Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. கீழடியில் திமுகா செய்தது ஊருக்கே தெரியும் நிற்க திமுக அமைசார்கள் தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய வட்டார வழக்குகள் தெரியுமா உங்களுக்கு..? நேரு கை ஓங்கி அடிக்கேக்க சொன்ன பொன்மொழி தெரியுமா.. பொன்முடியின் பொன்மொழி தெரியுமா..? தீப்பொறி ஆறுமுகத்தின் அற்புதமான உரையாடல்கள் தெரியுமா..? கருணாநிதி ஜெயலலிதாவை வச்சு சோனியகாந்தி பீர்ய்ட்ஸ் ஜ வைத்து தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய இரட்டை அர்த்த (இரட்டை கிழவிகள்,,?) தெரியுமா…தெரியுமா.. தெரியுமா.. ஒன்றா ரெண்டா.. ஆயிரம் ஆசைகள்..😂சீமானாவது இப்பான் அரிவரி இதில்.. ஆனால் மற்ற கட்சியினர் இதில் பி எ ச் டி முடிச்சுவிட்டார்கள் எப்பவோ.. சும்மா போங்க.. சீமானை மட்டும் பாராட்டுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது.. ஆனால் மற்ற கட்சிகளையும் அவர்கள் செய்த நல்லவைகளையும் அப்படியே போகிறபோக்கில் பாராட்டவிட்டால் பாக்கிறமக்களுக்கு டக்கெண்டு விளங்கிடும் சீமானை பாராட்டுவதில் உள்ள ஆர்வம்.. 😂
  2. தமிழ்நாட்டில் இப்ப உருவாகவில்லை.. அப்பவே உருவாக்கி கற்காலத்திலேயே அவர்களை வைத்திருக்கிறார்கள் திராவிடக்கட்சிகள்.. திமுகாவும் அதைத்தான் செய்கிறது.. அதிமுகாவும் அதைத்தான் செய்கிறது.. சீமான் றம்ப் செய்வதாவது கொஞ்சம் வசதியான மொபைல் யூஸ்பண்ண தெரிந்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்ட மக்களிடம்.. ஆனால் திமுக அதிமுக போன்றவை குக்கிராமங்களில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழை மக்களையும் சேர்த்து தோளில் ஏறி காதில் செய்கிறார்கள்.. அவர்கள் கற்காலத்தில் இருக்கிறமக்கள்.. அதனால் நீங்கள் சீமானை மட்டும் நினைத்து கண்ணீர் வடிப்பது போலி ஆகிவிடும் பார்ப்பவர்களுக்கு.. பொதுவாக கவலைப்படுங்கள்.. அப்படியே சீமானையும் அடித்து உங்கள் கோபத்தையும் தீர்த்துகொள்ளுங்கள்..😂
  3. உது இப்பத்த தலைமுறைய போய்ச்சேராது.. 80/90 களுக்கு முன்னம் பிறந்தவர்களுக்கு ஓகே.. இப்பத்தே ஜெனெரேசனுக்கு வீடியோதான் ஈசியா போய்ச்சேரும் எண்டு நினைக்கிறன்.. இளைய தலைமுறையை அரசியல் மயப்படுத்த பழைய ரெக்னிக்கில மட்டும் தொங்கிக்கொண்டு இருக்கலாம் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொள்பவர்கள்தான் பிழைப்பார்கள்.. தக்கன பிழைக்கும்.. மாற்றம் ஒன்றே மாறாதது.. தலை உங்களில சந்தேகமா இருக்கு.. நேரம் கொடிக்கிடக்கிற ஒரே ஆள் நீங்கல்தான்..😂
  4. துவாராக மேட்டர் மட்டுமில்ல ஈழத்தமிழர் தமக்குள் பிரச்சினைப்படும் எந்த விடயத்திலும் சீமான் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது அவரது அரசியலுக்கு.. அதைத்தான் அவர் செய்துவருகிறார் என்று நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது..👍 இன்று கூட தலைவரின் அண்ணன் மகன் பேட்டி குறித்து கேட்டபோது தான் பதில் சொல்லாமல் உலகம் எங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் பதில் சொல்லுவார்கள் என்று சொன்னார்.. அதே போல் ஈழத்தமிழர்கள் வீடியோக்களில் தமது எதிர்க்கருத்துக்களை வைத்து வருகின்றனர்.. திமுகாவும் இதத்தான் செய்யும்.. முஸ்லீம்கள் குறித்து ஏதும் பிரச்சினை என்றால் திமுக தலைமை பதில் சொல்லாமல் தனது கட்சியில் இருக்கும் முஸ்லீம் தலைவரைக்கொண்டு பதில் சொல்லவைக்கும்.. அதே போல் கிறிஸ்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று எல்லாத்துக்கும்.. இந்தியாவில் அரசியல் அப்படித்தான் செய்யமுடியும்.. இல்லாட்டி விஜயகாந் ஆக்கி புதச்சுடுவாங்கள்.. சீமான் இந்த விடயத்தில் சுதாகரிச்சதுபோல் தெரியுது.. ஆனாலும் சீமான் ஆரம்பத்தில் கூறிய பலமிகைப்படுத்தல்கள் இன்று சீமான் கேட்டர்களுக்கு சீமான் பேசும் எல்லாவற்றையும் எடிற்பண்ண வசதியாகிவிட்டது.. ஆனால் விஜயகாந்துக்கு இல்லாத ஒண்டு சீமானுக்கு இருப்பதால் சீமான் தொடர்ந்து போராடக்கூடியதாக இருக்கு.. அதுதான் இணைய சப்போட்.. இண்டைக்கு கூட இணையம் இல்லாவிட்டால் சீமான் தலைவர் அண்ணண் மகனை தே.. மகன் என்று சொன்னதாக நம்பவைத்திருப்பார்கள் என்னையே.. இணையத்தின் உதவியால் ஒரிஜினல் கிடைச்சது.. எப்படி சீமானின் மிகைப்படுத்தல்களால் சீமானை புழுகுபவர் என்று பிரச்சாரம் திமுகாவால் பண்ணமுடியுதோ அதேபோல் திமுக செய்யும் பொய்களையும் இணையம் காட்டிகுடுப்பதால் நாம்தமிழராலும் திமுகாவை எதிர்த்து பிரச்சாரம் செய்து மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்ககூடியதாக இருக்கு..கிடைத்ததோடு சந்தோசப்படாமல் அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டு இருந்ததும் இல்லாமல் போட்டுது எண்டு சொல்வதுபோல் சீமான் சொன்ன மிகைப்படுத்தல்களை மட்டும் பிரச்சாரம் செய்யாமல் சொல்வதை எல்லாத்தையும் வெட்டியும் ஒட்டியும் பொய் என்றும் சொல்ல வெளிக்கிட்டதில் அவை அம்பலப்பட்டபோது சீமானை ஆதரிக்கும் மக்கள் மிச்சம் எதையும் நம்பாமல் போய்விட்டார்கள்.. இதுக்குத்தான் அளவுக்கு மிஞ்சி ஆசைப்படக்குடா எண்டுறது.. உ+ம் ஏகே 74 இல்லை எண்டது திமுக ஆனா இருந்தது வெற்றிமாறன் படப்பாட்டு பொய் எண்டது பின் உண்மையானது தலைவரை சந்திக்கவே இல்லை எண்டு பேந்து பத்து நிமிசம் எண்டது படம் பொய் எண்டது இண்டைக்கு பிக்காளிப்பயல் எண்டு சொன்னதை வெட்டி தே.. மகன் எண்டு சொன்னது இன்னும் நாலஞ்சு இருக்கு டக்கெண்டு நாபகம் வருதில்ல
  5. நான் சீமானை ஆதரிப்பதால் ஈழத்தமிழருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.. நான் இந்திய இணையங்களிலும் ரிக்டாக்கிலும் முகநூலிலும் சீமானுக்கு களமாடி மற்ற இந்தியக்கட்சிகளை எதிர்த்து அரசியல் பந்திகள் எழுதிக்கொண்டு திரியவில்லை.. எனக்கு திமுக அதிமுக நாம் தமிழர் உட்பட எந்த கட்சியும் ஈழத்தமிழர் நமக்கு எதையும் செய்யமுடியாது என்பதில் தெளிவு இருக்கு.. என்னுடைய ஆதரவு வெளியில் நின்று பார்க்கும் ஒருவனாக அங்கு இருக்கும் நிலம்சார் சமூக பொருளாதார பிரச்சினைகளில் சீமானின் ஸ்ராண்ட் சரியாக இருப்பதாக படுவதால் ஒரு உளப்பூர்வமான ஆதரவு.. அத்தோட எனக்கு பிடிச்ச தமிழ்தேசியத்தையும் பேசுவதால்.. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.. என் தனிப்பட்ட அரசியல் சொய்ஸ்களுக்கும் என் இனத்துக்கும் சம்பந்தம் இல்லை.. சிலவேளை பையன் போன்றவர்கள் சீமானை ஆதரிப்பதற்கும் நான் சீமானை ஆதரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம்.. பையன் NTK இற்கு களமாடியதாக எங்கோ எழுதிய ஞாபகம்.. என் எழுத்து யாழில் ஏதாவது சீமான் குறித்து பிழையான தகவல்கள் போலி செய்திகள் வந்தால் அது தவறு எனில் அதை எழுதுவதோடு சரி.. அதாலை நீங்கள் பொரிஞ்சு தள்ளி இருப்பதுபோல் இனம், பாய்சன், பாம்புக்கு மிக்சிங் எல்லாம் இல்லை சார்.. நான் அந்தளவுக்கு ஒர்த் இல்ல சார்..😂😂 ரெம்ப எமோசன் ஆகாதிங்க..😂
  6. அவரவர் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுக்கிறார்கள்.. இதில் படித்தவர் படிக்காதவர் எண்ட வித்தியாசம் இல்லை.. பிக்காளிப்பயல் என்று சீமான் சொன்னத தே.. மகன் என்று நீங்கள் சொல்வதுபோல்.. 👆 மேல சீமானை புடிக்காத பகிடி ஒரு தெனாவட்டோடு பிக்காளிப்பயல் என்று சொன்னத தேடிப்பால்காமலே திமுகா ஜடிவிங் மாத்தி டப்பிங் செய்த வீடியோவ கேட்டிட்டு தே.. மகன் என்று சொல்லியது போலத்தான்..
  7. ஒரே பந்தி.. இந்த ஒட்டு மொத்த பிரச்சினையின் ஆணிவேரையே எழுதிவிட்டிருக்கிறீர்கள்.. இதிதான் 100%%%%% உண்மை..
  8. தம்பி இயக்கத்துக்கு ஆள்சேர்த்துகுடுத்ததுக்கு 2006 ஆம் ஆண்டு இயக்கம் எனக்கு ஒரு புது லுமாலா சைக்கிள் தந்தது😁.. ஆனா அதில மண்டைய கழுவி சேர்த்த ஒரு பொடியன் 2009 ல வீரச்சாவு.. ஊர்ப்பொடியந்தான்.. அதை இனைச்சா இண்டு வரைக்கும் எனக்கு நிம்மதி இல்ல.. ஏன் இந்த பாவம் செய்தன் எண்டு இண்டு வரைக்கும் யோசிப்பன்..😢 அவன் தமையன் 5 பேர் எல்லாரும் பொறியியலாளர் எக்கவுண்டன் ஆகி லண்டன் கனடா எண்டு செட்டில்.. தகப்பன் மட்டும் ஊரில தனிய இருந்து போனவருசம் செத்துப்போனார்.. அந்த வீடு இப்ப இருண்டுபோய் கிடக்கு யாரும் இல்லாமல்.. அந்த வீட்ட கடக்கும்போதெல்லாம் துயரமும் குற்ற உணர்ச்சியும் நெஞ்சை அடைக்கும்.. அவன் கடைசிப்பொடியன்.. அவன் இருந்திருந்தால் தகப்பனை பாத்திருப்பான் ஊரில இருந்திருப்பான்.. சில தப்புக்கள் வாழ்நாளில் மீண்டு வரமுடியாத பாவச்செயல்கள்..😢😢
  9. சீமானுக்கு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதல்ல நான் கருதி எழுதிய பிரச்சினை.. புலிகளுக்கு திராவிட பெயின்ட் அடிப்பதுதான் இங்கு எனக்கு பிரச்சினை.. நீங்கள் தலைக்குள் இருந்து சீமானை எடுத்துவிட்டு இந்த கட்டுரையில் புலிகளுடன் திராவிட சித்தாந்தத்தை இணைத்து எழுதப்பட்டதை மட்டும் பாருங்கள்.. மீண்டும் சொல்கிறேன் இந்த கட்டுரையாளர் சொலவதுபோல் திராவிடப்புலிகள் அல்ல அவர்கள்.. அவர்கள் முற்போக்கு சிந்தனைகளுடன் தமக்கு என்று ஒரு பாதையை வைத்து போராடியவர்கள்..
  10. திராவிடத்தை எதிர்த்து மட்டுமல்ல திராவிடத்தை ஆதரித்தும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.. சிவனே என்று அவர்கள் பாட்டுக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் எப்பொழுதும் தமிழ்நாட்டு விடயங்களில் நியூட்றல் கொள்கைதான்..
  11. யார் என்ன எழுதினாலும் அது சீமானுக்கு எதிராக அல்லது சீமான் கூறியதற்கு எதிராக எழுதப்பட்டிருக்கு என்பதால் மட்டும் அது தவறு என்றாலும் சரியாகி விடுமா அல்லது கண்டும் காணாமல் விடலாமா..? சீமானுடனான பிரச்சினைக்கு எந்த இசத்துக்குள்ளும் தம்மை வரிந்துகொள்ளாமல் தாமே ரத்தம்சிந்தி போராடி உருவாக்கிய தமிழ்தேசிய பாதையில் பயணித்த புலிகளை திராவிடப்புலிகள் என்றால் அதற்கு ஈழத்தமிழர்கள் எதிர்வினை ஆற்றவேண்டும்.. சீமான் சில மிகைப்படுத்தல்களை புலிகள் குறித்து கூறியபோது எதிர்வினையாற்றியது போல் இதற்கும் எதிர்வினை ஆற்றவேண்டும்.. சீமானுக்கு எதிர்வினை ஆற்ற யாழில் பலர் இருக்கிறார்கள்.. ஆனால் யாழில் இதற்கு சீமான் எதிர்ப்பாளர்கள் யாரும் எழுதாதால் சீமான் ஆதரவாளர் நான் எழுதி இருக்கிறன்..
  12. இங்க உருட்டவில்லை.. இந்த அறிக்கைய வச்சு தமிழ்நாட்டில் அப்படித்தான் உருட்டுகிறார்கள்..கலைஞர் ரீவிக்காறரால் எழுதப்பட்ட இந்தக்கட்டுரையின் தலைப்பும் அப்படித்தான் உருட்டுகிறது..”திராவிடப் புலிகள்”..அப்படிஎந்த இசத்துல்குள்ளும் அவர்கள் தங்களை அடைக்கவில்லை.. அதே காலப்பகுதியில் இணைத்திருப்பதால் அதன் நீட்சியாக கிருபன் இணைத்திருக்கிறார் என்று நினைக்கிறன்.. பொதுவான பதில் அது..
  13. தமிழ்தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்று ஈழத்தமிழர்கள் உருட்டவில்லையே.. இப்பவும் ஈழத்தமிழர்களுக்கு அதே நிலைப்பாடுதான்.. திராவிடக்கொள்கைகஉடன் ஈழத்தமிழர்களுக்கு என்ன வாய்க்கால் தகராறா..? எல்லாக்கொள்கைகளிலும் இருக்கிற நல்லவற்றை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.. தமிழ்நாட்டில் அவர்கள் நிலப்பரப்பு சமூகபிரச்சினைகள் சார்ந்து இரண்டு வேறு கொள்கைகள் உள்ள கட்சிகளுக்கு இடையில் பிரச்சினை..
  14. ஒரே ஒரு அறிக்கையை வச்சுக்கொண்டு பெரியாரை தலைவராகவோ அல்லது பெரியாரிசத்தை தமது ஒரேகொள்கையாகவோ புலிகள் ஏற்றுக்கொண்டதாக உருட்டவேண்டாம்.. இந்த கட்டுரையும் 1978 இல் அன்ரன் பாலசிங்கம் எழுதியது.. பின்னாட்களில் எந்த இடத்திலும் புலிகள் திராவிட இயக்க கொள்கையை பின்பற்றுவதாக சொல்லவில்லை.. நாங்களும் சிறுவயதில் இருந்து புலிகள் இயக்கம் வளர அவர்களோடு நாங்களும் வளர்ந்தவர்கதான்.. அன்ரன் பாலசிங்கமும் திராவிடம் என்பதை மரபினம் என்ற புரிதலிலேயே பயன்படுத்தி இருக்கிறார் இந்த கட்டுரையில்.. இதற்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கார்ல் மாக்ஸ்,ஸ்டாலின், லெனின் போல பெரியாரையும் அன்ரன்பாலசிங்கமும் அரசியல் துறையினரும் படித்திருக்கலாம்.. அவற்றில் இருக்கும் முற்போக்குகொள்கைகளை எடுத்திருக்கலாம்.. ஆரம்பிச்ச காலத்தில இயக்கத்தில சில சித்தார்ந்தங்கள் உள்வாங்கப்பட்டும் இருந்தது… மாக்சிசம் உட்பட... ஆரம்பகால இயக்கப் பெயர்கள் கம்யூனிச பெயர்களாக இருக்கும்... பிறகு தான் தமிழ் தேசியம் எண்ட வீச்சு பெருமெடுப்பில ஆரம்பிச்சா பிறகு " தமிழ் தேசிய அரசியல் " முழு வீச்சானது... இந்த அறிக்கை அடையாளமற்று இருந்த நேரத்தில ஆர் எண்டு பிரதேச குறிப்பு காட்டுறதுக்காக " தென்னிந்திய மொழிக்குடும்பம் " என்கிற பதத்தை சுட்ட பயன்படுத்தப்பட்டது... எங்க, விடுதலைப் புலிகளின் இலட்சிணை பொறிக்கப்பட்ட இன்னொரு உத்தியேகபூர்வ கடிதத்திலோ, அல்லது தலைவரோ தம்மை திராவிடர் எண்டு சொன்னதை காட்டுங்க பாப்பம்..? புலிகள் தங்களை தமிழ் தேசிய இனமாகத்தான் முன்னிறுத்தினார்கள்... திராவிடர்களாக அல்ல... ஈழத்தில் இப்போது எஞ்சியிருக்கும் ஒருவருக்கும் இது தெரியும்.... இதில சுந்தரவள்ளி வேற ஒரு உருட்டு ஒண்டு உருட்டுது.. அதாவது புலிகள் தமிழர்கள் என்று போட்டுவிட்டு அடைப்புக்குறிக்குள் திராவிடர்கள் என்று போடுபவர்களாம்.. தமிழ்நாட்டில இப்ப நடந்துகொண்டிருக்கிற பிரச்சினை இரண்டு கட்சிக்கு இடையானது.. ஆனா, சந்தடி சாக்குல எம்மாம் பெரிசா காதில செஞ்சுவிட்டிருக்கு இந்தம்மா ! புலிகள் பிராக்கெட்ல திராவிடர்கள் எண்டு போடுவாங்களாம்ல... பனியா அவங்களுக்கு.. ? தட் நாங்க எதுக்குடா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போறோம் மொமண்டுகள் இதெல்லாம்.. நாம வேற ஏதோ புலிகள்ட ஆட்சில இருந்திருக்கிறம் போல எண்டு டவுட்டா இருக்கு.. பக்கத்துல உசிரோட நாங்க இருக்கத்தக்கதாவே சொந்த ஆதாயத்துக்கு எவளோ manipulation பண்றாங்க..
  15. பெரியாரின் துயரம் பெரியாரிஸ்டுகள்தான். கேள்வி கேள், அறிவை பயன்படுத்து என்று சொன்ன பெரியாரின் இஸ்டுகள் அறிவை பயன்படுத்தும் லட்சனம் இதுதான்.… சீமான் அவமானப்படுத்தினதால இவங்க பெரியார பெருமைப்படுத்திருக்கிறாங்களாம்… 😌 பெரியாரை அரசியல் மயப்படுத்துவதாக சொல்லும் திமுக பெரியாருக்கு செய்வது இதைவிட கொடுமை..
  16. எனக்கு அவரின் கருத்தில் உடன்பாடில்லை.. சங்கி கூட்டத்துக்கு மூளை மங்கி இருக்கு என்பது ஊருக்கே தெரியும்.. கொரோனாவை விரட்ட மணிஆட்டி தகரத்தில தட்டி நெருப்பு வச்ச கூட்டம்.. மாட்டு மூத்திர மூளை குரூப்.. நிற்க.. கண்டிப்பாக நீங்கள் தமிழிசையின் அறிவின் அழகை சொல்லாமல் புறத்தோற்றத்தைதான் அழகு என்று எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. தமிழிசை அழகுக்கு என்ன குறை..? ஒரு கடைக்கோடி தமிழ்கிராமத்தின் தமிழ்மகள் எந்த ஒப்பனையும் இல்லாமல் இப்படித்தான் இருப்பார்.. கருப்பு தமிழனின் நிறம்.. அதில் என்ன தாழ்வுச்சிக்கல் இருக்கிறது..? ஏன் தமிழிசை அழகுக்கு என்ன குறைவு..? உங்கள் அழகின் அளவீடு என்ன..?
  17. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.. கருவுற்றவுடன் பெண் மட்டுமன்றி இன்னுமொரு உயிரும் அதில் சம்பந்தமாகி விடுகிறது.. அந்த உயிர் மீது பெண்ணுக்கு மட்டுமன்றி இந்த சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது.. ஒரு உயிர் கருவிலேயே இன்னொரு பெரிய உயிரால் அதன் கருவில் உருவான ஒரே ஒரு காரணுத்துக்காக கொல்லப்படுவதை இந்த சமூகம் வேடிக்கை பார்க்கலாமா என்பதில் சட்டச்சிக்கல்கள் எழுகிறது.. அதனால்தான் கருக்கலைப்பில் சமூகத்தை தலைமை தாங்கி நடத்தும் அரசு தலையிட வேண்டி இருக்கு எண்டு நினைக்கிறன்.. இன்னொரு உயிரை கொல்வதை எப்படி பெண் சுதந்திரம் என்று சொல்லமுடியும்(விதிவிலக்கு லேஸ்களை தவிர.. உ+ம் அந்த பெண் உயிருக்கு ஆபத்து என்றால்)..? அப்படி என்றால் அந்த பெண் கருத்தரிக்கமல் இருந்திருக்கவேண்டும்.. அதற்குரிய பாதுகாப்பை செய்திருக்கவேண்டியது அந்த பெண்தான.. பொறுப்பில்லாமல் இருந்தது அந்த பெண் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணின் தவறுதான..?
  18. இந்த நாய்கள் இடிச்சு மோதித்தான் அப்பா கால்முறிஞ்சு நடக்கமுடியாமல் ரெண்டுமாதமா இருக்கிறார்.. எங்கட வீட்டு முன் றோட்டாலதான் கொஞ்சப்பேர் போறவங்கள்.. இவங்களுக்காத்தான் றோட்டுக்கும் கமெரா பூட்டி இருக்கிறன்.. பொலிஸில புடிச்சு குடுக்காமல் விடமாட்டன் வீடியோ ஆதாரத்தோடா..
  19. அது கட்சிப்பிரச்சினை.. உங்கட கட்சிக்கூட்டத்தில் கட்டிப்புடிச்சு மல்லுக்கட்டி பிரழுங்கோ.. பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினையை பேசும் நேரத்தை வெட்டிக்கதையள் பேச வீணாக்காதீர்கள்.. இவங்கட குடும்பப்பிரச்சினை பேச சனம் ஓட்டுப்போட்டு இவனுகளை அனுப்பேல்ல.. கிளிநொச்சியில மக்களுக்கு என்னென்ன பிரசைனை எண்டு இந்த விளங்காத நரி பேசட்டும்.. அத விட்டுட்டு இவரிண்ட கட்சி ஒப்பாரி கேக்க நேரமில்ல பாராளுமன்றம்..
  20. தங்களுக்கு ஒரு பிரச்சினை எண்டா எழும்பி நிண்டு நிலத்தில கால்படாமல் குதிப்பினம்.. சனத்தின்ர ஒரு பிரச்சினையை இந்த நரி இப்படி எழும்பி நிண்டு கதச்சிருக்கா.. உங்கட பிரச்சினையளை கதைக்க சனம் ஓட்டு போட்டு உங்களை பாராளுமன்றம் அனுப்பவில்லை.. அலம்பாமல் மக்கள் பிரச்சினைய பேசுங்கடா..
  21. அயலகத்தமிழர் விழாவுக்கு போய் மட்டும் வெட்டி முறிச்சிட்டு வந்திருக்கிறார்.. இந்த லட்சணத்தில பார் சிறி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன..
  22. 47வது அமெரிக்க ஜனாதிபதியாக நேற்று 20ம் திகதி பதவி ஏற்றார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சமயம் என்னதான் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அறிவித்தாலும் கமலா ஹாரிஸ் மட்டும் வந்துவிடக் கூடது என்று உறுதியாக இருந்தேன். எதிர்பார்த்தது போலவே “நா வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.” என மாஸ் re-entry கொடுத்தார் டொனால்ட் ட்ரம்ப். முதல் தடவை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் செய்த சேஷ்டைகளால் மீம் material ஆன ட்ரம்ப் இம்முறை பாட்ஷாவாக இறங்கி அடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். வந்த முதல் நாளே “இனிமேல் அமெரிக்காவில் ஆண் பெண் என்ற இரு பாலினம் மட்டும் தான், ஆண்-பெண் என்ற இரு பாலினத்தவருக்கு மட்டுமே இங்கு அங்கீகாரம் அளிக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்து, LGBTQ சமூகத்துக்கு மிகப் பெரிய ஆப்பு வைத்துள்ளார்… (இத தானடா எங்க தல இவ்ளோ நாளா சொல்லிட்டு இருந்துச்சு...) இப்போது புடினின் பல கொள்கைகளுக்கு ஆதரவாக தன் நிலைப்பாடுகளை மாற்றி வரும் டிரம்ப்புக்கு இன்று புடின் தன் வாழ்த்துக்களை பகிரங்கமாக தெரிவித்து (சூர்யான்னா யாரு தெரியுமா), யார் என்ன சொன்னாலும் நாங்க நண்பர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளனர். “The Golden age of America begins right now!”என்று சொல்லி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப். “அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது. நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன்” என்பதையும் கறாராக சொல்லியே முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் மனுஷன். இதுவரை காலம் அமெரிக்கா என்றால் வளர்ந்த நாடு என்று தான் நாம் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் பனாமா கால்வாயில் அமெரிக்காவுக்கு விதிக்கப்படும் அதி உயர் வரி போன்ற பல காரணங்களால் இனி நாங்களும் வளரும் நாடுதான், ‘நானும் வளர்க்கிறேனே மம்மீ….’ என்ற புதிய உருட்டையும் சேர்த்து உருட்டி இருக்கிறார். டென்மார்க்குக்கு சொந்தமான கிரீன்லாந்து, பனாமா கால்வாய், கனடா என ட்ரம்ப்பின் அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள் இது வரை பெரிய அண்ணாவுக்கு சொம்பு தூக்கிக் கொண்டு இருந்த பலரின் வயிற்றிலும் தற்போது புளியை கரைத்திருக்கிறது (ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதை தெரியுமா சார்..). அது தவிர சட்டவிரோத குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப் படுவார் என்றும் அடுத்த கடப்பாரையை இறக்கி உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் மேற்கேத்தைய நாடுகள் அனைத்தும் கையில் எடுக்கும் முக்கிய ஆயுதம் இந்த குடியேறிகளை கட்டுப்படுத்துவோம் எனும் வாக்குறுதி தான். பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் என பல நாடுகளின் சமீபத்தைய தேர்தல்களில் மக்களை கவர்ந்த முக்கிய பிரச்சாரமே இது தான். காரணம் இன்று வளர்ந்த நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களின் ஒன்று இந்த asylum seekers. சென்ற வருடம் பாரிஸ் சென்று வந்து நான் எழுதிய பதிவில் மிக விரிவாக இது பற்றி எழுதி இருந்தேன். ஒரு காலத்தில் காதலர் தேசமாக இருந்த பாரிஸ் இன்று களவாணிகள் தேசமாக மாறி, இந்த குடியேற்றவாசிகளால் சிதைந்து உருக்குலைந்து போய் எப்படி கேவலமான நிலையில் உள்ளது என்பதை நேரில் கண்டு வந்தேன். அதுவே அப்படி என்றால் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத மற்றும் போதை கலாச்சாரத்தில் புதைந்து கொண்டிருக்கும் அமெரிக்கா எல்லாம் நிச்சயம் விழித்து எழ வேண்டிய நேரம் இது. இதனாலேயே இந்த நாடுகளின் குடிமக்கள் இது போன்ற புகலிடம் கோருவோரை கட்டுப்படுத்துவோம் என்று யார் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கிறார்கள். எனவே ட்ரம்ப்பின் இந்த அதிரடி தீர்மானம் அடுத்த தேர்தல் நாற்காலியில் இப்போதே கர்ச்சீஃப்பை போட்டு வைக்க நிச்சயம் உதவும். அதே போல ஏற்கனவே அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பி “ஆறடி சுவரு தான் அமெரிக்க ஆசையை தடுக்குமே கிளியே மெக்சிகன் கிளியே..” என்று பாடப் போவதாக ஒற்றைக் காலில் நின்றவர் இம்முறை ‘ஆணியே புடுங்க வேணாம்’ என்பது போல "(நீ) மெக்சிகோவிலேயே இரு(ங்கள்)" என்ற கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்தி, எல்லையில் அதிக துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார். (இந்த சுவரு இன்னும் எத்தனை பேர காவு வாங்க போவுதோ..) அமெரிக்கா மீண்டும் பொருட்களின் உற்பத்தி மையமாக மாறும், செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா தன் கொடியை நாட்டும் (அத மட்டும் விட்டு வச்சிடுவோமா என்ன, அஸ்கு புஸ்கு), மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் (அவரே குண்டு வைப்பாரம் அவரே எடுப்பாராம்.....), வெளிநாடுகள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்கர்களை பணக்காரர்களாக மாற்றுவேன், WHO வில் இருந்து விலகல், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகல், போன்ற பல தடாலடியான திட்டங்களோடு “இனிமே தான் இந்த காளியோட ஆட்டத்தை பார்க்க போற” என்று கோதாவில் குதித்துள்ளார் டிரம்ப். எனக்கு எப்போதுமே அமெரிக்கா மேல் பல விமர்சனங்கள் இருந்தாலும் அமெரிக்காவை பார்த்து நான் ஆச்சரியப்படும் ஒரே விடயம் its a land of opportunity. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். உங்களுக்கு திறமை இருக்கிறதா, புதிய innovative ஐடியா உள்ள ஆசாமியா நீங்கள், அப்படினா “வாடி என் செல்லம்..” என இரண்டு கைகளாலும் உங்களை வாரி அள்ளி அரவணைத்துக் கொள்ளும் நாடு அது. இது இன்று நேற்றல்ல, 1800களில் இருந்து தொடரும் ஒன்று தான். 1800களில் பிரான்சில் பிறந்து, பிரெஞ்சு இராணுவத்துக்கு பயந்து அமெரிக்க சென்ற John James Audubon, ஜெர்மனியில் பிறந்து நாஜிக்களுக்கு பயந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த Albert Einstein, செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த Gerty Cori முதல் நிகோலா டெஸ்லா, பராக் ஒபாமா, சுந்தர் பிச்சை வரை எல்லாருமே அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர் தான். ஏன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் எலான் மஸ்க்கே சவுத் ஆபிரிக்காவில் பிறந்தவர் தான். ஆக, நீங்கள் யாராக இருந்தாலும் உண்மையான திறமை இருந்தால் உங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் தேசம் அமெரிக்கா (Win - Win….!!). இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தம், ரஷ்ய உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை திட்டம் என “ஆரம்பமே சும்மா அதிருதுல்ல…” ன்னு வந்த முதல் நாளே தன்னைப் பற்றி பேச வைத்த ட்ரம்ப்பின் வருகை நிச்சயம் உலக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டு பண்ணும் என்பது மட்டும் நிச்சயம். எல்லாம் சரி தான் ஆனால் "அமெரிக்கா, ஏனைய நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், அவர்கள் போற்றும் வகையிலும் மாறும்" என்று ‘நாதஸ் திருந்திட்டான்’ என்று நாதஸே சொல்லி இருப்பது தான் கொஞ்சம் நம்பற மாதிரி இல்லை…. நன்றி - Tf rinnozah https://www.facebook.com/share/p/14pMPdTAvq/?mibextid=wwXIfr
  23. இதில் சீமானை ஆதரிப்பவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.. உங்களை கிருபனைப்போல் சீமானை எதிர்ப்பவர்கள்தான் இதையும் சொல்கிறார்கள் பின்னர் இப்படி இணையங்களில் ஆராய்ச்சி செய்து மற்றும் நீங்கள் எடிபண்ணி இணைக்கும் படங்களையும் இணைத்து மந்தியில் மயிரும்புடுங்குகிறார்கள்.. அதையும் செய்கிறார்கள் இதையும் சொல்குறார்கள்.. என்னதான் சீமான் எதிர்ப்பாளர்கள் பிரச்சினையோ புரியவில்லை.. ஏதாவது ஒரு கருத்தில் நிலையாக இருந்தால் நல்லது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.