ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா
Everything posted by ஏராளன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகன் பாடல் | 2022 New Year Murugan Song Tamil | Aaru Padai | Kovai Kamala | Vijay Musicals ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடி வா மூவிரண்டு முகம் ஜொலிக்க ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடி வா
-
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?
மனிதர்கள் கண்ணில் பட்டால் நேரே சொர்க்கம் தானே!
-
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா? பிரஷாந்த் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்புக்கடிக்கான சிகிச்சைமுறைகள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம். பாம்புக்கடியால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது. 2017-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலை படுத்தியுள்ளது. இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. இறப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை. பாம்புக்கடி விவகாரத்துல இது போன்று பல்வேறு சவால்கள் உண்டு. இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்? ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஐம்பது லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட இருபத்து ஏழு லட்சம் விஷமுள்ள பாம்புக்கடிகள் என்றும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 81 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாக பல்வேறு அறிக்கைகள் மூலமாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையை தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. இந்தியாவில் இரண்டாயிரமாவது ஆண்டு முதல் 2019-வது ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் இறந்திருப்பதாக 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 58 ஆயிரம் உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகிறது. இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகள் என்ன? பாம்புகள் மற்றும் பாம்புக்கடி தொடர்பாக இந்தியாவில் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடவுள் வழிபாடு பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இந்தியாவில் உள்ள சில சமூகங்கள் பாம்புகளை கடவுளாக வழிபடுகிறார்கள். தங்களின் விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு கடவுள் பாம்புகளை அனுப்பி வைத்துள்ளதாக பழங்குடி சமூகங்கள் நம்புகிறார்கள். ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்: ' தீயில் இருப்பது போல் இருக்கும்' - பாதிக்கப்பட்ட பிரேசில் மனிதரின் அனுபவம் சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? மேலும், பாம்புகள் தொடர்பாக இந்த சமூகங்கள் மத்தியில் நிலவும் சில நம்பிக்கைகள் பாம்புக்கடி உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் ராஹு கஜ்பியே தெரிவிக்கிறார். பாம்புகள் பழிவாங்குமா? பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களை தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டதுண்டு. இது ஒரு மோசமான கட்டுக்கதைனு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக ஒருத்தர் ஒரு நாகப்பாம்பை அடித்து கொன்றுவிட்டால் அந்த பாம்பின் துணை அடித்து கொன்னவர தேடி வந்து பழிவாங்கும்னு பழங்குடி சமூகங்கள் நம்புவதாகவும், ஆனால் இது மோசமான கட்டுக்கதைனு மருத்துவர் கஜ்பியே தெரிவிக்கிறார். இது போன்ற சில மூட நம்பிக்கைகள் மற்றும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகள் இந்தியாவின் சில இடங்களில் இன்னும் கடைபிடிக்கப்படுகிறது. கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல் இந்தியாவின் சில இடங்கள்ள பாம்பு கடித்தால் மருத்துவர்களை பார்க்காமல் மந்திரவாதிகளை பார்ப்பதுண்டு. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 அது மட்டும் அல்லாமல் முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது மற்றும் நிறுவப்படாத மூலிகைகளை பயன்படுத்தும் பழக்கமும் பரவலாக உண்டு. பாம்புக் கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுக்குறமாதிரி பல திரைப்படக் காட்சிகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த மாதிரி நிச்சயம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70 சதவீதம் விஷமற்ற பாம்புகள், 30 சதவீதம் விஷமுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாம்புக் கடித்த உடனே அருகில் இருக்கும் மருத்துவனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. கடிபட்டவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்கு போக கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்தில் பாதுகாப்பாக போக வேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES காயங்களை கழுவுதல், கீறி விடுதல், துணியை வத்து இறுக்கமாக கட்டுதல், ஏதேனும் மூலிகைகள பயன்படுத்துதல், என்று செய்வதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியா தெரிவிக்கின்றனர். இந்தியாவில் போதுமான மருந்துகள் உள்ளதா? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்கின்ற மாதிரி பாம்பு விஷத்த முறிப்பதற்கும் பாம்போட விஷம் தான் பயன்படுத்தப்படுகின்றது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை வைத்துதான் விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 1895-ம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பு விஷத்திற்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார். ஆனால், இந்தியாவில் விஷ எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், விஷ முறிவு மருந்துகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு போறதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார். இதுமட்டும் இல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமான நான்கு பாம்புகள் நீங்கள் பார்க்கும் எல்லா பாம்புகளுக்கும் விஷம் இருக்காது. இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு இனங்கள் உள்ளன. அதுல அறுபது வகையான பாம்புகள் தான் விஷமிக்கவை. அதில் குறிப்பா நான்கு பாம்புகள் தான் பெரும்பாலான பாதிப்புகளுக்கு காரணம். கண்ணாடி விரியன் இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும். கட்டு விரியன் பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்த பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாக தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம். இந்திய நாகம் நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளை கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள் மற்றும் விவசாய நிலங்களில் இது பொதுவாக காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதை பார்க்க முடியும். சுருட்டை விரியன் இறுதியாக சுருட்டை விரியன் பாம்பு, இதடோ வடிவம் சிறியதாக இருந்தாலும் அதோட தாக்கும் திறன் மிகவும் ஆபத்தானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பாம்புகள் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனா, இதன் விஷம் மிகவும் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். பாம்பு கடிச்ச உடனையே பதட்டப்படாம உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்துல பாம்புகளின் அழிவை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையானதாக உள்ளது. https://www.bbc.com/tamil/science-62289118
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் @முதல்வன், வாழ்க வளத்துடன்.
-
சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
முகப்பு டொல்பின் போல இருக்கே! நன்றி ராஜவன்னியன் அண்ணா.
-
இனித்திடும் இனிய தமிழே....!
மாயவலையில் சிக்கும் பெண்கள்
-
கொஞ்சம் சிரிக்க ....
ஒரு வேளை இவர்களுக்கு எழுதிய கடிதமோ?! சீன வானொலி அறிவிப்பாளர்கள் கலைமகள் மற்றும் நிலானி.
-
தாலி..வேலியா..? பாரமா..??
இந்து திருமணச் சட்டம்: 'மனைவி தாலியை கழற்றியதால் மன உளைச்சல்’ எனக் கூறி கணவன் விவாகரத்து பெறலாமா? பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "தன் கணவர் மனைவியின் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது" ஆகியவை கொடூரமான செயல்களாக கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது . வழக்கின் பின்னணி ஈரோட்டை சேர்ந்த சிவகுமார் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், கருத்துவேறுபாடின் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு சிவகுமார் ஈரோடு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் மனைவி தன்னை சந்தேகித்துக் கொண்டே இருப்பதாகவும், தான் கட்டிய தாலியை அணியாமல் மறுப்பது தனக்கு மன உளைச்சலை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் சிவகுமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் சிவகுமார். பாஜக எதிர்ப்பை மீறி தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் குஜராத்தின் ஷாமா பிந்து 'கண்கள் மட்டுமே சந்தித்தன, காதல் தொடங்கியது' – ஒரு தன்பாலின தம்பதியின் கதை தம்பதிகள் விருப்பம் இல்லாமல் சேர்ந்து வாழ நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியுமா? ஸ்ரீ வித்யாவுடன் சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று சிவக்குமார் மேல்முறையீடு செய்துள்ளார். தன்னை விட்டு வெளியேறும் போது திருமண உறவின் அடையாளமாக கருதப்படும் தாலியை ஸ்ரீவித்யா நீக்கியதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ வித்யா உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவர் தனது சக ஊழியர்களுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருப்பதாகவும், அவர் தினமும் அதிக மணிநேரம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை வைத்துள்ள பெண்ணிடம் பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அதே புகாரில், தங்கள் மகளின் எதிர்காலம் கருதி அவருடன் தான் இன்னும் வாழ விரும்புவதாகவும் ஸ்ரீவித்யா கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் சிவகுமார்-ஸ்ரீவித்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆனால், விவாகரத்து வழங்குவதற்கான காரணங்களாக நீதிமன்றம் கூறியது தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டம் 13(1)(ia) என்ற பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இத்துடன் மனைவி தனது தாலியை கழற்றுவது என்பது திருமண உறவைத் தொடர்வதில் அவருக்கு உள்ள ஆர்வமின்மையைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் காரணம் கூறியது. "நம் சமூகத்தில் நடக்கும் திருமணச் சடங்குகளில் தாலி கட்டுவது இன்றியமையாத சடங்காக இருக்கிறது. தாலியை அகற்றுவது பெரும்பாலும் சம்பிரதாயமற்ற செயலாகக் கருதப்படுகிறது. திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தாலியை அகற்றுவது போதுமானது என்று கூறவில்லை, ஆனால் பிரதிவாதியின் சொல்லப்பட்ட செயலானது, இருதரப்பினரின் நோக்கங்களைப் பற்றி ஒரு அனுமானத்தை வரைவதற்கான ஒரு சான்றாக விளங்குகிறது. பிரிவின் போது தாலியை அகற்றும் பிரதிவாதியின் செயல் மற்றும் பதிவில் கிடைக்கப்பெறும் பல்வேறு சான்றுகள், இரு தரப்பினருக்கும் சமரசம் செய்தும் திருமண பந்தத்தைத் தொடரும் எண்ணம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வருமாறு எங்களை நிர்பந்திக்க வைக்கிறது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. சட்டம் என்ன சொல்கிறது? "ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொதுவெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படும்" என்று ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார். "பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது" என்று ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES "தாலி என்பது மதச் சடங்கு. பரஸ்பர சம்மதத்துடன் அல்லது நாகரீக நோக்கத்திற்காக தாலியை அகற்றுவது வேறு விஷயம். நீதிமன்றங்களும் தாலியை அகற்றுவதன் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தாலியை அகற்றுவது மட்டும் கொடூர செயலாக கருதப்பட்டு விவாகரத்து வழங்குவதற்கான காரணமாக சொல்லப்படாது" என்று ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார். "இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் ஆதாரங்களை கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தாலியை கழற்றுவது மட்டுமே கொடூரச் செயலாகாது," என்கிறார் ஸ்ரீகாந்த் அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் வல்லபா v/s ஆர். ராஜா சபாஹி 2016 தீர்ப்பை மேற்கோள் காட்டியது. "வல்லபா மற்றும் ஆர். ராஜா சபாஹி வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் காரணம் திருமணமான எந்த இந்து பெண்ணும் தன் கணவனின் வாழ்நாளில் எந்த நேரத்திலும் தாலியை அகற்ற மாட்டார்கள் என்பது தெரிந்ததே. மனைவியின் கழுத்தில் உள்ள தாலி என்பது திருமண வாழ்க்கையின் தொடர்ச்சியைக் குறிக்கும் புனிதமான விஷயம். கணவனின் மரணத்திற்குப் பிறகுதான் தாலி என்பதே அகற்றப்படும். எனவே, மனுதாரர் மனைவியால் "தாலி" அகற்றப்பட்டதை மிக உயர்ந்த மன உளைச்சலை பிரதிபலிக்கும் செயலாகக் கூறலாம். ஏனெனில் அது வேதனையை உண்டாக்கி, பிரதிவாதியின் உணர்வுகளைப் புண்படுத்தும்". என நீதிபதி தெரிவித்திருந்தார். தாலி என்பது உறவுக்கு அடிப்படையா? "தற்போதைய வழக்கை எடுத்துக் கொண்டால் தாலியை அகற்றுவது என்பது ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது இது நாம் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது," என்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சாய் பத்மா கூறியுள்ளார். "பழங்காலங்களில் சிறுமிகளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது மற்றும் தாலி, மெட்டி போன்ற திருமண அடையாளங்கள் பெண்களை அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறையாக கருதப்பட்டன. நவீன உலகில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தாலியை கூட அணிவதில்லை" என்று சாய் பத்மா கூறினார். "உறவை நிர்ணயிப்பதில் அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. பரஸ்பர நம்பிக்கை, பொறுப்பு, புரிதல் இல்லாததால் முறிந்து போன திருமண அமைப்பை தாலி மூலம் உயிர்ப்பிக்க முடியும் என்று சொல்வது வேடிக்கையானது. அது சரியல்ல. தாலி அணிவதையும் அணியாததையும் வேறு ஏதோ ஒரு நோக்கமாக பார்க்க வேண்டும். இந்த தீர்ப்பு தாலி அணியாதவர்கள் தங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று சொல்வது போல் தோன்றுகிறது" என்று சாய் பத்மா கருத்து தெரிவித்துள்ளார். முஸ்லிம் பலதார மணம் இந்தியாவில் பெரிய பிரச்னையா? அதற்கு எதிராக வழக்கு ஏன்? ஜார்கண்டில் ஒரு பாரம்பரியம்: வாழ்ந்து பார்த்த பிறகு திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES சில திருமண மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமல் இருப்பது, வேண்டுமென்றே திருமண உறவைப் புறக்கணிப்பதாகும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்ரா லேகா கூறியுள்ளார். "திருமணமானவர் மற்றும் திருமணமாகாதவர்களை வேறுபடுத்துவதற்காக தாலி அணிதல் என்ற நடைமுறை பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்." "தற்போதைய நவீன யுகத்தில் தாலி அணிவது எவ்வளவு முக்கியம் என்பதும் சிந்திக்க வேண்டியது அவசியம். தாலி அணியாமல் மனைவியாக இருக்கலாம். தாலி அணிவது மனைவிமீது கணவருக்கு உரிமை வழங்குகிறதா?" சித்ரா கேள்வி எழுப்பியுள்ளார். பட மூலாதாரம்,PUNEET BARNALA/BBC ஆணாதிக்கத்தின் அடையாளங்கள் "தாலி மற்று மெட்டி அணிவது, நெற்றியில் குங்குமமிடுவது ஆகியவை திருமணத்தின் அடையாளங்கள் . ஆனால், அதை அணியாதது தனது கணவர்மீது ஏற்படும் விருப்பமின்மை மற்றும் அன்பின் குறைவு என்று சொல்ல முடியாது" என்று பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் ஏ.எல்.சாரதா கூறியுள்ளார். மேலும், இந்த அடையாளங்கள் பெண்களுக்கு மட்டும் ஏன்? என்று கேள்வி எழுப்பினார். "இவை ஆணாதிக்கத்தின் அடையாளங்கள் . அவற்றை அணிவது அல்லது அணியாதது உறவின் வலிமையை தீர்மானிக்காது, என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-62180834
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இவ்வாறு எதை தேடினாலும் வருகிறது. இதற்குத் தீர்வு தாருங்கோ. இதனால் பதிவுகளை திரும்ப திரும்ப தவறுதலாக பதியவேண்டி வருகிறது.
- err.JPG
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
0-04-06-b28fddfa13fec3b8700c1371bbc6ca2c6fb53f8f0eb4f91ffcd61adf9550814b_29edf8342ee58e5.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-38666b21c8f6cccb4203b6f7d3967c17422c111b4cfd0438f6951b4f938957e2_221ce1c0dc551a61.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-6999d83a5297d14e1f20a9846bba33e04f659cd58a1d40ec9c5a4e31170085c7_f29e3bb9cbdb82cf.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-1780fbb8ee5d72002f1d9ddd1742623238b66d15616e312b53f4b254f4e1d156_738f977549a1f874.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-639a8227ebce1383ee840502a1200a1214cfab8c1b21fa87c59564243166b667_bcc39e6b61d000c8.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-374cecb2b21270b18b117d9a358aed2d0229e04f8e41119a6574d05c58e885af_11543a2603d58b11.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-5097bd5a2df4c5cfc75ca00e098bdadc36952ff3219273102bb64f5b073b665e_c3f0f6809176fb58.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-3f87b1c25d85a900d893110ed1fc590f3373a0efe50450a1cc778c8d97c4bf73_9985d63209790ab4.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-1d0324a3cd12a9c53ffa92dbebb118f44c18f7f4232725bdd1b9f7d1b0fa1495_9d178fbc039d964c.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-20501b680eb0de589adb12c0ba146dfa10835b180fa5036e166e00f89f17d515_f89e6575fc1883b9.jpg
From the album: ஏராளன்
-
0-04-06-3ab026d7ccb6abe14625301d3789d013fadea33c9e031eec2b355f8191ba98e4_5bb0da0f6456c65b.jpg
From the album: ஏராளன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சாந்தி அக்கா. பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சூரியன்.
-
0-02-06-012f281c41a8a0b552cc91ca1a4fac472c5b309233867ca818116e03fab62129_72c341868a5d6b84.jpg
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாழைக் குலையை திரும்ப செருகி இருக்கு!🤭