Everything posted by ஏராளன்
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கா, கனடா வலியுறுத்தல் 11 SEP, 2023 | 09:40 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க மற்றும் கனேடியப் பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப் படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இங்கு ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையைத் தொடர்ந்து ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றினர். அதன்படி பேரவையில் கருத்து வெளியிட்ட அமெரிக்கப்பிரதிநிதி, இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் ஊழல் ஒழிப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை உள்ளடங்கலாக இலங்கையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார். இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்திய அவர், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் மீளவலியுறுத்தினார். அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையின் ஊடாக கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை பேரவையில் உரையாற்றிய கனேடியப் பிரதிநிதி, இலங்கையின் அண்மையகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார். குறிப்பாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் என்பன உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்குரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைத்தல் மற்றும் பால்புதுமையின சமூகத்தினரது உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான சரத்துக்களை நீக்கல் என்பன பற்றியும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/164367
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் : எத்தனை எலும்புக்கூடுகள் இருக்கின்றன என்பதை இனங்காண்பதில் சவால் 11 SEP, 2023 | 07:27 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்பதை இனங்காண்பதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஐந்தாவதுநாளாக (11) இன்று இடம்பெற்ற நிலையில், அகழ்வுப் பணிகளின் நிறைவில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (11) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது. அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில், ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகளில் இரண்டுமனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு துப்பாக்கி ரவையும் தடயப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றின் மீது ஒன்று மிக நெருக்கமாகவும், பல அடுக்குகளாகவும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் காணப்படுகின்றன. எனவே எத்தனை மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளன என்பதை தற்போது இனங்காணமுடியாதுள்ளது. படிப்படியாக அகழ்வுகளை மேற்கொண்டு, மனித எச்சங்களின் மேலுள்ள மண்ணை அகற்றும்போதுதான் எத்தனை மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் உள்ளன என்பதை இனங்காண முடியும். இன்னும் ஓரிரு தினங்களில் எத்தனை எலும்புக்கூட்டுத்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ள என்பதை தெரிவிக்கமுடியும். அதேவேளை கடந்த செப்ரெம்பர்(08) வெள்ளியன்று இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்தம் 04 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 14மீற்றர் நீளத்திலும், 3மீற்றர் அகலத்திலும், 1.5மீற்றர் தொடக்கம் 2மீற்றர் வரையான ஆழத்திலும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு கடந்த செப்ரெம்பர் (09) சனிக்கிழமையன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தகடு ஒன்று எடுக்கப்பட்டது. அதுதொடர்பில் பின்னர் அறியத்தரப்படும் என்றார். மேலும் குறித்த ஐந்தாம் நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெறும் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வருகைதந்திருந்ததுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அனந்தி சசிதரன் முன்னாள் உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், கிராமமட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/164363
-
7 வயது மாணவிக்கு எயிட்ஸ் தொற்று : காலங்கடந்து வெளியான திடுக்கிடும் உண்மை!
Published By: VISHNU 10 SEP, 2023 | 12:27 PM (எம்.மனோசித்ரா) 8 மாதங்களில் சிறுவர்கள் மீதான 654 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவு அறியாமை , சமூகத்தின் விமர்சனங்கள் மீதான அச்சத்திலிருந்து பெற்றோர் வெளிவர வேண்டும் சிறுவர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் இலங்கையில் சமீப காலமாக மிகவும் அதிகரித்து உயர் புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. நவீன காலத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் சார் வன்கொடுமைகளுக்கு நிலையான தீர்வை நோக்கி ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்கள் செயற்படுகின்ற போதிலும் , அவற்றால் இறுதி இலக்கை அடைய முடியாதுள்ளது. பன்னாடுகளில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் , வறுமை , மனித குலத்துக்கு அப்பாலான செயற்பாடுகளால் சிறுவர் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகும் சிறுவர்கள் முதல் சவாலாக பாலியல் ரீதியிலான வன்கொடுமைகள் காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள சிறுவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி தொழிலுக்குச் செல்வதால் பல மில்லியன் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்கட்டியுள்ள அந்த அமைப்பு, இதற்கு தீர்வினைக் காண்பதற்கு விரைவாக செயற்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் நிலைமையை அவதானிக்கும் போது சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் யாதெனில் சிறுவர்கள் பாடசாலைகளிலும் , தனியார் வகுப்புக்களிலும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையாகும். சிறுவர்கள் மத்தியில் இதுவரையும் பாலியல் தொடர்பான புரிதல் இன்மையும் , பெரும்பாலான பெற்றோரின் அறியாமையும் , அநாவசிய அச்சமும் இவற்றுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கின்றன. இவ்வாறான நிலையில் ஆசிரியர் ஒருவரால் 7 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் சுமார் 8 மாதங்களின் பின்னர் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. (தனிநபர் தகவல் பாதுகாப்பு நலன் கருதி பாடசாலையின் பெயர் , பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகநபரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை). சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்பதோடு , அவரது மனைவி பாலர் பாடசாலை ஆசிரியையாவார். சந்தேகநபர் 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதோடு , அவரது மனைவி முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்பினை நடத்துகின்றார். இவர்கள் இருவர் தமது வீட்டிலேயே மேலதிக வகுப்புக்களை நடத்தியுள்ளனர். கணவன் வீட்டிற்குள் காணப்படும் அறையொன்றிலும் , மனைவி வீட்டிற்கு வெளியிலும் வகுப்புக்களை நடத்தியுள்ளனர். இவ்வாறானதொரு சூழலிலேயே சிறுமி குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் ரீதியான மாற்றங்களை அவதானித்த அவரது தாயார் , சிறுமியை மருத்துவ சிகிச்சைக்க்காக அழைத்து சென்ற போதே தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமையை அறிந்து கொண்டுள்ளார். இது தொடர்பில் சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவரது பெற்றோர் முன்வரவில்லை. காரணம் சமூகம் தொடர்பான அச்சமும் , அதனால் ஏற்படக் கூடிய அவமானமும் அவர்களை முற்போக்காக சிந்திக்க இடமளிக்கவில்லை. இதனால் அந்த பெற்றோர் அங்கிருந்து இடம்பெயர்ந்து பிரிதொரு பிரதேசத்தில் குடியமர்ந்ததோடு, அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையில் தனது மகளை சேர்த்துள்ளனர். குறித்த சிறுமியை முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ள போதிலும் , அவர்கள் மகளின் எதிர்காலம் கருதி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரியவருகிறது. எவ்வாறிருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த சிறுமி சுகயீனமடைந்ததையடுத்து , அவரது தாயார் அவரை அருகிலுள்ள ஆதார வைத்தியசாலையொன்று அழைத்துச் சென்றுள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி எயிட்ஸ் (எச்.ஐ.வி.) தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் பெற்றோரிடம் மேலதிக தகவல்களைக் கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். வைத்தியர்களின் முறைப்பாட்டுக்கமைய கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (விளக்கமறியல் இம்மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.) வேலியே பயிரை மேய்தலைப் போன்று பெற்றோருக்கு அடுத்ததாக பிள்ளைகளின் பாதுகாவலராகவும் , தெய்வத்துக்கு மேலாகவும் கருதப்படுகின்ற ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களின் வாழ்வை சீரழிப்பது மன்னிக்க முடியாத , தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். பிரணீதா வர்ணகுலசூரிய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்த சந்தேகநபர் மாத்திரமின்றி, சிறுவர்களை தமது பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் (United Nations Human Rights Organization) நிறைவேற்றுப்பணிப்பாளர் பிரணீதா வர்ணனுலசூரிய கூறுகின்றார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் இலங்கையில் சேவைகளை வழங்கி வரும் இலாப நோக்கற்ற அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சமூக செயற்பாட்டாளருமான பிரணீதா வர்ணகுலசூரியவிடம் இந்த சம்பவம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'பெற்றோரின் அறியாமை, அச்சம் மற்றும் வெட்கத்தால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை கடந்த 7 மாத காலமாக மறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆரம்பத்திலேயே இது தொடர்பில் தெரிந்து கொண்ட வைத்தியரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை. இதனால் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அதற்கு முரணாகச் செயற்பட்டால் அதனை எவ்வாறு கூறுவது?' என்ற கேள்வியை கண்ணீருடன் முன்வைக்கிறார் பிரணீதா வர்ணகுலசூரிய. 'இந்த சம்பவத்தையும், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம். சந்தேகநபரிடம் இந்த மாணவி தவிர மேலும் 14 மாணவிகள் மேலதிக வகுப்பிற்குச் சென்றுள்ளனர். அது மாத்திரமின்றி சந்தேநபருக்கும் 8 மற்றும் 11 வயதுகளில் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். உண்மையில் அவர்கள் உட்பட ஏனைய மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் லயன் அறைகளுக்குள் இதுபோன்று மறைக்கப்பட்ட கதைகள் எத்தனை இன்னும் இருக்கக் கூடுமல்லவா? இந்த சம்பவத்துக்கு சந்தேகநபரின் மனைவியும் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பில் நாம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடளிக்கவில்லை. காரணம் அந்த அதிகாரசபையால் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனமான சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இவ்வாறான குற்றச் செயல்களின் போது குற்றவாளிகளுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகித்திருந்தால் இன்று அந்த சிறுமிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.' என்றும் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்தார். குறித்த சிறுமி ஜனவரி மாதமளவிலேயே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். ஆனால் 7 மாதங்களின் பின்னரே இவ்விடயம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பருவமடையாத இந்த சிறுமிக்கு எவ்வாறு எயிட்ஸ் தொற்று ஏற்பட்டது என்ற சந்தேகம் காணப்படுகிறது. எனவே சிறுமியின் பெற்றோர் , சந்தேகநபரான ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மாத்திரமே சிறுமிக்கு தொற்று ஏற்பட்டதன் மூலத்தை அறிய முடியும். சம்பவம் இடம்பெற்றதற்கும் , அது தொடர்பான தகவல்கள் வெளியாவதற்கும் இடையில் காணப்பட்ட 7 மாத காலத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றும் பிரணீதா வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய அரச நிறுவனம் என்ற ரீதியில் தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சானக உதயகுமார அமரசிங்கவை பல முறை தொடர்பு கொண்டு வினவ முயற்சித்த போதிலும் , அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் சட்டப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போது அவர் விளக்கமளிக்கையில் , 'இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுவர் பாதுகாப்பு சபைக்கு முறைப்பாடளிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவோ அல்லது முறைப்பாடளிக்கவோ முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அரச பாடசாலையொன்றின் ஆசிரியர் என்பதால் அவர் அரச உத்தியோகத்தர் ஆவார். சகல அரச உத்தியோக்கதர்களுக்கும் பொதுவான ஒழுக்க கோவையொன்று காணப்படுகிறது. அதன் அடிப்படையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும். எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தால், சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக ஒழுக்க விசாரணையை முன்னெடுக்குமாறு நாம் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவித்திருப்போம். இதன் போது பாதிக்கப்பட்ட மாணவியால் சாட்சியமளிக்கப்படும். விளக்கமறியல் மற்றும் வழக்கு விசாரணை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 'அரச சேவையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தல்' என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆசிரியரை பணியிடை நிறுத்தம் செய்ய அல்லது நிரந்தர பணி நீக்கம் செய்ய அல்லது இடமாற்றத்தை வழங்க முடியும். எனினும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதான வழக்கு விசாரணை நிறைவடைய வேண்டும். உண்மையில் ஒரு ஆசிரியரின் கடமை மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதேயன்றி, அவர்களிடம் தனது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதல்ல. இவ்வாறான சம்பவங்கள் மறைக்கப்பட வேண்டியவையல்ல. எனவே இவை தொடர்பில் சமூகத்துக்கும் , அரசியல் தலைவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் ஊடகங்களுக்கு காணப்படுகிறது. அரச உத்தியோகத்தர்களுக்கான நடத்தை நெறிமுறையை மீறியுள்ள இந்த ஆசிரியர் உட்பட இவரைப் போன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவ்வாறான சம்பவங்கள் எவரும் அறியாமல் மறைக்கப்பட்டிருக்கக் கூடும். இவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான புரிதல் இன்மையே அதற்கான காரணமாகும். எனவே அனைவருக்கும் அவற்றை அறிய செய்யும் படியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.' எனத் தெரிவித்தார். இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 32 வகையான குற்றச்சாட்டுகளின் 6408 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 273 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் , 6 பாலியல் சுரண்டல் சம்பவங்களும் , 39 கற்பளிப்புக்களும் , 3 முறையற்ற பாலியல் உறவுக்கு உட்படுத்தலுடன் தொடர்புடைய சம்பவங்களும் , 309 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் , 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை தொடர்பில் 6 சம்பவங்களும் , சிறுவர்களிடம் தவறான நடத்தை கொண்டமை தொடர்பில் 18 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. உண்மையில் இவை சில தரவுகள் மாத்திரமே. உத்தியோகபூர்வமாக வெளிவராத பல சம்பவங்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். எனவே துரதிஷ்டவசமாக இவ்வாறான சம்பவங்களை எதிர்கொண்டுள்ள சிறுவர் மற்றும் அவர்களது பெற்றோர் அடுத்த கட்டமாக சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். சமூகத்தின் விமர்சனங்களுக்கு அஞ்சி ஊரையும், பாடசாலையையும் மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. எனவே பெற்றோர் முதலில் விழிப்புணர்வுடன் முற்போக்காக சிந்தித்து செயற்பட வேண்டும். சமூகத்துக்குள் காணப்படும் போட்டித்தன்மையும் , மற்றவரைப் போன்று நாமும் எமது பிள்ளைகளை எல்லா வகுப்புக்களுக்கும் அனுப்ப வேண்டும் எண்ணத்திலும் வீண் சுமைகளை சிறுவர்கள் மீது சுமத்துவதை நிறுத்த வேண்டும். இலங்கையில் பாலர் பாடசாலை மற்றும் ஆரம்ப பாடசாலைகளில் கற்பித்தல் முறைமைகள் மிகவும் இலகுவானவையாகவே காணப்படுகின்றன. எனவே ஆரம்ப பிரிவு மாணவர்களை மேலதிக வகுப்புக்களுக்கு அல்லது தனியார் வகுப்புக்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் கிடையாது. 5ஆம் தர மாணவர்களை புலமைப்பரிசிலுக்கான வகுப்புக்களுக்கு அனுப்புவதாயினும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். அதே போன்று பெற்றோருக்கு அடுத்ததாக ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாவலர்களாக வேண்டும். ஆசிரியர்கள் என்பதற்கு அப்பால் தாமும் ஒரு பெற்றோர் என்ற ரீதியில் ஆசிரியர்கள் ஏனைய சிறுவர்களை பார்க்க வேண்டும். அதனை விடுத்து சொற்ப சந்தோஷங்களுக்காக ஆசான் என்ற புனிதமான தொழிலை இழிவாக்கி விடக் கூடாது. https://www.virakesari.lk/article/164217
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
"ABC” ஜூஸ் – நன்மைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது மேஜிக் பானமா? – அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம். ஜூசை வடிகட்டாது குடிக்கவேண்டுமாம், மருத்துவர் அருண்குமார்.
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். தையிட்டி பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளன. இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாயின் அந்தக் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த விகாரைக் கட்டுமானம் மற்றும் நில அளவைப் பணிகளை எதிர்த்து நாளை மறுதினம் தையிட்டி பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கே. சுகாஷ் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/272570
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்ல ஏற்பாடு.
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
முல்லைத்தீவு மனித புதைகுழியில் துப்பாக்கித் தோட்டாக்கள் - விடுதலைப் புலி பெண் போராளிகள் புதைக்கப்பட்டார்களா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 8 செப்டெம்பர் 2023 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இலக்கங்கள் அடங்கிய சாட்சியங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண் போராளிகளின் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இலக்கங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். படக்குறிப்பு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இன்றைய மூன்றாம் நாள் அகழ்வு நடவடிக்கைகளின்போது இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகளுடன் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், மேலாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களையும் இன்றைய தினம் மீட்டுள்ளனர். இதேவேளை, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளுக்குக் கீழே மேலும் பல மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்தும் வகையில், இன்றைய தினம் இரண்டு எலும்புக்கூடுகளை அகழ்வாளர்கள் தோண்டி எடுத்துள்ளதுடன், அவை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் குழு வருகை குறித்த இடத்திற்கு யாழ்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழுவொன்று, பேராசிரியருடன் வருகை தந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உள்ளாடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் இலக்கங்கள் இன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். ''இன்றைய தினம் எடுக்கப்பட்ட இரண்டு எலும்பு எச்சங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படுகின்றன. அதேநேரம், முதலாவது மனித எச்சத்திலிருந்து துப்பாக்கி ரவையொன்றும் (தோட்டா), ஆடைகளுக்கான இலக்கங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலாவது இலக்கமாக நீளமான பச்சை நிற கால் சட்டையில் 3204 என்ற இலக்கமும், அதேநேரம் முழு நீள மேல்சட்டையும், 3174 இலக்கமுடைய பெண்கள் அணியும் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, இரண்டாவது மனித எச்சமும் எடுக்கப்பட்டுள்ளது. நீளமான பச்சை நிற கால்சட்டையும், முழு நீள மேல்சட்டையும் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடையில் 1564 என்று இலக்கமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் எடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் இடையில் துப்பாக்கி ரவைகள் (தோட்டா) எடுக்கப்பட்டுள்ளன," என காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆடைகளிலுள்ள இலக்கங்கள் கைகளால் கறுப்பு நிற ஊசியில் தைக்கப்பட்டடிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு, குறித்த இடத்திற்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழுவொன்று, பேராசிரியருடன் வருகை தந்துள்ளனர். மனித புதைகுழியில் துப்பாக்கி தோட்டாக்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்த இடமாக முல்லைத்தீவு காணப்படுகின்றது. இலங்கையில் முப்பது ஆண்டுக் காலங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி நிறைவுக்கு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், மே 18ஆம் தேதி ஆயிரக்கணக்கான தமது உறவுகளை இலங்கை ராணுவம் கொலை செய்ததாக யுத்தத்தின் நேரடி பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள குடும்பங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பலர் நந்திக்கடல் பகுதியில் வைத்தே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே இடத்தில் வைத்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது. படக்குறிப்பு, முல்லைத்தீவு அருகே கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழி அகழ்வுப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். முப்பது ஆண்டுகளாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதி இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த நந்திக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலேயே கொக்குத்தொடுவாய் பகுதி அமைந்துள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதியானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். இந்த மனித புதைகுழியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானது எனக் கருதப்படும் சீருடைகள் காணப்பட்டமையால், இது விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளியிடுகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 27 ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடமொன்றில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களால் வெளியிடப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் இலங்கை ராணுவத்திடம் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் வினவியது. ''எம்மால் அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போதும் கிடைக்கின்றன,” என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார். மேலும், “சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே இது எந்த காலப் பகுதிக்குச் சொந்தமான எச்சங்கள் என்பதைக் கூற முடியும். அத்தோடு இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்," எனவும் அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cv2jn01pqw5o
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
ஐயா உங்கள் முகப் புத்தக இணைப்பினூடாக வாசித்தேன், இங்கேயும் அவ்வெழுத்துப் பொக்கிசத்தைப் பகிரலாமே?
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் செய்திசேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் இடையூறு 08 SEP, 2023 | 08:11 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த மூன்றாவது நாள் அகழ்வாய்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகைதந்திருந்தனர். இந்நிலையில் மனிதப்புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு இவ்வாறு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டது. அப்போது அங்கு குறித்த மனிதப்புதைகுழியின் பாதுகாப்புக்கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபடமுடியாதென ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தினர். அத்தோடு நீண்டதூரத்திலிருந்து (கொக்கிளாய் பிரதான வீதியில்) இருந்தே செய்திசேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களைப் பொலிசார் எச்சரித்துமிருந்தனர். இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை கடந்த (07) வியாழன் அன்று இரண்டாவதுநாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந் நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயர்த்தனத்தின் பின்னர், இந்தவிடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிற்பாடு ஊடகவியலாளர்கள் செய்திசேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164140
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
08 SEP, 2023 | 08:15 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது. இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில், ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது. மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர். குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர். அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164150
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்க அமெரிக்கா தீர்மானம் Published By: RAJEEBAN 07 SEP, 2023 | 11:49 AM உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனிற்கான அமெரிக்காவின் நிதிமனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக இந்த உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஸ்யா இந்த நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உக்ரைன் தலைநகருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது அமெரிக்காவின் புதிய நிதி உதவி திட்டத்தை அவர் அறிவிப்பார். உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனினும் ஒடெசா பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் தலைநகரில் பிளிங்கென் ரஸ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/164011
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : 2 ஆம் நாள் அகழ்வில் பெண்களின் உள்ளாடையுடன் மனித எச்சம் உள்ளிட்ட இரு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்பு Published By: VISHNU 07 SEP, 2023 | 06:51 PM கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் மார்புக் கச்சையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இரண்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டுதுப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தடையப் பொருட்களும் அகழ்வின்போது மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணி தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில், இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு உலோகத் துண்டுகளும் இவேறு சில ஆதாரப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு பகுதி அளவில் இதுவரை எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் எவையும் இல்லை. இருப்பினும் மீட்கப்பட்ட ஆடைகளில் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டிருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எது எவ்வாறாயினும் இவற்றை விரிவாக ஆராய்ந்து, பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இதுதொடர்பில் கூறமுடியும் என்றார். மேலும் குறித்த அகழ்வுப்பணி இடம்பெறும் இடத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164058
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷ்ய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும். இந்த தொகுப்பில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ரொக்கெட்களுக்கு எதிராக செயற்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ரொக்கெட்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. https://thinakkural.lk/article/272200
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்துக்கள் நுழைந்த புலனாய்வாளர்கள் 06 SEP, 2023 | 09:26 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06)நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்குவிசாரணையின்போது குறித்தபகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமைதொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந் நிலையில் அகழ்வாய்வின் முதலாம்நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வய்வு தொடர்பிலும், பொலிசாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள்மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/163991
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரயான் - 3: தூங்கும் விக்ரம் லேண்டர் உயிர்த்தெழப் போவது எப்போது? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் மையத்தில் ஒரு சிறிய புள்ளியாகத் தென்படுகிறது. "சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது" என்று நாசா குறிப்பிட்டுள்ளது. சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று நிலாவில் அதிகம் ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தின் தரையில் இறங்கியது. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து, நிலாவைச் சுற்றிவரும் தனது லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள கேமரா இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக நாசா கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலாவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. கடந்த மாதம், விக்ரம் லேண்டர் - பிரக்யான் என்ற ரோவரை அதன் வயிற்றில் சுமந்து கொண்டு - நிலாவின் தென் துருவத்திலிருந்து சுமார் 600 கிமீ தொலைவில் தரையைத் தொட்டது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயர் இந்தியாவுக்குக் கிடைத்தது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. லேண்டர் மற்றும் ரோவர் நிலாவின் மேற்பரப்பில் சுமார் 10 நாட்கள் செலவிட்டன. தரவு மற்றும் படங்களை சேகரித்தன. "தங்கள் பணி நோக்கங்களை கடந்து விட்டதாக" இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கூறுகிறது. கடந்த வார இறுதியில், சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டதாக கூறியது. "சூரிய சக்தி குறைந்து பேட்டரி தீர்ந்தவுடன் லேண்டரும் ரோவரும் தூங்கிவிடும்" என்று இஸ்ரோ கூறியது. சந்திரனில் சூரியன் கதிர் விழும் அடுத்த நாள் தொடங்கும் போது செப்டம்பர் 22-ஆம் தேதி லேண்டரும் ரோவரும் மீண்டும் உயிர்த்து எழும் என்று நம்புவதாக இஸ்ரோ மேலும் கூறியது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும் செயல்படுவதற்கும் சூரிய ஒளி தேவைப்படுகிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பிரக்யான் ரோவர் நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தியது இந்திய விண்வெளி நிறுவனம் லேண்டர் மற்றும் ரோவரின் இயக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளது பற்றிய வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சந்திர மேற்பரப்பில் விக்ரம் ஒரு "வெற்றிகரமான ஹாப் பரிசோதனை" செய்ததாக இஸ்ரோ கூறியது. இந்தப் பரிசோதனையின்போது விக்ரம் லேண்டர் மீண்டும் ஒருமுறை நிலவின் தரைப்பரப்பில் இருந்து குதித்து மீண்டும் தரையிறங்கியது. சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் "அதன் சிறு ராக்கெட்டுகளை உயிர்ப்பித்தவுடன் அது சுமார் 40 உயரத்துக்கு குதித்து 30-40 தொலைவில் தரையிறங்கியது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் இருந்து பொருள்களை கொண்டு வரவும், மனிதர்களை அழைத்துச் செல்லவும் விண்கலம் பயன்படுத்தப்படலாம் என்று அது மேலும் கூறியது. https://www.bbc.com/tamil/articles/c72e3x1ze1vo
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம் ! 06 SEP, 2023 | 09:00 AM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்தவாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் செப்டெம்பர் (05)நேற்று குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கமுடியவில்லை. அதனடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மனிதபுதைகுழி அமைந்தபகுதி குற்றப் பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த புதைகுழிப்பகுதிக்கு பாதுகாப்பு கூரைகள் அமைக்கப்பட்டு இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறைசார்ந்தோர், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,தடையவியல் போலிசார், சமூக ஆர்வலர் அ.பீற்றர்இளஞ்செழியன், கிரமாஅபிவிருத்திச்சங்கத் தலைவர் கி.சிவகுரு பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/163920
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரனில் 40 சென்ரிமீற்றர் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர்: புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை Published By: SETHU 05 SEP, 2023 | 01:47 PM சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்த, சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், தரையிலிருந்து 40 சென்ரிமீற்றர் மேலெழும்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இஸ்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. இது சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தனது கட்டளைகளின்படி, விக்ரம் லேண்டரின் என்ஜின்கள் இயங்க ஆரம்பித்து, எதிர்பார்க்கப்பட்டவாறு 40 சென்ரிமீற்றர் உயரத்துக்கு அந்த லேண்டர் கிளம்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர், 30 முதல் 40 சென்ரிமீற்றர் அளவிலான தூரம் நகர்ந்து மீண்டும் சந்திரனின் தரையில் அது இறங்கியது. என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று முற்பகல் தெரிவித்தது. இது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் சந்திரனில் மேற்கொண்ட இரண்டாவது ‘மென் தரையிறக்கம்’ எனவும், இது சந்திரயான் -3 திட்டத்தின் இலக்குகளை விஞ்சிய செயற்பாடு எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரனின் தரையிலிருந்தவாறு விக்ரம் தரையிறங்கிக் கலம் மீண்டும் இயங்க ஆரம்பித்து, அக்கலம் தாவி இறங்கியமையானது முக்கியமான ஒரு பரிசோதனையாக கருதப்படுகிறது. சந்திரனிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் எதிர்காலத் திட்டங்களுக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இப்பரிசோதனைக்கான திட்டம் குறித்து இஸ்ரோ முன்னர் அறிவித்திருக்கவில்லை. கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் (தரையிறங்கி) கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் எனும் தரையூர்தி (ரோவர்) வெளியில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. சந்திரனின் தென் துருவத்தில் அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், மங்கனீஸ், டைட்டானியம், ஒட்சிசன் உட்பட பல மூலகங்கள் இருப்பது பிரக்யான் ஊர்தியிலுள்ள ஆய்வுக்கருயின் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உறங்கு நிலையில் விக்ரம், பிரக்யான் இதேவேளை, சந்தியான்-3 திட்டத்தின் இலக்குகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரனில் செப்டெம்பர் 4 ஆம் திகதி சூரியன் மறைய ஆரம்பிக்கும் நிலையில் விக்ரம் மற்றும் பிரக்யானை உறங்கு நிலைக்கு செல்கின்றன அறிவித்துள்ளது. சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்குச் சமனாகும். இதனால் சந்திரனில் சூரிய ஒளி கிடைக்கும் ஒரு பகல் பொழுது (பூமியில் 14 நாட்கள்) மாத்திரம் விக்ரம் லேண்டர், மற்றும் பிரக்யான் ஊர்தி ஆகியன தரவுகளை அனுப்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த 14 நாட்களுக்கு கருவிகள் இயங்குவதற்கு சூரிய ஒளி கிடைக்காது என்பதே இதற்குக் காரணம். சந்திரனின் தென் துருவத்தில் மீண்டும் செப்டெம்பர் 22 ஆம் திகதியின் பின்னரே சூரிய ஒளி கிடைக்கலம். மீண்டும் சூரிய ஒளி கிடைத்தால் விக்ரம் மற்றும் பிரக்யான் மீண்டும் இயங்க ஆரம்பிக்குமா என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று பிற்பகல் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட பதிவொன்றில் 'இந்திய நேரப்படி அன்று (திங்கள்) இரவு 8.00 மணி முதல் விக்ரம் உறங்குநிலைக்கு செல்கிறது. அதற்குமுன் விக்ரமின் புதிய இடத்தில் வைத்து, அதன் ஆய்வுக்கருவிகளான சாஸ்ட், ரம்பா-எல், இல்சா (ILSA) ஆகியன பரிசோதனைகளில் ஈடுபட்டன. அவற்றின் தரவுகள் பூமியில் சேகரிக்கப்பட்டன. இப்போது அக்கருவிகள் அனைத்து வைக்கப்பட்டுள்ளன. லேண்டரின் ரிசீவர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரக்யானுக்கு அருகில் விக்ரம் உறங்கும். செப்டெம்பர் 22 ஆம் திகதி அவை மீண்டும் விழித்தெழும் என நம்புகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (சேது) https://www.virakesari.lk/article/163870
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம் Published By: VISHNU 05 SEP, 2023 | 05:06 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார். அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும், எத்தனை இருக்கும் என்பது தொடர்பாக கூற முடியும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/163888
-
வடக்கு ரயில் மார்க்கத்தை ஜனவரி முதல் மூட நடவடிக்கை
நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271824
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
ISRO-ன் புது Video: Vikram Lander-ஐ India-ல் இருந்தே நகர்த்திய ISRO; இனி நிலவுக்கு சென்று வரலாம்?
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
குட்டிக் கதைகள்.
பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
கொல்லிமலை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல மருத்துவ பரிசோதனை - ஏன் இந்த ஏற்பாடு? பட மூலாதாரம்,PARTHIBAN கட்டுரை தகவல் எழுதியவர், சுரேஷ் அன்பழகன் பதவி, பிபிசி தமிழுக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. நாமக்கல் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் காரவள்ளி இருக்கிறது. இதுதான் எழில் கொஞ்சும் கொல்லிமலையின் அடிவாரப் பகுதி. 70 கொண்டை ஊசி வளைவு அடிவாரப் பகுதியில் வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. இங்கிருந்து சுமார் 500 மீட்டரில் இருந்து கொண்டை ஊசி (HAIR PIN BEND) வளைவுகள் துவங்குகின்றன. அங்கிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். பேருந்து நிலையம் இங்குதான் உள்ளது. பேருந்து வசதியைப் பொருத்தவரை பிரச்னை இல்லை, தாராளமாகவே கிடைக்கிறது. ஆனால், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களே அதிகம். அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 300 அடி உயரம் கொண்டது. மூலிகைகள் ஊடாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் இதில் குளிக்கவே, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இத்தனை கஷ்டப்படுகின்றனர். பட மூலாதாரம்,PARTHIBAN கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 15 வயதில் இருந்து அனுமதிக்கப்படுகிறார்கள். சிறியவர்களுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இளையவர்கள் சுமார் இரண்டு மணி நேரத்தில் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுவிடலாம், சுமார் 50 வயதுடையவர்கள் செல்ல சுமார் 3 மணி நேரமாகும். அருவியில் சில நாள் நீர் அதிகமாகவும், சில நாள் நீர் குறைவாகவும் வரும், இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட கோவில். மயங்கி விழுந்த வாலிபர் கொல்லிமலையை சுற்றிப் பார்க்க ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நிதிஷ் காந்த், 22 என்பவர் வந்தார். மலைப்பகுதியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியைக் காண அந்தப் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 700 படிக்கட்டுகளைக் கடந்தபோது நிதிஷ்காந்த் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். கொல்லிமலை தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். அருவிக்குச் செல்லத் தடை இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் வகையில், கொல்லிமலை வனத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உடல் தகுதி அவசியம் பட மூலாதாரம்,PARTHIBAN அந்த வகையில் தற்போது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் நுழைவு வாயில் பகுதியில் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் உடல்நிலை குறைவால் வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுறுத்தலின் பேரில் கொல்லிமலை வனத்துறையினர் தற்போது இதைக் கடைபிடித்து வருகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், "ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுமார் 1,200 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் முன்பே இதயப் பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளோம்," என்று கூறினார். அதிக உடல் பருமனோடும் நடக்க முடியாமலும் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை மூலம் கண்டறிந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், "சுற்றுலா பயணிகள் சிலர் தெரியாமல் சென்று விடுகின்றனர். அவர்கள் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு, கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுத்துச் சென்றாலும் பரவாயில்லை. போட்டி, போட்டுக் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சிக்குச் சென்ற நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவர் தனது அண்ணனுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருந்துள்ளது. மேலும், உடல் பருமனுடன் இருந்துள்ளார்," என்று கூறுகிறார் ராஜாங்கம். மருத்துவ பரிசோதனை பட மூலாதாரம்,PARTHIBAN இந்தச் சம்பவத்திற்கு பிறகு வனத்துறை மூலமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணித்து சந்தேகம் வருபவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியே அனுப்பி வருவதாகக் கூறுகிறார் ராஜாங்கம். சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவற்றை வனத்துறையினர் பரிசோதனை செய்கிறார்கள். இதற்காக வனத்துறைக்கு உரிய மருத்துவ உபகரணம் கொடுத்து, உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை மூலம் பரிசோதித்து, அதில் இந்த நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளை ஏறும் உடல் தகுதி உள்ளவர்களைத் தவிர மற்றவர்களை அனுப்ப வேண்டாம் என வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளும் மூச்சு வாங்கும்படி செல்லாமல் ஆங்காங்கே அமர்ந்து உரிய ஓய்வு எடுத்துச் செல்ல வேண்டும். இதை உணர்ந்து நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் பிரச்னை வராது. இதை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்," என்று வலிபஉறுத்துகிறார் ராஜாங்கம். வனத்துறை மூலமாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புவது வரவேற்கத்தக்கது என்று கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். "பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் உடல் நலத்திற்கு ஏற்ப நீர்வீழ்ச்சிக்குச் சென்று குளிக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு பெரிய இலக்குதான். கவனமாகச் சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டும். பாறை நிறைந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும்," என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதை சுற்றுலா பயணிகள் உணர்ந்து பத்திரமாக நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு நலமோடு திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் கூறினர். https://www.bbc.com/tamil/articles/c2jzg922dx4o