Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..! மேற்கத்தேய நாடுகளின் ஆதரவு இல்லையென்றால் ரஷ்யா ஒரு வாரத்திற்கு மேலாக போரில் தாக்கு பிடித்திருக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நிதியுதவி “மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. நிதியுதவி மட்டுமல்லாமால், இராணுவ தளபாட உதவிகள் என அனைத்தும் நின்றுவிட்டால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும். தற்போது வரை ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், 90ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.” என்றார். https://ibctamil.com/article/putin-ukraine-last-western-military-support-stops-1696602987
  2. ஈரானிடமிருந்து கைப்பற்றிய 1 மில்லியன் துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியது அமெரிக்கா Published By: RAJEEBAN 05 OCT, 2023 | 11:25 AM ஈரானிடமிருந்து கைப்பற்ற 1.1மில்லியன் துப்பாக்கி ரவைகளை அமெரிக்கா உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் யுத்தங்களிற்கு பொறுப்பான அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் யேமனிற்கு சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்து துப்பாக்கி ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை இவற்றை உக்ரைனிற்கு அனுப்பிவைத்துள்ளதாக சென்ட்கொம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 9 ம் திகதி மர்வன் 1 எனப்படும் தேசம் குறிப்பிடப்படாத கப்பலில் இருந்து இந்த துப்பாக்கி ரவைகளை கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சொத்து ஒன்றின் உரிமையாளர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அதனை அரசாங்கம் கைப்பற்றலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி கப்பலை தனதாக்கிய அமெரிக்கா அதிலிருந்த துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையின் கப்பலே அது என குற்றம்சாட்டியே அமெரிக்கா அந்த கப்பலை தனதாக்கிகொண்டது. உக்ரைன் வெடிபொருட்களை பயன்படுத்தும் வேகத்திற்கு தங்களது உற்பத்திகளால் இடம்கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக உக்ரைன் மேற்குலக சகாக்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/166136
  3. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விற்கு நிதிக் கையிருப்பு உள்ளது ; சட்டவைத்திய அதிகாரியின் கூற்றை மறுக்கும் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் Published By: VISHNU 05 OCT, 2023 | 07:25 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிக்குரிய நிதி இல்லை என முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் கடந்த ஒக்டோபர் (04)ஆம் திகதி தன்னிடம் தெரிவித்ததாகவும், ஏற்கனவே அகழ்வுப்பணிகள் மேற்கொண்டமைக்கான கொடுப்பனவுகளன வழங்கப்படவில்லை எனவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார். இந் நிலையில் சட்டவைத்திய அதிகாரியின் இத்தகைய கூற்றுக்கு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், அகழ்வாய்வுப் பணிக்கென முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளதாகவும், மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது தம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக தொடர்ந்தும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மேலதிகமான அகழ்வுப்பணி தொடர்பிலும், ஏற்கனவே அகழ்வின்போது எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பரிசோதனை முடிவுகள் தொடர்பிலும் சட்ட வத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நிதி இல்லையென கடந்த ஒக்டோபர் (04) புதன்கிழமையன்று கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந் நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவுமாவட்டசெயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்ணத்திடம் தொடர்புகொண்டுவினவியபோது, தாம் நிதியில்லை என சட்டவைத்திய அதிகாரியிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், தாம் மாவட்டசெயலரின் அனுமதியின்றி இது தொடர்பில் மேலதிக தகவல் எதனையும் வழங்கமுடியாது எனவும் தெரிவித்தார். எனவே இது தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரிடம் தொடர்புகொண்டு வினவியபோது, இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளுக்கென முதற்கட்டமாக 5.6மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், மனிதப் புதைகுழிக்கு பந்தல் இடுகிற செயற்பாடுகள், மலசலகூடம் அமைக்கும் செயற்பாடு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு மில்லியனுக்கு அதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்தோடு அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்ட ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் துறையைச் சார்ந்த குழுவினருக்குரிய பணக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவிட்டன. தற்போது சட்டவைத்திய அதிகாரிகளுடை பணக்கொடுப்பனவுகளே வழங்கவேண்டியுள்ளது. கடந்த ஒக்டோபர்(04) புதன்கிழமையன்றே அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் துறையினரதும், வைத்தியர்களுடையதும் நிதியைப் பெறுவதற்கான பற்றுச்சீட்டுகள் அவர்களுடைய கையொப்பத்துடன், முத்திரை ஒட்டப்பட்டு உரிய முறையில் எமக்கு கிடைத்தன. அவ்வாறு பணத்தினைப் பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு எம்மிடம் கிடைத்தவுடனேயே, எம்மால் பணத்தினை வழங்கமுடியாது. ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நிதியைப் பெறுவதற்கு சில நிதிநடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே எம்மால் அவர்களுடைய கொடுப்பனவுகளை வழங்கமுடியும். இருந்தும் எம்மிடமிருந்த வேறு வைப்புப் பணத்தினைப் பயன்படுத்தி தொல்லியல் துறையினருக்குரிய பணக்கொடுப்பனவை வழங்கியுள்ளோம். இனி சட்ட வைத்திய அதிகாரிகளுடைய நிதியே வழங்கப்படவேண்டியுள்ளது. குறித்த அகழ்வாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரிகளுக்கான பணக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இன்னும் ஓரிருநாட்களில் உரிய கட்டுநிதி எமக்கு கிடைக்கப்பெற்றவுடன், உரிய சட்டவைத்திய அதிகாரிகளுக்கான கசோலைகள் வழங்கப்படும். அத்தோடு முதற்கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 5.6மில்லியன்ரூபா நிதியில், 2.6மில்லியன் ரூபா நீதியே செவிடப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் மிகுதிப்பணத்தைப் பயன்படுத்தி குறித்த கொக்குத்தொடு மனிதப் புதைகுழி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகரப் பந்தலை மேலும் விஸ்தரித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கமரா பொருத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறாக வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிரமமாக இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கேற்ப அதற்குரிய மதிப்பீடுகளைச்செய்து தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவோம். நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக நிதி அமைச்சு நிதி தருவதற்கு தயாராக இருக்கின்றது. அதற்கமைய முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளது. மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது எம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும். எனவே நீதிமன்றத் தீர்மானத்துற்கு அமைவாக தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் என்றார். https://www.virakesari.lk/article/166212
  4. கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நிறுத்தப்படும் சூழலே காணப்படுகிறது - சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ 05 OCT, 2023 | 02:05 PM பாலநாதன் சதீஸ் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். மீண்டும் அகழ்வுப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கும் என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை இன்று (05) தொடர்புகொண்டு வினவியபோது இவ்வாறு கூறினார். இதன்போது அவர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என நேற்றைய தினம் (04) கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த மாதம் செப்டெம்பர் (06) ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இந்த அகழ்வுப் பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166163
  5. காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.
  6. புல் எவ்வளவு தூரத்திற்கு வேர் விட்டிருக்கு?!
  7. @நியானி @nunavilan @இணையவன் @நிழலி @மோகன் நிர்வாகிகள் தொந்தரவாக நினைக்காமல் முகப்பை கொஞ்சம் சரி பாருங்கோ. மேலுள்ள படங்களில் சூடான பதிவுகளைக் குறைவாகவும் புதிய பதிவுகளில் சூடான பதிவுகளும் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது! அடுத்த மேம்படுத்தலில் கவனமெடுங்கோ.
  8. யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விஞ்சிய நார்வே - அப்படி என்ன செய்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதைச் சமாளிக்க அமெரிக்கா அதிகளவிலான உதவிகளை அளித்து வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்டனி செச்சர் பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க அமெரிக்கா இதுவரை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இது மிக அதிகம். ஆனால் இதற்குப் பிறகும் யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி மேலும் உதவி கேட்டு அமெரிக்கா சென்றார். ஆனால் அதே நேரம் போருக்கான நிதி உதவி குறித்து குடியரசு கட்சியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒப்பீட்டளவில் நார்வே ஒரு வகையில் அமெரிக்காவையும் விஞ்சிய உதவிகளைச் செய்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 19ஆம் தேதியன்று ஐநா சபையில் ஆற்றிய உரையில், யுக்ரேனை புறக்கணிக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகத்திற்கு உணர்ச்சிகரமான வேண்டுகோளை விடுத்தார். "உலகம் சோர்வடையும் என்றும் எந்த முடிவையும் ஏற்படுத்தாமல் யுக்ரேன் மீது அட்டூழியங்களை இழைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் ரஷ்யா நம்புகிறது. ஆனால் நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு ஆக்கிரமிப்பாளரைத் திருப்திப்படுத்த அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கைகளை நாம் கைவிட்டால், இந்த அமைப்பின் எந்த ஒரு உறுப்பு நாடும் தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கருத முடியுமா?” என்று அவர் வினவினார். அமெரிக்கா எந்த வடிவத்தில் எவ்வளவு உதவி செய்துள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் உள்ளிட்டவை இந்த உதவிகளில் அடங்கும். யுக்ரேனுக்கு 110 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவி வழங்கிட அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பின்வருவன அடங்கும். 49.6 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவி 28.5 பில்லியன் டாலர்கள் பொருளாதார உதவி 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மனிதாபிமான உதவி 18.4 பில்லியன் டாலர்கள் அமெரிக்க பாதுகாப்பு தொழில் துறையை ஊக்குவிக்கும் உதவி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரையில், ஒதுக்கப்பட்ட நிதியில் 91 சதவிகிதம் அளிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மாளிகை தெரிவித்தது. காங்கிரஸிடம் இருந்து 24 பில்லியன் டாலர்கள் கூடுதல் உதவியை அரசு கோரியுள்ளது. இதில் 14 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியும் அடங்கும். இதற்கிடையில், யுக்ரேனுக்கு கூடுதல் உதவிகள் வழங்குவதை ஆதரிக்கும் அமெரிக்கர்கள் குறிப்பாக பழமைவாதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி தனது வாதத்தை முன்வைக்க அமெரிக்காவிற்கு சென்றார். இப்போது நாம் யுக்ரேனின் மிகப்பெரிய உதவியாளர் அமெரிக்கா அல்ல நார்வே என்பதைக் காட்டும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூடுதல் உதவிகளை யுக்ரேனுக்கு அளிக்க அமெரிக்க அரசு தனது நாடாளுமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. யுக்ரேனுக்கான அமெரிக்க உதவியை எவ்வாறு ஒப்பிடுவது? பல்வேறு நாடுகளில் இருந்து யுக்ரேன் பெற்ற உதவியின் ஜூலை மாத இறுதி வரையிலான புள்ளிவிவரங்கள் உள்ளன. அவற்றை மட்டுமே நாம் ஒப்பிடுவோம். அந்த நேரத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்காக சுமார் 80 பில்லியன் டாலர்களை செலவிட்டது. இது மற்ற எந்த ஒரு நாட்டிலிருந்தும் பெறப்பட்ட உதவியைக் காட்டிலும் அதிகம். ஆனால் இது ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட உதவியை விடக் குறைவு. எலிசா டெமஸ், ராண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்பு விவகார ஆராய்ச்சியாளர். இந்தக் கூடுதல் உதவி இல்லாமல் இருந்திருந்தால், கோடையில் ஆரம்பித்த யுக்ரேனின் எதிர் தாக்குதல் சில வாரங்களுக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று அவர் கூறுகிறார். போர்க்களத்தில் யுக்ரேன் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வந்த நேரத்தில் இது எதிர்மறையான செய்தியை அனுப்பியிருக்கும். அமெரிக்க உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், குளிர்காலம் தொடங்கிய பிறகு யுக்ரேன் தனது ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் புதிய உதவித்தொகுப்பு போர்க்களத்திற்கு அப்பால் போரை பாதிக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். "மற்ற நாடுகளும் உதவக்கூடிய ஒரு சூழலை அமெரிக்கா உருவாக்கியிருக்க வேண்டும். புதிய அமெரிக்க உதவி அளிக்கப்படாதது, ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் தங்கள் சொந்த உதவித் தொகுப்புகளை மறுபரிசீலனை செய்வதைத் தடுக்கக்கூடும்,” என்று அவர் குறிப்பிட்டார். அதேநேரம் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா அதிக ராணுவ உதவிகளை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதில் பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க கூடுதல் ராணுவ உதவிகள் தேவை என யுக்ரேன் அமெரிக்காவிடம் கேட்டுள்ளது. செலவுகளைக் குறைக்க குடியரசுக் கட்சியின் அழுத்தம் அதிகரித்து வருகிறது கூடுதல் ராணுவ உதவி தேவை என்று பைடன் நிர்வாகம் கூறுகிறது. அமெரிக்க தலைவர்கள், குறிப்பாக குடியரசுக் கட்சியுடன் தொடர்புடையவர்கள், பைடன் நிர்வாகத்தின் யுக்ரேன் உதவித்தொகுப்புகளை விமர்சித்துள்ளனர். "யுக்ரேனில் நமக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஆர்வமும் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களிடம் பணம் இல்லை என்ற உண்மையால் அது மறுக்கப்படும்," என்று கென்டக்கியின் செனட்டர் ராண்ட் பால் கூறுகிறார். ”சிக்கனமாக இருங்கள். அதன்பிறகு உங்கள் காசோலைப் புத்தகத்தை வெளியே எடுங்கள் என்று சொல்லிச் சொல்லி சோர்வடைந்துவிட்டேன்,” என்று தனிப்பட்ட முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிறகு மிசோரியின் செனட்டர் ஜோஷ் ஹர்லே கூறினார். 'இது எங்கள் பணம் இல்லையா என்ன? இது அமெரிக்க மக்களின் பணம்,” என்றார் அவர். லூக் காஃபி, பழமைவாத சிந்தனைக் குழு என்று கருதப்படும் ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டில் உறுப்பினர். யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி என்பது சில குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு விருப்பமில்லாத எளிமையான பிரச்னை என்று அவர் கூறினார். டொனால்ட் டிரம்ப் மீதான அரசியல் குற்றச்சாட்டு மற்றும் யுக்ரேனிய எரிசக்தி நிறுவனத்துடன் ஹண்டர் பைடனின் சந்தேகத்திற்கிடமான உறவுகள் பற்றிய குற்றச்சாட்டு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது யுக்ரேன் விஷயம் மிகவும் எளிமையானது என்றார் அவர். "இந்த இரண்டு பிரச்னைகளும் எந்த வகையிலும் போருடன் தொடர்புடையவை அல்ல என்றாலும், நீங்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டால், பழமைவாத இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒலிக்கும் யுக்ரேனுக்கு எதிரான கதையை விரைவாக உருவாக்க முடியும்," என்று லூக் காஃபி குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவைவிட யுக்ரேனுக்கு நார்வே அதிக உதவிகளை அளித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா எவ்வளவு உதவி செய்தது? கடந்த 2022ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டான 751 பில்லியன் டாலர்கள் அல்லது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய நலன்களுக்கான 1.2 டிரில்லியன் டாலர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டால், யுக்ரேனுக்கான உதவி மிகவும் குறைவாகவே தெரியும். இது 2022 நிதியாண்டில் அமெரிக்காவின் மொத்த செலவில் 1.8 சதவிகிதம் மட்டுமே. மறுபுறம், ஜூலை இறுதிக்குள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட 80 பில்லியன் டாலர்கள் உதவியானது, பல கூட்டாட்சி அமைப்புகளின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகம். யுக்ரேனுக்கான இந்த உதவி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய நிதியுதவி வாக்குறுதிகளைவிட மிக அதிகம். ஜூலை மாதம் வரையிலான யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.33 சதவிகிதமாக இருந்தது என்று வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது 1970இல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய 0.18 சதவிகிதம், 1964இல் லத்தீன் அமெரிக்காவுக்கு அளித்த 0.15 சதவிகிதம், 1962இல் பாகிஸ்தானுக்கு வழங்கிய 0.08 சதவிகிதம் ஆகியவற்றை ஒப்பிடும் போது மிக அதிகம். யுக்ரேன் தொகுப்பை ஒப்பிடும்போது மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை மிகவும் குறைவு. 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு 4 பில்லியன் டாலர், இஸ்ரேலுக்கு 3.3 பில்லியன் டாலர் மற்றும் இராக்கிற்கு 1.2 பில்லியன் டாலர் உதவி வழங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக நாடுகள் சோர்ந்து விட்டால், யுக்ரேனை அடிபணிய வைத்து விடலாம் என ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவை விட நார்வே அதிகமாக உதவி செய்கிறதா? வெளிநாட்டு உதவியின் மற்ற வடிவங்களைப் போலவே, அமெரிக்க நட்பு நாடுகள் போரின் செலவில் பெரும் பங்கை ஏற்க வேண்டும் என்று விமர்சகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கடந்த மாதம் விஸ்கான்சினில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில், "ஐரோப்பா முன்னால் வர வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதன் அடிப்படையில் நமது ஆதரவு இருக்க வேண்டும்," என்றார். அமெரிக்கா அதன் நட்பு நாடுகளைவிட யுக்ரேனுக்கு அதிக ராணுவ உதவியை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகள் தனித்தனியாக மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் யுக்ரேனுக்கு உறுதியளித்த மொத்த உதவித்தொகை 140 பில்லியன் டாலர்கள். இது அமெரிக்காவின் உதவியைவிட அதிகம். டாலரில் ஒப்பிடும்போது அமெரிக்காவின் உதவி, நட்பு நாடுகளின் உதவியின் அளவை விடக் குறைவாக உள்ளது என்று லூக் ஃகாபி கூறுகிறார். "யுக்ரேனில் அமெரிக்கா என்ன செய்கிறது என்பதை எஸ்டோனியா அங்கு என்ன செய்கிறது என்பதுடன் ஒப்பிட முடியாது. எஸ்டோனியாவின் பொருளாதாரமும், அமெரிக்க மாகாணம் வெர்மாண்ட்டின் பொருளாதாரமும் ஏறக்குறைய ஒரே அளவு," என்று அவர் கூறுகிறார். ”இதை ஒப்பிடுவதற்கான சிறந்த வழி ஒன்று உள்ளது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), உதவித்தொகை எவ்வளவு பங்கு என்பதன் மூலமாக அது செய்யப்படவேண்டும்,” என்றார் அவர். ஜூலை இறுதி வரை அதிகபட்சமாக நார்வே தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.71 சதவிகிதம் உதவியை வழங்கியது. எஸ்டோனியா மற்றும் ரஷ்யாவின் எல்லையில் உள்ள மற்ற இரண்டு பால்டிக் நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன என்று ’கீல் இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் தி வேர்ல்ட் எக்கானமி’ சேகரித்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. https://www.bbc.com/tamil/articles/cj78k890dr2o
  9. உக்ரைன் மக்கள் உயிர்போகும் வரை கொடுமைப்படுத்தும் ரஷ்யா.. ஐ.நா. அதிர்ச்சி தகவல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய தாக்குதலை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது. போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷ்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷ்யா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. https://thinakkural.lk/article/274610
  10. கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை தளத்தின்மீது உக்ரைன் தாக்குதல் - முக்கிய தளபதி பலி Published By: RAJEEBAN 26 SEP, 2023 | 03:22 PM கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவஸ்டபோலில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது 34 அதிகாரிகள் உயிரிழந்தனர் தளபதியும் உயிரிழந்தார் 105 ஆக்கிரமிப்பாளர்கள் காயமடைந்துள்ளனர் கட்டிடம் திருத்தமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை வெளியிடாத போதிலும் உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளார். அட்மிரல் விக்டர் சொக்கொலொவ் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என உக்ரைனின் உள்துறை அமைச்சின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/165490
  11. தினேஷ் ஷாஃப்டர் வழக்கு: தோண்டியெடுக்கப்பட்ட உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு தோண்டியெடுக்கப்பட்ட மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) உத்தரவிடப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததன் அடிப்படையில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடல், மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட தடயவியல் நிபுணர் குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் மே மாதம் பொரளை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என குழு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் முன்னைய விசாரணையின் போது தெரிவித்திருந்த நிலையில், சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 52 வயதான தினேஷ் ஷாஃப்டர் 2022 டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தனது காரின் சாரதி ஆசனத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் உயிரிழந்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://thinakkural.lk/article/274477
  12. ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதல் Published By: RAJEEBAN 23 SEP, 2023 | 08:34 AM ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படை தளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதலால் படைவீரர் ஒருவர் காணாமல்போயுள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது. செவஸ்டபோலில் உள்ள கட்டிடங்களிற்கு மேலாக பாரிய புகைமண்டலம் எழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த தளத்தில் ரஸ்யாவின் மிகச்சிறந்த கடற்படையினர் உள்ளதால் உக்ரைனிற்கு இது ஒரு முக்கிய இலக்காக காணப்படுகின்றது. சமீபத்தில் உக்ரைன் ரஸ்யாவின் வான்பாதுகாப்பு பொறிமுறை உட்பட கிரிமியாவில் உள்ள பல இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனும் பிரான்சும் வழங்கிய ஸ்டோர்ம் சடோ ஏவுகணைகளை பயன்படுத்தியே இந்த தாக்குதல் இடம்பெற்றது என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்ஃ ரஸ்யாவின் தளத்தை வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இன்னும் பல தாக்குதல்கள் உள்ளன என நாங்கள் உங்களிற்கு தெரிவித்திருந்தோம் என உக்ரைனின் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/165241
  13. சந்திரயான்-3: விக்ரம் லேண்டரில் சிக்னல் கிடைக்கவில்லை - இஸ்ரோவின் அடுத்த திட்டம் என்ன? பட மூலாதாரம்,X/ISRO படக்குறிப்பு, 14 நாட்கள் இரவு முடிந்து நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 22 அன்று சூரியன் உதித்து. கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசிக்காக 20 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (செப்டம்பர் 22 ஆம் தேதி) சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருந்தது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது. நிலாவில் சூரியன் உதித்தது. ஆனால் விக்ரம் லேண்டர் அதன் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொண்டது. ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தனது பணியை முடித்துவிட்டு செப்டம்பர் 4ஆம் தேதியன்று லேண்டரும் ரோவரும் உறக்க நிலைக்குச் சென்றன. இருப்பினும் தொடர்புகொள்ளும் முயற்சி தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cd1zd2n645wo
  14. உக்ரைனுக்கு இனி ஆயுத உதவி கிடையாது: போலந்து அதிரடி 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது. மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது. போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷ்யா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன. இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது. இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன. இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, “சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன” என குறிப்பிட்டார். இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு இராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு இராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/274071
  15. நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் வேலு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை, காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, நாகப்பட்டினத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை நேற்று(20) நேரில் சென்று பார்வையிட்டார். நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து 60 கடல் மைல்கள் தொலைவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையிலான விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India), விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த பயணியர் கப்பல் சேவை வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு ஒக்டோபர் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாசாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/273941
  16. சந்திரயான்-3: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் மீண்டும் இயங்குமா? இஸ்ரோ திட்டம் என்ன? பட மூலாதாரம்,X/ISRO படக்குறிப்பு, 14 நாட்கள் இரவு முடிந்து நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 22 அன்று சூரியன் உதிக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது. நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொள்ளும். விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மற்றும் அதில் உள்ள பிரக்யான் ரோவர் ஆகியவை 14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை. சந்திரனின் மேற்பரப்பில் ஒரு நாள் (சந்திர நாள்) என்பது பூமியில் சுமார் 28 நாட்களுக்கு சமம். அதாவது சந்திரனில் சுமார் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவாக இருக்கும். ஆகஸ்ட் 23 அன்று, சந்திரனில் விடியத் தொடங்கியது. அதனால்தான் லேண்டரை இஸ்ரோ அன்று தரையிறக்கியது. செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவில் பகல் முடிவடைந்ததால், லேண்டர் மற்றும் ரோவரை ஸ்லீப் மோடுக்கு இஸ்ரோ மாற்றியது. லேண்டர் மற்றும் ரோவர் செயல்பட மின்சாரம் தேவை. சந்திரயான் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள சோலார் பேனல்கள் சூரிய ஒளியால் இயங்குகின்றன. ஆனால் இரவு துவங்கியதால் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்திருக்காது. இரவில் நிலவின் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. அப்போது மைனஸ் 130 டிகிரியாக வெப்பம் குறையும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (நாசா) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 253 டிகிரியை எட்டும். இத்தகைய குறைந்த வெப்பநிலையில், ரோவர் மற்றும் லேண்டர்கள் இரண்டுமே உறைந்துவிடும். சூரியன் மீண்டும் சந்திரனின் மேல் உதிக்கும் வரை அவை அப்படியே இருக்கும். செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மீண்டும் அங்கே சூரிய ஒளி படரும். எனவே அவற்றை மீண்டும் வேலை செய்யவைப்பது சவால் மிகுந்த பணியாக இருக்கும். "இரவில், சந்திரனில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரிக்கு கீழே குறையும். இத்தகைய சூழலில் பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடையாது என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் நாங்கள் சில சோதனைகளை நடத்தினோம். எனவே விக்ரமும், பிரக்யானும் கடுமையான வானிலையில் இருந்து தப்பித்து மீண்டும் இயங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஊடகங்களிடம் பேசிய போது தெரிவித்தார். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சூரியன் உதிக்கும் போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் செயல்படுமா என்பதை அறிய இஸ்ரோ மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது. மீண்டும் செயல்படாவிட்டால் என்ன செய்வது? நிலவில் ஸ்லீப் மோடில் இருக்கும் ரோவரை செப்டம்பர் 22ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ முயற்சித்து வருகிறது. அதன் பேட்டரியில் சார்ஜ் முழுமையாக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் மற்றும் ரோவரின் ரிசீவர்கள் நல்ல இயக்கத்தில் உள்ளன. ஸ்லீப் மோடியில் உள்ள லேண்டரும், ரோவரும் மீண்டும் இயங்கினால் நிலவு குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து, ஏற்கெனவே நடந்துகொண்டிருந்ததைப் போலவே, அவற்றை பூமிக்கு அனுப்பும் பணி தொடரும். அப்படியில்லை என்றால்,'இந்தியாவின் தூதுவராக' அவை இரண்டும் நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவை மீண்டும் செயல்படாவிட்டால் அவற்றின் நிலை என்னவாகும், எதிர்காலத்தில் மீண்டும் அவை செயல்படும் வாய்ப்பு இருக்கிறதா, நிலவுக்கு செல்லும் பிற நாடுகளின் ரோவர்கள் 'பிரக்யானிடம்' இருந்து ஏதேனும் ரகசிய தகவல்களை சேகரிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றுக்கான விடைகளை அறிய ஆந்திரப் பல்கலைக்கழக விண்வெளி இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி. ஸ்ரீநிவாஸிடம் பிபிசி பேசியது. இஸ்ரோ திட்டமான 'ஜியோஸ்பியர் - பயோஸ்பியர்' திட்டத்திற்காக ஆந்திரா பல்கலைக்கழகம் சார்பில் பி.ஸ்ரீனிவாஸ் ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சந்திரயான்-3 இன் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ அணுகிய இயற்பியல் நிபுணர்கள் குழுவில் ஸ்ரீனிவாஸும் ஒருவர். அவர் பிபிசியிடம் பேசிய போது பின்வரும் பதில்களை வழங்கினார். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, லேண்டரும், ரோவரும் தயாரிக்கப்பட்ட போதே 14 நாட்கள் ஆயுட்காலத்துடன் தயாரிக்கப்பட்டன. லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் பூமிக்கு கொண்டு வர முடியாதா? இது போன்ற ரோவர்களை எந்த ஒரு விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பினாலும், அது 'ஒரு வழி பயணமாகவே' இருக்கும். அவற்றை மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் முயற்சியின் போது, அதற்கான செலவில் மற்றொரு விண்கலத்தைத் தயாரித்து விண்ணுக்கு ஏவி விட முடியும். பட மூலாதாரம்,MIKIELL/GETTY IMAGES படக்குறிப்பு, விண்வெளி ஆய்வில் கிடைக்கும் தகவல்களை அனைத்து நாடுகளும், பிற அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்துகொள்கின்றன. லேண்டர், ரோவர் மீண்டும் வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? செப்டம்பர் 22 அன்று சூரிய ஒளி மீண்டும் வரும்போது, ரோவரும், லேண்டரும் வேலை செய்யவில்லை என்றால், அவை எப்போதும் செயல்படாது. ஏனெனில் அவை தயாரிக்கப்பட்ட போது, அவற்றின் ஆயுட்காலம் 14 நாட்களுக்கு வடிவமைக்கப்பட்டது. செயல்படாத விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரால் நிலவின் மேற்பரப்பில் கழிவுகளாக மாறமுடியுமே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒருவேளை லேண்டரும், ரோவரும் செயல்படாமல் போனால் அவற்றை மீண்டும் செயல்படுத்த முடியாது. எதிர்காலத்தில் மீண்டும் இயங்கும் வாய்ப்புகளே இல்லையா? அவற்றை மீண்டும் இயக்க முடியாது. அது குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அத்தகைய தொழில்நுட்பம் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் மற்றொரு ரோவர் அல்லது ஏதேனும் ஒரு யூனிட்டை அனுப்புவதன் மூலம் ஏற்கனவே உள்ள ரோவர்களைச் செயல்படுத்த நடத்தப்படும் சோதனைகள் இன்னும் கோட்பாட்டு அளவிலேயே உள்ளன. அப்படி முடியுமென்றால், ஒரு வேளை நாம் ஏற்கெனவே அனுப்பிய ரோவர் பழுதடைந்திருந்தாலும், அதை பழுது பார்த்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த நிலையை நாம் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். சந்திரனின் மேற்பரப்பில் வேலை செய்யாத ரோவர்கள் மற்றும் லேண்டர்கள் சந்திரனின் குப்பைகளாகக் கணக்கிடப்படுகின்றன. அவை அங்கு தொடர்ந்து செயல்படுவது மிகவும் கடினம். வேலை செய்யாதவற்றிடமிருந்து எந்த தகவலையும் சேகரிக்க முடியாது. ஏனென்றால், நிலவில் ஏதாவது ஒன்று ஒருமுறை செயலிழந்தால், அது நிரந்தரமாகச் செயலிழந்துவிடும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படும் சாதனங்கள் செயல்படாமல் போகும் போது, அவை வெறும் குப்பைகளாக மாறுகின்றன. வெளிநாட்டு ரோவர்கள் பிரக்யானிடம் தகவல்களை சேகரிக்க முடியுமா? எதிர்காலத்தில் வேறு எந்த நாடும் நிலவில் சோதனைக்காக லேண்டர்கள் மற்றும் ரோவர்களை அனுப்புகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வழியில் செல்லும் வெளிநாட்டு ரோவர்களுக்கு தற்போது இருக்கும் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றால் எந்த தடையும் இருக்காது. மேலும், அவற்றால் பிரக்யான் ரோவரை பயன்படுத்தவும் முடியாது. நிலவுக்குச் சென்ற வெளிநாட்டு ரோவர்களும் பிற யூனிட்டுகளும் தற்போது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பிரக்யான் ரோவரிடமிருந்து ரகசிய தகவல்களை சேகரிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், எந்தவொரு நாடும் தங்கள் நாட்டின் சார்பாக ரோவர் மற்றும் பிற யூனிட்டுகளை விண்வெளிக்கு அனுப்பும் போது, அந்நாடுகள் தங்கள் விவரங்களை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, அவற்றிடம் இருந்து புதிய தகவல்கள் எவையும் சேகரிக்கப்பட வாய்ப்பில்லை. ரோவர்கள் சேகரித்து நமக்குத் திருப்பி அனுப்பும் தகவல்கள் மதிப்புமிக்க தகவல்களாக இருக்கும். ஆனால் அந்த சாதனங்களில் எந்த ரகசியமும் இல்லை. இது போன்ற சாதனங்களை உற்பத்தி செய்யும் போதே அவற்றின் வாழ்நாள் நிர்ணயிக்கப்படுவதால், பின்னர் அவற்றிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியாது. https://www.bbc.com/tamil/articles/cd1zd2n645wo
  17. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்படவில்லை - முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி Published By: VISHNU 20 SEP, 2023 | 09:00 PM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளின்போது இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அதுகுறித்து செய்திகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது அங்கு கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் 'வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ளன' என்ற பதிவொன்று ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதுகுறித்து கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, 'கடந்த ஏழு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கிடைக்கவில்லை' என அவர் தெரிவித்ததாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டியங்கிவரும் Fact Seeker தெரிவித்துள்ளது. அத்துடன், 'கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த (13) புதன்கிழமை ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 6 ஆம் திகதியிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள் அகழ்வுப்பணிகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், சிவில் பிரதிநிதிகள் சிலரும் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். ஆகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியில் குறிப்பிடுவதைப்போன்று எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை' எனவும் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா Fact Seeker க்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/165052
  18. 18 SEP, 2023 | 11:57 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவின் இயூஜின், ஒரிகொன் ஹேவோட் பீல்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற வொண்டா டயமண்ட் லீக் இறுதிச்சுற்றின் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.23 மீற்றர் உயரம் தாவி சுவீடன் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் உலக சாதனை நிலைநாட்டினார். ஒரு வருடத்திற்கு முன்னர் இதே மைதானத்தில் தனது முதலாவது சிரேஷ்ட உலக வெற்றியை மொண்டோ என அழைக்கப்படும் டுப்லான்டிஸ் ஈட்டியிருந்தார். 6.23 மீற்றர் உயரத்தை ஒரே தடவையில் தாவிய டுப்லான்டிஸ், தனது சொந்த உலக சாதனையை 7ஆவது தடவையாக புதுப்பித்து வரலாறு படைத்தார். இந்தப் போட்டியில் முதலாவது முயற்சில் 5.62 மீற்றர் உயரத்தைத் தாவிய டுப்லான்டிஸ் அதன் பின்னர், 5.72 மீற்றர், 5.82 மீற்றர் ஆகிய உயரங்களை இலகுவாக தாவி முடித்தார். 5.92 மீற்றர் உயரத்திற்கு விடுகை கொடுக்க தீர்மானித்த டுப்லான்டிஸ் 6.02 மீற்றர் உயரத்தை சிரமம் இன்றி தாவி அப் போட்டியில் முதலாம் இடத்தை உறுதி செய்தார். இது அவர் தாவிய 73ஆவது 6 மீற்றரைவிட உயரமான பெறுதியாகும். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. கோலூன்றிப் பாய்தலுக்கான குறுக்குக் கம்பம் 6.23 மீற்றர் உயரத்தில் வைக்கப்பட்டது. க்ளமொன்ட் ஃபெராண்ட் அரங்கில் கடந்த பெப்ரவரி மாதம் டுப்லான்டிஸ் நிலைநாட்டியிருந்த உலக சாதனையை விட இது ஒரு சென்றிமீற்றர் கூடியதாகும். ஆனால் அந்த உயரத்தையும் டுப்லான்டிஸ் தாவி இரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். இரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கோலுடன் ஓடிய டுப்லான்டிஸ், கிடங்கில் கோலை ஊன்றி உயரே சென்று தாவிய போது 6.23 மீற்றர் உயரத்தில் இருந்த குறுக்குக் கம்பம் ஆடாமல் அசையாம் அப்படியே இருந்தது. அதன் மூலம் டுப்லான்டிஸ் தனது உலக சாதனையை 7ஆவது தடவையாக புதுப்பித்துக்கொண்டார். டுப்லான்டிஸின் உலக சாதனை முன்னேற்றம் https://www.virakesari.lk/article/164825
  19. ஆதித்யா எல் -01 விண்கலம் தொடர்பில் இஸ்ரோவின் அறிவிப்பு! சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -01 விண்கலம், சூரியனின் எல் – 01 புள்ளியை நோக்கிய பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ம் திகதி பி.எஸ்.எல்.வி. மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்றுப்பாதையில் தமது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருந்தது. "இஸ்ரோ ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு வான உடல் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்” என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/273615
  20. போருக்கு இடையில் மனிதாபிமானம்: உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்யர்கள் 2022 பெப்ரவரியில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. ரஷ்யாவில் இப்போர் குறித்து ரஷ்யாவையோ, அதிபர் விளாடிமிர் புட்டினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷ்ய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். இராணுவ தாக்குதல் காரணமாக ரஷ்யாவிற்கோ அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர். “இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை,” என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷ்ய பெண்மணி தெரிவித்தார். “எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்” என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷ்ய பெண் தெரிவித்துள்ளார். 2022 டிசம்பர் மாதமே ரஷ்யாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 இலட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273523
  21. நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோவுக்கு உதவியவர்கள் ஊதியம் கிடைக்காமல் டீ விற்கும் அவலம் பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் அளிக்கப்படாத காரணத்தால் அவர்கள் இட்லி கடை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஆனந்த் தத் பதவி, பிபிசி நியூஸ் 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி நிலவின் தென்துருவத்தில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற சிறப்பை பெற்றது. சந்திரயான் - 3 நிலவில் தரையிறங்கிய நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார். விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய போது, ஜோகன்னஸ்பர்க்கிலிருந்தே அவர் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதே நேரத்தில் பிரதமர் மோதி உரையாற்றிய போது, சந்திரயான் விண்கலத்துக்கான ஏவுதளத்தை உருவாக்கிய ஊழியர்கள், தங்களுக்கு 18 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஞ்சியில் இருக்கும் துர்வாவில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்இசி) நிறுவனத்தில் பணிபுரியும் 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். எச்இசி (HEC) ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் (CPSU). 810 டன் ஏவுதளத்தை உருவாக்கியதைத் தவிர, எச்இசி சந்திரயானுக்கான மடிப்பு தளம், நெகிழ் கதவு உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளது. மேலும், இஸ்ரோவுக்காக மற்றொரு ஏவுதளத்தையும் ஹெச்இசி தற்போது உருவாக்கி வருகிறது. பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஒருவர் டீ விற்கிறார், மற்றொருவர் இட்லி விற்கிறார் ஹெச்இசியில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றும் தீபக் குமார் உபராரியா கடந்த சில நாட்களாக இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது கடை ராஞ்சியில் இருக்கும் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்ட மன்ற கட்டடத்துக்கு நேர் எதிரில் உள்ளது. காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறார். மாலையில் மீண்டும் இட்லிகளை விற்றுவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். தீபக் குமார் உபராரியா பிபிசியிடம் பேசுகையில், "முதலில் நான் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்து வந்தேன். அதில் இருந்து 2 லட்சம் ரூபாய் கடன் அளவை முழுமையாகப் பெற்ற பின், அதைத் திரும்பக் கட்டுவது இயலாமல் போனது. இதனால் நான் கடனைத் திருப்பிச் செலுத்தாதவனாக வங்கியால் அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு, உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு என் வீட்டை நிர்வகிக்கத் தொடங்கினேன்," என்றார். "இதுவரை நாலு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். வாங்கிய கடனை திருப்பித் தராததால், அதன் பின் எனக்கு யாரும் கடன் கொடுக்கவில்லை. இதன் காரணமாக, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நிர்வகித்தேன்." என்றார். தனது குடும்பத்தின் ஆதரவற்ற நிலையை விளக்கும் தீபக், "நான் பசியால் உயிர் விடுவதைத் தவிற வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த போது, சிறிய அளவில் ஒரு இட்லி கடையைத் திறந்தேன். என் மனைவிக்கு நன்றாக இட்லி செய்யத் தெரியும். இந்தக் கடையில் நான் தினமும் 300 முதல் 400 ரூபாய் வரை இட்லிகளை விற்று வருகிறேன். இதில் சில சமயம் ரூ 50 அல்லது ரூ. 100 லாபம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு எனது குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன்," என்றார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, அலுவலகம் செல்லும் முன்பும், அலுவலகத்தில் இருந்து வந்த பின்பும் சிறுசிறு தொழில்களைச் செய்து பணியாளர்கள் குடும்பத்தை நிர்வகித்து வருகின்றனர். தீபக் குமார் உபராரியா மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2012 ஆம் ஆண்டில், தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, அந்த வேலையை விட்டுவிட்டு எச்இசி-யில் ரூ.8,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த வருடம் அவர்களுடைய கல்விக் கட்டணத்தை என்னால் இன்னும் கட்ட முடியவில்லை. பள்ளிகளில் இருந்து தினமும் நோட்டீஸ் அனுப்புகின்றனர். குழந்தைகள் படிக்கும் வகுப்பில் கூட எச்இசி-யில் பணியாற்றும் பெற்றோரின் குழந்தைகள் யார் என்று ஆசிரியர் கேட்டு, அவர்களை எழுந்து நிற்கச் சொல்கிறார்," என்றார். "இதற்குப் பிறகு அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். என் மகள்கள் இருவரும் அழுதுகொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் அழுவதைப் பார்க்கும் போது, என் இதயம் உடைகிறது. ஆனால் நான் அவர்கள் முன் அழுவதில்லை," என்று அவர் உருக்கமாகக் கூறினார். இதைச் சொல்லும் போதே அவருடைய கண்களில் கண்ணீர் வடிந்தது. இது தீபக் குமார் உபராரியாவின் நிலை மட்டுமல்ல. அவரைப் போலவே, எச்இசியுடன் தொடர்புடைய வேறு சிலரும் இதேபோன்ற வேலையைச் செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர். உதாரணமாக, மதுர் குமார் என்பவரை எடுத்துக்கொண்டால், அவர் மோமோஸ் விற்பனை செய்துவருகிறார். பிரசன்னா என்பவர் டீ விற்கிறார். மிதிலேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் குமார் கார் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாததால், கடன் செலுத்தாதவர் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. சஞ்சய் டிர்கி என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பணம் இல்லாத காரணத்தாலும், உரிய சிகிச்சை கிடைக்காததாலும் சசிகுமார் என்பவரின் தாய் உயிரிழந்தார். இவர்களைப் போல் மொத்தம் 2,800 பணியாளர்கள் உள்ளனர். ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து பேரை எடுத்துக் கொண்டாலும், 14,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக இந்த துயர நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பி வேலைக்குச் சேர்ந்தவர்கள் தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர். போராட்டக்காரர்களுக்கு 'இந்தியா' கூட்டணியின் ஆதரவு செப்டம்பர் 14 அன்று, 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் எச்இசி பணியாளர்களின் துயரம் தொடர்பாக ராஜ்பவன் முன் போராட்டம் நடத்தினர். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், “எச்இசி என்பது பண்டிட் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் தத்தளிக்கிறது என்பதைக் காட்டிலும், அதைக் காப்பாற்றுவது நமது பொறுப்பு. வியர்வை காய்வதற்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்," என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் கூறுகையில், “எச்இசி ஊழியர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைக்காரர் அவர்களுக்கு ரேஷன் பொருட்களைத் தருவதில்லை. மத்திய அரசின் கொள்கை எச்இசியின் கழுத்தை நெரித்துவிட்டது. அதை தனியார் முதலாளிகளுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, நிதி ஆயோக் 48 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை விற்பனைக்கு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது," என்றார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மத்திய பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “நாட்டை வடிவமைக்க உழைத்த தாய் தான் இந்த (எச்இசி) நிறுவனம். அதை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்க மோதி அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம்," என்றார். 'எனக்கு ஏன் சம்பளம் கிடைக்கவில்லை?' மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நத்வானி கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் (ஆகஸ்ட், 2023) கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் எச்இசி தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, எச்இசி என்பது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனி மற்றும் சுதந்திரமான நிறுவனம் என்று அரசு கூறியது. அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அதன் சொந்த வளங்களை உருவாக்க வேண்டியுள்ளது என்பதுடன் தொடர்ச்சியான நஷ்டங்களால் பெரும் கடன்களை எதிர்கொள்கிறது என்றும் அரசு கூறியது. இந்த பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக எச்இசி தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டில் ரூ.93.67 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.405.37 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.175.78 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.256.07 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.283.58 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்றுமுதல் ரூ.356.21 கோடியில் இருந்து ரூ.87.52 கோடியாக குறைந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 16 சதவீதத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. அதேசமயம் 2022-23 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத அறிக்கையின்படி, தற்போது இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 1.39 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மட்டும் எச்இசிக்கு உடனடியாக சுமார் ரூ.153 கோடி தேவைப்படுகிறது. எச்இசி அதிகாரிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்நிறுவனத்தின் மொத்த கடன் சுமை சுமார் ரூ.2,000 கோடியாக உள்ளது. பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, நவீனமயமாக்கப்படாததாலேயே எச்இசி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக அங்கு பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் எச்இசி தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது? எச்இசி அதிகாரிகள் சங்கத் தலைவர் பிரேம்சங்கர் பாஸ்வான் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக நிரந்தர நிர்வாக இயக்குனர் (சிஎம்டி) நியமிக்கப்படவில்லை என்றும், தயாரிப்பு துறைக்கான இயக்குனர் நியமிக்கப்படவில்லை என்றும், இயந்திரங்கள் நவீனப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசிய போது, ''நிரந்தர தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) இல்லாததால், கோப்புகள் பல மாதங்களாக சுற்றி வருகின்றன. தற்போதைய எங்கள் பொறுப்பு நிர்வாக இயக்குனர் நளின் சிங்கால் முதன்மையாக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். அவர் எச்இசிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே வந்துள்ளார். பிறகு எப்படி நிர்வாகம் சரியாக நடக்கும்?" எனக் கேட்கிறார். பிரேம்சங்கர் தொடர்ந்து பேசிய போது, “ஹெவி மெஷின் பில்டிங் பிளாண்ட் (HMBP), ஹெவி மெஷின் டூல்ஸ் பிளாண்ட் (HMTP), ஃபவுண்டரி ஃபோர்ஜ் ஆலை (FFP) மற்றும் திட்டப் பிரிவு ஆகிய மூன்று ஆலைகள் உள்ளன. உற்பத்தித் துறை இயக்குனர்களாக இருப்பவர்கள் மூன்று ஆலைகளில் பெறப்பட்ட ஆர்டர்கள் மற்றும் வேலைகளை ஒருங்கிணைக்கிறார்கள்," என்றார். அதாவது இயக்குனர் மட்டத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நிர்வாக இயக்குனரிடம் போக வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுவே உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்கிறார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும் என எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத் கூறுகிறார். நவீன இயந்திரங்கள் இல்லாததே பெரும் பிரச்னை பிரேம்சங்கர் மேலும் பேசிய போது, “எச்இசி நிறுவனத்தில் 6,000 டன் ஹைட்ராலிக் பிரஸ் இருக்கிறது. ஆனால், அது மோசமான நிலையில் உள்ளது. இந்த பிரஸ்ஸில் தான் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாபா அணு ஆராய்ச்சி மையத்திடம் (BARC) தற்போது அணு உலைக்கான ஆர்டருக்கு 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது. இப்போது இந்த ஆர்டரை தனியார் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். எங்கள் ஹைட்ராலிக் பிரஸ் நன்றாக இருந்திருந்தால், எல் அண்ட் டிக்கு ஆர்டரை வழங்க வேண்டிய அவசியமில்லை, நாங்கள் லாபகரமாக இருந்திருப்போம்," என்றார். எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத், இதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணத்தைச் சுட்டிக்காட்டினார், “நிறுவனம் மிகக் குறைவான மொத்த ஆர்டர்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஏவுதளத்தை உருவாக்க வேண்டும் என்றால், ஒன்று மட்டுமே கட்டப்படும். அதேசமயம் ஒன்றுக்கு மேல் சம்பாதித்தால் லாபம் அதிகமாக இருக்கும். ஏனெனில் அதே அளவு பணத்திற்கு ஒரு உபகரணத்தை தயார் செய்யலாம். சற்றே அதிக செலவில் அதிக உபகரணங்களை தயார் செய்யலாம்," என்றார். “ஒரு சாதனத்திற்காக நாம் தயாரிக்கும் அச்சு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் அந்த அச்சும் கெட்டுவிடும். இதைத் தவிர, ஐம்பது வருடங்களாக வேலை செய்யும் அதே இயந்திரத்தில் வேலை செய்ய முடியுமா? இல்லை என்பதே பதில். புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும்,” என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சந்திரயான் விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியதில் எச்இசி நிறுவனத்தின் உதவி பெரும் அளவில் பயன் அளித்துள்ளது. ராமசங்கர் பிரசாத் தொடர்ந்து பேசிய போது, “31 டிசம்பர் 1958 இல் நிறுவப்பட்ட நேரத்தில், சோவியத் ரஷ்யா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் ஒத்துழைப்புடன் எச்இசி தயாரிக்கப்பட்டது. அப்போது நிறுவப்பட்ட இயந்திரங்கள் இன்று வரை மாற்றப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படவில்லை,” என்றார். அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை 2023 பிப்ரவரி 7ஆம் தேதியும், மீண்டும் ஜூன் 26ஆம் தேதியும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, நிறுவனத்தை மீண்டும் லாபநோக்கில் செயல்படும் விதமாகக் கொண்டு வர நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர்களை நியமிப்பது மட்டுமின்றி கூடுதலாக 3000 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோதி அப்பதவிக்கு வருவதற்கு முன், எச்இசி தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார். 2013ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் மோதி பேசுகையில், “ஒரு காலத்தில் பெருமையுடன் இருந்த எச்இசி தொழிற்சாலை இப்போது அந்த நிலையில் இல்லை," எனப்பேசினார். அவர் தனது உரையில், “இந்தியாவில் உருவாகும் பொதுத்துறை நிறுவனங்கள் விரைவில் தடுமாறி வீழ்ச்சியடைகின்றன. ஒன்று அதை விற்க வேண்டிய அவசியம் உள்ளது. அல்லது அதை மூடவேண்டிய தேவை ஏற்படுகிறது. இது போன்ற நிலையில், அந்நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது," என்றார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பல பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக எச்இசி பணியாளர்கள் கூறுகின்றனர். 'சந்திரயான்-3யில் எச்இசி பங்களிப்பு இல்லை' ராஜ்யசபா எம்பி பரிமல் நத்வானி, சந்திரயான்-3க்கான ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்களை உருவாக்க எச்இசிக்கு அங்கீகாரம் உள்ளதா என்றும் மத்திய அரசிடம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கனரக தொழில்துறை இணையமைச்சர் கிருஷ்ணபால் குர்ஜார், சந்திரயான்-3க்கான எந்த உபகரணத்தையும் தயாரிக்க எச்இசிக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். இருப்பினும், 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், எச்இசி மொபைல் லாஞ்சிங் பெடஸ்டல், ஹாமர் ஹெட் டவர் கிரேன், ஈஓடி கிரேன், ஃபோல்டிங் கம் ரிபொஸிஸனபிள் பிளாட்ஃபார்ம், ஹொரிசாண்டல் ஸ்லைடிங் டோர்ஸ் போன்றவற்றை இஸ்ரோவுக்கு வழங்கியதாக அவர் தனது பதிலில் ஒப்புக்கொண்டார். எச்இசியில் மேலாளராகப் பணிபுரியும் புரேந்து தத் மிஸ்ரா கூறுகையில், “சந்திரயான்-3க்கு தனி ஏவுதளம் எதுவும் உருவாக்கப்படாததால் தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசு சரியாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எங்களைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் ஏவுதளங்களை உருவாக்கவில்லை," என்றார். "வெளிப்படையாக, நாங்கள் முன்பு தயாரித்து இஸ்ரோவுக்கு வழங்கிய ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்கள் சந்திரயான் -2 மற்றும் சந்திரயான் -3 ஐ விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த பணியில் எச்இசியின் பங்களிப்பு இல்லை என்று அரசாங்கம் கூறினால், அது எப்படி?" எனக்கேட்கிறார் அவர். இந்த நேரத்தில், விண்கலங்கள் ஏவப்பட்ட போது, எச்இசியின் இரண்டு பொறியாளர்ள் இஸ்ரோவுக்கு எச்இசி வழங்கிய உபகரணங்களை நிறுவச் சென்றனர் என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, அரசு உதவினால் மட்டுமே எச்இசி நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். அரசு ஏன் உதவவில்லை? இந்த நிறுவனத்தை காப்பாற்றி முன்னேற்றுவதற்கு மத்திய அரசால் சில நூறு கோடி ரூபாய் மட்டும் உதவ முடியாதா? இதுகுறித்து ராஞ்சி பாஜக எம்பி சஞ்சய் சேத் கூறுகையில், கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்பி வருவதாகத் தெரிவித்தார். பிபிசியிடம் பேசிய அவர், “இந்தப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அமைச்சரிடம் பலமுறை எழுப்பியுள்ளேன். பிரகாஷ் ஜவடேகர், அர்ஜூன் ராம் மேக்வால், மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் அமைச்சராக இருந்த போதெல்லாம் அவர்களை சந்தித்து இது தொடர்பாகப் பேசினேன்," என்றார். ஜூலை 19, 2022 அன்று, சஞ்சய் சேத் மக்களவையில் எச்இசியை சீராக மறுதொடக்கம் செய்ய மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு, இதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று தெளிவாக கூறியிருந்தது. எச்இசி பிரச்னைகளில் குரல் கொடுக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத்காந்த் சஹாய், துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை மூன்று முறை சந்தித்ததாகவும் ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறுகிறார். சுபோத் காந்த் சஹய் கூறுகையில், “எச்இசி மூடப்பட்டால் யாரும் ஜார்கண்டில் முதலீடு செய்ய வர மாட்டார்கள். பிரதமர் மோடி எச்இசிக்கு உதவவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மாநிலத்தின் அடையாளத்தை காப்பாற்ற அவர் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்றார். எச்இசி ஏன் முக்கியமானது? இந்நிறுவனம் தற்போது ரூ.1,356 கோடி மதிப்பிலான ஒர்க் ஆர்டரை வைத்துள்ளது. அதன் வாடிக்கையாளர்களில் ISRO, BARC, DRDO உட்பட நாட்டின் பல பெரிய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அடங்கும். ஆனால், போதிய மூலதனம் இல்லாததால் இவற்றிற்கான பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. நம் சாதனைகளைப் பார்த்தால், எச்இசி ஒரு சூப்பர் கண்டக்டிங் சைக்ளோட்ரானை உருவாக்கியுள்ளது. இவை அணு மற்றும் எரிசக்தித் துறை தொடர்பான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் உயர் தாக்க எஃகு அமைப்புகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஏபிஏ தர எஃகு மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்காக குறைந்த அலாய் ஸ்டீல் போர்ஜிங் செய்யும் இயந்திரம் ஆகியவற்றை இந்நிறுவனம் தான் உருவாக்கியது. இதுமட்டுமின்றி, இஸ்ரோவுக்காக சிறப்பு தர மென்மையான ஸ்டீல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவும் பணிகளுக்கு உதவும் ஆறு அச்சு சிஎன்சி இயந்திரமும் இங்குதான் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 105 மிமீ துப்பாக்கி, டி72 டேங்கின் கோபுர வார்ப்பு, இந்தியன் மவுண்டன் கன் மார்க்-2, அர்ஜூன் பிரதான போர் டாங்கியின் கவச எஃகு வார்ப்புகள் ஆகியவை பாதுகாப்புத் துறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ப்ரொப்பல்லர் ஷாஃப்ட் அசெம்பிளி, ரேடார் ஸ்டாக் அசெம்பிளி மற்றும் மெரைன் டீசல் என்ஜின் பிளாக் ஆகியவை எச்இசியால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்திய கடற்படைக் கப்பல் ராணாவுக்கான ஸ்டெர்ன் கியர் அமைப்பின் PYB எந்திரம், 120 மிமீ துப்பாக்கி போன்றவையும் இங்கு தான் தயார் செய்யப்பட்டன. அணுசக்தி தர எஃகு தயாரிப்பதன் மூலம், எச்இசி, அத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்துள்ளது. எச்இசி என்பது ஒரு தொழில்துறை அமைப்பாகக் கருதப்படுகிறது. அதாவது மற்ற தொழில்களுக்கு தேவையான கனரக இயந்திரங்களும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, எச்இசி நாட்டின் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு 550 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான உபகரணங்களை தயாரித்து வழங்கியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cn46neg726yo
  22. ஆந்தையும் படத்திற்கு போஸ் கொடுக்குது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.