Everything posted by நியாயம்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம். மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
ஓ அப்படியா? நாம் அப்போது அகதியாக அங்குமிங்குமாய் ஓடிய்திரிந்த நேரம். அப்போதைய ஈழநாதத்தில் இதுபற்றி பிரசுரம் செய்ய இல்லை என நினைக்கின்றேன். காய் முத்தி இப்போதுதான் சந்தைக்கு வருகின்றது போல.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
அவரது வயதும் இங்கு கருத்து எழுதக்கூடியவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றது. அழகுராணி என்றால் வாய்த்தடிப்பம் வழமைதான் போல.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கஸ்தூரி என்றொரு நடிகை பற்றி இப்போதுதான் அறிகின்றேன். ஆனால் இங்குள்ள கருத்தாளர்கள் பலரும் இவர் பற்றி ஏற்கனவே நல்ல பரீட்சயம் உள்ளவர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக உள்ளது. எல்லாரும் இந்திய தொலைக்க்காட்சி/சினிமா/சீரியல் உலகத்தில் உள்ளார்களோ? அல்லது கூகிழ்/விக்கியில் வாசித்துவிட்டு வந்து கருத்து போடுகின்றார்களோ? இது எப்படி சாத்தியம்? 😁
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
டாக்டர் ஐயாவின் அந்த ஆடியோ உரையாடலை நீங்களும் கேட்டுள்ளீர்கள் போல. எங்கள் டாக்டர் ஐயா நல்லவனுக்கு நல்லவர். கெட்டவனுக்கு கெட்டவர். 😁
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அடுத்த பொது தேர்தல் நடைபெறும்போது மாவையர் இருப்பாரோ தெரியாது. பெருந்தலைவர் சம்பந்தர் போல் மாவையருக்கு பாராளுமன்ற உறப்பினர் எனும் கெளரவ பட்டத்துடன் சாவை அணைக்க ஆர்வமோ யார் அறிவார். ஆசை யாரை விட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உறவினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் கைதட்டி என் ஜாய் பண்ணுகின்றார்கள். தவறு என சொல்வதற்கில்லை. ஐ பி சி இந்த காணொளியை வெளியிட்டு உள்ளது. ஐபிசி காரரின் எதிர்பார்ப்பு என்னவோ?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
பொது வெளியில் காண்பிக்கப்படுவது தவிர்க்கப்படலாம். ஆனால் உள்ளுக்குள் நடப்பவை பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும் தானே. 🤷♂️ நீங்கள் யாரின் அல்லக்கை என்பதையும் கூறலாமே. செல்வம்/சார்ள்ஸ் சுமந்திரனின் இடத்தில் நின்றார்களா? தமிழரசு கட்சியில் பெரிய குடும்பி யார் என்பதற்குத்தானே இவ்வளவு புடுங்குப்பாடுகள்?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
மதம், சாதி, பிரதேசம் இவற்றை விட்டு வெளியில் வந்து அதேசமயம் இன, மொழி பற்றினை மட்டும் தழுவி எங்கள் ஆட்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவார்களா? நம்ப முயற்சிக்கின்றேன்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
உலகம் யாரையும் நம்பி இல்லை. விடுதலை புலிகள் தலைமை, விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் இல்லாத நிலையிலும் நாடு இயங்கிக்கொண்டுதான் உள்ளது. புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தம்மை பழக்கப்படுத்தி மாறிவிடுவார்கள். எனக்குள் ஒரு சந்தேகம் என்ன என்றால் சுமந்திரன் திட்டமிட்டு சில தரப்பினரால் ஒதுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த மதம் ஒரு காரணமா என்பது. யாழ் கருத்துக்களத்தில் பகிரப்படும் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கும்போது இந்த வினா எழுகின்றது.
-
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு
இது நல்லாய் உள்ளதே. ஆங்கிலம், பொது அறிவும் சொல்லி கொடுக்கலாம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இல்லை என்பதை தெரிவு செய்துள்ளேன்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சுமந்திரன் பாராளுமன்றம் போறாரோ இல்லையோ சிறியருக்கு யாழ் கருத்து களத்தில் வேலை ஒன்று கிடைத்துள்ளது. 😁
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
வாழ்த்துக்கள்! அது சரி தொண்டமான் தரப்பு எங்கே நிற்கின்றது. ஆசனம் ஏதும் கிடைத்ததோ?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? வினாவில் திருத்தம் வேண்டும். செல்ல வேண்டுமா அல்லது செல்லக்கூடாதா என கேட்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் சுமந்திரனின் சாதகமான பக்கத்தை பார்க்கவில்லை?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பொருளாதார விடிவிற்கே வாக்குகள் விழுந்துள்ளன என நினைக்கின்றேன். பொருளாதாரம் முன்னேறும்போது வாக்களிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும். அடுத்த தேர்தலில் நாட்டின் சூழ்நிலை வேறுபாடான தெரிவை தோற்றுவிக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேசியத்தின் காவலர்கள் பெருத்த எடுப்பில் பல வருடங்களாக சுமந்திரன் அவர்களுக்கு எதிராக பாரிய பிரச்சார யுத்தம் நடாத்திய பிற்பாடும் அவருக்கு 15,000 வாக்குகள் மேல் கிடைத்துள்ளதே. இதை ஒரு வெற்றியாக பார்க்க முடியாதா? 🤷♂️ சுமந்திரனின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிய ஆவல்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பாராளுமன்றத்தில் கதைக்காவிட்டாலும் கட்சி மட்டத்தில் கதைக்கலாம் தானே? மக்களுக்கு வாக்களிக்க தெரியாது என்றுதானே தேசியத்தூண்கள் தற்போது பேசிக்கொள்கின்றார்கள்? மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தேசியத்தூண்கள் தயாரா? இவர்களை வாக்களித்த மக்கள் அணுகி தமது தேவைகளை முன்வைக்கும்போது பேசத்தானே வேண்டும்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ் மாவட்டத்தில் தெரிவாகும் அநுரவின் ஆட்கள் மூன்றுபேர் தமிழர்கள் தானே, இவர்கள் தமிழர்களுக்காக பேச மாட்டார்களா? மருத்துவர் அர்ச்சனாவிற்கு சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் வேலை பறிபோனாலும் தலைநகர் பாராளுமன்றில் புதிய வேலை கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2009 ம் ஆண்டு ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்படுகின்றது. பதினைந்து வருடங்களின் பின் அரசியல் போராட்டமும் தோற்கடிக்கப்படுகின்றது?
-
வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு
அல்லது ஒரே பெயரில் இன்னொருவரோ?
-
1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்
விண்ணனிடம் கொடுக்கும் அளவுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதோ.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அரசனை நம்பி புருசனை கைவிடலாமா? எனக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் எனது விருப்ப தெரிவு தமிழரசு கட்சி. ஆட்கள் எனில் சுமந்திரன், சிறீதரன், டக்லஸ் தேவானந்தா. எனக்கு அழைப்பு அனுப்பியதற்காக சிறியர் தலையில் அடித்துக்கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.😁