Everything posted by ஏராளன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆகா, ஒரு குறும்பரிடம் மாட்டிக் கொண்டேனே!!
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைக்கவில்லை! நிதியை வழங்க பின்னடிக்கிறதா அரசாங்கம் ? மீளவும் வழக்கு Published By: VISHNU 18 AUG, 2023 | 09:48 AM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.08.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டத்தரணி வி கே நிரஞ்சன், தொல்பொருள் திணைக் களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் எம். அஜந்தன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி உள்ளிட்ட தரப்பினர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகியிருந்தனர். இதன்போது தொல்பொருள் திணைக்களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக அவர்களால் குறித்த அகழ்வு பணிக்கு ஆறு வாரங்களுக்கு 1.2 மில்லியன் ரூபா பாதீடு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான நிதிகள் கிடைக்கப்பெறாமல் அதனுடைய வேலைகளை ஆரம்பிக்க முடியாது என்று சட்ட வைத்திய அதிகாரி அவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் உரிய நிதிகள் கிடைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 15 நிமிடங்கள் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் நீதிமன்றம் ஆரம்பமாகி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வழக்கில் சட்டத்தரணி வி கே நிரஞ்சன் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு இதுவரை நிதி கிடைக்கவில்லை என்பதை தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததன்படி 21 ஆம் திகதி அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க முடியாது என்றும் அதன் தொடர்ச்சியாக இந்த அகழ்வுப்பணிகள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் குறித்த அகழ்வு பணி இடத்திலே முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் தொடர்பாக பல்வேறு திணைக்களங்கள் இதில் கலந்துரையாடுவதற்கு இந்த இடத்தில் இல்லாத காரணத்தினால் அவர்களையும் அடுத்த தவணையில் அழைத்து உரிய தீர்வுகளை எட்டி இந்த அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அவர்களால் நீதிமன்றத்திற்கு கருத்தை முன்வைத்தார். இதன் அடிப்படையில் இலங்கை மின்சார சபை, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபர் அல்லது நிதி தொடர்பாக கையாளக்கூடிய அதிகாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், நில அளவை திணைக்களத்தினுடைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள், கொக்குளாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தடயவியல் பொலிசார், காணாமல் போனோர் அலுவலகத்தினுடைய பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியினுடைய கிராம அலுவலர் உள்ளிட்ட தரப்பினர் அனைவரையும் அடுத்த தவணையில் மன்றில் பிரசன்னமாக உத்தரவிடுமாறும் அவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி உறுதியான தீர்மானத்தை எடுத்து அகழ் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். சட்டத்தரணி நிரஞ்சன் அவர்கள் குறித்த வழக்கில் அகழ்வு பணியுடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து உரிய முடிவை எடுத்து மழைக்கு முன்பதாக இந்த அகழ்வு பணியினை விரைவுபடுத்தி அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதினால் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31.08.2023 அன்றுக்கு தவணையிட்டு அன்றைய தினம் (31) அனைத்து தரப்பினரையும் நீதிமன்றில் முன்னிலையாக கட்டளை ஆக்கினார். https://www.virakesari.lk/article/162614
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எனக்கு மெய்யாலுமே சந்தேகமா இருந்ததால் கேட்டேன். மற்றும்படி சுவியண்ணை வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை.
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : அகழ்வுப் பணிக்கான செலவு அறிக்கை சமர்ப்பிப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்தப் பகுதியில் அகழ்வுப் பணிக்கான செலவு தொடர்பான அறிக்கையை தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மன்றில் சமர்ப்பித்தனர். இந்நிலையில், நிதி கையாளுகை தொடர்பில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் மன்றில் ஆஜராகாதமையினால், அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொக்குத்தொடுவாயில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. https://thinakkural.lk/article/268940
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரயான் -3 விண்கலம்: லேண்டர் தனியாக பிரிந்தது..! 17 AUG, 2023 | 01:57 PM சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலம் தரையிறங்க இருக்கிறது. https://www.virakesari.lk/article/162567
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்ணை ஒரு சந்தேகம், இது கழுகோ? ஆந்தையோ?
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
ஏனெனில், மரணமடைந்த சுகந்தனும் பிரதான சந்தேக நபராக கைதானவரும் அடிதடி மற்றும் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமையையும் மக்கள் மறுப்பதற்கில்லை. இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. . எது எவ்வாறாயினும், சட்டம் தன் கடமையை செய்யும் நிலையில், தனி நபர்கள் தீர்ப்பு வழங்கும் ‘ரவுடீஸ’ போக்கு, ஒழுக்கமுள்ள சமூகத்துக்கு ஏற்புடையதல்ல. எனவே, உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை நீதியினூடாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
மலரும் நினைவுகள் ..
இது தான் மெக்கானிக்கின் கெற்றப்புல்லோ?!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 12 பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய நாளிதழான இஸ்வெஸ்டியாவின் டெலிகிராமில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சாட்சியின்படி, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெற்றோல் நிலையத்திற்கு பரவியதாக கூறப்பட்டது. மேலும், ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்தால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், “ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டியது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியது. மேலும், சம்பவ இடத்தில் 260 தீயணைப்பு வீரர்கள் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது. https://thinakkural.lk/article/268404
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யா தாக்குதலில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உட்பட 7 பேர் பலி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளையும் தேவையான போது பயன்படுத்தி வருகிறது. உக்ரைன் டிரோன்களை ரஷ்யா இடைமறித்து அழித்தபோதிலும், உடனடியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை, தனது 12 வயது சகோதரர் மற்றும் தந்தையுடன் உயிரிழந்துள்ளது. ஸ்டானிஸ்லேவ் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கிறிஸ்துவ பாதிரியார் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். https://thinakkural.lk/article/268265
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
-
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!
14 AUG, 2023 | 01:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. செஞ்சோலை வளாகம் செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்பகுதியில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/162336
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
பசும்பாலா பசுப்பாலா சரி?
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
அவ்வளவு மோசமான மனநிலையுள்ள மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அண்ணை. சரிப்படுத்தியாச்சு தானே.
-
இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஆகஸ்ட் 2023 ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் மற்றும் ஒரே ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ தேர்வு செய்தது. அங்கு 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஏவுதளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்கா தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டினம் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் தொடங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசினார். ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பாகவே தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் வாலிநோக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES “கடந்த 1960களின் இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதற்காக கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன். அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் தலைமையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட பலர் அடங்கிய குழு அங்கு சென்று ஆய்வு செய்தது. "அங்கிருந்த தேவாலயத்தினரும் கிராம மக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டு அங்கு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது,” என்று இளங்கோவன் தெரிவித்தார். குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்ந்தெடுத்தது குறித்துப் பேசும்போது அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக விஞ்ஞானி இளங்கோவன் தெரிவித்தார். அவை, "பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி மீ/செகண்ட்)," என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்று அவர் விளக்கினார். இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்து கூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. "எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன. ஏவுகலங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (உதாரணமாக சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது," என்கிறார் விஞ்ஞானி இளங்கோவன். இந்த விதியை கருத்தில் கொண்டு, "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆனால், இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்." அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் இளங்கோவன். மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது எனவும் புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். "தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம், மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவே தான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்துள்ளது,” எனக் கூறினார். பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN “ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். அதோடு, ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும்,” என்று கூறுகிறார் மூத்த விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து. “வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை மீது பறந்துவிடாமல் இருக்க அல்லது ராக்கெட்டுகளில் இருந்து பிரிந்து விழும் பாகங்கள் இலங்கை மீது விழாமல் இருக்க, கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது. ஆனால், குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும்போது இந்த பிரச்னை எழாது. ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இது இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்கிறார் அவர். திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு ஓரளவு அருகில் குலசேகரப்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படாது,” எனக் கூறினார். குலசேகரப்பட்டினம் சர்வதேச அளவில் கவனம் பெறும் “குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். குலசேகரப்பட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும்," என்று கூறுகிறார் நெல்லை சு. முத்து. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால், "அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்," என்கிறார் அவர். இதன் மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் "தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தகரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும்,” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c843zmy0gpwo சிவப்பு குறியிட்ட பகுதி குலசேகரப்பட்டினம்.
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
இந்த திரியை வாசித்தோர் குறைவு. ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
Published By: DIGITAL DESK 3 12 AUG, 2023 | 08:29 PM இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீரமுனை கிராமத்தில் உள்ள ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்து தஞ்சமடைந்திருந்த வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 55 பேர் 1990.08.12 அன்று இலங்கை இராணுவத்துடன் அந்தக் காலப்பகுதிகளில் சேர்ந்து இயங்கி வந்த ஊர்காவல் படையினரால் வெட்டியும், குறிப்பாக சிறுவர்கள் சுவற்றில் அடித்தும் கொல்லப்பட்டதாக கண்காளால் கண்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், காயப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாட்சியங்களை அழிக்கும் நோக்குடன் காணாமலும் ஆக்கப்பபட்டதாகவும் உயிர் தப்பியவர்களால் கூறப்படுகின்றது. இன்றுடன் இந்த மக்கள் கொல்லப்பட்டு 33 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் இப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக உரிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நலன்விரும்பிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்றைய நாளில் (ஆவணி 12) வருடா வருடம் இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்திய வகையில் நினைவேந்தல்களை பல வகையான சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மேற்கொண்டு வருகின்றோம். எனவே, இலங்கை அரசாங்கமானது இவ்வாறான சம்பவங்களுக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கின்று என்பதனை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலப்பகுதிகளில் இது போன்ற படுகொலைகள் தழிழர் பகுதிகளில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை மற்றும் திருகோணமலை குமாரபுரம் படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கை நீதி மன்றங்களில் கண்கண்ட சாட்சியங்களுடன் வழக்கு தாக்கல்கள் மேற்கொண்ட போதும் உரிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் மறுக்கப்பட்ட வேதனையான சம்பவத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். அதே போன்றே இன்றைய தினம் இம்மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆண்டு நினைவேந்தலினை மேற்கொள்ளப்பட்டது. எனவே, வீரமுனை படுகொலை நடந்து இன்று 33ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம். 01. இப்படுகொலை தொடர்பான வழக்கினை இலங்கை அரசாங்கமானது முன்னெடுக்க வேண்டும் 02. பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கப் பெற வேண்டும் 03. குற்றம் இழைத்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் 04. இம்மக்களின் தொடர் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் 05. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும். https://www.virakesari.lk/article/162218
-
விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
படக்குறிப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது. 11 ஆகஸ்ட் 2023, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஒன்றிலிருந்து வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை கடந்த மாதம் விடுவித்திருந்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால் வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்கும் 228 பக்க தீர்ப்பை எப்படி நான்கு நாட்களில் எழுதி முடித்தார் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது நீதித்துறையில் சாதனையாக கருதப்பட வேண்டும் என சாடியுள்ளார். ஒருபுறம் அமலாக்கத்துறை செம்மண் குவாரி வழக்கை கையில் எடுத்திருக்கும் நிலையில், முடிந்ததாக நினைத்த சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருப்பது அமைச்சர் பொன்முடிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. நீதிமன்றம் இது போன்று தாமாக முன்வந்து விசாரிப்பது வழக்கமான செயல் அல்ல என்பதால் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூருக்கு கடைசி நேரத்தில் வழக்கை மாற்றியது ஏன் என நீதிபதி கேள்வி. 20 ஆண்டுகளாக நடந்த வழக்கு 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திமுக ஆட்சி விலகி அதிமுக ஆட்சி தொடங்கிய போது, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் 2002ம் ஆண்டு போடப்பட்டதாகும். இந்த வழக்கின் விசாரணை முதலில் விழுப்புரத்தில் நடைபெற்று வந்தது. பின் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஜூன் 28ம் தேதி அவரையும் அவரது மனைவியையும் விடுவித்திருந்தது. தமிழக அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை அவரது விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இதனை தாமாக முன்வந்து நேற்று (ஆகஸ்ட் 10)விசாரித்தார். படக்குறிப்பு, 228 பக்க தீர்ப்பை வேலூர் நீதிபதி எப்படி நான்கு நாட்களில் எழுதினார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி. வழக்கை கடைசி நேரத்தில் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? - நீதிபதி கேள்வி அப்போது இந்த வழக்கு ஏன் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை தனது 17 பக்க உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார். தான் பார்த்ததில், மிகவும் மோசமான வழக்கு என நீதிபதி தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீதிபதியின் உத்தரவில், விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு விசாரணை முடியும் தருவாயில் வழக்கு மாற்றப்பட்டிருப்பதில் முறையான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. “விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை பெரும்பங்கு முடித்து, முடியும் தருவாயில் இருந்த போது வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறையில் தவறு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 28ம் தேதி , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அதன் பின் ஜூன் 30 ம் தேதி பதவி விலகியுள்ளார். வேலூர் நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது இந்த நீதிமன்றத்தின் சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் 109 பிரிவின் கீழ் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, அவரது மாமியார் பி சரஸ்வதி, பொன்முடியின் நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 228 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, 318 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் அந்த உத்தரவில், “இரண்டு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறது, இப்படி செய்வதற்கு நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றமே வழக்கை மாற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளது” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை: வழக்கின் பின்னணி என்ன?18 ஜூலை 2023 நான்கு நாட்களில் எப்படி 228 பக்கத் தீர்ப்பு தயாரானது? - நீதிபதி காட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு எப்படி வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டவுடன் வேகமாக நகர ஆரம்பித்தது என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கேள்வி எழுப்பியுள்ளது. “ஜூன் 2023-ல் குற்றம் சாட்டப்பட்டவரின் (பொன்முடியின்) நட்சத்திரங்கள் அவருக்கு சாதகமாக கட்சிதமாக அமைந்தன, அதுவும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் ஆசியுடன். ஜூன் 23ம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நான்கு நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள் கூட இது போன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். இரண்டு நாட்கள் கழித்து நீதிபதி நிம்மதியாக பணி ஓய்வு பெற்றுவிட்டார்.” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடிக்கு நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமலாக்கத்துறையால் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றது இதிலிருந்து மாறுபட்ட வழக்காகும். 2006-2011ம் ஆண்டுகளில் கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது, விதிகளை மீறி செம்மண் குவாரிகளுக்கு அனுமதி அளித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது குறித்தான வழக்கையே அமலாக்கத்துறை கையில் எடுத்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/c8v03e4v37vo
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் ; காணாமல் போனோர் அலுவலகம் Published By: DIGITAL DESK 3 08 AUG, 2023 | 04:42 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி பிரிவில் இருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப்பணிக்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது. இதில் தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் எதிர்வரும் 10 ஆம் திகதி நேரில் பார்வையிட்டு மூன்று வார காலம் கேட்டு இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/161896
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணம் குறித்த காரணம் வெளியாகும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று (08) திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இதனைத் தெரிவித்தார். மீண்டுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவது அவசியம் என சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர் குழு தமக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, விசாரணை தொடர்பான மரபணு அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். இதன்படி, அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/267428
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை கொல்வதற்கு ரஸ்யா முயற்சி- தகவல் வழங்கிய பெண் கைது Published By: RAJEEBAN 08 AUG, 2023 | 06:11 AM உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் ஜெலென்ஸ்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மைக்கொலாய்வ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்வது குறித்த விடயங்களை பெற்றுக்கொள்வதற்கு முயன்ற பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார். மொஸ்கோ இராணுவத்திற்கு உதவும் உக்ரைன் பிரஜைகளை உக்ரைன் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தன்னை கொல்வதற்கான சதி குறித்து அதிகாரிகள் தகவல்வழங்கியுள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கைது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யா இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ரஸ்ய தரப்பிடம் தகவல்களை வழங்க முற்பட்டவேளை இந்த பெண் பிடிபட்டார் என உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் அவரது விஜயம் குறித்த தகவல்களை அந்த பெண் பெற முயன்றார் என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் சமையல் அறையில் அந்த பெண் உக்ரைன் அதிகாரிகளுடன் காணப்படும் படத்தை வெளியிட்டுள்ளனர். ஜெலென்ஸ்கி குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் தங்களிற்கு இந்த சதி குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் இதனை தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்ளும் பகுதி மீது பாரிய விமானதாக்குதல்களை மேற்கொள்ள ரஸ்யா திட்டமிட்டது, சந்தேக நபர் அந்த பகுதியில் காணப்படும் இலத்திரனியல் பொறிமுறை அமைப்புகள் வெடிமருந்து கிடங்குகள் போன்றவை குறித்த தகவல்களை வழங்க முயன்றார் – ரஸ்யா அவற்றை இலக்குவைப்பதற்கு உதவுவதே அவரின் நோக்கம் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/161834
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் - 3 : இஸ்ரோ தகவல் 06 AUG, 2023 | 09:57 AM சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சந்திரயான் புவி ஈர்ப்பு விசையில் இருந்துவிலக்கப்பட்டு நிலவை நோக்கிசெல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது. 5 நாட்கள் பயணத்துக்குபின் நிலவுக்கு அருகே விண்கலம் நேற்றிரவு சென்றது. இதையடுத்து விண்கலத்தை நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் செலுத்தும் முயற்சி 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் வலம் வருகிறது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக இன்று (ஆக.6) இரவு 11 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதை மாற்றப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்பட்டு திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/161714
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு ; பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 05 AUG, 2023 | 09:14 AM வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை நேற்று வெள்ளிக்கிழமை (04) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுதிய பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற புலனாய்வுத்திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் ஆஜர்படுத்தினர். இதன்போதே, சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அஹமட் ரசீம் உத்தரவிட்டார். கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில், சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர் சம்பவம் நடைபெற்ற அன்று தனது பிள்ளைக்கு சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக, யாழ்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிறிந்ததாகவும், சம்பவதினத்தன்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் வவுனியாவில் இல்லை என்றும், சந்தேகநபரின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து மன்றுக்கு முற்படுத்தினர். பின்னர் சந்தேகநபர் அனுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்திரிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/161659