Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் - வாதாட 15 நிமிடம்தான் கொடுக்கப்படுகிறது பட மூலாதாரம்,REUTERS 19 ஜனவரி 2023 ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான HRANA - வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொகமத் மெஹ்தி கராமி என்னும் 22 வயது கராத்தே வீரர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளார். பிபிசியின் பாரசீக மொழி சேவையிடம் பேசிய சிலர், மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக தன் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சரியாக 65ஆவது நாளில் மொகமத் மெஹ்தி கராமி தூக்கிலிடப்பட்டார். தங்களது சுதந்திரத்திற்காகவும், ஈரானின் மதகுரு ஆட்சியிலிருந்து விடுபடுவதற்காகவும் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இரானின் அதிகார மையங்கள் எப்படி செயல்படுகிறது என்பதற்கு மொகமத் மெஹ்தி கராமின் கதை ஓர் உதாரணம். இரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை - வெடிக்கும் மக்கள் எழுச்சி17 நவம்பர் 2022 'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை13 டிசம்பர் 2022 2022க்கு பிரியாவிடை: உலகை உலுக்கிய மனதில் நின்ற படங்கள்26 டிசம்பர் 2022 அதேப்போல் சமீபத்தில் பிரிட்டிஷ்- ஈரானிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்ற அலிரேசா அக்பரி என்பவர் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. பிரிட்டனின் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்ட இவர், எந்தவொரு வகையிலும் ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இவரிடம் வலுகட்டாயமாக வாக்குமூலம் வாங்கப்பட்டு, தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது இந்த நிலைமைதான் ஈரான் சிறையிலிருக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வருகிறது. நான் மரணிக்கப்போவது அம்மாவுக்கு தெரிய வேண்டாம்! இரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக இரான் காவல்த்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டார். அங்கு நடந்த விசாரணையின்போது தலையில் பலமாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்துதான் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு எதிராக இரானில் மீண்டும் போராட்டம் எழுந்துள்ளது. இதனையடுத்து ஈரானின் துணைராணுவத்தைச் சேர்ந்த பாசிஜ் என்பவர் கடந்த நவம்பர்3-ஆம் தேதி கராஜ் பகுதியில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டு மொகமத் மெஹ்தி என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தெஹ்ரான் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள கராஜ் நீதிமன்றத்தில் ஒரே நாளில் விசாரிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, மொஹமத் மெஹ்தி கராமி இரானில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக சொந்த வழக்கறிஞர்களை பெறுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதுப்போன்ற வழக்குகளில் அந்த முறை சுதந்திரமாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கனவே அதிகாரிகள் தயார் செய்த பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதேபோல் பத்திரிகையாளர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே உண்மையிலேயே நீதிமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட காட்சிகளின் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடியும். அப்படி வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் தோன்றும் மொஹமத் மெஹ்தி, `தான்தான் அந்த துணைராணுவ அதிகாரியை பாறையில் அடித்து கொன்றதாக ஒப்புகொள்கிறார்`. இந்த வழக்கை மொஹமத் மெஹ்தி தரப்பில் வாதாடுவதற்காக நியமிக்கபட்ட வழக்கறிஞர் இதற்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக மொஹமத் மெஹ்தியை மன்னிக்குமாறு நீதிபதியிடம் கேட்கிறார். அதனை தொடர்ந்து பேசும் மொஹமத் மெஹ்தி, `தான் முட்டாளாக்கப்பட்டதாக கூறிவிட்டு அமர்கிறார்`.அதன்பின்னர், குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டு, அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. பொதுவாக தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக வெளியே பேசுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷால்லா கராமி, ஈரானின் எடிமட் நாளிதழிடம் பேட்டியளித்துள்ளார். அதில், `அப்பா எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாமென அப்பாவித்தனமாக மொஹமத் மெஹ்தி அழுதுக்கொண்டே கேட்டுக்கொண்டதாக` அவர் கூறியுள்ளார். மொஹமத் மெஹ்தி அனுபவத்த சித்திரவதைகள்! மொஹமத் மெஹ்தியின் இறப்புக்கு பிறகு ‘1500 இமேஜஸ் (images) என்ற பெயர்கொண்ட சமூகவலைதள கணக்கு ஒன்று மொஹமத் மெஹ்தி எவ்வளவு கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது குறித்த பல தகவல்களை வெளியிட்டது. அதில், ` தான் சுயநினைவை இழக்கும் அளவுக்கு தாக்கப்பட்டதாகவும், தான் இறந்துவிட்டதாக கருதிய சிறைக்காவலர்கள் தன்னை ஏதோவொரு இடத்தில் வீசிவிட்டு சென்றதாகவும், ஆனால் தான் அப்போது உயிருடன் பிழைத்திருந்ததாகவும்` தன் குடும்பத்தினர் மொஹமத் மெஹ்தி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய அந்தரங்க பகுதியை தொடும் சிறைக்காவலர்கள், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தததாகவும் கூறியுள்ளார். எடிமெட் நாளிதழிடம் பேசிய மொஹமத் மெஹ்தியின் தந்தை, `இந்த வழக்கில் தன் மகனுக்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞரை தொடர்புக்கொள்ள தான் பலமுறை முயற்சி செய்ததாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு ஒருதடவை கூட கிடைக்கவில்லையெனவும்` தெரிவித்துள்ளார். பின்னர் இரானில் மிகவும் திறன்வாய்ந்த மனித உரிமை வழக்கறிஞராக அறியப்படும் மொஹமத் ஹோசேன் அகாசியை தனது மகனுக்காக வாதாடுமாறு அழைத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மொஹமத் தரப்பில் வாதாடுவதற்காக பலமுறை மனு அளித்திருக்கிறார் ஹோசேன் அகாசி. ஆனால் அவையனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் ஈரான் மக்கள் பட மூலாதாரம்,REUTERS இந்த நிலையில் காரஜ் பகுதியில் மொஹமத் ஹொசைனி என்னும் மற்றொரு இளைஞர் இரானின் போலியான சட்ட நடவடிக்கைகளால் தூக்கிலிடப்பட்டார். இவருக்கு பெற்றோர்கள் இல்லை. அதனால் இவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்காக நியாயம் கேட்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் என யாரிமில்லாத சூழலில், ஈரானைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் சமூக ஊடகங்களில் 'We are all Mohammad's family' என்று பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த சமயத்தில் மொஹமத் ஹொசைனி bipolar disorder என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று பிபிசியின் பாரசீக சேவை நிறுவியிருந்தது. இத்தகைய சூழலில், தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு தனக்கென ஒரு வழக்கறிஞர் வைத்துகொள்வதற்கு மொஹமத் ஹொசைனிக்கு அனுமதி கிடைத்திருந்தது. அவரின் வழக்கறிஞரான அலி ஷரிப்சாதே அர்டகானி, மொஹமத் ஹொசைனியை சிறையில் சென்று சந்தித்தது குறித்து, பின்னாளிள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், `நான் சிறைக்கு சென்றபோதெல்லாம் அவர் அழுதுக்கொண்டே இருந்தார். தான் அனுபவித்த சித்ரவதைகள் குறித்தும், கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு தான் துன்புறுத்தப்பட்டது குறித்தும், காவலர்களால் தலையில் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்தது குறித்தும் அவர் என்னிடம் பேசினார்` என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மொஹமத் ஹொசைனி எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், சித்ரவதைகளின் மூலம் மட்டுமே அவரிடம் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன எனவும் அலி ஷரிப்சாதே அர்டகானி கூறுகிறார். இதுகுறித்த ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்வதற்கு கடந்த ஜனவரி 7ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அந்த தேதியில் ஆவணங்களை சமர்ப்பிக்க அலி ஷரிப்சாதே அர்டகானி நீதிமன்றம் சென்றுக்கொண்டிருந்தபோது, மொஹமத் ஹொசைனி ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுவிட்டார் என்ற செய்தியை அறிந்து அதிர்ந்து போகிறார். அதன் பின்னர் அலி ஷரிப்சாதே அர்டகானியும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளியில் வந்திருக்கிறார். இரானில் தொடரும் துயரக்காட்சிகள் பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, மாஷல்லா கராமி, மொஹமத் மெஹ்தியின் தந்தை குற்றம் சாட்டப்படுபவர்கள் எந்தவொரு தவறும் செய்யாத சமயத்தில், வலுகட்டாயமாக அவர்கள் குற்றத்தை ஒப்புகொள்வதற்கு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு எதிராக இரானின் மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பிபிசி பாரசீகத்திடம் பேசிய ஒருவர், `பாதிக்கப்படுபவர்களுக்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக , அவர்களை குற்றத்தை ஏற்றுகொள்வதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்` என்றார். இதுத்தவிர ஈரானில் மேலும் 109 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக இரானின் மனித உரிமை அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன. அதில் 60 வயது நிறைவடைந்தவர்களை அடையாளம் காண முடிகிறது எனவும், தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் சராசரியாக 27 வயதை ஒத்தவர்கள் எனவும், அதில் 3 பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் எனவும் அமைப்பு சாரா நிறுவனங்கள் கூறுகின்றன. `மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷல்லா கராமி தனது மகனின் கல்லறையில் மண்டியிட்டு அழுகிறார். கருப்பு சட்டை அணிந்த தனது மகனின் புகைப்படத்தை தனது கைகளில் ஏந்திக்கொண்டு மற்றொரு கையால் அவர் தனது கழுத்தை இறுக்கி பிடித்துக்கொள்கிறார்`. ஈரான் மக்களின் போராட்டங்களின் மற்றொரு துயரமான காட்சியாக இது இப்போது சமூக ஊடகங்களில் பரவிக்கிடக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c72zv37g33wo
  2. புதுக்கோட்டை தலித் பகுதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 27 டிசம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பட்டியலின மக்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஜனவரி 14ம் தேதி உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திரபாபு. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் அடையாளம் காணவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு, இறையூரில் நிலவிய பிற தீண்டாமை முறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்தார். இரட்டைக் குவளை முறை நிலவியதாக கண்டறிந்த அவர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். உள்ளூர் கோயிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கண்டறிந்த அவர், உடனடியாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். பிறகு அமைதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பட்டியல் சாதியினருடன் பிற சாதியினரும் இணைந்து டிசம்பர் 27 அன்று கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்து அறிவிக்காமல் கால தாமதம் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன், "குற்றவாளிகளைத் தேடி கைது செய்வதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையின் தனிப்படை, வன்கொடுமைக்காளான தலித்துகளையே குற்றவாளிகளாக்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது" என்று கூறியும், சிபிசிஐடி விசாரணை கோரியும் முதல்வர், அமைச்சர்கள் அந்த ஊருக்கு நேரில் செல்லவேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ஆதவன் தீட்சன்யா, சுகிர்தராணி உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒப்பமிட்டு முதல்வருக்கு ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்தனர். அத்துடன் அந்த விண்ணப்பத்தில் மேலும் பலரிடமும் கையெழுத்துத் திரட்டும் பணிகளும் நடந்துவந்தன. இந்நிலையில்தான், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும் உத்தரவு வெளியாகியுள்ளது. குரங்கில் மனித விந்தணுவைச் செலுத்தி நடந்த சோதனையில் என்ன கிடைத்தது தெரியுமா?28 டிசம்பர் 2022 வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து, இந்திய தேர்வில் தோல்வியடைந்த 73 பேர் மீது சிபிஐ வழக்கு - முழு விவரம்29 டிசம்பர் 2022 பெற்றோருக்கு நடந்த மதுரை விமான நிலைய சம்பவம் - சித்தார்த் முழு விளக்கம்29 டிசம்பர் 2022 இறையூரில் நடந்தது என்ன? புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்று இறையூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் சாதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஊரில் உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை நிலவுவதாகவும், இப்பகுதி அய்யனார் கோவிலில் பல தலைமுறைகளாக பட்டியல் சாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை நிலவுவது உறுதியானது. தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலைத் திறந்து பட்டியலின மக்களை அங்கு வழிபட அழைத்துச் சென்றார் மாவட்ட ஆட்சியர். இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்புத் தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு, இரட்டைக் குவளை முறை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், பட்டியல் சாதியினர் உள்ளிட்ட 3 சாதியினர் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. மூன்று சாதிகளைச் சேர்ந்த 26 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், இறையூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பட்டியல் சமூக மக்களையும் பாகுபாடு இன்றி வழிபாடு செய்ய அனுமதிப்பது, குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, தேநீர் கடையில் இரட்டை குவளை முறையைக் களைந்து அனைத்து சமூக மக்களும் சமமாக வாழ்வது என்ற மூன்று முடிவுகள் எட்டப்பட்டன. ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள் முன்னதாக, வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் அழைத்து சென்றார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்தனர் அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனூர் போலீசில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை26 டிசம்பர் 2022 தெலங்கானாவில் மொட்டை மாடியில் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு27 டிசம்பர் 2022 அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார விவாதம்: பாஜ கூட்டணிக்கு உள்ளே எதிர்ப்பா?27 டிசம்பர் 2022 யார் மீது சந்தேகம்? இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார். இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார். குறிப்பிட்ட நீர்த்தேக்க தொட்டியை பட்டியலின மக்கள் மட்டுமில்லாமல் ஊரில் உள்ள பல தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு தங்களை அனுமதிக்க வில்லை என்றும், டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும், குற்றம்சாட்டினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக, பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார். மேலும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டதோடு அப்பகுதியில் உள்ள அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யவும், போலீசாருக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டனர். 3 வழக்குகள் பதிவு - அரசு தகவல் புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அதில், "புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார். "இரட்டைக்குவளை முறை, கோவிலில் அனுமதிக்காதது, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரட்டைக்குவளைமுறை, கோவிலில் அனுமதிக்காதது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர்த் தொட்டியில் மலத்துடன் கழிவு நீர் கலந்தது தொடர்பாக சந்தேக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். https://www.bbc.com/tamil/articles/crg9nlr3r5ro
  3. தினேஷ் ஷாப்டர் விவகாரம் : 14 மரணச் சடங்குகள் குறித்து அவதானம் ! இதுவரையான விசாரணையின் நிலை என்ன ? By DIGITAL DESK 5 13 JAN, 2023 | 03:41 PM (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், நேரடி சாட்சியம் ஒன்றினை வெளிப்படுத்திக் கொள்வதற்காக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த விசாரணைகள் தொடர்கின்றன. 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொது மயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார். இந் நிலையில், குறித்த தினம், பொரளை கனத்தையில் நடந்த அணைத்து மரணச் சடங்குகள் தொடர்பிலும் சி.ஐ.டி.யின் அவதானம் தற்போது திரும்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். அதன்படி குறித்த தினம், பொரளை கனத்தையில் 14 மரணச் சடங்குகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ கூறினார். தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படும் நேரத்தில் அங்கு நடந்த மரணச் சடங்குகளுக்கு வந்த எவரேனும் சந்தேகத்துக்கு இடமான எவரையேனும் பார்த்திருக்கலாம் என்ற ஊகத்திலும், அவ்வாறு கண் கண்ட அல்லது நேரடி சாட்சியம் ஒன்று தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்வது தற்போதைய இந்த விசாரணையின் நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். எவ்வாறாயினும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், எந்த தீர்மானத்துக்கும் இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை என கூறும் பொலிஸ் பேச்சாளர், இதுவரை சுமார் 185 பேரின் வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக கூறினார். https://www.virakesari.lk/article/145731
  4. தினேஸ் ஸ்காப்டர் விவகாரம்- பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பொலிஸ் பேச்சாளர் By RAJEEBAN 12 JAN, 2023 | 03:57 PM பிரபல வர்த்தகர் தினேஸ் ஸ்காப்டர் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொலிஸ் பேச்சாளர் நிராகரித்துள்ளார். தொலைக்காட்சிநிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கையில் பிரபலவர்த்தகரின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்குமாறு மறைகரமொன்று பொலிஸாருக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளவர்களிற்கும் இலஞ்சம் வழங்குகின்றது என தெரிவிக்கப்படுவதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ நிராகரித்துள்ளார். உண்மைiயை மறைப்பதற்கு எவராவது முயன்றால் அவருக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தினேஸ் ஸ்காப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன பொலிஸார் மாத்திரம் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உண்மையை மறைப்பதற்காக பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் நாங்கள் விசாரணைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/145635
  5. தினேஷ் ஷாப்டரின் மரணம் : தொடரும் விசாரணகள் ! சகோதரரிடம் சாட்சியங்கள் பதிவு By DIGITAL DESK 5 10 JAN, 2023 | 07:31 PM ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலையா தற்கொலையா என விசாரணையாளர்கள் எந்த தீர்மானத்துக்கும் இதுவரை வரவில்லை எனவும், கொலையாக கருதிய குற்றவியல் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஷாப்டரின் மரணம் தற்கொலை என சமூக வலைத் தலங்களில் சி.ஐ.டி.யை மேற்கோள் காட்டி ஊடகமொன்று வெளியிட்ட செய்தியை மையப்படுத்தி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விசாரணையாளர்கள் ஒரு போதும் , எங்கும் ஷாப்டரின் மரணத்தை இதுவரை தற்கொலை என அறிக்கை இடவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். அதன்படி இந்த விவகாரத்தில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய இதுவரை 175 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவர் இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படாத நிலையில், நேரடி சாட்சியங்களை தேடிய புலன் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ. ஆய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்காத நிலையில் சுமார் 14 தடயங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணையாளர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். இந் நிலையில், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனிடையே, படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் ( மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று (10) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இடம்பெற்றது. நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில் இரகசியமாக இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ரமேஷ் ஷாப்டரிடம் இன்றையதினம் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/145449
  6. விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடித்தது, அதில் வரும் சுவாரசியமான வீடியோக்கள் மனதை களி்ப்புறத் தான் செய்கின்றது. உங்கள் தலைப்பு போல.
  7. ஒரு கையால் என நினைக்கிறேன் சுவி அண்ணை.
  8. உத்தியோகபூர்வ அறையில் நடந்த தினேஷ் ஷாப்டர் படுகொலை தொடர்பான விசாரணை By T. SARANYA 04 JAN, 2023 | 05:14 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் (மஜிஸ்ட்ரேட் விசாரணை) இன்று (ஜன 04) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆரம்பமானது. நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியில்லாத சூழலில் இரகசியமாக இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டர், தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படும் அவரது நிறுவனமொன்றின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றும் கிரிஸ் பெரேரா ஆகியோரின் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில், குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது, நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று புதன்கிழமை சாட்சியமளிக்க பொரளை கனத்தை ஊழியர்கள் இருவர் , நீதிமன்றுக்கு வந்திருந்த போதும் அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்களது சாட்சியங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி பதிவு செய்யப்படவுள்ளது. இன்றைய தினம் இந்த சாட்சிப் பதிவுகளின் போது, தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தாரின் நலனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர். https://www.virakesari.lk/article/144978
  9. தினேஷ் ஷாப்டர் படுகொலை : இரத்தம், நகத் துண்டுகள் உள்ளிட்ட உடற்கூறுகள், ஸ்தல சாட்சியங்கள் பல டி.என்.ஏ. பரிசோதனைக்கு By DIGITAL DESK 2 03 JAN, 2023 | 05:43 PM (எம்.எப்.எம்.பஸீர்) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், அவரின் இரத்த மாதிரி, நகத் துண்டுகள் உள்ளிட்ட உடற்கூறுகள் மற்றும் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஸ்தல சான்றுப் பொருட்கள் பல தொடர்பில் இரசாயன, டி.என்.ஏ. பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை (டிச. 3) சி.ஐ.டி.யின் பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவு அதிகாரிகள், கொழும்பு நீதிவான் நீதிமன்றின் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடித்த வயர் துண்டு, இரத்தம் தோய்ந்த துணி, தினேஷ் ஷாப்டரின் நகம், இரத்த மாதிரி, ஸ்தல பரிசோதகர்களும் சி.ஐ.டி. அதிகாரிகளும் கண்டுபிடித்த ஸ்தல சான்றுப் பொருட்கள் பலவற்றை அரச இரசாயன பகுப்பய்வாளருக்கு அனுப்பி பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ. அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள இந்த கட்டளை பெற்றுக்கொளப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய குற்றவியல் சட்டத்தின் 124ஆவது அத்தியாயத்துக்கு அமைய இதற்கான கட்டளையை பிறப்பித்துள்ளார். இந் நிலையில், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றது. அதன்படி இதுவரை சுமார் 145 வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் வீரகேசரிக்கு வெளிப்படுத்தின. https://www.virakesari.lk/article/144875
  10. யாழ் கள உறவுகள் எல்லோருக்கும் 2023 புத்தாண்டு வாழ்த்துகள்.
  11. செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால கனவு பலிக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோனாதன் ஆமோஸ் பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்கக்கூடிய ஆதாரங்களை பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. அது சேகரித்த முதல் பாறை மாதிரி மீட்கப்ட்டு, பூமிக்கு கொண்டுவரப்படுவதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காத்துக் கொண்டிருக்கிறது. ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக வேறொரு கிரகத்திலிருந்து பொருட்களை பூமிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற பல்லாண்டுக்கால காத்திருப்பில் இதுவொரு முக்கிய தருணம். பூமியிலுள்ள பாறை, மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அங்கு உயிர்கள் குறித்து இருக்கும் கேள்விக்குத் தீர்வு காண முடியுமென்று கருதப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளதா? – முக்கிய தருணத்தை எட்டிய பெர்சவரன்ஸ் ரோவர்18 மே 2022 செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படம் பிடித்த எமிரேட்ஸ் விண்கலம்15 பிப்ரவரி 2021 செவ்வாய் கிரகத்தின் நிலவு: படம் பிடித்து அனுப்பி மங்கள்யான் - இஸ்ரோ தகவல்5 ஜூலை 2020 ரோபோவின் வயிற்றிலிருந்து விரல் அளவுள்ள மாதிரி குழாய் வெளியேற்றப்பட்டது. அப்படி வெளியேற்றப்பட்ட குழாய், தரையில் விழுந்ததை உறுதி செய்வதற்குப் புகைப்படமும் எடுக்கப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் 2030இல் இந்த மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரத் திட்டமிட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ கிரேட்டரில் த்ரீ ஃபோர்க்ஸ் என்றழைக்கப்படும் இடத்தில் அவை வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மட்டுமே அங்கு இருக்கப் போவதில்லை. உண்மையில், பள்ள விளிம்பிற்கும் அப்பால் ரோபோ ஓட்டும்போது, அது விடாமல் எடுத்துச் செல்லும் பாறைகளும் அங்கு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், பாறைகளைச் சேகரிக்கும்போது ரோவர் உடைந்து போகக்கூடிய அபாயமும் உள்ளது. ரோவரை அத்தகைய அபாயநிலையில் வைக்கக்கூடாது என்பதால் தான், ஒரு பாதுகாப்பிற்காக முன்கூட்டியே மாதிரி சேகரிப்புக் கிடங்கை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் தூண்டப்பட்டனர். த்ரீ ஃபோர்க்ஸ் கிடங்கு, மீட்டெடுப்புப் பணி வரும்போது மாதிரிகள் எதையாவது நாம் கொண்டுவருவதற்கான உத்தரவாதத்தைக் கொடுக்கிறது. அந்தக் கிடங்குக்குச் செல்லப் போகும் முதல் பாறை மாதிரி, “மலாய்” என்றழைக்கப்படும் எரிமலை அல்லது அனற்பாறை. இந்த வகையைச் சேர்ந்த மேலும் மூன்று பாறைகளையும் ரோவர் அங்கு கொண்டு வந்து வைக்கும். அவற்றின் வேதியியியல் பண்புகள், ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெசெரோ பள்ளத்தின் வயதையும் செவ்வாய் கிரகத்தின் பரந்த புவியியல் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்கு உதவும். “டெல்டா நதி அல்லது ஒரு பழங்கால ஏரியின் அடிப்பகுதியைப் போன்ற பல்வேறு படிவு சூழல்களைக் கொண்டுள்ள பல்வேறு வண்டல் பாறைகள் உள்ளன. இந்த சுற்றுச்சூழல்களில் சில, வாழத் தகுதியுடையவையாக இருந்திருக்கலாம். அதோடு, இந்தப் பாறைகளில் சில, பழங்கால நுண்ணுயிர்களின் ஆதாரங்களைப் பாதுகாத்திருக்கக்கூடும்,” என்று பெர்செவரென்ஸ் திட்டத்தின் விஞ்ஞானி மீனாட்சி வாத்வா கூறினார். படிமங்கள் அடங்கிய மூன்று மாதிரி குழாய்கள் அங்கிருக்கும். பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் முதல் மாதிரியை ரோவர் கீழே வைத்தது. இதேபோல் இன்னும் 9 மாதிரிகள் வைக்கப்படும் கூடுதலாக, வாகனத்திலிருந்து வெளியேறும் அசுத்தங்கள் உட்பட ரோவருக்குள் இருந்த நிலைமைகளைப் பதிவு செய்யும் ஒரு சிறப்புக் குழாயுடன் பெர்செவரென்ஸ் ரோவர், மண் மற்றும் வளிமண்டலத்தின் மாதிரிகளை, இறக்கி வைக்கும். ஒருவேளை பெர்செவரன்ஸ் செயலிழந்துவிட்டால், மாதிரிகளை எடுத்து வருவதற்கான பயணம் நேராக த்ரீ ஃபோர்க்ஸ் பகுதிக்கே திசை திருப்பப்படும். அந்தத் திட்டத்தில் இரண்டு டிரோன்களை கொண்ட, குழாய்களைப் பிடிப்பதற்கு ஏதுவாக நகங்கள் பொருத்தப்பட்ட கருவி, அந்த மாதிரிகளை ராக்கெட்டுக்கு கொண்டு செல்லும். பிறகு அந்த ராக்கெட், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும். பெர்செவரன்ஸ் இன்றுவரை பாறைகளைத் துளையிட்டு இரண்டு மாதிரிகளைச் சேகரித்து வருகிறது. இந்த நடைமுறை த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் முடிவடையும். “அந்தக் கிடங்கில் கீழே வைப்பதற்கு ஒரு குழாயுயும் கையோடு எடுத்துச் செல்வதற்கு ஒரு குழாயும் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த இரண்டு ஜோடி மாதிரி உத்தியை நாங்கள் மேற்கொள்கிறோம்,” என்று பெர்சவரன்ஸ் ரோவரின் துணை திட்ட விஞ்ஞானி கேட்டி ஸ்டாக் மோர்கன் விளக்கினார். மேலும், “த்ரீ ஃபோர்க்ஸ் பகுதியில் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட கிடங்கை கட்டமைத்தவுடன், எங்களால் அடுத்த உத்திக்கு நகர முடியும். அதில் ஒரே மாதிரியை மட்டும் சேகரிப்போம். இது ஒருவகையில், எங்கள் அறிவியல் குழுவுக்கு விடுதலையளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அதற்குப் பிறகு, எங்களால் இன்னும் பல பகுதிகளுக்கு நகர்ந்து, இன்னும் பல வகையான பாறைகளின் மாதிரிகளைச் சேகரிக்க முடியும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் விளக்கினார். ஜனவரியில், பெர்சவரன்ஸ் அதன் அடிப்படைப் பணியை ஜெசெரோவில் முடித்திருக்கும். ஆனால், அனைத்து ரோபோ அமைப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில், அறிவியல்ரீதியாக இன்னும் பல வாய்ப்புகள் இருப்பதால், நாசா அதிகாரிகள் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். வாகனமும் அதன் கண்காணிப்புக்கு உதவும் இன்ஜெனியுட்டி என்றழைக்கப்படும் டிரோன் ஆகியவை, பள்ளத்தின் மேற்கில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மேடு மீது விரைவில் ஏறும். டெல்டா என்பது ஒரு நதியால் கொட்டப்படும் வண்டல் மற்றும் மணலில் இருந்து உருவாகும் ஓர் அமைப்பு. அது, பரந்த நீர்நிலைக்குள் நுழைவதைக் கடினமாக்குகிறது. கடந்தகால நுண்ணுயிர்களின் ஆதாரங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கக்கூடிய அம்சம் அதற்கு உள்ளது. பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS வெள்ளச் செயல்பாடு நடந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் எனத் தோன்றும் வகையில், டெல்டாவின் மேல் பகுதியில் அளவில் பெரிதாகச் சிதறிக் கிடக்கும் சில பாறைகளை பெர்சவரன்ஸ் ஆராயும். பிறகு, ரோபோ பள்ளத்தின் விளிம்புக்கு நகரும். அங்கு கார்பனேட் வகை வண்டல் பாறைகள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் குறிப்பிடுகின்றன. பழங்கால நுண்ணுயிர் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு இவை நல்ல இடமாக இருக்கும். பெர்சவரன்ஸ் இன்னும் 20க்கும் மேற்பட்ட மாதிரி குழாய்களை நிரப்புவதற்குக் காத்திருக்கிறது. தரையிறங்கும் தளம், ஹெலிகாப்டர்கள், ஒரு ரோபோ கை, திரும்பி வருவதற்கான ராக்கெட் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு, தோராயமாக இரண்டு ஆண்டு பயண நேரத்தோடு, 2028ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மாதிரி சேகரித்துக் கொண்டு வரும் பணிகள், பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. த்ரீ ஃபோர்க்ஸ் கிடங்கிலிருந்து அல்லது நேரடியாக வேறோர் இடத்திலுள்ள பெர்சவரன்ஸில் இருந்து, அது எடுக்கும் மாதிரி குழாய்கள், 2033இல் மீண்டும் ஒரு ஐரோப்பிய திட்டத்தின் மூலம் பூமிக்குக் கொண்டுவரப்படும். https://www.bbc.com/tamil/articles/cd1z9ez0qv7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.