Everything posted by நியாயம்
-
மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து அரசாங்கம் ஆராய்கின்றதா? நீதியமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?
ஆட்களுக்கு கொலை செய்வதில் பயம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பது தீர்வு இல்லை என்றால் வேறு என்ன பரிகாரம் உள்ளது?
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
திகிலுடன் எதிர்வினை ஆற்றுகின்றார்களா? @வாலி இன் செத்தகிளி சிறகடித்து பறக்கின்றது. சரி பார்ப்போம்.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நீங்கள் வரலாற்று புத்தகங்கள் வாசிக்கவில்லை, வரலாற்று புஸ்தகங்கள் வாசித்தது போதாது என அங்கீகாரம் பெற்ற வித்துவான்கள் கூறப்போகின்றார்கள்.
-
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
ஐம்பதிலும் ஆசை வரும். ஆசையுடன் பாசம் வரும். 😁
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
நானும் இது ஒரு என்கவுண்டரோ என நினைத்தேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் முண்டு கொடுப்பது உங்கள் விருப்பம். ஆனால், எனக்கு இவ்வளவுக்கு மட்டமான இரசனை இல்லை. யாழ் கருத்துக்களத்தின் குருக்கள் ஆகிவிட்டார் போல.
-
இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
படம் அழகாய் உள்ளது ஓவியர். எனது உறவினர். நீண்டகாலம் பலவிதமான உடல் உபாதைகளுக்கு உள்ளாகி 78 வயதில் அமரர்துவம் அடைந்துள்ளார். அஞ்சலிகள்!
-
கொழும்பு உயர்நீதிமன்றில் யாழ். பல்கலைத் துணைவேந்தருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு!
யாராவது பெரியவர்கள் யாழ் பல்கலைக்கழகத்து இந்த பிரச்சனையை பற்றி ஊடகங்களில் சொல்லப்படுபவை பற்றிய தங்கள் பொழிப்புரையை கூறுங்கள் பார்க்கலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
@goshan_che இணைத்துள்ள சுய விபர படம் யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவானதா? இதை நிர்வாகம் அனுமதிக்கின்றதா?
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
பீங்கான் கோப்பைகள் அநியாயம். பேஸ்புக்கில் ஒரு மொமன்ற் பார்த்தேன். முள்ளு கரண்டியால் ஜேர்மன் மொட்டை பாஸ் கு**யில் நல்ல குத்து கொடுத்து இருக்கலாம். சிறியருக்கு இந்த தாடியை தெரியுமோ?
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
டாக்கரின் யூரியூப் சனலில் அவரின் கருத்துக்களை பார்க்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறே பேஸ்புக்கிலும். குறுகிய காலத்தில் அதிபிரபலமான ஒரு நபராகிவிட்டார். யதார்த்தவாதி வெகுசன விரோதி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் IND 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? IND NZ 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #A1 - IND #A2 - NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? AUS SA 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #B1 - AUS #B2 - SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? AFG 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? AUS 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? RavindraJadeja 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? RavindraJadeja 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? RavindraJadeja 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? IND
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இதன் அர்த்தத்தை அவர்கள் எல்லோருமே தம்மை ஈழத்தமிழர்களாகவே அடையாளப்படுத்தினார்களே அல்லாமல் திராவிடராக அடையாளப்படுத்தவில்லை என எடுக்கலாமா?
-
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
நாம் தமிழர் என்பதை தமக்கு சாதகமாக அவர்கள் பாவிக்கின்றார்கள். போர்க்காலத்தில் தெருவில் நிற்கும் களுசடைகள் எல்லாம் வழியில் செல்லும் தமிழரை ஐசி கேட்டு மிரட்டுவதும், வீட்டினுள் நுழைந்து சோதனை இடுவதும் என பல அடாவடிகளில் ஈடுபட்டார்கள். இப்போதும் பொலிஸ் கிளியரண்ஸ் என்றால் தமிழருக்கு வரக்கூடிய இயல்பான பயத்தை பயன்படுத்தி போலிசார் காசு அடிக்கின்றார்கள். என்னதான் நடந்தாலும் சிங்களம் சிங்களம் தான். அது தமிழரிடம் இறங்கி வராது. அவரவர் உங்கள் திறமையை பாவித்து உடுத்த கோவணத்தை உருவாமல் பார்த்து கொள்ளுங்கள்.
-
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
இந்த செய்தி எல்லாத்தையும் நம்ப சொல்லுறீங்க? நான் வாகனத்தில் கொழும்பு சென்றபோது அநுராதபுரத்தில் மறிக்கப்பட்டேன். மறித்தவர் கூறினார் வாகனம் எல்லாம் சரியாத்தான் ஓடினேனாம். ஆவணங்களும் சரியாத்தான் உள்ளதாம். மறித்ததன் காரணம் பின்னர் தான் புரிந்தது. நாட்டில் கஸ்டம் என மறைமுகமாக காசு கேட்டார். கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன். இந்த போக்குவரத்து போலிசாருக்கு முண்டு கொடுத்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் கட்டாயம் உண்மை செய்திகளை வெளியே கொண்டுவரும் எனத்தான் நினைக்கின்றேன். என்ன இருந்தாலும் பாருங்கோ இன்னொரு சக தமிழனுக்கு ஒரு பிரச்சனை கஸ்டம் வருகிது என்றால் எங்கடையளுக்கு குஸ்திதான். ஏன் என்றால் எங்கடையள் டிசைன் அப்படி.
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
தைப்பூசம் பெளர்ணமியில் தானே வருகின்றது. பெளர்ணமி என்றால் போயா. பெளத்தர்களின் புனித நாள். போயாவில் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என இலங்கையில் ஏதோ சட்டம் உள்ளது அல்லவா?
-
கடனட்டை(Credit Card)
ஓ அப்படியோ. எங்களுக்கு முகத்திலேயே இலங்கை பக்கம் என எழுதி உள்ளது தானே. அதுதான் அனுமதி இல்லை போலும். எதற்கும் அடுத்த தடவை நீங்கள் ஒரு தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டு கூறுங்கள். சில வேளைகளில் புதிய அரசாங்கம் வந்தபின் இந்த மாற்றம் வந்ததோ தெரியாது.
-
கடனட்டை(Credit Card)
நான் இலங்கை காசை வெளியில் மாற்றுவதற்கு ஒரு போதும் முயற்சி செய்தது இல்லை. அப்படியான தேவை ஏற்படவில்லை. விமான நிலையத்தில் உள்ள நாணயம் மாற்றும் இடங்களில் கொடுத்தால் மாற்றித்தரத்தானே வேண்டும்?
-
கடனட்டை(Credit Card)
விமானத்தில் ஏற முன்னம் கையில் மிஞ்சுகின்ற இலங்கை காசில் ஏதாவது பொருட்களை இலங்கை டியூட்டி பிரீயில் வாங்க முடியாமல் உள்ளதே என்பதே எனது ஆதங்கம் ஈழப்பிரியன். நானும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாவிப்பது உண்டு. வருடாந்த கட்டணம் மிக அதிகம் என்றாலும் அந்த கட்டணத்தில் காப்புறுதி/மெடிக்கல்/பொதி காணாமல் போதல்/விமானத்தில் ஏறுவதில் முன்னுரிமை/லோஞ்ச் அனுமதி என பல அம்சங்கள் உள்ளடக்கப்படுவதால் அந்த அட்டை இப்போதும் உள்ளது. ஆனால் விரைவில் அதன் பாவனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானித்து உள்ளேன்.
-
கடனட்டை(Credit Card)
இலங்கை காசை இலங்கை விமானநிலையத்தில் தேனீர். ரோல்ஸ் வாங்குவதுதவிர டியூட்டி பிரீ பக்கம் பாவிக்க முடியவில்லை. வேறு நாடுகளில் இப்படியான ஒரு நடைமுறை உள்ளதா?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அண்ணை நீங்கள் கமாசையும் அடிக்கிறீங்கள். பூதினையும் அடிக்கிறீங்கள். சீமானையும் அடிக்கிறீங்கள். நீங்கள் யார்? யார்? யார்? 😁
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
பெளத்த துறவிகளுக்கு மட்டும்தான் இப்படி கிரியை/நினைவுகூறல் செய்யப்படுகின்றதோ? இது ஒரு அழகிய கலாச்சார உருவமாக, உயர்ந்த பண்பாடாக தென்படுகின்றது. அதுசரி நம்மட ஆட்கள் நமக்கு ஏதும் நடந்தால் ஒரு கடதாசி ஓடமாவது ஆற்றிலோ கடலிலோ நமது பெயரில் விடுவார்களா? சா.. சா. நடக்கிற விசயத்தை பற்றி யோசிப்போம்.
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
மன்னார் பகுதியில் இப்படியொரு சம்பவம் ஏதும் முன்பு நடைபெற்றதாக தெரியவில்லையே. வன்முறை கலாச்சாரம் மன்னார்வரை வந்துவிட்டது போலும்.
-
புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!
இலங்கை குடிவரவுத்துறை தம்மால் வீசாவை வழங்க முடியாது என வெளி நிறுவனத்திற்கு வேலையை அனுப்பினார்கள். பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது. இலங்கை வளங்களை பயன்படுத்தி அடையாள அட்டையை சொந்தமாக உருவாக்க வசதி இல்லை என்றால் இலங்கையில் உள்ள இத்தனை இத்தனை பொறியியல் பீடங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் எல்லாம் எதற்கு? அடையாள அட்டையை உருவாக்குவதற்கு இந்தியாவிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்? இதன் பின்னால் நின்று காசு அடிக்கும் கூட்டம் யாதோ?
-
புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
முதலாவது சந்ததியை விடுங்கள். அடுத்த சந்ததியின் எதிர்காலம் என்ன? அங்கு சிறுவயதில் பெற்றோருடன் சென்ற, மற்றும் அங்கு பிறந்த பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் மிகவும் இடர்மிக்கது.