Everything posted by ஏராளன்
- _DSC0978.JPG
- _DSC0966.JPG
- _DSC0965.JPG
- _DSC0963.JPG
- _DSC0962.JPG
- _DSC0959.JPG
-
0-02-07-8307d9f99a67313734b848174ad869cd5434af018fbbbcf7ec2c815a4d5f5f81_1534a0215866ec53.jpg
From the album: ஏராளன்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்திய அரசின் கிரிப்டோகரன்சி மசோதா: தனியார் மின் பணத்தின் எதிர்காலம் என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யவும் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும் புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும். இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் 26 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு மசோதாவாக கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பதும், நாட்டில் உள்ள எல்லா டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்வதும்தான் இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான நோக்கம் என மக்களவையின் பணிப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக பல கேள்விகள் உள்ளன. ஏனெனில் நிறைய பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். அரசு எல்லா கிரிப்டோகரன்சிகளையும் அரசு தடை செய்தால் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும்? கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன் கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா முக்கிய கிரிப்டோகரன்சிகளும் சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவைக் கண்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES 'பிட்காயின்' 17 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'எத்திரியம்' 15 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'டெதர்' 18 சதவீதத்திற்கு மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன. "கடந்த வருடமே இதனைத் தடை செய்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் காரணமாக அது நடக்காமல் போய்விட்டது. இதையடுத்து பல கோடி இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தற்போது வந்திருக்கும் இந்திய அரசின் அறிவிப்பு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதனை ஒழுங்குபடுத்த முடியாது என ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். நிதிக்குழுவின் தலைவர் இதனை ஒழுங்குபடுத்துவோம், தடைசெய்ய மாட்டோம் என்று சொல்லிவந்தார். ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப்படும் மசோதா தனியார் கிரிப்டோகரென்சிகளைத் தடைசெய்யும் என கருதப்படுகிறது. மேலும் அரசே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் வழிமுறைகளை ஆராயப்போவதாகவும் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே கிரிப்டோ மூலம் வந்த வருவாய்க்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுவருவதாக சொல்கிறார்கள். அரசு அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சிக்கும் இந்த வரி விதிப்பு தொடருமென்றால், அது வெற்றிபெறாது" என்கிறார் துவக்கத்திலிருந்தே தனியார் கிரிப்டோ கரன்சிகளை விமர்சித்துவரும் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன். கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது? கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப் படுத்துவது மிக மிக அவசியம். உண்மையில் இதை மிகக் காலதாமதாக செய்கிறார்கள் என்பதுதான் கவலையே என்கிறார் பங்குச் சந்தை வல்லுநரான நாகப்பன். "இப்போது வரவிருக்கும் மசோதாவைப் பொறுத்தவரை தனியார் கரன்சிகளைத் தடை செய்யப்போவதாகத் தெரியவில்லை. ஒழுங்குபடுத்தும் என்றே கருதுகிறேன். இதனை ஒழுங்குபடுத்த வேண்டுமென பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். இப்படி ஒழுங்குபடுத்தவில்லையென்றால் அது ஈமு கோழி வர்த்தகம் மாதிரி ஆகிவிடும்" என்கிறார் நாகப்பன். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசு தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதித்தால் என்னவெல்லாம் நடக்கும்? "வங்கிகளைப் பயன்படுத்தி ஒரு சாதாரண முதலீட்டாளர் இனி தனியார் கிரிப்டோவை வாங்க முடியாது. கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து வாங்கலாம். பெரும் முதலைகள் வெளிநாடுகளில் இருந்து செய்வார்கள். விபிஎன் மூலமாக கிரிப்டோ எக்சேஞ்சை தொடர்பு கொண்டாலும் உங்கள் வங்கி மூலம் பணத்தை செலுத்த முடியாது. ஆகவே விபிஎன் பயன்படுத்தினாலும் வாங்க முடியாது. வெளிநாட்டிற்கு பணத்தைக் கடத்தி தனியார் கிரிப்டோவை வாங்கலாம். ஆனால், அதை எல்லோராலும் செய்ய முடியாது. இப்போதுவரை இதில் பணம் முதலீடு செய்தவர்கள் அந்தப் பணத்தை வெளியில் எடுக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கொடுப்பார்கள் என கருதுகிறேன். ஆனால், சந்தை இதற்கெல்லாம் காத்திருக்காது. நேற்று இரவு இந்திய அரசின் அறிவிப்பு வந்தவுடனேயே பிட் காயின், ஈதர் போன்றவற்றின் விலை 15-17 சதவீதம் வரை விழுந்துவிட்டது. ஆகவே, சட்டம் இயற்றப்படும்வரை நிச்சயம் பணத்தை அதிலிருந்து வெளியில் எடுக்க முடியும். எவ்வளவு பணம் கிடைக்கிறதோ, அது அவரவர் சாமர்த்தியம்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன். ரிசர்வ் வங்கி வெளியிடவிருப்பதாக சொல்லும் கரன்சிகளுக்கு இதே அளவு ஈர்ப்பு இருக்குமெனச் சொல்ல முடியாது. மற்ற கிரிப்டோகரன்சிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்களிடம் கரன்சிகள் இருப்பதாகச் சொல்கின்றன. அதனால், அவற்றின் விலை ஏறுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிடும்போது அப்படியிருக்காது. அதனால், அதன் மீது பெரிய கவர்ச்சி இருக்காது. ஆகவே, அரசின் டிஜிட்டல் கரன்சியின் விலை உயர வாய்ப்பு குறைவு. இதனால் மக்கள் எந்த அளவுக்கு இதில் முதலீடு செய்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீ நிவாசன். பட மூலாதாரம்,GEOFFROY VAN DER HASSELT "நாம் ஒரு கடையில் வழக்கமாக பொருளை வாங்குகிறோம். மீதமுள்ள காசுக்கு சில சமயம் அவர்கள் டோக்கன்களைக் கொடுப்பார்கள். திரும்பவும் அங்கே செல்லும்போது அந்த டோக்கனைக் கொடுத்து பொருளை வாங்கலாம். அந்த டோக்கன் அங்கு மட்டும்தான் செல்லும். அதுபோலத்தான் கிரிப்டோ. ஆனால், அதுபோல டோக்கனை வைத்திருப்பவர்கள் அதன் மதிப்பு அதிகம் என தொடர்ந்து அதில் வார்த்தகம் செய்கிறார்கள். திடீரென அந்தக் கடை மூடப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் ஒழுங்குமுறை தேவை என்கிறோம்" என்கிறார் நாகப்பன். இனி தனியார் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? "அமெரிக்காவில் புதிதாக கன்ட்ரோலர் ஆஃப் கரன்சி என ஒரு பதவியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் இனி கிரிப்டோ மீது கவனம் செலுத்துவார்கள். ஒவ்வொரு நாடாக தடைசெய்தால், பிரதானமான தனியார் கிரிப்டோ கரன்சியைத் தவிர மற்றவை அழிந்துபோகும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன். https://www.bbc.com/tamil/india-59401102
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்படித்தான் காட்டுது.
- pic.JPG
-
0-02-06-3f4cc3ab9d613256f4f41586c07eaf0efb033bc4388a7c512b17f6c4d886aef4_fb08e2ca9e8e120f.jpg
From the album: ஏராளன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்தினருக்கு, எதனால் நிறைய படங்கள் மேலுள்ளவாறு தான் எனது மடிக்கணனி காட்டுகிறது?
- desk.JPG
-
களைத்த மனசு களிப்புற ......!
அப்ப தப்பிச்சியள்.🙂
-
களைத்த மனசு களிப்புற ......!
அது சரி அண்ணியும் யாழை பாக்கிறவ என்று சொன்னீங்க, பத்திரமா இருங்கோ🤣
-
களைத்த மனசு களிப்புற ......!
சுவியண்ணை ஒரு கலா ரசிகன் தான்.
-
சிரிக்கலாம் வாங்க
இடிச்சு சாய்ச்சுப்புட்டு ஏதோ சாதிச்ச மாதிரி நடையை பாருங்க! ஆனாலும் இவன் ரொம்ப நல்லவன், மாறி குத்தினதோட கோபம் போயிற்று.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இல்லையா?!
-
மலரும் நினைவுகள் ..
இந்த கருவியை பார்த்ததும் சிறுவயதில் வீட்டில் வந்து முடிவெட்டிவிடும் அப்புவைத் தான் ஞாபகம் வருது. எனக்கு சலூனில் போய் முடிவெட்டத் தான் விருப்பம். அப்பு வந்தால் அழுது கொண்டு போய் இருக்க அவர் அழாதையணை என்று சமாதனம் சொல்லி முடிவெட்டி விடுவார். அவரின் இந்த கையால் அழுத்தி செயற்படுத்தும் கருவி முடியை பிடித்து இழுக்கும், அப்ப கொஞ்சம் வலிக்கும்.
-
ஐம்பதில் ஆசை
வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா.
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. பாலூர், வேங்கி ஆகிய இடங்களின் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்ட நிலையில், தலக்காடு, பட்டனம் ஆகிய இடங்களின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தின் தலக்காடு தலக்காடு, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் காவிரியின் இடது கரையில் அமைந்திருக்கிறது. தற்போது பாலைவனத்தைப் போலக் காட்சியளிக்கும் தலக்காட்டில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி தற்போது மணலில் மூழ்கிவிட்டன. தலக்காடு கங்க வம்ச மன்னர்களின் தலைநகரமாக இருந்த பிரதேசம். 11ஆம் நூற்றாண்டுவாக்கில் மேலைக் கங்கர்கள் சோழர்களிடம் தோற்றுப்போயினர். அப்போதிலிருந்து இந்தப் பகுதி ராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஹொய்சாள மன்னனான விஷ்ணுவர்தன சோழர்களை மைசூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தான். முந்தைய பகுதி:தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? இதற்குப் பிறகு தலக்காடு பகுதியில் ஏழு சிறு நகரங்களும் ஐந்து மடங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. காவிரியின் எதிர்ப்புறத்தில் மலிங்கி என்ற சிறு நகரம் இருந்தது. 14ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி ஹொய்சாளர்களிடம் இருந்தது. பிறகு விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்கள் வசம் வந்தது. மைசூரை ஆண்ட உடையார்கள் 1630ல் இதனை கைப்பற்றினர். இப்படி அந்தப் பகுதி மைசூர் மன்னர்களால் கைப்பற்றப்பட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட சாபம் குறித்தும் ஒரு கதை இப்பகுதியில் பேசப்படுகிறது. தலக்காட்டின் சாபம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக திருமலை ராயன் என்ற மன்னன் ஆண்டுவந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படவே, தலக்காட்டில் இருந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்றார். அவருடைய இரண்டாவது மனைவியான அலமேலம்மாள் ஸ்ரீரங்கப் பட்டனத்தில் இருந்தபடி, நாட்டை நிர்வாகம் செய்துவந்தாள். ஆனால், சீக்கிரத்திலேயே கணவன் இறக்கப்போகிறான் என்பது தெரியவந்தது. இதனால், ஆட்சிப் பொறுப்பை மைசூரை ஆண்ட உடையார்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தலக்காட்டிற்குப் புறப்பட்டார் அலமேலம்மாள். கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின் கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது - வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள் ஆனால், ராணியிடம் இருந்த நகைகளைப் பறிக்க விரும்பிய மைசூர் மன்னன், அதனைப் பறிக்க ஒரு சிறிய படையை தலக்காட்டிற்கு அனுப்புகிறார். இதையடுத்து நகைகளோடு காவிரியாற்றிற்குள் இறங்கும் அலமேலம்மாள், நகைகளை நதிக்குள் தூக்கி எறிகிறார். தானும் அதில் மூழ்கி இறந்துபோகிறார். உயிர் பிரிவதற்கு முன்பாக ஒரு சாபமிடுகிறார். அந்த சாபம் இதுதான்: "தலக்காடு மண்ணோடு மண்ணாகட்டும், மலிங்கி சுழலில் மூழ்கட்டும், மைசூர் அரசர்களுக்கு பிள்ளையில்லாமல் போகட்டும்". இதற்குப் பிறகு இரண்டு விசித்திர சம்பவங்கள் உண்மையிலேயே நடந்தன. ஒன்று, பல நூற்றாண்டுகளாக துடிப்பு மிக்க நகரமாக இருந்த தலக்காட்டில் பல மீட்டர் உயரத்திற்கு மணல் சேர ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, உடையார் வம்ச அரசர்களுக்கு பட்டத்திற்கு வரும் வகையில் குழந்தைகளே பிறக்கவில்லை. சமீபத்தில் இறந்த ஸ்ரீ கந்ததத்த உடையார் வரை வாரிசு இல்லாமலேயே இறந்தார்கள் (ஆனால், இப்போதைய மகாராஜாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது). 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மணல் சேர்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 9-10 அடி உயரத்திற்கு மணல் சேர்ந்து வருவதால், மக்கள் இந்தப் பகுதியைவிட்டு தொடர்ந்து வெளியேற வேண்டியிருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் மணலுக்கடியில் மூழ்கியிருக்கும் நிலையில், கீர்த்தி நாராயணா கோயில் மட்டும் அகழாய்வு செய்து மீட்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆனந்தேஸ்வரா மற்றும் கௌரி சங்கரா கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன. பாதாளேஸ்வரா கோயிலின் சுற்றுச் சுவர்களில் சில கல்வெட்டுகள் தென்பட்டன. இதில் ஒரு கல்வெட்டு கங்கர்கள் காலத்தைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு. மற்ற கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. கௌரிசங்கரா கோயிலில் உள்ள கல்வெட்டு, அந்தக் கோயிலானது சிக்கதேவராய உடையார் காலத்தில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "கங்கர்கள் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை ஆட்சிசெய்தார்கள். கங்கர்கள் கால கல்வெட்டுகள் கிருஷ்ணகிரியில்கூட கிடைக்கின்றன. ஒரு காலத்தில் மாண்டியா பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிதான். தலக்காட்டிற்கும் சோழர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக தொல்லியல் துறை விரும்புகிறது" என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து செயல்படுபவருமான பேராசிரியர் கே. ராஜன். பட்டனம் (முசிறி) பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பட்டனம். இந்தப் பகுதியில் நீண்ட காலமாகவே, பல்வேறு பணிகளுக்காக நிலத்தைத் தொண்டும்போது மேலடுக்கிலேயே பெரிய அளவில் ஓடுகள் போன்றவை கிடைத்துவந்ததையடுத்து இந்தப் பகுதி ஒரு தொல்லியல் தளமாக அடையாளம் காணப்பட்டது. இந்த இடத்தில் வரலாற்று ஆய்வுக்கான கேரளா கவுன்சில் (கேசிஎச்ஆர்) 2007ல் இருந்து 2020வரை பத்து முறை தொல்லியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. பதினொன்றாவது ஆய்வு இந்த மாதத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கி.மு. ஆயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இடத்தில் மக்கள் வசித்ததற்கான தொல்லியல் பொருட்கள் இங்கிருந்து கிடைத்துள்ளது. கி.மு. 3 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி மிகவும் துடிப்பு மிக்க பகுதியாக இருந்திருக்கிறது. பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH பாமா என்ற தனியார் அமைப்பு 2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது. சுமார் பத்து ஓடுகளில் தமிழி எழுத்துகள் கிடைத்தன. ஒரு பானை ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும் ஒரு பானை ஓட்டில் அமண என்ற எழுத்துகளும் கிடைத்திருக்கின்றன. சங்ககால சேர நாட்டு துறைமுகமான முசிறயின் ஒரு பகுதியாகவே பட்டணம் இருக்குமென தமிழக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். "சங்க இலக்கியங்களில் வரும் பேரியாறு என்பது தற்போதைய பெரியாற்றைத்தான் குறிக்கிறது. ஆகவே இந்த இடம் தமிழ்நாட்டோடு தொடர்புடைய இடம்தான். தமிழர்களின் தொடர்புகள் எங்கெங்கு இருந்திருக்குமோ, அந்ததந்த இடங்களிலெல்லாம் அகழாய்வு செய்வது தமிழ்நாடு தொல்லியல் துறையின் நோக்கமாக இருக்கிறது" என்கிறார் கே. ராஜன். வேறு மாநிலங்களில் இருக்கும் தொல்லியல் களங்களில் அகழாய்வை மாநிலத் தொல்லியல் துறை நேரடியாக செய்யாது என்றே தெரிகிறது. அங்குள்ள தொல்லியல் சார்ந்த அமைப்புகள், பல்கலைக்கழக தொல்லியல் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்தே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் மாநிலத் தொல்லியல் துறையால் வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/india-58657621
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
முன்னர் பெண்கள் பயன்படுத்துவது இதுவும் super cup 50 bike ம் தானே!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வாங்கோ கல்லணை கட்டிய கரிகாலன் பெயர் கொண்டவரே.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இது தான் கிளி மூக்குக் குரங்கா?!
- s.JPG