Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. தேவாலயதாக்குதல்களின் விபரங்கள் வெளிவரும் போது சிங்களம் எப்படி முஸ்லிம்களை அரவணைத்து கெடுத்து அழித்து வாய் பேசவே முடியாத அடிமையாக்கிக்கொண்டது என்பது தெரியவரும் போது உங்கள் போன்றவர்களின் வாய் எப்படி அதை ஏற்றுக் கொள்ள போகிறது என்பதனையும் பார்க்கத் தான் போகிறோம். ஆனால் எவன் ஆட்சிக்கு வந்தாலும் இவை சம்பந்தமான எதுவும் வெளியில் கொண்டு வரமாட்டார் சிங்களவர்கள் என்ற உங்கள் நம்பிக்கையை விசுவாசத்தையும் புரிந்து கொள்ளாமல் இல்லை .
  2. உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன். வாழ்க வளமுடன்
  3. இது உலகம் முழுவதிலும் உள்ளது தான். ஆனால் பணத்தை குறிக்கோளாகக் கொண்டு அரசியலுக்கு எவரும் வருவதாக நான் நம்பவில்லை. காரணம் வேறு துறைகளில் இதைவிட அதிகளவில் சம்பாதிக்க முடியுமே. ஆனால் உள்ளே வந்ததும் இவை அவர்களை ஆக்கிரமித்து விடுகின்றன. எல்லோரையும் அல்ல.
  4. எம்மவர் பலரும் இவர் தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பது இதற்காகத்தானா???
  5. உண்மை ஒருவர் மீது மட்டும் தவறு இருந்தால் அவருக்கு எதிராக உள் இருந்தே நடவடிக்கைகளை எடுத்து இருக்கவேண்டும். அதுவும் சரிவராதபோது அனைவரும் ஒன்றாக வெளியேறி ஒன்றாக ஒரு அமைப்பையாவது உருவாக்கி பலத்தை தங்க வைத்திருக்க வேண்டும். ஆனால் நமது தவறுகளை திருத்திக்கொள்ள முயலாமல் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அல்லது கண்டு பிடித்து பலபிரிவுகளாகி எம் இனத்தின் பலத்தை சிதைப்பது எவராக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. தூர நோக்கற்று ஒரு இனத்தின் இருப்பையே சிதைக்கும் எவரும் தமிழர்களுக்கு நன்மை செய்வர் என்று எதிர்பார்க்க முடியாது.
  6. கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு.... யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்.... https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/
  7. ஒரு சிறிய இனத்திற்குள் இத்தனை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் என்பது எமது பலவீனத்தையும் எமக்கான புதைகுழியை நாமே தோண்டுவதாகவுமே முடியும். ஒரு குறிப்பிட்ட வாக்குகள் பலவாக சிதறுவதும் மற்றைய வாக்குகள் ஒருமித்து ஒரேயொருவருக்கு செல்வதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை பலவீனமாக்கும்.
  8. இனி யாரையாவது குரங்கு என்று திட்டுவீர்களா??? https://www.facebook.com/share/v/4Em3x82sFadc5WPB/
  9. ஊர்காவற்துறை தொகுதி. புங்குடுதீவும் அதற்குள் அடக்கம்.
  10. அண்ணா அண்ணா அந்தாள் அங்கே தானே தேர்தலில் வென்றார்???? அப்படியானால் மக்கள் இல்லாமல் எப்படி? ஓ அப்படி வென்றாரா?
  11. இந்த திரியில் உள்ள விடயம் சார்ந்த என்றபடியால் 83 கலவரத்தில் வெலிக்கடை உட்பட நானறிந்த விடயங்களை எழுதுகிறேன். உங்கள் அனுபவத்தையும் வாசிக்கிறேன். இது ஏன் தற்போது அதிகமாக பேசப்படுகிறது அல்லது வெளிவருகிறது என்றால் ஜேவிபி ஆட்சி அதிகாரத்தில் வந்துள்ளதால் தமிழர்களுக்கு எதிராக எந்த வேளையிலும் ஜேவிபி எவ்வாறு நடந்து கொண்டது என்பதும் இனி பேசுபொருளாக மாறும் என்பதால் இருக்கலாம். நன்றி.
  12. வணக்கம் சகோ எதற்காக இவற்றை உங்கள் தலையில் போடுகிறீர்கள்??? நீங்கள் ஜேவிபியின் இனவாத அரசியலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். எனவே அது உங்களுக்கானது அல்ல. 1983 இனக் கலவரத்தில் ஜேவிபிக்கு பங்கே இல்லை என்பவர்களுக்கானது. நானே பாதிப்பட்டவன். நானே சாட்சி. நான் இன்று இங்கே வாழும் வாழ்வைவிட நீங்கள் இன்று வாழும் இதே வாழ்வைவிட பலமடங்கு கூடுதலான வசதிகளோடு அன்றே இதே கொழும்பில் வாழ்ந்தவன் நான். வெளிநாட்டுக்கு வரவேண்டிய எந்த தேவையும் இல்லை (இப்போ சுற்றுலா வெள்ளைத் தோலை கண்டால் நிறுத்தும் ரக்சி மற்றும் ஆட்டோக்கள் அந்த நேரத்தில் என் அண்ணரைக் வீதியில் கண்டால் நிற்காமல் போகாது) 83 இல் அடித்து கலைத்து உடுத்த உடுப்புடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி இதே ஜேவிபி தான் எனக்கு கற்றுக் கொடுத்தது உன் இடம் இது அல்ல என்று . எனவே எனக்கு நடந்த கொடுமைக்காக நான் பேசுகிறேன் பேசுவேன். நீதி நியாயம் தீர்வு கிடைக்கும் வரை பேசுவேன். ஜேவிபியை ஆதரிக்க உங்களுக்கு உள்ள அதே உரிமை கடமை அதை மறுக்க எனக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். நன்றி.
  13. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD #NPP #JVP 'மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். பின்பு வேறு புளொக்கில் இருந்த சிங்களக் காடையர்களும், இன அழிப்பு அரசின் காவல்துறையும் சேர்ந்து கொன்று குவித்தன. இது வரலாறு. அடுத்து தென்னிலங்கையில் அதே நாட்களில் தமது மாக்சிச அடையாளத்துடன் 'முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதல்' என்ற பெயரில் தமிழ் முதலாளிகள், தமிழ் வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு ஜேவிபியால் சூறையாடப்பட்டன. உயிர் தப்பி தற்போது உயிரோடு இருக்கும் யாரிடமும் இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் இருக்கு.. தொடர்ந்து நினைவூட்டுவோம். Copied https://www.facebook.com/share/p/wgLWdnKmBPgpNP66/
  14. சரி ஒரு சராசரி அரசியல்வாதியாக உங்கள் தற்போதைய சொத்து மதிப்பை தாருங்களேன். மக்கள் முடிவு செய்யட்டும்.
  15. முதலில் 2002இல் அப்போதைய அரசிடம் புங்குடுதீவு வீதிகளை புனரமைப்பு செய்யவென வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டவும்.
  16. பல வருடங்களாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைக்கு தலைவராக இருந்தவருக்கு தகுதி இல்லை என்றால் யாரை நோவது???
  17. எனக்கு இரண்டரை லட்சம் பேரின் ஆதரவுண்டு. அது நூறால் பெருக்கும் அளவு பலமானது. அவர்களுக்காக நான் தொடர்ந்து தேசியம் பேசுவேன். எழுதுவேன். புலிகளையும் தேசியத்தை நேசிப்பவர்களையும் கிண்டல் செய்பவர்களை தட்டி குட்டிக்கேட்பேன். உங்களுக்கான மரியாதை என்பது கூட உங்களிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஆனது மட்டுமே. உங்கள் எழுத்துக்கள் மிக மிக மட்டமானவை. தரங்குறைந்தவை. இதில் இன்னொருவரை நீங்கள் கூடாதவர் என்று பரிந்தூரைப்பது கேலிக்கூத்து மட்டுமே.
  18. இன்னும் கனக்க வரும். எதிர் பாருங்கள். கனக்க நாளைக்கு கொண்டையை மறைக்க முடியாது அல்லவா???
  19. நீங்கள் இதை கவனிக்கவில்லை சிறி. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் தான் மீண்டும் கம்பீரமாக வலம் வர ஒரு புளியம் கொம்பை வைத்திருக்கிறார். சிங்களம் மீண்டும் தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பும் போது அடுத்த ஜனாதிபதி இவராகக்கூட இருக்கலாம்.
  20. இவ்வாறு நேரிடையாக கடவுளிடம் வேண்டி வரத்தை பெறலாம் எதற்கு நடுவில் பூசாரி என்கிற சிம்பிள் லாஜிக்கில் புகுந்து கடவுளின் காலில் விழுந்த பலர் நம்மில் உள்ளனர். அவர்கள் படைச்சதையும் ஆட்டையை போட்ட வரலாறு எம்முடையது. எனவே கடவுள் தான் பைசாரிகளை வைத்திருக்கும் நிலையை ( நாம் எவரைத்தான் மாற்றி மாற்றி அனுப்பினாலும்) தான் நாம் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.
  21. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாது. ஆனால் நான் 2009க்கு முன்னரும் பின்னரும் என்னால் முடிந்ததற்கும் மேலாக செய்திருக்கிறேன். 2009 க்கு பின்னர் 2010? இல் பிரான்சில் மாவை சேனாதிராஜா சிறீதரன் மற்றும் வித்யாதரன் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. (வித்தியாதரன் மேடையில் இல்லாமல் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தார்) அதில் கூட்டமைப்பு சார்பாக ஏதாவது செய்ய முனைகிறார்கள் நாமும் ஏதாவது செய்யலாம் என்று அதில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே தமிழரசுக் கட்சியின் கிளை ஒன்றை பிரான்ஸில் திறக்கும் திட்டம் பற்றி பேச்சு நடந்தது. முதல் ஆளாக நான் எழுந்து கூட்டமைப்பு அதன் தொடர்பான விடயங்களை பேசுவதாக இருந்ததால் பேசலாம். தமிழரசுக் கட்சி பற்றியே அதன் கிளை திறப்பு சார்ந்தோ இங்கே பேசவேண்டாம். அந்த நோக்கத்தோடு பிரான்சுக்கு வரவும் வேண்டாம் என்றபோது வந்திருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். இதுவரை பிரான்ஸில் தமிழரசுக் கட்சிக்கு கிளை இல்லை. இன்று கூட்டமைப்பு அழிந்து தமிழரசுக் கட்சியும் அழிந்து நிற்கும் நிலை 15 வருடங்களுக்கு முன்னர் நான் கூட்டமைப்பு சார்ந்த தூரநோக்கோடு எதற்காக தமிழரசுக் கட்சியை தனியே வளர்ப்பதை தடுக்க முனைந்தேனோ அதற்கு சாட்சியாக எம் கண் முன்னே வரலாறாகி நிற்கிறது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.