Everything posted by ஏராளன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்க அமெரிக்கா தீர்மானம் Published By: RAJEEBAN 07 SEP, 2023 | 11:49 AM உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனிற்கான அமெரிக்காவின் நிதிமனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக இந்த உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஸ்யா இந்த நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உக்ரைன் தலைநகருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது அமெரிக்காவின் புதிய நிதி உதவி திட்டத்தை அவர் அறிவிப்பார். உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனினும் ஒடெசா பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் தலைநகரில் பிளிங்கென் ரஸ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/164011
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : 2 ஆம் நாள் அகழ்வில் பெண்களின் உள்ளாடையுடன் மனித எச்சம் உள்ளிட்ட இரு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்பு Published By: VISHNU 07 SEP, 2023 | 06:51 PM கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் மார்புக் கச்சையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இரண்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டுதுப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தடையப் பொருட்களும் அகழ்வின்போது மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணி தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில், இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு உலோகத் துண்டுகளும் இவேறு சில ஆதாரப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு பகுதி அளவில் இதுவரை எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் எவையும் இல்லை. இருப்பினும் மீட்கப்பட்ட ஆடைகளில் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டிருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எது எவ்வாறாயினும் இவற்றை விரிவாக ஆராய்ந்து, பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இதுதொடர்பில் கூறமுடியும் என்றார். மேலும் குறித்த அகழ்வுப்பணி இடம்பெறும் இடத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164058
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷ்ய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும். இந்த தொகுப்பில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ரொக்கெட்களுக்கு எதிராக செயற்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ரொக்கெட்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. https://thinakkural.lk/article/272200
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்துக்கள் நுழைந்த புலனாய்வாளர்கள் 06 SEP, 2023 | 09:26 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06)நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்குவிசாரணையின்போது குறித்தபகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமைதொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந் நிலையில் அகழ்வாய்வின் முதலாம்நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வய்வு தொடர்பிலும், பொலிசாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள்மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/163991
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரயான் - 3: தூங்கும் விக்ரம் லேண்டர் உயிர்த்தெழப் போவது எப்போது? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் மையத்தில் ஒரு சிறிய புள்ளியாகத் தென்படுகிறது. "சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது" என்று நாசா குறிப்பிட்டுள்ளது. சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று நிலாவில் அதிகம் ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தின் தரையில் இறங்கியது. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து, நிலாவைச் சுற்றிவரும் தனது லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள கேமரா இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக நாசா கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலாவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. கடந்த மாதம், விக்ரம் லேண்டர் - பிரக்யான் என்ற ரோவரை அதன் வயிற்றில் சுமந்து கொண்டு - நிலாவின் தென் துருவத்திலிருந்து சுமார் 600 கிமீ தொலைவில் தரையைத் தொட்டது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயர் இந்தியாவுக்குக் கிடைத்தது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. லேண்டர் மற்றும் ரோவர் நிலாவின் மேற்பரப்பில் சுமார் 10 நாட்கள் செலவிட்டன. தரவு மற்றும் படங்களை சேகரித்தன. "தங்கள் பணி நோக்கங்களை கடந்து விட்டதாக" இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கூறுகிறது. கடந்த வார இறுதியில், சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டதாக கூறியது. "சூரிய சக்தி குறைந்து பேட்டரி தீர்ந்தவுடன் லேண்டரும் ரோவரும் தூங்கிவிடும்" என்று இஸ்ரோ கூறியது. சந்திரனில் சூரியன் கதிர் விழும் அடுத்த நாள் தொடங்கும் போது செப்டம்பர் 22-ஆம் தேதி லேண்டரும் ரோவரும் மீண்டும் உயிர்த்து எழும் என்று நம்புவதாக இஸ்ரோ மேலும் கூறியது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும் செயல்படுவதற்கும் சூரிய ஒளி தேவைப்படுகிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பிரக்யான் ரோவர் நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தியது இந்திய விண்வெளி நிறுவனம் லேண்டர் மற்றும் ரோவரின் இயக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளது பற்றிய வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சந்திர மேற்பரப்பில் விக்ரம் ஒரு "வெற்றிகரமான ஹாப் பரிசோதனை" செய்ததாக இஸ்ரோ கூறியது. இந்தப் பரிசோதனையின்போது விக்ரம் லேண்டர் மீண்டும் ஒருமுறை நிலவின் தரைப்பரப்பில் இருந்து குதித்து மீண்டும் தரையிறங்கியது. சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் "அதன் சிறு ராக்கெட்டுகளை உயிர்ப்பித்தவுடன் அது சுமார் 40 உயரத்துக்கு குதித்து 30-40 தொலைவில் தரையிறங்கியது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் இருந்து பொருள்களை கொண்டு வரவும், மனிதர்களை அழைத்துச் செல்லவும் விண்கலம் பயன்படுத்தப்படலாம் என்று அது மேலும் கூறியது. https://www.bbc.com/tamil/articles/c72e3x1ze1vo
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம் ! 06 SEP, 2023 | 09:00 AM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்தவாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் செப்டெம்பர் (05)நேற்று குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கமுடியவில்லை. அதனடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மனிதபுதைகுழி அமைந்தபகுதி குற்றப் பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த புதைகுழிப்பகுதிக்கு பாதுகாப்பு கூரைகள் அமைக்கப்பட்டு இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறைசார்ந்தோர், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,தடையவியல் போலிசார், சமூக ஆர்வலர் அ.பீற்றர்இளஞ்செழியன், கிரமாஅபிவிருத்திச்சங்கத் தலைவர் கி.சிவகுரு பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/163920
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரனில் 40 சென்ரிமீற்றர் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர்: புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை Published By: SETHU 05 SEP, 2023 | 01:47 PM சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்த, சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், தரையிலிருந்து 40 சென்ரிமீற்றர் மேலெழும்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இஸ்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. இது சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தனது கட்டளைகளின்படி, விக்ரம் லேண்டரின் என்ஜின்கள் இயங்க ஆரம்பித்து, எதிர்பார்க்கப்பட்டவாறு 40 சென்ரிமீற்றர் உயரத்துக்கு அந்த லேண்டர் கிளம்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர், 30 முதல் 40 சென்ரிமீற்றர் அளவிலான தூரம் நகர்ந்து மீண்டும் சந்திரனின் தரையில் அது இறங்கியது. என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று முற்பகல் தெரிவித்தது. இது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் சந்திரனில் மேற்கொண்ட இரண்டாவது ‘மென் தரையிறக்கம்’ எனவும், இது சந்திரயான் -3 திட்டத்தின் இலக்குகளை விஞ்சிய செயற்பாடு எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரனின் தரையிலிருந்தவாறு விக்ரம் தரையிறங்கிக் கலம் மீண்டும் இயங்க ஆரம்பித்து, அக்கலம் தாவி இறங்கியமையானது முக்கியமான ஒரு பரிசோதனையாக கருதப்படுகிறது. சந்திரனிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் எதிர்காலத் திட்டங்களுக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இப்பரிசோதனைக்கான திட்டம் குறித்து இஸ்ரோ முன்னர் அறிவித்திருக்கவில்லை. கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் (தரையிறங்கி) கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் எனும் தரையூர்தி (ரோவர்) வெளியில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. சந்திரனின் தென் துருவத்தில் அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், மங்கனீஸ், டைட்டானியம், ஒட்சிசன் உட்பட பல மூலகங்கள் இருப்பது பிரக்யான் ஊர்தியிலுள்ள ஆய்வுக்கருயின் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உறங்கு நிலையில் விக்ரம், பிரக்யான் இதேவேளை, சந்தியான்-3 திட்டத்தின் இலக்குகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரனில் செப்டெம்பர் 4 ஆம் திகதி சூரியன் மறைய ஆரம்பிக்கும் நிலையில் விக்ரம் மற்றும் பிரக்யானை உறங்கு நிலைக்கு செல்கின்றன அறிவித்துள்ளது. சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்குச் சமனாகும். இதனால் சந்திரனில் சூரிய ஒளி கிடைக்கும் ஒரு பகல் பொழுது (பூமியில் 14 நாட்கள்) மாத்திரம் விக்ரம் லேண்டர், மற்றும் பிரக்யான் ஊர்தி ஆகியன தரவுகளை அனுப்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த 14 நாட்களுக்கு கருவிகள் இயங்குவதற்கு சூரிய ஒளி கிடைக்காது என்பதே இதற்குக் காரணம். சந்திரனின் தென் துருவத்தில் மீண்டும் செப்டெம்பர் 22 ஆம் திகதியின் பின்னரே சூரிய ஒளி கிடைக்கலம். மீண்டும் சூரிய ஒளி கிடைத்தால் விக்ரம் மற்றும் பிரக்யான் மீண்டும் இயங்க ஆரம்பிக்குமா என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று பிற்பகல் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட பதிவொன்றில் 'இந்திய நேரப்படி அன்று (திங்கள்) இரவு 8.00 மணி முதல் விக்ரம் உறங்குநிலைக்கு செல்கிறது. அதற்குமுன் விக்ரமின் புதிய இடத்தில் வைத்து, அதன் ஆய்வுக்கருவிகளான சாஸ்ட், ரம்பா-எல், இல்சா (ILSA) ஆகியன பரிசோதனைகளில் ஈடுபட்டன. அவற்றின் தரவுகள் பூமியில் சேகரிக்கப்பட்டன. இப்போது அக்கருவிகள் அனைத்து வைக்கப்பட்டுள்ளன. லேண்டரின் ரிசீவர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரக்யானுக்கு அருகில் விக்ரம் உறங்கும். செப்டெம்பர் 22 ஆம் திகதி அவை மீண்டும் விழித்தெழும் என நம்புகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (சேது) https://www.virakesari.lk/article/163870
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம் Published By: VISHNU 05 SEP, 2023 | 05:06 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார். அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும், எத்தனை இருக்கும் என்பது தொடர்பாக கூற முடியும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/163888
-
வடக்கு ரயில் மார்க்கத்தை ஜனவரி முதல் மூட நடவடிக்கை
நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271824
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
ISRO-ன் புது Video: Vikram Lander-ஐ India-ல் இருந்தே நகர்த்திய ISRO; இனி நிலவுக்கு சென்று வரலாம்?
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
குட்டிக் கதைகள்.
பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
கொல்லிமலை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல மருத்துவ பரிசோதனை - ஏன் இந்த ஏற்பாடு? பட மூலாதாரம்,PARTHIBAN கட்டுரை தகவல் எழுதியவர், சுரேஷ் அன்பழகன் பதவி, பிபிசி தமிழுக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. நாமக்கல் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் காரவள்ளி இருக்கிறது. இதுதான் எழில் கொஞ்சும் கொல்லிமலையின் அடிவாரப் பகுதி. 70 கொண்டை ஊசி வளைவு அடிவாரப் பகுதியில் வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. இங்கிருந்து சுமார் 500 மீட்டரில் இருந்து கொண்டை ஊசி (HAIR PIN BEND) வளைவுகள் துவங்குகின்றன. அங்கிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். பேருந்து நிலையம் இங்குதான் உள்ளது. பேருந்து வசதியைப் பொருத்தவரை பிரச்னை இல்லை, தாராளமாகவே கிடைக்கிறது. ஆனால், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களே அதிகம். அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 300 அடி உயரம் கொண்டது. மூலிகைகள் ஊடாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் இதில் குளிக்கவே, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இத்தனை கஷ்டப்படுகின்றனர். பட மூலாதாரம்,PARTHIBAN கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 15 வயதில் இருந்து அனுமதிக்கப்படுகிறார்கள். சிறியவர்களுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இளையவர்கள் சுமார் இரண்டு மணி நேரத்தில் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுவிடலாம், சுமார் 50 வயதுடையவர்கள் செல்ல சுமார் 3 மணி நேரமாகும். அருவியில் சில நாள் நீர் அதிகமாகவும், சில நாள் நீர் குறைவாகவும் வரும், இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட கோவில். மயங்கி விழுந்த வாலிபர் கொல்லிமலையை சுற்றிப் பார்க்க ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நிதிஷ் காந்த், 22 என்பவர் வந்தார். மலைப்பகுதியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியைக் காண அந்தப் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 700 படிக்கட்டுகளைக் கடந்தபோது நிதிஷ்காந்த் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். கொல்லிமலை தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். அருவிக்குச் செல்லத் தடை இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் வகையில், கொல்லிமலை வனத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உடல் தகுதி அவசியம் பட மூலாதாரம்,PARTHIBAN அந்த வகையில் தற்போது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் நுழைவு வாயில் பகுதியில் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் உடல்நிலை குறைவால் வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுறுத்தலின் பேரில் கொல்லிமலை வனத்துறையினர் தற்போது இதைக் கடைபிடித்து வருகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், "ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுமார் 1,200 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் முன்பே இதயப் பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளோம்," என்று கூறினார். அதிக உடல் பருமனோடும் நடக்க முடியாமலும் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை மூலம் கண்டறிந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், "சுற்றுலா பயணிகள் சிலர் தெரியாமல் சென்று விடுகின்றனர். அவர்கள் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு, கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுத்துச் சென்றாலும் பரவாயில்லை. போட்டி, போட்டுக் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சிக்குச் சென்ற நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவர் தனது அண்ணனுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருந்துள்ளது. மேலும், உடல் பருமனுடன் இருந்துள்ளார்," என்று கூறுகிறார் ராஜாங்கம். மருத்துவ பரிசோதனை பட மூலாதாரம்,PARTHIBAN இந்தச் சம்பவத்திற்கு பிறகு வனத்துறை மூலமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணித்து சந்தேகம் வருபவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியே அனுப்பி வருவதாகக் கூறுகிறார் ராஜாங்கம். சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவற்றை வனத்துறையினர் பரிசோதனை செய்கிறார்கள். இதற்காக வனத்துறைக்கு உரிய மருத்துவ உபகரணம் கொடுத்து, உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை மூலம் பரிசோதித்து, அதில் இந்த நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளை ஏறும் உடல் தகுதி உள்ளவர்களைத் தவிர மற்றவர்களை அனுப்ப வேண்டாம் என வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளும் மூச்சு வாங்கும்படி செல்லாமல் ஆங்காங்கே அமர்ந்து உரிய ஓய்வு எடுத்துச் செல்ல வேண்டும். இதை உணர்ந்து நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் பிரச்னை வராது. இதை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்," என்று வலிபஉறுத்துகிறார் ராஜாங்கம். வனத்துறை மூலமாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புவது வரவேற்கத்தக்கது என்று கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். "பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் உடல் நலத்திற்கு ஏற்ப நீர்வீழ்ச்சிக்குச் சென்று குளிக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு பெரிய இலக்குதான். கவனமாகச் சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டும். பாறை நிறைந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும்," என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதை சுற்றுலா பயணிகள் உணர்ந்து பத்திரமாக நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு நலமோடு திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் கூறினர். https://www.bbc.com/tamil/articles/c2jzg922dx4o
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் - தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல் 03 SEP, 2023 | 01:54 PM "வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கான பதில்கள் மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடும்" (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எனவே செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி அகழ்வுகளை சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை செவ்வாய்கிழமை (5) மேற்கொள்வதென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி இப்புதைகுழி அகழ்வின்போது பின்பற்றப்படவேண்டிய நியமங்கள் மற்றும் இதனை அடிப்படையாகக்கொண்ட அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டுமெனக் கேள்வியெழுப்பியபோதே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர். மனிதப்புதைகுழி விவகாரங்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனடிப்படையிலேயே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் இப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டிய அவர், தற்போது கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இந்நடவடிக்கைகள் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதைப்போன்று, ஏனைய மனிதப்புதைகுழி அகழ்வு விவகாரங்களிலும் உரியவாறு செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கான நிதியொதுக்கீட்டை வலியுறுத்துவதில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதாகவும், அதன்மூலம் இப்பணிகளுக்கென 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜெ.தற்பரன் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார். அதேவேளை இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டதுடன், எனவே இவ்விசாரணைகள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். அத்தோடு இதுபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளிடம் தாம் வலியுறுத்தியிருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் பின்னணியில் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகளைக் கண்காணிப்பதற்கு ஐ.நா அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/163743
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
India's First Sun Mission: வெற்றிகரமாக விண்ணில் சீறிய Aditya-L1; அடுத்தது என்ன?
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
ISROவின் அடுத்த கட்ட பாய்ச்சல்... Aditya-L1 Mission-ல என்ன இருக்கு? Explained
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக அனைத்து உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு Published By: VISHNU 01 SEP, 2023 | 09:05 PM (எம்.ஆர்.எம்.வசீம்) புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன் அது தொடர்பில் அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/163659
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் 31 AUG, 2023 | 09:43 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கு விசாரணை களுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் தொடர்பிலே புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும் அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன ? எங்கிருந்து வந்தார்கள் ? என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் அவர்கள் புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இது தொடர்பாக கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார் இலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருக்கின்றதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குகுளாய் பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களது உரிமை சார்ந்த விடயங்களில் ஈடுபடும் பொது மக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக புலனாய்வு பிரிவினரால் அச்சுறத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தும் நீதித்துறையை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/163608
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இந்தநிலையில், அதன் விசேட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது. நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் எதிர்வரும், 5ம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/271111
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ய நகரமொன்றின் விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் ஆளில்லா விமானதாக்குதல் - விமானங்கள் சேதம் Published By: RAJEEBAN 30 AUG, 2023 | 06:39 AM ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகின்றன. இராணுவம் தாக்குதலை முறியடிக்கின்றது என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். பாரிய தீயை காண்பிக்கும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார் – பெரும் வெடிப்பு சத்தங்களை அந்த வீடியோவில் கேட்க முடிகின்றது. நான்கு இலுசின் 76 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன என உறுதிப்படுத்தப்படாத ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ்கோவ் நகரம் உக்ரைனிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் எஸ்டோனியாவின் எல்லைக்கு அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ரஸ்யாவிற்குள் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து கருத்துகூறுவதை தவிர்த்துவந்துள்ளது. பஸ்கொவ் நகரின் மீதான ஆளில்லா விமான தாக்குதல்களை பாதுகாப்பு அமைச்சு முறியடிக்கின்றது என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நான் நின்றிருந்தேன் உயிரிழப்பு எதுவுமில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை அவசரநிலைக்கான அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள டாஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானதாக்குதல் காரணமாக நான்கு விமானங்கள் சேதமடைந்தன தீப்பிடித்ததில் இரண்டு விமானங்கள் வெடித்துச்சிதறின என டாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/163467
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 03:30 PM தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளிளிடுவதற்காக கடந்த 27 ஆம் திகதி மார்ச் மாதம் 2023 ஆண்டு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில பிரிவுகள் தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அச்சட்ட மூலத்திற்கு தேவையாக திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/163437
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
பள்ளத்தை உணர்ந்த பிரக்யான் ரோவர்; பாதையை மாற்றிய இஸ்ரோ - தற்போதைய நிலவரம்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 நிலாவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், நேற்று(ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது. பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர். அதன்படி, தற்போது ரோவர் புதிய பாதையில் சீராகப் பயணிப்பதாக இஸ்ரோ தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக சந்திரயான்-3 திட்டத்தின் மூன்று இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதேபோல, நிலாவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை குறித்து விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE என்ற கருவி அனுப்பிய தகவல்களையும் இஸ்ரோ பகிர்ந்திருந்தது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நேற்று (ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் வெப்பநிலை என்ன? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE கருவியில் இருந்து முதல் கட்ட தரவுகளை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ChaSTE கருவி சந்திரனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள, தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையை அளவிடுகிறது. அதில் உள்ள வெப்பநிலையை அளவிடும் சாதனம் மேற்பரப்புக்கு கீழே 10 செ.மீ. அடியில் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது. அதில் வெப்பநிலையை அளவிடும் 10 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றில் இரு இலக்குகளை எட்டிவிட்டோம்- இஸ்ரோ பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் கால் பதித்த விக்ரம் லேண்டரும், அதில் இருந்து நிலாவில் தரையிறங்கி ஊர்ந்து சென்ற பிரக்யான் ரோவரும் கச்சிதமாக தங்களது பணியைச் செய்வதாக இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகள் என்ன? அவற்றில் இதுவரை எட்டப்பட்ட இலக்குகள் என்ன? என்பது குறித்து இஸ்ரோ தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. அதன்படி, நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் எனப்படும் தரையிறங்கி கலனில் இருக்கும் மூன்று கருவிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக இஸ்ரோ அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் நகரத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உந்துவிசை கலனில் இருக்கும் ஷேப் எனப்படும் கருவியும் கடந்த ஞாயிறு முதல் இயங்கத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. உந்துவிசை கலனில் உள்ள இந்தக் கருவி சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் பூமியைப் போன்ற தோற்றம் கொண்ட புறக்கோள்களைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ளும். ரோவர் என்ன செய்யும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும் ரோவர் ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன. நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் குழந்தை என்னவெல்லாம் செய்யும்? நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும். மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும். இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ரோவர் மூலமாக நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும். ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன்மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும். அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும். அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தெரிந்துகொள்வது எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட உதவும். இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம். இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவில் இந்தியா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் அனைத்துமே இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான். ஏனென்றால், இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்குமே வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது. அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவு நீடிக்கும் அந்த இரண்டு வாரங்களிலும் நிலவும் உறைபனிக் குளிர் அவற்றின் பாகங்களில் விரிசல்கள் விழச் செய்யலாம். இதனால் அவை விரைவிலேயே இறந்துவிடும். உறைபனிக் குளிரில் இந்தக் கருவிகளால் இயங்க முடியாது என்பதையும் தாண்டி, அவற்றின் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படக்கூடும். உலோகங்களால் உறைபனிக் குளிர் வெப்பநிலையைத் தாங்க முடியாது. அதிலும் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும்போது, அத்தகைய வெப்பநிலையில் அவை சேதமடையக்கூடும். இதனால், லேண்டர், ரோவரின் பாகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது. ஆக, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன. https://www.bbc.com/tamil/articles/c0dg9mlm4ddo
-
விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி செய்தியாளர் 26 ஆகஸ்ட் 2023 சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து மேலும் இரண்டு அமைச்சர்களை விடுவித்த வழக்குகளை விசாரிக்கவுள்ளது. ஏற்கெனவே, அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பாக விடுவித்த வழக்கை எடுத்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்குகளையும் மறு விசாரணை செய்யவுள்ளது. இப்படி தீர்ப்பு வழங்கப்பட்ட முடிந்துபோன வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது வழக்கமான ஒன்று அல்ல என நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில் இந்த வழக்குகளை மறு விசாரணை செய்வதாக நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து கீழமை நீதிமன்றங்களால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்குகளில் வழக்கு தொடுத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், தற்போது மறுவிசாரணைக்கு இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்துள்ளது. அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு பட மூலாதாரம்,THANGAM THENNARASU FB அமைச்சர்கள் மூவரும் விடுவிக்கப்பட்ட வழக்குகளில் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நியாயமாக இல்லை எனவும், கீழமை நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை விடுவித்தன என்றும் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் தனது உத்தரவுகளில் விமர்சித்துள்ளார். கடந்த 2006-2011ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராக இருந்தார். அவர்மீது, 2006ஆம் ஆண்டு மே15ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 74.58 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் 2012ம் ஆண்டு வழக்கு போடப்பட்டது. பத்து ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,KKSSR RAMACHANDRAN அதேபோன்று, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், 2006ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வரை சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து குவித்ததாக அமைச்சர், அவரது மனைவி, மற்றும் ஒரு நண்பர் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. பல்வேறு நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், இறுதியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கும் சொத்து குவிப்பு வழக்கே. கடந்த 1996-2001ம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது, வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2002ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இருபது ஆண்டுகளாக நடைபெற்ற அந்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28ஆம் தேதி அமைச்சரை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த மூன்று வழக்குகளுமே திமுக ஆட்சி நடைபெற்றபோது சொத்து குவித்ததாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள். அதே போன்று இந்த மூன்று வழக்குகளுமே மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முடித்து வைக்கப்பட்டவை. ஆட்சி மாற்றத்துக்குப் பின் முடிக்கப்பட்ட வழக்குகள் ஆட்சி மாற்றம் 2021ஆம் நடந்த பிறகு வழக்கு தொடுத்த மாநில அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களும் தற்போது விளையாட்டில் ஒரே அணியில் விளையாடுபவர்களாக மாறிவிட்டார்கள், எனவே விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று சுட்டிக் காட்டுகிறார் ஆனந்த் வெங்கடேஷ். “குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் ஒரு விளையாட்டில் ஒரே அணியிலிருந்து விளையாடுபவர்களாகி விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை உணர்ந்த போட்டி நடுவர், அதாவது சிறப்பு நீதிமன்றம் தன்னையே ஆட்டத்தில் தோற்கடித்துக் கொள்வதுதான் உகந்த வழி என்று முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது. எனவே, இது, ஆட்சி அதிகாரத்தின் காரணமாக சீர்குலைக்கப்பட்ட மற்றொரு கிரிமினல் விசாரணையின் உதாரணம்,” என்று தனது உத்தரவில் கடுமையாக சாடியுள்ளார். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரின் வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய காரணங்களை நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் விளக்குகிறார். இரண்டு வழக்குகளிலும் திட்டமிடப்பட்ட ஒரே மாதிரியான அணுகுமுறைகள் வெளிப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்ததாக அவர் தெரிவிக்கிறார். மேலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையை, 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு மாற்றத்துக்கு, “சில மாதங்கள் கழித்து, அரசு தாராள மனதுடன் முன்வந்து, “மேலும் விசாரணை” செய்தது. இந்த “மேலும் விசாரணை”யின் விளைவாக அவர்கள் விடுவிப்பதற்கு தகுந்த இறுதி அறிக்கையை அளித்தது. ஏற்கெனவே அளித்திருந்த விசாரணை அறிக்கையிலிருந்து மாறுபட்ட விசாரணை இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டதாகவும் இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் விசாரணை அறிக்கைகள் முரணாக இருந்தாலும், சமீபத்தில் சமர்ப்பிக்க அறிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவித்தாகவும் தெரிவிக்கிறார். ஏன் திமுக அமைச்சர்களை மட்டும் குறி வைக்க வேண்டும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ள சட்டரீதியான குளறுபடிகளை யாரும் மறுக்கவில்லை என்றாலும், ஏன் திமுக அமைச்சர்களின் வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன, என கேள்வி எழுப்பப்படுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில், நீதிபதிக்கு இவற்றை விசாரிக்க அதிகாரம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ். பாரதி, ஏன் திமுக அமைச்சர்கள் குறி வைக்கப்படுகின்றனர் எனக் கேட்கிறார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விசாரணைக்கு வழக்குகளை எடுத்துக் கொள்ளும்போது, அவற்றில் உள்நோக்கம் இருக்கக்கூடாது என்பது விதி. அதிமுக அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதே முகாந்திரத்தின் அடிப்படையில்தான் இவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏன் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடுக்கவில்லை,” எனக் கேள்வி எழுப்புகிறார் அவர். மேலும், எடப்பாடி பழனிசாமி மீது தான் போட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு தன் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதையும் சுட்டிக்காட்டினார் ஆர்.எஸ். பாரதி. முரண்பட்ட அறிக்கைகளைக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. “டென்மார்க் அரசில் ஏதோ ஒன்று அழுகியுள்ளது என ஷேக்ஸ்பியர் கூறுவார், அதுபோல, ஆவணங்களை ஆராய்ந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஏதோ ஒன்று மிகவும் அழுகியுள்ளது,” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எழுதிய தீர்ப்பை, எழுதிய நீதிபதி உட்பட யாருமே புரிந்துகொள்ள முடியாத படி இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அமைச்சர் தங்கம் தென்னரசு சம்பந்தப்பட்ட வழக்கில், 2016ஆம் ஆண்டு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று எந்த விசாரணை அதிகாரி கூறினாரோ, அதே அதிகாரி தற்போது, அவர் மீது குற்றம் இல்லை என்று கூறுவதாக நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக் காட்டினார். “நிறைய ஆவணங்களைத் திரட்டி உச்சநீதிமன்ற முடிவுகளை எல்லாம் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படக் கூடாது எனக் கூறிய அதே அதிகாரி 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் திடீரென, குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சரான பிறகு, ‘மேலும் விசாரணை’ நடத்தி மாறுபட்ட அறிக்கையை அளித்துள்ளார்” என்று கூறுகிறார். “ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தாலாட்டுக்கு நடனமாட ஆரம்பித்தால், பாரபட்சமற்ற விசாரணை என்பது நாடகமாகிவிடும்,” என்று கடுமையாக சாடியுள்ளார். இதே போன்று அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கையும் தாமாக முன் வந்து எடுத்திருக்கும் நீதிபதி என் ஆன்ந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த கீழ் நீதிமன்ற நீதிபதியை கடுமையாக சாடியிருந்தார். முடியும் தருவாயில் இருந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை எனத் தனது உத்தரவில் தெரிவிக்கிறார். “இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28ஆம் தேதி 228 பக்கத் தீர்ப்பு வழங்கினார். இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள்கூட இதுபோன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். அடுத்த இரண்டு நாட்களில் நீதிபதி நிம்மதியாக ஓய்வு பெற்றுவிட்டார்,” என்று சாடியிருந்தார். நீதிபதி முன்முடிவுடன் இருக்கலாமா? பட மூலாதாரம்,ADV VIJAYAKUMAR இப்படி வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவிக்கும் நீதிபதி எப்படி இந்த வழக்குகளை விசாரிக்க முடியும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார். பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்த வழக்குகளில் இப்படி கருத்துகளை வெளிப்படுத்துவது, அவர் முன்முடிவுடன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. விசாரணைக்கு முன்பே, முன்முடிவுடன் இருப்பவர் எப்படி வழக்கை விசாரிக்க முடியும்,” என்கிறார் அவர். இதுபோன்று நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து முடிந்தபோன வழக்குகளை மறு விசாரிணை செய்ய சட்டத்தில் இடம் இருந்தாலும், இது வழக்கமான ஒன்று அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன். “வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், நீதிபதியின் நோக்கத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சிலரது வழக்குகளை மட்டும் விசாரிக்கிறார் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும்,” என்கிறார் அவர். "ஆட்சிக்கு அதிகாரத்துக்கு சாதகமாகவே அரசு இயந்திரங்கள் செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகும்." நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-ன் நோக்கத்தை கேள்வி கேட்ட அதே செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவர் மீது தான் தொடுத்த வழக்கு குறித்து பேசிய ஆர் எஸ் பாரதி, “எடப்பாடி மீது போடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர் மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது. மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் எனது வழக்கை வாபஸ் வாங்குவதாகத் தெரிவித்து விட்டேன்,” என்றார். லஞ்ச வழக்குகள் எதை எடுத்தாலும் இதுபோன்ற பல சிக்கல்கள் இருக்கலாம், என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார். எல்லாவற்றையும் மறு விசாரணை செய்துகொண்டே இருக்குமா உயர்நீதிமன்றம் என்று கேட்கிறார் அவர். “மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் பல இருக்கும் போது, அதைவிட்டு இந்த வழக்குகளை எதற்காக எடுத்து விசாரிக்க வேண்டும்? கீழமை நீதிமன்றங்களில் நீதி கிடைக்காமல் உயர்நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களின் வழக்குகள் பட்டியலில் இடம் பெறுவதுகூட கடினமாக உள்ளது. ஆனால் இந்த வழக்குகள் உடனடியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன” என்றும் கூறும் வழக்கறிஞர் விஜயகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார். https://www.bbc.com/tamil/articles/c9rwkl39d73o
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நிலாவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்போது பிரக்யான் ரோவர் அங்குள்ள நிலவியல்ரீதியிலான சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2023, 03:44 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த இரண்டு நாட்களாக சந்திரயான்-3 பற்றிய பேச்சுதான் இந்திய மக்களின் வார்த்தைகளிலும் காதுகளிலும் நிரம்பியிருந்தன. இந்த வெற்றி இஸ்ரோவுக்கு மட்டுமின்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்துறையின் எதிர்காலத்திற்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தற்போது நிலாவில் நான்காவது நாடாக தடம் பதித்துவிட்ட இந்தியா, அங்கு செய்யப்போகும் ஆய்வுகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் பேருதவியாக இருக்கக்கூடும். ஆனால், அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் இரண்டும் என்ன வகையான சவால்களை எதிர்கொள்ளும், அந்த சவால்களைச் சமாளிக்கும் முன்னேற்பாடுகள் அவற்றில் செய்யப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. பல கிலோமீட்டர் உயரத்திற்குப் பறக்கும் நிலவின் தூசுகள் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவில், 0.07 மி.மீ விட்ட கொண்ட நுண்ணிய துகள்களைப் போல் அதன் மண் இருக்கும். நிலாவின் மேற்பரப்புக்கும் பூமியின் மேற்பரப்புக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அங்குள்ள தரைப்பரப்பு மிகவும் அலங்கோலமானது என்றுகூட சொல்லலாம். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விண்கற்கள் பல்லாண்டுக் காலமாக மோதியதன் தாக்கம், பெரும் பள்ளங்களாக நிலவில் அவற்றின் காயங்களை விட்டுச் சென்றுள்ளன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக விண்கற்கள் நிலவின் மேற்பரப்பில் குண்டு மழை பொழிவதைப் போல் பொழிந்துள்ளன. இந்தத் தாக்கம் இனியும் நடைபெறும். நிலாவின் மேற்பரப்பு ரெகோலித் எனப்படும் தன்மை கொண்டதாக உள்ளது. நிலவில், 0.07 மி.மீ விட்ட கொண்ட நுண்ணிய துகள்களைப் போல் அதன் மண் இருக்கும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவிலுள்ள மண்ணின் விட்டம் மிகச் சிறிய அளவில் இருக்கும். ஆனால், அவற்றைத் தோண்டினால் கீழே கடினமான பாறை இருக்கும். ரெகோலித் என்பது நிலவின் மேற்பரப்பில் விண்கற்களின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரு பரப்பு என்கிறார் பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் லெனின். “இந்த மேற்பரப்பு பாறை போன்ற அமைப்புடையதுதான். ஆனால், இதில் மண் துகள் மிகவும் சிறியதாக, தூசுகளாக இருக்கும். எளிதில் மேலெழும்பிப் பறக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், அதற்குக் கீழே தோண்டிப் பார்த்தால் கடினமான பாறை அமைப்புகள் இருக்கும்,” என்று கூறுகிறார். விட்டம் மிகச் சிறிய அளவில் இருக்கும் கடற்கரை மணல் எளிதில் தூசுகளாக மேலே பறக்கும். ஆனால், அவற்றைத் தோண்டிக் கீழே பார்த்தால் கடினமான பாறை இருக்கும் அல்லவா! அதைப் போலவேதான் இதுவும். இந்தத் தூசு போன்ற மண்ணை பூமியுடன் ஒப்பிட்டால் அதன் அளவு குறித்த புரிதல் இன்னும் தெளிவாகக் கிடைக்கும். பூமியிலுள்ள மண்ணின் விட்டம் 2.0 முதல் 0.05 மி.மீ வரை இருக்கும். இதில் இருப்பதிலேயே மிகக் குறைந்த விட்டம் கொண்ட மண்ணின் அளவுக்குத்தான் நிலவிலுள்ள மண் சாதாரணமாகவே இருக்கும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலாவில் தரையிறங்கிய பிறகு தனது நிழல் தெரியும் வகையில் விக்ரம் தரையிறங்கி கலனின் லேண்டர் இமேஜர் கேமரா அனுப்பிய புகைப்படம். விக்ரம் லேண்டரின் ராக்கெட் இன்ஜின் செயல்பாடு, இறுதிக்கட்ட தரையிறக்கம் ஆகியவற்றின் தாக்கத்தால் மேற்பரப்பில் உள்ள தூசுகள் அதிகளவில் மேலே எழும்பியது. அந்தத் தூசுகள் நிலவில் அதிக தூரத்திற்குச் சிறிது சிறிதாகப் பயணிக்கும். அப்படிப் பயணிக்கும் அந்த மண் பல கி.மீ உயரத்திற்குப் பறக்கின்றன. பிறகு, அந்தத் தூசுகள் நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் வரை பறந்துகொண்டே இருக்கும். பூமியின் ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் நிலவின் ஈர்ப்பு விசை, வளிமண்டலமே இல்லாத அதன் மேற்பரப்பு ஆகியவற்றால், தூசுத் துகள்கள் அடங்க சில மணிநேரங்கள் ஆனது. இவை அனைத்தும் அடங்கிய பிறகே லேண்டர் திறந்து, ரோவர் வெளியே வந்தது. ரோவர் பள்ளங்களில் விழும் ஆபத்து உள்ளதா? “பிரக்யான் ஊர்திக்கலன் நிலாவில் நகர்வதற்கு விக்ரம் தரையிறங்கி கலன் வழிகாட்டும். ரோவரில் மொத்தம் ஆறு சக்கரங்கள் உள்ளன. அந்த ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது,” என்கிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர். எஸ்.பாண்டியன். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பிரக்யான் ரோவரின் ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனி டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பூமியில் நாம் பார்க்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களில் இருசக்கர இயக்கம், நான்கு சக்கர இயக்கம் போன்ற இயக்கவியல் செயல்முறையைப் பார்த்திருப்போம். அவற்றில், இரண்டு சக்கரங்களுக்கு ஒரு மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இரண்டு சக்கரங்களும் இணைந்தே இயங்கும். ஆனால், நிலவில் ஆய்வு செய்யப்போகும் ரோவரின் ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக மோட்டார்கள் உள்ளன. இதனால், “ஒவ்வொரு சக்கரமும் அவற்றின் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அவற்றுக்கு வேறுபாட்டுத் தடை (Differential Braking) பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இவையனைத்தும் பொதுவான ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த செயற்கை நுண்ணறிவு கணினிதான், எந்த சக்கரம் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான கட்டளைகளை வழங்கும்,” என்று விளக்குகிறார் பாண்டியன். இதன்மூலம், நிலவின் தரைப்பரப்பில் உள்ள பள்ளங்களில் ஏதேனும் ஒன்றில் ரோவரின் ஏதாவது ஒரு சக்கரம் சிக்கினாலும்கூட அதை மற்ற ஐந்து சக்கரங்களும் சேர்ந்து வெளியே கொண்டுவந்துவிடும். படக்குறிப்பு, தரையிறங்கியபோது கிளம்பிய தூசுகள் ரோவரைவிட லேண்டர் மீதுதான் அதிகமாகப் படிந்திருக்கும். அது மட்டுமின்றி விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் ரோவர் பயணிக்கும். லேண்டரும் ஒருபுறம் அதற்குத் தொடர்ச்சியாக வழிகாட்டிக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். தரையிறங்கி கலன், ரோவரின் பாதையில் எங்கேயாவது பெரும் பாறைகள் கிடந்தால் அவை குறித்த எச்சரிக்கைகளை வழங்கும். அதன்மூலம் எங்கும் மோதிவிடாமல் ரோவர் பாதுகாக்கப்படும். நிலவின் மண் துகள்கள் மின்சார உற்பத்தியை பாதிக்குமா? பூமியிலேயே தொடர்ந்து தூசு படிந்துகொண்டே இருந்தால், அதன் திறன் குறைந்துவிடுகிறது. அப்படியிருக்கும்போது நிலாவில் இருக்கும் மண்ணின் சராசரி அளவே இங்குள்ள தூசுகளைப் போலத்தான் என்னும்போது அது சூரிய மின்சார உற்பத்தியை பாதிக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. அதேபோல தரையிறங்கும்போது கிளம்பிய புழுதிகள் தரையிறங்கி கலன் மீது படியும். இந்தப் புழுதிகள் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்கிறார் முனைவர்.எஸ். பாண்டியன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லேண்டரின் சூரிய மின் தகடுகள் மீது படிந்துள்ள தூசுகளால் அவற்றின் மின்சார உற்பத்தித் திறன் குறையலாம். “விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது பெரியளவில் புழுதி கிளம்பியிருக்கும். அந்தப் புழுதி அதன்மீது படியும். லேண்டரின் வயிற்றுக்குள்ளே இருந்த காரணத்தால், இந்தப் புழுதியால் ரோவரின் செயல்பாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், லேண்டரில் அதன் தாக்கம் இருக்கும். அதிலுள்ள சூரிய மின் தகடுகளின் மின்சார உற்பத்தித் திறன் குறையும். பூமியில் ஆறு மாத காலத்தில் படியக்கூடிய அளவிலான தூசுகள், தரையிறங்கிய நேரத்திலேயே லேண்டர் மீது படிந்திருக்கும்,” என்கிறார் முனைவர் பாண்டியன். இதை நம்மால் தடுக்க இயலாது. ஆனால் அந்தத் திறன் குறைபாட்டை எப்படிச் சமாளிப்பது என்று இஸ்ரோ முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதாவது நிலவில் எங்கே இந்த விண்கலம் தரையிறங்கியதோ அங்கு எவ்வளவு புழுதி கிளம்பும், அது எந்தளவுக்கு மின்சார உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பனவற்றை இஸ்ரோ கணக்கிட்டுள்ளது. அதே நேரத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது கிளம்பும் புழுதியைத் தவிர அங்கு வேறு புழுதி கிளம்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆகவே, “அந்தத் தருணத்தில் எவ்வளவு புழுதி கிளம்ப வாய்ப்புள்ளது, அப்படிக் கிளம்பும் புழுதி லேண்டரின் சூரிய மின் தகடுகளில் படிவதால் எந்தளவுக்கு உற்பத்தித் திறனை அது பாதிக்கும் என்பனவற்றைத் தோராயமாக இஸ்ரோ கணக்கிட்டது. அதன் அடிப்படையில், அத்தகைய உற்பத்தித் திறன் குறைபாடு ஏற்பட்ட பிறகு கிடைக்கும் ஆற்றல் லேண்டருக்கு தேவையான ஆற்றலாக இருக்கும் வகையில், தரையிறன்கி கலனைச் சுற்றி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன,” என்றும் விளக்கினார் பாண்டியன். ஆகவே ஆற்றல் உற்பத்தியில் ஏற்படக்கூடிய திறன் குறைபாட்டை லேண்டரால் சமாளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, குறைந்தபட்சம் மணிக்கு 40,000 கி.மீ முதல் ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் விண்கற்கள் நிலவில் வந்து மோதுகின்றன. இதுபோக நிலவில் வந்து மோதும் விண்கற்களால் கிளம்பும் தூசுகளும் லேண்டர் மற்றும் ரோவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இத்தகைய செயல்முறைகள் கணிக்க முடியாதவை என்பதால், அவற்றால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாது. அப்படியான நிகழ்வு ஏதும் நடந்தால், அது ரோவரின் செயல்பாடுகளை பாதிக்கும் அபாயம் இருப்பதையும் தவிர்ப்பதற்கில்லை. அதேபோல், கணிக்க முடியாத விண்கற்களின் தாக்குதல் ரோவர் ஆய்வு செய்யும் இடத்தில் ஏற்படாது என உறுதியாகக் கூற முடியாது என்று கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். கணிக்கக்கூடிய சவால்களை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இஸ்ரோ திட்டமிட்டு அனுப்பியுள்ளது. இருப்பினும் குறைந்தபட்சம் மணிக்கு 40,000 கி.மீ முதல் ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் வந்து மோதக்கூடிய விண்கற்களின் தாக்கத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படியான தாக்கத்தால் கிளம்பும் தூசுகளையும் தவிர்க்க முடியாது. சவால்கள் நிறைந்ததுதானே விண்வெளிப் பயணம். அந்த சவால்களையும் அபாயங்களையும் சமாளித்து ஆய்வுகளை மேற்கொண்டு தாயும் குழந்தையுமான விக்ரமும் பிரக்யானும் சாதனை புரியும் என்று உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cd1mdpxdnljo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வாக்னர் குழுவின் தலைவர் வாழ்க்கையில் பல பாரிய தவறுகளை செய்தவர் – மௌனம் கலைத்தார் புட்டின் Published By: RAJEEBAN 25 AUG, 2023 | 07:22 AM வாக்னர் கூலிப்படையின் தலைவர் விமானவிபத்தில் கொல்லப்பட்டார் என வெளியான தகவல்களுக்கு மத்தியில் ரஸ்யா ஜனாதிபதி இந்த விபத்து குறித்து மௌனம் கலைத்துள்ளார். பிரிகோஜின் மிகவும் திறமைவாய்ந்தவர், ஆனால் வாழ்க்கையில் பல பாரதூரமான தவறுகளை இழைத்தவர் என புட்டின் தெரிவித்துள்ளார். மொஸ்கோவிற்கு வடமேற்கே இடம்பெற்ற விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு புட்டின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். எனினும் வாக்னர் குழுவின் தலைவர் உயிரிழந்தார் என்பதை புட்டின் உறுதி செய்யவில்லை. விமானவிபத்தின் பின்னர் கிரெம்ளின் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடித்தது, தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான வீடியோ உரையிலும் புட்டின் இது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை. எனினும் புதன்கிழமை மாலை அது மாறியது. விமானவிபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என புட்டின் ரஸ்யாவிற்கான தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். விமானத்தில் வாக்னர் ஊழியர்கள் காணப்பட்டனர் என புட்டின் தெரிவித்தார். உக்ரைனில் உள்ள நவநாஜி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற பொதுவான இலக்கிற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள் அவர்கள் என புட்டின் தெரிவித்தார். பிரிகோஜின் குறித்து கருத்து வெளியிட்ட புட்டின் 90களின் ஆரம்பம் முதல் அவரை எனக்கு தெரியும் அவர் குழப்பகரமான வாழ்க்கையை கொண்டவர் என குறிப்பிட்டார். பிரிகோஜினையும் அவரது படையினரையும் உக்ரைனில் அவர்களின் பங்களிப்பையும் புட்டின் பாராட்டினார். அவர் வாழ்க்கையில் பாரிய தவறுகளை இழைத்தார், எனவும் தெரிவித்துள்ள புட்டின் எனினும் பிரிகோஜின் மரணத்தை உறுதிசெய்ய தவறியுள்ளார். https://www.virakesari.lk/article/163136