Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. என்ன இப்படி சொல்லி போட்டியல் ,அனுரா தோழர் 2024 மீண்டும் அழைத்து வந்துவிட்டாரே அவரை..அதுவும் மலையகத்திலும் வடக்கிலும் குடியேறி விட்டார் . அப்ப துப்பாக்கியை சட்ட புத்தகத்தில் கடத்தியவர் வைத்தியரா?😂
  2. விசுவாச அரசியல்வாதியின் அறிக்கை மயானம் என்றால் எழும்பு கூடு இருக்கத்தான் செய்யும்...தமிழ் தேசியவாதிகள் சிறிலங்கா தேசியத்தை சிதைக்க இப்படியான அறிக்கைகளை வெளியிடுகின்றனர் ... சிறிலங்கா தேசியவாதிகள் சுத்தமானவர்கள் ,கறை படியாதவர்கள் ,பூலோகில் வாழும் புத்தர்கள் ... மனிதர்களை புதைக்கும்பொழுது குரல் எழுப்பாமல் இப்ப வந்து ஏன் அரசியல் செய்கின்றனர் தமிழர்கள்?அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகளில் விரும்பிய செயலை செய்ய அரசுக்கு உரிமை உண்டு ...முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்து போட்டு பயங்கரவாதிகளை கொலை செய்தோம் என பகிரங்காமாக திரியும் எங்களுக்கு இந்த இரண்டு மூன்று எழும்புகூடுகள் ஒன்றும் பெரிய விடயம் அல்ல ...
  3. தோழரின்ட படை துரத்தி பிடிச்சிடுது....முன்பு இருந்த அரசுகளின் சதி ...
  4. ஆரம்ப பாடசாலை அதிபர்கள்,மற்றும் உயர் கல்வி அதிபர்களினால் கேட்க பட்ட‌ சில உதவிகளின் பட்டியல். 1)உணவு சமைத்து கொடுக்க சட்டி பானை மற்றும் கட்டிட தொகை 2) ஆசிரியர்களின் மோட்டார்சைக்கிள்நிறுத்த தரிப்பிடம் 3)பாடசாலைக்கு என தனியான பேரூந்து(ஏனைய பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு சென்று பங்கு பற்ற) 4)விளையாட்டு போட்டிகள் வைப்பதற்கு (சிற்றூண்டிகள்,கிரிக்கட் என்றால் மத்தியஸ்த்த‌ர்களுக்கு ...) 5)மாணவ தலைவர்களுக்கு பிளேசர் 6)மின்சார கட்டணம் 7) போட்டோ கொப்பி,புல் வெட்டும் இயந்திரம் 8) சிலர் நினைக்கின்றனர் புலம் பெயர்ந்தவர்கள் கட்டாயமாக பணம் கொடுக்க வேணும் என்று..ஏன் அந்த மனநிலையோ தெரியவில்லை ..இன்னும் 10 வருடங்களின் பின்பு யாரும் பணம் அனுப்ப மாட்டார்கள்
  5. இந்து மதத்துக்கு உள்ளே பல ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகிறது அதையே கண்டு கொள்ளாத நாங்கள் சாப்பாட்டு பண்பாட்டையா கண்டு கொள்ள போகின்றோம் ..
  6. எமது பாடசாலை அதிபர் ஒருவர் பழைய இடதுசாரி ...அவர் 45 வருடங்களுக்கு முன்பு எங்களை எல்லாம் அழைத்து சென்று ஊரில் உள்ள குளத்தை துப்பர்வு செய்ய வைத்தார் ,இரண்டு நாட்கள் போனோம் அதன் பின்பு செல்லவில்லை...பிறகு 80 களில் சில இடதுசாரி தமிழ் இயக்கங்கள் மக்கள் மயப்படுத்தல் என அழைத்தார்கள்...அதுவும் இரண்டு நாள். அதன்பிறகு அண்மையில் சென்றிருந்தேன் குப்பை தொட்டியாக பாவிக்கின்றனர்...
  7. ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக‌,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக‌ ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சன‌த்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .
  8. பொலிஸ்காரனின்ட நேரம் வீணாக போனது தான் மிச்சம் ....அத்துடன் நாங்கள் உணர்ச்சி வசப்பட்டு கருத்து சொன்னதும் வேஸ்ட்
  9. நன்றி ..சிறி ...சுய ஆக்கம் தான் ....அதற்கு வேறு எழுதுகிறேன்.. நான் தருமி அல்ல🤣 மற்றவன் எழுதியதை யாழில் எழுதுவதற்கு ...சும்மா பம்பலுக்கு தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்🤣
  10. நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு ...ஆனாலும் அதிகாரத்தை கையில் எடுத்து சண்டியன் போல நடந்து கொண்டது மிகவும் தப்பு ....சட்டம் ஒழுங்கை கவனிப்பதற்கு தோழர்களின் பொலிஸ் படை 24 மணித்தியாலமும் தீயாக வேலை செய்கின்றனர் ...இவர் அந்த இடத்தை விட்டு அகன்று சென்று பொலிசை வரவழைத்து இருக்க வேணும்... மற்றவனின் மூக்கு மட்டும் தான் கையை நீட்ட முடியும் ..இது தான் உலக சட்டம் ...சிறிலங்கன்ஸுக்கும் இது பொருந்தும் ...யாழ் மாவட்ட ஜெ.வி.பி ,எம்.பி இளங்குமரன் சுதந்திர கட்சியின் முன்னாள் எம்.பி யின் அப்பாவுக்கு சொன்ன வசனம்...... மருத்துவர்,எம்.பி இப்படி செய்தால் எப்படி சாமனியன் நடந்து கொள்வான்
  11. இரண்டும் ஒன்று தான் அதாவது ஒரே முகாமைத்துவத்தின் கீழ் வருகின்றது ...உணவகம் நல்லது நானும்... இரண்டு மூன்று தடவை நண்பர்களுடன் சென்று உணவு மற்றும் உற்சாக பாணம் அருந்தியுள்ளேன்.. . முன்னாள் போராட்ட அமைப்புக்களில் இருந்தவர்களின் ஹொட்டல் என ஆரம்ப காலத்தில் பேசப்பட்டது உண்மை பொய் தெரியவில்லை ...
  12. அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம் கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ... கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது. தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை... நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ? ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக. வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும் பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ... ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர். எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட சாக்குகளை உபயோக படுத்த முடியாது.. பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் .. இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் .. அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே) செய்வது கடினம் .
  13. இவருக்கு எத்தனை வாழ்க்கை துணை...?...இவர் வாழ்வது கற்காலம் அல்ல முன்னேறிய காலம் ஆகவே ஒரளவு மனித நேயத்துடன் இருக்க வேணும் ...இவர் பொது வாழ்க்கைக்கு வந்தௌ விட்டார் என்றால் அதற்கு ஏற்ப சமுகத்தில் பெரும் பான்மை என்ன செய்கின்றனரோ அது போல செயல் பட வேணும் அதை விடுத்து காவாலி போல நட்ப்பது ஏற்று கொள்ள முஇயாது ...பொது வாழக்கைக்கு வராத நபர் எதுவும் செய்யலாம் ..ஆனால் மக்களின் வாக்கு பெற்று வந்த நபர் மக்களின் விருப்பப்படி நட்க்க வேண்டும்.
  14. இது தான் மிகவும் கவலை தரும் விடயம் ... திராவிடத்தை தமிழ் தேசியமாக மலர வைக்க வேண்டிய கடமை தமிழக‌ தமிழருக்கு உண்டு
  15. அது வேற வாய் இது நாற வாய்..என நகைச்சுவையாக சொல்வார்கள் அது இதற்கு நன்றாக பொருந்துகின்றது ...
  16. தப்பு தனிகாட்டு ராஜா ..இது உயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டப்பட்டது ....மக்களுக்கு அப்பொழுது அருகிலும் செல்ல முடியாத நிலை ..காணிகள் விடுவிக்க பின்பு தான் அங்கு விகாரை கட்டியது தெரிய வந்தது... முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் அடிகல் நாட்டினவர்......மக்கள் எப்பொழுது சென்று பார்க்க முடிந்ததோ அப்பொழுது தொடக்கம் போராட தொடங்கி விட்டார்கள் ...
  17. இதுக்கு ஒரு கருத்தையும் காணவில்லை...தேசியம் பேசியவையள் பிழை விட்டால் பக்கம் பக்கமாக போகும்🤣
  18. புத்தர் உலக மக்களுக்கு ஒளி கொடுக்க உழைத்தார்....நம்ம சிறிலங்கன்ஸ் புத்தருக்கே ஒளி கொடுக்கிறாங்கள் ...
  19. வலதுசாரி குரங்கு போல இருக்கின்றது ...வழமையாக இடப்பக்கம் பாயும் இந்த குரங்கு தோழர் இன்று எதிர்கட்சி,மற்றும் முன்னாள் அரசுகளின் தூன்டுதலினால் வலப்பக்கமாக பாய்ந்து..ஜெ.வி.பி தோழர்களின் ஆட்சிக்கு ஆப்பு வைக்க முயற்சித்துள்ளது..
  20. அகில இந்தியா போட்டிகளில் ..இந்தியாவின் 12 மாநிலங்கள் சரி....இலங்கை,பூட்டான்,பூட்டான் இவைக்கு என்ன வேலை அகில இந்தியா போட்டியில் ...அகன்ற பாரதம் என்ற நினைப்போ?அல்லது அதற்கான முன்னெடுப்போ?🤣 🤔
  21. ‍ஹாமாசின் தேவை மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகளின் தேவையும் ,விருப்பமும் அதுதான் ,அதாவது இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவது...35 வருடங்களுக்கு முன்பு சவுதியில் உள்ள தகாரான் விமான படை தளத்தில் வேலை பார்த்தனான் .விமானபடை தளத்தில் உள்ள கட்டிடங்களின் எயர்கொண்டிசன் திருத்த வேலைகளுக்கு செல்லும் பொழுது அங்கு உள்ள வகுப்பறைகளில்(விமானபடை அதிகாரிகள் பயிற்சி பெறும் வகுப்பறைகள்) உள்ள உலக வரை படத்தில் இஸ்ரேலை மார்க்கரினால் அழித்து வைத்திருப்பார்கள் ...அந்த அளவுக்கு இஸ்லாமிய உலகம் வெறுக்கின்றது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.