Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அண்ணை புத்தகத்திற்கு பக்கத்தில தட்டில் இருக்கும் உள்ளூர் பேக்கரி பிஸ்கற்றைத் தான் ஆட்டுக்கால்/மடத்தல் என்று சொல்வார்கள். தேநீரில் நனைத்து 5/6ஐ சாப்பிட்டால் பசி அடங்கிவிடும்
  2. உக்ரைனுடனான தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியுள்ளதை தொடர்ந்து சர்வதேச உணவு விநியோகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த உடன்படிக்கை சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலைகளின் ஸ்திரதன்மையை பேணுவதற்கு மிகவும் முக்கியமானதாக காணப்பட்டது. உக்ரைனின் ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளிற்கும் நன்மையளிப்பதாக காணப்பட்டது.
  3. 17 ஜூலை 2023 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது. சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை, யானை தந்தத்தான் ஆன பதக்கங்கள், சூதுபவள மணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கான சான்று பொருட்கள் கிடைத்துள்ளது போன்று வெம்பக்கோட்டையிலும் சங்கு தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநரான பாஸ்கர். தங்கம், செப்பு நாணயங்கள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் அவர், இதுவரை எழுத்து குறியீடு எதுவும் தென்படவில்லை என குறிப்பிடுகிறார். வெம்பகோட்டை அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் கலைநயத்துடன் இருப்பதால் அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இப்பகுதியில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் வைப்பாற்றங்கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்று தெரிய வருகிறது. (முழு தகவல் காணொளியில்) தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன் எடிட்டிங்: ஜனா https://www.bbc.com/tamil/articles/c2jrnx7k510o
  4. முகப்பில் தமிழகச் செய்திகள், நலமோடு நாம் வாழ, சமூகவலை உலகம், விளையாட்டுத் திடல் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்படவில்லை. நிர்வாகிகள் கவனியுங்கோ. @நியானி, @இணையவன், @நிழலி, @nunavilan
  5. ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஓங் பெங் மீதும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர்,தொழிலதிபர் கைது கடந்த 11ஆம் திகதி அந்நாட்டு ஊழல் புலனாய்வுப் பிரிவினர் அமைச்சர் மற்றும் தொழிலதிபரை கைது செய்தனர். ஊழலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், அப்படியானால் அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்றும் ஊழல் புலனாய்வுப் பணியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டதன் பின்னர், விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சரை பிணையில் விடுவிக்க ஊழல் புலனாய்வுப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளதுடன் அவரது கடவுச்சீட்டை பணியகம் கையகப்படுத்தியுள்ளது. விசாரணைக்கு ஆதரவளித்த அமைச்சர் ஊழல் தொடர்பான விசாரணைக்கு போக்குவரத்து அமைச்சர் ஆதரவு அளித்ததாகவும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊழல் புலனாய்வுப் பிரிவு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி ஊழல் விசாரணைப் பணியகம் அந்நாட்டு பிரதமர் லீ சியாங் லாங்கிற்கு, ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனிடம் விசாரணை நடத்த விரும்புவதாக அறிவித்தது. கோரிக்கையை அனுமதித்த பிரதமர், 6ஆம் திகதி போக்குவரத்து அமைச்சரிடம் விசாரணை நடத்த ஊழல் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளார். பிரதமர் வெளியிட்ட அறிக்கை இதுகுறித்து பிரதமர் லீ சியாங் லாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ஆம் திகதி ஊழல் புலனாய்வுப் பிரிவினரால் போக்குவரத்து அமைச்சரிடம் விசாரணை நடத்தக் கோரி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மூத்த இராஜாங்க அமைச்சர் சீ ஹாங் டாட், போக்குவரத்து துறையின் தற்காலிக அமைச்சராக செயல்படுவார் என்றும் பிரதமர் கூறியுள்ளார். விசாரணை முடியும் வரை அவரை அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு அந்நாட்டு அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/singapore-transport-minister-arrested-for-fraud-1689545269
  6. ஒரே நாளில் 83 இராணுவ பட்டாலியன்களை இழந்துள்ளதா ரஷ்யா! வாக்னர் வாடகை இராணுவத்தினருடன் தொடர்புக்களை மேற்கொண்டு வந்ததாக கூறி ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகள் சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் வாக்னர் வாடகை இராணுவதினரால் இடம்பெற்ற இராணுவ புரட்சியில் இவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறியே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் வாக்னர் படையின் இராணுவ புரட்சி நடவடிக்கை குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியானால் வாக்னர் படைக்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்பை அந்நாட்டு புலனாய்வு பிரிவு அறிந்து வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி தற்போது உலக அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய புலனாய்வு பிரிவின் பலவீனங்கள் பற்றி கடந்த வருடம் ரஷ்ய ஆதரவாளர்கள் பல்வேறான முறைப்பாடுகளை முன்வைத்தனர். இவ்வாறு ரஷ்யாவின் இராணுவ புரட்சி தொடர்பிலான விடயங்கள் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் மாத்திரம் இல்லாது சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் ரஷ்யாவினதும் புடினினதும் உக்ரைன் மீதான வெற்றி ஆரவாரங்களுக்கு மத்தியில் நாம் கவனத்தில் எடுக்க தவறிய விடயங்களை அலசி ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம். https://tamilwin.com/article/ukraine-russia-war-latest-update-1689579175
  7. கிரைமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலம் சேதமடைந்தது: இருவர் பலி Published By: SETHU 17 JUL, 2023 | 11:17 AM ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தையும் ரஷ்ய பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இடம்பெற்ற சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை கிரைமியா பாலத்தில் அவசர நிலையொன்று ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது என ரஷ்யாவின் பெல்கோரொட் பிராந்திய ஆளுனர் வியாசேஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஒரு தம்பதியினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் மகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்பாலத்தின் கிரைமியா பகுதி சேதமடைந்துள்ளது என ரஷ்ய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இசம்பவம் தொடர்பான விபரங்களை அவ்வவமைச்சு தெரிவிக்கவில்லை. கிரைமியாவையும் ரஷ்யாவின் க்ராஸ்னோடார் பிராந்தியத்தையும் இணைக்கும் இப்பாலத்தில் மேற்படி சம்பவத்தைடுத்து, போக்குவரத்து நிறத்தப்பட்டுள்ளது என ரஷ்ய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/160195
  8. எனக்கென்னமோ ரஸ்யாவும் மேற்கும் உக்கிரேனில் தங்கட ஆயுதங்களை பரீட்சிப்பதாகப்படுகின்றது.
  9. 50 ஆண்டுகளுக்கு முன்பே நாசா அனுப்பிய விண்கலம், நான்கே நாட்களில் நிலவை அடைந்த நிலையில், தற்போது இஸ்ரோ அனுப்பும் ஆளில்லா விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் எடுப்பது ஏன்? நிலவை நோக்கிய சந்திரயான்-3 இன் பயணத்துக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்படுவது எதனால்?
  10. கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் - முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் Published By: NANTHINI 15 JUL, 2023 | 11:22 AM கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இப்பொழுதும் மன்னார் புதைகுழி மறைக்கப்பட்ட ஒன்றாக வந்துள்ள நிலையில் கொக்குதொடுவாய் புதைகுழி விடயம் கூட ஊடகத்தினூடாகவே பெருமளவு மக்களின் காதுகளை சென்றடைந்துள்ளது. இந்த கொக்குதொடுவாய் புதைகுழியானது, சர்வதேச நியமத்தின் அடிப்படையில் அதாவது அனுசரணையாளர்களின் மேற்பார்வையில் தோண்டப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோரை அவர்களது உறவுகள் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இலங்கையை பொறுத்தவரையில், இந்த ஆய்வுகளின் களப்பணிக்குரிய அறிவும் ஆற்றலும் எந்தளவுக்கு சர்வதேச நியமத்துக்கு உட்பட்டுள்ளது என்றொரு கேள்வியுள்ளது. ஆகவே, சர்வதேசத்தின் கண்காணிப்பில், அவர்களின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தனது கோரிக்கையை முன்வைக்கிறார். https://www.virakesari.lk/article/160061
  11. கொக்குத்தொடுவாய்க்கு விஜயம் மேற்கொண்டு உரிய அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - புலம்பெயர் தமிழர் அமைப்பு 14 JUL, 2023 | 04:53 PM (நா.தனுஜா) முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டு, சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பு என்பன இடம்பெறுவதைக் கண்காணித்து உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணை ஆணையாளர் ஆகியோரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவானின் உத்தரவுக்கு அமைவாகக் கடந்த 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பு என்பன இடம்பெறுவதைக் கண்காணித்து உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ ஆகியோருக்குத் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது. அக்கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: அண்மையில் முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் சார்பில் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 8 ஆவது பந்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களை சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், அவற்றைப் பாதுகாத்துவைப்பதற்குமான அதிகாரத்தை மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருக்கின்றது. இவ்வதிகாரத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம். இலங்கையில் கண்டறியப்பட்டிருக்கின்ற 33 ஆவது மனிதப்புதைகுழியான கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி, போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. அதுமாத்திரமன்றி இப்புதைகுழியை அண்மித்த பகுதியில் இராணுவமுகாம் ஒன்றும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இம்மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்பட்டுள்ள மனித எச்சங்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுடையது என்ற அச்சம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்களது அலுவலகத்தின் தலையீடின்றி உண்மை வெளியே வராது என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் உடனடியானதொரு சர்வதேசப் பொறிமுறையும் அவசியமாகின்றது என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/160032
  12. வீர முத்துவேல்: சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர் - யார் இவர்? பட மூலாதாரம்,ISRO 14 ஜூலை 2023 இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இன்று (ஜூலை 14, வெள்ளிக்கிழமை) மதியம் 2:35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம்3 எம்4 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது நாடு முழுதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில், சந்திரயான் 3-இன் திட்ட இயக்குநராக ஒரு தமிழர் பணியாற்றியிருப்பது தமிழகத்துக்கு இரட்டிப்புப் பெருமையாக அமைந்துள்ளது. சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டபோது வீர முத்துவேல் என்ன பேசினார்? சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் பேசிய வீரமுத்துவேல், விண்கலம் மிக நுணுக்கமான சுற்றுவட்டப் பாதையில் சரியாக செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும் பேசிய அவர், விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார். “நிலவுக்கு நமது பயணம் இப்போது துவங்கியுள்ளது,” என்றார். இஸ்ரோவின் பெங்களூரு கண்காணிப்பு மையத்திலிருந்து விண்கலத்தைக் கூர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போவதாகக் கூறினார். “திட்டத்தின் மிக முக்கியமான கட்டங்கள் அடுத்து வரவிருக்கின்றன. விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்,” என்றார். கல்வி முழுவதும் தமிழகத்தில் முடித்தவர் வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ஆம் வகுப்பு வரை படித்தார். பிறகு, விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் இயந்திரவியலில் டிப்ளமோ முடித்தார். பிறகு, சென்னை சாய்ராம் கல்லுாரியில், பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திரவியல் பிரிவில் படித்தார். அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லுாரியில், முதுநிலைப் பட்டம் பயின்றார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ'வில் பணிக்குச் சேர்ந்தார். இவற்றுக்கு இடையே, இவர் சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி.யிலும் பயிற்சி பெற்றார். பட மூலாதாரம்,ISRO ‘என் மகனின் உழைப்பே இந்த வெற்றிக்குக் காரணம்’ இந்த முக்கியமான தருணத்தில் வீர முத்துவேலின் தந்தை பழனிவேலிடம் பிபிசி தமிழ் தொலைபேசி மூலம் உரையாடியது. தனது மகனின் விடாமுயற்சியும் திறனுமே அவர் இந்நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்றார் பழனிவேல். “எனது மகன் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர் தனது விடாமுயற்சியால் எப்போதும் முதலிடம் பெறுவார். அவரது தனித்தன்மையான செயல்பாடும் அறிவுமே அவர் இந்த நிலைக்கு உயர்ந்ததற்குக் காரணம்,” என்றார் பழனிவேல். மேலும் பேசிய அவர், “என் மகனின் இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் அவரது உழைப்பு மட்டுமே," என்றும் கூறினார். பட மூலாதாரம்,ISRO தொடர்ந்து ‘சந்திரயான்’ திட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் தமிழர்கள் சந்திரயான் திட்டத்திற்கு ஒரு தமிழர் தலைமை வகிப்பது இது முதல்முறை அல்ல. சந்திரயான்-1இன் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2இன் திட்ட இயக்குநராக இருந்த வனிதா ஆகிய இருவரும் தமிழர்கள். இதனால் மூன்று சந்திரயான் திட்டங்களிலும் திட்ட இயக்குநர்களாக தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு வகித்துள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2r6znq35no
  13. உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணை. இதை நான் யோசிக்கவில்லை, என்றாலும் இதற்கான பதிலையும் சொல்லுங்கோ.
  14. காற்றில்லாத விண்வெளியில் சந்திராயன் போன்ற விண்கலங்கள் எவ்வாறு உந்திதள்ளப்படுகின்றன?
  15. அவங்கள் மறைமுகமாக தடுக்கிறாங்களோ?! VPN ஊடாக முயன்று பாருங்க. குறித்த பக்கேஜ்களாக கட்டணம் செலுத்தினால் அதில் குறிப்பிட்டவை(பேஸ்புக், யுரியூப்) மட்டுமே இயங்கும்.
  16. விண்ணில் பாய்ந்தது சந்திராயன் 14 JUL, 2023 | 02:57 PM ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் இன்று விண்ணை நோக்கி சென்றுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, இந்திய மக்கள் கொண்டாடினர். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக, விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டன. சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியது. இதனை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.05 மணிக்கு துல்லியமாக தொடங்கியது. இந்நிலையில் கவுண்டவுன் முடிவடைந்து சரியாக 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3, முந்தைய சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி என்றாலும், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோடிக்கணக்கான இந்தியர்கள் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணத்தை ஆர்வமுடன் கண்காணித்து வந்தனர். ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்தது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது. கடந்த கால தவறுகளை கருத்தில் கொண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. குறிப்பாக விக்ரம் லேண்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் தரையிரங்க ஏதுவாக கடந்த முறையை விட விக்ரம் லேண்டரின் கால்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, நொடிக்கு 3 மீட்டர் அளவிற்கு பயணித்தாலும் கால்கள் உடையாத வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/160007
  17. அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகள் உக்ரைனை சென்றடைந்தன- Published By: RAJEEBAN 14 JUL, 2023 | 12:55 PM அமெரிக்கா வழங்கியுள்ள கொத்துக்குண்டுகளை பெற்றுக்கொண்டுள்ள உக்ரைன் அவற்றை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தென்உக்ரைனில் உள்ள அதிகாரியொருவர் கொத்துக்குண்டுகள் கிடைத்துள்ளன என தனது தளபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். கொத்துக்குண்டுகள் சென்றடைந்துள்ளதை பென்டகனும் உறுதி செய்துள்ளது. மொஸ்கோ இதனை கண்டித்துள்ளது. கொத்துக்குண்டு தனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் தானும் அதனை பயன்படுத்த வேண்டியிருக்கும் என ரஸ்யா எச்சரித்துள்ளது. ரஸ்யா தான் கைப்பற்றியுள்ள பெருமளவு நிலத்தில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதால் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது நியாயமானது என உக்ரைன் தெரிவித்துள்ளது. கொத்துக்குண்டுகள் ரஸ்ய படையினரை மேலும் மனச்சோர்வடையச் செய்யும், நிலைமையை உக்ரைன் படையினருக்கு சாதகமாக மாற்றும் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் உக்ரைனின் பகுதிகளை மீள கைப்பற்றுவதற்கு கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவோம் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159995
  18. மேற்குலக டாங்கிகளே உக்ரைனில் எங்களின் முக்கிய இலக்கு - புட்டின் Published By: RAJEEBAN 14 JUL, 2023 | 12:36 PM உக்ரைன்: மேற்குலகின் டாங்கிகளே ரஸ்யாவின் முன்னுரிமைக்குரிய இலக்காக காணப்படுகின்றன என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு மேற்குலகம் ஆயுதங்களை அனுப்புவது யுத்தத்தின் போக்கை மாற்றாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்ய தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள புட்டின் உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஸ்யாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேற்குலகம் ஆயுதங்களை வழங்குவது சர்வதேச பதற்றத்தை நீடித்து மோதலை மேலும் நீடிக்கச்செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 250 கிலோமீற்றர் செல்லக்கூடிய குறுஸ் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கும் பிரான்ஸின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புட்டின் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன, ஆனால் அவை யுத்தத்தின் போக்கை மாற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குலகின் டாங்கிகளே எங்களது முன்னுரிமைக்குரிய இலக்குகள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159993
  19. முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு எப்போது ? 20 ஆம் திகதி நீதிமன்றில் தீர்மானம் 13 JUL, 2023 | 09:32 PM முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அது பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த அகழ்வு பணி தொடர்பில் இன்று(13) வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இதற்க்கமைய முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் (ஓ எம் பி ) சிரேஸ்ர சட்டத்தரணி ஜெகநாதன் தர்ப்பரன், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், வி.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணிகளான றணித்தா ஞானராஜா, வி.கே நிறஞ்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அளம்பில் பங்குத்தந்தை யூட் அமலதாஸ், நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் கலந்துரையாடலில் முன்னதாக நீதிபதி அவர்களால் சட்ட வைத்திய அதிகாரியிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகிய மூவர் கொண்ட குழாம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் குறித்த பணியை முன்னெடுக்கும் எனவும், இதில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க தொல்லியல் திணைக்களத்தினரை உள்வாங்க வேண்டும் எனவும் அவர்களே அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பகுதியில் மழைக்காலத்துக்கு முன்னதாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அகழ்வுப்பணிக்கான நிதி ஏற்ப்பாடுகள் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பல்வேறு தரப்புக்களின் கருத்துக்களை தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (20.07.2023) அன்று சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டவைத்திய அதிகாரிகளின் அகழ்வு நடவடிக்கைகள், நிதி தொடர்பான விடயம் ஓஎம்பி அலுவலகம் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ளல், விரைவாக அகழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும், சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொறிமுறை, குறித்த காணி தொடர்பில் நில அளவை திணைக்களத்தின் வரைபடங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு பணிதொடர்பான விடயங்கள் ,கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் குறித்த காணி சுதந்திரத்தின் பின்னர் யார் யாரின் ஆளுகையில் இருந்தது என்பது தொடர்பான விடயம் தற்போதுள்ள பாதுகாப்பை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அன்றைய தினம்(20) அகழ்வு பணி தொடர்பில் தீர்மானிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி. கே .நிறஞ்சன் அவர்கள் சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடலில் சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இதன் போது, அழைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகளும் வைத்தியர்களாக வைத்தியர் வாசுதேவ மற்றும் பிரணவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள். அவர்கள் இந்தப் புதைவழி எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த நபர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில், சர்வதேச நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வைத்தியர்களுக்கு அவர்களுடைய தயாரிக்கப்பட்ட கோவை ஒன்று காணப்படுவதாக கூறி அதற்கு அமைவாக இந்த அகழ்வை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது அதே நேரம் எவ்வாறு இந்த மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் பல கட்டளைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிறுவனங்களின் அறிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைக்காகவும் இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/159955
  20. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டறியப்படவில்லை - பொலிஸ் Published By: VISHNU 13 JUL, 2023 | 05:24 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதியன்று அவ்விடத்தைப் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான், அங்கு ஜுலை மாதம் (இம்மாதம்) 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டார். இருப்பினும் கடந்த 8 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது சில வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்) கண்டெடுக்கப்பட்டதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker இச்செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்துள்ளது. அதற்கமை இதுபற்றி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் Factseeker வினவியபோது, அவர் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகளோ, வெடிமருந்துகளோ அல்லது துப்பாக்கி ரவைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி இந்த அகழ்வுப்பணிகள் கடந்த 6 ஆம் திகதி மாத்திரமே முன்னெடுக்கப்பட்டதாகவும், 8 ஆம் திகதி எந்தவொரு அகழ்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159940
  21. நிலவை நோக்கி நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான் – 3’ விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது. அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ரொக்கெட், நாளை(ஜூலை 14) பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, 25 மணி நேரம், 30 நிமிடங்களுக்கான, ‘கவுன்ட் டவுண்’ இன்று மதியம், 1:00 மணிக்கு தொடங்குகிறது. பூமியில் இருந்து புறப்படும் ரொக்கெட், 173 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில் சந்திரயான் விண்கலத்தை நிலைநிறுத்தும். அங்கிருந்து படிப்படியாக புவி வட்ட பாதையின் துாரம், 36,500 கி.மீ., வரை அதிகரிக்கப்படும். பின், ரொக்கெட்டில் உள்ள, ‘புரோபெல்லன்ட்’ சாதனம் ரொக்கெட் போல் செயல்பட்டு, சந்திராயன் விண்கலத்தை, நிலவின் சுற்று வட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்கும். ஆக., 23 அல்லது, 24ம் திகதி சந்திரயான் விண்கலம் – 3ல் உள்ள லேண்டர் கலனை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/262903
  22. ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து - உக்ரைனில் போரில்ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரி பணிநீக்கம் 13 JUL, 2023 | 12:20 PM ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக ரஸ்யாவின் சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரஸ்ய பாதுகாப்பு படையினர் தனது படைப்பிரிவிற்கு போதியளவு ஆதரவை வழங்கவில்லை என தான் குற்றம்சாட்டியதற்காக தன்னை பணியிலிருந்து நீக்கியுள்ளனர் என தென் உக்ரைனில் உள்ள ரஸ்ய படையினரின் தளபதி இவான் பொபொவ் தெரிவித்துள்ளார். ஜபோரிஜியா பகுதியில் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள ரஸ்ய படையினரின் தளபதியே இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பதவி நீக்கம் முன்னொருபோதும் இல்லாத சம்பவம் என ஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/159898

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.