Everything posted by putthan
-
குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த
நிர்வாணம் அடைந்த விட்டதாக சொல்லுவினம் உடுப்பு போடதேவையில்லை ....ஆஞ்சநேயர் தங்களுடை வம்சம் என குரல் கொடுப்பினம் சுமத்திரன் வாதட போனால் இவர்களின் நீதிமன்றில் எப்படி வாதிடுவார் என நினைத்து பார்த்தேன் சிரிப்பு வருகிறது
-
தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கேட்க நல்லாத்தான் இருக்கு ...ஆனால் நடைமுறையில் சாத்தியமா? உங்கள் கட்சி இன்னும் தையிட்டை விகாரைக்கு தீர்வு வழங்க வில்லை எப்படி தமிழ்,முஸ்லீம் தேசிய இனங்களுக்கு தீர்வு வழங்கப் போயினம்..
-
குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த
குரங்குகளுக்கு தனிநாடு(தீவு,மாகாணம்,மாவட்டம் எப்படியும் எடுத்துகொள்ளலாம்) எல்லாம் கொடுக்கிறீயல் ...அதுவும் ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் பல லட்சம் ரூபா செலவில் அவர்களுக்கு எல்லைகள் போட்டு மின்சார வேலி பாதுகாப்பு ,வீடுகள் எல்லாம் அமைத்து கொடுக்கிறீயல் .... குரங்கு இனம் அழிந்து போக கூடாது என்பதற்காக இவ்வளவு புண்ணியமான,பஞ்சசில கொள்கைகளை நடைமுறை படுத்துகின்றீர்கள் ..ஏன் ஏனைய தேசிய இனங்களை அழிக்கின்றீர்கள்..🥲
-
இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா? - ராஜித கேள்வி
அதை தான் நாங்களும் கேட்கிறோம் பட்டலந்த வதை முகாமுக்கு ஒர் நீதி, 72 வருடங்களாக இனவழிப்புக்கு உள்ளாகும் தமிழருக்கு ஓர் நீதியா?
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
ஆயுத போராட்டடைத்த அழிக்க தமிழ் ஒட்டுக்குழு, அகிம்சை போராட்டத்தை அழிக்க இடதுசாரி முகமூடி போட்ட தமிழ் குழு சிறிதரனுக்கு பாராட்டுக்கள்
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
இனமொன்றின் நியாயமான குரல் ...ஆனால் இதெல்லாவற்றையும் அபிவிருத்தி என்ற ஒற்றைசொல்லுக்குள் புதைத்துவிட்டு ,அதன் மேல் தமிழ் இளைஞர்களை வழி நடத்தி செல்ல இடதுசாரி முகமூடி அணிந்த சிங்கள இனவாத கட்சிகள்/அதிகர வர்க்கம் முன்வந்துள்ளது....
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
யாழ் நூலக எரிப்பை வைத்து அரசியல் செயவது போல அல்ல இது....புத்தகங்களை விட மனித உயிர்கள் பெறுமதியானவை...
-
வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்க வேண்டும் : மகிந்த
என்னடாப்பா இப்படி போட்டிருக்கு இலங்கை அரசாங்கம் தடை வித்தித்துள்ளது என்று >>>>பிரித்தானிய அரசாங்கம் தானே தடை வித்துள்ளது
-
யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம் ; 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள் - சித்தார்த்தன்
கிடைத்த சபைகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்
இவருக்கு கடவுள் பக்தி இல்லை ஆனால் அதிகாமாக இந்த பழமொழியை பாவிக்கின்றார் முதலில் பாராளுமன்றிலும் பாவித்துள்ளார் ...சிவபக்தன் பேசும் பழமொழியை சிவபக்தன் இல்லாதவர் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் . நீங்கள் இப்படியான சண்டைக்கு எப்படி பதில் வழங்குவது என பாடமாக்கி கொண்டு வரவில்லைத்தானே 🤣...யாழ்ப்பாணிஸ் செந்தமிழில் பேசும் பொழுது அதற்கு உடனடியாக பதில் வழங்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ கஸ்டமாக இருந்திருக்கும்...உங்கள் பிறோப்பளம் புரிகிறது எனக்கு அடுத்த கூட்ட தொடரில் நீங்கள் சரியாக பாடமாக்கி கொண்டு வந்து பதிலடி கொடுங்கள் ....செந்தமிழில்🤣
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்
வட மாகாணசபை நடை பெறுவதில்லை பிறகு எப்படி இவர் அவை தலவராக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்...யாராவ்து இதற்கு விளக்கம் சொல்ல முடியுமோ?ஆளுனர் அரச பிரதிநிதி வடமாகாணத்தை அரசு சார்பாக பிரதிநித்துவம் பண்ணுகின்றார் ஆனால் இயங்காத வடமாகாணசபைக்கு இவருக்கு என்ன வேலை?
-
கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை ; மக்களே எச்சரிக்கை
இது தோழர் அனுராவின் ஆட்சியை கவிழ்க்க வலதுசாரிகள் செய்யும் திட்டமிட்ட செயல் ...சுற்றுலா பயணிகள் கடற்கரையில் சுதந்திரமாக திரிவதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சி..இதனால் சுற்றுலா துறை பாதிப்படைய போகின்றது....டொலர் நாட்டுக்குள் வருவது குறைந்து விடும்...இதை சாட்டாக வைத்து ரணில் ,மகிந்தா போன்றவர்கள் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர் ....😅 மீன்பிடி அமைச்சர் இந்த முதலைகளை வடபகுதி கடற்கரைக்கு துரத்தி விட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்த நடவடிக்கை எடுக்கலாம் 😅
-
இலங்கை - சீன நட்புறவு என்றும் தொடரும்; சீனத் தூதுவர் கீ சென்ஹொங்
அருகில் உள்ள பங்களதேஸ் பிரதமரை இன்னும் மோடி சந்திக்கவில்லையாம் சந்திக்க மாட்டேன் என அடம் பிடிக்கின்றாராம் (இந்திய கொள்கை வகுப்பாளர்களின் விருப்படி) ஆனால் தோழர் அனுராவுக்கு செங்கம்பள வரவேற்பு ....திருகோணமலையை தம் வசப்படுத்த தீயா வேலை செய்யினம் இந்தியா கொள்கை வகுப்பாளர்கள்...
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
புலம் பெயர்ந்த பிரதேசங்களில் கிடைக்கும் ஆனால் தாயகத்தில் கஸ்டம் தான்...போல இருக்கு ... மடகஸ்கர்,சிசெல்ஸ்,யூனியன் டெரிட்டரி,சில ஹரிபியன் தீவு நாடுகளில்,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் 400 வருடங்களுக்கு முதல் குடியேரிய தமிழர்கள் சில நாட்டுபுற தெய்வங்களை இன்னும் வழிபடுகின்றனர் ..அவர்களுக்குள் கல்வியாளர்களும் அடக்கம்...ஆனால் தமிழர் பிரதேசங்களில் (தமிழ் நாடு உட்பட)கிராமப்புற வழிபாடு மாறி பெரும் தெய்வழிபாடு மற்றும் கொப்பரேட் சாமிகளின் வழிபாடு அதிகரித்து வருகிறது .... அதுபோல நம்ம வடை ,போண்டா,சூசியம் எல்லாம் 400 வருடங்களின் பின்பும் சிட்னியில் கிடைக்க எம்பெருமான் சிட்னி நாயகன் முருகன் குருஞ்சி குமரன் அருள் பாலிக்க வேண்டும்🤣
-
பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்..
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
அடுத்த தடவை இந்த கடைக்கு போய் சாப்பிட்டு பார்ப்போம்...🧡 மாற்று கருத்துவைக்க வேணுமே என்று என்ட கை துடிக்கும் பொழுது ....🤣 பாரம்பரிய உணவான வடை,போண்டா,சூசியம் போன்றவற்றை குறிப்பிடாமல் 🤣....சமோஷா,பூந்திலட்டு போன்ற வட இந்திய உணவுகளை ஏன் விற்பனை செய்கின்றனர் .🤣
-
போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது
அரசுகள் மாறினாலும் வெளிநாட்டு மோகம் மாறவில்லை ....45 லட்சம் கொடுத்து விசா...
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்
என்ன அதிகாரமாக இருக்கும்? ஏன் உடனடியாக பயன்படுத்தவில்லை?
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!
மகிந்தாவே கலங்காமல் இருக்கும்பொழுது நம்மவர்கள் ஏன் கலங்குவான் ?😅
-
இலங்கை - சீன நட்புறவு என்றும் தொடரும்; சீனத் தூதுவர் கீ சென்ஹொங்
இனி இந்தியா துண்டை காணோம் துணியை காணோம் என ஒடி போய் "பெளத்த துறவிகளுக்கு விகாரை கட்டி தர" நட்புறவு சங்கம் உருவாக்குவார்கள்
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
அவர்களின் தடையை விட பிரித்தானியா "தேசிய ஒற்றுமைக்கான சிறிலங்காவின் முயற்சி/ உறுதிப்பாடுகளை " என கூறிய இந்த விடயம் தான் முக்கியமானது... தடை வித்திகப்பட்ட நால்வரும் பிரித்தானியாவுக்கு செல்வதை விட அவர்களின் நாட்டில் வாழ்வதை தான் பெருமையாகவும் ,கெளரவமாகவும் விரும்புவார்கள் ...சிறிலங்காவில் வாழும் பொழுது அவர்களுக்கு மிகுந்த மரியாதை கிடைக்கும்... இவர்களுக்கு செம்கம்பள வரவேற்பு கொடுக்க அயல் நாடுகள் தவ்மிருக்கின்றன.... அவர்கள் என்ன பிரித்தானியாவில் தஞ்சம் கோர துடிக்கும் சாதாரண மனிதர்களா? இன்னும் 10 வருடங்களின் பின்பு இவர்கள் பெளத்த துறவிகளாக மாறினாலும் மாறுவார்கள்
-
வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவை முட்டுக்கட்டைகள்
கிழக்கில் இந்த திட்டம் முழுமையாக வெற்றியடைந்து விட்டது ..தற்பொழுது வடக்கு மாகாணத்தில் முயற்சி செய்கின்றனர் ..."சிஸ்டம் செஞ்" என்பது இதுதானோ? "கிளீன் சிறிலங்கா"என்பது குப்பைகளை கிளீன் பண்ணுவது என நினைத்தோம் ஆனால் பலமான தேசிய இனங்களையும்,பலமான எதிர்கட்சிகளையும் கிளீன் பண்ணும் செயல் என்பது போக போக தான் விளங்கும் அரச மேலதிகாரிகள் என சொல்வது சிங்கள புத்திஜீவி அதிகாரிகள் என எடுத்து கொள்ளலாமோ? "சிஸ்டம் சேஞ்" நாடு முழுவதும் வந்து ,அது நடமுறைக்கு வரும் பொழுது தற்பொழுது உள்ள இளம் ஜெ.வி.பி உறுப்பினர்கள் முதியோர் இல்லத்துக்கு சென்று விடுவார்கள்... கீரிமலை கதிர்காம பெளத்த விகாரையின் சொத்தாக மாறிவிடும்....
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
கை மட்டுமல்ல சகலதையும் கோர்த்து நடக்கலாம்🤣
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
அப்படி பார்த்தால் இஸ்ரேல்காரன் ஹாசாவை அடிக்கிறது பலஸ்தீனத்தை அடிக்கிறது சரிதான் (3500 வருடங்களுக்கு முன்பு மத்திய கிழக்கு முழுவதும் தங்கன்ட இடமாம்) அரச ஆயுத படைகளின் உதவியுடன் அபகரிப்பு செய்வது வேறு ...நீங்கள் கூறும் அபகரிப்பு வேறு ....அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்...இருந்தும் உங்கள் கருத்துக்கு பதில் கருத்து எழுதுகிறேன்.. எங்களுடைய மதங்களுக்கு உள்ளே சத்தமில்லாமல் பல புது கருத்துக்களும்,வழிபாட்டு முறைகளும் ,தெய்வங்களும் உள்நுழைந்து உள்ளது ஆனால் எதிர் கேள்வி கேட்காமல் வர வேற்கின்றோம்..அது ஆகிரமிப்பு போல தெரியவில்லை ஆனால் அது சுத்த ஆக்கிரமிப்பு
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
அப்படியாயின் யாழ்ப்பாணிகள் என நீங்கள் விழிப்பது இடதுசாரிகளின் ,அல்லது உங்கள் கருத்தாதிக்க சிந்தனை ,யாழ்ப்பாணிகள் மீது உள்ள வெறுப்பு என எடுத்து கொள்ள முடியுமா?...நிச்சயமாக அப்படி இருக்காது என நினைக்கிரேன் ....சந்திர சேகர நீண்ட காலம் ஜெ.வி.பியில் இருக்கின்றார் நுனி நாக்கு சிங்களம் பேசுவார் மதங்களை மதிக்க தெரியாதவர்,பெளத்த மதத்தை தவிர....(இடதுசாரிகள் மதங்களை மதிக்காதவர்கள் என கூறுவார்கள் ) இது எனது பார்வை ... அதிகார வர்க்கம் குமாரசூரியர் முதல் சந்திர சேகரர் வரை எந்த மைச்சர் வந்தாலும் இந்திய எல்லை தான்டும் பிரச்சனை தீர்க்க முடியாது ... அது ஏற்று கொள்ளப்பட வேணும் தமிழ் பெளத்தர்கள் என்பது ஏற்று கொள்ளப்பட வேண்டிய விடயம் இதில் மாற்று கருத்து இல்லை ...சிங்கள பெளத்தம் என்பதில் தான் சிக்கலே...பெளத்த விகாரை இருப்பதால் அது சிங்கள பிரதேசம் என உரிமை கூற முடியாது அத்துடன் சிங்கள குடியேற்றமும் செய்ய முடியாது..