Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. Social Capital’s Chamath Palihapitiya, Delivering Alpha 2021 பேட்டியில் இப்படி கூறுகிறார்:- “ I can pretty confidently say bitcoin has replaced gold” அப்படியென்றால் தங்கத்தின் பெறுமதியைவிட Bitcoin பெறுமதி கூடிவிட்டது என அர்த்தமா இல்லை இந்த Bitcoin ஆர்வலர்களின் அதீத எதிர்பார்ப்புகளா? https://www.cnbc.com/video/2021/09/29/palihapitiya-i-can-pretty-confidently-say-bitcoin-has-replaced-gold.html
  2. “World, I want to leave you betterI want my life to matterI am afraid I have no purpose hereI watch the news on TVAbandon myself daily” அவுஸ்ரேலியா பெண் பாடகிகளில் Taylor Swift விட Siaவின் பாடல்கள் வித்தியாசம். சமீபத்தில் வெளியான Siaவின் Courage to change..
  3. நேரம் இரவு 11:59 என்றால் பிரமையாகத்தான் இருக்கும்..
  4. Bitcoinல் முதலீடு செய்வது சிறந்ததா? இல்லையா? எவ்வாறு எப்படி?.. என்னைப்போன்ற அரிச்சுவடி நிலையில் நிற்பவர்களுக்கு..
  5. உங்களது வணிகத்தின் நோக்கம், அளவு(SME, Corporate, Property Finance), கடனை திருப்பிகட்டும் தன்மை, காலம், சொத்துக்களின் பெறுமதி என்பவற்றை வைத்து உங்களிற்கு நீங்கள் securityயாக கொடுக்கும் உங்களது சொத்தின் பெறுமதியில் 80% மட்டுமே கடனாக தரும் என உங்களிற்கு கூறியிருக்கலாம்.. அத்துடன் வர்த்தக சொத்துகளின் பெறுமதியையும் எப்படி நீங்கள் இந்த வர்த்தக சொத்தின் மூலம் வருமானத்தை ஈட்டுவீர்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் உங்களுக்கான கடன் தீர்மானிக்கப்படும்.. அதே நேரம் இங்கே உங்களது வீட்டை securityயாக காட்டி வீட்டிற்கான கடனோ இல்லை வர்த்தக கடனோ பெறலாம். ஆனால் வர்த்தக கட்டிடத்தை காட்டி வீட்டுக்கான கடன் பெறமுடியாது. மேலும், நீங்கள் கூறியது போல உங்களது வீட்டின் பெறுமதியில் 100% வரை வர்த்தக கடன் பெறலாம் ஆனால் வங்கிகள் உங்களிடம் GSA(முன்பு Fixed and Floating Charge) அல்லது Guarantee and Indemnity கேட்பார்கள். அதுமட்டுமல்ல வேறுவகையாக acknowledgement letter, etc.. இப்பொழுது இந்த G&Iன் கொள்கைகளை மாற்றியுள்ளனர்.. இவ்வளவும்தான் நான் இந்த வர்த்தக கடன் சம்பந்தமான எனது அனுபவம்
  6. இல்லை என நினைக்கிறேன். கம்பனிகள் 80% தான் கடனைப்பெறலாம் என்றால் property developerஆல் எப்படி மேற்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள முடியும்? வியாபாரத்தில், தொழிலில் வளர்ச்சியடைய முடியும்? வியாபார கடன்கள் வீட்டு கடன்களைப்போல வரையறைக்குட்பட்ட securities கொண்டவை அல்ல. கடன்களிற்கான காலம் முதல் வட்டிவீதம், தவணைப்பணத்தை கட்டும் முறைகள் வரை வேறானவை. கம்பனிகளின் கடனிற்கு LMI(Loan Mortgage Insurance) கூட இல்லை. அப்படியாயின் சொத்துகளின் பெறுமதியில் 80% வரையே பெறலாம் என இருக்காது
  7. இந்த காணெளியை பார்க்கையில் 😵‍💫😰இப்படிதான் விளங்கியது
  8. பொதுவாக கூறுவது என்றால் வங்கிகள் கம்பனிகளுக்கு கடனை வழங்கும் பொழுது அவர்களிடம் இருக்கும் சொத்துகளை collateral securities ஆக எடுத்து கடனை வழங்கும். கடனை கட்டமுடியாது போனால் சொத்துகளை தன்வசப்படுத்தி விற்கமுடியும். இந்த அடிப்படையில் சொத்துகளின் பெறுமதியை கணிப்பிட்டு(Loan to Value Ratio) கடனை வழங்கியிருக்கும். அத்துடன் கம்பனிகளுக்கான கடன் தனிநபர் கடனை விட வித்தியாசம் என்பதால் அவற்றிற்கான securitiesம் வேறு. இதுவும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.. முன்னேரே எழுதியிருந்தீர்கள் //பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்பசெயற்படுவார்கள்தான் EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) // அதே போலவே கம்பனிகளுக்கான கடன்களிற்கும் கணித்து வைத்திருப்பார்கள்தானே இந்த Evergrande சம்பந்தமாக Adam Khoo தனது காணெளியில் கூறியுள்ளதைப்பார்த்தால் பெரியளவிலான வங்கிகளுக்கு பாதிப்பில்லை, இந்த கம்பனியின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களுக்கே அதிக தாக்கம் ஏற்படும் என்கிறார். நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை எழுதியிருக்கிறேனோ தெரியவில்லை. ஆனால் நான் விளங்கி வைத்திருப்பது இதுதான்.
  9. நல்லதொரு இணைப்பு.. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவர்களுக்கான golden ruleஆக இதை கூறலாமா? “ Don’t invest(buy shares) in companies with the higher debt “..
  10. மற்றைய நாடுகளை விட அவுஸ்ரேலியாவை அதிகம் பாதிக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அவுஸ்ரேலியாவின் Iron Oreனினை அதிகளவில் இறக்குமதி செய்வது சீனா. இந்த மாதிரி சரிவினால் சீனா இறக்குமதி செய்யும் Iron Oreல் அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது பெருமளவில் அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சனையில் உள்ளது.
  11. உண்மைதான், ஆனால் எல்லா இடங்களிலும் என்று கூறமுடியாது. செலவுகளைப்பற்றி உங்களது கணக்காளரிடம் கேட்டால் அவற்றை எப்படி மீள எடுப்பதை பற்றி கூறுவார்.
  12. நீங்கள் இருவர் கூறுவது சரியே.. ஆனால் இந்த முறையில் இரண்டாவது வீட்டினை(Investment ppty) வேண்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களது வீட்டின் தற்போதைய பெறுமதி Aus$800,000 என்றும் மீதமுள்ள கடன் Aus$300,000 என்றால் உங்களது equity Aus$500,000. இதை வைத்து South Australiaவில் ஒரு unit வேண்டி வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? இவ்வளவும் உங்களுடைய affordability, மற்றும் வங்கிகள் உங்களது வருமான நிலை, வயது, உங்களில் தங்கியிருப்பவர்களின் வயது போன்ற பல காரணிகளை வைத்தே அனுமதிக்கும் ஆனால் உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? நான் நினைப்பது தவறாக இருந்தால் சரியாக விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்.. நன்றி.
  13. இங்கேயும் 5%மாக இருந்தாலும் 20% deposit போடுவீர்களோயானால் Lending Mortgage Insurance(LMI) தவிர்க்கலாம்.. இதன் காரணமாக first home buyers சில உதவிகளை அரசு செய்கிறது(காலத்திற்கு ஏற்ப மாறுபடும்). அதே போல சில தொழிற்தகமைகள், தொழிகளுக்கு 10% இருந்தால் போதுமானது( வங்கிகளுக்கு வங்கி சில சமயம் இந்த கொள்கை மாறுபடலாம்). நீங்கள் கூறும் Part buy, part rent என்றால் அரசு கூறும் low-income tenants(government housing support allowance)ற்குள் வரும் tenantsற்கு வாடகைக்கு விட்டால் வாடகையை tenant ஒரு பகுதியும் அரசு மிகுதியையும் தருவதா?
  14. இது எனது தனிப்பட்ட கருத்து. அவுஸ்ரேலியாவில் 2011ற்கு பின் வட்டி வீதம் ஏறவில்லை என்பதையும் 2010 ஆண்டின் இறுதி காலப்பதகுதியில் வீடு ஒன்றை வாங்கிய பொழுது இருந்த மதிப்பை விட இன்று வீட்டின் பெறுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதையும் காணலாம். அத்துடன் என்னைப் பொறுத்தவரை வீட்டின் பெறுமதி சடுதியாக குறைய வாய்ப்பில்லை என்பதால் வீட்டின் மீது முதலிடுவதுதான் எப்பொழுதும் முதலாவது தெரிவாக இருக்கும். அதுவும் owner occupied ஆக வேண்டாமல் investmentஆக வேண்டுவது சில சமயங்களில் நன்மையாக இருக்கும்(இது முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம், life circumstancesஏற்ப) ஆனால் உங்களது affordabilityற்கு ஏற்ப வேண்டுவது சிறந்ததாக இருக்கும்.. அதே நேரம் இரண்டு வாரங்களிற்கு முதல் WBC Chief Economist Bill Evansன் பேட்டி ஒன்றை வாசித்த பொழுது அதில் அவர் கூறியிருந்தார் “ 2023 ஆண்டின் முதலாவது காலாண்டில் வட்டி வீதம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார்.. ஆனால் அதுவும் அதிகளவில் அதிகரிக்காது” என்கிறார்.. https://www.google.com.au/amp/s/amp.theaustralian.com.au/business/bill-evans-westpac-chief-economist-still-getting-the-big-calls-right-after-30-years/news-story/c0cc4db6a1b3e0d8300710a38cf07d9b
  15. நல்லதொரு இணைப்பு.. “Don’t try to predict the future” என்றதற்கு அவரின் உதாரணம் 👌 ஆனால் அதிகம் ஆபத்துவிரும்பிகள் அற்றவர்களுக்கு Housing marketல் முதலீடு செய்வது ஆபத்து குறைவானது. அதுவும் இப்பொழுது இங்கே(அவுஸ்ரேலியாவில்) எப்பொழுதும் இல்லாதவாறு குறைந்த வட்டி வீதம் காணப்படுவதால் வீட்டுக் கடன்களை பெருமளவில் குறைக்கலாம்.. வீட்டுகடனிலிருக்கும் மிகையான equityயை வைத்து பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. ஆனால் எப்பொழுது இந்த வட்டி வீதம் ஏறுமுகமாகும் என்பது தெரியவில்லை.. ஏனெனில் இப்பொழுதான் இந்த செய்தியையும் பார்த்தேன் “Australia's biggest bank sounds the alarm on rapid surge in house prices over fears borrowers will struggle to repay their debt” https://www.google.com.au/amp/s/www.dailymail.co.uk/news/article-10023295/amp/The-Commonwealth-Bank-CEO-Matt-Comyn-rising-Australian-house-prices-debt-levels.html குறுகிய கால வீழ்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகவும் இருந்தால் ஏமாற்றங்களையும் நட்டத்தையும் குறைக்க முடியும்.. உண்மை..
  16. இறைச்சியை மட்டும் தனியாக அவித்தாலும் அதன் மணம் போகாது இல்லையா?.. ஒரு கறுவாப்பட்டையை போட்டு செய்து பார்ப்போம்🤔 ஆனால் நல்ல சலாட்டாகவே உள்ளது.. தேன் விடுவதைப்பற்றியும் யோசிக்கவேண்டும் நீங்கள் இதை இங்கே இணைத்தமைக்கு மிக்க நன்றி
  17. செய்முறையை பார்க்கும் பொழுது, இதுவும் நல்லதொரு combination என்றுதான் தோன்றுகிறது.. கொஞ்சம் chilli flakesம் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..
  18. பெரும்பாலும் எல்லாமே நல்லவைகள்தான் சுவி அண்ணா!!! நான் இலகுவான சமையல்முறைகளையே அதிகம் விரும்புவதால், அப்படி கண்களில் தென்படுவதை செய்து பார்க்கிறேன்.. நன்றி..
  19. நீங்கள் இங்கே இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. Dil, cucumber மற்றும் தயிர் சேர்த்த dipம் நல்ல ருசி.. அதே போல chicken marinateம் நன்றாக இருந்தது.. இந்த செய்முறையை பார்த்தவுடன் நினைத்தேன் நன்றாகவே இருக்கும் என்று.. என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.. நான் flat breadற்கு பதிலாக Pita pocket பயன்படுத்தினேன்.. நன்றாகவே வந்தது..
  20. நான் கூறியது, சாமை, கொள்ளு மற்றும் வரகரிசி போன்றவற்றை.. மற்றபடி நீங்கள் கூறுவதைப்போலத்தான்.. நவராத்திரி நேரங்களில் அவல் உடன் கெளபீ அல்லது கடலை இருக்கும்
  21. நான் கூட இவற்றை சிறு வயதில் படித்தது மட்டுமே அதுவும் கவனத்தில் இருந்து மறைந்துவிட்டது.. அதே போல சிறுவயதில் குரக்கன், ஒடியல் உழுத்தம்மா புட்டு என்பவற்றை விரும்பி சாப்பிட்டதில்லை, ஆனால் சாப்பிட்டே ஆகவேண்டும்.. பின்பு இவற்றின் பயன்பற்றி விளங்கி அவற்றை தேட தொடங்கியதாலேயே இந்த மாதிரி செய்ய முடிகிறது, தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.. அதே போல இதைப்பற்றி மேலும் பல விஷயங்கள் தெரிந்தவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொண்டால் அதிலிருந்து மற்றவர்களும் பயன் அடைவார்கள்
  22. கொள்ளு - Horse grams இன்று எங்களிடையே பயறு, உழுந்து, குரக்கன், கெளபீ போன்றவை அதிகம் பரீட்சயமானளவிற்கு சாமை, வரகு, கொள்ளு போன்றவற்றின் பயன்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை எனலாம். அதனாலேயோ என்னவோ தெரியவில்லை இவற்றின் உற்பத்தியும் இலங்கையில் குறைவடைகிறதோ என அங்கே போகும் சமயங்களில் நினைப்பதுண்டு..நான் கூட இவற்றில் அதிகளவு அக்கறை எடுக்க தொடங்கியது fitness வகுப்பில் இணைந்த பொழுதுதான்.. இந்த தானியங்களின் பயன்களை அறிய தொடங்கினால் பின் இவற்றினை இலகுவில் விடமாட்டோம் என்பதால் இங்கே அதிகம் வரவேற்க்கப்படாத ஆனால் சத்து நிறைந்த கொள்ளு எனும் தானியவகையைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்… இவை இலங்கை இந்திய போன்ற வெப்பம் கூடிய நாடுகளில் பயிரிடக்கூடியவை என்பதால் இதனால் இரு வழியில் (உற்பத்தி மற்றும் சத்து நிறைந்த உணவு) பயன் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்… இந்த சிறிய இயற்கை விதை சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது, முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளது. கொள்ளு, கார்போஹைட்ரேட் மற்றும் புரத உள்ளடக்கத்தில் அதிக அளவில் இருந்தாலும் கூட, இரும்பு, மாலிப்டினம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களிலும் நிறைந்துள்ளது. இவை உகந்த ஆற்றல், தசை வலிமை, ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்த சிவப்பணு தொகுப்பு மற்றும் வலுவூட்டப்பட்ட எலும்புகளை உறுதி செய்கின்றன. மேலும், இது உயிரணுக்களின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு(Metabolism) உத்தரவாதம் அளிக்கும் பிவைட்டமின்களின் போதுமான அளவு வழங்குகிறது. 100 gm of horse gram contain: Protein 22 gm Mineral 3 gm Fiber 5 gm Carbohydrates 57 gm Iron 7 mg Calcium 287 mg Phosphorus 311 mg மேலும் நிறுவப்பட்ட மருத்துவ அறிவியலின் படி, free radicals ஏற்படும் oxidative சேதமானது பல இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், மனித உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் antioxidants மூலம் இந்த சேதத்தை குறைக்கும் திறன் உள்ளது, குறிப்பாக raw horse gramsல் polyphenols, flavonoids மற்றும் புரதங்கள் போன்ற முக்கிய antioxidants நிறைந்துள்ளது. இது கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். அதேபோல, மற்ற பருப்பு வகைகளைப் போலவே, இதில் குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை இரண்டும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பேணவும் உதவுகிறது. இரத்த சிவப்பணுக்கள் ஓக்ஸியனை உடலிற்கு கொண்டு செல்ல இரும்புசத்து உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையில், பொஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் ஆற்றல் உற்பத்தி மற்றும் தசை செயல்பாட்டிற்கு அவசியம் ஆனாலும் இவ்வளவு பயன்களை தரும் இந்த கொள்ளு பிரச்சனைகளையும் தரக்கூடிய ஒரு தானியம் என்பதால் ஒவ்வொரு நாளும் உணவில் சேர்க்காமல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இதனை பயன்படுத்தினால் அதிக பயன்களை பெறலாம்.. சரி அப்படி என்னதான் இந்த கொள்ளு பிரச்சனையை தரக்கூடும் என பார்க்கலாம்.. -இந்த கொள்ளு போன்ற தானியங்களில் ஃபைடிக் அமிலம் உள்ளது, இது ஒரு ஊட்டச்சத்து எதிர்ப்பு அமிலம் -அதாவது இது உங்கள் உடல் அனைத்து ஊட்டச்சத்து நன்மைகளையும் உறிஞ்சுவதை தடுக்கலாம். ஆனால் இந்த கொள்ளு விதைகளை ஊறவைத்து, முளை கட்டவைத்து அல்லது புளிக்க/நெதிக்க வைத்து சமைத்தால், பைடிக் அமில உள்ளடக்கத்தை 80-90% குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. - கீல்வாதத்தால் பாதிக்கப்படும்போது கொள்ளு மற்றும் பிற பருப்பு வகைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் யூரிக் அமில அளவு மூட்டுகளைச் சுற்றி ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் கொள்ளு மற்றும் பருப்பு வகைகள் அமிலத்தன்மையை அதிகரிக்க பங்களிக்கும். - அதிக அளவில் சாப்பிடும் போது உடல் வெப்பத்தை பெரிதும் அதிகரிக்கும் என்பதால் மிதமாக சாப்பிடவேண்டும். கர்ப்பினி பெண்களும் இதை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.. - நீங்கள் ஆயுர்வேத மருந்துக்களை உட்கொண்டால் கொள்ளு போன்ற தானிய வகை அடிப்படையிலான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். - கொள்ளு ரஃபினோஸ் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் குறிப்பிட்ட வகை கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது, இது செரிமானத்தின் போது வாயுத்தொல்லை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக அளவில் சாப்பிடும்போது. - அரிதான சந்தர்ப்பங்களில், ஒவ்வாமை எதிர்வினைகள் பதிவாகியுள்ளன உடல் நிறையை பேணுவதற்கும் இந்த கொள்ளு உதவுகிறது என்பதால் நான் தோசை சுடும் பொழுது, கோதுமை மாவோ, வெள்ளை பச்சைஅரிசியோ, ரவையோ சேர்க்காமல் உழுந்துடன், வரகு/சாமை/ராகி அல்லது இந்த கொள்ளு போட்டே செய்வது வழமையாகிவிட்டது…அதே போல முளைகட்டிய தானியங்களை சலாட்டில் சேர்ப்பதும் வழக்கமாகிவிட்டது… https://www.healthline.com/nutrition/horse-gram-for-weight-loss#potential-side-effects https://m.netmeds.com/health-library/post/horse-gram-super-food-way https://isha.sadhguru.org/us/en/blog/article/horse-gram-benefits-nutrition-recipes

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.