Everything posted by Cruso
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
உண்மையை எழுதினால் பதில் வராது. துரோகி படடம். இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. வாழ்க தமிழ் ஈழம்.
-
2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்
ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் கொள்ளையடித்து தனது ஆட்சியில் உள்ள பிரதேசங்களுக்கு கொடுக்காவிடடாள் தமிழ் நாடு இந்தியாவில் முதல் நிலைக்கு வந்திருக்கும். இருந்தாலும்தமிழ் நாடு அரசின் முயட்சிகளை பாராட்டலாம்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
இதைத்தான் தடபுகழ்ச்சி என்று சொல்வதோ? தன்னைத்தான் புகழ்பவன் உத்தமன் இல்லை.
-
தமிழ் அரசின் மத்திய குழு கிளிநொச்சியில் கூடுகின்றது – சட்ட சிக்கல் குறித்து ஆராயத் திட்டம்
இனி எல்லாமே சடட சிக்கல்கள்தான். சம்பந்தன் ஐயாவுக்கு இந்த சடட சிக்கல் தெரிந்திருந்த படியாலதான் உடனே மாநாடை கூட்டி பதவிகளை உறுதி செய்யும்படி கூறி இருந்தார். சுமந்திரனும் தனது கடிதத்தில் அந்த கோரிக்கையை வைத்திருந்தார். இந்த சடடமெல்லாம் ஸ்ரீதரன், மாவை, ஸ்ரீநேசன், யொஹேஸ்வரன், சார்லஸ் போன்ற படித்த (?) அரசியல்வாதிகளுக்கு விளங்காததால் வந்த வினை.
-
மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - லங்காலோகய தீர்மானம்
நான் இங்குள்ள நிலைமையை பொறுத்து அடிக்கடி எழுதும் செய்திதான் இது. இப்போது பிரதேச சபை, கிராம சபை (இப்போது இல்லை) போதுமென்ற நிலைக்கு சிங்களவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழர்கள் இவ்வளவு உயிரிழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள் எனவே சுயாட்சி , சமஷடி என்று கேட்க்கிறோம். சிங்களவர்கள் எத்தனை ஆயிரம் போர் வீர்கள், சிங்கள மக்களைப்பழி கொடுத்திருக்கிறோம். எனவே இதட்கு மேல் கொடுக்க முடியாது என்கிறார்கள். நமது அரசியல் வாதிகள் என்ன சொல்லுகிறார்கள்? இத்தனை தசாப்தங்களாக நமபிய நாம் இனியும் நம்புவோம்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அந்த கொலை காரன் சார்பாக யார் ஆஜர் ஆகியது என்று எழுதினால் நல்லது. நாமும் தெரிந்து கொள்ளலாம். எப்படியோ கொலை காரனுக்கு தண்டனை வழங்கினால் நீதிமன்றத்துக்கு ரிஸ்ர்ட் பதியுதீனின் ஆட்களால் கல்லெறி நிச்சயம்.
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
No Jews No News என்று சொல்லுவார்கள். இப்போது கிறிஸ்தவ மிஸ்சோனோரிகளின் ஆதிக்கம் என்று செய்தி வந்திருக்கிறது. அதாவது ஒரு பாடசாலைக்கு பெண் அதிபர் போடுபடடதட்கு கிறிஸ்தவ மிஸோநரிகள் இங்கு வந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் கல்வியில் முன்னேறுவதேட்கே இவர்கள்தான் காரணம். அது ஆண்கள் , பெண்கள் அல்லது கலப்பு பாடசாலையாக இருக்கலாம். இப்போது தஞ்சமடைந்திருப்பது அவர்களிடமா இல்லை வேறு எங்குமா? பெண் ஆளுநர், பெண் அரச அதிபர்கள், இன்னும் முக்கிய பதவிகளில் பெண்கள் வடக்கில் இருக்கும்போது பெண் அதிபர் மட்டும் வேண்டாமாம். நல்லா உருப்படுவார்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எதிர் கருத்தாளர்கள் என்று சொல்லக்கூடாது. உண்மையை எழுதுபவர்கள் என்று எழுத வேண்டும். அதாவது இன்னும் சொல்வதென்றால் யுத்த காலத்தில் அதட்குள் அகப்பட்டு, படிக்கும்காலத்திலேயே சிங்களவர்களின் தாக்குதலை சந்தித்து, இன்றும் அந்த (சிங்கள / தமிழ்) மக்களுடன் வாழ்ந்து கொண்டு உண்மையை எழுதும் எங்களை போன்றவர்களை எதிர் கருத்தாளர்கள் என்று சொல்ல வேண்டாம். பச்சை குத்துவார்களோ, சிவப்பு குத்துவார்களோ என்பதெல்லாம் பார்க்க கூடாது. ஒன்றை நான் இங்கு எழுத வேண்டும். இந்த கருத்து களத்துக்குள் வரும்போது நான் ஒரு தமிழன் என்ற உணர்வுடன் அதாவது தமிழ் இனவாதி என்று கூட சொல்லுமளவுக்குத்தான் இருந்தேன். ஆனால் இங்கு எழுத தொடங்கிய பின்னர் அப்படி எல்லாம் இல்லை இலங்கையன் என்ற நிலைக்கு மாறினேன். இன்னும் சொல்லப்போனால் தமிழர் சிங்களவர் எங்கு என்றாலும் சமாதானமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். சிங்கள தீவிரவாதிகள் சில தமிழர் விரோத செயல்பாட்டில் இருந்தாலும் அவற்றையும் சமாளித்து சமாதானமாக சீவிப்பதுதான் ஒரே வழி என்ற நிலைமை. எனவே இலங்கையின் அரசியல் நிலைமையை பொறுத்து இனிமேல் எல்லாமே மார்பொகின்றது. நிச்சயமாக ஒரு அதிகாரமுமற்ற மாகாண சபையும் இனிக்கிடைக்கும் என்ற எண்ணமில்லை. எனவே அந்த கனவி எல்லாம் இனி மறந்து விட்டு இனி எப்படி சீவிப்பது என்பதை தமிழ் அரசியல்வாதிகள் (??) தீர்மானிக்க வேண்டும்.
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!
வைகோவும், திருமாவும் DMK கூடடணியில் இருக்கிறார்கள். அப்போ ராமதாஸ் ஐயாவுடன் கூட்டணியா? இப்போதைய நிலைமையில் அரசியல் கூடதால் கழித்தலில் அப்படி இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே.
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
13 இல் ஒன்றுமில்லை என்று எமது அரசியல்வாதிகள் (?) கூறுகிறார்கள். இருந்தாலும் இந்தியாவாலும் அதனை நடை முறை படுத்த முடியவில்லை. இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் என்றுதான் இவர் கூறுகிறார். அதட்குமேல் இந்தியா ஒன்றும் சொல்லப்போவதில்லை. எனவே, எமக்கு எந்த நாடோ, தமிழ் அரசியல் கட்சிகளோ, போராளி குழுக்களோ பாலும் தேனும் ஓடும் தேசத்தை பெற்று தாரா விடடாலும் குறைந்த பச்ச தீர்வையும் என்றாலும் பெற்று தர போவதில்லை. சிங்கள அரசுடன் இணைக்க அரசியல் செய்து வாழ்க்கை ஓட்டுவதுதான் கடைசி தீர்வு.
-
சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்: டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம்
இதெல்லாம் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதட்காக செய்யப்படும் சூழ்ச்சிகள். இந்த தொகை எல்லாம் ட்ரம்பிட்கு ஒன்றுமே இல்லை.
-
காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்
இது அவர்கள் இருவருக்கும் எத்தனையாவது திருமணம் என்று தெரியுமா? கண்டதும் காதல் கொண்டதே கோலம் என்பதுதானே அவர்கள் சீவியம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அமிர்தலிங்கம், நீலன் ஆகியோருக்கும் சுமந்திரன் இட்கும் இடைபடட காலத்தில் நடந்தது இங்கு மறைக்க பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் துரோகிகள் மற்றவர்கள் எல்லாம் தமிழ் மக்களை உரிமையுடனும் அதிகாரத்துடனும் வாழ வைத்தவர்கள். இலங்கையில் தமிழ் மக்கள் கொஞ்சமாவது தப்பி பிழைத்து சீவிக்கிறார்கள் எண்டு அங்கு சந்தோசமாக சீவிக்கிற உங்களுக்கு எங்கே விளங்க போகுது.
-
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும்!
இவர் இலங்கையின் பிரதமர்தானே? இந்த அரசியல் வாதிகள் , பணக்காரர்களின் பெயர்களை இவரால் வெளியிட முடியுமா? முதலில் இவர் அதனை செய்தால் இவர் சொல்வதில் ஒரு அர்த்தம் உள்ளது. குறைந்தது அந்த கடன்களை மீள் வசூலிக்கவில்லை எனும்போது இப்படி பேசுவதால் மட்டும் ஒன்றும் நடக்க போவதில்லை.
-
இலங்கைக்குள் நுழையும் இந்திய வங்கிகளும் ரூபாக்களும்
லாபம் வெளியே போனாலும் இது ஒரு வின் - வின் situation . எனவே அதனை ஏற்று கொள்ளலாம் . இலங்கை டயஸ்போராக்களை இனி நம்புவதட்கு இலங்கை அரசு இனியும் தயாராக இல்லை. மாற்று வழிகளில் இறங்க வேண்டிய கடடயம். அப்படி அவர்கள் முதலீடு செய்தாலும் ஒரு பிரச்சினையும் இல்லை. தாராளமாக செய்யலாம்.
-
இமயமலைப் பிரகடனம்: கண்டியில் இரண்டாவது பயிலரங்கு
ஓம் ஓம் போய் வந்து பத்திரிகையில் என்ன செய்தி வந்திருக்குதென்று பார்த்து தகவல் தருகின்றேன்.
-
தலைமை உட்பட அனைத்துப் பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடத்த தயார் - சிறீதரன் அறிவிப்பு
ஸ்ரீதரன் அவர்கள் சொல்வதுபோல கட்சி யாப்பின்படி செய்வதுதான் நல்லது. இல்லாவிட்ட்தால் மீண்டும் பிரச்சினைதான். ஆனாலும் எப்போது என்பதுதான் பிரச்சினை. இப்பொது இது நீதி மன்றம் சென்று விட்ட்தால் அதிக காலமும், பண செலவும் உருவாகும். கட்சி பணம் செலவு செய்வதிலும் பிரச்சினை உருவாகும். உயர் நீதி மன்றம், மேன்முறையீட்டு நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்று போய் வர அதிக காலம் காத்திருக்க வேண்டும்.
-
இலங்கைக்குள் நுழையும் இந்திய வங்கிகளும் ரூபாக்களும்
இப்போது தேவை அந்நிய நேரடி முதலீடுகள். எனவே சீனாவோ, இந்தியாவோ பிரச்சினையில்லை. எல்லா வழிகளையும் இலங்கை திறந்து விடடே இருக்கிறது. இனி இலங்கை சிங்கப்பூர்தான்.
-
இமயமலைப் பிரகடனம்: கண்டியில் இரண்டாவது பயிலரங்கு
அடுத்த பயிலரங்கிட்கு நானும் போகலாம் என்றிருக்கிறேன். 😜
-
”பொறுப்பான அரசியல் கட்சியாக யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை”- சுமந்திரன்
ஒரு கட்சிக்கு யாப்பின்படி செய்ய முடியாவிடடாள் எதட்கு அந்த யாப்பு? நிலைமை எந்த நாளும் ஒரே மாதிரியாக இருக்குமென்று கூற முடியாது. யாப்பின்படி செயல்பட்டிருந்தால் பிரச்சினை ஒன்றுமேயில்லை. அப்படி இல்லாமல் இன்னொருவரை குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதில் பிரயோசனமில்லை. இவ்வளவு காலமும் சமாளித்தோம் இனியும் சமாளிப்போம் என்று கூறி கொண்டு செல்ல முடியாது. அப்படி என்றால் விட்டு கொடுப்புடன் செயல்பட வேண்டும். எல்லாம் எனக்குதான் என்றால் எப்படி சமாளிப்பது?
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
இத்தேட்கெல்லாம் செலவு அதிகமோதெரியவில்லை. அந்த நாள் தொடக்கம் நான் கண்டது இப்படித்தான். அரசும் அதட்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே அரசும் இதட்கு உத்தியோகபூர்வமற்ற ரீதியில் அனுமதி வழங்கி இருக்கிறது.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
ராமேஸ்வரம் மீனவர்கள் பகிஷ்கரிப்பதில் பிரச்சினை இல்லை. அவர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை, மீன்வளத்தை நாசமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை கடட்படை அதிதீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
இதெல்லாம் நாளாந்தம் கால காலமாக நடக்கும் காரியங்கள். அரசிடம் இதட்கு பதில் இல்லை. அரசுக்கு தெரியும் இதட்கு எதிராக போனால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று. விவசாயிகளும் இதட்கான மாற்று வழிகளை அரசிடம் கேட்டும் பலன் கிடைக்கவில்லை. எனவே அரசும் பாரா முகமாக இருக்கின்றது. இதெல்லாம் நிர்வாக பிரச்சினைகள்.