Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தினேஷ் ஷாப்டரின் மரணம் : தொடரும் விசாரணகள் ! சகோதரரிடம் சாட்சியங்கள் பதிவு By DIGITAL DESK 5 10 JAN, 2023 | 07:31 PM ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலையா தற்கொலையா என விசாரணையாளர்கள் எந்த தீர்மானத்துக்கும் இதுவரை வரவில்லை எனவும், கொலையாக கருதிய குற்றவியல் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஷாப்டரின் மரணம் தற்கொலை என சமூக வலைத் தலங்களில் சி.ஐ.டி.யை மேற்கோள் காட்டி ஊடகமொன்று வெளியிட்ட செய்தியை மையப்படுத்தி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விசாரணையாளர்கள் ஒரு போதும் , எங்கும் ஷாப்டரின் மரணத்தை இதுவரை தற்கொலை என அறிக்கை இடவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். அதன்படி இந்த விவகாரத்தில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய இதுவரை 175 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவர் இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படாத நிலையில், நேரடி சாட்சியங்களை தேடிய புலன் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ. ஆய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்காத நிலையில் சுமார் 14 தடயங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணையாளர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். இந் நிலையில், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனிடையே, படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் ( மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று (10) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இடம்பெற்றது. நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில் இரகசியமாக இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ரமேஷ் ஷாப்டரிடம் இன்றையதினம் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/145449
  2. விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடித்தது, அதில் வரும் சுவாரசியமான வீடியோக்கள் மனதை களி்ப்புறத் தான் செய்கின்றது. உங்கள் தலைப்பு போல.
  3. ஒரு கையால் என நினைக்கிறேன் சுவி அண்ணை.
  4. உத்தியோகபூர்வ அறையில் நடந்த தினேஷ் ஷாப்டர் படுகொலை தொடர்பான விசாரணை By T. SARANYA 04 JAN, 2023 | 05:14 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் (மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று (ஜன 04) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆரம்பமானது. நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில் இரகசியமாக இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டர், தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படும் அவரது நிறுவனமொன்றின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றும் கிரிஸ் பெரேரா ஆகியோரின் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று புதன்கிழமை சாட்சியமளிக்க பொரளை கனத்தை ஊழியர்கள் இருவர் , நீதிமன்றுக்கு வந்திருந்த போதும் அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்களது சாட்சியங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி பதிவு செய்யப்படவுள்ளது. இன்றைய தினம் இந்த சாட்சிப் பதிவுகளின் போது, தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தாரின் நலனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர். https://www.virakesari.lk/article/144978
  5. தினேஷ் ஷாப்டர் படுகொலை : இரத்தம், நகத் துண்டுகள் உள்ளிட்ட உடற்கூறுகள், ஸ்தல சாட்சியங்கள் பல டி.என்.ஏ. பரிசோதனைக்கு By DIGITAL DESK 2 03 JAN, 2023 | 05:43 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், அவரின் இரத்த மாதிரி, நகத் துண்டுகள் உள்ளிட்ட உடற்கூறுகள் மற்றும் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஸ்தல சான்றுப் பொருட்கள் பல தொடர்பில் இரசாயன, டி.என்.ஏ. பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை (டிச. 3) சி.ஐ.டி.யின் பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவு அதிகாரிகள், கொழும்பு நீதிவான் நீதிமன்றின் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடித்த வயர் துண்டு, இரத்தம் தோய்ந்த துணி, தினேஷ் ஷாப்டரின் நகம், இரத்த மாதிரி, ஸ்தல பரிசோதகர்களும் சி.ஐ.டி. அதிகாரிகளும் கண்டுபிடித்த ஸ்தல சான்றுப் பொருட்கள் பலவற்றை அரச இரசாயன பகுப்பய்வாளருக்கு அனுப்பி பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ. அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள இந்த கட்டளை பெற்றுக்கொளப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய குற்றவியல் சட்டத்தின் 124ஆவது அத்தியாயத்துக்கு அமைய இதற்கான கட்டளையை பிறப்பித்துள்ளார். இந் நிலையில், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றது. அதன்படி இதுவரை சுமார் 145 வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் வீரகேசரிக்கு வெளிப்படுத்தின. https://www.virakesari.lk/article/144875
  6. யாழ் கள உறவுகள் எல்லோருக்கும் 2023 புத்தாண்டு வாழ்த்துகள்.
  7. செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால கனவு பலிக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோனாதன் ஆமோஸ் பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்கக்கூடிய ஆதாரங்களை பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. அது சேகரித்த முதல் பாறை மாதிரி மீட்கப்ட்டு, பூமிக்கு கொண்டுவரப்படுவதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காத்துக் கொண்டிருக்கிறது. ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக வேறொரு கிரகத்திலிருந்து பொருட்களை பூமிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற பல்லாண்டுக்கால காத்திருப்பில் இதுவொரு முக்கிய தருணம். பூமியிலுள்ள பாறை, மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அங்கு உயிர்கள் குறித்து இருக்கும் கேள்விக்குத் தீர்வு காண முடியுமென்று கருதப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளதா? – முக்கிய தருணத்தை எட்டிய பெர்சவரன்ஸ் ரோவர்18 மே 2022 செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படம் பிடித்த எமிரேட்ஸ் விண்கலம்15 பிப்ரவரி 2021 செவ்வாய் கிரகத்தின் நிலவு: படம் பிடித்து அனுப்பி மங்கள்யான் - இஸ்ரோ தகவல்5 ஜூலை 2020 ரோபோவின் வயிற்றிலிருந்து விரல் அளவுள்ள மாதிரி குழாய் வெளியேற்றப்பட்டது. அப்படி வெளியேற்றப்பட்ட குழாய், தரையில் விழுந்ததை உறுதி செய்வதற்குப் புகைப்படமும் எடுக்கப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் 2030இல் இந்த மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரத் திட்டமிட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ கிரேட்டரில் த்ரீ ஃபோர்க்ஸ் என்றழைக்கப்படும் இடத்தில் அவை வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மட்டுமே அங்கு இருக்கப் போவதில்லை. உண்மையில், பள்ள விளிம்பிற்கும் அப்பால் ரோபோ ஓட்டும்போது, அது விடாமல் எடுத்துச் செல்லும் பாறைகளும் அங்கு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், பாறைகளைச் சேகரிக்கும்போது ரோவர் உடைந்து போகக்கூடிய அபாயமும் உள்ளது. ரோவரை அத்தகைய அபாயநிலையில் வைக்கக்கூடாது என்பதால் தான், ஒரு பாதுகாப்பிற்காக முன்கூட்டியே மாதிரி சேகரிப்புக் கிடங்கை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் தூண்டப்பட்டனர். த்ரீ ஃபோர்க்ஸ் கிடங்கு, மீட்டெடுப்புப் பணி வரும்போது மாதிரிகள் எதையாவது நாம் கொண்டுவருவதற்கான உத்தரவாதத்தைக் கொடுக்கிறது. அந்தக் கிடங்குக்குச் செல்லப் போகும் முதல் பாறை மாதிரி, “மலாய்” என்றழைக்கப்படும் எரிமலை அல்லது அனற்பாறை. இந்த வகையைச் சேர்ந்த மேலும் மூன்று பாறைகளையும் ரோவர் அங்கு கொண்டு வந்து வைக்கும். அவற்றின் வேதியியியல் பண்புகள், ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெசெரோ பள்ளத்தின் வயதையும் செவ்வாய் கிரகத்தின் பரந்த புவியியல் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்கு உதவும். “டெல்டா நதி அல்லது ஒரு பழங்கால ஏரியின் அடிப்பகுதியைப் போன்ற பல்வேறு படிவு சூழல்களைக் கொண்டுள்ள பல்வேறு வண்டல் பாறைகள் உள்ளன. இந்த சுற்றுச்சூழல்களில் சில, வாழத் தகுதியுடையவையாக இருந்திருக்கலாம். அதோடு, இந்தப் பாறைகளில் சில, பழங்கால நுண்ணுயிர்களின் ஆதாரங்களைப் பாதுகாத்திருக்கக்கூடும்,” என்று பெர்செவரென்ஸ் திட்டத்தின் விஞ்ஞானி மீனாட்சி வாத்வா கூறினார். படிமங்கள் அடங்கிய மூன்று மாதிரி குழாய்கள் அங்கிருக்கும். பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் முதல் மாதிரியை ரோவர் கீழே வைத்தது. இதேபோல் இன்னும் 9 மாதிரிகள் வைக்கப்படும் கூடுதலாக, வாகனத்திலிருந்து வெளியேறும் அசுத்தங்கள் உட்பட ரோவருக்குள் இருந்த நிலைமைகளைப் பதிவு செய்யும் ஒரு சிறப்புக் குழாயுடன் பெர்செவரென்ஸ் ரோவர், மண் மற்றும் வளிமண்டலத்தின் மாதிரிகளை, இறக்கி வைக்கும். ஒருவேளை பெர்செவரன்ஸ் செயலிழந்துவிட்டால், மாதிரிகளை எடுத்து வருவதற்கான பயணம் நேராக த்ரீ ஃபோர்க்ஸ் பகுதிக்கே திசை திருப்பப்படும். அந்தத் திட்டத்தில் இரண்டு டிரோன்களை கொண்ட, குழாய்களைப் பிடிப்பதற்கு ஏதுவாக நகங்கள் பொருத்தப்பட்ட கருவி, அந்த மாதிரிகளை ராக்கெட்டுக்கு கொண்டு செல்லும். பிறகு அந்த ராக்கெட், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும். பெர்செவரன்ஸ் இன்றுவரை பாறைகளைத் துளையிட்டு இரண்டு மாதிரிகளைச் சேகரித்து வருகிறது. இந்த நடைமுறை த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் முடிவடையும். “அந்தக் கிடங்கில் கீழே வைப்பதற்கு ஒரு குழாயுயும் கையோடு எடுத்துச் செல்வதற்கு ஒரு குழாயும் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த இரண்டு ஜோடி மாதிரி உத்தியை நாங்கள் மேற்கொள்கிறோம்,” என்று பெர்சவரன்ஸ் ரோவரின் துணை திட்ட விஞ்ஞானி கேட்டி ஸ்டாக் மோர்கன் விளக்கினார். மேலும், “த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட கிடங்கை கட்டமைத்தவுடன், எங்களால் அடுத்த உத்திக்கு நகர முடியும். அதில் ஒரே மாதிரியை மட்டும் சேகரிப்போம். இது ஒருவகையில், எங்கள் அறிவியல் குழுவுக்கு விடுதலையளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அதற்குப் பிறகு, எங்களால் இன்னும் பல பகுதிகளுக்கு நகர்ந்து, இன்னும் பல வகையான பாறைகளின் மாதிரிகளைச் சேகரிக்க முடியும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் விளக்கினார். ஜனவரியில், பெர்சவரன்ஸ் அதன் அடிப்படைப் பணியை ஜெசெரோவில் முடித்திருக்கும். ஆனால், அனைத்து ரோபோ அமைப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில், அறிவியல்ரீதியாக இன்னும் பல வாய்ப்புகள் இருப்பதால், நாசா அதிகாரிகள் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். வாகனமும் அதன் கண்காணிப்புக்கு உதவும் இன்ஜெனியுட்டி என்றழைக்கப்படும் டிரோன் ஆகியவை, பள்ளத்தின் மேற்கில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மேடு மீது விரைவில் ஏறும். டெல்டா என்பது ஒரு நதியால் கொட்டப்படும் வண்டல் மற்றும் மணலில் இருந்து உருவாகும் ஓர் அமைப்பு. அது, பரந்த நீர்நிலைக்குள் நுழைவதைக் கடினமாக்குகிறது. கடந்தகால நுண்ணுயிர்களின் ஆதாரங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கக்கூடிய அம்சம் அதற்கு உள்ளது. பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS வெள்ளச் செயல்பாடு நடந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் எனத் தோன்றும் வகையில், டெல்டாவின் மேல் பகுதியில் அளவில் பெரிதாகச் சிதறிக் கிடக்கும் சில பாறைகளை பெர்சவரன்ஸ் ஆராயும். பிறகு, ரோபோ பள்ளத்தின் விளிம்புக்கு நகரும். அங்கு கார்பனேட் வகை வண்டல் பாறைகள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் குறிப்பிடுகின்றன. பழங்கால நுண்ணுயிர் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு இவை நல்ல இடமாக இருக்கும். பெர்சவரன்ஸ் இன்னும் 20க்கும் மேற்பட்ட மாதிரி குழாய்களை நிரப்புவதற்குக் காத்திருக்கிறது. தரையிறங்கும் தளம், ஹெலிகாப்டர்கள், ஒரு ரோபோ கை, திரும்பி வருவதற்கான ராக்கெட் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு, தோராயமாக இரண்டு ஆண்டு பயண நேரத்தோடு, 2028ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மாதிரி சேகரித்துக் கொண்டு வரும் பணிகள், பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. த்ரீ ஃபோர்க்ஸ் கிடங்கிலிருந்து அல்லது நேரடியாக வேறோர் இடத்திலுள்ள பெர்சவரன்ஸில் இருந்து, அது எடுக்கும் மாதிரி குழாய்கள், 2033இல் மீண்டும் ஒரு ஐரோப்பிய திட்டத்தின் மூலம் பூமிக்குக் கொண்டுவரப்படும். https://www.bbc.com/tamil/articles/cd1z9ez0qv7o
  8. தினேஷ் ஷாப்டர் படுகொலை : மெலிந்த, உயரமான தோற்றம் கொண்ட அந்த நபர் யார் ? By VISHNU 30 DEC, 2022 | 05:10 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், நபர் ஒருவரை அடையாளம் காண சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில், வாக்கு மூலம் ஒன்றை அடிப்படையில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஷாப்டர், பொரளை பொது மயானத்தில் அவரது காருக்குள் குற்றுயிராய் கிடந்த போது, அந்த கார் அருகே இருந்து சந்தேகத்துக்கு உரிய ஒருவர் சென்றதாக, மயானத்தின் ஊழியர் ஒருவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். அவரது வாக்கு மூலத்தின் பிரகாரம் மெல்லிய, உயரமான தோற்றத்தை உடைய ஒருவர் இவ்வாறு சென்றதாக கூறப்படும் நிலையில், குறித்த நபரை அடையாளம் காண தற்போது சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரை 90 பேரின் வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. அதன்படி தற்போது வரையான விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி முக்கிய 4 கோணங்களில் விசாரணைகள் தொடர்வதாக அறிய முடிகின்றது. இதற்காக சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 8 சி.ஐ.டி. சிறப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. இதனைவிட பொலிஸ் மற்றும் தேசிய உளவுச் சேவையின் அறிக்கைகளையும் விசாரணையாளர்கள் பெற்று, சந்தேகிக்கத்தக்க அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. https://www.virakesari.lk/article/144571
  9. தினேஸ் சாப்டரின் அதிகம் அறியப்படாத கிரிக்கெட் பின்னணி By RAJEEBAN 29 DEC, 2022 | 03:34 PM Rex Clementine கண்டியின் தலைசிறந்த சட்டத்தரணி சேமா தனது பிள்ளைகளிற்கு மிகச்சிறந்த விடயங்களை தெரிவு செய்தார்,பாடசாலை டிரினிட்டி, கிரிக்கெட்டிற்கு பேர்ட்டி விஜயசின்ஹ ரக்பிக்கு குயென்டின் இஸ்ரேல் . இதன் காரணமாக குமார்சங்ககார மிகச்சிறந்த டெஸ்ட் வீரரானது ஆச்சரியமளிக்கவில்லை அவரை போல சந்திர ஸ்காப்டரும் தனது பிள்ளைக்கு மிகச்சிறந்த விடயங்களை தெரிவு செய்தார் கல்விக்கு மெட்ராசின் செர்வூட் ஹோல் கிரிக்கெட்டிற்கு பேர்ட்டி விஜயசிங்க. இலங்கையில் இன்னமும் உயிர்வாழும் மூத்த கிரிக்கெட் வீரர் சந்திரா.இரண்டு வாரங்களிற்கு முன்னர் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட அவரது மகன்தினேஸ் பிரிட்டனில் பின்ஞ்லி கிரிக்கெட் கழகத்திற்காக Finchly Cricket Club in the Middlesex Leagueகிரிக்கெட் விளையாடியுள்ளார். அவர் இலங்கைக்கு திரும்பி வந்த வேளை தமிழ்யூனியன் கழகத்தில் முத்தையா முரளீதரன் ரங்கனஹேரத் நிரோசன் பண்டாரதிலக உபுல் சந்தன போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதன் காரணமாக அவர் மூர்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக Moors Sports Club,கிரிக்கெட் விளையாடினார். தினேஸ் சிறந்த பந்துவீச்சாளர்- அவர் ஒருமுறை எஸ்எஸ்சிக்கு எதிராக ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். மார்வன் அத்தபத்துவின் விக்கெட்டை வீழ்த்தினார். தினேஸ் சாப்டரின் துடுப்பாட்டம் குறித்து எதனையும் சிறப்பாக குறிப்பிட முடியாது என்ற போதிலும் அவர் ஒரு முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்- 11 வது வீரராகவும் களமிறங்கியுள்ளார். அவர் பதினொராவது வீரராகவும் களமிறங்கியுள்ளார். தினேசை கௌசல் சில்வாவுடன் ஒப்பிடலாம்,அவர் இலகுவில் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்க மாட்டார் இறுதிவரை களத்தில் நிற்பார். ஒருமுறை என்சிசிக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார் கல்வியிலும் தினேஸ்சாப்டர் மிகச்சிறந்தவராக விளங்கினார்.அவர் தனது 18 வயதில் கற்கைநெறியை பூர்த்தி செய்தார்- இலங்கையில் மிக இளவயதில் அந்த கற்கையை பூர்த்திசெய்தவர்களில் இவரும் ஒருவர். மரணம் நிகழ்ந்தவேளை அவர் கழகத்தின்Moors Sports Club, குழு உறுப்பினராக காணப்பட்டார். https://www.virakesari.lk/article/144457
  10. ஹிஜாப் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் ஈரான் வீராங்கனைகள் By RAJEEBAN 29 DEC, 2022 | 11:03 AM சர்வதேச சதுரங்க போட்டியொன்றில் ஈரானை சேர்ந்த பெண் வீராங்கனை சாரா கடெம் ஹிஜாப் இன்றி கலந்துகொண்டுள்ளார். செப்டம்பரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமான பின்னர் ஈரானின் வீராங்கனைகள் பலர் ஹிஜாப் இன்றி சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். இந்த வரிசையில் சாரா கடெம் இணைந்துகொண்டுள்ளார். கஜகஸ்தானின் அல்மைட்டியில் இடம்பெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரானில் கட்டாயமாக காணப்படும் ஹிஜாப் இன்றி அவர் கலநதுகொண்டுள்ளதை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சதுரங்க தரவரிசையில் 804வது இடத்தில் உள்ள சாரா கடெம் ஈரானில் பத்தாவது இடத்தில் உள்ளார். கடந்த ஒக்டோபரில் தென்கொரியாவில் இடம்பெற்ற மலையேறும் போட்டியில் ஈரானை சேர்ந்த எல்னாஸ் ரெகாமி ஹிஜாப் இன்றி கலந்துகொண்டார். பின்னர் அவர் ஹிஜாப் தவறுதலாக விழுந்து விட்டது என தெரிவித்திருந்தார். நவம்பரில் ஈரானின் வில்வித்தை வீராங்கனை டெஹ்ரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஹிஜாப் இன்றி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கான ஆதரவை வெளியிட்டார். அவர் ஹிஜாப்பை வேண்டுமென்றே தவறவிடுவதை வீடியோக்கள் காண்பித்தன.அவர் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவை வெளிப்படுத்தினார் என்ற கருத்து உருவாகியிருந்தது. https://www.virakesari.lk/article/144413
  11. கேள்வியை விளங்கி எழுதவில்லை, அதுக்கேன் செருப்பைத் தூக்குறியள்?!😀 பிரியாவையோ பவானியையோ பிடிக்குமோ?🤭 நான் பிறந்தமாதம் டிசம்பர்.
  12. ஷாப்டரின் கொலை குறித்த மர்ம முடிச்சுக்கள் தொடர்கின்றன ! மாமியாரிடம் சிறப்பு விசாரணை By T. SARANYA 28 DEC, 2022 | 08:09 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், விசாரணைகளை முன்னெடுக்கும் 8 சிறப்புக் குழுவின் விசாரணையாளர்களையும் புதன்கிழமை ( டிச 28) பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கலந்துரையாடலொன்றுக்கு அழைத்துள்ளார். சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளுக்கான ஒத்தாசைகளை வழங்கி வரும் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவையும் உள்ளடக்கிய 8 குழுக்களையும் பொலிஸ் மா அதிபர் அழைத்துள்ளார். இதன்போது, விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் ஆரயப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரை 84 பேரின் வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. இதில் தினேஷ் ஷாப்டரின் மாமியார், மனைவி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். செவ்வாய்க்கிழமை (டிச 27) தினேஷ் ஷாப்டரின் மாமியாரிடம் சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும், அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் , கடந்த 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில் அதனை மையப்படுத்தி குறித்த விசாரணைகள் மிக நீண்ட நேரம் நடாத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. இதனைவிட மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம் சி.ஐ.டி. குழுவினர், அவர்களது வாழ்க்கை மற்றும் கருத்து வேறுபாடுகள், எதிரிகள் உள்ளிட்ட விடயங்களையும் வர்த்தக நடவடிக்கை மற்றும் முதலீடு குறித்த விடயங்களையும் மையப்படுத்தி 3 முறை விசாரணை நடாத்தியுள்ளனர். எவ்வாறாயினும், சிஐடி வசம் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாப்டர் மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அப்பிரேத பரிசோதனை அறிக்கையின் விரிவான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். எவ்வாறாயினும் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் வீட்டை விட்டு வெளியேறிய 30 முதல் 40 நிமிடங்களுக்குள் கோமா நிலையை அடைந்தார் என சந்தேகிக்கப்படுகின்றது. தனது கணவர் பிற்பகல் 1.55 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக தினேஷ் ஷாப்டரின் மனைவி பொரளை பொலிஸில் தெரிவித்துள்ள நிலையில் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் பிற்பகல் 2.06 மணிக்கு தினேஷ் ஷாப்டரின் கார் பிளவர் வீதி வீட்டிலிருந்து பிரதான பாதைக்குள் நுழைவது துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி , தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 2.35 மணி முதல் 2.40 மணிக்குள் குற்றமொன்றுக்கு உள்ளாகி கோமா நிலையை அடைந்திருக்கலாம் , என விசாரணையாளர்கள் அனுமானிக்கின்றனர். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபப்டும் போதும், கோமா நிலையில் இருந்தமை தொடர்பிலும், அவரது இருதயத்தை செயற்படுத்த பல மணி நேரம் வைத்தியர்கள் போராடியமை உள்ளிட்ட தகவல்களையும் மையப்படுத்தி இந்த அனுமானம் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ், தனக்கு அன்றைய தினம் பிற்பகல் 2.42 மற்றும் 2.43 க்கு இடையில் தினேஷ் ஷாப்டரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்ததாகவும் அது ஷாப்டரின் மொழிப் பிரயோகத்தை ஒத்திருக்கவில்லை எனவும் வாக்கு மூலமளித்துள்ளார். இதனால் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டதாக எழும் சந்தேகம் வலுத்துள்ளது. எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில், ஷாப்டரின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்களை சி.ஐ.டி.யினரால் அவிழ்க்க முடியவில்லை. அதன்படி இந்த சம்பவத்தை படுகொலையாக கருதி சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்த்துவ குறிப்பிட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மிக ஆழமான விசாரணைகள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவருவதாகவும் உறுதி செய்யப்படாத மூலங்கள் ஊடாக வெளியிடப்படும் செய்திகள் விசாரணைகளை பாதிப்பதாக அமைவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அறிக்கையொன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார். விசாரணையில் முக்கிய திருப்பங்களை பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் எனவும் உறுதிசெய்யப்படாத தகவல்களை வெளியிட்டு விசாரணைகளுக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும் அவர் குறித்த அறிக்கை ஊடாக ஊடகங்களிடம் விடயங்களை முன் வைத்துள்ளார். https://www.virakesari.lk/article/144377
  13. தினேஷ் ஷாப்டரின் காரிலிருந்து கண்டுபிக்கப்பட்ட 11 கைவிரல் ரேகைகளின் பதிவுகள் ! விசாரணையின் நிலை என்ன ? By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 08:50 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், அவர் சடலமாக கிடந்த காரிலிருந்து கண்டுபிக்கப்பட்ட 11 கைவிரல் ரேகைகள் பதிவு செய்துள்ளதுடன், அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஷாப்டர் குற்றுயிராய் மீட்கப்பட்ட அவரது டப்ளியூ. பி. - கே.யூ. 8732 என்ற காரை பூரணமாக பரிசோதித்துள்ள கைவிரல் ரேகை நிபுணர்கள் 11 அல்லது அதனை அண்மித்த எண்ணிக்கையிலான கை விரல் ரேகைகளின் பதிவுகளை கண்டறிந்துள்ளனர். இது குறித்த பகுப்பாய்வு அறிக்கையினை, குற்றப் பதிவுப் பிரிவூடாக கைவிரல் ரேகை நிபுணர்கள் விசாரணையாளர்களுக்கு கையளித்துள்ளனர். அதில் ஷாப்டரை வைத்தியசாலையில் அனுமதித்த பொரளை பொது மயானத்தின் ஊழியரினதும், அவரது உதவியாளரின் கைரேகைகள் காணப்படுவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. இந் நிலையில் குறித்த அறிக்கைக்கு மேலதிகமாக, தொலைபேசி அழைப்பு பட்டியல் மற்றும் கோபுரத் தகவல்களை மையப்படுத்திய பகுப்பாய்வுகள், சி.சி.ரி.வி. பகுப்பாய்வுகள், வங்கிக் கணக்கு பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்வதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டனர். குறிப்பாக சி.சி.ரி.வி. பகுப்பாய்வுகளின் போது, பெருப்பிக்கப்பட்ட சமீப புகைப்படங்கள் ஊடாக காருக்குள் சந்தேகத்துக்கிடமான சில விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உறுதியாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ள விசாரணையாளர்கள் அறிவியல் தடயவியல் பிரிவின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர். அதன்படி உரிய தரப்பினரின், உரிய தொழில் நுட்பத்தை இதற்காக பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யினர் நடவடிக்கை டுத்துள்ளனர். சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த சிறப்பு விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இதுவரை சந்தேக நபர் எவரும் உறுதியான சாட்சியங்களின் பிரகாரம் அடையாளம் காணப்படவில்லை. அதன்படி இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன. கடந்த சனிக்கிழமை 24 ஆம் திகதி, சி.ஐ.டி.யினரின் கோரிக்கை பிரகாரம் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, இலக்கம் 39, பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று பகுப்பாய்வு செய்திருந்தது. இதன்போது, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருந்த வயரினை ஒத்த, அவ்வயரின் மற்றைய பகுதியாக இருக்கலாம் என சந்தேக்க முடியுமான அன்டனா வயர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஷாப்டரின் தாயாரின் வீட்டின் தொலைக்காட்சி அன்டனா வயரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனைவிட கைகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒருவகை பிளாஸ்டிக் பட்டிகளை ஒத்த 8 பட்டிகள் ஷாப்டரின் அறையின் இலாச்சி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனைவிட, ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும், அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளமையும் அவற்றினால் எதிர்பார்த்தபடி இலாபமீட்ட முடியாமல் நாளுக்கு நாள் அவரது வியாபாரம் நஷ்டமடைந்து வருவதும் நெருங்கிய சிலரின் வாக்கு மூலங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. மேலும், ஷாப்டர் வசித்த கறுவாத்தோட்டம், பிளவர் வீதியில் உள்ள வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தமை தொடர்பிலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. இவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் குடும்பத்தாரின் வாக்கு மூலங்கள் பலவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் மரணம் தற்கொலையா என்ற கேள்வி ஊடகங்கள் வாயிலாக எழுப்பட்டுள்ளன. எனினும் இது தொடர்பில் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருக்கும் நிலையில், கொலையா, தற்கொலையா என முடிவுக்கு இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை எனவும் அவ்வாறு தீர்மானிக்க போதுமான தடயங்கள் இல்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இந் நிலையில், ஷாப்டரின் மர்ம மரணத்தை தற்கொலையாக சித்திரிக்க ஒருவர் அல்லது ஒரு குழு முயறுள்ளதா? தற்போது எவரேனும் அவ்வாறு முயற்சிக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது. https://www.virakesari.lk/article/144264
  14. புதுக்கோட்டையில் தீண்டாமை புகார்: பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் அழைத்து சென்றார் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனூர் போலீசில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை26 டிசம்பர் 2022 தெலங்கானாவில் மொட்டை மாடியில் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு7 மணி நேரங்களுக்கு முன்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார விவாதம்: பாஜ கூட்டணிக்கு உள்ளே எதிர்ப்பா?7 மணி நேரங்களுக்கு முன்னர் யார் மீது சந்தேகம்? இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார். இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார். குறிப்பிட்ட நீர்த்தேக்க தொட்டியை பட்டியலின மக்கள் மட்டும்மில்லாமல் ஊரில் உள்ள பல தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இன்று, நேரில் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு தங்களை அனுமதிக்க வில்லை என்றும், டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும், குற்றம்சாட்டினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக, பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார். மேலும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டதோடு அப்பகுதியில் உள்ள அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யவும், போலீசாருக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டனர். https://www.bbc.com/tamil/articles/crg9nlr3r5ro
  15. டொக்ரரின் உழைப்பில் மண்ணைப் போட்ட அண்ணாச்சி.
  16. ஈரான் ஆர்ப்பாட்டத்திற்கு 100 நாட்கள் By RAJEEBAN 26 DEC, 2022 | 03:43 PM பிபிசி ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பித்து 100 நாட்களாகிவிட்டதுஇ 1979 ம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சியின் பின்னர் அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ள ஆர்ப்பாட்டம் இது. ஆனால் மக்கள் இதற்காக பெரும் விலையை செலுத்தநேர்ந்துள்ளது. 69 சிறுவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது - மேலும் 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் மரண தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சர்வதேச மன்னிப்புச்சபை இவற்றை போலியான விசாரணைகள் என்கின்றது. ஈரானில் கடந்த காலங்களில் தேசிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் - 2017 முதல் 2018 வரை- பின்னர்நவம்பர் 2019 இந்த ஆர்ப்பாட்டம் தனித்துவமானது.சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்இ பெண்கள் வாழ்க்கை சுதந்திரம் என்ற தலைப்பில் பெண்கள் இதற்கு தலைமை தாங்குகின்றனர். ஈரானின் சில பிரபலங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளனர் இதன் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்இ அல்லது வெளிநாடுகளில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஈரானின் நன்கறியப்பட்ட நடிகை இளம் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் கொலையை கண்டித்ததை தொடர்ந்து அவரை கைதுசெய்த அதிகாரிகள் ஈரானின் மிகவும் பயங்கரமான எவின் சிறையில் அடைத்துள்ளனர். அவர் ஈரானில் கட்டாயமாக அணியவேண்டிய தலையை மூடியணியும் ஆடையின்றி ஆர்ப்பாட்ட்க்காரகளின் சுலோகங்களுடன் தான் காணப்படும் படத்தை வெளியிட்டிருந்தார். நான் டாரானேயுடன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன்இதற்போது தனது சக மக்களிற்கு ஆதரவளித்த உரிய செயலிற்காக அவர் சிறையில் உள்ளார்இ- ஈரானில் வழங்கப்படும் நீதியற்ற தண்டனைகளிற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என ஒஸ்கார் வென்ற த சேல்ஸ்மன் படத்தை இயக்கிய அஸ்கார் பர்காடி இன்ஸடகிராமில் பதிவிட்டுள்ளார். ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளிப்பது குற்றம் என்றால் இந்த நாட்டின் மில்லியன் கணக்கான மக்களும் குற்றவாளிகள் என அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் அலி கரிமி - துபாயில் தற்போது தங்கியுள்ள அவர் ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளித்துள்ளார். தன்னை கொலை செய்யப்போவதாக ஈரானிய புலனாய்வாளர்கள் எச்சரித்தனர் என தெரிவித்துள்ள அவர் இதனை தொடர்ந்து தற்போது தான் அமெரிக்கா சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது ஈரான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவராக மாறியுள்ளார்.இன்ஸ்;டகிராமில் அவரை 14 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ஈரானின் மற்றுமொரு கால்பந்தாட்ட வீரரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த பின்னர் ஈரானின் நீதித்துறை தனது நகை கடையையும் உணவகத்தையும் மூடி விட்டது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/144165
  17. குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 43 நிமிடங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத விஷமிகள் மலம் கலந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போராடி கிடைத்த நீர்த்தேக்க தொட்டி மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும் என்கின்றனர் அதிகாரிகள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் தொடரும் சந்தேகம் - உடல்கூராய்வில் நடந்ததாக பிணவறை ஊழியர் வெளியிட்ட தகவல்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ராணுவத்தில் மகன் - புரட்சிக் குழுவில் தந்தை; மியான்மரில் ஒரு பாசப் போராட்டம்3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்4 மணி நேரங்களுக்கு முன்னர் சாதி பிரச்னை காரணமா? இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார். "நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது திட்டமிட்டு நடந்ததாக தெரிகிறது. காலையிலிருந்து போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரைக்கும் யார் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது என தகவல் எதுவும் தெரியவில்லை. போலீசாருடன் இணைந்து ஊர் மக்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். நிச்சயம் போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.. மலம் கலந்தவர்கள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த நீர்த்தேக்க தொட்டியில் பட்டியலின மக்கள் மட்டும்மில்லாமல் ஊரில் உள்ள பல தரப்பு மக்களும் தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என உறுதியாக கூற முடியாது காரணம் தற்போது இருக்கக்கூடிய காலநிலை காரணமாக குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம்," என்றார் பத்மா. முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம் இதுகுறித்து எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் பேசினோம். "நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து உண்மை தன்மை குறித்து ஆராய்வதற்காக நேரில் சென்று பார்த்தபோது அந்த நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி மக்களுக்கு மாற்று குடிநீர் வழங்கப்பட்டது. நீர்த்தேக்க தொட்டியில் இருந்த மலம் ஒரே நாளில் போடப்பட்டதாக தெரியவில்லை காரணம் மலம் அதிக அளவு இருப்பதால் பையில் எடுத்து வந்து போட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது. கிராம மக்களிடம் விசாரிக்கும் போது அந்த கிராமத்தில் ஜாதி பிரச்சனை அல்லது குறிப்பிட்டு யாரையும் சந்தேகக்க படும் அளவு இல்லை என்கின்றனர். இருப்பினும் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழித்தவர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்ய திருக்கோரணம் ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது," என்கிறார். நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் நாளை விஷம் கலக்க மாட்டார்களா என்ற அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் எம்எல்ஏ சின்னத்துரை. "கிராம பொதுமக்கள் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கேமரா பொருத்த முடியாது என்பதால் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை விசாரணையில் குற்றம் செய்தவர்கள் யார் என்பது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் தண்டனை பெற்றுத் தரப்படும். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து இதுபோன்ற இழிவான சம்பவம் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்கிறார் எம்.சின்னதுரை. https://www.bbc.com/tamil/articles/c51pg3zny7zo
  18. தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் 3 ஆவது முறையாகவும் விசாரணை ! தற்போதைய நிலை என்ன ? By DIGITAL DESK 2 25 DEC, 2022 | 06:12 PM (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு முக்கிய சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இந் நிலையில் தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம் விசாரணையாளர்கள் 3ஆவது தடவையாகவும் அவரது வீட்டில் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சனிக்கிழமை (டிச. 24) ஆரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, இலக்கம் 39 , பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வரும்நிலையில், 16 வங்கிக் கணக்குகள் தொடர்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள் சில தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. இந்த 16 வங்கிக் கணக்குகள் இருவருக்கு சொந்தமானவை எனக் கூறும் விசாரணையாளர்கள், கொடுக்கல் வாங்கல், வர்த்தக நடவடிக்கைகளின் பிரச்சினைகள், கொலைக்கு காரணமாக இருப்பின் அது குறித்த தடயங்கள் கிடைக்கலாம் என்ற ரீதியில் இந்த வழங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்து வருகின்றனர். 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைளுக்கு சொந்தக் காரராவார். பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார். இந் நிலையில், ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார் இந்த விவகாரத்தில் 17 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதுடன், சி.ஐ.டி.யினர் 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். இதனைவிட தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், கொலை நடந்த 15ஆம் திகதி காலை முதல் திஷேஷ் ஷாப்டரின் நடவடிக்கையில் வித்தியாசம் இருந்ததாகவும், எனினும் அவர் அது குறித்த விடயங்களை தன்னுடன் பகிரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, ஷாப்டரின் கொலையை, பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் பிரயன் தோமஸ் மீது சுமத்த கடும் பிரயத்தனம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் சி.ஐ.டி. அதிகாரிகள் அவதானித்துள்ள நிலையில், சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய உறுதியான சான்றுகளை வெளிப்படுத்திக்கொள்ள விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொலை நடந்த தினம், ஷாப்டர் இருக்கும் இடத்தை, தொலைபேசியின் சிறப்பு செயலி ஊடாக அறிந்ததாக மனைவி குறிப்பிட்டுள்ள நிலையில், அடிக்கடி அவ்வாறு குறித்த செயலியை பயன்படுத்தி இருக்குமிடம் அடையாளம் காணப்பட்டதாக மேலோட்டமாக தெரியவில்லை என பொலிஸார் கூறுகின்றனர். இந்நிலையில், அவ்வாறு இதற்கு முன்னரும் நிழ்ந்துள்ளதா என்பதை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளவும் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்ளவும் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு தொடர்ச்சியாக முயன்றுவரும் நிலையில், அத்தரவுகளுடன் ஏற்கனவே கையேற்கப்பட்டுள்ள 3 பேரின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை ஒப்பிடு செய்து பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் குற்றவாளியைக் கைது செய்வதற்கான பூரண விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. https://www.virakesari.lk/article/144093
  19. தினேஷ் ஷாப்டர் படுகொலை : தற்போது வரையான விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது என்ன ? By VISHNU 24 DEC, 2022 | 07:50 PM ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு முக்கிய சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், வங்கிக் கணக்குகள் சில தொடர்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள் சில தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தப்ப்ட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொது மயான வளாகத்திற்குள் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார். இந் நிலையில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொரலை பொலிசார் இந்த விவகாரத்தில் 17 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதுடன் சி.ஐ.டி.யினர் 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவுச் செய்துள்ளனர். தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், கொலை நடந்த 15 ஆம் திகதி காலை முதல் திஷேஷ் ஷாப்டரின் நடவடிக்கையில் வித்தியாசம் இருந்ததாகவும், எனினும் அவர் அது குறித்த விடயங்களை தன்னுடன் பகிரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு தொடர்ச்சியாக முயன்றுவரும் நிலையில், அத்தரவுகளுடன் ஏனைய 3 பேரின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை ஒப்பீடு செய்து பகுப்பாய்வு செய்தால், மேலும் பல சான்றுகள் வெளிப்படும் என விசாரணையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் பிரகாரம் குற்றவாளியைக் கைதுசெய்வதற்கான பூரண விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. https://www.virakesari.lk/article/144044
  20. தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரம் : சந்தேகத்துக்கிடமான ஒருவரை பின் தொடரும் சி.ஐ.டி. 23 DEC, 2022 | 05:17 PM ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள நபர் ஒருவரை சி.ஐ.டி. சிறப்புக் குழுவொன்று 24 மணி நேரம் கண்காணித்து வருகிறது. குறித்த நபர் தொடர்பில் இதுவரையில் உறுதியான சாட்சியம் ஒன்று விசாரணையாளர்களுக்கு கிடைக்காத நிலையிலேயே, அவரைக் கைதுசெய்யாது பல கோணங்களில் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட முன்னர், கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழுவொன்று பூரணமாக பரிசீலித்து வருவதாகவும் அவரது தொலைபேசி அழைப்புக்கள் உள்ளிட்டவற்றையும் அக்குழு ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகின்றது. குறித்த நபரை இதுவரை விசாரணை செய்யாத விசாரணையாளர்கள், விசாரணைகளை தவறாக வழி நடாத்த குறித்த நபர் முயன்றுள்ளதாக குறிப்பிட்டனர். இந் நிலையில் உறுதியான சாட்சியத்தை வெளிப்படுத்த தொலைபேசி பகுப்பாய்வு நடவடிக்கைகளை மிக ஆழமாக முன்னெடுக்கும் சி.ஐ.டி. சிறப்புக் குழு, தொடர்ச்சியாக 24 மணி நேரமும் அந் நபரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக அறிய முடிகிறது. அவ்வாறு உறுதியான தடயம் கிடைக்கும் பட்சத்தில் அந் நபரை கைதுசெய்ய தயங்கப் போவதில்லை எனக்கூறும் விசாரணையாளர்கள், சந்தேகத்துக்கு இடமான பல கோணங்களில் விசாரணை நடப்பதாகவும் சுட்டிக்காட்டினர். இதனிடையே, இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவின் தகவல்கள் படி, தொலைபேசி இலக்க பகுப்பாய்வுகள், சி.சி.ரி. பகுப்பாய்வுகள், வங்கிக் கணக்கு பரிசீலனைகள், ஆவண பகுப்பாய்வுகள் ஆகியவற்றுக்கு, பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் தனித்தனி குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு 24 மணி நேரமும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. ' இது மிக ஆழமான விசாரணை. எமக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். நாம் மனிதப் படுகொலை தொடர்பில் குற்றம் சுமத்த முடியுமான வகையில் சாட்சிகளை வெளிப்படுத்திக்கொண்டே சந்தேக நபரைக் கைது செய்ய முடியும்.' என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ வீரகேசரியிடம் தெரிவித்தார். 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொது மயான வளாகத்தில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143969
  21. தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் நெருக்கமான ஒருவருக்கு தொடர்பு ? -அதிகாரிகள் சந்தேகம் : விசாரணையில் புதிய திருப்பம் 20 DEC, 2022 | 07:01 PM (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலையுடன் அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் தொடர்புபட்டிருக்க வேண்டும் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதுஅவரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்கள், சி.சி.ரி.வி. உள்ளிட்ட அறிவியல் தடயங்களை வைத்து விசாரணையாளர்கள் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தும் நிலையில், குற்றவாளிகளைக் கைதுசெய்ய அறிவியல் தடயங்களை தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இந் நிலையில், வர்த்தகர் ஷாப்டரின் பிளவர் வீதி வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பகுப்பாய்வு செய்யும் போது மற்றொரு முக்கிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிளவர் வீதியிலிருந்து காரை செலுத்தி வந்துள்ள தினேஷ் ஷாப்டர், இடையில் ஒரே ஒரு இடத்தில் காரிலிருந்து இறங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. பிரபல உணவகம் ஒன்றில் அவர் இவ்வாறு இறங்கியுள்ளமையும் அங்கிருந்து நேராக பொரளை மயானத்துக்கு சென்றுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் அப்போது உணவகத்தில் எவரையேனும் சந்தித்தாரா அல்லது அங்கிருந்து அவருடன் எவரேனும் காரில் ஏறிச் சென்றனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனைவிட, பிளவர் வீதி முதல் பொரளை கனத்தை வரை ஷாப்டரின் வாகனம் பயணித்த போது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து பயணித்த வாகனங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் பொரளை பொலிஸார் விடயங்களை முன் வைத்து 4 தொலைபேசி இலக்கங்கள் குறித்து விரிவான தொலைபேசி விபரப் பட்டியலை பெற்றுக்கொள்ள நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143682
  22. பெண்ணின் கருப்பைக்கு மாற்றாக செயற்கை கருப்பை கருவி; விஞ்ஞானிகள் சொல்வது என்ன? | Artificial Womb பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன... அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில், மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
  23. சாப்டரின் கொலையாளி பிரையன் தோமசிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி - வெளியானது அதிர்ச்சி தகவல் By RAJEEBAN 19 DEC, 2022 | 11:22 AM வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையாளி என கருதப்படும் நபர் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசிற்கு சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பொரளை கனத்த மயான பகுதியிலிருந்து சாப்டர் கொல்லப்பட்ட பின்னர் அனுப்பப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர் என டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சாப்டரை கொலை செய்தவர் இந்த குறுஞ்செய்தியை சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசிற்கு அனுப்பியுள்ளார் என கருதப்படுவதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை விசாரணைகளின் போது சம்பவம் நடந்த அன்று சாப்டரின் கார் நேரடியாக அவரின் வீட்டிலிருந்து கனத்தமயானத்திற்கு வந்தமை தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பில் பல ஆச்சரியமளிக்கும் விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்துள்ளவர்கள் பல ஆச்சரியமளிக்கும் விடயங்களை வெளியிட்டுள்ளனர். எங்களிற்கு கிடைத்துள்ள பல தகவல்களை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/143501

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.