Everything posted by விசுகு
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
தொழில்கள் அழிவதில்லை அழியவும் முடியாது. ஆனால் அது ஒரு பரம்பரை அல்லது ஒரு சமூகம் சார்ந்த தொழிலாக இனி தொடரக்கூடாது. அம்புட்டுத்தான்.
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை..! கண்கண்ட சாட்சி வாக்குமூலம்
கனவு காணவும் ஒரு எல்லை உண்டல்லவா?
-
பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்துக்கு எதிராக நடவடிக்கை
நல்ல விடயம். இந்த காணெழியை நானும் பார்த்தேன்
-
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
சாதி ஒழிப்பு பெண்ணிய ஒடுக்குமுறை பிரதேச வாதம் ஊழல் லஞ்சம் சட்ட ஒழுங்கு என தமிழர்களுக்குள் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்த்து எதிர்கொண்ட ஒரு அமைப்பு ஒவ்வொரு ஒழிப்பின் போதும் எதிரிகளையும் துரோகிகளையும் உருவாக்கி அதனாலேயே எம் கண்முன்னே அழிந்து நாசமாகப் போனதை கண்ணால் கண்டவர் நாம். எனவே பட்டறிவின்பால் அவர்கள் சாதிக்கட்சியினர் இவர்கள் தலைமுறைக்கட்சியினர் என்று எவரையும் எதிரி துரோகியாக்காமல் அவர்களையும் நண்பர்களாக வைத்துக் கொண்டு எமக்கு அவர்களிடம் இருந்து எதை கறக்கலாம் என்று பார்ப்பதே வரலாறு தந்திருக்கும் பாடம்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1- இரவில் சாப்பிட்டை வெளியே எடுத்து செல்லும் போது பேய்கள் எம்முடன் வந்து விடும் 2- கறுப்பு பூனை கூட்டுமாறு மற்றும் கறுப்பு பொருட்களை காலையில் எழுந்தவுடன் காணக்கூடாது 3- வெளியே போகும் போது பின்னால் கூப்பிடக்கூடாது 4- வீட்டில் இருந்து வெளியே போக முயலும் போது ஏதாவது தடக்கினால் கொஞ்ச நேரம் கழித்து போகவேண்டும் 5- வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் ஏதாவது உடைந்தால் அன்று ஏதாவது கெட்டது நடக்கும்
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
நான் ஸ்பெயினில் உள்ள ஒரு தீவுக்கு சென்று பார்த்துவிட்டு இதைத் தான் எழுதினேன் முக்கியமாக அதேபோல் தண்ணீர் பிரச்சினையால் இப்போதும் தத்தளித்து மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் எனது ஊர்க்காரருக்கு.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
பக்கத்து வீட்டுக்காரன் மட்டுமல்ல அயலவர்கள் அனைவரதும் குறிக்கோள் Xக்கு எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பது தான். எனவே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து X க்கும் கொடுத்து விட்டோம் என்று ஒன்றாக சொல்லும் போது காசு கொடுத்தவரின் வாய் மூடப்பட்டுவிடும். இங்கே கூட கெடுத்தனை கேள்வி கேட்க கொடுத்தவனுக்கு மதி எங்கே போச்சு என்று தானே கொதிக்கிறோம்???
-
எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு
நல்ல விடயம். எமது கோடீஸ்வரர்கள் வெளியே வரப் போகிறார்கள்.
-
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை!
இருந்தால் தானே காட்டுவதற்கு. இப்படியே ஐந்து வருடங்கள் கழித்து விட்டால் ..
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
எங்கே யார் யார் பக்கம் என்பதல்ல முக்கியம் யாழ் மாவட்டத்திற்கு தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கும் அளவுக்கு இரணைமடு குளத்தில் தண்ணீர் உள்ளதா என்பதே முக்கியம். அது இல்லையென்றால் இது எமக்குள் பகை வளர்க்கும் நரித்தனம் மட்டுமே. (நான் புங்குடுதீவைச் சேர்ந்தவன். எனவே குடிதண்ணீர் எங்கிருந்து எனது ஊருக்கு வந்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.)
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
புட்டினின் கழுத்துக்கான கயிறு இறுக்கமாகிறதா??
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
வயது வந்தவர்களுக்கு மட்டும் 1- கண்ணும் கண்ணும் பார்த்தால் கற்பம் தரிக்கும் 2- உடுப்பு மற்றும் மலசல கூடத்தின் ஊடாக பிள்ளை உருவாகும் 3- பெண்களுக்கு மாதம் 31 நாளும் பிள்ளை தரிக்கும் 4- உடலுறவு என்பது நாய்க்கொழுவலில் தான் முடியும் 5- ஒரு பெண்ணை தொட்டால் கட்டிக்க வேண்டும். (இவற்றை நம்பி தொலைச்சவை அதிகம்) இனி சிறு குழந்தைகளுக்கானது தொடரும்....🤪
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
அதாவது பிக்குகள் இருக்கையில் அமர்ந்து இருக்க மற்றவர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தும் நல்லிணக்கம்,???
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
இது ஒரு வகையில் தமிழருக்கு மகாவலி திட்டம் போல் திபெத்திய மக்களுக்கு?? சீனா வைக்கும் ஆப்பு???
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
அப்படியானால் இது வரை தமிழர்கள் செய்தது என்ன?? மூன்று மதத்தினர் வந்தபோது தமிழ் பொங்கல் தமிழர் திருவிழா. பிக்குகள் வந்தால் தேசியமா? அப்படியானால் இனி பிக்குகள் வருவர். எல்லாம் மாறும்? இனி தேசிய தைப்பொங்கல் தேசிய வருடப்பிறப்பு தேசிய தீபாவளி தேசிய சரஸ்வதி பூஜை. இது தான் தமிழ் மக்கள் கேட்ட உரிமை. நன்றி. வணக்கம். அனுராவின் தமிழர்களின் கச்சையையும் புடுங்கிவிடும் நரித்தனம்.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
தமிழருக்குள் சண்டையை மூட்டி குளிர் காயும் நபர்கள் சார்ந்து மிக மிக கவனமாக இருங்கள்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
அதிலும் இந்த வைத்தியர் மற்றும் ஜபிஸ் போன்ற அதிகம் படித்தவர்கள் மேல் நான் வைத்த நம்பிக்கை??
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
படித்தவன் எல்லாம் ஏன் இப்படி லூசுகளாக? கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது 🤣
-
பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர, புட்டினுக்கு கடிதம்!
சிறீலங்கா தான் பட்ட கடனை அடைப்பதிலிருந்து தப்பிக்க முயல்கிறதா?? இவ்வளவு அவசரமாக அதுவும் புட்டினுடன் கை கோர்ப்பு எதுக்காக???
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்? (இனமொன்றின் குரல்) ----------------------------------------------------------------- இரணைமடு குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளது ஆனால் இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கூடிய நிலை தான் இரணைமடுவில் உள்ளது அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டும் தான் சிறுபோகம் செய்ய கூடியதாக உள்ளது இது போதாதென்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை கல்லாறு போன்ற பகுதிகளிலும் கூட குடிநீர் நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது அதாவது கிளிநொச்சியில் குடிக்க, விவசாயம் செய்ய போதிதண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு போக போவதாக பல ஆண்டுகளாக அரசியல் செய்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இங்கு எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை. அந்த வகையில் 40 வீதத்திற்கு அதிக யாழ்ப்பாண கிணறுகளில் உவர் நீர் கலந்து காணப்படுகின்றன. சுண்ணாம்புத் தட்டுகள் கரைந்து கடலுக்குள் செல்வதால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில்குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள் ஆகவே நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமானது ஆனால் இதற்கு இரணைமடு நீர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை இங்கே நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன் கிணறு, கீரிமலை கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகிய நீர் நிலைகள் ஊடக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும் அதே போல நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும். நிலக்கீழ் நீரைக் கடலில் சேர்க்கும் குகை வழிகளை அடையாளம் கண்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட் டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தின் 1,050 குளங்களும் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும் ஆனால் குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது ஆனையிறவு கடல் நீரேரி, தொண்டைமானாறு கடல் நீரேரி, உப்பாறுஉட்பட்ட நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயற்திட்டங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பை அதிகரிக்க முடியும் . அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும். உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும். அதே போல வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் பல நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் அதே போல யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறுகின்றது இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும் குறிப்பாக நிலாவரை கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள். ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்க்கூடியதாக இருக்கும் . இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் மேற்படி விடயங்களை தவிர்த்து விட்டு இரணைமடுவில் தொங்கி கொண்டு இருக்க வேண்டியதில்லை இது போதாதென்று இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது. இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும் யாழ்ப்பாண குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என சொல்லப்படுகின்றது இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும். இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் முறைமை திட்டங்களை உருவாக்க வேண்டும் நீர் தேவையை முகமூடியாக வைத்து கொண்டு NGO களுக்காக அரசியல் செய்ய வேண்டியதில்லை . ஒரு முகநூல் பதிவு: https://www.facebook.com/share/1B9T1RHr9B/
-
அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!
இந்தாளுக்கு என்னாச்சு? ஐரோப்பாவில் இருக்கும் எங்களுக்கு தெரியாது விடயத்தை எல்லாம் கனவு கண்டு தலையங்கம் தீட்டுது.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். இயற்கை அழிவுகள் தவிர்க்க முடியாதவை. அவற்றிற்காக வருந்தி அஞ்சலி செலுத்தும் இதே அரசுகள் தம்மால் வேண்டும் என்றே பலியெடுக்கப்பட்ட மக்களுக்காக வருந்துவதில்லை. அஞ்சலிப்பதில்லை.😭
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
அப்படியானால் அனுரா வந்த பின்னரும் நீங்கள் வித்தியாசத்தை உணர வில்லையா???
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
அவர்கள் கொண்டு வந்து இவர்களின் வாயில் ஊத்தி விட்டார்களா?? சும்மா மற்றவர்கள் மீது பழி போட்டு விட்டு தப்பிக்க கூடாது. பிரென்சில் இல்லாத மதுவா? அந்த பக்கமே சென்றதில்லை.
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
அனுரா தானே பாதுகாப்பு அமைச்சர்? நல்ல தொரு சந்தர்ப்பம் மக்கள் மனங்களை வெல்ல. பார்க்கலாம்.