Everything posted by putthan
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
வேலையில் இருக்கும் பொழுது ஒரு பொஸ் ,ஆனால் இளைப்பாறினால் பக்கத்து வீட்டுக்காரியும் பொஸ்...சும்மா தானே நிற்பியள் எங்கன்ட நாய்குட்டியை வோக்கிங் கூட்டிக் கொண்டு போறீயளே என்று கேட்கினம்....நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் இதுவும் கடந்து போகும் என தெய்வீக பாசையில் கூறி நிம்மதி அடையலாம் வேற வழி...எடுபிடி வேலை செய்வது எவ்வளவு கஸ்டம் என இப்ப தான் தெரியுது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
நீங்கள் சீனியர் என்று சொல்லுறீயல்...நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ..🤚 பயப்பட வேண்டிய அவசியம் இல்லை இரண்டு நாள் போக நாங்களே விரும்பி செய்வோம் ...நேரம் போக வேணுமல்லோ ..வருகைஇக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி உண்மை .....😂பிறகு யாரும் உத்தரவு போடமுதல் நாங்களே செய்து போடுவோம் ...எள் என சொல்லும் முன் எண்ணையாக நிற்போம்... நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை தான் வருகிறதே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான். சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்டவர் கூறியதை இவனால் கடைப்பிடிக்க முடியாததும் மட்டுமல்ல அது புரியவுமில்லை. என்ன செய்வது எனதெரியாமல் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் அவனின் மென்டோர் கந்தரின் ஞாபகம் வரவே தொலைபேசியை எடுத்தான். போனை எடுத்து நம்பரை டச் பண்ண "இஞ்சயப்பா யாருக்கப்பா போன் பண்ண போறீயல் "இளைப்பாறிய பின் 24/7 அவனை கமரா கண் கொண்டு அவதானிக்கும் அவனது மனைவி கேட்க, "வேற யார் என்ட குரு கந்தருக்கு தான்" "சும்மா எந்த நேரமும் அவருக்கு போன் பண்ணிகொண்டிருந்தா அவற்ற வீட்டில மனிசி என்ன நினைப்பா" போனில் நம்பரை டச் பண்ணுவதை நிறுத்திய கந்தர் "எல்லாரின்ட மனிசிமாரும் உம்மை மாதிரி இருக்க மாட்டினம்,அவரின்ட மனிசி தங்கம்" "தங்கத்தோட எப்ப நீங்கள் கடைசியா கதைச்சனீங்கள்,ஆட்களை கண்டா கதைக்க மாட்டியள் ,சும்மா ஒர் வோமலிட்டிக்கு சிரிப்பும் சிரிக்க மாட்டியல் வந்திட்டியல் அவரிட மனிசி தங்கம் எண்டு கொண்டு" "ஆட்களை பார்த்தாலே தெரியுமப்பா நல்லவரோ கெட்டவரோ " "நீங்கள் பெரிய உளவியல் நிபுனர் ,சாமியார் ,சாத்திரியார்,குறி சொல்பவர்" மனிசி இப்படி உலகத்தில் உள்ள நிபுணர்களை துணைக்கு இழுத்து திட்ட அவனுக்கு புரிந்து விட்டது இதற்கு மேல கதைத்தால் வீடு ஜூலை கலவரமாக மாறிவிடும் எண்டு..அமைதியாக இருந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.கோபம் வந்தா இப்படிசெய்யுங்கள் என யூடியுப் டாக்டர்களின் ஆலோசனப்படி .அவன் மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதை அவதானித்தவள் ,வயசு போன நேரத்தில் இரத்த கொதிப்பை கொடுத்து மனுசனுக்கு என்னாவது நடந்திட்டா என நினைத்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள். கலவரத்தை அமைதியாக இருந்து தடுத்து விட்டதாக நினைத்து ரிமோர்ட்டை எடுத்தவன் டி.வியை ஒன் செய்தான். "மொர்னிங் அப்பா"சொல்லி கொண்டே மூத்தவள் வேலைக்கு போக தயாராக வந்தாள் . "மொர்னிங் மகள்" "டூ டே வட்ஸ் யூ பிளான்,என்ன பிளான் இன்றைக்கு" ""பெரிய பிளான் ஒன்றுமில்லை சும்மா தான் இருப்பன், ஏன்" "வோசிங்மெசினை ஒருக்கா போட்டு உடுப்புக்களை காய போட்டுவிடுறீங்களே" "ம்ம்ம்...."என டி.வியை பார்த்த படி சொன்னான். "இஞ்சயப்பா மகள் சொன்னது கேட்டதே" "ஒம் ஒம் சொன்னது கேட்டது ,ஆனால் எனக்கு மெசினை ஓன் பண்ண தெரியாது ,நீர் ஒருக்கா ஒன் பண்ணிவிடும் நான் எடுத்து காயப்போடுறேன்" "இங்க வாங்கோ காட்டிதாரன் எப்படி ஒன் பண்ணுவது எண்டு" "உதெல்லாம் பொம்பிளைகளின்ட, வேலை நான் ஏன் பழகவேணும்?"என புறுபுறுத்து கொண்டே லொன்றி அறைக்கு சென்றான். "அம்மா ,அப்பா என்னவாம்" "மெசின் ஓன் பண்ணி உடுப்பு காயப்போடுறது பொம்பிளைகலின் வேலையாம்" "ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன் மான்" என மகள் குரலை உயர்த்தி பேச,பயந்து போன அவன் மனையிடம் "ஏன் இப்ப என்னை மாட்டி விடுகிறீர் ,மெசின் ஒன் பண்ண தெரியாது என்று தானே சொன்னனான்" "எப்ப தான் நான் சொல்லுற வேலைகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்திருக்கிறீயல்" "ஏன் செய்ய வேணும் ,நான் பனங்காட்டு ஆண் சிங்கம், சொல்லு கேட்காது" "பெரிய ஆண் சிங்கம் அதுவும் பனங்காட்டில, சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுறது, இதில வீராப்பு வேற,தள்ளுங்கோ நானே ஒன் பண்ணி காயப்போடுறேன்." "
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
மே 18 இனவழிப்பு தினம் அல்ல அது தலைவர் பிரபாகரன் மறைந்த நாள்(புலிகள் இயக்க பயங்கரவாத தலைவ்ர் பிரபாகர்ன் மறைந்த நாள் என உலகமக்களுக்கு பிரச்சாரம் செய்ய புலனாய்வு சக்திகள் செயல் ப்டுகின்றனர்...) ஒரு ஜனநாயக நாட்டுக்கு. இனவழிப்பு என்ற பலிசொல் இருப்பதை அந்த நாட்டின் அதிகார வர்க்கம் விரும்பாது அது ஒர் நீண்ட நாள் கறையாக அந்த நாட்டுக்கு இருக்கும் எனவே இது ஒர் தொடர்கதை... காளிஸ்தான் போராளிகளை கனடா வரை துரத்தி துரத்தி இந்தியா அழிக்க முயற்ச்கின்றனர்...ஆனால் அவர்கள் இன்றும் செயல்படுகின்றனர்...
-
வட மாகாண உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் - ஆளுநர் வேதநாயகன்
இன்று படித்த பாடசாலைக்கு சென்றால் வகுப்பறைகள் அழகாக இருக்கின்றது ஆனால் மாணவர்களின் பெறுபேறுகள் (ரிசல்ட்) அழகாக (நன்றாக) இல்லை ..அன்று எதிர்மறை... இன்று இந்த கட்டிடத்தில் உள்ளவர்களை பார்த்தால் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பவர்கள் போல தெரிகின்றது ..ஆனால் ஆளுனர் உரையை பார்த்தா 50 வ்ருடங்களுக்கு முதல் இருந்த நிலையில் இன்னும் வடமாகாணம் இருக்கின்றது போல தெரிகின்றது
-
பயந்தாங்கொள்ளி
நீங்கள் ஒர் தமிழ் "அனுரா"😂 அனுரா உங்கள் பல்கலைகழக சக தோழர் என்பது இந்த செயலில் இருந்து தெரிகிறது..😂
-
ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி
துட்டஹெமுனு காலத்திலிருந்து இனவாதம் பேசும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை நீங்கள் மாற முடியாது
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
சிறிலங்கா பொலிசாரும் இடுப்பு பெல்ட் கட்டி தங்களது தொப்பையை குறைக்க வேணும் என அமைச்சர் கேட்டுள்ளார்
-
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
"ரஜ லுனு"க்கு தீர்வு வழங்கியாச்சோ சந்திரா....உப்புக்கே தீர்வு வழங்க காணவில்லை இதில புலம்பெயர்வை தடுக்க போகின்றாராம்...ம்ம்ம்ம்ம் ..
-
யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
நான் நினைத்தேன் அவர் இளைப்பாறும் வரை இந்த பத்வியில் இருப்பார் எண்டு...
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்கள் கூறுவது சரி ஆனால் நடமுறை அதுவல்ல ...எல்லாம் சும்மா சட்ட வல்லுனர்களின் எழுத்து மட்டுமே ...நடைமுறைக்கு பய்ன்படுத்த மாட்டார்கள் ..அதை நடைமுறைபடுத்த சகல் அதிகாரம் கொண்ட ஒர் உலக அமைப்பு இன்று வரை இல்லை ...இனி வரும் காலங்கலிலும் சாதியப்பட போவதுமில்லை.. இன்றைய உலக சூழலில்/அரசியல் நடைமுறையில் வாக்கு எடுப்பு நடத்தி தேசிய இனங்களின் நிலங்களை/ உரிமைகளை பாதுகாத்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை... இறையாண்மை உள்ள தேசிய நாடு என்ற சொற்பதம் வன்முறை ஆட்சியாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றது..., .. இங்கு தாக்குதலை செய்தது கஸ்மீரிகள் அல்ல ...ஒர் இறையான்மை உடைய பாகிஸ்தான் என்ற நாட்டின் உதவியுடன் இன்னுமொரு இறையாண்மை கொண்ட இந்தியாவின் கஸ்மீர் மக்களின் மீது ... சிறிலங்காவின் இறையாண்மையை பாதுகாக்க இன அழிப்பு செய்த நாடுகள் உள்ள உலகம் இது...எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் தேசிய நாடுகளின் இறையாண்மையை தான் பாதுகாப்பார்கள். தேசிய இனங்களின் வாழ்வுரிமையை நசுக்குவதில் ஐ.நா.சபை முதல்,இடது ,வலது ஆட்சியாளர்கள் முன் நிற்பார்கள் ,நிற்கின்றனர்..
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உந்த யூடியுப் காரர்,சமுகவலை கருத்தாளர்களை விடுங்கோ ...உவங்களின்ட தலைப்பை பார்த்து இரத்த கொதிப்பு வந்தது தான் மிச்சம் எங்களுக்கு....,அவங்களுக்கு நல்ல காசு வந்து உலகம் சுற்றுறாங்கள் ...நாங்கள் இரண்டுவருசத்திற்கு ஒருக்கா சிறிலங்கா போறது என்றால் நாலுதடவை வங்கி கணக்கை பார்க்க வேண்டியிருக்கு ... நான் அரசாங்கங்கள் சொல்லுவினம் ஜனநாயக்த்தின் தூண் எண்டு...பிறகு பார்த்த அவையளே பேனா போய் துப்பாக்கி நீட்டிகொண்டு நிற்கும் அதை போட்டவர்களின் மனதின் உள்ளே ..."ஹ","சஹா","மொ""இஸ்"🤣 போன்ற பூனைக்குட்டி மறைந்திருக்கிமோ?
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இருக்கலாம் ..அந்த சட்டம் அமுல்படுத்தாமல் இருந்திருந்தாலும் தாக்குதல் நடத்தியே இருப்பார்கள் ..ஆணிவேர் மதம் சார்ந்தது...பாகிஸ்தான் இந்தியா மீது செய்யும் தாக்குதல் யாவும் மதம் சார்ந்தவை ... மத கலவரத்தை தூண்டும் தாக்குதல் ....இந்த தடவை தாக்குதல் செய்யும்பொழுது இந்துவா? முஸ்லீமா என கேட்டு தாக்கியுள்ளனர்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் நினைக்கிறேன் மோடி அரசியலுக்கு வர முதலே இந்த பிரச்சனை இருக்கின்றது...மதப்பிரச்சனை ...1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு ஒர் போர் நடந்து கஸ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து மூன்றில் ஒர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் .. பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி தாக்குதல் செய்வதினால் மோடி அரசு அந்த நிலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..மோடிக்கு சில அரசியல் நலன்கள் இருந்திருக்கலாம். ஜெ.வி.பி யினர் வடக்கு கிழக்கு இணையக்கூடாது ,தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை என இன்றுவரை சொல்வதும் அதற்காக சில இராணுவ,ராஜதந்திர நடவடிக்கைகளை செய்வது போன்று ...மகிந்தா/கோத்தா போன்றோர் எம் நிலத்தை சிதைத்தது போல ... நாங்களும் விட மாட்டோம் 🤣...சியேர்ஸ் ஊத்து மச்சி
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நம்ம "லங்கா புவத்" ...மாதிரி பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் ஒர் தூண் என்பார்கள் ஆனால் போர் என வந்துவிட்டா ஜனநாயக அரசுகள் எல்லாம் அந்த தூணை துப்பாக்கியினால் மறைத்துவிடுவார்கள் ... பேனாவுக்கு மை போடாமல் துப்பாக்கிக்கு குண்டுகளை போடுவார்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என்ன 1958,77 எல்லாம் மறந்து விட்டிர்கள் போல உள்ளது சிங்களவர்கள் செய்த விடயங்களை ..கந்தளாய் பகுதியில் நடந்தவற்றை ...சரி அதை விடுங்கள் ... 15 வருடங்களுக்கு முன் (2009)நடந்தவற்றையே மறந்து போய் நல்லிணக்க பேசுகின்றோம் ,டச்சுக்காரன் செய்த விடயங்களை ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள் ,மேலும் அந்த விடயங்களை அடுத்த தலமுறைக்கு காவி செல்ல மாட்டார்கள் ..ஆனால் அன்னியர்கள் செய்த அட்டுழியங்களின் செயல்கள் சில தெரிய வருகின்றது..கோவில்களை இடித்து கோட்டைகள் கட்டியிருக்கின்றனர்...கோவில் கற்களை பாவித்து சில வீதிகளை அமைத்திருக்கின்றனர்.. இந்தியா இராணூவம் செய்த அட்டுழியங்களை மறக்க முடியாது ,மன்னிக்கவும் முடியாது..அதேபோல சிங்கள அதிகார வர்க்கம் செய்வதையும் /செய்தவற்றையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது ...
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக எந்த பெரிய இராணுவ தாக்குதலையும் செய்யவில்லை...பல பயங்கரவாத தாக்குதல்களை செய்திருக்கின்றது ..ஒர் இறையாண்மையுள்ள நாட்டின் இராணுவம் செய்வது போன்ற செயல்களை செய்யவில்லை... ஈரானில் இராணுவம் இருக்கின்றது ஆனால் அதை நடத்துவது மத தலைவர்கள்...ஆட்சியும் மததலைவர்களினது...இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை உருவாக்கி பயிற்சியளித்து பயங்கரவாதிகள் ஊடாக பெரும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு எதிராக நடத்துவது.. பாகிஸ்தானில் இராணுவம் ஆட்சி நடத்துகின்றது ,அரசியல்வாதிகள் அவர்களின் அடிமைகள்.மதவாதிகளை பயங்கரவாதிகளாக உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை செய்கின்றது .. இஸ்லாமிய உலகின் இரண்டு கண்கள் ...
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
காலையில் எழுந்து இரவு நித்திரை செல்லும் வரை நாங்கள் பின்பற்றுவது இந்தியா கலாச்சாரம் ..இதை நாம் மறுக்க முடியாது ...விரும்பியோ விரும்பாமலோ இது தான் ஜதார்த்தம்... டச்சுக்காரங்கள்,போர்த்துகீஸ்காரங்கள்,வெள்ளைக்காரங்கள் தாயகத்தில் செய்த அட்டுழியங்களை எமது (ஜெனரேசன் ) தலைமுறை மறந்து விட்டது ...இந்தியா செய்த அதே அட்டுழியங்களை செய்திருப்பார்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்ட ....இன்று சிங்கள அதிகார மையங்களும் அதைத்தான் செய்கின்றனர்..
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
மோடியின் ஆட்சியின் பின்பு இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது ...அரசியல் மற்றும் ஆயுத உற்பத்தியில்.... பாகிஸ்தான் பயங்கர வாதத்தை வளர்ப்பதற்கு துணை போன நாடு என்பது மேற்கலகு நன்றாகவே அறிந்துள்ளது .. பின்லாடனை ஒழித்து வைத்திருந்து கொண்டே என் அப்பன் குதிருக்குள் இல்லை என சொன்ன கோஸ்டிகள்... இஸ்ரேலுக்கும் பல நாசாகார வேலைகளை பாகிஸ்தான் செய்துள்ளது ...
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நெற்றியில் துப்பாக்கியை வைத்து வேஸ்டியை கழட்டி பார்ப்பாங்களோ என்ற பயம் தான் ....மற்றும்படி நான் ஒர் பனங்காட்டு நரி...பெயரை மாற்றி சொல்லி தப்பி ஓடிவிடுவேன் ... ...ஆனால் உள்ளாடைக்குள் இருப்பதை பார்த்து சுடுவாங்கள் என்றால் ...என்ன செய்வது
-
தமிழரசுக்கட்சி வன்னியில் கசிப்பையும் பணத்தையும் விநியோகித்தது - பிமல் ரத்நாயக்க
நம்ம உறவுகள் யாராவது இவரின் செயலாளர்களாக இருக்கினமோ?
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
தேர்தலுக்கு முன் நான் ரவுடி இல்லை..தேர்தலுக்கு பின் ...நானும் ரவுடி தான் ....
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆசியாவை மதம் சார்ந்து பிரிவினை செய்து எல்லை கோடுகளை வகுத்த பிரித்தானியா அமெரிக்கா கூட்டு இன்று அதன் நன்மைகளை பெறகின்றது .."தியட்டர் ஒவ் ஒப்பரேசன்" 70 வருடங்களின் பின்பு தெற்காசிய பிராந்தியத்தில் தொடங்கப்பட்டுவிட்டது.... அமேரிக்கா நேரடியாக சீனாவுடன் மோதாமல் இந்தியாவினூடாக,பாகிஸ்தானுடாக போரை நடத்தும்... இந்தியா பாகிஸ்தானை விட ஒர் படி மேலதான் ... ஜெய்ஹிந் ....வெற்றி யடைந்தால் சுன்னத்து செய்ய வேண்டிய அவசியமில்லை, பாகிஸ்தான் ஜிந்தாபாத் ...வெற்றியடைந்தால் சுன்னத்து செய்ய வேணும் .... வீணாக ஏன் உடம்பின் ஒர் பாகத்தை வெட்டி ஏறியவேணும்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் பயங்கரவாத தேசத்தை அழிக்க இஸ்ரேல் முன் நிற்கின்றது
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்த இரு நாடுகளும் பிரிவினையை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர் ....அதாவது இந்தியாவின் பஞ்சாப் தனிநாடாக வேணும் என்று ...பாகிஸ்தானும். பலுகிஸ்தான்,சிந்து போன்ற மாநிலங்கள் தனிநாடாக மாற வேணும் என இந்தியாவும் பகிரங்கமாக பிரிவினைபிர்ச்சாரம் செய்கின்றனர் ...