Everything posted by putthan
-
போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை நியமிக்க தீர்மானம்
உலகின் முதல் பெண் பிரதமர் உங்கன்ட நாடு என மார் தட்டுறீயல் இன்னும் பெண்களை இந்த திணைக்களத்தில் இணைக்கவில்லையா
-
கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல்
ஒரு ரோயலிஸ்ட் இப்படி செய்யலாமா? ஒ வட் ஏ செம்... அந்த குருசை வைத்து ஆடியது கிரிஸ்தவரா? பெளத்தரா? இந்துவா? இஸ்லாமியனா? கிறிஸ்தவனாக இருந்தால் நாங்கள் மன்னிப்போம் ..ஆசிர்வதிப்போம்.. ஏனைய மதத்தினர் என்றால் நாங்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம் ....நாட்டில் பிரிவினையை தூண்டும் செயல் இது
-
மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
எனக்கு ஒரு சந்தேகம் ...தப்பா நினைக்காடையுங்கோ ...விமானம் கட்டுநாயக்காவில் இறங்கும் பொழுது பழுதடைந்து விட்டது என்றால் எப்படி மீண்டும் மத்தள விமானநிலையத்துக்கு எடுத்து செல்வது ...கட்டுநாயக்காவிலிருந்து மத்தளத்துக்கு நீண்ட ஒடு பாதையை சீனா போட்டு கொடுக்குமோ?
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
இவர் புலம் பெயர்ந்தவர் அல்லோ ...தற்பொழுது அங்கு வசிப்பவர் ஆகவே தான் அக்கறையாக இருக்கிறோம்😀...பல தாயகத்தில் வாழும் யூ டியுப் காரார் சாப்பாடு சிறுவர்களை படம் பிடித்து போட்டுள்ளனர் ...
-
பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்!
பாக்கிஸ்தான் நாட்டில் பிரிவினை கோரும் தேசிய இனங்களின் போராட்டத்தை "விடுதலை இயக்கம் " என கூறுவது தங்கன்ட நாட்டில் நடை பெறுவதை பயங்கரவாதம்,குண்டர்கள் என விமர்சனம் செய்வது...
-
லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி!
அது வந்து சிங்களவர்கள் வட இந்திய கோமாளி கொள்கை வகுப்பாளர்களை நன்றாகவே மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றார்கள் ...என்ட மூக்கும் உன்ட மூக்கும் நீளமானது ஆகவே நானும்(சிறிலங்கா) நீயும்(இந்தியா) நண்பேன்டா .... ஒர் சிங்கள எம்.பி 1980 களில் பாராளுமன்றத்தில் பேசினவர் ஜெ.ஆரின் மூக்கும் இந்திரா காந்தியின் மூக்கும் ஒரே மாதிரி என்று.... சிங்களவர்கள் இப்ப இராவணனும் தங்கன்ட ஆளாம், சூர்ப்பனகையின் மூக்கு தங்கன்ட பரம்பரை மூக்கு என சொல்லுவினம் அதையும் நம்பும் வட் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்
-
லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி!
தேசிய இனங்களின் போராட்டங்கள் உங்களுக்கு பயங்கரவாதமாகவும்,குண்டர்கள்வாதமாகவும் தான் தெரியும்.... காளிஸ்தான் தேசிய இனத்தின் போராட்டத்தை 1984 இல் வன்முறை ஊடாக இந்திய இராணுவ(குண்டர்கள் சட்டம்) அடக்கி ஒடுக்கி விட்டது என மார் தட்டி கொண்டிருந்தார்கள் ..இப்பொழுது என்ன திடிரேன கனடா,இங்கிலாந்து என தாக்குதல் தொடங்குகின்றது ....
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
என்னப்பா இதுவும் சாவகச்சேரியில் நடந்ததா?யூ டியுப் ஊடாக எம்.பி பிரபலமான மாதிரி தானும் பிரபலமாகலாம் என நினைக்கின்றார் போல... பொலிசாரின் அடாவாடித்தனம்..நீதிமன்றம் பக்கசார்பாக செயல் படுகிறது என அறிக்கைவிடுவார் ,....எம்.பி யை போல
-
அமைதி மணம்
இந்திய இராணுவத்தின் அட்டுழியங்களுக்கு சலைத்தவர்கள் அல்ல சிறிலங்கா இராணுவமும் அதன் எஜமானர்களும். என்பதயும் மறந்து விட முடியாது ...
-
ராணுவ ரகசியம்
அவர்களுக்கு(இந்திய இராணுவத்துக்கு) பலாலியிலும்,கொழும்பிலும் நினைவு தூபி உண்டு ...இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க போராடியவர்கள் என்ற செய்தி தான் அடுத்த தலமுறையினருக்கு (சிங்கள,தமிழ்)தெரிய வரும் . ,கடத்தப்படும்..... 1971 ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சியின் பொழுது அதை அடக்க வந்த இந்திய இராணுவத்தினர் எவரும் பாதிப்படயவில்லை போலும்..
-
ராணுவ ரகசியம்
மாலை தீவு எம்.பிக்கள் இருவர் பல பதிவுகள் போட்டது ஞாபகம் வருகின்றது 15 வருடங்களுக்கு முதல் அவுஸில், இப்பொழுது இருக்கும் சனத்தொகை போன்று இந்தியர்கள் இருக்கவில்லை .ஒரு நாள் வட இந்திய தொழிலாளி ஒருவர் எமது தொழிற்ச்சாலையில் வேலைக்கு வந்தார் ..ஏனைய நாட்டு தொழிலாளிகள் எல்லாம் வித்தியசமாக் அவரை பார்த்தனர் ..சற்று நேரத்தில் எனையோர் என்னிடம் வந்து நீ அவனுக்கு கிட்ட போய் பார்...என சொன்னார்கள் ...உண்மையிலயே அவர் நின்ற இடம் வித்தியாசமான வாடை வந்தது உண்மை தான் ....அவர்கள் வைக்குமொரு வித எண்ணைய் மற்றும் சல்வை செய்யாத உடைகள் என நினைக்கிறேன்...
-
பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா...
அவர்(மயூரன்) தங்கம் அல்ல ..பித்தளை ... தங்கம் சென்றால் பாராளுமன்றம் சும்மா அதிருமல்ல
-
தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா?
சில யாழ் கள உறவுகள் எழுதும் கருத்தும் இதே மாதிரி இருக்கே."சிங்கள தரப்பும், அதி தீவிர தமிழ் தேசிய விரோத சக்திகளும் உலகுக்கு காட்ட வசதியாக இருக்கும் 👍
-
அதானி நிறுவனத்தின் எதிர்கால நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக கோரியுள்ள அரசாங்கம்
என்ன பெரியண்ணன் கோவித்து கொண்டாரோ ?திடிரேன எழுத்து வடிவில் கேட்கினம் ...ஐந்து வருடத்திற்கு கடித போக்குவரத்திலயே காலம் கடத்தி பெரியண்ணையை பேய்கட்டலாம் என நினைக்கினம் போல ..
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அந்த கக்கல் தானே இன்று தமிழ் தேசியம் உருவாக காரணம் ....புலம் பெயர் தற்குறிகளின் இனவாத செயல்களினால் ஏனைய தேசிய இனங்கள் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக கிளர்ந்து எழும் என எண்ண முடியாது....காரணம் ஏற்கனவே பல இனவாத வன்செயல்கள் அங்கு நடை பெறுகின்றது ...
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
தலைவர் பிறந்த மண்ணிலயே சிங்கள தேசியவாதிகளுக்கு ஆதரவாக மக்கள் நிற்கும் பொழுது நாங்கள் தமிழக தமிழ் தேசியவாதிகளை குறை சொல்ல முடியாது .. தமிழகத்தில் தமிழ் தேசியம் வளர்ந்தால் நல்லது ஆனால் அதையும் நம்மவர்கள் விரும்பவில்லை போல தெரிகின்றது... புலம்பெயர் தமிழ்தேசியவாதிகள்,தமிழக தேசிவாதிகள் சொல்வது செய்வது எல்லாம் பிழை....சிறிலங்கா சிங்கள தேசியவாதிகள் வடிக்கும் முதலை கண்ணீர் மட்டுமே சிறந்தது என நினைக்கும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்வார்கள்
-
யாழில் பாதிக்கும் 400 தென்னைகள்! இலகு தீர்வு
பார்த்தேன் பகிர்ந்தேன் ...சரியோ பிழையோ என அதெரியவில்லை
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
விமோசனம் இருக்கு ....உங்கள் ஜாதகப்படி இப்பொழுது இனபடுகொலையாளிகள் வக்கிரமடைந்து இடதுசாரி ஆட்சியின் உச்சத்தில் உள்ளது இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த ஆட்சி தொடரும்,இந்த கால கட்டத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக செயல் பட வேணும் ,யாழ் கள உறவுகளுடனோ',ஏனைய நண்பர்களுடனோ கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்.... பரிகாரம்..உங்களுக்கு விரும்பிய பூக்களாகிய லைக்,ஹா ஆஹா,தடுமாற்றம்,சோகம்,மைனஸ்1 போன்ற பூக்களை போட்டு உங்களுக்கு வரும் மனதொல்லைகளில் இருந்து விமோசனம் பெறலாம்.. மைனஸ்1 பூஜைக்கு உகந்தது அல்ல ...அதை பாவிக்கும் பொழுது மிகவும் அவதானம் வேண்டும்.. இனபடுகொலையாளிகளை இனப்படுகொலையாளியாக பாருங்கள் ....அவர்களை ஆதரியுங்கள் வரவேற்பு செய்யுங்கள் ....(தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை மட்டும்...உங்கள் ஆதர்வுக்கு ட்ரம்ப் மற்றும் நெத்தியாகுவை துணைக்கு வைத்திருங்கள் ... ஏனைய இனங்களை(தமிழர் அல்லாத ) படுகொலை செய்தவர்களுக்கு எதிராக குரல் கொடுங்கோ....ஹமாஸ்,பலஸ்தீனம்....ஆதரவாக ...
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
ரசியுங்கோ...இன்று தமிழில் பாடுவது ,தமிழில் அரசியல் பேசுவது எல்லாம் தமிழுக்கே ஆபத்தாக வந்து நிற்கும் ..அது தான் நியதி,நியாயம் என்றால் யாரால் தான் தடுத்து நிறுத்த முடியும்...
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
பாராட்டுவேன் ஆனால் எனக்குள்ளே சிறிலங்கா தேசிய வீரன் பல வருடங்களாக ..ஒழிந்திருக்கிறானே அவனை வெளிக்காட்ட இதுதான் சரியான சந்தர்ப்பம்😂 அந்த காவாலிகளுக்கு கஞ்சா வாங்கி கொடுத்து குழப்ப சொல்வது யாரோ ... உள்ளே சிறிலங்கா தேசியம் வெளியே தமிழ் தேசிய ஆதரவாக செயல்பட்டு ...தமிழ் தேசியத்தை சிதைக்க பல செயல்பாட்டாளர்கள் களம் இறங்கியுள்ளனர்...அவர்களை இனம் காணுவது மிகவும் கடினம்...மேலும் இந்த போலி இடதுசாரி ஆட்சி வந்த பின்பு தமிழ் தேசியத்தை இலகுவாக சிதைக்க கூடியதாக உள்ளது ..யாழ் நூலகத்தை எரித்தவர்களின் வாரிசுகள் அதை வைத்தே அரசியல் செய்கின்றனர் ....ஆனால் இனப்படுகொலை செய்ததை ஏற்று கொள்ளவில்லை ..இன்றுவரை மன்னிப்பும் கேட்கவில்லை.... யாழ் மாவட்ட செயலாளர் ஒருவரின் மகன் கார் விபத்தில் காயம் அடைந்த செய்தி யாவரும் அறிந்த ஒன்று ...அந்த வாகனம் அரச வாகனம் இல்லை என சில ஊடகங்கள் செய்தி வெளிட்ட பொழுதும் ...பாராளுமன்றில் சுயேட்சை பிரதிநிதியும் ,யாழ்களத்திலும் சில உறவுகளும், அது அரச வாகனம் என குரல் கொடுத்து சிறிலங்கா தேசிய விசுவாசத்தை காட்டினர்.
-
அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு
சில ஊடகவியாளலர்கள் முன்பு அதிரடி படையில் பணி புரிந்தவர்களோ தெரியவில்லை ..பாதாள உலக குழுவினர் போன்று... அநுரவின் அதிரடி அறிவிப்பு எதற்கு எடுத்தாலும் ..."அனுராவின் அதிரடி நடவடிக்கை" என தலையங்கம் போட மறக்க மாட்டார்கள்....அதிரடி என்றால் என்ன எனதெரியாது போல ....சட்டம் சம்பந்த பட்ட விடயங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது .... போர போக்கை பார்த்தால் இன்று தோழர் அதிரடியாக மலம் கழித்தார்,சலம் கழித்தார் என செய்தியை போடுவினம் போல அவ்வளவு ஜெ.வி.பி பற்று
-
அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு
ஆஹா,ஆஹா ..... இன்டபோலினால் தேடப்பட்ட கே.பி (புலிகளின் உறுப்பினர்)அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கின்றீர்கள் அல்லவா? பிறகு எப்படி நீங்கள் இந்த வெள்ளை கொலர் குற்றவாளியை அவர்களிடம் பிடிச்சு தா என கேட்க முடியும்...அவர்களும் தர மாட்டார்கள் ..அவர்களின் இறையாண்மையை மீறிய செயலாக நினைப்பார்கள்.. அது.
-
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!
பணிப்பாளரை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடக்கின்றது ...நல்ல சேவைகள் செய்தால் சிலருக்கு பிடிக்காது ...அனுரா யாழ் வைத்தியசாலைக்கு வந்த பொழுது அவரை சுற்றி நின்ற பலர் சார்,சார் என ஒவ்வொரு கருத்து சொல்ல முதலும் ,முடியும் பொழுதும் ஒரே சார் புராணமாகவே இருந்தது ...ஆனால் பணிப்பாளர் மட்டுமே அங்கு "சார்" புராணம் பாடவில்லை ... அனுராவுக்கு பணிப்பாளரின் சில செயல்கள் கவர்ந்திருக்க வாய்ப்பு உண்டு ...அறிந்தும் இருப்பார் ...பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்...ஜனாதிபதி ,மற்றும் ஆளுனரின் தீர்ப்புக்கள் எப்படி வருகின்றது என...
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
- நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்!
எங்கே நம்ம யாழ் மாவட்ட ஜெ.வி.பியின் எம்.பி... யாழ் வைத்தியசாலையில் முதலில் தொழில் சங்கங்களின் போராட்டத்தில் முன்னுக்கு நின்றவர் அவர் அல்லோ? வன்னி மாவட்ட சகாவுடன் நாய் பிடிக்க போய்விட்டாரோ?... - நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.