Everything posted by putthan
-
ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
மன்னிக்கவும் ..எதிர்கட்சி என்ற காரணத்தினால் இவர் எமது தோழர் அனுரா மீது இப்படியான கேலி செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் ... வஇமானத்தை ஒட்டி சென்றது நமது தோழர் தான் என்ற தகவல் தெரியாமல் புலம்புகின்றார் . முப்படை தளபதி அவர்...ஆகவே பாதுகாப்பு வீரர்கள் தேவையில்லை விமானம் அரசு உடமை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திக்கு ஓட்டி செல்ல சகல உரிமையும் உண்டு(இராவணன் புஸ்பக விமானத்தை அவனே செலுத்தி சென்று சீதையை சிறிலங்காவுக்கு கடத்தி வந்தவன் ..ஆகவே இராவண பலகேயாவின் வாரிசு நம்ம தோழர்)
-
நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்!
தீட்டின மரத்தில பதம் பார்க்க கூடாது....போராட்டம் எல்லாம் ஜெ.வி.பி பதவிக்கு வந்த கையோட மறந்திட வேணும் கண்டியளோ
-
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை
கோவில் திருவிழாக்கள் கொண்டாட் எமக்கு ஒலிபெருக்கி வேணும்....பொம்பர் குன்டு போடக்குள்ள வராத சத்தமே இப்ப வரப் போகிறது
-
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம்
இப்ப வந்து சில மூத்தபத்திரிகையாளர்களும் ,அரிவரி அரசியல்வாதிகளும் கேள்வி கேட்க போயினம் .. முன்னைய அரசு இருக்கும்பொழுது ஏன் போராடவில்லை இப்ப போராடுவது சரியில்லை என சொல்வார்கள்..
-
டொலரில் சம்பாதிப்பவர்களுக்கு வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல்
உவையளை பாராளுமன்றத்துக்கு அனுப்ப பாடுபட்ட யூ டியுப் காரரும் வரி கட்ட வேணும் பாதாள உலக குழுவினர் அல்லது மகிந்தா கோஸ்டியினர் அபகரிப்பினம் ...என சொல்லாமல் சொல்லுகின்றார்
-
இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
உண்மை ...இந்தியாவுக்கு கடல் எல்லை பாகிஸ்தானுடனும் பங்களாதேசுடனும் உண்டு ...ஆனால் சிறிலங்காவுடன் தான் இழுபறிகளும் செய்திகளும்....ஏனைய நாடுகளுடன் மீனவர்கள் எல்லை தாண்டினால் எந்த வித துப்பாக்கி சூடும் நடை பெறுவதில்லை ...கச்சை தீவு காலம் தொடக்கம் இந்த பிரச்சனைஉண்டு இனியும்தொடரும்... அதானி குழுமம் வெளியேறியது ....இந்தியாவின் மறைமுக திட்டங்கள் சில அமுல்படுத்த படும்...
-
யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளான இளைஞன் !
சீனாக்காரன் இந்த திட்டத்தை தான் நினைத்தபடி கட்டியிருந்தால் ஊரில இருக்கிற இந்த தலைவர் சத்தம்போடாமல் வாயில கையை வைச்சு பார்த்து கொண்டிருந்திருப்பார்... ஊரில் மேசன்மார் வீடுகள் கட்டும் பொழுது அவரது மேல் அதிகாரி வந்து ஏதாவது சொன்னா அவர் போன பிறகு "உவனுக்கு என்ன தெரியும் நான் 20 வருசமா வீடு கட்டுகிரேன்" எனக்கு பாடம் எடுக்க வந்திட்டான் என புலம்புவார்.ஆனால் அவருக்கு ஒரு வீட்டு வரைபடம் பார்த்து வீடு கட்ட தெரியாது அதை ஒர் சுப்பவைசர் தான் சொல்ல வேணும் என்ற புரிந்துணர்வு கூட இல்லை..
-
இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
என்ன பிரதி உயர்ஸ்தானிகர் ,அமைச்சுக்கு சென்றுள்ளார்?...இன்னும் 10 வருடங்கள் சென்றாலும் இவர்களால் இந்த பிரச்சனை தீர்க்கப்பட போவதில்லை ...
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
1972 /73 களில் பத்திரிகைகளில் ஒர் செய்தியை எழுத்து கூட்டி வாசித்த ஞாபகம் ...வருகிறது.. "பயங்கரவாதிகள்(இன்றைய ஜெ.வி.பியினர்) ஆட்சிக்கு வந்தால் 60 வயசுக்கு மேல் உள்ள வயோதிபர்களை சுட்டு கொலை செய்து விடுவார்கள்" ...என அந்த காலத்தில் இருந்த பொலிஸ் ஊடக் பேச்சாளர்,மற்றும் ஊடகங்கள் செய்தியை பிரசுரித்து கொண்டிருந்தார்கள் ..அதை நானும் நம்பவில்லை காரணம் எனது தந்தையும் அதை சொன்னார் அதிகார வர்க்கம் இப்படித்தான் சொல்லும் ஆனால் அவங்கள் அப்படி செய்ய மாட்டாங்கள் எண்டு... இன்றைய இளைய ஜெ.வி.பி யின் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது மிருகங்களில் தொடங்கி மனிதர்களுக்கு வருவினம் போல தெரிகின்றது ... அரிசிக்கு நாய் தேங்காய்க்கு ஈ மின்சார தடைக்கு குரங்கு ஊழலுக்கு முன்னைய அரசு கல்வி சீர்குழைவுக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியம் தேசிய பாதுகாப்புக்கு பாதாள உலகம் தாங்க முடியல்லடா
-
அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
இல்லை அவர்கள் இலங்கை என்ற தேசிய நாடு(1948) உருவான பொழுது தங்களது இனத்தை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கை தேசிய கொடியில் தங்களது இனத்தை அடையாளப்படுத்தி விட்டார்கள் ...அவர்கள் ஒர் தனி தேசிய இன்ம் என்பதை ஏற்று கொள்ள தான் வேண்டும்...
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
என்னப்பா இவர் சொல்லுறார் ... போர் போக்கை பார்த்தால் சஞ்ஜீவ் படுகொலைக்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள் என கேசை திசை திருப்பி எழுதுவார் போல கிடக்கு
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
பாராளுமன்ற உறுப்பினர் அதை நிருபித்து வருகின்றார் 😂
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
சீனாவை வீழ்த்த வேணும் என்ற காரணத்தினால் நம்ம தலைவன் அப்படி சொல்லியிருக்கின்றார்....தற்பொழுது சீனா தான் அமேரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
மிருணாஸ் சரியான பதில்...என கூறி இரண்டு வடை பரிசாக பெற்று கொள்கிறேன் ...
-
மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து அரசாங்கம் ஆராய்கின்றதா? நீதியமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?
அதெல்லாம் பொலிஸ் பார்த்து கொள்ளும் நீங்கள் தமிழன் என்ன செய்கின்றான் என பார்த்து அறிக்கை விடுங்கள்
-
பாதுகாப்புப் படைகளிலிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவு - பாதுகாப்புச் செயலாளர்
உறவுகளே உண்மையை சொல்லுங்கள்.... ஓவ்வோரு அரசுகளும் இப்படி அறிக்கை விடுவது எத்தனை முறை நாங்கள் பார்த்து விட்டோம் ... புலிகளை அழிக்க என காடைகள்,காவலிகள் எல்லோரையும் படைகளில் சேர்த்தார்கள்..அதற்கு உதவி செய்தார்கள் இப்பொழுது உள்ள அரச பிரதிநிதிகளும் ... இப்பொழுது குத்துகின்றது குடைகின்றது என அறிக்கை விடுகின்றனர் ....புலி பயங்கரவாதிகளை போராளிகள் என அரவணைத்து சென்றிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
-
யாழ். மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து
பிந்திய தகவலின்படி அது அரச வாகனம் அல்ல என தெரிகின்றது ...எல்லாம் அவனுக்கு வெளிச்சம்
-
'யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும்" - மக்கள் போரட்ட முன்னணியின் ரஜீவ்காந்
தம்பி நீங்கள் பிறக்க முதலே இது உங்கன்ட நாட்டில நடந்தது ..இன்று நீங்கள் பிறந்து வளர்ந்து அரசியல் செய்யும் பொழுதும் நடக்கின்றது ....58 ஆம் ஆண்டு உங்கள் இனம் அனுபவித்த ஒன்று...வீதியில் நின்ற கடையர்கள் கூட தமிழன் என்ற காரணத்தினால் தீர்ப்பு வழங்கினார்கள் ....பொலிசார் தீர்ப்பு வழங்கினால் ஏற்று கொள்ளலாம் ஆனால் காடையர்கள் தீர்ப்பு வழங்கிய நாடு அது.... சிங்கள இனம் இப்ப தான் அனுபவிக்கின்றது..உங்கள் குரல் சிங்கள இனத்துக்கான குரலாக எடுத்து கொள்ளலாம்
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
ஊழல் அற்ற சமுதாயம் வளர வேணும் என்றால் வடை,தோசைக்கு டிஸ்கவுன்ட் கேட்பது நிறுத்த வேணும் என்று சொல்லுறீயல்😀
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
அதன் பின்பு இந்தியாவின் செல்வாக்கு உள்ளே சென்று விட்டது .... கனடாவில் காளிஸ்தான் போராளிகளை தடை செய்ய கடுமையாக உழைப்பது போல ...
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
நானும் அதே மூவரை பற்றி தான் எழுதியிருந்தேன் ...நான் சென்ற நேர்ம் காலை 9 மணிக்கு அந்த நேரத்திலயே ஆட்கள் தடுமாறுகிறார்கல் ...மாலை 9 மணிக்கு மேல் என்றால் சகித்து கொள்ளலாம் ...காலையிலயே இப்படி என்றால்...அதுவும் வேலை நாள் ஒன்றில்... உங்கன்ட பெயரை சொன்னா டிஸ்கவுன்ட் ஏதாவது கிடைக்குமோ 😀
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
இவர்களும் (என்.பி.பி ) கோத்தாவின் ஆட்சி கவிழ்ப்புக்கு US aidடம் நிதி பெற்று ...மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒர் (கோத்தாவின் )ஆட்சியை கவிழ்த்து தமது "இடதுசாரி "கொள்கையை நிலைநாட்ட செய்துள்ளனர் .ஆகவே இவர்களும் சுத்தமானவர்கள் இல்லை... (இதுவும் ஒர் அரசவிரோத செயல் இது பெரிய பெரிய சக்திகளின் ஆதரவுடன் நடந்திருக்கும்) (இன்று நடைபெறும் பாதாள உலக கொலைகளுக்கும் இதில் பங்கு இருக்கலாம் அது தான் கிளீன் சிறிலங்கா நடை பெறுகின்றதோ தெரியவில்லை யாவும் எனது கற்பனை) இடது சாரி கொள்கை சிறிலங்காவில் தலை தூக்குவதை நாட்டு மக்கள் விரும்பினாலும் ஏனைய புற சக்திகள் விரும்பாது ...1971 ஆம் ஆண்டு "இடதுசாரி" புரட்சியை பயங்கரவாதம் என்ற சொல்லை பாவித்து இலகுவாகஅடக்கி ஒடுக்கிவிட்டார்கள் ...புறசக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும்... இனவாதிகளினதும்,மதவாதிகளினதும் ஆட்சிகள் ஆசியாவில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் ஆட்சியை தொடர முடியும் அதை புறசக்திகள் விரும்பும். ...ஆனால் இடதுசாரி ஆட்சி என்பது மிகவும் கடினமானது.... மேலும் இந்த இடது சாரி ஆட்சி சோறு கிடைக்கவில்லை என்பதனால் திடிரேனே வந்த ஆட்சி ...மக்கள் இடதுசாரி கொள்கையுடன் வாக்கு போடவில்லை ...
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
எங்ளுடைய ஆட்களின் புழுகினால் ஒர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஆட்சி கட்டமைப்புக்கள் குட்டிசுவராக போகாது... அந்த கரட் பெளத்த சிங்களவருக்கு முழுமையா கிடைக்க வேணும் என்ற எண்ணம் இருந்தால் நாடு எங்கே முன்னேறுவது
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆழ்ந்த அனுதாபங்கள் ... பி.பி.சி தமிழ் என்றால் ஆனந்தி அக்கா என்ற நிலை இருந்தது ஒரு காலத்தில்
-
சும்மா ஒர் பதிவு
முன்பு கண்டுகொள்ளாமல் விட்ட சில விடயங்கள், வயசு போக போக தான் அதன் முக்கியத்துவம் தெரிய வருகிறது ... உண்மை கோவில் சிற்பங்கள் ,எமக்கு சில புரிவதில்லை ஆனால் அதை சில தமிழக இளைஞர்கள் நன்றாக் ஆர்ச்சி செய்து விள்க்கம் கொடுக்கின்றனர் .... பல கோவில்கள் இடிக்கப்பட்டும் இருக்கின்றன ..அதன் கல்வெட்டுக்கள் எழுதிய கற்களை வீதி பாலம் அமைக்க பாவித்துள்ளார்கள்... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் தமிழ் நாட்டில் மழைத்தண்ணீரை குழாய்கிணற்றுக்குள் அனுப்பும் சில பொறிமுறைகளை அறிமுக படுத்தியுள்ளனர் ... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ..