Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. பதில் ரொம்ப சுலபம் சகோ. பட்டறிந்த பாடங்களின் அடிப்படையில் அரசனை நம்பி புருஷனை கைவிடக் கூடாது
  2. உண்மையில் இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்று நினைக்கிறேன். இதன் மூலம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன் அடைந்து அதனை மக்களுக்காக பாவித்திருந்தால் எத்தனை வாகனங்களை வாங்கி இருந்தாலும் தகும். ஆனால் இங்கே அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. (நான் எழுதியது கார் இறக்குமதிக்கு)
  3. இது தான் வரலாற்று திணிப்பு. திரிப்பு. அடிமையாக வாழ முடிவெடுத்து விட்டால் இப்படித் தான் முடிக்கணும். 1958, 1977, 1983 என்று அனைத்து சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அராஜகங்களுக்கும் தமிழரே காரணம். முற்றும்.
  4. காரணம் இயலாமை ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....??? எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்???? இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம்
  5. ஆரம்ப காலங்களில் இன முரண்பாடு என்பது ஒரு சந்தேகமாக மட்டுமே இருந்தது. பின்னர் அது ஆழமான வடுக்கள் காயங்கள் நம்பிக்கை துரோகங்கள் ஏமாற்றங்களால் மாற்றுவழி அற்ற நிரந்தரமான பகையாக பல தலைமுறைகளாக தொடரும் ஓர் நாட்டில் ஒரே ஒருவர் ஒருயொரு தேர்தல் வெற்றியை அதுவும் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற ஒருவர் செய்வார் என்று சிந்திப்பதே அதி உயர் சுயநலம்.
  6. அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்?? குறி என்றோ வைக்கப்பட்டுவிட்டது. அதை அடைந்திருக்கிறார்கள். மக்களும் இளவரசர் என்று தெரிந்தே வாக்களித்து வரவேற்றனர். எனவே அவர்கள் கூட வெட்கப்பட தேவை இல்லை.
  7. ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அவர்களின் இனவாத வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாடல் ------------------------------------------------------ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் NPP (JVP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் ஜே.வி.பி யின் கடந்த கால கசப்பான இனவாத வரலாற்றைக் கற்றறிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, 2022 ஆம் ஆண்டு சிறீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் தவறான கொள்கைகயைால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிய ஜே.வி.பி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம் எனும் கோசத்தோடு தனது கட்சிப் பெயரை தேசிய மக்கள் சக்தி என உருமாற்றம் செய்து மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்ததோடு 2024 செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாாரளுமன்றத்தில் வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றியடைந்து அனுரகுமார திசாயநாயக்க ஜனாதிபதியாகிய ஒரு சில தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலிற்கு திகதியிடப்பட்டது. இந்நிலையில் தான் வடக்கு இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் பிழையான வழி நோக்கிச் சென்று விட்டதாகவும் அனுரகுமார திசாநாயக்கவே தங்களது மீட்பர் என கூறும் அளவிற்கு 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களின் மூளையில் ஜே.வி.பி காய்ச்சல் கடுமையாக தொற்றியிருக்கிறது. இந்த ஜே.வி.பி காய்ச்சலில் இருந்து 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் விடுபடவேண்டும் எனில் ஜே.வி.பியின் கடந்த கால வராலற்றைப் படிப்பதன் மூலமே அதிலிருந்து அவர்கள் விடுபட முடியும். 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்தின் அப்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போர்நிறுத்த இணக்கப்பாடு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது போர்நிறுத்தத்தையும் போர் நிறுத்த உடன்படிக்கையையும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துவிட்டு போரைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தென்னிலங்கையில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்கு இளைஞர்களுக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றக் காரணமாக இருந்த அனுரகுமார திசாநாயக்கதான் தலைமை தாங்கியிருந்தார் என்பது 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னை இடதுசாரித்துவக் கட்சியாகக் காட்டிக்கொண்ட ஜே.வி.பி 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஆயுதங்களை மறைத்துவைக்கும் இடங்களாக பௌத்த பிக்குகளில் மடாலயங்களைத் தெரிவுசெய்ததோடு பௌத்த தேசியத்தை வளர்ப்பதன் மூலம் பௌத்த பீடங்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முனைந்தது. அத்தோடு சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக இனவாத அரசியலை வளர்த்ததன் மூலம் சிங்கள இனவாத பௌத்த துறவிகளினது ஆதரவினையும் பெறவும் முனைந்தது. சர்வதேச நிதி நிறுவனங்களையும், நோர்வேயின் மத்தியஸ்த பாங்கினையும் கடுமையாக விமர்சித்ததோடு சமாதானக் கொள்கைக்கு எதிராக யுத்தத்தினை நடாத்துவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கியதோடு 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட தாக்கத்தினை வைத்தது அரசியல இலாபங்களைப் பெறமுனைந்தது. சுனாமி மீள் கட்டமைப்பிற்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து இடைக்காலக் கட்டமைப்பு ஒன்றினை மேற்கொள்ள அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டிய நிலையில் அதனைக் கடுமையாக எதிர்த்து அந்தக் கட்டமைப்பை இல்லாது ஒழித்தது. கொழும்பில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக்கலவரத்திற்கு ஜே.வி.பியினரே காரணமெனக் கூறி சிறீலங்கா அரசால் இரண்டாவது தடவையாக ஜே.வி.பி தடைசெய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினுடைய அரசியற் கொள்கை ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் அரசியற் கொள்கைகளோடு ஒத்திருக்கவில்லை. அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏனைய இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த சமஷ்டிக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஷ்டிக் கொள்கை நாட்டின் பிரிவினைக்கே வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டனர். தமது கொள்கையான சோசலிச அரசு என்பது நடைமுறைக்கு வரும் போது எல்லா இன மக்களும் சமத்துவமாக மதிக்கப்படுவதால் இனப்பிரச்சினை என்பதே இல்லாமல் போய்விடும் என இவர்கள் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில் ஆட்சிக்குவந்த ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளை அவர்கள் எதிர்த்து வந்தனர். இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வைக்கூட ஏற்க மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைப் பிரச்சினையை தன்னுடைய இனவாத ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில்தான் எல்லாக் கட்சிகளைப் போலவும் ஜே.வி.பி நோக்குகிறது என்பதையும் இன்னும் அந்த நிலைப்பாட்டில்தான் அக்கட்சி இருக்கிறது என்பதையும் இந்தக் கருத்து தெளிவுபடுத்துகிறது. தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரசைகளாக நடாத்தி அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் சிறீலங்கா ஆட்சி முறையைப் பாதுகாக்கும் ஜே.வி.பி தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான சிறு முயற்சிகளையையே ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்க முயல்வது புதிய விடயமல்ல. “13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரி வருவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டல்ல. இந்தியாவின் பொருளாதார நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கிலாகும் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2006 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தையும் அதன்பால் இணைக்கப்பட்ட வடகிழக்கையும் நீதிமன்றத்தை நாடி பிரித்தது. அண்மைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்வு உள்ளிட்ட விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது அக்கட்சி தமது அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுகிறது என்பதையும் தொடர்ந்தும் அக்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுகிறது என்பதையும் புலப்படுத்துகிறது. “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் அச்சப்படத் தேவையில்லை ” என தற்போதைய ஜனாதிபதியான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 24 அக்டோபர் 2015 நாடாளுமன்றில் நடைபெற்ற ஜெனீவா பிரேணை விவாத்தில் கூறினார். இவ்வாறான நிலைப்பாடுடைய இனவாதம் கக்கும் ஜே.வி.பியைத்தான் மாற்றத்தின் நாயகர்கள் எனக் கொண்டாட முயல்வதோடு தமிழ்த் தேசிய அரசியலில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு ஜே.வி.பி தான் மாற்றுத் தீர்வு என சிந்திக்க முற்படுவது கோமாளித்தனம் மட்டுமல்ல கோளைத்தனம் என்றும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தனது வாராந்த அறிகையில் கடுமையாகச் சாடியுள்ளது. நன்றி - உரிமை மின்னிதழ் இந்த திரி யுடன் தொடர்புடையது என்பதால் இங்கே பதிகிறேன்.
  8. அண்ணா நீங்கள் சொல்வது கேட்க பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது. பல்லக்கில் தூக்கப்பட்டவன் தூக்கியவனிடம் கையேந்தி நிற்கும் போது இனவாதம் எங்கேயிருந்து தொடங்கியது என்று நாங்கள் சொல்லித் தான் உங்களுக்கோ அல்லது இங்குள்ளோருக்கோ புரியணும் என்று இல்லை. ஆனால் இங்கே பேரினவாத சிங்களத்தில் ஒருவர் நல்லவர் அவரால் அனைத்தும் மாறும் என்கிற விசத்தை விதைக்கும் போது அவரது கட்சி மற்றும் அவரது தோழர்கள் தான் கிடைக்க இருந்த ஆகக் குறைந்த பாதுகாப்பை கூட அறுத்து எறிந்தனர் என்கிற வரலாற்று எச்சரிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. அதைக் கூட பதியக்கூடாது பார்க்கக்கூடாது என்பது தான் இனவாத உச்சம். இது தான் அநுர செய்ய விரும்புவதும். இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான்.
  9. ஆம் தமிழ்த் தேசியத்தை அழிக்க வேண்டும் என்று எவர் செயற்பட்டாலும் பேசினாலும் எழுதினாலும் அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். அவர்கள் என்னை பெத்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பேன். மரியாதை தரமாட்டேன்.
  10. தமிழரசுக் கட்சியில் இருக்கும் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களே ஒரு பொருளில் ஒரே கருத்தில் ஒரே குறிக்கோளுடன் பேசுவதில்லை. இதில் மற்றவர்களையும் கூப்பிட்டு ....?
  11. 2009க்கு முன்னர் இப்படி தான் புலிகளை அழித்தால் அல்லது புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் மற்ற அனைத்தும் சரியாகும் என்று ஒருசிலர் ஊரிலும் இங்கும் கூவித்திரிந்தார்கள். அதேபோல் தான் இன்று தமிழ்த்தேசியம் அழிந்தால் அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் அனைத்தும் சரியாகும் என்று அதே நபர்கள் கூவித் திரிகிறார்கள். என்ன விலை கொடுத்தும் புலிகளை அழிக்க துணை போனவர்களுக்கு தமிழர்களுக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமாக கூட இருக்கவில்லை. அதுவே இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழ்த் தேசிய அழிப்பும் அப்படித்தான்.
  12. குளிக்க போய் சேறு பூசிய கதையாகச் தான் முடியப் போகுது வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு கல்வி கற்றவர் கதி....?
  13. இப்ப எது Trending? அரசியலுக்கு யார் வர வேணும்? வருகிற பாராளுமன்றத் தேர்தலில் யாரை நிறுத்த வேணும்? படித்தவங்கள் வர வேண்ணுமாம்! அடேயப்பா இப்ப இருக்கிற அரசியல்வாதிகளில் படிக்காதவன் யாரடாப்பா? துடிப்புள்ள இளைஞர்கள் வர வேணுமாம்! துடிப்புள்ளவனெல்லாம் சொந்தமாகச் சாதிக்கவும் செலிபிரிட்டி ஆகவும் அல்லவோ ஓடிக் கொண்டிருக்கிறான். மிச்சப்பேர் விஜய்க்கு பால் ஊத்திக் கொண்டு திரிகிறார்கள்! நேர்மையானவர்கள் வர வேணுமாம்! 99 வீதமான நேர்மையானவர்கள்: Good for Nothing. அவர்கள் வாறதும் ஒண்டுதான், வராமல் இருக்கிறதும் ஒண்டுதான். நிர்வாகத் திறமை உள்ளவர்கள் வர வேணுமாம்! ஆஹா, நிர்வாகத் திறமை உள்ளவர்களில் பாதிப்பேர் திருகுதாளக்காரர். மீதிப்பேர் அதிகார வர்க்கத்தை அண்டிப் பிழைப்பவர்கள். அப்ப யார்தான் அரசியலுக்கு வர வேணும்! "விழிப்புணர்வு" விழிப்புணர்வுள்ளவர்களே அரசியலுக்கு வர வேண்டும். ஏனெனில், "விழிப்புணர்வு மட்டுமே விடுதலைக்கான வழி" -மேதகு. விழிப்புணர்வு இருந்தால் மீதி எல்லாம் தானாக வந்துவிடும். பு லி களின் துடிப்பு, நேர்மை, நிர்வாகத் திறமை, அறிவு... எல்லாவற்றுக்கும் அடிப்படை அந்த விழிப்புணர்வு மட்டுமே. கவனிக்க: விழிப்புணர்வு என்பதற்கு ஆன்மீகத்தில் "பற்றற்ற நிலை" என்றும் பொருள். (ஒரு முகநூல் பதிவு) https://www.facebook.com/share/Sph5PC85YHkKFDEu/
  14. சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்றை நேற்றுப் பார்த்தேன். யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதையும் அதை எரிக்க காரணகர்த்தாவாக இருந்த ஜே ஆர் அவர்களையும் வன்மையாக கண்டித்து அவர் பேசியிருந்தார். அதைக் கேட்டு எமது பயப் புள்ளைகள் எல்லாம் பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டு ஏராளமாக ஷெயார் செய்திருந்தார்கள். யாழ் நூலகத்தை ஜே ஆர் எரித்தற்கான அவர் சொல்லும் காரணம்... மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வெல்வதற்காகத்தான் ஜே ஆர் யாழ் நூலகத்தை எரித்தாராம். இதுதான் சிங்கள முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், புத்திஜீவிகளின் புத்திசீவித்தனம்! பிற இனங்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் அனைத்து இனவழிப்பு செயல்களையும் ஏதாவது ஒரு அற்ப காரணத்துக்குள் அடக்கி யாராவது ஒருவரது தலையில் (ஜே ஆர்/மகிந்த/கோத்தா) பழியைப் போட்டு எல்லாவற்றையும் பூசி மெழுகி மறைத்து, புதிய வடிவில் தம் பேரினவாதப் பணியைத் தொடர்வார்கள். சிங்கள மக்கள் ஏன் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் விளங்கினால் சரி. சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள், முற்போக்காகச் சிந்திக்கிறார்கள் என்பவர்களே... கோத்தாவுக்கு வோட்டுப் போட்ட அதே மக்கள்தான் இவருக்கும் வோட்டுப் போட்டார்கள். வோட்டுப் போட்ட மக்களின் அபிலாசைகளை புதிய சனாதிபதி நிறைவேற்றுவாரா இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பாரா? போங்கடா போய் புள்ளைகுட்டியை படிக்க வையுங்கடா! (ஒரு முகநூல் பதிவு) https://www.facebook.com/share/JCGXeJWV67oKabKb/
  15. அதெப்படி ?? அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா??? மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
  16. அப்படியானால் தமிழர்கள் இந்த பழமொழிக்கேற்ப தமக்கு நடந்த அநியாயங்களுக்கு கோயில்களில் தவம் கிடந்தால் சரி? அப்படித்தானே உங்கள் நியாயம்????
  17. இப்படி பார்த்தால் எல்லாமே சரி என்று ஆகிவிடும். நாய் என்னை கடிப்பது உட்பட.
  18. தாக்குதல் தொடர்வதாகவும் 75க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதுவரை ஏவப்பட்டதுடன் இது தொடரும் என்றும் தாக்குதல் பற்றிய தகவல்களை தொடர்ந்து தரப்போவதில்லை என்றும் இஸ்ரேல் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்று பிரெஞ்சு செய்தி சொல்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.