Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. இப்போதைக்கு போதைப்பொருள் கும்பலை ஒழிப்பதட்கான தேடுதல்தான் நடக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இங்கு வியாபாரத்தில் ஈடுபடும் கும்பலின் சொத்துக்கள் பணம், நகை, வாகனம், இன்னும் அசையா சொத்துக்கள் என நிறையவே கைப்பற்றப்பட்டுள்ளன. நீங்கள் சொல்லும் அரசியல் வாதிகள் சூறையாடிய, கொள்ளையடித்தவை எல்லாம் இதட்குள் வராது. அதட்கு வெளிநாட்டு அமைச்சு, நிதி அமைச்சு என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய மாடடார்கள். அந்த பதவியில் இருப்பவர்களும் , அவர்களை ஆதரிப்பவர்களும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள்தான். எனவே நீங்கள் எதிர்பார்ப்பது நடப்பதட்கு சந்தர்ப்பமே இல்லை. இருந்தாலும் IMF தனது நிபந்தனைகளில் இதனையும் ஒன்றாக சேர்த்திருப்பதாக அறிய கிடைக்கின்றது. எனவே பொறுத்திருந்து பார்ப்பம்.
  2. அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது நலனைத்தான் முன்னிறுத்தும். இவர்கள் நேர்மையாக இருந்திருந்தால் எப்போதோ இந பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கலாம். இதனை வைத்தே சீனாவை இலங்கையில் இருந்து அப்புறப்படுத்த மறைமுக நகர்வுகளை மேட்கொள்ள முயட்சிக்கின்றன. எனவே உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன். முன்னர் நான் இங்கு குறிப்பிடடதுபோல தமிழ் காட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்ப்பாளரை நிறுத்துவது சிங்கள கட்சிகளுக்கு நிச்சயம் பிரச்சினையை உருவாக்கும். இப்போதைக்கு கிடடதடட ஐந்து பெருக்குமேலே போட்டியிட போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஓட்டுகள் பிரிவதட்கான சந்தர்ப்பம் அதிகம். எவருக்குமே 50 % எடுக்க முடியாதிருக்கும். தமிழ் மக்களின் வலிமையை காண்பிப்பதட்கு நல்ல ஒரு சந்தர்ப்பம். தமிழ் காட்சிகள் இங்கு தயாரா என்பது கேள்விக்குறியே?
  3. பணமுமில்லை பராமரிப்புமில்லை. இந்தியாவின் உபயத்தில் வடக்கு தெடகில் ஓரளவுக்கு சீராய் ஓடுகின்றது.
  4. புதிய பாராளுமன்றம் உருவாக்கி ஒரு வருடத்திட்க்குள் தீர்வு. அதாவது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யுங்கள் உங்களுக்கு அந்த தீர்வு கிடைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறார். சரியான தந்திரமுள்ள அரசியல்வாதிதான்.
  5. இந்த பாலியாறு கிளிநொச்சி மாவட்த்தின் கீழ் வருகின்றது. அடுத்தவருடம் முதல் யாழ் மாவட்த்திட்கு கடல் நீரை நண்ணீராக்கும் (RO வாட்டர்) திடத்தின்மூலம் நீர் வழங்கப்படும். அநேகமாக எல்லா இடங்களும் இதன்மூலம் நீரை பெற்றுக்கொள்ளும். பாலியாறு திடடமானது அநேக வருடங்களாக பேசப்பட்டு பணம் ஒதுக்கினாலும் செயட்படுத்தப்படவில்லை. இங்கு நீர் தேக்கிவைக்கப்பட்டு வழங்குவதட்கான ஒரு திடடம். மழை இல்லாவிட்ட்தால் அது பிரச்சினையாக இருக்கும். யாளிட்கு வருடம் முழுவதும் நீர் வழங்கமுடியாது. இருந்தாலும் ஓரளவிட்கு தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த திடத்தின் மூலம் யாழின் சில பகுதிகளும், பூநகரி, மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளுமே உள்ளடக்கப்படும். இந்த திடத்திற்கு எட்கேனவே கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி சில வேலைகள் நடந்தாலும் அது காரணங்களால் தடைபட்டு போயுள்ளது. நிறைவேற்றினால் நல்லதுதான்.
  6. நீங்கள் சொல்லுவது சரி. மாலைதீவு நிச்சயமாக அனுமதி கொடுக்கும். அப்படி வந்த பின்னர் இலங்கை நாரா நிறுவனத்துடன் இணைந்து செய்வோம் என்று சொல்லுவார்கள். இலங்கை அரசும் சீன கப்பல் தனியாக செல்லாது எண்கள் ஆட்களும் அதில் செல்லுவார்கள் என்று சொல்லும். எனவே சீன கப்பலுக்கு அனுமதி கிடைக்கும்.
  7. கிழக்கிலே தாடி வைத்தவர்கள்தான் இப்போது அதிகமாகிக்கொண்டு போகிறார்கள். எனவே இப்படியான சோகங்களை எதிர்பார்க்கலாம்.
  8. அதாவது எந்த ஒரு வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களும் நம்ப தகுந்தவை இல்லை என்று சொல்ல வருகிறீர்கள். இலங்கை அரசாங்கம் எப்படியாவது முதலீடுகளை இங்கு செய்ய வேண்டுமென்று முயட்சிக்கிறது இன்னும் அதட்கான அலுவலகங்களை இந்தியா மேட்கு நாடுகளிலும் திறந்தும் உள்ளது. எனவே அவர்களது கனவு நனவாகும் போலத்தான் தெரிகின்றது. நான் நினைக்கிறேன் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் இந்த வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களை சரியாக கையாளவில்லை என்று.
  9. இந்தியா முதலில் தனது நலனைத்தான் முன்னிறுத்தும். இன்னும் இந்திய அரசியல் கொள்கை வகுப்பாளர்கள், வெளி நாட்டு கொள்கை வகுப்பாளர்கள் மலையாளிகளை கொண்ட ஒரு அமைப்பு. அது எப்போதும் இலங்கை அரசு சார்பான தீர்மானங்களையே எடுக்கும். எனவே இந்த தீர்மானங்கள் எல்லாம் வெளி நாட்டு கொள்கை வகுப்பாளர்களில் தங்கி உள்ளது. தமிழர் பிரச்சினை எல்லாம் அவர்களுக்கு ஒன்றுமே இல்லை.
  10. ரணில் மாமா இன்னும் 12 வருடங்கள் இருப்பாரா என்பது சந்தேகமே. இருந்தாலும் நிச்சயமாக அவரை சுற்றி இருப்பவர்கள் அதைவிட கூட வருடங்கள் இருப்பார்கள். அவரை வைத்து சூறையாடவென்றே ஒரு கூடடம் காத்துக்கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நிச்சயமாக தற்போதுள்ள அரசும் ஜனாதிபதியம் துரதியடிக்கப்பட சந்தர்ப்பம் அதிகம் காணப்படுகின்றது. ஆனாலும் அது சரியா பிழையா என்பது விவாதத்துக்குரியது.
  11. சிங்களவன் சொல்லாமலில்லை. ஆனால் சிங்களவனிடம் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை. முதுகில் குத்துவான் எண்டு நல்லாகவே தெரியும். எனவேதான் மீண்டும் மீண்டும் சிங்களவனுக்கு இந்தியா ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்குது. இல்லாவிட்ட்தால் சீன கப்பலை உள்ளுக்கு விட்டிடுவான். கடைசியாக கிடைத்த செய்திகளின்படி சீன கப்பல் இலங்கைக்கு வாக்குவதட்கு அனுமதி இல்லை என்றே சொல்லப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்பம்.
  12. உண்மையாகவே இவர்களது கட்சி கொள்கை என்னவென்று யாருக்குமே விளங்குவதில்லை. ஈழம் கேக்கிறார்களா, சுயாட்சி கேட்க்கிறார்களா, வட கிழக்கு இணைந்த தாயகம் கேட்க்கிறார்களா, அல்லது என்னமாதிரியான கடடமைப்பை கேட்க்கிறார்கள் என்று சரியாக சொல்வதாக தெரிவதில்லை. எல்லோரையும் குற்றம் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே ஒழிய கிடைக்கக்கூடிய தீர்வைப்பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. அல்லது தங்கள் நினைத்திருக்கிற தீர்வை எப்படி பெறப்போகிறார்கள் என்று ஒரு ஐடியாவும் கிடையாது. இப்படியே வாய் சவாடல்கள் விட்டுக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
  13. உண்மைதான். இருந்தாலும் சிங்களவனுக்கு யுத்தத்தை நாம்தான் வென்றோம் என்று காட்டி இனவாதம் மீண்டும் தூண்டப்படுகின்றது. வெள்ளிக்கிழமை நடந்த அவர்களது மாநாட்டில் யுத்தத்தை வென்றதைத்தான் முன்னிறுத்துகிறார்கள். கீழ் மடட , கிராம மக்கள் இன்னும் ராஜபக்சேயை நம்புகிறார்கள். எனவே சிங்களவரின் உண்மையான நிலைப்பாடு வருகிற தேர்தலில்தான் தெரிய வரும். கடந்த மாதம் ஒரு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அதில் அவர்களதான் வென்றார்கள்.
  14. தமிழர் தரப்பும் சிங்களவர் தரப்பும் தான் வீழ்ச்சியடைந்திருக்குது. இன்னொரு தரப்பு முன்னேற்றம் கண்டிருக்குது. சராசரியாக வீழ்ச்சி கண்டிருக்குது.
  15. மூன்றாம் தரப்பை இழுத்து வர முன்னர் இங்குள்ள தமிழர் , தமிழர் கட்சிகள் நாங்கள் மூன்றாம் தரப்பனார் இல்லை என்பதை காண்பிக்க வேண்டும். நாங்களே மூன்றாம் தரப்பினர்போல இருக்கும்போது எப்படி ...............
  16. கொழும்பை பொறுத்த வரைக்கும் இப்போது இரவு முழுவதும் களியாட்டங்களை நடத்த அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மதுபான சாலைகள் கூட இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் திறக்கலாம். முன்னர் அப்படி இருக்கவில்லை. இப்போதுள்ள ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். இவர்கள் நடத்தும் விடுதிகள் இலங்கை உல்லாச பயண சபையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மாநகர சபையின் அனுமதி தேவைப்படாது. எனவே அனுமதி அமைச்சில் பெறப்படுமாக இருந்தால் கொண்டு நடத்தலாம். இப்போது கஞ்சா வளர்ப்பதெட்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
  17. இனி மூன்றாம் தரப்பாக வர யாரும் தயாராக இல்லய் . நோர்வே இதில் ஈடுபட்டு களைத்துப்போய் அவர்களது தூதுவராலயத்தே மூடிவிட்டு பொய் விடடார்கள். இந்தியா இலங்கையை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவேதான் படும் படாமலும் இதனைகையாளுகின்றது. இது உள்ளூர் விவகாரம் நீங்கள் பேசி தீருங்கள் என்று மற்ற நாடுகள் சொல்லாமல் சொல்லுகின்றன. எனவே மூன்றாம் தர்ப்பை எதிர்பார்ப்பது புத்திசாலி தனமாக இருக்குமோ தெரியவில்லை. இங்குள்ள தமிழர் காட்சிகள் ஒற்றுமையாக எதாவது சரியான தீர்மானம் எடுத்தாலொழிய மீட்சியில்லை
  18. இல்லை. சம்பளத்தில் PAYE (Pay As You Earn) Tax கழிக்கப்பட்டிருந்தால் வேறு வரி இல்லை. அப்படி இல்லாவிட்ட்தால் WHT (With Holding Tax) கழிப்பார்கள். நீங்கள் வங்கியில் வைப்பு செய்திருந்தால் மட்டும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். இப்போதைக்கு 5 % WHT என்று வட்டியில் கழிக்கிறார்கள்.
  19. கடி நாய் கடிக்கத்தான் செய்யும். நாமதான் பார்த்து புதியதாக நடந்து கொள்ள வேண்டும்.
  20. நான் மதத்துடன் சம்பந்தப்பட்டு எதையும் எழுத வில்லை. நீங்கள்தான் அப்படி நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். காகத்துக்கு கனவிலும் பவ்வி தின்னும் எண்ணமென்று சொல்லுவார்கள். முதலில் இருந்து மீண்டும் வாசியுங்கள்.😜
  21. சீனாதான் சாகல ரத்னாயக்காவை அனுப்பியதே. இலங்கை என்ன சீனா என்ன இரண்டுமே ஒன்றுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.