பதிவில் தெரிவித்தார். இஸ்ரேலிய துருப்பினரின் பிடியில் தனது வீடு உள்ளதால் மீண்டும் திரும்பி செல்வது ஆபத்தானது என அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் யுத்தம் குறித்த தகவல்களை வெளியிடுவதாக தன்னை சமூக ஊடகங்களில் பதிவு செய்பவர்களிற்கு தெரிவித்துள்ள அவர் அதேவேளை தனக்குள்ள மட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளார். நான் சுப்பர்மான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் சோர்வடைந்து விழப்போகின்றேன் போல உணர்கின்றேன் என கமராவை பார்த்தபடி அவர் தெரிவித்தார். அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் எனது உயிருக்கு ஆபத்தில்லாமல் அவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/169207
  21. இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கும் ஹமாஸின் ரகசிய சுரங்கப் பாதைகள் 13 நவம்பர் 2023, 02:23 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவியது. இதைத்தொடர்ந்து, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஹமாஸ் குழுவை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் இஸ்ரேலுக்கு சவாலாக விளங்குவது, அக்குழுவினர் பூமிக்கடியில் அமைத்துள்ள ரகசிய சுரங்கப் பாதைகள்தான். இஸ்ரேலை தாக்க ஹமாஸ் பல்வேறு ரகசிய சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது. ஹமாஸ் குழுவினர் தங்குவதற்காகவும் அவர்கள் சென்றுவரும் பாதையாக பயன்படுத்தவும் அக்குழுவினரால் ஏராளமான ரகசிய சுரங்கப் பாதைகள் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளன. தங்கள் திட்டங்களை வகுக்கவும் இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது. எல்லை தாண்டிய இந்த சுரங்கங்கள் வழியாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலை அடைய முடியும். சுரங்கங்களை பயன்படுத்தி பல்வேறு தாக்குதல்களையும் ஹமாஸ் நிகழ்த்தியுள்ளது. ஹமாஸை பூமியிலிருந்து அழித்தொழிக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதற்கு முதலில் இந்த ரகசிய சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் அழிக்க வேண்டும். ஆனால், ஹமாஸின் சுரங்கப் பாதைகளை முற்றிலுமாக அழிப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பது அதன் வலுவான கட்டமைப்பிலிருந்து தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காஸாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப் பாதை எப்படி இருக்கும்? காஸாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப் பாதைகள் சுமார் 80 மீட்டர் வரை ஆழம் கொண்டவை. பூமிக்கடியில் 20 மீட்டர் உயரத்தில் தடுப்பரணும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தில் ஆயுதங்களை மறைத்து வைக்க, திட்டங்களை வகுக்க, பணயக் கைதிகளை வைக்க பயன்படுத்தப்படும் அறைகள் உள்ளன. மேலும், சுரங்கப் பாதைகளின் கட்டமைப்பை வலுப்படுத்த கான்கிரீட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதைகள் சுமார் 1.8 மீட்டர் உயரம் கொண்டவை. அதேபோன்று, பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயன்படுத்திய சுரங்கப் பாதையைக் காண பிபிசியின் குவென்டின் சோமர்வில்லேவுக்கு 2015 இல் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் ரகசிய இடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சுரங்கம் மேற்பரப்பிலிருந்து 30 மீட்டர் ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. குடியிருப்பு கட்டடங்களுக்கு உள்ளே அவற்றின் நுழைவுவாயில்கள் இருப்பது பொதுமக்களை வான்வழி தாக்குதல் ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும் இந்த சுரங்கத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டு காஸாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்த சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம்சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறது. ’காஸா மெட்ரோ’ காஸாவில் உள்ள சுரங்க கட்டமைப்பை 2021ஆம் ஆண்டு வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக இஸ்ரேல் கூறியது. அந்த சுரங்கப் பாதையை`காஸா மெட்ரோ` என இஸ்ரேல் கூறுகிறது. ஏனென்றால், அந்த சுரங்கம் 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த மோதலைத் தொடர்ந்து இந்த சுரங்கத்தில் 100 கி.மீக்கும் அதிகமான சுரங்க அறைகள் வான்வழித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், தங்களின் சுரங்கம் 500 கி.மீ. வரை நீளம் கொண்டதாகவும் அதில் 5 சதவீதம் மட்டுமே தாக்கப்பட்டதாகவும் ஹமாஸ் பதிலுக்குக் கூறியிருந்தது. ஹமாஸ் சுரங்கப் பாதைகளை இஸ்ரேலால் அழிக்க முடியுமா? ஹமாஸ் சுரங்கப் பாதைகள் கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவுவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன. "சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார், இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக்.. மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கப் பாதைகளை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார். “சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் அவர். இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/cv2zej0g2y2o
  22. பலஸ்தீன மோதல் : மேற்குலகின் ஆதரவை இழக்கிறதா உக்ரேன்? Published By: VISHNU 12 NOV, 2023 | 04:58 PM சுவிசிலிருந்து சண் தவராசா காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் ஒரு மாதத்தையும் கடந்து தொடர்கிறது. அந்தப் பிராந்தியத்தில் தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டி விட்டது. அதில் மூன்றிலொரு வீதத்தினர் சிறார்கள் என்கின்ற செய்தி பதைபதைப்பைத் தருகின்றது. இருந்தும் மேற்குலகை ஆள்வோரின் மனச்சாட்சி இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை என்பதைப் பார்க்க முடிகின்றது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்துக்காகக் குரல் தந்து கொண்டிருக்கையில் ‘ஒப்புக்குச் சப்பாணி’ என்பதைப் போன்று ‘மனிதாபிமான மோதல் தவிர்ப்பு’ என்பதைப் பற்றியே மேற்குலகம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. இந்த வேளையில் உலகின் மனச்சாட்சி உள்ள நாடுகள் இஸ்ரேலுடனான தமது இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதன் ஊடாக தமது கடுமையான நிலைப்பாட்டை இஸ்ரேலுக்கும், முழு உலகிற்கும் பறைசாற்றி வருகின்றன. இந்த வரிசையில் இறுதியாக ஆபிரிக்க நாடுகளான தென் ஆபிரிக்கா மற்றும் சாட் ஆகியவை இணைந்து உள்ளன. ஏற்கனவே பொலீவியா, துருக்கி, ஜோர்தான், ஹொன்டுராஸ், கொலம்பியா, சிலி ஆகிய 7 நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளைத் துண்டித்து உள்ளமை தெரிந்ததே. தொடர்ந்துவரும் நாட்களில் இந்த அணியில் மேலும் பல நாடுகள் சேர்ந்து கொள்ளும் அறிகுறிகள் தென்படுகின்றன. மறுபுறம், அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. தமது சகோதரர்கள் காஸாவில் வகைதொகையின்றிக் கொல்லப்படுவது தொடர்பில் அரபுலக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆத்திரம் செயற்பாடுகள் ஊடாக வெகுவிரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, காஸா மோதல் ஆரம்பமான நாள் முதலாக உக்ரேன் போர் தொடர்பிலான செய்திகள் இரண்டாம் பட்ச நிலைக்குச் சென்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உக்ரேனின் ‘பதில் தாக்குதல் நடவடிக்கை’ உரிய பலனைத் தராத நிலையில், ஒருசில விட்டுக்கொடுப்புடன் ரஷ்யாவுடன் சமரசத்துக்குச் செல்லுதல் தொடர்பான செய்திகளும் சமாந்தரமாக வெளியாகத் தொடங்கியுள்ளன. இவ்வாறான செய்திகளை வழக்கம் போன்றே உக்ரேன் அரசுத் தலைவர் விளாடிமிர் ஷெலன்ஸ்கி மறுத்திருந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகை வராது’ என்பதைப் போன்று திரைமறைவில் ஏதோ காய்நகர்த்தல்கள் உள்ளதாகவே தெரிகின்றது என்கின்றன விஷயமறிந்த வட்டாரங்கள். உக்ரேனின் இராணுவத் தலைமைக்கும் அரசுத் தலைமைக்கும் இடையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்ற விடயம் தொடர்பில் அண்மைக்காலமாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை மெய்ப்பிப்பது போன்று தற்போதைய கள நிலவரம் தொடர்பில் அண்மையில் படைத் தளபதி தெரிவித்த கருத்தும் அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான விளக்கமும் அமைந்திருந்தது. 'ரஷ்யாவுடனான மோதல் ஒரு தேக்க நிலையை அடைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் எந்தவொரு அணியும் பாரிய வெற்றி எதனையும் பெற்றுவிட முடியாத நிலை உள்ளது. அது முதலாம் உலகப் போரை ஒத்த ஒரு நிலை.' என ஜெனரல் வலரி சலுஸ்னி பிரித்தானியாவின் ‘த எக்கோனமிஸ்ட்’ ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்குப் பதிலளித்த அரசுத் தலைவர் அலுவலக உதவியாளர் இகோர் சொவ்க்வா, ஜெனரல் வலரி சலுஸ்னியின் கருத்தைக் கண்டித்ததுடன் அந்தக் கருத்து ரஷ்யத் தரப்புக்கு ஆதரவு அளிப்பது போன்று உள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு இந்தக் கருத்து வெளியான கையோடு மேற்குலக ராஜதந்திரிகள் பலரும் தன்னைத் தொடர்பு கொண்டு அவர் கூறியது உண்மையா எனக் கேட்டனர் எனவும் கூறியிருந்தார். அதேவேளை, கடந்த 6ஆம் திகதி ஜெனரல் வலரி சலுஸ்னியின் நெருங்கிய சகாவான மேஜர் கென்னடி சாஸ்ற்யக்கோவ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார். தனது பிறந்தநாளை ஒட்டி வழங்கப்பட்ட பரிசுப்பொதியை தனது மகனுடன் இணைந்து பிரிக்கும் போது பரிசாக வழங்கப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் மேஜர் கென்னடி சாஸ்ற்யக்கோவ் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சம்பவ இடத்தில் மேலும் பல கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இது திட்டமிட்ட தாக்குதல் எனவும், அந்தத் தாக்குதலில் ஜெனரல் வலரி சலுஸ்னியே இலக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடும் என ஓர் ஊகமும் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, உக்ரேன் தரப்பு கலகலத்துப் போயுள்ள நிலையில் படைத்துறைக்கும் அரசுக்கும் இடையில் பிளவு உள்ளதாக வெளியாகும் செய்திகளும், உக்ரேனை மேற்குலகு படிப்படியாகக் கைகழுவி வருவதாக வெளியாகும் செய்திகளும் உக்ரேனின் போர் வெற்றி தொடர்பில் மேற்குலகம் நம்பிக்கையிழந்து வருவதன் அறிகுறியே என நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள். உக்ரேனின் அரசு இயந்திரம் ஊழலில் மூழ்கித் திளைக்கின்றது என்ற செய்தி ஒன்றும் புதியதல்ல. அண்மைக் காலமாக இது விடயத்திலும் மேல்நாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு தேர்தல் நடக்குமானால் ஸெலென்ஸ்கி மாற்றப்பட வேண்டும் என்ற வகையிலான தகவல்களையும் மேற்குலக ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது. இரண்டு வருடங்களை நிறைவு செய்யவுள்ள போரில் உக்ரேன் தரப்பு பாரிய மனித இழப்பைச் சந்தித்துள்ளது. படையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வயோதிபர்களைக் கூட கட்டாயமாகப் படையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. உக்ரேன் தரப்புக்கு உதவி செய்யும் மேற்குலகம் மேலதிக உதவிகளை, படைத் தளபாடங்களை வழங்கத் தயாராக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த மனிதவலு அவசியம் என்பது தொடர்பில் குறித்த நாடுகள் கரிசனை கெண்டிருப்பதும் செய்திகளில் அடிபடுவதைப் பார்க்க முடிகின்றது. மேற்குலக ஊடகங்கள் மற்றும் அவற்றுக்குத் தகவல்களை வழங்கும் வட்டாரங்களின் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கையில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை இடத்தில் இருந்த உக்ரைன் தற்போதைய காஸா மோதல் காரணமாக தனது முதன்மையை இழந்திருக்கின்றது என்பது தெட்டத் தெளிவாகின்றது. காரணம் எதுவானாலும் உக்ரைன் போர் முடிவுக்கு வருமானால் அது அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே. உலக சமாதானத்துக்கும் அது அவசியமானது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. https://www.virakesari.lk/article/169131
  23. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் சண்டை முடிஞ்சு சமாதானம் வந்திட்டுது போல இருக்கே! ஒரு செய்தியையும் காணேல!!
  24. காஸாவில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? அதன்மூலம் என்ன சாதித்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் பீல் பதவி, பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி நியூஸ் 35 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. அக்டோபர் 7ஆம் தேதி முதன்முதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய கொடூரமான தாக்குதலில் இருந்துதான் இதெல்லாம் தொடங்கியது. அந்த தாக்குதலில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இலக்கானது ஆரம்பம் முதலே தெளிவாக உள்ளது. ஹமாஸ் இயக்கத்தை ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக துடைத்தெறிவதுதான் அதன் நோக்கம். இந்நிலையில், காஸாவுக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது? தனது இலக்கை அடைவதில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது மற்றும் அதனால் இந்த இலக்கை அடைய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலை பொறுத்தவரை, இந்த தாக்குதல் நடவடிக்கை அவ்வளவு எளிதில்லை என்றும் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடியது என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறது. பிபிசியுடன் பேசிய மூத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரி, தற்போதைய நிலையை குத்துச்சண்டை போட்டியோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். 15 சுற்று போட்டியில் தாங்கள் இப்போது 4ம் சுற்றில் இருப்பதாக அவர் கூறுகிறார். இஸ்ரேலை சேர்ந்த யாராலுமே இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியவில்லை. சிலர் மேற்கத்திய ஆதரவு இராக் ராணுவம் மற்றும் ஐ.எஸ். இயக்கத்திற்கு இடையே நடைபெற்ற சண்டையை மேற்கோள் காட்டுகின்றனர். அதன்படி, 2017ம் ஆண்டு ஐ.எஸ்.ஸிடமிருந்து மொசூலை மீண்டும் கைப்பற்ற இராக் ராணுவத்திற்கு 9 மாதங்கள் தேவைப்பட்டதை உதாரணமாக கூறுகின்றனர். அதே சமயம், சர்வதேச அளவில் சண்டை நிறுத்தம் அல்லது போர் நிறுத்தம் செய்யக்கோரி அழுத்தம் அதிகரித்து வருவதால் நீண்ட காலத்திற்கு இஸ்ரேலாலும் இந்த சண்டையை நடத்த முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES காஸாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தபட்சம் 11,078 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நாளில் காஸாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் வடக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. காஸாவின் வடக்குப் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் கடற்கரையை ஒட்டிய பகுதியை இஸ்ரேல் ராணுவம் இரண்டாகப் பிரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறியபோது அங்கிருந்த மக்களை தெற்குப் பகுதியை நோக்கிச் செல்ல கூறியிருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவை சுற்றி வளைத்தபோது அனைத்து மக்களும் தெற்குப் பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். காஸா நகரப் பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அமைந்திருக்கக்கூடிய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி ஹமாஸ் ஆயுதக்குழுவினரோடு சண்டையிட்டு வருகின்றனர். அல் ஷிஃபா மருத்துவமனை காஸாவின் வடக்குப் பகுதி கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலும் ஹமாஸும் சண்டையிட்டு வருகின்றனர். காஸாவிலேயே பெரிய மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல் பட மூலாதாரம்,REUTERS காஸாவிலேயே பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவில் இருக்கும் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அல் ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் 37 குழந்தைகள் உட்பட 100 நோயாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையம் கூறுகையில், இந்த மருத்துவமனையோடு தங்களுக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 100மீட்டர் தூரத்தில் இஸ்ரேலின் ராணுவ டாங்கிகள் ஹமாஸ் மீது தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அல் ஷிஃபா மருத்துவமனையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் அல் ஷிஃபா மருத்துவமனையின் பிரசவ அறைகள் இருக்கும் பகுதி உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அல் ஷிஃபா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உலக அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகமாகியுள்ளன. இரண்டு பக்கமும் பேரிழப்பு இதுவரை பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி அதில் ஹமாஸின் மூத்த தளபதிகள் உட்பட டஜன் கணக்கான இலக்குகளை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது இஸ்ரேல். ராணுவ நிபுணர் மற்றும் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான யாகோவ் காட்ஸ், இஸ்ரேல் இதுவரை இருபத்தி மூன்றாயிரத்திற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார். இராக் மொசூலில் நடைபெற்ற போரின் கடைசி நேரத்தில் கூட மேற்கு நாடுகளின் கூட்டணி படைகள் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரே வாரத்தில் 500 குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் அளித்துள்ள தகவலின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காஸாவில் 10,800 மக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 4,400 குழந்தைகளும் அடங்குவார்கள். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெற்றிகரமாக காஸாவை தெற்கு மற்றும் வடக்கு என பிரித்து விட்டதாகவும், காஸா நகரம் முழுவதையும் அதன் படை சுற்றிவளைத்துள்ளதாகவும் கூறி வருகிறது. தற்போது அவர்கள் நகரத்தின் மையப்பகுதி வரை வலுவாக ஊடுருவியுள்ளதாக கூறுகின்றனர். ஆனாலும் கூட இன்னும் காஸா முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அவர்களால் அறிவிக்க முடியவில்லை. அதே சமயம் மறுபுறம், இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாகவோ அல்லது காஸாவுக்குள் தீவிரமாக ஊடுருவியுள்ளதாகவோ தெரியவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது. பட மூலாதாரம்,SAID KHATIB/AFP இஸ்ரேல் ராணுவம் ஹமாஸை தனிமைப்படுத்தும் இலக்கோடுதான் தனது தரைவழி தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஹமாஸ் இயக்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடங்கியபோது ஹமாஸ் இயக்கத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை வீரர்கள் இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 10 சதவீதம் அல்லது 4,000 வீரர்கள் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது போன்ற கணக்கீடுகளை சரிபார்ப்பது சாத்தியமற்றது. இருப்பினும், ஏற்கனவே காஸா மீது இஸ்ரேலின் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலினால் ஹமாஸின் போர்த்திறன் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம் இஸ்ரேலிய ராணுவமோ குறைந்த இழப்புகளையே பெற்றுள்ளதாக தெரிகிறது. தரைவழி தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது இஸ்ரேல். பெரும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவே இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழி நடவடிக்கைகளை மிக கவனமாக கையாள்வதாக இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிபுணர் யோசி குபர்வாசர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்னும் எவ்வளவு ஹமாஸ் இயக்கத்தினர் வடக்கு காஸாவில் இருக்கிறார்கள் அல்லது எவ்வளவு வீரர்கள் சுரங்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தெற்கு நோக்கி எவ்வளவு பேர் சென்றிருக்கலாம் என்று சரியாக தெரியாத சூழலே நிலவுகிறது. காஸாவின் சுரங்கங்கள் இன்னமும் இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன. சண்டையின் போது சுரங்கங்களில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக இஸ்ரேல் படைகள் தாங்கள் கண்டறியும் சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நகரங்களில் போர் புரிவதில் சவால்கள் உளவுத்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றின் திறன் அடிப்படையில் இஸ்ரேலின் முன்னிலை தெளிவாக உள்ளது. இதனால், காஸாவின் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் நெட்வொர்க் அனைத்தையும் முடக்க முடியும். இஸ்ரேலின் அதிநவீன விமானப்படை அதன் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தரையில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியாது. இன்னமும் கூட தினமும் 100 புதிய தாக்குதல் இலக்குகளை கண்டறிவதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர் எவ்வளவு தூரம் இழுத்து கொண்டே போகிறதோ, அதே போல் இந்த பட்டியலும் குறையாமல் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு இந்த போர் தொடரும் வரை , எதிரிகளை கண்டறிந்து வீழ்த்துவதற்கு அதிகம் தரைப்படையினரையே நம்பியிருக்கும் சூழல் உள்ளது. இஸ்ரேலிய படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்ற போதும், நகர்ப்புறங்களில் போர் புரிவது அவர்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம். இஸ்ரேல் இது வரை தரைப்பகுதியில் குறைவான அளவிலேயே போர் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட பல காணொளிகளிலும் கூட அதன் தரைவழி சண்டைகள் பெரும்பான்மையாக அதன் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சார்ந்து இருப்பதையே காட்டுகின்றன. மதிப்பீடுகளின் அடிப்படையில் , தற்போதைய நிலவரப்படி காஸா பகுதிக்குள் 30 ஆயிரம் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இருக்கலாம். ஆனால் இது அதன் ஒட்டுமொத்த ராணுவமான 1.60 லட்சம் செயல் வீரர்கள் மற்றும் 3.60 லட்சம் ரிசர்வ் வீரர்களில் ஒரு சிறு பகுதிதான். ராணுவ நிபுணரான ஜஸ்டின் கிரம்ப் பேசுகையில், இங்கே கேள்வி என்னவென்றால் காஸாவில் உள்ள ஒட்டுமொத்த கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்களை மொத்தமாக அழித்தொழிக்க எத்தனை தரைப்படை வீரர்களை இஸ்ரேல் நிலைநிறுத்தப்போகிறது? இதற்கு பதிலாக, அது ஹமாஸின் வலுவான தளங்களை குறிவைக்கும் முடிவை எடுக்கலாம். இஸ்ரேல் மிக சிறிய அளவிலான சண்டையிடுதலை தவிர்க்க விரும்புவதாக அவர் நம்புகிறார். இது கண்டிப்பாக பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். பட மூலாதாரம்,REUTERS போருக்குப் பின் என்ன நடக்கும்? கேள்வி என்னவென்றால் ஹமாஸை மொத்தமாக அழித்தொழிக்கும் இஸ்ரேலின் இலக்கு சாத்தியப்படுமா? இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் கூட வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களை நம்பும் எந்த ஒரு சிந்தனையையும் மொத்தமாக அழிப்பது சாத்தியமில்லாதது என்றே நம்புகின்றனர். ஹமாஸின் பல மூத்த தலைவர்கள் காஸாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். காட்ஸை பொறுத்தவரை, இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினர் சிலர் பிழைத்திருந்தால் கூட, அவர்கள் “நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் , நாங்கள் வென்று விட்டோம்” என்று கூறலாம். அதனால்தான், அக்டோபர் 7 சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஹமாஸை மொத்தமாக அழிப்பதை விட, அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் இஸ்ரேலின் கவனம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் கிரம்ப். போருக்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை கூறுமாறு இஸ்ரேல் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. நிபுணர்களின் கருத்துப்படி, போருக்கு பிந்தைய திட்டமில்லாமல் தொடங்கப்பட்ட பல போர்கள் வெற்றியில் முடிந்ததில்லை. ஆனால், இஸ்ரேல் ராணுவ முகாமில் இந்த திட்டமிடலை மட்டும் சுத்தமாக காண முடியவில்லை. https://www.bbc.com/tamil/articles/cx01q8p5jnwo
  25. இஸ்ரேல் ஹமாஸ் போர் - காசாவின் தென்பகுதியில் வீதிகளில் சடலங்களும் இஸ்ரேலிய டாங்கிகளும் - தப்பியோடும் மக்கள் தெரிவிப்பு Published By: RAJEEBAN 12 NOV, 2023 | 11:19 AM காசாவின் வடபகுதியில் இடம்பெறும் கடும் மோதல்களில் இருந்து தப்பியோடும் மக்கள் வீதிகளில் இஸ்ரேலிய டாங்கிகளையும் அழுகிய நிலையில் சடலங்களையும் காண்பதாக தெரிவித்துள்ளனர். பொதுமக்களை குறிப்பிட்ட நேரங்களில் சலால் அல் டின் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் துண்டுபிரசுங்கள் மூலமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. தப்பியோடும் மக்களின் பயணம் எவ்வாறானதாக காணப்படுகின்றது. அவர்களின் பயணிக்கும் பகுதிகளில் இருந்து வெளியான வீடியோக்களை பிபிசி ஆராய்ந்துள்ளது.நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை செவிமடுத்துள்ளது.தெளிவான விபரங்களை பெறுவதற்காக செய்மதி படங்களை ஆராய்ந்துவருகின்றது. மோதல்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காசாவில் ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர். ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவின் மீது கடுமையான குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களை சலால் அல் டினான் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்தாலும் அவர்கள் அங்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன் கிழமை அகமட் ஜெயாடா தனது இடம்பெயர்வு குறித்து பிபிசியின் உள்ளுர் பத்திரிகையாளருக்கு கருத்து தெரிவித்தார். வடபகுதியில் உள்ள அல் நசாரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். தனது கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் மிகவும் களைப்படைந்துள்ளோம் என்ன செய்வது எங்கு போவது என தெரியவில்லை யாரிடம் போவது எங்களை காப்பாற்றுங்கள் என யாரிடம் தெரிவிப்பது என கேள்வி எழுப்பியுள்ளார். காசாவின் வடபகுதியில் உள்ள அல்ஜெய்டவுனிலிருந்து மஹ்மூட் கஜாவி தப்பி வெளியேறியுள்ளார் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களே இதற்கு காரணம். மதியம் தனது வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ஐந்து மணித்தியாலங்களாக நடந்துகொண்டிருக்கின்றார் - எங்கு போவது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார். வீதியோரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்தார். பெரும்பாலானவர்கள் நடந்தே செல்கின்றனர் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை வாகனங்களை காசா நகரத்தின் தென்பகுதியின் எல்லையில் விட்டுவிட்டுச்செல்லுமாறு பணித்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. செல்லும் வழியில் நான் பல சடலங்களை பார்த்தேன் வீதியின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகளையும் பொதுமக்களையும் காணமுடிகின்றது ( நெட்சாரிமிற்கு அருகில்) அவர்கள் எங்களை நோக்கி வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் உடல்களை உடல்பாகங்களை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். டெலிகிராமில் வெளியாகியுள்ள மற்றுமொரு வீடியோவில் பெண்ணொருவர் வீதியில் உடல்கள் குறித்து தெரிவித்துள்ளார். நான் நெட்ஜாரிம் சந்தியில் எனது மகனை தேடினேன் தென்பகுதி நோக்கி செல்லும்போது வீதியில் ஏனையவர்களின் உடல்களிற்கு மத்தியில் அவரின் உடலை பார்த்தேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். நான் இஸ்ரேலிய டாங்கிகளை கண்டேன் அவற்றை நான் கவனத்தில் கொள்ளவில்லை திரும்பிபார்த்தபோது எனது மகனின் உடலை பார்த்தேன் அவரது கையடக்க தொலைபேசி உடல்களை வைத்து அவற்றை அடையாளம் கண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட் பெண் முதல்நாள் அல்அக்சா மருத்துவமனைக்கு சென்று தனது மகனை தேடினார் அவர் தனது மகன் இறந்துவிட்டதாக பதிவு செய்தார் அன்றே அவரது மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என உள்ளுர் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். எனினும் சலா அல் டின் வீதிகளில் உடல்கள் காணப்படும் வீடியோக்கள் எவற்றையும் பார்க்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169098

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.