Everything posted by putthan
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
சிறிலங்லகா பொருளாதாரம் பாதிப்படைகிறதாம்... அண்மையில் தமிழ்நாட்டில் பிடிபட்ட போதைபபொருள் கடத்தலில் சிறிலங்கா மாபியாக்கள் முக்கிய பங்கு வகித்தவர்கள் ...அந்த மாபியாக்கள் பிடிபட்டதாக செய்திகளில் வரவில்லை....
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
காவல் காத்து கேரளா கஞ்சாவை மட்டும் உள்ளே அனுப்புவார்கள் 🤣🤣...போதைப்பொருள் மாபியாக்களின் முக்கிய கடத்தல் பாதையே இது தானே இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் கூறிய கொள்ளையடித்தல் விடயத்தில் ... தமிழக/இந்தியா மீனவர்கள் கொள்ளையடிப்பதை விட இந்தியா அரசு இலங்கையை கொள்ளையடிப்பது அதிகம் ...அதானி குடும்பம் கொள்ளையடிப்பது அதிகம் ,பல இந்திய நிறுவனங்கள் கொள்ளையடிப்பது அதிகம் என நினைக்கிறேன்... மீன் வளங்களை பாதுகாத்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பி பொருளாதாரத்தை அதிகரிக்க சிறிலங்கா அரசு என்ன செய்தது ....இன்றும் மீன் டின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்... நாங்களும் ஏனைய நாட்டு அகதிகளும் மேற்கத்தைய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றோம்,அந்த நாட்டு மக்களின் வேலை வாய்ப்பு,உயர்கல்வி போன்றவற்றை மெல்ல மெல்லமாக கொள்ளையடிக்கின்றோம்🤣 ....அந்த நாட்டின் பிரஜாவுரிமைகளாகி அவர்களையும் புறந்தள்ளுகிறோம் ...இது மெளனமான நீண்ட நாள் கொள்ளையடித்தல் ..🤣 தமிழக மீனவர்களின் கொள்ளையடித்தலை அரசுகள் நினைத்தால் தடுத்து நிறுத்தி நடவடிக்கைகள் எடுக்கலாம் குறுகிய கால கொள்ளையடித்தல் .....🤣
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நாங்கள் வீரப்பரம்பரை பயத்தில் ஓடி வருவோமா?🤣🤣 "பொருளாதார அகதிகள் ".....இப்படித்தானே ஒரு காலத்தில் சில தமிழ் புத்திஜீவிகள்,மற்றும் சிறிலங்கா அமைச்சர்கள்,சிறிலங்கா அரசு எல்லாம் சொன்னவையல் .... ஆனால் இன்று அதெ சிறிலங்கா அரசு நாட்டின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் லீவு கொடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை அதிகரிக்க சொல்லுது...காலத்தின் கோலம் .... மொட்டையடித்தல் தப்பில்லை இதை செய்வதன் நோக்கம் இந்தியா(முக்கியமாக தமிழர்) மீது சிங்கள மேலாதிக்க சிந்தனையை காட்டுவதற்கு மட்டுமே சாதாரண இராணுவ வீரர்கள் தங்களது இனவாதத்தை இப்படியான செயல்கள் ஊடாக நடைமுறைப்படுத்துகின்றனர்...
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்பொழுது பிடிபட்டால் சில சமயம் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என தெரிந்தும் "பணம் " சிறந்த வாழ்க்கை ... என்ற ஆசையில் எல்லை தாண்டினோம்....
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
பார்டா ரோசத்தை .....மீனவர்களை கொலை செய்யும் பொழுது வராத ரோசம் மொட்டையடிச்சதற்கு வந்திட்டடுது
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் என சொன்னால் குறைந்தா போய்விடியல்😅...மலையக தமிழ் பிரதிநிதிகள் ஏறகனவே அமைச்சரா இருக்கின்றனர் ..அன்றைய தொன்டமானிலிருந்து இன்றைய தொண்டமான் வரை..... அதாவது இன்று இந்தியாவுக்கு தேவை முழு சிறிலங்காவும் தனது ஆட்சியின் கீழ் இருக்க் வேணுமென நினைக்கின்றனர் ...தமிழர்கள் ,தமிழ் மொழி பேசும் மாகாணங்கள் இலங்கையில் இல்லைஎன்பதை உலகறி செய்ய முழு மூச்சாக செயல் படுகின்றனர்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
சுருக்கு எடுக்க போய் சுளுக்கு வந்தா அதுவும் கண்ட இடங்களில் வந்தா...தாங்கதடா சாமி இந்த பஞ்சு உடல்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
ஜெர்மன்காரி எண்டால் ஒருபக்கட் அனுப்பிவிடுகிறேன் .....டை போட்டுவிட்டு விஜய் ஸ்டைலில் கெத்தா நடவுங்கோ பிறகு ஆள் உங்கன்ட கைக்குள்ள தான்
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
இன்றைய ஜெ.வி.பியை நினைக்க வைக்கிறது இந்த வசனம் பகிர்விற்கு நன்றிகள்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
இங்கும் அப்படித்தான் ....அமோனியா கலந்த டை கூடாதாம் எண்டு சொல்லி... இப்ப புதுசா ஒன்று உலா வருகிறது
-
வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
பகிர்விற்கு நன்றி ...போராளிகளுக்கும் இப்படியான மனவேதனை வரக்கூடும்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
என்னத்தை அடிச்சாலும் முகத்தில .தோலில் விழுகின்ற சுருக்கங்களை மறைக்க முடியாது அதை போக்க கூடிய வச்தி இன்னும் இந்த சாதாரண குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை 😅
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
கோவில் நிர்வாகத்தில் இருக்கினமே அவையளுக்கு நினைப்பு அவையள் தான் கடவுளுக்கு அடுத்த ஆட்கள் தாங்கள் எண்டு நிச்சயமாக வந்து எழுதுவேன்...உறவுகள்வாசித்து ஊக்கப்படுத்தும் வரை
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
சாமி கும்பிடுவதற்கு தமிழை தவிர வேறெந்த மொழி என்றாலும் டமிழன் ஏற்றுக்கொள்வான்...
-
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்யுங்கள் - ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி
இன்னும் ஒரு 30 வருசம் இதை சொல்லியே சிங்கள்த்துடன் உறவாக இருக்கலாம் இந்திய...
-
மனிதம் இன்னும் .....
ஒரு நாட்டில கட்டின சாரியை வேறு ஒரு நாட்டுக்கு போனா கட்டுவார்கள் (பொதுவாக) அதே நாட்டில் கட்டுவது குறைவு .... மனிதம் இன்னும் மரணிக்கவில்லை....பகிர்விற்கு நன்றி ...80 வயதில் கார் ஒடுவது என்பது கொடுப்பினை...
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
தாயகத்திலயும் ஆலயங்களில் பல மாற்றங்கள் நடை பெறுகின்றன...திட்டமிட்ட செயலா யான் அறியேன்
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
அப்படி பார்க்கப்போனால் இந்தியாவின் பெளத்தம் ஆக்கிரமித்துள்ளது...மேலும் சோழர்கள் படையெடுப்புக்கள் ....சிங்கள்ம் 70 ஆண்டுகள் தாக்குபிடிக்குது என்பது தான் உண்மை அதுவும் தற்போதைய உலக ஒழுங்கின் சீமான்கள் தங்கள் நல்னுக்காக உருவாக்கிய நாட்டை பாதுகாக்கின்றனர்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்சனான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கடந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர் இன்று இந்தியா ,சீனா போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்
-
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் யாழில் கைது!
பிஸ்டலால் தீர்க்கப்பட கூடிய விசயம் அல்ல....கழுத்து வெட்டுகின்ற நாடுகளிலும் இது இருந்த படியால் தான் பெண்கள் முற்றாக மறைத்து கொண்டு வீடுகளில் வாழ வேண்டியிருக்கு ....தண்டனை வழங்கலாம் ஆனால் மற்றொருவன் செய்ய தான் போகிறான்...
-
அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு அவசியம் ; பல வருடங்களாக வலியுறுத்துகிறோம் - பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
சம்பந்தருக்கு இப்படி சொல்லி சொல்லியே அவரை அனுப்பி போட்டியல்...இப்ப தமிழ் மக்களுக்கு சொல்ல வெளிக்கிட்டியல்....தேர்தலில் உங்கன்ட ஆளுக்கு வொட் போட உற்சாக படுத்திரியல்...போல