Everything posted by putthan
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்சனான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கடந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர் இன்று இந்தியா ,சீனா போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்
-
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் யாழில் கைது!
பிஸ்டலால் தீர்க்கப்பட கூடிய விசயம் அல்ல....கழுத்து வெட்டுகின்ற நாடுகளிலும் இது இருந்த படியால் தான் பெண்கள் முற்றாக மறைத்து கொண்டு வீடுகளில் வாழ வேண்டியிருக்கு ....தண்டனை வழங்கலாம் ஆனால் மற்றொருவன் செய்ய தான் போகிறான்...
-
அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு அவசியம் ; பல வருடங்களாக வலியுறுத்துகிறோம் - பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
சம்பந்தருக்கு இப்படி சொல்லி சொல்லியே அவரை அனுப்பி போட்டியல்...இப்ப தமிழ் மக்களுக்கு சொல்ல வெளிக்கிட்டியல்....தேர்தலில் உங்கன்ட ஆளுக்கு வொட் போட உற்சாக படுத்திரியல்...போல
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா.
நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள சகலரும்
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர்க்கப்பல்
தலையங்கத்தை பார்த்தா எதோ சிறிலங்காவை பிடிக்க வந்த நாசகாரி,போர் கப்பல் என்று நான் நினைத்து விட்டேன்....ஆனால் உள்ளே போய் வாசித்து பார்த்த யோக செய்ய வந்திருக்கிறாங்கள் ...
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா.
😀 மக்கள் (நாங்கள்) செய்தால் அது பக்தி(கடவுள் கேள்வி கேட்க மாட்டார் நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுகொண்டிருப்பார்...எந்த பாசையில் கேட்டாலும் பதில் சொல்லமாட்டார் ..."னைஸ் மான்") அரசியல்வாதி செய்தால் வேசம் ....(தாரன் என்று சொல்லுவான் தரமாட்டான்...தமிழில் ஒன்று சொல்லுவான் ,சிங்களத்தில் ஒன்று சொல்லுவான் " பிரோட் வளோ")
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
உண்மை ....இனக்குழுக்கள் சுயநிர்னய உரிமையை பற்றி சிந்திக்காமல் இருக்க ..... சிறிலங்கா என்ற சிந்தனையுடன் ஆட்சி செய்தவர்கள் செயல் பட்டிருக்க வேணும் ஆனால் தவறிவிட்டார்கள் ,அடுத்த தலைமுறையினரும் தவறிகொண்டே செல்கின்றனர்... சிங்களவர்,தமிழர்கள் ,முஸ்லீம்கள் ,கிறிஸ்தவர்கள் என அடையாள அரசியலை செய்கின்றனர் அவர்களுக்கு வெளிநாடுகள் பக்க துணையாக நிற்கின்றன தங்களது மதம்.அரசியல் செல்வாக்கை நாட்டில் புகுத்த...
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
இனி இவருக்கு இவரின்ட சொந்தங்களே வாக்கு போட மாட்டார்கள் ...தமிழருக்கு சுய உரிமையா? ஒற்றையாட்சி பற்றி பேசுங்கோ
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
எப்ப இந்தியா ரூபாவை இங்கு பாவிப்பதற்கான முயற்சியில் இடுபட போறீயல்.. டாவல் தொடர்ந்து வருவார்... படம் காட்டுவார்...போய்விடுவார்... தேர்தலுக்கு முன் இவர் இங்கு வந்து இப்படியான அறிக்கைகளை விட இந்திய எதிர்ப்பு வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்..
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இனவாத செயல்களை கட்சி பேதமின்றி சகலரும் செய்வார்கள் ...83 இனக்கலவரத்கின் பொழுது முக்கியமாக தமிழர்களின்,மற்றும் இந்திய நிறுவனங்களை திட்டமிட்டு அழித்தவர்கள் ஜெ.வி.பியினர் ..அவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் தமிழர்களின் மீது தான் இறுதியில் முடிவடைவது வழமை..
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
குணா கவியழகன் ஒரு ஒளிபரப்பில் கூறியிருந்தார்.. வடபகுதி மக்களுக்கு டாக்குத்தர் மார் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் சமுகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் ...அவர்கள் சமுகபண்பாட்டு தளத்தில் ஏதாவது கூறினால் அது உண்மையாக இருக்கும் என நம்பக்கூடியவர்கள்... அந்த நன்மதிப்பை கெடுக்கும் வண்ணம் டொக்டர் அர்ஜுனா,மற்றும் ராகவன் போன்றோர் தேர்தல் காலத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர் போலும்
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
சில கொழும்பு தமிழர்களுக்கு இன்றும் கேரளாவில் உறவுகள் உண்டு
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இந்த புண்ணியவான்களுக்கு திட்டமிட்டு கட்சி கூட்டம் அமைக்க தெரியும் திட்டமிட்டு இனக்கலவரம் செய்ய தெரியும் திட்டமிட்டு ஆட்சிகவிழ்ப்பு செய்ய தெரியும் ஆனால் திட்டமிட்டு ஆட்சி அமைக்க தெரியாது அப்படி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவர்களின் சித்தாந்ததின் ஊடாக ஆட்சியை தக்க வைக்க முடியாது ....என்பதும் யாழ்கள உறவுகள் அறிந்த விடயமே... இரண்டு ஆயுத கிளர்ச்சி,பல ஜனநாயக தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள்
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
இனி பட்டமே தேவையில்லை.....ஏன் காலனித்துவ நாடுகள் அறிமுக செய்த பட்டங்களை படிக்கிறீயல்,,,,, இந்திய், அரேபிய காலனித்துவத்தை வரவேற்கினம் போல...
-
குளியலறையில்
எழுத்துப்பிழைகள் உண்டு எடிட் பண்ண முடியாமல் இருக்கின்றது ...தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் .... வாலி=வாளி சேரு =சேறு ஞாகம்..ஞாபகம்
-
குளியலறையில்
நன்றி பிரபா வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி கு.சா...பழசுகளை நினைத்து வண்டியை ஒட்ட வேண்டிய காலம்
-
குளியலறையில்
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Suvy..... கவர்ச்சியாக இருக்குதோ அதே...... ஜெ யின் ஒவியத்தை பார்த்து படித்த கதைகள் பல....ஒவியங்கள் இன்னும் நினைவில் உண்டு ஆனால் கதை மறந்து போய்விட்டது.....
-
குளியலறையில்
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Alvaayan நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் ஈழப்பிரியன்.....பழைய கிளுகிளுப்புக்களை இரை மீட்டினால் தான் இப்ப கொஞ்சமாவது உசார் வருது நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் தமிழ்சிறி.....இப்ப தலைப்பை பார்த்து கதை வாசிக்கும் காலம் அது தான் நானும்....
-
குளியலறையில்
கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை நான் பாடுகிறேன்." "உனக்கு நல்ல குரல் பாடிப்பழகு 'பாட்டுக்கு பாட்டு' போட்டியில் பாடலாம் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்க போயினமாம் அடுத்த மாசம்" " சும்மா பகிடி விடாமல் போங்கோ எனக்கு கிணற்றடியில் பாட்டு பாடத்தான் முடியும் நாலு பேருக்கு முன்னால் பேசவே மாட்டேன்" ".."இந்த கதியாலில குமுதமும், ஆனந்த விகடனும் வைச்சிருக்கிறன் அக்காட்ட கொடுத்திட்டு வேறு புத்தகம் வாங்கி கொண்டு வைச்சுவிடு நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்" கிணற்றுக்கட்டில் வைத்திருந்த துவாய்யை எடுத்தவனுக்கு கடந்த முறை முசுறு கடித்த ஞாபகம் வரவே இரண்டு மூன்று தடவை நன்றாக உதறிவிட்டு உடம்பை துடைத்தபின்பு தூவாயினால் உடம்பை சுற்றியபடியே சாரத்தை கழற்றி நன்றாக பிளிந்து கொடியில் காயப்போட்டுவிட்டு ,கதியாலில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான் . புத்தகத்தை புரட்டி பார்த்தபடியே சென்று அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு புத்தகம் இருந்தால் அண்ரி வாங்கி கொண்டு வரசொன்னவர் ,என்றான் .அந்த மேசையில் இரண்டு புத்தகம் இருக்கு கொண்டு போய் கொடு என்றாள் தமக்கை. புத்தகத்தை எடுத்து பார்த்துகொண்டு போனவனுக்கு அதிலிருந்த காட்சி அவனை அந்த கதையை வாசிக்க தூண்டிவிட்டது பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல
-
கவாய் (Hawaii)பயணம்.
எங்கன்ட பலாலி சர்வதேச விமான நிலையம் கண்டியளோ ......😅
-
வடக்கு, கிழக்கில் சீன இராணுவ பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா? - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி
வடக்கு கிழக்கு என்ன தனி ராஜ்ஜியமா? அதை சீனாவிடம் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு உங்களிடம் அனுமதி கேட்பதற்கு?....இன்றைய காலகட்டதில் சிங்கள மக்களே சீனாவிடம் சிறிலங்காவை ஒப்படைக்க தான் விரும்புகின்றனர்