Everything posted by putthan
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
இவர் கூறும் பகுதிகளில் தமிழரசு கட்சிக்கு கிளைகளே இல்லை பிறகு எப்படி வாக்குக்கள் கிடைக்கும்..1977 ஆம் ஆண்டில் இருந்த நிலை இப்ப இல்லை என்பதை இவர் அறிவார் என நம்பலாம் .😇
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
ஒரு வழி உண்டு அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே உருவாக வேண்டும் ... இவர்களுக்கு பொது மக்கள் பணம் கொடுப்பதை தடுக்க வேணும்,இவ்ர்களுக்கு வேறு சக்திகள் பணம் கொடுக்கின்றனவோ தெரியவில்லை ... ஒர் தலை சிறந்த போராளியை கொச்சைப்படுத்த இவர்கள் செய்யும் செயல் இது ,அத்துடன் சில சக்திகளின் நீண்ட நாள் தேவையும் அதுதான்,,,இது ஒர் தொடர்கதை...
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
சுவிஸ்லாந்து ஏன் இந்த விடயத்தில் அதிக அக்கறைகாட்டுகிறது?இந்தியாவுடன் சேர்ந்து வேறு பல புலனாய்வு சக்திகளும் செயல்படுகின்றது போல தெரிகிறது ...தமிழன் நலன் கருதியல்ல தங்கள் நலன் கருதி இதில தலையிடுகின்றனர்..சுவிஸ்லாந்து தூதுவர் சிறிலங்காவில் அறிக்கை எல்லாம் விடுகின்றார்... இந்தியாவிலிருந்து செயல்ப்ட்டால் சிங்களவர்களை பகைத்து கொள்ள வேண்டி வரும் என்ற காரணத்தினால் மேற்குலகுடன் சேர்ந்து செயல் பட தொடங்கிவிட்டார்கள் போல... உலக சமாதான முகமூடிக நாடுகள்,(நோர்வே) உலக நடுநிலை முகமூடி (சுவிஸ்லாந்து) அமெரிக்கா சில விடயங்களை நேரடியாக கையால்வதில்லை.தங்களது முகவர்களினூடாக தான் செய்வார்கள் . உலக சமாதான முகமூடிக நாடுகள்,(நோர்வே) உலக நடுநிலை முகமூடி (சுவிஸ்லாந்து) புலம்பெயர்ந்த விடுதலை போராளிகளை அடையாளம் காண்பதற்கும் இது உதவலாம் ..
-
இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
ஜெ.வி.பி அரசாங்கம் காணும் கனவு வாழ்க்கைக்கு இது சரியாக இருக்கலாம்... ஒரு இறாத்தல் பாணை 4 துண்டுகளாக வெட்டி ஒரு துண்டு பானும் பொல் சம்பலும் காலையிலும். மதியம் கிறிபத்தும் அதே பொல் சம்பலும் ,கருவாடும். இரவுக்கு மரவள்ளி கிழங்கும் பொல் சம்பலும் ... மக்டொனால்ட்,பிசா,கெ.எஃப்.சி போன்ற முதலாளிகலின் கடைகளை அடுத்த தேர்தலுக்கு முதல் பூட்ட வேண்டும் 😅
-
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
நீங்கள் தப்பாக நினைக்கிறீர்கள்😅...கடாபி ,கஸ்ரோ போன்றவர்களும் தங்களது மெய்பாதுகாவலர்களாக பெண்களை வைத்திருந்தார்கள் ..காரணம் பெண்கள் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ..😂.
-
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
ஓஷோ வின் புத்தகத்தை கையில் வைதிருக்க வேணும் ஏதாவது சந்தேகம் வந்தா ஓஷோவை துணைக்கு இழுக்கலாம்..
-
இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
கிராமப்புறங்களில் சொந்த வீடு இருப்பவர்களுக்கு ஓரளவு சரி...கொழும்பில் கேள்வி குறி...
-
குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்
அவரும் பாவம் தான் ...ஆளுனர் தமிழர் ...பிராந்திய காவல் துறை அதிகாரிகள் சிங்களவர்கள் ...நாட்டின் ஜனாதிபதியே பொலிஸ்படை,பாதுகாப்பு படையை சுத்தம் செய்ய இன்னும் ஐந்து வருடங்கள் செல்லும்... மேலும் பொலிஸ்மா அதிபர் (.ஐ.ஜி.பி)யையே வலை போட்டு தேடுகின்றது அனுரா அரசு பிறகு எப்படி மக்கள் பொலிஸ்படையை எதிர் பார்க்க முடியும்... தேடப்படும் பொலிஸ்மாதிபரின் சிபார்சில் பொலிஸ் படையில் இணந்த பொலிசார் கணிசமானவர்கள் இருப்பார்கள்..
-
குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்
இனி என்ன இவருக்கும் ஏதாவது முத்திரை குத்தி முகப்புத்தகம்,யூ டியுப்களில் பதிவுகள் வரும் அதற்கு கருத்து பின்னூட்டம் இட காவாலி கருத்து படை முன்வரும்..
-
இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
என்ன? 16000 ரூபாவா ?ஒரு மாதத்துக்கு ...நம்ப முடியவில்லை
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
சிறிலங்கா இஸ்லாமிய சமுகம் சர்வதேச இஸ்லாமிய சமுகத்துடன் நேரடியாக தொடர்புடையது.அவர்கள் மன்னிப்பு கேட்டால் அது உலகலாவிய இஸ்லாமியர்களை பாதிக்கும் என்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.. இஸ்லாமியனாக பிறக்காவிட்டால் அவன் "கறாமி"பாவி "யகுதி" என்ற கொள்கையை உடையவ்ர்கள் ..அவர்களிடமிருந்து மன்னிப்பை எதிர் பார்க்க முடியாது முக்கியமாக வேற்று மதத்தினர்... பலஸ்தீன விடுதலைக்கு சிறிலங்காவிலிருந்து குரல் கொடுப்பார்கள்
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
உண்மை ,ஆனால் எதிர் கருத்துக்கள் ஆரோக்கியமான எதிர் கருத்தாக இருக்க வேண்டும் ...
-
இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ
அது சரி ...சிங்களவர்களுக்கு நடந்தால் அது சித்திரவதை படு கொலை .... தமிழர்களுக்கு நடந்தால் அது தேசிய பாதுகாப்பு அதை தான் நாங்களும் சொல்கின்றோம்...1958,77,83....நடந்த சம்பவங்களுக்கு உடனடி தீர்வை நீங்கள் வழங்கியிருந்தால் இன்று நீங்களும் உங்கன்ட அப்பாவும் இங்கு அரசியல் பேசும் நிலை வந்திருக்காது
-
ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்
நல்ல காலம் ரணிலுக்கு வயசு போய்விட்டது இல்லையென்றால் சிறியர் பார்வையினால்...🤣
-
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
காற்றுள்ள போதே தூற்றி கொள்....இதன் அர்த்தம் வயசு போக போகத்தான் புரிகின்றது ..ஆகவே இனியும் காலம் தாழ்த்தாது .."வெளிக்கிடடா ஈஷா "க்கு என மனதுக்கு சொல்லி போட்டு வெளிக்கிடுங்கோ ..
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
பிரபாகரனை பற்றி உவங்கன்ட பாராளுமன்றில் பேசுவதில் எந்த வித பிரயோசனமும் இல்லை ...அப்படி பேசினாலும், பேசுபவர் பிரபாகரனின் பெயரை,கொள்கையை கலங்கப்படுத்தாத வகையில் பேச வேணும். ஆனால் இவர் பல குறுக்கு வழிகளை தன் சுயலாபத்துக்கு பயன் படுத்துகின்றார்.அவர் பேச வேண்டிய விடயங்கள் பல இருக்கு அதை விடுத்து பிரபலம் அடைய வேணும் என்பதற்காக ஊர் கொசிப்புக்களை பாராளுமன்றில் பேசுகின்றார்...என்பது என் கருத்து
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல. நான் இங்கு அர்ஜூனாவுக்கு ஆதரவாக பேசவில்லை ..அவரையும் சரி அவரது அடிமை சிங்கள அடியானையும் எங்கும் ஆதரவிக்கவில்லை ஆதரிக்க போவதுமில்லை. அர்ஜூனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடை பெற்ற முறைகேடுகளை வெளிகொண்டு வந்த விதமே பிழை ,அப்பொழுதே சில வைத்திய அதிகாரிகள் இது பற்றி சுட்டி காட்டினார்கள் ஆனால் "ஊழல் ஒழிப்பு "என்ற மாயை சுயமாக சிந்தித்து செயல் படும் எங்களுடைய ஆற்றலை மறைத்து விட்டது... அன்று தொடக்கம் இன்று வரை அவர் செய்யும் செயல்கள் யாவும் முட்டாள் தனமாகவும்,விசமதனமாகவும் வக்கிரமாகவும் இருக்கின்றது. மக்களுக்கான பொது சேவையில் ஈடுபடும் ஒருவருக்கு/ஒருத்திக்கு சுய ஒழுக்கம் முக்கியமானது .இதை பற்றி தெரிந்திருந்தாலும் "தனி மனித சுதந்திரம்"என்ற ஒர் அதிபுத்திசாலிதனத்தை சொல்லி மறைத்து விடுகின்றோம். "இலவச மருத்துவம்,இலவச கல்வி" இவை யாவற்றையும் இல்லாமல் பண்ணி தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதற்கு "ஊழல்"என்ற மாயை பயன்படுத்தி வேறு சக்திகளுடன் செயல் படுகின்றாரோ என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ...வடமாகாணத்தில் ஊள்ளூராட்சி மன்றங்கள்,வடமாகாணசபை போன்றவற்றை கைப்பற்றி அங்கு தனியார் கல்வி,மருத்துவ துறைபோன்றவற்றை ஊக்கப்படுத்தும் முயற்சியோ தெரியவில்லை. அயல்நாட்டில் கல்வி,மருத்துவம் போன்ற்வை பெரிய மாபியா வியாபாரம் ..அந்த நிலையை இங்கு கொண்டுவர முயற்சிகள் நடை பெகின்றதோ தெரியவில்லை... இவர் பாராளுமன்றம் சென்று இதுவரை செய்த நல்ல காரியம் எது?ஒன்றுமில்லை ஆயிரம் தடவை பிரபாகரனின் பெயரை சொல்லி அவருக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் இனம்,அமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விடயத்தை தவிர.. யூ டியுப்பர்கள்,வாகன விபத்துகள்,விபச்சாரம் போன்றவற்றை பாராளுமன்றம் சென்று பேசும் ஒர் ...தியம் தான் ... அவருக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...அவரின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தவர்கள்,அவரின் "ஊழல் ஒழிப்பு"நாடகத்தை உண்மை என நம்பியவர்கள் முட்டு கொடுக்கலாம் ...இவனுக்கு முட்டு கொடுத்து எனக்கு ஒர் லாபமும் கிடைக்க போவதில்லை .. அமிர்தலிங்கத்துடன் இவரை ஒப்பிடவே முடியாது .அவருடைய கால் தூசிக்கு கூட ஏன் அவரின் செருப்பு தூசுக்கு கிட்ட வரமுடியாது ..அந்த விளக்கம் எனக்கு இருக்கு ... இவர் பேசுவதும் அரசியல் ,நான் கூறியதும் அரசியல் வ்...விவாதம் என்ற பெயரில் சில கருத்துக்களை மட்டும் மெய் என நிருபிக்க முயல்வதும் அரசியல்...சில இனங்களுக்கு முட்டு கொடுப்பதற்கு சில இனக்களின் அழிவுகளை மறைத்து ,விவாதம் திசை திரும்புகின்றது என்பதும் அரசியல் ...
-
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
ஜல சமாதி,ஜோதியில் சமாதி ...தாங்க முடியல்லடா சாமி ... அவருக்கு (சத்குருவின் மகளுக்கு) தொண்டு செய்கின்ற பிளான் ஏதாவது...😅
-
பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகளை உடைக்கப்படும் - பிரதமர்
நல்ல விடயம்
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
- ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
உண்மையா..- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
சித்திரவதை செய்து படுகொலை செய்ய உதவிய ரணில்,இனப்படுகொலை செய்த ராஜபக்சாக்கள்,தொழிற்சாலைகள் எரித்து இனக்கலவரங்களை தூண்டி சோசலிசம் வளர்த்த கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமர்களாகவும் இருக்கும் நாட்டின் ... கிராமத்திலிருந்து போனவான் பாராளுமன்றத்தில் உளறுவதால் படித்த யாழ்ப்பாணத்தானின் மானம் போகுது என் அழுவது கொஞ்சம் ஒவர்.... தலைவரின் பெயரை தன் சுயநல அரசியலுக்கு பயன் படுத்தும் பொழுதே வைத்தியர் பைத்தியம் என புரிந்திருக்க வேணும் ..- ரணிலும் ஜெ.வி.பி யும் விசாரிக்கப்பட வேணும்
- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
அவ்வளவு அக்கறை சிறிலங்கா அரசியலில் ...எங்கே எப்ப வேட்டு வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ...ஜெ.வி.பி தமிழ் எம்.பிக்களை விட சுமத்திரனின் தமிழ் தேசிய ஆதரவு பயன் தரலாம்...என நான் நினைக்கிரேன்...ஜெ.வி.பி தமிழ் எம்.பிக்கள் அவர்களது தலமை/மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ற வகையில் தான் கருத்து சொல்ல முடியும் ஆனால் நம்ம சுமோ சொந்தமாக செயல்பட முடியும்...- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
🤣நீங்கள் இப்படியான அறிவு பூர்வமான கேள்விகளை கேட்டு எங்களை கொதிப்படைய வைக்க வேண்டாம என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் சுமோ&அனுரா தேசிய கூட்டமைப்பு😅 - ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
Important Information
By using this site, you agree to our Terms of Use.