Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா.
  2. தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. பாலூர், வேங்கி ஆகிய இடங்களின் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்ட நிலையில், தலக்காடு, பட்டனம் ஆகிய இடங்களின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தின் தலக்காடு தலக்காடு, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் காவிரியின் இடது கரையில் அமைந்திருக்கிறது. தற்போது பாலைவனத்தைப் போலக் காட்சியளிக்கும் தலக்காட்டில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி தற்போது மணலில் மூழ்கிவிட்டன. தலக்காடு கங்க வம்ச மன்னர்களின் தலைநகரமாக இருந்த பிரதேசம். 11ஆம் நூற்றாண்டுவாக்கில் மேலைக் கங்கர்கள் சோழர்களிடம் தோற்றுப்போயினர். அப்போதிலிருந்து இந்தப் பகுதி ராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஹொய்சாள மன்னனான விஷ்ணுவர்தன சோழர்களை மைசூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தான். முந்தைய பகுதி:தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? இதற்குப் பிறகு தலக்காடு பகுதியில் ஏழு சிறு நகரங்களும் ஐந்து மடங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. காவிரியின் எதிர்ப்புறத்தில் மலிங்கி என்ற சிறு நகரம் இருந்தது. 14ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி ஹொய்சாளர்களிடம் இருந்தது. பிறகு விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்கள் வசம் வந்தது. மைசூரை ஆண்ட உடையார்கள் 1630ல் இதனை கைப்பற்றினர். இப்படி அந்தப் பகுதி மைசூர் மன்னர்களால் கைப்பற்றப்பட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட சாபம் குறித்தும் ஒரு கதை இப்பகுதியில் பேசப்படுகிறது. தலக்காட்டின் சாபம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக திருமலை ராயன் என்ற மன்னன் ஆண்டுவந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படவே, தலக்காட்டில் இருந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்றார். அவருடைய இரண்டாவது மனைவியான அலமேலம்மாள் ஸ்ரீரங்கப் பட்டனத்தில் இருந்தபடி, நாட்டை நிர்வாகம் செய்துவந்தாள். ஆனால், சீக்கிரத்திலேயே கணவன் இறக்கப்போகிறான் என்பது தெரியவந்தது. இதனால், ஆட்சிப் பொறுப்பை மைசூரை ஆண்ட உடையார்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தலக்காட்டிற்குப் புறப்பட்டார் அலமேலம்மாள். கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின் கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது - வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள் ஆனால், ராணியிடம் இருந்த நகைகளைப் பறிக்க விரும்பிய மைசூர் மன்னன், அதனைப் பறிக்க ஒரு சிறிய படையை தலக்காட்டிற்கு அனுப்புகிறார். இதையடுத்து நகைகளோடு காவிரியாற்றிற்குள் இறங்கும் அலமேலம்மாள், நகைகளை நதிக்குள் தூக்கி எறிகிறார். தானும் அதில் மூழ்கி இறந்துபோகிறார். உயிர் பிரிவதற்கு முன்பாக ஒரு சாபமிடுகிறார். அந்த சாபம் இதுதான்: "தலக்காடு மண்ணோடு மண்ணாகட்டும், மலிங்கி சுழலில் மூழ்கட்டும், மைசூர் அரசர்களுக்கு பிள்ளையில்லாமல் போகட்டும்". இதற்குப் பிறகு இரண்டு விசித்திர சம்பவங்கள் உண்மையிலேயே நடந்தன. ஒன்று, பல நூற்றாண்டுகளாக துடிப்பு மிக்க நகரமாக இருந்த தலக்காட்டில் பல மீட்டர் உயரத்திற்கு மணல் சேர ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, உடையார் வம்ச அரசர்களுக்கு பட்டத்திற்கு வரும் வகையில் குழந்தைகளே பிறக்கவில்லை. சமீபத்தில் இறந்த ஸ்ரீ கந்ததத்த உடையார் வரை வாரிசு இல்லாமலேயே இறந்தார்கள் (ஆனால், இப்போதைய மகாராஜாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது). 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மணல் சேர்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 9-10 அடி உயரத்திற்கு மணல் சேர்ந்து வருவதால், மக்கள் இந்தப் பகுதியைவிட்டு தொடர்ந்து வெளியேற வேண்டியிருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் மணலுக்கடியில் மூழ்கியிருக்கும் நிலையில், கீர்த்தி நாராயணா கோயில் மட்டும் அகழாய்வு செய்து மீட்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆனந்தேஸ்வரா மற்றும் கௌரி சங்கரா கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன. பாதாளேஸ்வரா கோயிலின் சுற்றுச் சுவர்களில் சில கல்வெட்டுகள் தென்பட்டன. இதில் ஒரு கல்வெட்டு கங்கர்கள் காலத்தைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு. மற்ற கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. கௌரிசங்கரா கோயிலில் உள்ள கல்வெட்டு, அந்தக் கோயிலானது சிக்கதேவராய உடையார் காலத்தில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "கங்கர்கள் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை ஆட்சிசெய்தார்கள். கங்கர்கள் கால கல்வெட்டுகள் கிருஷ்ணகிரியில்கூட கிடைக்கின்றன. ஒரு காலத்தில் மாண்டியா பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிதான். தலக்காட்டிற்கும் சோழர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக தொல்லியல் துறை விரும்புகிறது" என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து செயல்படுபவருமான பேராசிரியர் கே. ராஜன். பட்டனம் (முசிறி) பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பட்டனம். இந்தப் பகுதியில் நீண்ட காலமாகவே, பல்வேறு பணிகளுக்காக நிலத்தைத் தொண்டும்போது மேலடுக்கிலேயே பெரிய அளவில் ஓடுகள் போன்றவை கிடைத்துவந்ததையடுத்து இந்தப் பகுதி ஒரு தொல்லியல் தளமாக அடையாளம் காணப்பட்டது. இந்த இடத்தில் வரலாற்று ஆய்வுக்கான கேரளா கவுன்சில் (கேசிஎச்ஆர்) 2007ல் இருந்து 2020வரை பத்து முறை தொல்லியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. பதினொன்றாவது ஆய்வு இந்த மாதத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கி.மு. ஆயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இடத்தில் மக்கள் வசித்ததற்கான தொல்லியல் பொருட்கள் இங்கிருந்து கிடைத்துள்ளது. கி.மு. 3 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி மிகவும் துடிப்பு மிக்க பகுதியாக இருந்திருக்கிறது. பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH பாமா என்ற தனியார் அமைப்பு 2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது. சுமார் பத்து ஓடுகளில் தமிழி எழுத்துகள் கிடைத்தன. ஒரு பானை ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும் ஒரு பானை ஓட்டில் அமண என்ற எழுத்துகளும் கிடைத்திருக்கின்றன. சங்ககால சேர நாட்டு துறைமுகமான முசிறயின் ஒரு பகுதியாகவே பட்டணம் இருக்குமென தமிழக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். "சங்க இலக்கியங்களில் வரும் பேரியாறு என்பது தற்போதைய பெரியாற்றைத்தான் குறிக்கிறது. ஆகவே இந்த இடம் தமிழ்நாட்டோடு தொடர்புடைய இடம்தான். தமிழர்களின் தொடர்புகள் எங்கெங்கு இருந்திருக்குமோ, அந்ததந்த இடங்களிலெல்லாம் அகழாய்வு செய்வது தமிழ்நாடு தொல்லியல் துறையின் நோக்கமாக இருக்கிறது" என்கிறார் கே. ராஜன். வேறு மாநிலங்களில் இருக்கும் தொல்லியல் களங்களில் அகழாய்வை மாநிலத் தொல்லியல் துறை நேரடியாக செய்யாது என்றே தெரிகிறது. அங்குள்ள தொல்லியல் சார்ந்த அமைப்புகள், பல்கலைக்கழக தொல்லியல் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்தே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் மாநிலத் தொல்லியல் துறையால் வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/india-58657621
  3. இது தான் கிளி மூக்குக் குரங்கா?!
  4. அண்ணை இவங்களை நம்பி அதீத உற்சாகம் கொள்ளாதீங்க. எப்பிடியும் தொட்டில் கட்டில் என்று முடிப்பாங்கள்.🤔
  5. எங்களுக்கான அரசு ஒன்று இல்லாமையே பல ஆய்வுகள் ஊக்கப்படுத்தாத நிலைமைக்கு காரணம், மக்கள் விழிப்பாயிருந்து கூட்டாக கோரிக்கைகளை வைக்கும்போது ஓரளவு நடக்கும்.
  6. தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள் - மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆய்வு முடிவில் தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMIL NADU படக்குறிப்பு, சிவகளை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழி. தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆய்வு முடிவுகள் காட்டும் தமிழ்நாடு எப்படி இருந்தது? தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார். இதற்குப் பிறகு, இது தொடர்பான வீடியோ ஒன்றும், சிறு வெளியீடு ஒன்றும் வெளியானது. 2015ஆம் ஆண்டிலிருந்து மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் வெளிப்பட்ட மிகப் பெரிய கட்டடத் தொகுதிகள், தமிழ்நாட்டில் தொல்லியல் துறை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தின. கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகளை நடத்திய இந்தியத் தொல்லியல் துறை, அதற்குப் பிறகு அங்கு ஆய்வுகளை நடத்த விரும்பவில்லை. இதையடுத்து தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை அங்கு ஆய்வுகளை நடத்த ஆரம்பித்தது. அதன்படி 2017ஆம் ஆண்டிலிருந்து அங்கு தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரீகம் இருந்ததை உறுதிசெய்தன. பொதுவாக கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுவாக்கில் இருந்த நகரமயமாக்கம் (Urban Civilisation) தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் பொதுவான கருதுகோளாக இருந்ததுவந்தது. கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வழக்கு: திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பின் வரலாறு ஆப்கானிஸ்தானில் தாலிபனின் இடைக்கால அமைச்சரவை - யாருக்கு என்ன பொறுப்பு? அதேபோல, பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் அங்கிருந்தே தமிழ்நாட்டிற்கு அந்த எழுத்துகள் வந்தன என்றும் கருதப்பட்டது. ஆனால், கீழடியில் நடந்த ஆய்வுகளின் முடிவுகள், நகரமயமாக்கம் குறித்த கருத்துகளை மாற்றின. அந்த காலகட்டத்திலேயே பிராமி எனப்படும் தமிழி பரவலாக எழுதப்பட்டதை, அங்கு கிடைத்த பானை ஓடுகள் உறுதிப்படுத்தின. பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, GOVERNMENT OF TAMIL NADU படக்குறிப்பு, விளிம்புடன் கூடிய மண் கிண்ணம், சிவகளை அகழாய்வு. இங்கு கிடைத்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ரோமெட்ரி முறையில் பகுப்பாய்வு செய்தபோது, அந்த பானை ஓடுகள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்திருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கருப்பு நிறப் பானைகள் கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்களும் தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், கீறல்கள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை தவிர, மணிகள், கற்கள், தாயக்கட்டைகள், கங்கைச் சமவெளிக்கே உரியவை என்று கருதப்பட்ட கறுப்பு நிறப் பானைகள், சீப்புகள் போன்றவை கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள கட்டுமானத்தையும் தொல்பொருட்களையும் வைத்துப் பார்க்கும்போது, கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் இந்தியாவுடனும் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்றும் தெரியவருவதாக மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது. மேலும் இந்த அகழாய்வில் சந்திரன், சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கிடைத்தது. இந்தக் காசை, குப்தர் காலத்தைச் சேர்ந்த ஹர்தேக்கர் வரிசை காசுகளுடன் ஆய்வுசெய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா, இதனை மௌரியர் காலத்துக்கு முற்பட்ட காசு எனக் குறிப்பிட்டிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகவே, கீழடி பகுதிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருப்பதை இந்தக் காசு உறுதி செய்திருப்பதாகக் கருதலாம். அதேபோல, கீழடியிலும் கொற்கையிலும் கிடைத்த கறுப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரியும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியும் கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்ததை உறுதிசெய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் கிடைத்த கரிமப் பொருட்களின் மீது ஏற்கனவே செய்யப்பட்ட கரிமப் பகுப்பாய்வின்படி, அதன் காலம் கி.மு. 585 என தெரியவந்துள்ளதாகவும் தற்போதைய அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மீது செய்யப்பட்ட மேலும் இரண்டு கரிம ஆய்வுகளும் இந்தக் காலக் கணிப்பை உறுதிப்படுத்துவதாகவும் தொல்லியல் துறை கூறுகிறது. ஆதிச்சநல்லூர் வாழ்விட ஆய்வு ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இதுவரை பறம்பு (Burial Ground) பகுதியில் மட்டும் நடைபெற்றுள்ளதால், முதுமக்கள் தாழிகள் பற்றியும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, சடங்குகள், பழக்க வழக்கங்கள் பற்றி மட்டுமே அறியமுடிந்தது. அம்மக்களின் வாழ்விடப் பகுதி, வாழ்வியல் நடைமுறைகள் பற்றி ஏதும் தெரியவில்லை. அதற்கு விடைகாணும் நோக்கத்தில் ஆதிச்சநல்லூரின் வாழ்விடப் பகுதியாகக் கருதப்படும் இடங்களில் இந்த முறை மாநில தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது. இங்கு நடந்த அகழாய்வில் இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க காலம் என இரண்டு காலகட்ட வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்காலத்தைச் சார்ந்த நுண்கற்காலக் கற்கருவிகள் கிடைத்திருப்பதன் மூலம் இரும்புக் காலத்திற்கு முற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரும்புக் காலத்தைப் பொறுத்தவரை, முதுமக்கள் தாழிகளும் அதனோடு கூடிய ஈமப் பொருட்களும் கிடைத்திருப்பதை வைத்து உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழாய்வைப் பொறுத்தவரை, 847 தொல்பொருட்களும் பல்வேறு வகையான பழங்கால மட்பாண்டங்கள் பெரும் எண்ணிக்கையிலும் கிடைத்தன. முதல் முறையாக, தமிழி எழுத்துக்களைக் கொண்ட பானை ஓடுகள் தற்போதைய அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. மேலும், குறியீடுகள் (graffiti) கொண்ட பானை ஓடுகள் 500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. கருப்பு - சிவப்பு மட்பாண்டங்கள் மிகத் தரமான தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட மட்பாண்ட வகைகள் வாழ்விடப்பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும், வெள்ளை நிற புள்ளிகள் இட்ட கருப்பு- சிவப்பு மட்பாண்டங்கள், கிண்ணங்கள் போன்ற பாத்திரங்கள் வாழ்விடப் பகுதிகளில் கிடைத்துள்ளன. பட மூலாதாரம்,DEPT. OF ARCHAEOLOGY, GOTN. படக்குறிப்பு, 9 அடுக்குகளுடன் கூடிய துளையிடப்பட்ட குழாய்கள், கொற்கை. மேலும், செம்பு மற்றும் இரும்பிலான மோதிரங்கள், கண்ணாடி மணிகள், தந்தத்தினால் ஆன மணிகள், அரிய கல் மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், எலும்பு மணிகள், சுடுமண் மணிகள், வளையல்கள் ஆகியவை பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களின் அணிகலன்கள் குறித்த செய்திகளைத் தருகின்றன. கருவிகள் செய்யும் கற்கள் வீடுகளின் களிமண் மண் தரையைத் தேய்க்க உதவும் கற்கள், அரவைக் கற்கள், கருவிகளைத் தீட்டும் கற்கள் என வீடுகளில் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் பொருட்களும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன. சுடுமண்ணால் ஆன மனித மற்றும் பறவைகளின் உருவங்களும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், 21 சுடுமண்ணாலான குழாய்கள் கிடைமட்டத்தில் பொருத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இது கழிவு நீரை வெளியேற்றுவதற்கு வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. சிவகளை அகழாய்வு பாய்ச்சும் வெளிச்சம் சிவகளை என்ற இடம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில், தூத்துக்குடியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. சிவகளையில் நடந்த முதற்கட்ட அகழ்வாய்வில் 'ஆதன்' என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு கிடைத்தது. ஆதிச்சநல்லூரைப்போல செம்பினால் ஆன பொருட்களோ அல்லது தங்கத்தினால் ஆன பொருட்களோ சிவகளையில் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், கருப்பு-சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள் போன்றவற்றில் அழகிய வடிவமைப்பில் வரையப்பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. பட மூலாதாரம்,DEPT OF ARCHAEOLOGY, GOTN. இதனை வைத்துப் பார்க்கும்போது இரும்புக் காலத்தில் சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் மேன்மை குறித்து தெரியவருகிறது. மேலும், இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல்லினை கரிமப் பகுப்பாய்வு செய்ததில் இதன் காலம் கி.மு. 1,155 என கால வரையறை செய்யப்பட்டுள்ளதாக மாநில தொல்லியல் துறை கூறுகிறது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த உயர் ரகமான வெண்கல, தங்கப் பொருட்களும் சடங்குகளுக்குரிய பொருட்களும் அங்கு ஒரு உயர் ரகமான சமூக, பொருளாதார வாழ்க்கை இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துவதாக தொல்லியல் துறை கூறுகிறது. பழந்தமிழர் துறைமுகமா கொற்கை? தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அமைந்திருக்கிறது கொற்கை. பாண்டிய நாட்டின் தலைநகராகவும் துறைமுகப்பட்டினமுமாகவும் விளங்கிய கொற்கையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1968-69ஆம் ஆண்டு ஓர் அகழாய்வை மேற்கொண்டது. அந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமத் துண்டு ஒன்றை பகுப்பாய்விற்கு உட்படுத்தியபோது அதன் காலம் கி.மு. 785 எனத் தெரியவந்தது. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, GOVERNMENT OF TAMILNADU படக்குறிப்பு, கொற்கையில் கிடைத்த சங்குகள். அங்கு சங்கு அறுக்கும் தொழில் நடந்ததை இவை சுட்டிக்காட்டுகின்றன. கொற்கையில் மீண்டும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், சங்கு வளையல்கள் தயாரிக்கும் தொழில் நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த முழுமையான சங்குகள், பாதி அறுத்த நிலையில் உள்ள சங்குகள், முழுவதும் உடைந்த சங்கு வளையல்கள் போன்றவற்றை வைத்து இந்த முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. வடிகட்டும் குழாய் மேலும், சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம் ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது. இச்செங்கல் கட்டுமானம் 29 அடுக்குகளுடன் 2.35 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. இக்கட்டுமானத்தின் நடுவே பெரிய கொள்கலன் ஒன்றும் கிடைத்துள்ளது. தரைத் தளத்தில் சுக்கான் பாறைக் கற்களை அடுக்கி, அதன் மீது மணல் பரப்பி, அதன் மேல் செங்கல் கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அருகிலேயே துளைகளுடன் கூடிய 9 அடுக்குகளைக் கொண்ட வடிகட்டும் குழாய் ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. இதனருகே மேற்கத்திய நாட்டு பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. நீண்ட நெடுங்காலமாகத் தமிழ்நாடு பிற நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தது என்பதையே இந்த பொருட்கள் சுட்டிக்காட்டுவதாக தொல்லியல் துறை கூறுகிறது. மேலும் இந்த அகழாய்வில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கங்கைச் சமவெளியைச் சேர்ந்த கருப்பு வண்ணப் பூச்சு பெற்ற (Black Slipped ware of Gangetic valley) பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது - வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள் தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை மேலும் இங்கு கிடைத்துள்ள வெள்ளி முத்திரைக் காசுகள், வடக்கத்திய மெருகூட்டப்பட்ட கருப்பு நிறப் பானை ஓடுகள் (Northern Black Polished ware), கங்கைச் சமவெளியைச் சார்ந்த கருப்பு வண்ணப் பூச்சு பெற்றுள்ள பானை ஓடுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்தியா கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகக் கருதலாம் என இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி, இந்து பனராஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர் கூறுவதாக தமிழ்நாடு தொல்லியல் துறை கூறுகிறது. மேலும், இப்பகுதியைச் சுற்றி அதிக அளவிலான தொல்லியல் இடங்கள் காணப்படுவதால், கொற்கை துறைமுகம் கி.மு 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே நிறுவப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மயிலாடும்பாறையில் நடந்த அகழாய்வுகளைப் பொறுத்தவரை, மயிலாடும்பாறையிலும் அருகில் உள்ள வரதனபள்ளி மற்றும் கப்பலவாடியில் கிடைத்த தரவுகளின்படி பார்த்தால், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு விவசாயம் நடந்திருப்பது தெரியவந்திருப்பதாக தொல்லியல் துறை கூறுகிறது. முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, ஊடகங்களிடம் பேசிய தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் தொன்மையை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். "மதுரை மாங்குளத்தில் கிடைத்த கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயர் இருந்தது. அதற்கு முன்புவரை, தமிழனின் வரலாறு இலக்கியம் சார்ந்தது என்பதாக மட்டும் குறிப்பிடப்பட்டது. மாங்குளம் கல்வெட்டுக்குப் பிறகுதான், இது தொல்லியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது. புலிமான்கொம்பையில் கிடைத்த கல்வெட்டிற்குப் பிறகு, இது மேலும் உறுதியானது. பட மூலாதாரம்,DEPT OF ARCHAEOLOGY, GOTN. படக்குறிப்பு, கொற்கையில் கிடைத்த இந்த செங்கல் கட்டுமானம் 29 அடுக்குகளுடன் 2.35 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. இப்போது சிவகளையிலும் கீழடியிலும் கிடைத்த பானை ஓடுகளில் ஆதன் என்ற பெயர் கிடைத்திருக்கிறது. தமிழனுக்கு வரிவடிவம் கிடையாது. தமிழி என்று அழைக்கப்படும் தமிழ் பிராமி, அசோகனுக்குப் பிறகுதான் வந்தது என்ற கருதுகோளை முறியடுத்து, அதற்கு முன்பே நம்மிடம் நாகரீகம் இருந்தது, எழுத்தறிவு இருந்தது என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன" என்று குறிப்பிட்டார். இந்த அகழாய்வு முயற்சிகளில் மும்பையிலுள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம், பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலையுணர்வுத் துறை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலையுணர்வு நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து மாநில தொல்லியல் துறை ஈடுபட்டது. இந்த அகழாய்வின்போது, தரை ஊடுருவல் தொலையுணர்வு மதிப்பாய்வு (Ground Penetrating Radar), காந்த அளவியல் மதிப்பாய்வு (Magnetometer Survey), ஆளில்லா வான்வழி ஊர்தி மதிப்பாய்வு (Unmanned Aerial Vehicle) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தொல்லியல் இடங்களை அடையாளம் காண்பது, அதற்குப் பிறகு அங்கு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்வது என தொல்லியல் துறை செயல்பட்டது. https://www.bbc.com/tamil/india-58499048
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபண்ணா.
  8. தமிழர் வரலாறு: கீழடி உள்ளிட்ட பல இடங்களில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள் - விரிவான தகவல்கள் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 31 ஜூலை 2021, 01:19 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடியில் 104 செ.மீ. ஆழத்தில் கிடைத்த அரிவாள். தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன. 2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பானை. இதற்குப் பிறகு எழுந்த கோரிக்கைகளால், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் அகழாய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவெடுத்தது. கீழடி அகழாய்வில் மகத பேரரசு காலத்தைச் சேர்ந்த வெள்ளிக் காசு 'தமிழ்ப் பொண்ணுக்கு' பிறகு கீழடியில் கிடைத்த சுடுமண் விலங்கு பொம்மை கடந்த ஆண்டே கீழடி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள சில ஊர்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன்படி கீழடி தொகுப்பு (கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்), ஆதிச்சநல்லூர், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் துவங்கிய அகழாய்வு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஊரடங்கு காலகட்டம் முடிந்த பிறகு, ஜூன் மாத இறுதியில் இருந்து மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதால் தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன. கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த மட்பாண்டங்கள் இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன. இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர் ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு நடத்திய புதைமேடு சுமார் 114 ஏக்கர் பரப்பளவுடையது. அந்தப் பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வுகள் நடத்த அனுமதியில்லை. ஆகவே அதற்கு அருகில் உள்ள பகுதியில் ஆய்வு நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி பெற்றுள்ளது. ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பகுதி. இதற்கு அருகில் மக்கள் வசித்த இடமாக கருதக்கூடிய பகுதியில் ஆய்வை நடத்த தொல்லியல் துறை விரும்பியது. அதில் பெரும்பகுதியில் மத்திய கால ஏரி ஒன்று இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கிராமத்தில் அகழாய்வு நடந்துவருகிறது. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த தங்கக் கம்பி. இங்கு இரண்டு மீட்டர் ஆழத்தில் பல பானை ஓடுகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. ஆனால், அருகிலேயே ஏரி உள்ளதால், அகழாய்வுப் பள்ளங்களில் தெளிவாக பண்பாட்டு அடுக்குகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் வாள், வேறு சில இரும்புப் பொருட்கள் கிடைத்தாலும் அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வில் கிடைத்த அளவுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை. சிவகளை ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ள சிவகளையும் ஈமத் தாழிகள் புதைக்கப்பட்ட இடம்தான். இதுவும் ஆதிச்சநல்லூரும் தொடக்க இரும்பு காலத்தை அதாவது கி.மு. 8 முதல் கி.மு. 9 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. ஆதிச்சநல்லூரையும் சிவகளையையும் ஒரே நிலப்பகுதியாகவும் கருத முடியும். இந்த சிவகளை புதைமேடு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்குப் பரந்து கிடக்கிறது. இந்த அளவுக்கு மிகப் பெரிய புதைமேடு இருக்கிறதென்றால், அதற்கு அருகில் உள்ள பராக்கிரமபாண்டிய புரம், மூலக்கரை போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சிவகளையில் சிவகளைப் பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, சிவகளையில் ஒரே இடத்தில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரைப் போலவே இங்கும் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்படுகிறன. இங்கு கிடைத்த ஈமத் தாழிகளில் கிடைத்த பொருட்களை ஓஎஸ்எல், டிஎல் டேட்டிங் செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பண்பாட்டு அடுக்கின் காலமும் தெளிவாகத் தெரியவருமெனத் தொல்லியல் துறை நம்புகிறது. கொற்கை பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக இருந்ததாகக் கருதப்படும் கொற்கையில் 1968ல் முதல்முதலாக ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1961ல் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தத் துறையின் சார்பில் முதல்முதலில் நடந்த அகழாய்வே இங்குதான் நடத்தப்பட்டது. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து, இந்த இடத்தின் காலம் என்பது கி.மு. 785 என கணிக்கப்பட்டிருக்கிறது. இடைச் சங்ககால பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு இப்போது நடத்தப்பட்டுவரும் அகழாய்வில், பல பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த வாரம் துளையிடப்பட்ட குழாய்கள் ஒன்பது அடுக்குகளாகக் கிடைத்திருக்கின்றன. இதற்குள் உள்ள பொருட்களை ஆய்வுசெய்த பிறகு, இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவரக்கூடும். பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடி அகழாய்வில் கிடைத்த தாயக் கட்டைகள். அப்பகுதி மக்களுக்கு ஓய்வு நேரம் இருந்திருப்பதையே விளையாட்டுப் பொருட்கள் காட்டுகின்றன. கங்கை கொண்ட சோழபுரம் கங்கை கண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரச் சோழனின் அரண்மனை அமைந்திருந்ததாகக் கருதப்படும் மாளிகை மேடு பகுதியில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வில் சோழர் காலத்து அரண்மனையின் அடிப்பகுதியின் ஒரு பகுதி வெளிப்பட்டது. தற்போது, அரண்மனையின் அமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஒரு பகுதியின் முழுமையையும் வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கு ஆங்கில எழுத்தான 'T' வடிவில் ஒரு பெரிய சுவர் கிடைத்துள்ளது. மிகப் பெரிய ஆணிகளும் கிடைத்துள்ளன. "இந்த அளவுக்கு ஆணி பெரிதாக இருக்கிறதென்றால், அங்கு இருந்திருக்கக்கூடிய கதவு போன்ற மரப் பொருட்களின் உயரத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனரான ஆர். சிவானந்தம். இங்குள்ள அரண்மனை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த மாளிகை சுமார் ஒன்றரைக் கி.மீ. பரப்பளவுக்கு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த மாளிகையின் மதில் சுவர் காணப்படுகிறது. ஏற்கனவே 2008ல் இங்கு நடந்த அகழாய்வில் இந்த மதில் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர, கொக்கிகள், சீன நாட்டுப் பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. டெரகோட்டா உருவங்களும் கிடைத்திருக்கின்றன. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கொந்தகையில் கிடைத்துள்ள டெரகோட்டா பொம்மைகளின் தலைப்பகுதிகள். பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடி அகழாய்வில் இந்த முறை கண்டறியப்பட்ட உறை கிணறு கொடுமணல் கொடுமணல் அகழாய்வைப் பொறுத்தவரை, இங்கு பல முறை தஞ்சாவூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்தியத் தொல்லியல் துறை, மாநிலத் தொல்லியல் துறை போன்றவை அகழாய்வுகளைச் செய்திருக்கின்றன. சுமார் 12 முறை இங்கு அகழாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு இதுவரை கிடைத்துள்ள பொருட்கள் எல்லாமே ஒரே காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுபவையாகவே இருக்கின்றன. இங்கு இரண்டு விதமான தலங்கள் இருக்கின்றன. ஒன்று ஈமத் தலம். மற்றொன்று தொழில் நடைபெற்ற இடம். இங்கு பெரும்பாலும் மணிகள் செய்யப்பட்ட இடங்கள் அதிகம் கிடைத்திருக்கின்றன. இங்கு மணிகள் அறுக்கும் தொழிற்சாலைகளுக்கான உலைகள், காசுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. ஒரு கிணறும் அதற்கு அருகில் இரண்டு பக்கமும் படிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பொறுத்தவரை கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார் சிவானந்தம். மயிலாடும்பாறை பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த நீண்ட வாள். கிருஷ்ணகிரியில் உள்ள மயிலாடும்பாறையைப் பொறுத்தவரை, அந்தப் பகுதி புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்ததாகப் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன. குறிப்பாக மிக நீளமான வாள் ஒன்று கிடைத்துள்ளது. இங்கு கிடைத்துள்ள பானைகள் பெரும்பாலும் சக்கரங்களைக் கொண்டு வனையாமல், கையால் வனையப்பட்டவையாக உள்ளன. இந்த அகழாய்வு முடிந்த பிறகு, ஏற்கனவே நடந்த அகழாய்வின் முடிவுகளை வெளியிடுவதோடு, தொடர்ச்சியாக இடங்களைக் கண்டறிந்து அகழாய்வு நடத்த முடிவுசெய்திருப்பதாக மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். https://www.bbc.com/tamil/arts-and-culture-58037319
  9. ரித்விக் என்ற ஏழு வயது சிறுவனின் நகைச்சுவை.
  10. தமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் சுடுமண் விலங்கு பொம்மை கண்டுபிடிப்பு ஆறு. மெய்யம்மை பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஏழாவது கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் முதல் முறையாக ஒரு விலங்கு உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய நான்கு அருகருகில் உள்ள இடங்களில் நடைபெறுகிறது. ஐந்தாம் கட்டம் வரை கீழடியில் மட்டுமே நடந்துகொண்டிருந்த பணி ஆறாம் கட்டத்திலிருந்து 2-3 கீ.மீ தொலைவில் உள்ள மற்ற மூன்று தளங்களில்தொடங்கியது. முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் ஏழாவது கட்ட அகழாய்வு பணியில் சமீபத்திய கண்டுபிடிப்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை அகரம் தளத்தில் கிடைத்துள்ளது. அது அகலத்தில் பத்து சென்டிமீட்டருக்கு குறைவாகவும், நான்கு சென்டிமீட்டர் உயரத்தையும் கொண்டதாக இருக்கிறது என்று கூறுகிறார் தொல்லியல் துறை துணை இயக்குனர், கீழடி அகழாய்வின் இயக்குநருமான ஆர். சிவானந்தம். கீழடியில் ஊற்றெடுக்கும் தமிழர் வரலாறு - இதுவரை கிடைத்தவை என்ன? கீழடி: பழங்கால எலும்புக்கூடு மரபணு ஆராய்ச்சிக்கு நிதி இல்லை - யார் காரணம்? இந்த விலங்கு பொம்மையின் கால், தலை மற்றும் வால் பகுதிகள் கிடைக்கவில்லை. அவை கிடைத்தால்தான் அது என்ன விலங்கு என்று கூற இயலும். நான்காம் கட்டப் பணிகளின் போது சுடுமண்ணால் ஆன குதிரையின் முகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போதுதான் ஒரு விலங்கு உருவ பொம்மை (animal figurine) கிடைத்துள்ளது, என்று கூறுகிறார். பட மூலாதாரம்,TAMILNADU STATE ARCHEOLOGY DEPARTMENT முந்தைய அகழாய்வுப் பணிகளின் போது வீட்டு விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டது. ஆடு, மாடு, மயில், கோழி, மான் மற்றும் காட்டு பன்றிகளின் எலும்புகள் நான்காம் கட்டத்தில் கிடைத்தது. சில எலும்பு மாதிரிகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் அவை ஜல்லிக்கட்டு காளைகளின் எலும்புகள் என்று தெரியவந்தது. அகரம் சங்ககால வாசிப்பிடமாகத் திகழ்ந்திருப்பதால், மக்கள் ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தவுடன் வீட்டின் அருகே புதைத்திருக்கிறார்கள், என்று கூறுகிறார் சிவானந்தம். பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு, கீழடியில் கிடைத்த சுடுமண்ணால் ஆன பெண் முகத்தின் படத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். கண்டறியப்பட்ட விலங்கு எலும்புகளில் சுமார் 12 சதவீதம் திமில் உடைய ஜல்லிக்கட்டு காளைகள் உடையது, 40 சதவீதம் மாடு, எருது மற்றும் எருமைகள் உடையது. காட்டுப்பன்றி மற்றும் ஆடுகளின் எலும்புகளில் வெட்டு தடயங்கள் காணப்பட்டதால், அவை அசைவ உணவிற்காக அக்கால மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்க கூடும், என்று சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர ஒரு விலங்கின் எலும்புக்கூடு ஒன்று ஆறாம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்தது. அது சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அரை டன் எடையுள்ள எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோதனைக்கு அனுப்பப்பட்டது போக மற்ற பொருட்கள் அனைத்தும் மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், இரண்டு செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அதிக அளவில் கண்ணாடி, யானை தந்தம் மற்றும் சங்கினால் ஆன வளையல்கள் அடங்கும். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 சமீபத்தில் சுடுமண்ணால் ஆன பெண் முகத்தின் படத்தை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். "தமிழ்ப் பொண்ணு" இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள், என்று அவர் அப்பதியில் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/india-57931986
  11. இரண்டு இடத்திலயும் more sharing option காட்டுகிறது, அழுத்தினா உள்ள போகுதில்ல!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.