Everything posted by putthan
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா.
நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள சகலரும்
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர்க்கப்பல்
தலையங்கத்தை பார்த்தா எதோ சிறிலங்காவை பிடிக்க வந்த நாசகாரி,போர் கப்பல் என்று நான் நினைத்து விட்டேன்....ஆனால் உள்ளே போய் வாசித்து பார்த்த யோக செய்ய வந்திருக்கிறாங்கள் ...
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா.
😀 மக்கள் (நாங்கள்) செய்தால் அது பக்தி(கடவுள் கேள்வி கேட்க மாட்டார் நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுகொண்டிருப்பார்...எந்த பாசையில் கேட்டாலும் பதில் சொல்லமாட்டார் ..."னைஸ் மான்") அரசியல்வாதி செய்தால் வேசம் ....(தாரன் என்று சொல்லுவான் தரமாட்டான்...தமிழில் ஒன்று சொல்லுவான் ,சிங்களத்தில் ஒன்று சொல்லுவான் " பிரோட் வளோ")
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
உண்மை ....இனக்குழுக்கள் சுயநிர்னய உரிமையை பற்றி சிந்திக்காமல் இருக்க ..... சிறிலங்கா என்ற சிந்தனையுடன் ஆட்சி செய்தவர்கள் செயல் பட்டிருக்க வேணும் ஆனால் தவறிவிட்டார்கள் ,அடுத்த தலைமுறையினரும் தவறிகொண்டே செல்கின்றனர்... சிங்களவர்,தமிழர்கள் ,முஸ்லீம்கள் ,கிறிஸ்தவர்கள் என அடையாள அரசியலை செய்கின்றனர் அவர்களுக்கு வெளிநாடுகள் பக்க துணையாக நிற்கின்றன தங்களது மதம்.அரசியல் செல்வாக்கை நாட்டில் புகுத்த...
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
இனி இவருக்கு இவரின்ட சொந்தங்களே வாக்கு போட மாட்டார்கள் ...தமிழருக்கு சுய உரிமையா? ஒற்றையாட்சி பற்றி பேசுங்கோ
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
எப்ப இந்தியா ரூபாவை இங்கு பாவிப்பதற்கான முயற்சியில் இடுபட போறீயல்.. டாவல் தொடர்ந்து வருவார்... படம் காட்டுவார்...போய்விடுவார்... தேர்தலுக்கு முன் இவர் இங்கு வந்து இப்படியான அறிக்கைகளை விட இந்திய எதிர்ப்பு வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்..
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இனவாத செயல்களை கட்சி பேதமின்றி சகலரும் செய்வார்கள் ...83 இனக்கலவரத்கின் பொழுது முக்கியமாக தமிழர்களின்,மற்றும் இந்திய நிறுவனங்களை திட்டமிட்டு அழித்தவர்கள் ஜெ.வி.பியினர் ..அவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் தமிழர்களின் மீது தான் இறுதியில் முடிவடைவது வழமை..
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
குணா கவியழகன் ஒரு ஒளிபரப்பில் கூறியிருந்தார்.. வடபகுதி மக்களுக்கு டாக்குத்தர் மார் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் சமுகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் ...அவர்கள் சமுகபண்பாட்டு தளத்தில் ஏதாவது கூறினால் அது உண்மையாக இருக்கும் என நம்பக்கூடியவர்கள்... அந்த நன்மதிப்பை கெடுக்கும் வண்ணம் டொக்டர் அர்ஜுனா,மற்றும் ராகவன் போன்றோர் தேர்தல் காலத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர் போலும்
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
சில கொழும்பு தமிழர்களுக்கு இன்றும் கேரளாவில் உறவுகள் உண்டு
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இந்த புண்ணியவான்களுக்கு திட்டமிட்டு கட்சி கூட்டம் அமைக்க தெரியும் திட்டமிட்டு இனக்கலவரம் செய்ய தெரியும் திட்டமிட்டு ஆட்சிகவிழ்ப்பு செய்ய தெரியும் ஆனால் திட்டமிட்டு ஆட்சி அமைக்க தெரியாது அப்படி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவர்களின் சித்தாந்ததின் ஊடாக ஆட்சியை தக்க வைக்க முடியாது ....என்பதும் யாழ்கள உறவுகள் அறிந்த விடயமே... இரண்டு ஆயுத கிளர்ச்சி,பல ஜனநாயக தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள்
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
இனி பட்டமே தேவையில்லை.....ஏன் காலனித்துவ நாடுகள் அறிமுக செய்த பட்டங்களை படிக்கிறீயல்,,,,, இந்திய், அரேபிய காலனித்துவத்தை வரவேற்கினம் போல...
-
குளியலறையில்
எழுத்துப்பிழைகள் உண்டு எடிட் பண்ண முடியாமல் இருக்கின்றது ...தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் .... வாலி=வாளி சேரு =சேறு ஞாகம்..ஞாபகம்
-
குளியலறையில்
நன்றி பிரபா வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி கு.சா...பழசுகளை நினைத்து வண்டியை ஒட்ட வேண்டிய காலம்
-
குளியலறையில்
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Suvy..... கவர்ச்சியாக இருக்குதோ அதே...... ஜெ யின் ஒவியத்தை பார்த்து படித்த கதைகள் பல....ஒவியங்கள் இன்னும் நினைவில் உண்டு ஆனால் கதை மறந்து போய்விட்டது.....
-
குளியலறையில்
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Alvaayan நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் ஈழப்பிரியன்.....பழைய கிளுகிளுப்புக்களை இரை மீட்டினால் தான் இப்ப கொஞ்சமாவது உசார் வருது நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் தமிழ்சிறி.....இப்ப தலைப்பை பார்த்து கதை வாசிக்கும் காலம் அது தான் நானும்....
-
குளியலறையில்
கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை நான் பாடுகிறேன்." "உனக்கு நல்ல குரல் பாடிப்பழகு 'பாட்டுக்கு பாட்டு' போட்டியில் பாடலாம் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்க போயினமாம் அடுத்த மாசம்" " சும்மா பகிடி விடாமல் போங்கோ எனக்கு கிணற்றடியில் பாட்டு பாடத்தான் முடியும் நாலு பேருக்கு முன்னால் பேசவே மாட்டேன்" ".."இந்த கதியாலில குமுதமும், ஆனந்த விகடனும் வைச்சிருக்கிறன் அக்காட்ட கொடுத்திட்டு வேறு புத்தகம் வாங்கி கொண்டு வைச்சுவிடு நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்" கிணற்றுக்கட்டில் வைத்திருந்த துவாய்யை எடுத்தவனுக்கு கடந்த முறை முசுறு கடித்த ஞாபகம் வரவே இரண்டு மூன்று தடவை நன்றாக உதறிவிட்டு உடம்பை துடைத்தபின்பு தூவாயினால் உடம்பை சுற்றியபடியே சாரத்தை கழற்றி நன்றாக பிளிந்து கொடியில் காயப்போட்டுவிட்டு ,கதியாலில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான் . புத்தகத்தை புரட்டி பார்த்தபடியே சென்று அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு புத்தகம் இருந்தால் அண்ரி வாங்கி கொண்டு வரசொன்னவர் ,என்றான் .அந்த மேசையில் இரண்டு புத்தகம் இருக்கு கொண்டு போய் கொடு என்றாள் தமக்கை. புத்தகத்தை எடுத்து பார்த்துகொண்டு போனவனுக்கு அதிலிருந்த காட்சி அவனை அந்த கதையை வாசிக்க தூண்டிவிட்டது பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல
-
கவாய் (Hawaii)பயணம்.
எங்கன்ட பலாலி சர்வதேச விமான நிலையம் கண்டியளோ ......😅
-
வடக்கு, கிழக்கில் சீன இராணுவ பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா? - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி
வடக்கு கிழக்கு என்ன தனி ராஜ்ஜியமா? அதை சீனாவிடம் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு உங்களிடம் அனுமதி கேட்பதற்கு?....இன்றைய காலகட்டதில் சிங்கள மக்களே சீனாவிடம் சிறிலங்காவை ஒப்படைக்க தான் விரும்புகின்றனர்
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
இது தான் காரணமோ😇
-
சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு
அமைதி, அமைதி போகும் போகும்....சீனாவுக்கு
-
ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் முறைப்பாடளிக்க முடியும்; பொலிஸ்!
எந்த பெண் கூப்பிடுவாள் என ஏங்கி தவிக்கும் ஆண்கள் அதிகமாக வாழும் உலகம் இது ...இதில எவன் துஸ்பிரயோகம் பற்றி பொலிஸில் புகார் கொடுப்பான்😅
-
குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு
அண்மையில் இந்திய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட ஒருவர் தனது கதையை கூறினார் ..அவருக்கு இப்ப வயது 60 க்கு மேல்... இந்திய இராணுவம் இவரை சுற்றிவளைப்பின் பொழுது கைது செய்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டனர் .அணிந்திருந்த அரைகாற்சட்டையுடன் . தமிழ் தெரிந்த ,தமிழ்படங்கள் படங்கள் பார்க்கின்ற மேலதிகாரி போல் இருக்க வேணும் இவரை கண்டவுடன் டேய் இவனை பார்த்தால் கமலஹாசன் போல இருக்கிறது இவனை வீட்டை கொண்டு போய் விடுங்கோடா என கூறி அனுப்பியுள்ளார் இவர் போக பயத்தில் மறுப்பு தெரிவித்து அங்கயே நின்றாராம் .(போக சொல்லி பின்னால் சுட்டு விடுவார்கள் என்ற பயத்தில்) பின்பு அதிகாரி தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டாராம்... கருப்பர்களுக்கு மத்தியில் ஒருவன் சிவலையாகவும் அழகாகவும் இருந்தவுடன் அவன் போராளி அல்ல என இந்திய இராணுவ அதிகாரி முடிவெடுத்துள்ளார்... இந்தியன்2 படத்தில் வரும் கமல் போலத்தான் அவர் இப்ப இருக்கின்றார்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உண்மை ....அனுபவம் சிலதுகளை எழுத வைக்கின்றது
-
சரத் பொன்சேகா - அமெரிக்க தூதர் கொழும்பில் திடீர் சந்திப்பு
ஊழலை நசுக்குவது முடியாத காரணம் ...தமிழர்களை நசுக்குவது எப்படி என பாடம் எடுத்தால் வெற்றியடைய வாய்ப்பு உண்டு