Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 30 Aug, 2025 | 11:29 AM மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில, 100 பேர் காணாமல்போயுள்ளனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புகலிடக்கோரிக்கையாளர்களாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின்றன. இந்நிலையில், மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது புகலிடக்கோரிக்கையாளர்கள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து சென்ற மொரிடேனியா கடற்படையினர் கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 17 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் மாயமாகினர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்ப்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/223762
  2. 30 Aug, 2025 | 01:48 PM (எம்.மனோசித்ரா) ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார். இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார். அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223772
  3. 111 ஜோடிகளுக்கு திருமணம் தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 111 ஜோடிகளுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட துரை தம்பதியினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அரைப்பவுண் தாலி, கூறை சேலை மற்றும் இதர செலவுகளையும் குறித்த சிங்கப்பூர் தம்பதிகள் வழங்கி குருமார்களின் ஆசியுடன் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று அனைத்து தம்பதியினரும் சுபமுகூர்த்த வேளையில் தாலி கட்டிக்கொண்டனர். திருமணத்திற்காக 111 தம்பதிகளையும் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டார். சிங்கப்பூர் தம்பதிகள் தமது மகளுக்கு திருமணம் செய்ததையடுத்து இவ்வாறு ஏனையவர்களுக்கும் தமது சொந்த நிதியினூடாக திருமணம் செய்து வைக்க எண்ணிய உயரிய சிந்தனையை மணமக்கள் மனதார வாழ்த்தி நின்றனர். எமது சமூகத்தில் அதிக பணவசதி படைத்தவர்கள் வாழ்ந்துவரும் சூழலில் இவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன. https://web.facebook.com/Deranatamil/posts/1328599389269338?ref=embed_post -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/top-picture/cmev77kds002pqplpm33otrtn
  4. இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள் இன்று நாட்டிற்கு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விமானம் இன்றிரவு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmey32e1k0044o29n48og2bhu
  5. முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மறுநாள், வைத்திய பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmey4f80t003zqplpqomqc6j3
  6. பெண்களே அதிகம்: நாமக்கல்லில் சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன) ''எனக்கு 19 வயதாக இருந்த போதே என் கணவரின் கடனுக்காக, நான் கிட்னியை (சிறுநீரகம்) விற்றுவிட்டேன். அவர் குடித்தே இறந்து விட்டார். ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்துவிட்டதால் எனது உடலில் சக்தியே இல்லை. வேலைக்கும் போக முடியவில்லை. சத்தான உணவை சாப்பிடச் சொல்கிறார்கள். அதற்கு வசதியும் இல்லை. இந்த வேதனைக்கு இறந்துவிடலாம் என்று தோன்றி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கிறேன்!'' வார்த்தைகளை முடிக்க முடியாமல் குமுறி அழுதார் 45 வயது பெண், குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.60 ஆயிரத்துக்கு விற்றதாகக் கூறுகிறார். ''எனக்கு 17 வயதில் திருமணமானது. ஓராண்டில் எனது மகன் பிறந்தான். அடுத்த வருஷமே நான் என் கிட்னியைக் கொடுத்துவிட்டேன். அப்போது எனக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதை வாங்கி கடனை அடைத்தோம். ஒரு ரூபாய் கூட மிஞ்சவில்லை. அடுத்த ஒரு வருடத்திலேயே எனது கணவரும் கிட்னி கொடுத்தார். அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இப்போதும் நாங்கள் கடனில்தான் இருக்கிறோம். உடல் வலி தாங்காமல் உயிரைவிட முயன்றேன். எனது பேரன்தான் காப்பாற்றினான்.'' பேசப்பேச கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார் 55 வயது பட்டம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த இருவர் மட்டுமல்ல; நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் தாங்கள் வாங்கிய கடனுக்காக பலரும் சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளனர் என்பதும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து நடந்திருப்பதும் பிபிசி தமிழ் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடந்த சிறுநீரக விற்பனை தொடர்பாக, தமிழக அரசின் சிறப்புக்குழு ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், நமது களஆய்வில் தெரியவந்த உண்மைகளை கேட்டறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இதற்குத் தீர்வு காண குழுக்கள் அமைப்பது, விழிப்புணர்வு மேற்கொள்வது ஆகியவற்றுடன் குறிப்பிட்ட பகுதியிலிருந்து அடிக்கடி சிறுநீரக கொடையாளர் விண்ணப்பங்கள் வந்தால் அதைத் தீவிரமாகப் பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போலி ஆவணங்களைக் கொண்டு முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டது தொடர்பாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்பேரில், தமிழக அரசின் சுகாதாரத்திட்ட இயக்குநர் வினித் தலைமையில் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. குழு அளித்த அறிக்கையின் பேரில் திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இவை தவிர, வேறு சில நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அந்த குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழ்நாடு மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை பரிந்துரைத்ததை எதிர்த்து தனலட்சுமி மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'கடனுக்காக சிறுநீரக விற்பனை' படக்குறிப்பு, சிறுநீரகத்தை விற்க, இவர்களுக்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் இந்த சிறுநீரகத் திருட்டு விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்துள்ளது. இக்கட்சியின் சார்பில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி பள்ளிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சிஐடியூ தொழிற்சங்கம், சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் நகராட்சிகள், ஆலாம்பாளையம் பேரூராட்சி, வெப்படை, தேவனாங்குறிச்சி கிராமப்பகுதிகளில் தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது. அதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சிஐடியூ நாமக்கல் மாவட்டச்செயலாளர் அசோகன், ''இந்த பகுதிகளில் சிறுநீரகம் கொடுத்த 90 பேரை நாங்கள் அடையாளம் கண்டறிந்தோம். சிறுநீரகம் கொடுத்தவர்கள் பட்டியலில் விசைத்தறித் தொழிலாளர்கள், குடும்பத் தலைவிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், விவசாயக்கூலிகள், பஞ்சாலைத் தொழிலாளர்கள், பாரம் துாக்குபவர், காகிதம், சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் இருந்தனர்.'' என்றார். இவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் திரட்டும் முயற்சியாக, கடந்த ஜூலை 31 அன்று, காவிரி ரயில் நிலைய பகுதியிலிருக்கும் சிஐடியூ அலுவலகத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுநீரகம் கொடுத்து பாதிக்கப்பட்ட 54 பேர் அதில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தாங்கள் எதற்காக, எப்போது, எங்கே, எவ்வளவு தொகைக்கு சிறுநீரகத்தை விற்றனர் என்பதை வெளிப்படையாகக் கூறினர். தங்கள் குடும்பங்களில் மற்றவர்கள் சிறுநீரகம் கொடுத்த தகவலையும் பலர் அங்கு பதிவு செய்தனர். அவர்களில் பலரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. நேரில் சந்திக்க தயங்கிய அல்லது சந்திக்க இயலாத 50க்கும் மேற்பட்டோரிடம் அலைபேசியில் கலந்துரையாடியது. அவர்கள் அனைவருமே தாங்கள் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்ததாக கூறினர். சிறுநீரகத்தை விற்க, இவர்களுக்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதும் தெரியவந்தது. "சிறுநீரக மோசடியில் சிக்கியவர்களில் பெண்களே அதிகம்" படக்குறிப்பு, ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரகங்களை விற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டில், தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்துதலுக்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய மனித உறுப்பு மாற்று சட்டம் கடந்த 1994 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டங்களின் அடிப்படையில், வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரக திருட்டு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த 2015- ஆம் ஆண்டுக்குப் பின், கடுமையான விதிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை கொண்டு வந்துள்ளது. இதன்படி, ரத்த உறவு உள்ளவர்கள் மட்டுமே சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய முடியும்; அதுவும் அதற்கென உரிமம் பெற்ற மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாநில அளவில் உள்ள குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவத்துறை, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் கொண்ட குழுவுக்கு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பும், வந்த பின்பும் பெரும்பாலும் போலி ஆவணங்களைக் கொண்டே, இவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழைத்தொழிலாளர்களை குறிப்பாக விசைத்தறித் தொழிலாளர்களை குறிவைத்து இந்த சிறுநீரக முறைகேடு அதிகளவில் நடந்திருப்பது பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரகங்களை விற்றுள்ளனர். ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த பட்டம்மாள் (வயது 55), விசைத்தறித் தொழிலாளி. அவருக்கு 17 வயதில் திருமணம் நடந்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு அடுத்த வருடமே, கணவரின் கடனை அடைப்பதற்காக அவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாகத் தெரிவித்தார். பெங்களூரு சென்று சிறுநீரகம் கொடுத்த அவருக்கு அப்போது கிடைத்த தொகை ரூ.30 ஆயிரம் எனத் தெரிவித்தார். காவிரி ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த குமாரி (வயது 45), தனது 18 வயதிலேயே சிறுநீரகத்தைக் கொடுத்துள்ளார். கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதைக் கொடுத்ததற்கு அவருக்குக் கிடைத்த தொகை ரூ.60 ஆயிரம் என்று தெரிவித்தார். பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் 35 ஆயிரம் ரூபாய்க்கு தன்னுடைய சிறுநீரகத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய செல்வி, ''கடனை அடைக்க பெண்கள் சிறுநீரகத்தைக் கொடுத்துவிட்டால், ஆண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் கொடுக்கிறோம். ஆனால் அந்த ஆண்கள் வேலைக்குச் செல்வதில் பாதிக்கும் மேல் குடித்துவிட்டு, மீதியைத்தான் வீட்டுக்குக் கொடுக்கின்றனர். அதனால் மீண்டும் கடன் அதிகமாகிறது.'' என்றார். இந்த தகவலை உறுதிப்படுத்திய சிஐடியூ மாவட்டச் செயலாளர் அசோகன், சிறுநீரகம் விற்றவர்கள் என தாங்கள் அடையாளம் கண்ட 90 பேர்களில் 65 பேர் பெண்கள் என்பதைப் பட்டியலுடன் தெரிவித்தார். சிறுநீரகம் விற்ற ஆண்களில் பலரும் வலி தாங்காமலும், கடனை அடைக்க முடியாமலும் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பலரும் தகவல்களைப் பகிர்ந்தனர். ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த முனியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ''கடனை அடைக்க வழியின்றி, எனது மகன் சிறுநீரகம் கொடுத்தான். கொடுத்ததிலிருந்தே அவனுக்கு உடலுக்கு முடியவில்லை. வலி காரணமாக வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப்போகாததால் மீண்டும் கடன் அதிகமானது. கடைசியில் விரக்தியடைந்து 37 வயதில் உயிரை விட்டுவிட்டான்!'' என்றார். ''எனது மகன் பெங்களூருக்குப் போய் தன்னுடைய கிட்னியை விற்று வந்தான். சிறுநீரகம் கொடுத்த இரண்டே ஆண்டுகளில் அவன் உயிரை மாய்த்துக் கொண்டான். எனது மகன், மகள் இருவருமே இறந்து விட்டனர். அவர்களின் குழந்தைகளை வயதான காலத்தில் நான்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.'' என்று கூறி கண்ணீர் விட்டார் 70 வயதான மற்றொரு பெண் தனது கணவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்று ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தை விற்றதாக வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இவர்களைத் தவிர, பெயர் கூற விரும்பாத பலரும் சிறுநீரகத்தை விற்றதாக பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர். கடனை தீர்க்க தானே முகவரை அணுகி, சிறுநீரகத்தை விற்றதை பிபிசி தமிழிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் 55 வயதான பெயிண்டர் ஒருவர். ''நான் சிறுநீரகத்தை விற்று 25 ஆண்டுகளிருக்கும். எனக்கு கடன் நிறைய இருந்ததால், அப்போதிருந்த ஒரு புரோக்கரிடம் சென்று கேட்டு, எனது சிறுநீரகத்தை விற்றேன். கோவையிலுள்ள ஒரு தனியார் சிறுநீரக மையத்தில்தான் எனக்கு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. எனக்கு படிப்பறிவு கிடையாது. எது எதிலோ கையெழுத்து வாங்கினார்கள். அந்த புரோக்கர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது.'' என்றார் அவர். தனியார் மருத்துவமனைகள் கூறுவது என்ன? படக்குறிப்பு, நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை விற்ற சிலர், கோவையிலுள்ள மருத்துவமனைகளில்தான் தங்களுக்கு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில முகவர்கள், சிறுநீரகம் விற்பவர்களைக் கண்டறிந்து, கோவை, சென்னை, மதுரை, திருச்சி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இவர்களை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பல மாதங்கள் இவர்களை தங்க வைத்து, பலகட்ட பரிசோதனைகளுக்குப் பின் சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிறுநீரகம் பெறுபவரின் உறவினர்கள் பெயர்களில் உள்ள ஆவணங்களில், இவர்களின் புகைப்படங்கள் மட்டும் மாற்றப்படுவதாகவும், அங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு உறவுமுறை சொல்லி பதில் கூற வைத்ததையும் பலர் தெரிவித்தனர். சில ஆதாரங்களையும் இவர்களில் சிலர் வைத்துள்ளனர். தங்களுக்கு சிறுநீரகம் எடுப்பதற்கு முன் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில், அதே காரணத்துக்காக பல பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சிறுநீரகம் கொடுத்த பெண் ஒருவர் தெரிவித்தார். ஆனால் இவர்கள் பகிரும் பல விஷயங்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. இவர்களில் சிலர் மட்டுமே, தங்களுக்கு சிறுநீரகம் எடுக்கப்பட்ட மருத்துவமனை பெயர்களைத் தெரிவித்தனர். சிலர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் சிறுநீரகம் கொடுத்த தகவலைத் தெரிவித்த பலருக்கும், அந்த மருத்துவமனைகளின் பெயர்கள் கூட தெரியவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை விற்ற சிலர், கோவையிலுள்ள மருத்துவமனைகளில்தான் தங்களுக்கு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவர்கள் பெயர் தெரிவித்த 3 மருத்துவமனை நிர்வாகங்களிடம் பிபிசி தமிழ் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஒரு மருத்துவமனையில் 'அதற்கு வாய்ப்பேயில்லை' என்று மறுத்தனர். மற்றொரு மருத்துவமனையில், கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தை எடுக்கும் முன், மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் அடங்கிய குழுவாலும், வெளியில் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவாலும் பல விஷயங்கள் பரிசீலிக்கப்படுவதால் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று பதிலளிக்கப்பட்டது. சிறுநீரகக் கொடையாளர், அதைப் பெறுபவரின் உண்மையான உறவினர்தான் என்பதை மருத்துவமனை நிர்வாகங்களால் உறுதி செய்ய இயலாது என்று மற்றொரு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த ஆவணங்களைப் பரிசீலித்து, கொடையாளர் பெயரில் தரப்பட்ட ஆவணங்கள் அவரைச் சார்ந்தவைதான் என்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு என்று அவர்கள் கூறினர். சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? படக்குறிப்பு, சிறுநீரகம் கொடுத்த ஆண்களில் பலரும், வலி தாங்காமல் குடிக்கு அடிமையாகி விட்டதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலரும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். சிறுநீரகத்தை விற்பவர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்த சிறுநீரக விற்பனை முறைகேட்டுக்கு உதவும் தரகர்களை சந்திப்பதற்காக பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் சிறுநீரகம் கொடுத்த யாருமே, யார் மூலமாகச் சென்று சிறுநீரகத்தை விற்றோம் என்ற தகவலைச் சொல்ல மறுத்துவிட்டனர். சிலர் தனக்கு உதவிய முகவர் இறந்து விட்டார், இப்போது எங்கேயிருக்கிறார் என்பதே தெரியவில்லை என்று பல காரணங்கள் கூறினர். பல ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஆயிரம், 40 ஆயிரம் என்று துவங்கிய சிறுநீரக விலை, தற்போது ரூ.5 லட்சம் வரை சென்றிருப்பதாகவும் பலரும் தகவல் தெரிவித்தனர். பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், 7 மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம் கொடுத்துள்ளார். அவருடைய தந்தை, 25 ஆண்டுகளுக்கு முன்பு, கடனுக்காக ரூ.40 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தை விற்றுள்ளார். தந்தை இப்போதும் நன்றாக இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த இளைஞர் தற்போதுள்ள கடனுக்காக ரூ.5 லட்சத்துக்கு தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். புரோக்கர் கமிஷன் ரூ.50 ஆயிரம் போக, நாலரை லட்ச ரூபாய் இவருக்குத் தரப்பட்டுள்ளது. அதில் 4 லட்ச ரூபாயை கடனை அடைத்து விட்டு, தனது குழந்தை பெயரில் 50 ஆயிரம் ரூபாயை டெபாஸிட் செய்திருக்கிறார். சிறுநீரகம் கொடுத்த ஆண்களில் சிலர், வலி தாங்காமல் குடிக்கு அடிமையாகி விட்டதாக இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய பட்டம்மாள், ''விசைத்தறி வேலையில் எனக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய்தான் சம்பளம். எனது கணவருக்கு ஒரு நாளுக்கு 600 ரூபாய் கிடைக்கும். அவர் குடித்து விட்டு, 200–250 ரூபாய்தான் கொடுப்பார். எனது மருமகனும் குடித்துவிட்டு என் மகளை துன்புறுத்தினார். அதனால் என் மகள் உயிரை மாய்த்துக் கொண்டாள். அவளின் மகனையும் நான்தான் வளர்க்கிறேன். '' என்றார். சிறுநீரகத்தை விற்ற சிலருடைய வீடுகளுக்குச் சென்றபோது, அந்த குடும்பங்களின் வறுமையை அறியமுடிந்ததுடன் அவர்களின் குடும்பங்களில் ஏராளமான இளவயது மரணங்கள் நிகழ்ந்து இருப்பதும் தெரியவந்தது. நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகின்றன. ஜவுளித்தொழில் முழுவீச்சில் நடந்தாலும், இவர்களுக்கு வாரம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை, கிடைக்கும் கூலியும் குறைவு என்கின்றனர். பல மாதங்களில் வேலை நிறுத்தத்தால் அந்த வேலையுமின்றி கடன் அதிகரிப்பதாகச் சொல்கின்றனர். இப்பகுதியில் நிலவும் அதீத கந்துவட்டிக் கொடுமையும் இவர்களை கடனில் மூழ்கடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லோக் ஜனசக்தி நிர்வாகிகள் பலரும் பிபிசி தமிழிடம் விளக்கினர். படக்குறிப்பு, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், 7 மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம் கொடுத்துள்ளார். தமிழக அரசின் விளக்கம் என்ன? ''நாங்கள் கடன் வாங்கியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். விசைத்தறியில் 3 அல்லது 4 நாட்கள்தான் வேலை கிடைக்கும். அதில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து வாரந்தோறும் வட்டியையும், கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்குள் வேறு ஒரு தேவை வந்து மீண்டும் கடன் வாங்கவேண்டியிருக்கும்.'' என்கிறார் வித்யா. ''சிறுநீரகம் கொடுத்த அனைவருமே உடல், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்பில் உள்ளனர். சிறுநீரகம் கொடுத்தவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத அளவுக்கு உடல் வேதனையை அனுபவிக்கின்றனர். இந்த சிறுநீரக விற்பனை முறைகேட்டுக்கு அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதுடன் சிறுநீரகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாகக் கருதி, மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு முன்வரவேண்டும்.'' என்றார் சிஐடியூ மாவட்டச் செயலாளர் அசோகன். களஆய்வில் கண்டறிந்தது பற்றியும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக விற்பனை முறைகேடு நடப்பது பற்றியும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. ''சமீபத்தில் நடந்த சிறுநீரக முறைகேடு குறித்து ஆய்வு செய்த குழு அளித்த அறிக்கையின்படி, 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர்கள் இருவர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று அமைச்சர் தெரிவித்தார். இதுபற்றி செய்திக்குறிப்பில் விளக்கியதாக அவர் கூறினார். அந்த செய்திக்குறிப்பில், மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994-இன் படி உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக் குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படுமென்றும், மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்க ஆணை வெளியிடப்படுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். நாமக்கல் மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் சிறுநீரக விற்பனை குறித்து அமைச்சர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''அதற்காகவே அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து சிறுநீரகக் கொடைக்கு அடிக்கடி விண்ணப்பம் வந்தால் அதை அங்கீகரிக்கும் குழு, தனிக்கவனம் செலுத்தி, அவற்றை தீவிரமாகப் பரிசீலிக்கச் சொல்லியிருக்கிறோம். நாமக்கல் மாவட்டத்தில் இதுபற்றி விசாரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.'' என்றார். இதற்கிடையே, சிறுநீரக விற்பனை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. "இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. முக்கிய குறிப்பு மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ejxn52qzvo
  7. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப்பணி நிறைவில் 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப்பணி நிறைவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றத்திற்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அத்தோடு சட்ட வைத்திய அதிகாரிகளால் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வுகளின் இறுதி அறிக்கையும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் குறித்த சான்றுப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு 2025.08.03 அன்று காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஊடகங்களில் குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடமிருந்து குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் இதனுடைய இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என்ற அடிப்படையில் குறித்த வழக்கு நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmev4v1a0002mqplpg6tkooff
  8. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மேட் வில்சன் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர். இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது. தூதர் டபிள்யூ. அவெரல் ஹாரிமன் இதை 1952 வரை தனது இல்லத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தினார். ஆனால், தூதருக்கும் அவரது பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியாமல், இந்த முத்திரையில் "தி திங்" (The Thing) என அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு குழுக்களால் அழைக்கப்பட்ட ஒரு ரகசிய ஒட்டு கேட்கும் கருவி இருந்தது. இது ஏழு ஆண்டுகள் கண்டறியப்படாமல் தூதரக உரையாடல்களை உளவு பார்த்தது. சாதாரணமான ஒரு கலைப்படைப்பைப் பயன்படுத்தி எதிரி அமைப்பை ஊடுருவி உத்திரீதியாக நன்மையைப் பெற்றதன் மூலம், சோவியத்துகள் 'ஓடிஸியஸின் ட்ரோஜன் குதிரைக்கு' பிறகு மிகவும் புத்திசாலித்தனமான தந்திரத்தை செய்திருந்தனர். இது ஏதோ கற்பனை உளவு கதை போல் தோன்றினாலும் இது உண்மையில் நடந்தது. 'தி திங்' எவ்வாறு செயல்பட்டது? பட மூலாதாரம், John Little படக்குறிப்பு, எதிர்-உளவு நிபுணர் ஜான் லிட்டில், 'தி திங்'-இன் நகலை உருவாக்கினார் – அவரது பணி பற்றிய ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது ஜான் லிட்டில் என்ற 79 வயதான, உளவு நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான நிபுணர், இந்தக் கருவியால் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டு அவரே அதன் நகலையும் உருவாக்கியுள்ளார். அவரது அற்புதமான பணி பற்றிய ஒரு ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மே மாதம் அதன் முதல் நேரடி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த பின்னர், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் (National Museum of Computing) திரையிடப்பட உள்ளது. அவர் 'தி திங் -இன் தொழில்நுட்பத்தை இசை வடிவில் விவரிக்கிறார் - இது ஆர்கன் குழாய்கள் போன்ற குழல்களும், "டிரம் தோல் போல் மனித குரலுக்கு அதிரும் ஒரு புரையும் கொண்டது. ஆனால் இது ஒரு தொப்பி முள் போலத் தோன்றும் ஒரு சிறிய பொருளாக சுருக்கப்பட்டது. இதில் "மின்னணு இல்லை, பேட்டரி இல்லை, மற்றும் இது சூடாகாது" என்பதால் எதிர்-உளவு பரிசோதனைகளில் கவனிக்கப்படாமல் இருந்தது. இத்தகைய கருவியின் பொறியியல் மிகவும் துல்லியமாக இருந்தது - "ஒரு சுவிஸ் கடிகாரத்தையும் மைக்ரோமீட்டரையும் இணைத்து உருவாக்கப்பட்டது". அந்தக் காலத்தில் 'தி திங்' "ஒலி கண்காணிப்பு அறிவியலை முன்னர் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒரு நிலைக்கு உயர்த்தியது" என்று வரலாற்றாசிரியர் ஹெச் கீத் மெல்டன் கூறியுள்ளார். அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு தொலைநிலை டிரான்ஸ்ஸீவர் இயக்கப்பட்டபோது மட்டுமே ஸ்பாசோ ஹவுஸில் 'தி திங்' செயல்படுத்தப்பட்டது. இது ஒரு உயர்-அதிர்வெண் சமிக்ஞையை அனுப்பியது, இது கருவியின் ஆன்டெனாவிலிருந்து வரும் அனைத்து அதிர்வுகளையும் பிரதிபலித்தது. 1951ஆம் ஆண்டு மாஸ்கோவில் பணிபுரிந்த ஒரு பிரிட்டிஷ் ராணுவ வானொலி ஆபரேட்டர், 'தி திங்' பயன்படுத்திய அதே அலைவரிசையை தற்செயலாக டியூன் செய்து, தொலைவில் உள்ள ஒரு அறையிலிருந்து உரையாடல்களைக் கேட்டபோதுதான் இது கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டு, அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தூதரக இல்லத்தை ஆய்வு செய்து, மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கையால் செதுக்கப்பட்ட மர சிற்பத்தில் இருந்த பெரிய முத்திரை, திரைக்குப் பின் நடந்த தூதரக மட்ட உரையாடல்களைக் கேட்கும் காதாக இருப்பதைக் கண்டறிந்தனர். உளவாக பயன்பட்ட கலை 'தி திங்கின் வெற்றியைப் பற்றி சிந்திக்கையில், அதை இயக்கிய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான வடிம் கோன்சரோவ், "நீண்ட காலமாக, எங்கள் நாடு குறிப்பிட்ட மற்றும் மிகவும் முக்கியமான தகவல்களைப் பெற முடிந்தது, இது பனிப் போரின் போது எங்களுக்கு சில நன்மைகளை அளித்தது" என்று கூறினார். அந்தக் காலத்தில் மேற்கு நாடுகளை உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் எத்தனை 'திங்க்ஸ்' பயன்படுத்தியிருக்கலாம் என்பது சோவியத் உளவுத்துறைக்கு வெளியே யாருக்கும் இன்றுவரை தெரியாது. ஆனால் இந்த ஒட்டுக் கேட்கும் கருவியின் வெற்றி தொழில்நுட்ப புதுமையால் மட்டும் கிடைத்தது அல்ல. இது அழகிய பொருட்கள் குறித்த மக்களின் கலாசார மனப்பான்மைகளைப் பயன்படுத்தியதால் வெற்றியடைந்தது. கலைப்படைப்புகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நாம் பொதுவாக அந்தஸ்து, ரசனை அல்லது கலாசார ஆர்வத்தின் செயலற்ற அடையாளங்கள் என நம்புகிறோம். செதுக்கப்பட்ட மேப்பிள் மரத்தால் ஆன மர சிற்பத்தை பயன்படுத்தி ரஷ்ய உளவுத்துறை இந்த அனுமானத்தை ஆயுதமாக்கியது. வரலாற்றில் உளவு, மறைத்தல் மற்றும் ராணுவ உத்திக்காக கலை பயன்படுத்தப்பட்டதற்கு இது ஒன்று மட்டும் உதாரணம் அல்ல. மோனாலிசாவை வரைந்த லியோனார்டோ டா வின்சி, டாங்கிகள் மற்றும் முற்றுகை ஆயுதங்களையும் வடிவமைத்தார், பீட்டர் பால் ரூபென்ஸ் முப்பது ஆண்டு போரின்போது உளவாளியாக செயல்பட்டார். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மறைமுக மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை வடிவமைத்தனர். பிரிட்டிஷ் கலை வரலாற்றாசிரியரான (மற்றும் ராஜ கலை சேகரிப்பின் சர்வேயரான) அந்தோனி பிளண்ட், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போரின் ஆரம்பத்தில் சோவியத் உளவாளியாக இருந்தார். 'தி திங்கின் விசித்திரமான வழக்கில், இசை வரலாறும் முக்கியமானது. இதன் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பாளரான லெவ் செர்ஜியேவிச் டெர்மென், பொதுவாக லியோன் தெரமின் என்று அழைக்கப்படுகிறார். இவர் ரஷ்யாவில் பிறந்த கண்டுபிடிப்பாளரும் திறமையான இசைக்கலைஞருமாவார். அவர் உலகின் முதல் மின்னணு இசைக் கருவியை உருவாக்கினார் - இது அவரது பெயரால் தெரமின் என்று அழைக்கப்படுகிறது. இந்த கருவியை எதையும் தொடாமல் வாசிக்கலாம் - அதன் ஆன்டெனாக்களைச் சுற்றி கைகளின் அசைவுகள் காற்றில் நகர்ந்து நோட்களைக் கட்டுப்படுத்துகின்றன. தெரமின்-இன் தனித்துவமான ஒலி, 1950களில் அமெரிக்க அறிவியல் கதைகளை கொண்ட திரைப்பட இசைகளின் அடையாளமாக மாறியது - குறிப்பாக 1951 ஆம் ஆண்டு வெளியான தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்( The Day the Earth Stood Still) திரைப்படம், பனிப்போர் பய உணர்வைப் பற்றிய ஒரு உவமையாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. பல ஆண்டுகள் காக்கப்பட்ட ரகசியம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'தி திங்'-ஐ கண்டுபிடித்த லியோன் தெரமின், உலகின் முதல் மின்னணு இசைக் கருவியையும் உருவாக்கினார், இது அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. 'தி திங்' கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அது அமெரிக்க உளவுத்துறையால் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் 1960 ஆம் ஆண்டு மே மாதம், அணு ஆயுத சேகரிப்பின் உச்சத்தில், ஒரு அமெரிக்க யு-2 உளவு விமானம் ரஷ்யாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பான தூதரக நடவடிக்கைகளில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், பனிப்போர் உளவு ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதை நிரூபிக்க, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மர சிற்பத்தின் மூலம் சோவியத் தங்களை உளவு பார்த்ததை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். ஒரு தூதரக இல்லத்தில் நடந்த ஊடுருவல் எவ்வளவு சங்கடமான பாதுகாப்பு மீறலாக இருந்ததென்றால் தி திங்கை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவர ஒரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட வேண்டியிருந்தது என ஜான் லிட்டில் நம்புகிறார். ஆனால் 'தி திங்கின்' உண்மையான தொழில்நுட்ப சிறப்பு பொதுமக்களுக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை. மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் இந்தக் கருவி பிரிட்டிஷ் எதிர்-உளவுத்துறையால் SATYR என்ற குறியீட்டு பெயரில் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பீட்டர் ரைட் 1987 இல் தனது நினைவுக் குறிப்பான ஸ்பைகேட்சரில் (Spycatcher) அனைத்தையும் வெளிப்படுத்தும் வரை, இதன் விவரங்கள் அதிகாரப்பூர்வ அரசு ரகசியமாக இருந்தன. அந்தக் காலத்திலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டதாக இருந்தது மற்றும் பனிப்போர் உளவு விளையாட்டை வடிவமைத்த விதம் ஆகியவற்றால் 'தி திங்' வரலாற்றாசிரியர்களை ஈர்த்தது. ஆனால் இது ஓபரா அரங்குகள் மற்றும் கலைக்கூடங்களின் பாதுகாக்கப்பட்ட பிரம்மாண்டத்திற்கு வெளியே நிகழும் உயர் கலாசாரத்தின் விசித்திரமான மற்றும் இருண்ட வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது. அதில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒட்டுகேட்கும் கருவிகள் மற்றும் ராணுவ உளவுத்தகவல் சேகரிக்கும் கருவிகளாக உள்ள கையால் செதுக்கப்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குகின்றனர். தி திங், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையர் பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp89gv1vrj6o
  9. ஐ.நா செல்கின்றது 'நீதியின் ஓலம்' ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் 'நீதியின் ஓலம்' ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து 'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் கடந்த 23 ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஆரம்பமானது. குறிப்பாக இப்போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி இன்று (28) முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி அந்த 5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட 'நீதியின் ஓலம்' எனும், கையொப்பப் போராட்டம் இன்றுடன் நிறைவுக்கு வந்தது. குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படன. எழுமாறாக பெறப்பட குறித்த கையொப்ப போராட்டத்தில் சுமார் 130 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். முன்பதாக கடந்த ஐந்து நாட்களாக தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்ட இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://web.facebook.com/Deranatamil/posts/1328305695965374?ref=embed_post -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmev4eiea002kqplpdp813ifx
  10. நெல்லியடியில் பாரிய பண மோசடி - கைதானவர்களுக்கு விளக்கமறியல் சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 03 பெண்களும் 2 ஆண்களையும் தேடி வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சுவிஸ் நாட்டவரிடம் திருடிய பணத்தில், 75 இலட்ச ரூபாய் பணம், 09 ஆயிரம் சுவிஸ் பிராங், அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்று, அதிநவீன கையடக்க தொலைபேசிகள் - 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சுவிஸ் நாட்டில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வு கொடுப்பனவான பெருந்தொகை பணத்துடன், தாயகம் திரும்பி நெல்லியடி பகுதியில் பகுதியில் வயோதிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பணத்தினையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து, அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும், தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும், அவற்றினை நண்பர்கள், தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் பணத்தினை மாற்றியதாகவும் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 06 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைகளின் பின்னர் நேற்று (27) நீதிமன்றில் முற்படுத்திய வேளை 08 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmeuwi45g002no29n9j0zc2xv
  11. உக்ரேனின் மிகப்பெரிய உளவு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 03:18 PM உக்ரேன் கடற்படையின் உளவுக் கப்பலான சிம்ஃபெரோபோல் கடற்படை கப்பல் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (29) அறிவித்தது. ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிகல் உளவுத்துறைக்காக வடிவமைக்கப்பட்ட லகுனா-வகுப்பு, நடுத்தர அளவிலான கப்பல், டானூப் நதியின் டெல்டாவில் தாக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி உக்ரேனின் ஒடெசா பிராந்தியத்தில் உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது. உக்ரேன் அதிகாரிகளும் கப்பல் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர் என உக்ரேன் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2019 இல் சிம்ஃபெரோபோல் கப்பல் தனது செயல்பாட்டை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உக்ரேன் கடற்படையில் இணைந்தது. https://www.virakesari.lk/article/223702
  12. Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 01:39 PM கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை வெடித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றுலா பயணி வனவிலங்கு சரணாலயத்தில் பிரபலமான 'டஸ்கர்' (Tusker) பியரை குடித்துவிட்டு, மீதமுள்ளதை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கப்பட்டு "தந்தம் உள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்," என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை அவதானித்த கென்யர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அந்த பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. பிபிசி இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தியது. நிலப்பரப்பு மற்றும் நன்கு அறியப்பட்ட ஆண் யானை ஆகியவற்றை வைத்து, இது மத்திய மாகாணமான லைக்கிபியாவில் உள்ள 'ஓல் ஜோகி' (Ol Jogi) சரணாலயத்தில் படமாக்கப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறது. கென்யா வனவிலங்கு சேவை (KWS) மற்றும் சரணாலய நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. அந்த நபர் விதிகளை மீறியுள்ளதாகவும், இது போன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சரணாலய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். குறித்த நபர், மற்றொரு சரணாலயத்தில் காண்டாமிருகத்தைத் தொட்டு உணவளிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார், இதுவும் விதிகளுக்கு எதிரானது. இந்த நடத்தை அந்த நபரின் உயிருக்கும், விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மாசாய் மாராவில் சுற்றுலாப் பயணிகள் காட்டு விலங்குகளின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, கென்ய சுற்றுலா அமைச்சு வனவிலங்கு பூங்காக்களில் கடுமையான விதி முறைகளை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/223687
  13. Published By: Vishnu 29 Aug, 2025 | 03:39 AM தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம். https://www.virakesari.lk/article/223647
  14. பகிர்விற்கு நன்றி.
  15. Published By: Vishnu 30 Aug, 2025 | 02:45 AM ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு, ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட வரும், கால்கள் மடிந்த நிலையிலும் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223745
  16. தாய்லாந்து பெண் பிரதமர் நீக்கம் - தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார். 29 ஆகஸ்ட் 2025 தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெறிமுறையை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஷினவத்ராவின் இந்த செயல் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனையே முக்கியமாகக் கருதி, நெறிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதாகவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் இந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். இவர் தாய்லாந்து நாட்டின் இளம் தலைவராக அறியப்படுகிறார். 2024ம் ஆண்டு ஆகஸ்டில் தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். மேலும் அந்நாட்டின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.இவருக்கு முன்பாக 2011 - 2014ஆம் ஆண்டில் இவரின் உறவினரான யிங்லக் ஷினவத்ரா ஆட்சி செய்தார். இவர் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள். தாய்லாந்தில் பள்ளி படிப்பை முடித்தார். பின் இங்கிலாந்தில் உயர்கல்வியை முடித்தார். பின் 2021ஆம் ஆண்டு ஃப்யூ தாய் (Pheu Thai) கட்சியில் சேர்ந்தார். 2023-இல் கட்சியின் தலைவரானார். கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார். 2008ஆம் ஆண்டு முதல் இருந்து அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கப்படும் 5வது பிரதமர் ஆவார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னை அங்கிள் என அழைத்தார் ஷினவத்ரா அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹுன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், அவரை 'அங்கிள்' என அழைத்த பேடோங்டார்ன், அவரின் தேவைகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கசிந்ததை அடுத்து, இவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தாய்லாந்து, கம்போடிய எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஹுன் சென்னிடம் தொலைபேசியில் பேசிய பேடோங்டார்ன், 'தாய்லாந்து ராணுவ தளபதி கூலாக தோன்றவே விரும்பினார்' எனக் கூறியுள்ளார். இது நாட்டின் அரசியல் செல்வாக்கு கொண்ட ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். எனினும் இந்த தொலைபேசி அழைப்பை 'பேச்சுவார்த்தை யுக்தி' எனப் பேடோங்டார்ன் கூறினார். இனி ஹுன் சென்னுடன் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபடமாட்டேன் எனவும் அவர் கூறினார். ஹுன் குடும்பத்துடனான ஷினவத்ராவின் நட்பு பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஹுன் சென்னும், பேடோங்டார்னின் தந்தை தக்ஷின் ஷினவத்ராவும் நல்ல உறவில் இருந்துள்ளனர். ஆனால் தொலைபேசி உரையாடல் கசிந்த பின், ஹுன் சென், தக்ஷின் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். பேடோங்டார்ன் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டை மிகவும் நேசிக்கிறேன் என்றார் ஷினவத்ரா நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பேடோங்டார்ன் ஷினவத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார். "ஆனால், தாய்லாந்தை சேர்ந்தவராக இந்த நாட்டுக்காக உழைக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மக்களின் உயிர்களை நான் மிகவும் மதிக்கிறேன். பொதுமக்களும் சரி, ராணுவ வீரர்களும் சரி." எனக் கூறிய அவர், நான் ஹுன் உடனான உரையாடலில் சொந்த நலனுக்காக எதுவும் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் "மக்களின் உயிர்களை காப்பாற்றவே நினைத்தேன். அந்த உரையாடலில் அதைதான் வலியுறுத்தினேன்" என்றார். இந்த தீர்ப்பு தாய்லாந்து அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஓராண்டாக எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இந்த நாடு, மதம், அரசாட்சியை மிகவும் நேசிக்கிறேன்" என்றார். அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்தாம் வேச்சயாசாய் தற்காலிக பிரதமராக செயல்படுவார். பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியதால், துணை பிரதமர் பும்தாம் வேச்சயாசாய், இவருக்கு பதிலாக பிரதமராக (செயல்) பொறுப்பேற்பார். கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இவரே பிரதமராக செயல்பட்டு வருகிறார். பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly34v4z23do
  17. 29 Aug, 2025 | 05:26 PM (நா.தனுஜா) இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்தும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு (30) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருடனான தமது உடன்நிற்பை வெளிப்படுத்தி உரையாற்றிய ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமானது சுமை மிகுந்ததாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அந்த உறவுகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நீதிகோரித் தொடர்ந்து போராடிவருவதாகத் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படாமல் நாடு என்ற ரீதியில் நிலையான வளர்ச்சியோ அல்லது அபிவிருத்தியோ சாத்தியமில்லை எனவும் மார்க் அன்ட்ரூ பிரான்சே எடுத்துரைத்தார். அதேபோன்று தற்போது யாழ். செம்மணியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழியில் சிறுவர்களது மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்களும், பாடசாலைப்புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இது மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாகவும் குறிப்பிட்ட அவர், அண்மையில் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டதை நினைவுகூர்ந்ததுடன் இம்மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் எனத் தெரிவித்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, மனிதப்புதைகுழி அகழ்வு, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணை என்பன உள்ளடங்கலாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயன்முறைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உரியவாறு உள்வாங்கப்பட்டு, பங்காளிகளாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பிரஸ்தாபித்தார். அத்தோடு 'நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்த வழக்குகள் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஒத்துழைப்புடன் செயலாற்றுவதன் ஊடாகவே அவர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்பமுடியும்' என்றும் மார்க் அன்ட்ரூ பிரான்சே சுட்டிக்காட்டினார். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் இவ்விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படல் என்பன குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அவர், நீதியை நாடுவது என்பது ஒருபோதும் குற்றமாக இருக்கமுடியாது என்றார். 'குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முறையான விசாரணைகள் ஊடாகப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக இருக்கிறது. அதற்கமைய கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்' எனவும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/223723
  18. செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 29 Aug, 2025 | 07:16 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 174 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 37வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223736
  19. நாளைய போராட்டத்துக்கு கட்சி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் - கோவிந்தன் கருணாகரம் 29 Aug, 2025 | 06:51 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் நாளை முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்கவேண்டிய கடமை இருக்கிறது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். அதை முன்னிட்டு வடக்கு, கிழக்கு தழுவிய ஆர்ப்பாட்டம் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிக்கு சிவில் சமூகங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். அதேபோன்று அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் இந்த பேரணிக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் வேலை செய்துகொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்களும் எங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டோர் என்கிற விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது மாத்திரமன்றி, இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதாவது கடந்த போராட்ட காலங்களில் எங்களுடைய மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு மேலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று இறுதி யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தங்களுடைய உறவினர்களினால் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது நிலைமை பதினாறு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் அவர்கள் எங்கு, எவ்வாறு இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகங்கள் எங்களுடைய மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த புதிய அரசாங்கம் இன்று பல கடந்த கால சம்பவங்களுக்கான நீதியை கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களது நிலைமையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய உறவினர்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா, அவ்வாறு இருந்தால் அவர்களை கண்டுபிடித்து தங்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டிய கடமைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஏனென்றால், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் ஏன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போதும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து, இன்று வடக்கு, கிழக்கில் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பெரிய கடமை இருக்கிறது. இந்த தமிழ் மக்களது துயரங்களை நீக்குவதற்காக இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்பது ஒரு விடயமாக இருந்தாலும், புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்து, இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைக் காண்போம் என்று கூறிய இந்த அரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நீதியை கொடுக்க வேண்டும். நாளைய தினம் நடைபெற இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் கட்சி பேதமின்றி இன, மத பேதமின்றி அனைவரும் வலுச்சேர்க்க வேண்டிய ஒரு தேவையில், கடமையில் இருக்கின்றோம். அந்த வகையில் நாங்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நாளை நடத்தவுள்ள பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும். இந்த பேரணியை ஒரு பிரமாண்டமான பேரணியாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எங்களுடைய மக்களுக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறது. ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக தெற்கிலே அணி திரண்டிருக்கிறார்கள். எங்களை பொருத்தமட்டில் பல விதமான கதைகள் இந்த கைது சம்பந்தமாக இருக்கின்றன. வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ அரச சொத்துக்களை பிழையாக பயன்படுத்தினார்கள் என்பது போன்ற காரணங்கள் பல இருக்கின்றன. இவ்விடயமாக தனிப்பட்ட ரீதியிலே எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த கைது நடவடிக்கையை பற்றி தற்போதைய நிலைமையில் பெரிதாக விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய தினம் 29ஆம் திகதி அரசியல் கட்சிகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னெடுப்புடன் வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இந்த செம்மணி புதைகுழி உட்பட வடக்கு, கிழக்கில் இருக்கின்ற புதைகுழிகள் தொடர்பாகவும் கடந்த காலங்களில் வடகிழக்கில் ஏற்பட்ட போர்க்குற்றம் சார்பாகவும் ஒரு கையெழுத்துப் போராட்டத்தை நடத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்த கையெழுத்துகளை அனுப்புவதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் ஒரே நாளில் அதாவது இன்றைய நாள் வடக்கு, கிழக்கு தழுவிய அந்த கையெழுத்துப் போராட்டத்தை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும், இன்றைய தினம் வடக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறுகிறது. நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. இந்த தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் கேட்டிருக்கிறோம்... இன்னும் ஒரு திகதியை தீர்மானித்து அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளும் ஒரு கையெழுத்துப் போராட்டமாக கிழக்கில் செய்ய வேண்டும் என்று. இன்று வடக்கில் நடைபெற்றாலும் இன்னுமொரு திகதியில் மிக விரைவில் கிழக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறும். அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அரசாங்கம் அப்படி அரசியல் பழிவாங்கல் அல்ல. கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்களும் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அதேபோன்று புதிதாக வந்த அரசாங்கமும் பல நூற்றுக்கணக்கான கொள்கலன்களை எவ்விதமான பாதுகாப்பு பரிசோதனைகளும் இல்லாமல் விடுவித்திருக்கின்றார்கள். அதுவும் ஒரு ஊழல்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எங்களைப் பொறுத்தளவில் ஊழல் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் ஆட்சேபனை இல்லை என்றார். https://www.virakesari.lk/article/223735
  20. அமெரிக்காவின் 50 % வரி விதிப்பால் ஐ போன் விலை உயருமா? - டிரம்ப் நிர்வாக முடிவுகளை ஆப்பிள் நிறுவனம் எப்படி கையாளுகிறது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இந்த புதிய வரிகள் ஐபோன்களுக்குப் பொருந்துமா? இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவீத இறக்குமதி வரி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டி, இதன் காரணமாகவே இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரிவிதிப்படுகிறது என்கிறார் டிரம்ப். புதிய வரிகளால் என்ன பாதிப்பு? இனி வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இந்தப் புதிய வரி விகிதங்களின்படி அமெரிக்க அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அந்த நிறுவனம் பொருளின் விலையை உயர்த்தி வரிச் செலவை ஈடு செய்தால், இந்தச் சுமை முழுவதும் அமெரிக்க நுகர்வோரின் மீதுதான் விழும். அப்படி சுமத்த விரும்பாத நிறுவனங்கள், ட்ரம்பால் வரி விதிக்கப்படாத நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பலாம். இதனால், வரி விதிக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்படலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வரி உயர்வின் நேரடி பாதிப்பை எதிர்கொள்வது அமெரிக்க நுகர்வோராகவே இருப்பார்கள் ஐபோன்களுக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கப்படும்? தற்போதைய சூழலில் ஐபோன்களுக்கு இந்தப் புதிய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பெருமளவில் ஆசியாவில்தான் தயாராகின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இறக்குமதி வரி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் ஆறாம் தேதி 'ஆப்பிள்' வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிவித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்குப் பெறும் முயற்சியாகவே இந்தத் திட்டத்தை டிம் குக் அறிவித்திருப்பதாக 'ப்ளூம்பர்க்' கூறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தபோது, ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஜூலை மாத இறுதியில் அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய டிம் குக், அமெரிக்காவில் விற்பனையாகும் ஐ போன்களில் பெரும்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும் ஐபேட், ஐவாட்ச், மேக்புக் போன்றவை வியட்னாமில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். செமி கண்டக்டர்கள் உள்பட எந்தெந்தப் பொருட்கள் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியமானவை என அமெரிக்காவின் வர்த்தகத் துறை ஆராய்ந்து வருதாகவும் அது நிறைவடையும்வரை அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன்கள் மீது வரிகள் விதிக்கப்படாது என்றும் ப்ளூம்பர்க் கூறுகிறது. சீனாவில் பெருமளவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு, தனது உற்பத்தியை வேறு பல நாடுகளுக்கும் பரவலாக்கியது. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிகள் மீது வரிகளை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்ததையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் இந்தியா மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்குப் பிறகு வரிகள் அமலுக்கு வந்தபோது, இது 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதாகக்கூறி கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. எதிர்காலத்தில் ஐபோன்களுக்கு வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டா? பட மூலாதாரம், Getty Images "தற்போதைய கொள்கையின்படி இறக்குமதியாகும் செமிகண்டக்டர்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றுக்கு எவ்வித வரிகளும் கிடையாது. ஆகவே, ஐபோன்களைப் பொறுத்தவரை இந்த வரி விதிப்புப் பிரச்சனை இப்போதைக்குக் கிடையாது. எதிர்காலத்தில் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார் குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் நிறுவனரான அஜய் ஸ்ரீ வத்ஸவ். ட்ரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பாதிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச்சின் ஆய்வுப் பிரிவு இயக்குநரான தருண். "அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவிற்கு வெளியிலும் போன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தேவை. ஆகவே இதற்கு வரி விதிக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன். மேலும் ஐபோன்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் விற்பனை இருக்கிறது. ஆகவே வரி விதித்தாலும் பாதிப்பின் அளவு சற்று குறையும்" என்கிறார் தருண். இந்தியாவில் ஐபோன்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான ஐ போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன எதிர்காலத்தில் ட்ரம்ப் ஸ்மார்ட் போன்களுக்கும் வரிகளை விதித்தால் அமெரிக்காவில் நிச்சயம் அதன் விலைகள் உயரும். ஆனால், இந்தியாவில் என்ன ஆகும்? "இந்தியாவில் விலைகள் உயராது. காரணம், இந்தியாவில் விற்பனையாகும் போன்கள் இங்கேயே தயாராகின்றன. மிக உயர்ந்த ரகம் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் வெளிநாடுகளில் தயாராகிறது. ட்ரம்பின் வரி அந்நாட்டிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதால் இந்தியாவில் ஐபோன்களின் விலை உயர வாய்ப்பில்லை" என்கிறார் அஜய் ஸ்ரீவத்ஸவா. ஐபோனின் விலைகளைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே விற்பனையாகிறது என்பதால், உள்ளுர் வரிகள் மட்டுமே விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் பொருளாதார நிபுணரான பிரபாகர். ஐபோன்களுக்கு வரி விதித்தால் என்ன ஆகும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐ போன்களுக்கு வரி விதிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது ஆப்பிள் நிறுவனமாகத் தான் இருக்கும். "ஐபோன்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒருங்கிணைப்பு மட்டும்தான் நடக்கிறது. இதற்கான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன. போன்களுக்கு வரி விதித்தால், ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால்தான் இப்போதைக்கு வரி இல்லை. ஆனால், உற்பத்தியை அங்கே மாற்றச் சொல்லி அந்நிறுவனத்திடம் சொல்லிவருகிறார் ட்ரம்ப். ஆப்பிள் என்ன செய்யுமெனப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, இந்த வரியினால் பெரிய பாதிப்பு என்பது ஜவுளி, நகைகள், வாகன உதிரிபாக உற்பத்தி போன்றவற்றில்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது வேறு சந்தைகளைப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், வேறு சந்தைகள் எதிலும் இவ்வளவு விலை கொடுத்து நம் பொருட்களை வாங்க மாட்டார்கள். ஆகவே இந்தத் துறைகள் குறித்துதான் நாம் பெரிய அளவில் கவலைப்பட வேண்டும். இந்தியாவிலும் ஐபோன் உற்பத்தியாகிறது என்ற பெயரும் வேலைவாய்ப்பும்தான் இதனால் கிடைக்கிறது. வேறு பலன்கள் இல்லை" என்கிறார் பிரபாகர். அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் புதிய, மேம்படுத்தப்பட்ட ஐபோன் 17 மாடலை வெளியிடவிருக்கிறது. செப்டம்பர் 9ஆம் தேதி இந்த புதிய மாடல் அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் இந்த போனுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபோன் 17 மாடலைப் பொறுத்தவரை மொத்தம் நான்கு வேரியண்ட்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நான்கு வேரியண்ட்களுமே இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகவிருப்பதாக ஆப்பிள் வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'ப்ளும்பர்க்' இணையதளம் தெரிவிக்கிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15ljz3n1v1o
  21. Published By: Vishnu 25 Aug, 2025 | 06:28 AM அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் முதல் 1985- ஓகஸ்ட் 24 ம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும் தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம் என்பதுடன் இந்த இனஅழிப்பின் 40 வருட நினைவு தினம் 24-8-2005 ஞாயிற்றுக்கிழமை ஆகும். திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8 மையில் தொலைவில் வயலூர் கிராமம் 1972 ம் ஆண்டு காணியற்ற வறிய மக்கள் 200 குடும்பங்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது. அரசாங்கம் அக்கால பகுதியில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மரவள்ளிக் கிழங்கும், குரக்கனும் சாப்பிடுமாறும் உணவு விடுதிகளில் சோறு சமைக்க கூடாது என கேட்டுக் கொண்ட காலப்பகுதியில் இக்கிராமம் உணவு மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அரசாங்க த்தின் திட்டத்தின் கீழ் குடியமர்தப்பட்டது. இக் கிராமத்தை அடைவதற்கு சாகமத்திலிருந்து காட்டு வழிபாதை மட்டும் உள்ளதுடன் நான்கு சக்கர உழவு இந்திரங்கள் மாட்டுவண்டிகள் என்பவை விவசாயத்துக்கான உள்ளீடு மற்றும் உற்பத்திகளை ஏற்றிச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டன, அதேவேளை ஏழைகள் வழமையாக இத்தூரத்தை நடந்து சென்று வந்தனர். இவர்கள் தடிகள், களிமண், ஒலை புல்லுகளினால் தமது இருப்பிடங்களை அமைத்து குடியமர்தப்பட்ட இவர்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள் என்பன இருக்கவில்லை. இம் மக்கள் மலோரியா மற்றும் நீரிலான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதுடன் தமது வைத்திய சேவையை பூர்த்தி செய்ய 10 மைலுக்கு அப்பால் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. இருந்தபோதும் தமது விவசாயமான சோளம், குரக்கன், மரவள்ளி போன்ற பயிர்களை பயிர் தொடர்ந்து செய்துவந்ததுடன் அவர்களது ஆடுகள், கோழிகளை நரிகள், சிறுத்தைகள், திருடிச் சென்ற அதேவேளை காட்டுப்பன்றிகள் பயிர்களையும் நாசம் செய்தன. ஆயினும் அவர்கள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் மகிழ்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். இத்தகைய ஒரு சமூகம் தான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டது. இந்த யுத்த நிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்தனா தலைமையிலான அரசாங்க குழுவும். (ரி.யு.எல்.எப்) தமிழர் விடுதலைக் கூட்டணியிலான விடுதலை இயக்கங்களான தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ், ரெலோ ஆகிய 5 இயக்கங்களுக்கும் இடையிலான திம்புவில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயம் இராணுவப் படைகள் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன. 1985ம் ஆண்டு 8ம் மாதம் 24 ம் திகதி அதிகாலைவேளை வயலூர் மக்கள் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வயலூரின் தாக்குதலில் விதவையாக்கப்பட்ட பெயர் குறிப்பிடாத 5 பிள்ளைகளுக்கு தாயானவர் அவருக்கு 3 பெண்பிள்ளைகள் அவர் கூறும் பொழுது இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் எனது கணவர் கொல்லப்பட்டார். நாங்கள் வயலூரில் கிழங்கு, மாப்பொருட்களான மரக்கறிவகைகள், பழமரங்கள் செய்கைபண்ணி வாழ்ந்துவந்தோம். ஆனால் எங்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள், பாடசாலை, வைத்தியசாலை இருக்கவில்லை. 1985.8.24 திகதி அதிகாலை 6 மணியிருக்கும் பொழுது நான் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு தொகை மனிதர்கள் துப்பாகியுடன் எமது குடிசைகளை சுற்றி நின்று கொண்டிருப்பதை அவதானித்தேன் . நான் பீதியடைந்து வந்தவர்களைக் கண்டு மிகப்பயத்தில் நடுங்கினேன். நான் பதற்றப்பட்டிருப்பதை கண்டுகொண்ட அவர்கள் என்னை நெருங்கி சிங்கள மொழியில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். எனக்கு அவை விளங்கவில்லை, அப்பொழுது எனது கணவர் வந்ததால் நட்புணர்வு சைகைகளை காட்டி நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் வாளியை எடுத்துக் கொண்டு தங்களுடன் வருமாறு கேட்டனர். எனது கணவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். குடிசைகளுக்குள் புகுந்து அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாவரையும் வெளியில் கொண்டதுடன் வயோதிபர் நோயாளிகள் என்போரை அப்பால் செல்லுமாறு கூறினர். பின் உடல் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றனர், இதில் பெண்களும் அடங்குவர். அங்கிருந்து கிழக்கு திசையாகக் காட்டுப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம். இராணுவச் சிப்பாய் ஆண்களை அழைத்து தமது காலை ஆகாரத்திற்கு முகம் கழுவுவதற்கு நீர் கொண்டுவருமாறு கேட்டனர். அப்பொழுது காலை 8 மணியிருக்கும் அவ்வாறே ஆண்கள் தண்ணீர் கொண்டுவந்ததும் சிப்பாய்கள் தமது காலை ஆகாரத்தை சாப்பிட்டனர். ஆனால் நாங்கள் பட்டினியாக இருந்தோம், ஒரு கோப்பை தேனீர் கூட கிடைக்கவில்லை. அவர்கள் தமது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் எல்லோரையும் தம்மோடு வருமாறு கூறினர், ஆனால் எங்கே என்று கூறவில்லை. அவர்கள் கட்டளைக்கு இணங்கி நாங்கள் காட்டுவழிபாதை ஊடாக சென்றோம். அப்பொழுது மற்றுமொரு இராணுவச் சிப்பாய்க் குழு ஒன்றை சந்தித்தோம். அக்குழுவிற்கு தலைமை தாங்கிய உத்தியோகத்தர் ஆண்களுடன் பெண்களை அழைத்து வந்ததை பிழையெனக் கண்டுகொண்டார். இரண்டாது குழு தலைவர் பெண்களிடம் வந்து தமிழிலே பேசினார். அவர் கூறும்போது நீங்கள் ஆண்களுடன் வரவேண்டியதில்லை, இராணுவ வீர்கள் தமக்கு அறிமுகமற்ற பகுதியில் இருக்கின்றனர். எங்களுக்கு ஆண்கள் தேவை அந்த மரத்தின் கீழ் சென்று மதியம் வரை காத்திருங்கள், ஆண்கள் திரும்பிவருவார்கள் என்றார். நாங்கள் அந்த மரத்தின் கீழ் காத்திருந்தோம், அவர்கள் குமரன் குளத் திசையில் சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஆண்கள் திரும்பிவரவில்லை. சூரியகதிர் தலையை சுட்டெரிந்தன, எமது ஆண்கள் திரும்பிவரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. வீட்டில் இருக்கும் எமது குழந்தைகளுக்காகவும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எமது ஆண்களுக்காகவும் உணவு சமைக்க வேண்டியிருந்தது. எங்கள் குடிசைகளுக்கு திரும்பிவந்து உணவு சமைப்பதில் ஈடுபட்டோம், அப்பொழுது கொலை செய்தி வந்தது. இச் செய்தியை கொண்டுவந்தவர் உயிர் தப்பி வந்தவர். ஏனையவர்கள் குமரன் குளப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டு கிடக்கின்றனர் என கூறினார். இச் செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் பாதுகாப்புக்காக உடுத்த உடையுடன் நடந்து சென்று திருக்கோவில், பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தோம். பின் படுகொலை செய்யப்பட்டவர்களை வயோதிபர்கள் அவ் இடத்துக்கு சென்று சடலங்களை பூர்விக கிராமத்துக்கு கொண்டுவந்து உரிய மரணச்சடங்குடன் புதைக்கப்பட்டனர். வயலூரில் எங்களின் சொத்துக்கள் யாவற்றையும் இழந்தோம். கே.வேலுப்பிள்ளை என்பவர் தனது 2 மகன்களான குழந்தைவேல் ஜெயகாந்தன்,(22) நாகலிங்கம்(22) மருமகன் சின்னவன் கந்தசாமி(30) தனது மூத்த சகோதரன் தம்பிப்பிள்ளை மாமா ஆன ஏரம்பு என்பவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. படுகொலையின் போது உயிர் தப்பிய வர்த்தகரான வைரமுத்து கனகசபை பின்பருமாறு கூறினார். அடிக்கடி வியாபார நிமித்தம் வயலூருக்குச் செல்லும் நான் 23 ம் திகதி பிற்பகல் 2 மாடுகள் பூட்டிய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு திருக்கோவிலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தைக்காக பொருட்களை கொண்டுவர வயலூருக்கு போயிருந்தேன். அன்றிரவு மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அங்கு தங்கிருந்தேன். 24 ம் திகதி காலை அப்பகுதியை விட்டு புறப்படும் போது அவ்குடியிருப்பு பகுதி முழுவதும் இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. நான் விவசாயிகளுடன் ஒரு குடிசையில் இருந்தேன். நான் கைது செய்யப்பட்டாலும் பின் விடுவிக்கப்பட்ட போது நான் எடுத்துச் சென்ற பணமும் சைக்கிளும் காணாமல் போயிருந்தது. இராணுவத்தினர் என்னை செல்லுமாறு சொன்னதால் நான் சென்றேன். ஆனால் குமரன் குளப் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில் மறைந்திருந்தேன். சிறிது நேரத்தில் துப்பாகி வேட்டுக்கள் கேட்டன, பின் இராணுவத்தினர் தமது வாகனத்தில் சென்ற பின்பு நான் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபொழுது அவர்கள் சுடப்பட்டு இறந்து கிடந்தார்கள். ஆயினும் இரு விவசாயிகள் காயத்துடன் கிடந்தனர், ஒருவருக்கு வாய்க்குள் துப்பாகி வைத்து வெடிவைக்ப்பட்டுள்ளது. இவர் இறக்கவில்லை மற்றவரின் பெயர் நடராஜா நான் இச் செய்தியை வயலூருக்கு சென்று கூறினேன். இதில் 40 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக கனகசபை உறுதிப்படுத்தினார். வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்பு 2008ம் ஆண்டு தான் முதல் முதலாக இப்படுகொலை பற்றி வெளியுலகிக்கு கொண்டுவரமுடிந்தது. இருந்த போதும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசுடன் முதல் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசின் படையினரால் பௌத்த கோட்பாடு அடிப்படையில் வயலூர் கிராமம் தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன் இது ஒரு கிராமத்தையே அழித்த கறைபடியாத படுகொலையாகும். இக் கிராமம் காடுகளாகிவிட்டது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தையின் போது முதல் முதல் நிகழ்ந்த ஒரு படுகொலை என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான படுகொலைகள் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பொத்துவில் தொடக்கம் நீலாவணைவரை தங்கவேலாயுதபுரம், பெத்துவில், குண்டுமடு, அக்கரைப்பற்று, திராய்க்கேணி, வீரமுனை, சென்றல்காம், மல்வத்தை, அம்பாறை நகர், காரைதீவு, கல்முனை, நிந்தவூர் போன்ற தமிழ் கிராமங்கள் இராணுவத்தினராவும் ஊர்காவல்படையினராலும் சுற்றிவளைத்து சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியம் படுகொலை செய்யப்பட்டதுடன் அவர்களது வாழ்விடங்கள் தீ வைத்து எரித்து உடைத்து அழித்தனர். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும் அந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்ப டவில்லை. இதனால் தற்போதைய சமூதாயத்துக்கு தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அந்தந்த காலத்தில் அதற்கான நினைவேந்தல்களை செய்யவேண்டும் என்பது தமிழ்களின் கடமையாகும். இருந்த போதும். தமிழ் இன அழிப்பின் ஆரம்ப புள்ளியாக இந்த மாவட்டத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்புக்களை பறைசாற்றி நிற்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/223282
  22. த.வெ.க. மாநாட்டில் தூக்கி வீசப்பட்டது யார்? - போட்டி போடும் 2 இளைஞர்கள் பட மூலாதாரம், X/@TVKITWingOfficial படக்குறிப்பு, மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய்யை நெருங்க முற்பட்டு, பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில் தற்போது வேறொருவர் தானே தூக்கியெறியப்பட்டதாகக் கூறுகிறார். மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது, அவரை நெருங்க முயன்றதால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில், தற்போது வேறு ஒரு இளைஞர் தான்தான் தூக்கியெறியப்பட்டதாகக் கூறியிருக்கிறார். மதுரை மாவட்டம் பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த நடைபாதையில் விஜய் நடந்துசெல்லும்போது பாதுகாப்பிற்காக சில பவுன்சர்கள் வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த நடைபாதையை நெருங்கிவிடாதபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதையும் மீறி சில இளைஞர்கள் அந்த நடைபாதையில் ஏறினர். அப்போது விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் அவர்களைத் தூக்கி கீழே வீசினர். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகவே ஒளிபரப்பாயின. இதற்குப் பிறகு, 'அவ்வாறு தூக்கி வீசப்படும் நபர் என்னுடைய மகன் தான்' எனக் கூறி, குன்னம் தாலுகாவில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷம் என்பவர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ஆனால், இதனை சந்தோஷத்தின் மகன் சரத்குமார் மறுத்தார். திடீர் திருப்பமாக ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று பெரம்பலூர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷமும் அவரது மகன் சரத்குமாரும் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில், பவுன்சர்கள் தன்னைத் தூக்கியெறிந்ததால் தனது "மார்பு மற்றும் வலது விலா எலும்பில் அடிபட்டு வலி அதிகமாகிவிட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். தனக்கு யாருமே உதவிக்கு வராததால் விஜய் மீதும் பாதுகாப்புக்கு வந்த பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். படக்குறிப்பு, குன்னம் காவல்நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்தார். முதலில் கூறியதை மாற்றிப் பேசியது ஏன் என ஊடகங்கள் கேட்டபோது, "கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தேன். பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது நான் தான்" எனக் கூறினார். சரத்குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல்நிலையத்தில் த.வெ.க. தலைவர் விஜய், அடையாளம் தெரியாத பவுன்சர்கள் என பத்து பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு அந்த வழக்கு மதுரை மாவட்டம் கூடகோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமாரிடம் கேட்டபோது, "சரத்குமார் என்பவர் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் ஒரு வீடியோவில் மாநாட்டிற்கு 9 மணிக்கு வந்ததாகச் சொல்கிறார். அவர் ரயிலில் சென்றிருக்கிறார். அரியலூரில் இருந்து அந்த ரயிலே காலை 9 மணிக்குத்தான் வரும். இதிலிருந்தே அவர் சொல்வது பொய் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அவருடைய தாயார் வீடியோவில் பேசியதும் நான் இவரைத் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றுதான் கூறினார். இப்போது மாற்றிச் சொல்கிறார்" என்கிறார் சிவகுமார். இந்த நிலையில், மேலும் ஒரு திருப்பமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது இன்ஸ்டாகிராாம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "தூக்கிவீசப்பட்ட இளைஞர் நான் தான், பவுன்சர்கள் தூக்கி வீசியவுடன் கம்பியைப் பிடித்து கொள்வேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை" எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான் என்கிறார் அஜய் இது குறித்து அஜய்யிடம் பிபிசி கேட்டபோது, "மதுரை மாநாட்டில் ராம்ப்பில் ஏறியதும் பவுன்சர்கள் என்னைத்தான் தூக்கிப் போட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தேவையில்லாமல் விஜய் மீது புகார் கொடுத்தார்கள். யார் வேண்டுமானாலும் நேரில் வந்தால் அது நான்தான் என நிரூபிப்பேன். அந்த நபர் சொல்வது பொய்" என்று தெரிவித்தார். ஆனால், ராம்பில் ஏற முயன்ற பலர் இதுபோல தூக்கிவீசப்பட்ட நிலையில், அப்படி தூக்கிவீசப்பட்ட நபர்களில் சரத்குமாரும் ஒருவராக இருக்கலாம் அல்லவா என அஜய்யிடம் கேட்டபோது, அப்படியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். "அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான். வீடியோவில் இருப்பதும் நான்தான். வேறொருவர் இருந்ததாகச் சொல்வது பொய்" என்கிறார் அஜய். இப்போது சரத்குமார் அளித்த புகார் மதுரைக்கு மாற்றப்பட்டிருப்பதால் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் சரத்குமார் சந்தித்திருக்கிறார். இது குறித்துப் பேசுவதற்காக சரத்குமாரைத் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை. அவருடன் அங்கே சென்ற இந்தியத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனிடம் இது குறித்துக் கேட்டபோது சரத்குமார் ஊடகங்களிடம் பேச தயங்குவதாகத் தெரிவித்தார். "நாங்கள் தொழிலாளர்களுக்காக கட்சி நடத்துகிறோம். சரத்குமாரின் தாயார் கட்டடத் தொழிலாளர் என்பதால் அவர் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். சரத்குமார் பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். அவர் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இதுபோல வீடியோ வெளியானதும், அவருடைய தாயார் இது குறித்து வீடியோவில் பேசினார். ஆனால் சரத்குமார் அதனை மறுத்தார். இதையடுத்து நான் சரத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினேன். கட்சியில் கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய தாயாரும் பாட்டியும் அழுதுகொண்டேயிருந்தார்கள். பிறகு அவரே முன்வந்து தான்தான் தூக்கிவீசப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார். பிறகு பெரம்பலூரில் புகார் கொடுத்தோம். வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டு, எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. இதனால், மதுரைக்கும் சென்று எஸ்பியைச் சந்தித்தோம்" என்றார் ஈஸ்வரன். ஆனால், தற்போது அஜய் என்பவர் தான்தான் தூக்கிவீசப்பட்டதாகத் தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, "சரத்குமாரிடம் கேட்டபோது, ராம்ப்பில் ஓடியது தான் அல்ல என்றாலும் தூக்கி வீசியது தன்னைத்தான் என்கிறார். அஜய் என்பவர் நிறைய நண்பர்களோடு சென்றதால் அவரிடம் நிறைய வீடியோக்களும் புகைப்படங்களும் இருக்கின்றன. சரத்குமாரிடம் இல்லை. அப்படியே அஜய் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், அவரைத் தூக்கி வீசியதும் தவறுதானே?" என்கிறார் ஈஸ்வரன். இது தொடர்பாக போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் கேட்டபோது, "முதலில் புகார் சொன்ன அந்த இளைஞர் தகவல்களை மாற்றி மாற்றிச் சொல்கிறார். அவரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. இருந்தும் எவ்வித முகாந்திரமும் இன்றி காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. இப்போது வேறு ஒரு இளைஞர் அது தான்தான் எனக் கூறியிருக்கிறார். வழக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பாகவே, இதுகுறித்து முழுமையாக விசாரித்திருக்க வேண்டும்" என்கிறார் சி.டி.ஆர். நிர்மல்குமார். இது தொடர்பாக பேசுவதற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5p63r2y66o
  23. 29 Aug, 2025 | 04:29 PM பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் 9ஆம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10000/- பனை விதைகள் நாட்ட தீர்மானிக்கப்பட்டது. சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. சபை வீதிகளை ஊரிக்களி மண் பயன்படுத்தி அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. உக்காத கழிவு பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் மூன்று மாத காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர பெட்டி குப்பைக்கு ரூபா 5000 அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223713
  24. அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் – பிமல் ரத்நாயக்க 29 Aug, 2025 | 04:23 PM அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இதனை நடைமுறைப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாடசாலை பஸ்கள், அலுவலக சேவைப் போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஏனைய பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு சுமார் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சுமார் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப் பாட்டிகளின் விலை தற்போது 5,000 முதல் 7,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இது குறித்து அண்ணளவாக அனைவரும் தமது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அதனால் எதிர்காலத்தில் நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக Citra Innovation Lab நிறுவனத்தின் ஊடாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பயணிகள், சாரதிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 2100 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது சம்பந்தமான அறிக்கையொன்றை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். அத்துடன், தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனங்கள் நுழையும்போது வாகன உதிரிப் பாகங்களின் தரத்தைப் பரிசோதித்து புள்ளிகள் வழங்கும் முறையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், வாகனங்களின் டயர்கள் தேவையான தரத்தில் இல்லாவிட்டால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனத்தை நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். முச்சக்கர வண்டிகள், வான்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்காக நலன்புரி நிதியமொன்றை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். நீண்ட தூர சேவை மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் நிறுத்துமிடம் தொடர்பான தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், புகையிரத சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், துறைமுகங்கள் தொடர்பான தேவையான நவீனமயமாக்குவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் இரண்டு உப குழுக்களை நியமிப்பதும், அவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதும் இதன்போது இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பது மற்றும் நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/223712
  25. பட மூலாதாரம், Reuters 58 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார். கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன. ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக டிரம்பின் 'வரிவிதிப்பு போருக்கு'ப் பிறகு, இந்த புதிய இராஜதந்திர செயல்பாடு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை சீன ஊடகங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன என்பதை காணலாம். மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவம் "சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியின் கடந்த வார இந்திய பயணம், மோதியின் வருகைக்கான தயாரிப்பாக பரவலாகப் பார்க்கப்படுகிறது" என்று சீனாவின் அரசு செய்தித்தாளான 'சீனா டெய்லி' எழுதியுள்ளது. உலகளாவிய நிலைமையைச் சமாளிக்க சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்று அந்நாளிதழ் எழுதியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அழுத்தம் காரணமாக, சுதந்திர வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒழுங்கிற்கு சவால்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளதோடு, அமெரிக்காவின் வரிவிதிப்பு அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற உண்மையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சீனா டெய்லி எழுதுகிறது. "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியா அமெரிக்காவுடன் மோதல் சூழ்நிலையில் சிக்கியது. அதன் பிறகு இந்தியா மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது." சீனாவை ஒரு போட்டியாளராகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியா அதை ஒரு கூட்டாளியாகவும் அதன் உயர்தர வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்றும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மோதியின் பயணத்திற்கு முன்னோட்டமாக சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை இருந்தது ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அர்ஜுன் சாட்டர்ஜி 'சீனா டெய்லி'யில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமர் மோதி பங்கேற்கும் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் மீது இப்போது அனைவரின் பார்வையும் இருப்பதாகக் கூறியுள்ளார். டிரம்பின் வரிவிதிப்புகளுக்குப் பிறகு சீனா இந்தியாவுடன் ஒற்றுமையைக் காட்டியுள்ளது என கூறும் அவர், அமெரிக்க நடவடிக்கையை அச்சுறுத்தும் செயலாக சீனா கருதுவதாகவும் எழுதுகிறார். இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்வளத் துறையின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் மோதி தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். பசுமை விவசாயம், குறிப்பாக நைட்ரஜன் பயன்பாட்டு திறன், இந்தியாவும் சீனாவும் வேகமாகச் செயல்படும் ஒரு பகுதி என்று அர்ஜுன் சாட்டர்ஜி குறிப்பிடுகிறார். இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு சிறந்த படியாக இருக்கும் என்பது அவரது கூற்றாக உள்ளது.. இணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே மக்களின் பயணம், விவசாயம் அல்லாத வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டாண்மை ஆகியவற்றில் தியான்ஜின் உச்சிமாநாட்டில் ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டால், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான போட்டி இருந்தபோதிலும் இது நடைமுறை ஒத்துழைப்புக்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று அவர் எழுதுகிறார். அமெரிக்கா, சீனா என இரண்டையும் சமாளிக்கும் முயற்சி அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) மற்றும் வேறு சில நிறுவனங்களின் செய்திகள், பிரதமர் மோதியின் வருகையை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவை இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரிகள் குறித்த பிரச்னையை விவாதிக்கின்றன. ஆகஸ்ட் 27 முதல் இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத 'அபராத வரி' விதித்துள்ளதை 'சின்ஹுவா' செய்தி குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதே காரணம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும், இந்தியா எந்த அழுத்தத்தையும் தாங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். ஜிஎஸ்டியில் விரைவான சீர்திருத்தங்களை அவர் அறிவித்துள்ளார். மறுபுறம், இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று ஸ்தம்பித்துள்ளது பட மூலாதாரம், Getty Images அதே நேரத்தில், தேசியவாத செய்தி வலைத்தளமான 'குவாஞ்சா' (Guancha), 'சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுடனான தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்' என்று எழுதியுள்ளது. "மோதி கடந்த ஆண்டு முதல் தனது அமெரிக்க சார்பு கொள்கையை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறார், ஆனால் அவர் சீனா மற்றும் ரஷ்யாவுடன் எவ்வளவு தூரம் செல்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை." இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் Quad இரண்டிலும் ஒரு பகுதியாக இருந்த போதிலும், எந்த ஒரு குழுவுடனும் கட்டுப்பட்டு இயங்க மறுக்கிறது. ஆயினும்கூட, கூட்டு அறிக்கையில் கையெழுத்திடாதது மற்றும் ஆங்கிலத்தை வேலை மொழியாக மாற்றக் கோருவது என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பல சந்தர்ப்பங்களில் சீனா மற்றும் ரஷ்யாவுக் முயற்சிகளுக்கு இந்தியா சவாலாக இருந்திருக்கிறது. குவாஞ்சாவில் வெளியிடப்பட்ட செய்தி, "இந்தியா 'இரு தரப்புடனும் விளையாடும்' கொள்கையுடன் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது. இருப்பினும், டிரம்ப் 2.0 சகாப்தத்தில் இந்த சமநிலை கடினமாகி வருகிறது." என கூறுகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ejxn7n7l8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.