Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. நிறைய உடன் வீடியோக்கள் உள்ளன.. பார்க்காதவர்கள் இந்த சனலில் போய் பார்க்கவும்.. ரஷ்ய படையினர் நுழைந்த பைப்லைனின் நுழைந்த பகுதிக்கும் போய் வீடியோ போட்டுள்ளார்.. ரஷ்யாவினுள்ளிருந்து raw and real time videos ..
  2. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நெடுக்ஸ் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்...
  3. சின்னப்பிள்ளையளுக்குத்தான் மிட்டாய காட்டி ஏமாத்தலாமெண்டா.. இது ஒரு லோயருக்கு படிச்சபொண்ணு.. 🤣
  4. எம்பி அர்ச்சுனா தலைமையில் தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள்… ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா.உ.அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா,வம்பன் டொட்கொம் போன்ற பக்கங்கள், ஈழப் பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் வகையில் செயல்படுகின்றன… வட கிழக்கில் வாழும் பெண்கள் எப்படிச் செயல்பட வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்றெல்லாம் இந்த இணைய பக்கங்களை நடத்தும் காவாலிகள் தீர்மானிக்கிறார்கள்... இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது... இது தலிபான்கள் செயல்களைப் போல் ஆபத்தானதாக மாறி வருகிறது…. எல்லாவற்றிலும் காலம்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டதைப்போல எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுகிறார்கள்... அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது... தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள், டாக்டர் அர்ச்சுனா, வன்னி ஊழல் தடுப்பு அணி, அதை இயக்கும் அர்ச்சுனா அடிப்பொடி லண்டன் தமிழ் அடியான் குழுவினர் ஈழப் பெண்களை இலக்குவைத்து பிளக்மெயில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.... பொட்டம்மான் போன்ற மிகச்சிறந்த புலநாய்வுப் போராளிகள் வாழ்ந்து மடிந்த மண்ணில் அடுத்தவன் வீட்டு கழிவறையையும் படுக்கை அறையையும் எட்டிப்பார்க்கும் இந்தப் பரதேசிகள்தான் புலனாய்வுப் புண்ணாக்குகளாம்.. ஈழப் பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்.. ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா, வம்பன் டொட்கொம், போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது….
  5. அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்… இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.. சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்.. “சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்.. சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிணைந்து இருக்கும் போதிலும், அவை எந்த தடையுமின்றி (without friction) நகர முடியும்... சூப்பர்சொலிட் தன்மை 1969 ஆம் ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது... ஆனால், இதை ஆய்வகத்தில் உருவாக்கி, கண்கூடாக காண்பது கடினமானது... இதை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சியில்தான் இத்தாலிய விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர்… அதுவும் ஒளியை.. சாதாரணமாக, சூப்பர்சொலிட் நிலை, குறைந்த வெப்பநிலையிலான அணுக்கள் (ultracold atomic gases) மூலம் உருவாக்கப்பட்டன… ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் இதை ஒளி (light) மூலம் உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு ஆகும்... சரி இப்போ இவர்கள் எப்படி ஆய்வுகூட மட்டத்தில் இதைச் சாதித்தார்கள், அதுவும் தன்னைவிட இந்த பிரபஞ்சத்தின் உள்ளே யாரும் வேகமாக போகமுடியாது என்று அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஒளியை என்பதைப் பார்ப்போம்… சூப்பர்சொலிட் உருவாக்கத்தில் பயன்படுத்திய உயர் துல்லிய படமெடுப்புக் கருவி(high resolution imaging system) சூப்பர்சொலிட் தன்மை கொண்ட ஒளியின் ஒழுங்கமைப்பு… விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்யும் தருணம்… விஞ்ஞானிகள் ஒளியை ஒரு சிறப்பான செமிகண்டக்டர் (semiconductor) கட்டமைப்பில் சிறப்பாக கட்டுப்படுத்தினர்… ஒளியின் துகள்கள் (photons) ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் (interact) விதமாக அமைக்கப்பட்டது… இதன் விளைவாக, ஒளி திண்மமாகவும் (solid-like) திரவமாகவும் (fluid-like) நடந்துகொள்ளும் நிலை உருவானது... இவ்வாறு ஒளி “சூப்பர்சொலிட்” ஆக மாறியது... இதை முதன்முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள், இது எதிர்காலத்தில் குவாண்டம் இயற்பியலுக்கு (quantum physics) புதிய வாசல்கள் திறக்கும் என நம்புகின்றனர்... இந்த கண்டுபிடிப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள்..👇 1. குவாண்டம் கணிப்பொறிகள் (Quantum Computing): சூப்பர்சொலிட் ஒளி (supersolid light) புதிய வகை குவாண்டம் பிட்டுகள் (qubits) உருவாக்க உதவும்… இது மிகுந்த செயல்திறன் கொண்ட குவாண்டம் கணிப்பொறிகளை உருவாக்க வழிவகுக்கும்... 2. அளவீட்டு கருவிகள் (Precision Measurement): சூப்பர்சொலிட் ஒளியின் தன்மை, மிகுந்த துல்லியத்துடன் (high precision) அளவீடுகளை மேற்கொள்ள உதவும்…இது அடிப்படை இயற்பியல் மாறிலிகளை (physical constants) கண்டறியவும், gravitational waves களை கண்டறியவும் உதவும்... 3. புதிய பொருட்கள் (Advanced Materials): ஒளியை சூப்பர்சொலிட் நிலை வரை கட்டுப்படுத்தும் திறன், புதிய வகை பொருட்கள் (materials) உருவாக்க உதவும்… இது புதிய மெக்கானிக்கல் (mechanical) மற்றும் ஒளி (optical) பண்புகளைக் கொண்ட பொருட்களை உருவாக்க வழிவகுக்கும்... இந்த கண்டுபிடிப்பின் எதிர்கால தாக்கம்.. இது குவாண்டம் கணிப்பொறிகள், தகவல் தொடர்பு, மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் (medical technology) புதிய புரட்சிகளை ஏற்படுத்தும்… புதிய அளவீட்டு கருவிகள் மற்றும் அதிக செயல்திறனுள்ள தகவல் தொடர்பு முறைகளை உருவாக்கும்… விஞ்ஞான உலகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது… ஆக மொத்தத்தில் அறிவியல் உலகில் ஒளியின் புதிய வடிவம் – இது ஒரு புதிய அதிசயம்..! இத்தாலிய விஞ்ஞானிகள் சாதித்துள்ள இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இது ஒளி பற்றிய மனிதரின் புரிதலை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை…! -பாலபத்திரஓணாண்டி
  6. பெண்களின் மானத்தைக் காயப்படுத்தும் அவதூறுகள்: சமூக ஊடகங்களில் ஏற்படும் ஆபத்துகள்… சமூக ஊடகங்கள் இன்று தகவல் பரிமாற்றத்திற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குகின்றன... ஆனால், சிலர் இதை தவறாக பயன்படுத்தி, தனிநபர்களின் உரிமைகளை மீறுவதும் அவதூறு செய்யவும் செயல்படுகின்றனர்... கடந்த 2010-களில் நியூஜஃப்னா என்ற இணைய தளம், பொய்யான தகவல்களையும், ஆபாசமான கட்டுரைகளையும் வெளியிட்டு, பலரின் தனிப்பட்ட வாழ்க்கையை சீரழித்தது... இதில், பலரின் புகைப்படங்களை தவறாக இணைத்து, அவதூறுகளை பரப்பி, அந்த நபர்களின் குடும்பங்களையும் சமூக வாழ்வையும் பாதித்தனர்... அந்தச் செயல்கள் தற்போது மறுபடியும் தோன்றத் தொடங்கியுள்ளன... ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்ற முகநூல் பக்கம், பெண்களின் நிர்வாண படங்களையும் அவதூறுகளையும் வெளியிட்டு, பெண்களின் மானத்தையும் தனியுரிமையையும் உடைத்து வருகின்றது…. இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்தாகும். சமூக ஊடகங்களில் இவ்வாறான செயல்களை தவிர்க்கும் வகையில், பொறுப்பற்ற சமூக விரோத செயல்களை தடுக்க அரசு மற்றும் பொது அமைப்புகள் களமிறங்க வேண்டும்... இந்த அவதூறுகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியக் காரணம், சமூகத்தில் பொறுப்பில்லாத சில நபர்களின் செயல்களே... பொய்யான தகவல்களை பகிர்வது, அவற்றுக்கு விருப்பு செய்து பகிர்வது போன்ற செயல்கள், தவறான தகவல்களை விரைவாக பரப்பக் கூடும்... இதனால் பலர் ஆபத்துக்குள்ளாகின்றனர்... நியூஜஃப்னா போலவே, ஊழல் எதிர்ப்பு அணி வன்னி பக்கமும் சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்...எனக்கு தெரிந்து, நியூஜஃப்னாவை விட இந்த பக்கம் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் சீரழிவு மிகப்பெரியதாக இருக்கும்… பெண்களின் பாதுகாப்பு, தனியுரிமை, சமூக நெறிமுறைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்றே எடுக்கப்பட வேண்டும்... சமூகத்தில் பொறுப்பற்ற நபர்கள் பரப்பும் தவறான தகவல்களை தடுக்க, சமூகவிருப்பங்களைப் பகிரும் முன் உண்மையைக் கண்டறியும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்... பெண்களின் பாதுகாப்பிற்கும், தனிமனித உரிமைக்குமான ஆதரவை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது… இந்த முகநூல் பக்கத்தை யாழ் சைக்கோ எம்பி அர்ச்சுனாவும் தமிழடியான் எனும் யூரியுப்காறரின் தலைமையில் சைக்கோ அர்ச்சுனாவின் சில அடிப்பொடிகளும் நடத்துவதாக நம்பத்தகுந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைக்கிறது.. குறிப்பிட்ட நபர்களும் அதை அந்த பக்கத்தில் மறைமுக உறுதிப்படுத்தி உள்ளனர்.. ஆயினும்.. நியூஜஃப்னாவில் இருந்து இந்த ஊழல் எதிர்ப்பு வன்னி அணி பக்கம் வரை யார் மூலகாரணம் அர்ச்சுனாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ அல்லது அவர்போன்ற சைக்கோக்களோ அல்ல... அர்ச்சுனாவில் பழியை போட்டுவிட்டு எல்லா நேரமும் தப்ப முடியாது:.. அர்ச்சுனாவோ, கிருஷ்ணாவோ, ஊழல் எதிர்ப்பு அணியோ.... எங்கட சனம் எண்ட மூடர்கூடத்தின் ஆதரவு இல்லாமல் ஒருத்தரும் இங்க எதுவும் நகர்த்தமுடியாது... உண்மையான Culprits எந்த சமூக பொறுப்புமற்ற மக்கள்தான்… இவற்றை முளையிலேயே கிள்ள யாழ் இணையம் போன்ற சமூக பொறுப்புள்ள அனைத்து ஊடகங்களும் உறுப்பினர்களும் வாசகர்களும் எதிர்வினை ஆற்றவேண்டும்.. —-—-
  7. யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்… பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை… அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது… சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்… இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்… இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்... இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது... இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.. இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்.. —-—
  8. எனக்கு இவர்கள் எல்லோரையும் விட s.a rajkumar பாடல்கள் வெறியன் நான்..
  9. கவி அருணாச்சலம் அண்ணாவின் இக்கதை, மாறிவரும் சமுதாய அமைப்புகளையும், கலாச்சார வேறுபாடுகளையும் உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கிறது... காஞ்சனாவின் கதையில், பாரம்பரியத்திற்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் இடையே உருவாகும் மோதல் மிகவும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது... யேர்மனியில் பிறந்து வளர்ந்த காஞ்சனாவுக்கு, பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணம் என்பது எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது என்பதைக் கதையாளர் மிக நுட்பமாகக் காட்டியுள்ளார்... திருமணத்திற்கு பிறகு காஞ்சனா சந்திக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கலாச்சார மோதல்கள், அவளது மனநிலை – இவையனைத்தும் நம்மை யதார்த்த உணர்விற்கு கொண்டுசெல்கிறது... காஞ்சனா தனது வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடிவெடுப்பது, பெண்களின் வாழ்க்கையில் ஒரு புதிய திசையை குறிக்கிறது... வாழ்க்கை முழுவதும் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழ்வதை விட, தன்னம்பிக்கையுடன் முடிவெடுத்து, சுயநிறைவை அடைவது என்பது இக்கதையின் முக்கியப் பொருள்... இது, இன்றைய காலத்திற்கேற்ப பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டுப்படுத்தும் நிலையை பிரதிபலிக்கிறது... அமைதியற்ற வாழ்க்கை மத்தியில், வீட்டுக் கட்டிலில் அமைதியான தூக்கம் கிடைப்பது என்பது, நிம்மதியும் விடுதலையும் குறிக்கும் அழகிய முடிவாகவே பார்க்கப்படுகிறது... காஞ்சனாவின் முடிவு, பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்தும் காலத்தின் பிரதிபலிப்பாக திகழ்கிறது… முடிவாகச் சொல்லப்போனால், “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே” என்பது காஞ்சனாவின் மனநிலையை மட்டும் அல்ல, பெண்கள் தங்களின் வாழ்க்கையில் அமைதி பெறும் தருணத்தைக் குறிக்கும் சிறப்பான உவமையாகும்…
  10. இதில் கொஞ்ச அன்பை இவர்கள் கிருஸ்ணாமூலம் உதவிசெய்த அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்கு நேரபோய் காட்டி இருக்கலாம்.. இவர்கள் கண்ணீர்விடுமளவுக்கு ஒன்றும் இல்லை.. இவர் ஒரு இடை இணைப்பாளர் அவ்வளவே.. ****
  11. ரசோதரன், உங்கள் கதை நடை மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கிறது... கோவிலின் வரலாறு, அதில் நிகழ்ந்த மாற்றங்கள், அதனால் ஏற்பட்ட மனிதர்களின் நிலைமைகள் ஆகியவை மிகவும் நுட்பமாக விரித்துரைக்கப்பட்டுள்ளன... “கணவனே கண் கண்ட தெய்வம்” என்பதைக் கொஞ்சம் வேடிக்கையாக எழுதியிருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள சமூக மாற்றங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகள் ஆழமானவை... அதுவும், வட இந்தியர்களின் பூர்வீக சம்பிரதாயங்கள் தென்னிந்திய சமூகவுடன் எப்படி கலந்துவிட்டன, அந்த கலவையின் தாக்கங்கள், பூசகர் மரபு, அதில் உள்ள ஆண்கள்-பெண்கள் இடையிலான வேறுபாடுகள் போன்றவை நம் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை கண்கூடாக காட்டுகின்றன... இவை அனைத்தும் வாசகனை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது... “பண்பாட்டில் மாற்றம் ஏற்படும் போது, சமுதாயத்தில் ஏற்படும் ஆதிக்கங்களும் சமநிலையின்மை உள்ள உரையாடல்களும் தழுவிக்கொள்ளும்” என்பது உங்கள் எழுத்தின் தீம் என்று தோன்றுகிறது... இது விரிவாக எழுதப்பட வேண்டிய தலைப்பு... //“எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமானஉணர்வைக் கொடுக்கின்றது போல.”// என் இனம் அண்ணை நீங்கள்.. பிளைட்டில்,றெயினில் கூட பின் வரிசையைத்தான் தெரிவு செய்வேன்.. முன் வரிசையில் இருந்தால் எல்லோரும் என்னைப்பார்ப்பது போலவே நெளிவேன்… பின் இருக்கையில் இருக்கும்போது அவ்வளவு கன்பிடன்ஸ் உம் சுதந்திரமும் வரும்.. சிலவேளை நான் தன்னம்பிக்கை இல்லாதவன் அதனால்தான் இப்படியோ என்று என்மேல் நானே கோபப்பட்டதுண்டு.. தொடர்ந்து எழுதுங்கள், வாசகர்கள் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்..!
  12. விசுகு அண்ணையின் எழுத்து நடை ஆழமான உணர்வுகளைக் கிளறுகிறது... ஓர் இசை நிகழ்வைப் போலவே தொடங்கிய காதல், காலத்தின் கொடூர இழப்புகளால் தொலைந்து போனது போல இருந்தாலும், அந்த பசுமையான நினைவுகள் மறையாமல் இருந்து, மீண்டும் அவள் வந்து கைகளை பிடித்த தருணம் ஒரு மறுபிறவி போல தோன்றுகிறது…. விசுகு அண்ணா, உங்கள் எழுத்துக்கள் வாசகர்களின் உள்ளத்தை ஆழமாக தொடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன... காதல், பிரிவு, மீளும் சந்திப்பு — இவை அனைத்தும் ஒருவகை கவியழகு... உங்கள் எழுத்தின் உண்மைத் தொனி, அனுபவங்களின் நெஞ்சை உலுக்கும் விளக்கம், வாசகர்களின் உள்ளத்தில் நீங்கா முத்திரை பதிக்கிறது… “அவளை தொடுவானேன்…?” எனும் கேள்விக்கான விடை உங்கள் அடுத்த கட்டத்தில் இருப்பது உறுதி... காலம் நம்மை எங்கேயோ இழுத்துச் செல்லலாம், ஆனால் சில உறவுகள், சில நினைவுகள் ஒரு புதிய சந்திப்பை உருவாக்கிக்கொள்ளும்:.. இதைப்போல ஒரு கதை எனக்குள்ளும் புதைந்து போய்க்கிடக்கிறது.. பரணில் கிடக்கும் அந்த பழைய நாட்குறிப்பின் தூசி படிந்த பக்கங்கள் கண்களில் மங்கலாக தெரிகின்றன.. கண்ணில் இருந்து கசியும் ஈரத்தில் அந்த நாட்குறிப்பேடு கசங்கிப்போகாமல் இருக்க பத்திரமாக மூடி வைக்கிறேன் நீண்ட பெருமூச்சுடன்.. தொடருங்கள் விசுகு அண்ணா! – உங்கள் எழுத்துகள் இன்னும் பலரின் உள்ளங்களை வருடட்டும்... (எம் எதிர்பார்ப்பை கைவிடாமல், அடுத்த தொடரை விரைவாக வழங்குங்கள்..!)
  13. கோசான், நீங்கள் எழுதியது உண்மையிலேயே கூர்மையான பார்வை... தமிழ் கலாச்சாரம் அதன் சொந்த அடையாளங்களை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த போதிலும், சமூக ஊடகங்கள் அதில் புதிய அலைகளை உருவாக்கிவிட்டன என்பதில் எனக்கும் உடன்பாடு... “தூத்துக்குடி கொத்தனார்” போன்ற பாடல்கள், மரியாதை குறைவான வார்த்தைகளை (அதுவும் எளிதில்) ஏற்றுக்கொள்ளும் சமூக நிலைமைக்கு அறிகுறி…. ஆங்கிலப் பாடல்களில் கெட்ட வார்த்தைகளை ஓரளவு ஏற்றுக்கொள்வது சரிதான்; ஆனால் தமிழ் மொழியில் இத்தகைய புதுமை (அல்லது புது வழக்கு) ஏற்படுவதே குறிப்பிடத்தக்க மாற்றம்... இன்ஸ்டா, யூடியூப் போன்ற தளங்கள் இந்த மாற்றத்தை வேகமாக தள்ளிச் செலுத்துகிறது... குட்டி மியா போன்று கெட்டவார்த்தைகளை பேசி இளம் தலைமுறையின் “விரும்பும்” கலைஞர்கள்??(இவர்கள் கலைஞர்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை), சமூக ஊடக ஆற்றலால் பெரும் செல்வாக்கைப் பெறுகிறார்கள்... இது ஒரு வகையில் கலாச்சார மாற்றமா, அல்லது தமிழ் மொழியின் மிதநிலை தன்மைக்கு அடித்துக் கொள்ளுதலா என்பதை யோசிக்கவேண்டும்... கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சி பகுதியை சேர்ந்த ஈழத்து குட்டிம்மா என புகழ்சூட்டக்கூடிய சாளினி என்கிற பெண்மணி பற்றி மிகப்பெரிய சர்ச்சை ஓடி இன்று அவர் இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார்.. Reference 🤣🤣( 1)https://www.facebook.com/share/v/1Bf3xijrPP/?mibextid=wwXIfr 2) https://youtube.com/@salini24?si=rY39fND-RaoCysKY) அப்புறம் அதே தளத்தில் சங்கவி என்கிற யூரியூப்பில் செய்தி சனல் நடத்துகிற பெண்பற்றியும் எழுதுகிறார்கள்.. எனினும் எனக்கு இந்த இரண்டாவது பெண்ணை பற்றி எழுதப்படுவதில் உடன்பாடு இல்லை என்பதுடன் இதை எழுதிய அதே தளம் பல நல்லவைகள் செய்தாலும் இந்தப்பெண் பற்றி எழுதியதற்கு(சாளினியை பற்றி அல்ல சங்கவி பற்றி எழுதியதற்கு) உரிய தண்டனை பெறவேண்டும்.. ஏனெனில் இந்த இரண்டாவது பெண் பொதுவெளியில் அப்படி எதுவும் பேசவோ எழுதவோ வீடியோ போடவோ இல்லை.. அவர்கள் சொல்வதுபோல் அந்த பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தால்கூட பொதுவெளியில் இந்த உறவுகளில் சம்பந்தப்பட்ட யாரும் பேசாதவரை அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை என்று நினைக்கிறேன்.. நாம் எதை இழக்கிறோம், எதை பெறுகிறோம் என்பதை புரிந்து கொள்ளும் தருணத்தில் இருக்கிறோம்... இன்ஸ்டா பாடல்கள், “பீப்” கலாச்சாரம் — இவை அனைத்தும் தமிழின் இயல்பான நெறிகளை மாற்றக்கூடிய ஆற்றலுடன் இருக்கின்றன... இது ஒரு வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை வரலாறு தான் தீர்மானிக்க வேண்டும்... - பாலபத்திர ஓணாண்டி
  14. சர்வதேச சட்ட வல்லுநர்களை மாநில அரசு நியமிக்க முடியாது என்பது தவறானது.. # மாநில அரசு சட்ட ஆலோசனை (Legal Advice) வழங்க, சட்ட வல்லுநர்களை நியமிக்க முடியும். இதற்கு உதாரணம்: 2012-ல் இத்தாலி கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு சட்ட ஆலோசனை வழங்கியது… #சட்ட ஆலோசனை வழங்குவதில் மாநில அரசு பொதுமுறை மற்றும் பொது நிதியை பயன்படுத்தலாம் – இது மாநில அரசின் அதிகார வரம்பில் வருகிறது… மீனவர்கள் பிடிபட்டபின் ஹைகொமிஷன் மட்டுமே சட்ட உதவி வழங்கும் என்பது தவறானது.. சர்வதேச சட்டம் மற்றும் வெளிநாட்டு தூதரகம் வழியாக நீதிமன்ற நடவடிக்கை மத்திய அரசின் பொறுப்பாக இருந்தாலும், மாநில அரசு தனியாக: #அரசு நியமன வழக்கறிஞர்களை வழங்க முடியும்… #உடனடி நிவாரணத் தொகை மற்றும் குடும்ப நலனுக்கான உதவி வழங்க முடியும்… #தமிழக அரசு இதனைப் பலமுறை செய்துள்ளது – உதாரணம்: 2017-ல் இலங்கை கடற்படையால் பிரான்சிஸ் ஜெயராஜ் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு உடனடி நிவாரணம் வழங்கியது… தமிழக அரசு பிடிபட்ட மீனவர்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமித்து, சட்ட உதவிகளை வழங்கியது… மீனவர்கள் Tamil Nadu மண்ணில் இருக்கும்போது மட்டும் மாநில அரசின் பொறுப்பு என்பது சட்டரீதியாக தவறானது… #மாநில அரசு வெளிநாட்டில் பாதிக்கப்படும் மாநில குடிமக்களுக்கு ஆதரவு அளிக்க உரிமை பெற்றுள்ளது… உதாரணம்: உடனடி நிவாரணம் வழங்குதல், வழக்கறிஞர் நியமனம், சட்ட ஆலோசனை வழங்குதல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பில் வருகின்றன.. இந்திய அரசியலமைப்பின் 7-ம் அட்டவணை (Seventh Schedule) அடிப்படையில், “Law and Order” என்பது மாநில அரசின் பொறுப்பாக உள்ளது...மாநில அரசு மீனவர்களுக்கு: உடனடி நிவாரணம் ,சட்ட ஆலோசனை ,மத்திய அரசை வற்புறுத்துதல், அரசு வழக்கறிஞர்களை நியமித்தல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பு மற்றும் அரசியல் கடமையாக கருதப்படுகிறது… சர்வதேச சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் பொறுப்பாக இருந்தாலும், சட்ட ஆலோசனை, நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்குவது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது… அதனால் கோசான் எழுதிய அனைத்துப் பதில்களும் பொதுத்தகவல் பற்றாக்குறை மற்றும் சட்டப்பூர்வமான தவறான புரிதல் என்பதைக் காட்டுகிறது…
  15. வரலாறு எப்பவும் ஒரே மாதிரி இருந்ததில்லை.. நேற்று சரியாக இருந்தவை இன்று தவறாகிப்போய் இருக்கின்றன.. இன்று சரியாக இருப்பவை நாளை தவறானவை ஆகலாம்.. ஒரு நூற்றாண்டுக்கு முன் பெண்கள் படிக்ககூடாது அடுப்படிக்கே என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்று அது சரி என்று இருந்தது.. ஆனால் அன்றும் அவற்றை எதிர்த்து பலகலகக்குரல்கள் எழுந்திருக்கும்.. அன்றும் உங்களைப்போல் பலர் அதை எதிர்த்து எழுதி இருப்பார்கள்.. இன்று சரியாக இருப்பவை என்று கருதப்படுபவற்றில் ஒன்றுடன் எனக்கு முரண்பாடு.. என்னைப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த ஆண்களுக்கு எதிராக நிகழும் கட்டமைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக பேசுவார்கள்..
  16. நான் “#உதாரணமாக, தமிழக அரசு சட்ட ஆலோசகர்களை நியமித்து (சட்டமன்ற அனுமதியுடன்), மீனவர்களுக்கு சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர உதவ முடியும்” என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.. சர்வதேச சட்ட மன்றங்களில் (International Courts) தமிழகம் முதன்மையாக நேரடியாக வழக்கு தொடர முடியாது... ஆனால் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தி, சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடரச்செய்யும் அதிகாரத்தை பெற்றிருக்கிறது... இதற்கான ஆதாரங்கள்: 1. UNCLOS (United Nations Convention on the Law of the Sea): # 1982 ஆம் ஆண்டு உருவான கடல் சட்டங்களுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் (UNCLOS) இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது… # இந்தியாவின் கடல்சார் எல்லைகள் (territorial waters) மற்றும் கடற்பகுதியில் (Exclusive Economic Zone - EEZ) மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் தொடர்பாக, UNCLOS விதிமுறைகளை மீறினால், அந்த விவகாரங்களை International Tribunal for the Law of the Sea (ITLOS)-ல் எடுத்துச் செல்லலாம்… 2. சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice - ICJ): # இங்கே வழக்கு தொடர மத்திய அரசு மட்டுமே அதிகாரம் பெற்றுள்ளது என்றாலும், மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தி, வழக்கு தொடருமாறு வலியுறுத்தலாம்… # 2014-ல் இத்தாலி கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் ICJ-ல் விசாரணை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டலாம்… 3. மாநில அரசின் செயல்பாடு – சட்ட ஆலோசனையின் வகை: # மத்திய அரசு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தொடரும்வரை, மாநில அரசு தனிப்பட்ட முறையில் சட்ட ஆலோசனை (Legal Counseling) வழங்கலாம்... # கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க சர்வதேச சட்ட நிபுணர்களை (International Legal Experts) மாநில அரசு நியமிக்கலாம் – இது மாநில அரசின் பொறுப்பில் வருகிறது... # இதற்கு உதாரணமாக, 2012-ல் இத்தாலி கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு சட்ட ஆலோசனை வழங்கியது மட்டுமல்ல, மத்திய அரசை வழக்கு தொடர வற்புறுத்தி செய்யவைத்தது என்பதும் வரலாற்று உண்மை… பொதுவாக: # சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர மத்திய அரசு மட்டுமே அதிகாரம் பெற்றுள்ளது என்பது உண்மைதான்… # ஆனால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி வழக்கை தொடரச் செய்யலாம்… # மேலும், மாநில அரசு தனியாக சட்ட ஆலோசனை, மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் சர்வதேச சட்ட நிபுணர்களை நியமித்து ஆதரவு தருவது மாநில அரசின் பொறுப்பு என்பதில் எந்த மாற்றமுமில்லை… “சட்ட வழிமுறைகள் மத்திய அரசின் பொறுப்பு; ஆனால், சட்ட உதவி மற்றும் மீனவர்களின் நலன் மாநில அரசின் பொறுப்பு...”
  17. இந்த திரிக்கு பொருந்துமென்பதால்.. ஒரு அறிக்கை அல்லது போராட்டம் என்ன செய்துவிடும்....? நான வெளிநாட்டுக்கு விமானம் ஏறியபோது எங்க அம்மாவின் அஞ்சி பவுன் தாலி அடகில் இருந்தது. அந்த தாலியை மூன்று மாதத்தில் மீட்டெடுத்து அம்மாவிற்கு மூன்றரை பவுனுக்கு ஒரு நகையும் வாங்கி கொடுத்திருந்தேன். அதன் பிறகு எங்கள் வளர்ச்சி என்பது நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வளர்ச்சி ஆனால் அத்தனை வளர்ச்சியிலும் வங்கி நகைக்கடன் அடகு மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது....... எனது சிறு பிராயத்தில் அம்மாவின் நகையை மாமா அவரது தொழிலுக்காக அடகு வைக்க வாங்கிப்போவதை பார்த்திருக்கிறேன். நான் வளர்ந்தபோது எனது வீட்டு வேலைக்கு தாய்மாமா மனைவியிடம் நானே போய் நகை இருந்தா தாருங்க மாமினு கேட்டு வாங்கி வருவேன். இன்று எனது தம்பிக்கு தேவையென்றால் அவன் என மனைவியிடம் நகை வாங்கிட்டு போவான்...... அம்மா அந்த காலத்தில் இருபத்தைந்து பவுனோடு வந்ததாக சொல்லுவார்கள் அவரிடம் ஒரு அட்டியல் நெக்லஸ் இருந்தது அம்மா அதை மாமன்களின் திருமணத்தின்போது மட்டுமே அணிந்து பார்த்திருக்கிறேன் மற்ற நேரத்தில் அது வேப்பமூடு ஐஓபியில் இருக்கும் அல்லது கண்டன்விளை அலங்காரில் இருக்கும். விவசாயத்திற்கு அப்பா வெளிநாட்டு பயணம் பாட்டிக்கு மருந்துனு நகை மறிச்சி மறிச்சி வைப்பார்கள்....... நான் இதற்கு முன்பாக வேலை செய்த தேசத்தில் வேலை இழந்த காலம் முதல் கொரனா வரை எனது கைசெயினும் கழுத்து செயினும் அடகுகடையில் தான் இருந்தது. வட்டி கட்டி வட்டி கட்டி திருப்பி திருப்பி வைப்போம்.இன்றும் எனது நகைகளில் சிலவற்று நான் அடகு வைத்திருக்கிறேன். அவசர காலங்களுக்கு நகை அடகே நமக்கு துணை என்பது போய் நமது குடும்பத்தினரின் முதலீடுகளுக்கு நகை அடகு வைக்கும் நிலைக்கு வந்ததையே நான் எனது வளர்ச்சியாக கணெக்கெடுக்கிறேன்......... இந்த வங்கி கடன் மட்டும் இல்லையென்றால் நான் உட்பட்ட. பெரும்பானமையான எளிய மக்கள் வட்டி கடனில் வாழ்க்கையை தொலைத்திருப்பார்கள்............... விவசாய நகைக்கடன் என்ற பெயரில் ஒரு வருடத்தில் திருப்பினால் குறைந்த வட்டியும் சில மாதங்களில் திருப்பினால் கூடுதல் வட்டியும் என்று இருந்ததை மாற்றி விவசாய நகைக்கடனுக்கும் வட்டியை ஏத்தி விட்டார்கள். வருடம் முடியும்போது சில ஆயிரங்களை புரட்டி நகைக்கான வட்டியை மட்டும் கட்டி அடுத்த ஒரு வருடத்திற்கான அவகாசத்தை நீட்டி மக்கள் தப்பினார்கள். தினமும் தங்க நகையின் மதிப்பு கூடுவதால் இந்த வட்டி கட்டும் பணத்தயும் மறு அடகில் பெற்று பணச்சுமையில்லாமல் தற்காலிகமா தப்பி விடுவார்கள்........ இப்படி போய்கொண்டிருந்த நகை அடகில் முழுப்பணத்தயும் கட்டி திருப்பி வைக்க வேண்டும் என்ற சூழல் வர அதயும் கைமாத்தாக பணம் வாங்கி ஒரே நாளில் மறு அடகு வைத்து சமாளித்து வந்ததிற்கு ஆப்பு வந்து விட்டது. முழுப்பணத்தயும் கட்டி நகையை எடுத்து அதே நாளில் அடகு வைக்கமுடியாத சூழல் வந்திருக்கிறது........... இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று பலருக்கு தோன்றலாம் ஆனால் நகை கடனை திருப்பி மறு அடகு வைக்கு அவசரத்திற்கு அடகு வைத்த நகை ஏலத்தில் போகாமல் இருக்க பணம் புரட்ட மக்கள் படும் பாட்டை பார்த்தவர்களுக்கோ உணர்ந்தவர்களுக்கோத்தான் அந்த வலி தெரியும்...... அண்ணன் சீமானிடமிருந்து இதற்கான குரல் ஒலித்திருக்கிறது அவரிடம் யார் இந்த அறிக்கை விட அலோசனை சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்........ நன்றிகள் அண்ணே.... ஒரு அறிக்கை என்ன செய்துவிடும்....? முதல் குரல் பல குரல்களை உருவாக்கும். சமீபகாலங்களில் அவர் அப்படியான சூழலைத்தான் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறார்.... நன்றி- முகநூல்
  18. தமிழக அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நாளுக்கு ₹250 வழங்கி வந்தது, அதை ₹300 ஆக உயர்த்தியிருப்பது சரியான தகவலாக இருக்கலாம்... ஆனால் இதை மட்டும் போதுமானதாகக் கருத முடியாது… கைது செய்யப்படுவதால் மீனவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது… இதை சமாளிக்க தற்காலிக உதவியுடன் (உதவித்தொகை) நீண்ட கால நிவாரண திட்டங்கள் (மீனவர் பாதுகாப்பு நிதி, வேலை வாய்ப்பின் மாறுபாடு, மீனவர்களுக்கு புதிய பயிற்சி, ஜீவனோபாய திட்டங்கள்) அரசால் செய்யப்படவேண்டும்... வழக்கறிஞர் உதவி – மாநில அரசு செய்யக்கூடியது: நீங்கள் “diplomatic services வழங்குவது மத்திய அரசு பொறுப்பு” என்று கூறியுள்ளீர்கள். இது சரியானதும், தவறானதும் கூட… சரியானது – கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நாட்டின் மத்திய அரசு மட்டுமே சட்டபூர்வமாக தலையிட முடியும்… தவறானது – உலக அளவில் உள்ள சட்ட உதவிகளை (legal assistance) வழங்குவதில் மாநில அரசுக்கும் பங்கு இருக்கிறது… #உதாரணமாக, தமிழக அரசு சட்ட ஆலோசகர்களை நியமித்து (சட்டமன்ற அனுமதியுடன்), மீனவர்களுக்கு சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர உதவ முடியும். .. #இந்தியாவில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு சட்ட ஆலோசனை, தற்காலிக நிவாரண உதவிகளை வழங்குவது மாநில அரசின் பொறுப்பு… உதவி வழங்குவது மட்டுமல்ல, மீண்டும் இது நடக்காதவாறு பாதுகாப்பு: தமிழக அரசு மீனவர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சர்வதேச ஒப்பந்தங்களை (International Treaties) பேசி, கடல் எல்லை பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வலியுறுத்த வேண்டும்… இது தவிர, மீனவர்கள் பாதுகாப்புக்காக கடலோர காவல் படை (Coast Guard) மற்றும் மீன்பிடி துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்… ஆகவே, நிதியுதவி மற்றும் வழக்கறிஞர் உதவி வழங்குவது மட்டுமல்ல, நீண்ட கால தீர்வுக்காக மத்திய அரசின் நடவடிக்கைகளை வலியுறுத்துவது, மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்வரை தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது மாநில அரசின் பொறுப்பு… “உதவி என்பது தற்காலிகம்; பாதுகாப்பு என்பது நிரந்தரம்.”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.