Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரால் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு By SETHU 19 JAN, 2023 | 01:16 PM இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பயிற்றுநர்களால் மல்யுத்த வீராங்கனைகள் பலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றம் சுமத்தி, இந்திய மல்யுத்த சம்மேளன அதிகாரிகளுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீர வீராங்கனைகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் பலர் டெல்லியில் நேற்று (18) போராட்டத்தையும் ஆரம்பித்தனர். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட், இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், சங்கீதா போகட், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங், சோனம் மாலிக், அன்ஷூ ஆகியோரும் இப்போராட்டத்தில் பங்குபற்றினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் 'மல்யுத்த வீராங்கனைகள் தேசிய பயிற்சி முகாம்களில் பயிற்சியாளர்களாலும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்காலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்' என்று வினேஷ் போகட் குற்றம்சாட்டினார். 'பல இளம் பெண் மல்யுத்த வீராங்கனைகள் தேசிய முகாம்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக என்னிடம் புகார் அளித்துள்ளனர். எனக்குத் தெரிந்து குறைந்தது 20 பெண்கள் தேசிய பயிற்சி முகாமில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் பற்றி என்னிடம் கூறிய குறைந்தது 10 பெண் மல்யுத்த வீரர்களை நான் அறிவேன். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை அமைச்சரை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்' என்றார். ANI Photo ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் மேலும் கூறுகையில், 'இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இங்குள்ள மல்யுத்த வீரர்கள், எங்களுக்கு உதவவும், விளையாட்டிற்கு உதவவும் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நாங்கள் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றால், அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு, குறிப்பாக கூட்டமைப்பால் நாங்கள் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகம் எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தால், போராட்டத்தை நிறுத்துவோம். இல்லையேல், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். ANI Photo ANI Photo மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன், 'இந்திய மல்யுத்த கூட்டமைப்பு யாராவது ஒரு மல்யுத்த வீராங்கனை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறுகிறார்களா? வினேஷ் மட்டுமே கூறியிருக்கிறார். தாங்கள் தனிப்பட்ட முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக யாராவது முன் வந்து கூறியிருக்கிறார்களா?' என்று கேள்வி எழுப்பினார். இந்திய மல்யுத்த சம்மேளனத்துடன் இது போன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே எழவில்லை... விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகள் வரும்' எனக் கூறியுள்ளார். ANI Photo https://www.virakesari.lk/article/146191
  2. பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் - வாதாட 15 நிமிடம்தான் கொடுக்கப்படுகிறது பட மூலாதாரம்,REUTERS 19 ஜனவரி 2023 ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான HRANA - வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொகமத் மெஹ்தி கராமி என்னும் 22 வயது கராத்தே வீரர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளார். பிபிசியின் பாரசீக மொழி சேவையிடம் பேசிய சிலர், மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக தன் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சரியாக 65ஆவது நாளில் மொகமத் மெஹ்தி கராமி தூக்கிலிடப்பட்டார். தங்களது சுதந்திரத்திற்காகவும், ஈரானின் மதகுரு ஆட்சியிலிருந்து விடுபடுவதற்காகவும் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இரானின் அதிகார மையங்கள் எப்படி செயல்படுகிறது என்பதற்கு மொகமத் மெஹ்தி கராமின் கதை ஓர் உதாரணம். இரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை - வெடிக்கும் மக்கள் எழுச்சி17 நவம்பர் 2022 'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை13 டிசம்பர் 2022 2022க்கு பிரியாவிடை: உலகை உலுக்கிய மனதில் நின்ற படங்கள்26 டிசம்பர் 2022 அதேப்போல் சமீபத்தில் பிரிட்டிஷ்- ஈரானிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்ற அலிரேசா அக்பரி என்பவர் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. பிரிட்டனின் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்ட இவர், எந்தவொரு வகையிலும் ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இவரிடம் வலுகட்டாயமாக வாக்குமூலம் வாங்கப்பட்டு, தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது இந்த நிலைமைதான் ஈரான் சிறையிலிருக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வருகிறது. நான் மரணிக்கப்போவது அம்மாவுக்கு தெரிய வேண்டாம்! இரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக இரான் காவல்த்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டார். அங்கு நடந்த விசாரணையின்போது தலையில் பலமாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்துதான் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு எதிராக இரானில் மீண்டும் போராட்டம் எழுந்துள்ளது. இதனையடுத்து ஈரானின் துணைராணுவத்தைச் சேர்ந்த பாசிஜ் என்பவர் கடந்த நவம்பர்3-ஆம் தேதி கராஜ் பகுதியில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டு மொகமத் மெஹ்தி என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தெஹ்ரான் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள கராஜ் நீதிமன்றத்தில் ஒரே நாளில் விசாரிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, மொஹமத் மெஹ்தி கராமி இரானில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக சொந்த வழக்கறிஞர்களை பெறுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதுப்போன்ற வழக்குகளில் அந்த முறை சுதந்திரமாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கனவே அதிகாரிகள் தயார் செய்த பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதேபோல் பத்திரிகையாளர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே உண்மையிலேயே நீதிமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட காட்சிகளின் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடியும். அப்படி வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் தோன்றும் மொஹமத் மெஹ்தி, `தான்தான் அந்த துணைராணுவ அதிகாரியை பாறையில் அடித்து கொன்றதாக ஒப்புகொள்கிறார்`. இந்த வழக்கை மொஹமத் மெஹ்தி தரப்பில் வாதாடுவதற்காக நியமிக்கபட்ட வழக்கறிஞர் இதற்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக மொஹமத் மெஹ்தியை மன்னிக்குமாறு நீதிபதியிடம் கேட்கிறார். அதனை தொடர்ந்து பேசும் மொஹமத் மெஹ்தி, `தான் முட்டாளாக்கப்பட்டதாக கூறிவிட்டு அமர்கிறார்`.அதன்பின்னர், குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டு, அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. பொதுவாக தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக வெளியே பேசுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷால்லா கராமி, ஈரானின் எடிமட் நாளிதழிடம் பேட்டியளித்துள்ளார். அதில், `அப்பா எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாமென அப்பாவித்தனமாக மொஹமத் மெஹ்தி அழுதுக்கொண்டே கேட்டுக்கொண்டதாக` அவர் கூறியுள்ளார். மொஹமத் மெஹ்தி அனுபவத்த சித்திரவதைகள்! மொஹமத் மெஹ்தியின் இறப்புக்கு பிறகு ‘1500 இமேஜஸ் (images) என்ற பெயர்கொண்ட சமூகவலைதள கணக்கு ஒன்று மொஹமத் மெஹ்தி எவ்வளவு கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது குறித்த பல தகவல்களை வெளியிட்டது. அதில், ` தான் சுயநினைவை இழக்கும் அளவுக்கு தாக்கப்பட்டதாகவும், தான் இறந்துவிட்டதாக கருதிய சிறைக்காவலர்கள் தன்னை ஏதோவொரு இடத்தில் வீசிவிட்டு சென்றதாகவும், ஆனால் தான் அப்போது உயிருடன் பிழைத்திருந்ததாகவும்` தன் குடும்பத்தினர் மொஹமத் மெஹ்தி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய அந்தரங்க பகுதியை தொடும் சிறைக்காவலர்கள், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தததாகவும் கூறியுள்ளார். எடிமெட் நாளிதழிடம் பேசிய மொஹமத் மெஹ்தியின் தந்தை, `இந்த வழக்கில் தன் மகனுக்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞரை தொடர்புக்கொள்ள தான் பலமுறை முயற்சி செய்ததாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு ஒருதடவை கூட கிடைக்கவில்லையெனவும்` தெரிவித்துள்ளார். பின்னர் இரானில் மிகவும் திறன்வாய்ந்த மனித உரிமை வழக்கறிஞராக அறியப்படும் மொஹமத் ஹோசேன் அகாசியை தனது மகனுக்காக வாதாடுமாறு அழைத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மொஹமத் தரப்பில் வாதாடுவதற்காக பலமுறை மனு அளித்திருக்கிறார் ஹோசேன் அகாசி. ஆனால் அவையனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் ஈரான் மக்கள் பட மூலாதாரம்,REUTERS இந்த நிலையில் காரஜ் பகுதியில் மொஹமத் ஹொசைனி என்னும் மற்றொரு இளைஞர் இரானின் போலியான சட்ட நடவடிக்கைகளால் தூக்கிலிடப்பட்டார். இவருக்கு பெற்றோர்கள் இல்லை. அதனால் இவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்காக நியாயம் கேட்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் என யாரிமில்லாத சூழலில், ஈரானைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் சமூக ஊடகங்களில் 'We are all Mohammad's family' என்று பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த சமயத்தில் மொஹமத் ஹொசைனி bipolar disorder என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று பிபிசியின் பாரசீக சேவை நிறுவியிருந்தது. இத்தகைய சூழலில், தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு தனக்கென ஒரு வழக்கறிஞர் வைத்துகொள்வதற்கு மொஹமத் ஹொசைனிக்கு அனுமதி கிடைத்திருந்தது. அவரின் வழக்கறிஞரான அலி ஷரிப்சாதே அர்டகானி, மொஹமத் ஹொசைனியை சிறையில் சென்று சந்தித்தது குறித்து, பின்னாளிள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், `நான் சிறைக்கு சென்றபோதெல்லாம் அவர் அழுதுக்கொண்டே இருந்தார். தான் அனுபவித்த சித்ரவதைகள் குறித்தும், கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு தான் துன்புறுத்தப்பட்டது குறித்தும், காவலர்களால் தலையில் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்தது குறித்தும் அவர் என்னிடம் பேசினார்` என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மொஹமத் ஹொசைனி எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், சித்ரவதைகளின் மூலம் மட்டுமே அவரிடம் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன எனவும் அலி ஷரிப்சாதே அர்டகானி கூறுகிறார். இதுகுறித்த ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்வதற்கு கடந்த ஜனவரி 7ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அந்த தேதியில் ஆவணங்களை சமர்ப்பிக்க அலி ஷரிப்சாதே அர்டகானி நீதிமன்றம் சென்றுக்கொண்டிருந்தபோது, மொஹமத் ஹொசைனி ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுவிட்டார் என்ற செய்தியை அறிந்து அதிர்ந்து போகிறார். அதன் பின்னர் அலி ஷரிப்சாதே அர்டகானியும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளியில் வந்திருக்கிறார். இரானில் தொடரும் துயரக்காட்சிகள் பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, மாஷல்லா கராமி, மொஹமத் மெஹ்தியின் தந்தை குற்றம் சாட்டப்படுபவர்கள் எந்தவொரு தவறும் செய்யாத சமயத்தில், வலுகட்டாயமாக அவர்கள் குற்றத்தை ஒப்புகொள்வதற்கு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு எதிராக இரானின் மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பிபிசி பாரசீகத்திடம் பேசிய ஒருவர், `பாதிக்கப்படுபவர்களுக்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக , அவர்களை குற்றத்தை ஏற்றுகொள்வதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்` என்றார். இதுத்தவிர ஈரானில் மேலும் 109 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக இரானின் மனித உரிமை அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன. அதில் 60 வயது நிறைவடைந்தவர்களை அடையாளம் காண முடிகிறது எனவும், தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் சராசரியாக 27 வயதை ஒத்தவர்கள் எனவும், அதில் 3 பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் எனவும் அமைப்பு சாரா நிறுவனங்கள் கூறுகின்றன. `மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷல்லா கராமி தனது மகனின் கல்லறையில் மண்டியிட்டு அழுகிறார். கருப்பு சட்டை அணிந்த தனது மகனின் புகைப்படத்தை தனது கைகளில் ஏந்திக்கொண்டு மற்றொரு கையால் அவர் தனது கழுத்தை இறுக்கி பிடித்துக்கொள்கிறார்`. ஈரான் மக்களின் போராட்டங்களின் மற்றொரு துயரமான காட்சியாக இது இப்போது சமூக ஊடகங்களில் பரவிக்கிடக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c72zv37g33wo
  3. 'பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்' - இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீராங்கனைகள் புகார் பட மூலாதாரம்,ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்வதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கூட்டமைப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளனர். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகாட், "பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்பின் ஆதரவுபெற்ற சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடக்கின்றனர். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டி தோல்விக்கு பின்னர், என்னை அவர் எதற்கும் பயனற்றவர் என்று அழைத்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள ரீதியாக என்னை துன்புறுத்தியது. என் வாழ்வை முடித்துகொள்ளலாமா என்று ஒவ்வொரு நாளும் எண்ணத் தொடங்கினேன். எந்த மல்யுத்த வீரர்களுக்கு எதாவது ஆனாலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு. பெண்கள் மல்யுத்த வீரர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய 10-20 சம்பவங்கள் எனக்குத் தெரியும். இதில் பல பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். எந்த ஒரு விளையாட்டு வீரரும் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள் ” என்று தெரிவித்ததாக ஏ.என்.ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “அவர்கள் (கூட்டமைப்பு) எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். எங்களைச் சுரண்டுகிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை. நாங்கள் குரல் எழுப்பியதால், நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம்” என்று ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 'தமிழகம்' என்று குறிப்பிட்டது ஏன்?: ஆளுநர் தந்த விளக்கம் - சர்ச்சை முடிவுக்கு வருமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் “என்னை காப்பாற்றிய இந்த ஹீரோக்களுக்கு நன்றி” – ரிஷப் பந்த் உருக்கம்17 ஜனவரி 2023 இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு 275 மில்லியன் ஒதுக்கீடு5 மணி நேரங்களுக்கு முன்னர் இதேபோல் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர்கள் தற்போதைய சர்வாதிகாரத்தை பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமரும் உள்துறை அமைச்சரும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறோம். இங்குள்ள பெண்கள் மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு நம் சகோதரிகள் & மகள்கள் பாதுகாப்பாக இல்லை என்றால் அதை ஏற்க முடியாது. கூட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. சாக்‌ஷி மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய மல்யுத்த வீரர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். புதிய கூட்டமைப்பு அமைய வேண்டும். கீழ் நிலையில் இருந்து அழுக்கு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசி விவரங்களை கூறுவோம். சில விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார். இது தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கருத்தை அறிய பிபிசி தொடர்புகொண்டது. எனினும், யாரும் அழைப்பை ஏற்கவில்லை. தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேட்டியளித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், “போராட்டத்தில் அமர்ந்திருக்கும் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கிற்குப் பிறகு எந்த தேசியப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. கூட்டமைப்பு துன்புறுத்தியதாக முன்னால் இருக்கும் வீரர்கள் யாராவது கூறுகின்றனரா? கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்புடன் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையா? புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும்போது சிக்கல்கள் எழுகின்றன. பாலியல் துன்புறுத்தல் எதுவும் நிகழவில்லை. அப்படி நடந்திருந்தால் நானே தூக்கிட்டு கொள்வேன்.பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. இதில் எனது சொந்த பெயர் இழுக்கப்பட்டுள்ள நிலையில் நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? எந்த விசாரணைக்கும் நான் தயார் ” என்று தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cd1glg73n5do
  4. “என்னை காப்பாற்றிய இந்த ஹீரோக்களுக்கு நன்றி” – ரிஷப் பந்த் உருக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் கார் விபத்தில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், தான் “குணமடைந்து கொண்டிருப்பதாக” கூறியுள்ளார். அவர், “மயக்கம் ஏற்பட்ட நிலையில்” கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் கடந்த மாதம் அவருடைய கார் விபத்திற்குள்ளாகி, கவிழ்ந்து தீப்பிடித்தது. ஜனவரி 4ஆம் தேதியன்று, அறுவை சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். மேலும், தலை, முதுகு, கால் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ரிஷப் பந்த், சிகிச்சைக்கு வெற்றி கிடைத்து வருவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “அனைவரின் ஆதரவுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் நான் அன்போடும் நன்றியுடனும் இருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார். “நலம் பெற்று மீண்டு வருவதற்கான பாதை தொடங்கியுள்ளது. வரவுள்ள சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். நம்ப முடியாத அளவுக்கு ஆதரவளித்தமைக்கு பிசிசிஐக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார். கார் விபத்து: கண்ணாடியை உடைத்து வெளியே வந்த ரிஷப் பந்த்30 டிசம்பர் 2022 சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?16 ஜனவரி 2023 “என் அன்பை வைத்து பணம் பறித்தார்கள்” – லெஸ்பியன் பெண்ணாக வாழ்வது எவ்வளவு கடினம்?15 ஜனவரி 2023 “அன்பான வார்த்தைகள் மற்றும் ஊக்கத்திற்காக எனது ரசிகர்கள், அணியினர், மருத்துவர்கள், உடற்பயிற்சி சிகிச்சை மருத்துவர்கள் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து ஆழமான நன்றியைக் கூற விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றுமொரு பதிவில், “என்னால் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூற இயலாமல் இருக்கலாம். ஆனால், இந்த இரண்டு ஹீரோக்களுக்கு நிச்சயமாக நன்றி தெரிவித்தாக வேண்டும். எனக்கு விபத்து நடந்தபோது, என்னை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராஜத் குமார், நிஷு குமார் ஆகிய இருவருக்கும் நன்றி. நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்,” என்று தன்னைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரிஷப் பந்த். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்(பிசிசிஐ), முன்னர் ரிஷப் பந்துக்கு “தசைநார் கிழிந்துள்ளதற்கான அடுத்தடுத்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறியது. டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹரித்வார் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் நர்சன் இடையே விபத்து ஏற்பட்டது. Twitter பதிவை கடந்து செல்ல I may not have been able to thank everyone individually, but I must acknowledge these two heroes who helped me during my accident and ensured I got to the hospital safely. Rajat Kumar & Nishu Kumar, Thank you. I'll be forever grateful and indebted 🙏♥️ pic.twitter.com/iUcg2tazIS — Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு 25 வயதான, இடது கை ஆட்டக்காரரான ரிஷப் பந்த், இந்தியாவுக்காக 33 டெஸ்ட், 30 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், மார்ச் மாதம் தொடங்கும் இந்த ஆண்டுக்கான தொடரில் ஆடும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளார். ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மங்களூர் PS பகுதியின் NH-58 இல் விபத்து நடந்தது என எஸ்பி தேஹத் ஸ்வபன் கிஷோர் விபத்து நடந்த நேரத்தில் தெரிவித்தார். அப்போது, ரிஷப் பந்தின் காயம் குறித்து டெஹ்ராடூன் மேஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆஷிஷ் யாக்நிக், "ரிஷப் நிலைமை சீராக உள்ளது. எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் குழு அவரது காயத்தை பரிசோதித்து வருகிறது. பரிசோதனை விரைவில் முடிவடையும். அதன்பிறகுதான் அடுத்தகட்ட சிகிச்சை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். அது குறித்து மருத்துவ புல்லட்டின் மூலம் தெரிவிக்கப்படும்." எனத் தெரிவித்திருந்தார். கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த பந்த் விபத்து நடந்த நேரத்தில், ஹரித்வார் எஸ்.எஸ்.பி. அஜய் சிங் பிபிசியிடம் பேசியபோது, “காலையில், 5.30 முதல் 6 மணிக்குள் விபத்து நிகழ்ந்தது. சாலையின் நடுவிலுள்ள தடுப்பு மீது கார் மோதியுள்ளது. அவர், காரின் முகப்புக் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர் மேக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று தெரிவித்திருந்தார். மேலும், “மருத்துவரிடம் பேசியபோது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாகத் தெரிவித்தனர். உள்காயம் எதுவும் இல்லை,” என்றும் அவர் கூறினார். இதனிடையே, விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரிஷப் பந்துக்காக பிரார்த்தனை செய்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவர் விரைந்து குணமடைய வாழ்த்துகள். விரைந்து நலம் பெறுங்கள் சாம்பியன்” என்று பதிவிட்டிருந்தார். இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்து விரைந்து நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டார். “ரிஷப் பந்த் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்,” என்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான முனாஃப் பட்டேல் ட்விட்டரில் தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான சாம் பில்லிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரிஷப் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டார். https://www.bbc.com/tamil/articles/ce5324gp05vo
  5. ஒரு சில நிமிடங்களிற்குள் கலைந்த விமானியாகும் கனவு - ஒரு பெண் விமானியின் துயரக்கதை By RAJEEBAN 16 JAN, 2023 | 04:09 PM 16 வருடங்களிற்கு முன்னர் யெட்டி எயர்லைன்சின் விமானவிபத்தில் தனது முதல் கணவரை பறிகொடுத்த இணை விமானி அஞ்சு கத்திவாடா நேற்று நேபாளத்தில் இடம்பெற்றவிமான விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டிவாடாவின் முன்னாள் கணவர் தீபக் பொஹரேல் 16 வருடங்களிற்கு முன்னர் ( 2006 ஜூன் 21ம் திகதி) ஜூம்லாவில் இடம்பெற்ற யெட்டி எயர்லைன்ஸ் விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தின் பின்னர் அஞ்சு விமானியாக பணியாற்ற ஆரம்பித்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தனது கணவரின் மரணத்தின் பின்னர் கிடைத்த காப்புறுதி பணத்தின் மூலம் அவர் விமானியாவதற்கான பயிற்சிகளை பெற்றார் என யெட்டி எயர்லைன்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அஞ்சு விமானியாவதற்கு சில நிமிடங்களே இருந்தன விபத்திற்குள்ளான விமானம் ஆபத்தின்றி தரையிறங்கியிருந்தால் விமானியாகும் அவரது கனவு நினைவாகியிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானமே அவர் இணை விமானியாக பணியாற்றும் இறுதி விமானம் என்ற நிலை காணப்பட்டது அஞ்சு 6400மணித்தியாலங்களிற்கு மேல் விமானத்தை செலுத்தியுள்ளார் இதேவேளை விபத்திற்குள்ளான விமானத்தின் விமானி கமால் கே.சியின் உடல் அடையாளம்காணப்பட்டுள்ளது எனினும் அஞ்சு கத்திவாடாவின் உடல் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. https://www.virakesari.lk/article/145932
  6. “விமானம் ஒரு வெடிகுண்டு போல வெடித்தது” – நேபாள விமான விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் பட மூலாதாரம்,ASHOK DAHAL/BBC 4 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாளத்தின் போக்கராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்துக்கு கடைசி நேரத்தில் ‘தரையிறங்குவதற்கான ஓடுதளத்தை மாற்றியது காரணமா என்ற கேள்வி நிலவுகிறது. பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணித்த விமானம், நேபாள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக விபத்திற்குள்ளானது. அதில் 68 பேர் உயிரிழந்துள்ளதை நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு ஐந்து பேர் கொண்ட ஆணையத்தை அமைத்துள்ளது. பிபிசி நேபாளி சேவையின் செய்திப்படி, இதுவரை நடந்த விசாரணைகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தரையிறங்கும் முன் விமான ஓடுதளத்தை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது குறித்துப் பெரும்பாலான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. விமான நிலைய அதிகாரி ஒருவர், போக்கராவில் விழுந்து நொறுங்கிய எட்டி ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்து 24.5 கிமீ தொலைவு வரை நெருங்கிய நேரத்தில் தரையிறங்கும் தளத்தை மாற்றியது எனக் கூறினார். நேபாள விமான விபத்து: 68 உடல்கள் மீட்பு, பயணிகளில் 5 பேர் இந்தியர்கள்15 ஜனவரி 2023 நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள்15 ஜனவரி 2023 ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் வழக்கில் கைதானவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?15 ஜனவரி 2023 அதிகாரிகளின் கூற்றுப்படி, கேப்டன் கமல் கேசி தலைமையில் விமானத்தைத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுவரை விமானம் மற்றும் அது பறப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், திடீரென விமானத்தில் இருந்த விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடம், “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார். “விமானிக்கு ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அவர் ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரினார்,” என்று அதிகாரி கூறினார். YouTube பதிவை கடந்து செல்ல Google YouTube பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும் YouTube பதிவின் முடிவு ‘விமானம் கீழே விழுந்தது’ தரையிறங்குவதற்கான அனுமதி கிடைத்ததும், விமானம் ‘விசிபிலிட்டி ஸ்பேஸில்’ வந்துவிட்டது. அதாவது, கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும் பகுதிக்கு வானில் நெருங்கி வந்துவிட்டது. இதன் அடிப்படையில் விமான ஓடுதளத்தில் 10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஆனால், “திருப்பத்தின்போது விமானத்தின் தரையிறங்கும் கியர் திறக்கப்பட்டது. அப்போது விமானம் ‘ஸ்தம்பித்து’ கீழே விழத் தொடங்கியது,” என்று பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறிப் பேசிய விமான நிலையத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானப் போக்குவரத்து சார்ந்த பதங்களில் ‘ஸ்டால்’ என்பதற்கு விமானம் அதன் உயரத்தைத் தக்கவைக்கத் தவறியதைக் குறிக்கிறது. அந்த அதிகாரி பேசும்போது, “கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து விமானம் தெளிவாகத் தெரிந்தது,” என்றார். போக்கரா விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விஷ்ணு அதிகாரியும், “ஞாயிற்றுக்கிழமை இங்கு வானிலை தெளிவாக இருந்ததாகவும் அனைத்து விமானங்களும் வழக்கமானவையாக இருந்ததாகவும்” கூறினார். பட மூலாதாரம்,KRISHNA MANI VIRAL நேரில் கண்ட சாட்சிகள் என்ன சொல்கிறார்கள்? பிபிசியின் நேபாள சேவையுடனான உரையாடலில், சில நேரில் கண்ட சாட்சிகள், தரையிறங்குவதற்கு முன்பாக விமானம் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறினார்கள். விபத்து குறித்த கூடுதல் தகவலுக்காக விபத்தை நேரில் கண்ட பல சாட்சிகளிடம் பிபிசி பேசியது. அவர்களுடைய கூற்றுப்படி, இவையனைத்தும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு திடீரென நடந்துவிட்டன. இதுகுறித்து 43 வயதான கமலா குருங் பேசியபோது, “ என் கண் முன்னே விமானம் எரிவதைப் பார்த்தேன்,” என்றார். கமலா குருங், கரிபடன் பகுதியில் வசிப்பவர். அங்குதான் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. விமானத்தின் ஜன்னல்கள், தேநீர் கோப்பைகள், எரிந்த பொருட்கள் அங்கு சிதறிக் கிடக்கின்றன. பட மூலாதாரம்,EMPICS ‘விமானம் வெடிகுண்டு போல வெடித்தது’ விபத்தை நேரில் பார்த்த குழந்தைகள் பயந்து வீட்டிற்குள் ஓடியதாக கமலா கூறுகிறார். “காலை 11:30 வரை அனைத்தும் சாதாரணமாக இருந்தது. நான் வழக்கம் போல மொட்டை மாடியில் குழந்தைகளுடன் சூரியக் குளியல் செய்தேன். வீட்டிலிருந்து விமானங்கள் வந்து செல்லும் சத்தம் வழக்கமாகக் கேட்கக்கூடியது. ஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் விமானம் மேலே செல்லும் சத்தம் வழக்கத்திலிருந்து வேறுபட்டிருந்தது. நான் பார்த்த நேரத்தில், விமானம் கீழே விழுந்துவிட்டது,” என்று கமலா குருங் கூறுகிறார். இதுபோன்ற பயங்கரமான விமான விபத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும் கமலா கூறினார். “விமான கீழே விழுந்தபோது, மிகப்பெரிய சத்தம் கேட்டது. அதற்குப் பிறகு, சிறிது நேரத்திற்குக் கருமேகம் மட்டுமே தெரிந்தது. அதைப் பார்த்த போது, தீப்பிழம்புகள் எழத் தொடங்கின,” என்றார் அவர். அந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் சில உயரமான வீடுகள் உள்ளன. மற்றொரு உள்ளூர்வாசியான பால் பகதூர் குருங் பேசியபோது, “விமானம் மிகவும் தாழ்வாக வந்தது. பள்ளத்தாக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டு போல வெடித்துச் சிதறியது. சுற்றியுள்ள காட்டுப்பகுதியும் தீப்பிடித்து எரிந்தது,” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் போக்கராவில் விபத்திற்குள்ளான செய்தி பரவியது. படக்குறிப்பு, குடியிருப்புப் பகுதியில் விழுந்த விமான பாகங்கள் புறப்படவிருந்த விமானம் போக்கராவில் உள்ள சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. கிழக்கு, மேற்கு திசைகளில் இருந்து விமானங்கள் அங்கு தரையிறங்குகின்றன. விமானங்கள் கிழக்கிலிருந்து தரையிறங்குவதற்கு ஓடுதளம் 30 மற்றும் மேற்கிலிருந்து தரையிறங்குவதற்கு ஓடுதளம் 12ஐ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, விபத்தில் பலியான விமானி ‘விஷுவல் ஃப்ளைட் ரூல்ஸ்’ நுட்பத்தைப் பயன்படுத்தித் தரையிறங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். விஆர்எஃப் தொழில்நுட்பம், தெளிவான வானிலையில் விமானத்தைப் பறக்க வைக்கவும் தரையிறக்கவும் விமானிகளால் பயன்படுத்தப்படுகிறது. “விமானம் முதலில் தொடர்புகொண்டபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதியளித்தது. ஆனால், 24.5 கி.மீட்டருக்கு அருகில் வந்த பிறகு, விமானம் ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரியது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் விமானி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன், நான் மேற்கிலிருந்து தரையிறங்குகிறேன்,” என்று கூறியுள்ளார். புதிய விமான நிலையத்தின் தொழில்நுட்பம் தான் விபத்திற்குக் காரணமா என்ற கேள்விக்கு விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விஷ்ணு அதிகாரி, “இந்த நேரத்தில் எதையும் கூறுவது கடினம். விரிவான விசாரணைக்குப் பிறகே விபத்திற்கான காரணம் தெரிய வரும்,” என்றார். போக்கரா விமான விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய 5 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. இதோடு, விமான விபத்துகளைத் தடுக்க, அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களும் விமானம் கிளம்புவதற்கு முன்பாக தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. விபத்து நடந்த பிறகு, நேபாளில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான எண்களை வெளியிட்டுள்ளது: காத்மாண்டு: ஸ்ரீ திவாகர் சர்மா:+977-9851107021 போக்கரா : லெப்டினன்ட் கர்னல் ஷஷாங்க் திரிபாதி: +977-9856037699 https://www.bbc.com/tamil/articles/crg68dvr53zo
  7. நேபாள விமான விபத்து: 68 உடல்கள் மீட்பு, பயணிகளில் 5 பேர் இந்தியர்கள் பட மூலாதாரம்,KRISHNAMANI BARAL 15 ஜனவரி 2023 நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், ஆனால், அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறினார் காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல். “செட்டி கோஞ்சில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தேடுவதற்காக மீட்புப் பணியாளர்கள் கயிற்றில் தொங்கியபடி இறங்கியுள்ளார்கள்,” என்று அவர் கூறினார். செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிராவுலா, விமானப் பயணிகளில் 53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும் இருந்ததாகக் கூறினார். ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து இரண்டு பயணிகள் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்ததாகக் கூறினார். நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா, மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி நடந்தது?14 ஜனவரி 2023 இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா? பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?14 ஜனவரி 2023 இணைய தாக்குதலா? அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் முடங்கின11 ஜனவரி 2023 “தற்போது கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார். போக்கரா சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர், விமானம் தரையிறங்க 10 முதல் 20 வினாடிகள் மட்டுமே இருந்தன எனக் கூறினார். விபத்து குறித்து நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி கூறுகையில், “போக்கரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேதி ஆற்றின் அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து நொறுங்கி தீப் பிடித்தது. 120 ரேஞ்சர்களும், 180 ஜவான்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ” என்றார். ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, 72 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் விமானம் போக்கரா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தில் மொத்தம் 68 பயணிகள், 4 பணியாளர்கள் இருந்ததாக காத்மண்டு போஸ்ட் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. எட்டி ஏர்லைன்ஸின் இந்த விமானம் பழைய விமான நிலையத்திற்கும் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்திற்குள்ளானது. பட மூலாதாரம்,FACEBOOK/NEPAL PRESS எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்துலா ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறுகையில், “விமானத்தில் 68 பயணிகளுடன் நான்கு பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் எத்தனை பேர் உயிர் பிழைத்தனர் என்பது இன்னும் தெரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார். நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி, “போக்கரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள செட்டி ஆற்றின் பள்ளத்தாக்கில் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 120 ரேஞ்சர்களும் 180 ராணுவ வீரர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” எனக் கூறினார். தொடரும் மீட்புப் பணி Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு காத்மண்டுவில் இருந்து இரவு 10:32 மணிக்கு விமானம் புறப்பட்டது. தற்போது விபத்து நடந்த இடத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக நேபாள் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் விமானத்திலிருந்து புகை எழும்புவதாகவும் அதை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். தரையிறங்கும்போது விமானம் விபத்திற்குள்ளானது. விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் புஷ்ப கமல் தஹால், அமைச்சர்கள் குழுவின் அவசர கூட்டத்தையும் கூட்டியுள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானத்தில் ஏற்பட்ட தீ தற்போது கிட்டத்தட்ட அணைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு 5 பேர் கொண்ட கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. இந்த விபத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கான எண்களும் வெளியிடப்பட்டுள்ளன: தூதரகத்தின் உதவி எண்கள்: I) காத்மாண்டு: ஸ்ரீ திவாகர் சர்மா:+977-9851107021 II) போக்கரா : லெப்டினன்ட் கர்னல் ஷஷாங்க் திரிபாதி: +977-9856037699 தூதரகத்தின் ஹெல்ப்லைன் தொடர்புகள்: தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கண்காணித்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cqv3y0e56ezo
  8. புதுக்கோட்டை தலித் பகுதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 27 டிசம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பட்டியலின மக்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஜனவரி 14ம் தேதி உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திரபாபு. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் அடையாளம் காணவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு, இறையூரில் நிலவிய பிற தீண்டாமை முறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்தார். இரட்டைக் குவளை முறை நிலவியதாக கண்டறிந்த அவர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். உள்ளூர் கோயிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கண்டறிந்த அவர், உடனடியாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். பிறகு அமைதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பட்டியல் சாதியினருடன் பிற சாதியினரும் இணைந்து டிசம்பர் 27 அன்று கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்து அறிவிக்காமல் கால தாமதம் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன், "குற்றவாளிகளைத் தேடி கைது செய்வதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையின் தனிப்படை, வன்கொடுமைக்காளான தலித்துகளையே குற்றவாளிகளாக்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது" என்று கூறியும், சிபிசிஐடி விசாரணை கோரியும் முதல்வர், அமைச்சர்கள் அந்த ஊருக்கு நேரில் செல்லவேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ஆதவன் தீட்சன்யா, சுகிர்தராணி உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒப்பமிட்டு முதல்வருக்கு ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்தனர். அத்துடன் அந்த விண்ணப்பத்தில் மேலும் பலரிடமும் கையெழுத்துத் திரட்டும் பணிகளும் நடந்துவந்தன. இந்நிலையில்தான், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும் உத்தரவு வெளியாகியுள்ளது. குரங்கில் மனித விந்தணுவைச் செலுத்தி நடந்த சோதனையில் என்ன கிடைத்தது தெரியுமா?28 டிசம்பர் 2022 வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து, இந்திய தேர்வில் தோல்வியடைந்த 73 பேர் மீது சிபிஐ வழக்கு - முழு விவரம்29 டிசம்பர் 2022 பெற்றோருக்கு நடந்த மதுரை விமான நிலைய சம்பவம் - சித்தார்த் முழு விளக்கம்29 டிசம்பர் 2022 இறையூரில் நடந்தது என்ன? புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்று இறையூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் சாதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஊரில் உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை நிலவுவதாகவும், இப்பகுதி அய்யனார் கோவிலில் பல தலைமுறைகளாக பட்டியல் சாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை நிலவுவது உறுதியானது. தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலைத் திறந்து பட்டியலின மக்களை அங்கு வழிபட அழைத்துச் சென்றார் மாவட்ட ஆட்சியர். இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்புத் தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு, இரட்டைக் குவளை முறை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், பட்டியல் சாதியினர் உள்ளிட்ட 3 சாதியினர் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. மூன்று சாதிகளைச் சேர்ந்த 26 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், இறையூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பட்டியல் சமூக மக்களையும் பாகுபாடு இன்றி வழிபாடு செய்ய அனுமதிப்பது, குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, தேநீர் கடையில் இரட்டை குவளை முறையைக் களைந்து அனைத்து சமூக மக்களும் சமமாக வாழ்வது என்ற மூன்று முடிவுகள் எட்டப்பட்டன. ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள் முன்னதாக, வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் அழைத்து சென்றார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்தனர் அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனூர் போலீசில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை26 டிசம்பர் 2022 தெலங்கானாவில் மொட்டை மாடியில் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு27 டிசம்பர் 2022 அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார விவாதம்: பாஜ கூட்டணிக்கு உள்ளே எதிர்ப்பா?27 டிசம்பர் 2022 யார் மீது சந்தேகம்? இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார். இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார். குறிப்பிட்ட நீர்த்தேக்க தொட்டியை பட்டியலின மக்கள் மட்டுமில்லாமல் ஊரில் உள்ள பல தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு தங்களை அனுமதிக்க வில்லை என்றும், டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும், குற்றம்சாட்டினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக, பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார். மேலும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டதோடு அப்பகுதியில் உள்ள அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யவும், போலீசாருக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டனர். 3 வழக்குகள் பதிவு - அரசு தகவல் புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அதில், "புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார். "இரட்டைக்குவளை முறை, கோவிலில் அனுமதிக்காதது, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரட்டைக்குவளைமுறை, கோவிலில் அனுமதிக்காதது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர்த் தொட்டியில் மலத்துடன் கழிவு நீர் கலந்தது தொடர்பாக சந்தேக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். https://www.bbc.com/tamil/articles/crg9nlr3r5ro
  9. தினேஷ் ஷாப்டர் விவகாரம் : 14 மரணச் சடங்குகள் குறித்து அவதானம் ! இதுவரையான விசாரணையின் நிலை என்ன ? By DIGITAL DESK 5 13 JAN, 2023 | 03:41 PM (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், நேரடி சாட்சியம் ஒன்றினை வெளிப்படுத்திக் கொள்வதற்காக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த விசாரணைகள் தொடர்கின்றன. 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொது மயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார். இந் நிலையில், குறித்த தினம், பொரளை கனத்தையில் நடந்த அணைத்து மரணச் சடங்குகள் தொடர்பிலும் சி.ஐ.டி.யின் அவதானம் தற்போது திரும்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். அதன்படி குறித்த தினம், பொரளை கனத்தையில் 14 மரணச் சடங்குகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ கூறினார். தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படும் நேரத்தில் அங்கு நடந்த மரணச் சடங்குகளுக்கு வந்த எவரேனும் சந்தேகத்துக்கு இடமான எவரையேனும் பார்த்திருக்கலாம் என்ற ஊகத்திலும், அவ்வாறு கண் கண்ட அல்லது நேரடி சாட்சியம் ஒன்று தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்வது தற்போதைய இந்த விசாரணையின் நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். எவ்வாறாயினும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், எந்த தீர்மானத்துக்கும் இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை என கூறும் பொலிஸ் பேச்சாளர், இதுவரை சுமார் 185 பேரின் வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக கூறினார். https://www.virakesari.lk/article/145731
  10. தினேஸ் ஸ்காப்டர் விவகாரம்- பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பொலிஸ் பேச்சாளர் By RAJEEBAN 12 JAN, 2023 | 03:57 PM பிரபல வர்த்தகர் தினேஸ் ஸ்காப்டர் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொலிஸ் பேச்சாளர் நிராகரித்துள்ளார். தொலைக்காட்சிநிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கையில் பிரபலவர்த்தகரின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்குமாறு மறைகரமொன்று பொலிஸாருக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளவர்களிற்கும் இலஞ்சம் வழங்குகின்றது என தெரிவிக்கப்படுவதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ நிராகரித்துள்ளார். உண்மைiயை மறைப்பதற்கு எவராவது முயன்றால் அவருக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தினேஸ் ஸ்காப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன பொலிஸார் மாத்திரம் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உண்மையை மறைப்பதற்காக பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் நாங்கள் விசாரணைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/145635
  11. தினேஷ் ஷாப்டரின் மரணம் : தொடரும் விசாரணகள் ! சகோதரரிடம் சாட்சியங்கள் பதிவு By DIGITAL DESK 5 10 JAN, 2023 | 07:31 PM ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலையா தற்கொலையா என விசாரணையாளர்கள் எந்த தீர்மானத்துக்கும் இதுவரை வரவில்லை எனவும், கொலையாக கருதிய குற்றவியல் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஷாப்டரின் மரணம் தற்கொலை என சமூக வலைத் தலங்களில் சி.ஐ.டி.யை மேற்கோள் காட்டி ஊடகமொன்று வெளியிட்ட செய்தியை மையப்படுத்தி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விசாரணையாளர்கள் ஒரு போதும் , எங்கும் ஷாப்டரின் மரணத்தை இதுவரை தற்கொலை என அறிக்கை இடவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். அதன்படி இந்த விவகாரத்தில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய இதுவரை 175 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவர் இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படாத நிலையில், நேரடி சாட்சியங்களை தேடிய புலன் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ. ஆய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்காத நிலையில் சுமார் 14 தடயங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணையாளர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். இந் நிலையில், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனிடையே, படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் ( மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று (10) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இடம்பெற்றது. நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில் இரகசியமாக இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ரமேஷ் ஷாப்டரிடம் இன்றையதினம் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/145449
  12. விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடித்தது, அதில் வரும் சுவாரசியமான வீடியோக்கள் மனதை களி்ப்புறத் தான் செய்கின்றது. உங்கள் தலைப்பு போல.
  13. ஒரு கையால் என நினைக்கிறேன் சுவி அண்ணை.
  14. கார் விபத்தில் சிக்கிய ரிஷாப் பன்ட் சத்திர சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார் By DIGITAL DESK 2 04 JAN, 2023 | 05:36 PM (என்.வீ.ஏ.) வீதி விபத்து ஒன்றின்போது காயங்களுக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பன்ட், சத்திர சிகிச்சைக்காக அம்ப்யூலன்ஸ் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். புதுடில்லியிலிருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கீ என்ற இடத்திற்கு 25 வயதான ரஷிப் பன்ட் ஓட்டிச் சென்ற கார், நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளில் மோதுண்டு தீப்பிடித்ததால் அவர் காயங்களுக்குள்ளானார். அவ் வீதியால் சென்ற பஸ் வண்டி ஒன்றின் சாரதியும் நடத்துநரும் ரிஷாப் பன்டை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவசர முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தெஹ்ராதுன் வைத்தியசாலைக்கு ரிஷாப் பன்ட் மாற்றப்பாட்டார். அந்த வைத்தியசாலையில் 5 தினங்கள் சிகிச்சைப் பெற்றுவந்த ரிஷாப் பன்ட், அம்ப்யூலன்ஸ் விமானம் மூலம் மும்பையிலுள்ள தனியார் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்தது. 'ரிஷாப் பன்டுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவர் முழுமையாக குணமடையும்வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவ குழுவனரால் கண்காணிக்கப்படுவார் என சபை குறிப்பிட்டது. விபத்தின்போது ரிஷாப் பன்டின் வலது முழங்கால், மணிக்கட்டு, கணக்கால், முதுகுப்பகுதி ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதுடன் கார் எரிந்ததால் அவர் எரிகாயங்களுக்கும் உள்ளானர். தற்போது அவர் தேறிவருவதாக டெல்ஹி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க பணிப்பாளர் ஷியாம் ஷர்மா தெரிவித்தார். ரஷாப் பன்ட் விபத்தில் சிக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய குழாம்களில் இணைகப்பட்டிருக்கவில்லை. பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே அவர் கடைசியாக விளையாடியிருந்தார். அப் போட்டியில் 93 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியில் ரஷாப் பன்ட் முக்கிய பங்காற்றியிருந்தார். https://www.virakesari.lk/article/144981
  15. உத்தியோகபூர்வ அறையில் நடந்த தினேஷ் ஷாப்டர் படுகொலை தொடர்பான விசாரணை By T. SARANYA 04 JAN, 2023 | 05:14 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் (மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று (ஜன 04) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆரம்பமானது. நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில் இரகசியமாக இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டர், தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படும் அவரது நிறுவனமொன்றின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றும் கிரிஸ் பெரேரா ஆகியோரின் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று புதன்கிழமை சாட்சியமளிக்க பொரளை கனத்தை ஊழியர்கள் இருவர் , நீதிமன்றுக்கு வந்திருந்த போதும் அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்களது சாட்சியங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி பதிவு செய்யப்படவுள்ளது. இன்றைய தினம் இந்த சாட்சிப் பதிவுகளின் போது, தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தாரின் நலனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர். https://www.virakesari.lk/article/144978

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.