Everything posted by விசுகு
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அதென்ன நம்ம வைத்தியர் அண்ணா?😂
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நீங்கள் மேலே குறிப்பிட்ட எதையும் நான் மறுக்கப்போவதில்லை. இவை நடந்தவை தான். ஆனால் நீங்கள் சாட்டும் குற்றச்சாட்டு அனைவரிலும். உங்களுக்கு அந்த நாலு பேரைத்தெரிவதும் எனக்கு மிச்ச நாலாயிரம் பேரை எனக்கு தெரிந்திருப்பதும் தான் வித்தியாசம். தம் வாழ்வையே அர்ப்பணித்து இன்றும் விசா இல்லாமல் வீடில்லாமல் வேலை கிடைக்காமல் எம்மவராலையே வேலை தடுக்கப்பட்டு பிள்ளைகளுக்கு கூட உயர் கல்வி மறுக்கப்பட்ட (பெற்றோர் சிவப்புக்குறி) இருக்கும் நாடுகளில் கூட அடுத்த நகரங்களுக்கு செல்லமுடியாமல் பக்கத்து நாடுகளுக்கு கூட குடும்பத்துடன் செல்ல முடியாமல் கணவன் ஒரு நாட்டிலும் மனைவி பிள்ளைகள் இன்னொரு நாட்டிலும் வாழ்ந்தபடி...... இப்படி பல நூறு பேர் இன்றும். வேண்டும் என்றால் வாருங்கள். சந்திக்க செய்கிறேன். இப்படியானவர்களின் தொடர்பில் நான் இருக்க இங்கே வந்து நாலு பேரை வைத்து அவ்வளவு பைரையும் நாறடிக்கும் போது என்ன பேச வரும்? கிட்டத்தட்ட உங்கள் செயல் முரளிதரன் தவறு செய்தது கிழக்கு மாகாணமே ஊத்தவாளிகள் என்று எழுதுவதற்கு சமன்.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
எனக்கு தெரிந்தவரை புலத்தில் அதிகளவில் பிளவுகளையும் பிரிவுகளையும் எங்கெல்லாம் ஓட்டைகளை உண்டாக்கலாம் சிதைக்கலாம் என்று அலைந்து திரிந்து எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு அடிப்பதே வேலையாக செய்தவர்கள் இவர் போன்ற புலி வாந்திகளே. இங்கே நாம் சிறிதளவேனும் ஆராய்வோம் என்று தொடங்கியவுடன் இவர் போன்றவர்களுக்கு பொறுக்காது எல்லாம் கள்ளர் அது இது என்று வந்து அனைத்தையும் குட்டிச் சுவராக்கி விடுவதே இந்த வாந்தியர்களின் வாடிக்கை. நான் எழுதும் அனைத்து திரி களிலும் இந்த .... என்னை கள்ளர் லிஸ்டில் சேர்க்காமல் விட்டதில்லை. ஆனால் இன்று கூட ஒரு இடத்தில் இந்த ..... ஊக்குவிக்க நன்றி செலுத்தி வாக்களித்தேன். எனக்கு எல்லோரும் வேண்டும் அது தான் இலக்குக்கு தேவை. ஆனால்......?????
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
இது தான் உங்களைப் போன்ற கோடரிக்காம்புகள் தான் இத்தனை அழிவுகள் பிரிவுகள் பிளவுகளுக்கும் முதற் காரணம். உங்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு தேவையில்லை உண்மையை தேட விருப்பமில்லை. புலிகளின் நேர்மை வீரம் செயல்திறன் கறைபடியாத சேவைகள் உங்கள் புலி வாந்திக்கு உங்கள் பிறப்பில் இருந்தே தலையிடி. என்ன செய்தும் உங்கள் பிதட்டல்கள் இந்த புலிகளின் செயலாகளால் மக்களிடம் எடுபடல்ல. 2009 புலிகளின் தோல்வி உங்களுக்கு கிடைத்த பெரிய தடி. அதை வைத்து புலிகளின் நேர்மையை உடைப்பதனூடாக உங்கள் புலி வாந்திக்கு ஒரு சில காதுகள் கிடைத்தன. ஆனால் நீங்கள் இங்கே எடுக்கும் வாந்தி எதுவும் உண்மை இல்லை. வெறும் வாந்தி மட்டுமே.
-
மொழித் திணிப்பு என்பது நமது பிரச்சினைகளை அவர்கள் தெரிந்து கொள்ள அல்ல. அவர்கள் சொல்வதை நாம் கேட்க.
மொழித் திணிப்பு என்பது நமது பிரச்சினைகளை அவர்கள் தெரிந்து கொள்ள அல்ல. அவர்கள் சொல்வதை நாம் கேட்க. https://www.facebook.com/share/r/15D29WwYGF/
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
உங்கள் 3வரின் பதிவுகளுக்கு நன்றி என்னுடைய அனுபவங்கள் ஊடாக நடந்த சிலவற்றை சொல்ல முயல்கிறேன். அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும்விதம் வேறாக எப்போதும் இருக்கிறது. நான் அவர் என்னிடம் சொன்ன ஆட்கள் குறைவு இருப்பவர்களும் விலகிக் கொண்டே இருந்தால் (என்னைப் போன்று) அடுத்த தலைமுறையை இணைக்காமல் இருந்தால் (என்னைப் போன்று) என்பதையையே எழுதினேன். இவை எதுவும் உங்கள் கண்களில் படாதது எச்சரிக்கை தருகிறது. மேலும் உங்கள் 3 பேரையும் சாதாரண பொதுமக்களாக என்றும் நான் பார்ப்பதில்லை. மேலும் புலம்பெயர் அமைப்புகளை சிதைக்கும் வேலைகள் முடக்கி விடப்பட்ட போதும் நான் பலமுறை இங்கே எச்சரித்தேன். கவனம் என்றேன். இதே போன்று தான் அதை கண்டும் காணாமலும் ஆட்டுக்காக ஓநாய் என்றும் கடந்து சென்றீர்கள். இன்று மீண்டும் ஒட்டமுடியாத நிரப்ப முடியாத குழிக்குள் நாம் என்றபடி நானும் நீங்களும்????? ஆனால் நான் சொன்னவை எச்சரித்தவை இங்கே மீண்டும் கொண்டு வரப்படுகிறது. உதாரணமாக இங்கே புலம்பெயர் அமைப்புகளை சிதைக்க பலம் இழக்க செய்யவேண்டாம் என்ற என்னை பங்கு பிரிப்புக்குள் போடத் துடித்த சாந்தியக்கா இப்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பிரித்தது தவறு என்று அழுகிறார். அதை இங்கே வேறு தேவைகளுக்காக கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். அவரும் ஒரு யூரூப் செய்தியாளர் என்பதையும் மறந்து. காலம் எல்லாவற்றையும் காட்டும். உணர்த்தும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எனது கேள்வி உங்களுக்கானது. நேர்மையான நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நன்றி சகோ மிகச் சரியான கணிப்பு. இங்கே என்ன துயில் உரிய என் கொண்டையை வெளிக்கொண்டு வருகிறோம் என்றே சிலர் வருகிறார்கள். ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு கருத்தில் நான் எதிராக இருந்தால் போதும் அதை வைத்து எங்கெல்லாம் குற்றம் நடந்ததோ எங்கெல்லாம் தவறு நடந்ததோ அவற்றில் ஒன்றிலாவது என்னை செருகி என்னையும் அந்த சாக்கில் போடும் தந்திரம். ஆனால் அதற்காக நான் தொடர்ந்து இங்கே தனியே நின்று போராடுவது எனக்காக அல்ல என்னைப் போன்று பல ஆயிரம் செயற்பாட்டாளர்களையும் இந்த நரித்தந்திர வலையமைப்பில் இருந்து காக்கும் கடமை எனக்கிருக்கிறது. ஏனெனில் 2004இல் நான் அங்கிருந்து என் குடும்பத்தை காரணம் காட்டி சுயநலத்தை முன் நிறுத்தி வெளியே வந்த போதும் என்னை விட நான் சொல்லி வெளியே வந்த அதே காரணம் சூழ்நிலை என்னைவிட அதிகமாக இருந்தும் தொடர்ந்து அங்கே நின்றவர்கள் தான் இன்று சிறைகளிலும் விசாக்கள் பறிக்கப்பட்டும் குடும்பம் இன்றியும் ஏன் யாருக்காக உழைத்தார்கள் அதே மக்களால் கள்ளப் பட்டம் கட்டப்பட்டும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் இந்த பொஸ்கோ. கடைசியாக சந்தித்தபோது அண்ணா ஆட்கள் காணாது அண்ணா. மீண்டும் வாங்கோ. மக்களை விடுங்கோ என்றார். மனித நேய பணியாளர்களை எம் மக்களே வெறுக்கும் போது எப்படி தம்பி என்றபோது உங்களுக்கு நான் சொல்லமுடியுமா அண்ணா. நல்ல முடிவுகளை கொஞ்சம் கெதியாக எடுங்கள் என்றார். இங்கே என் குடும்பி பிரித்து மேயப்படும் வகைகளை அவர் பார்க்க நேர்ந்தால்....????
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
வேண்டாப்பொண்டாட்டி கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றம் அவளது தானே? இன்றைய நிலையில் மனித நேய செயற்பாடுகளை மேற்கொள்வது மிக மிக சிரமமானது. நம்மவர்களே எல்லாம் முடிந்துவிட்டது நீங்கள் பொத்திக்கொண்டு இருந்தால் போதும் என்ற நிலை.
-
11 நாடுகளிலிருந்து 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!
11 நாடுகள் தப்பிச்சாச்சு பாகிஸ்தான் 170 வீதம் அதிகமாக உருக்கழியப்போகுது..
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
மொஸ்கோ மரியதாஸ். குரல்கொடுக்க யாரும் முன்வருவதாக இல்லை. (இந்த ஊடகம் சம்பந்தமான உங்கள் நம்பகத்தன்மையை நான் கேள்விகளுக்குட்படுத்தமாட்டேன். அவர் சம்பந்தப்பட்ட சில தகவல்களுக்காக மட்டுமே இதை இங்கே இணைக்கிறேன்) https://www.thesamnet.co.uk/?tag=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
300 கோடிக்கு ஆலோசனை மட்டும் என்றபோதே எவ்வளவு வியாபாரம் என்பது தெரிந்தது தானே.
-
யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
பாருங்கள் தமிழர்களுக்காக தமிழ் தேசியத்திற்காக பக்கம் பக்கமாக பேசும் எவரும் இந்த பக்கமே வரவில்லை.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
செலவு அதிகம் என்று ராகுல் காந்தியின் பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசு விஜய்க்கு பாதுகாப்புக்கு செலவு செய்கிறது என்றால்....? இந்த துப்பாக்கி மற்றும் துப்புரவு ரசிகர்களிடம் இருந்து பாதுகாக்கவா? பிரித்து எடுக்கவா? எது நடந்தாலும் கோடு போட்டவனுக்கு லாபமே.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சரி உங்கள் வழியில் ஒரு கேள்வி உங்கள் பிள்ளைக்கு என்ன பெயர்? அவர் யாரை திருமணம் செய்வதை நீங்கள் விரும்புகிறீர்கள்??? ஏன்?
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
நீங்கள் மேலே குறிப்பிட்ட மற்றும் நீங்களும் சேர்ந்ததே என் இனம் என்ற பட்டறிவு தாராளமாக உள்ளது. உங்கள் நிலைப்பாடுகளை நான் ஏற்பது போன்று நீங்களும் நடப்பீர்கள் என்று நம்பிக்கையுடன. நன்றி.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
அவர்கள் ஒரு கூட்டத்தின் நடுவே பேசினார்கள். உங்கள் தலைவர் அவர் என்று சொல்லலாம் ஆனால் தமிழர்களின் தலைவர் அவர் என்பதை மறுத்திருக்கிறார்கள். அது அவரவர் நிலைப்பாடு. ஆனால் அவர்கள் பாவித்த சொற்களை வைத்து அவர்களை காட்டுமிராண்டிகள் காவாலிகள் என்று வகைப்படுத்த நாம் யார்? இங்கே சக கள உறவுகளை இந்த பரந்த இணைய வெளியில் நீங்கள் பாவித்து கேலி செய்யும் சொற்களோடு ஒப்பிட்டால் அவர்கள் துளி கூட கிட்ட வரமுடியாது. அப்படியானால் உங்களுக்கு என்ன பெயர்???
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
அது உங்கள் நிலைப்பாடு. உங்கள் நிலைப்பாட்டுக்காக நான் எதற்காக யாரையும் கண்டிக்க வேண்டும்?? திராவிடம் என்பதை தமிழர்கள் மட்டுமே பின்பற்றி அது எமக்கு அழிவு மற்றும் முதுகில் குத்துதலை மட்டுமே தந்தது. அதை விட்டெறிந்த மற்றவர்கள் தத்தமது தனித்துவமாக பலமாக உள்ளபோது.... தமிழர்கள் தமிழ்த் தேசியமாக ஒன்றாகாமல் தமிழருக்கு பலமில்லை விடிவில்லை. இது எனது நிலைப்பாடு. அதற்காக தமிழகத்தில் யாரையும் புகைக்க வேண்டியது இல்லை அந்தளவுக்கு பலமும் எம்மிடம் இல்லை. அதை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். (மரியாதையான சொற்களுடன் நீங்கள் தொடர்ந்தால் பதில் தொடர்வேன்.)
-
அரசனும் மக்களும்
அரசனும் மக்களும் .... https://www.facebook.com/share/r/1DGr1xCxhr/
-
தமிழை தவிர வேறு மொழி??
தமிழை தவிர வேறு மொழி?? https://www.facebook.com/share/r/1DpgW6uYTy/
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
தமிழினத்தின் மாபெரும் சொத்து தம்பி பொஸ்கோ. ஆழமான கல்வி மற்றும் செயற்திறன் உடையவன். தனது வாழ்நாளின் ஏறக்குறைய முழுவதையும் மனித உரிமை செயற்பாட்டுக்காக கொடுத்தவன் கொடுத்து கொண்டு இருப்பவன். மிகச் சிறிய வயதிலேயே எம்முடன் இணைந்தவன். மிகவும் கவலைக்குரிய விடயம் இது.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஆரம்பகாலத்திலேயே சொல்லி விட்டார்கள். தகப்பன் என்னை பெற்றவனாக இருக்கவேண்டும். எம் தலைவன் எம் இனத்தவனாக இருக்கவேண்டும் என்று. அன்றிலிருந்தே இது தொடர்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இதனை ஈழத் தமிழர்கள் நாம் விலத்தி நடப்போம் என்று எழுதினேன். எமக்கு தமிழகத்தில் எல்லோரும் தேவை. அதை நான் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். மாறாக திமுக அதிமுக காங்கிரஸ் விசிக மதிமுக மற்றும் அனைத்து தமிழக கட்சிகள் மற்றும் தலைவர்களை கழுவி கழுவி கழுவி கழுவி ஊத்த என்னிடம் நிறையவே முதுகில் குத்து வாங்கிய வரலாறுகள் உள்ளன. ஆனால் அதை நான் ஒரு போதும் செய்ய போவதில்லை. தூரப் பயணம் இது.
-
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
இவர் அமைச்சராக? அல்லது சிறீலங்கா ஜனாதிபதியா? எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து....? சிங்களத்தின் திட்டத்தை சக்கைப்போட வைக்க சரியான ஆளைத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நான் தெளிவாக இருக்கிறேன் சகோ ஈரோட்டில் நாம் தமிழர் வளரவில்லை என்றீர்கள் ஓகே 2026இல் பார்க்கலாம் என்றேன். 2026 இல் புறக்காரணிகளை (விஜய் மற்றும் கூட்டுக்கள்) வைத்தே என்னால் எழுதமுடியும். இதை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவர் இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் வியூகத்திற்குள் என்னை கொண்டு வரப் பார்க்கிறீர்கள்? அப்புறம் புறமுதுகு ஜன்னலால் தாவியது என்று நானும் அனுபவப்படவா?😂