Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. டிவால்ட் பிரிவிஸ்-க்காக விதிகளை மீறியதா சிஎஸ்கே? - அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் பட மூலாதாரம், R. SATISH BABU/AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் மழைவிட்டாலும் தூறல் விடவில்லை என்பதுபோல் ஐபிஎல் சீசன் முடிந்தாலும், சிஎஸ்கே குறித்த சில பரபரப்பு தகவல்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை விழிப்பிலே வைத்திருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் எந்தெந்த வீரர்களை அணியில் தக்கவைக்கப் போகிறார்கள், தோனி விளையாடுவாரா, எந்தெந்த வீரர்களை விடுவிக்கப் போகிறார்கள் என்ற கணிப்புகளை, ஊகங்களை முன்னாள் வீரர்கள் சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தெரிவித்து சிஎஸ்கே பரபரப்புக்கு உயிர்கொடுத்து வருகிறார்கள். அதில் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோவில், " சிஎஸ்கே அணி சில வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பரிமாற்றம் செய்வது குறித்து பேசி வருகிறது. அதில் கேப்டன் சஞ்சு சாம்ஸனை சிஎஸ்கே பக்கம் இழுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட சிலரை வழங்கவும் பேச்சு நடக்கிறது" எனத் தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி குறித்த பரபரப்பை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அஸ்வின் வீசிய அணுகுண்டு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியில் தற்போது இருக்கும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் பிரிவிஸை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது குறித்து பேசியதுதான் சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகி, அது கிரிக்கெட் தளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசுகையில் " சிஎஸ்கே அணி நிர்வாகம் பாதி சீசனின் போது காயமடைந்த குர்ஜப்நீத் சிங்கிற்குப் பதிலாக தென் ஆப்ரிக்க இளம் வீரர் டிவால்ட் பிரிவிஸை தங்கள் அணியில் சேர்ப்பது குறித்து அணுகியது. பிரிவிஸிடம் நடத்தப்பட்ட பேரத்தின் முடிவில் அவரின் அடிப்படை விலையைவிட சிஎஸ்கே அணி கூடுதல் பணம் வழங்கியிருக்கலாம். ஏனென்றால், அந்த நேரத்தில் பிரிவிஸை சேர்க்க பல அணிகளும் அவருடன் பேரத்தில் இருந்தன. இதிலிருந்து முந்திக்கொண்டு அவரை வாங்க வேண்டும் என்ற நோக்கில் குர்ஜப்நீத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.2.20 கோடி விலையைவிட கூடுதலாக சிஎஸ்கே அணி கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. பிரிவிஸின் கடந்த ஐபிஎல் சீசன் ஆகச்சிறந்ததாக இருந்தது" எனத் தெரிவித்தார். ஆனால், உண்மையில் பிரிவிஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும்போது அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தில் ஒரு அணிகூட பிரிவிஸை சீண்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் ஏலமாகாத வீரர்கள் பட்டியில் பிரிவிஸ் இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்தார். ஆனால், பிரிவிஸின் கடந்த கால கிரிக்கெட் புள்ளிவிவரங்களை அறிந்தபின்புதான் பல்வேறு அணிகள் சீசனின் இடைப்பகுதியில் அவரை அணியில் சேர்க்க போட்டிபோட்டன, அவருக்கான கிராக்கியும் அதிகரித்தது. ஆகாஷ் சோப்ராவின் விளக்கம் பிரிவிஸை அவரின் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.2.20 கோடிக்கும் அல்லது அஸ்வின் கூற்றுப்படி அதற்கு அதிகமான விலையிலும் சிஎஸ்கே அணி வாங்கியது சரியானதா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் தளத்தில் விளக்கியுள்ளார் ஆகாஷ் சோப்ரா அளித்த விளக்கத்தில் " ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் காயம் காரணமாக ஒரு வீரருக்குப் பதிலாக மற்றொரு வீரரை ஓர் அணி சேர்க்கும் பட்சத்தில் அவருக்கு "ப்ரோ ரேட்டா"(pro rata basis) அடிப்படையில்தான் ஊதியம் வழங்க வேண்டும். அதாவது மீதமுள்ள போட்டிகளை கணக்கிட்டு மாற்று வீரருக்கு ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இருக்கையில் பிரவிஸுக்கு அவரின் அடிப்படை விலையில் பாதியான ரூ.37.50 லட்சத்தைதான் அடிப்படையாக வைத்திருக்க வேண்டும். காயமடைந்த குர்ஜப்நீத்துக்கு பதிலாக சேர்க்கப்பட்டதால் அவருக்கான ஏலத்தொகை ரூ.2.20 கோடியிலிருந்து பாதியைத்தான் பிரிவிஸுக்கு நிர்ணயித்து மீதமுள்ள சீசனில் இருக்கும் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா பேட்டர், ஜூனியர் ஏபிடி என அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் விதிகள் மீறப்பட்டதா? பிரிவிஸ் அடிப்படை விலையில் இருந்து கூடுதலாக பணத்தை சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரினார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். பிரிவிஸுக்கு கூடுதலாக பணம் வழங்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா, அதிகாரபூர்வமாக அவரால் பெற முடியுமா. சில நேரத்தில் ஐபிஎல் அணியிடம் இருக்கும் பர்ஸின் கையிருப்பு பண அ்ளவை மீறமுடியுமா, அந்த விதிமுறை மீறலை, ஓட்டைகளைத்தான் அஸ்வின் குறிப்பிட்டாரா. ஒருவேளை அதிகமான பணத்தை சிஎஸ்கே நிர்வாகம் பிரிவிஸுக்கு வழங்கினாலும் அது அடுத்த சீசனுக்கானதாக இருக்கலாம். ஏதேனும் விதிகளில் ஓட்டை இருந்தால், நிச்சயமாக அதை பயன்படுத்தியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார். சிஎஸ்கே விளக்கம் என்ன? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் இந்நிலையில் அஸ்வினின் குற்றச்சாட்டுக்கு சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக திடீரென விளக்கம் அளித்து அஸ்வின் கூற்றை மறுத்துள்ளது. அதில் ஐபிஎல் விதிப்படி அனைத்து விதிகளை முறைப்படி பின்பற்றிதான், காயமடைந்த வீரருக்கு மாற்று வீரராக டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் கொண்டு வந்தோம் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி அளித்த விளக்கத்தில் " ஐபிஎல் தொடரில் இருக்கும் விதிகளின் படிதான் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்றுவீரராக டிவால்ட் பிரிவிஸ் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் விதி 6.6ன் படி மாற்றுவீரர் விதி முறையாகக் கடைபிடிக்கப்பட்டது. 2025 டாடா ஐபிஎல் சீசனில் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் முறைப்படி சிஎஸ்கே நிர்வாகம் பின்பற்றிதான் டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் சேர்த்தது, அவரை ஒப்பந்தம் செய்தது. மாற்று வீரரை சேர்க்கும் ஐபிஎல் விதி 6.1 அல்லது 6.2ல் குறிப்பிட்டபடி, சீசனில் வழங்கப்படும் ஊதியத்தைவிட அதிகமாக இல்லாதவாறு, காயமடைந்த வீரருக்கு எந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்த ஊதியத்தைதான் மாற்று வீரருக்கு வழங்கினோம். அதாவது குர்ஜப்நீத்துக்கு 2025 சீசனில் ரூ.2.20 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, அது தான் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட டிவால்ட் பிரிவிஸுக்கும் வழங்கப்பட்டது. இந்த தொகையைவிட கூடுதலாக சிஎஸ்கே நிர்வாகம் வழங்கவில்லை" என விளக்கம் அளித்தது. ஐபிஎல் விதிகள் கூறுவதென்ன? பட மூலாதாரம், GETTY IMAGES ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து விளையாட முடியாத சூழல் நிலவும்போது மாற்றுவீரரை அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்ய ஐபிஎல் விதி அனுமதிக்கிறது. ஆனால், மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடியவருக்கும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது இதன்படி, மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வீரர் ஒருவர் அந்த சீசனில் உள்ள பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்(RAAP) பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்த வீரரைத்தான் ஓர் அணி மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாற்று வீரர் ஐபிஎல் சீசன்முழுமைக்கும் வேறு எந்த போட்டித் தொடரிலும் விளையாடாமல் இருப்பாரா, அல்லது எப்போது வேறு தொடர்களில் விளையாடச் செல்வார், அவருக்கான ஒப்பந்த ஊதியம், முழு சீசனிலும் விளையாட நேர்ந்தால் அதற்கான தொகை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மாற்று வீரரின் வீரர் ஒப்பந்தம் விதிமுறைகளின்படி நீட்டிக்கப்பட்டால், அடுத்த சீசனுக்கான வீரருக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை, நடப்பு சீசனுக்கான ஊதிய உச்சவரம்பிற்கும் அதிகமாக வழங்கப்படலாம். எப்படியாகினும் அணியில் வீரர்கள் எண்ணிக்கை 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரு வீரர் அந்த அணிக்காக ஏற்கெனவே போட்டியில் பங்கேற்றிருந்த போதிலும், சீசனின் நடுப்பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அவருக்கு மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால், அந்த சீசனில் 12 லீக் போட்டிக்கு முன்பாகவே காயம் அல்லது உடல்நலக்குறைவு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பிசிசிஐ அமைப்பால் நியமிக்கப்பட்ட மருத்துவர், அந்த குறிப்பிட்டவீரரின் உடல்நிலையை பரிசோதித்து காயம் ஏற்பட்டதையும், உடல்நலக்குறைவு ஏற்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து அந்த வீரரால் விளையாட முடியாது என்று சான்றளித்தபின்புதான் மாற்றுவீரரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க முடியும். ஐபிஎல் விதி பிரிவு 6.6ல் குறிப்பிட்டுள்ளபடி, "மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கான ஊதியம் என்பது காயமடைந்த அல்லது விளையாட முடியாத வீரருக்கு அந்த சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்தைவிட விட அதிகமாக இருக்கக்கூடாது." விதி 6.7ல் குறிப்பிட்டுள்ளபடி "ஒரு சீசனில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், அவருக்கான ஊதியம் அவர் அணியில் சேர்க்கப்படும் முன், எத்தனை போட்டிகளை அந்த அணி விளையாடி முடித்துள்ளது என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்றார்போல் ஊதியம் குறைக்கப்படும்." உதாரணமாக சிஎஸ்கே அணி பிரிவிஸை அணியில் சேர்க்கும் முன் 5 போட்டிகளில் பங்கேற்றிருந்தால், மீதமுள்ள லீக் போட்டிகளை மட்டும் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயிக்கப்படும். விதி 6.8ன் கீழ் " மாற்று வீரரை ஒரு அணி ஒப்பந்தம் செய்வதற்கு முன், அந்த அணி நிர்வாகம் அது தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பிசிசிஐ-க்கு அனுப்பி வைக்க வேண்டும். பிசிசிஐ ஒப்புதல் அளித்தப்பின்புதான் மாற்றுவீரருடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2pgv0y346o
  2. விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்துமணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் நான்கரை மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதுவரை விசாரணைகள் முடிவடையவில்லை.
  3. பட மூலாதாரம், MANSI THAPLIYAL படக்குறிப்பு, இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்திகள் 17 ஆகஸ்ட் 2025, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை உலுக்கும் கோடைகாலத்தில், மும்பையைச் சேர்ந்த முன்னணி நீரிழிவு நிபுணர் ராகுல் பாக்ஸியிடம் நோயாளிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி, "மாம்பழம் சாப்பிடலாமா?" என்பது தான். "மாம்பழம் அதன் இனிப்பு சுவையாலும், பலவித வகைகளாலும் இந்தியாவின் கோடைகாலத்தில் முக்கியமான பழமாக இருக்கிறது. மக்கள் ஏன் அதை விரும்பிச் சாப்பிட விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும் ," என்கிறார் ராகுல் பாக்ஸி. ஆனால், இந்த எளிய கேள்வி பல தவறான எண்ணங்களை உள்ளடக்கியது. சிலர் மாம்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். மறுபுறம், சிலர் "அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகிவிடும்" என்று நம்புகிறார்கள். ஆனால், இந்த இரண்டு எண்ணங்களுக்கு இடையிலும் வேறொரு உண்மை உள்ளது. அதேபோல் இந்தக் குழப்பமும் கோடைகாலத்துடன் முடிவதில்லை. "மாம்பழப் பருவம் முடிந்த பிறகு, பல நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சில சமயங்களில், இதற்குக் காரணம் மாம்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டதுதான்," என்கிறார் மருத்துவர் ராகுல் பாக்ஸி. இந்தத் தொடர்ச்சியான குழப்பம், நீரிழிவு நோயாளிகளை "பழங்களின் ராஜா" என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வைத்துள்ளது. ஆனால், புதிய ஆராய்ச்சிகள் மாம்பழம் தவறான பழமல்ல என்று கூறுகின்றன. இந்தியாவில் நடந்த இரண்டு புதிய மருத்துவ ஆய்வுகள், பழைய உணவு நம்பிக்கைகளை மாற்றியுள்ளன. ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக, குறைவாகவும் கட்டுப்பாட்டுடனும் மாம்பழம் சாப்பிடுவது, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகின்றன. கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும்போது டைப்-1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது, அதே நேரத்தில் டைப்-2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் எதிர்க்கிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) கூற்றின்படி, உலகளவில் 90% க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு டைப்- 2 நீரிழிவு நோய் உள்ளது. இது உலகில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளில் எட்டாவது முக்கிய காரணமாக உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் இது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிக உடல் எடை, வயது, இனம் மற்றும் குடும்பத்தில் நீரிழிவு வரலாறு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவதன்படி, இந்தியாவில் சுமார் 7.7 கோடி பேருக்கு டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது. கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். பட மூலாதாரம், HINDUSTAN TIMES VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் தொடங்கப்பட்டு, அதன் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால் இத்தகு சவால்களுக்கு மத்தியிலும், புதிய ஆய்வுகள் மாம்பழ பிரியர்களுக்கு ஆச்சரியமான நம்பிக்கையை அளிக்கின்றன. கிளினிகல் நியூட்ரிஷன் என்ற ஐரோப்பிய இதழில் இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று விரைவில் வெளியாகிறது. 95 பேரை உள்ளடக்கிய அந்த ஆய்வில் இந்தியாவின் பிரபலமான மாம்பழ வகைகளான சஃபேடா, டாஷேரி, மற்றும் லாங்ரா ஆகியவை வெள்ளை ரொட்டியை விட குறைந்த அல்லது அதனை ஒத்த ரத்த சர்க்கரை உயர்வை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது. (ரத்த சர்க்கரை உயர்வு என்பது, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு வேகமாக, எந்த அளவில் உயர்கிறது என்பதைக் குறிக்கிறது.) டைப்- 2 நீரிழிவு நோயாளிகளையும், நீரிழிவு இல்லாதவர்களையும் மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்த போது, நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இந்தக் குறைவான ஏற்ற இறக்கங்கள், நீண்ட காலத்திற்கு உடலுக்கு நன்மை தரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "மாம்பழம் அனைவராலும் விரும்பப்படும் பழம், ஆனால் இது ரத்த சர்க்கரையையும் உடல் எடையையும் அதிகரிக்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்," என்கிறார் இரண்டு ஆய்வுகளிலும் பிரதானமாக அங்கம் வகித்த மருத்துவர் சுகந்தா கெஹர். "பரிந்துரைக்கப்பட்ட உணவு முறைகளுக்குள், மாம்பழம் சாப்பிடுவது ரத்த சர்க்கரைக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக நன்மையைத் தரலாம் என்று இந்த ஆய்வுகள் காட்டுகின்றன," என்று அவர் கூறுகிறார். டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் சி-டிஓசி மருத்துவமனையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட எட்டு வார ஆய்வு, இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் என்ற இதழில் வெளியாகியுள்ளது. டைப்- 2 நீரிழிவு உள்ள 35 பேர் , தங்கள் காலை உணவில் ரொட்டிக்குப் பதிலாக 250 கிராம் மாம்பழம் சாப்பிட்டனர். இதன் விளைவாக, சாப்பிடுவதற்கு முன்பான அவர்களின் ரத்த சர்க்கரை, HbA1c (சராசரி இரத்த சர்க்கரை அளவைக் காட்டும் பரிசோதனை), இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை, இடுப்பு அளவு, மற்றும் HDL (நல்ல) கொழுப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். இவை நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. "காலை உணவில் ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக சிறிய அளவு மாம்பழம் சாப்பிடுவதன் நன்மைகளை முதல் முறையாக இரண்டு விரிவான ஆய்வுகளில் நிரூபித்தோம். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தவறான கருத்துகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தோம்," என்கிறார் ஆய்வின் மூத்த ஆசிரியரும் தலைவருமான பேராசிரியர் அனூப் மிஸ்ரா. "ஆனால், மிதமாக சாப்பிடுவதும், மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதும் முக்கியம். மாறாக, எவ்வளவு வேண்டுமானாலும் மாம்பழம் சாப்பிடலாம் என்று அர்த்தம் அல்ல" என்று அவர் எச்சரிக்கிறார். பட மூலாதாரம், BLOOMBERG VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் 77 மில்லியன் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாம்பழத்தை மிதமாக சாப்பிடுவது என்றால் என்ன என்று பேராசிரியர் அனூப் மிஸ்ராவிடம் கேட்டேன். "ஒரு நாளைக்கு உங்கள் கலோரி எல்லை 1,600 ஆக இருந்தால், மாம்பழத்தின் கலோரிகள் அதற்குள் அடங்க வேண்டும், கூடுதலாக இருக்கக் கூடாது. 250 கிராம் மாம்பழம், அதாவது ஒரு சிறிய பழம் சுமார் 180 கலோரிகளைக் கொண்டது. ஆய்வில் கூறியபடி, அதேபோன்ற முடிவுகளைப் பெற, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக மாம்பழத்தை உண்ண வேண்டும்," என்று அவர் என்னிடம் விளக்கினார். மருத்துவர் பாக்ஸியும் தனது நோயாளிகளுக்கும் இதே போன்ற அறிவுரையைச் சொல்வதாகக் கூறுகிறார். "ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால், என் நோயாளிகளை குறைந்த அளவு மாம்பழம் (அதாவது 15 கிராம் கார்போஹைட்ரேட் தரும் அளவு) , நாளொன்றுக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ பாதி பழத்தை சாப்பிட ஊக்குவிக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மாம்பழத்தை இனிப்பாக அல்லாமல், உணவுக்கு இடையில் சாப்பிட வேண்டும். புரதம் அல்லது நார்ச்சத்து மிக்க உணவுகளுடன், அதனை சேர்த்து சாப்பிடுங்கள். மாம்பழத்தை ரொட்டி, சாறு அல்லது மில்க் ஷேக் போன்ற சர்க்கரை உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதைத் தவிருங்கள் என்று மருத்துவர் பாக்ஸி தனது நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்தியர்களுடைய வாழ்விலும் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. இது கலாசார, சமூக, மற்றும் ராஜ தந்திர ரீதியில் முக்கியத்துவம் கொண்ட ஒரு பழம். "மாம்பழ ராஜ தந்திரம்" என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமான சொல். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழப் பெட்டிகள் அரசியல் ஒப்பந்தங்களை எளிதாக்கலாம், கூட்டணிகளை வலுப்படுத்தலாம், அல்லது பதற்றமான பேச்சுவார்த்தைகளை சுமூகமாக்கலாம். பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவின் போது, முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென், அப்போதைய அமெரிக்க வேளாண் செயலாளர் மைக் ஜோஹன்ஸுக்கு இந்திய மாம்பழங்களின் கூடையை வழங்குகிறார். இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு , இந்தப் பழத்தின் கலாசார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டாடப்படுகிறது. இந்தப் பழம் விரும்பப்படும் உணவாகவும், சக்தி வாய்ந்த சமூக மதிப்பைக் காட்டுவதாகவும் உள்ளது. "பெரும்பாலான இந்தியர்களுக்கு மாம்பழத்தின் மீது தனிப்பட்ட விருப்பம் உள்ளது. தங்கள் ஊரின் மாம்பழம் தான் சிறந்தது என்று பலர் வாதிடுவார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் சமையல் நிபுணருமான புஷ்பேஷ் பந்த். "நல்ல மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. அவை நகைகளைப் போன்ற அழகும் மதிப்பும் கொண்டவை. "சிறந்த மாம்பழங்கள், அதிக பணம் கொடுக்கத் தயாராக இருப்பவர்களிடம் சென்று சேர்கின்றன" என்று Mangifera indica: A Biography of the Mango என்ற புத்தகத்தில், இந்தப் பழத்தையும் அதன் ரசிகர்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார் சோபன் ஜோஷி. இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் மாம்பழங்கள் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்று ஜோஷி குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு வகைகளான லாங்ரா, டாஷேரி, சௌசா, மற்றும் ஹிம்சாகர் ஆகியவை மிகவும் இனிப்பாக உள்ளன, அதே நேரத்தில் தெற்கு வகைகள் மென்மையான இனிப்பு-புளிப்பு சுவையைத் தருகின்றன. மேற்கு இந்தியாவின் அல்போன்சா மாம்பழம், சர்க்கரை மற்றும் அமிலத்தின் தனித்துவமான சமநிலையால் தனித்துவமான சுவையைப் பெறுகிறது. இந்தியர்களின் வாழ்க்கையில் மாம்பழம் மிகவும் முக்கியமானது. ஒரு ஆண்டின் தொடக்கமே பல இடங்களில் மாம்பழம் பூக்கும் காலத்துடன் ஆரம்பிக்கிறது. கவிஞர் காலிப் மாம்பழத்தை "மூடிய தேன் குவளை" என்று அழைத்தார். அதன் வசீகரத்தைக் கொண்டாடி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. மாம்பழம் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது, மறு பக்கம் அடையாளமாக விளங்குகிறது. எப்போதும் மக்களை மகிழ்விக்கும் பழம், தற்போது ஆச்சர்யமளிக்கும் விதமாக அறிவியலின் ஆதரவையும் பெற்றுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70x9x80pd2o
  4. Published By: DIGITAL DESK 3 17 AUG, 2025 | 02:55 PM முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்துமணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் நான்கரை மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதுவரை விசாரணைகள் முடிவடையவில்லை. https://www.virakesari.lk/article/222743
  5. செம்மணி - துண்டி முகாம் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ! Published By: DIGITAL DESK 3 17 AUG, 2025 | 09:48 AM (நா.தனுஜா) அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக, செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன் என்று அறிவித்துள்ள கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1996 களில் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டறியப்பட்டு, அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 141 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 1996 களில் செம்மணி முகாம் - துண்டி முகாம் வரை இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்துள்ளார். அவரது வெளிப்படுத்தல்களின் முதற்பகுதி வருமாறு: 'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதனூடாக வெளிப்படுத்துகிறேன். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு மேலதிகமாக, விடயங்களை யாழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு இதனை வெளிப்படுத்துகிறேன். எனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கடந்த 3 ஆம் திகதியன்று 'வீரகேசரி' பத்திரிகையில் முதற்பக்கத்தில் வெளியானது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகல விடயங்களும் உண்மையானவை என்பதை நான் யாழ் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக செம்மணிக்கு அப்பால் முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன். 1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் வெளிப்படுத்தியபோது, அவை நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் கடவுளும், இயற்கையும் அவை உண்மை என்பதை நிரூபித்துள்ளன. 1998 ஆம் ஆண்டு எனக்கு மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கூற்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரியான நாமல் பண்டார என்ற அதிகாரி மூலம் எனக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அக்கடிதம் அமைச்சராலேயே எழுதப்பட்டிருந்தது. நான் மேல் நீதிமன்றத்தில் கூறிய விடயம் கோபத்தில் கூறப்பட்டது எனவும், அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அந்தக் கடிதத்தை வாசித்ததன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அதனைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த அதிகாரி, கடிதத்தை வாசித்துவிட்டுத் திருப்பித்தாருங்கள் என்றார். நான் அந்தக் கடிதத்தைத் திருப்பிக்கொடுப்பதற்கு மறுத்தபோது அவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் என்னை மிலேச்சத்தனமாகத் தாக்கிக் கொல்ல முற்பட்டனர். இருப்பினும் அங்கிருந்த ஏனைய சிறைக்கைதிகளின் தலையீட்டால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அவ்வதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்தொடர்ந்திருந்த போதிலும், அதற்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. 1999 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலத்தை போகம்பரை சிறைச்சாலையில் சந்தித்தபோது கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை அவரிடம் கூறினேன். அப்போது அவர் என்னிடம் 'பயப்படாமல் இருங்கள். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று உங்களை விடுத்து செம்மணி வழக்கின் சாட்சியாளராக மாற்றுகிறேன்' எனக் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டு இந்த செம்மணி மனிதப்புதைகுழியைக் காண்பிப்பதற்காகச் சென்றபோது எனது சார்பில் முன்னிலையாவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவதற்கு குமார் பொன்னம்பலத்துக்கு விமானவசதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் அவர் திடீரெனப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவை அடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் செய்தியில், குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்னைய தினத்துக்குரிய திகதியே இடப்பட்டிருந்தது. இவ்விடயம் அவ்வேளையில் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதன்மூலம் குமார் பொன்னம்பலம் கொல்லப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி அந்த இரங்கல் செய்தியை எழுதியிருந்தார் என்பது தெளிவாகிறது. 1999 ஆம் ஆண்டு நான் மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களைக் காட்டிக்கொடுத்த வேளையில், அவற்றைக் காட்டிக்கொடுக்கவேண்டாம் எனவும், ஜனாதிபதி எனக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சிலவற்றை மாத்திரம் காட்டிக்கொடுத்ததன் பின்னர், அதனைக் கைவிட்டுவிட்டேன். இவ்விடயம் தொடர்பில் மேலதிகமாக பல விடயங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா வரை அறிந்திருந்தனர் என்பதை நான் யாழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன். அரியாலை 7 ஆவது இலங்கை இராணுவக் காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சி3 முகாமின் 7 ஆவது இராணுவக் காலாட்படைக்கு உரிய சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டம் என அறியப்படும் பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன. அது இராணுவக்கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளுக்கு வெளியே இருந்த பிரதேசமாகும். அவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பிரதேசம் (மணியம் தோட்டம்) எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். இதற்கு மேலதிகமாக பிரதான கைதுகள் செம்மணியில் இடம்பெற்றதுடன், அங்கு கைதுசெய்யப்படமுடியாதவர்கள் ஏனைய சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்டனர்.' (சோமரத்ன ராஜபக்ஷவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயங்களின் தொடர்ச்சி எதிர்வரும் ஞாயிற்கிழமை (24) வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்படும்.) https://www.virakesari.lk/article/222706
  6. யாழ். நல்லூர் ஆலய பகுதியில் வாள்வெட்டு : இளைஞன் காயம், ஐவர் கைது! 17 AUG, 2025 | 07:44 AM யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழா நேற்று சனிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில், ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில், பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்டனர். இந்நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர். அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை காப்பற்றப்பட்டு அம்பியூலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதும், வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222703
  7. மற்றுமொரு ரோந்துக் கப்பலை இலங்கை்கு வழங்கவுள்ளோம் : சான்டா பாப்ரா போர் கப்பலின் வரவேற்பின்போது அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவிப்பு Published By: PRIYATHARSHAN 16 AUG, 2025 | 03:43 PM உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட நாம் இணைந்துள்ளோம். இது பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பங்களிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், நான்காவது ரோந்து கப்பலை நாங்கள் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவோம், இது இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான திறனை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்தார். சான்டா பாப்ரா என்ற அமெரிக்க போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீடித்த நல்லுறவின் சக்திவாய்ந்த சின்னமாக விளங்கும் U.S.S. Santa Barbara கப்பல், முதல் முறையாக இலங்கைக்கு வருகை தரும் இந்த தருணத்தில், நான் உங்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். கப்பலின் கட்டளைத் தளபதி ஆடம் ஓக்ஸ், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி சம்பத் துயாகொந்தா, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் அவர்களது தொடர்ச்சியான தலைமைத்துவத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன். வேகம், சுறுசுறுப்பு மற்றும் மேம்பட்ட நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட கடலோரப் போர் கப்பலான U.S.S. Santa Barbara-வின் வருகை வெறும் ஒரு துறைமுக வருகை மட்டுமல்ல. இது நமது நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவைப் பிரதிபலிக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதார வளம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய பொதுவான இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட நாம் இணைந்துள்ளோம். இது பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பங்களிக்கிறது. கடல்சார் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகள் ஊக்கமளிக்கின்றன. Santa Barbara கப்பலின் குறிக்கோள் "நெகிழ்வு மற்றும் உறுதிப்பாடு" ("Resilient and Determined") என்பதாகும். அதேபோல், இலங்கை கடற்படைக்கும் அது பொருந்தும். 2024-ல் Operation Prosperity Guardian-ன் ஒரு பகுதியாக அரேபிய கடற்பரப்பில் கடற்படை ஈடுபட்டதும், இந்த ஆண்டு Combined Maritime Force – Task Force 154 அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றதும், இப்பிராந்தியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க இலங்கை கடற்படை தயாராக இருப்பதைக் காட்டுகிறது. இலங்கையின் இந்த முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. முன்னர் வழங்கப்பட்ட மூன்று அமெரிக்க கடலோரக் காவல் கப்பல்களான Samudura, Gajabahu மற்றும் Vijayabahu ஆகியவை இலங்கையின் கடற்பரப்பில் தீவிரமாக ரோந்து சென்று சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதோடு, மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில், நான்காவது ரோந்து கப்பலை நாங்கள் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவோம், இது இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான திறனை மேலும் வலுப்படுத்தும். U.S.S. Santa Barbara கப்பலின் வருகை, நமது நல்லுறவின் வலிமையையும், சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இந்த மதிப்புகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவோம். மேலும், உலகின் இந்த முக்கியப் பகுதி ஸ்திரத்தன்மை மற்றும் வாய்ப்புகளின் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/222690
  8. சோழர் ஆட்சி பொற்காலமா? நீர், நில மேலாண்மை, சாதிய சமூக கட்டமைப்பு பற்றிய ஒரு பகுப்பாய்வு பட மூலாதாரம், KALANIDHI கட்டுரை தகவல் கா.அ.மணிக்குமார் பேராசிரியர் (ஒய்வு) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 16 ஆகஸ்ட் 2025, 03:53 GMT "என் நாட்டு மக்கள் இதைப் பார்த்தால் பரவசமடைவார்கள்; இதை விவரிக்க அவர்களால் முடியாது. பின் எப்படி இது போன்றதைக் கட்டமைக்க அவர்களால் சிந்திக்க முடியும்" கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரனால் கட்டப்பட்ட பதினாறு மைல் நீளம், நான்கு மைல் அகலம் கொண்ட "சோழ கங்கம்" ஏரியைக் கண்டு மனித நாகரிகத்தில் மிகவும் முன்னேறியிருந்த அரபு நாட்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த அறிஞர் அல்பெருனி வியந்து கூறிய வார்த்தைகள் இவை. நீர்ப்பாசன நிர்வாகம் வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வீழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒரு சில பேரரசுகள் மட்டும் சிறப்புமிக்க சில சாதனைகளுக்காக மக்களின் மனதில் நீங்கா நினைவில் வாழ்கின்றன. அத்தகைய வரிசையில் சோழப் பேரரசு நீர்ப்பாசன வேளாண்மைக்காகவும், உள்ளாட்சி நிர்வாகத்திற்காகவும் இன்றும் வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தை வகிக்கிறது. கரிகாலன் பாரம்பரியத்தில் வந்த சோழ மன்னர்கள் குளங்கள், ஏரிகளை வெட்டி மழை நீர், ஆற்று நீர் ஆகியவற்றைச் சேகரித்து வேளாண்மையைப் பெருக்கினர். அவற்றில் சிறப்புமிக்கவை சோழ கங்கம், மற்றொன்று வீராணம். நிலங்களை வகைப்படுத்துதல் முறை பராந்தகனின் கல்வெட்டுகள் ஒன்றில் ஆறு வகை நிலங்கள் குறிப்பிடப்பட்டன. அனைத்து நெல் வயல்களும் நீர்-நிலம் (நன்செய்) என வகைப்படுத்தப்பட்டன. வறண்ட நிலம் புன்செய் என்று குறிப்பிடப்பட்டது. இவை நெல் அல்லாமல் இதர தானியங்கள் விளைந்த நிலங்களாகும். மூன்றாவது வகை தோட்ட நிலமாகும். ஆங்கிலேயர்கள் இம்மூன்று வகைகளை ஏற்றனர். நான்காவது வகை களர்-நிலம் (உப்பு நிலம்) ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் ஒரு கல்வெட்டு, கால்நடைகளைப் பார்ப்பதற்கான நிலங்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு வகையைக் குறிப்பிடுகிறது. இதை ஆங்கிலேயர் மேய்ச்சல் என்று தங்கள் ஆவணங்களில் பதிவு செய்தனர். தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது வகை நிலம் தரிசு; இதை ஆங்கிலேயர்கள் தங்கள் பதிவுகளில் "பஞ்சார்" என்று குறிப்பிட்டனர். நிலஉடைமை முறைகளும், வாரியங்களும் காடுகளை அகற்றுதல், நீர்ப்பாசனக் குளங்கள், கால்வாய்கள் வெட்டுதல் போன்றவற்றுக்கு கூட்டு முயற்சி தேவைப்பட்டது, கல்வெட்டுகளில் காணப்படும் சபா-மஞ்சிகம், ஊர்-மஞ்சிகம், மற்றும் ஊர்ப்பொது ஆகிய சொற்கள் சோழர் காலத்திய நிலத்தில் கூட்டுடைமை உரிமையைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்மதேயம், தேவதானம், ஆங்கிலேயரது இரயத்வாரி நிலங்களைப் போன்ற வேளாண் வகை, போர்க்காலங்களில் மன்னரின் இராணுவ சேவைக்குத் தயாராக இருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களைப் பராமரிப்பதற்காக நிலப்பிரபுகளுக்கு "படைபற்று" போன்ற நிலஉடைமைகள் உருவாக்கப்பட்டிருந்தன. பிரம்மதேயம், தேவதானம் அரசுக்கும் விவசாயிக்கும் இடையில் ஒரு இடைநிலையை உருவாக்க வழிவகுத்தது. பிரம்மதேயத்தில், பொதுவாக, ஒரு பிரம்மதேய நிலம் பல பங்குதாரர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஆனால் ஏகபோக பிரம்மதேயம் ஒரு தனிநபருக்கு மட்டுமே உரிமை உடையதாக இருந்தது. "குடிநீக்கா" அல்லது "குடிநீக்கி" என இரு வகையான கிராமங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. "குடிநீக்கி" கிராமங்களில் பிராமண நிலஉரிமையாளர்கள், குத்தகைதாரர்களையும் விவசாய தொழிலாளர்களையும் வெளியியிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது. கோயில்களால் நிர்வகிக்கப்பட்ட தேவதான நிலங்கள் கிராம சபை மற்றும் அரசு மேற்பார்வையில் இருந்தன. தரிசு நிலங்களும், வன நிலங்களும் பெயரளவு வருடாந்திர வாடகைக்கு கோயில்களுக்கு வழங்கப்பட்டன. கோயில்கள் இந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு சாகுபடி செய்தன. நிலத்தை உழுதல், சமன் செய்தல், நீர்ப்பாசனம் வழங்குதல் ஆகியவை குத்தகை நிபந்தனைகளாக இருந்தன. பொதுவாக, கோயில் நிலங்களை பயிரிட்டவர்கள் வழங்க வேண்டிய சேவைகள் கோயில்களில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்குதல், வழிபாடு நடத்துதல் மற்றும் கோயிலைக் கண்காணித்தல் போன்ற வடிவங்களில் இருந்தன. மன்னரின் முன் அனுமதி இல்லாமல் கோயில் நில குத்தகைதாரர்களை அகற்ற முடியாது. படக்குறிப்பு, முதலாம் பராந்தகன் ஆட்சியில் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை வெளிப்படுத்தும் கல்வெட்டு உள்ளாட்சி நிர்வாகம் பல சோழர் கால மகாசபை கல்வெட்டுகள் சாகுபடியின் பல்வேறு அம்சங்களை மேற்பார்வையிடும் கிராம சபையின் குழுக்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. இரண்டு முக்கியமான குழுக்கள் ஏரி வாரியம், தோட்ட வாரியம். பயிரிடப்பட்ட நிலங்களின் பொது மேற்பார்வைக்கு கழனி-வாரியம், மதகுகளைப் பராமரிக்க கலிங்கு-வாரியம், மற்றும் சாகுபடி வயல்களைச் சுற்றியுள்ள பாதைகள் மற்றும். சாலைகளை பராமரிக்க தடிவழி-வாரியம் அமைக்கப்பட்டிருந்தது. எந்தெந்த ஊர்களின் வழியாக பெருவழிகள் சென்றனவோ அந்தந்த ஊர்களில் வணிகர்களிடமிருந்து தடிவழி வாரியம் மூலம் பராமரிப்பு வரிகள் பெறப்பட்டன. ஊர், நாடு, நகரம், பிரம்மதேயம் (பிராமணர் குடியிருப்புகள்) ஆகியவை சோழர்களின் நிர்வாக அமைப்புகளாகும். ஊர் என்பது பிரம்மதேயமல்லாத கிராமம். சில கல்வெட்டுகளில் காணப்படும் 'ஊர் உழுதுகொண்டு' என்ற சொற்றொடர், நிலம் ஊர் மக்களால் பயிரிடப்பட்டதைக் குறிக்கிறது. நொபுரு காராஷிமா ஆய்வு செய்த சோழமண்டலத்தில் உள்ள அல்லூரில், ஊர்ப் பொது நிலம் அங்கு குடியிருந்தவர்களால் பயிரிடப்பட்டது. அதே நேரத்தில் கோயில், அர்ச்சகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்குச் சொந்தமான மற்ற நிலங்கள் உள்ளூர் மக்களைத் தவிர "புறக்குடி" என அழைக்கப்பட்ட வெளியூர் மக்களால் பயிரிடப்பட்டன. இவர்கள் நிரந்தர குத்தகைதாரர் அந்தஸ்து அல்லாதவர்கள் ஆவர். 'நாடு' என்பது பல சிற்றூர்கள் சேர்ந்த விவசாயப் பகுதிகள். வேளாண் சமூகக் கட்டமைப்பின் ஒரு சிறிய வடிவம். ஒவ்வொன்றும் திருமணம் மற்றும் இரத்த உறவால் பிணைக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைக் கொண்டிருந்தது. ஏராளமான கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'நாட்டார்' அப்பகுதியில் மன்னரிடமிருந்து நில உரிமை சாசனத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியவர்கள்; தங்களுக்குரிய பகுதியில் நிலங்களை வகைப்படுத்தி பதிவு செய்தனர். நீர்ப்பாசனக் குளங்களைச் சார்ந்திருந்த நிலங்களின் முழு உற்பத்தித்திறனையும் உபயோகிக்க அவர்களுக்கு உரிமை இருந்தது. நாட்டார்களின் ஆதிக்கம், அவர்களின் பகுதியில் கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவத் திறனை அடிப்படையாகக் கொண்டது. சோழ அரசின் சோழமண்டல கடலோரப் பகுதியில் வலதுகைப் பிரிவைச் சேர்ந்த வலங்கை வேலைக்கார வீரர்கள் அடங்கிய சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ அமைப்பு அத்தகைய தோர் ஏற்பாட்டின் அங்கமாகும். வருவாய் கணக்கெடுப்பு மற்றும் தீர்வை நிர்ணயம் செய்தது நாடு-சேய் அல்லது நாடு-வகை-சேய் அதிகாரி ஆவார். தமிழகத்தை ஆண்ட சோழப்பேரரசு கடலாதிக்கம் செலுத்திய ஒரு ஏகாதிபத்திய பேரரசு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி இப்பேரரசை கிழக்கு ரோமப் பேரரசான பைசாண்டின் (கான்ஸ்டான்டிநோபிள்- இன்றைய இஸ்தான்புல்-) பேரரசோடு ஒப்பிட்டார். சோழ நாடு ஒரு பேரரசாக உருவாவதில் முக்கிய பங்காற்றியவர்கள் இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் முக்கிய இடம் வகிக்கின்றனர். இராஜராஜ சோழன் சோழ மன்னர்களில் ராஜராஜன் பதவியேற்கும் போது அரசியல் ரீதியாக சாதகமானதொரு சூழல் இருந்தது. வடக்கிலிருந்து பெரும் அச்சுறுத்தலாக இருந்த ராஷ்டிரகூடர்கள் சாளுக்கியர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். முதலாம் பராந்தகன் தெற்கே பாண்டிய நாட்டு கடைசி முக்கிய மன்னனான இரண்டாம் ராஜசிம்மனைத் தோற்கடித்து "மதுரை கொண்டான்" என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டிருந்தார். ராஜவர்மன் இலங்கைக்குத் தப்பி ஓடி தனது கிரீடத்தையும் கழுத்தில் அணியும் பதக்கங்களையும் இலங்கை மன்னனிடம் கொடுத்துவிட்டு கேரளாவில் தனது தாயின் ஊருக்குச் சென்று விட்டார். ஆட்சி பறிபோன பிறகு (920), கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கழித்தே (1216), மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியை மீட்டு அரியணையில் அமர்ந்தார். இலங்கை மீதான படையெடுப்பு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கு எதிராக முதலாம் நரசிம்மனுக்கு இலங்கை அரசன் மானவம்மன் உதவியதாலும் பின்னர் மானவம்மன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட போது நரசிம்மவர்மன் மானவம்மன் மீண்டும் அரியணையில் அமர உதவியதாலும் பல்லவர் காலத்தில் இலங்கையுடனான அரசியல் தொடர்பு நெருக்கமாக இருந்திருக்கிறது. பல்லவர் காலத்தில் மகாபலிபுரம் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்திருக்கிறது. அதன் மூலமாக ஏற்பட்ட சமூக-கலாசார பாதிப்புகள் இரு நாடுகளிலும் வெளிப்பட்டன. இலங்கையில் கோவில் கட்டடக்கலை, சிற்பங்கள் அனைத்திலும் பல்லவர் தாக்கத்தைப் பார்க்கமுடியும். ஆனால் சோழர் காலத்தில் அரசியல் சூழல் மாறியிருந்தது. இராஜராஜன் தான் பதவிக்கு வந்தவுடன் இலங்கையின் மீது தாக்குதல் நடத்த பாண்டிய நாட்டின் மீதான ஆதிக்கம் அவசியம் என உணர்ந்தார். தன் இளம் வயதிலேயே மலபார் கடற்கரையில் சேர மன்னரைத் தோற்கடித்து சோழர்களின் கடற்படை வலிமையை வெளிப்படுத்தியிருந்தார். தனது ஆட்சி எல்லைக்கு மேற்குப் பகுதிகளில் இருந்த சேர மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை சோழ பேரரசுப்பகுதிகளோடு இணைத்தார். பாண்டியர் ஆட்சி முடிவடைந்திருந்தாலும் பாண்டிய இளவரசர்கள் இலங்கை அரசருடன் கூட்டு சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக தொடர்ந்து சதியில் ஈடுபட்டு வந்ததால் தனது ஆதிக்கத்தை அங்கு நிறுவிட எண்ணி இலங்கையின் மீது படையெடுத்தார். அங்கு ஐந்தாம் மகிந்தா பதவி ஏற்ற சூழலில் அங்கு அவரது படைவீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் தனது ஆதிக்கத்தை எளிதில் நிலைநாட்டினார். தலைநகர் அனுராதபுரம் தரைமட்டமாக்கப்பட்டது. பொலநருவா சோழர் தலைநகரானது. இராஜராஜன் காலத்திலேயே அங்கு ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. இராஜராஜன் ஏற்கனவே தான் சூட்டியிருந்த ஜெகநாதன் என்ற பெயரில் அந்நகருக்கு ஜெகநாதமங்களம் எனப் பெயரிட்டார். மற்றொரு சிவன் கோவில் அவரது அதிகாரி தளி குமரன் என்பவரால் கட்டப்பட்டு பேரரசரின் பெயரில் ராஜராஜேஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டது. காட்டிற்குள் தப்பியோடிய இலங்கை அரசன் பிடிபட்டு சோழ மன்னர் சிறையில் தனது எஞ்சியிருந்த 12 ஆண்டு காலத்தை கழித்து உயிரிழந்தார். இராஜராஜன் தான் அரியணை ஏறிய பத்து ஆண்டுகளுக்குள் தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டி, நிலையானதோர் ஆட்சியை அமைத்தார். ராஜராஜனின் இறுதிக்காலம் தென் தக்காணத்தில் பல்லவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களுடன் போர் புரிவதில் கழிந்தது. பட மூலாதாரம், UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம். ராஜேந்திர சோழன் 1012இல் ஆட்சிப்பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் சாளுக்கியர் அச்சுறுத்தலை முழுவதும் முறியடிக்கும் நோக்கில் சாளுக்கிய மன்னர் மூன்றாம் ஜெயசிம்மனை போரில் வென்றதோடு (1020), வடக்குநோக்கி மேலும் முன்னேறி ஒரிசா, கோசல நாட்டு மன்னர்களையும் வென்றார். வட இந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் சூழல் ராஜேந்திரனுக்கு மிகச் சாதகமாக இருந்தது. அதுவரை அப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய பிரத்திகாரர், பாலர் பேரரசுகள் பலம் குன்றி நலிவடைந்திருந்தன. ஆதலால் கன்னோஜ் அரசன் கோவிந்த சந்திரா, வங்காளத்து மஹிபாலன் ஆகியோரையும் தோற்கடித்து அவரது படை கங்கைக்கரையை சென்றடைய முடிந்தது. இவ்வெற்றிகளின் நினைவாக பின்னர் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டத்தைச்சூடியதை நாம் அறிவோம். தான் அரியணை ஏறிய ஐந்தாம் ஆண்டில் மகிந்தாவின் ஆட்சியின் போதே ராஜேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்து (1017) இலங்கையை வென்றார். ஏராளமான கொள்ளைப் பொருள்களுடன் சோழர் வெற்றிப்படை அங்கிருந்து திரும்பியது. பராந்தகனாலும் இராஜ ராஜ சோழனாலும் செய்ய முடியாத பாண்டிய மன்னரின் கிரீடம், பரம்பரை நகைகள், ஒடிக்க முடியாத வாள், விலைமதிக்க முடியாத வைரக்காப்பு, கற்களாலான பதக்கங்கள் அனைத்தையும் ராஜேந்திரன் மீட்டு வந்தார். இராஜேந்திரன் அனுப்பிய கப்பற்படை வங்கக்கடலைக் கடந்து ஸ்ரீ விஜயா பேரரசின் கீழ் இருந்த மலேயா தீபகற்பத்தில் கடாவை (காந்தாரம்) வென்று சோழராதிக்கத்தை நிலைநாட்டியது. கல்வெட்டுப் பதிவுகளின் படி ஸ்ரீவிஜயத்தைத் தாக்கிய பிறகு முதலாம் இராஜேந்திரன் சங்கிராம் விஜயதுங்கவர்மனை கைது செய்து ஸ்ரீவிஜயத்தின் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட வித்யாதர தோரணம் உட்பட பல விலைமதிப்பற்ற பொருள்களைப் பறித்தார். இராஜராஜனும் இராஜேந்திரனும் அந்நிய நாட்டு எதிரிகளை முழுமையாக முறியடித்து உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்திய பின் தான் கோவில் கட்டுதல், புதிய தலைநகர் கட்டுவது, போன்ற பணிகளில் ஈடுபட்டனர். தஞ்சை பெரிய கோவில் (இராஜராஜேஸ்வரர் கோவில்) இராஜராஜனின் 20ஆம் ஆண்டு ஆட்சியின் போது, அதுவும் மகனிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்தபின் (1012) கட்டப்பட்டது. வெளிநாட்டு வணிகத்தொடர்பு பண்டைய உலகின் "புதையல் பெட்டியாக" இந்தியா விளங்கியது என்று புதைபொருள் ஆய்வாளர் பீட்டர் பிரான்சிஸ் கூறுகிறார். உலகச்சந்தை உருவாக சோழப் பேரரசின் துறைமுகங்களும், தமிழ் வர்த்தகக் குழுவினரும் முக்கிய காரணிகள் என வரலாற்றறிஞர் டான்சன் சென் குறிப்பிடுகிறார். தமிழர்களின் கடல் கடந்த நாடுகளுடனான வணிகத்தொடர்புகள் துறைமுகங்கள் பகுதிகளில் மட்டுமில்லாமல் உள்நாட்டிற்குள்ளும் விஸ்தரிக்கப்பட்டிருந்ததை கொடுமணல், உறையூர், ஆலங்குளம் போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள புதைபொருள் சான்றுகள் அடிப்படையில் நாம் அறிகிறோம். தென் இந்தியாவிலிருந்து முத்து, பவள மணிகள், மாணிக்கக் கற்கள் கண்ணாடி போன்றவை சீனாவிற்கு சென்றிருக் கின்றன. கடல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கவிழ்ந்த, விபத்துக்குள்ளான கப்பல்களிலிருந்து கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் என்னென்ன பொருள்கள் ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதைத் தெரிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஸ்ரீ விஜயா தலைநகரான பலெம் பாங்கிலிருந்து (சுமத்ரா) ஜாவாவிற்குச் செல்லும்போது கடலில் மூழ்கிய கப்பலில், சீன நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக வந்த கண்ணாடிகள், மட்பாண்டங்கள், இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட வெண்கலம், தகரம், ஈயம், இந்தோனீசியாவின் சிறப்பு அணிகலன்கள் மற்றும் வெள்ளி போன்றவை முக்கிய சரக்குகளாகக் காணப்பட்டன. ஸ்ரீவிஜயம் பத்தாம் நூற்றாண்டில் கடல் வணிகத்தில் தலை சிறந்து விளங்கியது. சுமத்ரா, மலேயா போர்னியோ, பிலிப்பைன்ஸ், மேற்கு ஜாவா, பார்மோசாவின் (தைவான்) பாதி இடங்களையும் கொண்டிருந்த பரந்து விரிந்திருந்த இந்த ஏகாதிபத்தியப் பேரரசு பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தான் நலிவடையத் தொடங்கியது. அத்தகையதொரு நாட்டை சோழப்பேரரசர்கள் போரில் வென்றது மிகப்பெரிய சாதனையாகும். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள் சோழர்கள் தமிழகத்தை ஆண்ட விதம் மேற்கூறிய சாதனைகள் எல்லாம் சோழர்களால் சாதிக்க முடிந்ததற்குக் காரணம் அவர்களது அரசாண்மைத் தந்திரம். பிராமணர்கள், கோவில்கள், சமயநிறுவனங்கள், வர்த்தகக்குழுக்கள் அனைத்துடனும் ஒருங்கிணைந்த அரசாக தங்கள் அரசை அமைத்தார்கள். கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் சோழர் படை பெற்ற வெற்றிகளால் அப்பகுதிகளில் வணிகத்தொடர்பை விரிவாக்கம் செய்ய முடிந்தது; அதுபோல் இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் போரின் மூலம் வென்ற பகுதிகளின் மீதான ஆதிக்கத்தால் தான் அங்கு வணிகத்தொடர்பு தங்குதடையின்றி நீடித்தது என பேராசிரியர் சம்பக லெக்ஷ்மி கருதுகிறார். பேரரசின் ஆதரவைப் பெற்றிருந்த பெரும்பொருள் ஈட்டியிருந்த வணிகர்கள் கோவில்களுக்கும் சமயநிறுவனங்களுக்கும் தாராள நிதி வழங்கி சோழப் பேரரசைப் போற்றினர். பெரும்பாலும் மெய்க்கீர்த்தி சாசனங்கள், மகாசபை கல்வெட்டுகளிலிருந்து நாம் அறிவது அனைத்தும் மன்னர்களைப் பற்றியும் மேல்தட்டு மக்களைப் பற்றியுமே ஆகும். இருப்பினும் சிலவற்றில் குறிப்பிடப்படும் விவரங்கள் அக்கால அடக்குமுறையிலான சுரண்டல் சமூகத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு ஒரு உதாரணம். குடவோலை முறையில் மகாசபைக்கும் அதன் பல்வேறு வாரியங்களுக்கும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதாக அது பறைசாற்றுகிறது. ஆனால் அத்தேர்தல்களில் போட்டியிட, வாக்களிக்க, நிர்ணயிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நாம் படிக்கும்போது உண்மை நிலை நமக்குப் புரிகிறது. சொத்துரிமை கொண்ட, வேதங்களைக் கற்றறிந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியும். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆக பெரும்பான்மையான மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவோ அல்லது தங்கள் கருத்துகளைக் கூறவோ உரிமை இல்லை. சோழர்கள் மாபெரும் கோயில்களைக் கட்டினார்கள் என பெருமைப்படுகிறோம் ஆனால் அக்கோவில்களுக்குள் சூத்திரர்களாக முத்திரை குத்தப்பட்ட உழைப்பாளர்களில் பெரும்பகுதியினர் நுழைய முடியாது. சோழர் சாதனைகளுக்கு பின்னே ஒளிந்துள்ள 'அடிமை முறை' சோழ மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அரசுக்கு நீர்ப்பாசன அல்லது பொதுப்பணித் துறை எதுவும் இல்லை. ஏரிகள், குளங்கள் வெட்டுவது, அவற்றை பராமரிக்கும் பணிகள் அனைத்தும் தனிநபர்கள், கிராம சபைகள், கோயில்களிடம் விடப்பட்டன. மழை பெய்யும் முன் ஒவ்வொரு ஆண்டும் கிராம சபைகள் தூர் வார வேண்டும். வெட்டி, மஞ்சி போன்ற சொற்கள் அத்தகைய சேவை வழங்கிய பணியாளர்களைக் குறிக்கும். நதி நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரமாக இருந்த பகுதிகளில், நீர்தேக்கங்களைப் பராமரிக்கும் பொறுப்பு நிலத்தை வைத்திருப்பவர்களுடையதாகும். வெறுக்கத்தக்க அடிமை முறை அவர்கள் கடமையை ஆற்ற உதவியது. நிலவரி கொள்கை வேளாண் வகை கிராமங்களில், மேல்வாரம் அரசுக்குரிய பங்கு. குடிவாரம் நிலத்தை சொந்தமாக வைத்திருப்பவரின் பங்கு என பிரிக்கப்பட்டு நிலஉடமையாளரிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்டது. மேல்வாரம், குடிவாரம் தவிர, நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயிகளாக இல்லாத இடங்களில், துண்டுவாரம் எனப்படும் பங்கு வசூலிக்கப்பட்டது. உதாரணமாக, கோயில், இராணுவ அதிகாரிகள், வணிகர்கள், அர்ச்சகர் கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் வைத்திருந்த நிலத்தின் விளைபொருட்கள் மேல்வாரம், குடி வாரம், மற்றும் துண்டு வாரம் எனப் பிரிக்கப்பட்டன. கிடைக்கக்கூடிய அனைத்து புள்ளிவிவரங்களும் வருவாயில் அதிக விகிதத்தை அரசு வரியாகக் கோரியதைக் குறிக்கின்றன. ராஜேந்திரனின் சிதம்பரம் கல்வெட்டின்படி, 4500 கலம் நெல் விளையும் 44 வேலி நிலத்திற்கான மேல்வாரம் மொத்த விளைச்சலில் 50% ஆகும். இதுதான் ஆங்கிலேயர்கள் நீர் நிலங்களுக்கு(நன்செய்) விதித்தது. இருப்பினும், சோழ ஆட்சியாளர்களின் நன்கு நிறுவப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் காரணமாக வரிவிதிப்பு அடக்குமுறையாகக் கருதப்படவில்லையா அல்லது விதிக்கப்பட்டிருந்த சமூகக் கட்டுப்பாடுகளால் எதிர்ப்பதற்கான சூழல் இல்லையா என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு வழிபாட்டுத் தலங்களை இடித்தல் சோழர் காலத்தில் பெரும் துறைமுகமாக இருந்த நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயா அரசன் விஜயோத்துங்க வர்மன் தனது நாட்டு மக்கள் வழிபட கட்டியதுதான் சூடாமணி விகாரம். இதைக் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனதாக இராஜராஜ சோழனின் 21ஆம் ஆண்டு ஆட்சியில் வெளியிடப்பட்ட சாசனம் தெரிவிக்கிறது. இதைப் பேணிப் பாதுகாக்க 97வேலி நிலங்கள் அடங்கிய 26 கிராமங்கள் தானமாக இராஜராஜ சோழனால் வழங்கப்பட்டிருந்தது. "சீன பகோடா" என அழைக்கப்பட்ட இது சுமத்ரா, ஜாவா கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டது. அதே விஜயதுங்கவர்மனை . ராஜேந்திர சோழன் போரில் வென்றபின் ஸ்ரீவிஜயாவில் பௌத்த விகாரைகளை இடித்து அவ்விடங்களில் சிவன் கோவில்கள் கட்டுகிறார். அக்காலத்தில் வழிபாட்டு தலங்கள் ஏகாதிபத்தியத்தின் சின்னமாகக் கருத்தப்பட்டது. இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் சோழப் பேரரசின் ஏகாதிபத்தியத்தின் அடையாளம். தில்லி சுல்தான்களாக இருந்தாலும் முகலாய மன்னர்களாக இருந்தாலும் எங்கே தனது பேரரசுக்கு அடங்கிப் போனார்களோ, அப்பகுதியில் கோவில் கட்ட நிலம் தானமாக வழங்கினார்கள். எங்கு தனது ஆட்சிக்கு சவால் வந்ததோ அங்கு வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன. ஔரங்கசீப் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தார் இந்தியாவில் கோவிலை இடித்த. முகமது கஜினி மத்திய ஆசியாவில் முஸ்லிம் மன்னர்களின் மீது போர் தொடுத்த போது தனது இந்து தளபதி திலக் என்பவரை அனுப்பி மசூதியை இடிக்கச் செய்தார். எந்த விதத்திலும் சோழ மன்னர்கள் சமகாலத்து (இடைக்கால) பேரரசர்களிடமிருந்து வேறுபட்டிருக்கவில்லை. அவர்கள் கடைபிடித்த அதே நடைமுறையையே பின்பற்றினர். பட மூலாதாரம், GETTY IMAGES சமூக வன்முறைகள் சோழர் ஆட்சி சாதிய பாகுபாடுகளை ஆழமாக சமூகத்தில் வேரூன்றச்செய்தது. அவ்வேறுபாடுகள் அவர்கள் காலத்திலேயே சமய வழிபாடுகளில் வெளிப்பட்டது. வலங்கையினர் (வேளாண் குடியினர்- உள்ளூர் மக்கள்) பெற்றிருந்த சிறப்பு உரிமைகளுக்கு இடங்கையினரிடமிருந்து (கைவினைஞர்கள்-வெளியூரிலிருந்து வந்து குடியிருந்தவர்கள்) எதிர்ப்பு கிளம்பியதால் பகைமை அதிகரித்தது. சோழர்ஆட்சி காலத்தில் காஞ்சிபுரத்தில் வலங்கை-இடங்கை பிரிவினர் ஒரே கோவிலில் கடவுள் தரிசனம் செய்யமாட்டார்கள்; மதச் சடங்குகளுக்காக ஒரே மண்டபத்தை பயன்படுத்த மாட்டார்கள்; தேவதாசிகள், நடனமாடும்பெண்கள் கூட இரு பிரிவினருக்கும் தனித்தனி தான் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார். முதலாம் குலோத்துங்கன் ஆட்சியின் போது இரு பிரிவினருக்கும் இடையே வெடித்த மோதலின் விளைவாக ராஜ மகேந்திர சதுர்வேதி மங்களம் (பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்) தீக்கிரையானது. அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு, விலைமதிப்பில்லா பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சாஸ்திரி சுட்டிக்காட்டுகிறார். (கட்டுரையாளர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjdyr57gz9mo
  9. லொஹான் ரத்வத்தவின் மரணம் முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு ஆகும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16 AUG, 2025 | 02:19 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் மரணம் கண்டி பிரதேசத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லொஹான் ரத்வத்த உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (15) காலமானார். லொஹான் ரத்வத்தவின் சடலத்தை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (15) சென்றுள்ளனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222675
  10. அமெரிக்க கடற்படையின் போர் கப்பலான சான்டா பாப்ரா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 16 AUG, 2025 | 03:05 PM அமெரிக்க கடற்படையின் போர் கப்பலான சான்டா பாப்ரா (u s s santa barbara) இன்று சனிக்கிழமை (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட கால நட்புறவின் சின்னமாக அமெரிக்க கடற்படையின் சான்டா பாப்ரா கப்பல் காணப்படுகின்றது. அமெரிக்காவும் இலங்கையும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியப் பெருங்கடல் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பல்வேறு நோக்கங்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக தமது நட்புறவை பேணி வருகின்றது. அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் உள்ள நட்புறவை சான்டா பாப்ரா கப்பல் எடுத்துக்காட்டுகிறது. இது கடற்பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகளை ஊக்கமளிக்கின்றது. இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222688
  11. மன்னாரில் 14 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : கறுப்புப் பட்டி அணிந்து காற்றாலை, கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக கோஷம் 16 AUG, 2025 | 01:19 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு சனிக்கிழமை (16) ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சனிக்கிழமை (16) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/222678
  12. புதிய பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்! 16 AUG, 2025 | 12:20 PM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என கடந்த 13 ஆம் திகதி பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு, பொதுமக்களிடமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/222660
  13. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர், லார்ட் மவுண்ட்பேட்டனை இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் நியமித்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 15 ஆகஸ்ட் 2025 தனக்கு வயதாகும் என்று மவுண்ட்பேட்டன் ஒருபோதும் நினைத்ததில்லை. சளி போன்ற சாதாரண உபாதையைத் தவிர, அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நோயாலும் அவதிப்பட்டதேயில்லை. 70 வயதைத் தாண்டிய போதிலும், அவர் பிராட்லேண்டில் இருக்கும் போதெல்லாம், காலையில் இரண்டு மணி நேரம் குதிரை சவாரி செய்வார். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அவரது சுறுசுறுப்பு சற்று குறைந்ததால், தனக்குப் பிடித்தமான போலோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்த்தார் என்பதைத் தவிர, அவர் ஆரோக்கியமாகவே இருந்தார். சோர்வடையும்போதும் அல்லது சலிப்படையும்போதும் உறங்குவது அவர் வழக்கம். ஆனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அவரது விருப்பம் ஒருபோதும் குறையவில்லை. குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்துவந்த மவுண்ட்பேட்டன், ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிராட்லேண்ட்ஸில் கொண்டாடினார். ஈஸ்டருக்கு பிராபோர்னில் ஒன்றுகூடி மகிழும் மவுண்ட்பேட்டனின் குடும்பத்தினர், பெரும்பாலும் தங்கள் கோடைகாலத்தை அயர்லாந்தில் உள்ள கிளாசிபானில் கழித்தனர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார் "மவுண்ட்பேட்டன் தனது பேரக்குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்" என்று பிரையன் ஹோய் 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். "மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறைக் காட்டுவார் என்று அவரது பேரனின் தோழிகளில் ஒருவர் கூறுகிறார். அவர் தற்போதும் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்படுவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பிரையன் ஹோய் எழுதுகிறார். "அவருடன் இருப்பது ஜாலியாக இருக்கும். அவர் உல்லாசமாக இருப்பார், ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை." குழந்தைகளுடனான அவரது தொடர்புக்கு ஒரு காரணம், அவரே குழந்தையைப் போன்ற இயல்பைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. மவுண்ட்பேட்டனின் பேரன் மைக்கேல் ஜான், "அவருக்கு அற்புதமான நகைச்சுவை உணர்வு இருந்தது. அவர் எங்களுடன் அமர்ந்து சார்லி சாப்ளின் படங்களைப் பார்க்கும்போது விழுந்து-விழுந்து சிரிப்பார்" என்று தெரிவித்தார். "அவர் அந்தப் படத்தை இதற்கு முன்பு பலமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் புதிதாக பார்ப்பதுபோலவே ரசித்து சிரிப்பார்." பட மூலாதாரம், BLINK படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார் ஐஆர்ஏவின் இலக்கான மவுண்ட்பேட்டன் பணி ஓய்வுக்குப் பிறகு மவுண்ட்பேட்டன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அரசு அறிந்திருந்தது. 1971ஆம் ஆண்டிலேயே, அவரது பாதுகாப்பிற்காக 12 போலீசார் பணியமர்த்தப்பட்டனர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிலிப் ஜீக்லருக்கு அளித்த பேட்டியில், "வடக்கு அயர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தோழர்கள் சிலரை விடுவிக்க அயர்லாந்து குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) என்னைக் கடத்திச் செல்லக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது" என்று மவுண்ட்பேட்டன் கூறியிருந்தார். "ஒரு சோதனையில், ஐஆர்ஏ கொல்ல விரும்பிய 50 பேர் கொண்ட பட்டியலில் மவுண்ட்பேட்டனும் இருப்பது தெரியவந்தது," என்று ஆண்ட்ரூ லூனி தனது "The Mountbattens: Their Lives and Loves" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். "70களின் முற்பகுதியில் க்ளோசிபனில் மவுண்ட்பேட்டனைக் கொல்ல ஒரு திட்டம் இருந்ததாக ஒரு மூத்த ஐ.ஆர்.ஏ உறுப்பினர் உறுதிப்படுத்தினார், ஆனால் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அது செயல்படுத்தப்படவில்லை." என ராயல் மிலிட்டரி காவல்துறை அதிகாரியான கிரஹாம் ஜோயல், ஆண்ட்ரூ லூனியிடம் கூறினார் "ஆகஸ்ட் 1976இல் மவுண்ட்பேட்டனை சுடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது, ஏனெனில் அலைபாயும் கடல் பகுதியில் ஐ.ஆர்.ஏ ஆயுததாரிகளால் துல்லியமாக குறிவைத்து சுடமுடியவில்லை." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்டு மவுண்ட்பேட்டன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் 1979 மார்ச் மாதத்தில், நெதர்லாந்திற்கான பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் சைக்ஸ் மற்றும் எம்.பி. எரிக் நீவ் ஆகியோர் ஐ.ஆர்.ஏ-வால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் நேட்டோ தலைவர் ஜெனரல் அலெக்சாண்டர் ஹெய்கை பெல்ஜியத்தில் படுகொலை செய்ய ஐ.ஆர்.ஏ முயற்சித்தது, ஆனால் அவர் மயிரிழையில் மரணத்திலிருந்து உயிர் தப்பினார். இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான், தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிக்னெல், அயர்லாந்துக்கு செல்ல வேண்டாம் என்று மவுண்ட்பேட்டனுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர், 'அயர்லாந்து மக்கள் எனது நண்பர்கள்' என்று கூறினார். இதற்கு எதிர்வினையாற்றிய பிக்னெல், 'எல்லா அயர்லாந்து மக்களும் உங்கள் நண்பர்கள் அல்ல' என்று சொன்னார். எனவே, பிக்னெலின் அறிவுரையின்படி, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை இரவில் உறங்கும்போதும் அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கினார் மவுண்ட்பேட்டன் "ஜூலை 1979 இல், அவருக்கு ஏற்படவுள்ள ஆபத்தை மதிப்பிட்ட கிரஹாம் ஜோயல், 'ஷேடோ ஃபைவ்' சொகுசு படகில் பயணிப்பது மவுண்ட்பேட்டனுக்கு ஆபத்தை அதிகரிக்கும், ஏனெனில் இரவில் யாரும் சப்தமில்லாமல் அதில் ஏறிவிடமுடியும் என்று கூறினார்'' என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார் "பெல்ஃபாஸ்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கார் பல முறை கடற்கரையை நெருங்கி வருவதைக் கண்டதால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டது. ஒரு முறை, காரில் உள்ளவர்களை பைனாகுலரைப் பயன்படுத்தி பார்க்க ஜோயல் முயன்றார்." ''மவுண்ட்பேட்டனின் படகை ஒரு மனிதன் தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோயல் கண்டார். படகிலிருந்து சுமார் 200 கெஜம் தொலைவில் சந்தேகத்திற்குரிய நபர் இருந்திருக்க வேண்டும்." பட மூலாதாரம், SIDJWICK & JACKSON படக்குறிப்பு, பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் லார்ட் மவுண்ட்பேட்டன் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார் மவுண்ட்பேட்டனின் படகில் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை ஜோயலின் எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது அறிக்கை புறக்கணிக்கப்பட்டு மவுண்ட்பேட்டனின் பாதுகாப்பு அயர்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1979 ஆகஸ்ட் 27ஆம் நாள் பிரிட்டன் முழுவதும் விடுமுறை நாளாக இருந்தது. பல நாட்கள் மழைக்குப் பிறகு சூரியனைப் பார்த்த மவுண்ட்பேட்டன், காலை உணவின் போது தனது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்,'ஷேடோ ஃபைவ்' படகில் சவாரி செய்ய தன்னுடன் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று அவர் கேட்டார். படகுத்துறைக்குச் செல்வதற்கு முன், மவுண்ட்பேட்டன் பயணத்திட்டத்தை தனது பாதுகாப்புப் பணியாளர்களிடம் விளக்கினார். பைனாகுலர் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள், தங்கள் காரை படகுத்துறையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள். மவுண்ட்பேட்டனுக்கு பாதுகாவலாக வந்த காவலர்களில் ஒருவர் கடல் அலைகளினால் வாந்தி எடுக்கத் தொடங்கினார். எனவே, பாதுகாவலர்கள் யாரும் தங்களுடன் படகில் வரத் தேவையில்லை என்று மவுண்ட்பேட்டன் கூறிவிட்டார். 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற தனது புத்தகத்தில், ''படகில் அமர்ந்தவுடன் மவுண்ட்பேட்டன் படகின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்'' என்று பிரையன் ஹோய் எழுதியுள்ளார் படகின் அடிப்பாகத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் இருந்ததாகவும் பின்னர் ஐ.ஆர்.ஏ கூறியது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அயர்லாந்தை பிரிட்டன் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தை முக்கியமாக கொண்டிருந்த அமைப்பு ஐஆர்ஏ ஆகும் மவுண்ட்பேட்டனின் படகு 'ஷேடோ ஃபைவ்' காலை 11:30 மணிக்கு 'ஷேடோ ஃபைவ்' படகு நகரத் தொடங்கியது. படகு சென்றுக் கொண்டிருந்தபோது, கடற்கரையோர சாலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் காரில் பயணித்துக் கொண்டே பைனாகுலர் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். சிறிது தூரம் சென்றதும், மேலும் இரண்டு ஜோடி கண்கள் படகை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை, ஐ.ஆர்.ஏ உறுப்பினர்களுடையவை. அந்த தருணத்தைப் பற்றி பிரையன் ஹோய், "ஷேடோ ஃபைவ் படகின் நடுவில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர், லார்ட் மவுண்ட்பேட்டன் படகை ஓட்டிக்கொண்டிருந்தார், படகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பதை ஐ.ஆர்.ஏஆட்களால் தெளிவாகக் காண முடிந்தது." என எழுதியுள்ளார் "படகில் வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்யும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம், கொலையாளிகளில் ஒருவரிடம் இருந்தது." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வெடிப்பினால் சேதமடைந்த மவுண்ட்பேட்டனின் படகு வெடித்தது படகு 'ஷேடோ ஃபைவ்' படகு, படகுத்துறையிலிருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் சரியாக காலை 11:45 மணிக்கு, கொலையாளிகளில் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் பொத்தானை அழுத்தினார். படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ வெடிபொருட்கள் பெரும் ஓசையுடன் வெடித்தன, படகு துண்டு துண்டாகச் சிதறியது. அந்த நாளை நினைவுகூர்ந்த மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, "நான் என் மாமியார் லேடி பிராபோர்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்,அப்போது நியூ ஸ்டேட்ஸ்மேனின் சமீபத்திய இதழைப் படித்துக்கொண்டிருந்தேன்." "கையிலிருந்த நியூ ஸ்டேட்ஸ்மேனை படிப்பதற்காக என்னுடைய தலை குனிந்திருந்தது. ஒருவேளை அதனால்தான் குண்டு வெடித்தபோது, என் கண்களுக்கு சேதம் குறைவாக ஏற்பட்டதோ என்று நினைக்கிறேன்." "என் தந்தையின் கால்களுக்கு அருகில் டென்னிஸ் பந்து ஒன்றின் அளவுள்ள ஏதோ ஒன்று இருந்ததாக எனக்கு தோன்றியது, அது மிகவும் பிரகாசமான ஒளியை வெளியிட்டது. அடுத்த கணம் நான் தண்ணீரில் விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது" என்று அவர் கூறுகிறார். மவுண்ட்பேட்டனின் மருமகன் லார்ட் பிராபோர்ன் படகின் நடுவில் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்தபோது, அவரது உடலின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், அவரது முகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. குண்டு வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவர் தனது மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் தானே?" என்று கேட்டார். இந்த வார்த்தைகள்தான் மவுண்ட்பேட்டன் கேட்ட கடைசி வார்த்தைகளாக இருக்கலாம். "மாமாவிடம் இந்தக் கேள்வியை கேட்ட அடுத்த கணம் நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தேன், மிகவும் குளிராக இருந்தது. என்னை எப்படி மீட்டார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை" என்று லார்ட் பிராபோர்ன் நினைவு கூர்ந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனின் உடலை கரைக்கு கொண்டு வரும் பாதுகாப்புப் பணியாளர்கள் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது படகின் இடிபாடுகளிலிருந்து சிறிது தொலைவில் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. "மவுண்ட்பேட்டனின் கால்கள் அவரது உடலில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டன. அவர் அணிந்திருந்த 'HMS கெல்லி' என்று எழுதப்பட்டிருந்த முழுக் கை ஜெர்சியைத் தவிர, அவரது உடலில் இருந்த அனைத்து ஆடைகளும் கிழிந்திருந்தன." என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார் "அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பொதுமக்களின் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, ஆம்புலன்ஸ் வரும் வரை அவரது உடலை படகு ஒன்றில் வைத்திருந்தோம்" என்று அவர் எழுதுகிறார். அந்த நேரத்தில் அங்கு இருந்த டாக்டர் ரிச்சர்ட் வாலஸ், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "வெடிப்புச் சத்தத்தைக் கேட்டபோது, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை." "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, தண்ணீரில் பலர் விழுந்திருந்ததைக் கண்டோம். எங்கள் முதல் பணி உயிருள்ளவர்களிடமிருந்து இறந்தவர்களைப் பிரிப்பதாகும்." "மருத்துவர்களாக, இறந்தவர்களை விட உயிர் பிழைத்தவர்கள் மீது கவனம் செலுத்துவதே எங்களது கடமையாக இருந்தது. மவுண்ட்பேட்டனின் சடலத்துடன் நாங்கள் படகுத்துறையை அடைந்தபோது, எங்களுக்கு உதவ பலர் முன்வந்தனர்" என்று அவர் கூறுகிறார். "ஒரு கதவை உடைத்து தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்று உருவாக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு கட்டுப் போடுவதற்காக பெண்கள் துணிகளைக் கிழித்துக் கொடுத்தனர்," என்று டாக்டர் வாலஸ் கூறினார். "நாங்கள் மவுண்ட்பேட்டனின் உடலைக் கரைக்குக் கொண்டு வந்தபோது, அவரது உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களும் காயங்களும் இருந்தன, ஆனால் அவரது முகம் சிதைவடையாமல் சாதாரணமாக இருந்தது." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, IRA 1990களில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது மவுண்ட்பேட்டனுக்கு பிரியாவிடை மவுண்ட்பேட்டன் இறந்த செய்தி கிடைத்தவுடன், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்டன. அவரது மறைவையொட்டி இந்தியாவில் ஏழு நாட்களுக்கு 'அரசு துக்கம்' அறிவிக்கப்பட்டது. 1979 செப்டம்பர் 5ஆம் நாளன்று, அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1400 பேர் முன்னிலையில் நடைபெற்றது. பிரிட்டன் ராணி, இளவரசர் சார்லஸ், ஐரோப்பிய மன்னர்கள் பலர், பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் நான்கு முன்னாள் பிரதமர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் மவுண்ட்பேட்டன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர். பட மூலாதாரம், PHOTO BY TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY IMAGES படக்குறிப்பு, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் ஐ.ஆர்.ஏ பொறுப்பேற்பு மவுண்ட்பேட்டனின் கொலைக்கு பொறுப்பேற்ற அயர்லாந்து குடியரசுப் படை (Provisional IRA) ஒரு அறிக்கையை வெளியிட்டது. 79 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்பதற்கான விளக்கத்தை ஐ.ஆர்.ஏ ஒருபோதும் தரவில்லை. மவுண்ட்பேட்டனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பிலிப் ஜீக்லர், "மவுண்ட்பேட்டனின் கொலை நடந்த அதே நாளில் அயர்லாந்தில் 18 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்த முடிவு ஐஆர்ஏவின் உயர் மட்டங்களில் எடுக்கப்பட்டதை உணர்த்துகிறது" என எழுதுகிறார் "நமது நாட்டை தொடர்ந்து ஆக்ரமித்திருப்பது தொடர்பாக பிரிட்டிஷ் மக்களின் கவனத்தை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்" என்று ஐஆர்ஏ தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தது. மவுண்ட்பேட்டனின் படுகொலைக்குப் பிறகு, ஐஆர்ஏவின் பிரசாரத்திற்கான பொதுமக்களின் ஆதரவு குறைந்தது. அதே நேரத்தில், பிரிட்டனின் பிரதமரான மார்கரெட் தாட்சர், ஒரு அரசியல் அமைப்பு என்ற நிலையில் இருந்து ஐ.ஆர்.ஏவை நீக்கி, அதை குற்றவியல் அமைப்பாக அறிவித்தார். மேலும், அவர் ஐ.ஆர்ஏ போராளிகளுக்கு வழங்கப்பட்ட போர்க் கைதி என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றார். மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாமஸ் மெக்மஹோன் குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குள், கொலையாளிகளைப் பிடிக்க அயர்லாந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள், இது அவர்களுடைய வரலாற்றில் மிகப்பெரிய விசாரணை என்று கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, பிரான்சிஸ் மெக்கேர்ல் (24), தாமஸ் மெக்மஹோன் (31) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 1979 நவம்பர் 23ஆம் நாளன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேகத்தின் பலனை மெக்கேர்லுக்கு வழங்கி அவரை விடுவித்தது. இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததாக மெக்மஹோன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது. தாமஸ் மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் 1998இல் 'குட் ஃப்ரைடே' ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். அவர் மவுண்ட்பேட்டனை கொலை செய்ததற்காக மொத்தம் 19 ஆண்டுகள் பிரிட்டன் சிறையில் கழித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgpdgl21qlo
  14. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி! 16 AUG, 2025 | 10:10 AM உடல்நலக் குறைவு காரணமாக காலமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் சடலம் கண்டி – மஹய்யாவ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) காலமானார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த தனது 57 ஆவது வயதில் காலமாகியுள்ளார். லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222659
  15. மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள் Published By: VISHNU 15 AUG, 2025 | 10:09 PM மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (15) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மதியம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை(15) மதியம் நடைபெற்ற ஜும்மா தொழுகை நிறைவடைந்த நிலையில், முஸ்லிம் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் 13 வது நாளாக மக்களினால் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இடம் பெற்று வருகிறது. அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் போராட்டம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222650
  16. படக்குறிப்பு, இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் அவ்வபோது சர்ச்சையாகி வருகின்றன. கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'கிங்டம்' எனும் தெலுங்கு திரைப்படத்தில், இலங்கை தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது. 'கிங்டம்' திரைப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் 'முருகன்'. இலங்கையின் ஒரு தீவையும் அதில் வாழும் பழங்குடி மக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு தமிழ் குடும்பத்தின் வாரிசாக இந்த 'முருகன்' கதாபாத்திரம் இருக்கும். இந்த பழங்குடி மக்கள் 1920இல் இந்தியாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) குடிபெயர்ந்து இலங்கை வந்தவர்கள் என்று காட்டப்படும். மிகவும் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்படும் இந்த முருகனைக் கொன்று, தன் பழங்குடி மக்களை கதாநாயகன் எப்படி மீட்கிறான் என்பதே கிங்டம் படத்தின் கதை. 'கிங்டம்' திரைப்படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு நிறுவனம், "தமிழ் மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று அறிக்கை வெளியிட்டது. இந்தியத் திரைப்படங்களில் இலங்கைத் தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் சர்ச்சையாவது இது முதல்முறையல்ல. பட மூலாதாரம், YOUTUBE படக்குறிப்பு, ஜாட் திரைப்படத்தின் வில்லன் முத்துவேல் கரிகாலனாக பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'ஜாட்' எனும் பாலிவுட் திரைப்படத்திலும் வில்லன் இலங்கை தமிழராக சித்தரிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. 'ஜாட்' திரைப்படத்தின்படி, "இலங்கையைச் சேர்ந்த முத்துவேல் கரிகாலன் 'ஜாஃப்னா டைகர் ஃபோர்ஸ் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர்'. 2009 ஈழப்போருக்குப் பிறகு தனக்கு கிடைத்த பெரும் அளவிலான தங்கத்தோடு இந்தியா சென்று, ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவனை வீழ்த்தி, அந்த கிராம மக்களை ஒரு இந்திய ராணுவ வீரர் எப்படி மீட்கிறார்" என்பதே கதை. "தமிழ் திரைப்படங்களில் கூட இலங்கைத் தமிழர் குறித்து முறையான சித்தரிப்புகள் இல்லை, பின்னர் எப்படி பிறமொழி இயக்குநர்களிடம் அதை எதிர்பார்க்க முடியும்" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர். "இலங்கை தமிழர்கள் என்றாலே, ஈழத் தமிழர்கள் மட்டும் தான் என்று திரைப்படத் துறையினர் மட்டுமின்றி, சாமானிய மக்கள் கூட நினைக்கின்றனர். மலையகத் தமிழர்கள் போல, அங்கு வேறு சில பிரிவுகள் இருக்கின்றன. தமிழில் 2002இல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் கூட ஈழத்தமிழர் வாழ்க்கையை சரியாகச் சித்தரிக்காமல், விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தியே அவர்களை சித்தரித்தது. இனிவரும் படங்களிலாவது ஈழப்போர், விடுதலைப் புலிகள் போன்ற விஷயங்களைக் கடந்து அவர்களை நாம் அணுக வேண்டும்." என்கிறார் தியடோர் பாஸ்கர். பட மூலாதாரம், YOUTUBE படக்குறிப்பு, 'ஈழம்' குறித்த சித்தரிப்புக்காக கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்தன. இலங்கைத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? இலங்கை மலையகத் தமிழரும், சில இந்திய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான நாராயணன் ரொஹான், ''போர் நடைபெற்ற காலத்திலிருந்து இன்று வரை ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்னைகளை, இந்திய சினிமாவிலுள்ளவர்கள் நேரடியாகப் பார்த்ததில்லை. செய்திகளில் பார்க்கும், படிக்கும் அல்லது யாராவது சொல்கின்ற விஷயங்களை வைத்துக் கொண்டு இப்படி தான் ஈழத் தமிழர்கள் இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது." என்கிறார் நாராயணன். "முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈழத் தமிழர்களை பரிதாபமாக சித்தரிப்பது தான். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை, அடக்குமுறையிலேயே இன்றும் அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற எண்ணத்திலேயே பார்க்கின்றார்கள். போர் முடிவடைந்த பின்னர் ஈழத் தமிழர்கள் ஓரளவு நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றார்கள்.'' என அவர் கூறுகிறார். இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, ஈழத்தமிழர்கள் குறித்த இந்திய திரைப்படங்களை 2009க்கு முன்/பின் என பிரித்துப் பார்க்கலாம். 2009க்கு முன்பு வரை தமிழில் தான் ஈழம் குறித்த படங்கள் ஒப்பீட்டளவில் அதிகம். புன்னகை மன்னன் (1986), உனக்காகப் பிறந்தேன் (1992), தெனாலி (2000), நந்தா (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), ஆணிவேர் (2006), ராமேஸ்வரம் (2007) ஆகிய திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் பிரதான கதாபாத்திரங்களில் இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், 6 தேசிய விருதுகளை வென்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புக்காக மட்டுமல்லாமல், ஈழப்போர் மற்றும் விடுதலை புலிகள் இயக்கம் குறித்த காட்சிகளுக்காகவும் இப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. 2009க்கு முன் வெளியான 'தி டெர்ரரிஸ்ட்', 'காற்றுக்கென்ன வேலி', 'குற்றப்பத்திரிக்கை' போன்ற தமிழ் திரைப்படங்களும், 'சயனைடு', 'மிஷன் 90 டேஸ்' போன்ற பிற இந்திய மொழி திரைப்படங்களும் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்துப் பேசின. "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த கதை என்று சொல்லிவிட்டு, மலைகளையும், அருவிகளையும் கொண்ட ஒரு நிலப்பரப்பை காண்பித்தார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். அதுபோன்ற ஒரு நிலப்பரப்பே அங்கு கிடையாது." என்கிறார் 'ஆணிவேர்' (2006) திரைப்படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன். "ஆணிவேர் திரைப்படம் ஈழத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் கூட அங்கு வசித்தவர்களே. அதனால் தான் ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சமூகங்களிடம் அது நல்ல வரவேற்பைப் பெற்றது." "ஈழத்தமிழர்கள் தொடர்புடைய படம் என்றால் கண்டிப்பாக இலங்கைக்குச் சென்று பார்த்துவிட்டு வர வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் குறைந்தபட்சம் இணையத்திலாவது அடிப்படை ஆராய்ச்சிகளை செய்துகொள்ள வேண்டும் அல்லவா?" என்று ஜான் மகேந்திரன் கேள்வியெழுப்புகிறார். 'கிங்டம்' படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. "தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது மற்றும் படத்தின் 'பொறுப்புத் துறப்பு பகுதியில்' இது குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால், அந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். படத்தை ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம், JOHN MAHENDRAN படக்குறிப்பு, 'ஆணிவேர் திரைப்படம் ஈழத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் கூட அங்கு வசித்தவர்களே' என்கிறார் திரைப்படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன் இலங்கை உள்நாட்டு போருக்குப் பிறகு வெளியான இந்தியத் திரைப்படங்கள் 2009க்குப் பிறகு வெளியான சில திரைப்படங்கள் ஈழப்போரின் தாக்கம் குறித்தும், ஈழத்தமிழர்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பேசின. உதாரணமாக, ஆண்டவன் கட்டளை (2016), ஜகமே தந்திரம் (2021) போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். இந்த காலக்கட்டத்தில், ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மெட்ராஸ் கஃபே திரைப்படம் (2013) மற்றும் 2021இல் வெளியான ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், இவை விடுதலைப் புலிகள் குறித்த சித்தரிப்புக்காக சர்ச்சைகளை எதிர்கொண்டன. மெட்ராஸ் கஃபே திரைப்பட சர்ச்சையின் போது பிபிசியிடம் பேசிய அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாநாயகனுமான ஜான் ஆபிரகாம், "இது தமிழர்களுக்கு ஆதரவான படம் என்று நான் நம்புகிறேன், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதற்காக அல்லது சர்ச்சையை ஏற்படுத்தி விளம்பரம் பெறுவதற்காக படத்தை உருவாக்கவில்லை," என்று தெரிவித்திருந்தார். பட மூலாதாரம், YOUTUBE படக்குறிப்பு, 'மெட்ராஸ் கஃபே தமிழர்களுக்கு ஆதரவான படம்' என தான் நம்புவதாக, படத்தின் தயாரிப்பாளர், கதாநாயகன் ஜான் ஆபிரகாம் கூறியிருந்தார். 'ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் விதம் கவலையளிக்கிறது' "இலங்கை குறித்து இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் இருக்கும் ஒற்றுமை என்பது இவை ஈழத்தமிழர்கள் அல்லது ஈழம் குறித்து மட்டுமே பேசுகின்றன. இலங்கை தமிழர்கள் என்றாலே, ஈழத் தமிழர்கள் மட்டும் தான் என்ற பிம்பம் இந்தியாவில் இருக்கிறது" என்று கூறுகிறார் நாராயணன் ரொஹான். ''ஈழத் தமிழர்கள் வேறு, மலையகத் தமிழர்கள் வேறு. அதுமட்டுமின்றி, நிறைய வகையான தமிழ் உச்சரிப்புகளை பேசக்கூடிய தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் இந்தியாவிலுள்ள பலருக்கு தெரியாது. இலங்கை என்றாலே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் தமிழ் உச்சரிப்பை தான் பேசுவோம் என்ற பிம்பமும் உள்ளது." என்கிறார். இந்திய சினிமாக்களில் ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் விதம் பெரும் கவலையளிப்பதாக ஈழ எழுத்தாளர் தீபச் செல்வன் கூறுகிறார். ''ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கின்ற, வன்முறை ஈடுபாடு கொண்டவர்களைப் போன்று சித்தரிக்கின்ற விதமாக இந்தியாவில் சில படங்கள் எடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலி ஆதரவாளர்களாக இந்திய சினிமாக்களில் ஈழத் தமிழர்கள் காட்டப்படுகிறார்கள். அதேசமயம், விடுதலைப் புலிகளை தவறான விதத்தில் சித்தரிக்கும் வகையிலும் அந்த படங்கள் அமைந்திருக்கும். அப்படியிருக்க, அது அடுத்த தலைமுறையைப் பாதிக்கிறது. திரைப்படங்களில் விடுதலைப் புலிகளை பற்றி பேச வேண்டிய தேவை தற்போது கிடையாது" என்று கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், ''அந்த அமைப்பு 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்ட அமைப்பாக காணப்படுகின்றது. இன்று இருக்கக் கூடியவர்கள் சாதாரணமான மக்கள். அந்த இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட சாமானிய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். மீண்டும் அந்த காலக்கட்டத்திற்கு போய் அவர்களை பிழையாக காட்ட வேண்டிய தேவை இல்லை." என்று கூறுகிறார். "தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்னைகள், பொருளாதார நெருடிக்கடி சார்ந்த பிரச்னைகள், உலக நாடுகளை நோக்கி தமிழர்கள் பயணிக்க கூடிய கதைகள் எல்லாம் இருக்கின்றது. இப்படியான கதைகளை பற்றி எல்லாம் பேசலாம். பழைய விடயங்களை தேடி, அவற்றைப் பிழையாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இன்றைய தலைமுறை, இப்படியான திரைப்படங்களை விரும்புவதில்லை, அது அவர்கள் மீதான எதிர்மறையான பிம்பத்திற்கு வழிவகுக்கிறது.'' என தீபச் செல்வன் கூறுகின்றார். இந்திய இயக்குநர்கள் முறையான ஆராய்ச்சிக்குப் பிறகு, இலங்கையின் உண்மை வரலாறு மற்றும் தற்போதைய நிலவரம் அறிந்து திரைப்படங்கள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் தீபச் செல்வன். இலங்கையில் இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பு படக்குறிப்பு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மாதிஉல்வௌ இலங்கையில் இந்திய திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளை நிர்வகித்து வரும் நிறுவனமான என்.ஈ ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தின் தலைவர் ஷியா உல் ஹசன், "கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்தே ஈழத்தமிழர்கள் குறித்த தவறான சித்தரிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு படமாக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கான திரைக்கதை, திரைப்பட கூட்டுதாபனத்திற்கு வழங்கப்பட்டு, அதன் அனுமதி கிடைத்தால் தான் படப்பிடிப்பு நடத்தமுடியும். அதையும் மீறி, இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படங்களிலும் இது நடக்கிறது என்றால் அது கவலைக்குரிய விடயம் தான்." என்கிறார். இலங்கையில் படமாக்கப்பட்ட 'கிங்டம்' திரைப்படமும் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பதைக் குறிப்பிட்டு பேசிய அவர், "மொழி, கலாசாரம் என பல வகையிலும் ஈழத்தமிழர் குறித்த சித்தரிப்புகள் தெளிவாக இல்லை. ஈழத்தமிழர்களை குற்றவாளிகள் போல சித்தரிப்பது போல ஒருபுறம் என்றால், அவர்கள் அனைவருமே சாப்பாட்டுக்கு கூட வழியில்லாதவர்கள் என சித்தரிப்பதும் நடக்கிறது. புலம்பெயர் தமிழர்களை கவர்வதற்கான ஒரு வியாபார தந்திரமாக இது உள்ளது." என்கிறார். இலங்கையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த வேண்டுமென்றால், அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் உள்ளிட்டவற்றை 'இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்திற்கு' சமர்ப்பித்து, அதற்கான கட்டணங்களை செலுத்தி, அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கையில் உள்ளது. இதுகுறித்துப் பேசிய இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மாதிஉல்வௌ, ''இப்போதைக்கு எங்கள் குழுவில் தமிழர்கள் இல்லை. தமிழ் பேசக் கூடிய ஒருவரையேனும் எமது தயாரிப்பு குழுவில் இணைத்துக்கொள்ள நான் முயற்சி செய்து வருகின்றேன். அதிகாரிகளின் பற்றாக்குறையுடனேயே நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இத்தகைய சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்" என குறிப்பிடுகின்றார். இலங்கைத் தமிழ் தொடர்பான சர்ச்சை பட மூலாதாரம், @MILLIONOFFL படக்குறிப்பு, 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் பேசிய 'இலங்கைத் தமிழ்' குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியத் திரைப்படங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளையே எதிர்கொண்டுள்ளன, அதில் ஒன்று படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் 'இலங்கைத் தமிழ்' தொடர்பான சர்ச்சை. சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்திற்கு கூட இத்தகைய விமர்சனம் எழுந்தது. இதில் விதிவிலக்கு என்பது நடிகர் கமல்ஹாசனின் 'தெனாலி' (2000) திரைப்படம். இதில் கமல் பேசிய யாழ்ப்பாணம் தமிழ் பலரால் பாராட்டப்பட்டது. காரணம், இந்தத் திரைப்படத்திற்காக கமலுக்கு மொழிப் பயிற்சி அளித்தவர் இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அப்துல் ஹமீத், "யாழ்ப்பாணத்தின் மொழி வழக்கு, யாழ்ப்பாணத்திலேயே மாறி வந்துள்ளது. நிறைய தென்னிந்திய தமிழ் சொற்கள் எல்லாம் தமிழ் திரைப்படங்களின் ஊடாகவும், தமிழ் தொலைக்காட்சிகளின் ஊடாகவும் எங்களுடைய மொழி வழக்கில் கலந்துள்ளன. யாழ் மொழி வழக்கு என்ற தனித்துவமான மொழி வழக்கு இப்போது இல்லை." என்றார். பட மூலாதாரம், B.H.ABDUL HAMEED/FACEBOOK படக்குறிப்பு, 'தெனாலி' திரைப்படத்திற்காக கமலுக்கு மொழிப் பயிற்சி அளித்தவர் இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். "தெனாலி படத்தில் கமல் பேசிய யாழ்ப்பாணம் தமிழ், முழுமையானது அல்ல. உதாரணத்திற்கு, 'நீங்கள் சத்தி எடுக்கேக்க' என்று ஒரு வசனம் வைக்கவேண்டும். அப்படி சொல்லும் போது சத்தி என்பதை 'சத்தியம்' என்று நினைத்தார்கள். அப்போது அந்த சொல்லை தமிழுக்கேற்ப 'வாந்தி' என்று மாற்றினோம். இப்படி, ஆங்காங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு புரிகின்ற விதத்தில், ஓரளவு ஓசை நயம் மாத்திரம் இருந்தால் போதும் என்று முடிவுசெய்து வசனங்கள் எழுதப்பட்டன." என்று கூறுகிறார். "ஒரு திரைப்படம் புலம்பெயர் தமிழர் வசிக்கும் நாடுகளில் மட்டும் வெற்றிப் பெறுவதால் லாபம் கிடைக்காது. முக்கியமாக இந்தியாவில் படம் ஓட வேண்டும். அதற்காக தான் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் வசனங்கள் எழுதப்படுகின்றன. இதில் தவறொன்றும் இல்லை, மக்களுக்கு கதை புரிவது தான் முக்கியம்." என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8ry3dl8jeyo
  17. யாழில் நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன - ஆளுநர் தெரிவிப்பு 16 AUG, 2025 | 12:41 PM புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம் புத்தகங்களோடு தீயிட்டு எரித்தார்கள் என்பதைச் சிந்தித்தோம் என்றால், புத்தகங்களின் அருமை எமக்குத் தெரியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில், யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றமும், எங்கட புத்தகங்கள் அமைப்பும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது சர்வதேச புத்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்து வைத்து பிரதம விருந்தினர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், நாம் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போது இடைநடுவில் ஏதாவது இடையூறு வந்தால் எரிச்சலாகத்தான் இருக்கும். ஒரு புத்தகத்தினுள் மூழ்கினோம் என்றால் அப்படித்தான் இருக்கும். ஒரு புத்தகத்தை படித்தால் அடுத்த புத்தகமும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு ஏற்பட வேண்டும். நாம் வாசிப்பதால் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. இன்று போட்டிப் பரீட்சைகளில் நுண்ணறிவு வினாக்களுக்கு மேலதிகமாக பொது அறிவு வினாக்களும் கேட்கப்படுகின்றன. புத்தகங்களை வாசித்திருந்தால் மாத்திரமே எம்மால் அவற்றில் சித்தியடைய முடியும். இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எங்கள் அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன. அது தொடர்பில் வருந்துகின்றேன். எங்கள் அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் வரவேண்டும் என்றுதான் நான் பல தடவைகள் சொல்லியிருக்கின்றேன். நேர் சிந்தனையில் அவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை என்பதுதான் பிரச்சினை. எங்களுக்கு வருமானம் தரக்கூடிய விடயங்களுக்கு தேவையான ஒழுங்குகளைச் செய்து கொடுக்கின்றார்கள் இல்லை. நாங்கள் முதலீட்டாளர்களை வாருங்கள் என்று அழைக்கின்றோம். ஆனால் எங்கள் அதிகாரிகளில் சிலர் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள் இல்லை. ஏன் அப்படி நடந்துகொள்கின்றார்கள் என்பது தெரியவில்லை. முதலீட்டாளர்கள் வந்தால்தான் எங்களுக்கு வரி வருமானம் கிடைக்கும். வரி வருவாய் கிடைத்தால்தான் நாங்கள் முன்னேற முடியும். ஏன் இவற்றை அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் முயற்சிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222676
  18. பிறந்தநாள் வாழ்த்துகள் @குமாரசாமி அண்ணை, வளத்துடன் வாழ்க.
  19. 15 AUG, 2025 | 05:09 PM (நா.தனுஜா) இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே நாம் உள்ளகப்பொறிமுறையை மேலும் பலப்படுத்தவேண்டுமென காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து 'இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் கூறியதாவது: 2018 ஆம் ஆண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வருடகாலம் அதன் தவிசாளராகப் பணியாற்றினேன். அவ்வேளையில் அலுவலகத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் நாம் சென்று பார்த்தபோது எமக்கான அலுவலகம் கூட இருக்கவில்லை. எனவே எவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அவசியமான வளங்கள் மற்றும் வசதிகள் இல்லாமலும், தீர்வுகாணவேண்டும் என்ற உண்மையான அரசியல் தன்முனைப்பின்றியும் எதனையும் செய்யமுடியாது. அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நீதியமைச்சின்கீழ் இயங்குகின்றது. அவ்வாறிருக்கையில் அந்த அலுவலகத்தினால் சுதந்திரமாகச் செயற்படமுடியாது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரியவாறு இயங்குவதற்கு அதற்குரிய சுதந்திரமும், வளங்களும் வழங்கப்படவேண்டும். அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்மீது சற்றும் நம்பிக்கை இருக்கவில்லை. அவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியபோதிலும், எம்மால் இயலுமானளவுக்கு நாம் பல்வேறு விடயங்களைச் செய்தோம். இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே நாம் உள்ளகப்பொறிமுறையை மேலும் பலப்படுத்தவேண்டும். அதுமாத்திரமன்றி இவ்வாறான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உண்மையிலேயே இடம்பெற்றனவா என்ற கேள்வி தெற்கில் வாழும் பலருக்கு உண்டு. எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என்ற உண்மையை நாம் எவ்வாறு தெற்கு மக்களுக்குப் புரியவைக்கப்போகிறோம் என்பது பற்றிச் சிந்திக்கவேண்டும். இவ்விடயத்தில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் நிலவும் இடைவெளியை எவ்வாறு சீரமைக்கப்போகிறோம் என்பது பற்றிச் சிந்;திக்கவேண்டும். மேலும் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி இவ்விடயம் சார்ந்து அரச கட்டமைப்பை எவ்வாறு மாற்றியமைக்கவேண்டும் எனக் கலந்துரையாடவேண்டும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/222634
  20. 15 AUG, 2025 | 05:56 PM (நா.தனுஜா) தற்போதைய அரசாங்கம் 'வலிந்து காணாமலாக்கப்படல்' என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்? என்று தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திர ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து 'இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைத்த காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ மேலும் கூறியதாவது: வடக்கில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் தொடர்பில் தென்பகுதி மக்களுக்குத் தெளிவூட்டும் வகையில் இப்புத்தகத்தை வெளியிட்டமைக்கு முதலில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். இதனை இடைநடுவில் கைவிடாமல், தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள். நாட்டில் மீண்டும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறாதிருக்கவேண்டுமாயின், முதலாவதாகக் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும். இவ்விடயத்தில் தெற்கில் கொந்தளிப்பு ஏற்படாமல் வடக்குக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஏனெனில் நாம் கடந்தகாலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தோம். அவ்வாறிருந்தும்கூட 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் கோட்டாபயவுக்கே வாக்களித்தனர். நாமறிந்தவரை தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சியின்போது பெரும் எண்ணிக்கையானோர் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிங்களமொழியைப் பேசக்கூடியவர்கள் வாழும் தெற்கின் நிலைவரம் இவ்வாறிருக்கையில், வடக்கில் என்னவெல்லாம் நடந்திருக்கக்கூடும்? எனவே இதுபற்றிய தெளிவூட்டலை சகல தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தி, இதற்கான நீதியை சகலரதும் கோரிக்கையாக மாற்றவேண்டும். ஜே.வி.பி கிளர்ச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்முடன் பேரணியாக நடந்தார். ஆனால் வடக்கில் பலர் கொல்லப்படுவதற்கு அவரே காரணமாக இருந்தார். அதேபோன்று ரணில் விக்ரமசிங்கவும் சித்திரவதைக்கூடங்களை நடாத்தினார். ஆனால் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அவர் இணையனுசரணை வழங்கினார். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் 'வலிந்து காணாமலாக்கப்படல்' என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்? எனக் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/222639
  21. 'முழு மலையே கீழே இடிந்து வந்தது' - ஜம்மு காஷ்மீர் திடீர் வெள்ளத்தில் தப்பியவர்கள் கண்டது என்ன? படக்குறிப்பு, கிஷ்த்வார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் சாஷோட்டி பகுதியில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தபட்சம் 45 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) பிரதீப் சிங் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார். பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் பேசிய கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் ஷர்மாவும் 45 உயிரிழப்புகளை உறுதி செய்தார். மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், இருப்பினும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்பு சேவைகள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சிங் தெரிவித்தார். பல தன்னார்வலர்களும் மீட்புக் குழுவுக்கு உதவி செய்து வருவதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார். மீட்கப்பட்டவர்கள் தங்கள் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். திடீரென சிதிலங்கள் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றதாக அவர்கள் விவரித்தனர். காயமடைந்தவர்கள் சொன்னது என்ன? பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, கிஷ்த்வார் திடீர் வெள்ள சம்பவத்தின் நேரடி சாட்சிகள் பிபிசி குழு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையை அடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து விரிவாக விவரித்தனர். "என் மகளின் வாயில் மண் நிரம்பியிருந்தது. மூச்சுத் திணறி அவள் இறந்துவிட்டாள்," என அழுதுகொண்டே ஒரு பெண் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீரிடம் கூறினார், "என் மகள் படித்து மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டாள். மருத்துவப் படிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். யாராவது என் மகளைத் திருப்பிக் கொடுங்கள், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்," என்று அவர் வேதனையுடன் கூறினார். "என்ன இருந்தாலும் சரி, எங்களை இப்போது வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். எட்டு மணி நேரத்துக்கு பிறகு அவளை இடிபாடுகளில் இருந்து மீட்டோம். எங்கள் மகளை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்," என அந்த சிறுமியின் தந்தை சொல்கிறார். படக்குறிப்பு, கிஷ்த்வாரின் சாஷோட்டி பகுதியில் வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஒரு நபர், தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்தார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும், பலர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். "நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்கள் 'ஓடுங்கள், ஓடுங்கள்' என்று கத்தினர். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. எழுந்தவுடன் எல்லாம் தகர்ந்து போனது," என்று அவர் கூறினார். "பாலத்தைக் கடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர்," என்று அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அவரது சகோதரியும் உயிரிழந்தார். "நான் வீட்டுக்குச் சென்று என்ன சொல்வேன்? இது அவள் எனக்கு கட்டிய கடைசி ராக்கி. எனக்கு ஒரே ஒரு சகோதரி இருந்தாள், இப்போது நான் தனியாக இருக்கிறேன்." என பிபிசி-யிடம் தனது ராக்கியைக் காண்பித்தவாறு அவர் கூறினார் அங்கு இலவச உணவு வழங்கப்பட்ட கூடாரத்தின் கீழ் பலர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அவர்களை மீட்பது கடினமாக இருந்ததாகவும் ஒரு பெண் தெரிவித்தார். ' வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம்கேட்டது, எல்லோரும் 'ஓடு' என கத்தினர் ' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, கிஷ்த்வார் சம்பவத்தின் நேரடி சாட்சியான போத்ராஜ், தனது குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக கூறினார் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தங்களது கஷ்டத்தை பகிர்ந்துள்ளனர். ஷாலு மெஹ்ரா மீட்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "எங்களுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது, எல்லாம் புகைமூட்டமாக மாறியது. எல்லோரும் 'ஓடு, ஓடு, ஓடு' என்று கத்தினர்," என அந்த சம்பவம் குறித்து சொல்கிறார். "நான் ஓட முயன்றபோது, ஒரு பெண் என் மீது விழுந்தார். ஒரு மின்கம்பம் என் தலையில் விழுந்து மின்சாரம் தாக்கியது," என்று அவர் கூறினார். போத்ராஜ் தனது குடும்பத்தின் மற்ற 10 உறுப்பினர்களுடன் கிஷ்த்வாருக்கு வந்திருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் உட்பட மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கியதாக அவர் கூறினார். "திடீரென வெடிப்பு போன்ற ஏதோ ஒன்று நடந்து எல்லாம் பனிமூட்டமாக மாறியது. ஆனால் இரண்டு நிமிடங்களுக்குள் நான்கு அடி உயரத்தில் இடிபாடுகள் பரவிவிட்டன," என்று அந்த சம்பவம் குறித்து போத்ராஜ் தெரிவித்தார். "நிகழ்விடத்தில் உடல்கள் கிடந்தன. புதிய பாலம் கட்டப்படும் இடத்தில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மேலே இருந்த எஞ்சிய 100 முதல் 150 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்," என சாஷோட்டியின் நிலைமை குறித்து அவர் விவரித்தார். "சில விநாடிகளில் சிதிலங்கள் வந்தன. அவற்றில் பெரிய மரங்களும் கற்களும் அடங்கும்," என அவர் தெரிவித்தார். "மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர்" தனது குடும்பத்துடன் சாஷோட்டிக்கு வந்திருந்த ஒரு பெண், இந்தப் பேரழிவின் வேதனையான காட்சியை விவரித்தார். "நான் ஒரு வாகனத்தின் கீழ் சிக்கிக் கொண்டேன். உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். பின்னர் என் தந்தையைப் பார்த்து, தைரியத்துடன் வெளியேறினேன்," என்று அவர் தெரிவித்தார். "என் தாயார் ஒரு மின்கம்பத்தின் கீழ் சிக்கியிருந்தார், அவர்கள் மீது பலர் இருந்தனர். நான் எப்படியோ வெளியேறினேன், ஆனால் என் தாயார் மிகவும் காயமடைந்துள்ளார்," என்று அந்தப் பெண் மேலும் கூறினார். சாஷோட்டியில் ஏற்பட்ட அழிவு குறித்து அவர் கூறுகையில்: "அங்கு ஏராளமான மக்கள் இருந்தனர். எங்கள் கண்முன் மக்கள் செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்டனர். நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை ." "மண், கற்கள், மரங்கள் உட்பட முழு மலையே கீழே இடிந்து வந்தது. எங்கும் சேறும் சகதியும் பரவியது," என இடிபாடுகளைப் பற்றி அவர் விவரித்தார். "குழந்தைகள் பலர் இருந்தனர். அவர்கள் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. என் தந்தை சிலரை மீட்டார், ஆனால் பலர் அங்கேயே உயிரிழந்தனர். சுற்றிலும் உடல்கள் கிடந்தன. நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை," என்று அவர் கூறினார். நிர்வாகம் விரைவாக அனைவருக்கும் உதவியதாகவும், ராணுவம், சிஆர்பிஎஃப், காவல்துறை ஆகியவை ஒன்றிணைந்து மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மீட்பு நடவடிக்கையின்போது ஒரு சிறுமி மீட்கப்பட்டார். "மேலிருந்து வெள்ளம் வந்து எல்லோரையும் அடித்துச் சென்றது. அங்கு பலர் உயிரிழந்தனர், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார். "நானும் நடுவில் சிக்கியிருந்தேன். ஒரு காவலர் எனக்கு உதவினார். அவர் என்னை மீட்டார். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள், ஆனால் என்னால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை," என்று அவர் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5e1dddwv3o
  22. இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது - மறவன்புலவு சச்சிதானந்தம் 15 AUG, 2025 | 05:03 PM தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடை அடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடை அடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம். முல்லைத்தீவில் இளைஞன் இறந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பானது தாக்கம் அல்லது அடக்கு முறைதான். மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்பினர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து. கடை அடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வழ்வே பாதிக்கும். அந்தவகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம்கொடுக்கக்கூடாது. இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்து சார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222630
  23. 15 AUG, 2025 | 03:40 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சூதறியாத அவரின் அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்து விடுதலை புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் 2005 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொல்லப்பட்டார். தனது வீட்டில் உள்ள நீச்சல் தட்கத்தில் வழமையான 1000 மீட்டர்கள் நீச்சலை அவர் முடித்துக்கொண்டு வெளியேறியபோது கொலைஞர் தாக்குதலை நடத்தினார். விதிவசமான அந்த தினத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால், அவர் பற்றிய நினைவுகள் இன்னமும் நீடிக்கின்றன. இலங்கையின் தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் என்று பலராலும் கருதப்பட்ட அந்த மனிதரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது. அவரது ஒரேயொரு மகள் அஜிதா தனது தந்தையாரைப் பற்றி வேறு எந்த பத்திரிகையாளரை விடவும் டி.பி.எஸ். ஜெயராஜே மிகவும் கூடுதலாக எழுதியிருக்கிறார் என்று தந்தையார் குறித்த தனது நூலில் குறிப்பிடுகின்ற அளவுக்கு லக்ஸ்மன் கதிர்காமரை பற்றி பல வருடங்களாக நான் விரிவாக எழுதியிருக்கிறேன். லக்ஸ்மன் கதிர்காமரை பற்றி சிறந்த வாசிப்புக்குரிய அஜிதா கதிர்காமரின் நூலுக்கு " The Cake That Was Baked At Home " என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதன் புதிய பதிப்பு கதிர்காமரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இவ்வருடம் வெளியிடப்பட்டது. எனது கட்டுரைகளில் இருந்து வரிகளும் பந்திகளுமாக 78 குறிப்புகளை அஜிதாவின் நூல் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் அவர் ' லக்ஸ்மன் கதிர்காமரின் உத்தியோகபூர்வமற்ற சுயசரிதையாளர் " என்று என்னை பெரும்பாலும் குறிப்பிடலாம் என்று கூறியிருக்கிறார். அதனால், இந்த பின்புலத்தில் எனது முன்னைய எழுத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு உதவியுடன் லக்ஸ்மன் கதிர்காமர் என்ற பன்முக ஆளுமை பற்றி எழுதுகிறேன். யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக்கொண்ட புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பெற்றோருக்கு 1932 ஏப்ரில் 12 ஆம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் பிறந்தார். ஆனால், அந்த முத்திரையுடன் ஒத்துப்போவதற்கு அவர் தனது பிற்கால வாழ்வில் மறுத்தார். தான் ஒரு தமிழன் என்பதை அவர் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால், அத்தகைய முத்திரைகளுக்கு அப்பாற்பட்டவராக தன்னை அவர் கூறிக் கொண்டார். தமிழராக இருப்பது என்பதை புலிகளின் ஆதரவாளராக இருப்பதுடன் சமப்படுத்த விடுதலை புலிகளும் அவர்களின் பரிவாரங்களும் முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு நேரத்தில், அந்த கும்பலில் இருந்து வேறுபட்டவராக நின்றார் லக்ஸ்மன் கதிர்காமர். அதற்காக அவர் ' அடையாளத் தமிழர்' என்று கேலி செய்யப்பட்டதுடன் ஒரு துரோகி என்றும் அழைக்கப்பட்டார். இறுதியில் கொலை செய்யப்பட்டார். கதிர்காமர் அவரது மரணத்துக்கு சில வாரங்கள் முன்னதாக பி.பி.சி.யின் " ஹாட் ரோக் " ( Hard Talk) நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் துரோகி என்று அழைக்கப்படுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அற்புதமான முறையில் அதற்கு பதிலளித்தார். " பிறப்பின்போது எம்மெல்லோருக்கும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. எனக்கும் அவ்வாறு ஒரு பெயர் வழங்கப்பட்டது. சிறுவர்களை படையணிக்கு சேர்ப்பது, எதிராளிகளை கொலை செய்வது, ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் நிராகரிப்பது போன்ற விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை ஆதரிப்பதவர் தான் தமிழர் என்று அர்த்தப்படுவதாக இருந்தால், அவ்வாறு செய்வதற்கு நான் தயாராக இல்லை. அதற்காக என்னை துரோகி என்று அழைப்பதாக இருந்தால், அதை முற்றுமுழுதான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்" என்று கதிர்காமர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக லக்ஸ்மன் கதிர்காமர் பிறந்தார். தந்தையார் சாமுவேல் ஜெபரத்தினம் கிறிஸ்ரியன் கதிர்காமர் (எஸ்.ஜே.சி.) சீனியர் ஒரு சட்டத்தரணி. அவர் மானிப்பாயின் எட்வேர்ட் மேதரின் மகளான எடித் றோஸ்மண்ட் பரிமளம் மேதரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஐந்து ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தனர். எல்லோருக்கும் மூத்தவரான எஸ்.ஜே.சி. ஜூனியர் அல்லது சாம் கதிர்காமர் நன்கு பிரபல்யமான இராணி அப்புக்காத்து (கியூ.சி.). செல்வநாதன் அல்லது பாய் கதிர்காமர் இராணுவத்தில் மேஜர் தரத்தில் பணியாற்றி பிறகு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். ராஜன் கதிர்காமர் இலங்கை கடற்படையின முன்னாள் தளபதி. திருமலன் அல்லது மானா கதிர்காமர் ஒரு தோட்டத்துரை. அவர் டிக்கோயாவில் வாகன விபத்து ஒன்றில் இளவயதில் மரணமடைந்தார். லக்ஸ்மனுக்கு மூத்தவரான சகோதரி ஈஸ்வரி டொக்டர் ஏ.எம்.டி. றிச்சர்ட்ஸை திருமணம் செய்தார். சகோதரர்கள் சகலரும் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற அதேவேளை லக்ஸ்மன் மாத்திரம் கண்டி திரித்துவக் கல்லூரிக்கு சென்றார். இரண்டாவது உலகப்போர் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். திரித்துவக் கல்லூரியில் படித்த காலத்தில் (1942 -- 1950 ) இலங்கை வரலாற்றுக்காக டொக்டர் அந்திரெஸ் நெல் நினைவுப் பரிசையும் ஆங்கிலத்துக்காக நேப்பியர் கிளேவெறிங் பரிசையும் சிறந்த சகலதுறை மாணவன் என்பதற்காக றைட் தங்கப்பதக்கத்தையும் அவர் 1950 ஆண்டில் பெற்றார். விளையாட்டுக்களிலும் லக்ஸ்மன் சிறந்து விளங்கினார். 1950 ஆம் ஆண்டில் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் காப்டனாகவும் அவர் இருந்தார். றகர் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய அவர் 1949 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் 110 மீட்டர்கள் தடைதாண்டும் ஓட்டத்தில் (15.7 செக்கன்கள்) முன்னைய சாதனையை முறியடித்தார். அதே ஆண்டில் டக்கன் வைற் சவால் கிண்ணத்தையும் டி சொய்சா சவால் கிண்ணத்தையும் பெற்ற லக்ஸ்மன் சிரேஷ்ட மாணவர் தலைவராகவும் வந்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த அவர் சட்டத்துறைப் பட்டதாரியாக ( எல்.எல்.பி.) வெளியேறினார். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் 1951 , 1952 ஆண்டுகளில் அகில இலங்கை ரீதியான போட்டியில் 110 மீட்டர்கள் தடைதாண்டும ஓட்டத்தில் வெற்றி பெற்றார். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையில் அஹமதாபாத்திலும் (1951) அலகாபாத்திலும் ( 1952) நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 110 மீட்டர்கள் தடைதாண்டும் ஓட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இலங்கை பல்கலைக்கழக கிரிக்கெட் அணியிலும் பிறகு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பலியோல் கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் உறுப்பினராக இருந்த லக்ஸ்மன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஒக்ஸ்போர்ட் அணியில் இடம்பெற்று " ஒக்ஸ்போர்ட் நீல உறுப்பினராகவும் ( Oxford Blue ) வந்தார். ஒக்ஸ்போர்ட் சட்டத்தில் இளமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு கதிர்காமர் அட்வக்கேற் இறுதிப் பரீட்சைக்கு தோற்றி மூதல் தரத்தில் சித்தியெய்தினார். ஈ.என்.ஏ. கிறேசியனுக்கு செயலாளராகப் பணியாற்றிய அவர் பிறகு இங்கிலாந்துக்கு சென்று இன்னர் ரெம்பிளின் பாரிஸ்டராக வந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பலியோல் கல்லூரியில் பிரவேசித்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக தெரிவாகி அவர் வரலாறு படைத்தார். நான்கு இலங்கையர்கள் அந்த ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். கதிர்காமர் ( திரித்துவக் கல்லூரி ), லலித் அத்துலத் முதலி (றோயல் கல்லூரி ), நூர்தீன் (சென். தோமஸ் கல்லூரி), ஜெயசுந்தரி வில்சன் ( மெதடிஸ்ற் கல்லூரி) ஆகியோரே அவர்கள். வில்சன் மாத்திரமே ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக இருந்த ஒரேயொரு இலங்கைப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. 1958 இனக்கலவர நாட்களில் ஐக்கிய இராச்சியத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் லக்ஸ்மன் கதிர்காமர் அந்த வன்செயல்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க ஒரு அரசியல்வாதியே தவிர அரசியல்மேதை அல்ல என்பதை காட்டுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்த வருடம் ஒக்ஸ்போர்ட்டில் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் உருவப்படம் தொங்கவிடப்படவதற்கு காரணமாக லக்ஸ்மன் இருந்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக இருந்தவர்கள் அரச தலைவர்களாக வந்தால் அவர்களது படங்களை அங்கு தொங்கவிடுவது ஒரு பாரம்பரியமாகும். அந்த யூனியனின் செயலாளராக இருந்தவர்களில் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் படம் மாத்திரமே அங்கு தொங்கவிடப்பட்டது. ஆனால், அது தொடர்பான நிகழ்வில் பங்கேற்பதற்காக ஒக்ஸ்போர்ட்டுக்கு விஜயம் செய்வதற்கு சில வாரங்கள் முன்னதாக அவர் கொல்லப்ப்டார். பல வருடங்களுக்கு பிறகு 2005 மார்ச் 15 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தரான கிறிஸ் பற்றன் பிரபு லக்ஸ்மன் கதிர்காமரின் இருவப்படத்தை திரைநீக்கம் செய்து வைத்தார். அந்த நிகழ்வில் தான் கதிர்காமர் ' The cake was baked at home ' என்று குறிப்பிட்டார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் வரலாற்றில் அதன் கட்டிடத்தில் உருவப்படம் அல்லது மார்பளவு சிலை வைக்கப்பட்ட பதினைந்தாவது உறுப்பினராக கதிர்காமர் விளங்கினார். அவர் 1995 ஆம் ஆண்டில் இன்னர் ரெம்பிளின் கௌரவ முதுமாணியாகவும் ( Hon.Master of Inner Temple) பெருமைப்படுத்தப்பட்டார். முன்னாள் மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு பிறகு அந்த கொளரவத்தைப் பெற்ற இரண்டாவது ஆசியர் கதிர்காமர் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்ஜெலா மாலிக் பலியோல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் கதிர்காமர் பிரெஞ்சு -- பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கலைஞரான அஞ்ஜெலா மாலிக்கை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மகள் அஜிதா கதிர்காமர் பிரபல்யமான ஊடக ஆளுமை. ஸ்ரீராகவன் ஜெபரத்தினம் கிறிஸ்ரியன் என்ற பெயர்கொண்ட மகன் ஒரு கட்டிடக் கலைஞர். அவர் ராகீ என்றே பரவலாக அறியப்படுகிறார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ஒக்ஸ்போர்ட்டில் இருந்து அறுபதுகளில் இலங்கை திரும்பிய பிறகு லக்ஸ்மன் யாழ்ப்பாணத்துக்கு பல தடவைகள் விஜயம் செய்தார். தனது வேர்களை கண்டறிவது அதன் ஒரு குறிக்கோள். தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான தொகுதி ஒன்றை தெரிவு செய்வது அடுத்த குறிக்கோள். மிகுந்த ஆர்வமுடைய சரித்திர மாணவரான கதிர்காமர் யாழ்ப்பாண இராச்சியம் குறித்து அறிவதில் பெரும் அக்கறை காட்டினார். வரலாற்றையும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியங்களையும் அறியாத ஒருவர் என்று அவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவான விமர்சகர்கள் ஏளனம் செய்தபோதிலும், அந்த விடயங்கள் குறித்து அவர் பேசுவதைக் கேட்டவர்கள் அவரது அறிவு மற்றும் நுண்ணறிவுத்திறத்தை கண்டு வியப்படைந்தனர். அறுபதுகளில் யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயங்கள் ஒன்றின்போது கதிர்காமர் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தலைப்பில் உரையாற்றினார்." பிளேட்டோவில் இருந்து சிறிமாவோ வரை " என்பதே அந்த தலைப்பாகும். அவரது அந்த உரை பத்திரிகைகளில் செய்தியாக வெளியானபோது திருமதி பண்டாரநாயக்க ஆத்திரமடைந்ததாக கூறப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு அதே திருமதி பண்டாரநாயக்க கதிர்காமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அமைச்சரவையில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். அந்த அமைச்சரவையின் பிரதமராக திருமதி பண்டாரநாயக்கவே பதவியேற்றார். ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று அறுபதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு சென்ற வேளைகளில் கதிர்காமர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதியொன்றை கண்டறிவதில் ஈடுபட்டார். ஆனால், ஒரு வேட்பாளராகும் அவரது ஆர்வம் இரு காரணங்களினால் நீண்டநாட்கள் நிலைக்கவில்லை. முதலாவது காரணம் வடக்கு அரசியல் நிலைவரம். தமிழ்த் தேசியவாதம் முன்னரங்கத்துக்கு வந்திருந்த நிலையில், தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் எவரும் அந்த கோட்பாட்டை ஆதரிக்க வேண்டியிருந்தது. குறுகிய தேசியவாதத்தை கதிர்காமர் விரும்பவில்லை. இரண்டாவதாக, அரசியல் பேச்சுக்களை நிகழ்த்தக்கூடிய அளவுக்கு தமிழில் பேசக்கூடியவராகவும் கதிர்காமர் இருக்கவில்லை. கதிர்காமர் யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்டிருந்த போதிலும், அங்கு அவருக்கு உறுதியான வேர்கள் இருக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மாத்திரமல்ல, யாழ்ப்பாண அரசியலின் கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் கதிர்காமரினால் முகங்கொடுக்க முடியும் என்பதும் சந்தேகமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது அரசியல் வாய்ப்புகள் குறித்து அங்கு இருந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள் நேர்மையான ஆலோசனையை வழங்கினார்கள். குடாநாட்டில் தனது அரசியல் வாய்ப்புக்கள் ஆனையிறவு கடவையை விடவும் குறுகலானது என்பதை கதிர்காமர் விளங்கிக்கொண்டார். கொழும்பில் இருந்த லக்ஸ்மனின் மூத்த சகோதரர்களான சட்டத்தரணி சாம் ஜே.சி. கதிர்காமரும் கடற்படைத்தளபதி இராஜநாதன் (ராஜன் ) கதிர்காமரும் அவரின் அரசியல் ஆசைக்கு ஊக்கமளிக்கவில்லை. அந்த ஆசையைக் கைவிடுமாறு அவர்கள் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். அவர்களது தந்தையார் எஸ்.ஜே சி. ( சீனியர்) கொழும்பில் வளமான வருமானம் தரும் சட்டத்தொழிலை நிறுவியிருந்தார். அத்துடன் அவர் இலங்கை சட்ட சங்கத்தின் ( Ceylon Legal Society ) தாபக உறுப்பினராகவும் இருந்தார். தனது சகோதரர்களினதும் உறவினர்களினதும் ஆலோசனைகளை செவிமடுத்த லக்ஸ்மன் சட்டத்துறையில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்தார். லக்ஸ்மனின் இரு மூத்த சகோதரர்களும் உயிருடன் இருந்திருந்தால், அவர் ஒருபோதும் அரசியலில் பிரவேசம் செய்திருக்கமாட்டார் என்று நம்பிய உறவினர்கள் இருந்தார்கள். 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னதாக ராஜனும் சாமும் இறந்து விட்டார்கள். ஜே.வி.பி. கிளர்ச்சி லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் உறுதியான முறையில் சட்டத் தொழிலை ஆரம்பித்தார். அவர் வர்த்தக, கைத்தொழில், தொழில் மற்றும் நிருவாக சட்டங்களில் திறமை மிக்கவராக இருந்தார். 1971 ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சி லக்ஸ்மனின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கிளர்ச்சியில் நேரடியாக அவர் பாதிக்கப்படாவிட்டாலும், வெளிநாட்டுக்கு போய்விட வேண்டும் என்ற உணர்வை அது அவருக்கு ஏற்படுத்தியது. ஜே.வி.பி.யின் தோற்றத்தை அடுத்து இலங்கையி் வாழ்வு மோசமடையப் போகின்றது என்று அவர் உணர்ந்தார். எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள். ஆனால், ஜே.வி.பி. காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறிய அதே கதிர்காமர் 33 வருடங்களுக்கு பிறகு ' செஞ்சகோதரர்களுடன்' நல்லுறவைக் கொண்டிருந்தார் என்பது ஒரு விசித்திமாகும். லக்ஸ்மனை நேர்மையான ஒரு நண்பர்கவும் வழாகாட்டியாகவும் ஜே.வி.பி.யினர் கருதிய அதேவேளை, அவரும் சில பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். லக்ஸ்மன் இன்று உயிருடன் இருந்திருந்தால், ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இலங்கையை ஆட்சிசெய்கின்ற அளவுக்கு அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திருப்பங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடும். புலமைச்சொத்து லக்ஸ்மன் மீண்டும் பிரிட்டனுக்குச் சென்றார். 1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1974 ஆம் ஆண்டு வரை அங்கு சட்டத்துறை வாழ்வை தொடர்ந்த அவர் அந்தக் காலப்பகுதியில் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகுந்த அக்கறை செலுத்தினார். 1973 ஆம் ஆண்டில் வியட்நாமில் பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான வன்செயல்களை விசாரணை செயவதற்கான சர்வதேச மன்னிப்புச்சபையின் விசேட பிரதிநிதியாக அவர் செயற்பட்டார். 1976 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (International Labour Organization) ஆலோசகராக இருந்த அவர் 1978 ஆம் ஆணடில் உலக புலமைச்சொத்து அமைப்பில் ( World Intellectual Property Organization) இணைந்து அதன் பணிப்பாளராக 1988 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். ஆசிய -- பசுபிக் பிராந்தியத்தின் வளர்முக நாடுகளுக்கு புலமைச்சொத்து விவகாரங்களில் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டார். உலகின் பெருவாரியான நாடுகளுக்கு பயணம் செய்த அனுவத்தைக் கொண்டவராகவும் லக்ஸ்மன் விளங்கினார். 1980 களின் முற்பகுதியில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் இருந்த அவர் அவசரகால கதவின் ஊடாகப் பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்தில் எலும்பு முறிவுக்கு உள்ளான அவர் மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று தேறினார். 1988 ஆம் ஆண்டில் கொழும்பு திரும்பிய கதிர்காமர் சடடத்தொழிலை மீணடும இங்கு ஆரம்பித்தார். முன்னரைப் போன்றே அவர் கைத்தொழில், தொழில் மற்றும் வர்த்தக சட்டங்களிலும் புலமைச்சொத்து சட்டத்திலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தினார். தமிழ்த் தடுப்புக்காவல் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பலவற்றில் மிகவும் விவேகமான ஒரு ஆலோசகராக பரபரப்பு காட்டாமல் கதிர்காமர் செயற்பட்டார் என்பது அவரைப் பற்றி பெரிதாக தெரியாத இன்னொரு விடயம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட சில தமிழர்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு சட்ட ஆலோசனையையும் அவர் வழங்கினார். சந்திரிகா குமாரதுங்க கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளின் முற்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது இலங்கை வருகை நாட்டின் இனத்துவ அரசியலில் ஒரு புதிய விடியலுக்கு கட்டியம் கூறியது. இனநெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்று விரைவில் கிடைக்கும் என்று உயர்ந்த எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. இலட்சியவாத உணர்ச்சி வேகம் கொண்ட ஒரு காலப்பகுதியாக அது விளங்கியது. அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் குமாரதுங்கவுக்கு ஆதரவாக அரசியலில் இறங்குவதற்கு கதிர்காமர் தீர்மானித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவதற்கு 1994 ஆம் ஆண்டில் அவர் தீர்மானித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக நோக்கப்பட்டது. ஏனென்றால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தீவிரமான ஆதரவாளர்கள். அரசியலில் இறங்குமாறு ஆரம்பத்தில் கதிர்காமருக்கு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கலாநிதி நீலன் திருச்செல்வம் தான் ஊக்கம் கொடுத்தார். அந்த முயற்சியில் அவருக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவேகமவின் மனைவியும் லங்கா சமசமாஜ கட்சியின் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவின் புதல்வியுமான சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகமவும் பெருமளவில் உதவினார். சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியல் 1994 ஆம் ஆண்டில் சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியலில் லக்ஸ்மனின் பெயர் இடம்பெற்றது. சுதந்திர கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் வன்னியில் வெற்றி பெறுவதற்காக வாய்ப்பைக் கொண்ட ஒரேயொருவராக சட்டத்தரணி கேதீஸ்வரனே விளங்கினார். அவர் முன்னர் வவுனியா நகரசபையின் தவைராக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் சார்பில் பதவியில் இருந்தார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. அதனால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தமிழர் ஒருவரை குமாரதுங்க நியமிக்க வேண்டியிருந்தது. மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான பெரியசாமி சந்திரசேகரனின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்துக்கு ஒரு ஆசனப் பெரும்பான்மையே இருந்தது. குமாரதுங்கவின் அரசாங்கத்தில் தொடக்கத்தில் அவரும் கதிர்காமருமே தமிழ்ப் பிரதிநிதிகள். தனது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இருபதாக மட்டுப்படுத்த விரும்பிய குமாரதுங்க அவர்கள் இருவருக்கும் பிரதியமைச்சர் பதவிகளை வழங்க முன்வந்தார். சந்திரசேகரன் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், கதிர்காமர் மறுத்துவிட்டார். தன்னை ஒரு தமிழர் என்று அரிதாக காட்டிக்கொள்ளாதவர் என்ற போதிலும் லக்ஸ்மன் அப்போது அவ்வாறு செய்தார். தனக்கு ஒரு பிரதியமைச்சர் பதவியை மாத்திரம் தந்தால் அதை தனது சமூகம் ஒரு நிந்தனையாக கருதும் என்று அவர் சுட்டிக் காட்டினார். சந்திரிகா அதை விளங்கி ஏற்றுக் கொண்டார். நீதியமைச்சையா அல்லது வெளியுறவு அமைச்சையா பொறுப்பேற்பது என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. லக்ஸ்மன் வெளியுறவு அமைச்சை விரும்பினார். அதற்கு பெருமளவுக்கு பொருத்தமானவராக அவர் தன்னை உணர்ந்தார். வெளியுறவு அமைச்சர் வெளியுறவு அமைச்சராக இருப்பதற்கு மிகச் சிறந்த மனிதர் என்று கதிர்காமர் தன்னை நிரூபித்துக் காட்டினார். இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான வருடங்களில் பாதுகாப்பு அமைச்சும் வெளியுறவு அமைச்சும் பிரதமருக்கென்றே பிரத்தியேகமான பொறுப்புக்களாக இருந்தன. அந்த நடைமுறையை 1977 ஆம் ஆண்டில் மாற்றிய ஜே.ஆர். ஜெயவர்தன தனது அரசாங்கத்தில் ஏ.சீ.எஸ். ஹமீதை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். இலங்கை இதுவரையில் கண்ட தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் கதிர்காமரே என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்த காரணத்தினால் பலருக்கு கதிர்காமர் சிறந்த வெளியுறவு அமைச்சராக தெரிந்தார். ஆனால், முன்னைய வெளியுறவு அமைச்சர்கள் தங்களது உறவினர்களையும் நெருங்கிய நட்பு வட்டங்களைச் சேர்ந்தவர்களையும் பதவிகளுக்கு நியமித்து மோசமாக்கி வைத்திருந்த வெளியுறவு அமைச்சை துப்பரவு செய்ததில் தான் கதிர்காமரின் மகத்துவம் தெரிந்தது. இன்னொரு தமிழரான சேர் கந்தையா வைத்தியநாதன் நிரந்தரச் செயலாளராக சுதந்திரத்துக்கு பிறகு வெளியுறவுச்சேவையை நவீனமயப்படுத்தினார். லக்ஸ்மன் கதிர்காமர் தான் வெளியுறவுச் சேவையை மறுசீரமைத்து துறைசார் நிபுணத்துவமுடையதாக மாற்றியமைத்தார். நிரந்தரச் செயலாளர் தொடக்கம் அலுவலக உதவியாளர் வரை அவருடன் பணியாற்றியவர்கள் இதற்கு சான்று பகர்வர். ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோரின் ஆட்சிகளின் கீழ் பெருமளவுக்கு சீர்குலைக்கப்பட்டிருந்த இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுத்தது நல்லுறவைப் பேணியது வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் கதிர்காமரின் சாதனைகளில் முக்கியமான ஒன்று. உண்மையில், பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆட்சியில் இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் நல்ல நிலையிலேயே இருந்து வந்தன. ஆனால், உறவுகளை மீட்டெடுத்ததில் கதிர்காமரின் பாத்திரத்தை எளிதாக எண்ணிவிட முடியாது. இந்தியாவுடனான உறவுகள் இந்தியா நோக்கிய கதிர்காமரின் நெருக்கமும் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்துக்கு அவர் கொடுத்த அங்கீகாரமும் உணர்ச்சிபூர்வமான அடித்தளத்துடன் கூடிய அறிவார்ந்த தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். அரசியல் அம்சங்களுக்கு அப்பால் தனிப்பட்ட முறையிலான ஆன்மீக அம்சங்களும் அதில் இருந்தன. லக்ஸ்மனின் தந்தையார் மகாத்மா காந்தியின் ஒரு தீவிர அபிமானி. லக்ஸ்மன் பிறப்பதற்கு முன்னர் மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்ற குழுவின் தலைவராக இருந்த தந்தையார் காந்தி கலந்துகொண்ட கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். லக்ஸ்மனின் தாயார் பரிமளம் தனது ஆட்டாகிராஃபில் கையெழுத்திடுமாறு காந்தியிடம் வேண்டினார். பரிமளம் பளபளப்பான பட்டுச்சேலையை அணிந்திருந்ததை பார்த்த காந்தி அவர் கதர் ஆடை அணிந்துவந்தால் மாத்திரமே கையெழுத்திடுவதாக கூறினார். பரிமளத்தினால் காந்தியின் கையழுத்தைப் பெறமுடியவில்லை. மகாத்மா காந்தியுடனான இந்த பிணைப்புக்கு அப்பால், லக்ஸ்மனின் உறவினர்களில் ஒருவர் சபர்மதி ஆச்சிரமத்தில் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தார் என்பதுடன் இன்னொரு உறவினர் சாந்திநிகேதனில் ரபீந்திரநாத் தாகூரின் மாணவராக இருந்தார். அந்த வகையில் லக்ஸ்மனும் கூட இந்தியாவுடன் இந்த வரலாற்றுப் பிணைப்பை தொடர்ந்தார். லக்ஸ்மன் தனது அறிவு மற்றும் ஆன்மீகப் பயணத்தில் இந்திய தத்துவ ஞானத்தின் கடுமையான செல்வாக்கிற்கு ஆளானார். லக்ஸ்மன் ஒரு பலமத மனிதராக வளர்ச்சியடைந்தார். இந்தியாவின் மகத்தான புதல்வரான கௌதம புத்தரினால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவ்வாறு நேர்ந்தது சமகால அரசியல் நிர்ப்பந்தங்களின் விளைவான ஒரு பாசாங்கு அல்ல. செலஸ்ரின் பெர்னாண்டோ நினைவுப்பேருரை பல வருடங்களுக்கு முன்னர் 1992 அக்டோபர் 9 ஆம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் வண. செலஸ்ரின் பெர்னாண்டோ நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். ' கிறிஸ்தவம் அல்லாத சமூகமொன்றில் எமது காலத்தில் பைபிளின் சமூகப் பொருத்தப்பாடு ' (The Sicial.Relevance of Bible for, our times in a non - Christian society) என்பதே அதன் தொனிப் பொருளாகும். "உருவமற்ற உண்மைகளின் வரலாற்று ரீதியான உருவாக்கங்களே வெவ்வேறு மதங்கள். புதையல் ஒன்றே, அது மாற்றமுடியாததுமாகும். ஆனால், அந்த புதையலைக் கொணடிருக்கும் கொள்கலன் அதன் காலத்தினதும் சுற்றாடலினதும் வடிவத்தையும் வரணத்தையும் எடுக்கிறது" என்று அவர் கூறினார். செலஸ்ரின் பெர்னாண்டா நினைவுப்பேருரை கிறிஸ்தவ வட்டாரங்களில் சில சர்ச்சைகளை தோற்றவித்தது. புத்தபிரான் குறித்து மிகவும் பிரகாசமான கருத்துக்களை கதிர்காமர் கூறியதே அதற்கு காரணம். "உத்வேகம் தரும் மனித உணர்வுப் புதையல்களில் ஒன்று கௌதம புத்தர் பற்றிய நினைவாகும். கோடிக்கணக்கான எமது மக்களின் சிந்தனை மீது அவர் மாபேரளவு செல்வாக்கைக் கொண்டிருக்கிறார். துணிச்சலும் மேன்மையும் கொண்ட பிறவிகள் மீது நூற்றாண்டுகளாக அவர் ஏற்படுத்திவரும் உத்வேகம் கணக்கிட முடியாததாகும். மனித உணர்வுகளை வரையறை செய்வதிலும் மனித உறவுகளுக்கு மனித நேயப்பண்பை ஊட்டுவதிலும் அவரது பங்களிப்பு அளவிடமுடியாததாகும். என்றாலும் கூட, அந்த மகத்தான ஆன்மாவின் நினைவை நிர்மூலம் செய்வதற்கும் அவரது செல்வாக்கை இல்லாமல் செய்வதற்கும் வேறு கொடிகளின் கீழ் போரிட்ட மனிதர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளுக்கு எல்லாம் தப்பிப்பிராயங்களும் அறியாமையுமே காரணம் என்றே எம்மால் கூறமுடியும்." பௌத்தத்தின் பொதுவான விழுமியங்களையும் போதனைகளையும் கிறீஸ்துவம் கொண்டிருக்கிறது என்பதும் புத்தரின் போதனைகளின் செல்வாக்கிற்கு யேசுபிரான் ஆளாகியிருந்தார் என்பதுமே கதிர்காமரின் ஆய்வாக இருந்தது என்று அந்த நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்துகொண்டர்கள் சிலர் கூறினார்கள். இந்த கருத்துக்கள் "யேசு இந்தியாவில் வாழ்ந்தார் -- சிலுவையேற்றத்துக்கு முன்னரும் பின்னரும் அவரது எவரும் அறியாத வாழ்வு" ( Jesus lived in India -- His Unknown life before and after the Crucification ) என்ற தலைப்புடனான ஜேர்மன் வேதவியலாளர் ஹொல்கர் கேர்ஸ்ரினின் பிரபல்யமான நூலில் உள்ள ஆய்வை ஒத்திருந்தன. அதனால் கதிர்காமர் புத்தரின் போதனைகளினால் பெரிதும் கவரப்பட்டிருக்கக்கூடியது சாத்தியமே. ஆனால், அறிவுஜீவிப் பயணத்தில் ஒரு மைல்கல் என்பதை விடவும் அதிகமானது என்றே தோன்றுகிறது. கதிர்காமர் அவரது மத நம்பிக்கையை பொறுத்தவரை பெருமளவுக்கு ஒரு தனிப்பட்ட மனிதராகவே இருந்தார். தனியாகப் பிரார்த்தனை 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் அமைச்சராக பதவியேற்ற தினம் அதிகாலையில் கொழும்பு புல்லேர்ஸ் வீதியில் அமைந்திருக்கும் அங்கிளிக்கன் தேவாலயத்தில் தனியாக ஒருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கக் காணப்பட்டார். அன்றைய ஆயர் கென்னத் பெர்னாண்டோ தேவாலயத்திற்குள் நடந்து சென்றபோது அதை அவதானித்தார். அது வேறுயாருமல்ல, லக்ஸ்மன் கதிர்காமரே தான். கிறிஸ்தவ கோட்பாட்டுப் பிடிவாதக்காரர்கள் மறுதலிப்பாளர்கள் என்ற போதிலும், கதிர்காமர் அடிப்படைக் கிறிஸ்துவத்தில் தொடர்ந்தும் நம்பிக்கையுடையவராக இருந்த அதேவேளை, மதத்தின் பொதுமையை அல்லது உலகளாவிய தன்மையை ஏற்றுக் கொண்ட ஒருவராக மாறியிருந்தார். "லங்கா அக்கடமிக்" பல வருடங்களுக்கு முன்னர் லக்ஸ்மன் கதிர்காமரினால் வழங்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் இருந்து சில பகுதிகளுடன் இந்த கட்டுரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். "லங்கா அக்கடமிக்" இணையத்தளம் அவருடன் கேள்வி -- பதில் தொடர் ஒன்றை நடத்தியிருந்தது. அன்று அவர் கூறிய சில கருத்துக்கள் முக்கியமான சில பிரச்சினைகள் தொடர்பில் அவரது சிந்தனையை வெளிப்டுத்தின. சில கருத்துக்கள் போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப் பகுதிக்கு பொருத்தமில்லாதவையாக இருக்கலாம். ஆனால், மற்றைய கருத்துக்கள் -- கதிர்காமரின் அனுதாபிகளாக ஒரு காலத்தில் விளங்கிய சிவப்பு தோழர்கள் அதிகாரத்தில் இருப்பதுடன் புதிய அரசியலமைப்பு ஒன்று குறித்து பேசுகின்ற இன்றைய பின்புலத்தில் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். சமஷ்டி முறை பற்றி -- "இலங்கை அரசை சிதைப்பதற்கு அல்லது பிரிப்பதற்கு அனுமதிக்காத வகையில் சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாக,தமிழர்கள் தங்களது பிராந்திய விவகாரங்களில் போதுமானளவு சுயாட்சியை வழங்கக்கூடிய சமஷ்டி முறையிலான கட்டமைப்பு ஒன்றை பொதுஜன முன்னணி ஆதரிக்கிறது. அதனால், இரு கோட்பாடுகள் முக்கியமானவை ; (1) அவசியமான அளவுக்கு சுயாட்சியை அனுமதிப்பது, (2) நாட்டின் எந்த வகையான சிதைவுக்கும் அல்லது பிரிவினைக்கும் எதிரான பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவது." "தற்போதைய சர்வதேச நிகழ்வுப் போக்குகளையும் சவால்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மத்தியிலும் மிகவும் பலம்பொருந்திய முறைமை ஒன்று இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் நம்புகிறோம்." "எனவே, பிராந்தியங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கு மேலதிகமாக மத்தியிலும் கணிசமான அதிகாரப்பகிர்வு தேவை என்று நாம் பிரேரிக்கிறோம். நாட்டில் பல சிறுபான்மைச் சமூகங்கள் இருக்கின்றன. அவர்கள் புவியியல் ரீதியில் பரந்து வாழ்கிறார்கள். பிராந்தியங்கள் தொடக்கம் மத்தி வரை சகல மட்டங்களிலும் அவர்களது பங்கேற்பையும் மனித உரிமைகளையும் முழு அளவில் நாம் உறுதிப்படுத்துவது அவசியமாகும்." "நாம் கருத்தில் எடுக்க வேண்டிய இன்னொரு காரணியும் இருக்கிறது. இந்தியாவில் ஒரு சமஷ்டி முறை இருக்கிறது. அது பல மேற்குலக நாடுகளில் இருப்பதைப் போன்று பரந்த ஒரு முறை அல்ல. இந்திய அரசியலமைப்பை வரைந்தவர்கள் சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றை வகுத்தபோது நாட்டைச் சிதைப்பதற்கு அனுமதிக்காத வகையில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணவேண்டும் என்பதை பிரதானமாக மனதிற்கொண்டு செயற்பட்டார்கள்." "எம்மத்தியில் பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு பார்க்கும்போது இந்த கோட்பாடு பொதுவில் தெற்காசியாவுக்கு பிரயோகிக்கப்படக் கூடியதாகும். 1987 ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு ஒரு வகை சமஷ்டி முறை நோக்கிய எமது படிமுறை வளர்ச்சி பற்றியும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. எம்மிடம் ஓரளவு விரிவான அதிகாரப்பரவலாக்கல் முறை ஏற்கெனவே இருக்கிறது. அதில் கட்டமைப்பு ரீதியான முக்கியமான குறைபாடுகள் இருப்பதும் உண்மை....... ஆனால், வடக்கு, கிழக்கில் கட்டவிழ்கின்ற நிகழ்வுகளின் பின்புலத்தில் தேசிய அளவில் முழுமையான கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியமானதாகும். விடுதலை புலிகள் வெளிப்படையாக அறிக்கைகளை விடுக்கின்ற போதிலும் கூட, அவர்களுக்கு உண்மையில் சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றில் விருப்பம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை நிகழ்வுகள் தோற்றுவிக்கின்றன." தமிழர்கள் மீதான பாகுபாடு பற்றி.... "உதாரணமாக, உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தமிழ் அக்கீகரிக்கப்படாத, தமிழ்பேசும் சமூகங்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் பாகுபாடுகள் காட்டப்பட்ட காலம் ஒன்று இருந்தது. தமிழர்களுக்கு மனக்குறைகள் இருந்தன. அதை மறுதலிக்க முடியாது. நிலைவரம் இப்போது பெருமளவுக்கு மேம்பட்டு விட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்களிடம் தொலைநோக்கு இருக்கவில்லை. முகாமைத்துவமும் தவறானதாக இருந்தது. வாக்குறுதிகளும் மீறப்பட்டன. பண்டாரநாயக்க / செல்வநாயகம், டட்லி சேனநாயக்க / செல்வநாயகம் உடன்படிக்கைகளை உதாரணமாக கூறலாம். விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம் "விடுதலை புலிகள் நாட்டை உள்நாட்டுப் போருக்குள் இழுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலைவரம் மேம்பட்டதாக இருந்திருக்குமா என்ற உங்கள் கேள்விக்கு எனது தனிப்பட்ட பதில் சமூக - பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு போரின் மூலம் ஒருபோதுமே தீர்வைக் காணமுடியாது என்பதேயாகும். ஆனால், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக இயக்கங்களும் அமைதிவழியிலான வேறு முயற்சிகளும் தோல்வியடைந்ததை கண்ட தமிழ் இளைய தலைமுறை ஒன்று ஆயுதமேந்துவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முடிவுக்கு ஏன் வந்தது என்பதை விளக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்." "ஆனால், ஆயுதமோதல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், போருக்கு வழிவகுத்த பிரச்சினைகளுக்கு போரினால் தீர்வைக் காணமுடியாது என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. விடுதலை புலிகள் ஆயுதமேந்தாமல் இருந்திருந்தால், தெற்கில் உள்ள எந்த அரசாங்கமும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவேண்டிய அவசியம் குறித்து ஒருபோதும் சிந்தித்திருக்காது என்ற கருத்தை பல தமிழர்கள், மிதவாதச் சிந்தனை கொண்டவர்களும் கூட கொண்டிருக்கிறார்கள். அதே மிதவாதத் தமிழர்கள் போரினால் இப்போது அவலங்களைச் சந்தித்துவிட்டோம்; ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று கூறுவார்கள் என்பது எனக்கு நிச்சயம்." "தாயக விவகாரத்தைப் பொறுத்தவரை, இலங்கையில் தற்போது இருக்கின்ற தமிழர்களாக இருந்தாலென்ன அல்லது வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட தமிழர்களாக இருந்தாலென்ன பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் ஆட்சியின் கீழ் வாழ விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சிறுபானமைச் சமூகங்களின் உரிமைகள் போதுமானளவுக்கு உத்தரவாதப்படுத்தப்படுகின்ற சுதந்திரமானதும் ஐக்கியப்பட்டதுமான ஜனநாயக இலங்கை ஒன்றில் வாழ்வதற்கே அவர்கள் விரும்புவார்கள்." தனிப்பட்ட குறிப்பு எனது தனிப்பட்ட குறிப்புடன் கட்டுரையை நிறைவு செய்கிறேன். எனது தந்தையார் லக்ஸ்மனை விடவும் வயதில் மூத்தவராக இருந்த போதிலும், 1954 ஆம் ஆண்டில் சட்டக்கல்லூரியில் அவர்கள் இருவரும் சமகாலத்தவர்கள். நான் 1954 ஆம் ஆண்டில் பிறந்தேன். புதிதாக பிறந்த இந்த குழந்தையைப் பார்க்க லக்ஸ்மன் வைத்தியசாலைக்கு வந்தார். அது மாத்திரமல்ல, எனது ஞானஸ்நானத்துக்கும் அவர் வந்தார். அறுபதுகளில் எனது தந்தையாருக்கு லக்ஸ்மனுடனான தொடர்புகள் இல்லாமல் போய்விட்டன. ஆனால், அவரின் விவேகத்தைப் பற்றி தந்தையார் எப்போதும் உயர்வாகப் பேசுவார். தமிழைப் பேசமுடியாதவர் என்றாலும், 1956 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் குறித்தும் 1958 இனவன்செயல் மற்றும் 1961 சத்தியாக்கிரகப் போராட்டம் ஒடுக்கப்பட்டது குறித்தும் லக்ஸ்மன் ஆழமான கவலைகொண்டிருந்தார் என்றும் தந்தையார் கூறினார். தமிழர்களின் அவலங்கள் கதிர்காமருக்கு தெரியாது என்ற விடுதலை புலிகளின் குற்றச்சாட்டை தந்தையார் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. தமிழ்த் தேசியப்பிரச்சினை காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் முயற்சிகளின் விளைவாக, ஒரு பத்திரிகையாளன் என்ற தொழில்சார் அந்தஸ்தில் நான் 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் கதிர்காமருடன் நான் தொடர்புகொண்டேன். அப்போது ரொறண்டோவில் எனது சொந்த தமிழ் வாரப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். கதிர்காமர் அமைச்சராக வந்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வகை்காண உதவுவதில் அக்கறை கொண்டிருந்தார். புதிய அமைச்சர் என்ற வகையில் கதிர்காமர் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்து உள்நோக்குகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதால் அவருடன் பேசுமாறு நீலன் என்னைக் கேட்டுக் கொண்டார். தொலைபேசி மூலமாக அவருடன நான்கு அல்லது ஐந்து தடவைகள் பேசியதாக நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு தடவை சுமார் 90 நிமிடங்கள் அவருடன் பேசினேன். தமிழர் பிரச்சினையில் கதிர்காமர் மிகுந்த அக்கறை கொண்டிந்ததை நான் கண்டேன். அவர் ஆர்வத்துடன் கிரகிக்கும் பழக்கமுடையவர். நாங்கள் கூறுகின்ற சில விடயங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதை மிகவும் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் பண்பு இருந்தது. நான் அப்போது விடுதலை புலிகளின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு தீவிரமான தமிழ்த் தேசியவாதி. விடுதலை புலிகள் தங்களின் தலைமைத்துவத்தின் நலன்களுக்காக அன்றி, தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே போராடுகிறார்கள் என்று அபாபாவித்தனமாக நினைத்தவர்களில் நானும் ஒருவன். அதேபோன்ற சிந்தனைகொண்ட பல தமிழர்களைப் போன்று, ஐக்கியப்பட்ட ஆனால் ஒற்றையாட்சியாக இல்லாத இலங்கை ஒன்றிற்குள் நீதியானதும் சமத்துவமானதும் கௌரவமானதுமான இணக்கத்தீர்வு ஒன்றுக்கு விடுதலை புலிகள் தயாராக இருந்தார்கள் என்று நானும் நினைத்தேன். சமஷ்டி முறைக்கு வரவேற்பு சமஷ்டி முறை ஒரு அசலான தீர்வாக இருக்கும் என்று கதிர்காமர் இணங்கிக் கொண்டார். இரு விடயங்களில் மாத்திரம் அவருக்கு ஐயுறவு இருந்தது. எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அல்லாவிட்டால் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடியதாக இருக்காது என்று அவர் உணர்ந்தார். அதனால், கோட்பாட்டு சமஷ்டிமுறையை தவிர்த்து அதற்கு பதிலாக உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கம் என்ற பதம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அபிப்பிராயத்தை கதிர்காமர் கொண்டிருந்தார். இரண்டாவதாக, எந்தவொரு இணக்கத் தீர்வும் இந்தியாவுக்கு ஏற்புடையதான வழியில் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். அதனால், பிராந்தியங்களுக்கு பரவலாக்கப்படுகின்ற அதிகாரங்கள் இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கு இடையில் உள்ள உறவுமுறையின் வீச்செல்லைக்கு அப்பால் செல்லக்கூடாது என்று கதிர்காமர் உணர்ந்தார். புலிகளுடன் அரசியல் நல்லிணக்கம் இவற்றுக்கு அப்பால், தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகளை மாத்திரம் ஈடுபடுத்தியதாக இணக்கத்தீர்வு அமைய வேண்டும் என்ற சிந்தனையை ஆரம்பத்தில் கதிர்காமர் ஏற்றுக்கொண்டார். எம்மை வேறுவிதமாக நம்பவைக்க விடுதலைப் புலிகள் முயற்சித்தாலும் கூட 1994 ஆம் ஆண்டில் அவர்களுடன் அரசியல் நல்லிணக்கதில் கதிர்காமர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். நிலைவரத்தை மதிப்பிடு செய்வதற்காக கதிர்காமர் பெருமளவு தமிழர்களுடன் பேசினார். அவர் மிகவும் ஆழமாகவும் வெளிப்படையாகவும் பேசியவர்களில் ஒருவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் காலஞ்சென்ற அதிவண. டி.ஜே.அம்பலவாணர். விடுதலைப் புலிகள் இணக்கத்தீர்வு ஒன்றில் அக்கறையாக இருக்கிறார்கள், ஆனால் நிலைமாறு பாதையில் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் ஆறுதலாகவுமே அடியெடுத்து வைப்பார்கள் என்னைப் போன்ற பெரும்பாலான தமிழர்கள் அவருக்கு சொல்லியிருந்தோம் என்று நினைக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு கதிர்காமர் தனது அந்த 1994 ஆம் ஆண்டிலும் 1995 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அரசாங்கத்திற்குள் அதை வலியுறுத்தினார். விடுதலைப் புலிகள் அந்த நம்பிக்கையை தகர்த்து 1995 ஏப்பில் 18 ஆம் திகதி மோதல்களை மீண்டும் தொடங்கியபோது அவருக்கு முற்றிலும் ஏமாற்றமாகப் போய்விட்டது. அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து இறுதியாக நான் அவருடன் பேசினேன். வழமையான மனச் சமநிலைக்கு மத்தியிலும் அவர் ஆத்திரமடைந்தார். விடுதலை புலிகளைப் பற்றி நேர்மறையாகப் பேசிய என்னையும் மற்றவர்களையும் அவர் விமர்சித்தார். நான் மறுத்துரைத்தேன். வாக்குவாதம் நீண்டுகொண்டு போகும் அறிகுறி தெரிந்தபோது அவர் திடீரென்று சம்பாஷணையை முடித்துக்கொணாடார். அதற்கு பிறகு நாம் நேரடியாக ஒருபோதும் பேசிக்கொண்டதில்லை. https://www.virakesari.lk/article/222620
  24. 15 AUG, 2025 | 04:42 PM தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு சந்திப் பகுதியில் நேற்று (14) நடைபெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சோகமயமான ஒரு தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றுகூடியிருக்கிறோம். குறிப்பாக, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் கண்ணீர் சொரிந்து சோகத்தை வெளிப்படுத்தி, கொடூர செஞ்சோலைப் படுகொலை நினைவுகளுடன் இருக்கின்றீர்கள். நாமும் அந்த கொடூர படுகொலையின் கனத்த அந்த நினைவுகளைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம். ஏற்கனவே நாம் குறித்த விமானத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அஞ்சலிகளைச் செலுத்திவிட்டுத்தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளோம். உலகில் மிகக் கொடூரமான தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட இராணுவங்களில் இலங்கை இராணுவமும் ஒன்றாகும். வெள்ளைச் சீருடையோடு கல்வி கற்கச் சென்ற எமது பிள்ளைகளின் மீது விமானம் குண்டுமழை பொழிந்தது. எமது பிள்ளைகளின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்து சிவப்புச் சீருடையாக மாறியிருந்த கோலம், உடல்கள் சிதறிக் கிடந்த நிலைமை, இத்தகைய கெடூரமான சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது. இந்தக் கொடூரம் இடம்பெற்றும் 19 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுது தமது சோகத்தை வெளிப்படுத்துகின்றபோது, இந்தக் கொடூர படுகொலை இன்றளவும் எந்த அளவிற்கு மனங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றது என்பதை நன்கு உணரமுடிகின்றது. இது என்றுமே மறக்கமுடியாத ஆறாத வலியாகும். இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வருடம் முழுவதும் தமிழ் இனப் படுகொலையை மேற்கொண்டது. அவ்வாறு இராணுவத்தால் தமிழினப் படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளும் ஆதாரங்களும் தற்போது தாயகப்பரப்பின் பல்வேறு இடங்களிலுமிருந்தும் வெளிப்பட்டுவருகின்றன. எமக்கான விடிவு கிடைக்கவேண்டுமென்ற நோக்குடனும், தமிழ்த் தேசிய இனமான நாங்கள் எம்மை நாமே ஆட்சி செய்யவேண்டுமென்ற நோக்குடனும் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்திக்கொண்டிருந்த எம்முடைய தலைவனின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை உலக நாடுகள் இணைந்து அழித்த வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது தமிழர்கள் நாங்கள் நலிவடைந்தவர்களாக, அடிமைகளாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதுவுமில்லை என்ற நிலையாகிவிட்டது. கடலிலே தொழில் செய்யமுடியாத நிலைமை, ஆறு மற்றும் குளங்களில் தொழில் செய்ய முடியாத நிலை, வயலில் தொழில் செய்யமுடியாத நிலையென எமது தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டுள்ளனர். எமது தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. குறிப்பாக வனவளத் திணைக்களத்திடம் மாத்திரம் 4,32,486 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் 2,22,006 ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு 2 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கிறது. இவ்வாறு அரச திணைக்களங்களால் எமது தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் முடக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் பெருமளவானோர் தாயகப் பரப்பிலிருந்து புலம்பெயர்ந்து செல்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறாக தாயகப்பரப்பில் தமிழர்களின் பெருக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலைமைகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழின அழிப்புக்கள் நடத்தப்பட்டன. தற்போது தாயகப் பரப்பிலுள்ள எமது தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கடந்தகால அரசாங்கங்கள் மிக அதிகளவில் ஆக்கிரமிப்புக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை. எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படும் எனக் கூறுகிறார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையிலே தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம். இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றோம். குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷ பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கிறோம். எனவே, தமிழ்த் தேசிய இனத்தின் மீது இன அழிப்பு நடத்திய, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடத்தியவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலைச் செய்கின்ற காலம் வரும். உரிய தீர்வு கிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம். படுகொலைகளின் போதும் எமக்கான விடுதலைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கும் தொடர்ந்தும் அஞ்சலிகளைச் செலுத்துவோம் என்றும் அவர்களை நினைந்திருப்போம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222624
  25. குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் - மனித உரிமை பேரவை இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிக்கவேண்டும் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 15 AUG, 2025 | 04:14 PM தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு, இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தையும் புதுப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கேட்டுக்கொண்டுள்ளது. அறிக்கையொன்றில் அந்த அமைப்பு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது, தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு ஏனைய சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/222622

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.