Everything posted by விசுகு
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இதன் அர்த்தம் என்ன விளங்காதவர்? வயது படிப்பு பணம் பற்றி எழுதாமல் கருத்து களத்தில் எழுத வராதது தான் உங்கள் விளங்காத்தன்மையா?
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
என்ன செய்வது சிறி எல்லாமே இழந்த பின்???
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
ஆனாலும் இதை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டிருக்கிறார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
அது உங்கள் சூழ்ச்சிமம். எனக்கு 08 - 10 (விஜய் வராதிருந்தால் 08 - 12) இதைத் தான் நீங்கள் பதிவில் வைக்கணும். ஒன்றும் அவசரமில்லை. இளம் தலைமுறை பிள்ளைகளுடன் படிப்படியாக ஆனால் உறுதியாக தனித்து......
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
சபேசன் 2009 க்கு முன்பு என்ன எழுதித் தள்ளிக்கொண்டு இருந்தார் என்றும் தெரியும். நீங்கள் தேடி வாசியுங்கள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
அதனால் என்ன சகோ அடுத்த வருடம் பார்க்கலாம்.... என்ன அவசரம்? என்ன இருக்கிறது தொலைந்து போக....?
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
உங்கள் கற்பனை மற்றும் கோர்த்து விடுதல்களுக்கு நான் பொறுப்பல்ல. ஆனால் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். காலம் பதில் சொல்லட்டும்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இது உங்கள் கருத்து சகோ அதையும் மீறி நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்து இருக்கிறது. நான் இதை எதிர் பார்க்கவில்லை. மற்றும் படி உங்கள் பார்வை வேறு. 2009 க்கு பின்னரான எனது பார்வை நோக்கம் வேறு. எனது பார்வையில் திராவிடம் திராவிட கட்சிகள் அழியட்டும். அதில் பெரியார் குறுக்கிடுவார் என்பது தெரியாததா???? தலைவருடனான ஒப்பீடுஙளை தவிருங்கள். தலைவர் பற்றி நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் அவர் சொன்னது தான் பகைவரை விட துரோகியே ஆபத்தானவர்கள். சீமானை என் தலைவராகவோ அல்லது நல்ல தலைவராகவோ நான் ஏற்கவில்லை அவர் ஒரு தமிழக அரசியல் தலைவர். அம்புட்டு தான். நூறு வீத தூய்மை என்பது எங்கும் இல்லை எதிலும் இல்லை எப்பொழுதும் இல்லாத ஒன்று.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இங்கே கட்டுக்காசு உங்கள் பார்வை. வளர்ச்சி வீதம் நாம் தமிழர் நோக்கு. அது இரட்டிப்பாகி இருப்பது அவர்களுக்கு ஊக்கம் தரும்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இத்தனை ஆயிரம் வாக்குகளை பெரியாரை எதிர்த்தபடி அவரது மண்ணில் எடுத்திருப்பதால் யார் குழம்பி நின்று மனதிடம் குழம்பித்தடுமாறுகிறார்கள் என்று இங்கே எழுதும் எல்லோருக்கும் புரியும். மக்கள் தீர்ப்புக்களை கொஞ்சமேனும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்து வையுங்கள். நன்றி.
-
ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!
போட்டாச்சு....
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இதற்கு இனி சந்தர்ப்பம் வராமல் விசிக கட்சியில் இருந்து விலகிய ஒருவரை தனது கட்சிக்குள் எடுத்து முக்கிய பொறுப்பும் கொடுத்து தனக்கு தானே குழி வெட்டிவிட்டார் விஜய். அது இனி இவரை விழுங்குவதே திரைக்கதை.....
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
வாறன் தம்பி ஆனால் வண்டி எங்கே போகுது என்று உங்களுக்கே தெரியாமல்???🤣
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நானும் பெரியார் மண்ணில் அதிகம் உரசிப்பார்க்கிறார். வாங்கி கட்ட போகிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் பெரியாரை (அத்தனை திராவிட கட்சிகளையும்) எதிர்த்து இத்தனை இளைஞர்களை சேர்த்திருப்பது சாதனை தான். இனி பெரியாரும் நாம் தமிழர்களுக்கு வாக்கு சேர்ப்பார்.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
உண்மை தான் புலம்பெயர் தமிழர்கள் தான் பணம் அனுப்புகிறார்கள் என்று இங்கே எழுதும் போதெல்லாம் தெரியும் இவர்கள் நாலு பேர் சேர்ந்து கூட எந்த உதவிகளும் செய்திருக்க வாய்ப்பில்லை என்று. பணம் கேட்பது சேர்ப்பது அதிலும் தமிழர்களிடம்????
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
இதெல்லாம் உங்கள் பார்வை. அது தமிழக மக்களின் பார்வையாக வரவே முடியாது. தமிழக மக்களின் தலைவர்களாக கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஸ்டாலின் எவ்வாறு இடம் பிடித்து முதல்வர்களாகினர்??? தமிழக மக்கள் எதை முன்னிறுத்தி தேர்தல்களில் வாக்கு போடுகிறார்கள்???
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
இணைத்தவரை பார்த்தேன். அவர் நிழலி அல்ல என்றும் நினைத்தேன். 🤩
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சாவகச்சேரியில் நடந்த முதலாவது இவரது குரலில் இருந்தே சில சந்தேகங்களும் கேள்விகளும் எனக்கு இவர் மேல் உள்ளன. இவரது தொடர்ச்சியான செயற்பாடுகள் அவற்றை மேலும் மேலும் வலுவூட்டுகின்றனவே தவிர....? ஆனால் அந்த மக்களை குறைசொல்ல முடியாது. தலைவர்கள் இல்லாத மக்கள் இவ்வாறு தான் குழிகளுக்குள் விழுவார்கள்
-
ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்!
தலைப்பு வேறு முடிவு வேறு 😪
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
அந்த மண்ணில் சொந்தக்காரர்கள் அதற்கான போராட்டத்தை முன்னெடுத்தால் நிச்சயமாக அதனை நான் ஆதரிப்பேன். ஆனால் நியாயத்தின் பக்கம் யார் நிற்கிறார்கள் இன்று?? யார் பலசாலி அல்லது யார் வெல்வார் என்று தானே பார்த்து ஆதரவு தருகிறார்கள்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
இதில் எனக்கு தெளிவுண்டு. இந்த மண் எங்களின் சொந்த மண் ஒன்பதும் எமது நிலம் எமக்கு வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியவை. அதை இழந்ததால் இவ்வுலகில் வாழும் தகுதி இல்லாமல் போன இனங்கள் பல. ஆனால் இந்த நிலம் எமக்கு மட்டுமே சொந்தம் அல்லது இன்னாருக்கு மட்டுமே சொந்தம் என்பது தான் இனவாதம் அல்லது வெறி. உலகம் முழுவதும் அந்தந்த தேசிய மக்கள் தான் அந்தந்த நாட்டை ஆள்கிறார்கள். பிரான்சிலும் கூட அடுத்த அடுத்த தேர்தலில் அவர்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறார்கள். அவர்களது நாட்டின் பற்றின் மீது எனக்கும் உடன்பாடே. கறுப்பு வெள்ளை என்ற நிறவெறி மட்டுமே என்னை அவர்களுக்கு வாக்களிக்க முடியாது தடுக்கிறது. பிரான்ஸ் தேசம் பிரெஞ்சு மக்களுக்கே சொந்தம் என்பதில் எனக்கு எந்த விதமான சங்கடங்களும் இல்லை. இவ்வாறு அவர்கள் சொல்லும் போது எனக்கு குத்துவது நான் எனது மண்ணை இழந்ததே. மாறாக நான் எனது மண்ணை இழந்த வேதனையை உண்மையில் உணர்பவனாக இருந்தால் அவர்களது தேசத்தை காக்க அவர்கள் புரியும் தேசியவாதத்தை எளிதில் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்து இருக்கணும். இழந்தவனுக்கே அதன் அருமை அதிகம் தெரியும். அது நிலமாக பெற்றோராக உடன்பிறந்தோராக பிள்ளைகளாக..... எதுவானாலும்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
அமெரிக்கா அறிவுலகில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் அந்த மக்களால் உணர்த்தப்படுகிறது. இதில் படிப்பறிவு அதிகமற்ற ஏழை மக்கள் அதிகமுள்ள இந்திய மக்களின் தேர்தல் முடிவுகள் பற்றி நக்கல் நையாண்டி வேறு.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அன்ரியையும் தம்பியையும் கழுவி கழுவி கலைத்து விட்டு வடக்கு கிழக்கில் ஒற்றுமை காண்போம் என்று நான் எப்பொழுதும் நினைப்பதில்லை. என் தங்கை தம்பிகளான இவர்களூடனேயே என்னால் சேர்ந்து நடக்கமுடியாதபோது......????
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இது உண்மையை கண்டறிய அல்ல. உங்கள் வழிக்கு வராதவர்களை எல்லாம் சாக்கில் போடும் தந்திரம். வேண்டுமானால் என்னையும் போட்டு வையுங்கள். பின்னர் அதை எடுத்து விட நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டி வரும்.😷
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
நான் அறிவால், பேச்சால் ஒரு போதும் பேசுவதில்லை செயல் பேசுபவன். அது தான் கர்ணன் போன்று என்னை காத்து நிற்கும்.