Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. விஜய்யிடம் புத்தகம் வாங்கியது அருவருப்பாக இருந்தது. https://www.facebook.com/share/r/1CrnfL7mSk/
  2. நேற்று உங்களுக்கு எழுதலாம் என்று இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. சாதி பற்றி பேசுவது தமிழகத்தில் சாதாரண விடயம். சீமான் இதை மறுத்தாலும் மறைத்தாலும் அதை எவராலும் முழுமையாக இப்போதைக்கு ஒழிக்க முடியாது. தாயக உறவுகளிடையேயே இது இருக்கும் போது அப்படி எதுவும் இல்லை என்பது போன்று நீங்களும் சீமான் மீதான உங்கள் கருத்தை மறைமுகமாக திணித்தது தெரிந்தது. (எனது பார்வையில் மட்டுமே) உண்மையில் இத்தனை நாட்கள் இத்தனை நேரங்கள் மற்றும் மனித வளங்கள் இங்கே சீமானுக்கு எதிராக கொட்டப்படுவதை பார்க்கும்போது உண்மையில் சிரிப்பாக இருக்கிறது அத்துடன் எந்த பிரயோசனமும் அற்ற இந்த விதண்டாவாதங்களையும் எமக்குள் தொடர்ந்து நடக்கும் பிரிவுகளையும் பிளவுகளையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இதெல்லாம் தமிழக அரசியல் வரலாற்றை முதன் முறையாக பார்க்கும் ஒரு வெளிப்பார்வையாளரின் பார்வையாகத்தான் இருக்கமுடியும். ஆனால் சிறு பிராயத்தில் எம்ஜிஆர் பெண் கள்ளன் என்ற நாங்கள் பிதட்டிக்கொண்டிருக்க அங்கே வாட்டில் படுத்து கிடந்த படி அவர் முதலமைச்சர் ஆகியதும் கருணாநிதி பல மனைவிகள் மற்றும் ஊழலில் கொழுத்த குடும்ப அரசியல் என்று நாங்கள் தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருக்க கருணாநிதி முதலமைச்சர் ஆகியதும் ஜெயலலிதா வைப்பாட்டி என்றபடி தீண்டத்தாக பெண் என நாங்கள் கிண்டல் அடித்து படுக்க அவர் பலமுறை முதலமைச்சர் ஆகியதும் தான் தமிழக வரலாறு. இதில் சாதிக்கட்சிகள் எதுவுமில்லை. அவர்கள் முதலமைச்சர் ஆகியதுமில்லை. ஆகப் போவதுமில்லை. எனவே சீமானை நாம் என்ன தான் கழட்ட பூட்டி போட்டாலும் அது தமிழகத்தின் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. அவருடைய வருகையை அவரது அரசியலை தமிழக மக்கள் அதிலும் படித்த அடுத்த தலைமுறையினர் வரவேற்பதாகக்தான் தரவுகளும் ஒவ்வொரு தேர்தல்களும் சாட்சி பகிர்ந்கின்றன. இல்லை என்றால் யாருமே அறியாத நிலையில் ஆரம்பிக்கப்பட்ட எந்த பின்புலமும் அற்ற ஒரு கட்சி இன்று இந்தளவுக்கு அதிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இன்று அங்கீகாரம் பெற்றிருப்பது நகைப்புக்கிடமானதன்று. எனவே ஈழத் தமிழர்கள் நாம் இவற்றில் அடிபட்டு பிரிந்து நின்று எம்மையும் பலவீனமாக்கி தமிழக தலைவர்கள் எவரையும் எதிரியாக்காமல் வருபவர்களை வாரி எடுத்து எதையாவது பெற முயல்வோம். இதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். நன்றி. ( சீமான் பற்றி இனி எனது நேரத்தை செலவழிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.)
  3. நன்றி சகோ இது சரியான பாதை தேடல் நீங்கள் இங்கே குறிப்பிட்ட அத்தனையும் சீமான் மேல் உள்ள எனது சந்தேக லிஸ்டில் இருக்கிறது. சிலது நிரூபிக்க பட்டும் உள்ளது. எனவே பொறுமை. எதைத் தான் இனி இழக்க நேரிடும்?? யாரைத் தான் நம்பமுடியும்?
  4. Don't shoot the messenger, ஆளைப்பார்க்காதே கருத்தை மட்டும் பார் என்பதெல்லாம் வெறும் உருட்டு உபதேசமா கோபாலு? (நான் பரணியின் கட்டுரைகளை வாசிப்பதில்லை (இது கூட அவரது முகநூலில் இருந்து எடுக்கப்பட்டதல்ல) (அதேபோல் அனைத்துலகத்திலிருந்தும் தள்ளி நிற்பவன். ஆனால் இங்கு சீமானை தலைவருக்கு தெரியாது என்பதை அறிந்து கொள்ள மட்டுமே இதை இங்கே இணைத்தேன்.)
  5. ஒரு புறம் டொலருக்கு எதிராக எதுவும் வரக் கூடாது என்றபடி மறுபக்கம் வரிகளை நாடுகள் மீது சுமத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரப் போகிறது. ஆனால் இந்த பைத்தியம் இன்னும் என்ன எல்லாம் செய்யப்போகிதோ?
  6. Parani Krishnarajani அவர்களின் பதிவு.... இது சீமானுக்கும் திராவிடர்களுக்குமான சண்டை குறித்த எனது கடைசிப் பதிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். திரும்பத் திரும்ப ஈழ வரலாற்றை மையப்படுத்திப் பொய்களை முன் வைக்கும் போது சும்மா இருக்க முடியவில்லை. தலைவரின் அகவை 50 ஐ சிறப்பிக்க 2003 இல் கஸ்ரோ அண்ணா தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகம் முடிவெடுத்து அதன் கீழ் இயங்கிய ஈழமுரசு பத்திரிகை நிர்வாகத்திடம் அது ஒப்படைக்கப்படுகிறது. தலைவர் வழமை போல் இப்படியான தற் புகழ்ச்சிகளை விரும்பாத போதும் பேபி அண்ணா, யோகி அண்ணா, பாலகுமாரன் அண்ணா ஆட்களூடாக கஸ்ரோ அண்ணா தலைவருக்கு அழுத்தம் கொடுத்து சம்மதம் பெறப்படுகிறது. மறைந்த ஈழப் போராட்ட முன்னோடியும் ஈரோஸ் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவருமான கவிஞர் கிபி அரவிந்தன் தலைமையில் நான்கு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த நால்வரில் நானும் ஒருவன். தலைவர் ஒரே ஒரு நிபந்தனையுடன் இதற்கு உடன்பட்டார். வரலாற்று திரிபு வரக் கூடாது.எனவே இதில் கட்டுரை எழுதுபவர்களின் அகராதி எனது மேசைக்கு வர வேண்டும் என்பதுதான் அது. ஈழத்து ஆளுமைகள் மட்டுமல்ல சிங்கள, மேற்குலக, தமிழக ஆளுமைகள் பலரது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு தலைவருக்கு அனுப்பப்பட்டு பலரது பெயர்கள் நிராகரிக்கப்பட்டு வடிகட்டப்பட்டு அந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்த நூல் 2004 இல் வெளியிடப்பட்டது. அதில் சீமானது கட்டுரையும் ஒன்று. அதைத்தான் மேலே இணைத்துள்ளேன். சீமானுடன் மணியரசன் ஐயா, நெடுமாறன் ஐயா, திருமாவளவன், தியாகு, இன்குலாப், மருது உட்பட பலரின் பதிவுகள் இடம்பெற்றிருந்தன. அந்த நூலில் சுபவீ, கொளத்தூர் மணி, கோவை இராமகிட்டிணன், விடுதலை இராஜேந்திரன், கி. வீரமணி உட்பட எந்தப் பெரியாரிஸ்ட் களின் பதிவும் இடம்பெறவில்லை. அது ஏன் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்ப பிரச்சினை அதுவல்ல. 2008 பெப்ரவரி வரை சீமான் என்ற ஒருத்தரைத் தலைவர் உட்பட யாருமே அறிந்திருக்கவில்லை என்ற கதையெல்லாம் புதுசு புதுசா அவிழ்த்து விடப்படுகிறது. ரொம்பவே அயர்ச்சியாக இருக்கிறது. தலைவரை - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நேசித்த - அதற்காக உழைத்ததாகச் சொல்லும் திராவிடத் தலைவர்கள் இனியாவது ஈழப் போராட்ட வரலாற்றைக் கறைப்படுத்தாமல் இருக்க வேண்டும். நன்றி பின்னிணைப்பு: பலர் உள் பெட்டியில் வினாவுவதால் ஒரு சிறு விளக்கம். பெரியாரிஸ்ட்களிடம் கட்டுரை கேட்கப்படவில்லையா? அல்லது கேட்டு அவர்கள் கொடுக்கவில்லையா?என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஏனென்றால் தமிழகத் தொடர்பை நேரடியாகக் கிபி அரவிந்தன் அவர்களே பார்த்துக் கொண்டார். அவர் தற்போது உயிருடன் இல்லை அத்தோடு வன்னியிலிருந்து இதைக் கையாண்ட போராளிகளும் ஒருத்தரும் உயிருடன் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது யோசிக்கும் போது இந்த வினா உதைக்கிறது. அதுதான் பதிவு செய்திருக்கிறேன். மற்றபடி இதை ஒரு திட்டமிட்ட நிராகரிப்பாக யாரும் கருத வேண்டாம். https://www.facebook.com/share/1BdSJRfdZs/ மன்னிக்கவும் @goshan_che உங்களது பெயர் தற்செயலாக வந்து விட்டது அழிக்க முடியவில்லை. நன்றி
  7. விபத்து ஏற்பட்ட பின்னர் விமர்சனங்கள் வைப்பது சுலபம். ஆனால் நாம் எல்லோரும் இது போன்ற சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை கடந்தே வந்திருப்போம். அவர்களது சூழ்நிலை மற்றும் இறுதிக்கணங்களில் எடுத்த முடிவுகள் இறப்பில் முடிந்திருக்கிறது. அவரும் ஒரு தகப்பனாக இறுதிவரை பிள்ளையை காக்க போராடிய தை பார்க்கும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதில் நாம் வீரம் பேச எதுவுமில்லை. ஆழ்ந்த இரங்கல்கள்.
  8. அவரவர் மனதும் நடத்தையும் படி தான் பார்வைகளும் நடவடிக்கைகளும் வாழ்வும் அமையும். நல்லதை நினைப்பவர்கள் நல்லதை மட்டுமே செய்வர். ஒரு சில லபக்கிரிகளை வைத்து எம்மோடு நின்ற எமக்காக உழைத்த ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒரே சாக்கில் போடுவது தர்மம் ஆகாது. இல்லை அப்படி தான் போட்டடிப்போம் என்பவர்களது நோக்கம் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதல்ல அவர்களை அடிக்க கல் கிடைத்திருக்கிறது என்பது தான். ஆனால் இவ்வாறு எமக்காக உழைத்த ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒரே சாக்கில் போட்டு அடிப்பதும் முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பி வந்தவர்களை ஏன் நீங்கள் சயனைட் அருந்தி சாகவில்லை என்று கேட்டதும் கிட்டத்தட்ட ஒன்று தான்.
  9. இதில் வேடிக்கை என்னவென்றால் சீமானுக்கு நல்ல வார்த்தைகள் பேச வராது என்று பார்த்தால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் தான்.
  10. இதில் குறிக்கும் புலம்பெயர் தமிழர்கள் தான் எமது இலட்சிய தாயகத்தை பிறரது உதவிகள் எதுவும் இன்றி எவரிடமும் பிச்சை எடுக்காது நடாத்த உதவினர். வரலாறு பதிந்து செல்லும்.
  11. நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் பத்திரம் வழங்குவது வழமை என்றும் அது திமுகவில் சேர்ந்த ஆட்களிடம் இல்லை என்றும் வாசித்தேன். பார்க்கலாம்..
  12. சீமான் இந்தளவுக்கு மனிதத்தன்மை அற்று பேசியதில்லை. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு மற்றும் பிரிவுகள் சார்ந்த சிந்தனை உடைய உங்களை போன்றவர்கள் ஆபத்தான பேர்வழிகள். இதுக்கு ஒரு லைக் வேற.
  13. ஆனால் சகோ எனது சந்தேக லிஸ்ட் மிக நீளமானது. இறுதி யுத்தத்தின் போது எம்மை கைவிட்ட , காணாதிருந்த அதற்கும் மேலாக காட்டிக்கொடுத்த தமிழக தலைவர்கள் என்ற எனது லிஸ்டில் அண்ணர் வைகோ, பாதர் கஸ்பர், மகிழ்ந்தவுக்கு மலர் கொடுத்த திருமாவளவன் மற்றும் கனிமொழி..... என்பதில் சீமான் கடைசியாக தான்தான் இருக்கிறார்.
  14. அந்த ஒருவரை சந்தேக லிஸ்டில் வைத்திருக்கிறேன்.👍
  15. எனக்கு மேலே நீங்கள் குறிப்பிட்ட இருவருடன் ஒப்பிட முடியுமானவர் கருணாநிதி. இவ்வளவு தான். உங்கள் கருத்தை நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன். கேலி செய்யவோ திருத்திக்கொள்ளவோ சொல்லமாட்டேன் சொல்லப் போவதுமில்லை. அஃதே எதிர்பார்ப்பும். நன்றி.
  16. சகோ தொடர்ந்து தமிழகம் மற்றும் சீமான் போன்ற எமக்கு தேவையற்ற திரிகளில் எழுதி எமக்குள் சுடு பதங்களை பயன்படுத்த இடம் கொடுத்து எமக்குள் மேலும் மேலும் பிரிவுகளையும் பிளவுகளையும் கூட்டிச் செல்ல விரும்பவில்லை. தமிழக தலைவர்களை விமர்சிக்க எமக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில் எமது பாதை பயணம் மற்றும் வரலாறு வேறு. அவர்களது வேறு. ஆனால் விமர்சிக்க என்று உங்களுக்கு பதில் தர நானும் தொடங்கினால் எல்லோரும் ........ என்று தான் என்னால் சொல்ல நிறுவ முடியும். இதில் பெரியார் கருணாநிதி ஜெயலலிதா வைகோ திருமாவளவன் சீமான் வரை எல்லாமே ஒன்று தான். எனவே வேண்டாம். அந்த நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு வழி விடுங்கள். முதலில் நம்மிடம் ஒற்றுமை மற்றும் சுடு சொற்பிரயோகங்களை தவிர்க்க முயல்வோம். அதற்கு பின்னர் மற்றவர்களின் சொற்பிரயோகங்களை ஆராயலாம்.
  17. நாங்கள் திராவிட தமிழர்கள் அல்ல என்றால் நீங்கள் சீமான் ஆதரவாளர் என்பது என் கருத்தை நீ ஆமோதிக்கும்வரை நீ நசுக்கப்படுவாய் என்பது போன்ற ஏகாதிபத்தியவாத மனநிலை தான். இங்கே புலிகளை சீமான் பயன் படுத்திக் கொள்கிறார் என்று கருணை கொள்ளும் பலரும் புலிகளை மிக மிக கேவலமாக பலவீனப்படுத்தியவரே. எனவே எது நடிப்பு என்பது யாழ் களம் அறியும். எனது கருத்து மற்றும் கணிப்பு தமிழக மக்கள் மற்றும் வாக்காளர்கள் சார்ந்தது மட்டுமே. ஈழத் தமிழர்கள் சார்ந்தது அல்ல. ஈரோடு தேர்தலில் பின் பேசுவோம். நன்றி..
  18. இந்த திரி ஆரம்பிக்கப்பட்ட போதே இல்லை நாங்கள் திராவிட தமிழர்கள் இல்லை என்று விட்டு செல்ல இருந்தேன். ஆனால் எமக்குள் குத்துக்களும் பிரிவினைகளும் ஆற்றப்பட முடியாத சொல் வசைகளும் தேவையற்றது இந்த தலைப்பின் உள் நோக்கத்தை நாமே நிறைவேற்றியவர்கள் ஆவோம். மற்றும் படி எத்தனையோ தலைவர்கள் மற்றும் முன்னோர்கள் பற்றி தனது தலைவர் உரையிலேயே குறிப்பிட்ட தலைவர் ஒரு போதும் தமிழக தலைவர்கள் எவரது பெயரையும் குறிப்பிட்டது கிடையாது பெரியார் உட்பட. அதே நிலைப்பாடு தான் எனதும். தமிழக தலைவர்களை மக்களை பகைக்கக்கூடாது என்பதில் தெளிவிருந்தால் அதில் 35 லட்சம் படித்த அடுத்த தலைமுறையை சேர்த்து கொண்டிருக்கும் சீமானும் அடக்கம். நன்றி. (யாரையும் தனிப்பட சுட்டிக்காட்டி எழுதவில்லை)
  19. இதை தான் ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்கிறேன். தேவையற்று நாம் பிரிந்து எனக்கு இசையும் நீங்களும் முக்கியம் பெரியார் சீமானை விட. அதனால் தான் யார் என்ன சொன்னாலும் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கிறேன். அவை சால்வையாகவோ விளம்பரங்களாகவோ நீங்கள் சேறடித்தால் நாறப்போவது விசுகு அல்ல. எமது ஒற்றுமை மட்டுமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.