Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 29 Aug, 2025 | 04:29 PM பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் 9ஆம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10000/- பனை விதைகள் நாட்ட தீர்மானிக்கப்பட்டது. சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. சபை வீதிகளை ஊரிக்களி மண் பயன்படுத்தி அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. உக்காத கழிவு பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் மூன்று மாத காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர பெட்டி குப்பைக்கு ரூபா 5000 அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223713
  2. அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் – பிமல் ரத்நாயக்க 29 Aug, 2025 | 04:23 PM அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இதனை நடைமுறைப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாடசாலை பஸ்கள், அலுவலக சேவைப் போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஏனைய பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு சுமார் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சுமார் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப் பாட்டிகளின் விலை தற்போது 5,000 முதல் 7,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இது குறித்து அண்ணளவாக அனைவரும் தமது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அதனால் எதிர்காலத்தில் நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக Citra Innovation Lab நிறுவனத்தின் ஊடாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பயணிகள், சாரதிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 2100 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது சம்பந்தமான அறிக்கையொன்றை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். அத்துடன், தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனங்கள் நுழையும்போது வாகன உதிரிப் பாகங்களின் தரத்தைப் பரிசோதித்து புள்ளிகள் வழங்கும் முறையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், வாகனங்களின் டயர்கள் தேவையான தரத்தில் இல்லாவிட்டால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனத்தை நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். முச்சக்கர வண்டிகள், வான்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்காக நலன்புரி நிதியமொன்றை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். நீண்ட தூர சேவை மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் நிறுத்துமிடம் தொடர்பான தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், புகையிரத சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், துறைமுகங்கள் தொடர்பான தேவையான நவீனமயமாக்குவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் இரண்டு உப குழுக்களை நியமிப்பதும், அவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதும் இதன்போது இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பது மற்றும் நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/223712
  3. பட மூலாதாரம், Reuters 58 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார். கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன. ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக டிரம்பின் 'வரிவிதிப்பு போருக்கு'ப் பிறகு, இந்த புதிய இராஜதந்திர செயல்பாடு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை சீன ஊடகங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன என்பதை காணலாம். மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவம் "சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியின் கடந்த வார இந்திய பயணம், மோதியின் வருகைக்கான தயாரிப்பாக பரவலாகப் பார்க்கப்படுகிறது" என்று சீனாவின் அரசு செய்தித்தாளான 'சீனா டெய்லி' எழுதியுள்ளது. உலகளாவிய நிலைமையைச் சமாளிக்க சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்று அந்நாளிதழ் எழுதியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அழுத்தம் காரணமாக, சுதந்திர வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒழுங்கிற்கு சவால்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளதோடு, அமெரிக்காவின் வரிவிதிப்பு அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற உண்மையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சீனா டெய்லி எழுதுகிறது. "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியா அமெரிக்காவுடன் மோதல் சூழ்நிலையில் சிக்கியது. அதன் பிறகு இந்தியா மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது." சீனாவை ஒரு போட்டியாளராகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியா அதை ஒரு கூட்டாளியாகவும் அதன் உயர்தர வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்றும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மோதியின் பயணத்திற்கு முன்னோட்டமாக சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை இருந்தது ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அர்ஜுன் சாட்டர்ஜி 'சீனா டெய்லி'யில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமர் மோதி பங்கேற்கும் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் மீது இப்போது அனைவரின் பார்வையும் இருப்பதாகக் கூறியுள்ளார். டிரம்பின் வரிவிதிப்புகளுக்குப் பிறகு சீனா இந்தியாவுடன் ஒற்றுமையைக் காட்டியுள்ளது என கூறும் அவர், அமெரிக்க நடவடிக்கையை அச்சுறுத்தும் செயலாக சீனா கருதுவதாகவும் எழுதுகிறார். இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்வளத் துறையின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் மோதி தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். பசுமை விவசாயம், குறிப்பாக நைட்ரஜன் பயன்பாட்டு திறன், இந்தியாவும் சீனாவும் வேகமாகச் செயல்படும் ஒரு பகுதி என்று அர்ஜுன் சாட்டர்ஜி குறிப்பிடுகிறார். இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு சிறந்த படியாக இருக்கும் என்பது அவரது கூற்றாக உள்ளது.. இணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே மக்களின் பயணம், விவசாயம் அல்லாத வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டாண்மை ஆகியவற்றில் தியான்ஜின் உச்சிமாநாட்டில் ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டால், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான போட்டி இருந்தபோதிலும் இது நடைமுறை ஒத்துழைப்புக்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று அவர் எழுதுகிறார். அமெரிக்கா, சீனா என இரண்டையும் சமாளிக்கும் முயற்சி அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) மற்றும் வேறு சில நிறுவனங்களின் செய்திகள், பிரதமர் மோதியின் வருகையை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவை இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரிகள் குறித்த பிரச்னையை விவாதிக்கின்றன. ஆகஸ்ட் 27 முதல் இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத 'அபராத வரி' விதித்துள்ளதை 'சின்ஹுவா' செய்தி குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதே காரணம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும், இந்தியா எந்த அழுத்தத்தையும் தாங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். ஜிஎஸ்டியில் விரைவான சீர்திருத்தங்களை அவர் அறிவித்துள்ளார். மறுபுறம், இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று ஸ்தம்பித்துள்ளது பட மூலாதாரம், Getty Images அதே நேரத்தில், தேசியவாத செய்தி வலைத்தளமான 'குவாஞ்சா' (Guancha), 'சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுடனான தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்' என்று எழுதியுள்ளது. "மோதி கடந்த ஆண்டு முதல் தனது அமெரிக்க சார்பு கொள்கையை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறார், ஆனால் அவர் சீனா மற்றும் ரஷ்யாவுடன் எவ்வளவு தூரம் செல்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை." இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் Quad இரண்டிலும் ஒரு பகுதியாக இருந்த போதிலும், எந்த ஒரு குழுவுடனும் கட்டுப்பட்டு இயங்க மறுக்கிறது. ஆயினும்கூட, கூட்டு அறிக்கையில் கையெழுத்திடாதது மற்றும் ஆங்கிலத்தை வேலை மொழியாக மாற்றக் கோருவது என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பல சந்தர்ப்பங்களில் சீனா மற்றும் ரஷ்யாவுக் முயற்சிகளுக்கு இந்தியா சவாலாக இருந்திருக்கிறது. குவாஞ்சாவில் வெளியிடப்பட்ட செய்தி, "இந்தியா 'இரு தரப்புடனும் விளையாடும்' கொள்கையுடன் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது. இருப்பினும், டிரம்ப் 2.0 சகாப்தத்தில் இந்த சமநிலை கடினமாகி வருகிறது." என கூறுகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ejxn7n7l8o
  4. யாழ். மேல் நீதிமன்றத்தில் 1996இல் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேருக்கான ஆட்கொணர்வு மனு தாக்கல் 29 Aug, 2025 | 04:22 PM கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (29) தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிமான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை (29) திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதிவான் விடுமுறையில் இருந்த காரணத்தினால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/223711
  5. வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க! 29 Aug, 2025 | 04:17 PM கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (29) மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வெளியேறினாலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப வைத்தியர் கண்காணிப்புடன் இருத்தல் வேண்டும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ரணில் விக்ரமசிங்க உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223710
  6. 29 Aug, 2025 | 02:51 PM இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் வெள்ளிக்கிழமை (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும். தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், "சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை" என்ற என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/223698
  7. பெய்ஜிங் ராணுவ பேரணியில் பங்கேற்கும் புதின், கிம் ஜாங் உன் - அமெரிக்காவுக்கு சீனா சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் லாரா பிக்கர் சீன செய்தியாளர், பிபிசி நியூஸ் 29 ஆகஸ்ட் 2025, 08:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கின் மையத்தில் நடக்கவுள்ள ராணுவ அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்பது ஒரு மிகப் பெரிய தருணமாக இருக்கும். இது ஷி ஜின்பிங்கிற்கு ஒரு முக்கியமான ராஜதந்திர வெற்றியாகவும் அமையும். சீன அதிபர் நீண்ட காலமாக உலகிற்கு பெய்ஜிங்கின் வலிமையை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் தன்னை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமின்றி, வலுவான ராஜதந்திரியாகவும் நிறுவிக்கொள்ள விரும்புகிறார். டிரம்பின் வரிக்குவரி யுத்தம் உலகம் முழுவதும் பொருளாதார உறவுகளை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா ஒரு நிலையான வர்த்தகப் பங்காளி என்று அவர் முன்வைக்கிறார். யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்க அதிபர் வெகு தொலைவில் உள்ளார். இந்நிலையில், ஷி ஜின்பிங் புதினை பெய்ஜிங்கிற்கு வரவேற்கத் தயாராகி வருகிறார். திடீரென அறிவிக்கப்பட்ட கிம் வருகையும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. கடந்த வாரம் தென் கொரிய அதிபருடனான‌ சந்திப்பின் போது அமெரிக்க அதிபர்‌ டிரம்ப்‌,‌ தான் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜான் உன் சந்திப்பு 2019-ல் நடைபெற்றது. இந்த சந்திப்பு ஜின்பிங்கிற்கு ஏன் முக்கியம்? உலகில் தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகாரியுடனான டிரம்பின் முந்தைய ராஜதந்திர முயற்சிகளில் எந்த முடிவும் எட்டவில்லை. உலக கவனத்தை ஈர்த்த இரண்டு உச்சிமாநாடுகள் நடந்தாலும், எந்த உறுதியான முன்னேற்றமும் அடையப்படவில்லை. இப்போது டிரம்ப் மீண்டும் முயற்சி செய்ய விரும்புவதாக சமிக்ஞை காட்டுகிறார். இதற்கிடையில், இந்த முழு ஆட்டத்தையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம்தான் இருப்பதாக சீன அதிபர் சமிக்ஞை செய்கிகிறார். கிம், புதின் இருவரிடமும் அவருக்கு உள்ள செல்வாக்கு ஒரு வரம்பிற்குட்பட்டது என்றாலும், எந்தவொரு ஒப்பந்தம் இறுதியாவதிலும் அவரின் முக்கியத்துவம் நிரூபணமாகலாம். செப்டம்பர் 3ஆம் தேதி அணிவகுப்பில் சீனா தன்னுடைய ராணுவ வலிமையை வெளிக்காட்டும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. அப்போதுதான் சீனாவின் சில பகுதிகளில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த கொண்டாட்டத்தை ஷி ஜின்பிங் வேறு ஏதோவொன்றைக் வெளிக்காட்டுவதற்காக பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வு நடக்கும் நேரமும் முக்கியமானது. அக்டோபர் இறுதியில் டிரம்ப் அந்த பிராந்தியத்திற்கு வரக்கூடும் என்றும், அப்போது ஷி ஜின்பிங்கைச் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியிருந்தது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வரி பற்றிய ஒப்பந்தம், அமெரிக்காவில் டிக்டாக் விற்பனை, யுக்ரேன் போர் நிறுத்தம் அல்லது தீர்வுக்கு புதினை சம்மதிக்க வைக்க சீனாவால் முடியுமா என்ற கேள்வி உட்பட பல பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்கலாம். பட மூலாதாரம், Getty Images இப்போது ஷி ஜின்பிங் கிம் மற்றும் புதின் இருவரையும் சந்திப்பதன் மூலம், தாம் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக டிரம்புடன் பேசுகையில் அவர் உணர மாட்டார். உண்மையில், இரு தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய உறவு இருப்பதால், அமெரிக்க அதிபரிடம் இல்லாத பல தகவல்கள் அவரிடம் இருக்கக்கூடும். ரஷ்யா, வட கொரியா இரண்டும் மேற்கத்திய உலகின் பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்றன. புதினை விட கிம் அவரது ஆயுதத் திட்டத்தின் காரணமாக நீண்ட காலமாகவே மேற்கு நாடுகளின் இலக்காக ஆனவர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அவர் ஆதரவு அளித்த பின்னர் அவருக்கு எதிரான கண்டனங்கள் மீண்டும் கூடுதலாகின. இப்படிப்பட்ட சூழலில், பெய்ஜிங்கில் இருந்து வந்திருக்கும் அழைப்பு கிம்முக்கு ஒரு பெரிய‌ சாதகமாகும். கடைசியாக ஒரு வட கொரியத் தலைவர் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றது 1959-ல்தான். 2019-ல் சீனா-வட கொரியா உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரு தலைவர்கள் சந்தித்த பின்னர் ஷி, கிம்முக்கு இடையில் வெளிப்படையான சந்திப்புகள் குறைவாகவே நடந்துள்ளன. 2018-ல் ட்ரம்ப் உடனான உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கிம் ஜாங் உனின் முதல் வெளிநாட்டுப் பயணமும் பெய்ஜிங்கிற்குத்தான், அப்போது அவர் பியாங்யோங் அணுசக்தித் திட்டத்தைப் பற்றி விவாதிக்கச் சென்றார். இது சீனாவிற்கு நன்மையா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்புக்கு முன்பாக, ரஷ்ய, வட கொரிய நாட்டுத் தலைவர்களை சீன அதிபர் சந்திப்பது அவருக்கு சாதகமாக அமையலாம். சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்யா-வட கொரியா கூட்டணியிலிருந்து ஷி ஜின்பிங் கிட்டத்தட்ட தனித்து நிற்பதாக தோன்றியது. அது சீனா பங்கேற்க விரும்பாத கூட்டணியாக இருக்கலாம். யுக்ரேன் போரில் நடுநிலைமை வகிக்க சீனா வெளிப்படையாக முயற்சித்தது. அமைதியான தீர்வுக்காக முறையிட்டது. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களும்,‌ உதிரிபாகங்களும் சீனா வழங்குவதாக குற்றம் சாட்டின. புதினுடனான கிம்மின் நெருக்கம் சீனா-வட கொரியா இடையிலான உறவுகளை சிதைத்துவிட்டது என்று சிலர் ஊகித்தனர். ஆனால் அடுத்த வாரம் கிம்மின் பெய்ஜிங் வருகை இந்த அனுமானம் தவறு என்பதை நிரூபிக்கிறது. வட கொரியத் தலைவர் எளிதில் கைவிட முடியாத உறவு‌ சீனாவுடனானது. அவர்களது பொருளாதாரம் சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது, அவர்களது உணவு இறக்குமதியில் சுமார் 90 சதவிகிதத்தை சீனாவே வழங்குகிறது, புதின் மற்றும் ஜின்பிங்குடன் மட்டுமின்றி, இந்தோனீசியா, இரான் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் ஒரே மேடையில் நிற்பது கிம்முக்கு கூடுதல் நியாயத்தை அளிக்கிறது. ஷி ஜின்பிங்கைப் பொருத்தவரை, டொனால்ட் டிரம்ப் உடனான சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இது ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகும். ஒரு அதீத வரி, வர்த்தகப் போரைத் தவிர்த்து ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் 90 நாள் இடைநிறுத்தம் நடைமுறையில் உள்ளது, ஆனால் நேரம் குறைந்து கொண்டே வருகிறது. பேச்சுவார்த்தைகளின் போது ஜின்பிங் தரப்பு வலுவாக இருக்க வேண்டும். அவரிடம் கொடுப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. டிரம்ப் கிம் ஜாங் உன்னை சந்திக்க முயற்சித்த போது, சீனா அவருக்கு உதவியது. ஷி ஜின்பிங் மீண்டும் அந்த உதவியைச் செய்ய முடியுமா? இன்னும் முக்கியமான கேள்வி என்னவென்றால், யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் சீனாவால் என்ன பாத்திரம் வகிக்க முடியும். மேலும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால்: ஷி ஜின்பிங், புதின், கிம் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்திப்பது சாத்தியமா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy98z9veld9o
  8. பிறந்தநாளை முன்னிட்டு அத்தியாவசிய பால்மா வகைகள் வழங்கி வைக்கப்பட்டது 26/08/2025
  9. பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
  10. பட மூலாதாரம், PMD SRI LANKA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நல குறைவால் கொழும்பு தேசிய மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை அரசியல் பாரிய மாற்றங்களை கடந்த சில தினங்களில் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசியல் ரீதியில் பிரிந்திருந்த எதிர்கட்சிகள் தற்போது ஓரணியாக திரண்டுள்ளமை, இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக செயற்பட்ட அனைவரும் இன்று அவர்களுடன் இணைந்தவாறே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரணிலின் கைது தொடர்பில் சர்வதேச கவனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். இதன்படி, கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட தருணத்திலேயே மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் இந்த தகவலை பதிவொன்றாக வெளியிட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், SHASHI THAROOR/X படக்குறிப்பு, சசி தரூர் உடன் ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். பொருத்தமற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிவதாகவும் அவர் கூறுகின்றார். சுகயீனமுற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு மனிதாபிமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்காக பல பத்தாண்டுகளாக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை இலங்கை விஜயத்தின் போது தான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்ததையும் அவர் இந்த பதிவின் ஊடாக நினைவுப்படுத்தியிருந்தார். பட மூலாதாரம், ERIK SOLHEIM /X படக்குறிப்பு, எரிக் சொல்ஹெய்மின் எக்ஸ் பதிவு இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கைக்கான நோர்வின் சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம்மும் தனது எக்ஸ் தள பதிவில் கவலையை வெளியிட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலும், தெற்காசியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பல தலைவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு கோருவதாக அவர் கூறுகின்றார். தடுப்பு காவலில் இருக்கும் அவரின் உடல்நிலைமை தெடர்பில் அனைவரும் கவலையடைவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கை 2022ம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வீழ்ச்சி கண்ட போது, அதனை மீட்டெடுக்க முன்னின்று செயற்பட்ட தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் கூறுகின்றார். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கூறிய அவர், இந்த குற்றச்சாட்டுக்கள் ஐரோப்பாவில் எந்த குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகவோ கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழலை எதிர்த்து போராடும் முயற்சிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், ஆனால் உண்மையான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்க மீது இலங்கையிலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல பத்தாண்டுகளாகவே காணப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு நபராக கருதப்படுகின்றார். 1970ம் ஆண்டு காலப் பகுதியில் அரசியல் வாழ்க்கைக்குள் பிரவேசித்த இவர், ஐந்து தடவைகள் பிரதமராகவும் ஒரு தடவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்கட்சி தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்த பெருமை ரணில் விக்ரமசிங்கவை சாரும். எனினும், 1970ம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்று வரை ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம், PMD SRI LANKA யாழ் நூலகம் எரிப்பு தெற்காசியாவிலேயே மிக பெறுமதி வாய்ந்த பெரிய நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாணம் நூலகம் 1981ம் ஆண்டு தீ வைக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் பெறுமதி வாய்ந்த 97000 புத்தகங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் நூலக எரிப்பானது, இலங்கையின் இனப் பிரச்னையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினரின் தலைமையில் தென் பகுதி மக்களை அழைத்து சென்று நூலகத்தை தீக்கிரையாக்கியமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியிருந்தார். ''எமது ஆட்சிக் காலத்தில் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். அது தொடர்பில் நான் மன்னிப்பு கோருகின்றேன்'. என 2016ம் ஆண்டு நாடாளுமன்ற அமர்வொன்றில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். பட்டலந்தை சித்திரவதை முகாம் பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழுவின் அறிக்கையின் முதல் பக்கம் இலங்கையில் 1987 முதல் 1989ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களை தடுத்து வைப்பதற்கான உருவாக்கப்பட்டதாக கூறப்படும் முகாமே இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் என சொல்லப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தின் பியகம என்ற பகுதியில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மற்றும் அதற்கு ஆதரவு வழங்கியோரை இந்த சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகவும், சிலர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. பட மூலாதாரம், BATALANDA COMMISSION REPORT படக்குறிப்பு, வீட்டுத் திட்ட வளாகத்தின் வரைபடம் அரச உரக் கூட்டுத்தாபனத்தின் வீட்டுத் திட்டத்திலேயே இந்த சித்திரவதை முகாம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்போதைய வீடமைப்புத்துறை அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்திருந்தார். இந்த பின்னணியில், இந்த சித்திரவதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இலங்கையின் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியை வகித்து வந்திருந்தனர். இந்த காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜீன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் 11,450 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜீன் மகேந்திரன், தனது உறவினருக்கு மோசடியாக முறையில் இந்த பிணைமுறி விநியோகத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அர்ஜீன் மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்திலும் ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு - நாளை விசாரணை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உடல்நிலை முடியாமை காரணமாக தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நாளைய தினம் (26) நடைபெறவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்து வருவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கொழும்பு மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை தொடர்பில் கவனம் செலுத்தி, விசேட மருத்துவர்களின் தீர்மானத்திற்கு அமையயே இறுதி முடிவு எடுக்கப்படும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் விஜேசிங்க ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்த எதிர்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ''வைராக்கியம் மிக்க அரசியலுக்கு எதிராக குரல் எழுப்புவோம். 26ம் தேதி கொழும்பிற்கு வாருங்கள்'' என தெரிவிக்கும் வகையிலான சமூக வலைத்தள பதிவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6261xep83yo
  11. குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு Published By: VISHNU 25 AUG, 2025 | 07:15 PM 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்­யப்­பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்­யப்­பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, திங்கட்கிழமை (25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளையை நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின் , கடற்கரை எல்லைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்தினை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன் , பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கட்டளை இட்டார். இவ் வழக்கு திங்கட்கிழமை (25) காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223356
  12. 25 AUG, 2025 | 04:48 PM (எம்.நியூட்டன்) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது. ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றதைப் போன்று அவரது கருத்து இருக்கிறது. நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதனையே இன்றும் வலியுறுத்துகின்றோம். எனவே, எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, எதிர்வரும் 30ஆம் திகதி செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம். அந்தப் போராட்டத்துக்கு மதத் தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள். https://www.virakesari.lk/article/223336
  13. ராமநாதபுரம்: 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு அமைக்க அனுமதி அளித்தது யார்? அடுத்தது என்ன? படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து, இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், அந்த மாவட்டமே 'மொத்தமாக அழிந்துவிடும்' என கவலையை வெளிப்படுத்துகின்றன, விவசாய, மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள். ஆனால், மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார். ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு - என்ன நடந்தது? ராமநாதபுரம் மாவட்டத்தின் காவிரி படுகையில் உள்ள 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அதற்கு அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 31.10.2023 அன்று விண்ணப்பித்தது. அப்போதே தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. படக்குறிப்பு, இத்திட்டம் அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் (சித்தரிப்புப்படம்) மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் (HELP - Hydrocarbon Exploration Licensing Policy) அடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது (OALP) ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல்கட்டமாக சுமார் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோகார்பன் கிணறுகளை, கிணறு ஒன்றுக்கு உத்தேசமாக ரூபாய் 33.75 கோடி செலவில் ரூபாய் 675 கோடி ரூபாய் செலவில் தோண்ட திட்டமிட்டு சோதனை கிணறுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்து. மத்திய அரசு, சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16, ஜனவரி 2020ல் வெளியிட்ட அரசாணையின் படி, முன்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு "ஆய்வு" கிணறுகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்த முறையை மாற்றி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் வகையில் திருத்தம் செய்தது. அதன்படி, பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது, கடலுக்குள் அல்லது கடலுக்கு வெளியே அமைக்கப்படும் இத்தகைய சோதனை ஆய்வு கிணறுகள் B2 பிரிவின் கீழ் வருகிறது, இத்தகைய B2 பிரிவு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு தேவையில்லை என்பது தான் அந்த திருத்தம். ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடிஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஆழமலந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி ஆகிய 20 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 20 இடங்களில் 2,000-3,000 மீட்டர் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்பது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னிச்சையான அமைப்பாகும். 'B' பிரிவு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக இது உள்ளது. ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? ஓஎன்ஜிசியின் முன்மொழிவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்தின் முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஓஎன்ஜிசி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த கிணறு துளையிடும் பணிக்கான அனுமதி என்பது தற்காலிகமானது தான் என்றும் எண்ணெய் அல்லது வாயு கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கிணறுகள் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் எச்சங்களும் கழிவுநீரும் முறையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி எண்ணெய் வளம் உள்ளதா என்று தேடுவதற்கு மட்டுமே, வணிக ரீதியிலான பணிகளுக்கு தனியாக சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது என்ன? மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், அடுத்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி, அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அந்த 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும். 'கடல்வளம் அழியும்' ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்வளம் அழிந்துபோகும் என்கிறார், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி. இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளில் சில பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்கரையிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள காப்பகமாக (Biosphere Reserve) உள்ளது. "இத்திட்டத்தின்படி, தொண்டி முதல் ஏர்வாடி வரையில் 20 கிணறுகள் வரவுள்ளன. நிலையான மீன்வளத்துக்கான தீர்வுகளை ஆராய்ந்து வரும் சூழலில் அதற்காக நடவடிக்கை எடுக்காமல் கடல் வளம், மீன்வளத்தை அழிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார். படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் வளம் குறைந்து போயுள்ளதால், எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படும் சூழலில் இது பிரச்னைகளை மேலும் அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். "மீன்கள் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்டம் அளிக்கிறது. அப்படியான சூழலில் கடல் வளத்தை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். நிலத்தில் ஒரு பிரச்னை என்றால் அது ஒருசில பகுதிகளுக்கு தான் இருக்கும், கடலில் பாதிப்பு என்றால் பல நூறு கிலோமீட்டருக்கு பாதிப்பு ஏற்படும்." என நல்லதம்பி கூறுகிறார். கடலில் வாழும் ஃபைட்டோபிளாங்டன் எனும் நுண்ணிய தாவரம் உலகுக்கு ஆக்சிஜனை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் செயல்முறையில் இந்த ஃபைட்டோபிளாங்டன் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆக்சிஜன் குறையும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 'விவசாயம் பாதிக்கப்படும்' இத்திட்டத்தால் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலைச்சாமி. "ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் வைகை ஆற்றின் கடைமடை பகுதிகள். இயற்கை வழித்தடமாக இருந்த சித்தார்கோட்டை கால்வாய் என்ற பகுதிக்குள் உள்ள ஒரு ஊரும் இதன்கீழ் வருகிறது. வைகை ஆற்றை ஒட்டி இருக்கும் இந்த கிரமாங்களில் 80,000 ஏக்கர் பாசனப்பரப்பு இருக்கிறது. புன்செய் நிலங்கள் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண்மை, ஆற்றின் வளம் பாதிக்கப்படும். குறிப்பாக வைகை, தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயின் வழித்தடங்கள் பாதிக்கப்படும்." என்றார். "நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு" இத்திட்டத்தால் நிலத்தடி நீர் மிகுந்த பாதிப்படையும் என்கிறார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன். "இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும். தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம் போன்ற இடங்களில் இந்த கிணறுகள் அமைந்தால் அதன் நிலவளமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். " என தெரிவிக்கிறார், பேராசிரியர் ஜெயராமன். பட மூலாதாரம், PROFEESOR JAYARAMAN படக்குறிப்பு, 'இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும்' - பேரா. ஜெயராமன் இத்திட்டத்துக்கு எதிராக மக்கள், விவசாயிகளை அணிதிரட்டி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஏல அறிவிக்கை வெளியான போது, அதை திரும்பப் பெறக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார். கடந்த 2020ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, காவிரி டெல்டா பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை அமைக்க முடியாத வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திருத்த வேண்டும் என்பது 'பூவுலகின் நண்பர்கள்' போன்ற சூழலியல் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம், THANGAM THENNARASU FB படக்குறிப்பு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திருமப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கிய செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திரும்பப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது." என தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவு என்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாநில அரசு இத்தகைய உறுதியை தெரிவித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு. பிரதமர் மோதி 2021ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இந்தியா குறைக்கும் என கூறியிருந்தார். உலக நாடுகள் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைத்துவரும் வேளையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியான முடிவு அல்ல என்கிறார் பிரபாகரன் வீர அரசு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78zyj33j9do
  14. மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது அண்ணை, ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியா பணியாற்றிய போது தீர்ப்பு வழங்கி இருந்தார். இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்பதால் ஆயுள்தண்டனை தான்.
  15. Published By: VISHNU 25 AUG, 2025 | 08:37 PM செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில், பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் 33ஆவது நாளான திங்கட்கிழமை (25) மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது. இன்றைய தினம், ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (26) பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 150 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான பாதீடுகளை தயாரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. https://www.virakesari.lk/article/223358
  16. அண்ணை, நீங்க கண்ட 2 கறுத்தக்கொழும்பானும் கண்ணால பார்த்து மகிழ்ந்தது மட்டுமே! சாப்பிடவில்லை. இந்த வருடம் கொஞ்சம் கூட காயத்தது, பழமாக முதலே கிளி, அணில், வௌவால் சாப்பிட்டுவிடுவார்கள். அதிஸ்டவசமாக மாம்பழ வியாபாரி தம்பிமார் இருவர் வந்து 100 பழங்களாவது பிஞ்சும் முத்தலும் பெரிதும் சிறிதுமாக பிடுங்கி எமக்கு 20 பழங்கள் தந்தவர். யாரிடமோ முற்பணம் கொடுத்து ஏமாந்த கதையைச் சொல்ல மிகுதிக் காய்களை அம்மா காசு வாங்காது கொடுத்துவிட்டார். 5 - 6 மாங்காய் அழுக, 10 பழத்திற்கு மேல் சாப்பிட்டேன்! ஆனால் முதலிரு நாட்களில் இருந்த சுவை பிந்திப் பழுத்த பழங்களில் இல்லை. நன்றாப் பழுக்காத பழம் தான் எனக்குப் பிடிப்பது. அண்ணை, உடலுழைப்பின்மை தான் பிரதான காரணமாக எனக்குத் தோன்றுகிறது. நன்றி அண்ணை.
  17. காஸாவில் பசி, பட்டினி அதிகரிக்க இஸ்ரேலின் நடவடிக்கை காரணமானது எப்படி? பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, காஸாவில் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது கட்டுரை தகவல் எமிர் நாடர் பிபிசி செய்திகள் 24 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் உணவுப் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது. எல்லைக்கு வெளியே நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்கின்றன, ஆனால் அவை உள்ளே செல்ல முடியாமல் சிக்கியுள்ளன. இந்த நிலை உருவானது எப்படி? உலகளவில் பசியை கண்காணிக்கும் முக்கிய அமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC), ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் செயல்படுகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின்படி, காஸாவில் உள்ள பாலத்தீனர்களில் நான்கில் ஒருவர், அதாவது சுமார் 5 லட்சம் பேர், கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறியப்படுகிறது. இந்த தகவல் பல காரணங்களால் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் முக்கியமாக, இந்த சூழல் "முழுவதும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது" என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்லும் வழியை இஸ்ரேல் "திட்டமிட்டு தடுக்கிறது" என்று தற்போது பல்வேறு உதவி அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. காஸா நகரப் பகுதியில் வாழும் மக்கள் தற்போது "பட்டினி, வறுமை, மரணம்" போன்ற கடுமையான பஞ்சநிலையை எதிர்கொள்கிறார்கள் என்று ஐபிசி அறிக்கை கூறுகிறது. பசியும், பட்டினியும் வேகமாகப் பரவி வருகிறது, தற்போதைய நிலை தொடர்ந்தால் செப்டம்பரில் காஸாவின் பல பகுதிகளிலும் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் அது எச்சரிக்கிறது. இந்த அறிக்கை மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: பட்டினி: குறைந்தது 5 வீடுகளில் 1 வீடு உணவுக்கே கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு: சுமார் 3 குழந்தைகளில் 1 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம்: ஒவ்வொரு 10,000 பேரில் குறைந்தது 2 பேர் தினமும் நேரடி பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் உயிரிழக்கின்றனர். பொதுவாக இந்த மூன்று "வரம்புகளில்" இரண்டு எட்டப்பட்டால் பஞ்சம் நிலவுகிறது என ஐபிசி அறிவிக்கிறது. ஆனால் காஸாவில் மூன்றும் எட்டப்பட்டுவிட்டதாக அது மதிப்பீடு செய்துள்ளது. "இறப்புக்கான" காரணி தற்போதைய தரவுகளில் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் கண்காணிப்பு அமைப்புகள் செயலிழந்துள்ளன. பல மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம் என்றும் ஐபிசி நம்புகிறது. இருந்தாலும் கிடைத்துள்ள சான்றுகள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு "இறப்பு" காரணியும் பஞ்ச நிலையை உறுதிப்படுத்துவதாக ஐபிசி முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியான சமயத்தில், ஹமாஸ் நிர்வகிக்கும் காஸா சுகாதார அமைச்சகம், ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் இரண்டு மரணங்களைப் பதிவு செய்தது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 112 குழந்தைகள் உட்பட 273 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் பஞ்சம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை பலமுறை மறுத்துள்ளார். பசி ஏற்பட்டதற்கு உதவி அமைப்புகளும் ஹமாஸும் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். காஸா எல்லையில் நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்க, அவற்றை எடுத்துச் செல்ல ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் முன்வரவில்லை என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. 'முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது' பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி காசா நகரில் உள்ள அல்-ரான்டிசி மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. பல வாரங்களாக, வயிறு வீங்கியும் எலும்புகள் தெரியும் அளவுக்கும் பட்டினியால் வாடும் குழந்தைகளின் படங்களை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் பஞ்சம் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் நீண்ட நாட்களாகவே இருந்தன என பலர் கூறுகின்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக காஸாவில் நடந்துவரும் போர், பாலத்தீனர்களுக்கு உணவு கிடைப்பதை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. இஸ்ரேல் காஸாவிற்குள் செல்லும் பொருட்களுக்கு நீண்ட காலமாகவே கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையானது. ஆனால் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவிற்குள் பொருட்கள் செல்லும் வழியை மூன்று மாதங்களுக்கு முற்றிலும் தடை செய்தபின் நிலைமை வேகமாக மோசமடைந்தது. சர்வதேச அழுத்தம் அதிகரித்த பின், மே மாத இறுதியில் சில பொருட்களை மீண்டும் அனுமதிக்கத் தொடங்கியது. அதே சமயம், ஐ.நா. தலைமையிலான பழைய உணவு விநியோக முறைக்குப் பதிலாக காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்ற அமெரிக்க அமைப்பு தலைமையிலான புதிய விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் கீழ், ராணுவம் கண்காணிக்கும் பகுதிகளில் நான்கு விநியோக மையங்கள் மட்டுமே உள்ளன. அங்கு செல்ல பாலத்தீனர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இதனால், முன்பு ஐ.நா. இயக்கிய 400 சமூக மையங்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. உணவைப் பெறுவது பாலத்தீனர்களுக்கு உயிருக்கு ஆபத்தான ஒன்றாகிவிட்டது. பட்டினி அல்லது மரணம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது என அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏனெனில், காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களில் உதவி பெற முயற்சிக்கும் போது, மக்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. மே மாத இறுதியில் இருந்து காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களுக்கு அருகில் குறைந்தது 994 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. பதிவு செய்துள்ளது. இஸ்ரேலிய படைகள் பெரும்பாலானோரைக் சுட்டுக் கொன்றதாக ஐ.நா. கூறுகிறது. இது நேரில் கண்ட சாட்சிகளாலும், காஸா மருத்துவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இஸ்ரேல் கண்காணிக்கும் இந்த புதிய முறையின் கீழ், காஸாவில் பஞ்சம் மேலும் மோசமாக பரவியுள்ளது. பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, இந்தோனேசிய ஹெர்குலஸ் விமானம் காஸா பகுதியின் மீது மனிதாபிமான உதவிப் பொருட்களை வீசுகிறது. அதிக உணவுப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்ததால், ஜூலை மாத இறுதியில் தினமும் உதவிப் பொருட்கள் கொண்டு வந்த அதிகமான லாரிகளை இஸ்ரேல் காஸாவிற்குள் அனுமதிக்கத் தொடங்கியது. சண்டையை தற்காலிகமாக நிறுத்தும் "தந்திரோபாய இடைவெளிகளை" அறிவித்து, உதவி லாரிகள் அந்தப் பகுதியை எளிதாக கடக்க அனுமதித்தது. சமீப வாரங்களில் அதிக உதவி பொருட்கள் வந்ததால், சந்தைகளில் சில பொருட்களின் விலை ஓரளவு குறைந்தது. இருந்தாலும் பல பாலத்தீனர்களுக்கு அவை இன்னும் மிக உயர்ந்த உயர்ந்தவையாகவே உள்ளன. சில சமயங்களில் ஒரு கிலோ மாவு 85 டாலரைத் தாண்டியது, ஆனால் அந்த விலை இப்போது குறையத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல், காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்ல சில கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தாலும், அவற்றை சேகரித்து விநியோகிப்பதில் இன்னும் பல தடைகள் உள்ளன என்று ஐ.நா.வும் மனிதாபிமான அமைப்புகளும் கூறுகின்றன. மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் 600 லாரிகள் காஸாவிற்குள் நுழைய வேண்டும், ஆனால் தற்போது அதில் பாதிக்கும் குறைவானவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இஸ்ரேல் விமானம் மூலம் உதவிகளை வீச அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் பெரிதும் பலனளிக்காத, ஆபத்தான அந்த முறை, உண்மையான தீர்விலிருந்து கவனத்தை சிதறடிக்கிறது என மனிதாபிமான அமைப்புகள் விமர்சிக்கின்றன. அதேபோல, பசி நெருக்கடிக்கு ஹமாஸ் தான் காரணம் என இஸ்ரேல் கூறிய குற்றச்சாட்டும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் உள்துறை அறிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள், ஹமாஸ் உதவிகளை திட்டமிட்டு திருப்பி அனுப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளன. காஸாவிற்குள் வரும் உதவி லாரிகள் சில நேரங்களில் கொள்ளையடிக்கப்படுவது உண்மைதான். ஆனால், இந்தக் கொள்ளைகள் பெரும்பாலும் உணவுக்காக தவிக்கும் பொதுமக்களாலும், பின்னர் லாபம் நோக்கி மறுவிற்பனை செய்ய முயலும் சில குழுக்களாலும் தான் நடைபெறுகின்றன என மனிதாபிமான அமைப்புகள் கூறுகின்றன. காஸாவில் பசி மற்றும் பஞ்சம் அதிகரிக்காமல் இருக்க, சாலை வழியாக அதிக அளவிலான உதவிப் பொருட்கள் தொடர்ந்து நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையைத் தான் பல மாதங்களாக, உதவி அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இன்னும் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இஸ்ரேலின் பதில் தற்போது பல இஸ்ரேல் அரச அதிகாரிகள் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ளனர். "ஹமாஸின் போலி பிரசாரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட கற்பனையான அறிக்கையை" ஐபிசி வெளியிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. காஸா எல்லையை நிர்வகிக்கும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பான 'கோகாட்', இந்த அறிக்கையை "ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிலிருந்து வந்த பாதி தரவுகளின் அடிப்படையில் உருவான, தவறான மற்றும் ஒரு பக்க சார்புடைய அறிக்கை" எனக் கூறியுள்ளது. "ஐபிசி தன் சொந்த உலகளாவிய தரநிலையை மாற்றியுள்ளது எனவும், பஞ்சத்தை எதிர்கொள்பவர்களின் அளவை 30% இலிருந்து 15% ஆக குறைத்துள்ளது எனவும், இறப்பு விகிதம் என்ற இரண்டாவது அளவுகோலை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது" என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஐபிசி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, முன்னர் பயன்படுத்தப்பட்ட, நிலையான தரநிலைகளையே இப்போது பயன்படுத்துகிறோம் என விளக்கியது. ஐபிசி "ஹமாஸின் தரவை" பயன்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுவது, காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய சில செய்திகள் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்திலிருந்து வருவதைக் குறிக்கிறது. ஆனால், போர் முழுவதும் அந்த அமைச்சகத்தின் இறப்பு மற்றும் காயம் தொடர்பான தரவுகள் நம்பகமானதாக இருப்பதாக பல தரப்புகளும் கருதுகின்றன. இந்த அறிக்கைக்கு ஐ.நா. நிறுவனங்களும் சர்வதேச தலைவர்களும் வலுவான பதில்களை அளித்துள்ளனர். "ஆக்கிரமிப்பு சக்தியாக இருக்கும் இஸ்ரேல், சர்வதேச சட்டத்தின் கீழ் தெளிவான பொறுப்புகளை வகிக்கிறது. அதில் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கும் கடமையும் அடங்கும். இந்த நிலைமை தண்டனையின்றி தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது"என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ் கூறினார். காஸாவிற்குள் உதவிகள் நுழைவதை இஸ்ரேல் "திட்டமிட்டு தடுத்ததே, பஞ்சத்தின் நேரடி காரணம் என்று ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் குறிப்பிட்டார். "காஸாவிற்கு தேவையான அளவு உதவியை அனுமதிக்க இஸ்ரேல் அரசு மறுத்ததே, இந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவுக்குக் காரணம். இது ஒரு தார்மீக விதிமீறல்" என பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி தெரிவித்தார். "பசியை போரில் ஓர் ஆயுதமாகக் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம். அதன் விளைவாக நிகழும் மரணங்கள் கூட, திட்டமிட்ட கொலை என்ற போர்க்குற்றத்தின் கீழ் வரக்கூடும்"என வெள்ளிக்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டார். காஸா நகர் மீது இஸ்ரேல் படையெடுப்பு ஐபிசி பஞ்சம் நிலவுகிறது என அறிவித்துள்ள காஸா நகரத்தின் மீது சர்ச்சைக்குரிய படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் நடத்துவதற்காக, இந்த வாரம் பத்தாயிரக்கணக்கான ரிசர்வ் படையினரை வரவழைப்பதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. ஹமாஸை தோற்கடிக்கவும், போரை முடிவுக்கு கொண்டு வரவும், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்கவும், காஸா நகரத்தை கைப்பற்றுவது தான் சிறந்த வழி என்று நெதன்யாகு கூறுகிறார். இந்த படையெடுப்பால், காஸா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பாலத்தீனர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். அந்தப் பகுதியை காலி செய்யத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு, மருத்துவர்கள் மற்றும் உதவி அமைப்புகளுக்கு, இஸ்ரேல் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கையில், "இந்த தாக்குதல், ஏற்கனவே பஞ்சம் பாதித்துள்ள பொதுமக்களுக்கு மேலும் பேரழிவை ஏற்படுத்தும்" எனக் கூறப்பட்டுள்ளது. "நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்ற பலரும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது" என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1kz2ywdrp7o
  18. Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:59 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களின்படி அவை குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இலங்கை அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன், ஆனால் அது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராகவும் இருந்த சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதியின் கைது குறித்து கவலை தெரிவித்த பல இலங்கை மற்றும் தெற்காசிய அரசியல்வாதிகளுடன் இணைந்துள்ளார். https://www.virakesari.lk/article/223313
  19. Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:55 PM இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்துள்ளார். இதன்போது தலைமன்னார் கடற்படையினரால் குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார். எனினும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த குடும்பஸ்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளர். பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதய நோயாளியான குறித்த குடும்பஸ்தர் தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223311
  20. பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். கட்டுரை தகவல் கார்த்திக் கிருஷ்ணா பிபிசி தமிழுக்காக 25 ஆகஸ்ட் 2025, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை(ஆகஸ்ட் 25) முன்னிட்டு அவரது 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', 4கே தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். 1990ஆம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, 'புலன் விசாரணை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அந்தத் திரைப்படத்தில் 'ஆட்டோ' சங்கர் என்கிற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் செல்வமணி. அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில், 'சந்தனக் கடத்தல்' வீரப்பன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். விஜயகாந்தின் நீண்ட் நாள் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் உருவான 'கேப்டன் பிரபாகரன்' 1991ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மன்சூர் அலிகான் பிரதான வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இது. அவருக்கும் இப்படம் மிகப்பெரியத் திருப்புமுனையாக அமைந்தது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கான குதிரைகள் என மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு, ஓடும் ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சி, கவுரவ வேடத்தில் சரத்குமார், முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், இளையராஜாவின் பின்னணி இசை, ஆட்டமா தேரோட்டமா பாடல் என இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் பாராட்டைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான ஆக்‌ஷன் திரைப்படமாக இன்றளவிலும் பேசப்படும் 'கேப்டன் பிரபாகரன்' குறித்து சில பிரத்யேகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள, படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம், பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம். மறுவெளியீடுக்கு கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பு தந்த மகிழ்ச்சியில் 'கேப்டன் பிரபாகரன்' குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர் ராவுத்தருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT இவ்வளவு வருடங்கள் கழித்தும் இந்தத் திரைப்படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு படைப்பாளியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்கு, தயாரிப்பாளர் ராவுத்தரும், நாயகன் விஜயகாந்தும், எனக்குக் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம். ஆனால் ஆரம்பத்தில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் சிறிய கருத்து வேறுபாடு இருந்தது படத்தின் வேலைகள் ஆரம்பமானவுடன், எனக்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை, படப்பிடிப்புக்கான இடங்களை இறுதி செய்ய அவகாசம் வேண்டும் எனக் கேட்டேன். அதற்கே இவ்வளவு நாட்களா என்று கேட்டார் தயாரிப்பாளர். வீரப்பன் தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், படப்பிடிப்புக்குச் சரியான இடங்களைப் பார்க்கவும் இந்தக் கால நேரம் தேவை என்றேன். ஒப்புக் கொண்டார். ஒரு புதிய ஜீப் வாங்கிக் கொடுத்தார். அதன் ஓட்டுநர், என் உதவியாளர், ஒரு புகைப்படக் கலைஞர் என நான்கு பேரும் புறப்பட்டுச் சென்றோம். மனம் போன போக்கில், தென்னிந்தியாவில் இருக்கும் அத்தனை வனப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தோம். நாங்கள் செல்லாத பாதையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அந்தப் பயணம். சில இடங்களுக்கு நடந்தும் சென்றோம். 'எமரால்ட் ஃபாரஸ்ட்' என்ற ஆங்கில திரைப்படத்தை, அமேசான் காடுகளில் படம் பிடித்திருப்பார்கள். அடர்த்தியான வனப் பகுதி, ஒரு மரத்தின் அடிப்பகுதியே 2 மீட்டர் அளவு இருக்கும் இடங்களிலெல்லாம் காட்சிகள் அமைந்திருந்தன. அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தில் தான், அதைப் போலவே ஒரு இடத்தை நான் தேடிக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் கேரளாவில் சாலக்குடிக்கு மேல் ஒரு இடம், அதிரப்பள்ளி, இடுக்கி பகுதிக்குக் கீழே ஒரு ஊர் எனப் பல இடங்களைக் கண்டறிந்தேன். அந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த முதலில் தயாரிப்பாளர் சரி என்று சொன்னார். பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT ஆனால் அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் இறந்து போனார்கள், வண்டி விபத்தில் ஒருவர் இறந்து போனார், குதிரை ஒன்று இறந்து போனது. இதெல்லாம் நல்ல சகுனங்கள் அல்ல என்று ராவுத்தர் நம்பினார். அவருடன் இருப்பவர்களும் அதை ஆமோதிக்க உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார். விஜயகாந்த், நாம் சென்னைக்கு சென்ற பிறகு அவரைப் பார்த்து சம்மதிக்க வைப்போம் என்று சொன்னதால், அனைவரும் புறப்பட்டோம். சென்னையில் சில காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அது திரைப்படத்துக்கு மிக முக்கியமான இடம் என்று சொல்லியும் அவர் சம்மதிக்கவில்லை. அதனால் முண்டந்துறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து, அங்கு சென்றோம். என் அதிர்ஷ்டம், அங்கு ஓயாமல் அடைமழை பெய்து கொண்டிருந்தது. மழை நின்றாலும் படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. படப்பிடிப்பு நிற்கவே கூடாது என்று நினைப்பார் விஜயகாந்த். எனவே அவரிடம் மெதுவாகச் சென்று, மீண்டும் கேரளா செல்லலாம் என்றேன். அவரும், இப்போது தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம், நாம் சென்றுவிடுவோம் என்று கூறவே, எல்லோரும் மீண்டும் கேரளா சென்றோம். தன் பேச்சை மீறி விஜயகாந்திடம் பேசிவிட்டு இப்படி நடந்ததால் ராவுத்தருக்கு என் மேல் சிறிய வருத்தம். சில நாட்கள் என்னோட பேசாமல் கூட இருந்தார். ஆனால் அந்த மன வருத்தம் எல்லாம் பிரசவ வலி போல தான். எங்கள் படைப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகவே. எனவே இந்தப் பிரச்னையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 100வது திரைப்படம் ஓடாது என்ற சினிமா சென்டிமென்ட் பற்றி... பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஸ்ரீ ராகவேந்திரா', கமல்ஹாசனின் 'ராஜ பார்வை' என அப்போது முன்னணியில் இருந்த இரண்டு நடிகர்களின் 100வது திரைப்படங்களே ஓடவில்லை. இதனால் கேப்டனின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மீதும் ஒரு வகையில் அந்த அழுத்தம் இருந்தது. ஒரு இயக்குநரின் முதல் படம் ஹிட் ஆனால் 2வது படம் ஓடாது என்கிற ஒரு நம்பிக்கையும் துறையில் இருந்தது. இரண்டும் சேர்ந்து எனக்கு லேசான அச்சத்தைத் தந்தன. ஆனால் 'புலன் விசாரணை'யின் வெற்றியால், தயாரிப்பு தரப்பு, படக்குழு என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கை, என் அச்சத்தைப் போக்கியது. படமும் வெற்றி பெற்றது. ராசியில்லாத நடிகையை நடிக்க வைக்கலாமா? படத்தின் நடிகர்கள் தேர்வு என்று வரும்போது பெரும்பாலும் ஆண் நடிகர்களே இருந்தனர். ஒரு பெண் கதாபாத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினேன். அதில் நடிக்க யார் வந்தாலும் முக்கியமான நிபந்தனை, 90 நாட்கள் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்பதே. ஆரம்பத்தில் சரண்யா (பொன்வண்னன்) அவர்களை ஒப்பந்தம் செய்தோம். இரண்டு நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பும் நடந்தது. அவருக்கு அந்தச் சூழல் அவ்வளவு சவுகரியமாக இல்லை, மேலும் ஒரு உடை அணிவது தொடர்பாக அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு. ஒரு நாள் வயிறு வலி என்று கிளம்பிச் சென்றவர், மீண்டும் வரவே இல்லை. அவருக்கு மாற்றாக யாரை நடிக்க வைப்பது என்று யோசிக்கும் போது ரம்யா கிருஷ்ணனின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அப்போது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர், ரம்யா கிருஷ்ணன் ராசியில்லாத நடிகை. அவர் நடித்தால் படம் ஓடாது. ஏற்னவே 100வது படம் என்கிற சென்டிமென்ட் வேறு உங்களுக்கு இருக்கிறது. எனவே அவர் வேண்டாம் என்று உறுதியாகச் சொன்னார். இதனால் எங்கள் தரப்பிலும் ரம்யா கிருஷ்ணன் வேண்டாம் என்று முதலில் கூறிவிட்டனர். ஆனால் எங்களுக்கோ உடனே படப்பிடிப்பில் நடிக்க ஒரு நடிகை வேண்டும், அதுவும் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு. இதனால் வேறு வழியே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தோம். அன்றைய சூழலில் ரம்யா கிருஷ்ணனுக்கு நடிக்க அந்தப் படம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை, எங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு அவரும் மிக முக்கியமான காரணமாக இருந்தார். பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS நாயகன் 35 நிமிடங்கள் வரை கதைக்குள் வராதது பற்றி... விஜயகாந்தின் அறிமுகமே படம் ஆரம்பித்த 34-35வது நிமிடத்தில் தான் வரும். அது எனக்குச் சவாலாகத் தான் இருந்தது. ஏனென்றால் 100வது படம் என்பதால், ஆரம்பத்திலேயே அவரது ரசிகர்களுக்காகச் சில விஷயங்களைச் செய்யலாம் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் முதலில் நாங்கள் ஒரு பிரதி தயார் செய்திருந்தோம். அதன்படி, 50வது நிமிடத்தில் தான் நாயகன் கதாபாத்திரம் வருவார். சரத்குமார் கதாபாத்திரம் வனத்துறை அதிகாரியாக இருந்தாலும், வனவிலங்கு புகைப்படக் கலையிலும் ஆர்வமாக இருப்பார். அவர் காடுகளைச் சுற்றும்போது ஒரு அழகானப் பழங்குடியினப் பெண்ணைச் சந்திப்பார். அவரைப் பின் தொடர்ந்து பல புகைப்படங்கள் எடுத்து, நட்பாகி, இருவரும் காதலிப்பார்கள். இதனிடையே வில்லன் கதாபாத்திரத்தை அவர் தேடுவதும் இருக்கும். இதன் பின் வில்லனிடம் சரத்குமார் கதாபாத்திரம் சிக்குவது, இறப்பது, அவர் குடும்பம் சென்னை வருவது, விஜயகாந்தை சந்திப்பது எனக் கதை தொடரும். ஆனால் இந்த முதல் பிரதியின் நீளம் 23,500 அடி. அதாவது ஏறக்குறைய 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடியது. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் திரைப்படம் இருக்கவே கூடாது என ராவுத்தர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எனவே பல காட்சிகளை நீக்கி, தற்போது இருக்கும் நீளத்துக்கு படம் தொகுக்கப்பட்டது. இதில் 35வது நிமிடத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தின் அறிமுகம் நடக்கும். இதற்கு முன்னால் 'பாசமுள்ள பாண்டியரே...' பாடல் வரும்போது, படத்தின் டைட்டில் வரும்போது, சரத்குமாருக்கு ஆபத்து ஏற்படும்போது என 3 இடங்களில் நாயகன் வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வர மாட்டார். இதற்குப் பிறகு நாயகனுக்கு சரியான அறிமுகக் காட்சி இல்லையென்றால் கண்டிப்பாக அது எனக்கு வினையாக முடியும். என்னால் திரையரங்குக்குள் நுழையவே முடியாது. ரசிகர்கள் விட மாட்டார்கள். ஆனால் நான் வைத்திருந்த காவல் நிலையும் தொடர்பான காட்சிகளும், நாயகனின் அறிமுகமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முதல் பாதியில் 5-6 காட்சிகளே விஜயகாந்த் வந்தாலும், படத்தின் பிரம்மாண்டம் அதையெல்லாம் மறக்கடிக்க வைத்தது. படத்தில் 7,000 அடி நீக்கப்பட்டது பற்றி... 23,500அடி திரைப்படத்தைக் குறைத்தோம் என்று குறிப்பிட்டேன் இல்லையா. இதில் சில முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளும் நீக்கப்பட்டன. விஜயகாந்த் கேப்டனாக இருக்க, அவர் தலைமையில் சில கமாண்டோக்களுடன், வில்லனை பிடிக்க காட்டுப் பகுதிக்கு வருவார்கள். வில்லனுக்கு தெரியாமல் வேறு வழியில் சுற்றி வந்து தாக்குவார்கள் என்பது போலவே கதை அமைத்திருந்தேன். இதில் கார் துரத்தல், 2-3 சண்டைக் காட்சிகள், வன விலங்கை இவர்கள் எதிர்கொள்வது எனக் கிட்டத்தட்ட 7,000 அடிக்கு பலவிதமான ஆக்‌ஷன் காட்சிகளைப் படம்பிடித்து வைத்திருந்தேன். அந்த பிரமாண்டமான காட்சிகளே தனியாக ஒரு படம் போல இருக்கும். அதையெல்லாம் நீக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, இந்தக் காட்சிகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த திரைப்படத்தில் உதவும், நான் இயக்கவில்லை என்றால் கூட உங்களின் அடுத்த தயாரிப்பில் பயன்படுத்துங்கள், என் பெயர் கூட போட வேண்டாம் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் அதன் மதிப்பு தெரியாமல், பாதுகாக்காமல் விட்டுவிட்டனர். இன்று இருந்தாலும் அதன் மதிப்பு பல கோடிகளுக்கு சமம் என்பேன். ஏனென்றால் அப்போதே கோடிகளில் செலவு செய்து தான் எடுத்திருந்தோம். விஜயகாந்த் கொடுத்த ஊக்கம் பற்றி... பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, விஜயகாந்துடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது அப்போது திருமணமாகி, குழந்தை இருக்கும் நாயகன் கதாபாத்திரம் என்பது அரிது. ஆனால் விஜயகாந்த் அந்த விஷயத்திலும் தயங்கவில்லை. ''புலன் விசாரணை' திரைப்படத்தில், வயது வந்த பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இது குறித்து சிலர் விமர்சனம் பேச, அப்போதே தயாரிப்பாளர், இந்தக் கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றலாமா என்று கேட்டார். ஆனால் விஜயகாந்த், அது வழக்கமானதாக இருக்கும், இதுவே கதைக்கு ஏற்றவாரு உணர்ச்சிகரமாக இருக்கும். மற்ற திரைப்படங்களில் இரண்டு நாயகிகள், பாடல்கள் எல்லாம் இருக்கும்போது, இந்தத் திரைப்படத்தில் இப்படியே இருக்கட்டும் என்றார். அவருடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது, வழக்கமான நாயகியாக அல்லாமல், நாயகனின் மனைவி கதாபாத்திரம் தான் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். அவரும் எதுவும் ஆட்சேபிக்கவில்லை. படப்பிடிப்பில் தொடர்ந்த ஆபத்துகள்... நான் ஏற்கனவே சொன்ன விபத்துகள் அல்லாமல், இந்தப் படப்பிடிப்பு முடியும் வரை பல்வேறு விதமான ஆபத்துகளை எங்களில் பலர் சந்தித்தோம். உயிருக்கே ஆபத்தான சூழல்களையும் எதிர்கொண்டோம். காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பின் போது கேப்டன் விஜயகாந்த் 2-3 முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று வந்தார். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, திடீரென அணை திறக்கப்பட்டது. அது எங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரின் நிறம் மாறியது. ஒருவர் தூரத்திலிருந்து நீண்ட நேரம் கத்திக் கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பைப் பார்த்துக் கத்துகிறார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அவசரஅவசரமாக எங்களிடம் ஓடி வந்து, அணை திறக்கப்பட்டுள்ளது. உடனே புறப்படுங்கள் என்று எச்சரித்தார். பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். கிரேனிலிருந்து கேமராவை இறக்குவதற்கு சில நிமிடங்களுக்குள் இடுப்பளவு தண்ணீர் வேகமாக எங்களைச் சூழந்தது. வேகமாகக் கேமராவை கிரேனிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு ஓடினோம். ஆனால் அந்த நீரின் வேகத்தில் கிரேன் சில கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. அது வெறும் நீர்ப்பகுதி அல்ல. பல பாறைகள் நிறைந்த வழி. அடித்துச் செல்லப்பட்ட கிரேன், பாறைகளில் மோதி, வளைந்த நிலையில்தான் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் யாராவது மாட்டியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியே தெரியாத அளவுக்கு மேலும், கீழும் சம நிலை ஆகும் அளவுக்கு தண்ணீர் அளவு இருந்தது. கடைசி நீதிமன்றக் காட்சியை நீக்கத் தயாராக இருந்தோம் படத்தின் இறுதிக் காட்சியைப் படம்பிடிக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த காலகட்டத்தில், 'பராசக்தி' படத்தில் வருவதைப் போல ஒரு நீளமான நீதிமன்றக் காட்சியை ரசிகர்கள் ஏற்பார்களா என்று யோசித்தேன். வில்லனை நாயகன் கைது செய்ததும் கதை முடிந்தது போல ஆகிவிடுமே, அதன் பிறகு 2000 அடி நீளக் காட்சிகளை ரசிகர்கள் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது. நாம் இதை தனி ரீலாக எடுத்து வைப்போம். மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த நீதிமன்றக் காட்சிகள் தேவையில்லை என்று தோன்றினால், அப்படியே நீக்கிவிடலாம். நீங்கள் வில்லனை தோற்கடிக்கும் இடத்திலேயே படம் முடிந்தது போன்ற உணர்வு கிடைக்கும். அங்கே முடித்துவிடலாம் என்று விஜயகாந்திடம் கூறினேன். முதல் பிரதியைப் பார்க்கும் போது கூட சந்தேகம் தொடர்ந்தது. ஆனால் முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். ஒவ்வொரு வசனமும் அனல் தெறித்தது. வீரப்பனைத் தாண்டி சமூகத்தில் எவ்வளவு குற்றவாளிகள் உள்ளனர் என்பது எனது சிறிய ஆய்வில் தெரிய வந்தது. பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பல அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு உண்டு என்பதை என்னிடம் பலர் அப்போது தெரிவித்தனர். அவற்றையெல்லாம் வெளிப்படையாக வெளியே பேச முடியாத நிலை. வசனமாக வைத்திருந்தேன். எதிர்காலத்தில் வீரப்பனைப் பிடித்தாலும் உயிருடன் பிடிக்க மாட்டார்கள் என்று நான் யூகித்தேன். பல ஆண்டுகள் கழித்து அதுதான் நடந்தது. எங்களது ஒட்டுமொத்த படக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தந்த கடின உழைப்பு, ஈடுபாடு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அதுதான் இன்றும் 'கேப்டன் பிரபாகரன்' கொண்டாடப்படுவதன் காரணமும் கூட. இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பலர் எங்களைப் பார்த்து சந்தேகப்படும் போது கூட விஜயகாந்த அவர்கள் ஒரு வார்த்தை எங்களைக் கேள்வி கேட்டதில்லை. ராவுத்தரும், 'விஜயகாந்த் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், கவலை வேண்டாம்' என்று உறுதுணையாக நின்றார். அவர்கள் இருவருக்கும் என்றென்றும் நான் கடமைபட்டவனாக இருப்பேன்". இவ்வாறு உணர்ச்சிபொங்க பேசி முடித்தார் ஆர்.கே.செல்வமணி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2eny4yy9d3o
  21. 25 AUG, 2025 | 03:58 PM மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி வெற்றிபெற்று, 222 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட பெயர்ப்பலகை இன்று (25) திரைநீக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரப்போர் நடத்திய பண்டாரவன்னியன் தலைமையிலான படைகளால் 1803ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று, மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பண்டாரவன்னியனின் வெற்றியை குறிக்கும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலக வளாகத்தில் தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையானது ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும். 1715ஆம் ஆண்டில் மரத்தாலும் மரவேலிகளாலும் இக்கோட்டை நிறுவப்பட்டது. 1721ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடிவில் இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. பின்னர், பிரித்தானியரால் இக்கோட்டை 1795ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. அடுத்து, 1803 ஆகஸ்ட் 25ஆம் திகதி பண்டாரவன்னியனால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு இடிக்கப்பட்டமை வரலாற்றுப் பதிவாகிறது. https://www.virakesari.lk/article/223329
  22. ரணில் கைது : நீதிமன்ற உத்தரவை மலினப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் - மக்கள் விடுதலை முன்னணி Published By: VISHNU 24 AUG, 2025 | 08:58 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் 'ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்றார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணையளிப்பதற்கு போதுமான காரணிகள் இல்லாததால் அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இன்று நீதிமன்றம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுபவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை கிடைத்திருந்தால் நீதிமன்றத்தை புகழ்வார்கள். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தவுடன் தேர்தல் காலத்தில் முட்டிமோதிக்கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள்.இவர்களில் 99 சதவீதமானோர் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.தமது குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் தான் இவர்கள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.இவர்களின் கூட்டிணைவு எமக்கு சவாலல்ல, ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்று கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் குரல் எழுப்பியவர்கள் தான் இன்று அவருக்காக ஒன்றிணைந்துள்ளார்கள்.நாட்டு மக்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். சிறு குற்றங்களுக்கு தண்டபணம் செலுத்த முடியாமல் எத்தனை பேர் இன்றும் சிறையில் உள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்யும் தவறுகளை பெரிதுப்படுத்த கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் அவரது ஆட்சியில் எவ்வாறு சட்டவாட்சி செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை மக்கள் ஆராய வேண்டும். அதிகாரத்தில் இருந்தவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்றால் சட்டத்தின் மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை தோற்றம் பெறும். எவ்வாறு சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது. ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து நாளை கொழும்புக்கு ஒரு தரப்பினர் வருவதாக குறிப்பிடப்படுகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார். https://www.virakesari.lk/article/223275
  23. 25 AUG, 2025 | 12:05 PM இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு கால பகுதிகளில், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற்று, நீதிமன்றினால், படகுகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை மீண்டும் தமிழகம் எடுத்து செல்வதில் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டமையால், அது தொடர்பில் படகு உரிமையாளர்கள், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் தமது படகுகளை தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருந்தனர். இந்நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு கடந்த வாரம் படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனுமதி அளித்தனர். அதனை அடுத்து, திங்கட்கிழமை (25) இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் தலைமையில் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்தனர். அவர்களை இலங்கை - இந்திய கடல் எல்லையில் வைத்து , இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்று, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று, அங்கிருந்து அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து செல்லவுள்ளனர். அங்கு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஏழு படகுகளையும் பார்வையிட்டு, அவற்றின் தரங்களை பரிசோதித்து, மீட்டு செல்ல கூடிய படகுகளை மீட்டு செல்லவும், ஏனைய படகுகளை மீட்பது தொடர்பில் ஆராயவுள்ளனர். குறித்த குழுவினர் மீண்டும் இராமேஸ்வரம் நோக்கி பயணிக்கவுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர், இலங்கை - இந்திய கடல் எல்லை வரையில் அழைத்து சென்று இந்திய கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223301
  24. மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம் 25 AUG, 2025 | 09:41 AM மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்த அமைச்சர், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் ஆகியோருடன் கூட்டாக ஊடக சந்திப்பினை நடத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி, மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்தில் கடவுசீட்டு, அலுவலகத்தை திறந்து வைத்து, கடவுசீட்டு வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பார். பின்னர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்து, நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன், சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார். மறுநாள் 02ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து, வட்டுவாகல் பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் தென்னை முக்கோண வலய செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். எமது அரசாங்கம் வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தற்போது நாட்டின் வருமானம் அதிகரித்து உள்ளது. அதனால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திக்காக அதிகளவான நிதிகளை ஒதுக்கீடு செய்யப்படும். அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தியே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/223286 இந்த மைதானம் வடமாகாணத்திற்குரியதாக இருப்பின் மாங்குளம் பகுதியில் அமைவதே பொருத்தமாகும்.
  25. Published By: DIGITAL DESK 3 24 AUG, 2025 | 11:46 AM வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கீழ் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்கள் "சிறந்த போர் திறன்" மற்றும்"தனித்துவமான தொழில்நுட்பத்தைப்" கொண்டவைகள் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை, ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட "பல்வேறு வான் இலக்குகளை அழிக்க இரண்டு வகையான ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபித்துள்ளன" என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடுகளைப் பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) சிறிது நேரம் கடந்த வட கொரிய வீரர்கள் மீது செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென் கொரியா உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு இடையேயான பலத்த பாதுகாப்புடன் கூடிய எல்லையை சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கடந்து சென்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் திங்கட்கிழமை முதல் இப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. வொஷிங்டனில் திங்கட்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை சந்திக்க உள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி, கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரச்சாரம் செய்தார். இருப்பினும், கிம்மின் சகோதரி லீயின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளை நிராகரித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் கிம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் கண்டித்து, அவற்றை "மிகவும் விரோதமான மற்றும் மோதல் நிறைந்தவை" என விவரித்தார். வட கொரியத் தலைவர் நாட்டின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் தனது நோக்கத்தை விரைவுபடுத்துவதாக சபதம் செய்தார். ஜனவரியில், வட கொரியா ஒரு ஹைப்பர்சோனிக் போர்முனையுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவுவதாகக் கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளரையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என கூறியது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பை ஆதரிக்க துருப்புக்களை அனுப்புவதற்கு ஈடாக வட கொரியா ரஷ்ய ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பெறுவது குறித்து தென் கொரிய மூத்த அதிகாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனர். https://www.virakesari.lk/article/223244

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.